கொடிவழுதலை (தூதுவளை)

81 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Aug 6, 2019, 9:01:24 AM8/6/19
to Santhavasantham, housto...@googlegroups.com, karanthaijayakumar

கொடிவழுதலை (தூதுவளை)
-----------------------

சேவூர் அருகே உள்ளது குடவோடு என்னும் ஊர். ஈரோடு, பேரோடு, வெள்ளோடு, சித்தோடு, பச்சோடு (பாப்பினி), எரியோடு, .... போலக் குடவோடு என்ற ஊர்ப்பெயர். காபாலிக, காளாமுக சமயம் கொங்குநாட்டின்கண் மிகுந்திருந்ததை விளக்கும் ஊர்ப்பெயர்கள் இவை. ஈர ஓடு = ஈரோடு. அங்கே சிவனின் பெயர்: ஆர்த்ரகபாலீசர். < ஈர ஓட்டு ஈசன். புலவர் செ. இராசு பழைய ஆவணங்கள் எல்லாவற்றிலும் உள்ள பெயர் ஈரோடு தான் என்று சொல்கிறார். மாணிக்கவாசகர் பாடிய குடவோட்டு மொக்கணீச்சரத்தில் கிடைத்துள்ள வட்டெழுத்துக் கல்வெட்டில் முள்ளி குலத்தானின் மனைவி எறுழங்கோதை குறிப்பிடப்படுகிறாள். இது தமிழில் எறுழ் (= சிவப்பு; Cf. எறுபு (தெலுகு)) மரம் பற்றிய மூன்றாம் குறிப்பு. கல்வெட்டின் முன்னர் சங்க இலக்கியத்தில் இரண்டுமுறை எறுழ் வருகிறது. உயரமான மலைகளின் சோலைகளில் ( https://en.wikipedia.org/wiki/Shola ) மட்டுமே, குன்றின் மேல் இட்ட விளக்காக எறுழ மரங்கள் வளர்கின்றன. இதனால், “எரி புரை எறுழம்” என்று தீயை ஒத்த எறுழம் என்றார் குறிஞ்சிப் பாட்டில் கபிலரும். குறிஞ்சித் திணைக் கடவுள் கந்தவேளின் குறவள்ளிக்கு எறுழ மலர் விருப்பமான மலர் என்பதாற்போலும் எறுழங்கோதை எனப் பெண்களுக்குப் பெயர் வழங்கியிருக்கிறது. “முருகு அமர் மாமலை”யில் எறுழ மலர் பூப்பதை ஐங்குறுநூற்றுப் பாடல் பதிகிறது. https://groups.google.com/forum/#!msg/mintamil/u8HGlQ1_BXo/KJZwDFhuCQAJ  

கெழு- >> எழு-/எறு- >> எறுழ் (எறுபு) எனத் தென்மொழிகளில் ஆனது போலும். கெழு-/கேழ்- = செம்மை நிறம். கேழ்வரகு, கேழையாடு, கேழல், ... (கொழு (கலப்பையில்) :: குழை- . உழு- உழவு .... இவை போல சொல்முதல் ககரம் இழந்து எழு-/எறு-எடு- (Cf. கெழு- ‘சிவப்பு’). எறுபு, எறுழ் தோன்றியது. இந்த (1) எறுழ் ‘சிகப்பு’ மரத்திற்கும், (2) எறுழ் ‘தண்டாயுதம், வலி’ என்பதற்கும் சொற்பிறப்பியலில் வேறுபாடுகள் உண்டு.

All languages exhibit homophones, i.e., similar sounding words but having entirely different origins. An excellent example is "eRuzh" in Tamil:
(1) eRuzh = red color, coming from ker̤u 'red'. eṟur̤ < ker̤u (Cf. kEr̤varaku, kEr̤ai ATu 'mouse deer', kEr̤al 'male boar', kEr̤/ker̤ 'red color')
(2)  eRuzh = daNDAyudha as in Pazhani DaNDAyudhapANi svamin's daNDam, strength etc., Even though both have same sound, their origins are entirely different.  eRuzh = daNDAyudha does not have any word-initial consonant during its formation, whereas eRuzh = red had a word-initial k- in PD stage that was lost subsequently. (PD = Proto-Dravidian, PD is like well-researched PIE. PD research is in early stages.)

கொங்கு வெள்ளாளரில் குலக்குறியீடுகளாக வெண்டை, காடை, செங்கூன், ... என்று பல இருக்கும். இங்கே, முள்ளி என்பது கண்டங்கத்திரி வகை. முள்ளி என்ற தாவரமும், அதன் சமையலும் பற்றிப் பேரா. ச. கண்மணி (சிவகாசி) விளக்கினார்கள். அப்போது, நாலடி வெண்பா ஒன்றை ஆராயும் வாய்ப்பமைந்தது:

நன்றியில் செல்வம்

        புணர்கடல்சூழ் வையத்துப் புண்ணியமோ வேறே;
        உணர்வ துடையா ரிருப்ப - உணர்விலா
        வட்டும் வழுதுணையும் போல்வாரும் வாழ்வாரே,
        பட்டும் துகிலும் உடுத்து.  (264)

கடல்கள் சூழ்ந்த இவ்வுலகில் செல்வத்துக்குரிய புண்ணியம் என்பது அறிவுக்குரிய புண்ணியத்தினின்றும் வேறாகவே இருக்கிறது. எவ்வாறெனின், கல்வி அறிவுடையார் ஒரு பொருளுமின்றி வறுமையுற்று இருக்க, கறிமுள்ளியும் கத்தரியும் போன்ற அற்பர் விலையுயர்ந்த பட்டாடையும் பருத்தி ஆடையும் உடுத்து வாழ்வர். (கறிமுள்ளியும் கண்டங்கத்தரிச் செடியும் மிகுதியாக இருப்பினும் அவை, கொள்வாரை முள்ளால் குத்தும். அதுபோல பழைய புண்ணியத்தால் செல்வம் பெற்று வாழினும் அறிவிலாரிடம் ஈகைத் தன்மை இல்லை!)

வினைப்பயன் பற்றிப் பேசுகிறது பாடல். நல்வினை தீவினைப் பயன்களை அறிந்தவர்கள் புவியில் எளிய வாழ்க்கை வாழ்கின்றனர். அவர்கள் வாழ்வு பிறருக்கு இன்னல் தராத வாழ்வு. சொல்லப்போனால் அவர்களிடம் டாம்பீகம் இருக்காது. தம்மை/ வாழ்வை அப்படியே  பிறருக்காக அர்ப்பணிப்பவர்களாக இருப்பார்கள். ஆனால் வினைப்பயனின் விளைவு பற்றி அறியாமல் பட்டும் பந்தாவுமாக வாழ்பவர் பிறருக்கு இன்னல்களைக் கொடுப்பர்---முள்ளிக்காய் &கண்டங்கத்தரிக்காய் போல..... உணர்ந்து எழுதிய உவமை அருமை. அழகான இச் செய்யுளில், வட்டும், வழுதுணையும் எங்கும் இருப்பதும், அவற்றின் சிறுமையும் (முள்) தோன்ற நின்றன.

வட்டு, வழுதுணை (நாலடியில்) முள்ளி இனங்கள் = Solanum plants
--------------------------------------------------------
(1) வட்டு = முள்ளிக்காய் (கண்டங்கத்தரி, கறிமுள்ளி - கறி சமைக்கப்படும் முள்ளிக்காய்).
Yellow berried Nightshade: https://en.wikipedia.org/wiki/Yellow-fruit_nightshade
Solanum xanthocarpum
 
(2) வழுதுணை = (சிறு)வழுதுணை = https://commons.wikimedia.org/wiki/Category:Solanum_lasiocarpum
இதுவும் ஒரு வகை கண்டங்கத்தரி. கண்டம் = முள்.
சிறுவழுதுணை (p. 1464) ciṟu-vaḻutuṇai சிறுவழுதுணை ciṟu-vaḻutuṇai , n. < id. +. 1. Indian nightshade, m. sh., Solanum indicum; செடிவகை. (W.) 2. Species of solanum. See கண்டங்கத்திரி. (M. M.)  
https://commons.wikimedia.org/wiki/Category:Solanum_indicum  
நாலடி வெண்பாவிலே, வழுதுணை என்பது: (Indian nightshade = Solanum indicum (in Botany) )
https://www.flickr.com/photos/dinesh_valke/4745985224  
 
கொடிவழுதலை (தூதுவளை)
-----------------------

கத்தரிகளில் பல இனங்களைப் பார்த்தபோது (Solanum species) தூதுவளையின் பழைய தமிழ்ப் பெயரை அறியமுடிகிறது. தூதன் - அங்குமிங்கும் தூது செல்வோன். அதுபோல் ஓரிடத்தில் இருந்து பிறிதோர் இடத்துக்குத் தூது செல்லும் கொடி ஆதலால், தூதுவளை என்ற பெயர். தூது =  dūta (வடசொல். பார்க்க: மஹாகவி காளிதாசரின் மேகதூதம்).  தூதுவளையின் “தூது” தன்மையைப் பழைய தனிப்பாடல்களிலும், கண்ணதாசனின் இசைப்பாடலிலும் காண்கிறோம், கேட்டு இன்புறுகிறோம்.

கொடிவழுதலை = ஓர் வழுதுணை.
இந்த அளவிலே, 1842 யாழ்ப்பாண அகராதி விட்டுவிடுகிறது. இதுவே அகராதிகளில் தொடர்கிறது.
https://archive.org/details/AManualDictionaryOfTheTamilLanguag/page/n209
J.P.Fabricius Tamil and English Dictionary
கொடிவழுதலை, a kind of brinjal.
University of Madras Lexicon
கொடிவழுதலை koṭi-vaḻutalai   n. id. +.A kind of nightshade, Solanum; வழுதுணைவகை.(யாழ். அக.)  

தூதுவளை (வடசொல்) அதன் பழைய தமிழ்ச்சொல் = கொடிவழுதலை.
 தூதுவளை tūtu-vaḷai , n. prob. id. + வளை-. [M. tūduvaḷam.] Climbing brinjal, m. cl., Solanum trilobatum; கொடிவகை. (மலை.).
https://www.rarepalmseeds.com/solanum-trilobatum  (Thai Nightshade)
https://en.wikipedia.org/wiki/Solanum_trilobatum
http://www.flowersofindia.net/catalog/slides/Purple%20Fruited%20Pea%20Eggplant.html
https://www.thehindu.com/thehindu/mag/2002/10/13/stories/2002101300420700.htm
ஈழத்திலே, கொடிவழுதலை என்று தூதுவளைக்கான தமிழ்ப்பெயர் வழங்கியுள்ளது. இந்தக் கொடி வளைந்த முட்களைக் கொண்டது. பந்தல், மரத்தில் படரும்.
https://www.femina.in/tamil/health/home-remedies/medicare-benefits-of-embroidery-937.html

அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே !  (1962)
https://www.youtube.com/watch?v=ztShZkR6aCo
சொன்னதெல்லாம் விளங்காயோ தூதுவழங்காய் வெண்ணிலா
என்னை நீ காயாதே என்னுயிரும் நீயல்லவோ?
https://isaipaa.wordpress.com/2013/07/07/aththi/

2011-ல் நடந்த மடலாடல்:
அத்திக்காய் காய் காய்:
https://www.youtube.com/watch?v=ztdjFKPW6Uk

பாடல் விளக்கம்:
http://kavimagudeswaran.blogspot.com/2011/08/
http://tamilpaatu.blogspot.com/2011/05/blog-post.html

வெள்ளரிக்காயா விரும்பு அவரைக்காயா
உள்ள மிளகாயா ஒரு பே(ய்)ச் சுரைக்காயா

'வெள்ளரிக்காயா? விரும்புகின்ற அவரைக்காயா? பெருந்தொகையாக உள்ள மிளகாயா? ஒரு பேச்சுரைக்காயா?" என்று நாம் உண்ணுகின்ற மரக்கறி வகைகளை நிலைப்படுத்துவதாக இப்பாடலைக் கொள்ளுதல் ஒருவகை.
வெள் அரிக்கு ஆயா! விரும்பும் அவரைக் காயா!
உள்ளம் இளகாயா! ஒரு பேச்சு உரைக்காயா"

'வெண்மையான காப்பை அணிந்த பெண்ணே! (உன்னை) விரும்புகின்ற அவரைச் சினக்க வேண்டாம்! (உன்) உள்ளம் இளக மாட்டாயா! ஓ (என்னுடன்) ஒரு பேச்சு உரைக்கமாட்டாயா!" என்று இன்னொரு வகையிலும் பொருள் கொள்ளலாம். இவ்வாறு இரட்டுற மொழியக் கூடிய பாடல் அமைவதற்குத் தமிழ் ஒட்டுமொழிப் பண்பே வகை செய்கின்றது. 'வெள்ளெருக்கஞ் சடைமுடியான்...." என்னும் கம்பராமாயணப் பாடலிலே 'ஒரு வன் வாளி" என்று முடியும் இறுதி அடியினையும் 'ஒருவன் வாளி" என்று பிரிக்கும்போது 'ஒரு வலிமை மிக்க அம்பு" என்னும் பொருளையும் தருவது இத்தகைய ஒட்டணிப் பாங்கேயாகும்.

---------------
https://groups.google.com/forum/#!msg/mintamil/OOcikINGiDo/bFbIf8udzOIJ

2010/2/11 Madhurabharathi <madhura...@gmail.com>
”அத்திக்காய் காய் காய், ஆலங்காய் வெண்ணிலவே, இத்திக்காய் காயாதே, நீ என்னைப்போல் பெண்ணல்லவோ” என்றால் “ஆலவட்டம் போட்டுக் காய்கிற நிலவே, இந்த திக்கில் காய்ந்து என்னைச் சுட்டெரிக்காதே, வேறு திக்கில் போய்க் காய், நீயும் ஒரு பெண்ணாயிற்றே, உனக்குப் புரியாதா என்ன!” என்று காதலி விரகதாபத்தில் சொல்வதாக அமைந்தது என்மனார் புலவர்.
 
இதற்கு மூலபாடம் சங்கப்பாடல் என்றும் அறிஞர் உரைப்பர்.

வெள்ளரிக்காயா விரும்பு மவரைக் காயா
உள்ள மிளகாயா ஒருபேச் சுரைக்காயா --
 
என்று தொடங்கும் இடைக்கால வெண்பா அது.  முழுப்பாடல் எனக்கு பலவருடங்களாகக் கிடைக்கவில்லை.  (அத்திக்காய் பாடலுக்கு மின்தமிழில் உரையே எழுதியாச்சுங்ணோவ்!)
 
--
அன்புடன்,
ஹரிகி.

--------------------

ஆனால், டாக்டர் மு. வ. ஒரு தனிப்பாடல் வெண்பாத் தந்துள்ளார்:
அதனை முன்னர் கொடுத்துள்ளேன்
https://groups.google.com/forum/#!msg/mintamil/Ow-eiFR_2J8/rAavIFO7VWMJ
மு.வ., இலக்கியத் திறன், பக். 183,

அத்திக்காய் காய்காய்காய் ஆலங்காய் வெண்மதியே
இத்திக்காய்க் காய்ந்துனக் கென்னபயன் - சற்றுமென்மேல்
பற்றற் றவரைக்காய் பாவைக்காய்க் கோவைக்காய்
சொற்றக்காய் தூதுவிளங் காய்.

முழுநூலும் இங்கே: http://www.tamilvu.org/slet/lA100/lA100pd1.jsp?bookid=175&pno=183

இந்த வெண்பாவை விரித்துள்ளார் சினிமாவுக்காகக் கவிஞர்.
அவருக்குத் தனிப்பாடல்கள், குற்றாலக் குறவஞ்சி, நளவெண்பா, .... அத்துபடி.
இப்போது தங்கிலீஷ் பாட்டு சினிமாவில் எழுதுவோரில் இலக்கியம் அறியார் பலர்.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Aug 10, 2019, 9:47:47 AM8/10/19
to Santhavasantham
///தூது 2500 ஆண்டுகளாய் தமிழில் புழங்கும் சம்ஸ்கிருத வார்த்தை (dūta). தொல்காப்பியத்திலேயே காதலுக்குத் தூது போக யார்யாரை அனுப்பலாம் என்றிருக்கிறது /// Dr.Ganesan wrote 13hrs. ago

> தூது வடசொல்லாகத் தான் இருக்க இயலும். ஏனெனில் 'தூதம்' என்னும் வழக்கு காளிதாசரின் நூலைச் சுட்டப் > பயன்படுகிறது (மேகதூதம்).  இந்த  '-அம்' விகுதி பல வடசொற்களைத் தமிழ்ப்படுத்தும் போது இணையும்.

> தொல்காப்பியத்தில் யார்யாரைத் தூதனுப்பலாம் ? என்று இருக்கிறதா? (எனக்குத் தேர்விற்குப் படித்ததெல்லாம் மறந்து > விட்டது.)   " ஓதல் பகை தூது இவை பிரிவே" என்ற நூற்பா மட்டுமே நினைவில் உள்ளது.
> சக

தூது என்பது நல்ல வடசொல் தான். தொல்காப்பியத்திலேயே நான்கைந்து இடங்களில் தூது, தூதுவர் என்றுள்ளது. மேலும், தூதுவர் என்பதற்கு நல்ல தமிழ்ச்சொல் “வாயில்” என்று படைத்தும் ஆள்கிறார்: http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=1498  யார்யாரைத் தூதனுப்பலாம் என்பதைத் தொல்காப்பியர் சூத்திரித்துள்ளார்:
"தோழி தாயே பார்ப்பான் பாங்கன்
பாணன் பாடினி இளைஞர் விருந்தினர்
கூத்தர் விறலியர் அறிவர் கண்டோர்
யாத்த சிறப்பின் வாயில்கள் என்ப" (தொல் – கற்பியல் – 52)

திருவள்ளுவர் திருக்குறளில் தூது என்ற தலைப்பில் ஓர் அதிகாரத்தையே அமைத்துள்ளார்.

                 தொகச்சொல்லித் தூவாத நீக்கி நகச்சொல்லி
                 நன்றி பயப்பதாம் தூது

இதனால், தமிழர் பண்டைக்காலத்திலே கொடிகளைக் கூட தூது செல்வதாய்க் கண்டனர். முல்லைக்கொடி தூது அனுப்பும் செய்தியைக் கலித்தொகை பாடுவதைக் கண்டோம். சிலப்பதிகாரத்தில் கதாபாத்திரப்பெயர்களை நுட்பமாய் வைத்தவர் இளங்கோ அடிகள். இதுபற்றி நிறைய எழுதியுள்ளேன். கோவலன் (< க்ருஷ்ணன். பல தார மணம் க்ருஷ்ணாவதாரம். சமணத்தில் இகழப்படும் செயல் இது. இளங்கோ அடிகளும் இப்பாத்திரத்தை கொலையுண்டு செத்தான் என்றார்.), முல்லைக் கற்பினள் கண்ணகி (< கர்ணகீ என்றால் தாமரைப் பொகுட்டு. தாமரைப்பொகுட்டில் வாழும் லக்ஷ்மி), மாதவி = குருக்கத்தி. சங்க இலக்கியத்தில் “முல்லை குருக்கத்தி” அடுத்தடுத்து வரும். கர்ணகைக்கு ஸப்ஸ்டிட்யூட் என்ற பொருளில் மாதவிக் கொடியை வைத்தார். மாதவி என்றாலே “female messenger (duuti), procuress" என்ற பொருள்கள் உண்டு. கனகன் - விஜயன் “கனகவிஜயர்” என்றார். கபிலபரணர் போல. கனகன் = பொன்னன் (== ஹரி), இங்கே விஜயனுக்கு (=அர்ஜுனனுக்கு) சொல்லும் கீதை. தெலுங்கில் பசுபு என்றால் மஞ்சள். அந்தப் பழைய வழக்கம் பச்சைமால் என ஹரியைச் சொல்கிறோம். ஹரித்ரம் = மஞ்சள் கிழங்கு வட இந்திய மொழிகளில். இது, மஞ்சள்/பசுபு என்பதை ஹரித்ரம் என்று loan translation சிந்துவெளியில் பிற்காலத்தில் செய்தலால் நேர்ந்தது.

மாதவிக்கொடி தூதிக்குப் பெயர் போல, தூதுளை என்று கொடிவழுதலைக்குப் பெயர ஆகியுள்ளது. தூதுவளையை தூதுக்குப் பயன்படுத்துவதாய் சைவம், வைஷ்ணவத்தில் புராணங்கள் ஏற்பட்டன. சோமாசிமாறர் சுந்தரர்க்கு தூதுவளை அளித்ததும்,
ஸ்ரீரங்கத்தில் ஆளவந்தார் திருநக்ஷத்திரத்தில் தூதுதுவளைக்கீரை நைவேத்தியமும் இதனால்.

NG

On Fri, Aug 9, 2019 at 9:15 PM N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
கொடி வகையைச் சார்ந்த தூதுவளை, தனது உடல் முழுவதும் சிறுசிறு வளைந்த  முட்களைச் சுமந்திருக்கும். வேலிகள் அல்லது மற்ற செடியினங்களைப் பற்றிக்கொண்டு சரசரவென  ஏறும் தன்மை கொண்டது. உருண்டை வடிவில் சிவந்த நிறப் பழங்களைக் கொண்டிருக்கும்.  மாகாளிக் கிழங்கு மாகாணிக் கிழங்கு என்றும் வழங்கும். தயிரில் கலந்து செய்யும் மணமிகு ஊறுகாய், மணமிகுந்த ரசம் போன்றவை மாகாளி/மாகாணிக் கிழங்கால் செய்வர். ள் >ண் (மாகாளி/மாகாணி) போல, தூது > தூதுளம்/தூதளம் தூதுளை தூதுணை என்றும் வழங்கியிருக்கிறது. இதனை இலக்கண உரையாசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள்.

http://eegarai.darkbb.com/t94544p390-468
இளம்பூரணர் , தம் உரையில் ,  ‘தூதுணை’ , ‘வழுதுணை’ , ‘தில்லை’ , ‘ஓலை’
ஆகிய சில ‘ஐ’ ஈற்றுப் பெயர்ச்சொற்களைத் தந்து இவையும் மேலனபோன்றே புணரும்  என்றார் ! –

13. தூதுணை + காய் = தூதுணைக் காய் ×
  தூதுணை + காய் = தூதுணங் காய் √   (அம் - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)
(தூதுணங் காய் – தூதுவளைச் செடியின் காய்)

14. தூதுணை + செதிள் = தூதுணைச் செதிள் ×
  தூதுணை + செதிள் = தூதுணஞ் செதிள் √   (அம் - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)
(தூதுணஞ் செதிள் – தூதுவளைச் செடியின் வெட்டுத் துண்டு)

15. தூதுணை + தோல் = தூதுணைத் தோல் ×
  தூதுணை + தோல் = தூதுணந் தோல் √   (அம் - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)
(தூதுணந் தோல் – தூதுவளைச் செடியின் பட்டை)

16. தூதுணை + பூ = தூதுணைப் பூ ×
   தூதுணை + பூ = தூதுணம் பூ √   (அம் - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)
(தூதுணம் பூ – தூதுவளைச் செடியின் பூ)

http://www.tamilvu.org/slet/l0121/l0121oin.jsp?st=156&ed=251&sno=283
”நினையுங்காலை  யென்றதனால்  தூதுணை  வழுதுணை தில்லை ஓலை
தாழை என நிறுத்தி அம்முக்கொடுத்து ஐகாரங் கெடுத்துத்   தூதுணங்காய்
வழுதுணங்காய்  தில்லங்காய்   ஓலம்போழ் தாழங்காய் என முடிக்க.” (நச்சினார்க்கினியர்)

தூது 2500 ஆண்டுகளாய் தமிழில் புழங்கும் சம்ஸ்கிருத வார்த்தை (dūta). தொல்காப்பியத்திலேயே காதலுக்குத் தூது போக யார்யாரை அனுப்பலாம் என்றிருக்கிறது.

கலித்தொகை: தோழி கூற்று:

இனிய தண்ணீர் அருவி அருகே, தன் பூக்களைச் சூடிக்கொள் என்று முல்லைக்கொடி படர்ந்து தலைவனிடம் தூது செல்கிறதாம். தமிழர்கள் பயனுள்ள படரும் கொடியை தூது என்றும், தூதுளை/ணை என்றும் கொடிவழுதலையை அழைத்தது வியப்பில்லை.

பசந்தவர் பைதல் நோய் பகை எனத் தணித்து, நம்
இன் உயிர் செய்யும் மருந்தாகி, பின்னிய
காதலர் எயிறு ஏய்க்கும் தண் அருவி நறு முல்லைப்
போது ஆரக் கொள்ளும் கமழ் குரற்கு என்னும்
தூது வந்தன்றே தோழி!
துயர் அறு கிளவியோடு: அயர்ந்தீகம் விருந்தே!

http://dravidaveda.org/index.php?option=com_content&view=article&id=1007&Itemid=53  
”ஆய்மிகு காதலோடு யானிருப்ப யான்விட வந்தவென் தூதியோடே
நீமிகு போகத்தை நன்குகந்தாய் அதுவுமுன் கோரம்புக் கேற்குமன்றே”

இவ் வடசொல்லைக் கத்திரிச் செடியினங்களில் ஒன்றாகிய கொடிவழுதலைக்குப் பயன்படுத்துகிறோம். தூது, தூதுளம், தூதுளை, தூதுளை, தூதுவளை, ... என்றெல்லாம் இதற்குப் பெயர். தூதுணங்காய் என்ற சொல்லை இளம்பூரணர், நச்சினார்க்கினியர் இலக்கணக்குறிப்புத் தருகிறார்கள்.  கொடிவழுதலை = தூதுவளை

நா. கணேசன்
Reply all
Reply to author
Forward
0 new messages