அன்புக்கை நீட்டி அனைவரையும் சோதரராய்இன்பத்தோ(டு) ஏற்றுய்வோம் இவ்வுலகில்! - துன்பகன்றுசிந்தைக்குள் அன்பே சிறந்தெழுக; யாவர்க்கும்தொந்திக் கணேசன் துணை
கனமாய்நில் என்றாலே காப்பு!எனக்குள் இனிப்பவனே! என்றும்என் நெஞ்சில்அருகம்புல், மோதகம், அன்புடன் வைத்(து) என்அரும்உயிரே! செல்வமே! ஆனைக்-கரும்பே!
விநாயக சதுர்த்தி வாழ்த்துக்கள்! சந்தமும் சொற்களும் அவனே அந்தமில் கற்பனை அவனே! நந்தமிழ் நவில்வதும் அவனே! எந்தையும் ஏற்றமும் அவனே!
தந்தி முகத்தானை தொந்தி வயிறானை
வந்திப் பவர்க்கருள் முந்திக் கொடுப்பானை
சிந்தித் திருப்பவர் புந்தி உறைவானை
அந்திப் பகலும் நினை
கணாநாம் த்வா கணபதிகும் ஹவாமஹே கவிம் கவீநாம் உபமச்ரவஸ்தமம்| ஜ்யேஷ்ட ராஜம் ப்ரஹ்மணாம் ப்ரஹ்மணஸ்பதே ஆந : ச்ருண்வந்நூதிபிஸ் ஸீத ஸாதநம்|| அஸ்மிந் ஹரித்ராபிம்பே மஹாகணபதிம் த்யாயாமி மஹா கணபதிம் ஆவாஹயாமி
2015-09-16 22:58 GMT-04:00 Kaviyogi Vedham <kaviyog...@gmail.com>:யோகியார்கனமாய்நில் என்றாலே காப்பு!எனக்குள் இனிப்பவனே! என்றும்என் நெஞ்சில்அருகம்புல், மோதகம், அன்புடன் வைத்(து) என்அரும்உயிரே! செல்வமே! ஆனைக்-கரும்பே!
/அருகம்புல்/Typo. அறுகம்புல்.
136. மருதம்
[உணர்ப்புவயின் வாரா ஊடற்கண் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.]
மைப்புறப் 3புழுக்கின் நெய்க்கனி வெண்சோறு வரையா வண்மையொடு புரையோர்ப் பேணிப் புள்ளுப்புணர்ந் தினிய வாகத் தெள்ளொளி அங்கண் இருவிசும்பு விளங்கத் திங்கள் | |
5. | 4சகடம் மண்டிய துகள்தீர் கூட்டத்துக் கடிநகர் புனைந்து கடவுட் பேணிப் படுமண முழவொடு பரூஉப்பணை இமிழ வதுவை மண்ணிய மகளிர் 5விதுப்புற்றுப் பூக்கணும் இமையார் நோக்குபு மறைய |
10. | மென்பூ வாகைப் புன்புறக் கவட்டிலை பழங்கன்று கறித்த பயம்பமல் அறுகைத் தழங்குகுரல் வானின் தலைப்பெயற்கு ஈன்ற மண்ணுமணி அன்ன மாஇதழ்ப் பாவைத் தண்நறு முகையொடு வெண்நூல் சூட்டித்15.தூவுடைப் பொலிந்து மேவரத் துவன்றி மழைபட் டன்ன மணன்மலி பந்தர் இழையணி சிறப்பின் பெயர்வியர்ப்பு ஆற்றித் தமர்நமக் கீத்த தலைநாள் இரவின் உவர்நீங்கு கற்பின்எம் உயிருடம்பு அடுவி20.முருங்காக் கலிங்கம் முழுவதும் வளைஇப் பெரும்புழுக்கு உற்றநின் பிறை 1நுதல் பொறிவியர் உறுவளி ஆற்றச் சிறுவரை திறவென ஆர்வ நெஞ்சமொடு போர்வை வவ்வலின் உறைகழி வாளின் உருவுபெயர்ந் திமைப்ப25.மறைதிறன் அறியா ளாகி ஒய்யென நாணினள் இறைஞ்சி யோளே பேணிப் பரூஉப்பகை ஆம்பல் குரூஉத்தொடை நீவிச் சுரும்பிமிர் ஆய்மலர் வேய்ந்த இரும்பல் கூந்தல் இருள்மறை ஒளித்தே. -விற்றூற்று மூதெயினனார். |
உருவினில் பெரியன் வருமிடர் அகல
....உலகினர் வழிபடு மிறைவன் – அவர்
......உளமெனும் குடிலினில் உறைவன்
திருமுறை ஓதி இருவர்முன் கயிலை
....செலக்கரி பரியுடன் விரைய – ஔவை
......தினமவன் திருவுளம் கரைய
ஒருமுக முடனே உரைதுதி கேட்டே
....ஒருநொடி யளவினில் வரையை - அவள்
.......உறவர மருளிய துரையைக்
குருவடி வாக வழிபடின் உள்ளக்
....குகையினில் விலகிடும் இருளே - அவண்
.......குடிகொளும் பரசிவப் பொருளே!
அனைவருக்கும் பிள்ளையார் சதுர்த்தி வாழ்த்துகள்!
.....அனந்த்
-------------------------------
கணேசன் துதியைக் கணேசனே படித்தது கண்டு மகிழ்ச்சி!
”ஔவை தினமவன் திருவுளம் கரைய... ” என்பதை ’ஔவையார் தினமும் கணேசன் திருவுள்ளம் உருகும்படி (உரைத்த துதி)’, எனப் பொருள் கொள்ளல் நன்று.
அன்புடன்
அனந்த்
On Thursday, September 17, 2015 at 5:46:49 AM UTC-7, siva siva wrote:2015-09-16 22:58 GMT-04:00 Kaviyogi Vedham <kaviyog...@gmail.com>:யோகியார்கனமாய்நில் என்றாலே காப்பு!எனக்குள் இனிப்பவனே! என்றும்என் நெஞ்சில்அருகம்புல், மோதகம், அன்புடன் வைத்(து) என்அரும்உயிரே! செல்வமே! ஆனைக்-கரும்பே!/அருகம்புல்/Typo. அறுகம்புல்.அறுகம்புல் சரி. ஆனால், அருகம்புல் என்றும் பலர் எழுதுகின்றனர். முருக்கு/முறுக்கு, அரைத்தல்/அறைத்தல்,முரிதல்/முறிதல், வீறு/வீரம், கறுப்பு/கருப்பு, அருகு/அறுகு (புல்) ....கறுப்பு என்பது தொல்காப்பியம். ஆனால், கருப்பு என்பதும் இருக்கிறது அல்லவா? அதுபோல், அறுகு/அருகு.கறுகு- என்பது அறுகின் பழையபெயர். மலையாளம், கன்னடம், தெலுங்கில் கறுகுதான். வெயில் அடிக்கும்கடும் வறட்சிக் காலத்தில் கறுகினாலும், மழைக்குப் பின் முதலில் தழைக்கும் அறுகு/கறுகு.பொலி/பலி சம்ஸ்கிருதம்/தெலுங்கில் bali ஆவதுபோல, மலையாளம்/தமிழின்கறுகு- வடமொழியில் garaa, garii என அழைக்கப்படுகிறது. இந்த voicing of k- to g-கோடு > கௌடி = ஆமா, Indian wild gaur ரிக்வேதத்தில். கோடு அணிந்த கொற்றவைகௌடி கௌரி (kODu > kauDi > Gauri).