https://www.facebook.com/share/1DrRVPXX1j/
/// எத்தனையோ மரங்கள் இருப்பினும் புளிய மரத்தை ஏன் சாலையோரம் வைத்தார்கள்?
தமிழ் நாட்டில் சாலை ஓரங்களில் நிறைய புளிய மரங்களை காணலாம்.
புளிய மரங்கள் ஏன் இயற்கையாக காடுகளில் காணமுடிவதில்லை. புளியமரம் ஆப்பிரிக்காவில் இருந்து வந்த மர வகைகள்.
அதனால் தென்னிந்திய இயற்கை காடுகளில் காணமுடியாது. இந்த மரம் மற்ற தாவரங்களைப் போல் பிற தாவரங்களை அழிக்க முயலாது.
தான்பாடு என்று தனியாக நிற்கும். வளரும்.
அரேபியர்கள் இந்த புளியை tamar-ul-hind இந்திய பேரிச்சை பழம் என்றதால் ஆங்கிலத்திலும் டெமரிண்ட் ஆயிற்று!
இதை ஏன் சாலை ஓரமாக நட்டினார்கள். புளியமரத்துக்கு நீர் அதிகம் தேவையில்லை, மரதண்டுக்கு கொஞ்சம் இடம்தான் தேவை, வேர்கள் மற்ற மரங்களைப்போல் பக்கவாட்டாக வளராமல் மேல் தூக்காமல் பூமிக்கு கீழ்மட்டும் செல்லும்.
ரோடு பக்கம் பரந்த நிழல். புளியங்காய்கள், பஞ்சாயத்துக்களுக்கு கிராமங்களுக்கு வருமானம், உபயோகம்.
நீண்ட நூற்றுக்கணக்கான வருட ஆயுள். கிளைகள் ஒடிந்து புங்கை வேங்கை மரங்கள் போல் ரோடில் விழாது.
பலத்த காற்று ,மழை ,வெயில் தாங்கும்...
அதனால்தான் ரோட்டுக்கு இரு பக்கமும் புளிய மரத்தை வைத்தார்கள்.///
ஆம். புளி பற்றி நல்ல அறிமுகம். தீம்புளிப் பாகர் - குறுந்தொகைப் பாடல் புகழ்பெற்றது. இது ஸ்தாலீபாகம் என்னும் அடிசில் செய்முறை. புது மணப்பெண் புக்ககம் புகுந்து கணவனுக்கும், அவன் குடும்பத்தாருக்கும் உணவு சமைக்கிறாள். உவேசா விளக்கியுள்ளார். அதற்கு முன்னர், இரு இடங்களில் நச்சினார்க்கினியர்: "அடிசிற்றொழிலின்கண் மகிழ்ச்சியாகிய தலைவியின் மாண்பை அகம்புகல் மரபின் வாயில்கள் தம்முள் தாம் கூறியது(தொல். கற்பு. 11, இளம், ந.); ‘இது பார்ப்பானையும் பார்ப்பனியையுந் தலைவராகக் கூறியது. கடிமனைச் சென்ற செவிலி கூற்று. வாயில் நேர்வித்தலுமாம்’ (தொல். அகத். 24, ந.);" பாடலில் முழுதும் சைவ உணவாக இருப்பதை நோக்கவும். சமண சமயஞ் சார்ந்தவள் ஆகவும் இருக்கலாம் (உ-ம்: வள்ளுவர் இல்லம்).
இரும்பு (கரு- > கிரு- என 4000+ ஆண்டு முன்னர் அழைக்கப்பட்டிருக்கவேண்டும். கடாவைக் கிடா என்றும், களா > கிளா என்றும் .... எண்ணற்ற சொற்கள் பேச்சுவழக்குப் போல, *கரும்பு >> கிரும்பு > சிரும்பு > இரும்பு. Bh. கிருஷ்ணமூர்த்தி "சிரும்பு > இரும்பு" என்பதோடு நிறுத்திக் கொள்கிறார். ஆனால், இரும்பு என்பதன் மூலத் தாதுவேர் கரு(மை) என்பதே. இதுபற்றி ஏற்கெனவே விரிவாகச் சொல்லியுள்ளேன்.
ஓர் மலரும் நினைவு. இணையம் பிறந்த காலம். நானும், சிலரும் Tamil is a Classical Language என்று ஏ. கே. ராமாநுஜன், கமில் சுவெலெபில் மேற்கோள் காட்டி எழுதினேன். Tamil is NOT a classical language என்று Bh. கிருஷ்ணமூர்த்தி என்னிடம் வாதாடினார். இதையெல்லாம் கவனித்து வந்த ஜார்ஜ் ஹார்ட் (பெர்க்கிலி) என் பெயரைக் கடிதத்தில் இட்டால், Bh. கிருஷ்ணமூர்த்தி, "கணேசன் மொழியியல், இலக்கியப் பேராசிரியர் இல்லையே" என்பார் ஆதலான், ஹார்ட் எழுதிய கடிதத்தில் என் பெயர் இடாமல் எழுதினார். தமிழ் செம்மொழி என்று இந்தியாவின் பார்லிமெண்ட்டில் சட்டம் ஆதற்கு, ஹார்ட் தமிழ் ஏன் செம்மொழி?- என எழுதிய கடிதம் பிரசித்தி பெற்றது. பேரா. வா. செ. குழந்தைசாமி மொழிபெயர்த்தார். கவிஞர் சிற்பி, மேதகு. அப்துல் கலாம் தலைமையில் நடந்த டெல்லி தமிழ்ச் சங்க விழாவில் வாசித்தார். அதற்கு முன்னர் பார்லிமெண்ட்டில் தமிழ் செம்மொழிக் காரணங்கள் ஹார்ட் முன்மொழிந்தவை ஆராய்ந்தனர். இந்தியாவில் செம்மொழி என ஆனது முதலில் தமிழே. இரண்டாவதாய்த் தான் ஸம்ஸ்கிருதம் செம்மொழி எனப் பார்லிமெண்ட் அறிவித்தது. இதே Bh. கிருஷ்ணமூர்த்தி, தமிழ் செம்மொழி ஆனபிறகு, ஆந்திரா எம்பிகள், முதல்வரைப் பிடித்து தெலுங்கு, கன்னடம் செம்மொழிகள் ஆக்கினார். அது தவறு என ஹார்ட் ஹிண்டு பத்திரிகைக்கு எழுதினார். சில குறிப்புகள் தமிழ் செம்மொழி வாதம் பற்றிக் கொடுத்துள்ளேன். வாசித்து அருளுக:
செம்மொழி தெலுங்கு - பத்ரிராஜு கிருஷ்ணமூர்த்தியின் சேவை