உருட்டும் காய்களும், நகர்த்தும் நாய்களும் - (Spheroidal Pawns and Translating Pawns in Tamil Board Games)

96 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Jul 29, 2022, 3:47:05 PM7/29/22
to Santhavasantham
சங்க இலக்கியத்தில் செஸ் ஆட்டம் தொடர்பான செய்திகள் சில காண்போம். முதலில் திருப்பூவனூர் என்னும் தேவார ஸ்தலபுராணம்.

Prime Minister Modi's chess olympiad inaugural address mentions Tirupoovanur, Tevara stalapuranam:
https://www.narendramodi.in/mar/text-of-prime-minister-narendra-modi-s-address-at-the-opening-of-44th-chess-olympiad-in-chennai-563410

"The place at which this Chess Olympiad is happening is most fitting. There are many temples in Tamil Nadu with beautiful sculptures that represent different sports. Sport has always been considered divine in our culture. In fact, in Tamil Nadu, you will find the temple of Chaturanga Vallabhanathar. This temple at Thirupoovanur has an interesting story related to chess. Even God played a game of chess with a princess! Naturally, Tamil Nadu has a strong historical connection with chess. This is why it is a chess powerhouse for India. It has produced many of India’s chess grandmasters. It is home to the finest minds, vibrant culture and the oldest language in the world, Tamil. I hope you get the opportunity to discover Chennai, Mahabalipuram and nearby areas."

WhatsApp Image 2022-07-29 at 3.01.23 AM.jpeg

WhatsApp Image 2022-07-29 at 10.26.38 AM.jpeg

N. Ganesan

unread,
Jul 29, 2022, 4:09:10 PM7/29/22
to Santhavasantham
சங்க இலக்கியத்தில் செஸ் ஆட்டம் தொடர்பான செய்திகள் சில காண்போம். முதலில் திருப்பூவனூர் என்னும் தேவார ஸ்தலபுராணம்.

Prime Minister Modi's chess olympiad inaugural address mentions Tirupoovanur, Tevara stalapuranam:
https://www.narendramodi.in/mar/text-of-prime-minister-narendra-modi-s-address-at-the-opening-of-44th-chess-olympiad-in-chennai-563410

N. Ganesan

unread,
Jul 30, 2022, 1:15:50 PM7/30/22
to Santhavasantham


1965 கல்கி தீபாவளி மலரில் முகப்போவியம்

கங்கா லஹரியின் சுலோகம்:
   dyūtē nāgēndrakr̥ttipramathagaṇamaṇiśrēṇinandīndumukhyaṁ
   sarvasvaṁ hārayitvā svamatha purabhidi drāk paṇīkartukāmē .
   sākūtaṁ haimavatyā mr̥dulahasitayā vīkṣitāyāstavāmba
   vyālōlōllāsivalgallaharinaṭaghaṭītāṇḍavaṁ naḥ punātu .. 51..
            (இதில், முதல் சொல் த்யூதம் தமிழில் சூது என்ற தற்பவம் ஆனது.)

Mother, while Siva and Parvati played with dice, Siva having lost as wager the snake, his elephant hide, his retinue of pramathas, the bull, the moon and all, wanted to place himself as wager and your manly dance disorderly, joyful and bouncing resembling that of a dancer with a pot on his head was seen feelingly by a smiling Parvati. May that dance sanctify us.
https://ia804502.us.archive.org/13/items/SansGangalahari/Sans_Gangalahari.pdf

தமிழில் செஸ். சங்க இலக்கியத்தில் வல்லு. நீண்ட கட்டுரை எழுதிவருகிறேன்.

N. Ganesan

unread,
Aug 1, 2022, 7:48:02 AM8/1/22
to Santhavasantham
உருட்டும் காய்களும், நகர்த்தும் நாய்களும் - (Spheroidal Pawns and Translating Pawns in Tamil Board Games)
-----------------------------------------------------------------------------------------------------

சென்னை மாநகரில் ‘செஸ் ஒலிம்பியாட்’ தொடங்கியுள்ளது. பிரதமர், முதல்வர் பேசியுள்ளனர். பாரதப் பிரதமர் தமிழ் உலகின் பழைய மொழி தமிழ் என்றும், அறிவு விளையாட்டாகிய சதுரங்க விளையாட்டைத் திருப்பூவனூரில் சிவனும், பார்வதியும் ஆடிய தலவரலாற்றையும் குறிப்பிட்டுப் பேசியுள்ளார்.

செஸ் போன்ற பழைய விளையாட்டுகள் பற்றிச் சில குறிப்புகள் சங்க இலக்கியத்தில் காண்கிறோம். Pre-Chess என்று சொல்லத்தக்க ஆட்டத்தை ‘வல்லு’ என்று குறிப்பிட்டுள்ளனர். இது ஒரு வகை  பலகை விளையாட்டு (Board game) என வல்லுவும் பலகையும் என்று சேர்ந்து வருவதால் தெரிகிறது. காமக் கணி = கிராமத்துக் கணியன் எனப் பொருள். வட்டு (sphere, goli), கவறு (dice, cube), சொக்கட்டான்(/தாயம்/சோழி), ... ஆட்டம் என்பன ஆடுவார் அறிவைப் பொருத்து அமைவன அல்ல, ஊழ் காரணமாக (chances - lucky or not) விளைவை ஏற்படுத்துவன. ஆனால், வல்லு ஆட்டம் அவ்வாறில்லை. காமக்கணி நப்பாலத்தன் விளக்குகிறார்: “நரை மூதாளர் அதிர் தலை இறக்கி, கவை மனத்து இருத்தும் வல்லு” (அகநானூறு 377). அதாவது, வயது முதிர்ந்த விளையாடுவோரும், தங்கள் தலைகளைச் சாய்த்து நோக்கி, பல விதமான நகர்வுகளை மனத்தாலே பல கிளைகளாகச் (கவை) சிந்தித்து விளையாடும் வல்லு ஆட்டம் என்று விளக்குகிறார். வல்லு - Chess (செஸ்) ஆட்டத்தின் காரணப் பெயராக, “வல்லு” எனச் சங்க காலத் தமிழர் கொண்டிருந்தனர் என்பது தெளிவு. வல்லு என்ற பெயர் அறிவின் ஆற்றலால்/வலிமையால் ஆடுவதால் ஏற்படுவதாகும். பூவனூரில் உள்ள சிவமூர்த்தி சதுரங்க வல்லபநாதர் என்பது இந்த வல்லு ஆடலில் வலிமை பெற்றவர் என்பதால் ஆகும். ஸ்ரீவல்லபன் என்ற பாண்டிய இளவரசன் பற்றிய கல்வெட்டில் சீவல்லுவன் எனத் தமிழின் தற்பவத்தால் பயன்படுவதும் காண்க. எனவே, மூளை அறிவுத் திறன் கொண்டு ஆடும் பலகை விளையாட்டு, சங்க காலத்தில் வல்லு எனப் பட்டுள்ளது. சிந்து சமவெளியிலும், இந்த வல்லு ஆடலின் நாய்கள் கிடைத்துள்ளன. காய், நாய் வேறுபாடு முக்கியமானது.
https://www.harappa.com/excavations/1921/ivory-chess-disc-and-two-chess-figures
https://www.harappa.com/indus4/46.html
லோத்தால் (குஜராத்) - ஹரப்பா நாகரீக வல்லு ஆடலும், வல்லுநாய்களும்:
https://www.quora.com/What-did-the-chess-pieces-in-ancient-India-look-like
https://www.harappa.com/blog/lothal-terracotta-dice-and-game-board
https://twitter.com/Aabhas24/status/1087158782579204096/photo/2

தமிழக அகழாய்வுகளில் கீழடி, ஆதிச்சநல்லூர், போளுவாம்பட்டி, வெம்பக்கோட்டை, சிவகளை, அரிக்கமேடு, மரக்காணம் முதலான பெருங்கற்கால இடங்களில் வல்லுநாய்கள் (chess pieces) தொடர்ந்து கிடைத்துவருகின்றன. இவை பெரும்பாலும் சுடுமண்ணாலும், தந்தத்தாலும் செய்யப்பட்டவை.   இந்த வல்லாடல் விளையாட்டு பிரபலமாக, மக்களிடம் புழங்கியதாலே, தொல்காப்பியர் எழுத்ததிகாரம் புள்ளி மயங்கியலில் இரு சூத்திரங்களில் வல்லு என்னும் விளையாட்டை உதகரித்துள்ளார்.
(i)   வல் என் கிளவி தொழிற்பெயர் இயற்றே.
(ii)  நாயும் பலகையும் வரூஉங் காலை
               ஆவயின் உகரங் கெடுதலும் உரித்தே
               உகரங் கெடுவழி அகர நிலையும்.

ல், ள் என முடியும் பல சொற்கள் உகரமும், அகரமும் ஏற்று வருமொழியொடு புணரும். எ-டு: கல் ==> கல்லுக்காடு, கல்லக்காடு, முள் ==> முள்ளுச்செடி, முள்ளச்செடி. இப்படி எத்தனையோ காட்டுகள் இருக்க, வல்லு என்னும் சதுரங்க விளையாட்டின் பெயரைத் தொல்காப்பியம் எடுத்துக்காட்டுகிறது.  வல்லுப்பலகை எனவும், வல்லப்பலகை எனவும் வரலாம் என்கிறது. அதேபோல, வல்லுநாய் என்றோ, வல்லநாய் என்றோ சொல்லலாம் என்கிறார் காப்பியர். இதை ஒற்றியே, பவணந்தி முனிவரும், வல்லு என்ற சதுரங்க ஆட்டச் சொல்லையே பயன்படுத்துகிறார். 17-ம் நூற்றாண்டிலே வாழ்ந்த சங்கர நமச்சிவாயர் வல்லு ஆடலின் நாய்கள் சிலவற்றை இந்த நூற்பாக்களுக்கு உதாரணமாகக் காட்டுகிறார்:
“வல்லுக் கடிது , நன்று , வலிது எனவும் வல்லுக் கடுமை , நன்மை , வன்மை  எனவும் வல்லப்பலகை , வல்லநாய் , வல்லப்புலி, வல்லக்குதிரை எனவும் வல்லுப்பலகை , வல்லுநாய் , வல்லுப்புலி , வல்லுக்குதிரை எனவும் முறையே காண்க . வல்லினது அறை வரைந்த பலகை , வல்லினுள் நாய் என விரியும் . வேற்றுமைக்கு  என்றமையின் வல்லாய நாய் என இருபெயரொட்டு ஆயவழி அகரச்சாரியை பெறாது என்க.”

16-17-ம் நூற்றாண்டுகளில் இந்த வல்லு ஆடல் பல விலங்குகளோடு வளர்ச்சி பெற்றுவிட்டது எனக் காட்டும் அரிய சான்று மேற்காணும் சங்கரநமச்சிவாயரின் நன்னூல் உரை ஆகும். 'நாயும் புலியும்’ என்பது சதுரங்கத்தோடு உறவுடைய பலகை ஆட்டம். இன்றைய ஆடுபுலி ஆட்டம் போன்றது. வல்லுநாய், வல்லுப்புலி இரண்டையும் நகர்த்தி ஆடும் ஆட்டம் ‘நாயும்புலியும்’ என அழைக்கப்பட்டது.

ஒரு நாடு, பகை மன்னனால் அழிக்கப்படுகிறபோது ஊர் மன்றத்தில், அறிவாளிகள் கூடி விளையாடும் வல்லு ஆட்டமும், அதற்கான வல்லுப் பலகை போன்றன வனப்பு இழந்து அழியும் என இரு சங்க இலக்கியப் பாடல்கள் இருக்கின்றன.

“கலிகெழு கடவுள் கந்தம் கைவிட
பலிகண் மாறிய பாழ்படு பொதுஇல்
நரைமூதாளர் நாயிடக் குழித்த
வல்லின் நல்லகம் நிறையப், பல்பொறிக்
கான வாரணம் ஈனும்
காடாகி விளியும் நாடுடையோரே” - (புறம்: 52: 12 - 17)

மனித நடமாட்டத்தால், விழாக்களால் ஆரவாரமாய் இருந்த கோயிலின் கடவுள் கந்தம் வழிபாடு இன்றி கைவிடப்பட்டதால் அதற்குப் பலி படைப்பதும் நின்று பாழ்பட்டுப் போனது ஊர்மன்றம். அங்கே, வல்லுப் பலகை அமைக்கப்பட்டிருந்தது (வல்லின் நல்லகம்). அம் மணையில், வல்லுநாய்களை வைத்து நகர்த்தி விளையாடும் குழிகள் கட்டம், கட்டமாக இருந்தன. நரைமுதிர்ந்த அறிவாளிகள் சூதாடிய வல்லுப்பலகையின் குழிகளில் காட்டுக் கோழிகள் முட்டையிடத் தொடங்கிவிட்டன. நாடாய் இருந்த இடம் காடாகி அழிந்தது.

---------------

வீங்கு சிலை, மறவர்
பல் ஊழ் புக்குப் பயன் நிரை கவர, 5
கொழுங் குடி போகிய பெரும் பாழ் மன்றத்து,
நரை மூதாளர் அதிர் தலை இறக்கி,
கவை மனத்து இருத்தும் வல்லு வனப்பு அழிய,
வரி நிறச் சிதலை அரித்தலின், புல்லென்று,
பெரு நலம் சிதைந்த பேஎம் முதிர் பொதியில் (அகம் 377)

தாம்‌ விதைத்துப்‌ பயிரிட்டு வளர்த்துப்‌ பெறாத‌ புல்லரிசியினைத்‌ தம்‌ உணவாகக்‌ கொள்பவர்‌, பெருத்த வில்லினைக்‌ கைக்கொள்வோரான மறவர்கள்‌. அவர்கள்‌, பன்முறை, புகுந்து பாற்பசுக்‌ கூட்டங்களைக்‌ கவர்ந்துகொண்டு செல்ல, வளமுடன்‌ அவ்வூரிலிருந்த குடியினரும்‌ அதனைவிட்டுப்‌ போய்விடுவாராயினர்‌. அப்படிக்‌ குடிகள்‌ போகிய, பெரிதும்‌ பாழ்பட்டுக்‌ கிடக்கும்‌ ஊரின்‌ மன்றத்தின்‌ கண்ணே நரைத்த முதியவர்கள்‌, கருத்தூன்றித் தம் தலைகளைச் சாய்த்து‌, பல கிளைகளாகத் தம் அறிவால் மனத்தில் இருத்தி, வல்லுநாய்களை நகர்த்தி (< நெகிழ்) நல்ல ஈட்டி, தேக்கு, ஆச்சா, கருங்காலி போன்ற மரத்தால் ஆன வல்லுப்பலகையின் அழகு கெடுமாறு, வரிகள்‌ பொருந்திய கரையான்‌ அரித்திருக்கும்‌. அதனால்‌, தன்னுடைய பழைய அழகுகெட்டுப்‌, பெரிதான நலமனைத்தும்‌ சிதைந்ததாகி அச்சமிகுந்ததாகப்‌ பொதியிலும்‌ விளங்கும்‌.

அதிர் தலை - stirred or excited (inwardly). i.e., vibrating with strategy to win the chess game. அதிர் தலை - வினைத்தொகை (parallel name: vipra). vipra - n. stirred or excited (inwardly), inspired, wise (said of men and gods).

----------

வட இந்தியாவில் அரண்மனைகளில் மிகப் பெரியதான வல்லுப்பலகைகள் கிடைக்கின்றன. சங்க கால, பொதியில் என்னும் ஊர் மன்றங்களிலும், வள மனைகளிலும் 3 (அ) 4 அடி அளவிலே, வல்லுநாய் கொண்டு ஆடும் வல்லுப்பலகை இருந்திருக்க வேண்டும். இதைக் கலித்தொகை குறளனின் உயரம் என வர்ணிப்பதால் அறிகிறோம்.
  வல்லுப் பலகை யெடுத்து நிறுத்தன்ன
  கல்லாக் குறள கடும்பகல் வந்தெம்மை
  இல்லத்து வாவென மெய்கொளீஇ யெல்லாநின்
  பெண்டி ருளர்மன்னோ கூறு.

----------

தமிழ்க்கடவுள் முருகனை வல்லுப்போரில் (chess game) வல்லவன் என்றும், வட்டுப்போரில் (dice game) வல்லவன் என்றும் தனித்தனியாகப் பரிபாடல் புகழுகிறது:
அணிமழை அச்சிரக்கால் ஆர்த்து வச்சிரத்தான் வான்
வில்லுக் கோலின்று - அழகிய மேகம் முன்பனிக் காலத்தே முழங்கி
வச்சிரப்படையையுடைய இந்திரனது வானவில்லை வளைத்தது,
வல்லுப்போர் வல்லாய் - சூதுப்போர் வல்ல முருகவேளே!, மலைமேல்
மரம் வில்லுச்சொரி பகழியின் மென் மலர் தாயின - நினது மலையின்
மேலுள்ள மரங்கள் அவ் விந்திர வில் சொரியும் அம்புகள் உளவாயின்
அவ் வம்புகள் பரக்குமாறு போல மெல்லிய மலர்களை யாண்டும்
பரப்பின, வட்டு உருட்டு வல்லாய் - சூதுப்போரின்கண் உருண்டை
உருட்டுதற் றொழிலில் வல்ல பெருமானே!, மலைய குன்றம் - நினது
மலையிடத்துக் கோட்டத்தின்கண், போர் ததும்பும் அரவம்போல -
போரின்கண் மிக்கெழாநின்ற முழக்கம்போல, கருவி சீர்ததும்பு
அரவமுடன் சிறந்து ஆர்ப்ப - இசைக்கருவிகள் தாளம் ஒலிக்கும்
ஒலியோடியைந்து சிறப்புற்று முழங்காநிற்ப, கருவி நின்றன - மேகத்
தொகுதியும் அம் முழக்கத்தோடொத்து முழங்கிநின்றன;

பலகை ஆட்டங்கள் பற்றிப் பழைய குறள் ஒன்றுண்டு: (செந்தமிழ், 1904):
    சொக்கட்டான், சோழி, சதுரங்கம் இம்மூன்றும்
    துக்கமற்றார் ஆடும் தொழில்
(சோழி = பாண்டி ஆட்டம்).

-----------------
நாயும் காயும்
-----------------

As a Structural Dynamicist, Space Structures, I can explain the kaay vs. naay in Tamil board games. There is archaeological evidence for nAy in chess pieces from Lothal, Indus civilization. See the six degrees of freedom (DoF) of any point or structure:
a NASA site: https://www.grc.nasa.gov/www/k-12/airplane/rotations.html
https://en.wikipedia.org/wiki/Six_degrees_of_freedom

Translational degrees of freedom:  forward/back, up/down, left/right -பிரதானமாக, (in 2D), இதனைக் கொண்டது “நாய்”. எனவே, வல்லுநாய் என்றார் தொல்காப்பியர் (Dogs do translate in 2D surface. No rotation in Space!). Used in chess, and it involves many intellectual strategies and moves.

Rotational degrees of freedom: yaw, pitch, roll - பிரதானமாக, (in 2D), இதனைக் கொண்டது “காய்” (e.g., Goli kuNDu, gooseberrys). வட்டுக்காய் (goli-s such as gooseberrys, glass beads, etc.,), கவற்றுக்காய் (dice). வட்டுக்காய், கவற்றுக்காய் பாய்ச்சிகை - the result are dependent on probability and luck.

அழகான டெக்னிகல் வார்த்தைகள். சமைத்தவர் சங்கத் தமிழர்!   Interestingly, in old times, this was called "nAyum puliyum" game. nAy changed ATu 'goat' subsequently.

In general, nAy is considered very low in Indian subcontinent. That is why the dog-star "Sirius", shown above the shoulder of Shiva in Pallava times (Pallava :: Pahlava, Shaka tribes), got covered in a thick layer of lime. I've shown also, how varuNa, Vedic supergod of Sangam times, gets transformed into Shiva over time (2nd century CE or later). The classic VaruNa is in Gudimallam, oldest Linga in India. For beginning to delve into the history of gods in India, dogs in Pallava Shiva sculptures, read:
http://nganesan.blogspot.com/2020/09/zen-koan-by-hakuin-and-tamil-proverb.html

மேலும், சில கலைச்சொற்கள் (Tech terms in board games)
---------------------------------------------------

கவறு (dice)
-------------

கோடு என்னும் மூலச்சொல்லால் பிறப்பது கவடு/கவறு. பின்னர் கவரி என ஆதலும் உண்டு. ரிக்வேதம், தொல்காப்பியம் என்பனவற்றில் வரும் கவரி < கவடு/கவறு < குவடு/கோடு: https://nganesan.blogspot.com/2017/11/kavarimaa-tirukkural-conference-2017.html

கவறு என்பது dice என்ற பொருள் உடையது. கவறு < கோடு. This name is so formed because two planes meet 12 times at 90 degrees in a dice cube.

     கவறும் கழகமும் கையும் தருக்கி
     இவறியார் இல்லாகி யார்

கை - கைத் தொழில் - கவடி பிடித்தல் (மணக்குடவர்)
https://lithub.com/feeling-lucky-a-brief-history-of-gambling-with-dice/

(சூது வென்றி இன்னது)
18.16  புறப்பொருள் வெண்பாமாலை.

   கழகத்து இயலும் கவற்றின் நிலையும்
  அளகத் திருநுதலாள் ஆய்ந்து - கழகத்தில்
  பாய வகையால் பணிதம் பலவென்றாள்
  ஆய நிலையம் அறிந்து

(கழகம் = சூதாடும் இடம், கவறு = dice, பாய வகை = பாய்ச்சிகை - throwing dice)

https://www.harappa.com/blog/ancient-indus-dice
A cubical die with 1 to 6 dots was found in rubble during excavations at Harappa between 1995 and 2001. Many dice were also found at Mohenjo-daro, and John Marshall writes: "That dicing was a common game at Mohenjo-daro is proved by the number of pieces that have been found. In all cases they are made of pottery and are usually cubical, ranging in size from 1.2 by 1.2 by 1.2 inches to 1.5 by 1.5 by 15 inches ... The dice of Mohenjo-daro are not marked in the same way as to-day, i.e. so that the sum of the points on any two opposite sides amounts to seven. Instead of that, 1 is opposite 2, 3 opposite 4, and 5 opposite 6. All the examples found are exceedingly well made with well-defined edges; the points are shallow holes averaging 0.1 inch in diameter. The clay of which they are made is light red in color, well baked, and sometimes coated with a red wash. These dice must have been thrown on a soft surface, such as a piece of cloth, or on dusty ground, for their edges show little sign of wear. It is not yet known whether these objects were used in pairs, but two specimens found in the Dk Area (of Mohenjo-daro), not far from each other, are exactly the same size." (Marshall, Mohenjo-daro and the Indus Civilization, pp. 551-2)

பூவனூரில் நரைமூதாளனாய் வந்து சதுரங்கம் ஆடிச் சிவன் பார்வதியை ஜெயிக்கிறார். ஆனால், கவறாடலில் பொதுவாக, சிவன் பார்வதியிடம் தோற்கும் இலக்கியங்கள், சிற்பங்கள் 1500 ஆண்டுகளாக இந்தியா முழுமையும் உண்டு. எல்லோரா போன்ற குகைகளில் சிவனும், பார்வதியும் சொக்கட்டான் ஆடுவது வடிக்கப்பட்டுள்ளது. இதனைப் பண்டித ஜெகந்நாதர், கங்கா லஹரியில் அழகாகச் சொல்லியுள்ளார். இங்கே பார்வதி ஜெயிக்கிறார். சந்திரனைக் கூடச் சிவன் இழக்கிறார். அதனை ஓவியர் மணியம், 1965 கல்கி தீபாவளி மலர் முகப்போவியம் வரைந்தார். அழகிய அப் படமும், அதன் விளக்கமும் மணியத்தின் திருமகன் ம.செ. அவர்கள் தந்துள்ளார்.  ஆர்வம் உடையோர் டேவிட் ஷூல்மன் எழுதிய பெருநூல்  God Inside Out: Siva’s Game of Dice வாசிக்கலாம்.


கங்கா லஹரியின் சுலோகம்:
   dyūtē nāgēndrakr̥ttipramathagaṇamaṇiśrēṇinandīndumukhyaṁ
   sarvasvaṁ hārayitvā svamatha purabhidi drāk paṇīkartukāmē .
   sākūtaṁ haimavatyā mr̥dulahasitayā vīkṣitāyāstavāmba
   vyālōlōllāsivalgallaharinaṭaghaṭītāṇḍavaṁ naḥ punātu .. 51..
            (இதில், முதல் சொல் த்யூதம் தமிழில் சூது என்ற தற்பவம் ஆனது.)

Mother, while Siva and Parvati played with dice, Siva having lost as wager the snake, his elephant hide, his retinue of pramathas, the bull, the moon and all, wanted to place himself as wager and your manly dance disorderly, joyful and bouncing resembling that of a dancer with a pot on his head was seen feelingly by a smiling Parvati. May that dance sanctify us.
https://ia804502.us.archive.org/13/items/SansGangalahari/Sans_Gangalahari.pdf

http://arttreasuresindia.blogspot.com/2015/07/lord-shiva-and-goddess-parvati-playing.html
https://www.newindianexpress.com/opinions/2022/may/26/the-eternal-dice-game-of-shiva-and-parvati-2458146.html
https://indianexpress.com/article/religion/yours-faithfully-when-goddess-parvati-defeated-lord-shiva-at-dice-on-mount-kailash-4896859/
https://en.wikipedia.org/wiki/Jagannatha_Panditaraja
Soar, Michaela (2006) "Shiva and Parvati at Play: Backgammon in Ancient India" in Andrew Topsfield (ed.) The Art of Play: Board and Card Games of India. Mumbai: Marg Publications, pp. 40-59.

வட்டு ( spheroids)
------------------

உருண்டையான நெல்லிக் கனிகள், தான்றிக் காய்கள் (விபீதகக் காய்கள்), கண்ணாடிக் கோலிக்குண்டு, ... இவை சங்கத் தமிழில் வட்டு எனப்படுபவை.

கட்டளை அன்ன வட்டு அரங்கு இழைத்து,
கல்லாச் சிறாஅர் நெல்லி வட்டு ஆடும்  - நற்றிணை 3

வட்டு ஆடல் உவமையாக வருதல்:
  காயா மென் சினை தோய நீடிப்
  பல் துடுப்பு எடுத்த அலங்கு குலைக் காந்தள்
  அணி மலர் நறுந் தாது ஊதும் தும்பி
  கை ஆடு வட்டின் தோன்றும் (அகநானூறு 108)

வட்டாடல் பற்றிய அரிய பாடல் புறநானூறு 43. சோழ இளவரசனும், தாமப்பல் கண்ணனாரும் ஆடும் வட்டாடல்.

அரங்குஇன்றி வட்டுஆடி அற்றே நிரம்பிய
நூல்இன்றிக் கோட்டி கொளல்
http://kuralthiran.com/KuralThiran/KuralThiran0401.aspx

வட்டுப் பொருதல்:
உழையிருந்து நுண்ணிய கூறிக் கருமம்
புரையிருந்த வாறறியான் புக்கான் விளிதல்
நிரையிருந்து மாண்ட அரங்கினுள் வட்டுக்
கரையிருந் தார்க்கெளிய போர்.
         - பழமொழி நானூறு (வட்டுப்போர் பற்றிய பழமொழி உள்ள வெண்பா)
https://www.tamilvu.org/slet/l2A00/l2A00pag.jsp?book_id=45&pno=118

சதுரங்கம்:
--------------
வல்லு விளையாட்டின் வளர்ச்சி சதுரங்கம். Chess, as played with pieces representing the four constituent parts of an army; கட்டத்தில் யானை குதிரை தேர் காலாட்களாகக் காய்கள் வைத்து ஆடும் விளையாட்டு. சூது சதுரங்கம் பொருது (ஈடு, 5, 8, 4).

ரங்- > ரஞ்- என மாறும், கொங்கு- கொஞ்சு, அரங்கு- ரங்க > லங்கா என நிறுவ நல்ல உதாரணம்: சதுரங்கம்.  பாரசீக தேசத்தில் சதுரங்கம் > சதுரஞ்சம் ஆவது. மேலை நாட்டு வடமொழிப் பேராசிரியர் ரஞ்- என்பது ரங்- (ரங்க, ரங்க்கோலி) என்பது பொருந்துவதாய் இல்லை. அது பிழை. அரங்கு- ரங்க (ஸ்ரீரங்கம்) - லங்கை. அரங்க கோலம் > ரங்கோலி.

ஆனைக்குப்பு என்று இடைக்காலங்களில் வல்லு விளையாடல் குறிப்பிடப்பட்டுள்ளது. ‘ஆனைக்குப்பு ஆடுவோரைப்போலே அநாதரித்திருந்தான்.’ என நம்பிள்ளை எழுதிய திருவாய்மொழி ஈடு குறிக்கிறது. ஆனைக்குப்பு - ஆனையும், அத்தோடு சேர்ந்த பிற வல்லுநாய்த் தொகுப்பும் ஆகும். குப்பு, குப்பை என்பன குவை, குவியல் தொகுதி. சுப்பு (> உப்பு), சுவை ஆவதுபோல, குப்பு ::: குவை. நெற்குப்பை சோமலே, தமிழண்ணல் ஊர். நெற்குப்பை - நெற்குவை. ஆனைக்குப்பு (நம்பிள்ளை ஈடு) = ஆனைக்குவை (வல்லுநாய்க் குவை) என்க. வட இந்தியா பல இடங்களிலும், இலங்கையிலும் பல ஆனைக்குப்பு விலங்கு, வீரர் பொம்மைகள் கிடைக்கின்றன. இவை வல்லுநாய்கள் (Chess pieces) என அறிஞர் கருதுகின்றனர். இன்னும் தமிழ்நாட்டில் வல்லுநாய் எனக் கருதத்தக்க ஆனைப்பொம்மை கிடைக்கவில்லை.  

ஹரப்பா நாகரிக வல்லுநாய்கள்:
https://www.quora.com/What-did-the-chess-pieces-in-ancient-India-look-like
Renate Syed, "Early Terracotta figures from Kanuj: Chessmen?", in "Chess originated in India. Four Contributions", Fördekreis Schach-Geschichtsforschung e.V. publication, May 2000.
Manfred A.J.Eder, "The Present State of Research regarding the Oldest Chessmen", paper presented at 9th Congress of Chess Collectors International, May 2000, Florence Italy. Paper reproduced in "Chess originated in India. Four Contributions", Fördekreis Schach-Geschichtsforschung e.V. publication, May 2000.
Manfred A.J.Eder, "Bagdad-Bergkristall-Benediktiner Zum Ex-oriente des Schachspiels", Fördekreis Schach-Geschichtsforschung e.V. publication, Catalog of the exhibition in Aachen, 2003.

சூது
------
த்யூதம் என்ற வடசொல்லின் தற்பவம் ‘சூது’ எனக் கோவைகிழார், ச. வையாபுரிப்பிள்ளை போன்றோர் விளக்கியுள்ளனர். த்யானம் என்ற சொல் சானித்தல் என்றாவது போல எனலாம். இந்த வடசொல் தெலுங்கு, கன்னடத்தில் த்யூதம் > சூத- > ஜூதம் என்றாகிறது. 'சூதுபொரு கழகத்து அருகலும்'  (கொங்குவேளிர், பெருங்கதை, இலாவாண. 8, 62).

Summary: In this note, the word formation in ancient Sangam Tamil for board games is analyzed. This is a preliminary analysis, and there is more room for probing further. Several evidences pointing to the antiquity of the board games in India from Indus civilization (e.g., vallu-naay figure as chess piece from Lothal, Gujarat may be the precursor for that word's usage in Tolkaappiyam) are given. The difference between rotational pieces, called kaay in Tamil, in dice and spheroidal (goli) versus 2D translational pieces in (pre)Chess games, called naay in Tamil, is described.

N. Ganesan
http://nganesan.blogspot.com

kanmani tamil

unread,
Aug 1, 2022, 9:46:32 AM8/1/22
to vallamai
It's quite interesting and needs a second reading...
I'll read when time permits. 
SK

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUf%2Bd6o1gi_nNFJ-opykU4U9%2BcmtcWDhOQpF4tmy5PQbhA%40mail.gmail.com.

N. Ganesan

unread,
Aug 2, 2022, 3:44:59 PM8/2/22
to Santhavasantham
வட்டு :: நெல்லிக்காய் கல்லாச் சிறுவர் ஆடுவது என்கிறது சங்க இலக்கியம். அதுவே, முதியவர்கள் அறிவுடன் ஆடுவது வல்லு (PreChess) என்றும் பாடியிருக்கிறது.
உருட்டும் காய்களும், நகர்த்தும் நாய்களும் - (Spheroidal Pawns and Translating Pawns)
https://groups.google.com/g/santhavasantham/c/F7k9uZ50fOE/m/A2eUWwHzBQAJ

அரங்குஇன்றி வட்டுஆடி அற்றே நிரம்பிய நூல்இன்றிக் கோட்டி கொளல் - குறள். “அரங்கு - வகுத்த தானம். வட்டாடல்: உண்டை உருட்டல். இவை 'கட்டளையன்ன வட்டரங்கு இழைத்துக் கல்லாச் சிறாஅர் நெல்லிவட்டாடும்' (நற்.3) என்பதனான் அறிக.” (பரிமேலழகர்).

நெல்லி, கோலிக்குண்டு, ... போல முள்ளிக்காய் இருக்கும். அதற்கும் வட்டு என்ற பெயர் உண்டு. நாலடி வெண்பாவில் வட்டு (=கறிமுள்ளி).
https://groups.google.com/g/santhavasantham/c/jveSFx6aHDg/m/Xr3Ay7IgFAAJ

நன்றியில் செல்வம்

        புணர்கடல்சூழ் வையத்துப் புண்ணியமோ வேறே;
        உணர்வ துடையா ரிருப்ப - உணர்விலா
        வட்டும் வழுதுணையும் போல்வாரும் வாழ்வாரே,
        பட்டும் துகிலும் உடுத்து.  (264)

கடல்கள் சூழ்ந்த இவ்வுலகில் செல்வத்துக்குரிய புண்ணியம் என்பது அறிவுக்குரிய புண்ணியத்தினின்றும் வேறாகவே இருக்கிறது. எவ்வாறெனின், கல்வி அறிவுடையார் ஒரு பொருளுமின்றி வறுமையுற்று இருக்க, கறிமுள்ளியும் கத்தரியும் போன்ற அற்பர் விலையுயர்ந்த பட்டாடையும் பருத்தி ஆடையும் உடுத்து வாழ்வர். (கறிமுள்ளியும் கண்டங்கத்தரிச் செடியும் மிகுதியாக இருப்பினும் அவை, கொள்வாரை முள்ளால் குத்தும். அதுபோல பழைய புண்ணியத்தால் செல்வம் பெற்று வாழினும் அறிவிலாரிடம் ஈகைத் தன்மை இல்லை!)

வினைப்பயன் பற்றிப் பேசுகிறது பாடல். நல்வினை தீவினைப் பயன்களை அறிந்தவர்கள் புவியில் எளிய வாழ்க்கை வாழ்கின்றனர். அவர்கள் வாழ்வு பிறருக்கு இன்னல் தராத வாழ்வு. சொல்லப்போனால் அவர்களிடம் டாம்பீகம் இருக்காது. தம்மை/ வாழ்வை அப்படியே  பிறருக்காக அர்ப்பணிப்பவர்களாக இருப்பார்கள். ஆனால் வினைப்பயனின் விளைவு பற்றி அறியாமல் பட்டும் பந்தாவுமாக வாழ்பவர் பிறருக்கு இன்னல்களைக் கொடுப்பர்---முள்ளிக்காய் &கண்டங்கத்தரிக்காய் போல..... உணர்ந்து எழுதிய உவமை அருமை. அழகான இச் செய்யுளில், வட்டும், வழுதுணையும் எங்கும் இருப்பதும், அவற்றின் சிறுமையும் (முள்) தோன்ற நின்றன.

வட்டு, வழுதுணை (நாலடியில்) முள்ளி இனங்கள் = Solanum plants
--------------------------------------------------------
(1) வட்டு = முள்ளிக்காய் (கண்டங்கத்தரி, கறிமுள்ளி - கறி சமைக்கப்படும் முள்ளிக்காய்).
Yellow berried Nightshade: https://en.wikipedia.org/wiki/Yellow-fruit_nightshade
Solanum xanthocarpum
 
(2) வழுதுணை = (சிறு)வழுதுணை = https://commons.wikimedia.org/wiki/Category:Solanum_lasiocarpum
இதுவும் ஒரு வகை கண்டங்கத்தரி. கண்டம் = முள்.
சிறுவழுதுணை (p. 1464) ciṟu-vaḻutuṇai சிறுவழுதுணை ciṟu-vaḻutuṇai , n. < id. +. 1. Indian nightshade, m. sh., Solanum indicum; செடிவகை. (W.) 2. Species of solanum. See கண்டங்கத்திரி. (M. M.)  
https://commons.wikimedia.org/wiki/Category:Solanum_indicum  
நாலடி வெண்பாவிலே, வழுதுணை என்பது: (Indian nightshade = Solanum indicum (in Botany) )
https://www.flickr.com/photos/dinesh_valke/4745985224  
 
----------

சூது
------
த்யூதம் என்ற வடசொல்லின் தற்பவம் ‘சூது’ எனக் கோவைகிழார், ச. வையாபுரிப்பிள்ளை போன்றோர் விளக்கியுள்ளனர். த்யானம் என்ற சொல் சானித்தல் என்றாவது போல எனலாம். இந்த வடசொல் தெலுங்கு, கன்னடத்தில் த்யூதம் > சூத- > ஜூதம் என்றாகிறது. 'சூதுபொரு கழகத்து அருகலும்'  (கொங்குவேளிர், பெருங்கதை, இலாவாண. 8, 62).

ஏன் த்யூதம் தூது என்று ஆகாமல், சூது எனத் தமிழில் ஆனது? சூது > ஜூது (தெலுங்கு, கன்னடத்தில்). ஏற்கெனவே, தூது ' 'messenger' இருப்பதால், சூது < த்யூத. சமணர்கள் சூது ஆட்டங்களை மிகக் கடிந்தனர். உ-ம்: குறள்.

சிறுமை பல செய்து சீர் அழிக்கும் சூதின்
வறுமை தருவது ஒன்று இல் - குறள் 94:4

வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம்
தூண்டில் பொன் மீன் விழுங்கி அற்று - குறள் 94:1

அகடு ஆரார் அல்லல் உழப்பர் சூது என்னும்
முகடியான் மூடப்பட்டார் - குறள் 94:6

பொருள் கெடுத்து பொய் மேற்கொளீஇ அருள் கெடுத்து
அல்லல் உழப்பிக்கும் சூது - குறள் 94:8

இழ-தொறூஉம் காதலிக்கும் சூதே போல் துன்பம்
உழ-தொறூஉம் காது அற்று உயிர் - குறள் 94:10
http://thirukkuralvilakkam.blogspot.com/2013/05/soodhu.html

தூது என்பது நல்ல வடசொல் தான். தொல்காப்பியத்திலேயே நான்கைந்து இடங்களில் தூது, தூதுவர் என்றுள்ளது. மேலும், தூதுவர் என்பதற்கு நல்ல தமிழ்ச்சொல் “வாயில்” என்று படைத்தும் ஆள்கிறார்: http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=1498  யார்யாரைத் தூதனுப்பலாம் என்பதைத் தொல்காப்பியர் சூத்திரித்துள்ளார்:
"தோழி தாயே பார்ப்பான் பாங்கன்
பாணன் பாடினி இளைஞர் விருந்தினர்
கூத்தர் விறலியர் அறிவர் கண்டோர்
யாத்த சிறப்பின் வாயில்கள் என்ப" (தொல் – கற்பியல் – 52)

திருவள்ளுவர் திருக்குறளில் தூது, சூது என்ற தலைப்பில் இரு அதிகாரங்களை அமைத்துள்ளார்.
                 தொகச்சொல்லித் தூவாத நீக்கி நகச்சொல்லி
                 நன்றி பயப்பதாம் தூது

~NG

N. Ganesan

unread,
Aug 7, 2022, 11:59:58 PM8/7/22
to Santhavasantham

kanmani tamil

unread,
Aug 8, 2022, 12:13:39 AM8/8/22
to vallamai
கொண்டாடுவோம். 
சக 

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

N. Ganesan

unread,
Aug 8, 2022, 9:23:09 PM8/8/22
to Santhavasantham
On Sun, Aug 7, 2022 at 11:37 PM lns2...@gmail.com <lns2...@gmail.com> wrote:
NG,

You have given a lot of quotes to show prevalence of and references to chess in literatures of India. One question which I get persistently is the references in literature, esp their modern understanding, routinely confounds a game of chance with one of skill that does not involve chance i.e., does not involve throwing of dice.

In the Puvanur Swami calendar art from Kalki Deepavali malar, we see Sivan seated in front of a chess board but has dice in his hands. Is it cokkaṭṭāṉ or is it chess? In north India too, periodically they confound a board game of chance (e.g., pacīsī or caupār) with chess (caturaṅga) played without dice. You can see people playing Pacīsī even today under trees, in street corners all over northern India. (See attached)


It would be helpful to point out which of the Tamil literary references point to a game of chance involving dice throwing and which actually point to a game such as chess which does not involve dice throwing.

If you read these links, I try to distinguish between game of choice (kavaRu or kAy - dice) vs. vallu "pre-Chess" done with vallu nAy (Tolkaappiyam).

உருட்டும் காய்களும், நகர்த்தும் நாய்களும் - (Spheroidal Pawns and Translating Pawns in Tamil Board Games)
Reply all
Reply to author
Forward
0 new messages