உலக அளி நாள் - மே 20

139 views
Skip to first unread message

N. Ganesan

unread,
May 20, 2022, 9:51:36 AM5/20/22
to Santhavasantham

S. Jayabarathan

unread,
May 20, 2022, 11:00:25 AM5/20/22
to N. Ganesan, Santhavasantham, C.R. Selvakumar, tamilmantram, vallamai, rajam
இந்நாள் " உலகத் தேன் நாள் " என்று குறிப்பிடப்பட வேண்டும்.  பிரமிட் பீடங்களில் இடப்பட்டுள்ள ஃபெரோ மன்னர் கொடைப் பொருட்களில் தேன் இருந்தது, நாலாயிரம் ஆண்டுகள் கெடாமல், எறும்புகள் சுவைக்காது, பேக்டீரியா தீண்டாது.

சி. ஜெயபாரதன்

--
You received this message because you are subscribed to the Google Groups "karanthaijayakumar" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to karanthaijayaku...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/karanthaijayakumar/CAA%2BQEUeKiqJcxnhJK1%3D-%3DkCqXJNYWFd_GF_oe6Sr9B-B2-%2Bf0A%40mail.gmail.com.

N. Ganesan

unread,
May 20, 2022, 11:48:29 AM5/20/22
to S. Jayabarathan, Santhavasantham, C.R. Selvakumar, tamilmantram, vallamai, rajam
On Fri, May 20, 2022 at 10:00 AM S. Jayabarathan
<jayaba...@gmail.com> wrote:
>
> இந்நாள் " உலகத் தேன் நாள் " என்று குறிப்பிடப்பட வேண்டும். பிரமிட் பீடங்களில் இடப்பட்டுள்ள ஃபெரோ மன்னர் கொடைப் பொருட்களில் தேன் இருந்தது, நாலாயிரம் ஆண்டுகள் கெடாமல், எறும்புகள் சுவைக்காது, பேக்டீரியா தீண்டாது.
>
> சி. ஜெயபாரதன்

அளி என்பது பல வகை வண்டுகள். தேனீ அளிகளில் ஒருவகை. அவ்வளவே.

அதனாற்றான்,
உலக அளி நாள் - World Bee Day.

NG

>
> On Fri, 20 May 2022 at 09:51, N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
>>
>> https://www.un.org/en/observances/bee-day
>> https://www.gov.si/en/registries/projects/world-bee-day/
>>
>> https://en.wikipedia.org/wiki/World_Bee_Day
>>
>> உலக அளி நாள் - மே 20 : World Bee Day, May 20.
>>
>>
>>

N. Ganesan

unread,
May 20, 2022, 2:06:06 PM5/20/22
to Santhavasantham
அளி என்பது பல வகை வண்டுகள். தேனீ அளிகளில் ஒருவகை. அவ்வளவே.

தேனீ = Honeybee, https://en.wikipedia.org/wiki/Honey_bee

அளி = All kinds of Bees, https://en.wikipedia.org/wiki/Bee

அதனாற்றான்,
உலக அளி நாள் - World Bee Day.

NG

N. Ganesan

unread,
May 20, 2022, 6:24:46 PM5/20/22
to vallamai, houto...@googlegroups.com
On Friday, May 20, 2022 at 10:00:25 AM UTC-5 சி. ஜெயபாரதன் wrote:
> இந்நாள் " உலகத் தேன் நாள் " என்று குறிப்பிடப்பட வேண்டும்.  பிரமிட் பீடங்களில் இடப்பட்டுள்ள ஃபெரோ மன்னர்
> கொடைப் பொருட்களில் தேன் இருந்தது, நாலாயிரம் ஆண்டுகள் கெடாமல், எறும்புகள் சுவைக்காது, பேக்டீரியா தீண்டாது.

உலகத் தேன் நாள் = World Honey Day.

ஆனால்,
அளி என்பது பல வகை வண்டுகள். தேனீ அளிகளில் ஒருவகை. அவ்வளவே.
அளிகள் முரல்வன. அதனால், ஆகுபெயராய் புல்லாங்குழலுக்கு முரலீ என்றும்,
கிருஷ்ணபிரானுக்கு, முரலீக்ருஷ்ண (முரளிகிருஷ்ணன்) என்ற பெயரும் ஏற்பட்டன.

இசைவாணர் பாடல்களுக்கு “அளி வழக்கம்” என்று சங்க இலக்கியம் பரிபாடலில்
காண்கிறோம்.

தேனீ = Honeybee, https://en.wikipedia.org/wiki/Honey_bee

அளி = All kinds of Bees, https://en.wikipedia.org/wiki/Bee
அதனாற்றான்,
உலக அளி நாள் = World Bee Day.

NG

kanmani tamil

unread,
May 20, 2022, 10:38:57 PM5/20/22
to vallamai
'உலக வண்டுகள் தினம்' என்ற தொடரே செய்தியைப் பாமரர் வரை எடுத்துச் செல்லும் உயிர்புள்ள தமிழ்த்தொடர் ஆகும். 

'உலக அளி தினம்' என்ற தொடர் ஷோகேசில் இடம்பெற வேண்டிய தொடர்.

சக

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/0defc4c7-1925-45e7-bd02-4d7c3f7634dfn%40googlegroups.com.

N. Ganesan

unread,
May 22, 2022, 8:57:46 AM5/22/22
to vallamai
On Fri, May 20, 2022 at 9:38 PM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
'உலக வண்டுகள் தினம்' என்ற தொடரே செய்தியைப் பாமரர் வரை எடுத்துச் செல்லும் உயிர்புள்ள தமிழ்த்தொடர் ஆகும். 

இந்தத் தொடரை நான் முதலில் யோசித்தேன். ஆனால், World Bee Day-கு பொருந்தாது அல்லவா?
World Beetle Day or World Coleoptera  Day என்பதற்கு உலக வண்டுகள் தினம் என அமைப்போம்.
வண்டு = https://en.wikipedia.org/wiki/Beetle, இதனையே, தமிழில் பார்க்கவும்: https://ta.wikipedia.org/wiki/வண்டு

எனவே தான், World Bee Day = உலக அளி தினம் பொருந்துகிறது. சங்க காலம் தொட்டு,
தேவாரம், திருவாவசகம், திவ்விய பிரபந்தம், ... என எல்லாவற்றிலும் 100-கணக்கான
உதாரணங்கள் பல்வேறு வகையான அளிகளுக்கு உள்ளன.

பாரதியார் தமிழ் மொழியை விஞ்ஞானப் பாதையில் செலுத்த முயன்றவர்களில் ஒரு முன்னோடி. இதழியலாளராக, மிகுந்த ஆவலுடன்
அவ்வப்போது, ஆங்கிலச் செய்தித்தாள்களைப் படித்துத் தமிழில் எழுதினார். இப்போதும், பஜனை, சினிமா, ஜோசியம், ... என்ற
துறைகளில் தமிழ் வளர்வது போல், அறிவியல் செய்திகள் வளரக் காணோமே. தினமணி, ஐராவதம் மகாதேவன் ஆசிரியராய் இருந்தபோது
நல்ல தமிழ்ச் சொற்களை விஞ்ஞானத் துறைகளில் தந்தது. பல கோடிக்கணக்கான செலவில் தமிழ்நாட்டு அரசாங்கம் அகராதிகளை
உருவாக்குகிறது. உண்மையில் பார்த்தால், இலங்கையில் அறிவியல் தமிழ் வளர்ந்தது. அங்கே, போரினால் முடக்கம். இனி வரலாம்.

விஞ்ஞானச் சொற்களுக்கு நல்ல சொற்கள் உருவாக்கி வருவது விக்கிபீடியா. சில பிழைகள் இருக்கலாம். அங்கே நல்ல சொற்களும்
உருவாகிவருகின்றன. கூகுள் முன்னுரிமை விக்கிக்கு கொடுப்பதால், சில சொற்கள் வழக்கில் படியக்கூடும். எ-டு:
Pollinator = மகரந்தக்காவி என விக்கியில் காண்கிறோம். https://ta.wikipedia.org/wiki/மகரந்தக்காவி

காவி என்றால் உடனே காவிக்கல், பாரத தேசக்கொடி, பாஜக கொடி ... உள்ள நிறம்.
இந்திய சமயங்கள் - ஹிந்து, பௌத்தம், சமணம், சீக்கியம்
இவற்றில் துறவின் அடையாளம், ... எனக் கொள்ள வேண்டியதில்லை.
காவுதல் - தூக்கிச் செல்லல். காவடி. பூந்தாதைக் காவிச் செல்வது
பொலிநேஷன் = மகரந்தக்காவி அல்லது பூந்தூட்காவி. பொருத்தந்தானே.
விஞ்ஞானத்தைத் தமிழில் துல்லியமாகச் சொல்லுதற்கு, பிற தமிழரிடம் கருத்தாடலுக்குத் துல்லியச்
சொற்கள் மிக அவசியம் ஆனவை. அவ்வகையில், உலக அளி நாள் = World Bee Day.

NG

வேந்தன் அரசு

unread,
May 22, 2022, 9:05:38 PM5/22/22
to vallamai

சனி, 21 மே, 2022, முற்பகல் 8:08 அன்று, kanmani tamil <kanmani...@gmail.com> எழுதியது:
'உலக வண்டுகள் தினம்' என்ற தொடரே செய்தியைப் பாமரர் வரை எடுத்துச் செல்லும் உயிர்புள்ள தமிழ்த்தொடர் ஆகும். 

'உலக அளி தினம்' என்ற தொடர் ஷோகேசில் இடம்பெற வேண்டிய தொடர்.

அளி என்றால் வண்டு அல்ல.

நல்ல கமழ் தேன் அளி வழக்கம் எல்லாமும் பண் தொடர் வண்டு பரிய எதிர் வந்து ஊத – swarms of singing bees that have the habit of making fragrant honey come and swarm on hair causing sorrow, 

--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

N. Ganesan

unread,
May 24, 2022, 6:24:39 AM5/24/22
to vallamai
On Sun, May 22, 2022 at 8:05 PM வேந்தன் அரசு <raju.ra...@gmail.com> wrote:

சனி, 21 மே, 2022, முற்பகல் 8:08 அன்று, kanmani tamil <kanmani...@gmail.com> எழுதியது:
'உலக வண்டுகள் தினம்' என்ற தொடரே செய்தியைப் பாமரர் வரை எடுத்துச் செல்லும் உயிர்புள்ள தமிழ்த்தொடர் ஆகும். 

'உலக அளி தினம்' என்ற தொடர் ஷோகேசில் இடம்பெற வேண்டிய தொடர்.

அளி என்றால் வண்டு அல்ல.

நல்ல கமழ் தேன் அளி வழக்கம் எல்லாமும் பண் தொடர் வண்டு பரிய எதிர் வந்து ஊத – swarms of singing bees that have the habit of making fragrant honey come and swarm on hair causing sorrow, 

அளிகள் = Bees. Anthophila என்று பெயர். ஆந்தோ = மலர்கள், பிலா = நாடுபவை. மலர்களை நாடித் தேனும், மதுவும் உண்ணும் மதுகரங்கள் அளிகள். அவற்றில் தேனீக்கள் ஒருவகை தான். அளிகளில் (Bees) தேனீ (Honeybee) ஒரு சிறு விழுக்காடே. கொங்குதேரும் மலர்நாடி இனம் அளிகள். தமிழிலே ஆயிரம் பழம்பாடல்களாவது இருக்கும்: பூக்களை நாடி அதன் கள்ளை/மதுவை/தேனை/தாதை நுகரும் அளிகள் பற்றியன.

அள்- என்பது தாதுவேர். அளிதல் = நொதித்தல். அள்- அளை எனும் சொல்லுக்கு தயிர், மோர், வெண்ணெய் என்று நொதித்தலால் பாக்டீரியா, யீஸ்ட் (Cheese) பொருள் பெறுகின்றன. புல்- ‘meat, blood, stench, menstruation' எனும் தாதுவேர் தரும் (1) புலை, (2) புலி ‘carnivore' போல, அள்- 'to ferment' எனும் தாதுவேர் தருவன: (1) அளை ‘Dairy products such as yoghurt, butter milk, butter, ghee' (or, even cheese) (2) அளி பூங் கள் நாடி உண்ணும் உயிரி = Bees. அளி = மது என்ற பொருள் உண்டு.

அளிகள்:

அளிகள் மிகப் பழைய பெயர். இந்தியா முழுமையுமாய் விளங்குகிறது,
NG

PS: மலையாளத்தில் மச்சினனுக்கு அளியன் எனப் பெயர் (வலியளியன், குட்டளியன்). சகோதரியிடம் அன்பானவன். இட்டளி என்கிறோம்: இல்வாய் > வாயில் (வாசல்), கால்வாய் > வாய்க்கால், ... போல அளி + இடு > இட்டளி ஆயிற்றா? அளி = நொதித்த மாவு. அதை, இட்டு ஆவியில் வேவிப்பது. இட்டளியை  ஈடு எடுத்தல் என்கிறோம்.

N. Ganesan

unread,
May 24, 2022, 7:19:46 AM5/24/22
to Santhavasantham

(i) அள்- “to ferment" ==> அளை 'dairy', அளி ‘bee/anthophila, liquor'
(ii) புல்- எனும் தாதுவேர் ==> புலை, புலி
(iii) வல்- ‘இழு’ எனும் தாதுவேர் ==> வலை, வலி ‘muscle twitching'
(iv) வள்- எனும் தாதுவேர் ==> வளை, வளி ‘காற்று - சுழன்று அடிப்பதால்’
...

எளிய கணிநிரல் எழுதி, உயிர், மெய், உயிர்மெய் முதல் எழுத்து, பின்னர் Cx where C = a consonant, x = i and ay தொகுத்துப் பார்த்தால் பல சொற்கள் திராவிட மொழிகளில் சமைந்தவிதம் புரியும். NG

N. Ganesan

unread,
May 25, 2022, 8:53:13 PM5/25/22
to Santhavasantham
   (i) அள்- “to ferment" ==> அளை 'dairy', அளி ‘bee/anthophila, liquor'
(ii) புல்- எனும் தாதுவேர் ==> புலை, புலி
(iii) வல்- ‘இழு’ எனும் தாதுவேர் ==> வலை, வலி ‘muscle twitching'
(iv) வள்- எனும் தாதுவேர் ==> வளை, வளி ‘காற்று - சுழன்று அடிப்பதால்’
...

ஞிமிறு, நிமிர்தல், இமிர்தல்
-------------------------

தமிழில் பல சொற்கள், சொல்லில் முதலாக உள்ள மெய்யெழுத்து மறைந்து ஏற்படுவன. ஒரு நூறு வார்த்தைகளைத் தொகுத்து, க், ச், ம், ந், வ், ய் எனும் எழுத்துக்கள் சொன்முதல் இருப்பது மறைந்து ஏற்படும் சொற்களைத் தொகுக்கலாம். பொறுமையாக, உயிரெழுத்தில் தொடங்கும் எல்லாத் தமிழ்ச் சொற்களையும் ஆராய்ந்தால், சொன்முதல் மெய் (க், ச், ம், ந், வ், ய்) அழிந்து, தோன்றும் தமிழ்/த்ராவிட வார்த்தைகளைத் தொகுக்கலாம்.  பல சொற்களைக் காட்டியுள்ளேன்,
https://groups.google.com/g/santhavasantham/c/34ebzqoFK64/m/ZfjCNyGKCgAJ
ஞிமிர்தல்/நிமிர்தல் > இமிர்தல் பற்றி ஆய்வோம். ஒலியியல் (Acoustics) விஞ்ஞானத்தில் ஞிமிரோசை என்றால் என்ன எனப் பார்ப்போம்.

அளிகள் எல்லா வகையான அறுகாற் சிறுபறவைகளின் பெயர் எனத் தெரிகிறது:
    அளியே, (i) கேசரம்‌, (ii) அறுபதம்‌, (iii) கழுதொடு,
  (iv) வரியே,  (v) சுரும்பு, (vi) கீதம்‌, (iv) சூதம்‌,
  (viii) அரி, (ix) மா (x) பிரமரம்‌, (xii) ஆர்பதம்‌, (xiii) வரிக்கடை,
  (xiv) பிரசம்‌, (xv) தும்பி,  (xvi) மதுகரம்‌, (xvii) ஞிமிறு,
     விரவிய (xiii) தேனீ, (xix) வண்டு எனப்படுமே. - திவாகர நிகண்டு
https://groups.google.com/g/santhavasantham/c/dabme6X8Rkk/m/_i0Nw0iOCAAJ

19 மதுகரமும் அளிகள் ஆகும் என்கிறது திவாகரம். அளிகள் தம் இறகால் காற்றில் உண்டாக்கும் ஒலிகள் பல.  ஒவ்வொரு சொல்லையும் ஆராய இயலும். உ-ம்: தும்பி என்ற சொல்.   ‘கோத்தும்பியும், கருந்தும்பியும்’ என்ற கட்டுரை தரலாம். கோ என்பது மலை. மலைவண்டு, கோவண்டு, மலைத்தும்பி என்றெல்லாம் சொல்லலாம். கோத்தும்பி இமய மலையில் அதிகம் உண்டு. மாளுவ தேசத்தில் ஒன்று மட்டும் மிஞ்சி இருக்கிறது. மேற்குத் தொடர்ச்சி மலையில் இந்தக் கோத்தும்பி வாழ்ந்திருக்கவேண்டும். திருவாசகம், திவ்ய பிரபந்தம் இவற்றில் காணும் கோத்தும்பி இன்று இல்லை, அழிந்துவிட்டது. கோத்தும்பி பிருங்கராஜா/ ராஜவண்டு. இன்று தென்னிந்தியா இழந்துவிட்டது. கருந்தும்பி உண்டு. Black carpenterbee.

வெவ்வேறு அளி இனங்கள், அடிப்படையான அ, இ, உ என்னும் உயிரொலிகளில் இசை முரலும்/நவிலும்
என்று கண்டனர் சங்கத் தமிழர். இதன் அடிப்படையில் நரப்பிசைக் கருவிகள் (உ-ம்: கின்னரம், யாழ், வீணை, தம்புரா, ...
செய்தனர். நாரதர் வைத்திருப்பது மகதி வீணை எனும் யாழ்வகை, தும்புரு தும்பு என்னும் சுரையில் செய்யும்
தம்புரா இசைப்பார். தும்புரு, நாரதர் என்னும் இசைவாணர்கள் பெயர்கள் தமிழினின்றும் வடமொழியில்
பயனாகிறது காண்க. துமர் ‘துளை’ > தமர்; துமராணி > தமராணி (Carpenter's gimlet),
(1) அம் எனல் - ஓர் ஒலிக்குறிப்பு (பிங்கலம்). உ-ம்: அஞ்சிறைத் தும்பி   அம்முகிற சிறகு கொண்ட தச்சுவண்டு.
Listen to the humming/buzzing sound of தும்பி (Carpenterbee): https://www.youtube.com/watch?v=YW1AbPH3NLw
https://www.youtube.com/watch?v=V8pPjmvm3KM    = அம்  என்று இசைக்கும் அஞ்சிறைத் தும்பி
தமிழின் அம் சிறையின் அம்மெனும் ஒலிக்குறிப்பு, உலகின் ஏராளமான மொழிகளில் ஹம் எனக் கூறப்படும்.

அம்மெனல் ammeṉal , n. 1. Onom. expr. of filling or overflowing, as of water; நீர்த்தும்பற் குறிப்பு. அம்மெனக் கண்ணீ ரரும்பி (பதினொ. திரு விடை. மும். 10). 2. Onom. expr. of humming; ஓர் ஒலிக்குறிப்பு. (பிங்.)
 
(2) இம் எனல் - Onom. expr. of humming, rustling, pattering; ஓர் ஒலிக்குறிப்பு. இம் மெனப் பெய்ய வெழிலி
முழங்குந் திசையெல்லாம் (நாலடி. 392).
இமிர்-தல் imir- , 4 v. intr. < இம். 1. To sound, hum; ஒலித்தல். சுரும்பிமிர்ந் திம்மென (கலித். 119, 8). 2. To blow; ஊதுதல். கைவைத் திமிர்புகுழல் (பரிபா. 19, 41).  

(3) உம் எனல் - உங்காரம் Buzzing sound, as that made by bees in flight; வண்டின் ஒலி. உங்கார மதுகரங்கள் (பாரத. வசந்த. 3).
உம் எனல் ஹும் எனவும் ஆகும்: ஹுங்காரம் huṅkāram , n. < huṅ-kāra. See உங்காரம்,
அம் எனல் ஹம் எனப் பிறமொழிகளில் (உ-ம்: ஆங்கிலம்) ஒலிக்குறிப்பு ஆதற்போல. [A]

இன்று ஒரு சொல்: நிமிர்தல் > இமிர்தல் (சொன்முதல் ந்- இழத்தல்)
------------------------------

ஞிமிறு அறுகாற் சிறுபறவைகளில் ஒருவகை. எழுப்பும் ஒலியினால் ஞிமிறு பெயர் பெற்றது. ஞிமிறு இடவலமாற்றம் (Metathesis) ஆகி மிஞிறு என்றும் ஒரோவழி பழம்பாடல்களில் வருவதுண்டு.

என்றும் நுடங்கும் இடையென்ப ஏழுலகும்
நின்ற கவிகை நிழல்வேந்தே - ஒன்றி
அறுகாற் சிறுபறவை அஞ்சிறகால் வீசும்
சிறுகாற்றுக் காற்றாது தேய்ந்து - நளவெண்பா

முக்கியமான நான்கு இனங்களைக் கல்லாடம் குறிக்கிறது. வண்டு சுரும்பு தேன் ஞிமிறு என நால் வகைப்பட்ட அறுகாற் சிறுபறவை. கல்லாடத்தின் முன்னரே சிந்தாமணிப் பாடல்:
  மங்கை நல்லவர் கண்ணும் மனமும் போன்
  றெங்கு மோடி யிடறுஞ் சுரும்புகாள்
  வண்டு காண்மகிழ் தேனினங் காண்மது
  உண்டு தேக்கிடு மொண்மிஞிற் றீட்டங்காள்

வண்டுந் தேனு ஞிமிறுஞ் சுரும்பும்
உமிழ்நற வருந்தி யுறங்கு செஞ்சடையோன்  - கல்லாடம்.

பண்கள் பாடும் முறையை வண்டு, தேனீ, ஞிமிறு, சுரும்புகள் மூலம் கல்லாடனார் விளக்குகிறார். வண்டுகள் கைக்கிளைக் குரலாக, செவ்வழிப்பண் பாடின. தேனிக்கள் உழைகுரலாக அரும்பாலை பாடின. ஞிமிறுகள் இளி குரலாக மருதப்பண் பாடின. சுரும்புகள் விளரிக் குரலாக விளரிப்பண் பாடின. வண்டு, தேனீ, ஞிமிறு, சுரும்பு இவை ஒன்றைவிட ஒன்று பெரியன.

அஞ்சிறகு = அம்- +சிறகு (= humming wings of bees).

அம்முதல் - ஹம்மிங் ஓசை. எனவே, அமெரிக்காவின் hummingbirds = அம்முச்சிட்டு.
Humming is a low frequency phenom, e.g., hummingbirds hum at 40 Hertz (with higher harmonics).
அம்மு-தல் - humming, 20 - 80 Hz range. அன்னப்பறவைகளின் சிறகுகள், குறைவான ஃப்ரிக்குவென்சியில் அதிரும். அந்த ஓசைக்குத் தமிழில் ஓசனித்தல் எனப் பெயர். அமெரிக்காவின் ஹம்மிங் பறவைகள் சிறகுகளை ஓசனிப்பதில்லை என்பது முக்கியமானது. கவனிக்கத்தக்கது. hummingbirds = அம்முச்சிட்டு, சிறகுகள் அம் எனல் என்ற ஹம்மிங் ஒலி உண்டுபண்ணுதலால்.

https://www.youtube.com/watch?v=gJ_T_Y1rxHw
https://newsroom.carleton.ca/story/hummingbirds-wings-inspire-technology/
https://www.goodnewsnetwork.org/how-hummingbirds-hum-could-make-drones-quieter/
https://youtu.be/b6lF_iQOGZw
https://www.sorama.eu/blog/2021/3/15/how-hummingbirds-hum

பறவைச் சிறகு எழுப்பும் ஒலிகளின் பெயர்கள்:

(1)  ஓசனித்தல் : Very low-frequency sound (2 - 10 Hz) = Bird-wing beating
------------------------------------
Normally, we measure accelerations during test flights using Accels. The lowest frequency is 5 Hz. We measure up to 10,000 Hz.
உடலின் எடை அதிகமாக, ஆக அதிர்வெண் (Frequency) குறைகிறது. எ-டு: புறாக்களின் இறகுகள் 5.5 ஹெர்ட்ஸில் ஓசனிக்கும்.
“ஓசனிக்கின்ற அன்னம்” என்பார் சீவக சிந்தாமணியில் திருத்தக்க தேவர். அன்னப்பறவை (= Bar-headed goose) போன்ற புட்கள் பறத்தலின் போது, இறகின் அதிர்வெண் பரிசோதனை மூலம் 4.7 ஹெர்ட்ஸ் ஆகப் பதிவாகியுள்ளது. (=287/60).
 https://journals.biologists.com/jeb/article/85/1/213/22776/Heart-Rate-Respiratory-Frequency-and-Wing-Beat
https://journals.plos.org/plosbiology/article?id=10.1371/journal.pbio.3000299
https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC4346704/

ஆக, ஓசனித்தல் என்பது ஹம்மிங் ஒலி அல்ல. ஹம்மிங் பறவைக்குப் பெயராக வைப்பது பொருந்தாது.

(2) அம்முதல் : Low-frequency sound (20 - 70 Hz) = Humming
அஞ்சிறகு = அம்- +சிறகு (= humming wings of bees).

அம்முதல் - ஹம்மிங் ஓசை. எனவே, அமெரிக்காவின் hummingbirds = அம்முச்சிட்டு.
Humming is a low frequency phenom, e.g., hummingbirds hum at 40 Hertz (with higher harmonics).
அம்மு-தல் - humming, 20 - 80 Hz range. அன்னப்பறவைகளின் சிறகுகள், குறைவான ஃப்ரிக்குவென்சியில் அதிரும். அந்த ஓசைக்குத் தமிழில் ஓசனித்தல் எனப் பெயர். அமெரிக்காவின் ஹம்மிங் பறவைகள் சிறகுகளை ஓசனிப்பதில்லை என்பது முக்கியமானது. கவனிக்கத்தக்கது. hummingbirds = அம்முச்சிட்டு, சிறகுகள் அம் எனல் என்ற ஹம்மிங் ஒலி உண்டுபண்ணுதலால்.

(3) ஞிமிர்தல்/இமிர்தல் : Mid-frequency sound (150 - 300 Hz) = Buzzing

https://www.scientificamerican.com/article/why-do-bees-buzz/
https://www.youtube.com/watch?v=eLrz4H0wzcs
https://www.keetru.com/index.php/2010-06-24-04-31-11/ungal-noolagam-dec20/41584-2021-02-16-11-02-13

ஞிமிர்தல் நிமிர்தல் என்றாகும். நிமிர்-தல் என்ற வினைச்சொற்களின் அனைத்துப் பொருளையும் வைத்துப்பார்த்தால், தமிழர் அளிகள் மலர்களில் தேன் உண்ணுவதைப் பார்த்து வைத்த வினைச்சொல் என்பது புலனாகும்.

நிமிர்தல்

உயர்தல்; நீளுதல்; வளர்தல்; ஏறுதல்; பரத்தல்; நுடங்குதல்; நடத்தல்; ஓடுதல்; மிகைத்தல்; தூரமாதல்; உயர்ந்ததாதல்; நெருங்குதல்; உறுதியாதல்; இடையிடுதல்; முயலுதல்; இறுமாத்தல்; கோள் மீளத் திரும்புதல்.

நிமி என்ற புராணக் கதாபாத்திரம், நிமிண்டு- நிமிஷம், நிமைத்தல்/இமைத்தல் போன்றனவும் அளிகளின் ஞிமிர்தல் செயலில் இருந்து தோன்றுபவை எனத் தெரிகிறது. நிமைத்தல்/இமைத்தல் தும்பி, தேனீ, சுரும்பு, வண்டு போன்ற அளிகள் மலரைத் தேய்த்து மகரந்தம் காவுவதும், தேன்/கள் கவர்வதும் ஒக்கும். நிமிண்டு- என்ற வினைச்சொல்லும் பிறக்கும். https://groups.google.com/g/vallamai/c/3r59oYXld5E/m/Jlwi_BTpAgAJ
Dazzling brilliance; விளக்கம். மின்னுறழ் இமைப்பிற் சென்னிப் பொற்ப (திருமுரு. 85). ; 1. To glitter, twinkle, shine; ஒளிவிடுதல். (திவா.)
இத்துடன் ஒப்பிடுக:  வானம் நீங்கிய நீனிற விசும்பின் மின்னு நிமிர்ந்தனையராகி  (மதுரைக்காஞ்சி). அதாவது, தும்பி நிமிர்வதுபோல, (= அங்குமிங்கும் சுழல்வதுபோல்) நீல வானில் மின்னல் நிமைக்கிறது/இமைக்கிறது, glitters, twinkles. அதைப் போன்ற மகளிர் செயல் என்கிறது மதுரைக்காஞ்சி.

(4) ஞைஞை எனல்: High-frequency sound (350 - 600 Hz) = Whining
இந்த ஒலி கொசுக்கள் எழுப்புவது. ஞிம் எனல் எனும் ஞிமிர்தல் ஒலியில் இருந்து, இன்னும் அதிர்வெண் அதிகம்:  ஞைஞை (to whine) என்ற ஒலிக்குறிப்புக்கு.  whining - சிணுங்குதல் என்ற பெயரும் உண்டு. ஔவை “நைவினை நணுகேல்” என்றார் (ஆத்திசூடி). அதாவது, Stop whining என்பதாகும். https://youtu.be/h3_DPW8hKTI

Mosquitos whine. https://www.nytimes.com/2009/01/13/science/13obwhine.html
"A mosquito may not be anyone’s idea of a hopeless romantic, but the insect does produce a love song of sorts — the whine of its beating wings, resonating in a part of the body called the thoracic box. A female’s whine, at a fundamental frequency of 300 to 600 hertz, is enough to make a male mosquito swoon.

But Aedes aegypti, the mosquito species that transmits the viruses that cause dengue and yellow fevers in people, carries the love song concept to new aural heights, according to a paper published online in the journal Science. Lauren J. Cator, Ronald R. Hoy and colleagues at Cornell University report that A. aegypti males make it a duet, matching whines with the female.

Dr. Hoy said both males and females raise their whines to about 1200 hertz, which is a harmonic of the fundamental frequency of both the female (about 400) and male (about 600).

It’s the first time that such “harmonic convergence” has been shown to occur."
https://www.youtube.com/watch?v=RCoYrj8H7Lg
https://news.cornell.edu/stories/2009/01/study-mosquitoes-beat-out-love-song-mating
"Interestingly, the mosquitoes adjust the harmonic resonance of their thoracic box to produce a harmonic frequency that converges at a frequency that is the female's third harmonic (three times her fundamental frequency) and the male's second harmonic (two times his fundamental frequency)."

NG
 
kanmani tamil

unread,
May 25, 2022, 11:38:09 PM5/25/22
to vallamai
அருமை; ஒரு வாசிப்பில் அத்தனையையும் மனம் சேகரிக்கவில்லை. 

மீண்டும்... நேரம் கிடைக்கும் போது...

சக 

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

N. Ganesan

unread,
May 26, 2022, 7:40:44 AM5/26/22
to vallamai
On Wed, May 25, 2022 at 10:38 PM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
அருமை; ஒரு வாசிப்பில் அத்தனையையும் மனம் சேகரிக்கவில்லை.
மீண்டும்... நேரம் கிடைக்கும் போது...
சக 

ஆம். தொல்காப்பியர் கூறியுள்ளாரே: மொழிப் பொருள் காரணம் விழிப்பத் தோன்றா (தொல். சொல். - 394). தமிழின் தாதுபாட நிச்சயத்தை பொறுமையாக, ஆழமாக ஆய்தலின் மூலம் நிறுவமுடியும். மூல த்ராவிட பாஷையினின்று, தமிழ் எப்படி மாறுபடல் ஆயிற்று சுமார் 2500 ஆண்டு முன்னர் என இதனால் தெரிய வருகிறது. பள்ளியில் படித்த பாடல், தென்றல் நறுமணத்தை எந்த மலர்களில் இருந்து பெறுகிறது? https://inithal.blogspot.com/2014/09/blog-post_29.html
“பொங்கரில் நுழைந்து வாவி புகுந்து பங்கயம் துழாவிப் 
பைங்கடி மயிலை முல்லை மல்லிகைப் பந்தர் தாவிக்
கொங்கலர் மணங்கூட்டு உண்டு குளிர்ந்து மெல்லென்று தென்றல்
அங்கங்கே கலைகள் தேரும் அறிவன் போல் இயங்கும் அன்றே” 

(a) முந்து திராவிட மொழியில் நுவ்வி என வழங்கிய சொல். நவ்வி என்று தும்முகிற மரைக்கு (சிங்காரா) பெயர் ஆதலைப் பற்றிய கட்டுரை:
நுவ்வி > நவ்வி: http://nganesan.blogspot.com/2021/06/navvi-chinkara-antelope.html
துளிர் > தளிர், குட்டை > கட்டை, நுவ்வி > நவ்வி, முண்ட- > மண்ட-, துமர்- > தமர்- ‘gimlet', ....

(b) முள்-/முண்-/முட்- > மள்-/மண்-/மட்- எனவும் வரும். முட்டிக் கொண்டிருப்பது முள். முட்டி/மூட்டு - இரு எலும்புகள் முட்டி (இணைந்து/மோதி)ச் சேரும் இடம். வளைந்து மொழுமொழு/மழமழ எனச் செய்வது மொட்டை/முண்டிதம். வளைந்து செல்லும் மொட்டைத் தலை: முண்டை >மண்டை. பாணர்கள் மண்டையில் சோறு பெறுவர்.
தமிழின் முதல் மகாகவி கபிலர் (cf. கபில பரணர்) பாட்டு:
         ஒரு சார் அருவி ஆர்ப்ப, ஒரு சார்
         பாணர் மண்டை நிறையப் பெய்ம்மார்,
        வாக்க உக்க தேக்கள் தேறல்
        கல்அலைத்து ஒழுகும் மன்னே! பல் வேல்,
       அண்ணல் யானை, வேந்தர்க்கு
       இன்னான் ஆகிய இனியோன் குன்றே!                                   - கபிலர்
இன்னொரு சொல்லை, புல்லி/பல்லி போன்ற சொற்சோடியை அருணகிரியார் பதிவு செய்கிறார்.
அத் திருப்புகழ்:
(1) ஆவிநன்குடித் (பழனி) திருப்புகழ்:
வஞ்சனை மிஞ்சிய மாய வம்பிகள்
     வந்தவர் தங்களை வாதை கண்டவர்
          வங்கண முந்தெரி யாம லன்புகள் ...... பலபேசி
மஞ்சமி ருந்தநு ராக விந்தைகள்
     தந்தக டம்பிக ளூற லுண்டிடு
          மண்டைகள் கண்டித மாய்மொ ழிந்திடு ...... முரையாலே

(2) திருச்செந்தூர் திருப்புகழ்
நீலி நாடக மும்பயில் மண்டைகள்
     பாளை யூறுக ளுண்டிடு தொண்டிகள்
          நீச ரோடுமி ணங்குக டம்பிக ...... ளுறவாமோ?

முண்டிதம் = மொட்டையடித்தல், முண்டை; முண்டகம் = உருண்டையான கண். முண்டக்கண்ணி = உருண்டையான கண்ணி. முள் தாமரை = முண்டகம், .... முண்ட- > மண்ட- என மாறுதல் தெளிவு. முள்-முண்-/முட்- > மள்-/மண்-/மட்-. மட்டை மண்டை போல் உள்ள தேங்காய் மட்டை. மண்டை. வளைந்து இருப்பது. மண்டலித்தல், மண்டியிடல்.
தவளையைப் பார்த்தால், மண்டி இட்டு அமர்ந்தது போல் இருக்கும்:
எனவே, அதற்கு மண்டூகம் என்ற பெயர் அமைதுள்ளது. தவளை உபநிஷதம் = மண்டூக்ய உபநிஷதம். மேலும் ஒன்று: அண்டம் என்றால் முட்டையின் பெயர். ரிக்வேதத்தில். இதன் தாது அறியக்கூடவில்லை என்பர் ஸம்ஸ்கிருதப் பேராசிரியன்மார். மலர் > அலர், ... போல, மண்ட- > அண்ட என வரும் எனக் காட்டினேன்.

(c) புல்லி > பல்லி. பல்லியை எடுத்துக் கொள்ளுங்கள். இதன் அதிசயமே, செங்குத்தாக இருக்கலாம், வழவழப்பாக இருக்கலாம். சுவரிலோ, கண்ணாடி ஜன்னலிலோ, வீட்டுக் கூரையிலோ, மரஞ்செடிகளிலோ அனாயாசமாக ஏறும், நெட்டுக்குத்தாக இறங்கும். இந்த அதிசயச் செயலை உள்ளிட்டுத் தமிழர் பேர் வைத்தனர். புல்லுதல் = தழுவுதல். ஆங்கிலத்திலும் wall lizard தானே. அறிவியலில் எப்படி இந்தப் புல்லி/பல்லி இந்த புல்லுதல் சாதனை நிகழ்த்துகிறது என அண்மையில் தான் கண்டறியப்பட்டுள்ளது:
முந்து த்ராவிட வார்த்தை புல்லி- > பல்லி எனச் சங்க காலத்தில் மாறிவிட்டது.

(4) தும்பி ‘carpenter bee'; துமர் ‘’ ; துமராணி/தமராணி, துமரூசி/தமரூசிCarpenter's drill, gimlet'
----------------------------------------------------------------------------------------------------------------------------------------

சங்க காலத்தில், இந்தியச் செம்மொழிகள் இரண்டிலும், சமணர்கள் மட்டும் பயன்படுத்தும் சொல் படிமை. இதனைத்தான் பனம்பாரனார் மகுடமாகத் தொல்காப்பியருக்கு வைத்தார்: படிமையோனே என்பது தொல்காப்பியப் பாயிரம். சமணர்களின் பெரிய தத்துவம், ஓரறிவு, ஈரறிவு, ... ஆறறிவு என உயிரிகளைப் பகுப்பது. இதனையும் தமிழில் தந்தவர் தொல்காப்பியர். புள்ளிக் கோட்பாடு கி.பி. 2-ம் நூற்றாண்டு எனத் தொல்லியல் அறிவிக்கிறது. அதனை வடநாட்டு பிராமி இலிபிக்கு வகுத்து, 18 மெய்களுடன் இலக்கணம் வகுத்தவர் அவர். அவர் கூறும் ஓர் அளியினம்: தும்பி. இதற்கு நான்கறிவு என்கிறார்.
     “நண்டுந் தும்பியும் நான்கு அறிவினவே,
      பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே“ (தொல்.)

தும்பி என்ற பெயர்க்காரணம் பல ஆண்டு முன்னர் சொல்லியுள்ளேன். துமர் > தமர் = துளைத்தல். தும்முதல் - நாசியில் துளைத்து ஏற்படும். தும்முச் செறுப்ப - குறள். அளி இனங்களில் தும்பி ஓர் ஞிமிறு (ஞிமிர்தல் - buzzing, ஞிமிறு = buzzing bee).
தும்பி - காரணப்பெயர். Carpenterbee-கு. https://en.wikipedia.org/wiki/Carpenter_bee
Carpenter bees are species in the genus Xylocopa of the subfamily Xylocopinae. The genus includes some 500 bees in 31 subgenera.[1] The common name "carpenter bee" derives from their nesting behavior; nearly all species burrow into hard plant material such as dead wood or bamboo.

தை என்னும் வினைச்சொல் மிகப் பழையது. பெயர்ச்சொல் ஆகவும் வரும். உ-ம்: தை மாதம். தை தய்ப்பது தையல். தந்தை, முந்தை, நுந்தை, ... என்ற உறவுப்பெயர்கள், சாத்தந்தை, கொற்றந்தை, ஆந்தை, பூந்தை, கண்ணந்தை, ... குலப்பெயர்களிலும் விரவி வரும் பெயர் ‘தை’. தை என்ற வினைச்சொல் தருவது தைக்கன் (தக்கன்/தக்‌ஷன், தச்சன்) என ஐராவதம் விளக்கியுள்ளார் தனது ஹார்வர்ட் நூலில். சென்னை வெளியீட்டுவிழா: http://nganesan.blogspot.com/2022/03/tamil-epigraphy-iravatham-harvard-2003.html
தட்டான் ‘smith' மிகப் பழைய இரும்புப் பொருள்களை உருவாக்கினோர், எஃகு கண்டுபிடித்தோர். ‘தட்டான் புறப்பட்ட வேடிக்கையே’ கவி காளமேகம். அதுபோல், தச்சன் தை எனும் வினையில் வரும் சிந்துவெளித் தொழில் பெயர். த(ய்)க்கன் > தக்‌ஷன் என ஆகிற்று.

துமர் > தமர்:
tamar   n. [M. tamar.] 1. Hole, as in a plank, commonly bored or cut; கருவியால் அமைத்த துளை. தமரிடு கருவியாம் (திருவிளை. மாணிக்க. 61).
2. Gimlet, spring awl, boring instrument; துளையிடுங் கருவி
(Note that Indus people invented minute gemstone drilling tools for making bead in jewelry. This is an old technology valued all over the world including the then Sumeria.)

துமராணி > தமராணி, a spring awl, a gimlet.
துமரூசி > தமரூசி, a drill.

tumar 'hole' is even now existing in languages like Marathi.
See the beautiful Dumar Lena caves in Ellora.

துமர்/தமர், துமரூசி, துமராணி

NG
 
வேந்தன் அரசு

unread,
May 26, 2022, 8:57:06 PM5/26/22
to vallamai
தேனீ'க்கு 'அளி' என வரும் இடங்களை தொகுத்துச்சொல்லுங்க,

செவ்., 24 மே, 2022, பிற்பகல் 3:54 அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:

kanmani tamil

unread,
May 27, 2022, 8:20:46 AM5/27/22
to vallamai
பண்டைத் தமிழில் காண இயலவில்லை ஐயா. 
ஆனால் வடமொழியில் வழங்குவதாக முனைவர் கணேசன் கூறுகிறார்.

இலங்கையிலும் அவ்வழக்கு இருப்பதாகச் சொல்கிறார். 

///அளி = கள்/மது, அஃதுணும் தும்பி, தேனீ, வண்டு. இச்சொல்லை வடமொழியில் மிகுந்து காணலாம்.
அளிகள் மொய்ப்பது அளியன் = கூட்டத்தில் பிரியும் மதகளிறு (Loner, solitaire), கள் (மதம்) வடிவது./// Dr.Ganesan wrote on 2.4.2020 in the string 'அல்லியம்' Halliisa Dance of Krishna
சக 

kanmani tamil

unread,
May 27, 2022, 8:45:36 AM5/27/22
to vallamai
"இன்அளிக் குரல் கேட்ட அசுணமா அன்னளாய்"- சீவகசிந்தாமணி பா-1402

இப்பாடலடியில் அளி = வண்டு எனப் பொருள் கிடைக்கிறது. 
சக 

N. Ganesan

unread,
May 27, 2022, 8:46:15 AM5/27/22
to vallamai, housto...@googlegroups.com
On Fri, May 27, 2022 at 7:20 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
பண்டைத் தமிழில் காண இயலவில்லை ஐயா. 
ஆனால் வடமொழியில் வழங்குவதாக முனைவர் கணேசன் கூறுகிறார்.

அளிகள் = generic term for bees :: தெலுங்கு, கன்னடம், மலையாளம், ... என எல்லா த்ராவிட மொழிகளிலும் இருக்கிறது. அளிவேணி - Lady whose tresses are swarmed by bees. இதைத் தான் பண்டைத் தமிழின் சங்க இலக்கியம், “அளி வழக்கம்” எனப் பாடுகிறது. பார்க்கவும்.

த்ராவிட மொழிகள் யாவிலும், வட இந்திய மொழிகள் யாவிலும் 100-கணக்கான இலக்கியங்களில் தேனு உண்ணும் அளிகள் பாடப்படுகிறது. Anthophila = Bee = அளிகள், என்பது சரிநேரான தமிழ்ப் பெயர், பல ஆயிரம் ஆண்டாக பாரத உபகண்டத்தில் உள்ள த்ராவிட/தமிழ்ச் சொல் இது. அளி-தல் = to ferment, to soften, to become mellow.

அளிகள் எல்லா வகையான அறுகாற் சிறுபறவைகளின் பெயர் எனத் தெரிகிறது:
    அளியே, (i) கேசரம்‌, (ii) அறுபதம்‌, (iii) கழுதொடு,
  (iv) வரியே,  (v) சுரும்பு, (vi) கீதம்‌, (iv) சூதம்‌,
  (viii) அரி, (ix) மா (x) பிரமரம்‌, (xii) ஆர்பதம்‌, (xiii) வரிக்கடை,
  (xiv) பிரசம்‌, (xv) தும்பி,  (xvi) மதுகரம்‌, (xvii) ஞிமிறு,
     விரவிய (xiii) தேனீ, (xix) வண்டு எனப்படுமே. - திவாகர நிகண்டு
https://groups.google.com/g/santhavasantham/c/dabme6X8Rkk/m/_i0Nw0iOCAAJ

19 மதுகரமும் அளிகள் ஆகும் என்கிறது திவாகரம். அளிகள் தம் இறகால் காற்றில் உண்டாக்கும் ஒலிகள் பல.  ஒவ்வொரு சொல்லையும் ஆராய இயலும். உ-ம்: தும்பி என்ற சொல்.   ‘கோத்தும்பியும், கருந்தும்பியும்’ என்ற கட்டுரை தரலாம். கோ என்பது மலை. மலைவண்டு, கோவண்டு, மலைத்தும்பி என்றெல்லாம் சொல்லலாம். கோத்தும்பி இமய மலையில் அதிகம் உண்டு. மாளுவ தேசத்தில் ஒன்று மட்டும் மிஞ்சி இருக்கிறது. மேற்குத் தொடர்ச்சி மலையில் இந்தக் கோத்தும்பி வாழ்ந்திருக்கவேண்டும். திருவாசகம், திவ்ய பிரபந்தம் இவற்றில் காணும் கோத்தும்பி இன்று இல்லை, அழிந்துவிட்டது. கோத்தும்பி பிருங்கராஜா/ ராஜவண்டு. இன்று தென்னிந்தியா இழந்துவிட்டது. கருந்தும்பி உண்டு. Black carpenterbee.

ஒளியாம் பரமும் உளதாம் பரமும்
அளியார் சிவகாமி யாகும் சமயக்
களியார் பரமும் கருத்துறை அந்தத்
தெளிவாம் சிவானந்த நட்டத்தின் சித்தியே.- திருமந்திரம்

ஷீராப்தி கன்யககு ஸ்ரீ மகாலக்ஷ்மி கினி

நீரஜா லயகுனு நீராஜனம்

        பாற்கடல் பாவையாம் திருமகள் லட்சுமிக்கு

        தாமரைத் தாய்க்கொரு தீப ஆரத்தி

ஜலஜாக்ஷி மோமுனகு ஜக்குவ குசம்பு லகு

நெலகொன்ன கற்பூரப்பு நீராஜனம்

         பங்கயக் கண்ணினள் பால்முலைத் தாயினள் - அவள்

         நிலையழகு கற்பூரத் தீப ஆரத்தி

அளிவேணி துருமுனகு, ஹஸ்த கமலம் புலகு

நிலுவு மாணிக்யமுல நீராஜனம்

        அளியார் குழலிக்கு, அவள் பங்கயக் கைநலம்

         மாணிக்க மணியினால் தீப ஆரத்தி

பகடு ஸ்ரீ வேங்கடேசப் பட்டப் புராணீயை

நெகடு சதி களல குனு நீராஜனம்

    அழகனவன் வேங்கடவன் பட்டத்து அரசிக்கு

    நற்குண நங்கைக் கொரு தீப ஆரத்தி

ஜகதி அலமேலு மங்கா சக்கதன முல கெல்ல

நிகுடு நிஜ ஷோபனபு நீராஜனம்

    அவனி அலர்மேல் மங்கைச் செல்வ நாயகி அவள்

    அழகான வடிவுக்கு ஒரு தீப ஆரத்தி

ஷீராப்தி கன்யககு நீராஜனம்!ஸ்ரீ மகாலக்ஷ்மி கினி நீராஜனம்!நீரஜா லயகுனு நீராஜனம்!

     பாற்கடல் பாவைக்குத் தீப ஆரத்தி!

      திரு மகாலட்சுமிக்குத

் தீப ஆரத்தி!

         தாமரைத் தாய்க்கொரு தீப ஆரத்தி!

N. Ganesan

unread,
May 27, 2022, 8:47:59 AM5/27/22
to vallamai
On Fri, May 27, 2022 at 7:45 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
"இன்அளிக் குரல் கேட்ட அசுணமா அன்னளாய்"- சீவகசிந்தாமணி பா-1402

இப்பாடலடியில் அளி = வண்டு எனப் பொருள் கிடைக்கிறது. 
சக 

நூற்றுக்கணக்கான பாடல்களில் அளிகள் = தேன் உண்ணும் Bees *Anthophila* வரும். திவாகர நிகண்டு தொகுத்துக் கூறுகிறது.

kanmani tamil

unread,
May 27, 2022, 8:54:57 AM5/27/22
to vallamai
நன்றி: tamilconcordance.in
சக 

N. Ganesan

unread,
May 27, 2022, 9:12:59 AM5/27/22
to vallamai
On Fri, May 27, 2022 at 7:45 AM N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
On Fri, May 27, 2022 at 7:20 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
பண்டைத் தமிழில் காண இயலவில்லை ஐயா. 
ஆனால் வடமொழியில் வழங்குவதாக முனைவர் கணேசன் கூறுகிறார்.

அளிகள் = generic term for bees :: தெலுங்கு, கன்னடம், மலையாளம், ... என எல்லா த்ராவிட மொழிகளிலும் இருக்கிறது. அளிவேணி - Lady whose tresses are swarmed by bees. இதைத் தான் பண்டைத் தமிழின் சங்க இலக்கியம், “அளி வழக்கம்” எனப் பாடுகிறது. பார்க்கவும்.

த்ராவிட மொழிகள் யாவிலும், வட இந்திய மொழிகள் யாவிலும் 100-கணக்கான இலக்கியங்களில் தேனு உண்ணும் அளிகள் பாடப்படுகிறது. Anthophila = Bee = அளிகள், என்பது சரிநேரான தமிழ்ப் பெயர், பல ஆயிரம் ஆண்டாக பாரத உபகண்டத்தில் உள்ள த்ராவிட/தமிழ்ச் சொல் இது. அளி-தல் = to ferment, to soften, to become mellow.

அளிகள் எல்லா வகையான அறுகாற் சிறுபறவைகளின் பெயர் எனத் தெரிகிறது:
    அளியே, (i) கேசரம்‌, (ii) அறுபதம்‌, (iii) கழுதொடு,
  (iv) வரியே,  (v) சுரும்பு, (vi) கீதம்‌, (iv) சூதம்‌,
  (viii) அரி, (ix) மா (x) பிரமரம்‌, (xii) ஆர்பதம்‌, (xiii) வரிக்கடை,
  (xiv) பிரசம்‌, (xv) தும்பி,  (xvi) மதுகரம்‌, (xvii) ஞிமிறு,
     விரவிய (xiii) தேனீ, (xix) வண்டு எனப்படுமே. - திவாகர நிகண்டு
https://groups.google.com/g/santhavasantham/c/dabme6X8Rkk/m/_i0Nw0iOCAAJ

19 மதுகரமும் அளிகள் ஆகும் என்கிறது திவாகரம். அளிகள் தம் இறகால் காற்றில் உண்டாக்கும் ஒலிகள் பல.  ஒவ்வொரு சொல்லையும் ஆராய இயலும். உ-ம்: தும்பி என்ற சொல்.   ‘கோத்தும்பியும், கருந்தும்பியும்’ என்ற கட்டுரை தரலாம். கோ என்பது மலை. மலைவண்டு, கோவண்டு, மலைத்தும்பி என்றெல்லாம் சொல்லலாம். கோத்தும்பி இமய மலையில் அதிகம் உண்டு. மாளுவ தேசத்தில் ஒன்று மட்டும் மிஞ்சி இருக்கிறது. மேற்குத் தொடர்ச்சி மலையில் இந்தக் கோத்தும்பி வாழ்ந்திருக்கவேண்டும். திருவாசகம், திவ்ய பிரபந்தம் இவற்றில் காணும் கோத்தும்பி இன்று இல்லை, அழிந்துவிட்டது. கோத்தும்பி பிருங்கராஜா/ ராஜவண்டு. இன்று தென்னிந்தியா இழந்துவிட்டது. கருந்தும்பி உண்டு. Black carpenterbee.

Some samples - 100s of such usage exist in Tamil. 100s more all over India, in IA and Drav. languages:

சம்பந்தர் தம் ஊரைப் பாடுகிறார்:
    ஒளியார் விடமுண் டவொருவன்
   அளியார் குழன்மங் கையொடன்பாய்க்
   களியார் பொழில்சூழ் தருகாழி
    எளிதா மதுகண் டவரின்பே

திருமந்திரம்:
அளியார் முக்கோண வயிந்தவந் தன்னில்
அளியார் திரிபுரை யாம் அவள் தானே
அளியார் சதாசிவ மாகி அமைவாள்
அளியார் கருமங்கள் ஐந்தும்செய் வாளே

அளி நான்கு பொருள் கூறலாம். அளியார் திரிபுரை = அளிவேணீ த்ரிபுரா.

துறைமங்கலம் சிவப்பிரகாசர்:
சுனைவியந்துரைத்தல்:
ஒளியார் குமுதநல் வெள்ளாம்ப லாக வொழிவருதண்
அளியார் கருநெய்தல் வந்துசெந் தாமரை யாகச் செய்யில்
எளியா ரடியவர்க் கானார்தம் வெங்கையில் யாரொருவர்
குளியார் மதிநுத னீயா டியவக் குளிர்சுனையே.

அபிராமி அந்தாதி:
அளியார் கமலத்தில் ஆரணங்கே அகிலாண்டமும் நின்
ஒளியாக நின்ற ஒளிர் திருமேனியை உள்ளுந்தொறும்
களியாகி அந்தக் கரணங்கள் விம்மிக் கரைபுரண்டு
வெளியாய் விடினெங்ஙனே மறப்பேனின் விரகினையே?

வேந்தன் அரசு

unread,
May 27, 2022, 9:16:57 AM5/27/22
to vallamai

வெள்., 27 மே, 2022, பிற்பகல் 5:50 அன்று, kanmani tamil <kanmani...@gmail.com> எழுதியது:
பண்டைத் தமிழில் காண இயலவில்லை ஐயா. 

சங்கப்பாடல்களில் இல்லாத பொருளை புறந்தள்ளணும்

N. Ganesan

unread,
May 27, 2022, 9:19:07 AM5/27/22
to vallamai
? தெலுங்கில்?

--
வேந்தன் அரசு
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

N. Ganesan

unread,
May 27, 2022, 9:20:41 AM5/27/22
to vallamai

On Fri, May 27, 2022 at 7:54 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
நன்றி: tamilconcordance.in
சக 

use this and other sites to find aLi in Sangam texts.

N. Ganesan

unread,
May 27, 2022, 9:34:12 AM5/27/22
to vallamai, housto...@googlegroups.com
On Fri, May 27, 2022 at 7:54 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
நன்றி: tamilconcordance.in
சக 

use this and other sites to find aLi in Sangam texts.

>On Fri, 27 May 2022, 5:50 pm kanmani tamil, <kanmani...@gmail.com> wrote:
> பண்டைத் தமிழில் காண இயலவில்லை ஐயா. 
Not really. Oldest Tamil texts do use aLi as the generic term for honey/madhu seeking bees in flowers. Check, for example, Paripadal.

Also, for Proto-Dravidian, sangam texts are just a pointer. The corpus is quite small. We have to check other Dravidian languages
like Brahui, Telugu etc., which split from PD long before.

NG
 
On Fri, 27 May 2022, 6:15 pm kanmani tamil, <kanmani...@gmail.com> wrote:
"இன்அளிக் குரல் கேட்ட அசுணமா அன்னளாய்"- சீவகசிந்தாமணி பா-1402

இப்பாடலடியில் அளி = வண்டு எனப் பொருள் கிடைக்கிறது. 
சக 

On Fri, 27 May 2022, 5:50 pm kanmani tamil, <kanmani...@gmail.com> wrote:
பண்டைத் தமிழில் காண இயலவில்லை ஐயா. 

Incorrect.

kanmani tamil

unread,
May 27, 2022, 10:59:35 AM5/27/22
to vallamai
தேம்பாவணி மூன்றாம் காண்டம் பா108 - "அளிகாள் " = வண்டுகளே 

சக 

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

kanmani tamil

unread,
May 27, 2022, 11:03:44 AM5/27/22
to vallamai
திருக்கோவையார் 11ம் பாடல்; "அளிகாள்" = வண்டுகளே
சக 

kanmani tamil

unread,
May 27, 2022, 11:09:46 AM5/27/22
to vallamai
///சங்கப்பாடல்களில் இல்லாத பொருளை புறந்தள்ளணும்/// வேந்தர் ஐயா எழுதியது...

ஏன் ஐயா?!

எந்த மொழியிலும் கால இட சமூக அரசியல் மாற்றத்தை ஒட்டிப் பொருள் மாற்றம் அடைவது இயற்கை தானே...

அதனால் தள்ளவேண்டிய தேவை இல்லை என நினைக்கிறேன். 

சக 

kanmani tamil

unread,
May 27, 2022, 3:58:53 PM5/27/22
to vallamai
///Oldest Tamil texts do use aLi as the generic term for honey/madhu seeking bees in flowers. Check, for example, Paripadal./// Dr.Ganesan wrote...

"நல்ல கமழ் தேன் அளிவழக்கம் எல்லாமும்"- பரி. 10
இங்கு புளிக்க வைத்தல்/ பதப்படுத்தல் என்னும் பொருள்பட அமைந்துள்ளது. 

அடுத்த அடியில் 'வண்டு' எனும் பெயர்ச்சொல் இடம்பெற்றுள்ளது. 

அளி = வண்டு என்ற பயன்பாடு இல்லை.

சக 

N. Ganesan

unread,
May 27, 2022, 4:28:20 PM5/27/22
to vallamai, housto...@googlegroups.com
On Fri, May 27, 2022 at 2:58 PM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
///Oldest Tamil texts do use aLi as the generic term for honey/madhu seeking bees in flowers. Check, for example, Paripadal./// Dr.Ganesan wrote...

"நல்ல கமழ் தேன் அளிவழக்கம் எல்லாமும்"- பரி. 10
இங்கு புளிக்க வைத்தல்/ பதப்படுத்தல் என்னும் பொருள்பட அமைந்துள்ளது. 

இல்லை. அளி என்பது தேன் கவரும் தும்பி, கோத்தும்பி (bumblebee), தேனீ போன்றன.
பல நூற்றாண்டு முன்னரே விளக்கியுள்ளனர்.

அடுத்த அடியில் 'வண்டு' எனும் பெயர்ச்சொல் இடம்பெற்றுள்ளது. 

அளி = வண்டு என்ற பயன்பாடு இல்லை.

அளிகள் தேனை உண்டு ஞிமிர்கின்றன. அவற்றுக்கு எதிர்ப்பாட்டாக,
வேறு இன வண்டுகள் வந்து பாடுகின்றன என்கிறது பரிபாடல்.

திருவாசகம்:
கூம்பலங் கைத்தலத் தன்பரென்
    பூடுரு கக்குனிக்கும்
பாம்பலங் காரப் பரன்றில்லை
    யம்பலம் பாடலரின்
தேம்பலஞ் சிற்றிடை யீங்கிவள்
    தீங்கனி வாய்கமழும்
ஆம்பலம் போதுள வோஅளி
    காள்நும் அகன்பணையே

kanmani tamil

unread,
May 27, 2022, 11:35:07 PM5/27/22
to vallamai
Okay; Okay
Let me refer after two days.
Sk

N. Ganesan

unread,
May 28, 2022, 5:48:00 AM5/28/22
to vallamai, housto...@googlegroups.com
On Fri, May 27, 2022 at 3:27 PM N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
On Fri, May 27, 2022 at 2:58 PM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
///Oldest Tamil texts do use aLi as the generic term for honey/madhu seeking bees in flowers. Check, for example, Paripadal./// Dr.Ganesan wrote...

"நல்ல கமழ் தேன் அளிவழக்கம் எல்லாமும்"- பரி. 10
இங்கு புளிக்க வைத்தல்/ பதப்படுத்தல் என்னும் பொருள்பட அமைந்துள்ளது. 

இல்லை. அளி என்பது தேன் கவரும் தும்பி, கோத்தும்பி (bumblebee), தேனீ போன்றன.
பல நூற்றாண்டு முன்னரே விளக்கியுள்ளனர்.

அடுத்த அடியில் 'வண்டு' எனும் பெயர்ச்சொல் இடம்பெற்றுள்ளது. 

அளி = வண்டு என்ற பயன்பாடு இல்லை.

அளிகள் தேனை உண்டு ஞிமிர்கின்றன. அவற்றுக்கு எதிர்ப்பாட்டாக,
வேறு இன வண்டுகள் வந்து பாடுகின்றன என்கிறது பரிபாடல்.

திருக்கோவையார்
கூம்பலங் கைத்தலத் தன்பரென்
    பூடுரு கக்குனிக்கும்
பாம்பலங் காரப் பரன்றில்லை
    யம்பலம் பாடலரின்
தேம்பலஞ் சிற்றிடை யீங்கிவள்
    தீங்கனி வாய்கமழும்
ஆம்பலம் போதுள வோஅளி
    காள்நும் அகன்பணையே

ஒரு பழைய மடல். அல்லியம் - Hallisa dance of Krishna எனும் இழையினின்று:

அளி = spiritous liquor, பூக்களில் மதுவைத் தேடி உண்ணும் pollinating insects பொதுப்பெயர்.
அளி = தேனீக்கள் (honeybees), தும்பி (carpenter-bee, தச்சுவண்டு), பிருங்கராஜா ( கோத்தும்பி, bumblebee, வரிவண்டு ), வண்டு (beetle),  நீலவரிவண்டு (நீலாளி என்பார் பாமஹர்), கொசுத்தேனீ (கொட்டாத்தேனீ, stingless bee), தட்டான் (dragonfly, சிறுதும்பி),
ஊசித்தட்டான் (damselfly), ...

நீலாளி என https://en.wikipedia.org/wiki/Amegilla_cingulata  என இலக்கியம் அழைப்பது போல,
Carpenterbee = தும்பி, தச்சுவண்டு, தச்சளி (தச்சு+அளி) எனல் மிகப்பொருத்தம்.
தச்சு = தச்சன் ‘கார்ப்பெண்ட்டர்’. அளிந்த மாவை இட்டு நீராவியில் வேவிக்கிறோம்.
எனவே, இட்டளி. ஓர் ஈடு என்பது இட்டளி ஒருமுறை ஆவித்து எடுத்தல்.
இரண்டு ஈடு, மூன்று ஈடுஎன எத்தனைபேர் சாப்பிடுகிறார்களோ அதைப்போல்
எடுப்பது. வாய்க்கால், கால்வாய் போல, இட்டளி, அளியீடு (அளி - அளிந்த ‘fermented' மாவு)
இரண்டும் ஒரே பொருள். இட்டளி என்பது போல, இடு என்னும் வினையில்
இருந்து ஒரு முக்கிய உதாரணம்: இட்டி, இட்டிகை (சங்கம்). செங்கல்லை
இட்டு சுவர் எழுப்புவதால் இட்டிகை. இது வடமொழியில் இஷ்டி எனப்
பெயரும். உ-ம்: புத்ர காமேஷ்டி யாகம் ~ வேள்வி செய்ய, இட்டிகையால்
அமைக்கும் குண்டம். எனவே, வேள்விக்கு இஷ்டி எனப் பெயர். 
மூட்டு/முட்டி>> முஷ்டி, குட்டம் >> குஷ்டம், .... போல, இட்டி >> இஷ்டி 'brick in Sanskrit'. 

அளி என்னும் வண்டுகளுக்கான சொல் (பூங்கள்ளைத் தேடுவது என்னும் பொருள்)
சங்க இலக்கியத்தில் இருக்கிறது. ர, ற வேறுபாடு மறைந்த காலத்தில்
மரைக்காடு > மறைக்காடு ஆகியது; புராணங்கள் (உ-ம்: அப்பர்
மரைக்காடு வந்து கதவு திறத்தல், அடைத்தல்), வேதாரண்யம் என மரைக்காடு
மொழிபெயர்ப்பு. உண்மையில் ம்ருகாரண்யம் என்பது சரியாய் இருந்திருக்கும்.
மரை = க்ருஷ்ண-ம்ருகம், Indian black buck என 20+ ஆண்டாய் இணையத்தில்
எழுதிவருகிறேன். முதலில், மரைக்காடுதான் மறைக்காடு ஆயிற்று
என மொழியியல் மூலம் சொன்னவர் துடிசைகிழார் அ. சிதம்பரனார் ஆவார்.
துடிசை , இப்போது கோவையில் ஒன்றிவிட்ட துடியலூர். பேரூருக்கும், துடியலூருக்கும்
சுந்தரர் பாடிய தேவாரப் பதிகங்கள் கிடைக்கவில்லை என்பர். இப்போது,
மரைக்காடு >> மறைக்காடு ஆன வரலாறு பலராலும் பேசப்படுகிறது.
அண்மையில், வினைதீர்த்தான் இம்மாறுதலை பற்றி எழுதியிருந்தார்கள்.
அதே போன்றது தான், சில ஆண்டு முன்னர் வில்கோடி என்பது தனுஷ்கோடி என மொழிபெயர்த்தனர் எனக் குறிப்பிட்டதும், பலர் பயன்படுத்துதலைப் பார்க்கிறேன். வாழ்க.

அளி என்னும் flower honey(madhu)-seeking pollinator insects சங்க இலக்கியத்தில் உண்டு.
அளிதல் “to ferment" (cf. iTTaLi 'idli') வினைசொல்லில் இருந்து அளி என்ற இப்பெயர்
மதுபம்/மதுகரங்களுக்குப் பெயர் த்ராவிடபாஷைகளில் உற்பத்தி ஆகிறது.
அளி விடுதூது - Pollinator Bees in Classical Tamil” என்ற தலைப்பில், இன்னும் விரிவாக, 
அவுஸ்திரேலியாவில் நடக்க உள்ள உலக சம்ஸ்கிருத மாநாட்டில் (2021) இதுபற்றிக் 
கட்டுரை வாசிக்கலாம். இன்றுகூட, அப்ஸ்ட்ரேக்ட் கேட்டு மடல் வந்துள்ளது. 

சங்க இலக்கியத்தில் அளி (Pollinator insect):

பரிபாடல் 10 (வரி 118)
நல்ல கமழ்தேன் அளி வழக்கம் எல்லாமும் 

புனலாடி மீண்டவாறு

மதி மாலை மால் இருள் கால் சீப்ப, கூடல்

வதி மாலை, மாறும் தொழிலான், புது மாலை

நாள் அணி நீக்கி, நகை மாலைப் பூ வேய்ந்து,
115
தோள் அணி, தோடு, சுடர் இழை, நித்திலம்;

பாடுவார் பாடல், பரவல், பழிச்சுதல்,

ஆடுவார் ஆடல், அமர்ந்த சீர்ப் பாணி,

நல்ல கமழ் தேன் அளி வழக்கம், எல்லாமும்,

பண் தொடர் வண்டு பரிய எதிர் வந்து ஊத,
120
கொண்டிய வண்டு கதுப்பின் குரல் ஊத,

தென் திசை நோக்கித் திரிதர்வாய்; மண்டு கால் சார்வா,

நளிர் மலைப் பூங்கொடித் தங்குபு உகக்கும்

பனி வளர் ஆவியும் போன்ம், மணி மாடத்து

உள் நின்று தூய பனிநீருடன் கலந்து,
125
கால் திரிய ஆர்க்கும் புகை.

இங்கே, அளி வழக்கம் என்பது ”அளியினங்களின் அஞ்சிறை முரல்வதால்
எழும் buzzing, humming music போன்ற இசையை எழுப்பும் பெண்டிர்” என்பதாகும்.

பரிமேலழகர்:
தங்கள் மேலிருந்த பகற்காலத்துக்குரிய அணிகளைநீக்கினர். மாலைக் காலத்தில் மலரும் மலர்களையும் தோளணி தோடு முத்துவடம் முதலானஆபரணங்களையும் அணிந்தனர். பலர் பாடினர்.அவர்களுடைய பாடலும் பரவலும் புகழ்தலும் ஆடுவாருடைய ஆடலொலியும் அதற்குரிய தாளவொலியும் தேனீக்களுடைய ஒலியும் மிக்கன. அங்ஙனம் எழுந்த பண்ணொலியைக் கேட்டுத் தம் இனமென்று கருதி ஊரிலிருந்த வண்டுகள் எதிர்வந்து ஊதின;பாடுவார்களது பூவேய்ந்த கொண்டைமேல்தேனையுண்டிருக்கும் வண்டுகள் உடன்வந்து ஊதின.யாவரும் தென் திசையை நோக்கி மீண்டனர்.அப்பொழுது மாடத்தினுள்ளிருந்து மேலெழுந்த அகிற்புகையானது மலையின் மேல் தங்கி எழுந்த பனியை ஒத்தது.  

அளி பற்றி சங்க காலத்தின் பின்னர் 1000-கணக்கான பாடலுள.

NG
என்னை உடையாள் கலைமடந்தை, எவ்வுயிர்க்கும் 
அன்னை யுடைய அடித்தளிர்கள் - இன்அளிசூழ் 
மென்மலர்க்கே கன்றும் எனஉரைப்பர்; மென்மையிலா 
வன்மனத்தே தங்குமோ வந்து?  - தண்டியலங்காரம்.

(கலைஞர்களில் சிறந்தவன் கவிஞன். அவனது இதயம்
தாமரை என உருவகம். அங்கே, அளிகள் சூழ்ந்திருக்கும் -
அவனது கவிக்கு ரசிகர்கள் சூழ்ந்திருப்பர். அந்த மெல்லிய
தாமரையில் அடித்தளிரை வைத்திருப்பாள் சரஸ்வதி.
மென்மையான அக் கவியுள்ளமே அவளது திருவடிகளை
கன்றச் செய்வது. கவியும், கலையும் அறியா என்
வன்மனத்தில் வந்து தங்குவாளா கலைமகள்?
உருக்கமான துதி.)

வண்டரங்கப் புனற்கமல மதுமாந்திப் பெடையினொடும்
ஒண்டரங்க விசைபாடு மளியரசே யொளிமதியத்
துண்டரங்கப் பூண்மார்பர் திருத்தோணி புரத்துறையும்
பண்டரங்கர்க் கென்னிலைமை பரிந்தொருகாற் பகராயே. 
அளியரசு = பிருங்கராஜா (bumblebee, blackbee 'bombinatrix glabra')  

நொந்தார்போல் வந்தென தில்லே புக்கு
    நுடங்கே ரிடைமடவாய் நம்மூர் கேட்கில்
அந்தா மரைமலர்மேல் அளிவண்டி யாழ்செய்
    ஆமாத்தூர் என்றடிகள் போயி னாரே - தேவாரம்
(அளிவண்டு யாழ்செய்கிறது - பம்பைக் கரையில் உள்ள ஆமாத்தூரில்).

துண்ட வெண்பிறையன் துயர் தீர்த்தவன் அஞ்சிறைய
வண்டு வாழ் பொழில் சூழ் அரங்கநகர் மேய் அப்பன்
அண்டரண்ட பகிரண்டத்து ஒரு மாநிலம் எழுமால்வரை முற்றும்
உண்ட கண்டம் கண்டீர் அடியேனை உய்யக்கொண்டதே!  - ஆழ்வார் பாசுரம்

             கிருஷ்ணன் தூதுச் சருக்கம், வில்லிபாரதம்
நீ தூது நடந்து அருளி எமது நினைவு அவர்க்கு உரைத்தால் நினைவின் வண்ணம் 
தாது ஊதி அளி  முரலும் தண் பதியும் தாயமும் தாரானாகின் 
மீது ஊது வளைக் குலமும்  வலம்புரிம் மிக முழங்க வெய்ய காலன்
மா தூதர் மனங் களிக்கப் பொருதெனினும் பெறுவன் இனிது, வசையும் அன்றே   
 
அளி = கள்/மது, அஃதுணும் தும்பி, தேனீ, வண்டு. இச்சொல்லை வடமொழியில் மிகுந்து காணலாம்.
தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழிகளில் “அளி” என்பது மலர்களில் மதுவைத் தேடி
மகரந்தத்தாதுவை பரப்பும் எல்லாவகை insects-க்குப் பொதுப்பெயராகக் காண்கிறோம்.

அளிகள் மொய்ப்பது அளியன் = கூட்டத்தில் பிரியும் மதகளிறு (Loner, solitaire), கள் (மதம்) வடிவது.
ஒருத்தல் எனச் சங்க இலக்கியம் கூறும். ஒருத்தல் ஆண்யானையின் தலைவன் என்பார் நச்சினார்க்கினியர்.
களிறு, கணவன் சொற்களும் அதில் உள்ள நொதித்தல் வினையால் “அளிதல்”
என்ற வினைச்சொல்லும், “to soften, to become mellow, to ferment" என்ற பொருள்களால்
அளியன் = மைத்துனன், ஆண்யானை (மதகளிறு) எனச் சொற்கள் தோன்றியுள்ளன.

இடு + அளி = இட்டளி >> இட்டலி/இட்லி என்பது தெளிவு. அவித்தலை விட, அளிதல் “கள் போல,
ஃபெர்மெண்ட்டேஷன் ப்ராசெஸ்” இருப்பது தான் இட்டளியின் சிறப்பு அல்லவா?
பிட்டு, இழையப்பம் (சந்தகை) நீராவியில் அவிக்கப்படுவது. ஆனால், இட்டளியின் சிறப்பே அளிந்த மாவு தானே.
மந்தி அளிந்த கடுவனைச் சங்க இலக்கியம் பாடுகிறது. அளிதல் = to ferment.
எனவே, அளி = spiritous liquor, பூக்களில் மதுவைத் தேடி உண்ணும் pollinating insects.
அளி = தேனீக்கள் (honeybees), தும்பி (carpenter-bee, தச்சுவண்டு), பிருங்கராஜா ( bumblebee, வரிவண்டு ), வண்டு (beetle), 
நீலவரிவண்டு (நீலாளி என்பார் பாமஹர்), கொசுத்தேனீ (கொட்டாத்தேனீ, stingless bee), தட்டான் (dragonfly, சிறுதும்பி),
ஊசித்தட்டான் (damselfly), ...

வெவ்வேறு அளி இனங்கள், அடிப்படையான அ, இ, உ என்னும் உயிரொலிகளில் இசை முரலும்/நவிலும்
என்று கண்டனர் சங்கத் தமிழர். இதன் அடிப்படையில் நரப்பிசைக் கருவிகள் (உ-ம்: கின்னரம், யாழ், வீணை, தம்புரா, ...
செய்தனர். நாரதர் வைத்திருப்பது மகதி வீணை எனும் யாழ்வகை, தும்புரு தும்பு என்னும் சுரையில் செய்யும்
தம்புரா இசைப்பார். தும்புரு, நாரதர் என்னும் இசைவாணர்கள் பெயர்கள் தமிழினின்றும் வடமொழியில்
பயனாகிறது காண்க. துமர் ‘துளை’ > தமர்; துமராணி > தமராணி (Carpenter's gimlet),
(1) அம் எனல் - ஓர் ஒலிக்குறிப்பு (பிங்கலம்). உ-ம்: அஞ்சிறைத் தும்பி   அம்முகிற சிறகு கொண்ட தச்சுவண்டு.
Listen to the humming/buzzing sound of தும்பி (Carpenterbee): https://www.youtube.com/watch?v=YW1AbPH3NLw
https://www.youtube.com/watch?v=V8pPjmvm3KM    = அம்  என்று இசைக்கும் அஞ்சிறைத் தும்பி
தமிழின் அம் சிறையின் அம்மெனும் ஒலிக்குறிப்பு, உலகின் ஏராளமான மொழிகளில் ஹம் எனக் கூறப்படும்.
 
(2) இம் எனல் - Onom. expr. of humming, rustling, pattering; ஓர் ஒலிக்குறிப்பு. இம் மெனப் பெய்ய வெழிலி 
முழங்குந் திசையெல்லாம் (நாலடி. 392).
இமிர்-தல் imir- , 4 v. intr. < இம். 1. To sound, hum; ஒலித்தல். சுரும்பிமிர்ந் திம்மென (கலித். 119, 8). 2. To blow; ஊதுதல். கைவைத் திமிர்புகுழல் (பரிபா. 19, 41).  

(3) உம் எனல் - உங்காரம் Buzzing sound, as that made by bees in flight; வண்டின் ஒலி. உங்கார மதுகரங்கள் (பாரத. வசந்த. 3).
உம் எனல் ஹும் எனவும் ஆகும்: ஹுங்காரம் huṅkāram , n. < huṅ-kāra. See உங்காரம்,
அம் எனல் ஹம் எனப் பிறமொழிகளில் (உ-ம்: ஆங்கிலம்) ஒலிக்குறிப்பு ஆதற்போல. [A]

நா. கணேசன்
[A] அப்பளம் > ஹப்பளம் எனச் சில கிளை மொழிகளில் ஆதலை பேரா. எமனோ காட்டியுள்ளார். திண்ணைப் பள்ளிகளில் முதலில் கற்றுத்தரப்படும் ஜைநர்களின் ’அரி நமோத்து சிந்தம்’ என்னும் மந்திரம் தரும் சொல் அரிச்சுவடி. அது சில இடங்களில் (உ-ம்: சென்னை மாநகர்) ஹரிச்சுவடி என்று திரிதலும் உண்டு. எச்சரிக்கை என்பது கர்நாடக சங்கீதத்தில் தியாகையரிடம் ஹெச்சரிக்கை ஆகிறது. ஒலிக் குறிப்புகளை ஊளி என்று தமிழரும், ஹூளி/ஹோளி மற்ற இனத்தவரும் ஆளுதற்கு சில ஒப்புமைகளைப் பார்க்கலாம். அம் சிறை பறவை = ஹம் என்று ஓசை எழுப்பும் சிறகுகளை உடைய பறவை. ஆழியான் ஊர்திப் புள்ளின் *அம் சிறகு ஒலியின்* நாகம் மாழ்கிப் பை அவிந்த வண்ணம் வள்ளல் தேர் முழக்கினானும் (சீவக சிந்தாமணி, 449). இதுபோலவே, உம் கொட்டுதலை > ஹும் கொட்டுதல் என்றும் சொல்கிறோம் [1].  
"avar collum vArttaikaLil ovvon2Rukkum huGkAram ceytu koNTE iruppEn2. illA viTTAl, avar pEccu mElE pOkAtu."
en2 carittiram, UVS, p.15, 2nd edition 1982, Chennai
The Story of my life, part I (1990) & part II (1994), Institute of Asian Studies
Madras (Chennai), M. Shanmukam Pillai and A. Thasarathan translate this as:
"I had to counter every word of his with a soft grunt of assent; otherwise he would stop speaking".

அலியன்/அல்லியன் “மோழை எனப்படும் மக்னா ஆனை” - இவை போல மெய் இரட்டித்து, ஒரே பொருள் தரும்
சொற்கள் தமிழில் பல உண்டு. உ-ம்: நகர்/நக்கர் (Gharial, and then Shiva);அரதனம்/ரத்தினம்;  நடம்/நட்டம்; படம்/பட்டம் ‘சீலை’
சீலை நெய்வோர் பட்டம் போல தறியில் நெய்வதால். “படம் செய் பந்தர்” = புடைவைப்பந்தர் (புறப்பாட்டு); இவை போல, அலியன்/அல்லியன்.

கோவூர்கிழார் புறநானூற்றுப் பாடல் இதனை உறுதிசெய்கிறது. அணங்கு மிகுந்த காடு. அதில் தனியாய்ச் செல்ல
அஞ்சுவர். காமத்தால் வயப்பட்ட சோடி செல்ல இவ் வனப்பேய் அனுமதிக்கும். சுத்த நிருத்தமாய்
ஆடுவது அல்லியக்கூத்து. இது அலிப்பேடு என்றும் வழங்கும். தமிழிசை பற்றி நமக்குப்
பல செய்திகளை அறிவிக்கும் அடியார்க்குநல்லார் (14-ம் நூற். கொங்குநாட்டில் நிரம்பை அவர் ஊர். சமண சமயத்தார்)
அலிப்பேடு Cross-dressing என்பது அல்லியம் என்கிறார்.  அலி-/அல்லி-. இதனைப் கோவூர்க்கிழார்
அல்லிப்பாவை எனப் பாடியுள்ளார். தோல்பாவையில் கண்ணபிரான் குவலயாபீடம்
என்னும் கஞ்சனின் மாளிகை யானையை, அதன் கொம்பை ஒடித்து, அலியன் என்னும் மோழை ஆக்கிய
திருவிளையாட்டைக் காட்டும் பாடல். இதற்கு அபிநயம் இல்லை, ஓவியங்களால் காட்டி ஆடுவது என்பதால்
அல்லிப்பாவை என்றார். இதே போல, பாலைக்காடு மாவட்டங்களில் கம்ப ராமாயணத்தைத்
தோல்பாவைக்கூத்தாய் ஆடிப் பிரவசனம் பகவதி கோயில்களில் இன்றும் உண்டு.
(Ref. Stuart Blackburn, book on tOl pAvaik kUttu).
 
கண்ணபிரானின் பாலசரித நிகழ்ச்சியாக,  ஹரிவம்ச புராணம், சிலப்பதிகாரம், ஹால (மஹாராஷ்ட்ரா) என இந்த
லீலை இந்தியா முழுதும் பேசப்படுகிறது. கோலாட்டம் குஜராத்தில் தண்டியா என ஆடுகின்றனர். தண்டு தமிழ்ச்சொல்.
தாண்டவம் பற்றி சிவன் தண்டு முனிக்கு உபதேசம் என்பது பரதமுனிவரின் நாட்டிய சாஸ்திரம். மகாபலிபுரத்தில்
தண்டு முனிவர் சிவனிடம் உபதேசம் பெறும் சிற்பம் பல்லவர்கள் செதுக்கியுள்ளனர். அதேபோல,
பஞ்ச த்ராவிட தேசத்தில் ஒன்றாகிய குஜராத்தில் ஹல்லீச நடனம் ஆடுகின்றனர். இது உபரூபகங்களுள்
ஒன்று, நிருத்தமே பிரதானம். குவலயாபீடத்தின் கொம்பு ஒசித்த திருவிளையாட்டை நிருத்தமாய் நடித்துக்
காட்டிக் கோபியர் வட்டமாய் நின்று ஆடுவது. நடுவில் கண்ணனாக, ஓர் இளைஞன் புள்ளாங்குழல் ஊதி
நிற்பான்.

சம்ஸ்கிருதத்திலேயே புகழ்பெற்ற, மிகச் சிறந்த பக்தி இலக்கியம்: பாகவத புராணம். இது  ஆழ்வார்கள்
காலத்தின் பின்னர் தமிழ்நாட்டில் எழுதப்பட்டது (Cf. Fred Hardy). ஸ்ரீமத் பாகவதத்தின்
ஓவியங்கள் ராஜஸ்தான், பஹாடி (Rajasthan, Pahari painthings at Royal courts)
அரண்மனைகளில் வரையப்பெற்றன. அவற்றில், சிலப்பதிகாரத்தின் அல்லியக் கூத்து பார்க்கலாம்.
ஸ்ரீ கண்ணன் (பலராமனுடன் சேர்ந்து) குவலயாபீடம் என்னும் யானையை கொம்பொசித்து மோழை ஆக்குகிறான்.
https://www.harekrsna.com/philosophy/associates/demons/mathura/kuvalayapida.htm
https://www.differenttruths.com/relationship-lifestyle/religion/tales-from-srimad-bhagavatam-kuvalayapida-and-krishna-lxxviii/
https://www.amazon.com/Krishna-Balarama-Wrestlers-Elephant-Kuvalayapida/dp/B00MPG3O3M
http://www.sothebys.com/en/auctions/ecatalogue/lot.227.html/2008/indian-southeast-asian-works-of-art-n08499
https://research.britishmuseum.org/research/collection_online/collection_object_details.aspx?objectId=266088&page=2&partId=1&peoA=139544-1-7&people=139544
http://www.brahminsnet.com/forums/showthread.php/16324-Narayaneeyam
https://www.yumpu.com/en/document/view/48257134/dances-of-indiapdf-vivekananda-kendra-prakashan

கொம்பன் யானைய மோழை ஆக்கும் திருக்கூத்து: அல்லியம். இதன் மற்றொரு பெயர் அலிப்பேடு.
அலியன்/அல்லியன் பெயர் விளங்குகிறது அல்லவா? ஸ்ரீலங்காவில் கொம்பனே கிடையாது என்றீர்கள்.
எனவே, சிங்களியர் அலியா என ஆனையை அழைப்பது பொருத்தமே. aliya is a loan word from Tamil.
அதாவது, கொம்பன் யானையை மோழை (அலியன்) ஆக்கும் நிகழ்ச்சி. தெய்வங்கள் அவுணர்களுடன்
போர்செய்து, அதன் வென்றியை மகிழ்ச்சியாக ஆடுவது தெய்வவிருத்தி. இவை 11 வகை என்று
சிலப்பதிகாரம் பாடியுள்ளது. இவற்றை மாதவி எனும் கணிகை ஆடிக்காட்டினாள்.
http://www.tamilvu.org/slet/l3100/l3100pd1.jsp?bookid=50&auth_pub_id=54&pno=286
கஞ்சன் வஞ்சம் கடத்தற் காக
அஞ்சன வண்ணன் ஆடிய ஆடலுள்
அல்லியத் தொகுதியும்

கஞ்சன் வஞ்சம் கடத்தற்காக - கஞ்சனுடைய வஞ்சத்தை வெல்லுதற் பொருட்டாக, அஞ்சன வண்ணன் ஆடிய ஆடலுள் - கரிய நிறத்தையுடைய மாயோன் ஆடிய கூத்துக் களுள், அல்லியத் தொகுதியும் - கஞ்சன் வஞ்சத்தின் வந்த யானையின் கொம்பை ஒடித்தற்கு நின்றாடிய அல்லியத் தொகுதி என்னும் கூத்தும் ;

அஞ்சன வண்ணன் ஆடலுள், கடத்தற்காக ஆடிய அல்லியத் தொகுதி யென்றுமாம், மாயோனாடல் பத்து என்பர். தொகுதி யென்றார், முகம், மார்பு, கை, கால்களின் வட்டணை அவிநயம் முதலியன விருந்தும் தொழில் செய்யாது நிற்றலின் ; என்னை? "ஆட லின்றி நிற்பவை யெல்லாம், மாயோ னாடும் வைணவ நிலையே" என்றாராக லின். அல்லியம் என்பதனை அலிப்பேடு என்பாரு முளர்.
http://www.shanlaxjournals.in/pdf/TS/V2N4/ts_v2_n4_037.pdf

--------

அளியும், களிறும்:
 இட்டளி = இடு + அளி. அளிதல் = to soften, to become mellow, to ferment.
fermented dough = இட்டளி மாவு.

முன்பு, இடு + அவி இட்டவி தான் இட்டலி என மாறிற்றோ என மயக்கம் உண்டு.
திருப்பதிக் கல்வெட்டில் இட்டலி இட்டவி என்ற குழப்பம் உண்டு. ஐராவதம், துரை சுந்தரம்,
புலவர் செ. ராசு போன்றோர் பார்க்கணும். பல்லாண்டு முன்னர்,
கமலாதேவி அரவிந்தன் வண்ணச்சரபம் சுவாமிகள் இட்டவி எனப் பாடிய நூல் ஒன்றை
எனக்கு அனுப்புகிறேன் என்றார். அது வந்து சேரவே இல்லை. இது பிட்டுக்கு ஒருபெயராக
இருக்கலாம். வண்ணச்சரபரின் நிபுணர் புலவர்பெருமான் ப. வெ. நாகராஜனும்,
சிரவணம்பட்டி கௌமார மடத்தில் இல்லை. சிவனடி சேர்ந்துவிட்டார்கள்
https://www.vallamai.com/?p=88391

---
தும்பிகளையும் (Carpenterbees, Bumblebees) தேன் ஈக்களையும், வண்டுகளையும்
பற்றிப் படிக்கையில், புறம் 249-ன் ஆசிரியர் பெயர் தும்பி சேரகீரன்,
பாடல் வரிகளை ஆராய நேர்ந்தது, பாடலின் பொருளை எழுதியுள்ளேன்
வரிநீறு 11-ம் அடியில் ஈற்றுச்சீர். மாற்றினால், வகையுளி வரும்.
https://groups.google.com/forum/#!msg/houstontamil/0DhJtE44CBg/yAk05xbPBwAJ
 
விலங்கியல் நிபுணரும், தமிழ் நன்கு அறிந்தவரும், World Wildlife Fund அதிகாரியும்
ஆய நண்பர் டாக்டர் அஷ்ராஃப் குன்ஹுனு அவர்களுடன் நேற்று டெல்லியில்
பேசினேன். பல தெளிவு கிடைத்தது.

மிதுனம் (கலவி) வாயிலாக மைத்துனன் (கணவன், சகோதரி கணவன் (அ) மனைவி சோதரன்)
என்ற உறவுப்பெயர் வடசொல். ஆனால், மலையாளம் “அளியன்” என்ற தூயதமிழ்ப்
பெயரை வைத்துளது. குட்டளியன், வலியளியன் - வயது காரணமாக வேறுபடுத்தும்.

மஸ்த் என்னும் மதம் ஒழுகும் காலங்களில் களிறு (கணவன் என்ற சொல்லும் கள்- எனும்
தாது கொண்டது) தனியாகக் கூட்டத்தில் இருந்து பிரிந்து இயங்கும். இதற்கான
வேதிப்பொருள் சுரப்பு பற்றி விரிவாக ஆராய்ந்துவருகிறார்கள். அளியன் என்ற
சொல் இந்த Loner யானைகளுக்குப் பொருந்தும். அளி என்னும் வண்டுகள்
சூழ்ந்து/மொய்த்து இருக்கும் யானை என சம்ஸ்கிருதம் பலபடப் பேசும். சங்க இலக்கியம்
இந்த அளிகளின் ஜாதிப்பெயர் ஞிமிறு எனப் பல பாடல்களில் பதிவு செய்கிறது.
ஞிமிறு ஒருவகை moth என்று பி. எல். சாமி கூறி, அதன் விஞ்ஞானப் பேரையும்
தருகிறார்.

அல்லியம் என்ற கூத்தை கிருஷ்ணபிரான் குவலயாபீடம் என்ற யானையை
அடக்கினபோது ஆடிய கூத்தின் தொகுதி எனச் சிலப்பதிகாரத்தில் இளங்கோ அடிகளால்
தெரிகிறது. அலியன் என்ற சொல் அல்லியன் என்றும் வரும் எனப் பார்த்தோம்.

அல்லியன் - கூட்டத்தில் அல்லாத யானை. பிடிகளில் இருந்தோ, களிறுகளில்
இருந்தோ விலகிய யானை என்றும், சிங்களத்தில் அலியா என்று இவ்வானைகள்
வழங்குவதும் மரு. அஷ்ராஃப் குறிப்பிட்டார். அவருக்கு என் நன்றி.

அளி = கள்/மது, அஃதுணும் தும்பி, தேனீ, வண்டு. இச்சொல்லை வடமொழியில் மிகுந்து காணலாம்.
அளிகள் மொய்ப்பது அளியன் = கூட்டத்தில் பிரியும் மதகளிறு (Loner, solitaire), கள் (மதம்) வடிவது.
ஒருத்தல் எனச் சங்க இலக்கியம் கூறும். ஒருத்தல் ஆண்யானையின் தலைவன் என்பார் நச்சினார்க்கினியர்.
களிறு, கணவன் சொற்களும் அதில் உள்ள நொதித்தல் வினையால் “அளிதல்”
என்ற வினைச்சொல்லும், “to soften, to become mellow, to ferment" என்ற பொருள்களால்
அளியன் = மைத்துனன், ஆண்யானை (மதகளிறு) எனச் சொற்கள் தோன்றியுள்ளன.
காலப்போக்கில், அளியன் மைதுனன் ஆதலால், பொருட்குழப்பம் நீங்க “அல்லியன்/அலியன்”
என்று மாறிற்றோ? - எனவும் எண்ணுகிறேன். அளி என்பது வடமொழியில் அலி என
தும்பிக்கு எழுதுவர். ள் இன்மையால். அளியன் அலிய- என சிங்களம் போன்ற பாஷைகளில்
மாற இது காரணம். அளியன் >> அலியன்/அல்லியன்

இடு + அளி = இட்டளி >> இட்டலி/இட்லி என்பது தெளிவு. அவித்தலை விட, அளிதல் “கள் போல,
ஃபெர்மெண்ட்டேஷன் ப்ராசெஸ்” இருப்பது தான் இட்டளியின் சிறப்பு அல்லவா?
பிட்டு, இழையப்பம் (சந்தகை) நீராவியில் அவிக்கப்படுவது. ஆனால், இட்டளியின் சிறப்பே அளிந்த மாவு தானே.
மந்தி அளிந்த கடுவனைச் சங்க இலக்கியம் பாடுகிறது.

மொய் என்னும் யானைப் பெயர். மொய் = வலிமை. அது மாத்திரமில்லை.
களிற்றுக்கு மதம் வடியும்போது, ஞிமிறு என்ற வண்டுகள் மொய்க்கும்.
இதனால் மொய் = யானை, வண்டு என தமிழ் நிகண்டுகள் பகரும்.

அளி (வண்டு), வண்டு மொய்த்தலால் யானைக்களிறு மொய்,
மோழை (மக்னா), கொம்பனை மோழை ஆக்கும் கண்ணன் திருக்கூத்து
அலிப்பேடு/அல்லியம் எனப்படுதல் பற்றி இம்மடலில் பார்த்தோம்.

பிற பின்!
நா. கணேசன்
https://archive.org/details/@dr_n_ganesan  
http://nganesan.blogspot.com

N. Ganesan

unread,
May 28, 2022, 2:33:56 PM5/28/22
to vallamai, housto...@googlegroups.com

த்ராவிட மொழிகள் யாவிலும், வட இந்திய மொழிகள் யாவிலும் 100-கணக்கான இலக்கியங்களில் தேனு உண்ணும் அளிகள் பாடப்படுகிறது. Anthophila = Bee = அளிகள், என்பது சரிநேரான தமிழ்ப் பெயர், பல ஆயிரம் ஆண்டாக பாரத உபகண்டத்தில் உள்ள த்ராவிட/தமிழ்ச் சொல் இது. அளி-தல் = to ferment, to soften, to become mellow.

அளிகள் எல்லா வகையான அறுகாற் சிறுபறவைகளின் பெயர் எனத் தெரிகிறது:
    அளியே, (i) கேசரம்‌, (ii) அறுபதம்‌, (iii) கழுதொடு,
  (iv) வரியே,  (v) சுரும்பு, (vi) கீதம்‌, (iv) சூதம்‌,
  (viii) அரி, (ix) மா (x) பிரமரம்‌, (xii) ஆர்பதம்‌, (xiii) வரிக்கடை,
  (xiv) பிரசம்‌, (xv) தும்பி,  (xvi) மதுகரம்‌, (xvii) ஞிமிறு,
     விரவிய (xiii) தேனீ, (xix) வண்டு எனப்படுமே. - திவாகர நிகண்டு
https://groups.google.com/g/santhavasantham/c/dabme6X8Rkk/m/_i0Nw0iOCAAJ

19 மதுகரமும் அளிகள் ஆகும் என்கிறது திவாகரம். அளிகள் தம் இறகால் காற்றில் உண்டாக்கும் ஒலிகள் பல.  ஒவ்வொரு சொல்லையும் ஆராய இயலும். உ-ம்: தும்பி என்ற சொல்.   ‘கோத்தும்பியும், கருந்தும்பியும்’ என்ற கட்டுரை தரலாம். கோ என்பது மலை. மலைவண்டு, கோவண்டு, மலைத்தும்பி என்றெல்லாம் சொல்லலாம். கோத்தும்பி இமய மலையில் அதிகம் உண்டு. மாளுவ தேசத்தில் ஒன்று மட்டும் மிஞ்சி இருக்கிறது. மேற்குத் தொடர்ச்சி மலையில் இந்தக் கோத்தும்பி வாழ்ந்திருக்கவேண்டும். திருவாசகம், திவ்ய பிரபந்தம் இவற்றில் காணும் கோத்தும்பி இன்று இல்லை, அழிந்துவிட்டது. கோத்தும்பி பிருங்கராஜா/ ராஜவண்டு. இன்று தென்னிந்தியா இழந்துவிட்டது. கருந்தும்பி உண்டு. Black carpenterbee.

Some samples - 100s of such usage exist in Tamil. 100s more all over India, in IA and Drav. languages:

சம்பந்தர் தம் ஊரைப் பாடுகிறார்:
    ஒளியார் விடமுண் டவொருவன்
   அளியார் குழன்மங் கையொடன்பாய்க்
   களியார் பொழில்சூழ் தருகாழி
    எளிதா மதுகண் டவரின்பே

பவானி - வானி ஆறு காவிரியை வவ்வும் வவ்வானி:
சம்பந்தர் தேவாரம்

முத்து ஏர் நகையாள் இடம் ஆக, தம் மார்பில் வெண் நூல் பூண்டு
தொத்து ஏர் மலர் சடையில் வைத்தார் இடம் போலும் சோலை சூழ்ந்த
அத் தேன் அளி உண் களியால் இசை முரல; ஆலத் தும்பி,
தெத்தே என; முரலக் கேட்டார் வினை கெடுக்கும் திரு நணாவே.

நறும் தாது ஆடிய தும்பி பசும் கேழ்
பொன் உரை கல்லின் நன் நிறம் பெறூஉம் - நற் 25/3,4
மணமிக்க மகரந்தத்தூளில் அளைந்து ஆடிய தும்பி, பசிய நிறத்தையுடைய
பொன்னை உரைத்துப்பார்க்கும் கல்லைப் போன்று நல்ல நிறத்தைப் பெறும்

வேந்தன் அரசு

unread,
May 28, 2022, 8:53:08 PM5/28/22
to vallamai

வெள்., 27 மே, 2022, பிற்பகல் 8:39 அன்று, kanmani tamil <kanmani...@gmail.com> எழுதியது:
///சங்கப்பாடல்களில் இல்லாத பொருளை புறந்தள்ளணும்/// வேந்தர் ஐயா எழுதியது...

ஏன் ஐயா?!

எந்த மொழியிலும் கால இட சமூக அரசியல் மாற்றத்தை ஒட்டிப் பொருள் மாற்றம் அடைவது இயற்கை தானே...

 அல்குல் என்ற அழகான சொல்லுக்கு அறிஞர் அண்ணா தவறான பொருள்கொண்டு கம்பரசம் எழுதினார். 
திங்களின் ஒளியை நிலவு என்றனர். அதை சந்திரன் என்று இன்று சொல்லுகிறோம்.

பரிபாடலில் உள்ள  உள்ள சொல்லை பிற்காலத்தில் தவறான பொருளில் பயன்படுத்தியுள்ளனர்.  அன்னம் என்றால் சாதம் என்று கொள்ளுவதுபோல்.

 நல்ல கமழ் "தேன் அளி வழக்கம்" எல்லாமும் பண் தொடர் வண்டு பரிய எதிர் வந்து ஊத – swarms of singing bees that have the "habit of making fragrant honey " come and swarm on hair causing sorrow,

N. Ganesan

unread,
May 29, 2022, 5:25:54 AM5/29/22
to vallamai, housto...@googlegroups.com
On Sat, May 28, 2022 at 7:53 PM வேந்தன் அரசு <raju.ra...@gmail.com> wrote:

வெள்., 27 மே, 2022, பிற்பகல் 8:39 அன்று, kanmani tamil <kanmani...@gmail.com> எழுதியது:
///சங்கப்பாடல்களில் இல்லாத பொருளை புறந்தள்ளணும்/// வேந்தர் ஐயா எழுதியது...

ஏன் ஐயா?!

எந்த மொழியிலும் கால இட சமூக அரசியல் மாற்றத்தை ஒட்டிப் பொருள் மாற்றம் அடைவது இயற்கை தானே...

 அல்குல் என்ற அழகான சொல்லுக்கு அறிஞர் அண்ணா தவறான பொருள்கொண்டு கம்பரசம் எழுதினார். 
திங்களின் ஒளியை நிலவு என்றனர். அதை சந்திரன் என்று இன்று சொல்லுகிறோம்.

பரிபாடலில் உள்ள  உள்ள சொல்லை பிற்காலத்தில் தவறான பொருளில் பயன்படுத்தியுள்ளனர்.  அன்னம் என்றால் சாதம் என்று கொள்ளுவதுபோல்.

இந்தியாவின் எல்லா பாஷைகளிலும் அளி = bee என்ற பொருள் இருக்கிறது. எல்லோரும் தவறான பொருள்
கொண்டுவிட்டார்கள் எனல் பிழை. மீன் என்றால் Fish என்பது போல.
தேனளி என்பது தேன்கவர் மதுகரம். ’தேனளி வழக்கம்’ = மதுகரங்களின் வழக்கமாகிய முரலுதல்/இசைத்தல்.

 நல்ல கமழ் "தேன் அளி வழக்கம்" எல்லாமும் பண் தொடர் வண்டு பரிய எதிர் வந்து ஊத – swarms of singing bees that have the "habit of making fragrant honey " come and swarm on hair causing sorrow,

’தேனளி வழக்கம்’ = Nature of Honey-seeking Bees = மதுகரங்களின் வழக்கமாகிய முரலுதல்/இசைத்தல்.

அளிவேணீ ஜம்புகேசுவரீ - சியாமா சாஸ்திரி பாடல்.
அகிலாண்டேசுவரீ! விரைவாகக் காப்பாயம்மா.

அனுபல்லவி
அனைத்துலகின் துயரங்களைப் போக்குபவளே! புவியில்,
உன்னை மிஞ்சியவர், எவருளரம்மா?

சரணம் 1
மாணிக்க மயமாயுள்ள,
கோயில் நடுவில் உறைபவளே! அளி வேணீ! 
ஸ்ரீ சம்பு நாதரின் ராணியே!
வரமருள்வாயம்மா, நாவரசியே! எமதம்மா!

சுவாதித் திருநாள் - சங்கத் தமிழிலும், த்ராவிட பாஷையின் வார்த்தை பாரத முழுதும் தொன்மையான காலங்களில்
பரவி இருந்த நிலை அறிய:

“அளிவேணீ எந்து செய்வு? ஹந்த ஞானினி, மானிநி!
நளினமிழி ஸ்ரீ பத்மநாபன் இஹ வந்நீல்லல்லோ!!

இந்து உதயாம் நிசயும், இந்திந்திரா விராவவும்

மந்த மாருதனும், சாரு மலயஜா லேபனவும்

குந்த ஜாதி சுமங்களும், கோமளாங்கி, சகி - த்ரிலோ

சுந்தரன் வராஞ்ஞால், ஐயே, சொல்க, கிம்மே ப்ரயோஜனம்?”

N. Ganesan

unread,
May 29, 2022, 8:23:39 AM5/29/22
to

சங்க இலக்கியத்தில் ‘தேன் அளி’ என்ற பெயர் ‘Nectar/Honey-seeking Bees' என்பதற்கு உள்ளது. பல நூற்றாண்டு முன்னர் தன் சங்க நூலின் உரையில் பரிமேலழகரும், பின்னர் பலரும் விளக்கியுள்ளனர். அளி என்பது பல வகை வண்டுகள். தேனீ அளிகளில் ஒருவகை. அவ்வளவே. தேனீ = Honeybee, https://en.wikipedia.org/wiki/Honey_bee

அளி = All kinds of Bees, https://en.wikipedia.org/wiki/Bee
அதனாற்றான், உலக அளிகள் நாள் - World Bee Day.
அளிகள் முரல்வன. அதனால், ஆகுபெயராய் புல்லாங்குழலுக்கு முரலீ என்றும், கிருஷ்ணபிரானுக்கு, முரலீக்ருஷ்ண (முரளிகிருஷ்ணன்) என்ற பெயரும் ஏற்பட்டன. அள்- என்பது தாதுவேர். அளிதல் = நொதித்தல். அள்- அளை எனும் சொல்லுக்கு தயிர், மோர், வெண்ணெய் என்று நொதித்தலால் பாக்டீரியா, யீஸ்ட் (Cheese) பொருள் பெறுகின்றன. அள்- 'to ferment' எனும் தாதுவேர் தருவன: (1) அளை ‘Dairy products such as yoghurt, butter milk, butter, ghee' (or, even cheese) (2) அளி பூங் கள் நாடி உண்ணும் உயிரி = Bees. அளி = மது என்ற பொருள் உண்டு.

சங்க இலக்கியத்தில் ‘தேனளி வழக்கம்’ என்பது ”அளியினங்களின் அஞ்சிறை முரல்வதால்

எழும் buzzing, humming music போன்ற இசையை எழுப்பும் பெண்டிர்” என்பதாகும்.

பண்டை உரையாசிரியர் கூறும் கருத்து:

தங்கள் மேலிருந்த பகற்காலத்துக்குரிய அணிகளைநீக்கினர். மாலைக் காலத்தில் மலரும் மலர்களையும் தோளணி தோடு முத்துவடம் முதலானஆபரணங்களையும் அணிந்தனர். பலர் பாடினர்.அவர்களுடைய பாடலும் பரவலும் புகழ்தலும் ஆடுவாருடைய ஆடலொலியும் அதற்குரிய தாளவொலியும் தேனீக்களுடைய ஒலியும் மிக்கன. அங்ஙனம் எழுந்த பண்ணொலியைக் கேட்டுத் தம் இனமென்று கருதி ஊரிலிருந்த வண்டுகள் எதிர்வந்து ஊதின;பாடுவார்களது பூவேய்ந்த கொண்டைமேல்தேனையுண்டிருக்கும் வண்டுகள் உடன்வந்து ஊதின.யாவரும் தென் திசையை நோக்கி மீண்டனர்.அப்பொழுது மாடத்தினுள்ளிருந்து மேலெழுந்த அகிற்புகையானது மலையின் மேல் தங்கி எழுந்த பனியை ஒத்தது.

சங்க இலக்கியத்தின் தேனளி = honey-seeking bees பின்னரும் தொடர்கிறது:

(1) சம்பந்தர்:

முத்து ஏர் நகையாள் இடம் ஆக, தம் மார்பில் வெண்
                                                    நூல் பூண்டு
தொத்து ஏர் மலர் சடையில் வைத்தார் இடம் போலும்
                                                  சோலை சூழ்ந்த
அத் தேனளி உண் களியால் இசை முரல; ஆலத்
                                                         தும்பி,

தெத்தே என; முரலக் கேட்டார் வினை கெடுக்கும் திரு
                                                        நணாவே.

(2) தேடும்பொருள் வீடுந்தினம் சேர்ந்தேவருந் தானோ
மாடும்பெரும் பீடும்பெறும் மறுவில்வழி கேளாய்
ஓடும்புனல் அயலேமலர் உகுதேனளி உண்டு
பாடும்பொழிற் பழனத்தரன் பாதம்பணி மனமே.

வீடும் தினம் - இறக்கும் நாள்;
மாடு - செல்வம்;
பீடு - பெருமை;
மறு இல் வழி - குற்றமற்ற நெறி;
மலர் உகு தேன் அளி உண்டு - பூக்கள் சொரியும் தேனை வண்டுகள் அருந்தி;

மனமே! தேடிய பொருள் எல்லாம் சாகும் நாளில் கூட வருமோ? செல்வமும் பெருமையும் அடையக் குற்றமற்ற வழியைக் கேட்பாயாக! ஓடும் நீரின் பக்கத்தில் மலர்கள் சொரியும் தேனை உண்டு வண்டுகள் பாடும் சோலைகள் இருக்கும் திருப்பழனத்தில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமான் திருவடியைப் பணிவாயாக!

(3) https://www.kaumaram.com/thiru/nnt0430_u.html
தேது என வாசம் உற்ற கீத விநோத(ம்) மெச்சு தேன் அளி
சூழ மொய்த்த மலராலே ... ஒளி உடையதாய், நறுமணம்
கொண்டதாய், விநோதமான இசையை விரும்பும் தேனீக்கள் சூழ்ந்து
மொய்ப்பதான பூக்களாலும்,

(4) ஈர்ந்தேன் அளிசூழ் ஒற்றிஉளார்
          என்கண் மணியார் என்கணவர்  - வள்ளலார்

குளிர்ந்த தேன் வண்டுகள் சூழ்ந்து ஒலிக்கும் சோலைகளையுடைய திருவொற்றியூரில் உள்ளவரும், என் கண்ணின் மணி போன்றவரும், எனக்குக் கணவனும்,  - ஔவை துரைசாமிப்பிள்ளை (அருட்செல்வர் நா. மகாலிங்கம் வேண்ட, ஔவை எழுதின திருவருட்பாப் பேருரை.)

த்ராவிட மொழிகள் யாவிலும், வட இந்திய மொழிகள் யாவிலும் 100-கணக்கான இலக்கியங்களில் தேனு உண்ணும் அளிகள் பாடப்படுகிறது. Anthophila = Bee = அளிகள், என்பது சரிநேரான தமிழ்ப் பெயர், பல ஆயிரம் ஆண்டாக பாரத உபகண்டத்தில் உள்ள த்ராவிட/தமிழ்ச் சொல் இது. அளி-தல் = to ferment, to soften, to become mellow.

அளிகள் எல்லா வகையான அறுகாற் சிறுபறவைகளின் பெயர் எனத் தெரிகிறது:
    அளியே, (i) கேசரம்‌, (ii) அறுபதம்‌, (iii) கழுதொடு,
  (iv) வரியே,  (v) சுரும்பு, (vi) கீதம்‌, (iv) சூதம்‌,
  (viii) அரி, (ix) மா (x) பிரமரம்‌, (xii) ஆர்பதம்‌, (xiii) வரிக்கடை,
  (xiv) பிரசம்‌, (xv) தும்பி,  (xvi) மதுகரம்‌, (xvii) ஞிமிறு,
     விரவிய (xiii) தேனீ, (xix) வண்டு எனப்படுமே. - திவாகர நிகண்டு
https://groups.google.com/g/santhavasantham/c/dabme6X8Rkk/m/_i0Nw0iOCAAJ

19 மதுகரமும் அளிகள் ஆகும் என்கிறது திவாகரம். அளிகள் தம் இறகால் காற்றில் உண்டாக்கும் ஒலிகள் பல.  ஒவ்வொரு சொல்லையும் ஆராய இயலும். உ-ம்: தும்பி என்ற சொல்.   ‘கோத்தும்பியும், கருந்தும்பியும்’ என்ற கட்டுரை தரலாம். கோ என்பது மலை. மலைவண்டு, கோவண்டு, மலைத்தும்பி என்றெல்லாம் சொல்லலாம். கோத்தும்பி இமய மலையில் அதிகம் உண்டு. மாளுவ தேசத்தில் ஒன்று மட்டும் மிஞ்சி இருக்கிறது. மேற்குத் தொடர்ச்சி மலையில் இந்தக் கோத்தும்பி வாழ்ந்திருக்கவேண்டும். திருவாசகம், திவ்ய பிரபந்தம் இவற்றில் காணும் கோத்தும்பி இன்று இல்லை, அழிந்துவிட்டது. கோத்தும்பி பிருங்கராஜா/ ராஜவண்டு. இன்று தென்னிந்தியா இழந்துவிட்டது. கருந்தும்பி உண்டு. Black carpenterbee.

NG

N. Ganesan

unread,
May 30, 2022, 11:21:53 PM5/30/22
to Santhavasantham
மகரம் என்னும் பொதுப்பெயர். இடங்கர், கராம், முதலை இவை சாதிபேதம் என்பர் பழைய உரையாசிரியர் பேராசிரியர். தேன் அளி வகைகளில் (=Honey-seeking Bee species) தும்பி, வண்டு, ஈ (உ-ம்: தேனீ) சாதிபேதம் என்பர்.  அளிகள் எல்லா வகையான அறுகாற் சிறுபறவைகளின் பெயர் எனத் தெரிகிறது:

    அளியே, (i) கேசரம்‌, (ii) அறுபதம்‌, (iii) கழுதொடு,
  (iv) வரியே,  (v) சுரும்பு, (vi) கீதம்‌, (iv) சூதம்‌,
  (viii) அரி, (ix) மா (x) பிரமரம்‌, (xii) ஆர்பதம்‌, (xiii) வரிக்கடை,
  (xiv) பிரசம்‌, (xv) தும்பி,  (xvi) மதுகரம்‌, (xvii) ஞிமிறு,
     விரவிய (xiii) தேனீ, (xix) வண்டு எனப்படுமே. - திவாகர நிகண்டு.

பரிபாடல் அளிகள் எழுப்பும் இசை வழக்கம்
-----------------------------------------

இசை உலகமுழுதும் மூன்று வகையான கருவிகளால் பிறப்பது: (1) குழல் (2) யாழ் (3) முழவு. அளி இனங்கள் முரசு, தப்பட்டை, மிருதங்கம், தபேலா, கிணை, ... போன்ற முழவுக் கருவிகளின் இசையை எழுப்பாது. ஆனால், குழலின் இசையை அளிகள் எழுப்பும். யாழின் இசையை அளிகள் எழுப்பும். குழலைக் கதுப்பில் (கன்னத்தில்) வைத்து எழுப்பும் பண் போன்ற இசையைச் செய்வன தும்பி என்னும் அளி இனம் ஆகும். யாழை விரலாலோ, வில்லாலோ (வயலின் முன்னோடி) எழுப்பும் சங்கீதம் போன்றது வண்டுகள் செய்வது என்பது சங்க சான்றோர் கண்டறிந்த இசைநுட்பம் ஆகும். இதனை, தமிழின் தொடக்க காலத்தில் இருந்து 1500 ஆண்டுகள் புலவர்கள் பாடி விளக்கம் செய்துள்ளார்கள். இசையிலே, யாழும், குழலும் எழுப்பும் இசைகளை ஒன்றாகச் சேர்த்து “அளிவழக்கம்” என்கிறார் பரிபாடல் பெரும்புலவர். பரிபாடலே இசை நூல் அல்லவா?

   “நல்ல கமழ் தேன் அளி வழக்கம், எல்லாமும்,
         பண் தொடர் வண்டு பரிய எதிர் வந்து ஊத,    120
         கொண்டிய வண்டு கதுப்பின் குரல் ஊத,”

இங்கே, அளிவழக்கம் (= அளிகளின் சங்கீதம்) எல்லாம் எப்படி இரண்டாகப் பகுக்கலாம் என விளக்கும் அரிய பாடல், சங்கத் தமிழரின் இசையறிவைப் புலப்படுத்தும் அற்புத வரிகள் இவை. (1) முதலில் வரும் வண்டு = தும்பி தவிர, மற்ற அளி வகைகள் (2) இரண்டாவதாக வரும் வண்டு = தும்பி வகைகள். இதுபற்றி மேலும் சொல்வேன். பிற பின்.

இன்னொன்று:
-ழ் என்று முடியும் சொற்கள் -ர் என முடிதலும் உண்டு.
இமிழ்தல் என்ற சொல் இமிர்தல் (< ஞிமிர்தல்/நிமிர்தல்) என்பதனோடு தொடர்புடையது.
கபிலர்:
“ஆடமைக் குயின்ற அவிர்துளை மருங்கில்
கோடை யவ்வளி குழலிசை யாகப்
பாடின் அருவிப் பனிநீர் இன்னிசைத்
தோடமை முழவின் துதை குரலாகக்
கணக்கலை இகுக்கும் கடுங்குரல் தூம்பொடு
மலைப்பூஞ் சாரல் வண்டு யாழாக
இன்பல் *இமிழிசை* கேட்டுக் கலிசிறந்து
மந்தி நல்லவை மருள்வன நோக்கக்
கழை வளர் அடுக்கத்து இயலி ஆடும் மயில்
நனவுப் புகு விறலியில் தோன்றும்”

பவர்-தல் = நெருங்கிய கொடி. பவர்தல்/பவழ்தல் = பவழம்.
பவர் = நெருங்கிய கொடி. பவழக்கொடி கடலில் நெருங்கிவளர் கொடி.

திமிழ்-, திமிர்- கருமை: > திமிர என்னும் வடசொல் ஆனது. இது வேளாண் திணைச் சொல் ஆகும்.
https://www.youtube.com/watch?v=za2cnQVB0Yw
https://eluthu.com/kavithai/263745.html
“மதில்போல் திமிழ் கொண்ட காளையும்!!! உழுவதற்கு ஏறும்!! ”
https://www.dinamalar.com/district_detail.asp?id=424612
திமிழ் அழகன் : https://www.youtube.com/watch?v=oIKp0frkx4Q

காழ்/ காளி காரி (காழ்::கார்)
https://www.youtube.com/watch?v=_-9gImLGRFA

அவிழ் :: அவிர்

முகிழ் :: முகுர (ஆடி)
வடமொழியில், முகுரம் என்றால் கண்ணாடி. முகுர ஆனனன் = திருதராட்டிரன். ஞெகிழ்- என்ற சொல், நகர் என்று Gharial-க்கு வடக்கே வழங்குகிறது. cf. நகுளீசர் (> லகுளீசர்). இவை போல,
முகிழ்- முகிழ்³-த்தல் mukiḻ- , 11 v. intr. [K. muguḷ.] 1. To bud, put forth buds; அரும்புதல். அருமணி முகிழ்த்தவேபோ லிளங்கதிர் முலையும் . . . பரந்த (சீவக. 551). 2. To appear; தோன்றுதல். மூவகை யுலகு முகிழ்த்தன முறையே (ஐங்குறு. கடவுள்.)  — tr. 1. To display; to cause to appear; தோற்றுவித்தல். அற்புத முகிழ்த்தார் (காஞ்சிப்பு. பன்னிரு. 163). 2. To bear, bring forth; ஈனுதல். அமரராதியரை முகிழ்த்து (விநாயகபு. 81, 154). நிழற்பாவை முகிழச் செய்வதால் ஆடிக்கு முகுழ- > முகுர எனப் பெயர்.

ஞெகிழ்/நெகிழ் > நகர்
etc.,

NG

kanmani tamil

unread,
May 31, 2022, 11:05:01 PM5/31/22
to vallamai
முனைவர் கணேசன் உங்களது விரிவான இசை குறித்த ஆய்வுத் தரவுகள் அனைத்தையும் இங்கே விளக்கி இருக்கிறீர்கள். அருமை. 

ஆனால் 26ம் தேதி அனுப்பியிருக்கும் தரவுகளையே நான் முழுவதுமாக ஊன்றிப் படிக்க இயலவில்லை என்பது தான் உண்மை. பொழுது கிடைக்கவில்லை. 

என்னுடைய ஐயம் இதோ:
நிகண்டுகள் தோன்றிய காலமும் தொகையிலக்கியக் காலமும் ஒன்றல்ல. நிகண்டுகள் சொல்லும் பொருளை எல்லாம் தொகையிலக்கியத்தில் பொருத்திப் பார்க்க இயலாது. 'அளி' எனும் சொல் தொகையிலக்கியத்தில் வழங்கும் இடங்களை எல்லாம் தொகுத்து வைத்து அச்சொல்லின் பொருள் போக்கை அறிந்து கொள்வதே முறை. அப்படிப் பார்த்தால் பரிபாடலில் பயின்று வரும் 'அளிவழக்கம்' என்ற தொடரின் பொருள் என்ன? நீங்கள் சொல்லும் பொருள் கேள்விக்குரியது ஆகிறது. 

"மங்கை நல்லவர் கண்ணும் மனமும் போன்
  றெங்கு மோடி யிடறுஞ் சுரும்புகாள்
  வண்டு காண்மகிழ் தேனினங் காண்மது
  உண்டு தேக்கிடு மொண்மிஞிற் றீட்டங்காள்" என்ற சிந்தாமணிப் பாடல் பறக்கும் ஆறுகால் பூச்சி இனங்களை வகைப்படுத்துகிறது. அவற்றை 'அளி' என்னும் சொல்லால் நிகண்டுகள் குறிக்கின்றன. 

///19 மதுகரமும் அளிகள் ஆகும் என்கிறது திவாகரம்/// Dr.Ganesan wrote on 26th May

///இசைவாணர் பாடல்களுக்கு “அளி வழக்கம்” என்று சங்க இலக்கியம் பரிபாடலில்
காண்கிறோம்./// Dr.Ganesan wrote on 21st May
இக்கூற்று மேலாய்விற்கு உரியது. 

அடுத்து நேரம் கிடைக்கும் போது வருகிறேன்.

சக 

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

N. Ganesan

unread,
Jun 1, 2022, 12:30:38 AM6/1/22
to vallamai
On Tue, May 31, 2022 at 10:05 PM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
முனைவர் கணேசன் உங்களது விரிவான இசை குறித்த ஆய்வுத் தரவுகள் அனைத்தையும் இங்கே விளக்கி இருக்கிறீர்கள். அருமை. 

ஆனால் 26ம் தேதி அனுப்பியிருக்கும் தரவுகளையே நான் முழுவதுமாக ஊன்றிப் படிக்க இயலவில்லை என்பது தான் உண்மை. பொழுது கிடைக்கவில்லை. 

என்னுடைய ஐயம் இதோ:
நிகண்டுகள் தோன்றிய காலமும் தொகையிலக்கியக் காலமும் ஒன்றல்ல. நிகண்டுகள் சொல்லும் பொருளை எல்லாம் தொகையிலக்கியத்தில் பொருத்திப் பார்க்க இயலாது. 'அளி' எனும் சொல் தொகையிலக்கியத்தில் வழங்கும் இடங்களை எல்லாம் தொகுத்து வைத்து அச்சொல்லின் பொருள் போக்கை அறிந்து கொள்வதே முறை. அப்படிப் பார்த்தால் பரிபாடலில் பயின்று வரும் 'அளிவழக்கம்' என்ற தொடரின் பொருள் என்ன? நீங்கள் சொல்லும் பொருள் கேள்விக்குரியது ஆகிறது. 

பழைய உரைகாரர்கள் கொள்ளும் பொருள் - பரிபாடல் பாட்டுக்கு - இதுவாகும்.

kanmani tamil

unread,
Jun 1, 2022, 1:07:56 AM6/1/22
to vallamai
பழையவுரைகாரர் நிகண்டுகள் தோன்றிய காலத்தையோ அதற்குப் பிற்பட்ட காலத்தையோ சேர்ந்தவர் ஆதல் கூடும். 
சக 

N. Ganesan

unread,
Jun 1, 2022, 1:08:11 AM6/1/22
to vallamai
On Tue, May 31, 2022 at 10:05 PM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
முனைவர் கணேசன் உங்களது விரிவான இசை குறித்த ஆய்வுத் தரவுகள் அனைத்தையும் இங்கே விளக்கி இருக்கிறீர்கள். அருமை. 

ஆனால் 26ம் தேதி அனுப்பியிருக்கும் தரவுகளையே நான் முழுவதுமாக ஊன்றிப் படிக்க இயலவில்லை என்பது தான் உண்மை. பொழுது கிடைக்கவில்லை. 

என்னுடைய ஐயம் இதோ:
நிகண்டுகள் தோன்றிய காலமும் தொகையிலக்கியக் காலமும் ஒன்றல்ல. நிகண்டுகள் சொல்லும் பொருளை எல்லாம் தொகையிலக்கியத்தில் பொருத்திப் பார்க்க இயலாது. 'அளி' எனும் சொல் தொகையிலக்கியத்தில் வழங்கும் இடங்களை எல்லாம் தொகுத்து வைத்து அச்சொல்லின் பொருள் போக்கை அறிந்து கொள்வதே முறை. அப்படிப் பார்த்தால் பரிபாடலில் பயின்று வரும் 'அளிவழக்கம்' என்ற தொடரின் பொருள் என்ன? நீங்கள் சொல்லும் பொருள் கேள்விக்குரியது ஆகிறது. 

"மங்கை நல்லவர் கண்ணும் மனமும் போன்
  றெங்கு மோடி யிடறுஞ் சுரும்புகாள்
  வண்டு காண்மகிழ் தேனினங் காண்மது
  உண்டு தேக்கிடு மொண்மிஞிற் றீட்டங்காள்" என்ற சிந்தாமணிப் பாடல் பறக்கும் ஆறுகால் பூச்சி இனங்களை வகைப்படுத்துகிறது. அவற்றை 'அளி' என்னும் சொல்லால் நிகண்டுகள் குறிக்கின்றன. 

///19 மதுகரமும் அளிகள் ஆகும் என்கிறது திவாகரம்/// Dr.Ganesan wrote on 26th May

-----------------
    852. தோடணி மகளிர் போன்ற துணர்மலர்க் கொம்பர் கொம்பின்
    ஆடவர் போல வண்டு மடைந்தன அளியிற் கொல்கி.
    ஊடிய மகளிர் போல வொசிந்தன வூட றீர்க்குஞ்
    சேடரிற் சென்று புல்லிச் சிறுபுறந் தழீஇய தும்பி.

பொருள் : துணர்மலர்க் கொம்பர் தோடு அணி மகளிர் போன்ற - கொத்தாகிய மலர்க்கொம்புகள் மலரணிந்த மகளிரைப் போன்றன; ஆடவர்போல வண்டும் கொம்பின் அடைந்தன - மகளிரிடம் ஆடவர் அடையுமாறுபோல வண்டுகளும் மலர்க் கொம்புகளிடத்தே சேர்ந்தன; ஊடிய மகளிர்போல அளியிற்கு ஒல்கி ஒசிந்தன - ஆடவரிடத்தே ஒசிந்து ஊடிய பெண்களைப் போல அவ் வண்டுகளின் கனத்திற்கு அக் கொம்புகள் ஒரு பக்கத்தே தாழ்ந்தன; ஊடல் தீர்க்கும் சேடரின் தும்பி சென்று புல்லிச் சிறுபுறம் தழீஇய - அவர் ஊடலைத் தீர்த்து எதிர்முகம் ஆக்கும் பெரியோரைப் போலத் தும்பிகள் சென்று அங்ஙனம் உயர்ந்த சிறுபுறத்தைத் தழுவி ஒக்க நிறுத்தின.

-------------------------

1402. பொன்வி ளைத்த புணர்முலை யாள்சொல

இன் அளிக்குரல் கேட்ட அசுணமா
அன்ன ளாய்மகிழ் வெய்துவித் தாளரோ
மின்வி ளைத்தன மேகலை யல்குலாள்.

பரிபாடல்: அளிகள் எழுப்பும் இசை = அளிவழக்கம்; இன் அளிக் குரல் - ஏழு சுரங்களில் முதலான குரல் தொடங்கி, அளிகள் எழுப்பும் இன்னிசை.
அசுணம் நல்லிசை கேட்டால் மகிழும். ‘அசுணங் கொல்பவர் கைபோல் நன்றும்’ (நற். 304).

நண்பர், பேரா. பி. பாலசுப்பிரமணியன், திருப்பத்தூர்க் கல்லூரித் தமிழ்த்துறை. அசுணம் பற்றிய கட்டுரை இணைத்துளேன்.
அதில் நற்றிணை, அகநானூறு பாடல்களில் அசுணம் அளிகளின் சங்கீதத்தைக் கேட்கும் என்றபடி உள்ளது.
இதனைத் தான் திருத்தக்கதேவர் இப்பாடலில் மீட்டும் பதிவுசெய்கிறார்.

NG

720-Article Text-1734-1-10-20220401.pdf

N. Ganesan

unread,
Jun 1, 2022, 7:19:01 AM6/1/22
to vallamai
On Wed, Jun 1, 2022 at 12:07 AM N. Ganesan <naa.g...@gmail.com> wrote:

"மங்கை நல்லவர் கண்ணும் மனமும் போன்
  றெங்கு மோடி யிடறுஞ் சுரும்புகாள்
  வண்டு காண்மகிழ் தேனினங் காண்மது
  உண்டு தேக்கிடு மொண்மிஞிற் றீட்டங்காள்" என்ற சிந்தாமணிப் பாடல் பறக்கும் ஆறுகால் பூச்சி இனங்களை வகைப்படுத்துகிறது. அவற்றை 'அளி' என்னும் சொல்லால் நிகண்டுகள் குறிக்கின்றன. 

///19 மதுகரமும் அளிகள் ஆகும் என்கிறது திவாகரம்/// Dr.Ganesan wrote on 26th May

-----------------
    852. தோடணி மகளிர் போன்ற துணர்மலர்க் கொம்பர் கொம்பின்
    ஆடவர் போல வண்டு மடைந்தன அளியிற் கொல்கி.
    ஊடிய மகளிர் போல வொசிந்தன வூட றீர்க்குஞ்
    சேடரிற் சென்று புல்லிச் சிறுபுறந் தழீஇய தும்பி.

பொருள் : துணர்மலர்க் கொம்பர் தோடு அணி மகளிர் போன்ற - கொத்தாகிய மலர்க்கொம்புகள் மலரணிந்த மகளிரைப் போன்றன; ஆடவர்போல வண்டும் கொம்பின் அடைந்தன - மகளிரிடம் ஆடவர் அடையுமாறுபோல வண்டுகளும் மலர்க் கொம்புகளிடத்தே சேர்ந்தன; ஊடிய மகளிர்போல அளியிற்கு ஒல்கி ஒசிந்தன - ஆடவரிடத்தே ஒசிந்து ஊடிய பெண்களைப் போல அவ் வண்டுகளின் கனத்திற்கு அக் கொம்புகள் ஒரு பக்கத்தே தாழ்ந்தன; ஊடல் தீர்க்கும் சேடரின் தும்பி சென்று புல்லிச் சிறுபுறம் தழீஇய - அவர் ஊடலைத் தீர்த்து எதிர்முகம் ஆக்கும் பெரியோரைப் போலத் தும்பிகள் சென்று அங்ஙனம் உயர்ந்த சிறுபுறத்தைத் தழுவி ஒக்க நிறுத்தின.

-------------------------

1402. பொன்வி ளைத்த புணர்முலை யாள்சொல
இன் அளிக்குரல் கேட்ட அசுணமா
அன்ன ளாய்மகிழ் வெய்துவித் தாளரோ
மின்வி ளைத்தன மேகலை யல்குலாள்.

பரிபாடல்: அளிகள் எழுப்பும் இசை = அளிவழக்கம்; இன் அளிக் குரல் - ஏழு சுரங்களில் முதலான “குரல்” தொடங்கி இயங்கும் நரம்பின் போல, அளிகள் எழுப்பும் இன்னிசை.  அசுணம் நல்லிசை கேட்டால் மகிழும். தீய இசை கேட்பின் வருந்தும்: ‘அசுணங் கொல்பவர் கைபோல் நன்றும்’ (நற். 304).

இன் அளிக் குரல்:
(1) கொண்டிய வண்டு கதுப்பின் குரல் ஊத,  (2) வண்ண வண்டு இமிர் குரல் பண்ணை போன்றனவே; (3) மண் ஆர் மணியின் வணர் குரல் வண்டு ஆர்ப்ப, (4) முரல் குரற் தும்பி அவிழ் மலர் ஊத; (5) பல் வரி வண்டினம் வாய் சூழ் கவினொடும்,  (ஐந்து காட்டுகளும் பரிபாடல்).

------------------------
 
நண்பர், பேரா. பி. பாலசுப்பிரமணியன், திருப்பத்தூர்க் கல்லூரித் தமிழ்த்துறை. அசுணம் பற்றிய கட்டுரை இணைத்துளேன்.
அதில் நற்றிணை, அகநானூறு பாடல்களில் அசுணம் அளிகளின் சங்கீதத்தைக் கேட்கும் என்றபடி உள்ளது.
இதனைத் தான் திருத்தக்கதேவர் இப்பாடலில் மீட்டும் பதிவுசெய்கிறார்.

NG

///இசைவாணர் பாடல்களுக்கு “அளி வழக்கம்” என்று சங்க இலக்கியம் பரிபாடலில்
காண்கிறோம்./// Dr.Ganesan wrote on 21st May

N. Ganesan

unread,
Jun 1, 2022, 7:48:15 AM6/1/22
to vallamai, housto...@googlegroups.com
On Wed, Jun 1, 2022 at 6:18 AM N. Ganesan <naa.g...@gmail.com> wrote:

On Wed, Jun 1, 2022 at 12:07 AM N. Ganesan <naa.g...@gmail.com> wrote:

"மங்கை நல்லவர் கண்ணும் மனமும் போன்
  றெங்கு மோடி யிடறுஞ் சுரும்புகாள்
  வண்டு காண்மகிழ் தேனினங் காண்மது
  உண்டு தேக்கிடு மொண்மிஞிற் றீட்டங்காள்" என்ற சிந்தாமணிப் பாடல் பறக்கும் ஆறுகால் பூச்சி இனங்களை வகைப்படுத்துகிறது. அவற்றை 'அளி' என்னும் சொல்லால் நிகண்டுகள் குறிக்கின்றன. 

///19 மதுகரமும் அளிகள் ஆகும் என்கிறது திவாகரம்/// Dr.Ganesan wrote on 26th May

-----------------
    852. தோடணி மகளிர் போன்ற துணர்மலர்க் கொம்பர் கொம்பின்
    ஆடவர் போல வண்டு மடைந்தன அளியிற் கொல்கி.
    ஊடிய மகளிர் போல வொசிந்தன வூட றீர்க்குஞ்
    சேடரிற் சென்று புல்லிச் சிறுபுறந் தழீஇய தும்பி.

பொருள் : துணர்மலர்க் கொம்பர் தோடு அணி மகளிர் போன்ற - கொத்தாகிய மலர்க்கொம்புகள் மலரணிந்த மகளிரைப் போன்றன; ஆடவர்போல வண்டும் கொம்பின் அடைந்தன - மகளிரிடம் ஆடவர் அடையுமாறுபோல வண்டுகளும் மலர்க் கொம்புகளிடத்தே சேர்ந்தன; ஊடிய மகளிர்போல அளியிற்கு ஒல்கி ஒசிந்தன - ஆடவரிடத்தே ஒசிந்து ஊடிய பெண்களைப் போல அவ் வண்டுகளின் கனத்திற்கு அக் கொம்புகள் ஒரு பக்கத்தே தாழ்ந்தன; ஊடல் தீர்க்கும் சேடரின் தும்பி சென்று புல்லிச் சிறுபுறம் தழீஇய - அவர் ஊடலைத் தீர்த்து எதிர்முகம் ஆக்கும் பெரியோரைப் போலத் தும்பிகள் சென்று அங்ஙனம் உயர்ந்த சிறுபுறத்தைத் தழுவி ஒக்க நிறுத்தின.

-------------------------

1402. பொன்வி ளைத்த புணர்முலை யாள்சொல
இன் அளிக்குரல் கேட்ட அசுணமா
அன்ன ளாய்மகிழ் வெய்துவித் தாளரோ
மின்வி ளைத்தன மேகலை யல்குலாள்.

பரிபாடல்: அளிகள் எழுப்பும் இசை = அளிவழக்கம்; இன் அளிக் குரல் - ஏழு சுரங்களில் முதலான “குரல்” தொடங்கி இயங்கும் நரம்பின் போல, அளிகள் எழுப்பும் இன்னிசை.  அசுணம் நல்லிசை கேட்டால் மகிழும். தீய இசை கேட்பின் வருந்தும்: ‘அசுணங் கொல்பவர் கைபோல் நன்றும்’ (நற். 304).

இன் அளிக் குரல்:
(1) கொண்டிய வண்டு கதுப்பின் குரல் ஊத,  (2) வண்ண வண்டு இமிர் குரல் பண்ணை போன்றனவே; (3) மண் ஆர் மணியின் வணர் குரல் வண்டு ஆர்ப்ப, (4) முரல் குரற் தும்பி அவிழ் மலர் ஊத; (5) பல் வரி வண்டினம் வாய் சூழ் கவினொடும்,  (ஐந்து காட்டுகளும் பரிபாடல்).

------------------------

இரு பொருளிலும் குரல்
---------------------------------------

எரி மணிப் புகை எடுத்தனர்; மலர் மழை  பொழிந்தார்;
அரி மணிக் குரல் யாழ் எடுத்து உளர்ந்து இசை ஏற்றி,
உரி மணிக் குரல் ஒருப்படப் பா இசை கூட்டி,
விரி மணிக் கதிர் விண் திரு விழாவினை விளைத்தார்.

     அவ்வானவர் நெருப்பினின்று எழும் அழகிய நறும் புகை காட்டினர்;  மலர்களை மழையாகப் பொழிந்தனர்; வரிசை அழகுடன் அமைந்த குரல்  முதலாகத் தொடங்கும் நரம்பு கொண்ட யாழை எடுத்துத் தடவி இசையைப்  பிறப்பித்தும், தமக்கே உரிய மணிக் குரலால் ஒன்றாகச் சேர்ந்து  இசைப்பாடல்களைப் பாடியும், விரிந்த அழகிய கதிரொளி கொண்ட  வானுலகிற்குரிய திருவிழாவை இம் மண்ணுலகில் நடத்திக் காட்டினர்.

N. Ganesan

unread,
Jun 5, 2022, 7:40:54 PM6/5/22
to vallamai, housto...@googlegroups.com

(1) செயலால் “தும்பி” என்ற பெயர்:
மரத்தைத் துளைக்கும் செயலால் பெயர் பெறுவது தும்பி:
https://en.wikipedia.org/wiki/Carpenter_bee
Carpenter bees are species in the genus Xylocopa of the subfamily Xylocopinae. The genus includes some 500 bees in 31 subgenera.

(2) வடிவத்தால் “தும்பி” என்ற பெயர்:
துமர்/தமர் (Carpenter's gauntlet) போல உடல் இருப்பதால் ஊசித் தும்பி (damselfly), தும்பித் தட்டான் (dragonfly) பெயர் பெற்றுள்ளது.

(2a) ஊசித் தும்பி (damselfly)
https://ta.wikipedia.org/wiki/ஊசித்தட்டான்
https://www.flickr.com/photos/jeevansworld/4926850902

(2b) தும்பி (தட்டான் பூச்சி)
கனகத்தும்பி, பொன்னந்தட்டான், பக்கித்தட்டான் என்ற பெயர்களையும் சென்னைப் பேரகராதி தருகிறது.
https://www.youtube.com/watch?v=yV1w20HeDxw
https://en.wikipedia.org/wiki/Dragonfly
http://www.walkthroughindia.com/wildlife/top-20-most-common-dragonflies-found-in-india/
https://www.science.org/content/article/video-reveals-secret-dragonfly-s-backward-flight (இது போல, பலவகையான நகர்தலைச் செய்து விளையாடும் விளையாட்டு தும்பிபறத்தல்).

தும்பி!
 - குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா

    அதோ பாராய் தம்பி!
     அதன் பெயரே தும்பி!
தோட்டம் தன்னில் அங்கு மிங்கும்
     சுற்றிச் சுற்றிப் பறக்குது.
வேட்டை யாடும் துப்பாக் கிபோல்
    மெலிந்து நீண்டு இருக்குது.
    அதோ பாராய் தம்பி!
    அதன் பெயரே தும்பி!
கண்ணா டிபோல் சிறகு மின்னிக்
    காற்றில் மெல்ல அசையுது
கண்ணி ரண்டும் முன்னால் நின்றே
    என்னை, உன்னைப் பார்க்குது
    அதோ பாராய் தம்பி!
    அதன் பெயரே தும்பி!
குட்டிப் பறவைக் கப்பல் போலே
     கீழும் மேலும் செல்லுது!
எட்டிப் பிடிக்கப் போனால் என்னை
    ஏய்த்துப் பறந்து போகுது
     அதோ பாராய் தம்பி!
      அதன் பெயரே தும்பி!

தமிழ்ப் பாடல்களில் தும்பி வரும்போது, அது carpenterbee-ஆ, அல்லது dragonfly-ஆ என அறிதல் கடினம். ஏதாவது சிலபாடல்களில் சொல்லக்கூடிய செய்திகள் இருக்கும். உ-ம்: தும்பி குழல் ஊதும் என்கிறபோது, carpenterbee எனலாம்.

"தமிழே, நீயோர் பூக்காடு நானோர் தும்பி" - பாரதிதாசன்
NG

(4) தும்பி ‘carpenter bee'; துமர் ‘’ ; துமராணி/தமராணி, துமரூசி/தமரூசிCarpenter's drill, gimlet'
----------------------------------------------------------------------------------------------------------------------------------------

சங்க காலத்தில், இந்தியச் செம்மொழிகள் இரண்டிலும், சமணர்கள் மட்டும் பயன்படுத்தும் சொல் படிமை. இதனைத்தான் பனம்பாரனார் மகுடமாகத் தொல்காப்பியருக்கு வைத்தார்: படிமையோனே என்பது தொல்காப்பியப் பாயிரம். சமணர்களின் பெரிய தத்துவம், ஓரறிவு, ஈரறிவு, ... ஆறறிவு என உயிரிகளைப் பகுப்பது. இதனையும் தமிழில் தந்தவர் தொல்காப்பியர். புள்ளிக் கோட்பாடு கி.பி. 2-ம் நூற்றாண்டு எனத் தொல்லியல் அறிவிக்கிறது. அதனை வடநாட்டு பிராமி இலிபிக்கு வகுத்து, 18 மெய்களுடன் இலக்கணம் வகுத்தவர் அவர். அவர் கூறும் ஓர் அளியினம்: தும்பி. இதற்கு நான்கறிவு என்கிறார்.
     “நண்டுந் தும்பியும் நான்கு அறிவினவே,
      பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே“ (தொல்.)

தும்பி என்ற பெயர்க்காரணம் பல ஆண்டு முன்னர் சொல்லியுள்ளேன். துமர் > தமர் = துளைத்தல். தும்முதல் - நாசியில் துளைத்து ஏற்படும். தும்முச் செறுப்ப - குறள். அளி இனங்களில் தும்பி ஓர் ஞிமிறு (ஞிமிர்தல் - buzzing, ஞிமிறு = buzzing bee).
தும்பி - காரணப்பெயர். Carpenterbee-கு. https://en.wikipedia.org/wiki/Carpenter_bee
Carpenter bees are species in the genus Xylocopa of the subfamily Xylocopinae. The genus includes some 500 bees in 31 subgenera.[1] The common name "carpenter bee" derives from their nesting behavior; nearly all species burrow into hard plant material such as dead wood or bamboo.

தை என்னும் வினைச்சொல் மிகப் பழையது. பெயர்ச்சொல் ஆகவும் வரும். உ-ம்: தை மாதம். தை தய்ப்பது தையல். தந்தை, முந்தை, நுந்தை, ... என்ற உறவுப்பெயர்கள், சாத்தந்தை, கொற்றந்தை, ஆந்தை, பூந்தை, கண்ணந்தை, ... குலப்பெயர்களிலும் விரவி வரும் பெயர் ‘தை’. தை என்ற வினைச்சொல் தருவது தைக்கன் (தக்கன்/தக்‌ஷன், தச்சன்) என ஐராவதம் விளக்கியுள்ளார் தனது ஹார்வர்ட் நூலில். சென்னை வெளியீட்டுவிழா: http://nganesan.blogspot.com/2022/03/tamil-epigraphy-iravatham-harvard-2003.html
தட்டான் ‘smith' மிகப் பழைய இரும்புப் பொருள்களை உருவாக்கினோர், எஃகு கண்டுபிடித்தோர். ‘தட்டான் புறப்பட்ட வேடிக்கையே’ கவி காளமேகம். அதுபோல், தச்சன் தை எனும் வினையில் வரும் சிந்துவெளித் தொழில் பெயர். த(ய்)க்கன் > தக்‌ஷன் என ஆகிற்று.

துமர் > தமர்:
tamar   n. [M. tamar.] 1. Hole, as in a plank, commonly bored or cut; கருவியால் அமைத்த துளை. தமரிடு கருவியாம் (திருவிளை. மாணிக்க. 61).
2. Gimlet, spring awl, boring instrument; துளையிடுங் கருவி
(Note that Indus people invented minute gemstone drilling tools for making bead in jewelry. This is an old technology valued all over the world including the then Sumeria.)

துமராணி > தமராணி, a spring awl, a gimlet.
துமரூசி > தமரூசி, a drill.

tumar 'hole' is even now existing in languages like Marathi.
See the beautiful Dumar Lena caves in Ellora.

துமர்/தமர், துமரூசி, துமராணி

NG
 
Reply all
Reply to author
Forward
0 new messages