தீம்புளி(ச் சோறு) = தயிர்ச் சோறு

118 views
Skip to first unread message

kanmani tamil

unread,
Dec 22, 2023, 10:40:11 AM12/22/23
to vallamai
"பயந்தலைப் பெயர்ந்து மாதிரம் வெம்ப 
வருவழி வம்பலர்ப் பேணிக் கோவலர் 
மழவிடைப் பூட்டிய குழாஅய்த் தீம்புளி 
செவியடை தீரத் தேக்கிலைப் பகுக்கும்" (அகம்.311)

மாமூலனார் பாடுகிறார்... 
மழை பொய்த்துப் பூமி எங்கும் வறட்சியால் பாதிக்கப்பட்டு நிலம் ஆங்காங்கு வெடித்துக் காட்சி அளிக்கிறதாம். 
கோவலர் தம் கால்நடைகட்காகப் பசுமையைத் தேடிக் காட்டில்  அலைந்து மேய்க்கின்றனர்.  பசி காதடைக்க வரும் வழிப்போக்கரது துன்பம் தீர; இளம் எருதுகளின் கழுத்தில் கட்டித் தொங்க விட்டிருக்கும் மூங்கில் குழாய்களுள் எடுத்து வந்த தயிர்ச் சோற்றைத் தேக்கிலையில் பரிமாறி விருந்து அயர்கின்றனர். 

'தீம்புளி' எனும் சொற்றொடர் புளிப்புச் சுவை உடைய தயிர்ச் சோற்றைக் குறிக்கும் அன்மொழித்தொகை ஆவதால் தயிர்ச் சோற்றைக் குறிப்பாகப் பெறுகிறோம். 

நெல்லரிசிப் பண்டங்களின் பட்டியலில் சேர்க்கக் கூடிய அடுத்த உணவு வகையாகத் தயிர்ச் சோறு அமைகிறது.

'புளி...சோறு' புளிப்புச் சுவை உடைய புளிச்சோறுக்கும் தயிர்ச்சோறுக்கும் பொதுவான பெயராகத் தொகை இலக்கியத்தில் காணப்படுகிறது. 
(தொடரும்)
சக 

kanmani tamil

unread,
Dec 23, 2023, 1:07:52 AM12/23/23
to vallamai
 "எயிற்றியர் அட்ட இன்புளி வெம்சோறு" (சிறுபாணாற்றுப்படை அ.175)
எனுமிடத்து 'புளி...சோறு' இன்றைய புளியோதரை/புளிப் பொங்கலைக் குறிக்கிறது. 

சென்ற பதிவில் மூங்கில் குழாய்க்குள் உணவை நிரப்பி எடுத்துச் சென்றவர் ஆயர். அவரது வாழ்வியலை ஒட்டி அவர்கள் பயன்படுத்திய புளி கால்நடைகளின் பாலில் இருந்து பெற்ற தயிர் என்பதே பொருத்தம் ஆனது ஆகும். ஆனால் எயிற்றியர் கால்நடை வளர்ப்பில் ஈடுபடுபவர் அல்லர். அவர்கள் வாழும் பகுதியில் புளியமரங்கள் இருப்பதும்; அதன் பயனை அவர்கள் பெறுவதும் இயற்கை ஆகும். எனவே சிறுபாணாற்றுப்படை கூறும் 'இன்புளி வெம்சோறு புளியமரத்துப் புளியைப் பயன்படுத்திச் சமைத்த புளிச்சோறு ஆகும். ஏற்கெனவே 'நெல்லுச்சோறு சுடுசோறும் பழைய சோறும் என்ற இழையில் புளிச்சோறு பற்றிக் குறிப்பிட்டு இருக்கிறேன். நம் சிறுபாணாற்றுப்படை மேற்கோள் விதந்து பேசும் 'வெம்சோறு' என்ற சொற்றொடர்க்கு ஏற்ப இதனைச் சூடாகச் சாப்பிடச் சொல்லி வலியுறுத்துவது 
காண்க.


ஆறிய பிறகு சாப்பிடுவது புளியோதரை... சூடாகச் சாப்பிடுவதற்கு உரியது புளிப் பொங்கல். 

சக 

kanmani tamil

unread,
Dec 23, 2023, 11:54:59 PM12/23/23
to vallamai
'தீம்புளி' எனும் சொற்றொடர் தயிரைக் குறிக்கும் பிற இலக்கியத் தரவுகளும் உள.
குறுந்தொகைத் தலைவி துழந்து அட்ட 'தீம்புளிப் பாகர்' மோர்க்குழம்பு என்பதை
"முளிதயிர் பிசைந்த காந்தள் மெல்விரல்" (பா.167) 
என்ற பாடலடி நிறுவுகிறது. தயிரைப் பிசைந்து மோராக்கிச் சமைத்த குழம்பு 'தீம்புளிப் பாகர்' என்றே குறிக்கப் பெறுகிறது. 
(தொடரும்)
சக 

N. Ganesan

unread,
Dec 24, 2023, 7:08:56 AM12/24/23
to வல்லமை
நன்றி.

kanmani tamil

unread,
Dec 24, 2023, 7:49:14 PM12/24/23
to vallamai
ஈயலைத் தயிரில் பெய்து வரகரிசியோடு சமைத்த சோற்றை நன்பலூர்ச் சிறுமேதாவியார் 'இன்புளி வெம்சோறு' என்றே குறிப்பிடுகிறார். 
சிறு தலைத் துருவின் பழுப்பு உறு விளைதயிர்,
இதைப் புன வரகின் அவைப்பு மாண் அரிசியொடு,
கார் வாய்த்து ஒழிந்த ஈர் வாய்ப் புற்றத்து
ஈயல் பெய்து அட்ட இன் புளி வெஞ் சோறு 5
சேதான் வெண்ணெய் வெம் புறத்து உருக,
இளையர் அருந்த,

இங்கே இடம்பெறும் தயிர் ஆட்டுத் தயிர் ஆகும். 'சிறுதலைத் துரு' ஆட்டைக் குறிக்கிறது. அதன் பாலினின்று பெற்ற தயிர் பழுப்பு நிறம் உடையதாக இருந்தது. அதில் புன்செயில் விளைந்த வரகரிசி அவலை ஈசலோடு சேர்த்து அட்ட 'இன்புளி வெம்சோறு' என்பதால் ஆட்டுத்தயிரைப் பயன்படுத்தி ஈயல்வரகுச் சோறு சமைத்தமை தெரிகிறது. அதைச் சூடாகவே உண்பர் என்றும்; உண்ணும் போது சேதாவின் வெண்ணெய் விட்டு உண்டனர் என்றும் அறிகிறோம். 
தீம்புளி = இன்புளி (ஒரே பொருளன).
இதை நெல்லரிசிப் பண்டங்களின் வரிசையில் சேர்க்க இயலாது எனினும்; தயிரை இன்புளி என்றும் தீம்புளி என்றும் தொகையிலக்கியம் சுட்டுவது தெளிவு.

சக 

N. Ganesan

unread,
Dec 25, 2023, 11:57:39 AM12/25/23
to vall...@googlegroups.com
புளி- என்ற சொல் சொல்லாய்வு மொழியியல் வழியாகவும் தயிர், மோருடன் தொடர்புகளைச் சொல்ல இயலும்.


--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CA%2BjEHcvNTcS%2BYLBVNXH%3Dmo5b28cHvs02gpn0tUT8BYLk6p0vKw%40mail.gmail.com.

seshadri sridharan

unread,
Dec 26, 2023, 12:59:32 AM12/26/23
to வல்லமை
On Mon, 25 Dec 2023, 10:27 p.m. N. :
புளி- என்ற சொல் சொல்லாய்வு மொழியியல் வழியாகவும் தயிர், மோருடன் தொடர்புகளைச் சொல்ல இயலும்.

புல் > புள் - சிறுமை வழி சுருங்கல் கருத்து. புளிப்பு சுவையின் தாக்கத்தால் ஒருவரது முகம் கண்ணை அண்டி சுருங்கும். பல் கூசும். இந்த எதிர்வினையை (reaction) வைத்து தான் அச்சுவைக்கு இழிப்பது எனப் பொருள்படும் புளி என்று அழைக்கப்பட்டது. 

கல் > கள் > காள் > காடி - முகம் சுருக்குவது, இழிப்பது

ஒன்றின் நான்கு பகுப்பில் மிக சிறியது என்ற கருத்தில் கால் எனப்பட்டது. காழ் - பருக்கைக் கல் (gravel)

தல்/ தய் > தயச்செவல் - அவல்  என்றால் பருத்து இருந்த அரிசியை ஊற வைத்து தட்டை, சிறுமை ஆக்கியது என்று பொருள். தயிர் - புளிப்பின் தன்மையால் முகம் சுருக்க வைப்பது. தயிர் என்பதும் புளிப்பு என்ற பொருளில் உண்டான சொல் தான்.

kanmani tamil

unread,
Dec 27, 2023, 12:16:15 AM12/27/23
to vallamai
'இன்புளி' புளியமரத்துப் புளிக்கும் தயிருக்கும் உரிய பொதுப்பெயர் என அறியத் தொகை இலக்கியம் இன்னொரு சான்றும் நல்குகிறது.

நவிரமலைக் குறத்தி ‘வழையமை சாரல் கமழத் துழைஇ’  (மலை.174-183)  ஊன்சோறு அட்டாள். அதில் ‘இன்புளி' கலந்தாள். புளியின் பெயர்க் காரணமே அதன் புளிப்புச் சுவை என்று இருக்க; இனியபுளி என விரியும் தொடரின் காரணம் அறியற் பாலது. பாடற் பகுதி சுட்டும் இடப் பின்புலம் கொண்கானம் ஆகும். அதற்குச் சற்றே வடக்கில் உள்ள தென்கன்னடத்து  டும்கூர் புளி வணிகர்கள் இன்றும் போற்றும் இனிய புளி ஆகும்.

இன்றும் பன்றிக்கறி பிரியாணி சமைக்கும் போது புளி சேர்ப்பது தவிர்க்க இயலாதது என்ற கொள்கை நிலவுவதைப் பின்வரும் காணொலி காட்டுகிறது.

எனவே தீம்புளி(ச்சோறு) தயிர்ச்சோறு என்பதிலும் ஐயமில்லை. 'இன்புளி' தயிருக்கும் புளியமரத்துப் புளிக்கும் பொதுவான அடைத்தொடர் என்பதிலும் ஐயம் இல்லை. 

(முற்றும்)
சக 

N. Ganesan

unread,
Dec 27, 2023, 8:10:50 AM12/27/23
to vall...@googlegroups.com, housto...@googlegroups.com, Santhavasantham
SK> 'இன்புளி' புளியமரத்துப் புளிக்கும் தயிருக்கும் உரிய பொதுப்பெயர் என அறியத் தொகை இலக்கியம் இன்னொரு சான்றும் நல்குகிறது.

மிக அருமையான விளக்கம்.

புளி- என்பது தயிருக்குப் புரை குத்துதல் என்ற சொற்பிறப்பில் உள்ளது., முரமுர என்னும் ideophone, மோர் போன்ற சொற்களில் முளி (தயிர்) உள்ளது. பின்னர் பார்ப்போம்.

வரகரிசிச் சோறும் வழுதுணங்காய் வாட்டும்
முரமுரென வேபுளித்த மோரும் - திரமுடனே
புல்வேளூர்ப் பூதன் புகழ்ந்துபரிந் திட்டசோ(று)
எல்லா உலகும் பெறும்.

தீபம் நா. பார்த்தசாரதி இவ்வெண்பா வரலாற்றைக் கதையாகச் சொல்லியுள்ளார். நூல்: தமிழ் இலக்கியக் கதைகள்.

உலகம் பெறும் உணவு
----------------

வந்த விருந்தினர் பசியால் வெந்தாலும் ஏனென்று கேட்க மாட்டார்கள் புல்வேளூர்ப் பெருமக்கள் தாங்கள் உண்டு தங்கள் வயிறுண்டு என்ற கட்டுப்பாடான கொள்கைக்காரர்கள் புல்வேளூரார். பனந் தோட்டத்திற்கு நடுவில் ஒரு பலா மரம் போல் பூதன்' ஒருவன் தான் அந்த ஊரிலேயே மற்றவர்களைப் பற்றி நினைப்பவனாக இருந்தான். பசித்து வந்த விருந்தினரைக் கண்டால் பண்போடு உபசரிப்பான்; 'யாருக்கு வந்த விருந்தோ?' என்று எவரையும் அலட்சியம் செய்வதே இல்லை. புல்வேளூரில் நல்ல மனிதனாக அந்த ஒருவன் பூதன் என்ற பெயரோடு இருந்து வந்ததனால்தான் மழை பெய்து வந்தது.

உச்சி வெய்யில் மண்டையைப் பிளந்து கொண்டிருக்கும் அந்த நேரத்தில், வயிறு காய வந்த ஒளவையார், நல்லவேளையாகப் பூதனுடைய கண்ணிலே பட்டார். புல்வேளூரைப் பற்றி அதற்கு முன்பு தெரிந்துகொள்ளாத அவர் பூதனைக் காண்பதற்கு முன் சந்தித்த இரண்டொருவர் மூலம் அது எத்தகைய ஊர் என்பதைத் தெரிந்து கொண்டார். விருந்து கண்டால் வருந்தி ஒளிந்து கொள்பவர் புல்வேளூர்ப் பொது மக்கள் என்ற நிலையைப் புரிந்து கொள்ள ஒளவையாருக்கு வெகு நேரம் ஆகவில்லை. காளான் களுக்கு நடுவில் குண்டு மல்லிகை போல் பூதன் அங்கே இருப்பதும் தெரிந்தது. வீட்டிற்கு அழைத்துச் சென்று விருந்திட்டான் பூதன். அவன் அந்த அரும்பசிப் போதில் அள்ளி இட்டவரகரிசிச் சோறு அமுதமாக இருந்தது.

அப்போதுதான் வடித்து இறக்கியிருந்த வரகரிசிச் சோற்றையும் கத்தரிக்காய் வதக்கலையும் ஆவி பறக்கும் சூட்டோடு இலையில் படைத்தபோது ஒளவையார் இந்த உலகத்தையே மறந்து சுவைத்து உண்டார். மொர மொரவென்று புளித்த கெட்டியான மோரை ஊற்றின் போது அந்தச் சுவை பன் மடங்காயிற்று. தரமாகச் சமைத்திருந்தாள் புல்வேளூர்ப் பூதனின் மனைவி. வரகரிசியைக் குத்திப் புடைத்துச் சோறு சமைக்கும் பழக்கம் அவளுக்குக் கைவந்த பயிற்சி. எண்ணெய் கொட்டி வாட்டியிருந்த கத்தரிக்காய் வதக்கல் உலகம் பெறும். பசியார் உண்டபின் பூதனுடைய காலமறிந்து செய்த நன்றிக்கு என்றும் அழியாத ஒரு பதில் நன்றியைத் தாமும் செய்ய விரும்பினார் ஒளவையார்.

"வரகரிசிச் சோறும் வழுதுணங்காய் வாட்டும்
முரமுரெனவே புளித்த மோரும் - தரமுடனே
புல்வேளூர்ப் பூதன் புகழ்ந்து பரிந்திட்ட சோறு
எல்லா உலகும் பெறும்"

' வழுதுணங்காய் = கத்தரிக்காய், பரிந்து = அன்பு கொண்டு..

இப்பாடல் மூலமாகப் புல்வேளூர்ப் பூதனின் விருந் தோம்பும் பண்பை என்றென்றும் நிலைக்கச் செய்துவிட்டார் ஒளவையார். ஒரு நாளைக்கு ஒரு வேளை உணவை அன்போடு இட்டான் பூதன். அந்த அன்புக்கு நன்றி, காலத்துக்கு வளைந்து கொடுத்து அழிந்து போகாத ஒரு கவிதையாகக் கிடைத்தது. புல்வேளூரில் பூதனிருந்த இடம் புல் முளைத்துப் போயிருக்கலாம். ஆனால் அந்தப் பரோபகார சிகாமணியின் பெயருக்குத் தமிழ்ப் பாட்டியார் கொடுத்த நற்சான்றுச் செய்யுள் தமிழ் மொழி உள்ளவரை அழியப் போவதில்லை. காலத்தை வென்று கொண்டே வளரும் பூதன் புகழ்.

அவன் அளித்த வரகரிசிச் சோற்றையும் கத்தரிக்காய் வதக்கலையும் புளித்த மோரையும் உலகம் பெறும் உணவாகக் குறிப்பிட்டு மகிழ்கிறார் ஒளவையார். 'அவன் தன்னைப் புகழ்ந்து கொண்டே பரிவுடன் அந்த உணவை அளித்தான்' என்பதையும் பாட்டிலே நன்கு கூறியுள்ளார் ஒளவையார். நன்றி செய்தவன் அழிவுக்கு அப்பாற்பட்ட நன்றியைப் பதிலுக்குப் பெற்று விட்டான்.

-------
தெரிவு: NG

seshadri sridharan

unread,
Dec 27, 2023, 8:18:37 AM12/27/23
to வல்லமை
On Tue, 26 Dec 2023 at 11:28, seshadri sridharan <ssesh...@gmail.com> wrote:
On Mon, 25 Dec 2023, 10:27 p.m. N. :
புளி- என்ற சொல் சொல்லாய்வு மொழியியல் வழியாகவும் தயிர், மோருடன் தொடர்புகளைச் சொல்ல இயலும்.

புல் > புள் - சிறுமை வழி சுருங்கல் கருத்து. புளிப்பு சுவையின் தாக்கத்தால் ஒருவரது முகம் கண்ணை அண்டி சுருங்கும். பல் கூசும். இந்த எதிர்வினையை (reaction) வைத்து தான் அச்சுவைக்கு இழிப்பது எனப் பொருள்படும் புளி என்று அழைக்கப்பட்டது. 

கல் > கள் > காள் > காடி - முகம் சுருக்குவது, இழிப்பது

ஒன்றின் நான்கு பகுப்பில் மிக சிறியது என்ற கருத்தில் கால் எனப்பட்டது. காழ் - பருக்கைக் கல் (gravel)

தல்/ தய் > தயச்செவல் - அவல்  என்றால் பருத்து இருந்த அரிசியை ஊற வைத்து தட்டை, சிறுமை ஆக்கியது என்று பொருள். தயிர் - புளிப்பின் தன்மையால் முகம் சுருக்க வைப்பது. தயிர் என்பதும் புளிப்பு என்ற பொருளில் உண்டான சொல் தான்.



 
image.png

N. Ganesan

unread,
Feb 16, 2025, 10:57:25 AMFeb 16
to vall...@googlegroups.com
பேரா. கண்மணி புளிய மரம் பற்றிய மேற்கோள் காட்டினார். நல்ல குறிப்பு இது.
https://www.facebook.com/share/1DrRVPXX1j/

/// எத்தனையோ மரங்கள் இருப்பினும் புளிய மரத்தை ஏன் சாலையோரம் வைத்தார்கள்?
தமிழ் நாட்டில் சாலை ஓரங்களில் நிறைய புளிய மரங்களை காணலாம்.
புளிய மரங்கள் ஏன் இயற்கையாக காடுகளில் காணமுடிவதில்லை. புளியமரம் ஆப்பிரிக்காவில் இருந்து வந்த மர வகைகள். 
அதனால் தென்னிந்திய இயற்கை காடுகளில் காணமுடியாது. இந்த மரம் மற்ற தாவரங்களைப் போல் பிற தாவரங்களை அழிக்க முயலாது. 
தான்பாடு என்று தனியாக நிற்கும். வளரும். 
அரேபியர்கள் இந்த புளியை tamar-ul-hind இந்திய பேரிச்சை பழம் என்றதால் ஆங்கிலத்திலும் டெமரிண்ட் ஆயிற்று!
இதை ஏன் சாலை ஓரமாக நட்டினார்கள். புளியமரத்துக்கு நீர் அதிகம் தேவையில்லை, மரதண்டுக்கு கொஞ்சம் இடம்தான் தேவை, வேர்கள் மற்ற மரங்களைப்போல் பக்கவாட்டாக வளராமல் மேல் தூக்காமல் பூமிக்கு கீழ்மட்டும் செல்லும். 
ரோடு பக்கம் பரந்த நிழல். புளியங்காய்கள், பஞ்சாயத்துக்களுக்கு கிராமங்களுக்கு வருமானம், உபயோகம். 
நீண்ட நூற்றுக்கணக்கான வருட ஆயுள். கிளைகள் ஒடிந்து புங்கை வேங்கை மரங்கள் போல் ரோடில் விழாது. 
பலத்த காற்று ,மழை ,வெயில் தாங்கும்...   
அதனால்தான் ரோட்டுக்கு இரு பக்கமும் புளிய மரத்தை வைத்தார்கள்.///

ஆம். புளி பற்றி நல்ல அறிமுகம். தீம்புளிப் பாகர் - குறுந்தொகைப் பாடல் புகழ்பெற்றது. இது ஸ்தாலீபாகம் என்னும் அடிசில் செய்முறை. புது மணப்பெண் புக்ககம் புகுந்து கணவனுக்கும், அவன் குடும்பத்தாருக்கும் உணவு சமைக்கிறாள். உவேசா விளக்கியுள்ளார். அதற்கு முன்னர், இரு இடங்களில் நச்சினார்க்கினியர்: "அடிசிற்றொழிலின்கண் மகிழ்ச்சியாகிய தலைவியின் மாண்பை அகம்புகல் மரபின் வாயில்கள் தம்முள் தாம் கூறியது(தொல். கற்பு. 11, இளம், ந.); ‘இது பார்ப்பானையும் பார்ப்பனியையுந் தலைவராகக் கூறியது. கடிமனைச் சென்ற செவிலி கூற்று. வாயில் நேர்வித்தலுமாம்’ (தொல். அகத். 24, ந.);"  பாடலில் முழுதும் சைவ உணவாக இருப்பதை நோக்கவும். சமண சமயஞ் சார்ந்தவள் ஆகவும் இருக்கலாம் (உ-ம்: வள்ளுவர் இல்லம்). 

பூண்டு, வெங்காயம், தக்காளி போன்ற தாவரங்கள் பிற்காலம் வந்தவை ஆனதால், நைவேத்தியத்தில் இல்லை. ஆனால் புளியோதரை இல்லாத பெருமாள் கோயில் இல்லை. https://nganesan.blogspot.com/2024/08/1454-ce-inscription-love-letter-of.html  "தோழிமார் தமக்குச் சொல்ல, அப்பொழுது தாம் புண்ணிற் புளி பெய்தாற் போலேயும், ". எனவே, ஆப்பிரிக்கப் புளி, சிந்து சமவெளிக் காலத்திலே அறிமுகம் ஆகிவிட்டது (அடுத்த மடலில்).

இரும்பு (கரு- >  கிரு- என 4000+ ஆண்டு முன்னர் அழைக்கப்பட்டிருக்கவேண்டும். கடாவைக் கிடா என்றும், களா > கிளா என்றும் .... எண்ணற்ற சொற்கள் பேச்சுவழக்குப் போல, *கரும்பு >> கிரும்பு > சிரும்பு > இரும்பு. Bh. கிருஷ்ணமூர்த்தி "சிரும்பு > இரும்பு" என்பதோடு நிறுத்திக் கொள்கிறார். ஆனால், இரும்பு என்பதன் மூலத் தாதுவேர் கரு(மை) என்பதே. இதுபற்றி ஏற்கெனவே விரிவாகச் சொல்லியுள்ளேன். 

ஓர் மலரும் நினைவு. இணையம் பிறந்த காலம். நானும், சிலரும் Tamil is a Classical Language  என்று ஏ. கே. ராமாநுஜன், கமில் சுவெலெபில் மேற்கோள் காட்டி எழுதினேன். Tamil is NOT a classical language என்று  Bh. கிருஷ்ணமூர்த்தி என்னிடம் வாதாடினார். இதையெல்லாம் கவனித்து வந்த ஜார்ஜ் ஹார்ட் (பெர்க்கிலி) என் பெயரைக் கடிதத்தில் இட்டால், Bh. கிருஷ்ணமூர்த்தி, "கணேசன் மொழியியல், இலக்கியப் பேராசிரியர் இல்லையே" என்பார் ஆதலான், ஹார்ட் எழுதிய கடிதத்தில் என் பெயர் இடாமல் எழுதினார். தமிழ் செம்மொழி என்று இந்தியாவின் பார்லிமெண்ட்டில் சட்டம் ஆதற்கு, ஹார்ட் தமிழ் ஏன் செம்மொழி?- என எழுதிய கடிதம் பிரசித்தி பெற்றது. பேரா. வா. செ. குழந்தைசாமி மொழிபெயர்த்தார். கவிஞர் சிற்பி, மேதகு. அப்துல் கலாம் தலைமையில் நடந்த டெல்லி தமிழ்ச் சங்க விழாவில் வாசித்தார். அதற்கு முன்னர் பார்லிமெண்ட்டில் தமிழ் செம்மொழிக் காரணங்கள் ஹார்ட் முன்மொழிந்தவை ஆராய்ந்தனர். இந்தியாவில் செம்மொழி என ஆனது முதலில் தமிழே. இரண்டாவதாய்த் தான் ஸம்ஸ்கிருதம் செம்மொழி எனப் பார்லிமெண்ட் அறிவித்தது. இதே Bh. கிருஷ்ணமூர்த்தி, தமிழ் செம்மொழி ஆனபிறகு, ஆந்திரா எம்பிகள், முதல்வரைப் பிடித்து தெலுங்கு, கன்னடம் செம்மொழிகள் ஆக்கினார். அது தவறு என ஹார்ட் ஹிண்டு பத்திரிகைக்கு எழுதினார். சில குறிப்புகள் தமிழ் செம்மொழி வாதம் பற்றிக் கொடுத்துள்ளேன். வாசித்து அருளுக:

செம்மொழி தெலுங்கு - பத்ரிராஜு கிருஷ்ணமூர்த்தியின் சேவை
திராவிடவியலாளர் ப⁴த். கிருஷ்ணமூர்த்தி முழுமடலையும் பார்க்க:
http://nganesan.blogspot.com/2010/01/hart.html
ஜான் சாமுவேல் தயாரித்தளித்த செம்மொழி தமிழ் ஆவணம் பற்றி:
http://nganesan.blogspot.com/2010/02/john-samuel-ctamil.html

---------------------


தீம்புளிப் பாகர் - வல்லமையில் ஓர் இழை. என் மடல் ஒன்று,
புளி- என்பது தயிருக்குப் புரை குத்துதல் என்ற சொற்பிறப்பில் உள்ளது., முரமுர என்னும் ideophone, மோர் போன்ற சொற்களில் முளி (தயிர்) உள்ளது

“முரம்பு தலை மணந்த நிரம்பா இயலின்
ஓங்கித் தோன்றும் உமண் பொலி சிறுகுடிக்
களரிப் புளியின் காய் பசி பெயர்ப்ப
உச்சிக் கொண்ட ஓங்கு குடை வம்பலீர்……”
(நற்றிணை 374; 1-4)
“உமணர் வாழும் மேட்டுநிலத்தில் அமைந்த எனது சிறுகுடியை ஒட்டியிருக்கும் களர் நிலத்தில் வளர்ந்திருக்கும் புளிய மரத்தில் காய்த்துக் கனிந்திருக்கும் புளியம் பழங்களைத் தின்று பசியாறி, தலைக்குமேல் குடைபிடித்து வந்துகொண்டிருக்கும் புதியவர்களே” என்று தலைவன், வழிப்போக்கர்களிடம் கூறுவது போன்று அமைந்தப் பாடல். இப்பாடல் வரிகள் சங்ககாலத்தில் புளி இருந்தமைக்கான சான்றாகவும், அது உணவாகப் பயன்பட்டிருக்கிறது என்பதாகவும் அமைகிறது.

கேரள மாநிலத்தில் மலையில் கோடம்புளி என்ற புளி கிடைக்கிறது. அது (ஆப்பிரிக்காவில் இருந்து வந்த) புளியினில் வேறுபட்ட தனி இனம். Indian native species. இறால், மீன்வகைகளுடன், கோடம்புளி (Malabar tamarind) சேர்த்து, தேக்கிலை, வாழையிலை போன்றவற்றில் தணலில் வைத்துச் சமைப்பர். முன்பு எழுதிய மடல்:
கோடம்புளி (Malabar tamarind) https://en.wikipedia.org/wiki/Garcinia_gummi-gutta

தமிழிலே புளி என்று பெயர்பெறும் 6 தாவரங்கள் உண்டு. "இன்புளி", "தீம்புளி" என்று வரும் இடங்களில் சங்கப் பாடல்கள் கோடம்புளியைக் குறிப்பதாகலாம். தேமா, புளிமா, தேமாங்கனி, புளிமாங்காய் ... போல வெவ்வேறு இனங்கள் என்க.
Smelting of Iron technology, Zebu humped cattle, Tamarind - Exchanges between India and Africa in the Third millennium BCE
needs to be researched much more.

~NG

Reply all
Reply to author
Forward
0 new messages