ஆப்பிரிக்காவின் Baobab மரங்களில் சில இந்தியாவில் இருப்பதை
அறிவோம். இவற்றின் காய்கள் புளிப்புத்தன்மை உடையன.
எனவே, -புளி என்றே Baobab மரங்களின் பெயர்களாய் அமைகின்றன.
The names for baobab trees in Tamil Lexicon:
ஆனைப்புளி, பப்பரப்புளி, பாப்பாரப்புளி, பூதவிருட்சம், பூரி, பூரிமரம், பெருக்கு, பெருக்கமரம், சீமைப்புளியன்.
எங்கள் ஊர்களும், தோட்டங்களும் தமிழ்நாட்டின் மேற்குப்பகுதியாகிய கோவை மாவட்டத்தில் உள்ளன.
மேலும், பல நிலபுலங்கள் பாலக்காடு மாவட்டத்தில் மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது
கேரளாவில் சேர்ந்து மலையாளிகள் கைவசம் ஆகிவிட்டன. இதனை இன்றும்
பாலக்காடு மாவட்டத் திருவிழா “கொங்கம்படை” கொண்டாட்டத்தில் காணலாகும்.
தமிழ் மரபு அறக்கட்டளையில் “கொங்கன்படை” திருவிழா பற்றிய முதல்நூல் இருக்கிறது.
கொங்கம்படை - பாலக்காடு மாவட்டம், திருவிழாக் காட்சிகள்:
திரு. நூதலோசு ஐயா குறிப்பிட்டார்: ”முன் ஒரு மடலில் ஓர் சமையலுக்கு பயன்படாத புளி பற்றிப் பேச நேர்ந்தது (பப்பரப் புளி). அப்போது தேடலில் கிடைத்த மற்றொரு புளி தமிழர்கள் அறியாத ஆனால் மலைனாடு அறிந்த ஓர் சமையல் புளி குடம்புளி.”
இந்த மலைப்புளி தமிழர்கள் நன்கு அறிந்ததே. மலையாள தேசத்தின் அருகே உள்ள தமிழ் மாவட்டங்களுக்கு வரும். வாளை, அயிரை, நெய்ம்மீன் போன்றவற்றை இப்புளி தோய்த்து வாழையிலையில் சுருட்டி தணலில் வைத்து வாட்டிக் கறிசமைப்பர். மலைக்குக் கோடு என்பது பெயர் ஆனதால் கோடம்புளி என்று தமிழில் வழங்குவதுண்டு.
கறுக்கன்புளி (குண்டர்ட்), குடம்புளி/குடப்புளி, இரும்புளி, கரும்புளி, கோடம்புளி (> ஓடப்புளி (கன்னட-துளு மொழியில்), ஈழப்புளி, கொறுக்காய்ப்புளி ... இவை Malabar tamarind (Garcinia Cambogia) புளிக்கான தமிழ்ப் பெயர்கள் (சான்று: சென்னைப் பேரகராதி). இரும்புளி - கறுக்கன்புளியில் இருள்மை நிறத்தால் பெற்ற பெயர்.
கோடம்புளி என்னும் மலைவளர் புளிக்கு சிகிரி (சிகரங்களில் வளர்வது) என்ற வடமொழிப்பெயர்
கோடு = சிகரம் என்னும் மொழிபெயர்ப்பு என்பது தெளிவு.
சிகிரி cikiri , n. < šikharin. (L.) 1. Malabar gamboge. See கொறுக்காய்ப்புளி.
Loss of word-initial k- in Dravidian:
(1) கனல் > அனல்,
(2) கன்றுதல் ‘சினத்தல்’ > அன்றுதல்,
(3) கோணாய் > ஓணாய் (கோநாய் > ஓநாய்)
(4) குடைவேல மரம் > உடை மரம், உடைவேல மரம்
(5) கோடம் (= செங்கருங்காலி) > ஓடம்
(சிறுமார் ஓடம் = செங்கருங்காலி (நச்சினார்க்கினியர், குறிஞ்சிப்பாட்டுரை).
இங்கே சிறுமார் = சிறிய விளார். சீமார், விளக்குமார் போன்றவற்றில் உள்ள மார்.
விளக்குமாறு என்பது பிழை. விளக்குமார் சரி.)
கோடம்புளி மரத்தை கன்னடத்தில் கோடை > ஓடை (ஓடெ) என்றழைத்து அதன் புளியை ஓடெ-புளி என துளு, கன்னடத்தில் அழைக்கின்றனர்.
DEDR 1044 Ka. ōṭe the tree Garcinia pictoria Roxb., the Mysore gamboge tree; ōṭe-puḷi its fruit. Tu. ōṇṭe-puḷi, ōṭe-puḷi the sour fruit of G. cambogia. DED 880.
சிகரி, ஓடை < கோடை என்று இரும்புளி (Garcinia cambogia) வழங்கப்படுதல் கோடம்புளி என்னும் சொல்லில் கோடு = மலை என மலைவளர்புளிக்குச் சான்று.
Garcinia cambogia/gambogia. ஐரோப்பியர் முதலில் காம்ப்போஜ நாட்டில் (=கம்போதியா, கம்புசியா) இம்மரத்தைக் கண்டனர் போலும். தமாலம் (அ) பச்சிலை மரம் = Mysore gamboge எனவும், கோடம்புளிய மரம் = Malabar gamboge எனவும் ஆங்கிலத்தில் வழங்குவர்.
நா. கணேசன்