செம்பரல் முரம்பு

33 views
Skip to first unread message

Eskki Paramasivan

unread,
Jul 8, 2021, 6:39:34 AM7/8/21
to vall...@googlegroups.com
செம்பரல் முரம்பு

______________________________ருத்ரா இ பரமசிவன்



செம்பரல் முரம்பில் நீள்வழி வெங்கான்

இலம் அசைஇ நெருப்பே பூத்தன்ன‌

கடும்பொறை அடுக்கம் திரிசுரம் வாங்க‌

மரல் தழீஇய மண்ணுழைப் பாம்பு

கூர்வான் படுத்த எருவைச்சேவல் நீள்விரல்செத்து

அகன்சிறை விரித்த அடுநிழல் ஆங்கு

கண்டே அஞ்சி அண்ணிய சிறுபூப்

பைம்புதல் ஒளிக்கும் காட்சியும் மலியும்.

காழ்த்த கடுமுள் நெடுமரம் மறிப்ப‌

ஆளி எதிரிய அவிர்நிழல் அண்டும்

சிறுமுயல் தவிப்ப வெள்ளிய பருதி

கனல் பெய் ஆறு கடாத்த காலையும்

இறைமுன் எல்வளை பற்றிச்செயிர்க்கும்

நெஞ்சம் தோய்ந்து ஏய்க்கும் அவள்

ஒள்வீ நகை அவிழ் கள்ளக்கூட்டம்

கண்டிசின் அவனும் கல் இடறி வீழ

இடர்ப்பட்ட ஞான்றும் இனியவே நகைக்கும்.

____________________________________________________
(நான் எழுதிய சங்கநடைச்செய்யுள் கவிதை)



பொழிப்புரை

_____________________________________________ருத்ரா இ பரமசிவன்



செம்மண் தரைப் பருக்கைக்கற்கள் நிறைந்த கரடு முரடான நெடிய வழியில் வெப்பம் மிகுந்த காட்டில் தலைவன் பொருள்தேடிச் செல்கிறான்.வழியில் இலவ மரத்துப்பூக்கள் நெருப்புப்பூக்கள் போன்று மலர்ந்திருக்கின்றன.இறுகிய பாறைகள் மலைகள் போன்று எதிர்ப்பட அதைத்தொடர்ந்து வளைந்து வளைந்து (திருகி)செல்லும் செல்லும் காட்டுவழி (சுரம்)தொடர்ந்து வளைந்து செல்ல (வாங்க) அவனும் செல்கிறான். அப்போது மடல் எனும் காட்டுச்செடி (சிறிய வரிகள் நிறைந்து நீண்டு இருக்கும்) ஒரு மண்ணுழிப்பாம்பு போல் தெரிய அதை அருகே உள்ள மண்ணுழிப்பாம்பு சுற்றித்தழுவி இருக்கும்.அதன் கூரிய பார்வையில் படும்படி வானத்தில் பறக்கும் ஆண்பருந்து நீண்ட விரல்களைப் போன்ற‌  (நீள்விரல் செத்து) சிறகுகளை அகல விரித்துப் பறக்கும்.அதன் வெயில் கலந்த நிழல் கூட அதற்கு தென்படும். அதனல் அஞ்சி அருகில் உள்ள (அண்ணிய)சிறு பூக்கள் பூத்த புதருக்குள் மறையும்.இது போன்ற காட்சிகள் நிறைந்ததே அக்காட்டு வழி.அது மட்டுமின்றி முற்றிய உயரமான‌ முள் மரங்கள் எதிர்ப்படும். (சங்ககாலத்தில் இருப்பதாக சொல்லப்படும்) யாளி எனும் விலங்கின் உருவத்தைப்போன்ற (எதிரிய) வெம்மை மிகுந்த நிழலை அண்டிநிற்கும் சிறுமுயலும் அங்கே வழியில் தவித்து நிற்கும். அத்தகைய வெள்ளைச்சூரியன் (வெள்ளிய பருதி...இங்கே பருதி என்பது சூரியனின் வட்டத்தைக்குறிக்கும்.பரிதி என்பது தான் சூரியனைக்குறிப்பது) நெருப்பு மழை பொழியும் காட்டாற்றை கடந்து கொண்டிருக்கும் பொழுதிலும் தலைவனின் நெஞ்சில் தலைவியின் அழகு மயக்கம் ஊட்டுகிறது. ஒளிபொருந்திய அழகிய வளைகள் (எல்வளை)அணிந்த அவள் முன்கையை (இறை முன்)ப் பற்றி உணர்ச்சியினால் உந்தப்படுகிறான். அவளின் சிறு சிறு முறுவல்கள் ஒளிரும் சின்னஞ்சிறிய பூக்களைப்போன்று இதழ் சிதறி கள்ளத்தனமான நகைப்புக் கூட்டங்களைக்கொண்டு அவன் நெஞ்சம் புகுந்து ஏமாற்றும்.இந்த கற்பனைக்காட்சிகளில் திளைத்த அவனோ காலில் கல் இடறி விழுகின்றான்.அப்பொழுதும் கூட அவளைக்கண்டு இனிமை நெகிழ சிரித்து மகிழ்கின்றான்.

________________________________________________________ருத்ரா இ பரமசிவன்

Manivannan Shanmugam

unread,
Jul 8, 2021, 10:11:22 AM7/8/21
to vall...@googlegroups.com
Very nice sir, As i dont have any tamil typing facility in my laptop i am writing this in English. 

It reminds me of the very old Sangam poems , words are very well chosen and freely flowing . It shows the efficiency of the Poet . My best wishes to him. 

Manivannan S.



--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAP%3DDJaKRkag3LQP9cOzTs6OZhbk7LHq9QALnvnvRwMuLyf8X-w%40mail.gmail.com.

வேந்தன் அரசு

unread,
Jul 8, 2021, 8:52:47 PM7/8/21
to vallamai
படம் பார்க்கவும்

வியா., 8 ஜூலை, 2021, பிற்பகல் 7:41 அன்று, Manivannan Shanmugam <smani...@gmail.com> எழுதியது:


--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்
Screenshot 2021-07-09 6.20.49 AM.png

வேந்தன் அரசு

unread,
Jul 8, 2021, 8:57:12 PM7/8/21
to vallamai
இதுபோன்ற சங்கத்தமிழில் பாடல்கள் எழுதுவதால் தமிழுக்கு ஒரு பயனும் இல்லை. எழுதுபவருக்கு ஒரு மன நிறைவுதரலாம். மாறாக பலரும் புழங்கும் குமுகவெளியில் கலந்துகொண்டு உரையாடல்களில் பழம்தமிழ்ச்சொற்கள் ஒன்றிரண்டைக்கலந்தால். உரைநடைத்தமிழ் வளம்பெறும் வாய்ப்பு பெருகும்.

வியா., 8 ஜூலை, 2021, பிற்பகல் 4:09 அன்று, Eskki Paramasivan <eps...@gmail.com> எழுதியது:
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAP%3DDJaKRkag3LQP9cOzTs6OZhbk7LHq9QALnvnvRwMuLyf8X-w%40mail.gmail.com.


--

N. Ganesan

unread,
Jul 8, 2021, 11:37:14 PM7/8/21
to vallamai, housto...@googlegroups.com, karuannam annam
On Thu, Jul 8, 2021 at 5:39 AM Eskki Paramasivan <eps...@gmail.com> wrote:
செம்பரல் முரம்பு

______________________________ருத்ரா இ பரமசிவன்

வல்லமையில் அரிதான மடல் அனுப்பியுள்ளீர்.

அருமையான செய்யுள். சுவைத்தேன்.

(1) கண்பு எனக் கம்பு தானியத்தை அவினாசித் திருக்கோயில் கல்வெட்டு குறிப்பிடுகிறது.  

அதே போல,
 (2) கண்பு எனும் வெள்ளையான நாமக்கட்டி போல உள்ள நாமக்கோழி (Coot) என்கிறோம். இது, கண்புள் (கண்பு + புள்), > கம்புள் என சங்க இலக்கியம் கூறும் பறவை. கம்புள் சம்பங்கோழி (Coot) எனவும் பெயர்.
https://groups.google.com/g/vallamai/c/-L99H6ull0o/m/o_GexGb3AwAJ

(3) கண்பு (> கம்பு) போல மொக்குள் பூக்கும் மரம். கண்பகம் > சண்பகம். செண்பகம் due to Schwa. கம்பகம் > சம்பகம். இப்பெயர் ஸம்ஸ்கிருதத்திற்குத் தமிழ் தந்தது. champaka. அங்கிருந்து, தாவரவியல் பெயர். Michelia champaca https://en.wikipedia.org/wiki/Magnolia_champaca

(4) முரண்பு > முரம்பு என ஆகும்.

நளவெண்பா ஆசிரியர் புகழேந்தியைப் புரந்தவன் முரணை நகர் காவலன் சந்திரன்சுவர்க்கி. 19-ம் நூற்றாண்டில் கோமளபுரம் இராசகோபாலப்பிள்ளையவர்கள் பதிப்பித்த உரையில் (இவர் சேனாவரையத்தை முதலில் பதிப்பித்தவர்!) முசிறி அருகே வள்ளுவப்பாடி நாடு ஆக மள்ளுவநாடு என எழுதினார். அப்போது கல்வெட்டு ஆய்வு வளர்ச்சி பெறாத காலம். எனவே இன்றளவும் உறையூர், முசிறி அருகே என நளவெண்பாவில் வரும் புரவலனைப் பற்றி எழுதுகின்றனர்.  ஆனால், மள்ளுவநாடு வேறு. வள்ளுவப்பாடி நாடு வேறு. வள்ளுவனது பாடி அமைந்த இடம் அது. ஆனால், முரணைநகர் (அ) முரம்பு எல்லாம் வள்ளுவப்பாடி நாட்டில் எங்கும் காணோம்.

மேலும், மாளுவர்/மள்ளுவர் என்போர் பாண்டிய நாட்டுச் சிற்றரசர்கள். மாளுவம்/மாளவம் ( https://en.wikipedia.org/wiki/Malwa ) என்னும் வட நாட்டுப் பிரதேசத்தில் இருந்து வந்தோர் எனச் சொல்லிக்கொண்டனர். முதலில் கங்க ராஜ்யத்தில் இருந்தவர்கள். தாராபுரம் இவர்கள் தலைநகர் என்கிறது அபிதான கோசம். காங்கேயன் என்ற பட்டமும் உண்டு. மாளவச் சக்கரவர்த்திகள் ஆரியச் சக்கரவர்த்திகள் என்றும் அழைக்கப்பட்டனர். சேது நாடு, ஈழநாட்டை ஆண்ட மன்னர்கள். உஞ்சேனை மாகாளம் பெயரால் உஞ்சேனைக் கோவிலை காளையார்கோவில் அருகே மாளுவர் அமைத்தனர். ஐரோப்பிய காலனிய ஆதிக்கம் வரும்வரையிலும். சேதுபதிகள் வரலாறு மாளவ சக்கிரவர்த்திகள் தொடர்பைக் காங்கேயன் குறவஞ்சியில் பாடுகிறது. கோவை/கொவ்வை, மோது/மொத்து, நூவு/நுவ்வு, ... போல, மாளுவர்/மள்ளுவர் எனக் கொண்டால் சந்திரன்சுவர்க்கி பாண்டிநாட்டான் எனத் தெரிகிறது. மேலும், தாமிரபரணிக் கரையில் முரம்புநாடு இருக்கிறது. நளவெண்பா குறிப்பிடும் வளத்திற்கு பொருனை ஆறு காரணம். இன்னோர் முரம்பு ராஜபாளையம் அருகே. அங்கே, நளவெண்பா குறிப்பிடும் வளமோ, பழமையான கோவில்களோ இல்லை. எனவே, முரணைநகர் என்பது பாண்டியர், சோழர்களின் உயரதிகாரியாக இருந்த சந்திரன்சுவர்க்கி ஊர் தாமிரபரணிக் கரையின் முரப்பநாடு எனலாம். மிழலைநாட்டு மிழலை, வெண்ணிநாட்டு வெண்ணியே என்பதுபோல, கூறைநாடு என்பதுபோல, முரப்பநாடு. மாளுவச் சக்கிரவர்த்தி வங்கிசத்தான் சந்திரன்சுவர்க்கி என்பது துணிபு. மாளவச் சக்கிரவர்த்திகள் பாண்டியர், சோழர் ஆட்சியில் அவர்களுக்குப் பணி செய்தனர். .....

etc. etc.,

வெண்பாவிற் புகழேந்தி.
புலவரின் புரவலன் வங்கிசமும், ஊரும் பற்றிப் பின்,
நா. கணேசன்

 

N. Ganesan

unread,
Jul 8, 2021, 11:38:33 PM7/8/21
to vallamai, housto...@googlegroups.com, paramasivan esakki
Reply all
Reply to author
Forward
0 new messages