ஸ்ரீவைஷ்ணவ பரிபாஷை பட்டிகளில்
கரியமுது என்று கறியமுதை எழுதுகின்றனர்.
கரியமுது என்று மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம்
பிள்ளை பாடியுள்ளார். காந்திமதியம்மை
பிள்ளைத்தமிழ், அம்மானைப் பருவம் 5.
http://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0232.html
(ஏனை அடிகளின் எதுகை நோக்கி அமைந்ததாகலாம்.)
ஒரே பொருளில் அமைந்த றகர - ரகர வார்த்தைகளின்
அட்டவணை (ற>ர போலி):
கறியமுது - கரியமுது
காய்கறி - காய்கரி
வறட்சி - வரட்சி
வறுவல் - வருவல்
முறுக்கு - முருக்கு
வீறாப்பு - வீராப்பு
தறுவாய் - தருவாய் (தருவாயில் என்று கூகுளிக்க)
கறுப்பு - கருப்பு (கறுப்பும் சிவப்பும் வெகுளிப் பொருள் - தொல்.
உரியியல்)
அக்கறை - அக்கரை (கன்னடச் சொல் - அ.கி.ப.)
சில்லறை - சில்லரை (தெலுங்குச் சொல் - அ.கி.ப.)
இன்னும் இதுபோல் ற > ர எடுத்துக்காட்டுகள்
இருக்கின்றனவா? இருந்தால் தாருங்களேன்.
மிகப் பழங் காலத்திலேயே சில றகரம் உடைய
சொற்கள் ரகரமாய் வழங்கப்பட்டுள்ளன.
அவற்றில் என் மனதில் உறுதியாத்
தோன்றுச் சிலவற்றை குறிக்கிறேன்.
நண்பர்கள் கருத்தறிய அவா.
(அ) *பறுந்து : பருந்து (ஒப்பு: பாறுதல், பாறு (பெயர்ச்சொல்))
(ஆ) குறு-:குருந்தம்/குருக்கத்தி = குறுகிய புதர்ச் செடி [குறிப்பு 1]
(இ) குறுகு: குருகு (வளைந்து கோணியுள்ள கொக்கு, நாரை, கோழி)
(ஈ) அறுமணை:அரிமணை
(உ) அறல் என்றால் ஆற்று மணலில் உள்ள வரிவரியான கோடுகள்,
பெண்ணின் கூந்தலுக்கு உவமையாய் சங்க இலக்கியத்தில் வரும்.
ஆற்றில் அடியே மணலருகே கிடக்கும் விலாங்கு மீனுக்கு
ஆரல் என்று பெயர். ஆறல் : ஆரல்/ஆரால்.
ஆறல்:ஆரல் Rhynchobdella aculeata (sand eel, மணல் விலாங்கு)
http://www.aquapage.cz/Obrazky/Ryby/3483.jpg
(ஊ) கார்த்திகை (Pleiades) இதற்கு
அறுமீன் என்று பெயர். [முருகன் = அறுமீன் காதலன் (திவாகரம்)]
அறுவாய் = கார்த்திகை மீன் 6.
எனவே, (6 > ஆறு + அல்) ஆறல் : ஆரல்
இன்னும் ஏதாவது ற/ர வேறுபாடு இருப்பின்
அறிந்துகொள்ள ஆர்வம்.
அன்புடன்,
நா. கணேசன்
[1]:
குரு என்றால் நிறம் என்ற பொருள் உண்டு. அவை வேறு.
குருதி
குராற்பசு - கபிலைப் பசு,
குருமணித் தாலி - செம்மணித் தாலி
http://www.dandennis.com/Carnelian.JPG
http://www.kanzjewellery.com/images/Necklace%20Carnelian.jpg
குருந்தம் (Corundam).
[2] சங்க இலக்கியம் கூறும் வானத்து யால்/ஆலமரப்
பெயருக்கும் ஆறல்/ஆரல் (கார்த்திகை) நட்சத்திரமும்
ஒன்றல்ல. வேதங்கள், கைவல்லிய நவநீதம் இவற்றால்
வெளிச்சமாகும் திறக்கு அது. பின்பொருமுறை பார்ப்போம். ~ நா. கணேசன்