அதிசய புளியமரம்

132 views
Skip to first unread message

N D Logasundaram

unread,
Mar 11, 2012, 10:07:10 AM3/11/12
to mint...@googlegroups.com
---------------------------------------------------------
சுபா அவர்கள் குறித்த ஓர் தொடர்

2012/3/5 cshini Tremmel <ksuba...@gmail.com>
தமிழகத்திலே இம்முறை சிவகங்கை மாவட்டத்தின் பல பகுதிகளிலும்
கிருஷ்ணகிரியிலும் நிறைய புளிய மரங்களைப் பார்த்தேன். மரங்கள்
நிறைய புளி (காய்கள்). பறித்து உடைத்துப் பார்த்தால் பச்சையாக இருக்கின்றன.
இன்னமும் காய்ந்து போக சில மாதங்கள் ஆகலாம் போல.
----------------------------------------------------------------------
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள
உரிகம் என்னும் ஊரில்
(தனித்த காட்டுப்பகுதியில் உள்ள மக்கள் வாழும் ஓர் ஊர் )
அதிசய புளியமரம்
  ஒன்று உள்ளது அதன் காய்கள்
மிகமிகப் பெரிதாக உள்ளது அந்த வியப்பிற்குரிய மரத்தின்
காய்களை பலர் எடுத்துச் சென்று அம்மாதிரி ரக புளியை வளர்க முயன்று வந்தனர்
ஓசூரில் நடந்த ஓர் பொருட்காட்சியில் இதன் காய்களை காட்சிக்கு அரசு வேளாண்மைத்
துறை யினர்  வைத்திருந்தனர்

கிருஷ்ணகிரி சேலம் ஓசூர் மாவட்டத்தைச் சார்ந்த மின்தமிழ் உறுப்பினர் எவரிட மாவது
இது பற்றிய மேலும் விவரம் தெரிந்திருந்தால் படங்கள் இருந்தால் வெளியிடலாம்

நூ த லோ சு
மயிலை

Rama Samy

unread,
Mar 11, 2012, 12:51:09 PM3/11/12
to mint...@googlegroups.com, winmani wordpress, mani kandan
நாகை மாவட்டம், திருவாவடுதுறையில், உள்ள வேப்ப மரமொன்றின் இலைகள் முழுவதும் வெள்ளையாகவே இருக்கின்றன. அதன் கீழே அமர்ந்துள்ள அம்மனும் வெள்ளை வேம்பு மாரியம்மன்  என்றே அழைக்கப்படுகின்றார்.

 திருவாவடு துறையிலிருந்து, வழி விடும் விநாயகர் கோவிலை அடுத்து ஒரு பாதை இருக்கின்றது. சிறிது தூரம் சென்றால் ஓர் ஆறு வரும். அந்த . ஆற்ற்ங்கரையில் அம்மன் வெள்ளை வேப்ப மரத்தின் கீழ் அமர்ந்திருப்பதையும் காணலாம்.

 கோவில் என்று சொல்லக் கட்டிடங்கள் எதுவும் பெரிதாகக் கிடையாது. திருவாவடுதுறை ஆதீனத்தின் மேற்பார்வையில்தான் வெள்ளை வேம்பு மாரியம்மனும் பராமரிக்கப் படுகின்றாள்.

ஆண்டு தோறும் விழாக்களும்., தினசர் மூன்று காலப் பூஜைகளும் தவறாமல் நடைபெறுகின்றன. திருமூலர் முக்தி அடந்த இடம் திருவாவடு துறை. அவருக்கென்று தனி சந்நிதியும் உள்ளது.

இந்த வெள்ளை வேப்பமரம், ஓர் உலக அதிசயம். நாத்திகர்கள் கூட வியந்து சென்று பார்த்து வரும் இடமுமாகும். செல்லும் பாதை வயல்வெளிகளுக்கு இடையில் உள்ள மண்ணாலான சாலைதான்! அங்கு பாம்புகள் நடமாட்டம் அதிகம் உண்டு. எனவே, கவனம் தேவை.

தூத்துக்குடி மாவட்டம் உவரியில் ( குலசேகரன் பட்டினம் அருகில் ) உள்ள மண் முழுவதும் இரத்தச் சிகப்பாகவே இருக்கும்.

இதுபோன்று விடை காண இயலாத அதிசயஙகள் நமக்கும் மேல் ஒரு சக்தி உள்ளது என்பதை உணர்த்திட ஆங்காங்கே இருந்து கொண்டும்  அவ்வப் பொழுது  நடந்துகொண்டும்தான்  இருக்கின்றன.

அன்பு, சீராசை சேதுபாலா, rssairam.blogspot.com, rssai...@gmail.com

2012/3/11 N D Logasundaram <selvi...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

--

சீராசை சேதுபாலா

india.azhagi.com :: service to mankind

http://rssairam.blogspot.com/

Subashini Tremmel

unread,
Mar 12, 2012, 3:41:19 PM3/12/12
to mint...@googlegroups.com, Subashini Kanagasundaram

2012/3/11 Rama Samy <rssai...@gmail.com>

நாகை மாவட்டம், திருவாவடுதுறையில், உள்ள வேப்ப மரமொன்றின் இலைகள் முழுவதும் வெள்ளையாகவே இருக்கின்றன. அதன் கீழே அமர்ந்துள்ள அம்மனும் வெள்ளை வேம்பு மாரியம்மன்  என்றே அழைக்கப்படுகின்றார்.

அப்படியா. மிக வித்தியாசமாக இருக்கின்றதே.
புகைப்படம் பிடித்து பகிர்ந்து கொள்ள முடியுமா?

சுபா 

Suba Tremmel
http://subastravel.blogspot.com - சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com -  ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
 
நா.ரா.கி.காளைராசன்

unread,
Nov 27, 2014, 9:44:30 AM11/27/14
to mintamil

வணக்கம் .
இராமேச்சுரம் பேருந்து நிலையத்திற்கு சற்று தொலைவில் சாலையோரம் உள்ள சுமார் 6அடி விட்டமுடைய  "பொந்த புளி" மரம் .
பொந்த என்றால் பொருள் என்ன ?

N. Ganesan

unread,
Nov 27, 2014, 9:49:28 AM11/27/14
to mint...@googlegroups.com, kalair...@gmail.com

On Thursday, November 27, 2014 8:44:30 AM UTC-6, kalai wrote:

வணக்கம் .
இராமேச்சுரம் பேருந்து நிலையத்திற்கு சற்று தொலைவில் சாலையோரம் உள்ள சுமார் 6அடி விட்டமுடைய  "பொந்த புளி" மரம் .
பொந்த என்றால் பொருள் என்ன ?

பொந்து என்று பொருள். உள்ளே அமர்ந்து தவஜ்செய்யலாம். இப்படி அரைச மரப் பொந்தில் தவஞ்செய்பவர்கள்
புத்தர்கள். இதனை காராணை விழுப்பரையன் வளமடலில் செயங்கொண்டார் பாடியுள்ளார்.
பாரதியாரும் பேசியுள்ளார்.

நா. கணேசன்

K R A Narasiah

unread,
Nov 27, 2014, 10:59:50 AM11/27/14
to mintamil
Dr Ganesan
Can yiu give me the Botanical name pl?
Narasiah

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

N D Logasundaram

unread,
Nov 27, 2014, 1:53:46 PM11/27/14
to mintamil
போந்தை என்றால் பனை மரம் 
சில பனை மரங்கள் அடிமரத்தின் மிக அடியில் மட்டும்  (தரைக்கு அடுத்து) குடம் (மொந்தை ) போல் பருத்து இருக்கும்  
இது இனத்தில் ஓர் மிகச் சிறு வேறுபாடே 
சங்க நூல்களில் இந்த போந்தை அரசர்களின்(பனை) மாலையுடன் வருகின்றது  

நம்மாழ்வார் வரலாறுதான் பலருக்கும்  தெரியுமே குழந்தைப் பருவத்தில் 
ஊமையாய் இருந்து புளிய மரப் பொந்தியோ சில காலம் வாழ்ந்தார் 
ஓர் ஆன்ம விசாரணையில் எத்தைத் தின்று எதுவாய் இருக்கும் 
எனபதற்கு விடையாக அத்தைத்தின்று அதுவாய்  இருக்கும் என பதிலளித்தவர் இந்த ஆழ்வார் 

நூ த லோ சு 
மயிலை 
எனவேல்லாம் வருமே 

2014-11-27 20:19 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

நா.ரா.கி.காளைராசன்

unread,
Nov 28, 2014, 1:08:18 AM11/28/14
to mintamil

வணக்கம் .
இராமேச்சுரம் பேருந்து நிலையத்திற்கு சற்று தொலைவில் சாலையோரம் உள்ள சுமார் 6அடி விட்டமுடைய  "பொந்த புளி" மரம் .

இந்த மரம் பார்ப்பதற்கு மிகவும் பெரியதாக இருந்தது.
அதன் அடிப்பகுதி இளவம்பஞ்சு மரம்போன்று இருந்து.  புளியமரம் போன்று மரப்பட்டைகள் இல்லை.  மேலும் இலையும் புளியஇலை போன்று இல்லை.  மரத்தின் விதைகள் எதையும் என்னால் காண இயலவில்லை.  மரத்தைப்பார்த்தால் புளியமரம் போன்று இல்லை.  ஆனாலும் மரத்தில் எழுதப்பட்டுள்ள “பொந்த புளி மரம்“ என்ற பெயரைக் கொண்டே இது ஒருவகைப் புளிய மரமாக இருக்க வேண்டும் என்று கருதவேண்டியுள்ளது.
வினோதமான ஒரு மரம்.
நாங்கள் நடைப்பயணத்தில் இருந்த காரணத்தினால் நின்று நிதானமாகப் பார்த்தும் கேட்டும் மரம்பற்றிய தகவல்களை அறிந்து கொள்ள இயலாமல் போனது.
மீண்டும் ஒரு முறை  இராமேச்சுரம் செல்லும் போது அதிகமான தகவல்களைப் பெற்றுப் பதிவு செய்ய முயற்கிக்கிறேன்.

அன்பன்
கி.காளைராசன்

தேமொழி

unread,
Nov 28, 2014, 1:19:19 AM11/28/14
to mint...@googlegroups.com, kalair...@gmail.com
இங்கு பார்க்கவும் >>>> 

இது மணல் பாங்கான இடங்களில் வளருகிறது. இதன் தண்டு மிகவும் வலிமையானதாகவும், தண்டு மற்றும் கிளைகள் பெருத்தும் காணப்படுகிறது.

seshadri sridharan

unread,
Nov 28, 2014, 1:33:18 AM11/28/14
to mintamil
பொத்தை என்பது ,பருமைக் கருத்து. இதுவே போந்தை ஆகியிருக்க வேண்டும்.

சேசாத்திரி  

நா.ரா.கி.காளைராசன்

unread,
Nov 28, 2014, 1:38:46 AM11/28/14
to தேமொழி, mintamil
வணக்கம்.
அருமையான பதிவு.  இதே மரம்தான்.

ஆனால் புளிய மரம் போன்று பட்டைகள் இல்லை. புளியமரம் போன்று இலைகள் இல்லை.  பெயரில்தான் ‘புளி‘ உள்ளது.

அன்பன்
கி.காளைராசன்

N. Ganesan

unread,
Nov 28, 2014, 7:44:44 AM11/28/14
to mint...@googlegroups.com, kalair...@gmail.com

On Friday, November 28, 2014 12:08:18 AM UTC-6, kalai wrote:

வணக்கம் .
இராமேச்சுரம் பேருந்து நிலையத்திற்கு சற்று தொலைவில் சாலையோரம் உள்ள சுமார் 6அடி விட்டமுடைய  "பொந்த புளி" மரம் .

இந்த மரம் பார்ப்பதற்கு மிகவும் பெரியதாக இருந்தது.
அதன் அடிப்பகுதி இளவம்பஞ்சு மரம்போன்று இருந்து.  

இலவ மரம். இலவம்பஞ்சு

N. Ganesan

unread,
Nov 28, 2014, 8:14:21 AM11/28/14
to mint...@googlegroups.com, jsthe...@gmail.com, kalair...@gmail.com, vallamai, Santhavasantham

On Friday, November 28, 2014 12:38:46 AM UTC-6, kalai wrote:
வணக்கம்.
அருமையான பதிவு.  இதே மரம்தான்.

ஆனால் புளிய மரம் போன்று பட்டைகள் இல்லை. புளியமரம் போன்று இலைகள் இல்லை.  பெயரில்தான் ‘புளி‘ உள்ளது.

இம்மரங்களின் பெயர்: பெயோபப். (baobab) ஆப்பிரிக்க கண்டத்தின் மரங்கள் இவை (சோளம், அராகி (அராகம் - சிவப்பு, எனவே ராகி (அ) கேழ்வரகு) போன்ற தானியங்களும் இந்தியாவுக்கு ஆப்பிரிக்கா தந்த கொடையே). இதேபோல ஒரு பெரிய செயற்கையான
பெயோபப் மரத்தை பிளாரிடா மாநில டிஸ்னிலாந்தில் அமெரிக்கர்கள் செய்திருக்கிறார்கள்.
Tree of Life Photos at Disney's Animal Kingdom

டான்சானியா நாட்டில் வனக்களில் உள்ள உள்ள பெயோபப். மரங்கள்

இந்தியாவின் முக்கியமான பெரிய மரங்கள் ~1000:

பல பயோபப் மரங்கள் உள்ளன. தமிழ்நாட்டில் ஒன்றைக் காட்டிய
காளைராஜன் அவர்களுக்கு நன்றி

Tamar-i-Him (tamarind) - flower of India - புளிக்கு பாரசீகர்கள் கொடுத்த பெயர்
ஆங்கிலம் ஆகிவிட்டது எனப் படித்திருக்கிறேன் (quoting from memory).
ஆனால், “பொந்த புளி” (இராமேச்சுரம்) - baobab மரம் (ஆப்பிரிக்க மரம்).

நா. கணேசன்

N. Ganesan

unread,
Nov 28, 2014, 8:16:37 AM11/28/14
to mint...@googlegroups.com, jsthe...@gmail.com, kalair...@gmail.com, vall...@googlegroups.com

N. Ganesan

unread,
Nov 28, 2014, 8:32:10 AM11/28/14
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com, jsthe...@gmail.com, kalair...@gmail.com
டிஸ்னிலேண்டின் பொந்தை “புளி” ஆந்திராவில் நளகொண்டாவில் உள்ளது என்று புரளி இணையத்தில்,
 
N. Ganesan

unread,
Nov 30, 2014, 8:45:22 AM11/30/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, kalair...@gmail.com, Santhavasantham, housto...@googlegroups.com, tiruva...@googlegroups.com
இராகுல திராவிடரை  டிராவிட் என்று டிவி, பத்திரிகைகள் எழுதுவதைப் பார்க்கிறோம்.
காமாந்தகீயம் காமாண்டகீயம் என எழுதுதல் பிழை என விளக்கினார் தேவ்.

அடிமரம் பருத்து இருந்தால் போந்தை. அதுபோல்,
நாட்டுக்கோழி போலல்லாது, அயல்நாட்டுக் கோழி குண்டாக இருப்பதால்
பொந்தைக் கோழி (அ) போந்தைக் கோழி எனப்படுகிறது. பொந்தை/போந்தை
எல்லா தென்னிந்திய மொழிகளிலும் இருப்பதால் அது bonda என எழுதப்படுகிறது.
சங்க இலக்கியச் சொல் போந்தை ஆங்கிலத்தில் bonda (பல்லியை balli என்பர் தெலுங்கர்),
என எழுதப்படுவது "போண்டா” என்று வாசிக்கிறோம். இது பிரதமர் மோதியின் பெயரை
modi என எழுதுவதால் மோடி என்று தமிழ் டிவிகள், பத்திரிக்கைகள் பிழைபட ஆக்குவதை ஒத்தது.

போந்தை - bonda. இப்போது போந்தை, ஆங்கிலத்தால் போண்டா ஆகிவிட்டது :-) 

--------------------

போந்தைப் புளி ஆப்பிரிக்காவில் இருந்து வருவதால் அதன் இன்னொரு பெயர் = பப்பரப் புளி.

பப்பரர் < barbara, barbaric என்னும் சொற்களோடு தொடர்புகொண்டது.
பக். 38

கம்பன் ஆப்பிரிக்கக் கருப்பர்களை “பப்பரர்” என்று அழைக்கிறான்,

‘பப்பரர் யவனர் சீனர்
   சோனகர் முதல பல்லோர்
கைப்படை அதனினோடும்
   கபிலைமாட்டு உதித்து. வேந்தன்
துப்புடைச் சேனை யாவும்
   தொலைவுறத் துணித்தலோடும்.
வெப்புடைக் கொடிய மன்னன்
   தனயர்கள் வெகுண்டு மிக்கார்.

அரத்த நோக்கினர். அல் திரள் மேனியர்.
பரித்த காவினர். பப்பரர் ஏகினார் -
திருத்து கூடத்தைத் திண் கணையத்தொடும்
எருத்தின் ஏந்திய மால் களிறு என்னவே.

நா. கணேசன்

பப்பரப் புளி -  baobab மரம். ராமேச்சுரத்தில் பப்பரப்புளி காட்டிய காளைராஜனுக்கு நன்றி.

Baobab tree's description on pg. 66 says:
"Adasonia digitata, Linn. 119 and 120.
Habitat: An African plant cultivated in various parts of India"
The same page mentions "baobab fruit".

Rameswaram tree is the baobab tree of Africa.

naras...@gmail.com

unread,
Nov 30, 2014, 10:41:30 AM11/30/14
to mintamil
While researching for Andhra Mahila Sabha,I saw one such tree there and another one is available at Museum complex. AanaiPuliyamaram!!!
Narasiah

On Sun, Nov 30, 2014 at 7:15 PM, N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
Boxbe This message is eligible for Automatic Cleanup! (naa.g...@gmail.com) Add cleanup rule | More info

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

தேமொழி

unread,
Nov 30, 2014, 11:26:50 AM11/30/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com
அப்படியானால் "போண்டா" என்ற சிற்றுண்டிக்கு அதன் உருவம் காரணமாக (போந்தை) என்ற பெயர் வந்திருக்குமோ?

பப்பரர் (பப்பர நாட்டவர்) பற்றி வேறு யாரேனும் குறிப்பிடுள்ளர்களா?  [Latin barbaricus, from Greek barbarikos, from barbaros, foreign.] 

ஆனால் இந்த சொல் காட்டுமிராண்டி, நாகரீகம் அடையாதார் என்ற பொருளில்தான் பயன்படுத்தப்படுகிறது.

[ கத்தி (குயம்) போய் போண்டா வந்தது டும்..டும்..டும்...] 

..... தேமொழி

N. Ganesan

unread,
Nov 30, 2014, 11:38:28 AM11/30/14
to mint...@googlegroups.com, vallamai
On Sunday, November 30, 2014 9:41:30 AM UTC-6, naras...@gmail.com wrote:
While researching for Andhra Mahila Sabha,I saw one such tree there and another one is available at Museum complex. AanaiPuliyamaram!!!
Narasiah

The names for baobab trees in Tamil Lexicon:
ஆனைப்புளி, பப்பரப்புளி, பாப்பாரப்புளி, பூதவிருட்சம், பூரி, பூரிமரம், பெருக்கு, பெருக்கமரம், சீமைப்புளியன்.

N. Ganesan

unread,
Dec 2, 2014, 11:05:09 AM12/2/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com

On Sunday, November 30, 2014 8:26:50 AM UTC-8, தேமொழி wrote:
அப்படியானால் "போண்டா" என்ற சிற்றுண்டிக்கு அதன் உருவம் காரணமாக (போந்தை) என்ற பெயர் வந்திருக்குமோ?

பப்பரர் (பப்பர நாட்டவர்) பற்றி வேறு யாரேனும் குறிப்பிடுள்ளர்களா?  [Latin barbaricus, from Greek barbarikos, from barbaros, foreign.] 

ஆனால் இந்த சொல் காட்டுமிராண்டி, நாகரீகம் அடையாதார் என்ற பொருளில்தான் பயன்படுத்தப்படுகிறது.

[ கத்தி (குயம்) போய் போண்டா வந்தது டும்..டும்..டும்...] 

..... தேமொழி

This is what I wrote in CTamil (CNRS, Paris) list now,
Bonda "போந்தை”

There are some Baobab trees in all states of India. There are some in Madras parks, Narasiah told that
there is one in Andhra Mahila Sabha compound. Because of the astringent fruits of baobab-s, most
of the Tamil names of it end with -puLi (normally, tamarind tree). The names for baobab trees in Tamil Lexicon:
ஆனைப்புளி, பப்பரப்புளி, பாப்பாரப்புளி, பூதவிருட்சம், பூரி, பூரிமரம், பெருக்கு, பெருக்கமரம், சீமைப்புளியன்.
பொந்தைப்புளி or போந்தைப்புளி is also commonly used for baobab.

papparar is from Arabic term, Barbara, barbarian etc., referring to Africa and Africans,
See pg. 38,

I have given two example poems from Kamban, using "papparar":
No wonder, baobab is called "pappara-p-puLi" in Tamil.

The interesting term, pOntai used for Palmyrah palm trees with the stout base in Sangam literature
is used in pOntaippuLi.  "pontaikkOzi" is the fat chicken. Like vada, dosa, meduvada, ... becoming signature 
recipes from South India all over the world, "bonda" (போண்டா made of, say, potatoes) is also very common.

In a journal, we see Kaamaandakiiyam getting rendered as kaamaaNDakiiyam in Tamil script, All magazines write
PM Modi as MODi. Rahul Dravid becomes ட்ராவிட்/டிராவிட் (note the retroflex D for drAviD). It seems
pOntai is the source word for போண்டா (bonda), when a Tamil/Dravidian word gets into English
and then comes back into Tamil. bonda < போந்தை.

N. Ganesan

Reply all
Reply to author
Forward
0 new messages