--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUccJrwMS8n3BjLyBv9AcKhn8J%3DosmcAQn14GoUVrwtKiA%40mail.gmail.com.
அருமையான பதிவு, திரு.கணேசன். அண்மையின் நான் படித்த அழகான திருவிளையாடற் புராணப் பாடல் ஒன்றை நினைவுறுத்துகிறது.மீனாட்சி திருக்கல்யாணத்தின் போது, சிவபெருமானுக்குப் பக்கத்தில் தடாதகை வீற்றிருந்த காட்சி பண்ணும் இசையும், நீரும் தண்மையும், பாலும் சுவையும், மலரும் மணமும், மணியும் ஒளியும் வெவ்வேறு வடிவு கொண்டிருந்த தன்மையைப் போன்றிருந்ததாகப் பரஞ்சோதியார் கூறுகிறார்.பண்ணுமின் னிசையும் நீருந் தண்மையும் பாலும் பாலில்
நண்ணுமின் சுவையும் பூவும் நாற்றமும் மணியும் அங்கேழ்
வண்ணமும் வேறு வேறு வடிவுகொண் டிருந்தால் ஒத்த(து)
அண்ணலும் உலகம் ஈன்ற அம்மையும் இருந்த(து) அம்மா.
- பரஞ்சோதியார்
On May 12, 2025, at 9:17 AM, N. Ganesan <naa.g...@gmail.com> wrote:சோனக ஆசிரியர்கள் கூறும் மதுரைத் தெய்வங்கள் திருமணம்
---------------------------------------------
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/A72C3B5C-B809-4B21-9A54-B75A6E4DE11D%40gmail.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUcTq7Uy5PcoqDrE2FFYm%2BYbkpdEnCb%3DoAogi%2BxW%3Dcv_gQ%40mail.gmail.com.
On Sun, May 18, 2025 at 12:32 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
> சேரனுக்குக் கூறப்படும் 'வண்டன்' எனும் உவமை; அவனுக்கு முன்னர் ஆண்ட வேளாளனைக் குறிக்கிறது என எண்ணுகிறேன்.
///சேரர்களுக்கு முன் வேளாளர் (கிழார்) ஆண்டதாக எங்கும் காணோம்.///
///சேரர்களே வேளிர் என்பதற்கான குறிப்புகள் உள்ளன.///
///டாக்டர் ரா. கிருஷ்ணமூர்த்தி வெளியிட்ட சங்க காலச் சேரர் நாணயங்களில் கலப்பை இருக்கிறது.///
வேளாண்மையைக்
குறிக்கும் இச் சின்னம் இந்தியாவில் சேர மன்னர்களுக்கே உண்டு. மேலும், விவசாயத்தின் கடவுளான பலராமனின்
(கண்ணனின் சகோதரன்) பனை மாலை சேரர்கள் அணிந்தனர்.
> வண்டல் எனும் மண்ணின் மகிமை கருதி அவர் மானிடர்க்கு அப்பெயரை இட்டனர் எனல் பொருந்தும் அல்லவா?!
ஆனால், பதிற்றுப்பத்து 31 பாடலைப் படித்துப் பார்க்கவும். பாடலின் பொருள் வண்டல் என்பதற்குப் பொருந்தவில்லை.
செல்வன் என்றால் ஒரு பணக்காரன். பணக்காரன் ஒருவனுடன் எதற்குப் பேரரசன் ஒப்பிடப்படுவான்? செல்வன் என்பதன்
விளக்கம் நெடுநல்வாடையில் இருப்பதனைக் காட்டியுள்ளேன்.
வண்டல் ஜடப்பொருள், வண்டன் ஆண்பால் மக்கட்பெயர் (சந்திரன் போல). -ல் (சடப்பொருள்) > -ன் (மனிதன்) அமையும் ஆண்பாற்பெயர் சங்க இலக்கியத்தில் உண்டா?
> வண்டன் = நிலவு என்பதற்கு வேறு ஏதேனும் ஆதாரம் உள்ளதா?
இருக்கலாம். தெரியவில்லை. தேடிப்பார்க்கிறேன்.
மொழியியல் படி வண்டன் = சந்திரன் என அமையலாம். வண்டு- என்பது தாது. Cf. வட்டு/வண்டு (விட்டு/விண்டு போல), வண்டில்/வட்டில் ...
வானியல் செய்திகள் நிரம்ப உள்ளவை புறம் 60, பதிற்றுப்பத்து 31, அவற்றை நெடுநல்வாடையுடன் ஒப்பிட்டு எழுதியுள்ளேன்.
மிகப் பழைய இந்திய வானியல் பற்றியும், இப்பாடல் அவற்றைச் சொல்லுவதாக இயற்றினர் என்பதற்கான விரிவான மடல்கள்:
(1)
சங்க நூல்களில் செம்மீன் என்னும் உரோகிணி நட்சத்திரம்
https://groups.google.com/g/santhavasantham/c/7tnfuomX8UE/m/duITL-wpFQAJ
(2)
பதிற்றுப்பத்து 31 - வண்டன் (= சந்திரன்) சொல்லாராய்ச்சி
https://groups.google.com/g/santhavasantham/c/7tnfuomX8UE/m/FcyvlrOFFQAJ
N. Ganesan
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUdYxP5Z%2BAt5m6AtQfNcUBBhvfSWkXHmW_G-Fe0Ni3ZePg%40mail.gmail.com.