புறநானூற்றில் நடுகல்லுக்குப் படையல் வழிபாடு

596 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Mar 19, 2020, 8:34:22 AM3/19/20
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com
ஓர் அரிய புறப்பாட்டைக் காண்போம். இதைப் பாடிய புலவர் பெயர்,
அவர் கலந்துகொண்ட துயர நிகழ்ச்சி, அதைக் கண்டு மனம்வருந்திப்
பாடியமை, 2000 ஆண்டுமுன்னர் ஒரு சிற்றரசனின் வாழ்க்கை,
வாழ்க்கை நிலையாமை, அவனுக்கு நடுகல் எடுப்பது, அதன் முன்
மூன்றாம் நாள் அல்லது 16-ம் நாளில் உற்றார், தோழர்கள் கலந்துகொண்டு
செய்யும் சடங்கு, அதில் உள்ள செய்திகள் ஆராயத்தக்கன.

தும்பி, வண்டன் என்ற பெயர்களைப் பார்ப்போம்.
அகல்நாட்டில் இருந்த கோட்டை அகப்பாக்கோட்டை.
அதன் தலைவன் வண்டன். சோழநாட்டிற்கு ஆதாரமான நதி
காவேரி. அதன் நீர்வரத்தில் சோழர்களுக்குப் பெரும் அக்கறை
எப்போதும் உண்டு. எனவே, அகப்பாக் கோட்டையைச்
செம்பியன் கைப்பற்றினான்.

புறப்பாட்டு 249:
------------------------------
               249

கதிர் மூக்கு ஆரல் கீழ் சேற்று ஒளிப்ப,

கணைக் கோட்டு வாளை மீநீர்ப் பிறழ,

எரிப் பூம் பழனம் நெரித்து உடன் வலைஞர்

அரிக் குரல் தடாரியின் யாமை மிளிர,
5
பனை நுகும்பு அன்ன சினை முதிர் வராலொடு,

உறழ் வேல் அன்ன ஒண் கயல் முகக்கும்,

அகல்நாட்டு அண்ணல் புகாவே, நெருநைப்

பகல் இடம் கண்ணிப் பலரொடும் கூடி,

ஒருவழிப்பட்டன்று; மன்னே! இன்றே,
10
அடங்கிய கற்பின், ஆய் நுதல் மடந்தை,

உயர் நிலை உலகம் அவன்புக, வரிநீறு

ஆடு,  சுளகின் சீறிடம் நீக்கி,

அழுதல் ஆனாக் கண்ணள்,

மெழுகும், ஆப்பி கண் கலுழ் நீரானே.

திணையும் துறையும் அவை.

....................தும்பி சேர் கீரனார் பாடியது.

பொருள்:
திணை: பொதுவியல்
துறை: தாபதநிலை
(காஞ்சித் தினைத் துறைகளுள் ஒன்றான, 'தாமே யேங்கிய தாங்கரும் பையுள்' என்பதற்கு மேற்கோள் காட்டுவர் நச்சினார்க்கினியர் (தொல். புறத்.சூ. 24 உரை)).
கதிர் போலும் மூக்கினை உடைய ஆரல்மீன் சேற்றில் பிறழும்போது பருத்து வளைந்திருக்கும் வாளைமீன் நீரின்மேல் மிதந்து வரும்போது பூத்திருக்கும் பழமையான வயலில் நெரித்துப் பிடித்து அத்துடன் அரி ஓசை செய்யும் தடாரி போல் இருக்கும் ஆமை வெளிப்படுகையில் பனை நுங்கு போல் நிறம் கொண்ட சினை முதிர்ந்திருக்கும் வரால் ஊடோடுகையில் வேல் போல் புறழும் கயல் மீனைப் பிடித்து, அனைத்தையும் பிடித்து. வலைஞர் வழங்கத், தன் அண்ணலோடு (தலைவனோடு) பலரும் கூடிப் பகல்பொழுதெல்லாம் உண்டபோது தானும் கூடி உண்டாள். இன்று, கணவன் வாழும் காலத்தில் துலங்கிக் கிடந்த கற்பு அவன் மாண்டுபோன பின்னர் தன்னுள் அடங்கிக் கிடப்ப, ஆராயும் அழகு கொண்ட நெற்றியை உடைய மடந்தைப் பருவத்து அந்தப் பெண் நெற்றியில் வரிவரியாகத் தெரியும் திருநீறு பூசியவளாய் தரையில் முறம் அளவு பரப்பளவை சாணத்தால் (ஆப்பி) மெழுகினாள். அவள் அழும் கண்ணீரும் மெழுகும் சாணத்தில் விழுந்து தரையை மெழுகிக்கொண்டிருந்தது. (மெழுகிய அந்தத் தரையில் இட்டுத்தான் இன்று உணவு உண்ணப்போகிறாள்).

நா. கணேசன்

kanmani tamil

unread,
Mar 19, 2020, 11:50:21 AM3/19/20
to vallamai, mintamil
அழகான பாடல். 
நானும் இரங்கல் பாட்டை ரசித்துப் படித்தேன். 

ஆனால் என் ஐயம். 
பதிற்றுப்பத்து "அகப்பா எறிந்து" என்று தான் சொல்கிறது. 
அகப்பாக்கோட்டை என்று சொல்லவில்லை. 
கோட்டை வேந்தர்க்குரியது;  எயில் வேளிர்க்குரியது. 
தெளிவான வரையறை சங்க இலக்கியத்தில் உள்ளது. 
உரையாசிரியர் காலத்தில் இந்த வேறுபாடு விதந்தோதப்பட்டதா? 

அப்புறம் அந்தப் பெண்ணின் புனைவு....மிகுந்த இரக்கத்தை முரண்தொடையுடன்....
வரிநீறு பூசிய அவளது நெற்றி..... சுளகளவு இடத்தை மெழுகுகிறாள்....இந்தக் காலம் மண்சோறு சாப்பிடும் நேர்ச்சை 2000 ஆண்டுக்கால தமிழகத்து வழிபாட்டு முறை.  
அவளது பழைய உணவு முறை& இன்றைய உணவுமுறை.....
'வரிநீறு' சுளகிற்கு அடைமொழியாவதில் என்ன சிக்கல் இருக்கிறது? 
இங்கு நீறு முதலாகுபெயராய் ஆப்பியைக் குறிக்கிறது. 

   சக 

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUd%2B2acHtUmQhnvX8C8ux%2B-1kQrSMAjC5y5vjP3rC6r5Lg%40mail.gmail.com.

kanmani tamil

unread,
Mar 19, 2020, 12:59:29 PM3/19/20
to vallamai, mintamil
என்னுடைய அடுத்த ஐயம்:

அகல் + நாடு = அகனாடு என்பது உங்கள் கொள்கை  (அகல் விளக்கின் வடிவம் என்பீர்கள்)

அகம் + நாடு = அகனாடு என்பது எனது கொள்கை. 
உள்நாடு என்று பொருள் கொள்வேன். 

அகம் +???? = அகப்பா ஆனது எப்படி? 
விளக்கம் தந்தால் நல்லது. 
நானும் தெரிந்து கொள்கிறேன். 
சக 

வேந்தன் அரசு

unread,
Mar 19, 2020, 1:02:32 PM3/19/20
to vallamai, மின்தமிழ், housto...@googlegroups.com
<நெற்றியில் வரிவரியாகத் தெரியும் திருநீறு பூசியவளாய்>

கணேசரால் மட்டுமே காக்கையின் நிறம் வெள்ளை என நிறுவவியலும்.

வியா., 19 மார்., 2020, பிற்பகல் 6:04 அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUd%2B2acHtUmQhnvX8C8ux%2B-1kQrSMAjC5y5vjP3rC6r5Lg%40mail.gmail.com.

--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

naa.g...@gmail.com

unread,
Mar 19, 2020, 2:32:55 PM3/19/20
to mint...@googlegroups.com, vallamai
>வரிநீறு என்பது சுளகிற்கு அடையாவதில் என்ன சிக்கல் இருக்கிறது?

எந்த உரைகாரரும் வரி நீற்றைச் சுளகுடன் தொடர்புப்டுத்துவதே இல்லை. காரணம் எளிது. சாம்பல் பூதியை முறத்தில் பூசுதல் இல்லை.

இது சுடலையில் நடக்கும் சடங்கு,
மாவிரதியர் சம்பந்தமானது எனக் கருதுகிறேன். பாணரில் ஒரு பிரிவினர் - மங்கல அந்தணர் - பங்கு பெற்றிருப்பர். 
வீரன் இடையிலே மரித்தால் நான்மறை அந்தணர் சவத்தை வாளால் துமிப்பது சங்க பாடலில் உண்டு. மங்கலர் செய்யும் சடங்கு ஆரியர் சமயத்தில் உள்வாங்கப்படுகிறது.

இன்னும் சில மடல்கள் எழுதிய பின் கேள்வி பதில் செஷன் வைக்கலாமே.

NG

Sent from my iPhone

On Mar 19, 2020, at 10:50 AM, kanmani tamil <kanmani...@gmail.com> wrote:

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received

this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CA%2BjEHcu8Q5mdGH8Qj8R0DBZmCBia54NC09b4zFHUznqhdJ7i0Q%40mail.gmail.com.

kanmani tamil

unread,
Mar 19, 2020, 3:07:18 PM3/19/20
to mintamil, vallamai
இல்லை ; என்னால் ஐயத்தைக் கேட்காமல் இருக்க முடியாது.
நீங்கள் முடியும்போது பதில் சொல்லுங்கள்.

அகனாடு= அகல்+ நாடு என்று பிரித்து அகல்விளக்கு போன்ற நாடு என்கிறீர்கள்.
அகனகர் = ??? எப்படிப் பிரிப்பீர்கள்?
அகல் விளக்கு போன்ற நகர் என்பீர்களா?
ஏனென்றால் பாண்டியராசன் ஐயா தளம் தரும் தரவு 
அகனாடு 2 இடங்களில் தான் சிலப்பதிகாரத்தில் உள்ளது.
அகனகர் 5 முறை சங்கஇலக்கியத்திலும் இரட்டைக்காப்பியங்களில் 4முறையும் இடம் பெற்றுள்ளன. 
சக 
  
On Fri, Mar 20, 2020 at 12:25 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
எந்த உரைகாரரும் வரி நீற்றைச் சுளகுடன் தொடர்புப்டுத்துவதே இல்லை. காரணம் எளிது. சாம்பல் பூதியை முறத்தில் பூசுதல் இல்லை.
சாம்பலைப் பூசினர் என்று நானும் சொல்லவே இல்லை.
உரையாசிரியரை வம்புக்கு 
இழுப்பதை விடமாட்டீர்களா ?   
அவர்கள் விளக்குத்தூண்களாய் நிற்கட்டும்.
நாம்முன்னேறிச் செல்வோம் 
சுளகில் பூசப்பட்டது ஆப்பி ; நீறு முதலாகுபெயர்.  

இது சுடலையில் நடக்கும் சடங்கு,
மாவிரதியர் சம்பந்தமானது எனக் கருதுகிறேன். பாணரில் ஒரு பிரிவினர் - மங்கல அந்தணர் - பங்கு பெற்றிருப்பர். 
வீரன் இடையிலே மரித்தால் நான்மறை அந்தணர் சவத்தை வாளால் துமிப்பது சங்க பாடலில் உண்டு.
சேரன் பற்றிய பாடலில் மட்டும் தான் உள்ளதென நினைக்கிறேன்.
 மங்கலர் செய்யும் சடங்கு ஆரியர் சமயத்தில் உள்வாங்கப்படுகிறது.
இன்னும் சில மடல்கள் எழுதிய பின் கேள்வி பதில் செஷன் வைக்கலாமே.
NG/// wrote 15mts.ago
சக 

kanmani tamil

unread,
Mar 19, 2020, 10:22:36 PM3/19/20
to mintamil, vallamai
கொஞ்சம் யோசித்த பிறகு புரிந்தது. 
பண்டைத் தமிழர் கூகைக்குப் படையலிட்டு வழிபாடு நடத்தினர் என்று சொன்னது போல;  ஏதோ சொல்ல வருகிறீர்கள். 

இதிலுள்ள பாணரின் ஒரு பிரிவினர் அந்தணர் என்பது புதுச்செய்தி. 
அவள் வழிபாடு நடத்துகிறாள் . 
ஆனால் அது சுடுகாட்டிலா? 
பெண்கள் செல்லாத இடமாயிற்றே. 

சக 

N. Ganesan

unread,
Mar 19, 2020, 11:35:55 PM3/19/20
to மின்தமிழ், vallamai
On Thu, Mar 19, 2020 at 9:22 PM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
கொஞ்சம் யோசித்த பிறகு புரிந்தது. 
பண்டைத் தமிழர் கூகைக்குப் படையலிட்டு வழிபாடு நடத்தினர் என்று சொன்னது போல;  ஏதோ சொல்ல வருகிறீர்கள். 

இதிலுள்ள பாணரின் ஒரு பிரிவினர் அந்தணர் என்பது புதுச்செய்தி. 
அவள் வழிபாடு நடத்துகிறாள் . 
ஆனால் அது சுடுகாட்டிலா? 
பெண்கள் செல்லாத இடமாயிற்றே. 

தலைவி சென்றதற்குச் சங்க இலக்கியம் சான்று தருகிறது.
தலைவனை எரிக்கும் சிதையில் தீக்குளித்திருகின்றனர்.
சதிக்கல்கள் நாடெங்கும் “கை” சின்னத்துடன் காண்கிறோம்.

விறலியரும் நடுகல் வழிபாட்டில் இடம்பெற்றிருப்பர்.
ஔவை அதியமான் இறந்துபட்ட போது, அவன் நடுகல்லில்
மயிற்பீலி அணிந்திருப்பதை இரங்கிப் பாடினார்.

பொதுவாக, வேறு பெண்கள் செல்லாத இடம்.
ஆனால், புறம் 249 தெளிவாக மனைவி படைக்கும் இடம்
பற்றிச் சொல்கிறது.

நா. கணேசன்

சக 

kanmani tamil

unread,
Mar 20, 2020, 12:19:12 AM3/20/20
to vallamai, mintamil
கணவன் சிதையோடு தீக்குளித்தவள் பற்றி 20ம் நூற்றாண்டில் நடந்த நிகழ்வு ஒன்று.....

தேமொழி உதவி செய்யுங்களேன்.  

அதனால் அது கிட்டத்தட்ட வலுக்கட்டாயமாக நடந்தேறியது என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை. 
வேந்தர் குலப்பெண்கள் தீக்குளித்தமைக்கு மட்டும் தான் சான்றும் உள்ளது. 
ஆக அது அரசாங்க நிகழ்வுகளில் ஒன்று ஆகிவிட்டது. 

ஔவை பாண்கடன் இறுக்கும் குலத்தினள். அவளே தன் கலைக்குழுவோடு சேர்ந்து பாண்கடன் இறுக்கிறாள். 
அவள் நடுகல்லை வருணித்துப் பாடுவது இயல்பானது; இயற்கையும் கூட.... 

குறிப்பிட்ட புறப்பாட்டு வேளிர் குலப் பெண் செய்கையைப் புனைவதாகக் கருதுகிறீர்களா? 
நெல் பற்றிய குறிப்பே இல்லை. 
எப்படித் திட்டவட்டமாகச் சொல்ல முடியும்? 

நீங்கள் சுட்டும் புறப்பாடலில்.....மாவிரதியர் சுடுகாட்டுச் சாம்பலைக் கொண்டுவந்து கொடுக்க அவள் அணிந்திருப்பாள் என்று எண்ண இடமுள்ளது. 

ஆனாலும் "நீறாடு சுளகு" ஆப்பியால் மெழுகிய சுளகு என்று பொருள்கொள்வதில் சிக்கல் எதுவும் ஏற்படவில்லையே. 

சக    

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

N. Ganesan

unread,
Mar 20, 2020, 12:27:01 AM3/20/20
to மின்தமிழ், vallamai
On Thu, Mar 19, 2020 at 11:19 PM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
கணவன் சிதையோடு தீக்குளித்தவள் பற்றி 20ம் நூற்றாண்டில் நடந்த நிகழ்வு ஒன்று.....

தேமொழி உதவி செய்யுங்களேன்.  

அதனால் அது கிட்டத்தட்ட வலுக்கட்டாயமாக நடந்தேறியது என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை. 
வேந்தர் குலப்பெண்கள் தீக்குளித்தமைக்கு மட்டும் தான் சான்றும் உள்ளது. 
ஆக அது அரசாங்க நிகழ்வுகளில் ஒன்று ஆகிவிட்டது. 

ஔவை பாண்கடன் இறுக்கும் குலத்தினள். அவளே தன் கலைக்குழுவோடு சேர்ந்து பாண்கடன் இறுக்கிறாள். 
அவள் நடுகல்லை வருணித்துப் பாடுவது இயல்பானது; இயற்கையும் கூட.... 

குறிப்பிட்ட புறப்பாட்டு வேளிர் குலப் பெண் செய்கையைப் புனைவதாகக் கருதுகிறீர்களா? 
நெல் பற்றிய குறிப்பே இல்லை. 
எப்படித் திட்டவட்டமாகச் சொல்ல முடியும்? 

நீங்கள் சுட்டும் புறப்பாடலில்.....மாவிரதியர் சுடுகாட்டுச் சாம்பலைக் கொண்டுவந்து கொடுக்க அவள் அணிந்திருப்பாள் என்று எண்ண இடமுள்ளது. 

ஆனாலும் "நீறாடு சுளகு" ஆப்பியால் மெழுகிய சுளகு என்று பொருள்கொள்வதில் சிக்கல் எதுவும் ஏற்படவில்லையே. 

வரி நீறு என்றால் சாம்பல். ஆப்பி இல்லை.   சாம்பலில் மெழுகிய முறம் என்பது எப்பது நீற்றுச் சாம்பலால்
முழுகுவது ஆகும்??? நீறு கொண்டு முறத்தை மெழுகுவது எங்கும் இல்லை.

சதி தமிழர்/த்ராவிடர் வழக்கம். சங்க இலக்கியத்தில் சதி பற்றிப் பார்க்கவும்.

தலைவன் நினைவிடத்தில் அவனுக்குப் படையல் தலைவி இடும் பாடல் புறம் 349.

இதில் நீறு நெற்றியில் ஆடுகிறவள் தலைவி.
நீறு முறத்தில் பூசுவது பற்றிய பாடல் அல்ல இது.

நா. கணேசன்
 
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CA%2BjEHctnp3%3DtDvPjYbe2AgJFfP4dYW1pXcxtXJ9BQ800zJ5Y%3Dw%40mail.gmail.com.

kanmani tamil

unread,
Mar 20, 2020, 12:36:54 AM3/20/20
to mintamil, vallamai
இங்கே நீறு = (ஆகுபெயர்) ஆப்பி 
என்று பலமுறை சொல்லிவிட்டேன் 

ரொம்பக் கோளாறாக ஆகுபெயர் பற்றிப் பேசுவதைத் தவிர்க்கிறீர்கள். 
சக 

N. Ganesan

unread,
Mar 20, 2020, 12:37:59 AM3/20/20
to மின்தமிழ், vallamai
On Thu, Mar 19, 2020 at 2:07 PM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
இல்லை ; என்னால் ஐயத்தைக் கேட்காமல் இருக்க முடியாது.
நீங்கள் முடியும்போது பதில் சொல்லுங்கள்.

அகனாடு= அகல்+ நாடு என்று பிரித்து அகல்விளக்கு போன்ற நாடு என்கிறீர்கள்.
அகனகர் = ??? எப்படிப் பிரிப்பீர்கள்?
அகல் விளக்கு போன்ற நகர் என்பீர்களா?
ஏனென்றால் பாண்டியராசன் ஐயா தளம் தரும் தரவு 
அகனாடு 2 இடங்களில் தான் சிலப்பதிகாரத்தில் உள்ளது.
அகனகர் 5 முறை சங்கஇலக்கியத்திலும் இரட்டைக்காப்பியங்களில் 4முறையும் இடம் பெற்றுள்ளன. 
சக 
 
நிறையப் பேசியாயிற்றே. அரி என்ற சொல்லுக்குப் பல பொருள்.
அரிமா = ஹரிமா (=சிங்கம்), ஆனால் அரிக்குரல் வேறு.
அதுபோல, சிலம்பில் உள்ள அகல்நாடு = அகல்போன்ற நாடு.
ஆனால், சங்க இலக்கியத்தில், அகல்நகர் = அகன்ற நகர் = அகன்ற மனை.

அகல்நாடு என சிலம்பு தரும் இரு இடங்களிலும் நிலவியலால்
கொங்குநாடு பெறும் பெயருக்குப் பொருந்துகிறது.
“இவளோ, கொங்கச் செல்வி” என்று கண்ணகி வாழ்த்தைப் பெற்றவள்.
முதன்மையாக, இவ்வாறு பாராட்டப்படுவதால்தான்
அகல்நாடு என கொங்குநாட்டை இரு இடங்களில்
இளங்கோ அடிகள் பாடியுள்ளார்.
சேரன் மனைவி “நம் அகல்நாடு அடைந்த இப்பத்தினிக் கடவுளைப்
பரசல் வேண்டும்' என்ற வேண்டுகோளை வைக்க அதை
ஏற்று, சேரநாட்டின் தலைநகர் வஞ்சி (கரூர்) மாநகரில்
கண்ணகிக்குக் கோயில் எடுத்தான். வஞ்சி ஆன்பொருனை (அமராவதி)
கரையில் உள்ளது என்றும் விளக்கியிருக்கிறார் இளங்கோ அடிகள்.

கொங்குநாட்டிலே நீலகிரியில் இன்றும் அகனாடு என்ற ஊர் உள்ளது.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Mar 20, 2020, 12:40:18 AM3/20/20
to மின்தமிழ், vallamai
On Thu, Mar 19, 2020 at 11:36 PM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
இங்கே நீறு = (ஆகுபெயர்) ஆப்பி 
என்று பலமுறை சொல்லிவிட்டேன் 

பலமுறை, நீற்றுக்கும் சுளகுக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்டுள்ளேன்.
தனியாக, ஆப்பி என்று பாடலில் இருக்கிறது,

சுளகு எங்கேயும் நீறு ஆடுவதில்லை.

நா. கணேசன்

kanmani tamil

unread,
Mar 20, 2020, 12:41:15 AM3/20/20
to mintamil, vallamai
சதி வேந்தர் வழக்கம்;  வேந்தர் திராவிடர் என்றால் சதி திராவிடர் வழக்கம். 

ஆனால் உதைக்கிறது. 
வேந்தர் வருணப் பாகுபாட்டில் மேனிலையில் இருந்தவர்.
வருணப்பாகுபாடு திராவிடருடையதா? 

சக  

N. Ganesan

unread,
Mar 20, 2020, 12:43:50 AM3/20/20
to மின்தமிழ், vallamai
On Thu, Mar 19, 2020 at 11:36 PM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
இங்கே நீறு = (ஆகுபெயர்) ஆப்பி 
என்று பலமுறை சொல்லிவிட்டேன் 

எந்த இலக்கியத்தில் நீறு = ஆப்பி என்று இருக்கிறது?
இலக்கியப் பெயரும், பாடல் அடிகளும் தந்தால் படித்துப் பார்க்கலாம்.

நீறு = சாம்பர், புழுதி/பூதி என அறிவேன். ஆயிரக்கணக்கான
பாடல்களில் பார்க்கலாம்.

நீறு = ஆப்பி எந்த இலக்கியம்?
யாருமே இப்படி ஒரு பொருளை நான் எடுத்துக்கொண்டுள்ள
புறப்பாட்டுக்கு உரை சொல்லவில்லை.

நா. கணேசன்

kanmani tamil

unread,
Mar 20, 2020, 12:44:24 AM3/20/20
to mintamil, vallamai
சுளகு ஆப்பியாடுவதைத் தான் நீறாடு சுளகு என்ற தொடரில் குறிப்பிடுகிறார்.சக 

N. Ganesan

unread,
Mar 20, 2020, 12:57:58 AM3/20/20
to மின்தமிழ், vallamai
On Thu, Mar 19, 2020 at 11:44 PM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
சுளகு ஆப்பியாடுவதைத் தான் நீறாடு சுளகு என்ற தொடரில் குறிப்பிடுகிறார்.சக 

இல்லை.

நீறு என்றால் சாம்பலாக எரிந்துபோன ஆப்பி. அதைக்கொண்டு சுளகு யாரும்
மெழுகுதல் இல்லை.

நா. கணேசன்

On Thu, Mar 19, 2020 at 11:36 PM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
இங்கே நீறு = (ஆகுபெயர்) ஆப்பி 
என்று பலமுறை சொல்லிவிட்டேன் 

எந்த இலக்கியத்தில் நீறு = ஆப்பி என்று இருக்கிறது?
இலக்கியப் பெயரும், பாடல் அடிகளும் தந்தால் படித்துப் பார்க்கலாம்.

நீறு = சாம்பர், புழுதி/பூதி என அறிவேன். ஆயிரக்கணக்கான
பாடல்களில் பார்க்கலாம்.

நீறு = ஆப்பி எந்த இலக்கியம்?
யாருமே இப்படி ஒரு பொருளை நான் எடுத்துக்கொண்டுள்ள
புறப்பாட்டுக்கு உரை சொல்லவில்லை.

நா. கணேசன்

kanmani tamil

unread,
Mar 20, 2020, 1:00:00 AM3/20/20
to mintamil, vallamai
யாரோ உரை கூறவேண்டிய தேவை என்ன? 
இலக்கியத்தை மனம் ஒன்றிப் படித்தால் தெளிவாகும் பொருள்.......

45 ஆண்டுகள்  இலக்கியத்தைப் படித்தபின் உரையாசிரியர் சொன்ன சொல்லுக்கு மேல் சிந்திக்க மாட்டேன் என்று அடம் பண்ணினால்... 

என் மாணவரைக் கண்டிப்பது போல் பேச இது வகுப்பறை இல்லையே. ...

சக

On Fri, 20 Mar 2020 10:14 am kanmani tamil, <kanmani...@gmail.com> wrote:
சுளகு ஆப்பியாடுவதைத் தான் நீறாடு சுளகு என்ற தொடரில் குறிப்பிடுகிறார்.சக 

On Fri, 20 Mar 2020 10:11 am kanmani tamil, <kanmani...@gmail.com> wrote:
சதி வேந்தர் வழக்கம்;  வேந்தர் திராவிடர் என்றால் சதி திராவிடர் வபடித்தபிறக் ழக்கம். 

N. Ganesan

unread,
Mar 20, 2020, 1:07:36 AM3/20/20
to மின்தமிழ், vallamai
On Fri, Mar 20, 2020 at 12:00 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
யாரோ உரை கூறவேண்டிய தேவை என்ன? 
இலக்கியத்தை மனம் ஒன்றிப் படித்தால் தெளிவாகும் பொருள்.......

நானும் மனம் ஒன்றித்தான் படிக்கிறேன்.
நீறு கொண்டு யாரும், எங்கும் முறத்தை மெழுகுதல் இல்லை.

2000 ஆண்டுகளாக இப்பாடலைப் படித்தோர் விளக்குவது
சரி. நீறு என்பது சுளகோடு ஒன்றுவதில்லை என அவர்கள்
விளக்கம் கொள்கிறேன்.

நா. கணேசன்

45 ஆண்டுகள்  இலக்கியத்தைப் படித்தபின் உரையாசிரியர் சொன்ன சொல்லுக்கு மேல் சிந்திக்க மாட்டேன் என்று அடம் பண்ணினால்... 

என் மாணவரைக் கண்டிப்பது போல் பேச இது வகுப்பறை இல்லையே. ...

சக
On Thu, Mar 19, 2020 at 11:36 PM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
இங்கே நீறு = (ஆகுபெயர்) ஆப்பி 
என்று பலமுறை சொல்லிவிட்டேன் 

எந்த இலக்கியத்தில் நீறு = ஆப்பி என்று இருக்கிறது?
இலக்கியப் பெயரும், பாடல் அடிகளும் தந்தால் படித்துப் பார்க்கலாம்.

நீறு = சாம்பர், புழுதி/பூதி என அறிவேன். ஆயிரக்கணக்கான
பாடல்களில் பார்க்கலாம்.

நீறு = ஆப்பி எந்த இலக்கியம்?
யாருமே இப்படி ஒரு பொருளை நான் எடுத்துக்கொண்டுள்ள
புறப்பாட்டுக்கு உரை சொல்லவில்லை.

நா. கணேசன்
 
N. Ganesan

unread,
Mar 20, 2020, 1:18:09 AM3/20/20
to மின்தமிழ், vallamai
On Fri, 20 Mar 2020 10:14 am kanmani tamil, <kanmani...@gmail.com> wrote:
சுளகு ஆப்பியாடுவதைத் தான் நீறாடு சுளகு என்ற தொடரில் குறிப்பிடுகிறார்.சக

மஞ்சள் பொடியைத் தேய்த்து நீராடுவது பெண்டிரின் பழைய மரபு. மஞ்சள் 5000 ஆண்டுகளாக
இந்தியாவில் பயிர் ஆகிறது. மஞ்சள் பொடியை அடுப்பில் இட்டால் கரித் தூள் ஆகிறது.

”கரியாடு பெண்” என்று ஒரு பாட்டில் ஒரு வரி வருகிறது எனக் கொள்வோம்.
கரி என்பது மஞ்சளின் ஆகுபெயர். எனவே, புலவர் மஞ்சள் ஆடு பெண்
என்பதற்குப் பதிலாக, கரி ஆடு பெண் என்று பாடுவார். இப்படிக் கொள்ளலாமா?
அதுபோல் இருக்கிறது. சாணி ஆடு சுளகு என்பதற்குப் பதிலாக,
சாணியை வறட்டி ஆக்கி, தீயில் சுட்டால் கிடைக்கும் நீறு (சாம்பர்)
நீறு ஆடு சுளகு என்றால் சாணி ஆடு சுளகு என்று பொருள் கொள்ள வேண்டும்
என்பது.

நா. கணேசன்
 
N. Ganesan

unread,
Mar 22, 2020, 10:50:16 AM3/22/20
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com
தும்பி சேரகீரனார் பாட்டில் அரிய செய்திகள் உள்ளன. வடநாட்டு சமயங்கள் மோதி,
தமிழகத்தில் சமநிலைக்கு வருதலைக் காட்டும் காலப் பட்டகம். A snapshot
in Time explaining the Tamil religions settling down. கபிலபரணர் என்பதுபோல்
நடைமுறையில் கிராமச் சமூகத்தில் உள்ள சொல்: வண்ணாரநாவிதர்.
சங்க இலக்கியத்தில் பாணர்களைப் பற்றிச் சொல்லும் பாடல்களில்
உள்ளே இரு குடியினரும் உண்டு. வெளிப்படையாக பாடல்களில்
இருப்பதால் மண்ணார் சமூகம் பற்றித் தெரிகிறது சங்க காலத்தில்.
ஆனால், கேசகர் என்னும் பாணர் பிரிவினரைப் பற்றி பாணர் என்ற
சொல்லாலே மட்டும் குறித்தனர். வைத்திய சாஸ்திரத்திற்கு இவர்கள்
ஆற்றிய பங்கு பெரிது: மருத்துவர், பண்டிதர். உ-ம்: கருடவாகன
பண்டிதர் (ஸ்ரீரங்கம்), ஆபிரகாம் பண்டிதர் (தமிழிசை ஆய்வைத் தொடங்கி
அரும்பணி செய்த பண்டிதர்களில் முதல்வர்), ஐரோப்பாவில்
ஷாம்பூ அறிமுகம் செய்த வட பண்டிதர்கள், ஆமாத்திய அந்தணர்
என அழைக்கப்பட்ட வாதாபிப் போர்செய்த பரஞ்சோதி, பாவை
பாடிய வாயால் கோவை பாடு என்று சிவன் உத்தரவிட்டுப் பாடிய
மாணிக்கவாசகர் ... என்று இந்த மங்கலப் பாணர்கள் பங்களிப்பு
மிகப் பெரிது.

முதலில் மாத்துப் பந்தல் என்பது கட்டும் மண்ணார்கள்
தும்பி சேரகீரனார் கலந்துகொண்ட துயர்விழவில் ஈடுபட்டிருக்கலாம்.
இதுபோன்ற நாட்களில் மங்கலர் பங்கு என்ன? பார்ப்போம்.

முதலில், சுளகு, முறம் பற்றிய செய்திகள்.
சுளகு குளகு போல வாய் குறுகி இருக்கும். சேம்பின் இலைபோல
இருப்பது சுளகு (கலித்தொகை). அதன் சொற்பிறப்பு
தொழில் அடிப்படையில் துள்- எனும் வினை காரணமாக எழுந்தது.
வாய் குறுகும் சுளகு பார்த்து எழும் ஓர் வினைச்சொல்:
சுளுக்கு-தல். ‘கழுத்து சுளுக்கிக்கிச்சு’ என்பதில் உள்ள சுளுக்குதல் - உள்வாங்குதல்.
சுளுக்கு- > உளுக்கு- இது, உளுக்கார்தல் என்னும் வினைச்சொல் ஆகிறது.
உளுக்கார்தல் என்னும் இலக்கிய வழக்கை இன்றும் பயன்படுத்துகிறோம்.
உட்கார்தல் என்று உளுக்கார்தல் சுருங்கிவிட்டது. “வாங்கோ, உட்காருங்கோ”.

சுளகுக்கு மாறாக விரிவான வாயை உடையது முறம்.
கூலங்கள் தூற்றப் பயன்படும் முறம். வடமொழியில் தூற்று- என்னும்
வினைச்சொல் சூர்ப்பம் எனப் பெயர்ந்தது.
முறம்: என்னும் சொல்லாய்வு. முரலுதல் என்றால்
வண்டு, தேனீ, சிதர், ஞிமிறு, சுரும்பு, ... என்னும் அளி இனங்கள்,
பறவை இனங்கள் றெக்கையை மேலுங்கீழும் அடித்தல்.
”வரிவண்டு முரன்று பாட” முரல்தல் = முரன்றுதல்.
பல சொற்கள் ர/ற மாற்றமுண்டு. கருப்பு/கறுப்பு; முரிதல்/முறிதல்.
முரலுதல் - மேலும் கீழும் விரைந்து அசைத்து தானியங்களைப்
புடைத்தல் இதற்கான வேளாண் தொழிற்கருவி: முறம். இது முரம் < முரல்-
என்ற வினைச்சொல்லில் பிறக்கும் பெயராகும்.

NG

N. Ganesan

unread,
Mar 22, 2020, 11:25:07 AM3/22/20
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com
On Sun, Mar 22, 2020 at 9:51 AM N. Ganesan <naa.g...@gmail.com> wrote:

பறைக் கருவிகளில் சிறந்தது முரசு. பறை முழக்குவாரில் உயர்ந்தோர் முரசு
என்பார் எட்கர் தர்ஸ்டன்.

முரசு, முரவம் என்ற சொற்களுக்கும் தாதுவேர்: முரல்-தல்.
பறவை, பறை சிறகுகளை பறபற என அடிப்பது.
அதேபோல், முறம் (< முரம்), முரசு, முரவு : இறகுகள் முரல்வதால்.

வண்டினம் முரலும்  சோலை,
          மயிலினம் ஆலும் சோலை,
கொண்டல் மீது அணவும் சோலை,
         குயிலினம் கூவும் சோலை,
அண்டர் கோன் அமரும் சோலை
         அணி திருவரங்கம் என்னா
மிண்டர் பாய்ந்து உண்ணும் சோற்றை
         விலக்கி நாய்க்கு இடுமின் நீரே

NG

kanmani tamil

unread,
Mar 22, 2020, 12:51:52 PM3/22/20
to mintamil, vallamai
/// ஆனால், கேசகர் என்னும் பாணர் பிரிவினரைப் பற்றி பாணர் என்ற
சொல்லாலே மட்டும் குறித்தனர். வைத்திய சாஸ்திரத்திற்கு இவர்கள்
ஆற்றிய பங்கு பெரிது: மருத்துவர், பண்டிதர். உ-ம்: கருடவாகன
பண்டிதர் (ஸ்ரீரங்கம்), ஆபிரகாம் பண்டிதர் (தமிழிசை ஆய்வைத் தொடங்கி
அரும்பணி செய்த பண்டிதர்களில் முதல்வர்),/// Dr.Ganesan wrote 1hr.ago.

கவனம் முனைவர் கணேசன்.
ஆபிரகாம் பண்டிதரின் வழித்தோன்றல்கள் சிவகாசியில் இருப்பதை அறிவேன்.

அவருக்குப் பண்டிதர் என்னும் பட்டம் வரக் காரணம் அவரது பல்துறைப் பாண்டித்தியம்.
தென் தமிழகத்து .....எதோ ஒரு விளையைச் சேர்ந்த கிறித்துவ நாடார்.

1995 என்று நினைக்கிறேன் (கிட்டத்தட்ட).
அவரது குடும்பத்தினர் பற்றிய கிளைமரப்படம் ஒன்றை  (கிட்டத்தட்ட 50 தலைக்கட்டு இருக்கும்.) நான் பணியாற்றிய கல்லூரியின் தாளாளர் 
திரு.A .செல்லத்துரை(late) என்னிடம் கொடுத்து; ஆப்ரகாம் பண்டிதர் பற்றிய செய்திகள் எக்கச்சக்கமாகக் கொடுத்துத் தங்கள் குடும்பக் கூட்டத்தில் படிக்க ஒரு அழகான கட்டுரையெழுதித் தரும்படி கேட்டு வாங்கினார். நானும் செய்தென்; ஆனால் அப்போது அந்தத் தரவுகளையோ/ நான் எழுதியதையோ ஒரு நகல் எடுத்து வைக்கக் கூடத் தோன்றவில்லை. என்னை ஞாயிற்றுக்கிழமை கல்லூரிக்கு அழைத்து; என் குடும்ப நேரத்தைப் பறித்து விட்டாரே என்ற கோபம் தான் இருந்தது. அதற்காக எனக்கு ஒரு சான்றிதழ் கொடுத்து அனுப்பினார்.
  
பல தலைமுறைகள் கடந்து விட்டன என்றாலும்; அவர்கள் தம்மை அவ்வப்போது அடையாளப் படுத்திக் கொள்வதையும் அறிவேன்.
இரண்டு மாதங்களுக்கு முன்னர் மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் நடந்த இசைமாநாட்டிற்குக் கூட அவரது உறவினரான ஒரு பெண் இசை வல்லுநர் வந்திருந்தார்.
சக   

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

N. Ganesan

unread,
Mar 22, 2020, 1:39:44 PM3/22/20
to மின்தமிழ், vallamai
On Sun, Mar 22, 2020 at 11:51 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
/// ஆனால், கேசகர் என்னும் பாணர் பிரிவினரைப் பற்றி பாணர் என்ற
சொல்லாலே மட்டும் குறித்தனர். வைத்திய சாஸ்திரத்திற்கு இவர்கள்
ஆற்றிய பங்கு பெரிது: மருத்துவர், பண்டிதர். உ-ம்: கருடவாகன
பண்டிதர் (ஸ்ரீரங்கம்), ஆபிரகாம் பண்டிதர் (தமிழிசை ஆய்வைத் தொடங்கி
அரும்பணி செய்த பண்டிதர்களில் முதல்வர்),/// Dr.Ganesan wrote 1hr.ago.

மேனிலையாக்கம் பல காலமாக நிகழ்வது. பல சமூகங்களில் இந்தியா
முழுதும். பல பாதிரிகள் எழுதியுள்ளனர். 

பண்டிதர் பழைய பாணர்களில் ஒரு முக்கியமான வகுப்பினர்.
" The publication of Silapathikaram by U. V. Swaminatha Iyer in 1892, made Pandithar interested in Tamil music and he started studying it. He learnt traditional music as he is part of the Navithar Community, from Sadayandi Bhattar and western classical music from Tanjore A. G. Pichaimuthu pillai. He did extensive research on the origins and form of Tamil music. He established the Sangeetha Vidhyalaya Mahajana Sangam - a music association and organised six music conferences during 1912–1914. In 1917, he published his research into Tamil music as Karunamirdha Sagaram, a 1346-page book, that remains a seminal work in the field till today. He also published Karunamirdha Sagara Thirattu - a collection of Tamil practice songs (musicians of that period trained using Telugu songs). He also translated several Keerthanais into Tamil. He attended the All India Music Conference held at Baroda in 1916 and presented his research there.[1][2]"

NG
 
kanmani tamil

unread,
Mar 22, 2020, 10:17:28 PM3/22/20
to vallamai, mintamil
இதே கருதுகோளை 
            பொருநர் >>> வள்ளுவர் >>> வல்லபர்
என்ற மாற்றத்திற்கும் ஏற்றுக் கொள்ளுங்கள். 

பதட்டம் வேண்டாம். 
AC யின் ஆவிக்கு உங்கள் வாதத்தின் போக்கு தெரிந்தால். ..... 
இங்கே இருக்கும் கிறித்துவ நாடார்களுக்குத் தெரிந்தால். .......

போதும். 
Cut cut cut   
Sk 

You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUf0A-jrEuKDxBeCJK5dVHxui0AdgS_87itiXiCJ7q%2B2EA%40mail.gmail.com.

N. Ganesan

unread,
Mar 22, 2020, 10:29:46 PM3/22/20
to மின்தமிழ், vallamai
On Sun, Mar 22, 2020 at 9:17 PM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
இதே கருதுகோளை 
            பொருநர் >>> வள்ளுவர் >>> வல்லபர்
என்ற மாற்றத்திற்கும் ஏற்றுக் கொள்ளுங்கள். 

வல்லபன் என்ற வேளிர் பெயர் வல்லுவன்/வள்ளுவன் எனக்
கல்வெட்டுக்களில் மாறியிருக்கிறது.

பொருநன் என்றால் (1) வீரன் (2) இசைக்கலைஞன்
என்ற இரு வேறு பொருட்கள் சங்க இலக்கியத்தில்
இருக்கிறது. வல்லப வேளிர் இசைக்கலைனர் அல்லர்.
 
நா. கணேசன்

N. Ganesan

unread,
Mar 22, 2020, 11:05:39 PM3/22/20
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com
குறுந்தொகை

 25.    
யாரு மில்லைத் தானே கள்வன் 
    
தானது பொய்ப்பின் யானெவன் செய்கோ  
    
தினைத்தா ளன்ன சிறுபசுங் கால 
    
ஒழுகுநீ ராரல் பார்க்கும் 
5
குருகு முண்டுதான் மணந்த ஞான்றே. 
என்பது வரைவு நீட்டித்த விடத்துத் தலைமகள் தோழிக்குச் சொல்லியது.

இப்பாட்டில், சிறு பசுங்கால குருகு; ஒழுகுநீர் ஆரல் பார்க்கும் குருகு என்று எடுத்துப் பொருள் காண்கிறோம்.
சிறுபசுங்கால் குருகுக்கு இல்லை. எனவே, இவ்வாறு பிரிக்கிறோம்.
அதே போன்றது, புறம் 249-ம் பாடல்:
வரிநீறு ஆடு, அழுதல் ஆனாக் கண்ணள்;
சுளகின் சீறிடம் நீக்கி, அழுதல் ஆனாக் கண்ணள்
என்றால் பொருள் புரியும்.
வரிநீறு ஆடுதல் சுளகுக்கு இல்லை,
எனவே, இவ்வாறு பிரிக்கிறோம்.

N. Ganesan

unread,
Mar 22, 2020, 11:14:14 PM3/22/20
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com
On Sun, Mar 22, 2020 at 10:06 PM N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
குறுந்தொகை

 25.    
யாரு மில்லைத் தானே கள்வன் 
    
தானது பொய்ப்பின் யானெவன் செய்கோ  
    
தினைத்தா ளன்ன சிறுபசுங் கால 
    
ஒழுகுநீ ராரல் பார்க்கும் 
5
குருகு முண்டுதான் மணந்த ஞான்றே. 
என்பது வரைவு நீட்டித்த விடத்துத் தலைமகள் தோழிக்குச் சொல்லியது.

இப்பாட்டில், சிறு பசுங்கால குருகு; ஒழுகுநீர் ஆரல் பார்க்கும் குருகு என்று எடுத்துப் பொருள் காண்கிறோம்.
சிறுபசுங்கால் குருகுக்கு இல்லை. எனவே, இவ்வாறு பிரிக்கிறோம்.
 
சிறுபசுங்கால் ஆரலுக்கு இல்லை. திருத்தம்.

N. Ganesan

unread,
Mar 22, 2020, 11:44:20 PM3/22/20
to மின்தமிழ், vallamai
On Sun, Mar 22, 2020 at 9:17 PM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:

போதும். 
Cut cut cut   
Sk 

அன்பின் கண்மணி அவர்களுக்கு,

நாடார் மக்களுக்கு அபிரகாம் பண்டிதர் மரபு நன்கு தெரிந்தே இருக்கிறது.
நாடார் மக்கள் என்று பிரபலமான வலைத்த்ளம் நடாத்திவருகின்றனர்.
சிறப்பான கட்டுரையாக, பண்டிதர் குலதிலகர் அபிரகாம் பண்டிதர்
வாழ்க்கையை வெளியிட்டுள்ளனர்.

பிரிட்டிஷார் பேராதரவில் மருத்துவம், தமிழிசை வல்லுனராகத் திகழ்ந்தார்.
ராவ்ஸாஹேப் பட்டம் வழங்கி பிரிட்டிஷார் கௌரவித்துள்ளனர்.

பாணர் என்று சங்க நூல்களில் வருகிற இடங்களில் தமிழிசை
வாணரில் மருத்துவர், மங்கலர், பண்டுவர் குலமும் உண்டு.

கட்டுரை காண்க.
நா. கணேசன்

” ஆபிரகாம் பண்டிதர் அவர்கள், 1859ஆம் ஆண்டு ஆகஸ்டு 2 ஆம் நாள் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சாம்பவர் வடகரை என்ற சிற்றூரில், முத்துசாமிபண்டிதர் (நாவிதர்)அவர்களுக்கும், அன்னம்மை அம்மாளுக்கும் மகனாகப் பிறந்தார். தனது ஆரம்ப கல்வியை பங்களாச் சுரண்டையில்முடித்த அன்னார், திண்டுக்கல் நகரில் உள்ள CVES ஆசிரியர் பயிற்சி பள்ளியில் தன்னை தமிழ் ஆசிரியராகத் தகுதிப்படுத்திக் கொண்டார். ஆபிரகாம் பண்டிதரின் பாட்டனார் தமிழ் மருத்துவராக இருந்தமையால், தமிழாசிரியராக இருந்த பண்டிதர் மருத்துவ இலக்கியத்தில் இயற்கையாகவே ஆர்வம் கொண்டார். 1882 இல் பண்டிதர் நஞ்சங்குளத்தைச் சேர்ந்த ஞானவடிவு பொன்னம்மாள் என்பவரை 1882, திசம்பர் 27ஆம் நாள் திருமணம் செய்து கொண்டார். பின்பு ஆபிரகாமும் அவரது துணைவியாரும் தஞ்சாவூரில் குடியேறினர்.
1886 முதல் 1890 வரை பாதிரியார் பிளேக் துரை ஆபிரகாம் பண்டிதரையும் அவர்தம் மனைவியாரையும் சீமாட்டி நேப்பியர் பெண்கள் பாடசாலையில் முறையே தமிழ்ப் பண்டிதராகவும் தலைமை ஆசிரியையாகவும் நியமித்தார். அவர்கள் கையாண்ட கல்விமுறை அனைவராலும் பாராட்டப்பட்டது.”

------------

முழுக்கட்டுரையும், நாடார் மக்கள் வலைதளத்தில் இருந்து,
தமிழிசை இயக்கத்திற்கு அருந்தொண்டு செய்த ஆபிரகாம் பண்டிதர் அவர்கள்.

See more of Nadar Makkal - நாடார் மக்கள் on Facebook
Related Pages

தமிழ் இசையை களவாடி அதை கர்நாடக சங்கீதம் என்கின்றனர் என்று கூறி தமிழிசையின் தொன்மையை நிருபித்து காட்டிய தமிழர் ஆபிரகாம் பண்டிதர்

ஆபிரகாம் பண்டிதர் ஆகஸ்ட் 2, 1859 - 1919 ) புகழ்பெற்ற தமிழிசை கலைஞர், சித்த மருத்துவர் மற்றும் தமிழ் கிறித்தவ கவிஞர். ஆரம்ப காலத்தில் ஆசிரியராகப் பணியாற்றிய ஆபிரகாம் பண்டிதர், பின் தமிழ் இலக்கியத்திலும், தமிழ் மருத்துவத்திலும் கொண்ட ஆர்வத்தினால், முழுநேர மருத்துவராகப் பயிற்சி பெற்று பணியாற்றலானார். ஆபிரகாம் பண்டிதர் தமிழிசைக்கு ஆற்றிய பணி சிறப்பானது. பழந்தமிழ் இலக்கியங்களில் தமிழிசையை ஆய்ந்த ஆபிரகாம் பண்டிதரின் ஆராய்ச்சி நூலான கருணாமிர்த சாகரத் திரட்டு, தமிழ் இசை வரலாறு, தமிழ் மருத்துவம், இசையாளர்கள் பற்றிய ஒரு கலைக்களஞ்சியமாக நோக்கப்படுகிறது.[1]. இரண்டு பாகங்களாக வெளி வந்த இந்நூலில், மிகவும் அறியப்படாத பல தமிழிசை இராகங்கள் ஆராயப்பட்டு சுமார் 95 பாடல்கள் வெளியிடப்பட்டன. அத்தனையையும் எழுதியவர் ஆபிரகாம் பண்டிதரே. ஒவ்வொன்றுக்கும் அவரே இசையமைத்து அவற்றின் சுவரங்களையும் வெளியிட்டார். ஆயிரத்து இருநூறுக்கும் அதிகமான பக்கங்கள் கொண்டது அந்நூல். இசையின் வரலாறு, அறிவியல், இலக்கியம், இசை வாணர்கள் பற்றி விரிவாகவும் நுட்பமாகவும் அது அலசுகிறது. இசை பற்றிய கலைக்களஞ்சியமாக அதைச் சொல்லலாம்.அக்கால இந்திய இசை வல்லுனர்களிலேயே நன்கு அறியப்பட்ட பண்டிதர், மற்ற இசை வடிவங்களிலேயும் ஆர்வம் கொண்டிருந்தார். தனது இசையுலக தொடர்புகளை நன்கு பயன்படுத்திய ஆபிரகாம் பண்டிதர், முதன்முதலாக அகில இந்திய இசை மாநாட்டைத் தஞ்சாவூரில்நடத்தினார்.[2]. அதனைத் தொடர்ந்து ஆறு மாநாடுகளை அவர் கூட்டினார். இசை மாநாடுகள் பண்டிதரது சொந்தச் செலவில் நடந்தன. ஒவ்வொன்றிலும் பயன் மிகு விவாதங்கள் நடந்தன. புதுக் கருத்துகள் வெளியாயின.

1913ஆம் ஆண்டு ஆகஸ்டு 31ஆம் நாள் நடைபெற்ற இரண்டாவது இசை மாநாட்டில் பங்கேற்ற இந்திய இசை வல்லுனர்களுடன் ஆபிரகாம் பண்டிதர்

ஆபிரகாம் பண்டிதர் அவர்கள், 1859ஆம் ஆண்டு ஆகஸ்டு 2 ஆம் நாள் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சாம்பவர் வடகரை என்ற சிற்றூரில், முத்துசாமிபண்டிதர் (நாவிதர்)அவர்களுக்கும், அன்னம்மை அம்மாளுக்கும் மகனாகப் பிறந்தார். தனது ஆரம்ப கல்வியை பங்களாச் சுரண்டையில்முடித்த அன்னார், திண்டுக்கல் நகரில் உள்ள CVES ஆசிரியர் பயிற்சி பள்ளியில் தன்னை தமிழ் ஆசிரியராகத் தகுதிப்படுத்திக் கொண்டார். ஆபிரகாம் பண்டிதரின் பாட்டனார் தமிழ் மருத்துவராக இருந்தமையால், தமிழாசிரியராக இருந்த பண்டிதர் மருத்துவ இலக்கியத்தில் இயற்கையாகவே ஆர்வம் கொண்டார். 1882 இல் பண்டிதர் நஞ்சங்குளத்தைச் சேர்ந்த ஞானவடிவு பொன்னம்மாள் என்பவரை 1882, திசம்பர் 27ஆம் நாள் திருமணம் செய்து கொண்டார். பின்பு ஆபிரகாமும் அவரது துணைவியாரும் தஞ்சாவூரில் குடியேறினர்.
1886 முதல் 1890 வரை பாதிரியார் பிளேக் துரை ஆபிரகாம் பண்டிதரையும் அவர்தம் மனைவியாரையும் சீமாட்டி நேப்பியர் பெண்கள் பாடசாலையில் முறையே தமிழ்ப் பண்டிதராகவும் தலைமை ஆசிரியையாகவும் நியமித்தார். அவர்கள் கையாண்ட கல்விமுறை அனைவராலும் பாராட்டப்பட்டது.

கருணானந்த முனிவருடன் சந்திப்பு

1879 ஆம் ஆண்டு தமிழ் மருத்துவ துறையால் மூலிகை மலையாக அறியப்பட்ட சுருளி மலைக்கு ஆராய்ச்சிக்காகச் சென்ற பண்டிதர், தமிழ் மருத்துவத்தில் புகழ்பெற்று விளங்கிய பல வல்லுனர்களைச் சந்தித்து தனது அறிவை பெருக்கிக் கொண்டார். சுருளி மலையில் கருணானந்த முனிவர் என்று அறியப்படும் தமிழ் மருத்துவ வல்லுனரைச் சந்தித்த பண்டிதர், அவரைத் தன் குருவாக எற்றுக்கொண்டு அவரிடம் தமிழ் மருத்துவ முறைகளைக் கற்றார்.
1890ஆம் ஆண்டுக்குப் பின் சித்த மருந்துகளைப் பெரும்பான்மையான அளவில் தயாரித்து "கருணானந்தர் சஞ்சீவி மருந்துகள்" என்ற பெயரில் வழங்கிவந்தார்.

மருத்துவம் சார்ந்த பங்களிப்பு

ஆபிரகாம் பண்டிதர் 1899ஆம் ஆண்டு தஞ்சாவூருக்கு அருகில் உள்ள 100 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஒரு நிலத்தை வாங்கி, அதற்கு "கருணானந்தபுரம்" என்று பெயரிட்டார். பொதுமக்கள் அதைப் "பண்டிதர் தோட்டம்" என்றே அழைத்தனர். அவ்விடத்தில் பல வகையான மரம் செடி கொடிகளையும், மூலிகைகளையும் மலர்களையும் பயிரிட்டார். வேளாண்துறையில் புதிய ஆய்வுகளையும் மேற்கொண்டு பரிசுகளும் பெற்றார்.
தஞ்சாவூரில் அவருடைய இல்லத்தில் பண்டிதர் "கருணாநிதி மருத்துவக் கூடம்" (Karunanidhi Medical Hall) என்றொரு பிரிவைத் தொடங்கி அங்குக் கூடிவந்த மக்களுக்கு மருத்துவ நல உதவி நல்கினார். அவர் வழங்கிய "கோரோசனை மாத்திரைகள்" பிரபல்யமானவை. அவை இந்தியாவில் மட்டுமன்றி, அந்நாளைய சிலோன், பர்மா, மற்றும் ஆங்கிலேயர் கைவசம் இருந்த கிழக்கு ஆசிய நாடுகள் (இன்றைய சிங்கப்பூர், மலேசியா) முதலியவற்றில் அந்த மாத்திரைகளுக்கு அமோக வரவேற்பு இருந்தது.
1908, பெப்ருவரி 22ஆம் நாள் ஆபிரகாம் பண்டிதரைச் சந்திக்க அந்நாளைய பிரித்தானிய ஆளுநரான சர் ஆர்த்டர் லாலி (Sir Arthur Lawley) என்பவரும் அவர்தம் துணைவியாரும் வந்தனர். அவர்கள் பண்டிதரின் பணிகளைப் பெரிதும் பாராட்டினர்.
1909ஆம் ஆண்டு பிரித்தானிய இந்திய அரசு ஆபிரகாம் பண்டிதருக்கு "ராவ் சாகிப்" என்னும் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது. தம்மைச் சந்திக்க வந்த பிரித்தானிய ஆளுநரின் வருகையின் நினைவாகப் பண்டிதர் ஒரு பெரிய சமூகக் கூடம் கட்டி அதற்கு "லாலி சமூகக் கூடம்" (Lawley Hall) என்று பெயரிட்டுச் சிறப்பித்தார்.
1911ஆம் ஆண்டு, பண்டிதரின் மனைவியார் காலமானார். சில மாதங்களுக்கும் பின் பண்டிதர் பாக்கியம்மாள் என்னும் பெண்மணியைத் திருமணம் செய்தார்.

தமிழிசை பங்களிப்பு

பத்தொன்பதாம் நூற்றாண்டின் முடிவில் மங்கியிருந்த தமிழ் மரபுசையை, தமிழ் இலக்கிய அறிவுடன் புதுப்பொலிவு செய்தவர் ஆபிரகாம் பண்டிதர் என்றால் அது மிகையாகாது. தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் இந்திய இசை ஆராய்ச்சி மற்றும் இலக்கிய ஆராய்ச்சியின் வழியாக, தமிழிசையே இன்று தமிழ்நாட்டிலும் இந்தியாவின் பிறபகுதிகளிலும் பல வடிவங்களில் வழங்கி வரும் இசை என்று நிரூபித்த முன்னோடி ஆய்வாளர். திண்டுக்கல் சடையாண்டி பட்டரிடம் ஆபிரகாம் பண்டிதர் இசைபயின்ற பண்டிதர், பின் தஞ்சையில் ஒரு நாதஸ்வர வித்வானிடமும் இசை கற்றார். மேலும் பல இசை கருவிகளை இசைக்கப் பயின்ற பண்டிதர், ஆர்மோனியம், வீணை, பிடில்முதலிய வாத்தியங்களில் புலமை பெற்றிருந்தார். தமிழகத்தில் தெலுங்கு மொழியை முக்கியமாகக் கொண்டு கர்நாடக சங்கீதம் என்ற பெயரில் பிரபலமாக இருக்கும் இசைமரபு உண்மையில் பழந்தமிழ் இசைமரபே என்பதை உணர்ந்த பண்டிதர் அதனை மெய்ப்பிக்கும் வகையில் பல பழந்தமிழ் இசை நூல்களைக் கற்றுணர்ந்தார். ஐரோப்பிய இசை வல்லுநரான பேராசிரியர் தஞ்சை ஏ.ஜி. பிச்சைமுத்து அவர்களின் மாணாக்கராகி மேற்கத்திய இசையையும் கற்றுத் தேர்ந்தார். தமிழ் இசையின் மேல் கொண்ட பற்றினால், 1910 முதல் 1914 வரையிலான காலகட்டத்தில் பண்டிதர் ஆறு இசை மாநாடுகளைத் தஞ்சையில் நடத்தினார். 1912 ஆண்டு மே மாதம் 27ஆம் நாள் தஞ்சையில் சங்கீத வித்யா மகாஜன சங்கத்தை நிறுவினார். பல்வேறு பாடகர்களையும் இசை நிபுணர்களையும் மேற்கத்திய இசை வல்லுநர்களையும் மாநாடுகளுக்கு அழைத்து விரிவாக உரையாடினார். மாநாடுகளை முழுக்க தன் சொந்த செலவில் பண்டிதர் நடத்தினார் என்பது குறிப்பிடத் தக்கது.
பல்லாண்டு தமிழிசை ஆராய்ச்சி முடிவுகளை 1917 இல் பெரும் இசை நூலாகக் கருணாமிர்த சாகரம் என்ற பெயரில் வெளியிட்டார். 1395 பக்கங்கள் உடையது இந்நூல். இன்றுவரை தமிழிசை ஆய்வுகளுக்கு இதுவே மூலநூலாக விளங்கி வருகிறது. பரதரின் "நாட்டிய சாஸ்திரம்", சாரங்க தேவரின் "சங்கீத ரத்னாகரம்" முதலிய பிற மொழி இசை நூல்களையும் சிலப்பதிகாரம், சங்க இலக்கியங்கள், கல்லாடம், தண்டியலங்காரம் முதலிய பண்டைத்தமிழ் நூல்களையும் விரிவாகக் கற்ற பண்டிதர் தன் ஆய்வுகளில் இவற்றையெல்லாம் ஆழ்ந்து பரிசீலிக்கிறார்.
சிலப்பதிகாரத்தில் இடம்பெறும் இசைகுறித்த செய்திகள் இன்றைய கருநாடக இசையில்மூல இலக்கணங்களாக இருப்பதை பண்டிதர் சுட்டிக் காட்டினார். இன்றைய ராகங்கள் தான் அன்று பண்களாக இருந்தன என்று சுவர ஆய்வு மூலம் நிரூபித்தார். இராகங்களை உண்டு பண்ணும் முறை, பாடும் முறை ஆகியவற்றை பழந்தமிழ் இசையிலக்கணத்தில் இருந்து ஆய்வு செய்து அறிந்து விளக்கிக் காட்டினார். அவையே இன்றும் இசையில் அடிப்படைகளாக உள்ளன.
தஞ்சை ஆபிரகாம் பண்டிதர், தமிழிசையே வடக்கே இந்துஸ்தானி இசை என்ற பெயரில் விளங்குகிறது என்று நிரூபித்தார். 20-24.3.1916-இல் பரோடாவில் நடைபெற்ற அகில இந்திய இசை மாநாட்டுக்குச் சென்று தன் முடிவுகளைப்பற்றி உரையாற்றினார். இவரது கண்டுபிடிப்புகளை இவரது இரு மகள்கள் வீணையில் இசைத்துக் காட்டி நிரூபித்தனர்.

பண்டிதர் ஆற்றிய இலக்கியப் பணி

ஆபிரகாம் பண்டிதர் கிறித்தவ உண்மைகளைத் தமிழில் எடுத்துரைக்கும் பணியிலும் ஈடுபட்டார். பல்லாண்டு சமய ஆய்வின் விளைவாக அவர் "நன்முறை காட்டும் நன்னெறி" என்னும் நூலை வெளியிட்டார். இந்நூலில் தத்துவமும், ஒழுக்கநெறியும் பக்தியும் துலங்குகின்றன.[3]
மருத்துவத் துறையில் அடியெடுத்து வைத்த ஆரம்பகாலத்தில் பண்டிதர் வறுமையால் வாடினார். அப்போது அவர்,

"காக்கும் வழி உனக்கில்லையா - மகிழ்
வாக்குவதும் பெரும் தொல்லையா - எனை
ஆக்கி அணைத்து அழித்து அனைத்தையும்
நோக்கும் கருணாகரக் கடலே
கண்டால் உனை விடுவேனோ - மனமலர்
செண்டால் பாதம் துதியேனோ - பெரும்
சண்டாளன் என்றெனைத் தள்ளாது கொள்வையேல்
கண்டோர் கேட்டோர் களிக்கப் புகழ் சொல்வேன்"

என்று இறைவனை நோக்கி வேண்டுகிறார்.
விவிலிய வரலாற்றில், யோசேப்பும் அன்னை மரியாவும் இயேசு குழந்தையை எருசலேம் கோவிலில் காணிக்கையாகக் கொடுக்க வந்தபோது சிமியோன் எதிர்கொண்டு, குழந்தையைத் தம் கைகளில் ஏந்திக்கொண்டு அவரைத் துதித்தார். கண்டேன், கண்டேன், என் ஆண்டவரை இன்று கண்குளிரக் கண்டேன் என்று சிமியோன் ஆனந்தப் பரவசமடைந்தார் (லூக்கா 2:22-39). இக்காட்சியை ஆபிரகாம் பண்டிதர்,

"கண்டேன் என் கண்குளிர - கர்த்தனை இன்று
கொண்டாடும் விண்ணோர்கள் கோமானைக் கையிலேந்தி
அண்டாண்ட புவனங்கள் கொண்டாட மாய
சண்டாளன் சிறைமீட்கும் சத்தியனை நித்தியனை
முத்தொழில் கர்த்தாவாம் முன்னவனை
இத்தரை மீட்க எனை நத்திவந்த மாமணியை
விண்ணோரும் வேண்டிநிற்கும் விண்மணியைக் - கண்மணியை"

என்று தம் அகக் கண் காட்சிக்குச் சொல்வடிவம் தந்து, அதைப் பாடுவோரின் உள்ளத்தையும் பரவசப்படுத்துகின்றார்.

ஆபிரகாம் பண்டிதரின் இறப்பு

ஆபிரகாம் பண்டிதர் 1919, ஆகத்து 31ஆம் நாள் காலமானார். பல்லாண்டுகள் அவர் ஆய்வுகள் நிகழ்த்திய தளமாகிய "பண்டிதர் தோட்டத்திலேயே" அவர் அடக்கப்பட்டார்.
இன்று, பண்டிதரின் வழிமுறையினர் கருநாடக இசையோடு நெருங்கிய தொடர்புடைய லாலி சமூகக் கூடம், பண்டிதர் தோட்டம், கருணாநிதி மருத்துவக் கூடம் ஆகியவற்றைக் கருத்தாய்க் கவனித்துவருகின்றனர். அவருடைய வீட்டுக்கு இட்டுச் செல்லும் தெரு பண்டிதரின் பெயரைத் தாங்கிநிற்கிறது.
பண்டிதரின் காலத்துக்குப் பிறகு நடந்துவருகின்ற இசை ஆய்வுகள் அவருடைய அழியாப் புகழுக்கு அடையாளங்களாக உள்ளன.

N. Ganesan

unread,
Mar 25, 2020, 3:27:22 AM3/25/20
to மின்தமிழ், vallamai

சங்க இலக்கியத்தில் நீறு என்பது இருபொருளில் வழங்கும்: (1) வெண்ணீறு மற்றும் (2) புழுதி. வெள்ளையான நீறு (உ-ம்: வெண்களர் நிலத்தில்)
போல உள்ள புழுதி. சில சமயங்களில் புழுதி என்ற பெயருக்குப் பொதுமை ஆகிறது. நீற்றறை என்றால் சுண்ணாம்புக் காளவாய்.
நீற்றுப்போனது என்றால் தூசி படிதலைக் குறிக்கும். உ-ம்: நீற்றுப் பூசணிக்காய். சங்க இலக்கியத்தில் தலைவன் மறைந்தபிறகு
தலைவி செய்யும் சடங்கை விவரிக்கும் பாடல்களுள் முக்கியமானது புறம் 249. பெரிய அகல்நாட்டை ஆளும் தலைவன் இறந்துபடுகிறான்.
முறம் போன்ற சின்னஞ்சிறிய இடத்தை, சாணத்தால் மெழுகிப் படையல் இடுகிறாள்.  நடுகல்லை நட்டு வைத்திருப்பர். அதில்
பீடும் பெயரும் எழுதுவது வழக்கம் என பிற சங்கப் பாடல்களில் காண்கிறோம்.

அக்கால கட்டத்தில் பல்வேறு சமயங்கள் தமிழ்நாட்டில் வேளிர் வருகையால் வந்து கூடின. ஒன்றுக்கொன்று மோதின, பின்னர்
சம நிலை அடைந்தன. அவற்றுள் மாவிரதியர் சமயத்தை, அதுகொண்ட தாக்கத்தை இப்பாடலில் காண்கிறோம்.
பக்தி இலக்கியக் காலத்திலும், பின்னரும் இச்சமயக் கூறுகள் தமிழர் வாழ்வில் பெரும்பான்மையாய் இருக்கிறது.
மாவிரதிகள், காபாலிகர், காளாமுகர், பாசுபதர், ராசிகணத்தார், சமணர், பௌத்தர், சமணரில் ஒருவகையான
ஆஜீவகர், வைணவர், வருண வழிபாட்டை முதன்மையாகக் கொண்ட வைதிகம் எல்லாம் வந்து அடைந்தன.
மாவிரதியர் (மஹாவிராத்ய) சமயம் சுடுகாட்டுச் சுடலையில் வெண்ணீறு, வெள்ளெலும்பு இவற்றுக்குப் பேரிடம்
அளித்த சமயம், பாசுபதமும் அவ்வாறே. இதனால் வெண்ணீறு திருநீறு எனப்பட்டது. சைவத்தின் உட்பிரிவுகளாகிய
மாவிரதியர், காபாலிகர், காளாமுகர், பாசுபதர் போற்றிய வெண்ணீறு வாழ்க்கை நிலையாமை காரணமாக,
கணவனை இழக்கும் தலைவிக்குச் செய்யும் சடங்குகளில் ஒன்றாகிவிட்டது என்பது இப்பாடலால் தெரிகிறது.
கபிலபரணர், சேரசோழபாண்டியர், ... போல உம்மைத்தொகையாக கிராமங்களில் வழங்கும் தொடர்:
வண்ணா(ர)நாவிதர். இவர்கள் இல்லாமல் எச் சடங்கும் நிகழாது. பண்டிதர், மங்கலர் என்னும் மருத்துவர்பங்கு
புறம் 249-ல் முக்கியமானது. பண்டிதரில் புகழ்பெற்றார் சிலரைப் பார்த்தோம். சங்க காலப் பாணர்வகையினரில்
மங்கல அந்தணர்கள் ஒரு மிக முக்கியமான பிரிவினர். பாணர் என்று படிக்கும் இடங்களில் இவர்கள் பங்கை
இப்போதைய ஆசிரியர்கள் கவனத்துக்குக் கொண்ர்தலைக் காணோம். ராசிகணம் - ராசிபுரம்,
பசுபதி (சேரர் தலைநகர் வஞ்சி கோயில் இறைவன் பெயர்), போன்றன மாவிரதிகளுக்கு இருந்த
முக்கியத்துவத்தைக் காட்டும். அண்மைக்காலம் வரை தும்பி என்ற பெயர் பரம்பரைப் புலவர்களுக்கு
இருந்தது. தும்பி சேரகீரன் பாடிய பாடல். தும்பி புலவர் பெயராகவும், சேர நாட்டினர் என்பதும், கீரன்
என்னும் பூசாரித் தொழிலர் என்றும் கொள்ளலாம். 

" திருநீறு

சிவபெருமான் தம்மை யடைந்தவரின் தீவினையை எரித்து விடுகிறார் என்னுங் கருத்துப்பற்றியதே, திருநீற்றுப் பூச்சாகத் தெரிகின்றது. நீறு = சுண்ணம், பொடி. பூதியென்பது நீற்றின் மறுபெயர். பூழ்தி (புழுதி) - பூதி. ஒ.நோ: போழ்து (பொழுது)-போது. பூதி = பொடி, தூள். பூதியை 'வி' என்னும் முன்னொட்டுச் சேர்த்து, விபூதியென்று வடசொல்லாக்கினர்." (தே. பாவாணர், ஒப்பியன் மொழிநூல்).

நீறு என்றால் வெண்ணீறு, புழுதி எனச் சங்க இலக்கியம் கூறுகிறது. புழுதி/பூழ்தி > பூதி (விபூதி) என்கிறார் பாவாணர்.

தும்பி சேரகீரனார் பாட்டில், முறம் என்பது இடத்தின் சிற்றளவைக் காட்டுதற்கு வரும் உவமைச்சொல் தான். இப்பாட்டில் சுளகுக்கு முக்கியத்துவம் ஒன்றுமில்லை. முக்கியமானவள் இப்பாட்டில் அகல்நாட்டின் தலைவனை இழந்த தலைவிதான். அவள் தவக்கோலம் பூண்டு, வாழ்நாளின் எஞ்சிய பகுதியைச் செலவிடுவாள். அதை ஊராரும், உற்றாரும் அறியச் செய்யும் சடங்கு. இங்கே, தும்பி சேரகீரனார் மாவிரதியர், பாசுபதரின் திரிபுண்டரம் என்னும் கலைச்சொல்லை “வரிநீறு” என்று தமிழர் அழைத்து இருப்பதைப் பதிவுசெய்துள்ளார்.

குறுந்தொகை
 25.    
யாரு மில்லைத் தானே கள்வன் 
    
தானது பொய்ப்பின் யானெவன் செய்கோ  
    
தினைத்தா ளன்ன சிறுபசுங் கால 
    
ஒழுகுநீ ராரல் பார்க்கும் 
5
குருகு முண்டுதான் மணந்த ஞான்றே. 
என்பது வரைவு நீட்டித்த விடத்துத் தலைமகள் தோழிக்குச் சொல்லியது.

இப்பாட்டில், சிறு பசுங்கால குருகு; ஒழுகுநீர் ஆரல் பார்க்கும் குருகு என்று எடுத்துப் பொருள் காண்கிறோம்.
சிறுபசுங்கால் குருகுக்கு இல்லை. எனவே, இவ்வாறு பிரிக்கிறோம்.
அதே போன்றது, புறம் 249-ம் பாடல்:
வரிநீறு ஆடு, அழுதல் ஆனாக் கண்ணள்;
சுளகின் சீறிடம் நீக்கி, அழுதல் ஆனாக் கண்ணள்
என்றால் பொருள் புரியும்.
வரிநீறு ஆடுதல் சுளகுக்கு இல்லை, எனவே, இவ்வாறு பிரிக்கிறோம்.

-------------------------

தற்போது, நலம்பொலம் நிகழ்வுகளில்  ஶாமியானா எனப்படும் தற்காலிக பந்தலைத் துணியால் (ஜமுக்காளம் போன்றதுணி)
விரைவில் அமைத்து மாற்றுகிறோம். ஶாமியானா (ஷாமியானா) பாரசீகச் சொல் ஆகும்.
புறநானூற்றுக் காலத்தில் சடங்குகளில் மண்ணார்பங்கு உண்டு. ஷாமியானாவுக்கு நல்ல தமிழ்ச்
சொல்லாக, இந்த நிகழ்வுகளில் இருந்து எடுக்கமுடியும். உ-ம்: விழாவில் பங்குபற்றினோர்
அமர, உணவுண்ண மாத்து விரிப்பர் மண்ணார்கள். மாத்து = மாற்று. விரைவில் மாற்றி
இதனை ஏற்பாடு செய்யமுடியும். அதேபோல், கம்புகளை நட்டு ஏற்படுத்துவது மாற்றுப்பந்தல்.
இதற்கு வன்ணார்கள் சீலைகளைக் கொடுத்துதவுவர். ஷாமியானா = மாற்றுப்பந்தர்.
துணியால் அமைக்கப்படும் பந்தலைப்பற்றி, புறம் 249 பாடலில் உள்ளது போன்ற நிகழ்ச்சியில்,
சீலைகளை விரித்து அமைக்கப்படும் மாத்துப்பந்தல் பற்றிச் சங்க இலக்கியம் கூறுவதைப் பார்ப்போம்.

<<<
தற்காலத்தில், "சாமியானா' என்னும் துணிப்பந்தல் பல்நோக்குப் பந்தல்களாக அமைக்கப்படுகின்றன. இடுதல் மற்றும் அகற்றுதல் என்ற செயல்களின் எளிமை மற்றும் விரைவு பற்றியே இத்தகைய துணிப்பந்தல்கள் தொடக்க காலத்திலிருந்து இன்றுவரை மக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளன. "சாமியானா' என்பது தமிழ்ச்சொல் அன்று.
"சாமியானா' என்ற பெயரில் அழைக்கப்படும் துணிப்பந்தல்கள் சங்க காலத்தில் புடைவைத் துணிப்பந்தல்களாக இருந்துள்ளன. அது, இறப்பு நிகழ்வுகளோடு தொடர்புடையதாகவும் இருந்துள்ளன. புறநானூற்றுப் பாடலொன்றில் இக்குறிப்பு (பா.260) உள்ளது.
உவமைகளை ஆள்வதில் திறம்மிக்கவரான வடமோதங்கிழார் எனும் புலவரின் அப்பாடல், "துணிப்பந்தல்' பற்றிய குறிப்பினைத் தருகிறது. அதில், போரில் மாண்ட வீரர்களுக்கென நாட்டப்பெறும் நடுகல்லிற்கான மேற்கூரையாகப் புடைவைத் துணிப்பந்தல் அமைக்கப்படும் வழக்கம் குறித்த செய்தி பொதிந்துள்ளது. இப்பாடலுக்கான ஒளவை துரைசாமிப் பிள்ளையின் உரை நுட்பமிக்கது.
ஒருகாலத்தில், பகைவர் தன்னூர் ஆனிரைகளைக் கவர்ந்து சென்றதை அறிந்து, அவர்களைப் பின்தொடர்ந்து சென்ற வீரனொருவன், பகைவரை வென்று ஆனிரைகளை மீட்டுக் கொணர்ந்தான். என்றாலும், நிரையை மீட்பதற்காகச் செய்த போரில், பகைவரது அம்பு தைக்க, அவன் புண்பட்டிருந்தான்; ஊரருகே வந்ததும் இறந்தும் போனான்.
பின்பு, அவனது வீரச்செயலை மெச்சிய ஊரார், அவனுக்கு நடுகல் நாட்டிப் பெயரும் பீடும் எழுதிச் சிறப்பித்தனர். அவன் வாழ்ந்த காலத்தில், நிரம்பக் கொடை வழங்கிப் புகழ்பெற்றவன். அவன் போரில் வென்று, நடுகல்லாகிவிட்ட செய்தியை அறியாத பாணன் ஒருவன், வழக்கம்போல் பொருள்பெற அவன் இருப்பிடம் நோக்கி வந்துகொண்டிருந்தான். அப் பாணனைப் பார்த்த உள்ளூர்ப் பாணன் ஒருவன் கூறுகிறான், ""பாணனே! இனி நீ, ஏற்கெனவே அத்தலைவன் உனக்குத் தந்த நிலத்தை உழுது உண்பதோ, வேறொருவரிடம் சென்று இரந்து பெற்று உண்பதோ செய்யலாமே தவிர, வேறெதுவும் செய்வதற்கில்லை. ஏனெனில், நிரை மீட்பதற்காகப் போரிட்டு, தோல் உரிக்கும் பாம்பு போல, புகழுடம்பாகிய சட்டையை விட்டுவிட்டு அவன் மேலுலகம் சென்று விட்டான். அவனது பெயர், புடைவையால் அமைக்கப்பட்ட பந்தலின் கீழ் நடப்பட்டுள்ள நடுகல்லின்மேல் எழுதப்பட்டுள்ளது. அங்குச் சென்று அதனைப் பார்த்து வழிபடுக'' என்றும் கூறி வருந்துகின்றான்.
"கையறுநிலை' என்ற துறையிலமைந்த அப்புறப்பாடலின் பின்வரும் பகுதிதான், நடுகல்லின் மேற்கூரையாக இடப்பட்ட புடைவைத் துணியாலான "சங்ககாலப் பந்தலைச்' சுட்டுகிறது.
"உயரிசை வெறுப்பத் தோன்றிய பெயரே
மடஞ்சான் மஞ்சை யணிமயிர் சூட்டி
இடம்பிறர் கொள்ளாச் சிறுவழிப்
படஞ்செய் பந்தர்க் கன்மிசை யதுவே'
பழங்காலத்தில் நடுகல்லிற்கு மேற்கூரையாகப் புடைவையால் அமைக்கப்பட்ட பந்தல், காலப்போக்கில் இழவு நிகழ்வுகளுக்காக அமைக்கப்பட்டு, பின் தென்னங்கீற்றுப் பந்தலானது. இதுவும் மாறித் தற்காலத்தில் "சாமியானா' என்னும் துணிப்பந்தல் பல்நோக்குத் துணிப்பந்தல் ஆகியுள்ளது. உள்ளதைக் கொண்டு நல்லதைச் செய்தவன் சங்காலத் தமிழன் என எண்ணி மகிழலாம்!
-முனைவர் ச. சுப்புரெத்தினம்

N. Ganesan

unread,
Mar 25, 2020, 9:27:50 AM3/25/20
to மின்தமிழ், housto...@googlegroups.com, vallamai
சேரநாட்டிலே அதன் தலைமை ஸ்தானம் கொண்ட பகுதி அகல்நாடு. அகல்நாடு என்ற பரியாயப்பெயரை இளங்கோ அடிகள் இரண்டுமுறை பயன்படுத்தியுள்ளார். சேரநாட்டு வழக்கம் ஒன்றை, சேரநாட்டுக் கவிஞர் தும்பி சேரகீரனார் புறநானூறு 249-ல் பதிந்துள்ளார்.
”தன் அண்ணலோடு (தலைவனோடு) பலரும் கூடிப் பகல்பொழுதெல்லாம் உண்டபோது தானும் கூடி உண்டாள். இன்று, கணவன் வாழும் காலத்தில் துலங்கிக் கிடந்த கற்பு அவன் மாண்டுபோன பின்னர் தன்னுள் அடங்கிக் கிடப்ப, ஆராயும் அழகு கொண்ட நெற்றியை உடைய மடந்தைப் பருவத்து அந்தப் பெண் நெற்றியில் வரிவரியாகத் தெரியும் திருநீறு பூசியவளாய் தரையில் முறம் அளவு பரப்பளவை சாணத்தால் (ஆப்பி) மெழுகினாள். அவள் அழும் கண்ணீரும் மெழுகும் சாணத்தில் விழுந்து தரையை மெழுகிக்கொண்டிருந்தது.  ”
என்பது புறம் 249-ன் முத்தாய்ப்பான ஈற்றடிகளின் பொருள். இங்கே கவனிக்கவேண்டியது ஒன்றுண்டு. புறம் 249-ல், இன் என்பது உவம உருபு. சுளகு இன் சீறிடம். சுளகு போன்ற சிற்றிடம்
என்கிறார். இப்பாட்டில், வரிநீறு சுளகுக்குப் பொருந்தாது. சுளகுக்குப் பாட்டில்
ஒரு முக்கியத்துவம் இல்லை. கதாநாயகி தலைவனில் நினைவஞ்சலி நாளில்
கலந்துகொள்ளும் தலைவியே. அவள் கோலம்: வரிநீறு ஆடி, அழுங் கண்ணளை
வர்ணிக்கிறார் தும்பி சேரகீரன். நீறாடி சிவனைக் குறிக்கும் (பிங்கலம்). வரிநீறு (திரிபுண்டரம்) ஆடுதல் மாவிரதியர், பாசுபதர் போன்ற சமயிகளால் தமிழகத்தில் உருவானது. வரிநீறு ஆடுதல் முறம் செய்யாது, மாந்தரே செய்வர்.

கணவனை இழந்த தலைவி நிலைக்கு, அகல்நாட்டு உதாரணமாக,
கோவை அய்யாமுத்து அவர்களின் தாய் படத்தைத் தரலாம். 
கே. பி. சுந்தராம்பாள் அவர் கணவர் இருந்த போது இருந்த வண்ணக்கோலமும்,
கணவரை இழந்தபின்னர் அவர் வாழ்நாள் எல்லாம் தரித்திருந்த கோலமும்
நினைவுக்கு வரும். லட்சக்கணக்கான பெண்டிர் அந்நிலையில்
அண்மைக்காலம் வரை இருந்தார்கள்.

கணவருடன், கேபிஎஸ் முகத்தை, அணிநலம், சீலை பார்க்கவும்:

fdghfhhgh.jpg
 
புறம் 249-ல் இக்கோலம் மாறும் நிகழ்ச்சி வர்ணிக்கப்படுகிறது.
வரிநீறு (திரிபுண்டரம்) ஆடுகிற, அழுதல் ஆனாக் கண்ணள்
என்னும் பாடலில் குறிப்பிடும் தலையின் தோற்றம்.
இந்த ‘டிரேன்ஸிஸன்’ பற்றிய அரிய பாடல் புறம் 249.
30TH_THEATRE_PIX.jpg

சிஎஸ் கொடுமுடி சுந்தராம்பாளுக்கு, எஸ் எஸ் வாசன் கூட்டிய
ஔவையார் சினிமா வெற்றிவிழாவில் பரிசு வழங்குகிறார்:
https://thehinduimages.com/details-page.php?id=1350183 
 
சிறுபசுங்கால் ஆரலுக்கு இல்லை. எனவே, இவ்வாறு பிரிக்கிறோம்.

வேந்தன் அரசு

unread,
Mar 25, 2020, 8:51:57 PM3/25/20
to vallamai, மின்தமிழ்

புத., 25 மார்., 2020, பிற்பகல் 12:57 அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:

ஏன் இல்லை?

 "விசும்பு விசைத்து எறிந்த கூதளங்கோதையின்
பசுங்கால் வெண்குருகு வாப்பறை வளைஇ",

N. Ganesan

unread,
Mar 25, 2020, 9:21:20 PM3/25/20
to மின்தமிழ், vallamai

குறுந்தொகை
 25.    
யாரு மில்லைத் தானே கள்வன் 
    
தானது பொய்ப்பின் யானெவன் செய்கோ  
    
தினைத்தா ளன்ன சிறுபசுங் கால 
    
ஒழுகுநீ ராரல் பார்க்கும் 
5
குருகு முண்டுதான் மணந்த ஞான்றே. 
என்பது வரைவு நீட்டித்த விடத்துத் தலைமகள் தோழிக்குச் சொல்லியது.

இப்பாட்டில், சிறு பசுங்கால குருகு; ஒழுகுநீர் ஆரல் பார்க்கும் குருகு என்று எடுத்துப் பொருள் காண்கிறோம்.
சிறுபசுங்கால் குருகுக்கு இல்லை. எனவே, இவ்வாறு பிரிக்கிறோம்.

ஏன் இல்லை?

 "விசும்பு விசைத்து எறிந்த கூதளங்கோதையின்
பசுங்கால் வெண்குருகு வாப்பறை வளைஇ",

பிழைதான்.
சிறுபசுங்கால் ஆரலுக்கு இல்லை என எழுதியிருக்கணும்.
திருத்திய மடல் பார்க்கவும்,

NG
 
வேந்தன் அரசு

unread,
Mar 26, 2020, 2:44:18 AM3/26/20
to vallamai, மின்தமிழ்

வியா., 26 மார்., 2020, முற்பகல் 6:51 அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:
கொண்டுகூட்டாமலே பொருள்கொள்ளலாம்:

சிறுபசுங்கால்களையுடையதும் ஆரலைப்பார்ப்பதுமான குருகு. 

N. Ganesan

unread,
Mar 26, 2020, 5:07:49 AM3/26/20
to மின்தமிழ், housto...@googlegroups.com, vallamai

On Thu, Mar 26, 2020 at 1:44 AM வேந்தன் அரசு <raju.ra...@gmail.com> wrote:
>
> கொண்டுகூட்டாமலே பொருள்கொள்ளலாம்:
>
> சிறுபசுங்கால்களையுடையதும் ஆரலைப்பார்ப்பதுமான குருகு.
>

இரண்டும் ஒன்றுதான். உம்மையை வருவித்துப் பொருள் கொள்வதோ,
கொண்டுகூட்டிப் பொருள்கொள்வதோ அவசியம் ஆகிறது.
ஆரலுக்கு சிறுபசுங்கால் இல்லை. அதே போல, புறம் 249ல் முறம் வரி நீறு ஆடுதல் இல்லை.
இவற்றுக்கு குறுந்தொகை 25, புறம் 249, .... போன்ற எண்ணற்ற
உதாரணங்கள் உள்ளன.

கபிலபரணர் வந்தனர் - உம்மை வருவித்தால் கபிலன் வந்தனன், பரணன் வந்தனன்.
மண்ணாமங்கலர் வந்தனர் - மண்ணான் வந்தனன், மங்கலன் வந்தனன். (உ-ம்: புறம் 249 நினைவஞ்சலிக்கு).

புறம் 249:
வரிநீறு உடையவளும், சாணிகொண்டு சிற்றிடத்தை மெழுகிப் படைப்பவளும் ஆகிய அழுங்கண்ணள் (புறம் 249).
அதாவது,

ஆராயும் அழகு கொண்ட நெற்றியை உடைய மடந்தைப் பருவத்து அந்தப் பெண் நெற்றியில் வரிவரியாகத் தெரியும்
திருநீறு பூசியவளாய்,  தரையில் முறம் அளவு பரப்பளவை சாணத்தால் (ஆப்பி) மெழுகியவளும் ஆகிய தலைவி
அழும் கண்ணீர் நிலத்தை நனைத்தது.

நா. கணேசன்

kanmani tamil

unread,
Mar 26, 2020, 7:46:20 AM3/26/20
to vallamai
/// மஞ்சள் பொடியைத் தேய்த்து நீராடுவது பெண்டிரின் பழைய மரபு. மஞ்சள் 5000 ஆண்டுகளாக
இந்தியாவில் பயிர் ஆகிறது. மஞ்சள் பொடியை அடுப்பில் இட்டால் கரித் தூள் ஆகிறது.
”கரியாடு பெண்” என்று ஒரு பாட்டில் ஒரு வரி வருகிறது எனக் கொள்வோம்.
கரி என்பது மஞ்சளின் ஆகுபெயர். எனவே, புலவர் மஞ்சள் ஆடு பெண்
என்பதற்குப் பதிலாக, கரி ஆடு பெண் என்று பாடுவார். இப்படிக் கொள்ளலாமா?

இந்த விதண்டாவாதம் பிடிவாதத்தின் அறிகுறி.
நான் பேசியது ஆகுபெயர் பற்றி...
தொன்று தொட்டு ஒன்று இன்னொன்றுக்கு ஆகிவந்தால் அது ஆகுபெயர்.
இங்கே நாம் நீறும் சாணமும் பற்றிப் பேசுகிறோம்.
2000 ஆண்டுகட்கு முற்பட்ட வழக்காறு சாணத்தை நீறு எனச் சொல்கிறது என்பதை "நீறாடு சுளகு" என்ற தலைப்பில் அமைந்த என் இழையில் நிறுவியுள்ளேன். முடிந்தால் புரிந்து கொள்ளுங்கள்; இல்லையெனில்... எனக்குத் தொல்காப்பியம் இளம்பூரணர் உரையில் வழுவமைதிக்குக் கூறும் சான்று தான் நினைவிற்கு வருகிறது.  

அதுபோல் இருக்கிறது. சாணி ஆடு சுளகு என்பதற்குப் பதிலாக,
சாணியை வறட்டி ஆக்கி, தீயில் சுட்டால் கிடைக்கும் நீறு (சாம்பர்)
நீறு ஆடு சுளகு என்றால் சாணி ஆடு சுளகு என்று பொருள் கொள்ள வேண்டும்
என்பது.
நா. கணேசன்/// wrote 6days ago .
சக 

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

kanmani tamil

unread,
Mar 26, 2020, 7:49:13 AM3/26/20
to vallamai, mintamil
///தும்பி சேரகீரனார் பாட்டில் அரிய செய்திகள் உள்ளன.  /// Dr.N.G wrote 4days ago.

  புலவரின் பெயர் புதுமையாக உள்ளது. இதற்கு என்ன ஆதாரம்?
சக 

N. Ganesan

unread,
Mar 26, 2020, 8:14:00 AM3/26/20
to மின்தமிழ், vallamai
On Thu, Mar 26, 2020 at 6:49 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
///தும்பி சேரகீரனார் பாட்டில் அரிய செய்திகள் உள்ளன.  /// Dr.N.G wrote 4days ago.

  புலவரின் பெயர் புதுமையாக உள்ளது. இதற்கு என்ன ஆதாரம்?
சக 

On Thu, Mar 26, 2020 at 5:16 PM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
/// மஞ்சள் பொடியைத் தேய்த்து நீராடுவது பெண்டிரின் பழைய மரபு. மஞ்சள் 5000 ஆண்டுகளாக
இந்தியாவில் பயிர் ஆகிறது. மஞ்சள் பொடியை அடுப்பில் இட்டால் கரித் தூள் ஆகிறது.
”கரியாடு பெண்” என்று ஒரு பாட்டில் ஒரு வரி வருகிறது எனக் கொள்வோம்.
கரி என்பது மஞ்சளின் ஆகுபெயர். எனவே, புலவர் மஞ்சள் ஆடு பெண்
என்பதற்குப் பதிலாக, கரி ஆடு பெண் என்று பாடுவார். இப்படிக் கொள்ளலாமா?

இந்த விதண்டாவாதம் பிடிவாதத்தின் அறிகுறி.
நான் பேசியது ஆகுபெயர் பற்றி...
தொன்று தொட்டு ஒன்று இன்னொன்றுக்கு ஆகிவந்தால் அது ஆகுபெயர்.
இங்கே நாம் நீறும் சாணமும் பற்றிப் பேசுகிறோம்.
2000 ஆண்டுகட்கு முற்பட்ட வழக்காறு சாணத்தை நீறு எனச் சொல்கிறது என்பதை "நீறாடு சுளகு" என்ற தலைப்பில் அமைந்த என் இழையில் நிறுவியுள்ளேன். முடிந்தால் புரிந்து கொள்ளுங்கள்; இல்லையெனில்... எனக்குத் தொல்காப்பியம் இளம்பூரணர் உரையில் வழுவமைதிக்குக் கூறும் சான்று தான் நினைவிற்கு வருகிறது.  

நீங்கள் நிறுவியது நீறு என்றால் சாணம் என்கிறீர்கள். அவ்வாறு எங்கும் காணோம். அதனால் தான், நீறு சாணம் அல்ல என்று கூறுகிறேன்.

வரிநீறு என்பது வரியாய்த் தரித்த வெண்ணீறு. - புறம் 249-ல்.

நா. கணேசன்
 
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CA%2BjEHctofnuK1WvmgXUfCeXeKAY22JtwJ-JWYn%3DTakkbLR45XA%40mail.gmail.com.

kanmani tamil

unread,
Mar 26, 2020, 8:14:20 AM3/26/20
to vallamai, mintamil

/// படஞ்செய் பந்தர்க் கன்மிசை யதுவே'

பழங்காலத்தில் நடுகல்லிற்கு மேற்கூரையாகப் புடைவையால் அமைக்கப்பட்ட பந்தல், காலப்போக்கில் இழவு நிகழ்வுகளுக்காக அமைக்கப்பட்டு, பின் தென்னங்கீற்றுப் பந்தலானது. இதுவும் மாறித் தற்காலத்தில் "சாமியானா' என்னும் துணிப்பந்தல் பல்நோக்குத் துணிப்பந்தல் ஆகியுள்ளது. உள்ளதைக் கொண்டு நல்லதைச் செய்தவன் சங்காலத் தமிழன் என எண்ணி மகிழலாம்!

-முனைவர் ச. சுப்புரெத்தினம்/// தினமணியில் எழுதி நா.கணேசன் ஒரு நாள் முன்னர் எடுத்துக் காட்டி இருப்பது.

இதுவும் உரையாசிரியர் கூற்றைக் கண்ணை மூடிக் கொண்டு பின்பற்றியதன் விளைவே.

'படஞ்செய் பந்தல் ' = விரிந்த பந்தல் என்று பொருள்படும்.

பாம்பின் படம் அப்பெயர் பெறக் காரணம் விரிந்து இருப்பதே. 

அதாவது நடுகல்லின் மேற்பரப்பில் நாலாபுறமும் விரித்துப் போடப்பட்ட பந்தல்....

உறவுச் சண்டை தெருவுக்கு வந்தால் காதில் விழும் சொலவடை

                                                            "அவளுக்குப் பயறவிச்சிப் பச்சப் பந்த போட" என்பது தான்.

இன்றுவரை வழங்கும்.... வயிற்று எரிச்சலைக் காட்டும் நாட்டார் வழக்கு.

இந்த பச்சைப்பந்தல் தான் காலத்தால் முற்பட்டது. (பச்சைத் தென்னோலைப் பந்தல் இழவு வீடு என்பதற்குரிய குறியீடு.)

தென்னைப் பயிர் இல்லாத ஊரில் சாக்குப்படுதா..... சாக்கின் பயன்பாடு குறைந்து பாலிதீன் பயன்பாட்டிற்கு வந்தபோது தார்பாலின்....

அதுவும் போதாது; ஆடம்பரம் தேடும்போது ஷாமியானா. 

இந்த முனைவர் சுப்புரத்தினம் யார்? உங்கள் கொங்குநாட்டுக்காரரா? தெரியவில்லை.

'படம்செய்' என்ற தொடருக்கு பொருள் கொள்வதில் கூட சிந்திக்க மாட்டார்களா?

சக 

N. Ganesan

unread,
Mar 26, 2020, 8:22:07 AM3/26/20
to மின்தமிழ், vallamai
On Thu, Mar 26, 2020 at 7:14 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:

/// படஞ்செய் பந்தர்க் கன்மிசை யதுவே'
பழங்காலத்தில் நடுகல்லிற்கு மேற்கூரையாகப் புடைவையால் அமைக்கப்பட்ட பந்தல், காலப்போக்கில் இழவு நிகழ்வுகளுக்காக அமைக்கப்பட்டு, பின் தென்னங்கீற்றுப் பந்தலானது. இதுவும் மாறித் தற்காலத்தில் "சாமியானா' என்னும் துணிப்பந்தல் பல்நோக்குத் துணிப்பந்தல் ஆகியுள்ளது. உள்ளதைக் கொண்டு நல்லதைச் செய்தவன் சங்காலத் தமிழன் என எண்ணி மகிழலாம்!
-முனைவர் ச. சுப்புரெத்தினம்/// தினமணியில் எழுதி நா.கணேசன் ஒரு நாள் முன்னர் எடுத்துக் காட்டி இருப்பது.

இதுவும் உரையாசிரியர் கூற்றைக் கண்ணை மூடிக் கொண்டு பின்பற்றியதன் விளைவே.

'படஞ்செய் பந்தல் ' = விரிந்த பந்தல் என்று பொருள்படும்.

பாம்பின் படம் அப்பெயர் பெறக் காரணம் விரிந்து இருப்பதே. 

படம் என்பது துணி என்ற பொருள் இருக்கிறது. புடைவையால் செய்த பந்தல்
என்கிறார் பேரா. சுப்புரெத்தினம். அது மாற்றுப்பந்தருக்கு உரிய விளக்கம்தான்.
துணியும் விரிவதால் தான், படம் என்ற பெயர். பாம்புக்கு மாத்திரம் அன்று.

நா. கணேசன்
 
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CA%2BjEHcve0hu2K9TVzC0JHpP6-MtpjqAZT%2BRvd8tWNfBpvVitiQ%40mail.gmail.com.

kanmani tamil

unread,
Mar 26, 2020, 8:24:31 AM3/26/20
to vallamai, mintamil
/// நீங்கள் நிறுவியது நீறு என்றால் சாணம் என்கிறீர்கள். அவ்வாறு எங்கும் காணோம். அதனால் தான், நீறு சாணம் அல்ல என்று கூறுகிறேன்.
வரிநீறு என்பது வரியாய்த் தரித்த வெண்ணீறு. - புறம் 249-ல்.
நா. கணேசன்/// wrote 5mts ago .

முனைவர் கணேசன் உங்கள் நோக்கம் வேறு; என் நோக்கம் வேறு.
நீங்கள் பாசுபதம் சங்க காலத்தில் காலூன்றிவிட்டது என்று நிறுவுவதற்காக இப்பாடலைத் தேர்ந்துஎடுத்து உள்ளீர்கள்.
 அதற்கு வசதியாக இல்லாத மாவிரதியரை  நுழைக்கிறீர்கள்;
வருந்துகிறேன். என் நேரத்தை வீணாக்க விருப்பமில்லை.
சக   

N. Ganesan

unread,
Mar 26, 2020, 8:37:35 AM3/26/20
to மின்தமிழ், vallamai
On Thu, Mar 26, 2020 at 7:24 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
/// நீங்கள் நிறுவியது நீறு என்றால் சாணம் என்கிறீர்கள். அவ்வாறு எங்கும் காணோம். அதனால் தான், நீறு சாணம் அல்ல என்று கூறுகிறேன்.
வரிநீறு என்பது வரியாய்த் தரித்த வெண்ணீறு. - புறம் 249-ல்.
நா. கணேசன்/// wrote 5mts ago .

முனைவர் கணேசன் உங்கள் நோக்கம் வேறு; என் நோக்கம் வேறு.
நீங்கள் பாசுபதம் சங்க காலத்தில் காலூன்றிவிட்டது என்று நிறுவுவதற்காக இப்பாடலைத் தேர்ந்துஎடுத்து உள்ளீர்கள்.
 அதற்கு வசதியாக இல்லாத மாவிரதியரை  நுழைக்கிறீர்கள்;
வருந்துகிறேன். என் நேரத்தை வீணாக்க விருப்பமில்லை.
சக   

மிக நல்லது. வரிநீறு என்றால் சாணம் என்று நீங்கள் உங்கள் இழையில் நிறுவுங்கள்.
வரிநீறு சாணம் அன்று என்பது தமிழ் இலக்கியம் காட்டி நிற்கிறது.

மஹாவிரதியர், பாசுபதர், .. எல்லாம் மிகப் பழைமையான சமயத்தவர்.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Mar 26, 2020, 8:44:26 AM3/26/20
to மின்தமிழ், vallamai
இந்த இடத்தில் பேராசிரியர் தினமணியில் எழுதியதுதான் பொருத்தமாக உள்ளது.

தென்னங்கீற்றுப் பந்தர் நடுகல் மேல் இருந்ததாக சங்கப் புலவர் பாடவில்லை.
16-ஆம் நாளாக இருக்கலாம். நடுகல் எடுத்து, பீடும்பேரும் எழுதி,
ஊரார், உற்றார் கூடி எடுக்கும் நினைவஞ்சலி விழா.
அதில் மண்ணா-மங்கலர் பலர் வந்துள்ளனர். பலரும் கூடி
தலைவனின் நினைவைப் போற்றி, உணவுண்ண மாற்றுப்பந்தர்
அமைத்துள்ளனர். அது புடைவையால் செய்யப்படுவது என்பதை
படஞ்செய் பந்தர் என்கிறது புறப்பாடல்.

இதே போன்ற நிகழ்ச்சி தான் அழுங்கண்ணள் வரிநீறு ஆடு,
முறம் போன்ற சீறிடத்தில் படைக்கும் நிகழ்ச்சியைப்
பாடும் புறம் 249-ம் பாடலும். இங்கும் மாற்றுப்பந்தர்
பங்கேற்கும் கூட்டத்தாருக்கு இருந்திருக்கும்.
பண்டிதர் குலதிலகர்களைப் பார்த்தோம்.
அவர்களில் இந்நிகழ்ச்சிக்குப் பங்கென்ன என்பதும்
கூறவேண்டும்.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Mar 26, 2020, 7:26:11 PM3/26/20
to மின்தமிழ், vallamai
SK wrote:

இதுவும் உரையாசிரியர் கூற்றைக் கண்ணை மூடிக் கொண்டு பின்பற்றியதன் விளைவே.

'படஞ்செய் பந்தல் ' = விரிந்த பந்தல் என்று பொருள்படும்.

பாம்பின் படம் அப்பெயர் பெறக் காரணம் விரிந்து இருப்பதே.

உரைகாரர் எல்லோரும் படம் = புடைவை என்றே எழுதியுள்ளனர்.
ஊரின் மண்ணாரது உரிமையாக இருக்கலாம். ஒவ்வொரு ஊரிலும்
ஊர்க்குடிகளுக்கு என சில உரிமைகள் உண்டு.

நா. கணேசன்

kanmani tamil

unread,
Mar 26, 2020, 11:55:17 PM3/26/20
to vallamai, mintamil
உரைகாரர் என்னும் கைத்தடியை எனக்குத்  தேவைப்படும்போது மட்டுமே பயன்கொள்வேன். எந்நேரமும் அந்தக் கைத்தடியைப் பற்றிக் கொண்டு அலையும் அளவுக்கு என் தமிழ் கிழன்று போய் விடவில்லை. எனக்குத் தெரியாததைத் தெரியாது என்று ஒத்துக் கொள்ள நான் தயங்குவதும் இல்லை. 
இந்த நடைமுறை எனக்குத் தமிழ் கற்றுக் கொடுத்த தமிழாசிரியருக்கு;  அவர்கள் கொடுத்த தமிழறிவுக்கு; நான் கொடுக்கும் மரியாதையின் அடையாளம்.

தாமாகத் தமிழ் படிக்கும் கூட்டத்திற்கு இந்தக் கடமையுணர்வு தேவைப்படாது. 

அதுதான் முரண்பாட்டின் காரணம். படம் = சேலை என்று பொருள் கொண்ட முனைவரின் தமிழறிவு கிழன்று போனது.  
சக  

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

N. Ganesan

unread,
Mar 27, 2020, 3:32:28 AM3/27/20
to மின்தமிழ், vallamai
On Thu, Mar 26, 2020 at 10:55 PM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
உரைகாரர் என்னும் கைத்தடியை எனக்குத்  தேவைப்படும்போது மட்டுமே பயன்கொள்வேன். எந்நேரமும் அந்தக் கைத்தடியைப் பற்றிக் கொண்டு அலையும் அளவுக்கு என் தமிழ் கிழன்று போய் விடவில்லை. எனக்குத் தெரியாததைத் தெரியாது என்று ஒத்துக் கொள்ள நான் தயங்குவதும் இல்லை. 
இந்த நடைமுறை எனக்குத் தமிழ் கற்றுக் கொடுத்த தமிழாசிரியருக்கு;  அவர்கள் கொடுத்த தமிழறிவுக்கு; நான் கொடுக்கும் மரியாதையின் அடையாளம்.

தாமாகத் தமிழ் படிக்கும் கூட்டத்திற்கு இந்தக் கடமையுணர்வு தேவைப்படாது. 

அதுதான் முரண்பாட்டின் காரணம். படம் = சேலை என்று பொருள் கொண்ட முனைவரின் தமிழறிவு கிழன்று போனது.  
சக  

படம் = புடவை என்பது சங்ககால வாழ்வை அறியுமாறு செய்வது.
பாம்பு படம் பற்றிய என் கருத்து வேறு. எழுத்துபோன்ற வடிவம் படிந்துள்ளது. எழுத்துப்படம் கொண்டது.
பணம் என்பதிலும் உருவம் உள்ளது. பணமணி, பணாமணி, படமணி நாகம் (தேவாரம்).
பணத்தை/ப்டத்தைக் கொண்ட நாகம்.

முனைவர் சுப்புரெத்தினம் மரபுவழியில் அழகாக விளக்கியுள்ளார்கள்.
மேலும் ஒன்று: புறம் 249-ல் ”சுளகு இன் சீறிடம்”, இதில் இன் உவம உருபு என்று
எல்லா உரையாசிரியரும் விளக்கியது பொருத்தமாகவே உள்ளது.

நா. கணேசன்
 
On Fri, 27 Mar 2020 4:56 am N. Ganesan, <naa.g...@gmail.com> wrote:

SK wrote:

இதுவும் உரையாசிரியர் கூற்றைக் கண்ணை மூடிக் கொண்டு பின்பற்றியதன் விளைவே.

'படஞ்செய் பந்தல் ' = விரிந்த பந்தல் என்று பொருள்படும்.

பாம்பின் படம் அப்பெயர் பெறக் காரணம் விரிந்து இருப்பதே.

உரைகாரர் எல்லோரும் படம் = புடைவை என்றே எழுதியுள்ளனர்.
ஊரின் மண்ணாரது உரிமையாக இருக்கலாம். ஒவ்வொரு ஊரிலும்
ஊர்க்குடிகளுக்கு என சில உரிமைகள் உண்டு.

நா. கணேசன்

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUcCsWbmLyrNZ34OmnVOA5KfVD_cnuqL1NHxSnznU_ordw%40mail.gmail.com.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CA%2BjEHcv3ozNPDM-qEfmMUyYiMav0NTYt1D0PXD1oaNOkgA7TCQ%40mail.gmail.com.

kanmani tamil

unread,
Mar 27, 2020, 4:11:16 AM3/27/20
to vallamai, mintamil
உரையாசிரியர் என்னும் கைத்தடி உங்களுக்கு எந்நேரமும் தேவைப்படுகிறது போலும். 

தானாகத் தமிழ் படித்த கூட்டத்தில் நீங்களும் ஒருவர் தாமே. 

அப்படியே கொஞ்சம் சுயத்தை வளர்த்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள். 

ஒரு அடிப்படைக் கருத்தைத் தெரிந்து கொள்ளுங்கள். உரையாசிரியர் எழுதியிருக்கும் பொருள் காட்சிச் சாலையில் வைத்திருக்கும் அரும்பொருள். நாட்டார் வழக்காறு என்பது வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்து இன்று வரை யாராலும் எதனாலும் நசுக்க முடியாத உயிரோட்டம் ஆகும். இரண்டில் எதை அடியொட்டிப் பொருள் கொள்ள வேண்டும் என்பது சுயமாக சிந்தித்துச் செய்ய வேண்டிய முடிவு. 
சக  

N. Ganesan

unread,
Mar 27, 2020, 4:27:12 AM3/27/20
to மின்தமிழ், housto...@googlegroups.com, vallamai
: இடம்பிறர் கொள்ளாச் சிறுவழிப்
படஞ்செய் பந்தர்க் கன்மிசை யதுவே” -புறம், வடமோதங் கிழார் பாடல்.
படம் = புடவை என்பது சங்ககால வாழ்வை அறியுமாறு செய்வது.
பாம்பு படம் பற்றிய என் கருத்து: எழுத்துபோன்ற வடிவம் படிந்துள்ளது. எழுத்துப்படம் கொண்டது.
பணம் என்பதிலும் உருவம் உள்ளது. பணமணி, பணாமணி, படமணி நாகம் (தேவாரம்).
பணத்தை/படத்தைக் கொண்ட நாகம்.

படம் = சீலை, எனவே, திராவிட மொழிகளிலும் (அங்கிருந்து வடமொழிக்கும்) சென்ற சொற்கள்
படகம்/படகு. இது படகைக் கடலோடும்போது வெகுதூரம் தள்ள, காற்றின் விசையைப் பயன்படுத்தும்
சீலையால் ஏற்பட்ட பெயர்.பாய்மரம், பாய்மரக்கப்பல் என்பவற்றின் பெயர் படகு/படகம் என
தமிழ் இந்தியாவின் கடலாடும் திறனைக் காட்டும் சொல்லில் படம் = சீலை, புடைவை என
அமைந்துள்ளதும் பார்க்கிறோம். படம் = சீலை, திருமந்திரத்தில் புகழ்பெற்ற பாடல்:
     படமாடக் கோயிற் பகவற்கொன் றீயின்
     நடமாடக் கோயில் நம்பற்கங் காகா
     நடமாடக் கோயில் நம்பற்கொன் றீயின்
     படமாடக் கோயிற் பகவற்க தாமே.
படம் - சீலை. ``ஆடும்`` என்றதனால், அது கொடிச் சீலையைக் குறித்தது. ``கட்டடமாக மக்களால் அமைக்கப்பட்ட கோயில்`
என்பதை விளக்க. ``படம் ஆடு அக்கோயில்`` எனவும், ``உள்ளம் பெருங்கோயில்; ஊனுடம்பு ஆலயம்`` என்றபடி, ``உடம்பாகிய கோயில்`` என்பதை விளக்க.

முனைவர் சுப்புரெத்தினம் மரபுவழியில் அழகாக விளக்கியுள்ளார்கள்.
16-ம் நாளிலோ, ஒரு மாதம் சென்றோ மாத்துப்பந்தர் ( ஶாமியானா என இக்காலத்தில் சொல்கிறோம்,
அப்பெயர் முகலாயர் காலத்தில், பாரசீக நாட்டில் இருந்து வந்த சொல்லாகும்.) அமைத்து
உற்றார், ஊராரால் நிகழ்த்தும் நினைவஞ்சலிநாள். இதுபோன்றே ஊரார்கள் பலருடன்
புஅம் 249-ம் நிகழ்ந்தது. தும்பிசேரகீரனும் கலந்து கொண்டு
மேலும் ஒன்று: புறம் 249-ல் ”சுளகு இன் சீறிடம்”, இதில் இன் உவம உருபு என்று
எல்லா உரையாசிரியரும் விளக்கியது பொருத்தமாகவே உள்ளது.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Mar 28, 2020, 8:53:26 AM3/28/20
to மின்தமிழ், housto...@googlegroups.com, vallamai
2017-ல் தன் கட்டுரை தினமணியில் வெளியானதும் படித்துக் கருத்துச் சொல்ல செ. வை. சண்முகம் ஐயா,
(முதுபேராசிரியர், அண்ணாமலைப் பல்கலை) மடலில் அனுப்பினார். அருமையான கட்டுரை).
முழுக்கட்டுரையும் கடைசியில் தந்துள்ளேன்.
<<

இலக்கியத்தில் ஒப்புமை வாக்கியங்கள், தொடர்கள் அதிகம் பயன்படுவதைக் காணலாம். அவை "உவமை' எனப்படும். 
தமிழ் இலக்கணங்கள் உவமையை ஐந்தாம் வேற்றுமைப் பொருள்களில் ஒன்றாக (பொரு ( உவமை), எல்லை, ஏது, நீக்கம்) விளக்க, தொல்காப்பியம் அதன் வாக்கிய அமைப்பாக "இதனின் இற்று இது' என்று குறிப்பிட்டுள்ளது.
உரையாசிரியர்கள் பொரு என்பது ஒப்பு, உறழ் என்று இரண்டு வகைப்படும் என்று விளக்கியுள்ளனர். காக்கையிற்கரிது களம்பழம் (கிளாப்பழம்) என்பது உரையாசிரியர்கள் காட்டும் ஓர் எடுத்துக்காட்டு. அது ஒப்பு (காக்கையைப் போன்ற கருப்பு கிளாப்பழம்), உறழ் (காக்கையைவிட கருப்பு கிளாப்பழம்) என்று இரண்டு பொருள் மாறுபாடு உடையது. அதனால், இலக்கியங்களில் "இன்' என்பது ஒப்புக்கும், "இனும்' என்பது உறழ்வுக்கும் உரியதாகக் கையாளப்பட்டுள்ளது.

"அகனமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து
இன்சொல னாகப் பெறின்' (குறள்.92)

>> (SVS, Prof. of Tamil Linguistics, Annamalai U.)

குறள் 92-ல் உள்ளதுபோல, இனும் எனும் உவம உருபு “தாயினும் நல்லன்” என்ற தொடரில் காண்கிறோம்.

இன் என்ற உவம உருபு ஒப்புப் பொருளில் வருவது புறம் 249-ல்.

சுளகின் சீறிடம்! (புறம் 249)

[...]

ஒருவழிப்பட்டன்று; மன்னே! இன்றே,
10
அடங்கிய கற்பின், ஆய் நுதல் மடந்தை,

உயர் நிலை உலகம் அவன்புக, வரிநீறு

ஆடு,  சுளகின் சீறிடம் நீக்கி,

அழுதல் ஆனாக் கண்ணள்,

மெழுகும், ஆப்பி கண் கலுழ் நீரானே.

திணையும் துறையும் அவை.
....................தும்பி சேர கீரனார் பாடியது.

(தற்குறி = தன்+குறி, சுளகு + இன் + சீறிடம் = சுளகிற்சீறிடம், ....)

தமிழில் "மீ ' உயர்வு உவமை

By -செ.வை. சண்முகம்   |   Published on : 31st October 2017 07:08 PM  

இலக்கியத்தில் ஒப்புமை வாக்கியங்கள், தொடர்கள் அதிகம் பயன்படுவதைக் காணலாம். அவை "உவமை' எனப்படும். 
தமிழ் இலக்கணங்கள் உவமையை ஐந்தாம் வேற்றுமைப் பொருள்களில் ஒன்றாக (பொரு ( உவமை), எல்லை, ஏது, நீக்கம்) விளக்க, தொல்காப்பியம் அதன் வாக்கிய அமைப்பாக "இதனின் இற்று இது' என்று குறிப்பிட்டுள்ளது.
உரையாசிரியர்கள் பொரு என்பது ஒப்பு, உறழ் என்று இரண்டு வகைப்படும் என்று விளக்கியுள்ளனர். காக்கையிற்கரிது களம்பழம் (கிளாப்பழம்) என்பது உரையாசிரியர்கள் காட்டும் ஓர் எடுத்துக்காட்டு. அது ஒப்பு (காக்கையைப் போன்ற கருப்பு கிளாப்பழம்), உறழ் (காக்கையைவிட கருப்பு கிளாப்பழம்) என்று இரண்டு பொருள் மாறுபாடு உடையது. அதனால், இலக்கியங்களில் "இன்' என்பது ஒப்புக்கும், "இனும்' என்பது உறழ்வுக்கும் உரியதாகக் கையாளப்பட்டுள்ளது.

"அகனமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து
இன்சொல னாகப் பெறின்' (குறள்.92)

இலக்கியங்களில் அன்ன, ஆங்க, ஆங்கு, நிகர்ப்ப முதலிய சொற்கள் உவமைப் பொருளில் கையாளப்பட்டுள்ளன. அன்ன, ஒப்ப, போல் நிகர்ப்ப ஆகியவை பெயரைக்கொண்டு முடியும். பால் அன்ன வெண்மை, பால்போல வெண்மை, பால் நிகர்ப்ப வெண்மை என்று சொல்லலாம். ஆனால், ஆங்கு என்பது வினைச்சொல் குறிப்பாகப் பெயரெச்சத்தை ஏற்று வினையைக்கொண்டே முடியும். சொன்னாங்கு (சொன்ன ஆங்கு) செய்தார், பேசியாங்கு பணம் கொடுத்தார் என்றுதான் வழங்கப்படும்.

அருளிலார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளிலார்க்கு 
இவ்வுலகம் இல்லாகி யாங்கு (247)

பொருள் இல்லாதவர்க்கு இந்த உலக இன்பம் இல்லை என்றாற்போல உயிர்களிடத்து அருள் இல்லாதவருக்கு மேல் உலக இன்பம் இல்லை என்பதில் ஆங்கு உவமைப் பொருளில் வந்துள்ளது.
இலக்கியத்தில் உறழ, நடுங்க, கடுப்ப, எள்ள, வெல்ல, வியப்ப முதலியவையும் உவம உருபாகக் கையாளப்பட்டுள்ளன. அவற்றில் உறழ் என்பது மாறுபாடு பற்றி மட்டும் காட்டுவது. "முழவு உறழ் திணி தோள்' (முழவினைப் போன்று திண்ணிய தோள்) எனும் போது உவமையோடு ஒப்புமையை அழுத்திக் கூறுகிற நிலை அமைகிறது. 
நடுங்க, கடுப்ப, எள்ள, வெல்ல, வியப்ப முதலியவை கருத்தாடல் நோக்கில் உவமையோடு பேசுபவரின் சில உணர்வுகளைப் புலப்படுத்துவதாகக் கொள்ளலாம். "நடுங்க படங்கெழு நாக நடுங்கும் அல்குல்' படம் எடுத்து ஆடும் பாம்பு ஒத்த அல்குல் என்ற உவமைப் பொருளை மட்டும் உணர்த்தாமல் அல்குலின் சிறப்பு மிகைப்படுத்தப்பட்டதன் பிரதிபலிப்பாக நடுங்கும் என்பது உவம உருபு போலக் கையாளப்பட்டதாகக் கொள்ளலாம். கடுப்ப (கடுக்கும்) "கார்மழை முழக்கு இசை கடுக்கும் முனை' (கார் மேகங்களின் இடி முழக்கம்போல ஒலிக்கும் போர் முனை (அகநா.14:20-21). 
எள்ள - எள்ளல் - இகழ்தல். "கோங்கின் அவிர்முகை எள்ளி பூண் அகத்து ஒடுங்கிய வெம்முலை' (சிறுபா.25-26) கோங்கின் முகையை இகழ்ந்து அணிகலன்களுக்கு இடையே உள்ள முலை). இங்கு இகழ்தல் பொருள் தெளிவாக உள்ளது. உவமேயத்தை நோக்க உவமை இழிந்த பொருள் என்று கருதப்படுகிறது.
வெல்ல - வெல்லுதல் - வெற்றிபெறல். "வேங்கை வென்ற சுணங்கின் தேம்பாய்க் கூந்தல்' (ஐங்குறு. 324.45 வேங்கைப்பூவை வென்ற தேமலை உடைய தேன்சொட்டும் கூந்தல்). எனவே, உவமையை உவமானம் உயர்ந்த பொருளாகக் கருதலாம். 
இங்கும் அவற்றின் அகராதிப் பொருள், உவமேயப் பொருள் உயர்ந்தவை என்பதை உணர்த்துவதால் பொருண்மையியல் நோக்கில் ஒரு புது வகை அதாவது, மீஉயர் உவமை என்று கருதலாம். அதன் சிறப்பை அறிந்துகொள்ள ஆங்கில மொழியின் உவமை பற்றிய அறிவு பயன்படும்.
ஆங்கில மொழியில் பெயரடை (adjective) பகுதியாய் உவமை அமையும். அங்கு ஒப்பு (பாஸிட்டிவ் - comparative), உறழ்வு (கம்பேரட்டிவ் - ஸ்ரீர்ம்ல்ஹழ்ஹற்ண்ஸ்ங்) மீ உயர்வு (சூப்பர்லேட்டிவ் - superlative) என்று மூன்று நிலையில் உவமை வேறுபடுத்தப்படுகிறது. டால் (taller.... than) இர் விகுதி சேர்த்தால் டாலர்... தென் (talllest) உறழ் உவமை. டாலஸ்டு
(ற்ஹப்ப்ப்ங்ள்ற்) மீ உயர்வு உவமை ஆகும். அங்கு மீ உயர்வு என்பது உருபு மூலம் உணர்த்தப்படுகிறது. மாறாகத் தமிழில் சொல் மூலம் அந்தக் கருத்து உணர்த்தப்படுகிறது.
தமிழில் மீ உயர்வு உவமை என்ற கருத்து வெல்ல, வியப்ப, மருள போன்றவை உவம உருபுகளாகக் கையாளும்போது வெளிப்படுவதாகக் கொள்ளலாம். அது இன்னொரு நிலையிலும் உறுதியாவது அறியத் தகுந்தது. அன்ன, ஆங்கு என்பது சங்க இலக்கியங்களில் உவமை உருபாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. அது "அ' என்ற சேய்மைச் சுட்டு அடியாகப் பிறந்த சொல் ஆகும்.
தமிழில் அ, இ, உ ஆகிய மூன்று வகை சுட்டுகள் உள்ளன. அவை முறையே சேய்மை, அண்மை, மிக நெடுங்தூரம் என்ற பொருள்படும். இங்கு என்பது பேசுவோர் இடத்தில் உள்ளது என்று பொருள். அங்கு என்று சொன்னால் பேசுவோர் இடத்தைத் தாண்டிய தூரத்தில் உள்ளது என்று பொருள். உது, ஊங்கு என்று சொன்னால் வெகுதூரத்தில் இருக்கிறது என்று பொருள். உகரச் சுட்டு தற்கால வழக்கில் இல்லை. பழங்கால இலக்கியத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதையொட்டி ஆங்கு என்பது சேய்மை (தூரம்) உணர்த்தும் அகரச்சுட்டு அடிப்படையாகவும், ஊங்கு வெகுதூரம் உகரச் சுட்டு அடிப்படையாகவும் உண்டான சொற்கள் ஆகும். 
திருக்குறளில் ஊங்கு என்பதும் உவமை உருபாகக் கையாளப்பட்டுள்ளது. 31, 32,122,460,644,1065 ஆகிய குறள்களில் ஊங்கு உவமையாக அமைந்துள்ளது. ஊங்கு என்பது மிக உயர்ந்த பொருளை உணர்த்துவதாகக் கொள்ளலாம். ஆங்கிலத்தில் உள்ளது போல் மீஉயர்வு உவமையாகக் கருதலாம். அதாவது வெல்ல, வியப்ப, ஊங்கு முதலியவை தமிழில் மீ உயர்வு உவமைச் சொற்களாகக் கருதலாம்.
பொருள் வேறுபாடு உள்ள சொற்களை உவம உருபுகளாகக் கையாளும்போது, உவமைகளுக்குள் நுண்ணிய பொருள் மாறுபாடு அமைந்திருப்பது கவனத்துக்கு உரியது. அந்த நிலையில் ஒப்பு, உறழ்வு என்று இரண்டு வகையோடு மீ உயர்வு என்ற புதிய வகையும் கொள்ள இடம்கொடுக்கிறது.

உண்மையில் மீ தாழ்வும் உண்டு. அவனைவிடக் கொடியவன் யாரும் இல்லை என்று கூறுவது எடுத்துக்காட்டாக அமையும். ஒப்பு, உறழ்வு என்பதில் உயர்வு-தாழ்வு என்ற குறிப்பு இல்லை. அதனால் மீ உயர்வு - தாழ்வு என்ற மாறுபாடு செய்ய முடிவதால் அவற்றை மீநிலை என்று பொதுவாகக் கொள்ளலாம். எனவே, தமிழில் சொல் நிலையில் உவம உருபுகள் ஒப்பு, உறழ்வு, மீ நிலை என்று வகைப்படுத்துவது நுண்ணிய நிலையில் பொருள் வேறுபாடு செய்வதாக அமையும். 

N. Ganesan

unread,
Mar 28, 2020, 11:55:27 AM3/28/20
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com
I have attached the PDF file sent by prof. S. V. Shanmukam, Chdambaram (Tillai).

---------- Forwarded message ---------
From: Shanmugam SeVai
Date: Sat, Mar 28, 2020 at 10:22 AM

பொருளிலக்கணக் கோட்பாடு உவமவியல்  தொல்காப்பியம் என்ற  என்னுடைய நூலை நியூசெஞ்சுரி புக் வெளியிட்டுள்ளது. அதில் 11, 99 மீ உறழ்வு பற்றிய குறிப்பு  உள்ளது, அ,ண்மையில்குறள் உவமை நடை என்ற எழுதினேன், அதிலும் மீ உறழ்வு பற்றி குறிப்பு  உள்ளது அதை இத்துடன்  இணைத்துள்ளேன்
சண்முகம்

--------------------------------------------------------
uvamai natai.pdf

kanmani tamil

unread,
Mar 28, 2020, 1:52:03 PM3/28/20
to vallamai, mintamil
///உயர்நிலைஉலகம்அவன்புக,வரிநீறு

ஆடு,  சுளகின் சீறிடம் நீக்கி,

அழுதல் ஆனாக் கண்ணள்,

மெழுகும், ஆப்பி கண் கலுழ் நீரானே.

திணையும் துறையும் அவை.
....................தும்பி சேர கீரனார் பாடியது.

முனைவர் கணேசன், நீங்கள் கொடுத்திருக்கும் சுட்டியிலிருந்து தான் copy paste பண்ணினேன்.உங்கள் அளவிற்குத் தெளிவாகச் செய்யவில்லை; எனினும் பாடல் சிதைந்திருப்பதாகக் காட்டியிருப்பதை மறுக்க முடியாது. அது மட்டுமல்ல; 'வருநீறு' என்று ஒரு சீர் இல்லவே இல்லை. சிதைந்த சீரில் 'வரி' மட்டும் உள்ளது; பின்னர் அடுத்த அடி 'நீறாடு' எனத் தொடங்குகிறது. எதற்காக அதை மாற்றுகிறீர்கள்?
இது தகிடுதத்த வேலை.   
அ 
டங்கிய கற்பின் ; ஆய்நுதல் மடந்தை,10
உயர்நிலை உலகம் அவன்புக .. .. வரி
நீறாடு சுளகின் சீறிடம் நீக்கி,

அழுதல் ஆனாக் கண்ணள்,
மெழுகு, ஆப்பிகண் கலுழ்நீ ரானே.

அப்புறம் இன்னொரு விஷயம்; என்னிடம்  கழகவெளியீட்டில் 'வரி' என்ற சொல்லே இல்லை; அது 'வார' என்று உள்ளது. அதாவது 'வ் + ஆர ' அவள் தன் கணவனின் நடுகல்லுக்கு முன்னே சுளகில் (வட்டச் சுளகு) ஆப்பி கொண்டுபோய் மெழுகுவது அவன் ஆர; அதாவது அவனுக்குப் படைக்க..... (மூன்று வரி எங்கிருந்து வரும்?)

மூன்று வரி என உங்களுக்குத் தோன்றக் காரணம்; நீங்கள் K .P . சுந்தராம்பாளை  கொங்குநாட்டுப் பெண் என்று நினைப்பது தான்; நாங்கள் எல்லாம் அவரைத் தமிழச்சியாகத் தான் பார்க்கிறோம்.

நச்சினார்க்கினியர் கூறும் பொருள் பற்றிச் சொல்லி இருந்தீர்கள்; அவர் கொங்குக்கரூர்க் கோட்டையில் கோபுரம் இருந்ததென்று கற்பனை செய்த உரையாசிரியர்; இதுவும் எழுதுவார்; இதற்கு மேலும் எழுதுவார்.

ஒரு முக்கியமான விஷயம் - அன்றே உங்களிடம் சொல்ல நினைத்தேன்.  நீங்கள் பலரிடமும் படிக்கும்படிப் பரிந்துரைக்கும் முனைவர் ஜார்ஜ் ஹார்ட்டுக்கு இந்தப் பாடலைப் பொருளோடு அனுப்பி சற்று நீங்களே விளக்கியும் விடுங்கள்; ஏனென்றால் இங்கே மீன் சாப்பிடுவது இழிவானது என்ற கருத்து இல்லை; மீன் சாப்பிடுவதால் அவள் இழிந்த குலத்தைச் சேர்ந்தவள் என்றும் சொல்லவும் இயலாது. அவரது கட்டுரையில் 10ம் பக்கத்திற்கு மேல் அவர் சொல்லியிருக்கும் கருத்தாவது ...... மீன் சாப்பிடுவது இழிகுலத்தார் என்பதற்குரிய அடையாளம் என்பதாகும். 34பக்கம் நீளும் அக்கட்டுரையில் நான் 16பக்கம் தான் வாசித்து இருக்கிறேன்; அதற்குமேல் தொடரவே இயலவில்லை; B.P. ஏறுகிறது. 

மற்றபடி பாடலுக்கு பொருள் என்ன என்று நான் 18 மேற்கோள்களோடு சேர்த்து வைத்துக் கண்டுகொண்டேன்; நீங்கள் சொல்லும் பொருள்...இப்படி ஒரு பாடலை மட்டும் வைத்துப் பார்ப்பது; என்னைப் பொறுத்தவரை....எனக்கு இப்படிச் சொல்லப் பிடிக்கவில்லை தான்; ஆனாலும் எப்படிப் புரிய வைப்பது? என்னால் சோம்பேறித்தனமாக வேலை செய்ய இயலாது; சோம்பேறித்தனமான ஆய்வுமுடிபுகளை ஏற்றுக் கொள்ளவும் இயலாது. 

சக 

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

N. Ganesan

unread,
Mar 28, 2020, 2:20:51 PM3/28/20
to மின்தமிழ், vallamai
On Sat, Mar 28, 2020 at 12:52 PM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
///உயர்நிலைஉலகம்அவன்புக,வரிநீறு

ஆடு,  சுளகின் சீறிடம் நீக்கி,

அழுதல் ஆனாக் கண்ணள்,

மெழுகும், ஆப்பி கண் கலுழ் நீரானே.

திணையும் துறையும் அவை.

....................தும்பி சேர கீரனார் பாடியது.

முனைவர் கணேசன், நீங்கள் கொடுத்திருக்கும் சுட்டியிலிருந்து தான் copy paste பண்ணினேன்.உங்கள் அளவிற்குத் தெளிவாகச் செய்யவில்லை; எனினும் பாடல் சிதைந்திருப்பதாகக் காட்டியிருப்பதை மறுக்க முடியாது. அது மட்டுமல்ல; 'வருநீறு' என்று ஒரு சீர் இல்லவே இல்லை. சிதைந்த சீரில் 'வரி' மட்டும் உள்ளது; பின்னர் அடுத்த அடி 'நீறாடு' எனத் தொடங்குகிறது. எதற்காக அதை மாற்றுகிறீர்கள்?
இது தகிடுதத்த வேலை.   

வருநீறு என்ற சொல் எங்கே இருக்கிறது?  வரிநீறு என்ற சீர் (11-ம் அடி ஈற்றுச்சீர்)
இருக்கிறது. இப் பாடலில் எந்தச் சிதைவும் இல்லை. இதனை எல்லா உவேசா பதிப்புகளிலும்
பார்த்து உறுதி செய்தபின்னரே எழுதினேன். வரிநீறு என்பதற்கு
வரி வரியாய் இட்ட நீறு என்று உரைகாரர்கள் பொருள் தருகின்றனர்.

”வரிநீறு ஆடு, சுளகு இன் சீறிடம் நீக்கி” - இங்கே ”இன்” ஒப்பு உவம உருபாக
எல்லா உரைகாரரும் எழுதியிருப்பதும் குறிப்பிட்டேன். 
முறத்துக்கு முக்கியத்துவம் இல்லை. எனவே, வரிவரியான வெண்ணீறு
அழுங்கண்ணள், சுளகின் சீறிடம் நீக்கி எழுங்கண்ணள் என்று
தனித்தனி முடித்துப் பொருள்கொள்ள வேண்டியதாகிறது.

எந்தச் சிதைவும் பாடபேதமும், வாழ்நாளில் பலமுறை
புறநானூற்றைப் பதிப்பித்த உவேசா தந்துள்ளார்கள்.
அதன்படி, உரைகாரர்கள் எழுதிய உரையும் சேர்ந்தால்
விளக்கம் கிடைக்கிறது. சங்க கால நினைவஞ்சலி நாள் புரிகிறது.

ஆபிரகாம் பண்டிதர், கே. பி. எஸ் தலைசிறந்த தமிழர்கள்.
இந்த அகல்நாட்டுப் பாடல் கே.பி.எஸ் போல இருந்த
பல லக்ஷக் கணக்கான பெண்டிரின் கோலம் பற்றிய பாடல்.
பிறநாட்டாருக்கு அவ்வழக்கம் பரவலாக இல்லை.
எனவே, குறிப்பிடலாயிற்று.

புறப்பாட்டு 249:
------------------------------
               
கதிர் மூக்கு ஆரல் கீழ் சேற்று ஒளிப்ப,

கணைக் கோட்டு வாளை மீநீர்ப் பிறழ,

எரிப் பூம் பழனம் நெரித்து உடன் வலைஞர்

அரிக் குரல் தடாரியின் யாமை மிளிர,
5
பனை நுகும்பு அன்ன சினை முதிர் வராலொடு,

உறழ் வேல் அன்ன ஒண் கயல் முகக்கும்,

அகல்நாட்டு அண்ணல் புகாவே, நெருநைப்

பகல் இடம் கண்ணிப் பலரொடும் கூடி,
ஒருவழிப்பட்டன்று; மன்னே! இன்றே,
10
அடங்கிய கற்பின், ஆய் நுதல் மடந்தை,

உயர் நிலை உலகம் அவன்புக, வரிநீறு

ஆடு,  சுளகின் சீறிடம் நீக்கி,

அழுதல் ஆனாக் கண்ணள்,

மெழுகும், ஆப்பி கண் கலுழ் நீரானே.
திணையும் துறையும் அவை.

நா. கணேசன்

அடங்கிய கற்பின்  ஆய்நுதல் மடந்தை,10
உயர்நிலை உலகம் அவன்புக, வரிநீறு
ஆடு சுளகின் சீறிடம் நீக்கி,
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CA%2BjEHctuGKkpXUEXfkVxQJJdvSUcx8uU8_EJ2_fv394%2BpO7kww%40mail.gmail.com.

N. Ganesan

unread,
Mar 28, 2020, 2:42:12 PM3/28/20
to மின்தமிழ், vallamai

On Sat, Mar 28, 2020 at 12:52 PM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:

> அப்புறம் இன்னொரு விஷயம்; என்னிடம்  கழகவெளியீட்டில் 'வரி' என்ற சொல்லே இல்லை; அது 'வார' என்று உள்ளது. அதாவது 'வ் + ஆர ' அவள் தன் கணவனின் நடுகல்லுக்கு முன்னே சுளகில் (வட்டச் சுளகு) ஆப்பி கொண்டுபோய் மெழுகுவது அவன் ஆர; அதாவது அவனுக்குப் படைக்க..... (மூன்று வரி எங்கிருந்து வரும்?)

சிதைக்கப்பட்ட பாடல்.

ஆனால், எல்லாச் சுவடிகளையும் பார்த்து அச்சிட்ட உவேசா பதிப்பின் மூலம் தான்
வரிநீறு ஆடு தலைவி - கேபிஎஸ் போன்று இருந்தார் என உறுதி செய்ய முடிகிறது.
தாட்சிணாத்திய கலாநிதி உவேசா தன்பதிப்புகளில் எதுவும் சிதைவுகளைச் செய்யவில்லை.
முக்கியமான விஷயம்: சுளகு இன் சீறிடம் - இத் தொடரில் இன் உவம உருபு
என எல்லோரும் எழுதியுள்ளனர். நீறு என்பது சாணி என்று தமிழ் இலக்கியத்தில்
எங்கும் காணோம்.

அகல்நாடு, அதன் தலைவன் மறைவு, அவனுக்கு முறம் போன்ற சிறிய இடத்தில் படைப்பு,
துயரத்தின் உச்சத்துக்கே சென்று சங்கப்புலவர் பாடியுள்ளார். 

>
> மூன்று வரி என உங்களுக்குத் தோன்றக் காரணம்; நீங்கள் K .P . சுந்தராம்பாளை  கொங்குநாட்டுப் பெண் என்று நினைப்பது தான்; நாங்கள் எல்லாம் அவரைத் தமிழச்சியாகத் தான் பார்க்கிறோம்.
>

ஆமாம். வரிநீறாடு தலைவி அகல்நாட்டுத் தலைவன் மனைவி. தமிழர், ஆபிரகாம் பண்டிதரும்
தமிழர். தமிழ்ப் பாணர் மரபுகளை ஆராய்ந்தவர். 

இன்றைய அராகங்களை வைத்துப் பழைய பண்கள் என்ன என்று ஆராய்கிறோம்.
இன்றைய பல தமிழ்ச் சொற்கள் சங்க காலத்தில் இருந்ததும் தினமணி போன்றவற்றால்
வாசிக்கிறோம். விதிர்த்தல் விதறுதல் என்றாகிறது.
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
> ---
> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
> To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CA%2BjEHctuGKkpXUEXfkVxQJJdvSUcx8uU8_EJ2_fv394%2BpO7kww%40mail.gmail.com.

வேந்தன் அரசு

unread,
Mar 28, 2020, 11:29:35 PM3/28/20
to vallamai, மின்தமிழ்
"திலகம் 'தைஇய 'தேம்கமழ் நுதல்" என்று வரும்போது நீறாடு நுதல் என புலவர் எழுதுவாரா? திருநீற்றை கேழல்போல் கொட்டிக்கொண்டாளா, அடங்கிய கற்பின் ஆய்நுதல் மடந்தை?

அல்லது, அடங்கிய கற்பின் நீறாடுநுதல் மடந்தை என்றல்லவா எழுதணும்? மடந்தைக்கு இரண்டு அடைமொழிகள்தான், 1. அடங்கிய கற்பு, 2. ஆய் நுதல். அவள் பின்னர் அழுதகண்ணள் ஆனது தலைவனின் பிரிவு.

ஞாயி., 29 மார்., 2020, முற்பகல் 12:12 அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:

--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

N. Ganesan

unread,
Mar 29, 2020, 12:13:43 AM3/29/20
to மின்தமிழ், vallamai

On Sat, Mar 28, 2020 at 10:29 PM வேந்தன் அரசு <raju.ra...@gmail.com> wrote:
>
> "திலகம் 'தைஇய 'தேம்கமழ் நுதல்" என்று வரும்போது நீறாடு நுதல் என புலவர் எழுதுவாரா? திருநீற்றை கேழல்போல் கொட்டிக்கொண்டாளா, அடங்கிய கற்பின் ஆய்நுதல் மடந்தை?
>
> அல்லது, அடங்கிய கற்பின் நீறாடுநுதல் மடந்தை என்றல்லவா எழுதணும்? மடந்தைக்கு இரண்டு அடைமொழிகள்தான், 1. அடங்கிய கற்பு, 2. ஆய் நுதல். அவள் பின்னர் அழுதகண்ணள் ஆனது தலைவனின் பிரிவு.
>

இல்லை. ஆராய்தற்குரிய நுதலை உடைய தலைவி திலகம் தைத்தலை விடுத்து, வரிநீறு ஆடும் கோலத்தைக் கண்டு
புலவர் கவல்கிறார். முன்பு இருந்த நுதலின் செம்மைக்கும், இப்போதைய தவ நிலைக்கும் உள்ள வெறுபாட்டைக் குறிக்கிறார்.

திலகம் தைஇய தேம்கமழ் நுதல் முடிந்த நிலையை இப்பாடல் பதிகிறது.
வரிநீறாடு அழுகண்ணள், சுளகின் சீறிடம் நீக்கி ஆப்பி மெழுகும் அழுகண்ணள் எனக் கொள்ள வேண்டியுள்ளது.
வரிநீறாடுதல்  முறத்துக்கு இல்லை ஆதலால்.

நீறாடி என்றால் சிவபெருமான். திரிபுண்டரம் நெற்றிக்கு மட்டும் இல்லை. ஆய்நுதல் = சிறிய நுதல் பாட்டிலே
கூறுதல் வரிவரியாய் நீறாடலுக்கு.நீறாடி என்னும் சிவன் கேழல்போல் கொட்டிக்கொள்கிறானா?
சிவன் நீறாடுதல் போல, தலைவி (ஆய்நுதல் மடந்தை) வரிநீறு ஆடுகிறாள் என்கிரது புறநானூறு.

A transitional event in the life of the Heroine of the poem, puRam 249 -

'நல்ல நெய்ப்புடைய கூந்தல்' என்று தோழியர் புகழ்ந்துரைத்த கூந்தலில்
சிவந்த காம்பினை உடைய சிறிய வெட்சிப் பூக்களை நடுவே இடு
பூக்களாக இட்டு, பசுமையான குவளை மலர்களின் இதழ்களையும்
கிள்ளி அந்தக் கூந்தலில் இட்டு, 'சீதேவி', 'வலம்புரி' எனப்படும் தலைக்
கோலங்களை வைப்பதற்குரிய இடத்தில் வைத்து, திலகமிட்ட நறுமணம்
பொருந்திய அழகிய நெற்றியில் மகர (சுறா) மீனின் திறந்த வாயினைப்
போன்ற வடிவில் அமைந்த தலைக் கோலத்தையும் வைத்து,
முற்றமுடித்த குற்றமற்ற கொண்டையில் பெரிய குளிர்ந்த சண்பகப்
பூவையும் செருகி, கரிய புற இதழையும் உள்ளே துளையையும் உடைய
மருதின் ஒள்ளிய பூங்கொத்துக்களை அதன் மீது இட்டு,
கிளையிலிருந்து தோன்றி நீரின் கீழ் அழகாய் விளங்கும் சிவந்த
அரும்புகளால் கட்டப்பட்ட மாலையை அந்தக் கொண்டையில்
வளைய வைத்து ..." (திருமுருகு)

இப்படி இருந்த நிலை மாறி, வரிநீறாடு ஆய்நுதல் மடந்தை
நற்பெரும் தவத்தள் ஆகும் நிலை.
வரிநீறாடுதல் (புறம் 249) - திரிபுண்டரம் தரித்தல்:

பாடல் தெளிவாக அடிகள் 11-12 இருக்கிறது.
வரிநீறு என்ற ஈற்றுச்சீர் சிதைத்தால் அடுத்த அடியில் வகையுளி.

புறப்பாட்டு 249:
------------------------------
               249

கதிர் மூக்கு ஆரல் கீழ் சேற்று ஒளிப்ப,

கணைக் கோட்டு வாளை மீநீர்ப் பிறழ,

எரிப் பூம் பழனம் நெரித்து உடன் வலைஞர்

அரிக் குரல் தடாரியின் யாமை மிளிர,
5
பனை நுகும்பு அன்ன சினை முதிர் வராலொடு,

உறழ் வேல் அன்ன ஒண் கயல் முகக்கும்,

அகல்நாட்டு அண்ணல் புகாவே, நெருநைப்

பகல் இடம் கண்ணிப் பலரொடும் கூடி,

ஒருவழிப்பட்டன்று; மன்னே! இன்றே,
10
அடங்கிய கற்பின், ஆய் நுதல் மடந்தை,

உயர் நிலை உலகம் அவன்புக, வரிநீறு

ஆடு,  சுளகின் சீறிடம் நீக்கி,

அழுதல் ஆனாக் கண்ணள்,

மெழுகும், ஆப்பி கண் கலுழ் நீரானே.

திணையும் துறையும் அவை.

....................தும்பி சேர் கீரனார் பாடியது.

பொருள்:
http://www.diamondtamil.com/education/sangam_literature/ettuttokai/purananuru/purananuru249.html#.XnNlcHJOnIU
திணை: பொதுவியல்
துறை: தாபதநிலை
(காஞ்சித் தினைத் துறைகளுள் ஒன்றான, 'தாமே யேங்கிய தாங்கரும் பையுள்' என்பதற்கு மேற்கோள் காட்டுவர் நச்சினார்க்கினியர் (தொல். புறத்.சூ. 24 உரை)).
கதிர் போலும் மூக்கினை உடைய ஆரல்மீன் சேற்றில் பிறழும்போது பருத்து வளைந்திருக்கும் வாளைமீன் நீரின்மேல் மிதந்து வரும்போது பூத்திருக்கும் பழமையான வயலில் நெரித்துப் பிடித்து அத்துடன் அரி ஓசை செய்யும் தடாரி போல் இருக்கும் ஆமை வெளிப்படுகையில் பனை நுங்கு போல் நிறம் கொண்ட சினை முதிர்ந்திருக்கும் வரால் ஊடோடுகையில் வேல் போல் புறழும் கயல் மீனைப் பிடித்து, அனைத்தையும் பிடித்து. வலைஞர் வழங்கத், தன் அண்ணலோடு (தலைவனோடு) பலரும் கூடிப் பகல்பொழுதெல்லாம் உண்டபோது தானும் கூடி உண்டாள். இன்று, கணவன் வாழும் காலத்தில் துலங்கிக் கிடந்த கற்பு அவன் மாண்டுபோன பின்னர் தன்னுள் அடங்கிக் கிடப்ப, ஆராயும் அழகு கொண்ட நெற்றியை உடைய மடந்தைப் பருவத்து அந்தப் பெண் நெற்றியில் வரிவரியாகத் தெரியும் திருநீறு பூசியவளாய் தரையில் முறம் அளவு பரப்பளவை சாணத்தால் (ஆப்பி) மெழுகினாள். அவள் அழும் கண்ணீரும் மெழுகும் சாணத்தில் விழுந்து தரையை மெழுகிக்கொண்டிருந்தது. (மெழுகிய அந்தத் தரையில் இட்டுத்தான் இன்று உணவு உண்ணப்போகிறாள்).

நா. கணேசன்

N. Ganesan

unread,
Mar 29, 2020, 1:06:50 AM3/29/20
to மின்தமிழ், housto...@googlegroups.com, vallamai
வரி அணில் - புறம் போன்ற நூல்களில் காண்கிறோம்.
வரிக்குதிரை தற்போது வழங்கும் சொல்.
வரிநீறு = திரிபுண்டரம் (புறம் 249, அடி 11). மாவிரதியர், பாசுபதர் வழிபாட்டில் முக்கியமானது.

N. Ganesan

unread,
Mar 29, 2020, 1:24:46 AM3/29/20
to மின்தமிழ், housto...@googlegroups.com, vallamai
(1) சுவடிகளில் புறம் 249-ல் எந்த அடியும் சிதையவில்லை.
(2) 11-ம் அடி: உயர்நிலை உலகம் அவன்புக, வரிநீ(று).
உவேசா, ச. வையாபுரிப்பிள்ளை பின்வந்த எல்லா நூல்களிலும் வரிநீறு உண்டு.

N. Ganesan

unread,
Mar 29, 2020, 9:41:16 AM3/29/20
to மின்தமிழ், housto...@googlegroups.com, vallamai
(1) சுவடிகளில் புறம் 249-ல் எந்த அடியும் சிதையவில்லை. (எ-டு: உவேசா பதிப்பு, 1894, 1911).
(2) 11-ம் அடி: உயர்நிலை உலகம் அவன்புக, வரிநீ(று).
உவேசா, ச. வையாபுரிப்பிள்ளை பின்வந்த எல்லா நூல்களிலும் வரிநீறு உண்டு.

(1) வரிப்புலி - இது பண்புத்தொகை (குணத்தொகை எனவும் பெயர்). Pope's third Tamil grammar, 1859, pg. 111
(2) ”வரிமணல் ஞெமர” (சங்க இலக்கியம்)
(3) “வரிக்குருளை” (சங்க இலக்கியம்)
(4) ”வரி அணில்" சங்க இலக்கியம்.
அணில் < சணில்/செணில்
இது போன்றதே, (5) வரிநீறு அணியும் தவந்தாங்கு தலைவி (புறம் 249). நீறாடு சிவன் = நீறாடி.
3 வரியுள்ள அணில் “வரிஅணில்” என்ப் புறப்பாட்டில் வருவது போல,
ஆய்நுதலில் மடந்தை 3 வரி நீறு அணிதலைக் குறிக்க ஆய்நுதல் மடந்தை (புறம் 249) என்ற தொடரால்
குறிக்கிறார். This is a transitional stage in the life of the Heroine of the poem.
(6) 20-ஆம் நூற்றாண்டில், தமிழுக்கு “வரிக்குதிரை” வருகிறது.

-----------------

தும்பி சேரகீரனார் பாடலைப் படித்தால் எப்பொழுதும் கேபிஎஸ் நினைவே வரும்.
பழனியில் 18-ம் படி சேர வினாயகர் மண்டபம், கோயில் என்முன்னோர் கட்டியது.
சேரராஜா முருகனுக்கு மலைக்கோயில் எடுத்தவன். அவன் வைத்த வினாயகன்
என ஸ்ரீலஸ்ரீ சாதுசாமிகள் கட்டளையிடச் செய்தனர். எனவே, கட்டளைதாரர்
மாதாமாதம் யாராவது வீட்டிலிருந்து போவது வழக்கம். அப்போது இராக்கால
பூஜையில் சில சமயம் கொடுமுடியில் இருந்து கேபிஎஸ் வந்திருக்கிறார்.
சில குருக்கள்மார் கேட்க, சில திருப்புகழ் பாடுவது அவர் வழக்கம்.
கடைசிகாலத்தில் உறவினர் எல்லாம் பிடுங்கிக்கொள்ள மிக சிரமப்பட்டார்கள்.
நா. மகாலிங்கத்திடம் உதவித்தொகை பெறுதலும் உண்டு. இன்னும் நிறையச்
செய்திகள் அவர் வாழ்க்கையில் அறிவேன். கொடுமுடி கோகிலம், யார்
சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியது ....

NG

கொங்குநாட்டின் இரு கலைப்பொலிவர்கள். பாலக்காட்டுக் கணவாய்க்கு இருபுறமும்.
தலைமை ஸ்தானம் பழனிச்சாமி பக்தர்கள். “வரிநீறு ஆடு” தலைவி (Heroine of PuRam 249).
KBS-MGR.jpg
KB Sundarambal and SG Kitappa, the celebrated couple of early Tamil drama who were inspired by Balamani. Courtesy: Roli Books

வீர சுதந்திரம் வேண்டி நின்றோம், பண்டித மோதிலால் நேரை ... கேபிஎஸ் பாடுகிறார்:
திருச்செந்தூரன் - கேபிஎஸ்

அகல்நாட்டுத் தலைவன் இருந்த போது, தலைவியின் மங்கலக்கோலம்,
324765c82b78247428cbebcb570790db-250x159.png

kanmani tamil

unread,
Mar 29, 2020, 2:11:49 PM3/29/20
to vallamai, mintamil
படம்=சேலை எனின்;
'படரும் கொடி'யில் எங்கே சேலை உள்ளது?

படர் தாமரை (ஒரு தோல் நோய்) யில் சேலை இருக்கிறதா?

குழந்தையின் முகத்தைப் பார்த்து; 'படர்ந்த முகம்' என்னும் போது சேலை இல்லையே?

'படர் மெலிந்து இரங்கல்' என்னும் துறையில் சேலைக்கு இடமில்லை!

பாய்மரக்கப்பலைப் 'படகு' என்று கூறக் காரணம்; அதில் சேலை இருப்பதால் அன்று. அது விரிந்து இருப்பதால் ஆகும்.

இப்படியும் கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்:....................  
  
அவன்புகலரி' என்று கொள்வதில் பொருட்குழப்பம் இருப்பதாகத் தெரியவில்லை.
 
நெருநை அகனாட் டண்ணல் புகாவே = அன்று அவன் போய்ச் சேரும் முன்னால்........ எல்லோருடனும் சேர்ந்து வகைவகையான மீன்களைப் பிடித்து வளமாக உண்டிருந்தனர். 

இன்றே (அவன் புக); 
அடங்கிய கற்பின் ஆய்நுதல் மடந்தை புகலரி;  உயர்நிலை உலகம் = இன்று அவன் போய்ச் சேர்ந்த உயர்நிலை உலகத்திற்கு இவள் போய்ச் சேர அரிதாக இருப்பதால் (இன்னும் உயிர் போக வழியில்லை ஆதலால்) கைம்மை நோற்கிறாள்.

அவளது அடங்கிய கற்பு நெறி இது. 
மங்கலமிழந்தமை நெற்றியில் வெளிப்பட்டது; அவ்வளவே. 

மூன்று வரி பற்றிய குறிப்பு எங்கும் இல்லை. 
கைம்மையில் தனித்துப் பசியாற இயலாத அவளுக்குக் கணவனின் அருகாமை தேவைப்படுகிறது.   தனது குடும்பத்திற்குரிய தோட்டத்தில் சுளகில் எடுத்த ஆப்பியுடன் வந்து அதைக் கீழே வைத்து விட்டு மெழுகத் தொடங்குகிறாள். அவள் அழுத கண்ணீரே போதுமானதாக உள்ளது; வேறு தண்ணீர் தேவைப்பட வில்லை. சுளகு வைத்த சிற்றிடம் தவிர மெழுகிப் பின்னர்......

இதைத் தோட்டப் பணியாளர்கள் பார்க்கின்றனர். 
அவர்களுள் ஒருவராகிய தும்பி சொகினனார் அவளது துக்கத்தைக் கண்டு; தாளாத துயரத்துடன் 
('அவன்புக' என்ற சொற்றொடருக்குப் பின்னர் ஒரு இழுவை, ஒரு சிளுக்கு சேர்த்து வாசித்துப் பாருங்கள்.) ஏங்கிப் புலம்புகிறார். தலைவன் இறப்பதற்கு முன்னால் தானும் அவனோடு சேர்ந்து உண்டு களித்தவரல்லவா?! அந்த இரங்கல் உணர்வு ஏக்கமாக வெளிப்படுவதால்; 
தலைவன் புக;
தலைவிக்குப் புகலரி;
உயர்நிலை உலகம் என்பது சேர்ந்து 11ம் அடியாக அமைந்துள்ளது.      
"சுளகிற் சீறிட நீக்கி" என்ற தொடரிலேயே நீக்கி எனும் சொல் இருப்பதால் 5ம் வேற்றுமை நீங்கல் பொருளில் உருவாக்கி உள்ள தொடர் இது. 
சக 

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

N. Ganesan

unread,
Mar 29, 2020, 4:05:44 PM3/29/20
to மின்தமிழ், vallamai
வழக்கமான பாணியில் இருந்து மாறி இருப்பது காண மகிழ்ச்சி.

படம் என்பது சீலை. வடமொழியில் phaTa. அது படகு செலுத்தப் பயன்படுவதால் காரணப்பெயர்.
பல உதாரணங்கள் கொடுத்துள்ளேன். உயர்நிலை உலகம் அவன் புக,
என்பது தலைவன் மேலுலகம் புகுந்ததைக் குறிக்கும். படம் செய் பந்தர்
புறம் 249-ல் மண்ணார் அமைத்திருப்பர். அகல்நாட்டுத் தலைவன் நிகழ்ச்சியில்
பலரும் 100 கணக்கில் கலந்துகொள்ள ஏதுவாக. படம் = மாத்துச் சீலை.
இன்றும் நடப்பதுதான்,மண்ணாரின் பங்கு.. மங்கலப் பண்டிதர்களின்
பங்கும் உண்டு.

புலவர்களுக்கும், ஏடுகளை எல்லாம் சோதித்து அச்சிட்டோருக்கும்
புறம் 249 நன்றாகத் தெரிந்திருக்கிறது. எந்தச் சிதைவும் இல்லாத,
தெளிவான பாடல். அதனால் தான் அனைவரும்
வரிநீறு என்று அச்சிட்டுள்ளனர். வரி அணில் போல வரி நீறு அணிந்த தலைவி.
மண்ணா-மங்கலர் பணியாற்றும் சடங்கு. மண்ணார் பற்றி யார்
என சங்க இலக்கியத்தில் நிறைய உண்டு. பண்டிதர் பற்றிப் பார்த்தோம்.
மண்ணா-மங்கலர் பாணர் வகையினர் அறிந்தால் தான் அணங்குக்
கோட்பாட்டு ஆய்வு புரியும். இப்பாட்டில் லரிநீறு இல்லை. வரிநீறு.
சுளகின் சீறிடம் என்பதில் இன் என்பது போல எனப் பொருள்படும்
உவம உருபு. வரிநீறு என்று ஏடுகளைப் பார்த்துப் பதித்தோர் அனைவரும்
உவம உருபு என்றே எழுதியுளர். நீறு என்றால் சாம்பல். அது சாணி அல்ல.
இதுவும் குறிப்பிட்டுள்ளேன். மஞ்சள் ஆடுதல், கருகிய கரித்தூள் ஆடுதல்
உதாரணம்.

உங்கள் விளக்கங்கள் பழைய உரைகளுடனோ, ஆராய்ந்து பார்க்கையிலோ
சரியெனத் தெரியவில்லை. மேலைக் கடற்கரையில் நியூயார்க் போல
வஞ்சி என்ற ஒரு ஊர் இருந்தத்தாகக் காணோம். தமிழறிஞர்களும்,
தொல்லியல் அறிஞர்களும் காட்டியுள்ள முடிபு, அதனை ஏற்கிறேன்.

நியூயார்க் டைம்ஸ் போல, சங்க இலக்கியம் ஆகாமல் இருக்க
பழைய உரைகள் முக்கியமானவை. இல்லையேல், இன்றைய
சமுதாய, அரசியல் சங்க காலப் புரிதலுக்கு தடையாக நிற்கும்.
அதனால் தான், வஞ்சி என்ற ஊர் கேரளா கடற்கரையில்
சங்க காலத்தில் இல்லை. வரி நீறு என்று வரி அணல் போல
சங்க இலக்கியத்தில் பாவிக்கிறார்கள். இன் உவம உருபு, ....
என பழைய உரைகளைக் காட்ட வேண்டியுள்ளது.
நச்சினார்க்கினியர் கூற்றினால் வஞ்சி உள்நாட்டில் உள்ளது
தெளிவடைகிறது,

நா. கணேசன்

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CA%2BjEHctEy-YQGMzO5oQvc%2BpC2VobmWs6MxhDuM1jdve2y8aR3g%40mail.gmail.com.

N. Ganesan

unread,
Mar 30, 2020, 7:07:41 PM3/30/20
to மின்தமிழ், vallamai, kanmani tamil

On Mon, Mar 30, 2020 at 1:25 PM தேமொழி <jsthe...@gmail.com> wrote:

On Monday, March 30, 2020 at 11:21:39 AM UTC-7, தேமொழி wrote:

On Monday, March 30, 2020 at 3:45:09 AM UTC-7, N. Ganesan wrote:
நீங்கள் ஒரு அறிஞர்.

முனைவர் கணேசன்  நீங்களும் ஒரு  அறிஞர் 
 
யார் “மேலு உலகம் அவன் புக லரி நீறு” என்று அச்சிட்டுள்ளார்கள்
என தரவில்லையே.

நான் தந்தேன், தருகிறேன் உவேசா அச்சிட்டுள்ளார்
 
இணையப்பக்கத்தில் உள்ள டைப்போக்ராகிக் எர்ரர் “லரி நீறு”
என்பது குறிப்பிட்டேனே. யாருமே ”லரி நீறு” என அச்சிடவில்லை. இணையப்
பக்கங்களில் பிழைகள் மிகுதி.

உங்களுக்கு வரி என்பது இணையப்பக்கங்களில் உள்ள பிழை என ஏன் தோன்றவில்லை?
மூல ஓலையையும்  கொடுத்தாகிவிட்டது 

காரணம் உண்டு. என்னிடம் இந்தப் பதிப்பு இல்லை.
ஏடுகளில் பாடல் சிதையவில்லை எனவும் புலனாகிறது.
ஏவா வில்டன் குறுந்தொகை, நற்றிணை நூல்களுக்குச் செய்துள்ள
பதிப்பு போல, யாராவது ஏனை நூல்களுக்கும் பொறுமையாக செய்யணும்.

ஆனால், பேரா. கு.அருணாசலக் கவுண்டர் அளித்த நூல்களில் பல புறநானூறு உள்ளன.
அவற்றைப் பார்த்துத் தான் எழுதினேன். உ-ம்: 1894, 1928-ம் வருடப் பதிப்புகள்.
அதில் ”வரிநீறு ஆடு” தான். உங்கள் பதிப்பு வந்த பின், உவேசா, மற்றும் பிற
அறிஞர்கள் தமிழ்நாடெங்கும் தேடி எல்லாச் சுவடிகளையும் ஒப்பிட்டு
புறநானூற்றை வெளியிட்டார்கள். சைவ சித்தாந்த மஹா சமாஜப் பதிப்பு அது.
உவேசா தன்னிடம் உள்ள எல்லா ஏடுகளையும் தந்தார். பிறகும் பல ஏடுகள்
வந்தன. காகிதப் பிரதிகள். எஸ். வையாபுரிப்பிள்ளை தலைமையில்
அறிஞர் உலகம் பல்லாண்டு பணி செய்தது. அதன் முகவுரை படிக்க வேண்டிய ஒன்று.
அதில், மீண்டும் “வரி நீறு ஆடு” என்றே திரும்பிவிட்டனர். அதனால் தான்
”லரி நீறு” என்பது அல்ல என எனக்குத் தெளிவானது. பின்னர் வந்தோரும்
வரி நீறு என்று பயன்படுத்தக் காரணம் இதுவே.

Anyways, கண்மணி எனக்குத் தனிமடல் இட்டிருந்தார்கள். அவருக்கு என் அன்புகலந்த
வணக்கமும், நன்றியும் உரித்து. அவர் கொள்ளும் பொருள்கள் பலவற்றில்
நான் உடன்படுவதில்லை. பழைய உரைகள் இருக்குமானால் அவற்றைச்
சாதாரணமாக தூக்கி எறிய முடியாது. சைவ சித்தாந்த மகாசமாஜப்
பதிப்பில் உரையால் விளங்கும், ஏடுகளின் மூலத்தால் விளங்குவன பல.
அவற்றில் “வரி நீறு ஆடு” என்னும் என்னும் பாடல் (புறம் 249) ஒன்றாகும்.

கொஞ்சம் டைம் கொடுத்துக் கேட்டால் கண்மணி அவர்களின் கேள்விக்கு
என்னால் பதில் அளிக்க முடியும். உ-ம்: தும்பி சேரகீரனார் என்பது எவ்வாறு?
இது நற்றிணை உரையைப் படிப்பதால் ஏற்பட்டது. பிறகு பேரா. கண்மணிக்கு
என்னுரையை எழுதுகிறேன்.

---------------------------

”லரி நீறு” இல்லை, “வரி நீறு” தான் என்பதை புறம் 249-ல் 1935-க்கு அப்புரமாக
நிச்சயித்துள்ளனர் தமிழ்ப் பேராசிரியர்கள்.  என் அனுபவம் ஒன்றைக் காட்டுகிறேன்.
பாரதிதாசன் குடும்பத்தாரில் இசை பல தலைமுறைகளாகக் கற்றோர்
உண்டு. அவர் முதலில் முருகன் மீது பஜனைகள், திருப்புகழ் பாடிவந்தார்.
பிறகு தான் கொங்குநாடு தந்த பெரியார் அடியார் ஆனார். அண்ணாவைத்
திட்டி எழுதியதெல்லாம் சேசாத்திரி தொகுத்துத் தந்துள்ளார்.
முதல் பக்தி ஃபேஸில், அவர் எழுதிய திருப்புகழில், மணக்குள விநாயகர் (புதுச்சேரி) மீது,
ல அல்ல, வ எழுத்து என விளக்கியுள்ளேன்:

(1) ”உளமதி னினைகுவ தெனிலவர்” - வ என்பது ல என்று அச்சாகியுள்ளது. இது “உளமதில் நினைகுவது எனில் அவர்” என்று பதம் பிரிக்கவேண்டும். 'தொழுகுவது' என்றும் அடுத்து அதே வரியில் வருவதால் 'நினைகுவது' என்று கொள்க. ”நினைகுலது” என்றால் பொருள் இல்லை.

(2) இரண்டாமடியில் “வடிமேலே” என்பது பிழையாக “வடிவேலே” என்று அச்சாகி உள்ளது. “திருவடி மேலே” என்றால் தான் பொருள் உண்டு. வடிவேல் என்று முருகனை இங்கே குறிக்க இடமில்லை என்பதுணர்க.

பிற பின்!
நா. கணேசன்
 
///உங்களுக்கு வரி என்பது இணையப்பக்கங்களில் உள்ள பிழை என ஏன் தோன்றவில்லை?
மூல ஓலையையும்  கொடுத்தாகிவிட்டது ////

249-puram 400.JPG

நூலில் அச்சுப்பிழை குறிப்புகள் இங்கே .. அதில் இந்தப்பாடலில் பிழை குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை. 

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

N. Ganesan

unread,
Apr 5, 2020, 11:07:11 PM4/5/20
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com
சில ஆண்டு முன்னர் அனுப்பிய மடல். உவேசா அவர்களின் தமிழ் அறிவைப் பறைசாற்றுகிற புறநானூற்றுப்
பதிப்பு முதல் பதிப்புகளில் உள்ளவாறே, அறிஞர் குழுக்கள் ஏடுகளை எல்லாம் பார்த்து ஆராய்ந்த போது
மீண்டுவிட்டது. அதனை வைத்துத் தான் வரி நீறு ஆடு, அழுத கண்ணள் என்பதன் பொருளும்,
சங்க காலச் சமயமும் தெளிவாகிறது. ஐந்து முக்கியமான பாடல்கள் - தமிழ்த்தாய் வாழ்த்து, + நான்கு சங்கப் பாடல்கள்
பற்றியும் அவர்றின் உயிர்நாடியாக உள்ள சொற்கள் பற்றியும் எழுதியுள்ளேன்:

முறம், சுளகு, பிடகம் : வேறுபாடுகள்
-------------------------------------------------------------

புறம் 249-ல் சுளகுக்கு முக்கியத்துவம் இல்லை. சுளகு போன்ற சிறிய இடம், அவ்வளவுதான் சொல்கிறார் புலவர். இன் = போன்ற (உவம உருபு).

-----------------------------

உ. வே.  சாமிநாதையர், வ. சு. செங்கல்வராயர் பற்றிய வாழ்க்கை நிகழ்ச்சி கிடைத்தது. நெஞ்சில் நெகிழ்ச்சியூட்டும் தமிழறிஞர்கள் பற்றிய
செய்தியை முல்லை பழனியப்பன் சொல்லியுள்ளார்.

நா. கணேசன்

ஆராய்ந்த கைகளும் தேடிய கால்களும்
By முல்லை மு.பழநியப்பன்
Dinamani, First Published : 17 June 2012 12:00 AM IST

தணிகைமணி டாக்டர் செங்கல்வராயபிள்ளை அவர்கள், தேவாரங்களையும், திருப்புகழையும் ஆராய்ந்து, "ஒளி நெறிகள்' என்னும் தலைப்பில் வெளியிட்டுப் பெருமை பெற்றவர்கள். ஒவ்வோர் ஆண்டும் "தமிழ் தாத்தா' உ.வே.சாமிநாதய்யரை, தணிகைமணி சென்று காண்பது வழக்கம். அய்யர் அவர்கள் நோயுற்றுப் படுத்து இருந்தார்.

அவர் அருகில் சென்று, அவர் விழிக்கும் வரை நின்று கொண்டிருந்தார். அய்யர் கண் விழித்துப் பார்த்ததும் மகிழ்ச்சி ததும்ப,""திருப்புகழை ஆராய்ச்சி செய்த கைககள் ஆயிற்றே'' என்று கூறி தணிகைமணியின் இருகைகளையும் பற்றி தம் கண்களில் ஒற்றிக் கொண்டார். உடனே தணிகைமணி அய்யரின் பாதங்களைப் பற்றியவாறு, ""சங்கத் தமிழ் ஏடுகளைத் தேடின கால்கள் ஆயிற்றே இவை'' என்று கூறி வணங்கினார். அறிஞர்களின் பெருமையை அறிஞர்களே அறிவர்.

N. Ganesan

unread,
Apr 9, 2020, 7:18:17 AM4/9/20
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com
வேளாண்மையில் பயன்படும் கருவிகள் பல வடிவங்களில் செய்யப்படுகின்றன. ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு அடிப்படையான வடிவம்
உண்டு, புறம் 249-ல், ஆய்நுதல் மடந்தை, வரிநீறு ஆடி, சுளகுபோன்ற இடத்தில் படையல் இடுகிறாள். இப்பாடல் விளக்கத்தில்
மண்ணாமங்கலர் பங்கு பெரிது, ஈமச் சடங்குகளில், படம் செய் பந்தர் என்று புடைவையால் பந்தர் அமைக்கும் பணி, நெய்ப்பந்தம்
பிடித்தல் போன்றவை மண்ணாருக்கு உரியவை. மங்கல பண்டிதர்கள் சடங்கின் முக்கிய அந்தணர்கள். அவர்கள் பங்கைப் பார்ப்போம்.
தமிழிசை எப்போதும் வளர்த்தோர். பாணர் என்று சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்படுவோரில் பெரும்பகுதியினர் மருத்துவர்/மங்கலர் ஆவர்,
புறம் 249 வரிநீறு போலவே அமைந்த புறப்பாடல் 356. இதிலும், வாழ்க்கை நிலையாமை குறித்தும், வரிநீறு ஆகிய சுடலை வெண்ணீறு
பற்றியும் பாடப்பட்டுள்ளது. திரிபுரத்தை எரித்த நீறு அணிபவனாக சிவனைச் சங்க இலக்கியம் வணங்குகிறது.
களரி பரந்து கள்ளி போகிப்
பகலும் கூஉம் கூகையொடு பேழ்வாய்
ஈம விளக்கின் பேஎய் மகளிரொடு
அஞ்சுவந் தன்றுஇம் மஞ்சுபடு முதுகாடு
நெஞ்சமர் காதலர் அழுத கண்ணீர்                                            5
என்புபடு சுடலை வெண்ணீறு அவிப்ப
எல்லார் புறனும் தான்கண்டு உலகத்து
மன்பதைக் கெல்லாம் தானாய்த்
தன்புறம் காண்போர்க் காண்புஅறி யாதே
.

புறம் 249-ல் சுளகின் வடிவம் முக்கோணம். சேம்பின் இலை வடிவில் இருக்கும் என்கின்றன சங்க நூல்கள். பிடகம் என்றால் வட்டவடிவம், சுளகு முக்கோண வடிவம்,
முறம் சதுர வடிவம், ... எனப் பல முறவகைகள். இவற்றைச் சிறுமியர் விளையாடு பொருள்களாகவும் செய்துள்ளனர்.
முச்சி என்று சொல்வதுண்டு. முச்சி < முச்சில் < முற்றில்

அம் சிறைத் தும்பி = ஹம்மிங்/இசை செயும் இறகுகளைக் கொண்ட தும்பி (கொங்கு தேர் வாழ்க்கை).
அஞ்சிறை முரலும் வண்டு. இந்த முர- போன்ற வினையை உடையது முர- > முரம் > முறம்.
சிறுமிப்பெண்கள் விளையாடுவது முச்சில் (முச்சி).

முல்- > முல்+த்+இல் = முன்றில்/முற்றம். முல்=முன் (முலை ...)
முர்- > முர்-+த்+இல் = முற்றில் முத்தில் > முச்சில்.
(ல், ர் வேறுபடும்போது பொருளும் வேறுபடுவது காண்க.)

கொங்குச் சமணர் திருத்தக்கதேவர் முச்சி(ல்) என்பதன் செந்தமிழ் வடிவத்தைத் தந்துள்ளார்:

University of Madras Lexicon

முற்றில்

muṟṟil   n. prob. முற்று-. [K.muccal.] 1. Small winnow; சிறுமுறம். முற்றில்சிற்றிலுண்ணொந்து வைத்து (சீவக. 1099). 2. The16th nakṣatra, as resembling a winnow. Seeவிசாகம். (திவா.) 3. A kind of shell-fish;சிப்பிவகை. (தொல். பொ. 584, உரை.)

J.P.Fabricius Tamil and English Dictionary

முற்றில்

muṟṟil   s. (com. முச்சில், முச்சி) a small winnowing fan; 2. the 16th lunar mansion, விசாகநாள்.

Miron Winslow - A Comprehensive Tamil and English Dictionary

முற்றில்

muṟṟil   s. [com. முச்சில், முச்சி.] A small winnowing fan, சிறுமுறம். 2. The sixteenth lunar mansion, விசாகம். (சது.)>

நா. கணேசன்

N. Ganesan

unread,
Apr 12, 2020, 9:22:03 AM4/12/20
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com
தமிழர்கள் வேளாண்மையில் பல வடிவங்களைத் தேர்ந்து பயன்படுதினர் என்பது சங்க இலக்கியத்தால் தெரிகிறோம்.
முறம் - சதுரமானது. சுளகு - திரிகோண வடிவு, பிடகம் - வட்டவடிவில் உள்ள சிறுகூடை.

வட்டி = வட்டில். வட்டவடிமானது. எதற்கும், மூடி இருந்தால் அது கடகம். கட்டப்படுவது, அதாவது மூடிப்பூட்ட முடியும்.
காப்புக்கட்டுவது. இதில் உள்ள கட்டு-தல் ===> கடகம்.

அல்லியம்/அலிப்பேடு கண்ணன் கொம்பொசித்த கூத்து. 6 பிரதிமைகளை கொண்ட பெண்கள் வட்டமாக
ஓடிக் காட்டும் நாடகம். இந்தப் பிரதிமை அல்லிப்பாவை எனப்படும். அல்லிப்பாவை என்னும்
ஓவியத்தை நிறுத்திக் காட்டும் ”சுத்த நிருத்தம்” இது. அல்லியக்கூத்தில் அவிநயமோ, வட்டணையோ (dance step)
இருக்காது என்பார் அடியார்க்குநல்லார்.

அல்லிப்பாவை பற்றிய கோவூர்கிழார் உரையிலே வட்டி என்றால் என்ன என விளக்கியுள்ளார் உவேசா அவர்கள்.
”வட்டி - கடகப்பெட்டி; அதாவது பனை அகணியாற் செய்த பெரிய பெட்டி; “ஊனார் வட்டியார்” (மலைபடு.152). ஆய்-இடைச்சாதி; சீவக.426, ந.”

விதைக்குறு வட்டி: "வித்தொடு சென்ற வட்டி" (நற். 210:3.) வட்டி: ஐங். 47:2, 48:2.

முறம், சுளகு, பிடகம், வட்டில், முற்றில்(முச்சி), கடகம், வட்டி - வடிவ வேறுபாடும், பயனும் வேறுபடும்.

Reply all
Reply to author
Forward
0 new messages