இந்தோனேசிய மகாபாரதம்

151 views
Skip to first unread message

செல்வன்

unread,
Jan 21, 2014, 3:29:17 AM1/21/14
to K Selvan
இந்தோனேசிய மகாபாரதம் குறித்த பேராசிரியர் சோபோகரட்டியின் பதிவை படித்தேன். சுவார்சியமான தகவல்களை தருகிறார். (உண்மையா பொய்யா என யானறியேன்)

*பாலி தீவு பாரதம் சுமார் கிபி 1ம் நூற்றான்டுவாக்கில் இந்தோனேசியாவுக்கு வந்து சேர்ந்தது. இந்திய மகாபாரதம் கிபி 4ம் நூற்றாண்டு அளவில் தான் முழுமை அடைந்தது. அதனால் வியாசனின் மூல பாரதத்துக்கு நெருக்கமான பகுதிகள் பல ஜாவா பாரதத்துக்கு தான் உண்டு.

* ஜாவா பாரதத்தில் சத்தியவதி விராட நாட்டு மன்னரான பராசர முனிவரை மணந்து மகிழ்ச்சியுடன் வாழ்க்கை நடத்துகிறார். அவர்களுக்கு பிறக்கும் மகனே வியாசன். இந்திய பாரதத்தில் இது ஒன் நைட் அஃபேராக உள்ளது. இதில் சத்தியவதி அரசகுலப்பெண். இந்திய பாரதததில் மீனவர் மகள். பராசரரும் இதில் முனிவர் இல்லை. மன்னர்

பின்னாளில் துறவறம் பூணும் பராசரர் அஸ்தினாபுர அரசனான சந்தனு மன்னனுக்கு சத்தியவதியை மணமுடித்து வைத்து துறவறம் பூண்டு காடு செல்கிறார். சத்தியவதியை சந்தனுவுக்கு மணம்முடிக்க வைக்கும் நிபந்தனை வியாசர் அஸ்தினாபுர மன்னனாக வேன்டும் என்பதே, கேரள சிறுசேரி பாரதத்தில் இதுபோல் ஒரு கதை உண்டு என்கிறார் பேரா. சோபோகரட்டி. 

விராட நாட்டுடன் இத்தகைய தொடர்பு இருப்பதால் தான் பின்னாளில் பாண்டவர்கள் ஒருவருடம் ஒளிந்து இருக்க விராட நாட்டை தேர்ந்து எடுத்தார்களாம்.

ஆக வியாசர் மன்னனாக மாறி நாட்டை ஆள்கிறார். சத்தியவதிக்கும், சந்தனுவுக்கும் சித்ராங்கதன், சித்ரசேனன் எனும் இரு மகன்கள் பிறக்கிறார்கள். சந்தனுவின் இன்னொரு மனைவியின் மகன் பீஷ்மர். அம்பிகை, அம்பா, அம்பாலிகாவை தன் தம்பிகளுக்கு மணமுடிக்க கடத்தி செல்கிறார் பீஷ்மர். ஆனால் இதில் அம்பா மேல் பீஷ்மருக்கு காதல் வந்துவிடுகிறது. அம்பாவும் பீஷ்மரை காதலிக்கிறார்.

ஆனால் அம்பா ஏற்கனவே சால்வநாட்டு மன்னனை காதலிப்பதை அறிந்த பீஷ்மர் தன் காதல் நிறைவேறாது என்பதை உணர்கிறார். அம்பையை சால்வனுடன் சென்று சேர சொல்கிரார். ஆனால் பீஷ்மர் தான் தன் கணவர் என மனதில் வரித்ததாக அம்பா சொல்ல பீஷமர் அம்பையை மிரட்டுவதாக எண்ணி ஒரு அம்பை எடுக்கிறார். அது பட்டு அம்பை உயிர் இழக்கிறாள். அம்பையின் ஆவி பீஷ்மரை கொல்ல சபதம் பூணுகிறது. அம்பையை காதலித்த பீஷ்மர் கண்ணீர் சிந்துகிறார். பாரத யுத்தம் முடிந்தபின் இருவரும் சுவர்க்கத்தில் மணமுடிப்பதாக கதை செல்கிறது.

மறுபிறவியில் அம்பை ஸ்ரீகண்டி (சிகண்டி) எனும் பெண்ணாக பிறந்து அருச்சுனன் மனைவி ஆகிறார். ஸ்ரீகண்டி இந்தோனேசியாவின் பெண்விடுதலை இயக்கங்களின் கடவுளாக அறியபடுபவர். மிக பிரபலமான பெண்தெய்வம்.

வியாசர் தந்தையை தொடர்ந்து துறவறம் பூணுகிறார். . அதன்பின் மன்னனாகும் பாண்டுவை இளவரசி காந்தாரி காதலிக்கிறார். அந்த காதலை பாண்டு நிராகரிக்க கோபமடைந்த காந்தாரி பாண்டுவின் வம்சம் மேல் தீராத பகை கொள்கிறார். கேரள மாவர்த்தம் பாட்டு எனுல் நூலில் இதுபோல் ஒரு கதை உள்ளதாக பேரா. குறிப்பிடுகிறார். குந்தியை பான்டு மணக்க காந்தாரி குந்தி கர்ப்பமடைகையில் அவருக்கு விஷம் வைத்து கொல்ல முயல்கிறார்.

இதிலும் சூரியபகவானுக்கும் குந்திக்கும் கர்ணன் பிறக்கும் கதை உள்ளது. ஆனால் இதில் குந்தியின் கன்னிதன்மை கெடாவண்ணம் குந்தியின் காதுவழியே கருணன் பிறக்கிறான். அதனால் தான் அவனுக்கு கர்ணன் என பெயர் வந்ததாக முக்கியமான குறிப்பை ஜாவா பாரதம் அளிக்கிறது. சமஸ்கிருதத்தில் கர்ணன் என்றால் காது என பொருள்.

குந்திக்கும் பாண்டுவுக்கும் பீமன், அர்ஜுனன், தருமன் ஆகியோர் பிறக்கிறார்கள். இவர்கள் இதில் பாண்டுவின் நேரடி புதல்வர்களாக அறியபடுகிறார்கள்.

இதில் விதுரரின் மகன் சஞ்சயன். மனைவியரை ஒரு சாபத்தில் பாண்டு தொட இயலாமல் போகையில் விதுரர் பாண்டுவின் இரண்டாம் மனைவியான மாதிரிதேவிக்கு இரு பிள்ளைகளை பெற்றூ தருகிறார். அவர்களே நகுல சகாதேவர்கள். பின்னாளில் விதுரர் பாண்டவர்கள் மேல் பரிவுடன் இருக்க இதுவே கார்ணமாம்.

இதில் திரவுபதி யுதிஷ்டிரன் மனைவி மட்டுமே. பிற பாண்டவர்களின் மனைவி அல்ல.

பீமனின் மனைவியர் இருவர்

நாககினி எனும் பாம்புகன்னிகை (கேரள மாவர்த்தம் பாட்டிலும் பீமன் நாககன்னியை மணப்பதாக கதை உன்டாம்)

தேவி உரான் ஆயு (இவர் துர்க்கா தேவி மற்றும் வருணனின் மகள். பாலியில் துர்க்கை வருணனின் மனைவி)

கடோத்கஜன் பீமனின் மகன். அதுபோக இன்னும் 2 பிள்ளைகள் உண்டு. மூவரும் பாரத யுத்தத்தில் கொல்லாப்டுகிறார்கள்.

அருச்சுனன் மனைவியர் இதிலும் ஏராளம். அதில் சிலர்:

சுபத்ரா. கண்ணனின் தங்கை.

ஸ்ரீகண்டி- இவர் திரவுபதியின் தங்கை. அருச்சுனனிடம் வில்வித்தை பயிலும் ஸ்ரீகண்டி தன்னை விட வில்வித்தையில் சிறந்த பெண்ணை அருச்சுனன் காட்டினால் தான் அருச்சுனை மணப்பதாக கூறுகிறார். அருச்சுனன் தன் இன்னொரு மனைவியான லாரசதியை அனுப்புகிறார். இருவரும் போரிடுகையில் ஸ்ரீகண்டி வேண்டுமென்றே தோற்று அருச்சுனன் மனைவி ஆகிறார்.

பானுமதி: இவர் துரியோதனன் மனைவி. ஆனால் அருச்சுனன் மேல் இவருக்கு காதல். துரியோதனன் மறைவுக்கு பின் பானுமதி அருச்சுனனை மணந்து கொள்கிறார்.

இந்தோனேசியாவிலும் ஏகவலைவன் ககை உன்டு. ஆனால் இதில் தூரோணர் ஏகலைவனை கொன்றுவிடுகிறார். ஏகலைவன் திருஷ்டத்யுமனானக பிறக்கிறான். இதில் ஏகலைவன் பெயர் பல்குணாதி. ஏகலைவன் மரணத்துக்கு பின் அப்பெயரை பல்குணன் என அருச்சுனனுக்கு சூட்டுகிரார் துரோனர். ஏகலைவன் மனைவியை அருச்சுனன் காதலிக்கிறான். அவள் அதை நிராகறிக்கிராள். அருச்சுனனுக்கு வரும் ஒரே காதல் தோல்வி இதுவே,

மாயாபஜார் படத்தில் வரும் அபிமன்யு- சசிரேகை கதை இதிலும் உன்டு. இதில் இவர்கள் மணத்துக்கு கடோத்கசன் உதவுகிறான். இதில் சசிரேகா கிருஷ்ணன் மற்றும் அலர்மேல் மங்காவின் மகள். சசிரேகாவின் பெயர் சிதி சுந்தரி.

திரவுபதியை யுதிஷ்டிரன் மணக்கும் கதை சுவாரசியம். இதில் திரவுபதிக்கு சுயம்வரம் நடக்கிறது. போட்டி வில்வித்தை போட்டி அல்ல. திரவுபதியின் மாமன் கந்தமானனை எவன் கதாயுத போட்டியில் வெல்கிறானோ அவனுக்கே திரவுபதி. பீமன் அண்ணன் சார்பில் கலந்துகொண்டு கந்தமாமனை கொல்கிறான். மரணதருவாயில் ஒப்பற்ற வீரனான கந்தமானன் தன் பலம் முழுவதையும் பீமனுக்கு அளிக்கிறான். அதனலேயே பீமனுக்கு ஒப்பற்ற கதாயுத போர் வலிமை கிடைக்கிறது. பீமன் இதில் அண்ணனான யுதிச்டிரனுக்கு திரவுபதியை திருமணம் செய்து வைக்கிறான். நேபாள தங்குதார பாரதத்திலும் இதுபோல் பீமன் திரவுபதியை அம்புவிட்டு ஜெயித்து அண்ணனுக்கு மணம் செய்விப்பதாக உன்டாம்

--
செல்வன்

http://selvan.wordpress.com/   (உடல்நலம் குறித்த தமிழ் பதிவு)

https://www.facebook.com/groups/tamilhealth/  (ஆரோக்கியம் & நல்வாழ்வு)

https://www.facebook.com/war.onsugar (சர்க்கரை மேல் போர்)

http://holyox.blogspot.com (பொதுவான என் தமிழ் வலைபதிவு)

http://www.pinterest.com/holyox/pins/  (தொன்மையான உணவுகள்)

பார்வதி இராமச்சந்திரன்.

unread,
Jan 26, 2014, 9:01:22 AM1/26/14
to vall...@googlegroups.com

---------- Forwarded message ----------
From: பார்வதி இராமச்சந்திரன். <tspar...@gmail.com>
Date: 2014-01-26
Subject: Re: [MinTamil] இந்தோனேசிய மகாபாரதம்
To: மின்தமிழ் <mint...@googlegroups.com>

/////'ஓர் ஆராய்ச்சிக் கட்டுரை எழுதுவதற்குத் தேவையான அரிய செய்திகள் பலவற்றை ஒரே சிறுகதையில் கொடுத்துள்ள திரு. ஆனந்த் ராகவ் உண்மையிலேயே மிகுந்த பாராட்டுதலுக்கு உரியவர். இவ்வளவு வரலாற்று ஆதாரங்களை எப்படித் திரட்டினார் என்பது மலைக்க வைக்கிறது!!/////

ரொம்ப நன்றி மேகலா.. தாங்களும் என் போல் புதிய தகவல்கள் அறிவதில் ஆர்வம் மிக உள்ளவர் என்பதாலேயே இந்தக் கதை பற்றிப் பகிர்ந்து கொண்டேன்..தாங்கள் நிச்சயம் படிப்பீர்கள் என்றும் தெரியும் எனக்கு.. படித்ததோடு அல்லாமல், சில பகுதிகள் பகிர்ந்து கொண்டும் இருக்கிறீர்கள்.. இது அந்தக் கதையைப் படிக்க, நிச்சயம்  பலரை ஊக்கப்படுத்தும்.. சிறுகதை என்பது,  கற்பனையின் விரிவாக‌ மட்டுமல்லாது, இது போல் பலருக்கு உபயோகமான தகவல்களையும் சிந்தனைகளையும் கொண்டு சேர்ப்பது வரவேற்கத்தகுந்த ஒரு விஷயமாக எனக்குப் பட்டது..

/////ஐந்தாம் நூற்றாண்டு முதல் தமிழகத்து கடல் வாணிகர்கள் காரைக்கால் அம்மையாரை” தங்கள் குலதெய்வமாய் வழிபட்டனராம்//

இது மிகவும் புதிய செய்தி. மூத்த நாயன்மார்களில் ஒருவரான காரைக்காலம்மையாரின் புகழ் கடல்கடந்த நாடுகளிலும் பரவியிருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது////

ஆமாம்.. ஆனால், காரைக்கால் அம்மையார், தனதத்தன் என்னும் சிவ வழிபாட்டில் ஈடுபாடு கொண்ட வைசிய குடும்பத்தைச் சேர்ந்தவருக்கு மகளாக‌ அவதரித்ததால், வாணிபத்தில் ஈடுபட்டிருந்த பெரும்பாலான குடும்பங்கள்.. அதிலும் கடல் கடந்து தொழில் செய்யும் வணிகர்கள் அம்மையைக் குலதெய்வமாகக் கொண்டிருப்பதை முன்பே எங்கோ படித்த நினைவு..இது சம்பந்தமான மேலதிகத் தகவல்களைத் தேடிக்கொண்டிருக்கிறேன்..

தங்களது பகிர்வும் புதிய விஷயங்களைத் தெரிந்து கொள்ளும் ஆர்வமும்  மிகவும் மகிழ்ச்சிப்படுத்துகிறது மேகலா..மிக்க நன்றி!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

2014-01-25 Megala Ramamourty <megala.r...@gmail.com>

தேமொழி

unread,
Jan 26, 2014, 11:23:49 AM1/26/14
to vall...@googlegroups.com
பார்வதி   ....மேகலா  .....

மறவன்புலவு க. சச்சிதானந்தன் ஐயா உருவாக்கிய  காணொளிகள் காண்க 

கம்போடியா - காரைக்காலம்மையார் 01 >>> http://www.youtube.com/watch?v=97p2zCfp89k&feature=youtu.be

கம்போடியா - காரைக்காலம்மையார் 02 >>>  http://www.youtube.com/watch?v=kX3pqH88Vv8&feature=youtu.be

..... தேமொழி

பார்வதி இராமச்சந்திரன்.

unread,
Jan 26, 2014, 11:27:57 AM1/26/14
to vall...@googlegroups.com
 தகவல்களுக்கு மனமார்ந்த நன்றி  தேமொழி... கட்டாயம்  காணொளிகள்  பார்க்கிறேன்...

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

2014-01-26 தேமொழி <them...@yahoo.com>

Megala Ramamourty

unread,
Jan 26, 2014, 8:35:02 PM1/26/14
to vall...@googlegroups.com, மின்தமிழ்
காணொளிகள் பார்த்தேன் தேமொழி; அருமை! பகிர்வுக்கு மிக்க நன்றி!

ஆடல்வல்லானுக்கு வலப்பக்கம் காரைக்காலம்மையார் அமர்ந்த கோலத்தில் அழகாய்க் காட்சியளிக்கிறார்.  அம்மையாரின் ஊரைச் சேர்ந்தவளாயிருந்தபோதிலும், எங்கள் அம்மையாரின் கடல்கடந்த புகழை இப்போதுதான் நானும் அறிந்துகொள்கிறேன். மிக்க மகிழ்ச்சி!

உபரித் தகவல்: காரைக்காலில் ஆண்டுதோறும் ஆனிப் பௌர்ணமியன்று அம்மையாருக்கும் பரமதத்தருக்கும் வெகு விமரிசையாகத் திருக்கல்யாண வைபவம் நடைபெறுகிறது. அதையடுத்து, இறைவனுக்கு அம்மையார் அமுதுபடைப்பது, அம்மையாரின் அருட்தன்மையை அறிந்த பரமதத்தர் அவரோடு இல்லறம் நடத்த அஞ்சிப் பாண்டிய நாட்டிற்குத் தனியே ஏகுதல், அங்கு ஓர் திருமணம் செய்துகொண்டு சில ஆண்டுகள் கழித்துத் திரும்பிவந்து அம்மையாரைத் தெய்வமாய் வணங்குதல், அதன்பிறகு மானுட வாழ்வை முற்றிலும் வெறுத்த அம்மையார் பேயுரு வேண்டிப் பெறுதல், இறுதியில் சிவனார் அம்மையாருக்குக் காட்சி கொடுத்து அவரைத் தம் திருவடிகளுக்கு அருகிலேயே அமரச்செய்த அருஞ்செயல் என்று ஒவ்வொன்றையும் தனித்தனி நிகழ்வாக, வெகு விமரிசையாகக் காரைக்காலில் நடத்திவருகின்றனர், அம்மையாரின் குலத்தைச் சேர்ந்தவர்களாய்க் கருதப்படும் வாணிகச் செட்டியார் வகுப்பைச்சேர்ந்த மக்கள்.
இதனை நாங்கள் ’மாங்கனித் திருவிழா’ என்ற பெயரால் அழைக்கிறோம். ஏனெனில் இவ்விழாவின் முக்கிய நிகழ்வாகத் தங்கள் வீடுகளிலிருந்து கூடை கூடையாக மாங்கனிகளை மக்கள் (ஏதேனும் விருப்பம் நிறைவேறும் பொருட்டு) வாரி இறைப்பர்.

மேலதிக விவரங்களுக்கு: http://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D

அன்புடன்,
மேகலா

2014-01-26 தேமொழி <them...@yahoo.com>
பார்வதி   ....மேகலா  .....

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.

தேமொழி

unread,
Jan 26, 2014, 10:30:58 PM1/26/14
to vall...@googlegroups.com

///தன்பிறகு மானுட வாழ்வை முற்றிலும் வெறுத்த அம்மையார் பேயுரு வேண்டிப் பெறுதல், ///

தகவலுக்கு நன்றி மேகலா.

என்னைப் பொறுத்தவரை அம்மையார் பேயுரு வேண்டிப் பெறவில்லை.

கணவர் தனக்கிழைத்த துரோகத்தின் அதிர்ச்சியில் மனமுடைந்து (வாழ்வை முற்றிலும் வெறுத்த = depressed) அதன் காரணமாக உணவு உட்செலாமல் (பேயுரு = Anorexia Nervosa) எலும்பும் தோலுமாக ஆகிவிட்டார் 

Melancholic depression, or 'depression with melancholic features', is a DSM-IV subtype of clinical depression requiring at least one of the following symptoms: anhedonia (the inability to find pleasure in positive things), or lack of mood reactivity (i.e. mood does not improve in response to positive events) and at least three of the following: depression that is subjectively different from grief or loss, severe weight loss or loss of appetite, psychomotor agitation or retardation, early morning awakening, guilt that is excessive, and worse mood in the morning. Melancholic features apply to an episode of depression that occurs as part of either major depressive disorder or bipolar disorder I or II.[1]

Most probably combined with 

Anorexia NervosaAnorexia nervosa is characterized by low body weight, inappropriate eating habits, obsession with having a thin figure, and the fear of gaining weight. It is often coupled with a distorted self image[3][4] which may be maintained by various cognitive biases[5] that alter how the affected individual evaluates and thinks about her or his body, food and eating.[6] People with anorexia often view themselves as "too fat" even if they are already underweight.[7]

picture of an Anorexia Nervosa person

http://www.appsychology.com/Book/AbmormalPsych/abpics/sexdispics/anorexia-nervosa.jpg

காரைக்கால் அம்மையார் உருவச் சிலை

பாவாம் மனப் பேதலித்துப் போன பெண்மணி.
இதனைக் கவனித்துதான் தாழ்வு மனப்பான்மை உள்ள ஆண்களைப் பெண்கள் தவிர்கிறார்கள்.  உங்களுக்குத் தெரியம் இதனை தொல்காப்பியரும் சொல்லியிருக்கிறார் என்று.
(எங்கே இந்த செல்வன், இந்த மன உளைச்சல்கள் எல்லாம் அவர் கண்களில் படாதே)

அன்புடன்

Megala Ramamourty

unread,
Jan 26, 2014, 11:53:40 PM1/26/14
to vall...@googlegroups.com, மின்தமிழ்

தேமொழி! ’Anorexia Nervosa’ நோயால் தாக்குண்ட பெண்ணைப் பார்த்து உண்மையிலேயே வயிறு கலங்கிவிட்டது.  :-(  

இந்த நோய் வந்தவரின் தோற்றம் (உடலிலுள்ள தசைகளெல்லாம் நீங்கிய) பேய் வடிவாகவே காட்சியளிக்கிறது. ’Anorexia nervosa is an eating disorder that makes people lose more weight than is considered healthy for their age and height’ என்று சொல்லப்பட்டுள்ளது. ஆனால் அம்மையார் வரலாற்றைப் பார்க்கும்போது அவருக்கு இம்மாதிரி நோய் எதுவும் இருந்ததாகத் தெரியவில்லை.

அதுவுமில்லாமல், திடுதிப்பென்று அம்மையாரைப் பரமதத்தர் (காரணமெதுவும் சொல்லாமல்) நீங்கிச் சென்றுவிட்டதனால் அவர் திரும்பி வருவார் என்ற திடமான நம்பிக்கையில் அம்மையார் தன் இளமையையும், அழகையும் பேணியே வந்துள்ளார்.

பின்பு அவருடைய சுற்றத்தார்க்குப் பரமதத்தர் மதுரையில் இருக்கும் விவரம் தெரியவர, அவரைப் பரமதத்தரோடு சேர்த்துவைப்பதற்காகக் பல்லக்கில் அழைத்துச் சென்றுள்ளனர்.

புனிதவதியார் (காரைக்காலம்மையார்) தம்மைக் காண வந்துள்ள செய்தி அறிந்த பரமதத்தர் ஏற்கனவே தாம் அங்கு மணம் புரிந்துகொண்டுள்ள இரண்டாவது மனைவியோடும், தன் பெண் மகவோடும் (அக்குழந்தைக்கும் புனிதவதி என்று பெயர் சூட்டியுள்ளார் முதல் மனைவிமேல் கொண்ட பக்தியால்!!) புனிதவதியைத் தெய்வம் என்று போற்றிப் பலரும் பார்த்துக்கொண்டிருக்கும் வேளையில் நெடுஞ்சாண்கிடையாக அவர் காலில் விழுந்துவணங்க, பதறிப்போன புனிதவதியார் தம் கணவரின் திருவுள்ளத்தை நன்கு அறிந்தார்.

இனி அவர் தம்மோடு இல்லறத்தில் ஈடுபடமாட்டார் என்பது உறுதியாகவே, கணவருக்காக இவ்வளவு நாளும் தான் தாங்கிய வனப்பும், தசைப்பொதியும் தன்னை விட்டு நீங்கட்டும்! உன்னைப் போற்றுவதற்குகந்த பேய் வடிவை இறைவா நீ அருள்வாயாக! என்றுப் பரமனின் தாள்களைப் பணிகின்றார். அதனையே பின்வரும் பெரியபுராணப் பாடல் விளக்குகிறது.

’ஈங்கிவன் குறித்த கொள்கை யிது இனி யிவனுக் காகத்

தாங்கிய வனப்பு நின்ற தசைப்பொதி கழித்திங் குன்பால்

ஆங்குநின் றாள்கள் போற்றும் பேய்வடி வடியே னுக்குப்

பாங்குற வேண்டு மென்று பரமர்தாள் பரவி நின்றார்.’

அவர் விருப்பத்திற்கு உடனே இசைந்த சிவனார் அவருக்கு எலும்புருவை நல்கினான். அவரும் வானும், நிலனும் போற்றும் பேய் வடிவானார் என்கிறது கீழுள்ள பெரியபுராணப் பாடல்.

’ஆனவப் பொழுது, மன்று ளாடுவா ரருளி னாலே

மேனெறி யுணர்வு கூர, வேண்டிற்றே பெறுவார் மெய்யி

லூனடை வனப்பை யெல்லா முதறியெற் புடம்பே யாக

வானமு நிலனு மெல்லாம் வணங்குபேய் வடிவ மானார்.’

இவைதான் அம்மையார் குறித்து இதுநாள்வரை சொல்லப்பட்டுவந்த வரலாற்றுச் செய்திகள்.

உண்ணாமல்தான் அவர் இப்பேயுருவை அடைந்தார் என்று சொல்ல என்னிடம் வலுவான சான்றுகள் இல்லையே தேமொழி. 

(ஆனால் அம்மையாருக்கு ’Anorexia Nervosa’ தான் என்று நீங்கள் குறிப்பிடுவதிலும் உண்மையிருக்குமோ என்ற ஐயமும் தலைதூக்கவே செய்கிறது. எல்லாம் சிவனுக்கே வெளிச்சம்!!) :-)

செல்வன்

unread,
Jan 26, 2014, 11:58:38 PM1/26/14
to vallamai
2014-01-26 தேமொழி <them...@yahoo.com>
இதனைக் கவனித்துதான் தாழ்வு மனப்பான்மை உள்ள ஆண்களைப் பெண்கள் தவிர்கிறார்கள்.  உங்களுக்குத் தெரியம் இதனை தொல்காப்பியரும் சொல்லியிருக்கிறார் என்று.
(எங்கே இந்த செல்வன், இந்த மன உளைச்சல்கள் எல்லாம் அவர் கண்களில் படாதே)

இங்கேதானுங்க இருக்கேன் :-)

காரைக்கால் அம்மையாரை தெய்வமாக கருதி அவரது கணவன் வணங்கினார். தெய்வத்துடன் குடும்பம் நடத்த முடியாமல் இருவரும் பிரிந்தார்கள். இதை ஒரு விவாகரத்து என சொல்லலாமே ஒழிய துரோகம் என எப்படி சொல்லுவது என தெரியவில்லை. ஒத்துவராத திருமணங்களில் விவாகரத்து செய்யும் உரிமை அவசியம் இருக்கணும் என நீங்கள் எழுதி இருந்தீர்கள் இல்லையா? :-)

--
செல்வன்

https://www.facebook.com/groups/tamilhealth/  (ஆரோக்கியம் & நல்வாழ்வு)

தேமொழி

unread,
Jan 27, 2014, 12:50:41 AM1/27/14
to vall...@googlegroups.com

காரைக்கால் அம்மையார் கதை, அன்றைய  எட்டடுக்கு மாளிகையில் ஏற்றிவைத்த என் தலைவன் விட்டு விட்டு சென்றானடி இன்று வேறுபட்டு நின்றானடி என்று கணவனின் நடவடிக்கையால் பாடிய சோகப் புலம்பல்.  

எனக்குத் தெரிந்து காதலி கைவிட்டாலே ஒரு  மதுப் புட்டி, ஒரு நாய்க்குட்டி, ஒரு தாடி வைத்துக் கொண்டு 
எழுதுங்கள் என் கல்லறையில் அவள் இரக்கமில்லாதவள் என்று, பாடுங்கள் என் கல்லறையில் இவன் பைத்தியக்காரன் என்று 
லொக் ...லொக் ... என்று இருமிக் கொண்டும்

பெண்ணுக்கு தாஜ்மகால் கட்டி வச்சாண்டா 
எவளாச்சும் ஒரு செங்கல் நட்டு வச்சாளா
ஏமாற்றிவிட்டாளே ...கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும் அவன் காதலித்து வேதனையில் வாட வேண்டும் 

என்று ஆண்கள் அலம்பல்/புலம்பல்  செய்வதையும் அடுத்த சீனிலேயே சீன் காட்டுவதை இன்றுவரை பார்த்தாகிவிட்டது. 
அந்தப் பெண்ணிற்குப் பாவம்  அதிர்ச்சியும் சோகமும் இல்லாமலா போயிருக்கும்???
பிறகு வேறு வழி இல்லாமல் நடப்பதை ஒப்புக்கொண்டிருப்பார்.  

 mutual agreement to annulment  of marriage வேண்டுமானால் அடுத்த நிலையாகத் தொடர்ந்திருக்கும் (வேறுவழி? என்பதே முகத்திலறையும் உண்மை)

..... தேமொழி

செல்வன்

unread,
Jan 27, 2014, 1:04:24 AM1/27/14
to vallamai
2014-01-26 தேமொழி <them...@yahoo.com>
என்று ஆண்கள் அலம்பல்/புலம்பல்  செய்வதையும் அடுத்த சீனிலேயே சீன் காட்டுவதை இன்றுவரை பார்த்தாகிவிட்டது. 
அந்தப் பெண்ணிற்குப் பாவம்  அதிர்ச்சியும் சோகமும் இல்லாமலா போயிருக்கும்???
பிறகு வேறு வழி இல்லாமல் நடப்பதை ஒப்புக்கொண்டிருப்பார்.  

 mutual agreement to annulment  of marriage வேண்டுமானால் அடுத்த நிலையாகத் தொடர்ந்திருக்கும் (வேறுவழி? என்பதே முகத்திலறையும் உண்மை)

கரெக்ட் தேமொழி. விவாகரத்தால் ஆண்களை விட பெண்கள் கடுமையாக பாதிக்கபடுவதை நீங்களே ஒப்புகொன்டுவிட்டீர்கள்.

இதனால் தான் கன்சர்வேடிவ்கள் விவாகரத்தை ஒப்புகொள்வது இல்லை. திருமணபந்தம் ஆயுள் முழுமைக்குமானது. ஒருவனுக்கு ஒருத்தி எனும் கன்சர்வேடிவ் கொள்கையை ஆண்களும், பெண்களும் பின்பற்றினால் பெண்கள் விவாகரத்து கொடுமையால் தவிக்க வேண்டியது கிடையாது

Dhivakar

unread,
Jan 27, 2014, 1:04:53 AM1/27/14
to vallamai
கண்ணாரக் கண்டுமென் கையாரக் கூப்பியும்
எண்ணார எண்ணத்தால் எண்ணியும் - விண்ணோன்
எரியாடி என்றென்றும் இன்புறுவன் கொல்லோ
பெரியானைக் காணப் பெறின். (அற்புதத் திருவந்தாதி)
.
காரைக்கால் அம்மையார் போன்றோர் காரணப்பிறவிகள். சாதாரணமாக நாம் காரைக்கால் அம்மையாரின் வாழ்க்கையை (சரிதத்தை) தெரிந்துகொள்வது நல்லது. எந்தப் பெரியோரின் கதையயும் ஆழ்ந்து ஆராய்ந்தால் ஆயிரம் கோடி சந்தேகங்கள்தான் கிடைக்கும். 

சிவனுக்காக, அவன் மேல் பாடுவதற்காக, அந்தப் பாடலால் ஆன்மபலம் பெற்று பயனடையும் ஆயிரக்கணக்கான மக்களுக்குக்காகப் பிறந்தவர் காரைக்கால் பேயம்மையார். அவர் கணவரும் மாங்கனியும் அவர் வாழ்வில் ஒரு சிறு பங்கே.. 

அவரிடம் எனக்குப் பிடித்தது : ’பிறவாமை வேண்டும், மறுபடி பிறந்தேல் உனை மறவாமை வேண்டும்’ 

தேமொழி

unread,
Jan 27, 2014, 1:14:07 AM1/27/14
to vall...@googlegroups.com
விட்டா நீங்க எங்கேயோ போய்டுவீங்க செல்வன்.
கொடுக்கப்பட்ட சூழ்நிலையில், நடந்து முடிந்து விட்ட சூழ்நிலையில்  அந்தப் பெண்ணிற்கு மனவாட்டம் இருந்திருக்குமா இல்லையா என்பதுதான் கேள்வி.
பாவம் நிச்சயம் அழுதுகொண்டேதான் பல்லகில் போயிருப்பார்கள், காலில் விழுந்த கணவனைப் பார்த்து ஒரு சொட்டுக் கண்ணீராவது விட்டிருப்பர்கள். 

..... தேமொழி 

செல்வன்

unread,
Jan 27, 2014, 1:27:39 AM1/27/14
to vallamai
2014-01-27 தேமொழி <them...@yahoo.com>
கொடுக்கப்பட்ட சூழ்நிலையில், நடந்து முடிந்து விட்ட சூழ்நிலையில்  அந்தப் பெண்ணிற்கு மனவாட்டம் இருந்திருக்குமா இல்லையா என்பதுதான் கேள்வி.
பாவம் நிச்சயம் அழுதுகொண்டேதான் பல்லகில் போயிருப்பார்கள், காலில் விழுந்த கணவனைப் பார்த்து ஒரு சொட்டுக் கண்ணீராவது விட்டிருப்பர்கள். 

ஆம் தேமொழி.

அதனால் தான் விவாகரத்து கூடாது என்கிறேன். காரைக்கால் அம்மையார் அதனால் படாதபாடு பட்டு இருப்பார் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. திருமணபந்தம் ஆயுள் முழுக்க தொடரவேண்டியது அவசியம்

தேமொழி

unread,
Jan 27, 2014, 1:42:12 AM1/27/14
to vall...@googlegroups.com
On Sunday, January 26, 2014 10:27:39 PM UTC-8, K Selvan wrote:
ஆம் தேமொழி.

அதனால் தான் விவாகரத்து கூடாது என்கிறேன். காரைக்கால் அம்மையார் அதனால் படாதபாடு பட்டு இருப்பார் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. திருமணபந்தம் ஆயுள் முழுக்க தொடரவேண்டியது அவசியம்

பொதுவாகப் போக வேண்டாம், கையில் இருக்கும் வழக்கில் எப்படி தீர்ப்பு எழுதுவீர்கள் செல்வன்.
உன்னோடு வாழ விருப்பமில்லை என்று சொல்பவர்களை வைத்து ஊறுகாய் கூட  போட முடியாதே.
sitting on the bench and waiting for a chance to play in the game?
எப்படி? ஒப்புக்கு சப்பணியாகவா? அம்மையார் எப்படி ஆயுள் முழுக்க  தொடர்வது என்று விளக்குங்கள் செல்வன்.
அந்த ஐயாவுக்கோ அம்மாவுக்கோ உங்கள் அறிவுரை என்ன?

..... தேமொழி

செல்வன்

unread,
Jan 27, 2014, 2:16:15 AM1/27/14
to vallamai
2014-01-27 தேமொழி <them...@yahoo.com>
கையில் இருக்கும் வழக்கில் எப்படி தீர்ப்பு எழுதுவீர்கள் செல்வன்.
உன்னோடு வாழ விருப்பமில்லை என்று சொல்பவர்களை வைத்து ஊறுகாய் கூட  போட முடியாதே.
sitting on the bench and waiting for a chance to play in the game?
எப்படி? ஒப்புக்கு சப்பணியாகவா? அம்மையார் எப்படி ஆயுள் முழுக்க  தொடர்வது என்று விளக்குங்கள் செல்வன்.
அந்த ஐயாவுக்கோ அம்மாவுக்கோ உங்கள் அறிவுரை என்ன?

எந்த சூழலில் அட்வைஸ் சொல்வது தேமொழி? பிரிவதுக்கு முன் எனில் கணவனிடம் விவாகரத்து செய்யாதே, உன் மனைவி ஒரு மாணிக்கம் என சொல்லி இருப்பேன். அவன் மறுமணம் செய்துகொண்டபின் அவனுக்கு என்ன அட்வைஸ் சொல்லி என்ன பலன்?

காரைக்கால் அம்மையாருக்கு அட்வைஸ் எக்காலத்திலும் சொல்ல எனக்கு தகுதி இல்லை. அவர் பாதத்தை மானசீகமாக வணங்கி என்னை நல்வழிபடுத்துமாறு வேண்டிகொள்கிறேன்

தேமொழி

unread,
Jan 27, 2014, 2:46:35 AM1/27/14
to vall...@googlegroups.com

அதே.. செல்வன்.  முடிந்து போன கதை இது.  தலைக்கு மேலே போன வெள்ளமிது.
my dear goodbye forever, it's time to go our separate ways ... that's all game over.

இந்த வரிகள் தான் சூழ்நிலைப் பாடலாகப் பின்புலத்தில் ஒலிக்கும்...

நீயும் நானும் போவது காதல் என்ற பாதையில்
சேரும் நேரம் வந்தது மீதித் தூரம் பாதியில்
பாதை ஒன்று ஆனபோதும் திசைகள் வேறம்மா
எனது பாதை வேறு உனது பாதை வேறம்மா
மீராவின் கண்ணன் மீராவிடமே
எனதாருயிர் ஜீவன் எனை ஆண்டாயே
வாழ்க என்றும் வளமுடன் என்றும் வாழ்கவே

எல்லாம் முடிந்த பிறகு அந்தக் கணவர் எந்த ஒரு இழப்புமில்லாமல் புது மனைவி, குழந்தை, குடும்பம் என்று பழையதை மறந்து வாழ்வார்.
இந்த அம்மா என்ன செய்வது, அடுத்து வாழ்வில் என்ன குறிக்கோள் என்று ஒன்றும் புரியாமல் நொந்து போய், கடவுளை நினைத்து பாடல் எழுதி மனக்கவலையை மறக்க முற்பட்டிருப்பார்கள். அதுவே தனது பிறப்பின் காரணம்  என்று தன்னையும் சமாதனப் படுத்திக் கொண்டும் இருந்திருக்கலாம்.

When life handed her lemons, she just made lemonade out of them
காதல் தோல்விகள் தமிழுக்கு நல்ல கவிஞர்களை விட்டுச் செல்வது வழக்கம்.

..... தேமொழி

செல்வன்

unread,
Jan 27, 2014, 3:08:31 AM1/27/14
to vallamai
2014-01-27 தேமொழி <them...@yahoo.com>
காதல் தோல்விகள் தமிழுக்கு நல்ல கவிஞர்களை விட்டுச் செல்வது வழக்கம்.

ஆண் காதலில் தோற்றால் கவிதை, தத்துவம்

பெண் காதலில் தோற்றால் கர்ப்பம், தற்கொலை

தேமொழி

unread,
Jan 27, 2014, 3:14:49 AM1/27/14
to vall...@googlegroups.com
///பெண் காதலில் தோற்றால் கர்ப்பம், தற்கொலை///

இதுதான் பாசிடிவ் திங்கிங் என்பதா?
இலக்கிய மாதவி மணிமேகலையை வளர்த்தார்.

ஆண்களுக்கு மட்டும்தான் கவிதை எழுதத் தெரியுமா? தத்துவ முத்துக்களை உதிர்க்க முடியுமா?
ஒளவையார் கோவிக்கப் போறாங்க.

..... தேமொழி

செல்வன்

unread,
Jan 27, 2014, 9:36:23 PM1/27/14
to vallamai
2014-01-27 தேமொழி <them...@yahoo.com>
///பெண் காதலில் தோற்றால் கர்ப்பம், தற்கொலை///

இதுதான் பாசிடிவ் திங்கிங் என்பதா?
இலக்கிய மாதவி மணிமேகலையை வளர்த்தார்.

கரெக்டு தானே? காதலில் தோற்ற கோவலன் பிரச்சனை இன்றி கண்னகியிடம் சேர்ந்தான். மாதவி சிங்கிள் மதர் ஆனார். காதல்தோல்வியின் பாதிப்புகள் கண்ணகிகள், மாதவிகளுக்கு தான். கோவலனுக்கு இல்லை. அதனால் தான் பெண்கள் இவ்விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்

Nagarajan Vadivel

unread,
Jan 27, 2014, 11:13:34 PM1/27/14
to vallamai

2014/1/28 செல்வன் <hol...@gmail.com>

கரெக்டு தானே?

​எப்புடி? கோவலன் என்ற பாத்திரப் படைப்பு சராசரித் தமிழ் மகனை உருவகப் படுத்தி அமைக்கப் பட்டதா?  

பெரும் செல்வனான கலைகளில் ஆர்வம் மிக்க கலைஞனான சோழ நாட்டின் ​மாபெரும் கலைச் செல்வியாகச் சோழ அரசனின் தலைக்கோல் பரிசு பெற்ற ஆடல் மங்கையுடன் சிறிது காலம் இணைந்து வாழ்கிறான்.  மாதவி கோவலனுடைய துணைவிதான் மனைவி அல்ல.  வசதியுள்ள தமிழர்கள் இப்படித் தொடுப்பு வைத்துக் கொள்வது  புதிதன்று
கணிகையர் குலத்தில் பிறந்தவள்குல மரபுக்கு மாறாகக் கோவலனைக் காதலிக்கிறாள்.  அவன் பிரிந்து சென்ற போதும் அவனை நினைத்தே வாழ்க்கையை ஓட்டிக்கொண்டு தன் மகளைத் தன் குலத் தொழிலை மேற்கொள்ளாமல் பண்பிற் சிறந்த பெண்ணாக வளரிக்கிறார். எனவே மாதவியும் சராசரித் தமிழ்ப் பெண்ணாக உருவகப் படுத்தப்படவில்லை

தமிழர்களின் வாழ்வியல் மரபு மரப் வழிச் சட்டம் மண விலக்குக்கு உரிமை பெறுவதில் பெண்ணை ஒதுக்கிவிடவில்லை.  வாழா வெட்டி, மணவிலக்குப் பெற்ற பெண்டிர் விதவை என்ற குமுகப் பட்டயங்கள் நடை முறையில் இருந்ததாகச் சான்றுகள் இல்லை

அந்தக்கால கற்பனைப் படைப்புகளைக் கொண்டு இந்தக் கால விவாக ரத்து பற்றிப்  பேசலாமா

இந்தக் காலத்திலேயே நாலு திருமணம் செய்து கொண்ட திரைப்பட நடிகை லட்சுமியும் உலக நாயகன் கமல் ஹாசனும் உங்கள் வாதத்துக்குப் பொருத்தமானவர்களாக இல்லையே

இம்சை

செல்வன்

unread,
Jan 28, 2014, 3:04:44 PM1/28/14
to vallamai

2014-01-27 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>

தமிழர்களின் வாழ்வியல் மரபு மரப் வழிச் சட்டம் மண விலக்குக்கு உரிமை பெறுவதில் பெண்ணை ஒதுக்கிவிடவில்லை.  வாழா வெட்டி, மணவிலக்குப் பெற்ற பெண்டிர் விதவை என்ற குமுகப் பட்டயங்கள் நடை முறையில் இருந்ததாகச் சான்றுகள் இல்லை

அந்தக்கால கற்பனைப் படைப்புகளைக் கொண்டு இந்தக் கால விவாக ரத்து பற்றிப்  பேசலாமா

இந்தக் காலத்திலேயே நாலு திருமணம் செய்து கொண்ட திரைப்பட நடிகை லட்சுமியும் உலக நாயகன் கமல் ஹாசனும் உங்கள் வாதத்துக்குப் பொருத்தமானவர்களாக இல்லையே

தமிழ் நூல்களில் பலதார மணம் புரிந்த மன்னர் வரலாறு உண்டு. மறுமணம் புரிந்த ஒரு பெண்ணையாவது காட்ட இயலுமா?

கமலஹாசன் தன் மகள்கள் வளர்ந்து பெரியவர்கள் ஆகும்வரை ஒரே பெண்ணுடன் தான் திருமணம் புரிந்து வாழ்க்கை நடத்தினார். அப்பெண்கள் தம் தாய், தந்தை இருவரால் வளர்க்கபட்டார்கள். அவர்கள் வளர்ந்து பெரியவர்கள் ஆனதும் பெற்றோர்ர் பிரிந்தார்கள். அப்படி நிகழ்ந்தால் அதனால் யாருக்கும் பாதிப்பு இல்லை.

நடிகை இலட்சுமி விஷயத்தில் அப்படி நிகழவில்லை. அவரது தந்தையுடன் அவர் வளரவில்லை. ஐஸ்வர்யாவின் குழந்தைபருவத்தில் இலட்சுமிக்கு வேறு திருமணங்கள் நிகழ்ந்தன. அது குறித்து அதிகம் பேச விரும்பவில்லை. ஸ்ருதிஹாசனையும் ஐஸ்வர்யாவையும் ஒப்பிட்டு பார்த்து நாமே தெரிந்து கொள்ளலாம்.

தேமொழி

unread,
Jan 28, 2014, 3:58:14 PM1/28/14
to vall...@googlegroups.com

On Tuesday, January 28, 2014 12:04:44 PM UTC-8, K Selvan wrote:

தமிழ் நூல்களில் பலதார மணம் புரிந்த மன்னர் வரலாறு உண்டு. மறுமணம் புரிந்த ஒரு பெண்ணையாவது காட்ட இயலுமா?

செல்வன், உலகம் முழுவதும் பெண்கள் உண்டே. காலம் காலமாக பலநாட்டுப் பெண்களும் மறுமணம் செய்து கொண்டதும் உண்டே.  ஏன் தமிழ்நூல்களில் மட்டுமே பார்க்க வேண்டும்??????? விளக்கம் தேவை.

வேறு ஒரு அப்பாவின் கீழ் வளர்ந்த ஒபாமாவைப் பார்க்கவில்லையா?  இன்று  State of the Union speech கொடுக்கும் அளவிற்கு அவர் வளரவில்லையா?

கமலஹாசன் தன் மகள்கள் வளர்ந்து பெரியவர்கள் ஆகும்வரை ஒரே பெண்ணுடன் தான் திருமணம் புரிந்து வாழ்க்கை நடத்தினார். அப்பெண்கள் தம் தாய், தந்தை இருவரால் வளர்க்கபட்டார்கள். அவர்கள் வளர்ந்து பெரியவர்கள் ஆனதும் பெற்றோர்ர் பிரிந்தார்கள். அப்படி நிகழ்ந்தால் அதனால் யாருக்கும் பாதிப்பு இல்லை.

நடிகை இலட்சுமி விஷயத்தில் அப்படி நிகழவில்லை. அவரது தந்தையுடன் அவர் வளரவில்லை. ஐஸ்வர்யாவின் குழந்தைபருவத்தில் இலட்சுமிக்கு வேறு திருமணங்கள் நிகழ்ந்தன. அது குறித்து அதிகம் பேச விரும்பவில்லை. ஸ்ருதிஹாசனையும் ஐஸ்வர்யாவையும் ஒப்பிட்டு பார்த்து நாமே தெரிந்து கொள்ளலாம்.

நம் நாட்டில் எத்தனையோ ஆண்கள் மறுமணம் செய்ததும் உண்டே, சின்னவீடு என்று ஒன்றும் சிலர் வைத்துக் கொள்வதுண்டே. சிறியதாயர் வளர்த்த பிள்ளைகளும் சின்ன வீடு உள்ளவர்கள் பிள்ளைகள் அனைத்தும் தறுதலைகளா?

///ஸ்ருதிஹாசனையும் ஐஸ்வர்யாவையும் ஒப்பிட்டு பார்த்து நாமே தெரிந்து கொள்ளலாம்.///

ஏன் அப்பா அம்மா சேர்ந்தே வளர்த்த வனிதா (விஜயகுமார், மஞ்சுளா தம்பதிகளின் மூத்த மகள் வனிதா) கதி இப்படி ஆனது? ஸ்ருதியுடனம் ஐஸ்வர்யாவுடனும் இவரையும் ஒப்பிடலாமே.

முதலில் கமலின்  வாழ்க்கையே தட்டுக் கெட்டுப் போனதற்குக் காரணம் அவரது பெற்றோர்களா?

காந்தி கஸ்தூரிபா பிள்ளைகளிலும் ஒருவர் வழி தவறி நடந்து தந்தைக்கு மன வருத்தம் அளித்ததாகப் படித்துள்ளேன்.  ஒரே வளர்ப்பு சூழ்நிலைகளிலும்  சில பிள்ளைகள் மட்டும் வழி தவறிப் போவதன் காரணம் என்ன?

தாயாலோ அல்லது தந்தையாலோ மட்டுமே வளர்க்கப்படும் சூழ்நிலையில் உள்ள குழந்தைகள் அனைவரையும் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் மட்டுமே பார்க்க முடியுமா?

குழந்தைகள் என்று இருந்துவிட்டால் ஆணோ பெண்ணோ குழந்தைகள் வளரும் வரை குழந்தை பிறப்பதில் பங்கு பெற்ற மற்றொரு வாழ்க்கைத்துணையுடன் மட்டுமே வாழ வேண்டும் என்று நீங்கள் சொல்வதாக நினைத்து மகிழ்ந்த நான் மீண்டும் முதல் கேள்வியைப் படித்ததும் குழம்பிவிட்டேன்.

ஆமாம், உங்கள் முதல் கேள்வியே "தமிழ் நூல்களில் பலதார மணம் புரிந்த மன்னர் வரலாறு உண்டு. மறுமணம் புரிந்த ஒரு பெண்ணையாவது காட்ட இயலுமா?" என்பது ஏன் ஆண்களுக்கு ஒரு நியாயம் பெண்களுக்கு ஒரு நியாயம் என்ற கருது தொனிக்கும் வகையில் ஏன் அமைந்துள்ளது?

பற்பலக் குழப்பங்களுடன்

..... தேமொழி

செல்வன்

unread,
Jan 28, 2014, 4:31:34 PM1/28/14
to vallamai

2014-01-28 தேமொழி <them...@yahoo.com>

செல்வன், உலகம் முழுவதும் பெண்கள் உண்டே. காலம் காலமாக பலநாட்டுப் பெண்களும் மறுமணம் செய்து கொண்டதும் உண்டே.  ஏன் தமிழ்நூல்களில் மட்டுமே பார்க்க வேண்டும்??????? விளக்கம் தேவை.

வேறு ஒரு அப்பாவின் கீழ் வளர்ந்த ஒபாமாவைப் பார்க்கவில்லையா?  இன்று  State of the Union speech கொடுக்கும் அளவிற்கு அவர் வளரவில்லையா?

பேராசிரியர் தமிழ்நூல்களை உதாரணம் காட்டி தமிழ்நாட்டில் மறுமணம் உண்டு என்றதால் இல்லை என மறுக்க வேண்டியதானது தேமொழி. பண்டையதமிழகத்தில் பெண்களுக்கு மறுமணம் இல்லை என்பதை தமிழ் நூல்களில் இருந்து அறியலாம். அது நியாயம் என நான் சொல்லவரவில்லை. மறுமணம் உண்டு என்றார் பேராசிரியர். இல்லை என்பது என் கருத்து. பெண்கள், ஆண்கள் யாரும் மறுமணம் செய்துகொள்வதை நான் தவறு என நினைக்கவில்லை. ஆனால் பண்டைய தமிழகத்தில் பெண்மறுமணம் இல்லை.

ஏன் அப்பா அம்மா சேர்ந்தே வளர்த்த வனிதா (விஜயகுமார், மஞ்சுளா தம்பதிகளின் மூத்த மகள் வனிதா) கதி இப்படி ஆனது? ஸ்ருதியுடனம் ஐஸ்வர்யாவுடனும் இவரையும் ஒப்பிடலாமே. 

முதலில் கமலின்  வாழ்க்கையே தட்டுக் கெட்டுப் போனதற்குக் காரணம் அவரது பெற்றோர்களா?

காந்தி கஸ்தூரிபா பிள்ளைகளிலும் ஒருவர் வழி தவறி நடந்து தந்தைக்கு மன வருத்தம் அளித்ததாகப் படித்துள்ளேன்.  ஒரே வளர்ப்பு சூழ்நிலைகளிலும்  சில பிள்ளைகள் மட்டும் வழி தவறிப் போவதன் காரணம் என்ன?

வனிதா மஞ்சுளா விஜயகுமார் பறி நோ கமென்ட்ஸ். படித்த பல விஷயங்களை பொதுவில் எழுதமுடியாது.

கமல் தட்டுகெட்டு போகவில்லையே? பர்சனல் வாழ்வில் நன்றாக தான் இருக்கிறார். பிள்ளைகளை பொறுத்தவரை நல்ல தந்தையாக தான் இருந்துள்ளார்.

காந்தி நாட்டுக்கு செய்த சேவையால் வீட்டில் பிள்ளைகளை சரிவர கவனிக்க இயலவில்லை. காமராஜர் போன்றோர் அந்த காரணத்தால் தான் திருமணம் புரியவில்லை.

பிள்ளைகளை இருபெற்றோரும் நல்லபடி ஒன்றாக இருந்து வளர்க்கவேண்டும் என்பது தான் உறுதியான கருத்து. காதல் தோல்வியும், மணவிலக்கும் ஆண்களை விட பெண்களை மிக அதிகமாக பாதிக்கிறது. ஒபாமாவின் தாய் தான் சீனியர் ஒபாமாவை மணந்து அதிகம் பாதிக்கபட்டவர். சீனியர் ஒபாமா அதன்பின் ஜாலியாக தன் பிளேய்பாய் வாழ்க்கையை தொடர்ந்தார். அதனால் ஆண்களை விட பெண்கள் இவ்விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். அப்படி இருக்க கூடாது என்றால் பேச எதுவுமில்லை.

தேமொழி

unread,
Jan 28, 2014, 4:58:58 PM1/28/14
to vall...@googlegroups.com

On Tuesday, January 28, 2014 1:31:34 PM UTC-8, K Selvan wrote:
 
மறுமணம் உண்டு என்றார் பேராசிரியர். இல்லை என்பது என் கருத்து.
 
'அறுத்துக் கட்டுவது', 'அத்து விடுவது'  என்ற வழக்கை  நான் கேள்விப்பட்டதுண்டு.
கணவன் இறந்தால்  மனைவி அவரது சகோதரர்களில் ஒருவரை மணப்பதையும் நான் கேள்விப்பட்டதுண்டு. 
ஒரு அம்மா என்னிடம் அப்படி சொன்னார்.  ஆனால் அவர் முதலில் மறுத்துவிட்டதாகவும், பிறகு சிறிது காலம் கழித்து தான் அவ்வாறு மறுத்தது தவறான முடிவு என்று  வருந்தியும்  சொன்னார். 
அதிலிருந்து முடிவெடுக்கும் சுதந்திரமும், வாய்ப்பும் அவருக்கு இருந்ததையும், அத்துடன்  அவரை யாரும் எந்த ஒரு வாழ்க்கைக்கும் வற்புறுத்தவில்லை என்பதும் தெரிந்தது. 

///கமல் தட்டுகெட்டு போகவில்லையே? பர்சனல் வாழ்வில் நன்றாக தான் இருக்கிறார்.////

////காதல் தோல்வியும், மணவிலக்கும் ஆண்களை விட பெண்களை மிக அதிகமாக பாதிக்கிறது. ஒபாமாவின் தாய் தான் சீனியர் ஒபாமாவை மணந்து அதிகம் பாதிக்கபட்டவர். ////

இவை இரண்டும் உங்களது தனிப்பட்டக் கருத்து.
கமல் வாழ்வைப் பின்பற்றி நட என்று எத்தனை பேரால் தன பிள்ளைகளுக்கு அறிவுரை கூற முடியும்.
ஒபாமாவின் தாய் மற்றொரு கணவரை மணந்தால் பாதிக்கப்பட்டார் என்பதை எப்படி முடிவெடுப்பது?  அவரும் ஒருவரை மணந்து  கொண்டார் அது போலவே, இவரும் ஒருவரை மணந்து  கொண்டார். 
பிறகு அவரவர் வாழ்வில் இன்பமோ துன்பமோ எல்லோருமே எதிர் கொண்டிருப்பர்கள்.

..... தேமொழி

செல்வன்

unread,
Jan 28, 2014, 5:47:24 PM1/28/14
to vallamai
2014-01-28 தேமொழி <them...@yahoo.com>
'அறுத்துக் கட்டுவது', 'அத்து விடுவது'  என்ற வழக்கை  நான் கேள்விப்பட்டதுண்டு.
கணவன் இறந்தால்  மனைவி அவரது சகோதரர்களில் ஒருவரை மணப்பதையும் நான் கேள்விப்பட்டதுண்டு. 
ஒரு அம்மா என்னிடம் அப்படி சொன்னார்.  ஆனால் அவர் முதலில் மறுத்துவிட்டதாகவும், பிறகு சிறிது காலம் கழித்து தான் அவ்வாறு மறுத்தது தவறான முடிவு என்று  வருந்தியும்  சொன்னார். 
அதிலிருந்து முடிவெடுக்கும் சுதந்திரமும், வாய்ப்பும் அவருக்கு இருந்ததையும், அத்துடன்  அவரை யாரும் எந்த ஒரு வாழ்க்கைக்கும் வற்புறுத்தவில்லை என்பதும் தெரிந்தது. 

அது எல்லாம் மறுமணத்தில் முடிந்ததாக நான் கேள்விப்பட்டது இல்லை. கொழுந்தனை மணக்கும் வழக்கம் தமிழ்சமூகத்தில் இல்லை. அண்ணியை தாயாக நினைத்த மரபு தமிழ்மரபு.

இவை இரண்டும் உங்களது தனிப்பட்டக் கருத்து. 
கமல் வாழ்வைப் பின்பற்றி நட என்று எத்தனை பேரால் தன பிள்ளைகளுக்கு அறிவுரை கூற முடியும்.

கமல் வாழ்வை பின்பற்ற சொல்லவில்லையே? இலட்சுமியை ஒப்பிடுகையில் அவர் நல்ல தந்தை என்பது தான் ஸ்டேட்மெண்ட்.

ஒபாமாவின் தாய் மற்றொரு கணவரை மணந்தால் பாதிக்கப்பட்டார் என்பதை எப்படி முடிவெடுப்பது?  அவரும் ஒருவரை மணந்து  கொண்டார் அது போலவே, இவரும் ஒருவரை மணந்து  கொண்டார்.  

17 வயதில் பிள்ளைபிறப்பு. மகனை பிரிந்து இந்தோனேசியாவில் வாழ்க்கை. எந்த தாய்க்கும் மகனை பிரிவது மகிழ்ச்சியான விஷயமாக இருக்க முடியாது.

தேமொழி

unread,
Jan 28, 2014, 6:43:00 PM1/28/14
to vall...@googlegroups.com

On Tuesday, January 28, 2014 2:47:24 PM UTC-8, K Selvan wrote:

அது எல்லாம் மறுமணத்தில் முடிந்ததாக நான் கேள்விப்பட்டது இல்லை. கொழுந்தனை மணக்கும் வழக்கம் தமிழ்சமூகத்தில் இல்லை. அண்ணியை தாயாக நினைத்த மரபு தமிழ்மரபு.

அது சரி செல்வன், நீங்கள் சொன்னாப்ல ஆச்சா?

http://www.maalaimalar.com/2012/11/16201022/husband-dead-woman-marriage-tr.html

 [...]கணவரை பறிகொடுத்த சமனசுப்பு தாலியை கழட்டி விதவை கோலத்துக்கு மாறினார். இளம்வயதிலேயே இரு குழந்தைகளுடன் விதவையானதால் உறவினர்களும் கண்ணீர் வடித்தனர்.

16-ம் நாள் விசேஷம் முடிந்ததும் சமனசுப்பு தனது குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். அவருக்கு ஆறுதல் சொல்லி  உறவினர்கள் அவருக்கு மறுமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். இறந்து போன அருணா சலத்தின் தம்பியையே மணமகனாக தேர்வு செய்தனர். அவரும் அண்ணன் மனைவிக்கு வாழ்வு கொடுக்க முன் வந்தார்.

இதையடுத்து  திருமண ஏற்பாடுகள் தொடங்கியது. நாளை மறுநாள் (18-ந்தேதி) திருமணம் செய்ய நாள் குறிக்கப்பட்டது. மனதை திடப்படுத்திக் கொண்டு விதவை கோலத்தை களைந்து மணக்கோலம் பூண சமன சுப்புவும் தயாரானார். இந்த நிலையில் சினிமாவில் வரும் திடீர் திருப்பத்தையும் மிஞ்சும் வகையில் நடந்த அந்த காட்சியை பார்த்து சமனசுப்பு இன்ப அதிர்ச்சியில் திக்கு முக்காடிப் போனார்.[...]

செல்வன்

unread,
Jan 28, 2014, 6:46:40 PM1/28/14
to vallamai
2014-01-28 தேமொழி <them...@yahoo.com>
அது சரி செல்வன், நீங்கள் சொன்னாப்ல ஆச்சா?

இது 2012ங்க. நான் சொன்னது பண்டைய தமிழகம்.

தேமொழி

unread,
Jan 28, 2014, 6:51:00 PM1/28/14
to vall...@googlegroups.com

On Tuesday, January 28, 2014 2:47:24 PM UTC-8, K Selvan wrote:

17 வயதில் பிள்ளைபிறப்பு. மகனை பிரிந்து இந்தோனேசியாவில் வாழ்க்கை. எந்த தாய்க்கும் மகனை பிரிவது மகிழ்ச்சியான விஷயமாக இருக்க முடியாது.

Ahhaa...Selvan trying to score with mother's sentiment.

http://en.wikipedia.org/wiki/Obama#Early_life_and_career

In 1963, Dunham met Lolo Soetoro, an Indonesian East–West Center graduate student in geography at the University of Hawaii, and the couple were married on Molokai on March 15, 1965.[15] After two one-year extensions of his J-1 visa, Lolo returned to Indonesia in 1966, followed sixteen months later by his wife and stepson in 1967, with the family initially living in a Menteng Dalam neighborhood in the Tebet subdistrict of south Jakarta, then from 1970 in a wealthier neighborhood in the Menteng subdistrict of central Jakarta.[16] From ages six to ten, Obama attended local Indonesian-language schools: St. Francis of Assisi Catholic School for two years and Besuki Public School for one and a half years, supplemented by English-language Calvert School homeschooling by his mother.[17]

நீங்களும்தான் பெண்கள் மறுமணம் செய்து கொண்டால் அவர்கள் பிள்ளைகள் பாழாய்ப் போவார்கள், இல்லை பிள்ளையைப் பிரிந்து வாழ நேரிடும் என்று பெண்களைப் பயமுறுத்திப் பார்க்கிறீர்கள். 
பல காலமாக இது போல பெண்களின் ஆழ்மனதில் இந்தப் பயத்தை விதிக்கத் திட்டம் நடந்து வருகிறது.  சுயநலநோக்கத்துடன்.....
ஏன் செல்வன், ஆண்களில் நல்லவர்களும் இருப்பார்கள் என்று உங்களுக்கு ஆண்கள் மீது நம்பிக்கை இல்லையா? :D

..... தேமொழி

தேமொழி

unread,
Jan 28, 2014, 6:57:58 PM1/28/14
to vall...@googlegroups.com

இப்படி சொல்வீர்கள் என்றுதான் முதலில் இந்த செய்தியை நான் கொடுக்கவில்லை.

குறைந்தது முப்பத்து ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் நான்  உரையாடியப் பெண்மணி தமிழில்தான் என்னிடம் பேசினார்.
அவருக்குப் பள்ளி செல்லும் வயதில் பிள்ளைகள் இருந்தனர் அப்பொழுது..
அவரது கணவரின் வேலை அவருக்குக் கிடைத்தது, அதனால் அவர் முதலில் மறுத்தாரோ என எனக்கு சந்தேகம்.

அது ஏன் பழைய நாட்களைப் பற்றியே ஆதாரம் திரட்டுகிறீர்கள் செல்வன்.  காலம் மாறிக் கொண்டே போகிறது, நீங்கள் என்ன கப்பலில் மாதக் கணக்காகப் பயணம் செய்தா அமெரிக்கா வந்தீர்கள்.
என் கொள்ளுத்தாத்தா செய்வதைத்தான் செய்வேன் என்பது போன்று இது வரை எத்தனை முறை நீங்கள் நடந்து கொண்டிருகிறீர்கள் எனத் தெரியவில்லை.
அன்றாட வாழ்க்கையில் அப்படி செய்வதை முதலில் பட்டியல் இடுங்கள்.

..... தேமொழி

..... தேமொழி

செல்வன்

unread,
Jan 28, 2014, 7:03:28 PM1/28/14
to vallamai
2014-01-28 தேமொழி <them...@yahoo.com>
Ahhaa...Selvan trying to score with mother's sentiment.

That is the most powerful bond in the world

In 1971, Obama returned to Honolulu to live with his maternal grandparentsMadelyn and Stanley Dunham, and with the aid of a scholarship attended Punahou School, a private college preparatory school, from fifth grade until his graduation from high school in 1979.[18] Obama lived with his mother and sister in Hawaii for three years from 1972 to 1975 while his mother was a graduate student in anthropology at the University of Hawaii.[19]

No parents from age 10 to highschool!!!!!

நீங்களும்தான் பெண்கள் மறுமணம் செய்து கொண்டால் அவர்கள் பிள்ளைகள் பாழாய்ப் போவார்கள், இல்லை பிள்ளையைப் பிரிந்து வாழ நேரிடும் என்று பெண்களைப் பயமுறுத்திப் பார்க்கிறீர்கள்.  

மறுமணம் செய்தால் அல்ல. சிறுவயதில் பிள்ளையை பெற்றால்.

பல காலமாக இது போல பெண்களின் ஆழ்மனதில் இந்தப் பயத்தை விதிக்கத் திட்டம் நடந்து வருகிறது.  சுயநலநோக்கத்துடன்.....

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

பெண்களுக்கு டீன்வயதில் பிள்ளைகளை பெறலாம், கெட்டுபோகலாம் எந்த பாதிப்பும் இல்லை என அட்வைஸ் செய்யலாம் என்கிறீர்களா?

ஏன் செல்வன், ஆண்களில் நல்லவர்களும் இருப்பார்கள் என்று உங்களுக்கு ஆண்கள் மீது நம்பிக்கை இல்லையா? :D

ஆண்களில் நல்லவர்கள் இருப்பார்கள் என நம்பி ரஷ்யன் ரவுலட் ஆடுவது அவரவர் விருப்பம். ஆனால் அதை அட்வைசாக கொடுக்க முடியாது.

கல்யாணம் ஆகாமல் ஆண்களை நம்பி பிள்ளைபெறுவது படுமுட்டாள்தனம். தற்கொலைக்கு ஒப்பான செயல். அவன் எந்த அளவு நேர்மையான ஆண் என்பது இங்கே முக்கியமே கிடையாது. வீட்டை பூட்டிவிட்டு வெளியே போவது நம் அண்டைவிட்டார் மேல் சந்தேக்படுகிறோம் என்பதன் அறிகுறி அல்ல. முகமதுநபி சொன்னதுபோல் ஆண்டவனை நம்பு, அதே சமயம் குதிரை லாயத்தையும் பூட்டி வை என்பதை பின்பற்றவேண்டும்,

தேமொழி

unread,
Jan 28, 2014, 7:06:46 PM1/28/14
to vall...@googlegroups.com

On Tuesday, January 28, 2014 2:47:24 PM UTC-8, K Selvan wrote:

கமல் வாழ்வை பின்பற்ற சொல்லவில்லையே? இலட்சுமியை ஒப்பிடுகையில் அவர் நல்ல தந்தை என்பது தான் ஸ்டேட்மெண்ட்.

எப்படி அவர்கள் இருவரது  பிள்ளை வளர்ப்பு பற்றி உங்களுக்குத் தெரிந்தது? எதை வைத்து ஒப்பிடுகிறீர்கள்!!!!!
அந்தப் பெண் பெண் வளரும்பொழுது மறுமணம் செய்தார் என்ற ஒரே காரணத்திற்காக  நீங்கள் செய்யும் முடிவாகத்தான் தெரிகிறது.
மேலும் ஐஸ்வர்யா பாட்டியிடம் வளர்ந்ததாகவும் படித்ததுண்டு.
வாழ்க்கையிலும் காதல் மன்னனான ஜெமினியின் பெண்கள் என அப்பாவைப் போல உண்டா என்று உருகி உருகி பெண் பிள்ளைகள் இல்லாதவர்களை (வைரமுத்து) ஏக்கமுறச் செய்கிறார்கள்.
என்னதான் நடக்கிறது?  அப்பா செய்தால் ஓகே அம்மா செய்தால் நோ ஓகேயா?

செல்வன்

unread,
Jan 28, 2014, 7:08:06 PM1/28/14
to vallamai
2014-01-28 தேமொழி <them...@yahoo.com>
என் கொள்ளுத்தாத்தா செய்வதைத்தான் செய்வேன் என்பது போன்று இது வரை எத்தனை முறை நீங்கள் நடந்து கொண்டிருகிறீர்கள் எனத் தெரியவில்லை.

அன்றாட வாழ்க்கையில் அப்படி செய்வதை முதலில் பட்டியல் இடுங்கள்.

என் கொள்ளுத்தாத்தா கல்யாணம் செய்துகொண்டார். அதன்பின் பிள்ளைகளை பெற்றார்.  உழைக்காமல் உண்ணவில்லை. கடவுள் நம்பிக்கை கொண்டு இருந்தார். ஊரில் அவர் கட்டிய கோயில் இன்னமும் இருக்கிறது.

இதையே தான் நானும் செய்கிறேன். இதே மதிப்பீடுகளை என் குழந்தைகளுக்கு கற்றுதருவதை விட என்னைபார்த்து அவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என விரும்புகிறேன். தாய், தந்தை தான் குழந்தைகளின் முதல் ஹீரோக்கள். தாயைப்போல பிள்ளை, நூலைபோல சேலை என பெரியவர்கள் சும்மா சொல்லவில்லை

செல்வன்

unread,
Jan 28, 2014, 7:11:03 PM1/28/14
to vallamai
2014-01-28 தேமொழி <them...@yahoo.com>
எப்படி அவர்கள் இருவரது  பிள்ளை வளர்ப்பு பற்றி உங்களுக்குத் தெரிந்தது? எதை வைத்து ஒப்பிடுகிறீர்கள்!!!!!

அந்தப் பெண் பெண் வளரும்பொழுது மறுமணம் செய்தார் என்ற ஒரே காரணத்திற்காக  நீங்கள் செய்யும் முடிவாகத்தான் தெரிகிறது.

அவர்களது மகள்கள் கொடுக்கும் பேட்டியை படித்துதான்.

17 வயதில் கஞ்சா சப்ளையருடன் வீட்டை விட்டு ஓடி கல்யானம் செய்து, குழந்தையை பெற்று, அடித்து கொடுமைபடுத்தபட்டு, வீடு திரும்பி, விவாகரத்து செய்து, மறுமணம் செய்து அதை தாய் ஏற்காமல் வேறு பிள்ளையை தத்து எடுத்து..

17 வயது பெண்ணுக்கு நடக்ககூடாத விஷயங்கள் இவை. தாய், தந்தை இருந்தால் 17 வயது பெண் ஏன் பாட்டி வீட்டில் வளரவேண்டும்?

தேமொழி

unread,
Jan 28, 2014, 7:12:36 PM1/28/14
to vall...@googlegroups.com

On Tuesday, January 28, 2014 4:03:28 PM UTC-8, K Selvan wrote:

2014-01-28 தேமொழி <them...@yahoo.com>
Ahhaa...Selvan trying to score with mother's sentiment.

That is the most powerful bond in the world

!!!!!!!

அம்மா எக்ஸ்ட்டெண்டேட் பாமிலி இல்லையோ ????

..... தேமொழி

செல்வன்

unread,
Jan 28, 2014, 7:13:46 PM1/28/14
to vallamai

On Tue, Jan 28, 2014 at 6:12 PM, தேமொழி <them...@yahoo.com> wrote:
அம்மா எக்ஸ்ட்டெண்டேட் பாமிலி இல்லையோ ????

கல்யாணத்துக்கு பின் :-)

தேமொழி

unread,
Jan 28, 2014, 7:15:38 PM1/28/14
to vall...@googlegroups.com

On Tuesday, January 28, 2014 4:11:03 PM UTC-8, K Selvan wrote:

17 வயது பெண்ணுக்கு நடக்ககூடாத விஷயங்கள் இவை. தாய், தந்தை இருந்தால் 17 வயது பெண் ஏன் பாட்டி வீட்டில் வளரவேண்டும்?

அப்போ வனிதாவுடன் ஒப்பிடுங்கள்...

ஏன் ஜெமினி உதாரணத்தைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லை?

..... தேமொழி

தேமொழி

unread,
Jan 28, 2014, 7:16:55 PM1/28/14
to vall...@googlegroups.com

On Tuesday, January 28, 2014 4:13:46 PM UTC-8, K Selvan wrote:

கல்யாணத்துக்கு பின் :-)

ராஜதந்திரமா?

செல்வன்

unread,
Jan 28, 2014, 7:21:54 PM1/28/14
to vallamai
2014-01-28 தேமொழி <them...@yahoo.com>
அப்போ வனிதாவுடன் ஒப்பிடுங்கள்...

ஏன் ஜெமினி உதாரணத்தைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லை?

வனிதா பற்றி பேசகூடாது என்பதால் பேசமுடியாது :-)

ஜெமினியின் முதல்மனைவிக்கும் அவருக்கும் பிறந்த குழந்தைகள் நன்றாக இருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் மருத்துவர்கள் .

ஜெமினியை நம்பி ஏமாந்து, பிரிந்த புஷ்பவல்லியின் மகள் ரேகா நிலை அப்படி இல்லை. தந்தை சடலத்தை பார்க்க கூட அவர் வரவில்லை.

கல்யாணம் செய்த ஆண்களை நம்பி ஏமாந்தால் விளைவு இப்படித்தான் இருக்கும்.

தேமொழி

unread,
Jan 28, 2014, 7:25:23 PM1/28/14
to vall...@googlegroups.com

On Tuesday, January 28, 2014 4:03:28 PM UTC-8, K Selvan wrote:

பெண்களுக்கு டீன்வயதில் பிள்ளைகளை பெறலாம், கெட்டுபோகலாம் எந்த பாதிப்பும் இல்லை என அட்வைஸ் செய்யலாம் என்கிறீர்களா?

இங்குதான் பள்ளியில் sex education உண்டே.  அதனால்தானோ என்னவோ, இங்கு பெண்கள் மீது நடக்கும் தாக்குதல் குறைவாக இருக்கம் போலிருக்கிறது.

..... தேமொழி

செல்வன்

unread,
Jan 28, 2014, 7:27:07 PM1/28/14
to vallamai
2014-01-28 தேமொழி <them...@yahoo.com>
அப்போ வனிதாவுடன் ஒப்பிடுங்கள்...

* என் அப்பாவிற்கு இரண்டு மனைவிகள், ஆறு குழந்தைகள்; இதனால், குடும்பத்தில் என்னவெல்லாம் நடக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.- வனிதா விஜயகுமார் 

தேமொழி

unread,
Jan 28, 2014, 7:28:05 PM1/28/14
to vall...@googlegroups.com

On Tuesday, January 28, 2014 4:21:54 PM UTC-8, K Selvan wrote:

ஜெமினியை நம்பி ஏமாந்து, பிரிந்த புஷ்பவல்லியின் மகள் ரேகா நிலை அப்படி இல்லை. தந்தை சடலத்தை பார்க்க கூட அவர் வரவில்லை.

எனக்கென்னவோ வெற்றிகரமான நடிகையாகத்தான் அவர் தோன்றுகிறார்.  அவர் தேர்ந்தெடுத்த துறை வேறு அவ்வளவே.

..... தேமொழி

செல்வன்

unread,
Jan 28, 2014, 7:29:20 PM1/28/14
to vallamai
2014-01-28 தேமொழி <them...@yahoo.com>
இங்குதான் பள்ளியில் sex education உண்டே.  அதனால்தானோ என்னவோ, இங்கு பெண்கள் மீது நடக்கும் தாக்குதல் குறைவாக இருக்கம் போலிருக்கிறது.

சட்டம் ஒழுங்கு இருக்கும் நாட்டில் பெண்கள் மேல் தாக்குதல் குறைவாக தான் இருக்கும்.

அதெல்லாம் இல்லாத நாடுகளில் பெண்களை பாதுகாப்பது குடும்ப அமைப்புதான். சட்டம் ஒழுங்கு இன்று சரியா இருக்கும், நாளை இருக்காது. இன்று இருக்கும் அரசு நாளை இருக்காது. மேப்புகளும், அரசியல்சட்டமும் மாரூவதுதான் உலகநியதி. உலகில் மாறாது பெண்களை காத்து நிற்கும் அமைப்பு குடும்ப அமைப்பே. அரசனை நம்பி புருசனை கைவிடுவது அறிவுடமை ஆகாது என்பது ஆன்றோர் வாக்கு

செல்வன்

unread,
Jan 28, 2014, 7:31:06 PM1/28/14
to vallamai
2014-01-28 தேமொழி <them...@yahoo.com>
எனக்கென்னவோ வெற்றிகரமான நடிகையாகத்தான் அவர் தோன்றுகிறார்.  அவர் தேர்ந்தெடுத்த துறை வேறு அவ்வளவே.

அவரும் கல்யாணம் ஆன ஆணை நம்பி ஏமாந்தார். தற்கொலைக்கு முயன்றார். பலாத்காரம் செய்யபட்டார். கடைசிவரை மணம் செய்துகொள்ள முடியாமல் போனார்.

பஞ்சணையில் காற்றுவரும், தூக்கம் வராது

செல்வன்

unread,
Jan 28, 2014, 7:32:55 PM1/28/14
to vallamai

Rekha's sad childhood

Gemini and Pushpavalli had three more children. Bhanurekha being the eldest was a child who had every right to grow up as a star kid. But just then, news of Gemini and Pushpavalli breaking up came about. Allegedly, the young Rekha was thus deprived of her father's love. Rumour has it that Gemini Ganesan did not acknowledge Rekha or his other kids from Pushpavalli when they were children. Pushpavalli, on her part, tried to make a happy home for her children, playing mother and father to them. Bhanurekha was very attached to her mother as she was the only parent she knew. At the same time, it also made her an introvert, who was happy to live in her own world. 
An isolated childhood
The media, even back then, played a very important role in celebrities' lives. Rekha was just 10 years old when her father was in the limelight again for his alleged affair with Telugu actress Savitri. Rekha, hurt by this news, receded further into a shell. She transformed herself into a tomboy as a teenager, climbing trees being one of her favourite pastimes! She didn't interact with many of her classmates at school, preferring to spend time on her own in the school chapel. 
Forced into acting

In the late '60s, the south Indian industry witnessed more Gemini-Savitri movies and the couple became a hit pair onscreen. This was also the time Rekha's mother Pushpavalli, went through a patch of ill health. She could not work further to support her family and her children. Rekha, being the eldest, had no option but to drop out of school when she was 14 years old to financially support her family. Rekha chose to embrace acting and became the only one in the family to follow in her parents' footsteps, not by choice but by circumstance. Sources say that she had no interest in acting and was basically forced to work. This was definitely one of the most difficult periods of her life. The big, bad industry
Rekha, despite being a star kid, did not enjoy the perks that came along with being who she was. Normally, when a celebrity child decides on acting as a career and enters the film industry, things come easy. Producers are more than happy to cast a new face and 10 scripts arrive at once, but it was not the same for her. After a brush with south Indian films, Rekha, then still a teenager, facing one hurdle after the other, decided to give Bollywood a shot.
She entered the Hindi film industry when she was only 14 years old. This was one of the most difficult times of her life as she could not speak Hindi, struggled to communicate with her co-workers and constantly missed her mother, who was critically ill and therefore not by her side at the time. She was also called fat, ugly and stout. Poorly styled and awkward, her debut in Sawan Bhadon (which turned out to be a huge hit) was criticised by the audience and the critics.

2014-01-28 செல்வன் <hol...@gmail.com>

தேமொழி

unread,
Jan 28, 2014, 7:34:24 PM1/28/14
to vall...@googlegroups.com

On Tuesday, January 28, 2014 4:29:20 PM UTC-8, K Selvan wrote:

சட்டம் ஒழுங்கு இருக்கும் நாட்டில் பெண்கள் மேல் தாக்குதல் குறைவாக தான் இருக்கும்.

இல்லாவிட்டால் போகிறது நம் நாடுதான் ஆன்மீக நாடாயிற்றே.  பல நல்லொழுக்கங்களை உலகுக்கே தந்த நாடாயிற்றே.
நமக்கு சட்டம்  என்பது தேவையா? 
சட்டம் இருந்தால்தான் ஒழுங்காக நடக்க வேண்டும் என்று  ஆன்மிகம் சொல்லியதா?
ஆன்மிகத்தில் படிப்பதை நடைமுறைப்படுத்த முடியாதா?

..... தேமொழி

செல்வன்

unread,
Jan 28, 2014, 7:37:38 PM1/28/14
to vallamai
2014-01-28 தேமொழி <them...@yahoo.com>
இல்லாவிட்டால் போகிறது நம் நாடுதான் ஆன்மீக நாடாயிற்றே.  பல நல்லொழுக்கங்களை உலகுக்கே தந்த நாடாயிற்றே.

நமக்கு சட்டம்  என்பது தேவையா? 
சட்டம் இருந்தால்தான் ஒழுங்காக நடக்க வேண்டும் என்று  ஆன்மிகம் சொல்லியதா?
ஆன்மிகத்தில் படிப்பதை நடைமுறைப்படுத்த முடியாதா?

நம் ஆன்மிகம் உரைக்கும் உயர்ந்த தத்துவம் இதுதான்

ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
காவலன் காவான் எனின்

அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய் 
நின்றது மன்னன் கோல்

தேமொழி

unread,
Jan 28, 2014, 7:49:35 PM1/28/14
to vall...@googlegroups.com

On Tuesday, January 28, 2014 4:37:38 PM UTC-8, K Selvan wrote:
ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
காவலன் காவான் எனின்

அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய் 
நின்றது மன்னன் கோல்

என்ன சொல்றீங்க செல்வன்? சதுர்வேத மங்கலம் போன்று விலையற்ற உதவிகள்  கொடுத்தால்தான் தர்மப்படி நடக்க முடியும் என்கிறீர்களா?

எப்படியோ போகட்டும், 'அறுதொழிலோர் நூல்மறப்பர்' என்பதற்கு வேறு விளக்கங்களும் படித்துள்ளேன்.

..... தேமொழி

செல்வன்

unread,
Jan 28, 2014, 7:52:30 PM1/28/14
to vallamai
2014-01-28 தேமொழி <them...@yahoo.com>
என்ன சொல்றீங்க செல்வன்? சதுர்வேத மங்கலம் போன்று விலையற்ற உதவிகள்  கொடுத்தால்தான் தர்மப்படி நடக்க முடியும் என்கிறீர்களா?

எப்படியோ போகட்டும், 'அறுதொழிலோர் நூல்மறப்பர்' என்பதற்கு வேறு விளக்கங்களும் படித்துள்ளேன்.

சதுர்வேத மங்கலம்....நான் சொல்லாததை சொன்னதாக சொல்ல கூடாது :-)

சட்டம் ஒழுங்கு இருந்தால் தான் நாட்டில் அறம் தழைக்கும். எந்த அறம் தழைக்க வேண்டும் என்பது அடுத்த விஷயம். ஆனால் எந்த அறமாவது தழைக்கவேண்டுமெனில் சட்டம் ஒழுங்கு நாட்டில் இருக்கவேண்டும். அவ்ளோதான் :-)

தேமொழி

unread,
Jan 28, 2014, 8:00:00 PM1/28/14
to vall...@googlegroups.com

'அறுதொழிலோர் நூல்மறப்பர்'   என்பதற்கு நான் படித்த விளக்கம்.....

திவாகர நிகண்டு சொல்லும் அறுதொழில்கள்:
“உழவு தொழிலே வரைவு வாணிகம்
விச்சை சிற்பம் என்றித் திறத்து அறு
தொழில் கற்ப நடையது கரும பூமி”

வரைவு - எழுதும் தொழில், கல்வி.
விச்சை - ஆடல், பாடல் போன்ற 64 கலைகள்.

ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
காவலன் காவான் எனின்

ராஜா காக்காவிட்டால் மழை பெய்யாது.
அதனால் பசுக்களின் பலன் குன்றும்,
உழவு முதலாய அறுதொழில்கள் வல்லோர்
தங்கள் நிபுணத்துவம் இழப்பர்.

நா. கணேசன் அவர்களது விளக்கம்.

செல்வன்

unread,
Jan 28, 2014, 8:05:42 PM1/28/14
to vallamai
2014-01-28 தேமொழி <them...@yahoo.com>

ராஜா காக்காவிட்டால் மழை பெய்யாது.

அதனால் பசுக்களின் பலன் குன்றும்,
உழவு முதலாய அறுதொழில்கள் வல்லோர்
தங்கள் நிபுணத்துவம் இழப்பர்.

நா. கணேசன் அவர்களது விளக்கம்.

ராஜா காப்பதுக்கும் மழை பெய்வதற்கும் என்ன சம்பந்தம்?

மழையை வரவழைக்கும் சக்தி வாய்ந்த ஏதோ ஒன்றை மன்னர் காப்பதால் தான் மழை வருகிறது. அப்படிப்பட்ட சக்திவாய்ந்த ஏதோ ஒன்று எது?

Nagarajan Vadivel

unread,
Jan 28, 2014, 10:04:25 PM1/28/14
to vallamai

2014/1/29 செல்வன் <hol...@gmail.com>
தமிழ் நூல்களில் பலதார மணம் புரிந்த மன்னர் வரலாறு உண்டு. மறுமணம் புரிந்த ஒரு பெண்ணையாவது காட்ட இயலுமா?

​பழந்தமிழர் குடும்ப வாழ்வில் காதல் களவு கற்பு ஆண் பெண் இருவருக்கும் பொதுவாகவே இருந்தது.  அரசர்கள் பலதார மணம் மண்ணையும் மக்களையும் காக்கும் போர் உத்தியின் அடிப்படையில் அமைந்த ஒன்றாகும்

தமிழ்க் குமுக மரபு வாழ்வில் திருமண உறவில் ஒருவனுக்கு ஒருத்தி ஒருத்திக்கு ஒருவன் என்று வலியுருத்தியது.  தமிழ்ப் பெண்களுக்குக் காதல் தோல்வியெல்லாம் இல்லை.  ஒரு தலைக் காதலும் தமிழ்ப்பெண் ஏற்புடையதாகக் கருதவில்லை

நீதி நூல்களும் பிறனில் விழையாமை அடுத்தவன் மனைவிக்கு ஆசைப்படக் கூடாது என்று ஆண்களுக்கே அதிகம் கட்டுப்பாட்டை வலியுறுத்தியது.  பெண்ணும் அவளின் திருமண உறவில் ஒரு கணவனுடன் மட்டும் அத்திருமண உறவில் உள்ளவரை வாழ்வது என்று வரையறுத்து வாழ்ந்தனர்

போரில் அதிக ஆண்கள் இறந்தும் ப்ழந்தமிழகத்தில் விதவைகள் வாழ்ந்ததில்லை.  உலகிலேயே விதவைகள் வாழும் நாடு இந்தியா.  மநு தர்மமும் இந்து சமய நெறிகளும் தமிழகத்துக்குள் வரும்வரை விதவைகள் என்று எந்தப்பெண்ணும் தமிழகத்தில் விதவைக் கோலம் பூண்டதில்லை.  இல்வாழ்க்கையில் விருப்பம் இல்லாதவர்கள் துறவு பூண்டுள்ளார்கள்

இந்த மரபுவழிப் பின்னணியில் பார்த்தால் உண்மை நிலை விளங்கும்

கமலஹாசனும் லட்சுமியும் ஒவ்வொரு கால கட்டத்திலும் ஒருவருக்கு ஒருவர் என்று நான்குமுறை திருமண உறவில் வாழ்ந்தார்கள் என்பதற்காகவே அவர்களை மேற்கோள் காட்ட வேண்டியிருந்தது

ஒருவருக்கு ஒரே நேரத்தில் ஒருவருக்கு மேல் என்ற ஃபார்முலா .​ காதல் மன்னனுக்கு மட்டுமே பொருந்தும்.

இம்சை

தேமொழி

unread,
Jan 28, 2014, 10:31:31 PM1/28/14
to vall...@googlegroups.com

///மழையை வரவழைக்கும் சக்தி வாய்ந்த ஏதோ ஒன்றை மன்னர் காப்பதால் தான் மழை வருகிறது. அப்படிப்பட்ட சக்திவாய்ந்த ஏதோ ஒன்று எது?////

அரசர்/அரசு  காக்கும் மண்ணில் மட்டுமா மழை பொழிகிறது?
மனித நடமாட்டமற்ற எத்தனயோ குட்டி குட்டித் தீவுகளிளும்தான் மழை பொழிகிறது.
கடலிலும் பொழிகிறது, காடுகளிலும் பொழிகிறது.
அங்கெல்லாம் எந்த மன்னர் வந்து எதைக் காத்தார்?

அப்பேர்பட்டசக்தி வாய்ந்த ஒன்றைக்  காட்டிக் கொடுக்கவும் செல்வன். 
அதைக் கொண்டு போய் அரேபியாவில் பண்டமாற்று செய்து பெட்ரோல் வாங்கி வரலாம்.

..... தேமொழி

சொ. வினைதீர்த்தான்

unread,
Jan 28, 2014, 11:12:37 PM1/28/14
to vallamai
அரசி வேலு நாச்சியார் மருது சகோதரரில் மூத்தவரை மறுமணமாக மணந்ததாக இணையத்தில் படித்தேன். தென்தமிழகத்தின் சில மரபுகளில் அறுத்துக்கட்டுதல் என்ற வழக்கம் இருந்துள்ளது.
இன்று எல்லா மரபுகளிலும் மணமுறிவுகளும் மறுமணமும் சாதாரணமாக நடைபெறுகிறது. ஆனால் குழந்தையுள்ளவர்கள் மறுமணம் மிகவும் குறைவு. 

அன்புடன்
சொ.வினைதீர்த்தான்

2014-01-29 செல்வன் <hol...@gmail.com>

செல்வன்

unread,
Jan 29, 2014, 12:34:56 AM1/29/14
to vallamai
2014-01-28 தேமொழி <them...@yahoo.com>
அரசர்/அரசு  காக்கும் மண்ணில் மட்டுமா மழை பொழிகிறது?
மனித நடமாட்டமற்ற எத்தனயோ குட்டி குட்டித் தீவுகளிளும்தான் மழை பொழிகிறது.
கடலிலும் பொழிகிறது, காடுகளிலும் பொழிகிறது.
அங்கெல்லாம் எந்த மன்னர் வந்து எதைக் காத்தார்?

அப்பேர்பட்டசக்தி வாய்ந்த ஒன்றைக்  காட்டிக் கொடுக்கவும் செல்வன். 
அதைக் கொண்டு போய் அரேபியாவில் பண்டமாற்று செய்து பெட்ரோல் வாங்கி வரலாம்.

என்ன தேமொழி இது? நீங்கள் போனமடலில் சொன்னதற்கு எதிராக இந்த மடலில் நீங்களே கருத்து சொல்கிறீர்கள்? :-)

போனமடலில் நீங்கள் சொன்னது

//ராஜா காக்காவிட்டால் மழை பெய்யாது.//

இந்த மடலில் நீங்கள் சொல்வது

//அரசர்/அரசு  காக்கும் மண்ணில் மட்டுமா மழை பொழிகிறது? //

இரண்டில் ஏதோ ஒன்றுதான் உண்மையாக இருக்கமுடியும் இல்லையா? :-)

செல்வன்

unread,
Jan 29, 2014, 12:36:35 AM1/29/14
to vallamai

2014-01-28 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>

நீதி நூல்களும் பிறனில் விழையாமை அடுத்தவன் மனைவிக்கு ஆசைப்படக் கூடாது என்று ஆண்களுக்கே அதிகம் கட்டுப்பாட்டை வலியுறுத்தியது.  பெண்ணும் அவளின் திருமண உறவில் ஒரு கணவனுடன் மட்டும் அத்திருமண உறவில் உள்ளவரை வாழ்வது என்று வரையறுத்து வாழ்ந்தனர்

அடுத்தவன் மனைவிக்கு தான் ஆசைபடகூடாது. கல்யாணமாகாத பெண் மேல் ஆசைவைப்பதை நீதிநூல்கள் தடுக்கவில்லை

செல்வன்

unread,
Jan 29, 2014, 12:39:28 AM1/29/14
to vallamai

2014-01-28 சொ. வினைதீர்த்தான் <karu...@gmail.com>

அரசி வேலு நாச்சியார் மருது சகோதரரில் மூத்தவரை மறுமணமாக மணந்ததாக இணையத்தில் படித்தேன். தென்தமிழகத்தின் சில மரபுகளில் அறுத்துக்கட்டுதல் என்ற வழக்கம் இருந்துள்ளது.

வேலுநாச்சியார் மறுமணம் செய்துகொள்ளவில்லை.

தமிழ் இலக்கிய நூல்கள், நீதிநூல்கள் எதிலும் பெண்களுக்கு மறுமணம் என்ற பேச்சே கிடையாது. முதல் முதலாக பதிவான வரலாற்றில் மறுமணம் செய்த தமிழ்பெண்ணை காண 19, 20ம் நூற்றாண்டு நூல்களை புரட்ட வேண்டி இருக்கலாம். கிராமத்தில் இருந்தது என்பது நம் யூகம் தான். வரலாற்று பதிவு அல்ல.

தேமொழி

unread,
Jan 29, 2014, 12:49:44 AM1/29/14
to vall...@googlegroups.com

அதுதானே செல்வன் என்பது.
நான் அறுதொழில் என்றால் என்ன பொருள்  என்று பாருங்கள் என்று சொல்லி கணேசர் அவர்கள் விளக்கத்தைக் கொடுத்தால், 
அதில் அறுதொழில் என்பது உழவு முதலாய அறுதொழில்கள் வல்லோர் தங்கள் நிபுணத்துவம் இழப்பர் என்பதை  விட்டுவிட்டு அவர் சொன்ன மழையைப் பிடித்துக் கொண்டீர்கள்.  உங்களுக்கு மேலும் விளக்கம் வேண்டுமென்றால் அவர்தான் வந்து விளக்க வேண்டும்.

சரி செல்வனுக்கு மழைதான் வேண்டும் போலிருக்கிறது என்று அந்த ரூட்டில் வந்தால் கணேசர் சொன்னதை நான் சொன்னதாகச் சொல்கிறீர்கள். சரி விடுங்க.  அது என்னவோ ஒரு ரகசியம்  போல அது என்ன என்ற ஒரு கேள்வி  கேட்டுவிட்டு ஒபாமா பேச்சைக் கேட்கப் போய் விட்டீர்கள்.

சீக்கிரம் சொல்லுங்கள் அது என்ன ரகசியம் மழையை வரவழைக்க.
///அப்படிப்பட்ட சக்திவாய்ந்த ஏதோ ஒன்று எது?///
எனக்கு மண்டை காயுது.

..... தேமொழி

Tthamizth Tthenee

unread,
Jan 29, 2014, 12:59:16 AM1/29/14
to vall...@googlegroups.com
அம்மோனியம் சல்பேட் :)

அன்புடன்
தமிழ்த்தேனீ

2014-01-29 தேமொழி <them...@yahoo.com>

தேமொழி

unread,
Jan 29, 2014, 1:05:32 AM1/29/14
to vall...@googlegroups.com
சிரியோ சிரி என்று சிரித்தேன் தமிழ்த்தேனீ ஐயா.

அன்புடன் 
..... தேமொழி 

செல்வன்

unread,
Jan 29, 2014, 1:12:38 AM1/29/14
to vallamai
2014-01-28 தேமொழி <them...@yahoo.com>
அதில் அறுதொழில் என்பது உழவு முதலாய அறுதொழில்கள் வல்லோர் தங்கள் நிபுணத்துவம் இழப்பர் என்பதை  விட்டுவிட்டு அவர் சொன்ன மழையைப் பிடித்துக் கொண்டீர்கள்.  உங்களுக்கு மேலும் விளக்கம் வேண்டுமென்றால் அவர்தான் வந்து விளக்க வேண்டும்.

அரசன் காவாது போனால் மழை நிற்கும் என கூறுகையில் அரசன் எதை காத்து மழையை வரவழைக்கிறான் என கேள்வி எழுவது நியாயம் தானே?:-)

சீக்கிரம் சொல்லுங்கள் அது என்ன ரகசியம் மழையை வரவழைக்க.
///அப்படிப்பட்ட சக்திவாய்ந்த ஏதோ ஒன்று எது?///
எனக்கு மண்டை காயுது.

சொன்னது நீங்கள். பொருளை என்னிடம் கேட்டால் எனக்கு எப்படி தெரியும்? :-)

அரசன் காக்காவிட்டால் மழை பெய்யாது என சொன்னீரக்ள்.

எதை காத்து மழையை வரவைக்கிறான் அரசன் என்பதை நீங்கள் தான் சொல்லவேண்டும் :-)

தேமொழி

unread,
Jan 29, 2014, 1:20:40 AM1/29/14
to vall...@googlegroups.com
சரி விடுங்க மழைப் பற்றி எனக்குக் கவலை இல்லை செல்வன்.
கணேசர் அவர்களே வந்து விளக்கும் வரைக் காத்திருப்போம்.
எனக்கு வேண்டியது மன்னர்/சட்டம் காக்காவிட்டால் அறுதொழிலோர் நூல்மறப்பர் என்று வள்ளுவர் சொன்னது  மட்டுமே.

 ..... தேமொழி

செல்வன்

unread,
Jan 29, 2014, 1:22:55 AM1/29/14
to vallamai
2014-01-29 தேமொழி <them...@yahoo.com>
சரி விடுங்க மழைப் பற்றி எனக்குக் கவலை இல்லை செல்வன்.
கணேசர் அவர்களே வந்து விளக்கும் வரைக் காத்திருப்போம்.
எனக்கு வேண்டியது மன்னர்/சட்டம் காக்காவிட்டால் அறுதொழிலோர் நூல்மறப்பர் என்று வள்ளுவர் சொன்னது  மட்டுமே.

காவலன் காவான் எனின் என்பதில் அரசன் எதை காத்து மழையை வரவழைக்கிறான் என்பதற்கு பதில் கூறும் உரை ஆசிரியர்கள் இருவர் உள்ளனர்

ஒன்று பரிமேலழகர். அவர் கூறும் உரையாவது:

காவலன் காவான் எனின் – காத்தற்கரிய அரசன் உயிர்களைக் 
காவானாயின்; ஆ பயன் குன்றும் – அறன் இல்லாத அவன் 
நாட்டுப் பசுக்களும் பால் குன்றும்; அறுதொழிலோர் நூல் 
மறப்பர் – அந்தணரும் நூல்களை மறந்து விடுவர்.

ஆபயன்: ஆவாற் கொள்ளும் பயன், அறுதொழிலாவன: 
ஓதல், ஒதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல் 
என இவை. பசுக்கள் பால் குன்றியவழி அவியின்மையானும், 
அது கொடுத்தற்குரியார் மந்திரம், கற்பம் என்பன 
ஓதாமையானும், வேள்வி நடவாதாம்; ஆகவே, வானம் 
பெயல் ஒல்லாது என்பதாயிற்று. இவை இரண்டு பாட்டானும் 
அவன் நாட்டின்கண் நிகழும் குற்றம் கூறப்பட்டது.

ஆக நாட்டில் வேள்விகள் (யாகங்கள்) நிகழுவண்ணம் அரசன் காவல் புரிவானாகில் அறுதொழிலோரான பிராமணர் நூல்(வேதம்) மறவாது இருந்து நாட்டில் மழை பெய்யும்.

என்னது..வேதம்,,வேள்வி என சொல்லிட்டேனா..போச்சு...போச்சு . நான் அம்பேல் :-)

சமணரான மணக்குடவர் என்ன சொல்கிறார் என்பதையும் பார்ப்போம்.

பசுக்கள் பால் குறையும்: அந்தணர் வேதம் ஓதார்: அரசன் காவானாயின்.

இது காவாமையால் வருங் குற்றங் கூறிற்று.

அட அவரும் அதைதான் சொல்கிரார்..சரி நான் இன்னைக்கு காலி:-)

செல்வன்

unread,
Jan 29, 2014, 1:27:04 AM1/29/14
to vallamai
2014-01-28 தேமொழி <them...@yahoo.com>

உழவு முதலாய அறுதொழில்கள் வல்லோர்

தங்கள் நிபுணத்துவம் இழப்பர்.

இது "அறுதொழிலோர் நூல் மறப்பர்" என உள்ளதற்கு பொருத்தமான விளக்கமாக இல்லையே?

செல்வன்

unread,
Jan 29, 2014, 1:31:05 AM1/29/14
to vallamai

“ஓதல் வேட்டல் அவை பிறர்ச் செய்தல்

ஈதல் ஏற்றல் என்று ஆறு புரிந்தொழுகும்

அறம் புரி அந்தணர்”- பதிற்றுப்பத்து

தேமொழி

unread,
Jan 29, 2014, 2:04:15 AM1/29/14
to vall...@googlegroups.com

////2014-01-28 தேமொழி <them...@yahoo.com>
இல்லாவிட்டால் போகிறது நம் நாடுதான் ஆன்மீக நாடாயிற்றே.  பல நல்லொழுக்கங்களை உலகுக்கே தந்த நாடாயிற்றே.

நமக்கு சட்டம்  என்பது தேவையா?  
சட்டம் இருந்தால்தான் ஒழுங்காக நடக்க வேண்டும் என்று  ஆன்மிகம் சொல்லியதா?
ஆன்மிகத்தில் படிப்பதை நடைமுறைப்படுத்த முடியாதா?

நம் ஆன்மிகம் உரைக்கும் உயர்ந்த தத்துவம் இதுதான்

ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
காவலன் காவான் எனின்////

சரி செல்வன், 
இப்போ இந்திய  அரச காவலும்/சட்டமும், ஆன்மிகத் தொட்டிலான இந்திய பாரம்பரியமும் ஏன்  நம் நாட்டின் பெண்களுக்கு பாதுகாப்பைத் தரவில்லை என்றும்....,  

நாம் எப்பொழுதும் கலாச்சாரச் சீர்குலைவாக இகழ்வாகக் கருதும் மேலை நாட்டில் பெண்கள் நம் பெண்களைவிட  அதிக சுதந்திரத்துடன்ஏன்  உலா வருகிறார்கள் என்றும் விளக்கினால் 

சமநீதி என்பது நம்நாட்டில் இருபாலருக்கும் இடையில் இருக்கிறதா என்பதை அறிவுத்ருதிவிடும்.

..... தேமொச்ழி

செல்வன்

unread,
Jan 29, 2014, 2:15:41 AM1/29/14
to vallamai
2014-01-29 தேமொழி <them...@yahoo.com>
இப்போ இந்திய  அரச காவலும்/சட்டமும், ஆன்மிகத் தொட்டிலான இந்திய பாரம்பரியமும் ஏன்  நம் நாட்டின் பெண்களுக்கு பாதுகாப்பைத் தரவில்லை என்றும்....,

இவைதான் நம் நாட்டில் இருக்கும் ஓரளவு பாதுகாப்பையும் கொடுத்துகொன்டிருக்கிறது. இதுவும் இல்லாவிடில் நிலைமை கெட்டுகுட்டிசுவராகிவிடும்.

நாம் எப்பொழுதும் கலாச்சாரச் சீர்குலைவாக இகழ்வாகக் கருதும் மேலை நாட்டில் பெண்கள் நம் பெண்களைவிட  அதிக சுதந்திரத்துடன்ஏன்  உலா வருகிறார்கள் என்றும் விளக்கினால் 

என்னது சுதந்திரமா? எதுக்கு சுதந்திரம்? ஆண்கள் விரும்பும் 

1) பாலியல் சுதந்திரம்
2) திருமணமற்ற வாழ்க்கை
3) அபார்ஷன்
4) கருத்தடை என்றபெயரில் உடலை கெடுத்துகொள்ளுதல் (மாத்திரை, காப்பர் டி)
5) அழகு எனும் பெயரில் அனோரெக்சியா

இப்படி ஆண்கள் விரும்பும் வகையில் பெண்கள் வாழ்வதுக்கு பெயர் சுதந்திரமா அடிமைதனமா?

அல்லது நம் நாட்டில் உள்ளது போல்

1) ஒருவனுக்கு ஒருத்தி என ஆணை திருமணபந்தம் எனும் கட்டுக்குள் வைப்பது சுதந்திரமா?

எனக்கு எது சுதந்திரம், யாருக்கு சுதந்திரம் என புரியவில்லை

தேமொழி

unread,
Jan 29, 2014, 2:36:55 AM1/29/14
to vall...@googlegroups.com
///இவைதான் நம் நாட்டில் இருக்கும் ஓரளவு பாதுகாப்பையும் கொடுத்துகொன்டிருக்கிறது. இதுவும் இல்லாவிடில் நிலைமை கெட்டுகுட்டிசுவராகிவிடும்./////

///எனக்கு எது சுதந்திரம், யாருக்கு சுதந்திரம் என புரியவில்லை/////////

there you go  Selvan  :-))))

1) பாலியல் சுதந்திரம்
2) திருமணமற்ற வாழ்க்கை
3) அபார்ஷன்
4) கருத்தடை என்றபெயரில் உடலை கெடுத்துகொள்ளுதல் (மாத்திரை, காப்பர் டி)
5) அழகு எனும் பெயரில் அனோரெக்சியா

இதை எல்லாம் பெண்களும் விரும்பவில்லை என்று உங்களிடம் யார் சொன்னது?

இவைகளில் எவற்றை நம் நாட்டில் நடக்கவிடாமல் எந்த சட்டமோ கலாச்சாரமோ வந்து தடுத்து நிறுத்தியது?
எனக்குத் தெரிந்து முதல் நான்கும் சட்டப்படி நம் நாட்டில் ஒப்புக் கொண்டாகிவிட்டது.
கடைசி ஒன்றுக்கு விளம்பரங்களின் மூலம் என்ன நிலைமை என்றும் புரிகிறது.

///அல்லது நம் நாட்டில் உள்ளது போல்
1) ஒருவனுக்கு ஒருத்தி என ஆணை திருமணபந்தம் எனும் கட்டுக்குள் வைப்பது சுதந்திரமா?///

அட இதுகூடத்தான் நம் நாட்டில் இல்லை... இதற்காகவே மதம் மாறியும் நம் நாட்டில் திருமணங்கள் நடப்பதாகக் கேள்வி.... 
ஒருவனுக்குஒருத்தி இது உண்மையில்  சட்டப்படி நடைமுறையில் இருப்பது மேலை நாடுகளில்தான்..

நாம் ... பொதுமக்கள்.... என்ன செய்கிறோம் என்றால் எதையோ தவறாகச் சுதந்திரம் என்று நினைத்துக் கொண்டு அடிப்படை மனித உரிமைகளில் கை வைக்கிறோம்.

..... தேமொழி

Hari Krishnan

unread,
Jan 29, 2014, 2:42:43 AM1/29/14
to vallamai
2014-01-29 தேமொழி <them...@yahoo.com>
ஒருவனுக்குஒருத்தி இது உண்மையில்  சட்டப்படி நடைமுறையில் இருப்பது மேலை நாடுகளில்தான்..

http://en.wikipedia.org/wiki/Polygamy_in_North_America

நேஷனல் ஜியோக்ரஃபியில் பாலிகாமி ஸீரிஸ் வந்தது (மொழிபெயர்த்தேன்).  மார்மன் கிறித்தவ மதம்.

:)

--
அன்புடன்,
ஹரிகி.

நட்பும் சுற்றமும் நலமே என்பதை
மட்டும் கேட்க வாணி அருள்கவே.
God bless all of us.  May we hear from everyone in our life that they are good and prosperous. 

செல்வன்

unread,
Jan 29, 2014, 2:45:36 AM1/29/14
to vallamai
2014-01-29 தேமொழி <them...@yahoo.com>
இதை எல்லாம் பெண்களும் விரும்பவில்லை என்று உங்களிடம் யார் சொன்னது?

நீங்கதான். நீங்கதான் காரைக்கால் அம்மையார் அனோரெக்சிக்கா இருப்பதை எடுத்துபோட்டு வருத்தபட்டீர்கள். இந்த அம்மையாரை அவரது கணவர் இத்தனை கொடுமைபடுத்தலாமா என என்னிடம் நியாயம் கேட்டீர்கள். நானும் அதே மாதிரி அமெரிக்க பெண்கள் அனோரெக்சிக்கா இருப்பது நியாயமா என நீங்கள் என்னிடம் கேட்பீர்கள் என நினைத்தால் என்னை பலமாக குழப்புகிறீர்கள்.

அனோரெக்சியா நல்லதா கெட்டதா? எனக்கு புரியலை.

காப்பர்டீ போட்டு கடும் உடல் உபாதைக்குள்ளாவது, கருத்தடை, அபார்ஷனால் உடல்நலம் குன்றுவது இதெல்லாம் பிடித்தா செய்கிறார்கள்?

அட இதுகூடத்தான் நம் நாட்டில் இல்லை... இதற்காகவே மதம் மாறியும் நம் நாட்டில் திருமணங்கள் நடப்பதாகக் கேள்வி.... 

மதம் மாறிதானே நடக்கிறது? மதம் மாறுபவர்களை நான் ஏன் விமர்சிகணும்? :-)

தேமொழி

unread,
Jan 29, 2014, 2:57:42 AM1/29/14
to vall...@googlegroups.com

அதே பக்கத்தில் சட்டம் பற்றிய தகவலும் உள்ளதே  

http://en.wikipedia.org/wiki/Polygamy_in_the_United_States#Legality_of_polygamy_in_North_America

Legality of polygamy in North America[edit]

Bigamy is the act or condition of a person marrying another person while still being lawfully married to a second person and it is illegal in the United States. The crime is punishable either by a fine, imprisonment, or both, according to the law of the individual state and the circumstances of the offense.[4]

According to the Model Penal Code (section 230.1) bigamy is a misdemeanor, but having more than one spouse at the same time is a felony if it is done "in purported exercise of a plural marriage..." According to Joel Feinberg in Moral Limits of the Criminal Law, "Righteously flaunting one's illicit relationships, according to the Code, is apparently a morally aggravating circumstance, more punishable than its clandestine and deceptive counterpart."[5]

The Model Penal Code allows people to use an honest belief that they are only married to one person as a defense against a charge of bigamy. However, many US courts (e.g., Turner v. S., 212 Miss. 590, 55 So.2d 228) treat bigamy as a strict liability crime: in some jurisdictions a person can be convicted of a felony even if reasonably certain there was only one legal spouse. For example, if a person has the mistaken belief that their previous spouse is dead or that their divorce is final, they can still be convicted of bigamy if they marry a new person.[6]

செல்வன்

unread,
Jan 29, 2014, 2:57:43 AM1/29/14
to vallamai

2014-01-29 Hari Krishnan <hari.har...@gmail.com>

நேஷனல் ஜியோக்ரஃபியில் பாலிகாமி ஸீரிஸ் வந்தது (மொழிபெயர்த்தேன்).  மார்மன் கிறித்தவ மதம்.

:)

இது கல்யாணம் ஆகாமல் நடக்கும் பாலிகமி.

Inline image 1

இந்த பெண்கள் இப்படி இந்த ஆணுடன் விருப்பபட்டு தான் இருக்கிறார்கள். இதுதான் பெண்விடுதலை என்றும் ஆகிவிட்டது

இதான் பெண்விடுதலை என்பதை இதில் உள்ள ஹியுக் கெப்னர் ஒத்துக்குவார்.

நாம் அதை ஒத்துக்கணுமா? இதுதான் பெண்விடுதலையின் நோக்கமா? இந்தியபெண்களுக்கு இந்த மாதிரி நிலைதான் வரணுமா?

தேமொழி

unread,
Jan 29, 2014, 3:01:55 AM1/29/14
to vall...@googlegroups.com

////அமெரிக்க பெண்கள் அனோரெக்சிக்கா இருப்பது நியாயமா என நீங்கள் என்னிடம் கேட்பீர்கள் என நினைத்தால் என்னை பலமாக குழப்புகிறீர்கள்.////

புகை பிடிப்பது புற்று நோய்க்கு வழி வகுக்கும் என்று தெரிந்தும் புகைப்பவர்கள் மீது என்ன சட்டரீதியாக என்ன நடவடிக்கை எடுக்க முடிகிறது.
உன் வீட்டு வைத்துக் கொள் என்பதைத் தவிர 

செல்வன்

unread,
Jan 29, 2014, 3:03:46 AM1/29/14
to vallamai
2014-01-29 தேமொழி <them...@yahoo.com>
புகை பிடிப்பது புற்று நோய்க்கு வழி வகுக்கும் என்று தெரிந்தும் புகைப்பவர்கள் மீது என்ன சட்டரீதியாக என்ன நடவடிக்கை எடுக்க முடிகிறது.
உன் வீட்டு வைத்துக் கொள் என்பதைத் தவிர 

புகைபிடிப்பவர்கள் எண்ணிக்கை குறைவாக இருக்கும் நாடு ஆரோக்கியமான நாடு என்பதை ஏற்றுக்கொன்டால் போதும் :-)

Hari Krishnan

unread,
Jan 29, 2014, 3:10:38 AM1/29/14
to vallamai

On 29 January 2014 13:27, தேமொழி <them...@yahoo.com> wrote:
அதே பக்கத்தில் சட்டம் பற்றிய தகவலும் உள்ளதே  

இது Meet ThePolygamists The Priesthood Council எபிஸோடில் வரும் ஒரு வசனம்: 

INTV. ISAIAH: I think in the back of our mind we know that plural marriage is illegal and that, you know, society has a problem with it. But, we definitely don’t choose to live our lives in fear.

நேட்ஜியோ மிகுந்த ஆய்வுக்குப் பிறகு தொகுத்தது இது.  இந்த ஸீரிஸில் வந்தவர்கள் அனைவரும் உண்மையில் பாலிகாமியைப் பின்பற்றுபவர்கள்.

சட்டவிரோதம் என்று அறிந்தேதான் ஆண்கள் திருமணம் செய்து கொள்கிறார்கள்.  ‘அருள்’ வருவதால், தனக்கு இவன்தான் கணவன் என்று பெண்கள் தேர்ந்தெடுக்கிறார்கள்.  ஒருவனையே எவ்வளவுபேர் வேண்டுமானாலும்.

பலதாரத் தடைச் சட்டம் வெளிநாடுகளில் மட்டுந்தான் செயல்முறையில் இருக்கிறது என்பதை இது பொய்ப்பிக்கிறது.

Tthamizth Tthenee

unread,
Jan 29, 2014, 3:12:53 AM1/29/14
to vall...@googlegroups.com
​புகைப்பவர்கள் மீது என்ன சட்டரீதியாக என்ன நடவடிக்கை எடுக்க முடிகிறது.
உன் வீட்டு வைத்துக் கொள் என்பதைத் தவிர 

அதானே  !  புகையிலைப் பொருட்களைத் தயாரிக்க விற்க தடைச்சட்டம் எதுவும் கொண்டு வரவில்லையே

குடி குடியைக்  கெடுக்கும் என்று மதுபானக் குடுவைகளில் போட்டிருக்கிறார்களே

மதுவைத் தயாரிக்கக் கூடாது, விற்கக் கூடாது   என்று சட்டம் இயற்றவில்லையே

அரசுக்கு  லாபம் ஈட்டித் தரும் எந்தத் தொழிலானாலும்   அரசே ஊக்குவிக்கும்

அந்தந்த  துறைகளில் உள்ள  உறைகளின்  மேல்   எச்சரிக்க மட்டும் பதிப்பித்து

அதே போல்  ஒருவனுக்கு ஒருத்திதான் ,  பெண்ணுக்கு பெண்  பாலியிலில் ஈடுபடுவது தவறு

என்றெல்லாம்  அட்டைகள் பதிப்பித்துவிட்டு  அமோகமாக  எல்லாவற்றையும் விற்பனை செய்ய வேண்டியதுதான்

பணம் வந்தால் போதும்,  மழை வரவேண்டும் என்று யார் எதிர் பார்க்கிறார்கள்

அன்புடன்
தமிழ்த்தேனீ

2014-01-29 செல்வன் <hol...@gmail.com>

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.

தேமொழி

unread,
Jan 29, 2014, 3:31:11 AM1/29/14
to vall...@googlegroups.com

உண்மையில் இங்கு விவாதிப்பது ஒரு பெண் தான் நினைப்பதை, அச்ச மில்லாமல் சுதந்திரமாக நம் நாட்டில் முடிவெடுக்க முடிகிறதா?
அவளது வாழ்கை முறை இந்தியாவில் அப்படி அமைந்திருகிறதா என்பதை திரு. ஹரிகி, திரு. தமிழ்தேனி மற்றும் செல்வன்.
இந்த அடிப்படை நோக்கத்தை சிதைக்காது  அதற்கு ஆதாரம் தர வேண்டியதுஇதற்கு நாம் செய்ய வேண்டியது உலகப் பெண்களின் நிலையை ஒப்பிடும் ஆய்வறிக்கை ஒன்றில் இந்தியாவில் பெண்கள் நிலை எவ்வாறிக்ருகிறது என்பதை சுட்டிக் காட்ட வேண்டியது தேவையாகிறது.

இவ்வளவு பாதுகாப்பு கொடுக்கப்படுவதாகக் கூறப்படும் இந்தியாவின் பெண்ணின் நிலை என்ன?
இவ்வளவு கலாச்சார உச்சாணிக் கொம்பான இந்தியாவில் நிலைமை எப்படி இருக்கிறது?

தேவை நடுநிலையோடு இதைக் கூறும் ஓர் ஆய்வறிக்கை.

அதில் காட்டமுடியுமா இந்தியாவில் பெண்களின் நிலை நன்றாக இருக்கிறது என்று???

...... தேமொழி

Hari Krishnan

unread,
Jan 29, 2014, 3:38:36 AM1/29/14
to vallamai
2014-01-29 தேமொழி <them...@yahoo.com>
அவளது வாழ்கை முறை இந்தியாவில் அப்படி அமைந்திருகிறதா என்பதை திரு. ஹரிகி, திரு. தமிழ்தேனி மற்றும் செல்வன்.
இந்த அடிப்படை நோக்கத்தை சிதைக்காது  அதற்கு ஆதாரம் தர வேண்டியதுஇதற்கு நாம் செய்ய வேண்டியது உலகப் பெண்களின் நிலையை ஒப்பிடும் ஆய்வறிக்கை ஒன்றில் இந்தியாவில் பெண்கள் நிலை எவ்வாறிக்ருகிறது என்பதை சுட்டிக் காட்ட வேண்டியது தேவையாகிறது.

வெளிநாட்டில் பலதார மணம் இல்லை; அங்கே பாதுகாப்பு அதிகம் என்றொரு வாதம் வைக்கப்பட்டது.  அது அவ்வாறில்லை என்பதற்கு ஆதாரம் தந்ததுடன் என் வேலை முடிந்தது.

பலதார மணத்தை ஆண்கள் மட்டுமல்லாமல், பெண்களும் மனம் ஒப்பித்தான் செய்து கொள்கிறார்கள் என்பதே உண்மை.

மற்றபடி, இந்தோனேசிய மகாபாரதத்தில் பெண்ணுரிமையை நீங்கள் விவாதித்துக் கொள்ளலாம்.  நான் குறுக்கிட மாட்டேன். :)

தேமொழி

unread,
Jan 29, 2014, 3:43:17 AM1/29/14
to vall...@googlegroups.com

http://www.bbc.co.uk/news/world-24650912

Top countries

1. Iceland

2. Finland

3. Norway

4. Sweden

5. Philippines

6. Ireland

7. New Zealand

8. Denmark

9. Switzerland

10. Nicaragua

தர வரிசையில் இந்தியாவின் இடம் 101

தேமொழி

unread,
Jan 29, 2014, 3:44:51 AM1/29/14
to vall...@googlegroups.com

நன்றி...சட்டம் தடை கூறுவதையும் காட்டியாகிவிட்டது

செல்வன்

unread,
Jan 29, 2014, 11:08:37 AM1/29/14
to vallamai
2014-01-29 தேமொழி <them...@yahoo.com>
உண்மையில் இங்கு விவாதிப்பது ஒரு பெண் தான் நினைப்பதை, அச்ச மில்லாமல் சுதந்திரமாக நம் நாட்டில் முடிவெடுக்க முடிகிறதா?

எந்த நாட்டில் அப்படி முடிகிறது?

வருங்கால அமெரிக்க ஜனாதிபதி ஹிலரி க்ளீன்டன் 2008 தேர்தலில் பிரச்சாரம் செய்கையில் அவரது கணவர் பில் க்ளின்டன் தன் மிஸ்ட்ரஸுடன் இருந்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளன. ஒரு ஜனாதிபதி பதவி வேட்பாளருக்கு இதை கண்டும் காணாமல் பூசிமெழுகும் நிலை. இதை எந்த ஆய்வறிக்கை படம் பிடித்து காட்டபோகிறது?

நாடுகள் எதுவாக இருந்தாலும், சட்டங்கள் எதுவாக இருந்தாலும் ஆண்கள் தாம் நினைத்ததை சாதித்துகொன்டுதான் இருப்பார்கள். பலதாரமணத்துக்கு தடையா? சரி க்ளின்டன் மாதிரி கல்யாணம் செய்யாமல் வைப்பாட்டி வைத்துகொள்வார்கள். நீங்கள் பலதாரமணத்துக்கு அமெரிக்காவில் தடை, இந்தியாவில் அனுமதி...இந்தியா மோசம், அமெரிக்கா சூப்பர் என்பீர்கள்.

சட்டத்தால் ஆண்களை கட்டிவைக்க முடியாது. அதற்கு திருமணபந்தம், வலுவான சமூக அமைப்பு, கலாச்சாரம், ஆன்மிகம், பக்தி ஆகியவை தேவை. இதை எல்லாம் ஒழித்துவிட்டு சட்டத்தை புத்தகத்தில் எழுதிவைத்து பெண்களுக்கு பாதுகாப்பு கிடைத்துவிட்டது என்றால் என்ன பொருள்? 

தேமொழி

unread,
Jan 29, 2014, 2:55:33 PM1/29/14
to vall...@googlegroups.com

ஏற்கனவே உங்கள் 'இந்தோனேசிய மகாபாரதம்' இழையையை பெண்ணுரிமையை இழையாக (பார்க்க >>> https://groups.google.com/d/msg/vallamai/RJnLy4_3WVY/sW3QqfeD5vkJ) நீங்களே ஹைஜாக் செய்ததாகக் மறைமுகக் குற்றச்சாட்டு செல்வன்
.

On Wednesday, January 29, 2014 8:08:37 AM UTC-8, K Selvan wrote:

2014-01-29 தேமொழி <them...@yahoo.com>
உண்மையில் இங்கு விவாதிப்பது ஒரு பெண் தான் நினைப்பதை, அச்ச மில்லாமல் சுதந்திரமாக நம் நாட்டில் முடிவெடுக்க முடிகிறதா?

எந்த நாட்டில் அப்படி முடிகிறது?

உண்மையே, எங்கும் சிரமம் உண்டு, உங்கள் பாணியில் சொன்னால் எந்த நாட்டில் அதிகம் சுதந்திரமாக முடிவெடுக்க முடிகிறதோ அதை ஆரோக்கிய நாடாகக் கொள்ளலாம்., அப்படியானால் எந்த நாடுகளைக் கொள்ளலாம்?

வருங்கால அமெரிக்க ஜனாதிபதி ஹிலரி க்ளீன்டன் 2008 தேர்தலில் பிரச்சாரம் செய்கையில் அவரது கணவர் பில் க்ளின்டன் தன் மிஸ்ட்ரஸுடன் இருந்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளன. ஒரு ஜனாதிபதி பதவி வேட்பாளருக்கு இதை கண்டும் காணாமல் பூசிமெழுகும் நிலை. இதை எந்த ஆய்வறிக்கை படம் பிடித்து காட்டபோகிறது?

Elizabeth Edwards (http://en.wikipedia.org/wiki/Elizabeth_Edwards), Maria Shriver (http://en.wikipedia.org/wiki/Maria_Shriver), போன்றவர்கள், "ஏமாற்று வேலை செய்கிறாயா ஐயா, அதோ பாரு கதவு, அதைத் திறந்து அப்படியே வெளியே போயிடு" என்று சொன்ன பெண்களைப் பற்றியும் எந்த ஆய்வறிக்கை சொல்கிறது என்றும் தேடிப் பார்க்க வேண்டும். 

ஹில்லாரி சரியான உதாரணமா?  அந்தம்மா பிரசிடெண்ட் ஆக வேண்டும் என்ற ஆசையில் உள்ள காரியவாதி என்பதுதான் அனைவரும் அறிந்ததே.  பில்லை கொண்டு முடிந்தவரை மேலே ஏற அந்தம்மா காலம் முழுவதும் திட்டம் போடும் ஆள். மோனிக்கா விவகாரத்திற்குப் பிறகு மொத்து மொத்து என்று மனைவியிடம் வாங்கி, முகம் வீங்கிய அமெரிக்க பிரசிடென்ட் படங்கள் என்னக்கு நினைவிருக்கிறதே. 1998 போல எத்தனை கார்ட்டூன்கள். அவர் தனக்கு தேவையான வகையில் பில்லுக்கு தண்டனை வழங்கி தேவையான பொழுது ஆட்டுவித்டு காரியம் சாதிக்கும் ஆள்.

Hillary Clinton cold, calculating? (http://articles.latimes.com/2007/dec/11/nation/na-billclinton11)

நாடுகள் எதுவாக இருந்தாலும், சட்டங்கள் எதுவாக இருந்தாலும் ஆண்கள் தாம் நினைத்ததை சாதித்துகொன்டுதான் இருப்பார்கள். பலதாரமணத்துக்கு தடையா? சரி க்ளின்டன் மாதிரி கல்யாணம் செய்யாமல் வைப்பாட்டி வைத்துகொள்வார்கள். நீங்கள் பலதாரமணத்துக்கு அமெரிக்காவில் தடை, இந்தியாவில் அனுமதி...இந்தியா மோசம், அமெரிக்கா சூப்பர் என்பீர்கள்.

ஆமாம் சாதித்துக் கொண்டுதான் இருப்பார்கள், உலகெங்கும் சென்ற நூற்றாண்டு வரை இதுதான் வழக்கம் , ஆண்கள் சார்பாக நீங்களே உண்மையை ஒத்துக் கொண்டதில் எனக்கு பெரு மகிழ்ச்சி
 
சட்டத்தால் ஆண்களை கட்டிவைக்க முடியாது. அதற்கு திருமணபந்தம், வலுவான சமூக அமைப்பு, கலாச்சாரம், ஆன்மிகம், பக்தி ஆகியவை தேவை. இதை எல்லாம் ஒழித்துவிட்டு சட்டத்தை புத்தகத்தில் எழுதிவைத்து பெண்களுக்கு பாதுகாப்பு கிடைத்துவிட்டது என்றால் என்ன பொருள்? 

ஆண்களுக்கு சட்டம் போட மட்டும்தான் தெரியும் அதனை மதிக்க இன்னொருவரைத் தேடுவார்கள் என்பது பெரும்பாலான ஆண்களுக்குப் பொருந்தாது. 
பெண்களுக்கு வாக்குரிமை வேண்டும் என்று போராடி வாங்கித் தந்த ஆண்களில் ஒருவர் சொன்ன காரணம் என் அம்மா சொன்னர்கள், அதில் உள்ள உண்மை புரிந்து ஆதரித்தேன் என்றார்... ஒரு அமெரிக்க செனட்டர். அவரது அந்த ஒரு வாக்கு  கதையையே  மாற்றிவிட்டதாகவும் படித்தேன். தேடிப்பார்க்க வேண்டும் இந்தக் கதையின் முழு விவரத்தை.  பாரதியை போற்றாத பெண்ணை நான் பார்த்ததில்லை இதுவரை.
ஒரு சிலர் அப்படி உனக்கொரு சட்டம் எனக்கொரு சட்டம் என்று இருக்கிறார்கள்.  ஆனால் அடுத்து அடுத்து வரும் தலைமுறைகளில்  இவர்கள் எண்ணிக்கை மிகவும் குறைந்துவிடும் என்பது என் நம்பிக்கை. 
pioneers always struggle on the road less traveled.... but they pave the way for the next generation, i see a  light at the end of the tunnel ...

செல்வன்

unread,
Jan 29, 2014, 9:03:32 PM1/29/14
to vallamai
2014-01-29 தேமொழி <them...@yahoo.com>
ஏற்கனவே உங்கள் 'இந்தோனேசிய மகாபாரதம்' இழையையை பெண்ணுரிமையை இழையாக (பார்க்க >>> https://groups.google.com/d/msg/vallamai/RJnLy4_3WVY/sW3QqfeD5vkJ) நீங்களே ஹைஜாக் செய்ததாகக் மறைமுகக் குற்றச்சாட்டு செல்வன்.

நான் எப்பவும் இழையை கண்கொத்தி பாம்பாக கவனித்து இதை மட்டும் பேசு, அதை பேசாதே என ஹெட்மாஸ்டர் மாதிரி கண்டிப்புடன் வளையவருவது கிடையாது தேமொழி. 

உண்மையே, எங்கும் சிரமம் உண்டு, உங்கள் பாணியில் சொன்னால் எந்த நாட்டில் அதிகம் சுதந்திரமாக முடிவெடுக்க முடிகிறதோ அதை ஆரோக்கிய நாடாகக் கொள்ளலாம்., அப்படியானால் எந்த நாடுகளைக் கொள்ளலாம்?

அது எப்படி சுதந்திரம் அதிகமா இருந்தால் அது ஆரோக்கியம் என சொல்லமுடியும்?

அனோரெக்சிக்கா இருப்பதா வேண்டாமா என முடிவெடுப்பது சுதந்திரமா, சீர்கேடா?

டீனேஜ் கர்ப்பம் அடைவதா வேண்டாமா என முடிவெடுப்பது சுதந்திரமா சீர்கேடா?

வைப்பாட்டி வைத்துகொள்ளும் கணவனை கண்டுக்காமல் இருந்து ஓட்டுவாங்கி ஜெயிக்கலாமா வேண்டாமா என முடிவெடுப்பது சுதந்திரமா சீர்கேடா?

சீரழிவதா வேண்டாமா என முடிவெடுப்பது தான் சுதந்திரம் என்றால் அது ஆரோக்கியம் அல்ல.

ஆமாம் சாதித்துக் கொண்டுதான் இருப்பார்கள், உலகெங்கும் சென்ற நூற்றாண்டு வரை இதுதான் வழக்கம் , ஆண்கள் சார்பாக நீங்களே உண்மையை ஒத்துக் கொண்டதில் எனக்கு பெரு மகிழ்ச்சி 

இந்த நூற்ராண்டிலும் இதுதான் வழக்கம். "பல ஆண்களுடன் உறவுவைத்துகொள்ளும் உரிமை வேண்டும், கல்யானம் வேண்டாம்" என பெண்களையே விட்டு போராட வைத்தது தான் ஆண் சமூகத்தின் மிகப்பெரும் வெற்றி.  

உலகெங்கும் ஆணின் ஆதிக்கம் ஓங்கும் சமூகங்களில் பலதாரமணம், பிராம்ஸ்கியுட்டி தான் செழிக்கும். உலகெங்கும் பெண்ணின் ஆதிக்கம் ஓங்கும் சமூகத்தில் ஒருவனுக்கு ஒருத்தி விதியே பின்பற்றபடும். 

கல்யானம் வேண்டாம், நோ கான்சிக்வன்ஸ் செக்ஸ், அபார்ஷன், பிராமிஸ்கியுட்டி...ஆண்களுக்கு இதை விட கனவு உலகம் வேறு எதுவும் இல்லை. அமெரிக்காவில் ஆண்கள் மிகப்பெரும் வெற்றியை அடைந்தார்கள்

-- 

தேமொழி

unread,
Jan 29, 2014, 10:11:28 PM1/29/14
to vall...@googlegroups.com

செல்வன், 

எனக்கு என் மேலும், என் முடிவெடுக்கும் திறனின்   மேலும்  நம்பிக்கையிருக்கிறது ....
என் சூழ்நிலைக்கு ஏற்ப முடிவெடுக்க எனக்குத் தெரியும் ....
என் வாழ்வில் எனக்கு என்ன நடக்கிறது என்பதைப் பற்றி அறியாத மற்றொருவர் இப்படி  இப்படி செய் என்று அறிவுரை என்ற பெயரில் என்னைக் கட்டுப்படுத்தத் தேவையில்லை ....
என்று தன்னம்பிக்கையுடன் சொல்லித்  தனது வாழ்க்கையை நடத்துபவர்கள்

அடுத்தவர்களின் சம உரிமையையும்  அதே போல மதித்து அவர்களுக்கும் முடிவெடுக்கும் உரிமையைத் தருபவர்கள் சமுதாயச் சீரழிவுக்கு காரணமானவர்கள்
முக்கியமாக அவர்கள் நேர்வழியில்  நடக்க விரும்பாதவர்கள், அவர்களிடம் நல்ல குணம் இல்லை என்று உங்களுக்கு யார் சொன்னது?

உங்களுக்கு எப்படி நம் கொள்கைகளுக்குள்  உள்ள வேற்பாட்டை (difference in ideals between liberals and conservatives) 
விளக்குவது என்று ஒரு படம் தேடினேன்.... கிடைத்தது.

இதில் பார்க்கும் பொழுதே நாம் இருவரும் அவரவர் கொள்கைப்படி பேசிக் கொண்டிருக்கிறோம் என்பது விளங்கும்.

பொதுவாக  ....சுருக்கமாக ...
லிபரல்கள் மற்றவரைக் கட்டுப்படுத்த விரும்புவதில்லை, தனிமனித சுதந்திரத்தை மதிப்பவர்கள்
கன்செர்வேடிவ்கள் அதற்கு மறு கோணம்.
லிபெரல்கள் கன்செர்வடிவ்களை தனது கொள்கைக்கு உடன் படவில்லை என்றால் அது அவரது கருத்து என்பதுடன் நிறுத்திக் கொள்வார்கள்

ஆனால் கன்செர்வேடிவ்கள் தங்கள் கொள்கைக்கு எதிரானவர்களை சமுதாயக் சீர்கேட்டிற்கு வழி செய்பவர்கள் என்று அடுத்தவர்கள் முன் அவர்களை நேர்மையற்றவர்கள், குணம் குறைந்தவர்கள் என்பது போல உருவகப் படுத்தி, மற்றவர்களை அச்சுறுத்தி அவர்களை விலக்கி வைக்க முயல்வார்கள்.

படத்தைப் பாருங்கள்...உங்களுக்கேப் புரியும்..
பெண்களுக்கு சமஉரிமை
அனைத்து மனிதர்களும் சமம் 
அறிவியல் நமக்கு உதவி செய்யவே என்ற கண்ணோட்டம் 
இதில் எதிலும் எந்தத் தவறுமில்லை

 இக்கருத்துகளை ஆதரிப்பவர்களின் நோக்கம் சமூகச் சீர்கேடுமில்லை, அவர்கள் குணங்கெட்டவர்களும் இல்லை....
ஆண்களுக்கே ஆண்கள் ஏன் மீது நம்பிக்கை இல்லை???? புரியவில்லை!!!
கொள்கைகள் படி நான் நீலம், நீங்கள் சிவப்பு அவ்வளவே 

அன்புடன்

..... தேமொழி

செல்வன்

unread,
Jan 29, 2014, 11:01:35 PM1/29/14
to vallamai
2014-01-29 தேமொழி <them...@yahoo.com>
எனக்கு என் மேலும், என் முடிவெடுக்கும் திறனின்   மேலும்  நம்பிக்கையிருக்கிறது ....
என் சூழ்நிலைக்கு ஏற்ப முடிவெடுக்க எனக்குத் தெரியும் ....
என் வாழ்வில் எனக்கு என்ன நடக்கிறது என்பதைப் பற்றி அறியாத மற்றொருவர் இப்படி  இப்படி செய் என்று அறிவுரை என்ற பெயரில் என்னைக் கட்டுப்படுத்தத் தேவையில்லை ....
என்று தன்னம்பிக்கையுடன் சொல்லித்  தனது வாழ்க்கையை நடத்துபவர்கள்

கரெக்டு. நீங்கள் நன்கு சிந்தித்து முடிவெடுப்பவர். உங்களுக்கு நான் அட்வைஸ் செய்யும் பேச்சே கிடையாது. நானும் யாருக்கும் அட்வைஸ் செய்ய முனையவில்லை

பொதுவாக  ....சுருக்கமாக ...
லிபரல்கள் மற்றவரைக் கட்டுப்படுத்த விரும்புவதில்லை, தனிமனித சுதந்திரத்தை மதிப்பவர்கள்
கன்செர்வேடிவ்கள் அதற்கு மறு கோணம்.
லிபெரல்கள் கன்செர்வடிவ்களை தனது கொள்கைக்கு உடன் படவில்லை என்றால் அது அவரது கருத்து என்பதுடன் நிறுத்திக் கொள்வார்கள்

அடேங்கப்பா :-)அப்படியா? அப்ப இதெல்லாம் அட்வைஸ் இல்லாம என்ன?

Inline image 1

Inline image 2

Inline image 3

ஒழுக்கமா இரு என்றால் பிரச்சாரம், கன்சர்வேடிவ்கள் மோசம்.

இது எல்லாம் என்ன? ஒழுக்கம்கெட்டதனத்தை அற்புதமான வாழ்க்கைமுறையாக பெண்களுக்கு போதித்துவிட்டு ஒழுக்கமா இருக்க சொல்வதை "கன்சர்வேடிவ்கள் பிரச்சாரம் செய்கிரார்கள், அட்வைஸ் செய்கிறார்கள்" என்பது என்ன கணக்கு?

செல்வன்

unread,
Jan 29, 2014, 11:07:21 PM1/29/14
to vallamai
Inline image 2

இது அட்வைஸ் கிடையாதா? இது மாதிரி மெஸேஜ்கள் தான் முற்போக்கு என்ற பெயரில் பெண்களுக்கு கற்பிக்கப்டவேண்டுமா?
1.jpg

தேமொழி

unread,
Jan 29, 2014, 11:16:04 PM1/29/14
to vall...@googlegroups.com

On Wednesday, January 29, 2014 8:01:35 PM UTC-8, K Selvan wrote:

பொதுவாக  ....சுருக்கமாக ...
லிபரல்கள் மற்றவரைக் கட்டுப்படுத்த விரும்புவதில்லை, தனிமனித சுதந்திரத்தை மதிப்பவர்கள்
கன்செர்வேடிவ்கள் அதற்கு மறு கோணம்.
லிபெரல்கள் கன்செர்வடிவ்களை தனது கொள்கைக்கு உடன் படவில்லை என்றால் அது அவரது கருத்து என்பதுடன் நிறுத்திக் கொள்வார்கள்

அடேங்கப்பா :-)அப்படியா? அப்ப இதெல்லாம் அட்வைஸ் இல்லாம என்ன?

அறிவுரை??? இல்லையே!!!
அந்தப் படத்தில் இருப்பதை சுருக்கிச் சொல்வதாக நினைத்தேன்...
அதனால்தான் பொதுவாக, சுருக்கமாக என்று சொல்லி பிறகு தொகுத்தேன்....

Inline image 3

ஒழுக்கமா இரு என்றால் பிரச்சாரம், கன்சர்வேடிவ்கள் மோசம்.
இது எல்லாம் என்ன? ஒழுக்கம்கெட்டதனத்தை அற்புதமான வாழ்க்கைமுறையாக பெண்களுக்கு போதித்துவிட்டு ஒழுக்கமா இருக்க சொல்வதை "கன்சர்வேடிவ்கள் பிரச்சாரம் செய்கிரார்கள், அட்வைஸ் செய்கிறார்கள்" என்பது என்ன கணக்கு?

இப்படி நான் சொன்னேனா?  இல்லையே
உலகில் பெரும்பாலோர் ஒழுக்கமானர்கள்தான்  என்று சொன்னது  எப்படி இப்படி மாறியது?

..... தேமொழி

செல்வன்

unread,
Jan 29, 2014, 11:19:03 PM1/29/14
to vallamai
2014-01-29 தேமொழி <them...@yahoo.com>
இப்படி நான் சொன்னேனா?  இல்லையே
உலகில் பெரும்பாலோர் ஒழுக்கமானர்கள்தான்  என்று சொன்னது  எப்படி இப்படி மாறியது?

நீங்கள் சொல்லவில்லை. சொன்னதாக நானும் சொல்லவில்லை.

ஆனால் அப்படி கல்யாணமே எதிரி, குடும்பம் எதிரி என்பது மாதிரி அறிவுரைகளை கொடுப்பது லிபரலிசம். அதை பற்றிதான் எழுதினேன்.

தேமொழி

unread,
Jan 29, 2014, 11:22:21 PM1/29/14
to vall...@googlegroups.com

On Wednesday, January 29, 2014 8:07:21 PM UTC-8, K Selvan wrote:

இது அட்வைஸ் கிடையாதா? இது மாதிரி மெஸேஜ்கள் தான் முற்போக்கு என்ற பெயரில் பெண்களுக்கு கற்பிக்கப்டவேண்டுமா?

யாரும் எப்படியும் பேசட்டும் என்பது, கருத்து சுதந்திரம் என்பதே bill of rights இல் முதலில் வருவது
துப்பாக்கி வைத்துக் கொள்ள bill of rights ஐ சுட்டிக் காட்டுபவர்களுக்கு மனிதர்கள் தங்கள் கருத்த்களைச் சொல்லவும் உரிமை இருக்கிறது என்று சுட்டிக் காட்டவும் வேண்டுமா?
அந்தப் படம் குறித்த fear diversity, promote fear என்பதை நடைமுறைப் படுத்துகிறீர்களோ????

..... தேமொழி

செல்வன்

unread,
Jan 30, 2014, 12:29:51 AM1/30/14
to vallamai
2014-01-29 தேமொழி <them...@yahoo.com>
யாரும் எப்படியும் பேசட்டும் என்பது, கருத்து சுதந்திரம் என்பதே bill of rights இல் முதலில் வருவது

இப்படி சொல்லி இங்கே எஸ்கேப் ஆகும் நீங்கள் 

எனக்கும் கருத்து சுதந்திரம் உண்டு, நானும் எப்படியும் பேசலாம் என சொல்லாமல்

அந்தப் படம் குறித்த fear diversity, promote fear என்பதை நடைமுறைப் படுத்துகிறீர்களோ????

என சொல்கிறீர்கள் :-)

லிபரல்கள் பெருமையாக போஸ்டர் அடித்து ஒட்டியிருக்கும் கருத்தை தான் நான் சொன்னேன்.

அவர்கள் சொல்வதை, கோட் செய்வது புரமோஷன் ஆஃப் ஃபியரா?

ஒழுக்கம்கெட்டதனத்தை ஒழுக்கமாக கற்பிப்பது பேச்சுசுதந்திரம், யாரும் எதையும் பேசலாம்!!!!

இப்படி பேசுகிரார்கள் என சொல்வது ப்ரமோஷன் ஆஃப் பியர்

நல்ல நியாயம் :-) வாழ்க லிபரலிசம் :-)

தேமொழி

unread,
Jan 30, 2014, 12:50:02 AM1/30/14
to vall...@googlegroups.com

On Wednesday, January 29, 2014 9:29:51 PM UTC-8, K Selvan wrote:

2014-01-29 தேமொழி <them...@yahoo.com>
யாரும் எப்படியும் பேசட்டும் என்பது, கருத்து சுதந்திரம் என்பதே bill of rights இல் முதலில் வருவது

இப்படி சொல்லி இங்கே எஸ்கேப் ஆகும் நீங்கள் 

இல்லையே செல்வன், இன்னமும் இங்கேதான் இருகிறேன்.  உங்கள் கருத்துகளுக்கு என் கோணத்தில் நோக்கி மறுமொழி கொடுத்துக் கொண்டு.
அது எஸ்கேப் என்று தோன்றினாலும் பாதகமில்லை, ஏனெனில் அது உங்கள் கருத்து.   
 
எனக்கும் கருத்து சுதந்திரம் உண்டு, நானும் எப்படியும் பேசலாம் என சொல்லாமல்

அந்தப் படம் குறித்த fear diversity, promote fear என்பதை நடைமுறைப் படுத்துகிறீர்களோ????

என சொல்கிறீர்கள் :-)

ஆம், சந்தகம் வந்தது கேட்டேன், அது என் கருத்தில்லையா? 

லிபரல்கள் பெருமையாக போஸ்டர் அடித்து ஒட்டியிருக்கும் கருத்தை தான் நான் சொன்னேன்.

அவர்கள் சொல்வதை, கோட் செய்வது புரமோஷன் ஆஃப் ஃபியரா?

ஒழுக்கம்கெட்டதனத்தை ஒழுக்கமாக கற்பிப்பது பேச்சுசுதந்திரம், யாரும் எதையும் பேசலாம்!!!!

இப்படி பேசுகிரார்கள் என சொல்வது ப்ரமோஷன் ஆஃப் பியர்

நல்ல நியாயம் :-) வாழ்க லிபரலிசம் :-)

ஆமாம் லிபரலிசம் வாழ்கதான், வாழ்த்திற்கு லிபரல்கள் சார்பில் நன்றி.  ஒழுக்கம் கேட்டபேச்சு என் கோணத்தில் ப்லீப் ப்லீப் செயப்படும் பேச்சு.  அதுபோல தணிக்கை தேவையில்லாது பேசுவதில் தவறென்ன? 
 
.....தேமொழி

செல்வன்

unread,
Jan 30, 2014, 1:55:04 AM1/30/14
to vallamai
2014-01-29 தேமொழி <them...@yahoo.com>
இல்லையே செல்வன், இன்னமும் இங்கேதான் இருகிறேன்.  உங்கள் கருத்துகளுக்கு என் கோணத்தில் நோக்கி மறுமொழி கொடுத்துக் கொண்டு.
அது எஸ்கேப் என்று தோன்றினாலும் பாதகமில்லை, ஏனெனில் அது உங்கள் கருத்து.   

எஸ்கேப் என சொன்னது அங்கே இருந்து போனதாக குறிப்பது அல்ல.

அவர்கள் சொன்ன கருத்து சரியா, தவறா என எதுவுமே சொல்லாமல் அதை கோடு மட்டும் செய்ததை  பியர் மாங்கரிங் என்றதால் எஸ்கேப் என்றேன்.

அந்த கருத்துக்கள் சரியானவை, பெண்களுக்கு நல்வழி காட்டகூடியவை என நீங்கள் கருதுகிறீர்களா?

அம்மாதிரி கருத்துக்களை பெண்கள் பின்பற்றவேண்டுமா?

அது அவர்கள் விருப்பம், நான் யார் என எல்லாம் சொல்லி மறுபடி எஸ்கேப் ஆக கூடாது. அது சரியான அறிவுரை, தவறான அறிவுரை இரண்டில் ஏதோ ஒரு ஆப்ஷனை தான் சொல்லவேண்டும்

தேமொழி

unread,
Jan 30, 2014, 2:23:30 AM1/30/14
to vall...@googlegroups.com
:-)))

சொல்வது உங்களுக்குப் பிடிக்காவிடாலும்....
defend "tradition" என்ற அடிப்படையில் இப்பொழுது நீங்கள் கூறுவது இருக்கிறது.

ஆனால் என்னைப் பொறுத்தவரை அந்தப் பெண்கள் வாழ்க்கையில் எதிர் கொண்டதைக் கொண்டு, அந்தக் கருத்தைக் கொண்டிருக்கிறார்கள்.

மற்ற அனைவருக்கும்  பிடிக்காவிட்டாலும், பாரதியார் கனகலிங்கத்திற்கு பூணூல்  போட்டுவிட்ட பொழுது அவர் பார்வையில் அது சரியாகத் தானே இருந்தது?

அந்த கருத்து சரியானது  மக்களுக்கு நல்வழி காட்டவேண்டிய ஒன்று  என அன்று கருதப் பட்டிருக்குமா ?

அதுவும்  கலாச் சார சீரழிவு என்றுதானே கருதப்பட்டிருக்கும். 

why should we need to be judgmental on someone else statement Selvan ?
 
“Judge not, that you be not judged - Matthew 7:1 

என்பது விவிலியத்தின் போதனை.

..... தேமொழி 

வேந்தன் அரசு

unread,
Jan 30, 2014, 7:01:00 AM1/30/14
to vallamai

29 ஜனவரி, 2014 11:01 பிற்பகல் அன்று, செல்வன் <hol...@gmail.com> எழுதியது:

2014-01-29 தேமொழி <them...@yahoo.com>
எனக்கு என் மேலும், என் முடிவெடுக்கும் திறனின்   மேலும்  நம்பிக்கையிருக்கிறது ....
என் சூழ்நிலைக்கு ஏற்ப முடிவெடுக்க எனக்குத் தெரியும் ....
என் வாழ்வில் எனக்கு என்ன நடக்கிறது என்பதைப் பற்றி அறியாத மற்றொருவர் இப்படி  இப்படி செய் என்று அறிவுரை என்ற பெயரில் என்னைக் கட்டுப்படுத்தத் தேவையில்லை ....
என்று தன்னம்பிக்கையுடன் சொல்லித்  தனது வாழ்க்கையை நடத்துபவர்கள்

கரெக்டு. நீங்கள் நன்கு சிந்தித்து முடிவெடுப்பவர். உங்களுக்கு நான் அட்வைஸ் செய்யும் பேச்சே கிடையாது. நானும் யாருக்கும் அட்வைஸ் செய்ய முனையவில்லை

பொதுவாக  ....சுருக்கமாக ...
லிபரல்கள் மற்றவரைக் கட்டுப்படுத்த விரும்புவதில்லை, தனிமனித சுதந்திரத்தை மதிப்பவர்கள்
கன்செர்வேடிவ்கள் அதற்கு மறு கோணம்.
லிபெரல்கள் கன்செர்வடிவ்களை தனது கொள்கைக்கு உடன் படவில்லை என்றால் அது அவரது கருத்து என்பதுடன் நிறுத்திக் கொள்வார்கள்

அடேங்கப்பா :-)அப்படியா? அப்ப இதெல்லாம் அட்வைஸ் இல்லாம என்ன?

Inline image 1

Inline image 2

Inline image 3

ஒழுக்கமா இரு என்றால் பிரச்சாரம், கன்சர்வேடிவ்கள் மோசம்.

இது எல்லாம் என்ன? ஒழுக்கம்கெட்டதனத்தை அற்புதமான வாழ்க்கைமுறையாக பெண்களுக்கு போதித்துவிட்டு ஒழுக்கமா இருக்க சொல்வதை "கன்சர்வேடிவ்கள் பிரச்சாரம் செய்கிரார்கள், அட்வைஸ் செய்கிறார்கள்" என்பது என்ன கணக்கு?

கண்ணாலத்துக்கு முன் கலவிகொள்வது ஒழுக்க கேடா? யார் குடியை இவங்க கெடுத்தாங்க? 

--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

செல்வன்

unread,
Jan 30, 2014, 8:46:37 AM1/30/14
to vallamai

2014-01-30 தேமொழி <them...@yahoo.com>:

why should we need to be judgmental on someone else statement Selvan ?
 
“Judge not, that you be not judged - Matthew 7:1 

என்பது விவிலியத்தின் போதனை.

இந்த பரந்த மனபான்மையை கன்சர்வேடிவ்களுக்கும், எனக்கும் நீங்கள் காட்டுவதே கிடையாது :-)

லிபரல்கள் பெண்களுக்கு கொடுக்கும் தவறான, முட்டாள்தனமான அறிவுரைகளை கோட் செய்வதே "பியர் மாங்கரிங்" என என்னிடம் சொல்லிவிட்டு அவர்கள் சொல்வதைப்பற்றி ஜட்ஜ் செய்ய நான் யார் என எஸ்கேப் ஆகிறீர்கள்.

ஒன்று யார் சொல்வதையும் ஜட்ஜ் செய்ய மாட்டேன் என நீங்கள் நடுநிலை வகிக்கலாம்

அல்லது லிபரல்கள் சொல்வது பெண்கள் பின்பற்ற வேண்டிய அறிவுரை. பெண்களுக்கு ஏற்ற அறிவுரை. அதை கண்டிக்க உனக்கு எந்த உரிமையும் இல்லை என என்னிடம் கூறலாம்.

அல்லது லிபரல்கள் சொல்வது சரியான கோமாளித்தனம், படுமோசமான அறிவுரை என நீங்கள் அவர்களை கண்டிக்கலாம்

இந்த மூன்று நிலையில் எந்த நிலையை எடுத்தாலும் அது புரிந்துகொள்ளகூடியது

ஆனால்

லிபரல்கள் சொல்லும் கருத்தை பற்றி கருத்தே சொல்லாமல் அதை கோட் செய்வதையே பியர் மாங்கரின் என கருத்து சொல்லுவதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.

அதனால் மறுபடி ஒரு வாய்ப்பு எடுத்துகொண்டு மேலே சொன்ன மூன்றூ நிலைகளில் ஏதோ ஒரு நிலையை எடுங்கள் :-)

ரெடி ஸ்டார்ட்:-)
 
செல்வன்

unread,
Jan 30, 2014, 9:07:25 AM1/30/14
to vallamai

2014-01-30 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:

கண்ணாலத்துக்கு முன் கலவிகொள்வது ஒழுக்க கேடா? யார் குடியை இவங்க கெடுத்தாங்க? 

அங்கே அப்படியா சொல்லி இருக்கு?

கல்யாணத்துக்கு முன் உறவுவைத்துகொள்பவர் தான் சுதந்திர பெண் என சொல்லி இருக்கு

அப்ப கல்யாணத்துக்கு முந்தி உறவு வைத்துகொள்ளாதவர்கள் அடிமைபெண்களா?

தேமொழி

unread,
Jan 30, 2014, 11:12:32 AM1/30/14
to vall...@googlegroups.com

On Thursday, January 30, 2014 5:46:37 AM UTC-8, K Selvan wrote:

இந்த பரந்த மனபான்மையை கன்சர்வேடிவ்களுக்கும், எனக்கும் நீங்கள் காட்டுவதே கிடையாது :-)

??????? !!!!!!!!!!!!!!
 
லிபரல்கள் பெண்களுக்கு கொடுக்கும் தவறான, முட்டாள்தனமான அறிவுரைகளை கோட் செய்வதே "பியர் மாங்கரிங்" என என்னிடம் சொல்லிவிட்டு அவர்கள் சொல்வதைப்பற்றி ஜட்ஜ் செய்ய நான் யார் என எஸ்கேப் ஆகிறீர்கள்.

ஒன்று யார் சொல்வதையும் ஜட்ஜ் செய்ய மாட்டேன் என நீங்கள் நடுநிலை வகிக்கலாம்

அல்லது லிபரல்கள் சொல்வது பெண்கள் பின்பற்ற வேண்டிய அறிவுரை. பெண்களுக்கு ஏற்ற அறிவுரை. அதை கண்டிக்க உனக்கு எந்த உரிமையும் இல்லை என என்னிடம் கூறலாம்.

அல்லது லிபரல்கள் சொல்வது சரியான கோமாளித்தனம், படுமோசமான அறிவுரை என நீங்கள் அவர்களை கண்டிக்கலாம்

இந்த மூன்று நிலையில் எந்த நிலையை எடுத்தாலும் அது புரிந்துகொள்ளகூடியது

ஆனால்

லிபரல்கள் சொல்லும் கருத்தை பற்றி கருத்தே சொல்லாமல் அதை கோட் செய்வதையே பியர் மாங்கரின் என கருத்து சொல்லுவதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.

இதைதான் நான் முன்பே சொல்லியிருக்கிறேனே உங்களிடம்!!!!
///நீங்களும்தான் பெண்கள் மறுமணம் செய்து கொண்டால் அவர்கள் பிள்ளைகள் பாழாய்ப் போவார்கள், இல்லை பிள்ளையைப் பிரிந்து வாழ நேரிடும் என்று பெண்களைப் பயமுறுத்திப் பார்க்கிறீர்கள். ///

நான் தப்பப் பார்க்கிறேன் என்று,  நான் சொல்வதைப் பற்றி
நீங்கள் கருத்து தெரிவிப்பது போலவே...
நீங்கள் அச்சுறுத்தப் பார்க்கிறீர்கள் என்று நான் சொல்வது மட்டும் எப்படி 'ஜட்ஜ்மென்ட்' என்று மாறிவிடும்?
opinion Vs. opinion இல்லையா?
good or bad என்று சொல்லும் value added statements தான் judgmental.
What you say sounds like this என்னும் statement  is an opinion.

 லிபரல்கள் பெண்களுக்கு கொடுக்கும் தவறான, முட்டாள்தனமான அறிவுரைகளை <<< தவறான, முட்டாள்தனமான என்று நீங்கள் சொல்லும் பொழுது அது judgement ஆக மாறவில்லையா?
"லிபரல்கள் பெண்களுக்கு கொடுக்கும் தவறான, முட்டாள்தனமான அறிவுரைகளை"  என்பதற்கும் "லிபரல்கள் பெண்களுக்கு கொடுக்கும் அறிவுரைகளை" என்று சொல்வதற்கும் வேறுபாடு உள்ளது.

////அல்லது லிபரல்கள் சொல்வது பெண்கள் பின்பற்ற வேண்டிய அறிவுரை. பெண்களுக்கு ஏற்ற அறிவுரை. அதை கண்டிக்க உனக்கு எந்த உரிமையும் இல்லை என என்னிடம் கூறலாம்.
அல்லது லிபரல்கள் சொல்வது சரியான கோமாளித்தனம், படுமோசமான அறிவுரை என நீங்கள் அவர்களை கண்டிக்கலாம்////

செய்யலாம், நானும் செய்ததுண்டு... உங்களிடமே ...
பெண்ணியத்தின் அடிபடையில், நீங்கள் இவ்வாறு சொல்வதில் எனக்கு உடன்பாடில்லை, அவர்களைத் தாழ்த்திப் பேசுவது போல இருக்கிறது என் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் சொல்லியிருக்கிறேன். .

அதனால் மறுபடி ஒரு வாய்ப்பு எடுத்துகொண்டு மேலே சொன்ன மூன்றூ நிலைகளில் ஏதோ ஒரு நிலையை எடுங்கள் :-)

ரெடி ஸ்டார்ட்:-)

but my question is ...simply... why should i?

////ஆமாம் சாதித்துக் கொண்டுதான் இருப்பார்கள், உலகெங்கும் சென்ற நூற்றாண்டு வரை இதுதான் வழக்கம் , ஆண்கள் சார்பாக நீங்களே உண்மையை ஒத்துக் கொண்டதில் எனக்கு பெரு மகிழ்ச்சி 

இந்த நூற்ராண்டிலும் இதுதான் வழக்கம். "பல ஆண்களுடன் உறவுவைத்துகொள்ளும் உரிமை வேண்டும், கல்யானம் வேண்டாம்" என பெண்களையே விட்டு போராட வைத்தது தான் ஆண் சமூகத்தின் மிகப்பெரும் வெற்றி.  

உலகெங்கும் ஆணின் ஆதிக்கம் ஓங்கும்////

இதையேதான் நீங்களும் செய்கிறீர்கள் என்று என்பது உங்களுக்குப் புரியவில்லையா செல்வன்?
ஒரு ஆண், ஒரு பெண் என்ன செய்ய வேண்டும் எப்படி நடக்க வேண்டும் என்று நினைப்பதை பெண் ஒருத்தியை விட்டே  பரப்பச் செய்யத்தானே நினைக்கிறீர்கள்? 
பெண்களை நீங்களே சிந்தித்து எது சரி எது தவறு என முடிவெடுங்கள் என்று சொல்வதும், நான் என்ன சொல்லவேண்டும் சொல்லகூடாது என்று முடிவெடுப்பதும் என் வழக்கம். 

..... தேமொழி

பி.கு: அது சரி!!!!!   நீங்கள் தூங்கப் போகிறீர்களா இல்லையா?!
?!?!?!?!

செல்வன்

unread,
Jan 30, 2014, 11:42:15 AM1/30/14
to vallamai
2014-01-30 தேமொழி <them...@yahoo.com>:
நான் தப்பப் பார்க்கிறேன் என்று,  நான் சொல்வதைப் பற்றி நீங்கள் கருத்து தெரிவிப்பது போலவே...

நீங்கள் அச்சுறுத்தப் பார்க்கிறீர்கள் என்று நான் சொல்வது மட்டும் எப்படி 'ஜட்ஜ்மென்ட்' என்று மாறிவிடும்?
opinion Vs. opinion இல்லையா?
good or bad என்று சொல்லும் value added statements தான் judgmental.
What you say sounds like this என்னும் statement  is an opinion.

நீங்கள் கருத்து சொல்லாமல் மூணு, நாலு மடல்களாக தப்பிகொன்டிருப்பதால் தான் எஸ்கேப் என்றேன் :-) நீங்கள் கருத்து சொல்லமாட்டேன் என சொல்லிகொண்டிருப்பது உண்மைதானே? உண்மை (fact) எப்படி ஒப்பினியன் ஆகும்?

நான் செய்தது எல்லாம் லிப்ரலகள் சொன்னதை எடுத்து போட்டதுதான். அவர்கள் சொல்வதை "இப்படி சொல்கிறார்கள்" என சொல்லுவதே அச்சுறுத்தல் ஆகிவிடுமா? அப்படி அவர்கள் சொல்லவே கூசும் அளவு ஒரு விஷயத்தை சொல்லியிருப்பதாக நீங்கள் கருதினால் அதை சொல்லுவது தானே முறை?

சரி போனது போகட்டும்  "கல்யாணத்துக்குகு முன் செக்ஸ் வைத்துகொள்பவர்கள் தான் சுதந்திரமான பெண்கள்" என்ற முத்தான ஸ்டேட்மெண்ட்டை பற்றிய உங்கள் கருத்து அல்லது ஒபினியன் என்ன எனவும் சொல்லுங்கள். சுதந்திர பெண்ணுக்கு இதுதான் அளவுகோலா? சொல்லமாட்டேன் என எல்லாம் சொல்லகூடாது. அப்படி கருத்து சொல்ல அம்றுத்தால் அந்த ஸ்டேட்மெண்ட்டை பற்றி நான் சொல்வதையும் விமர்சிக்க கூடாது. இரண்டிலும் நடுநிலை வகிக்க வேண்டும். அதுதான் நியாயம்.

லிபரல்கள் பெண்களுக்கு கொடுக்கும் தவறான, முட்டாள்தனமான அறிவுரைகளை <<< தவறான, முட்டாள்தனமான என்று நீங்கள் சொல்லும் பொழுது அது judgement ஆக மாறவில்லையா?
"லிபரல்கள் பெண்களுக்கு கொடுக்கும் தவறான, முட்டாள்தனமான அறிவுரைகளை"  என்பதற்கும் "லிபரல்கள் பெண்களுக்கு கொடுக்கும் அறிவுரைகளை" என்று சொல்வதற்கும் வேறுபாடு உள்ளது. 

ஆமாம். ஜட்ஜ்மென்ட்தான். நான் ஒன்றும் கருத்து சொல்லமாட்டேன் என சொல்லவில்லையே? எனக்கு அது முட்டாள்தனமான கருத்தாக படுகிறது. சொல்கிறேன். உங்களுக்கு அது சிறப்பான கருத்தாக பட்டால் அதை சொல்லுங்கள் அல்லது முட்டாள்தனமான கருத்தாக பட்டால் அதையும் சொல்லுங்கள்.   

but my question is ...simply... why should i?

Because you gave an opinion on my opinion.

So its only fair that you also comment on their opinion

Either comment on both opinions or don't comment on both opinions. That's the right thing to do.

இதையேதான் நீங்களும் செய்கிறீர்கள் என்று என்பது உங்களுக்குப் புரியவில்லையா செல்வன்? 
ஒரு ஆண், ஒரு பெண் என்ன செய்ய வேண்டும் எப்படி நடக்க வேண்டும் என்று நினைப்பதை பெண் ஒருத்தியை விட்டே  பரப்பச் செய்யத்தானே நினைக்கிறீர்கள்?  
பெண்களை நீங்களே சிந்தித்து எது சரி எது தவறு என முடிவெடுங்கள் என்று சொல்வதும், நான் என்ன சொல்லவேண்டும் சொல்லகூடாது என்று முடிவெடுப்பதும் என் வழக்கம்.  

நான் எதையும் யாரிடமும் பரப்ப நினைக்கவில்லை.

என் கேள்வி எளிமையானது.

பெண்களே சிந்தித்து முடிவெடுக்கவேன்டும் என்பதற்கும் "சுதந்திரபெண் என்பவர் கல்யானத்துக்கு முன் செக்ஸ் வைத்துகொள்பவர்" என்பதற்கும் எத்தனை பெரிய வித்தியாசம் உள்ளது?

அப்ப சுதந்திரமாக சிந்தித்து கல்யானத்துக்கு முன் செக்ஸ் வைத்துகொள்ளாத பெண்கள் அடிமைகளா?

செக்ஸ் வைப்பதும் வைக்காததும் அவரவர் விருப்பம். ஆனால் அப்படி செய்யாதவர்கள் ஆண்களின் அடிமைகள் என்பது மாதிரி சித்தரிப்பது எத்தனை பெரிய தவறான பிரச்சாரம்?

ஆக பெண்ணியத்தின் பெயரால் இப்படி ஸ்டேட்மெண்ட் விடுவது பெண்களின் கல்யானத்துக்கு முன் செக்ஸ் வைத்துகொள்ள மறுக்கும் பெண்களின் தேர்வை அவமதிப்பது போல் அல்லவா உள்ளது?

பெண்களின் சாய்ஸ், தேர்வு என சொல்லிவிட்டு அதில் ஒரு தேர்வு அடிமைதனம் என்றால் என்ன பொருள்?

செல்வன்

unread,
Jan 30, 2014, 11:44:54 AM1/30/14
to vallamai
2014-01-30 தேமொழி <them...@yahoo.com>:
பி.கு: அது சரி!!!!!   நீங்கள் தூங்கப் போகிறீர்களா இல்லையா?!?!?!?!?!

தூங்கி எழுந்தாகிவிட்டது :-) மணி காலை 10:44 :-)

தேமொழி

unread,
Jan 30, 2014, 12:31:13 PM1/30/14
to vall...@googlegroups.com

On Thursday, January 30, 2014 8:42:15 AM UTC-8, K Selvan wrote:

நீங்கள் கருத்து சொல்லாமல் மூணு, நாலு மடல்களாக தப்பிகொன்டிருப்பதால் தான் எஸ்கேப் என்றேன் :-) நீங்கள் கருத்து சொல்லமாட்டேன் என சொல்லிகொண்டிருப்பது உண்மைதானே? உண்மை (fact) எப்படி ஒப்பினியன் ஆகும்?
 
உங்களுக்கு என் கருத்து எது எனத் தெரிந்து கொள்வதில் ஏனிந்த ஆர்வம்?
என் கருத்தை சொல்வதில் நான் என்றும் அச்சமோ தயக்கமோ கொண்டது கிடையாது...
தவிர்த்ததன் காரணம் .... இவ்வாறு செய்பவர்கள் ஒழுக்கங் கெட்டவர்கள் என்று சொல்லிவிட்டு, உடனே நீ என்ன நினைக்கிறாய் என்று கேட்பதில் இருந்து இதை வைத்து உங்கள் கருத்திற்கு மாறுபட்டவர்களை பற்றி நீங்கள் முடிவெடுப்பது என்னவாக இருக்கும் என்று வியந்ததே.

நான் செய்தது எல்லாம் லிப்ரலகள் சொன்னதை எடுத்து போட்டதுதான். அவர்கள் சொல்வதை "இப்படி சொல்கிறார்கள்" என சொல்லுவதே அச்சுறுத்தல் ஆகிவிடுமா? அப்படி அவர்கள் சொல்லவே கூசும் அளவு ஒரு விஷயத்தை சொல்லியிருப்பதாக நீங்கள் கருதினால் அதை சொல்லுவது தானே முறை?  
 
நீங்கள் லிபரல்கள் சொன்னதைப் பற்றி நான்  சொல்லவில்லை...மீண்டும் படித்து பாருங்கள், 
அதற்காக நீங்களே முன்பு சொன்ன  ஒரு கருத்தையும் சுட்டிக் காட்டியிருந்தேன்
"கூசுவது" என்று கூறுவதில் உள்ள பொறி வைக்கும் எண்ணம் எனக்குப் புரிகிறது.

சரி போனது போகட்டும்  "கல்யாணத்துக்குகு முன் செக்ஸ் வைத்துகொள்பவர்கள் தான் சுதந்திரமான பெண்கள்" என்ற முத்தான ஸ்டேட்மெண்ட்டை பற்றிய உங்கள் கருத்து அல்லது ஒபினியன் என்ன எனவும் சொல்லுங்கள். சுதந்திர பெண்ணுக்கு இதுதான் அளவுகோலா? சொல்லமாட்டேன் என எல்லாம் சொல்லகூடாது. அப்படி கருத்து சொல்ல அம்றுத்தால் அந்த ஸ்டேட்மெண்ட்டை பற்றி நான் சொல்வதையும் விமர்சிக்க கூடாது. இரண்டிலும் நடுநிலை வகிக்க வேண்டும். அதுதான் நியாயம்.
 
ஆம் தாங்கள் என்ன செய்ய வேண்டும் அல்லது செய்யக் கூடாது என்று நினைப்பது அந்தப் பெண்களின் "சுதந்திரம்தான்"
இதில் என்ன சந்தேகம், சுயமாக சிந்திப்பதே அவர்களது சுதந்திரத்தின் அளவுகோல்தான்.
சுதந்திர பெண்ணுக்கு இதுதான் அளவுகோலா? <<<  ஒருவர் சொல்வதையும் நான் ஏன் கேட்க வேண்டும் என்று பதிலுக்கு கேட்பதும், சொல்வதும் சொல்லாததும் தனது விருப்பம் என்று சொல்வதும் சுதந்திரமே.

ஏன் நீங்கள் தமிழிலக்கியத்தில் களவொழுக்கம் படித்ததில்லையா?

என்னைப் பொறுத்தவரை திருமணத்திற்கு முன்னரே, காதல், உடலுறவு, கர்ப்பம் இதெல்லாம் தவறில்லை.
அந்தக் கருவை கலைக்க நினைத்தாலும் அது பெண்ணின் விருப்பம், வளர்க்க நினைத்தாலும் பெண்ணின் விருப்பம். தவறில்லை.
இவற்றை வைத்து நான் ஒரு பெண்ணின் மதிப்பை எடை போடுவதில்லை.

ஆனால் குழந்தை பிறந்தால் கள்ளிப்பால் ஊற்றுவது, அவ்வாறு நடந்தற்குக் காரணம் எனப் பெண்ணைக் கெளராவக் கொலை செய்வது, ஆண்கள் அவ்வாறுதான் இருப்பார்கள் என சப்பைக் கட்டுக் கட்டுவது, பெண்களுக்குத்தான் பாதிப்பு என்று கூறி நீ இதுபோல நடந்து கொள்ள வேண்டும் என்று கூறுவதை,  கடமையை விட்டு தப்பி ஓடிவிடும் ஆண்களை, பொறுப்பைத் தட்டிக் கழிக்கும் ஆண்களை, வன்புணர்வுக்கு செல்லும் ஆண்களைக் கொண்டு அவர்களது குணம் சரியில்லை என்று எடை போடுவதுண்டு.

அது போலவே சமுதாயச் சீர்கேடுகளுக்கு பெண்கள் மட்டுமே காரணம், அவள் உடை உடுத்துவது சரியில்லை, அவள் சுதந்திரமாக சிந்திப்பது சரியில்லை என்று அடக்குமுறையைப் பிரயோகிக்கும், ஆண்களை ஒரு வார்த்தை கூட கண்டிக்காமல் உனக்கு பாதிப்பில்லை அதனால் நீ எப்படி வேண்டுமானாலும் நடக்கலாம் என்று ஆதரவு  தருபவர் தனது எண்ணத்தில் நேர்மையற்றவர் என்று முடிவு  செய்வேன்.
 
homosexuals, sex before marriage, abortion right என எதுவுமே எனக்குத் தவறாகத் தெரியாததால் அதை ஆதரிக்க கூசுவதில்லை,
என் கருத்தின் நிலை இது என்று கூறுவதிலும் தயங்குவதில்லை.
அடுத்தவரைப் பாதிக்காமல் எதையும் யாரும் செய்வதோ செய்ய வேண்டாம் என முடிவெடுப்பதோ தனிமனித சுதந்திரம்.  அதனால்
தனிமனித சுதந்திரத்தை நான் மதிக்கிறேன்

///
அப்படி கருத்து சொல்ல அம்றுத்தால் அந்த ஸ்டேட்மெண்ட்டை பற்றி நான் சொல்வதையும் விமர்சிக்க கூடாது. இரண்டிலும் நடுநிலை வகிக்க வேண்டும். அதுதான் நியாயம்.///
அத்துடன் தனிமனித சுதந்திரத்தில் தலையிடும் கருத்துகளை நான் விமர்சிக்கும் உரிமையை நான் என்றும் கைவிடப்போவதில்லைஏனெனில் அது  என் சுதந்திரம்.
இந்த இடத்தில் பேசாமல் இருப்பது நியாயத்தில் அடங்காது, அடக்குமுறைக்குத் துணை போவது.
குற்றம் நடக்கும் பொழுது வாளா விருபதற்கு ஒப்பானது.

..... தேமொழி

தேமொழி

unread,
Jan 30, 2014, 12:34:24 PM1/30/14
to vall...@googlegroups.com

நான்தானே 100 வது பதிவு போட்டேன்.

.... தேமொழி
It is loading more messages.
0 new messages