மஹா புஷ்கரம்

47 views
Skip to first unread message

Suba

unread,
Oct 1, 2017, 1:53:21 AM10/1/17
to மின்தமிழ், Subashini Kanagasundaram
*🔵🔵மஹா புஷ்கரம்... குப்பை மேடான துலாக்கட்டம்... தூய்மைப்படுத்தி நெகிழவைத்த நாடோடி இன மக்கள்!*

திருவிழாக்கள்... அவற்றை ஒட்டிய கோலாகலக் கொண்டாட்டங்கள் நமக்குத் தருபவை ஏராளம். மகிழ்ச்சி, நிறைவு, பரவச அனுபவம், நிம்மதி... இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம். சில பல ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் பிரமாண்டமான, சிறப்புப் பண்டிகைகள் என்றால், அவை அதிக கவனம் பெறும்; விழா நடக்கும் இடத்தில் மக்கள் வெள்ளம் அலைமோதும். விழா நிறைவு பெறும்போது பரவச அனுபவமும் மற்ற நல்ல அம்சங்களும் நமக்குக் கிடைத்திருந்தாலும், பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடிய இடத்தில் குப்பைகள் சேர்ந்து, சுற்றுச்சூழல் மிக மோசமாக பாதிப்படைந்திருக்கும்.  மஹா புஷ்கரத் திருவிழாவில் நடந்ததும் அதுதான். மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் 12 நாள்கள் நடந்த மஹா புஷ்கரத் திருவிழாவுக்கு லட்சக்கணக்கான மக்கள் வந்து குவிந்தார்கள்; புனித நீராடினார்கள். நீராடியவர்கள் விட்டுச்சென்ற துணிகளும், பயன்படுத்திவிட்டு ஆங்காங்கே வீசியெறிந்த பொருள்களும் குவியலாகக் கிடந்தன. மொத்தத்தில்  குப்பைமேடாகக் காட்சியளித்தது துலாக்கட்டம். விழா முடிந்ததும், எங்கிருந்தோ கும்பலாக வந்த ஊசிமணி, பாசிமணி விற்கும் நாடோடிகள் முகம் சுளிக்காமல், ஈடுபாட்டோடு துலாக்கட்டத்தை தூய்மை செய்தார்கள். அந்த நிகழ்வு பார்க்கிறவர்களை நெகிழச்செய்தது.  

சரி... தூய்மைப் பணியில் தாமாகவே தங்களை ஈடுபடுத்திக்கொண்ட இந்த மக்கள் யார்? மயிலாடுதுறை அருகே பல்லவராயன்பேட்டையைச் சேர்ந்தவர்கள். அங்கே  நாடோடி இனத்தைச் சேர்ந்த சுமார் 300 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்களில் வேட்டையாடும் தொழிலில் ஈடுபடுபவர்கள் ஒருசிலரே. மற்றவர்கள் வீட்டு உபயோக பிளாஸ்டிக் பொருள்கள், சிறுவர்களுக்கான விளையாட்டுப் பொருள்கள், அலங்காரப் பொருள்கள் ஆகியவற்றை விற்பனைசெய்து வாழ்க்கை நடத்திவருகிறார்கள்.   

இவர்கள் செய்துவரும் தொழிலுக்குத் தேவையான மூலதனத்துக்காக கந்துவட்டிக்கு கடன் வாங்கி அல்லல்பட்டு வந்தார்கள். பிறகு, சிலர் உதவியால் வங்கிகளில் சிறுதொழிலுக்கான கடன் வாங்கினார்கள்.  கடன் தொகையை தவணை முறையில் தேதி  தவறாமல், வங்கியில் திருப்பிச் செலுத்தி, வங்கியின் பாராட்டைப் பெற்றிருக்கிறார்கள் இந்த மக்கள். அதோடு, தொடர்ந்து வங்கியுடன் தொடர்பில் இருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.  

இந்த நாடோடி இன மக்கள் புஷ்கரம் ஆரம்பித்த 12-ம் தேதி முதல் நகரெங்கும் தரையில் கடை விரித்து வியாபாரம் செய்தார்கள். அவர்களில் ஒருவரான கோவிந்தராஜ், ``ஒருநாளைக்கு 100 ரூபாய் சம்பாதிக்க அலையா அலைவோம் சாமி. காவேரி அம்மாவுக்கு (காவிரி நதி) திருவிழா நடத்துனதால தினமும் எக்கச்சக்கக் கூட்டம். ராப்பகலா வியாபாரமும் நல்லா நடந்ததுங்க.  500, 1,000-னு தினப்படி லாபமும் கிடைச்சுது. எங்களுக்கும் எங்க வூட்டுல உள்ளவங்களுக்கும் ரொம்ப சந்தோஷமுங்க. எங்களை வாழவெச்ச காவேரி அம்மாவுக்கு நாங்க கைமாறு செய்ய வேண்டாங்களா? அதனால இன்னைக்கு எல்லோருமா சேர்ந்து துலாக்கட்டத்தை சுத்தம்பண்ணித் தர்றோம்னு சொன்னோம், அதன்படி செஞ்சி முடிச்சிட்டோங்க சாமி’’ என்றார்.  

செல்லக்கண்ணு என்ற பெண்மணி, ``காவிரி அம்மா எங்களுக்கு குறையில்லாம சோறு, தண்ணி தந்தாங்க. இங்கே குளிச்சவங்க துணி மணிகளை தண்ணியில விட்டுட்டுப் போயிடுறாங்க.  அதையெல்லாம் கரையேத்திட்டோம். காசு பணத்தைக்கூட தண்ணியில எறிஞ்சிட்டுப் போயிருக்காங்க, சல்லடையில சலிச்சி எடுத்தா, அதுலயும் காசு, பணம் கிடைக்குது சாமி. முன்னாடியெல்லாம் வருஷத்துக்கு ரெண்டு நாள் முழுக்கு விழா நடக்கும். எங்களுக்கும் அப்போ நல்லா பொழைப்பு நடக்கும். இந்த திருவிழாவால பசி, பஞ்சம் இல்லாம புள்ள குட்டிகளும் சந்தோஷமா இருந்திச்சிங்க. அதுக்கு உபகாரமாத்தான் குப்பைகளைக் கூட்டிப்பெருக்கி, சுத்தம் செஞ்சி கொடுக்குறோம் சாமி’’ என்றார்.  

இதற்கிடையில், சில கட்சிக்காரர்கள் துலாக்கட்டத்துக்கு வந்து, மோடியின் `தூய்மை இந்தியா’ திட்டத்தின் கீழ் தூய்மைச் செய்வதுபோல் போட்டோவுக்கு போஸ்கொடுத்துச் சென்றதும் நடந்தது. 

கோடீஸ்வரர்கள் முதல் குடிசைவாசிகள் வரை யார் யாரோ, எங்கிருந்தெல்லாமோ வந்து காவிரியையும் அதன் கரைகளையும் குப்பைகளாக்கிச் சென்றிருக்கிறார்கள். இந்த நாடோடி இன மக்கள் காவிரித் தாய்க்கு நன்றி செலுத்தும்விதமாக துலாக்கட்டத்தை சுத்தம் செய்திருக்கிறார்கள். உண்மையில், மஹா புஷ்கர திருவிழாவுக்குச் சென்ற ஒவ்வொருவரும் மறக்காமல் நன்றி செலுத்தவேண்டியது இவர்களுக்குத்தான்!

Suba

unread,
Oct 1, 2017, 3:43:50 AM10/1/17
to மின்தமிழ், Subashini Kanagasundaram
இதிலிருந்து எழும் கேள்விகள்

மகா புஷ்கரம் என்ற பெயர் எப்போதிலிருந்து வழக்கில் உள்ளது?  

ஏன் சமஸ்கிருதப்பெயரில் இது இந்த ஆண்டு தொடக்கம் ஊடகங்களில் வருகின்றது?

இது உண்மையில் என்ன பூசை?

ஏன் துணிகளை வீச்சி விட்டு மக்கள் செல்கின்றனர் அடிப்படை தூய்மைப் பண்பு மனிதனுக்கு ஏன் தொலைந்தது?

இதனை எவ்வாறு எதிர்கொள்ளலாம்..?

சுபா
--
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
Dr.K.Subashini
http://www.subaonline.net - எனது பக்கங்கள்
http://www.tamilheritage.org/- Tamil Heritage Foundation
http://www.heritagewiki.org/- மரபு விக்கி

சொ. வினைதீர்த்தான்

unread,
Oct 1, 2017, 3:59:00 AM10/1/17
to mint...@googlegroups.com, Subashini Tremmel
புஷ்கர் என்று ஒரு முனிவர் இருந்தாராம். அவர் பல வருடங்களுக்கு ஒரு முறை காவிரி நதியில் குளிக்க வருவாராம்.  அது இந்த வருடம் வந்த அந்த நாளையொட்டி
அவர் குளித்த ஐதீகத்துற்குப்
 பின் மக்கள் குளித்தால் புண்ணியம் எனக் கருதபட்டது. அடுத்து 122 வருடத்திற்குப் பின் தான் இது நிகழும்.

நீர் நிலைகளில் முன்னோருக்காகக் கடன் கழித்தபின் ஆடைகளை அங்கேயே போட்டுவிட்டு வருவார்கள். இராமேஸ்வரத்தில் ஆடைகளை வாங்கிக்கொள்ள ரெடியாக ஆட்கள் நிற்பார்கள். மற்ற பொருட்கள் எல்லாம் கடற்கரை, கடலெங்கும் அசிங்கமாகக் கிடக்கும்.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Suba

unread,
Oct 2, 2017, 2:59:02 AM10/2/17
to மின்தமிழ், Subashini Kanagasundaram
கீதா எனக்கு பேஸ்புக் பக்கத்தில் கொடுத்திருந்த ஒரு கட்டுரை. இதனை கீழே கொடுத்துள்ளேன். அதற்கான எனது கருத்து இதுதான்.

Subashini Thf முழு பதிவையும் படித்துப் பார்த்தேன் . Geetha Sambasivam பாவம் போக்க இந்தப் பூசை எனத் தெரிகிறது. இதுவும் நம்பிக்கை தானே. ஏன் பாவம் செய்யனும். பின் ஏன் பாவத்தைப் போக்கனும்.. அதற்கு எதற்கு ஒரு விழா.. இதனால் குப்பைக் கூளங்கள் சேர்ந்து காவிரி நதி தான் மோசமாகின்றது. இயற்கையைக் கெடுக்கும் விழாவாக அல்லவா மாறிவிடுகின்ரது. யோசிக்க வேண்டாமா..?

சுபா

Saturday, August 19, 2017
காவிரி புஷ்கரம் என்றால் என்ன?
காவிரி புஷ்கரம் பற்றிப் பலருக்கும் பல சந்தேகங்கள். தம்பி வாசுதேவன் இதோ இங்கே போட்டிருக்கார்.
காவிரி புஷ்கரம்

இது புண்ணிய நதி தீர்த்தங்களில் ஒவ்வொரு நதி தீரத்திலும் ஒவ்வொரு மாதம் கொண்டாடப் படும். இதற்குப் பலரும் பல கதைகள், புராணங்களை மேற்கோள் காட்டுகின்றார்கள். முக்கியமாய்ச் சொல்வது என்னவென்றால்:-

ராஜஸ்தானின் அஜ்மேர் நகருக்கு அருகே புஷ்கர் என்னும் ஊர் ஒன்று இருக்கிறது. இந்தியாவிலேயே பிரம்மாவுக்குக் கோயில் அதுவும் தனிக் கோயில் அமைத்து வழிபடுவது அங்கே மட்டும் தான். தமிழ்நாட்டில் ஒரு சில கோயில்களில் பிரம்மாவுக்கும் வழிபாடு இருந்தாலும் பெரும்பாலும் கோஷ்டத்திலேயே பிரம்மா காணப்படுவார். ஆனால் இந்தப் புஷ்கரத்தில் மூலஸ்தானத்திலேயே பிரம்மா தான்.  இந்தப் புஷ்கர் நகரில் ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாதம் பெரிய திருவிழா நடைபெறும்.   இந்தப் புஷ்கர் நகரில் பிரம்மாண்டமான ஓர் ஏரி உண்டு. இதை சர்வ தீர்த்தங்களுக்கும் ராஜாவான புஷ்கரர் என அழைப்பார்கள். இந்தப் புஷ்கரர் பிரம்மாவின் கமண்டலத்தில் இருந்தாராம். உலகில் உள்ள மூன்றரைக் கோடி தீர்த்தங்களுக்கும் இவரே அதிபதி எனப்படுவார்.

அப்போது பிரஹஸ்பதி என அழைக்கப்படும் குரு பகவான் பிரம்மாவிடம் தனக்கு சர்வக்ஞத்துவமும், கிரஹங்களின் அதிபதியாக இருக்கவேண்டும் எனவும் அனைவராலும் தான் துதிக்கப்பட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். அதோடு பிரம்மாவின் கமண்டலத்தில் இருந்த புஷ்கரரைத் தம்மிடம் தருமாறும் கேட்டுக் கொண்டார். ஆனால் புஷ்கரரோ பிரஹஸ்பதியிடம் போக மறுத்தார். ஆனால் பிரம்மா, தான் வரம் அளித்து விட்டதால் அதிலிருந்து தம்மால் மீற முடியாது என்பதால் பிரஹஸ்பதியிடம் குறிப்பிட்ட காலம் அவர் இருந்தே தீர வேண்டும் என்றார். அதன் படி குரு பகவான் ஒவ்வொரு மாதமும் எந்த ராசியில் பிரவேசிக்கிறாரோ அதன் முதல் பனிரண்டு நாட்கள், கடைசி பனிரண்டு நாட்கள், இடைப்பட்ட நாட்கள் மத்தியான காலங்களில் புஷ்கரர் பிருஹஸ்பதியிடம் இருக்கிறார். குரு பகவான் ஒவ்வொரு ராசியில் பிரவேசிக்கும்போதும் அவருக்கு ஒவ்வொரு நதியிடம் சம்பந்தம் உண்டாவதாக ஐதீகம். 

அதன்படி மேஷ ராசிக்கு குரு செல்லும்போது கங்கா புஷ்கரம், ஹரித்வார், காசி, ரிஷிகேஷ் ஆகிய ஊர்களிலும் மற்றும் கங்கைக்கரையோரம் உள்ள புண்ணிய ஸ்தலங்களிலும் நடைபெறும். ரிஷப ராசியில் குரு பிரவேசிக்கையில் நர்மதா புஷ்கரம் மத்தியப் பிரதேசத்தில் உள்ள நர்மதா நதி தீரங்களில் குறிப்பாக ஓங்காரேஸ்வரர் குடியிருக்கும் ஓங்காரேஸ்வரத் தலத்தில் சிறப்பாக நடைபெறும். மிதுன ராசிக்கு சரஸ்வதி புஷ்கரம். இது  குருக்ஷேத்திரம், கேசவ பிரயாகை, குஜராத் சோம்நாத், அலஹாபாத் திரிவேணி சங்கமம், ஆந்திரா காளேஸ்வரம், மத்திய பிரதேசம் பேடாகட் என்னும் இடத்திலும் நடைபெறும்.

குரு பகவான் கடக ராசியில் நுழையும்போது யமுனா நதி தீரங்களான யமுனோத்ரி, ஹரித்வார், ப்ருந்தாவன், மத்ரா, திரிவேணி சங்கமம் ஆகிய இடங்களிலும், குரு பகவான் சிம்ம ராசியைக் கடக்கும்போது கோதாவரி நதி தீரங்களான நாசிக் அருகே உள்ள திரியம்பகம், ஆந்திராவில் உள்ள கோதாவரி நதி தீரங்கள் ஆகிய இடங்களில் கோதாவரி புஷ்கரம் நடைபெறும். குரு பகவான் கன்னி ராசியில் நுழைகையில் கிருஷ்ணா நதி தீரங்களில்  துளசி, காசரி, போகவதி, கும்பி, சாவித்ரி ஆகிய ஐந்து நதிகள் கூடும் பஞ்ச நதி க்ஷேத்திரங்களில் உள்ள பிரயாக் சங்கமம், ஆந்திராவில் உள்ள விஜயவாடாவில் கிருஷ்ணா புஷ்கரம் நடைபெறும். குரு பகவான் துலா ராசிக்குள் நுழைகையில் காவிரி புஷ்கரம் காவிரி நதி தீரங்களில் முக்கியமாய்த் தலைக்காவிரி, ஶ்ரீரங்கப்பட்டினம், ஶ்ரீரங்கம், மயிலாடுதுறை ஆகிய ஊர்களில் சிறப்பாக நடைபெறும்.

குரு பகவான் விருச்சிக ராசியில் நுழைகையில் பண்டர்பூர் அருகிலுள்ள பீமா நதியில் பீம புஷ்கரம் எனவும், அதுவே தாமிரபரணி நதிக்கரையில் தாமிரபரணி புஷ்கரம் எனவும் கொண்டாடப் படுகிறது. இது தாமிரபரணி நதிக்கரை ஸ்தலங்கள் ஆன, பாபநாசம், பாண தீர்த்தம், திருநெல்வேலி அருகிலுள்ள சிந்துபூந்துறை ஆகிய இடங்களில் சிறப்பாக நடைபெறும். குரு பகவான் தநுர் ராசியில் நுழைகையில் பிரம்மாபுத்திரா நதி தீரங்களில் நடைபெறும் அஸ்ஸாமில் உள்ள பிரம்மபுத்திரா நதிக்கரையோர ஸ்தலங்களில் சிறப்பாக நடைபெறும்.  குரு பகவான் மகர ராசியில் நுழைகையில் துங்கபத்ரா நதி தீரங்களான  சிருங்கேரி, மந்திராலயம் ஆகிய ஊர்களிலும், குரு பகவான் கும்ப ராசியில் பிரவேசிக்கையில்  சிந்து நதி தீரங்களான ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப் ஆகிய இடங்களில் சிந்து புஷ்கரமாக நடைபெறும். குரு பகவான் மீன ராசியில் பிரவேசிக்கையில் ப்ராணஹிதா புஷ்கரம் என்னும் பெயரில் தெலங்கானாவில் உள்ள அடிலாபாத்தில் காலேஸ்வரம் உள்ளிட்ட பனிரண்டு நதி தீரங்களில் கொண்டாடப்படும்

இவ்வருடம் காவிரி புஷ்கரம் சுமார் 144 ஆண்டுகளுக்குப்பின்னர் வரும் சிறப்பான புஷ்கரம் ஆகும். இது செப்டெம்பர் 12-9-17 இல் இருந்து 24-9-17 வரை காவிரி நதி தீரங்களில் நடைபெற உள்ளது. இந்தியாவில் உள்ள அனைத்து நதிகளும் பெண்கள் வடிவில் இந்தக் காவிரி நதியில் வந்து நீராடித் தங்கள் பாவங்களைப் போக்கிக் கொள்வதாக ஐதிகம். இது ஒவ்வொரு வருடமும் துலா மாசம் எனப்படும் ஐப்பசி மாதம் நடைபெறும். ஒவ்வொரு வருடமும் துலா மாதம் எனப்படு ஐப்பசி மாதத்தில் காவிரி நதியில் நீராடுவதைப் புனிதமாகக் கருதுவார்கள். இந்த வருடம் புஷ்கரமும் சேர்ந்து கொண்டதால் இது மிகுந்த  முக்கியத்துவம் பெறுகிறது.

Geetha Sambasivam

unread,
Oct 2, 2017, 6:38:04 AM10/2/17
to மின்தமிழ்
சுபா, பாவம் என்பது என்ன? அதன் அளவுகோல் என்ன? அதெல்லாம் தெரிந்தோ, தெரியாமலோ ஏற்படுவது! உங்கள் இந்தக் கேள்விக்குப் பதில் சொல்லணும்னா ரொம்ப நீளமாகப் போய்விடும். ஆனால் காவிரிக்கு விழா என்பது தான் இங்கே முக்கியமே தவிர மற்றபடி வேறேதும் இல்லை. மக்கள் குப்பையைப் போடக் கூடாது என்ற கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். ஆனால் யார் அப்படிச் செய்கிறார்கள்? குறைந்த பட்ச அபராதமாவது விதித்தால் தான் இதெல்லாம் மாறும். பாவத்தைப் போக்க விழா என ஏன் எடுத்துக் கொள்ள வேண்டும்? நீர், நிலைகளை ஆராதிக்கும் விழாவாகவும் எடுத்துக் கொள்ளலாம். உண்மையில் இங்கே அதுதான் நடந்தது! உலக க்ஷேமத்துக்காகவும், மழையை வேண்டியும் வழிபாடுகள் செய்யப்பட்டது! காவிரியில் நீராடிப் பாவத்தைப் போக்கிக் கொள்ளலாம் என்றால் எல்லோரும் தினம் தினம் இங்கே குவியணும் இல்லையா? இதெல்லாம் ஒரு ஐதிகம்! அல்லது காவிரியில் நீராடிப் பாவத்தைப் போக்கணும் என்பதற்காகப் பாவம் செய்வார்களா யாரும்? அதுவும் இல்லை! தெரிந்தோ தெரியாமலோ, அறிந்தோ அறியாமலோ செய்யப்பட்டிருந்தால் அவற்றிற்காகவும், நீரை ஆராதிக்கவுமே இந்த விழா!

காவிரிக்கு விழா எடுக்காமல் இருந்தபோதிலும் காவிரியில் மாசு கலக்காமல் இருக்கிறதா? தொழிற்சாலைக்கழிவுகள், சாக்கடைக் கழிவுகள் என கர்நாடகத்திலிருந்து வரும்போதே கழிவு நீராகத் தான் வருகிறாள் காவிரி! நம் மக்கள் நீர் நிலைகளைப் பாழ்படுத்திக் கொண்டு தண்ணீர் இல்லை, கை ஏந்துகிறோம் என்பார்கள்! தாங்கள் திருந்த வேண்டும் என நினைக்க மாட்டார்கள்!

பொதுவாக மக்களின் நம்பிக்கை நாம் ஏதோ பாவம் செய்துட்டோம். அதனால் தான் கஷ்டப்படுகிறோம் என்பதே! அத்தகைய நினைப்பில்லாத பாமர மக்கள் எவரும் இல்லை. சொல்லப் போனால் படித்தவர்கள் கூடக் கஷ்டங்கள் மிகும்போது "நான் எப்போவோ செய்த பாவம்!" என்று அலுப்புடன் சொல்லுவார்கள். அத்தகைய பாபங்களை எல்லாம் இப்படிக் கழிக்கலாமே என்று நினைக்கும் மக்களுக்காகவே இம்மாதிரி விழாக்கள் எல்லாம்! இதில் எந்தத் தவறும் இருப்பதாகத் தெரியவில்லை. மக்கள் மனதில் ஓர் திருப்தி ஏற்படுகிறது. வழிபாடுகளினால் மனதில் அமைதி ஏற்படுகிறது என்றால் நல்லது தானே! இதன் மூலம் பந்தல் போடுபவர்கள், பூ விற்பவர்கள், பழங்கள், வாசனை திரவியங்கள் விற்பவர்கள், விளக்குகள் தயாரிப்பவர்கள், எண்ணெய் வியாபாரிகள், காய்கறி மற்ற சாமான்கள் விற்பவர்கள், தோரணம் கட்டுபவர்கள் போன்ற பலருக்கும் வருமானமும் வருகிறதே! 

விழாக்களும், பண்டிகைகளுமே கூடி இருந்து களிக்கத் தான்! அமைதியான முறையில் இங்கே இவ்விழா நடைபெற்று முடிந்தது.  சிறப்பான ஏற்பாடுகள் செய்திருந்தார்கள். ஆனால் மக்கள் குப்பை போடுவதைத் தவிர்க்க முடியவில்லை! என்றாலும் துப்புரவுப் பணியாளர்களின் திறமையும் மெச்சத் தக்க வகையிலேயே அமைந்தது!

Parvathy ramanathan

unread,
Oct 2, 2017, 7:16:14 AM10/2/17
to mint...@googlegroups.com
அருமையானவிளக்கம். நம் கோயில்களும் பண்டிகைகளும் சிறுதொழில் செய்பவர்களுக்கும் , சிறுவணிகர்களுக்கும் வாழ்வாதாரம். . இதை நுணுகி ஆராயவேண்டும். 

"நாம் சாப்பிடும் சாப்பாட்டால் எவ்வளவு கழிவு".  சுத்தம் பேணவேண்டும் அவ்வளவுதான்.
பார்வதி

2 அக்டோபர், 2017 ’அன்று’ பிற்பகல் 6:37 அன்று, Geetha Sambasivam <geetha...@gmail.com> எழுதியது:

N. Ganesan

unread,
Oct 2, 2017, 9:39:40 AM10/2/17
to மின்தமிழ்

On Monday, October 2, 2017 at 4:16:14 AM UTC-7, pramanathan42 wrote:
அருமையானவிளக்கம். நம் கோயில்களும் பண்டிகைகளும் சிறுதொழில் செய்பவர்களுக்கும் , சிறுவணிகர்களுக்கும் வாழ்வாதாரம். . இதை நுணுகி ஆராயவேண்டும். 

"நாம் சாப்பிடும் சாப்பாட்டால் எவ்வளவு கழிவு".  சுத்தம் பேணவேண்டும் அவ்வளவுதான்.
பார்வதி

கேரளா, கர்நாடகா மக்களிடம் இருந்து தமிழ்நாடு சுத்தம் பேணலைக் கற்றுக்கொள்ள வேண்டும்.
பல இடங்களும், கோவில்களும் மிக மோசமான நிலை. கோவையில் இருந்து ரயிலில்
நாகர்கோவில் சென்றேன். ஒவ்வொரு ஊர் நுழைவதன் முன்னாடி அத்த்னை பிளாஸ்டிக் கழிவுகள்.
இந்த ஞெகிழிக் கழிவுகள் தடை செய்தால் மிக நன்று.

நா. கணேசன்
 
2 அக்டோபர், 2017 ’அன்று’ பிற்பகல் 6:37 அன்று, Geetha Sambasivam <geetha...@gmail.com> எழுதியது:
சுபா, பாவம் என்பது என்ன? அதன் அளவுகோல் என்ன? அதெல்லாம் தெரிந்தோ, தெரியாமலோ ஏற்படுவது! உங்கள் இந்தக் கேள்விக்குப் பதில் சொல்லணும்னா ரொம்ப நீளமாகப் போய்விடும். ஆனால் காவிரிக்கு விழா என்பது தான் இங்கே முக்கியமே தவிர மற்றபடி வேறேதும் இல்லை. மக்கள் குப்பையைப் போடக் கூடாது என்ற கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். ஆனால் யார் அப்படிச் செய்கிறார்கள்? குறைந்த பட்ச அபராதமாவது விதித்தால் தான் இதெல்லாம் மாறும். பாவத்தைப் போக்க விழா என ஏன் எடுத்துக் கொள்ள வேண்டும்? நீர், நிலைகளை ஆராதிக்கும் விழாவாகவும் எடுத்துக் கொள்ளலாம். உண்மையில் இங்கே அதுதான் நடந்தது! உலக க்ஷேமத்துக்காகவும், மழையை வேண்டியும் வழிபாடுகள் செய்யப்பட்டது! காவிரியில் நீராடிப் பாவத்தைப் போக்கிக் கொள்ளலாம் என்றால் எல்லோரும் தினம் தினம் இங்கே குவியணும் இல்லையா? இதெல்லாம் ஒரு ஐதிகம்! அல்லது காவிரியில் நீராடிப் பாவத்தைப் போக்கணும் என்பதற்காகப் பாவம் செய்வார்களா யாரும்? அதுவும் இல்லை! தெரிந்தோ தெரியாமலோ, அறிந்தோ அறியாமலோ செய்யப்பட்டிருந்தால் அவற்றிற்காகவும், நீரை ஆராதிக்கவுமே இந்த விழா!

காவிரிக்கு விழா எடுக்காமல் இருந்தபோதிலும் காவிரியில் மாசு கலக்காமல் இருக்கிறதா? தொழிற்சாலைக்கழிவுகள், சாக்கடைக் கழிவுகள் என கர்நாடகத்திலிருந்து வரும்போதே கழிவு நீராகத் தான் வருகிறாள் காவிரி! நம் மக்கள் நீர் நிலைகளைப் பாழ்படுத்திக் கொண்டு தண்ணீர் இல்லை, கை ஏந்துகிறோம் என்பார்கள்! தாங்கள் திருந்த வேண்டும் என நினைக்க மாட்டார்கள்!

பொதுவாக மக்களின் நம்பிக்கை நாம் ஏதோ பாவம் செய்துட்டோம். அதனால் தான் கஷ்டப்படுகிறோம் என்பதே! அத்தகைய நினைப்பில்லாத பாமர மக்கள் எவரும் இல்லை. சொல்லப் போனால் படித்தவர்கள் கூடக் கஷ்டங்கள் மிகும்போது "நான் எப்போவோ செய்த பாவம்!" என்று அலுப்புடன் சொல்லுவார்கள். அத்தகைய பாபங்களை எல்லாம் இப்படிக் கழிக்கலாமே என்று நினைக்கும் மக்களுக்காகவே இம்மாதிரி விழாக்கள் எல்லாம்! இதில் எந்தத் தவறும் இருப்பதாகத் தெரியவில்லை. மக்கள் மனதில் ஓர் திருப்தி ஏற்படுகிறது. வழிபாடுகளினால் மனதில் அமைதி ஏற்படுகிறது என்றால் நல்லது தானே! இதன் மூலம் பந்தல் போடுபவர்கள், பூ விற்பவர்கள், பழங்கள், வாசனை திரவியங்கள் விற்பவர்கள், விளக்குகள் தயாரிப்பவர்கள், எண்ணெய் வியாபாரிகள், காய்கறி மற்ற சாமான்கள் விற்பவர்கள், தோரணம் கட்டுபவர்கள் போன்ற பலருக்கும் வருமானமும் வருகிறதே! 

விழாக்களும், பண்டிகைகளுமே கூடி இருந்து களிக்கத் தான்! அமைதியான முறையில் இங்கே இவ்விழா நடைபெற்று முடிந்தது.  சிறப்பான ஏற்பாடுகள் செய்திருந்தார்கள். ஆனால் மக்கள் குப்பை போடுவதைத் தவிர்க்க முடியவில்லை! என்றாலும் துப்புரவுப் பணியாளர்களின் திறமையும் மெச்சத் தக்க வகையிலேயே அமைந்தது!

2017-10-02 1:58 GMT-05:00 Suba <ksuba...@gmail.com>:
கீதா எனக்கு பேஸ்புக் பக்கத்தில் கொடுத்திருந்த ஒரு கட்டுரை. இதனை கீழே கொடுத்துள்ளேன். அதற்கான எனது கருத்து இதுதான்.

Subashini Thf முழு பதிவையும் படித்துப் பார்த்தேன் . Geetha Sambasivam பாவம் போக்க இந்தப் பூசை எனத் தெரிகிறது. இதுவும் நம்பிக்கை தானே. ஏன் பாவம் செய்யனும். பின் ஏன் பாவத்தைப் போக்கனும்.. அதற்கு எதற்கு ஒரு விழா.. இதனால் குப்பைக் கூளங்கள் சேர்ந்து காவிரி நதி தான் மோசமாகின்றது. இயற்கையைக் கெடுக்கும் விழாவாக அல்லவா மாறிவிடுகின்ரது. யோசிக்க வேண்டாமா..?

சுபா

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

N. Ganesan

unread,
Oct 2, 2017, 10:05:07 AM10/2/17
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com
காவேரி புஷ்கரம் என்பது பற்றி ஸ்ரீமதி கீதா பதிவும், திரு. திவாஜி அவர்களின் பதிவும் படித்து மகிழ்ந்தேன். பல விபரங்கள் கிட்டின.

காவிரி புஷ்கரம் என்றால் என்ன?

புஷ்கரம்:

புஷ்கரம் என்றால் என்ன எனக் கேட்டிருந்தார் திருமதி. சுபாஷிணி.

புள் என்றால் பறவை. கரம் - செய்தல். காரகம் - பால்காரர் என்கிறோமே. தீர்த்த-கர (தீர்த்தகரர்/தீர்த்தங்கரர்) - வாழ்க்கைக்கடலை/கடவை (ghat) கடத்தற்கு உதவுபவர்.
அதுபோல, புள்-கர = புள்கரம். புள்- என்றால் பறவை. இங்கே கொக்கும், நாரையும். வெண்மைக்கு. பல குருகுகள் (water birds aka waders) இருந்தாலும் வெள்ளை நிறப்
புட்களுக்கு “புள்” என்ற பெயர். தும்- தம்- ‘சிவப்பு’: தாமரை. செந்தாமரைக்கு ஏற்பட்ட பெயர் எல்லா நிற தாமரைக்கும் ஆகிவருகிறது அல்லவா?
அதுபோல, புள் என்ற சொல் புஷ்கரம் என்ற வார்த்தையில் வெள்ளை நிறப் புள்களாம். அதாவது egrets, storks, ... விட்டம் > விஷ்டம் ‘cross-beam'.
விள்- விண்ணு/விஷ்ணு - விள்ளல் : விஷ்ணு. சுள்-சுடு- > சுள்ளம்/சுண்ணம் > சுஷ்ணம் > உஷ்ணம், ,,,, இப்படி ஆதல் போல,
புள்-கரம் : வெண்பறவைகள் வந்து தங்கும் நீர்நிலை, ஏரி = புள்கரம் > புஷ்கரம். புள்- வெள்ளைநிறத்துக்கு ஆகி, புண்டரம் என்றால் வைஷ்ணவர்கள்
நாமக்கட்டியால் இடும் ஊர்த்துவ புண்டரம். புள்-கரத்தில் (புஷ்கரத்தில்) உள்ள வெண்டாமரை : புண்டரீகம் என்றும் வருதல் காண்க.
விள்- விண்டு என ஆதல் போல, புள்- என்னும் தாதுவேர் தரும் சொற்கள் புண்டரம், புண்டரீகம், புஷ்கரம் (ஏரி, பறவைகள் வந்து தங்கும் ஏரி, உ-ம்: வேடந்தாங்கல்).
தாமரை சிவப்பில் இருந்து அதன் எல்லா இனங்களுக்கும் வருகிறது. புண்டரீகம் வெள்ளைத் தாமரைக்கு ஏற்பட்டு எல்லா தாமரைக்கும் வருகிறது.
மஹாவிஷ்ணுக்கு புண்டரீகாயதாக்ஷன் என்பது பெயர். Solar deity என்பதால். குமுதம் இரவில் மலர்வது, எனவே சந்திரன் குமுதஸஹாயன்.

சியாம புண்டர வர்ணம் என்பதைச் ’சாமவெண் தாமரை’ என்கிறார் சம்பந்தர்
என்பது என் கருத்து. புள் என்றால் கொக்கு. அதிலிருந்து வரும் சொல்
ஸ்ரீவைஷ்ணவர்கள் வெள்ளை வண்ணத்தில் இடும் ஊர்த்துவ புண்டரம்.
வெள்ளைத் தாமரை புண்டரீகம் என்று பெயர் பெறுவது இதனால்தான்.
விள்- என்னும் சொல் விண்டு/விண்ணு என்று தமிழ். அது வடமொழியாக விஷ்ணு.
புள்- என்னும் தாதுவேரில் பிறக்கும் புண்டரம், புண்டரீகம் வடசொல்லாக
இலங்கும் தமிழ்ச்சொற்கள் தாம். இரண்டையும் மிகப் பொருத்தமாக
பயன்படுத்துபவர் கவிச்சக்கிரவர்த்தி ஒட்டக்கூத்தர் தாம். தக்கயாகப்பரணியில்.

சிறுகட்டுரையாக, புஷ்கரம், புண்டரம், புண்டரீகம் என்னும் வடசொற்களின் திராவிட ஊற்றுபற்றி
எழுதித் தருகிறேன். புள் என்றால் பறவைகளின் அலகு. பறவைக்கு சிறகால் ஏற்படும்
சினையாகுபெயர் பறவை. கொத்தும் அலகினால் ஏற்படும் பெயர் புள்.
எப்பொழுதும், இரண்டாம் எழுத்தில் -ள்- இருந்தால் -ட்-/-ண்- என்ற ரெட்ரோஃப்லெக்ஸ்
சொற்கள் திராவிட மொழிகளில் உருவாகும். புள்- > புண் ‘குழி’, புண்டரம் ‘வெள்ளை’, புண்டரீகம், .... என்றெல்லாம்
வருதல் காண்க. -ல்- இருந்தால் -ற்-/-ன்- . பால், பல் வெண்மை நிறம். இது Snow-க்கு பனி என மாறுதல் செய்கிறது.

பிற பின்!
நா. கணேசன்

2 அக்டோபர், 2017 ’அன்று’ பிற்பகல் 6:37 அன்று, Geetha Sambasivam <geetha...@gmail.com> எழுதியது:
சுபா, பாவம் என்பது என்ன? அதன் அளவுகோல் என்ன? அதெல்லாம் தெரிந்தோ, தெரியாமலோ ஏற்படுவது! உங்கள் இந்தக் கேள்விக்குப் பதில் சொல்லணும்னா ரொம்ப நீளமாகப் போய்விடும். ஆனால் காவிரிக்கு விழா என்பது தான் இங்கே முக்கியமே தவிர மற்றபடி வேறேதும் இல்லை. மக்கள் குப்பையைப் போடக் கூடாது என்ற கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். ஆனால் யார் அப்படிச் செய்கிறார்கள்? குறைந்த பட்ச அபராதமாவது விதித்தால் தான் இதெல்லாம் மாறும். பாவத்தைப் போக்க விழா என ஏன் எடுத்துக் கொள்ள வேண்டும்? நீர், நிலைகளை ஆராதிக்கும் விழாவாகவும் எடுத்துக் கொள்ளலாம். உண்மையில் இங்கே அதுதான் நடந்தது! உலக க்ஷேமத்துக்காகவும், மழையை வேண்டியும் வழிபாடுகள் செய்யப்பட்டது! காவிரியில் நீராடிப் பாவத்தைப் போக்கிக் கொள்ளலாம் என்றால் எல்லோரும் தினம் தினம் இங்கே குவியணும் இல்லையா? இதெல்லாம் ஒரு ஐதிகம்! அல்லது காவிரியில் நீராடிப் பாவத்தைப் போக்கணும் என்பதற்காகப் பாவம் செய்வார்களா யாரும்? அதுவும் இல்லை! தெரிந்தோ தெரியாமலோ, அறிந்தோ அறியாமலோ செய்யப்பட்டிருந்தால் அவற்றிற்காகவும், நீரை ஆராதிக்கவுமே இந்த விழா!

காவிரிக்கு விழா எடுக்காமல் இருந்தபோதிலும் காவிரியில் மாசு கலக்காமல் இருக்கிறதா? தொழிற்சாலைக்கழிவுகள், சாக்கடைக் கழிவுகள் என கர்நாடகத்திலிருந்து வரும்போதே கழிவு நீராகத் தான் வருகிறாள் காவிரி! நம் மக்கள் நீர் நிலைகளைப் பாழ்படுத்திக் கொண்டு தண்ணீர் இல்லை, கை ஏந்துகிறோம் என்பார்கள்! தாங்கள் திருந்த வேண்டும் என நினைக்க மாட்டார்கள்!

பொதுவாக மக்களின் நம்பிக்கை நாம் ஏதோ பாவம் செய்துட்டோம். அதனால் தான் கஷ்டப்படுகிறோம் என்பதே! அத்தகைய நினைப்பில்லாத பாமர மக்கள் எவரும் இல்லை. சொல்லப் போனால் படித்தவர்கள் கூடக் கஷ்டங்கள் மிகும்போது "நான் எப்போவோ செய்த பாவம்!" என்று அலுப்புடன் சொல்லுவார்கள். அத்தகைய பாபங்களை எல்லாம் இப்படிக் கழிக்கலாமே என்று நினைக்கும் மக்களுக்காகவே இம்மாதிரி விழாக்கள் எல்லாம்! இதில் எந்தத் தவறும் இருப்பதாகத் தெரியவில்லை. மக்கள் மனதில் ஓர் திருப்தி ஏற்படுகிறது. வழிபாடுகளினால் மனதில் அமைதி ஏற்படுகிறது என்றால் நல்லது தானே! இதன் மூலம் பந்தல் போடுபவர்கள், பூ விற்பவர்கள், பழங்கள், வாசனை திரவியங்கள் விற்பவர்கள், விளக்குகள் தயாரிப்பவர்கள், எண்ணெய் வியாபாரிகள், காய்கறி மற்ற சாமான்கள் விற்பவர்கள், தோரணம் கட்டுபவர்கள் போன்ற பலருக்கும் வருமானமும் வருகிறதே! 

விழாக்களும், பண்டிகைகளுமே கூடி இருந்து களிக்கத் தான்! அமைதியான முறையில் இங்கே இவ்விழா நடைபெற்று முடிந்தது.  சிறப்பான ஏற்பாடுகள் செய்திருந்தார்கள். ஆனால் மக்கள் குப்பை போடுவதைத் தவிர்க்க முடியவில்லை! என்றாலும் துப்புரவுப் பணியாளர்களின் திறமையும் மெச்சத் தக்க வகையிலேயே அமைந்தது!

2017-10-02 1:58 GMT-05:00 Suba <ksuba...@gmail.com>:
கீதா எனக்கு பேஸ்புக் பக்கத்தில் கொடுத்திருந்த ஒரு கட்டுரை. இதனை கீழே கொடுத்துள்ளேன். அதற்கான எனது கருத்து இதுதான்.

Subashini Thf முழு பதிவையும் படித்துப் பார்த்தேன் . Geetha Sambasivam பாவம் போக்க இந்தப் பூசை எனத் தெரிகிறது. இதுவும் நம்பிக்கை தானே. ஏன் பாவம் செய்யனும். பின் ஏன் பாவத்தைப் போக்கனும்.. அதற்கு எதற்கு ஒரு விழா.. இதனால் குப்பைக் கூளங்கள் சேர்ந்து காவிரி நதி தான் மோசமாகின்றது. இயற்கையைக் கெடுக்கும் விழாவாக அல்லவா மாறிவிடுகின்ரது. யோசிக்க வேண்டாமா..?

சுபா

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

Suba

unread,
Oct 5, 2017, 4:03:35 PM10/5/17
to மின்தமிழ், Subashini Kanagasundaram
2017-10-02 12:37 GMT+02:00 Geetha Sambasivam <geetha...@gmail.com>:
சுபா, பாவம் என்பது என்ன? அதன் அளவுகோல் என்ன? அதெல்லாம் தெரிந்தோ, தெரியாமலோ ஏற்படுவது! உங்கள் இந்தக் கேள்விக்குப் பதில் சொல்லணும்னா ரொம்ப நீளமாகப் போய்விடும். ஆனால் காவிரிக்கு விழா என்பது தான் இங்கே முக்கியமே தவிர மற்றபடி வேறேதும் இல்லை. மக்கள் குப்பையைப் போடக் கூடாது என்ற கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். ஆனால் யார் அப்படிச் செய்கிறார்கள்? குறைந்த பட்ச அபராதமாவது விதித்தால் தான் இதெல்லாம் மாறும். பாவத்தைப் போக்க விழா என ஏன் எடுத்துக் கொள்ள வேண்டும்? நீர், நிலைகளை ஆராதிக்கும் விழாவாகவும் எடுத்துக் கொள்ளலாம். உண்மையில் இங்கே அதுதான் நடந்தது! உலக க்ஷேமத்துக்காகவும், மழையை வேண்டியும் வழிபாடுகள் செய்யப்பட்டது! காவிரியில் நீராடிப் பாவத்தைப் போக்கிக் கொள்ளலாம் என்றால் எல்லோரும் தினம் தினம் இங்கே குவியணும் இல்லையா? இதெல்லாம் ஒரு ஐதிகம்! அல்லது காவிரியில் நீராடிப் பாவத்தைப் போக்கணும் என்பதற்காகப் பாவம் செய்வார்களா யாரும்? அதுவும் இல்லை! தெரிந்தோ தெரியாமலோ, அறிந்தோ அறியாமலோ செய்யப்பட்டிருந்தால் அவற்றிற்காகவும், நீரை ஆராதிக்கவுமே இந்த விழா!

காவிரிக்கு விழா எடுக்காமல் இருந்தபோதிலும் காவிரியில் மாசு கலக்காமல் இருக்கிறதா? தொழிற்சாலைக்கழிவுகள், சாக்கடைக் கழிவுகள் என கர்நாடகத்திலிருந்து வரும்போதே கழிவு நீராகத் தான் வருகிறாள் காவிரி! நம் மக்கள் நீர் நிலைகளைப் பாழ்படுத்திக் கொண்டு தண்ணீர் இல்லை, கை ஏந்துகிறோம் என்பார்கள்! தாங்கள் திருந்த வேண்டும் என நினைக்க மாட்டார்கள்!

பொதுவாக மக்களின் நம்பிக்கை நாம் ஏதோ பாவம் செய்துட்டோம். அதனால் தான் கஷ்டப்படுகிறோம் என்பதே! அத்தகைய நினைப்பில்லாத பாமர மக்கள் எவரும் இல்லை. சொல்லப் போனால் படித்தவர்கள் கூடக் கஷ்டங்கள் மிகும்போது "நான் எப்போவோ செய்த பாவம்!" என்று அலுப்புடன் சொல்லுவார்கள். அத்தகைய பாபங்களை எல்லாம் இப்படிக் கழிக்கலாமே என்று நினைக்கும் மக்களுக்காகவே இம்மாதிரி விழாக்கள் எல்லாம்! இதில் எந்தத் தவறும் இருப்பதாகத் தெரியவில்லை. மக்கள் மனதில் ஓர் திருப்தி ஏற்படுகிறது. வழிபாடுகளினால் மனதில் அமைதி ஏற்படுகிறது என்றால் நல்லது தானே! இதன் மூலம் பந்தல் போடுபவர்கள், பூ விற்பவர்கள், பழங்கள், வாசனை திரவியங்கள் விற்பவர்கள், விளக்குகள் தயாரிப்பவர்கள், எண்ணெய் வியாபாரிகள், காய்கறி மற்ற சாமான்கள் விற்பவர்கள், தோரணம் கட்டுபவர்கள் போன்ற பலருக்கும் வருமானமும் வருகிறதே! 

விழாக்களும், பண்டிகைகளுமே கூடி இருந்து களிக்கத் தான்! அமைதியான முறையில் இங்கே இவ்விழா நடைபெற்று முடிந்தது.  சிறப்பான ஏற்பாடுகள் செய்திருந்தார்கள். ஆனால் மக்கள் குப்பை போடுவதைத் தவிர்க்க முடியவில்லை! என்றாலும் துப்புரவுப் பணியாளர்களின் திறமையும் மெச்சத் தக்க வகையிலேயே அமைந்தது!

ஏதோ பாவம் செய்து விட்டோம். அதனால் காவிரியில் குளித்தால் பாவம் போகும் . அது ஐதீகம் என இந்தக் காலத்தில் நம்ப வைக்கும் உத்தி. இது ஏன்? செய்யும்  ஒவ்வொரு காரியத்துக்கும் அறிவுப்பூர்வமாகக் காரணம் கேட்டு  செய்ய வேண்டாமா? 

அடிப்படையில் அச்சம், பேராசை இவை இரண்டும் மனசு முழுசும் பெரிததா கொண்டே தான் போகின்றது.

பக்தி உள்ளவர் தங்களுக்கு வசதிப்படும் போது போய்  சாமி கும்பிட்டு வரலாம். அதனால் ஏராளமான கூட்டமும் சேராது. சுற்றுச் சூழல் மாசு ஏற்படாது.  ஆனால் ஒரு புனை கதையைச் சொல்லி அதனை ஒரு சடங்கு போலச் செய்து அதனை மக்களை நம்ப வைப்பது என்பது என்னைப் பொறுத்தவரை அறிவுடமை அற்ற செயல். 

மக்களது வீக் போயிண்ட்டாக இருப்பது 2 விசயங்கள் தான். ஒன்று பயம். எல்லாவற்றிற்கும் பயம். அந்த பயம் தாக்கிவிடாமல் இருக்க யார் என்ன சொன்னாலும் அதனைக் கண்ணை மூடிக் கொண்டு செய்து விடுவார்கள். தலையில் மூளை என்று ஒன்றிருக்கின்றதே. அதனை கொஞ்சம் வேலை செய்ய வைத்து செய்வதில் ஏதும் அர்த்தம் இருக்கின்றதா இல்லையா என யோசிப்பதில்லை.

அடுத்து ஆசை.. சாதாரண ஆசையில்லை. பேராசை. உலகத்திலேயே தான் பணக்காரராக இருக்க வேண்டும். தனக்கே எல்லா நன்மைகளும் கிடைக்கனும். ஆசைப்பட்டதெல்லாம் நடக்கனும். அதற்கு யார் என்ன சொன்னாலும் கண்ணை மூடிக் கொண்டு செய்து விடுவர்.

ஆக இந்த 2 விஷயங்களை நன்கு ஆளத்தெரிந்தவர்கள் மக்களுக்கு இப்படி ஒரு கதை, அப்படி ஒரு கதை என்று சொல்லி சொல்லி அவர்களை பொம்மைகளாக அலைக்கழிக்கின்றனர். ஏமாறுபவன் இருக்கும் வரை ஏமாற்றுவோருக்கு வணிகம் அருமையாகத் தான் நடக்கும் இல்லையா..

மறைந்த முதல்வர் ஜெயலலிதா அம்மையார் கதையை ஒருவர் பாடமாக எடுத்துக் கொள்ளலாம்.
எத்தனை யாகங்கள்
எத்தனை பூசைகள்
எத்தனை மந்திர தந்திரங்கள்
மகா மக குளியல் ...அடுக்கிக் கொண்டே போகலாம்.

இவற்றில் ஏதாவது ஒன்றாகினும் அவரையோ அவர் சார்ந்திருந்த கட்சியையோ காப்பாற்றியதா? இன்று அக்கட்சியின் நிலை எப்படி இருக்கின்றது.  

சற்று யோசித்தால் இதன் பின்னனியில் பக்தி என்பது தொலைந்து போய் போலித்தனம் கூடுவது தெரியும்.

சுபா

2017-10-02 1:58 GMT-05:00 Suba <ksuba...@gmail.com>:
கீதா எனக்கு பேஸ்புக் பக்கத்தில் கொடுத்திருந்த ஒரு கட்டுரை. இதனை கீழே கொடுத்துள்ளேன். அதற்கான எனது கருத்து இதுதான்.

Subashini Thf முழு பதிவையும் படித்துப் பார்த்தேன் . Geetha Sambasivam பாவம் போக்க இந்தப் பூசை எனத் தெரிகிறது. இதுவும் நம்பிக்கை தானே. ஏன் பாவம் செய்யனும். பின் ஏன் பாவத்தைப் போக்கனும்.. அதற்கு எதற்கு ஒரு விழா.. இதனால் குப்பைக் கூளங்கள் சேர்ந்து காவிரி நதி தான் மோசமாகின்றது. இயற்கையைக் கெடுக்கும் விழாவாக அல்லவா மாறிவிடுகின்ரது. யோசிக்க வேண்டாமா..?

சுபா

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
Reply all
Reply to author
Forward
0 new messages