தென்கொங்கின் தொன்மங்கள்

156 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Dec 12, 2021, 11:00:43 AM12/12/21
to Santhavasantham
On Thu, Nov 11, 2021 at 8:28 AM Pothigai 2013 <pothig...@gmail.com> wrote:
அய்யா , வணக்கம்,  தென்கொங்கின் தொன்மங்கள் எனுந் தலைப்பில் உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தின் இரண்டாவது வெளியீடாக வரும் தைப்பொங்கல் நாளில் வெளியிட உள்ளோம்.  அதற்குத் தாங்கள்   ஒரு வாழ்த்துரை வழங்கி உதவ வேண்டுமாய் மிகவும் பணிவன்புடன் வேண்டுகிறோம்.  அய்யா குமாரராஜா அவர்கள் சொல்லியே இது அனுப்பப்படுகிறது.

தென்கொங்கு நாட்டில் தொன்மங்கள் – அணிந்துரை

முனைவர் நா. கணேசன், ஹூஸ்டன், அமெரிக்கா

உடுமலை வரலாறு என்று உடுமலைப்பேட்டை நகர வளர்ச்சியின் அண்மையதான சில நூற்றாண்டு சரித்திரத்தை எழுதிய தமிழன்பர்கள், காடு மேடெல்லாம் தேடி உழைத்து “தென்கொங்குத் தொன்மங்கள்” என்ற சிறந்த நூலைத் தொகுத்துள்ளனர். பொதுவாகவே, சங்க இலக்கியத்தில் சையம் என்று அழைக்கப்படுகிற மேற்குத் தொடர்ச்சி மலைப் பிரதேசத்தின் வரலாறு, இன்னும் ஆராய்ந்து  விரிவாக எழுதப்படவில்லை. அக்குறையைத் தீர்க்கும் திசையில் இந்த நூல் அமைந்துள்ளது அருமை.

சங்க காலத்தில் சேரர்களின் தலைநகராக விளங்கியது வஞ்சி என அப்போது அழைக்கப்பெற்ற இன்றைய கரூர் மாநகரம். இது ஆன்பொருநை ஆற்றின் கரையில் அமைந்துள்ளதாகச் சங்க இலக்கியங்கள் புகழுகின்றன. நூறாண்டுகளுக்கு முன்னே, சேரர் தலைநகர் வஞ்சி மாநகர் எங்கே இருந்தது என்ற வாதப் பிரதிவாதங்கள் எழுந்தன. ஆனால், பனுவலியல் (Philology) மற்றும், நாணயவியல், கல்வெட்டுக்கள் ஐயமின்றிக் கரூர் தான் சங்க காலத்து வஞ்சி மாநகர் என நிறுவிவிட்ட. பாரதியாரும் இளங்கோ அடிகள் வஞ்சி மாநகரில் வாழ்ந்தது இக் கொங்குநாட்டு நகரம் என எழுதியுள்ளார்: "ஐந்து மஹாகாவியங்களிலே சிறந்ததாகிய ‘சிலப்பதிகாரம்’ செய்த இளங்கோ முனிவர் வஞ்சி நகரத்தில் பிறந்தவர். இந்த வஞ்சி நகரம் இப்போது திருச்சினாப்பள்ளிக்கருகே யுள்ள கரூர் என்று பண்டித மு. ராகவய்யங்கார் தீர்மானம் செய்கிறார். இந்த ஆசிரியரின் ஜன்ம தினத்தையும் நிச்சயமாகச் சொல்வதற்கு வழியில்லை.” (காலவரிசை, தொகுதி 8, பக். 457-459), பாரதி நூல்கள் - கட்டுரைகள், பக். 355, 356. (சுதேசமித்திரன், 19-11-1916, பெ. தூரன், பாரதியார் கட்டுரைகள்).

1970-களில், தினமலர் முனைவர் ரா. கிருஷ்ணமூர்த்தி, இரா. நாகசாமி, ஐராவதம் மகாதேவன் போன்றோர் தொல்லியல் ஆய்வுகள் காட்டுவது சங்கச் சேரர் தலைநகர் வஞ்சி அமராவதிக் கரையின் நகரம் என்று நிறுவினர். ஆன்பொருநை நதியின் இன்றைய பெயர் அமராவதி ஆறு. உடுமலை அருகே அமராவதி அணைக்கட்டு அமைந்துள்ளது. திருமூர்த்தி மலையில் அமணலிங்கேசுவரர் என்று தீர்த்தங்கரர் உருவம் புடைப்புச் சிற்பமாக இருக்கிறது. அமணசமுத்திரம் என, இங்கே நீர்நிலை குறிக்கப்பெற்றதைக் கல்வெட்டு பதிவு செய்துள்ளது. அமணர் என்னும் சொல் சமணர் என்ற சொல்லில் இருந்து பிறப்பதாகும்.

கொங்குநாட்டின் தலைமைத் தலம் உடுமலை அருகே, தமிழ்க்கடவுள் ஆகிய பழனி முருகன் திருக்கோவில் ஆகும். வருமானத்தில் எப்பொழுதும் தமிழ்நாட்டிலே முதற்கோவில் பழனி தான். ஆவி என்ற வேளிர் குடியினர் ஆண்ட பகுதி இது: “ஆதி அந்த உலா ஆசு பாடிய
சேரர் கொங்கு வைகாவூர் நன்னாடு” என்றார் அருணகிரிநாதரும். சேரமான் பெருமாளின் நண்பர் சுந்தரர். அவர் குரக்குத்தளி என்று கூறும் சர்க்கார் பெரியபாளையம் ஈசுவரன் கோவிலில் உள்ள சித்திரமேழி நாட்டார் கல்வெட்டையும் சிற்பத்தையும் விரிவாக ஆய்ந்துள்ளமை பாராட்டுக்கு உரியது. இதே போன்ற சித்திரமேழி நாட்டார் சிற்பம், பழனி அருகே கோதைமங்கலத்திலும் கிடைத்துள்ளது. ’கொங்கில் குறும்பில் குரக்குத்தளியாய்’ எனப்பாடினார் சுந்தரர். சோழர் கால ஐம்பொன் படிமங்கள் இப்போது பல இடங்களில் காவேரி டெல்ட்டா பகுதியில் பூமியைத் தோண்டும்போது கிடைக்கின்றன. அவற்றைப் பொறுமையாக, வெளியெடுக்க வேண்டும். ’பொக்குளி’ எந்திரங்களால் அவசரப்படும் போது உடைந்து விடுகின்றன. ஆயிரம் ஆண்டுகள் அழகாக, ஒரே வடிவில் இருந்தவை, கிடைத்ததும் உடைபடும் அவலத்தைத் தமிழ் வரலாற்று ஆர்வலர்கள் தடுக்கவேண்டும். முதன்முறையாக, குரக்குத்தளியில் தான் சுமார் ஒரு நூற்றாண்டு முன்னே சோழர்காலப் படிமங்கள் பல கிடைத்தன.

கொங்கு என்ற சொல் பற்றி ஒன்று சொல்லவேண்டும். குணக்கு என்றால் கிழக்கு. வடகிழக்குப் பருவ மழை குணக்குத் திசையில் வரும் மழை. எனவே, கொண்கமழை. கொங்க மழை எனக் குறிப்பிடுகிறோம். கேரளத்தின் முசிறிப்பட்டனம் போன்றவை உள்ள கடற்கரைல் இருந்து வரும் தென்மேற்குப் பருவமழையைக் கோடை மழை என்கிறோம். கொண்க/கொங்கமழை வேறு. கொங்குநாட்டு என்ற பெயர் அமைந்த காரணம் வேறு. கொங்கு என்றால் வளைவு. வளை என்று அழைக்கப்படும் சங்கு, கொங்கு என்ற சொல்லில் தோன்றுவதே. வளவி வளையில்/சங்கில் அறுத்துச் செய்யப்படும் வளையல். கழுத்து நீண்டும், வளைந்தும் உள்ளது கொக்கு/கொங்கம். கொங்கம் வடமொழியிலும், தெலுங்கிலும் கங்கம் என அழைக்கப்படுதல் காண்க. கங்க ராஜ்யம் வட கொங்கு நாடாக விளங்கியது. கொங்கூர் என்ற தாராபுரத்துக்கு அருகே, கங்க ராஜ்ய ராசாக்கள் பட்டம் சூடினர். கொங்கூர் வடமொழியில் கந்தபுரம்/ஸ்கந்தபுரம் ஆனது.

நல்ல முயற்சியாக, அறியப்படாத தென்கொங்குச் சிற்பங்கள், கல்வெட்டுகள் பற்றிய இந்த நல்ல நூலைத் தமிழ்நாட்டார் வாங்கி ஆதரித்து இதுபோன்ற புதிய உழைப்புகளை ஊக்குவிக்க வேண்டுகிறேன்.

வாழ்த்துடன்,

நா. கணேசன்
ThenKongu_aNinthurai.docx

N. Ganesan

unread,
Dec 22, 2021, 1:16:50 PM12/22/21
to housto...@googlegroups.com, vallamai
On Thu, Dec 16, 2021 at 10:26 AM Pas Pasupathy <pas.pa...@gmail.com> wrote:
ஆம். பலர் எழுத்தில்!

On Thu, 16 Dec 2021 at 11:24, Siva Siva <naya...@gmail.com> wrote:
புராணம் என்ற சொல் நவீன காலத்தில் தீண்டத் தகாத சொல் ஆகிவிட்டதா?

On Thu, Dec 16, 2021 at 11:22 AM Pas Pasupathy <pas.pa...@gmail.com> wrote:
அண்மையில் வந்த சொல்.  புராணம், பழங்கதை, Myth.

ஆமாம். இதுபற்றி, ஜெயமோகன்,  https://www.jeyamohan.in/8691/

  • தொன்மம்

தொன்மம் பற்றி முந்திய பாடங்களில் அறிந்திருக்கிறோம். புராணம், பழங்கதைகள் இவற்றில் வரும் பாத்திரங்களோ, நிகழ்வுகளோ கவிதையில் ஓரிரு வார்த்தைகளில் சுட்டிக் காட்டப்படும். இவ்வாறு சுட்டினால், பக்கம் பக்கமாக விவரிக்க வேண்டிய தேவையே இல்லாமல் சொல்ல வந்த கருத்தை அது உணர்வோடு விளக்கிவிடும். இதனால் உலகெங்கும் சிறந்த கவிஞர்கள் இந்தக் கலைத்திறனை விரும்பிக் கையாளுகின்றனர். இது தொன்மம் எனப்படுகிறது.

அப்துல் ரகுமானின் கவிதைகளில் தொன்மம் மிகுதியாக இடம் பெறுகிறது.

‘ஆறாவது விரல்’, ‘சிலுவை’ - இவை பைபிள் தொன்மங்கள். முன்னரே இக்கவிதை உங்களுக்கு விளக்கப்பட்டிருக்கிறது.

இராமாயணத்தின் பல பாத்திரங்கள், கோவலன், கண்ணகி, நெற்றிக்கண், வாமனன், பாற்கடல், விசுவரூபம், துச்சாதனன், கவுரவர் முதலிய பிற தொன்மங்கள் இவரது கவிதைகளில் அதிகமாகக் காணப்படுகின்றன. சுருங்கச் சொல்லி விளங்க வைப்பதற்கு இவருக்கு மிகவும் பயன்பட்டுள்ளன.

இந்திய நாட்டுத் தேர்தல்கள், மக்களாட்சி பற்றிய கவிதை ஐந்தாண்டுக்கு ஒருமுறை. இதில் நளன் கதைத் தொன்மம் இடம் பெறுகிறது.

சுயம்வரம் என்பதை அறிவீர்களா? அரச குமாரிகள் தமக்குப் பிடித்த மணாளரைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் ஏற்பாடு அது. (சுயம் = தானாக; வரம் = வரிப்பது, தேர்ந்தெடுப்பது). அப்துல் ரகுமான் இன்றைய இந்தியத் தேர்தல் - மக்களாட்சி முறையை ஒரு புது வகைச் சுயம்வரமாகப் பார்க்கிறார். இந்தச் சுயம்வரத்தில் ஏமாற்றப் படுகிற மங்கையாக இந்திய மக்களைக் காட்சிப்படுத்துகிறார் கவிஞர். இந்த நாட்டில் பேராசை பிடித்த, சுயநலக்காரப் பதவி வெறியர்களே அரசியல் அரங்கில் மேல்நிலை பெறுகிறார்கள். அவர்கள் எல்லாருக்கும் அதிகாரத்தைக் கைப்பற்றுவது ஒன்றுதான் நோக்கம். எல்லாரும் நல்லவர் போல வேடம் போடுகிறார்கள்.

நளன் கதையில், நளனை மணக்க விரும்பினாள் தமயந்தி. சுயம்வரத்தில் அவனுக்கு மாலையிட்டு மணந்து கொள்ள மண்டபத்துள் நுழைந்தாள். இவள் நளனை விரும்புவதை அறிந்து கொண்ட தேவர்கள் நளனைப் போலவே தங்கள் உருவை மாற்றிக் கொண்டு (போலி வேடமிட்டு) இருக்கைகளில் அமர்ந்து கொண்டனர். தமயந்தி தன் அறிவுக் கூர்மையால் உண்மையான நளனைக் கண்டறிந்து மாலையிட்டு மணந்து கொண்டாள். இவ்வாறு சுயம்வர நிகழ்ச்சி புராணத்தில் சொல்லப்படுகிறது.

இன்றைய சுயம்வரத்தில் உண்மை நளன் எவருமே இல்லை. எல்லாருமே போலி நளன்கள். கையில் வாக்குச்சீட்டு என்ற மாலையோடு தவித்து நிற்கும் குருட்டுத் தமயந்திதான் வாக்காளர்கள். அதாவது தெளிந்த அறிவு இல்லாத ஏமாளிகள். எப்படி நல்ல ஆட்சி அமையும்? ஐந்தாண்டுக்கு ஒருமுறை நடக்கும் தேர்தல் சுயம்வரக் கவிதையை இப்போது படியுங்கள்:

புறத்திணைச் சுயம்வர மண்டபத்தில்
போலி நளன்களின் கூட்டம்
கையில் மாலையுடன்
குருட்டுத் தமயந்தி (பால்வீதி, ப. 70)

பக்கம் பக்கமாய் விவரிக்க வேண்டிய செய்தியை இரக்கம், எள்ளல் உணர்வுகளுடன் நான்கு வரிகளில் சொல்லி விடுகிறார்.

நண்பர்களே, கவிதைகளை உருவாக்கும் கலையில் தேர்ந்த கலைஞரான அப்துல் ரகுமானின் படைப்பு ஆக்கக் கலைத்திறன்களைச் சில சான்றுகள் வழி அறிந்து கொண்டீர்கள்.

On Thu, 16 Dec 2021 at 11:17, Siva Siva <naya...@gmail.com> wrote:
தொன்மம் என்றால் என்ன பொருள்?
தமிழ் அகராதியில் இல்லையே. (https://dsal.uchicago.edu/cgi-bin/app/tamil-lex_query.py?page=2104).
தொகுத்தவர்கள் பார்வையில் தப்பிய சொல்லா?

--

பசுபதி

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCPQs11adubOrLBNzLV2uAG_DTZeDnnNbm3gMoZiHHqw2g%40mail.gmail.com.

--

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAH9BvALLbb3Bi5TWguZ0qzN2Jsd2rcY9j8WWC%2BdvK9pOk%2BzW5Q%40mail.gmail.com.

kanmani tamil

unread,
Dec 23, 2021, 12:07:52 AM12/23/21
to vallamai
"அமுதசுரபியைத் தான் நீ விட்டுச் சென்றாய் 
இப்போது 
எங்கள் கையில் இருப்பதோ பிச்சைப்பாத்திரம்" - மேத்தா. 

மணிமேகலைக் காப்பியச் செய்தியை உள்ளடக்கிய தொன்மப் படிமம். 

பாடல்தலைப்பு- தேசப்பிதாவுக்கு ஒரு தெருப்பாடகனின் அஞ்சலி 

இப்போது பொருள்... சொல்லாமலே மனதில் படியும்.

கிட்டத்தட்ட கவிதை வாசிக்கும் பழக்கமே என்னிடம் அற்றுப் போய் விட்டது. இந்த மேற்கோள் 1974ல் முதுகலைப் பாடத்தில் படித்தது. 

சக 

You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUe6QvgogUWnVMCn371NB15wjNfH6pOOcTRscyNofpF33Q%40mail.gmail.com.

N. Ganesan

unread,
Dec 24, 2021, 6:31:07 AM12/24/21
to Santhavasantham
On Thu, Dec 16, 2021 at 10:22 AM Pas Pasupathy <pas.pa...@gmail.com> wrote:
அண்மையில் வந்த சொல்.  புராணம், பழங்கதை, Myth.

ஆம். இவை மட்டுமன்று. தொல்லியல் விஞ்ஞானம், கலைவரலாறு, பனுவலியல், நாணயவியல், ஒப்பீட்டு மொழியியல் .... போன்றன வெளிச்சம் இட்டுக் காட்டும் தொன்மைகளையும் தொன்மம், தொன்மவியல் என்பது வழக்கம். என்னிடம் முன்னுரை கேட்டுப் பெற்ற அறிஞர்கள் கொங்குநாட்டுத் தொன்ம இயலாளர். புராணம் என்பது தொன்மத்தின் ஓர் ’ஸப்ஸெட்’ எனலாம். உதாரணமாக, துடிசைகிழார், மொழியியல் வாயிலாக, மரைக்காடு என்பது மறைக்காடு என்றாகி, வேதாரணிய புராணங்கள் தேவாரம், பெரியபுராணம் எனச் சைவர்கள் கதை உருவானது என அறிவியல் ஆய்வு செய்து எழுதினார். இதனை, மரைக்காடு மறைக்காடு என மாறிய தொன்ம வரலாறு என்பர். புராணங்களை வாசிப்பது, அறிவியல் வழி விளக்குவதும் தொன்ம இயல். இதனுள் பல நவீன சர்வகலாசாலை ஆய்வுகள் அடங்கும். மேலும், தமிழர்கள் மிக முயன்று டாக்டர், எஞ்சினீர், எம்பிஏ, ஃபைனான்ஸ், ... படிக்க முயலும் ஹார்வர்ட், சிகாகோ, பிலடெல்பியா, ஸ்டான்போர்ட், கொலோன், ஹைடல்பர்க், ஆக்ஸ்போர்ட், கேம்பிரிட்ஜ், சார்போன், ... போன்றவற்றில் நிகழும் வேதங்கள் ஆராய்ச்சியைத் தொன்ம இயலின் ஒரு பகுதி.

பாரதியின் புகழ்மிக்க பாடல்களில் - குரங்கு கடலைத் தாவிய புராணத்தை, இன்றைய கல்லூரி பேராசிரியர்கள் தொன்மத்தை ஆராயும் நோக்கில் - விரிவாகப் பாடியுள்ளார். லோகோபகாரி பத்திரிகையில் வெளிவந்த பாரதியார் பாடல். செகதீச சந்த்ர வசு போல, ஆன்மீகத்தையும், மேற்கத்தைய விஞ்ஞானத்தையும் இணைத்து சுவாமி விவேகானந்தர் என்னும் தேசிய துறவி காட்டிய வழியில், செல்ல பாரதிக்கு என்றுமே ஆர்வம் இருந்துள்ளது. வங்கத்தில் கல்லூரிக் கல்வியால் ஏற்பட்ட மறுமலர்ச்சி, இந்தியா முழுமையும் பரவினமைக்கு பாரதி நல்ல சாட்சி. சென்னையில் வாழ்ந்த வள்ளலார், அன்றைய செய்திகளை ஆர்வமுடன் படித்து சமய, சமூக மறுமலர்ச்சிக்குத் தமிழரிடையே வித்திட்டார். நிரஞ்சன் பாரதியார், வள்ளலார் கட்டுரைகளை ஒப்பிட்டால், பாரதியின் கருத்துக்களில் பல வள்ளலார் எளிய தமிழில் பொதுஜனங்களுக்குப் புரியும்வகையில் தொடங்கிவைத்தது என அறியலாம். இவ்வகையில், வள்ளலார் ஆய்வர் தவத்திரு. வடலூர் ஊரன் அடிகள் எழுதிய நூல்கள் துணைசெய்யும். பாரதியின் லோகோபகாரிப் பாடல், ஒரு நல்ல தொன்ம ஆய்வு ஆகும். பழைய தமிழ் இலக்கணத்தில் இறந்துபட்ட செய்திகளை விட்டுவிட்டு, சமுதாயத்தின் இன்றைய பயன்பாடுகளைப் பாடுதல்வேண்டும் என்ற குறிப்புகள் உண்டு. அதை நடைமுறைப்படுத்தியதில் வள்ளலார், பாரதியார் இருவருக்கும் பெரும்பங்கு உண்டு. பாரத - பாரதத்தின் கீஸ்டோன் ஸ்டேட் ஆக விளங்கும் தமிழகத்தின் தொன்மொழியை, தொன்மங்களை நவீன யுகத்திற்கு மேலை அறிவியலைச் சொல்லும் பத்திரிகைகளைப் படித்தும், மொழிபெயர்த்தும் - இவர்களும், இவர்களைப் போன்றோரும் தமிழர் சமூகத்தை நவீனப் பாதையில் செலுத்தும் பைந்தமிழ்ப் பாகர்கள்.

நா. கணேசன்
On Wednesday, December 22, 2021 at 11:07:52 PM UTC-6 kanmani...@gmail.com wrote:
"அமுதசுரபியைத் தான் நீ விட்டுச் சென்றாய் 
இப்போது 
எங்கள் கையில் இருப்பதோ பிச்சைப்பாத்திரம்" - மேத்தா. 

மணிமேகலைக் காப்பியச் செய்தியை உள்ளடக்கிய தொன்மப் படிமம். 

பாடல்தலைப்பு- தேசப்பிதாவுக்கு ஒரு தெருப்பாடகனின் அஞ்சலி 

இப்போது பொருள்... சொல்லாமலே மனதில் படியும்.

கிட்டத்தட்ட கவிதை வாசிக்கும் பழக்கமே என்னிடம் அற்றுப் போய் விட்டது. இந்த மேற்கோள் 1974ல் முதுகலைப் பாடத்தில் படித்தது. 

சக 

On Wednesday, December 22, 2021 at 11:07:52 PM UTC-6 kanmani...@gmail.com wrote:
"அமுதசுரபியைத் தான் நீ விட்டுச் சென்றாய் 
இப்போது 
எங்கள் கையில் இருப்பதோ பிச்சைப்பாத்திரம்" - மேத்தா. 

மணிமேகலைக் காப்பியச் செய்தியை உள்ளடக்கிய தொன்மப் படிமம். 

பாடல்தலைப்பு- தேசப்பிதாவுக்கு ஒரு தெருப்பாடகனின் அஞ்சலி 

இப்போது பொருள்... சொல்லாமலே மனதில் படியும்.

கிட்டத்தட்ட கவிதை வாசிக்கும் பழக்கமே என்னிடம் அற்றுப் போய் விட்டது. இந்த மேற்கோள் 1974ல் முதுகலைப் பாடத்தில் படித்தது. 

சக 

On Thu, 16 Dec 2021 at 11:17, Siva Siva <naya...@gmail.com> wrote:
தொன்மம் என்றால் என்ன பொருள்?
தமிழ் அகராதியில் இல்லையே. (https://dsal.uchicago.edu/cgi-bin/app/tamil-lex_query.py?page=2104).
தொகுத்தவர்கள் பார்வையில் தப்பிய சொல்லா?

--

பசுபதி

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

kanmani tamil

unread,
Dec 24, 2021, 7:09:54 AM12/24/21
to vallamai
///தொல்லியல் விஞ்ஞானம், கலைவரலாறு, பனுவலியல், நாணயவியல், ஒப்பீட்டு மொழியியல் .... போன்றன வெளிச்சம் இட்டுக் காட்டும் தொன்மைகளையும் தொன்மம், தொன்மவியல் என்பது வழக்கம்../// முனைவர் கணேசன் எழுதியது..

நாங்கள் (கல்லூரியில் தமிழ்) யாரும் அப்படிப் படிக்கவில்லை. இது ஏதோ தவறான புரிதல்...

நான் சொன்னால் உங்களுக்குக் கோபம் வரும். 

தொன்மம் = கவிதைகளிலும் கதைகளிலும் இலக்கிய நயம் கூட்ட இடம்பெறும் ஒரு அணி/ உத்தி. நானும் கவிஞர் பசுபதியும் சொல்லி இருக்கும் பாடல் பகுதிகளே சான்றுகள். 

தொன்மை = காலத்தால் முற்பட்ட...

தொன்மவியல் = ஒரு ஆய்வு நெறிமுறை- புராண இதிகாசக் கற்பனைக் கதைக் கூறுகளை அடிப்படையாகக் கொண்டு வரலாறு/ உண்மைகளை ஆராய்ச்சி செய்து கண்டறிவது.
(எ-டு) மு.இரா. இயற்கையிறந்த நிகழ்ச்சியை அடியொட்டிய கதையை அடிப்படையாகக் கொண்டு அதிலிருக்கும் கற்பனைக் கூறை நீக்கிய பின் ஆழப் புதைந்திருக்கும் உண்மையாக வேளிர் வந்தேறிகள் என்று முடிவு செய்யும் ஆய்வு. 

நீங்களாகப் புது விளக்கம் கொடுக்கிறீர்கள்.
எனக்கு உடன்பாடு இல்லை. 

சக 

You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUdhYwUag6osJPCstwmLHXM1GLxgphJBdv%2BGJo1zbT29sw%40mail.gmail.com.

N. Ganesan

unread,
Dec 24, 2021, 7:35:53 AM12/24/21
to vallamai
On Fri, Dec 24, 2021 at 6:09 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
///தொல்லியல் விஞ்ஞானம், கலைவரலாறு, பனுவலியல், நாணயவியல், ஒப்பீட்டு மொழியியல் .... போன்றன வெளிச்சம் இட்டுக் காட்டும் தொன்மைகளையும் தொன்மம், தொன்மவியல் என்பது வழக்கம்../// முனைவர் கணேசன் எழுதியது..

நாங்கள் (கல்லூரியில் தமிழ்) யாரும் அப்படிப் படிக்கவில்லை. இது ஏதோ தவறான புரிதல்...

நான் சொன்னால் உங்களுக்குக் கோபம் வரும். 

தொன்மம் = கவிதைகளிலும் கதைகளிலும் இலக்கிய நயம் கூட்ட இடம்பெறும் ஒரு அணி/ உத்தி. நானும் கவிஞர் பசுபதியும் சொல்லி இருக்கும் பாடல் பகுதிகளே சான்றுகள். 

தொன்மை = காலத்தால் முற்பட்ட...

தொன்மவியல் = ஒரு ஆய்வு நெறிமுறை- புராண இதிகாசக் கற்பனைக் கதைக் கூறுகளை அடிப்படையாகக் கொண்டு வரலாறு/ உண்மைகளை ஆராய்ச்சி செய்து கண்டறிவது.
(எ-டு) மு.இரா. இயற்கையிறந்த நிகழ்ச்சியை அடியொட்டிய கதையை அடிப்படையாகக் கொண்டு அதிலிருக்கும் கற்பனைக் கூறை நீக்கிய பின் ஆழப் புதைந்திருக்கும் உண்மையாக வேளிர் வந்தேறிகள் என்று முடிவு செய்யும் ஆய்வு. 

ஆமாம். தொன்மம் என்பது புதிதாய்த் தமிழில் தோன்றியுள்ள சொல். “தென் கொங்கின் தொன்மங்கள்” என்ற நூல் தலைப்பைப் பாருங்கள். இது தொல்லியல், புராண-இதிகாசங்கள் எல்லாவற்றையும் உள்ளடக்கியது தான். “தென்கொங்கின் தொன்மங்கள்” நூலில், கல்வெட்டு, சிற்பங்கள், மெகாலித்திக் ஸைட்ஸ், ... தலபுராணங்கள், ஊர், தலக் கடவுளர், அவர்களின்
புராணம் என எல்லாம் அடங்கியுள்ளது. எனவே, இங்கே தொன்மவியல் வெறும் புராண இதிகாசக் கற்பனைக் கதைக்கூறுகளை ஆராய்வது மட்டுமல்ல. தொன்மங்கள் = Archaeologcial remains and their meaning என்ற பொருளில் நூற்றலைப்பு அமைத்துள்ளனர்.

தொன்மம் போல் அல்லாமல்,  படிமம் ஒரு பழைய சொல். ஆனால், 20-ஆம் நூற்றாண்டில் புதுப்பொருள் ஏற்கிறது. நீங்கள் குறிப்பிடும் மு. மேத்தா கவிதையில் “தொன்மப் படிமம்” என்பது Symbolism/Semiotics of the Manimekalai mythos எனக்கொள்கிறேன்.

N. Ganesan

unread,
Dec 24, 2021, 7:39:57 AM12/24/21
to vallamai, housto...@googlegroups.com
On Wed, Dec 22, 2021 at 11:07 PM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
"அமுதசுரபியைத் தான் நீ விட்டுச் சென்றாய் 
இப்போது 
எங்கள் கையில் இருப்பதோ பிச்சைப்பாத்திரம்" - மேத்தா. 

மணிமேகலைக் காப்பியச் செய்தியை உள்ளடக்கிய தொன்மப் படிமம். 

பாடல்தலைப்பு- தேசப்பிதாவுக்கு ஒரு தெருப்பாடகனின் அஞ்சலி 

இப்போது பொருள்... சொல்லாமலே மனதில் படியும்.

கிட்டத்தட்ட கவிதை வாசிக்கும் பழக்கமே என்னிடம் அற்றுப் போய் விட்டது. இந்த மேற்கோள் 1974ல் முதுகலைப் பாடத்தில் படித்தது. 

சக 

இந்தியாவின் Mythos பற்றி ஆராய்ந்து சொல்லும் தொன்ம இயல் ஆய்வாளர் பாரதியார்:

பாரதி நம் தொன்ம ஆய்வாளராக விளங்கும் பாடல்,
http://www.lakshmansruthi.com/tamilbooks/bharathiar/bharathi-IV-III10.asp

உண்மையின் பேர்தெய்வம் என்போம்-அன்றி
    ஓதிடும் தெய்வங்கள் பொய்யெனக் கண்டோம்
உண்மைகள் வேதங்கள் என்போம்-பிறிது
     உள்ள மறைகள் கதையெனக் கண்டோம்.

கடலினைத் தாவும் குரங்கும்-வெங்
    கனலிற் பிறந்ததோர் செவ்விதழ்ப் பெண்ணும்,
வடமலை தாழ்ந்தத னாலே-தெற்கில்
   வந்து சமன்செயும் குட்டை முனியும்,

நதியி னுள்ளேமுழு கிப்போய்-அந்த
    நாகர் உலகிலோர் பாம்பின் மகளை
விதியுற வேமணம் செய்த-திறல்
    வீமனும் கற்பனை என்பது கண்டோம்.

ஒன்றுமற் றொன்றைப் பழிக்கும்-ஒன்றில்
    உண்மையென் றோதிமற் றொன்றுபொய் யென்னும்
நன்று புராணங்கள் செய்தார்-அதில்
    நல்ல கவிதை பலபல தந்தார்.

கவிதை மிகநல்ல தேனும்-அக்
     கதைகள் பொய்யென்று தெளிவுறக் கண்டோம்;
புவிதனில் வாழ்நெறி காட்டி-நன்மை
    போதிக்கும் கட்டுக் கதைகள் அவைதாம்.

N. Ganesan

unread,
Dec 24, 2021, 8:07:25 AM12/24/21
to Santhavasantham
On Thu, Dec 16, 2021 at 10:22 AM Pas Pasupathy <pas.pa...@gmail.com> wrote:
அண்மையில் வந்த சொல்.  புராணம், பழங்கதை, Myth.

தொன்மம் - Antiquity, Myth, Mythology, Puranam, ...
தொன்மவியல் - Antiquity Research based on physical remains such as sculptures, coinage, epigraphs, bio-remains (DNA), their dating by Scientific methods. Interpretation informed by texts, linguistics etc., e.g., on the Symbolism/Semiology embedded in the Antiquities.
An excellent poem using Thonmaviyal research approach by Bharati is "uyir peRRa Tamizar paaTTu", first published by his friend in Lokopakaari.

படிமம் - புதுப்பொருள் 20-ம் நூற்றாண்டில் ஏற்கிறது.

ஆம். இவை மட்டுமன்று. தொல்லியல் விஞ்ஞானம், கலைவரலாறு, பனுவலியல், நாணயவியல், ஒப்பீட்டு மொழியியல் .... போன்றன வெளிச்சம் இட்டுக் காட்டும் தொன்மைகளையும் தொன்மம், தொன்மவியல் என்பது வழக்கம். என்னிடம் முன்னுரை கேட்டுப் பெற்ற அறிஞர்கள் கொங்குநாட்டுத் தொன்ம இயலாளர். புராணம் என்பது தொன்மத்தின் ஓர் ’ஸப்ஸெட்’ எனலாம். உதாரணமாக, துடிசைகிழார், மொழியியல் வாயிலாக, மரைக்காடு என்பது மறைக்காடு என்றாகி, வேதாரணிய புராணங்கள் தேவாரம், பெரியபுராணம் எனச் சைவர்கள் கதை உருவானது என அறிவியல் ஆய்வு செய்து எழுதினார். இதனை, மரைக்காடு மறைக்காடு என மாறிய தொன்ம வரலாறு என்பர். புராணங்களை வாசிப்பது, அறிவியல் வழி விளக்குவதும் தொன்ம இயல். இதனுள் பல நவீன சர்வகலாசாலை ஆய்வுகள் அடங்கும். மேலும், தமிழர்கள் மிக முயன்று டாக்டர், எஞ்சினீர், எம்பிஏ, ஃபைனான்ஸ், ... படிக்க முயலும் ஹார்வர்ட், சிகாகோ, பிலடெல்பியா, ஸ்டான்போர்ட், கொலோன், ஹைடல்பர்க், ஆக்ஸ்போர்ட், கேம்பிரிட்ஜ், சார்போன், ... போன்றவற்றில் நிகழும் வேதங்கள் ஆராய்ச்சியைத் தொன்ம இயலின் ஒரு பகுதி.

பாரதியின் புகழ்மிக்க பாடல்களில் - குரங்கு கடலைத் தாவிய புராணத்தை, இன்றைய கல்லூரி பேராசிரியர்கள் தொன்மத்தை ஆராயும் நோக்கில் - விரிவாகப் பாடியுள்ளார். லோகோபகாரி பத்திரிகையில் வெளிவந்த பாரதியார் பாடல். செகதீச சந்த்ர வசு போல, ஆன்மீகத்தையும், மேற்கத்தைய விஞ்ஞானத்தையும் இணைத்து சுவாமி விவேகானந்தர் என்னும் தேசிய துறவி காட்டிய வழியில், செல்ல பாரதிக்கு என்றுமே ஆர்வம் இருந்துள்ளது. வங்கத்தில் கல்லூரிக் கல்வியால் ஏற்பட்ட மறுமலர்ச்சி, இந்தியா முழுமையும் பரவினமைக்கு பாரதி நல்ல சாட்சி. சென்னையில் வாழ்ந்த வள்ளலார், அன்றைய செய்திகளை ஆர்வமுடன் படித்து சமய, சமூக மறுமலர்ச்சிக்குத் தமிழரிடையே வித்திட்டார். நிரஞ்சன் பாரதியார், வள்ளலார் கட்டுரைகளை ஒப்பிட்டால், பாரதியின் கருத்துக்களில் பல வள்ளலார் எளிய தமிழில் பொதுஜனங்களுக்குப் புரியும்வகையில் தொடங்கிவைத்தது என அறியலாம். இவ்வகையில், வள்ளலார் ஆய்வர் தவத்திரு. வடலூர் ஊரன் அடிகள் எழுதிய நூல்கள் துணைசெய்யும். பாரதியின் லோகோபகாரிப் பாடல், ஒரு நல்ல தொன்ம ஆய்வு ஆகும். பழைய தமிழ் இலக்கணத்தில் இறந்துபட்ட செய்திகளை விட்டுவிட்டு, சமுதாயத்தின் இன்றைய பயன்பாடுகளைப் பாடுதல்வேண்டும் என்ற குறிப்புகள் உண்டு. அதை நடைமுறைப்படுத்தியதில் வள்ளலார், பாரதியார் இருவருக்கும் பெரும்பங்கு உண்டு. பாரத - பாரதத்தின் கீஸ்டோன் ஸ்டேட் ஆக விளங்கும் தமிழகத்தின் தொன்மொழியை, தொன்மங்களை நவீன யுகத்திற்கு மேலை அறிவியலைச் சொல்லும் பத்திரிகைகளைப் படித்தும், மொழிபெயர்த்தும் - இவர்களும், இவர்களைப் போன்றோரும் தமிழர் சமூகத்தை நவீனப் பாதையில் செலுத்தும் பைந்தமிழ்ப் பாகர்கள்.

நா. கணேசன்
On Wednesday, December 22, 2021 at 11:07:52 PM UTC-6 kanmani...@gmail.com wrote:
"அமுதசுரபியைத் தான் நீ விட்டுச் சென்றாய் 
இப்போது 
எங்கள் கையில் இருப்பதோ பிச்சைப்பாத்திரம்" - மேத்தா. 

மணிமேகலைக் காப்பியச் செய்தியை உள்ளடக்கிய தொன்மப் படிமம். 

பாடல்தலைப்பு- தேசப்பிதாவுக்கு ஒரு தெருப்பாடகனின் அஞ்சலி 

இப்போது பொருள்... சொல்லாமலே மனதில் படியும்.

கிட்டத்தட்ட கவிதை வாசிக்கும் பழக்கமே என்னிடம் அற்றுப் போய் விட்டது. இந்த மேற்கோள் 1974ல் முதுகலைப் பாடத்தில் படித்தது. 

சக 

On Thu, 16 Dec 2021 at 11:17, Siva Siva <naya...@gmail.com> wrote:
தொன்மம் என்றால் என்ன பொருள்?
தமிழ் அகராதியில் இல்லையே. (https://dsal.uchicago.edu/cgi-bin/app/tamil-lex_query.py?page=2104).
தொகுத்தவர்கள் பார்வையில் தப்பிய சொல்லா?

--

kanmani tamil

unread,
Dec 24, 2021, 8:38:25 AM12/24/21
to vallamai
படிமம், உருக்காட்சி,  தொன்மம், குறியீடு இவையெல்லாம் மேலைநாட்டுத் திறனாய்வுக் கொள்கைகளை அடியொட்டித் தமிழில் தோன்றிய புதுக் கலைச்சொற்கள். 

தொன்மப்படிமம் என்பது படிமத்தின் ஒரு வகை. அதாவது அந்தப் படிமத்தில் தொன்மக் கூறு இருக்கும் அவ்வளவு தான். படிமங்களில் பலப்பல வகைகள் உள்ளன. 

நீங்கள் வாழ்த்துரை எழுதிய புத்தகத்தில் நான் விளக்கிய தொன்மமும் இல்லை; அது தொன்மவியல் ஆய்வும் இல்லை. அது தொல் தடயங்களையும் புராணக் கதைக் கூறுகளையும் தொகுத்துத் தரும் நூலாக அமைகிறது என்று தான் புரிந்து கொண்டு இருக்கிறேன். நாங்கள் அவற்றைத் தொன்மங்கள் என்று சொல்ல மாட்டோம். 

உங்கள் ஊரை ஒட்டிய பல்கலைக் கழகத்தில் அப்படிச் சொல்லிக் கொடுக்கிறார்களா? அல்லது அங்கே படித்தவர்கள் அப்படிப் புரிந்து கொண்டு இருக்கிறார்களா?

எனக்கு முன்பொரு முறை 'படம்செய் பந்தல்' = ஷாமியானா என்று உங்கள் ஊர் ஆய்வாளர் ஒருவர் எழுதி இருந்தது நினைவுக்கு வருகிறது. தமிழ்க் கல்வி தமிழகத்திற்கு உள்ளேயே வட்டாரத்திற்கு வட்டாரம் மாறுபடுகிறதோ என நினைக்கத் தோன்றுகிறது!

சக 

You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUdrbT1yshQN38qgrfc-uczb7JXcMRLRBza6ZfHWsLGkoQ%40mail.gmail.com.

kanmani tamil

unread,
Dec 24, 2021, 8:46:02 AM12/24/21
to vallamai
///இந்தியாவின் Mythos பற்றி ஆராய்ந்து சொல்லும் தொன்ம இயல் ஆய்வாளர் பாரதியார்:

பாரதி நம் தொன்ம ஆய்வாளராக விளங்கும் பாடல்,

பாரதியார் கவிதை எழுதி இருக்கிறார். 
அது ஆய்வு இல்லை. 

ஆய்வு எனில் ஆய்வு நோக்கம், ஆய்வின் தேவை, ஆய்வு எல்லை (வரையறை), ஆய்வு நெறிமுறை, ஆய்வு முடிவு, ஆய்வு முன்னோடிகள் எனச் சில அடிப்படைகள் தேவை. இந்தக் காலத்தில் அவை இல்லையென்றால் அது பொதுக்கட்டுரை. 

தமிழாய்வு தரமாக இருக்க இவை அனைத்தும் வேண்டும். உலக அரங்கில் தமிழாய்வின் தரத்தை எக்காரணம் கொண்டும் குறைக்கக் கூடாது. 

சக 

N. Ganesan

unread,
Dec 24, 2021, 8:54:52 AM12/24/21
to vallamai
On Fri, Dec 24, 2021 at 7:46 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
///இந்தியாவின் Mythos பற்றி ஆராய்ந்து சொல்லும் தொன்ம இயல் ஆய்வாளர் பாரதியார்:

பாரதி நம் தொன்ம ஆய்வாளராக விளங்கும் பாடல்,
http://www.lakshmansruthi.com/tamilbooks/bharathiar/bharathi-IV-III10.asp///

தமிழாய்வுகளின் தரம் உலகத்தார் வியந்துவருகின்றனர், வளர்ந்தும் வருவதைத் தமிழ்நாட்டில் காண்கிறார்கள்.

N. Ganesan

unread,
Dec 24, 2021, 9:01:34 AM12/24/21
to vallamai
On Fri, Dec 24, 2021 at 7:54 AM N. Ganesan <naa.g...@gmail.com> wrote:

On Fri, Dec 24, 2021 at 7:46 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
///இந்தியாவின் Mythos பற்றி ஆராய்ந்து சொல்லும் தொன்ம இயல் ஆய்வாளர் பாரதியார்:

பாரதி நம் தொன்ம ஆய்வாளராக விளங்கும் பாடல்,
http://www.lakshmansruthi.com/tamilbooks/bharathiar/bharathi-IV-III10.asp///

பாரதியார் கவிதை எழுதி இருக்கிறார். 
அது ஆய்வு இல்லை. 

பாரதி இந்திய தொன்மங்களை ஆராய்ந்து, நவீன அறிவியற் சிந்தனையைப் பொருத்திப் பாடல் இயற்றியுள்ளார்.
அந்நிலையில் பார்த்தால், தொன்மங்களை எவ்வாறு ஆய்வது என அறிந்தவர் தேசமகாகவி.

kanmani tamil

unread,
Dec 24, 2021, 9:13:00 AM12/24/21
to vallamai
பாரதியார் கவிதையில் ஆய்வுக்கோணம் இருக்கிறது என்று போற்றுவோம். 
சக 

N. Ganesan

unread,
Dec 24, 2021, 9:24:23 AM12/24/21
to vallamai
On Fri, Dec 24, 2021 at 8:13 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
பாரதியார் கவிதையில் ஆய்வுக்கோணம் இருக்கிறது என்று போற்றுவோம். 

ஆம், தொன்ம இயல் ஆய்வின் கோணத்தை மக்களுக்குப் புரியும் வகையில் செய்த
நவகவிதை இஃது.
இதனால், பலருக்கும் அக்காலத்தில் தொன்மங்கள், தொன்மைக் காலங்களில் வாழ்ந்த மக்களின் எண்ணங்கள், அவற்றின் உண்மைத்தன்மை ஆராய வழிவகுத்திருக்கும். எனவே தான், உயிர் பெற்ற தமிழர் எனப் பாடலுக்குத் தலைப்புக்
கொடுத்துள்ளார் நம் தேசகவி.

N. Ganesan

unread,
Dec 25, 2021, 4:30:49 AM12/25/21
to podhuvan sengai, Santhavasantham
On Sun, Dec 12, 2021 at 12:27 PM podhuvan sengai <podh...@gmail.com> wrote:
பாராட்டி மகிழ்கிறேன் 

கண்ணகி தொன்மம்  (Legend/Myth of Kannaki)
-------------------------------------------
https://bookspage.in/book?variableName=%273162%27
தமிழ்ச்சமூகம் போன்ற பழைமைச் சமூகங்களின் தொன்மங்கள், உறைந்த குறியீடுகள் கொண்டவை; பன்முகப் பொருண்மைகள் நிறைந்தவை; வரலாறு நெடுக அரசியல், சமூகம், பண்பாட்டு மிகுஅசைவியக்கங்களை உணர்த்தவல்லவை; இன்னும் பரந்துபட்ட தளங்களோடு ஊடுருவிப் பொருள் உணர்த்தி நிற்பவை; அத்தகைய பரிமாணங்கள் கொண்ட கண்ணகி தொன்மம் தமிழ்ச் சமூகத்தின் ஒரு மூலப்படிவமான தொன்மமாகும். இத் தொன்மத்தின் ஆழ்ந்த, நுட்பமான பரிமாணங்களைச் சமூக மானிடவியல் நோக்கில் முதன்முறையாக இந்நூல் முன்வைக்கிறது.

இது ஓர் காலச்சுவடு பிரசுரம். சிலம்பு நா. செல்வராசு எழுதியுள்ளார்.

தமிழ்ச்சமூகம் போன்ற பழைமைச் சமூகங்களின் தொன்மங்கள், உறைந்த குறியீடுகள் கொண்டவை; பன்முகப் பொருண்மைகள் நிறைந்தவை = Ancient societies like that of Tamils possess myths with multi-dimensional meanings. These antique myths have frozen symbolism across the Ages.

-------------

பாரத வானியலின் பழைமையான தொன்மக் குறியீடு:
-----------------------------------------
கலைமான் கொற்றவைக்கும், மகரம் துருவ நக்ஷத்திரத்திற்கும், தமிழர் வானியலில் நாம் காணும் 4700 ஆண்டுக்காலத் தொன்மக் குறியீடுகள். ராசி சக்கரம் இந்தியாவிற்குப் பாபிலோனில் இருந்து வந்தடைந்தபோது தை (மகரம்) மாதப் பெயர் ஒன்று மட்டுமே தொல்தமிழினின்றும், சோதிட சாத்திரத்தில் இந்திய உபகண்டம் எங்கும் நிலைத்தது. தை - தந்தை, எந்தை, முந்தை, நுந்தை/உந்தை, எகிப்தில் தமிழ் பிராமியாகப் பானையோட்டில் கிட்டும் [க]ண்ணந்தை, சாத்தந்தை, கொற்றந்தை, பூந்தை (பூதன் + தை), ஆந்தை (ஆதன் + தை), போன்றவற்றில் உள்ள அடிப்படையான சொல்: தை. தலைவன், கடவுள் எனப் பொருள். (1) கைதை என்னும் தமிழ்ச்சொல் கேதகீ எனவும், (2) வையை > வைகை > வேகவதி எனவும் ஆதல் போல, (3) தை/தைஇ (நாஇ, தாஇ, குரீஇ ... போல தைஇ) எனும் தொன்றுதொட்டு வரும் பெயர், திஸ்ய/திஸ்ஸ/திஷ்ய என வட இந்தியா, இலங்கையில் மாறியுள்ளது. தேஷ்ய என வேரு சொல் இருப்பதால், திஷ்ய. தைப்பூசம் பௌர்ணமி வரும். பூசம் பௌஷ்ய நட்சத்திரம். அதற்கு திஷ்ய என்ற பெயர் தொல்தமிழின் தை என்ற சொல்லின் மாற்றம். வடமொழி -ஐ என்ற எழுத்தில் தொடங்கும் த்ராவிட பாஷைச் சொற்களை மாற்றும் இயல்பு கொண்டது. தைஇ, நாஇ, தாஇ :: தையி, நாயி, தாயி என்பவற்றின் போலி என்கிறார் இளம்பூரண அடிகள். கலன்/கலம்/கலயம் > கலசம் > கல*ம் ஆதல் போல, தையி (தைஇ) > தைஷ்ய என்று மாறியுள்ளது. தையல் - வாலை எனப் பொருள் என்று உவேசா குறிப்பிட்டுள்ளார்கள். சான்றாக, வைத்தீசுவரன் கோவிலில் தையல்நாயகி, வடமொழியில் ’வாலாம்பிகை’ எனக் காட்டியுள்ளார் தமிழ்த்தாத்தா உவேசா. தை - தையல் தம்பதியர் தொன்மம் இந்த 4700 ஆண்டுத் தொன்மையான சிந்துவெளி முத்திரையிலே காண்க. ஆராய்க.
Divine Couple in Ancient Indian Astronomy from Binjor to Adichanallur: Makara Viṭaṅkar & Kolli/Koṟṟavai
https://nganesan.blogspot.com/2021/02/divine-couple-binjor-amulet-to.html

இன்னும் 3 மணி நேரத்தில். ஜேம்ஸ் வெப் டெலெஸ்கோப் விண்ணில் நாசா ஏவுகிறது. வெற்றியடைய தை-தையல் தம்பதி துணையை வேண்டுவோம்,
https://jwst.nasa.gov/content/about/launch.html
Launch Date: Webb's launch date is set for December 25, 2021 07:20am EST ( 2021-12-25 12:20 GMT/UTC).

நா. கணேசன்
இந்தியர்/தமிழர் தொன்மங்களை மேலை அறிவியல் வழி ஆராயப் பாரதியார் “உயிர்பெற்ற தமிழர்பாட்டு” பாடிப் போந்தார். நவீன யுகத்தில் (Modernity) தமிழரைக் காலமென்னும் பெருங்கடலில் செலுத்தும் மாலுமிகளில் வள்ளலார், பாரதியார் வசனத்திலும், கவிதையிலும் முன்னத்தி ஏர். சொல்வயலைப் பொன்னேர் பூட்டி உழுதோர்

kanmani tamil

unread,
Dec 25, 2021, 5:07:17 AM12/25/21
to vallamai
///தை - தந்தை, எந்தை, முந்தை, நுந்தை/உந்தை, எகிப்தில் தமிழ் பிராமியாகப் பானையோட்டில் கிட்டும் [க]ண்ணந்தை, சாத்தந்தை, கொற்றந்தை, பூந்தை (பூதன் + தை), ஆந்தை (ஆதன் + தை), போன்றவற்றில் உள்ள அடிப்படையான சொல்: /// முனைவர் கணேசன்3.34க்கு எழுதியது

இந்த வரிசையில் 'ஆந்தை' அடங்காது. 
ஆதன் மரபும் ஆந்தை மரபும் வேறு வேறானவை என்று ஏற்கெனவே எடுத்துக் காட்டி இருக்கிறேன். 

சக 

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

N. Ganesan

unread,
Dec 25, 2021, 5:36:23 AM12/25/21
to vallamai
On Sat, Dec 25, 2021 at 4:07 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:

எந்தக் கட்டுரை என்றால் படித்துப் பார்க்கிறேன். நன்றி.

ஆதன் என்ற சொல்லுடன் ஆதன்+தை = ஆந்தை தொடர்புடையது.
கண்ணன் குலத்தார் உண்டு. கண்ணதை குலத்தார் உண்டு.
ஆந்தை குலத்தார் உண்டு. உ-ம்: புலவர் அ. மு. குழந்தை,  இணையப் பல்கலை தந்த வா. செ. குழந்தைசாமி (கவிஞர் குலோத்துங்கன்).

N. Ganesan

unread,
Dec 25, 2021, 5:37:07 AM12/25/21
to vallamai
On Sat, Dec 25, 2021 at 4:35 AM N. Ganesan <naa.g...@gmail.com> wrote:

On Sat, Dec 25, 2021 at 4:07 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
///தை - தந்தை, எந்தை, முந்தை, நுந்தை/உந்தை, எகிப்தில் தமிழ் பிராமியாகப் பானையோட்டில் கிட்டும் [க]ண்ணந்தை, சாத்தந்தை, கொற்றந்தை, பூந்தை (பூதன் + தை), ஆந்தை (ஆதன் + தை), போன்றவற்றில் உள்ள அடிப்படையான சொல்: /// முனைவர் கணேசன்3.34க்கு எழுதியது

இந்த வரிசையில் 'ஆந்தை' அடங்காது. 
ஆதன் மரபும் ஆந்தை மரபும் வேறு வேறானவை என்று ஏற்கெனவே எடுத்துக் காட்டி இருக்கிறேன். 

எந்தக் கட்டுரை என்றால் படித்துப் பார்க்கிறேன். நன்றி.

ஆதன் என்ற சொல்லுடன் ஆதன்+தை = ஆந்தை தொடர்புடையது.
கண்ணன் குலத்தார் உண்டு. கண்ணதை குலத்தார் உண்டு.
 
கண்ணந்தை 

kanmani tamil

unread,
Dec 25, 2021, 8:00:19 AM12/25/21
to vallamai
21.7.'20& 8.9.'20 ஆகிய தேதிகளில் வல்லமை குழுமத்திற்கு 'ஆந்தை மரபும் ஆதன் மரபும்' என்ற தலைப்பில் எழுதிய மடல்கள் காண்க. 

இங்கே எடுத்து ஒட்ட வரமாட்டேங்குது. 

சக 

N. Ganesan

unread,
Dec 25, 2021, 8:57:57 AM12/25/21
to vallamai, housto...@googlegroups.com
*வையை, பாலாறு, செய்யாறு - முக்கூடல்.

வேகவதி என்று பல ஆறுகள் இருந்தாலும், மதுரை, காஞ்சி நகர்களிடையே உள்ள வேகவதி முக்கியமான ஆறு.
காஞ்சியில் வேகவதி மணல் அள்ளவும், வீடுகள் கட்டவும் முழுதுமாக ஆக்கிரமிக்கப்பட்டுவிட்டது.
மதுரையில் குப்பை, கூளங்களால் நிறைக்கப்படுகின்றன.

கூடல் என்ற பெயர் மதுரையின் ஒரு பழம்பெயர். சிறுமியர் விளையாடும் கூடல் இழைத்தல் போல்
கிருதமாலை நதியும், வையையும் மதுரையிலே இருப்பதால் கூடல் என்ற பெயர். இது
மணலூர் (கீழடி) பகுதிக்குப் பொருந்தாது. எனவே பழமதுரை(கூடல்) கீழடி அன்று:
https://groups.google.com/forum/#!msg/mintamil/cTTUaPJsYxs/vkaeU0MADAAJ  

உள்ள ஊர்களில் வேகவதி என்னும் காஞ்சி நகர நதி முக்கியமானது. வையை > வைகை >> வேகவதி
என்று மாற்றப்பெற்ற காலத்தில் இடப்பெயர் வெஃகா என்று தோன்றியுளது எனலாம்.
வெஃகா - இவ் இடப் பெயரில் தான் முதன்முறையாக, விஸர்க்க வடிவில் ஆய்த எழுத்து
கிரந்தத்தில் இருந்து தோன்றுகிறது (கல்வெட்டில்).

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பாலாறு, செய்யாறு, வேகவதி என்று 3 ஆறுகள்.
அவை கூடுமிடம்: முக்கூடல். இதில் பார்த்தால் வேகவதி ஆற்றுக்குத்தான்
தமிழ்ப் பெயரைக் காணோம். என்ன அது? ஆராய்ந்து பார்த்தால் வையை
என்னும் ஆற்றுப்பெயர் வேகவதி என மொழிபெயர்க்கப்ப்ட்டுள்ளது என அறியலாம்.
வையை >> வைகை (Cf. வெஃகா) >> வேகவதி என்பது பெயர்மாற்றப் படிநிலைகள்.

NG

On Sat, Dec 25, 2021 at 3:30 AM N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
On Sun, Dec 12, 2021 at 12:27 PM podhuvan sengai <podh...@gmail.com> wrote:
பாராட்டி மகிழ்கிறேன் 

கண்ணகி தொன்மம்  (Legend/Myth of Kannaki)
-------------------------------------------
https://bookspage.in/book?variableName=%273162%27
தமிழ்ச்சமூகம் போன்ற பழைமைச் சமூகங்களின் தொன்மங்கள், உறைந்த குறியீடுகள் கொண்டவை; பன்முகப் பொருண்மைகள் நிறைந்தவை; வரலாறு நெடுக அரசியல், சமூகம், பண்பாட்டு மிகுஅசைவியக்கங்களை உணர்த்தவல்லவை; இன்னும் பரந்துபட்ட தளங்களோடு ஊடுருவிப் பொருள் உணர்த்தி நிற்பவை; அத்தகைய பரிமாணங்கள் கொண்ட கண்ணகி தொன்மம் தமிழ்ச் சமூகத்தின் ஒரு மூலப்படிவமான தொன்மமாகும். இத் தொன்மத்தின் ஆழ்ந்த, நுட்பமான பரிமாணங்களைச் சமூக மானிடவியல் நோக்கில் முதன்முறையாக இந்நூல் முன்வைக்கிறது.

இது ஓர் காலச்சுவடு பிரசுரம். சிலம்பு நா. செல்வராசு எழுதியுள்ளார்.

தமிழ்ச்சமூகம் போன்ற பழைமைச் சமூகங்களின் தொன்மங்கள், உறைந்த குறியீடுகள் கொண்டவை; பன்முகப் பொருண்மைகள் நிறைந்தவை = Ancient societies like that of Tamils possess myths with multi-dimensional meanings. These antique myths have frozen symbolism across the Ages.

-------------

பாரத வானியலின் பழைமையான தொன்மக் குறியீடு:
-----------------------------------------
கலைமான் கொற்றவைக்கும், மகரம் துருவ நக்ஷத்திரத்திற்கும், தமிழர் வானியலில் நாம் காணும் 4700 ஆண்டுக்காலத் தொன்மக் குறியீடுகள். ராசி சக்கரம் இந்தியாவிற்குப் பாபிலோனில் இருந்து வந்தடைந்தபோது தை (மகரம்) மாதப் பெயர் ஒன்று மட்டுமே தொல்தமிழினின்றும், சோதிட சாத்திரத்தில் இந்திய உபகண்டம் எங்கும் நிலைத்தது. தை - தந்தை, எந்தை, முந்தை, நுந்தை/உந்தை, எகிப்தில் தமிழ் பிராமியாகப் பானையோட்டில் கிட்டும் [க]ண்ணந்தை, சாத்தந்தை, கொற்றந்தை, பூந்தை (பூதன் + தை), ஆந்தை (ஆதன் + தை), போன்றவற்றில் உள்ள அடிப்படையான சொல்: தை. தலைவன், கடவுள் எனப் பொருள். (1) கைதை என்னும் தமிழ்ச்சொல் கேதகீ எனவும், (2) வையை > வைகை > வேகவதி எனவும் ஆதல் போல, (3) தை/தைஇ (நாஇ, தாஇ, குரீஇ ... போல தைஇ) எனும் தொன்றுதொட்டு வரும் பெயர், திஸ்ய/திஸ்ஸ/திஷ்ய என வட இந்தியா, இலங்கையில் மாறியுள்ளது. தேஷ்ய என வேரு சொல் இருப்பதால், திஷ்ய. தைப்பூசம் பௌர்ணமி வரும். பூசம் பௌஷ்ய நட்சத்திரம். அதற்கு திஷ்ய என்ற பெயர் தொல்தமிழின் தை என்ற சொல்லின் மாற்றம். வடமொழி -ஐ என்ற எழுத்தில் தொடங்கும் த்ராவிட பாஷைச் சொற்களை மாற்றும் இயல்பு கொண்டது. தைஇ, நாஇ, தாஇ :: தையி, நாயி, தாயி என்பவற்றின் போலி என்கிறார் இளம்பூரண அடிகள். கலன்/கலம்/கலயம் > கலசம் > கலம் ஆதல் போல, தையி (தைஇ) > தைஷ்ய என்று மாறியுள்ளது. தையல் - வாலை எனப் பொருள் என்று உவேசா குறிப்பிட்டுள்ளார்கள். சான்றாக, வைத்தீசுவரன் கோவிலில் தையல்நாயகி, வடமொழியில் ’வாலாம்பிகை’ எனக் காட்டியுள்ளார் தமிழ்த்தாத்தா உவேசா. தை - தையல் தம்பதியர் தொன்மம் இந்த 4700 ஆண்டுத் தொன்மையான சிந்துவெளி முத்திரையிலே காண்க. ஆராய்க.

Divine Couple in Ancient Indian Astronomy from Binjor to Adichanallur: Makara Viṭaṅkar & Kolli/Koṟṟavai
https://nganesan.blogspot.com/2021/02/divine-couple-binjor-amulet-to.html

இன்னும் 3 மணி நேரத்தில். ஜேம்ஸ் வெப் டெலெஸ்கோப் விண்ணில் நாசா ஏவுகிறது. வெற்றியடைய தை-தையல் தம்பதி துணையை வேண்டுவோம்,
https://jwst.nasa.gov/content/about/launch.html
Launch Date: Webb's launch date is set for December 25, 2021 07:20am EST ( 2021-12-25 12:20 GMT/UTC).

நா. கணேசன்
இந்தியர்/தமிழர் தொன்மங்களை மேலை அறிவியல் வழி ஆராயப் பாரதியார் “உயிர்பெற்ற தமிழர்பாட்டு” பாடிப் போந்தார். நவீன யுகத்தில் (Modernity) தமிழரைக் காலமென்னும் பெருங்கடலில் செலுத்தும் மாலுமிகளில் வள்ளலார், பாரதியார் முக்கியம். வசனத்திலும், கவிதையிலும் முன்னத்தி ஏர். சொல்வயலைப் பொன்னேர் பூட்டி உழுதோர்

N. Ganesan

unread,
Dec 25, 2021, 9:08:40 AM12/25/21
to vallamai, housto...@googlegroups.com, tiruva...@googlegroups.com
On Fri, Dec 24, 2021 at 8:38 AM Subbaier Ramasami <kavim...@gmail.com> wrote:
ஆழமான பார்வைகொண்ட அருமையான கட்டுரை.

ஓம்சக்தி பொங்கல் சிறப்பிதழ் (2022) ஒரு கட்டுரை எழுதியுள்ளேன். முதல் கட்டுரையாக சிறப்பாக அச்சேறியுள்ளது.

In the Pre-Mauryan punch-marked coins, looking at Greek coins, an important symbol (தொன்மக் குறியீடு) is taken as Taurine symbol.
This ancient sign should rather be called as Crocodilian symbol.

Please read my essay in Tamil on the reasons for which I use the recently found Pre-Mauryan punch marked coin from MaNalUr (Keezhadi) 
near Madurai.

Happy New Year!
N. Ganesan

On Sun, Dec 12, 2021 at 10:00 AM N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
On Thu, Nov 11, 2021 at 8:28 AM Pothigai 2013 <pothig...@gmail.com> wrote:

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CA%2BPSDBC%2Bz5E50-xg%2B9xL43R%2Bnp%3DDuOvNj71GsGD8WoA_1hqfaw%40mail.gmail.com.
Keezhadi_OmSakthi_2022.pdf

kanmani tamil

unread,
Dec 25, 2021, 9:15:04 AM12/25/21
to vallamai
///கூடல் என்ற பெயர் மதுரையின் ஒரு பழம்பெயர். சிறுமியர் விளையாடும் கூடல் இழைத்தல் போல்
கிருதமாலை நதியும், வையையும் மதுரையிலே இருப்பதால் கூடல் என்ற பெயர்./// 

மதுரையில் வையையோடு கிருதமால் கூடவில்லை. 
வையையிலிருந்து கிருதமால் பிரிந்து செல்கிறது. எனவே பெயர்க்காரணம் தவறு. 
சக 

You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUd4%2Bq9cmwxxgZc54OX_dnhxycBi%3DXVSPRmMXPW-Ko8abg%40mail.gmail.com.

N. Ganesan

unread,
Dec 25, 2021, 9:31:47 AM12/25/21
to vallamai
On Sat, Dec 25, 2021 at 8:15 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
///கூடல் என்ற பெயர் மதுரையின் ஒரு பழம்பெயர். சிறுமியர் விளையாடும் கூடல் இழைத்தல் போல்
கிருதமாலை நதியும், வையையும் மதுரையிலே இருப்பதால் கூடல் என்ற பெயர்./// 

மதுரையில் வையையோடு கிருதமால் கூடவில்லை. 
வையையிலிருந்து கிருதமால் பிரிந்து செல்கிறது. எனவே பெயர்க்காரணம் தவறு. 
சக 

வையையில் இருந்து கிருதமால் பிரிகிறது என்பதைவிட, நாகமலையில் உற்பத்தி ஆகும், வையையின் கிளையாறு எனத் தெரிகிறது.
கிருதமால், வையை பூமாலையின் கண்ணிகளாக இருக்கின்றன. இப்பூ மாலையைக் கூடல் அழகர் விரும்பி அணிகிறார்
எனக் கூடல்புராணம் பாடுகிறது. கிருதமால் - வையை பிரிந்து இருக்கும் பூமாலைக் கண்ணி, அல்லது சேர்ந்து உள்ள பூமாலைக்கண்ணி என்றாலும், கூடல் என்பது இம் மாலையால் வந்த பெயர். ஆண்டாள் மாலையில் உள்ள இரு தொடையல்கள் போல மதுரையில் இந்நதிகள். 

கி.பி. 690-ம் ஆண்டு பாண்டிய மன்னன் அரிகேசரியால் வைகை ஆற்றில், சோழவந்தான் அருகே கால்வாய் வெட்டபட்டு, நாகமலையில் உற்பத்தியாகி ஓடும் காட்டாறான கிருதுமாலுடன் இணைத்தார். மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் அருகே ஓடிய கிருதுமாலின் தண்ணீரில்தான் கூடலழகருக்கு நாள்தோறும் அபிசேகம் செய்யப்பட்டது என கூடற்புராணம், கிருதுமாலை கூடலழகர் அணிந்த மாலை என்று போற்றுகிறது.

‘வேகமாதலின் வேகவதி என்றும்
மாகம் வாய்ந்ததனால் வையை என்றும்தார்
ஆகலால் கிருதுமாலையதாம் என்றும்
நாகர் முப்பெயர் நாட்டு நதியரோ’
- என்கிறது அந்தப் பாடல். அதாவது வேகமாக பாய்வதால் வேகவதி என்றும், திருமாலின் ஒரு திருவடி சத்தியலோகம் சென்று அங்கிருந்து நீர் வையத்தில் விழுந்ததால் வையை என்றும், அதன் ஒரு பிரிவு கூடலழகருக்கு மாலையாக அணிவிக்கப்பட்டது.

நாகமலையில் கிருதுமால் ஆறு உற்பத்தி ஆகும் இடத்தில் வைகையாறு இருக்கிறதா? 

நா. கணேசன்

On Sat, 25 Dec 2021, 7:38 pm N. Ganesan, <naa.g...@gmail.com> wrote:
On Fri, Dec 24, 2021 at 8:38 AM Subbaier Ramasami <kavim...@gmail.com> wrote:
ஆழமான பார்வைகொண்ட அருமையான கட்டுரை.

ஓம்சக்தி பொங்கல் சிறப்பிதழ் (2022) ஒரு கட்டுரை எழுதியுள்ளேன். முதல் கட்டுரையாக சிறப்பாக அச்சேறியுள்ளது.

In the Pre-Mauryan punch-marked coins, looking at Greek coins, an important symbol (தொன்மக் குறியீடு) is taken as Taurine symbol.
This ancient sign should rather be called as Crocodilian symbol.

Please read my essay in Tamil on the reasons for which I use the recently found Pre-Mauryan punch marked coin from MaNalUr (Keezhadi) 
near Madurai.

Happy New Year!
N. Ganesan

On Sun, Dec 12, 2021 at 10:00 AM N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
On Thu, Nov 11, 2021 at 8:28 AM Pothigai 2013 <pothig...@gmail.com> wrote:

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CA%2BPSDBC%2Bz5E50-xg%2B9xL43R%2Bnp%3DDuOvNj71GsGD8WoA_1hqfaw%40mail.gmail.com.

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUd4%2Bq9cmwxxgZc54OX_dnhxycBi%3DXVSPRmMXPW-Ko8abg%40mail.gmail.com.

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

kanmani tamil

unread,
Dec 25, 2021, 11:15:00 AM12/25/21
to vallamai
நாகமலையில் ஒரு ஆறும் உற்பத்தி ஆகவில்லை. 

புராணங்கள் எதையும் மிகைப்படுத்தியும் கற்பித்தும் பாடக்கூடியவை. அவற்றின் பெறுமதி அறிந்து பயனுற வேண்டும். 

மாலை போல ஓடின என்பது 'அகல் விளக்கு போன்ற கொங்குநாடு' மாதிரி தான். 

சக 

N. Ganesan

unread,
Dec 25, 2021, 11:16:32 AM12/25/21
to vallamai
ஆண்டாள் மாலை போல, கிருதமால், வைகை ஆறுகள் மதுரையைச் சூழ்ந்து.
கி.பி. 1763 வரைபடம். இத் தொடையல்கள் நாகமலையில் சேர்கின்றன.

எனவே, ஊர்ப்பெயர் கூடல்.

N. Ganesan

unread,
Dec 25, 2021, 11:22:44 AM12/25/21
to vallamai
On Sat, Dec 25, 2021 at 10:15 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
நாகமலையில் ஒரு ஆறும் உற்பத்தி ஆகவில்லை. 

புராணங்கள் எதையும் மிகைப்படுத்தியும் கற்பித்தும் பாடக்கூடியவை. அவற்றின் பெறுமதி அறிந்து பயனுற வேண்டும். 

ஆம், கூடல் என்பதன் பெயர் இரு ஆற்று மாலைத் தொடையல்கள் கூடும் இடம் என்பதால்.
பதிற்றுப்பத்து புனவாசல் - கரூர் அருகே - போல, கிருதமால் ஆறு நாகமலையில் உற்பத்தி.
நீரியல் வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்:
https://ta.wikipedia.org/wiki/கிருதுமால்_ஆறு

kanmani tamil

unread,
Dec 25, 2021, 11:57:56 PM12/25/21
to vallamai
///ஆம், கூடல் என்பதன் பெயர் இரு ஆற்று மாலைத் தொடையல்கள் கூடும் இடம் என்பதால்.

மாலைத் தொடையல்....??? இதென்ன!! புதுத்தொடர்.
மாலை என்றால் என்ன என்று தெரியும்.  
தொடுக்கப்படுவது தொடையல்... சரி. 
'மாலைத் தொடையல்' என்பது நீங்கள் உருவாக்கிய புது ஒருபொருட் பன்மொழியா ?
வேறெங்கும் பயன்பாடு உள்ளதா?
உங்கள் சிற்றிலக்கியத் தொகுப்பில் இருந்து சான்றாதாரம் காட்டுங்கள். 

எனக்குத் தெரிய... விபரம் தெரிந்த நாள் முதலாக 68வயது வரை கிருதமால் நதி மதுரைக்கு மேற்கே மேலக்காலில் பிரிந்து; மாலை போலக் கூடலழகர் கோயிலுக்கு இருபுறமும் ஓடிச்; சாக்கடை ஆகி...
அருப்புக்கோட்டை போகும் வழியில் கிருதமால்- ஆறு ஆகிறது. வையை விரகனூரில் இருந்து சாக்கடை நிலை மாறுகிறது. 

பதினெட்டாம் நூற்றாண்டில் ஆங்கிலேய அரசு வெளியிட்டுள்ள அதிகாரபூர்வமான வரைபடத்தில் கிருதமால் நாகமலையில் உற்பத்தி ஆகிறது எனச் சொல்லி இருப்பதாக...  நீங்கள் கூறியுள்ளீர்கள்...

என் கைபேசியில் அதைப் பெரிதாக்கிப் பார்க்க இயலவில்லை. என் மடிக்கணினி என் கவனக் குறைவால் ரிப்பேராகி விட்டது. இப்போது பயன்பாட்டில் இல்லை. 

நாகமலை ம.கா.பல்கலைக்குக் கிழக்கே உள்ள கீழக்குயில்குடியில் தொடங்கி மேற்கில் உள்ள மலைத்தொடரை நோக்கி நீண்டு; வையைக்குத் தெற்கிலேயே நீள்கிறது. (இதனால் தான் சிலப். கூறும் கண்ணகி சென்ற பாதையை ஆணித்தரமாகச் சொல்ல முடிகிறது. வையை ஒருகரை பற்றித் தெற்கே தன் அழுகைப் பயணத்தைக் கோபத்துடன் தொடங்கியவள் மேற்கு மலைத் தொடரின் நெடுவேள் குன்றில் கால்வைத்து ஏறினாள்.)

நாகமலை மேற்குமலைத் தொடருடன் இணைந்த பிறகு அதற்கு அப்பெயரே இல்லை. வையை நாகமலையில் உற்பத்தி ஆகவில்லை. கிருதமாலும் அது போலத்தான்... 

வெள்ளைக்காரருக்கு யார் இப்படித் தகவல் கொடுத் திருப்பார்?!!!

சக 

kanmani tamil

unread,
Dec 31, 2021, 1:59:51 PM12/31/21
to vallamai
புறநானூறு - 71
ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன் பாடியது 
அவன் பட்டியலிடும் நண்பர்களுள் வேளாளர் மரபுகள் பல உள.

ஆந்தை மரபும், ஆதன் மரபும் வேறுபிரித்துக் கூறப்படுகின்றன .

பட்டியல் 
1. மையல் கோமான் மாவன் (கோமான் என்று அழைக்கப்படுவதால் குறுநில மன்னனாகிய வேள்).
2.  மன் எயில் ஆந்தை ('மன்-' குறுநில மன்னன் என்பதற்குரிய அடையாளம் ; எயில் வேளிர்க்குரியது ; எனவே வேளாள மரபு ) 
3.  உரைசால் அந்துவன் சாத்தன் (ஆதன் என்பது சேரரும் வேளிரும் சூட்டிக் கொண்ட பெயராகக் காணப்படுவது போல; அந்துவன் என்ற பெயரும் இரு                     இனத்திலும் காணப்படும் பெயராக உள்ளது.)
4.  ஆதன் அழிசி (ஆதன் மரபைச் சேர்ந்த வேளாளன்)
5.  வெஞ்சின இயக்கன் (திணைமாந்தன்)

புறநானூறு கொடுக்கும் தரவுகளின்படி ஆந்தையும், ஆதனும் இருவேறு மரபுகள் 

பாண்டிய நாட்டில் வளமான வேளாண்மக்கள் கூட்டம் இருந்தது என்பதைத் தான் கிண்ணி மங்கலம் கல்வெட்டும் காட்டுகிறது.
சக    

வையாபுரிப் பிள்ளையின் சங்க இலக்கியப் பதிப்பில் இடம்பெறும் பிற்சேர்க்கை தொகை இலக்கியத்தில் இடம்பெறும் ஆந்தை மரபினரையும் ஆதன் மரபினரையும் பட்டியலிட்டுக் காட்டுகிறது.

அவர் சமூக ஆய்வு எதிலும் ஈடுபடவில்லை; ஆயினும் பெயர் அடிப்படையில் கொடுத்திருக்கும் தொகுப்பு பயனுள்ளதாக இருக்கும்.

ஆதன் என்னும் மரபின் அடிப்படையைக் கொண்ட வேந்தரும் வேளிரும் திணை மாந்தரும்  
1. சேரன் செல்வக்கடுங்கோ வாழியாதன் (வேந்தன்)
2. முடங்கிக் கிடந்த நெடுஞ்சேரல் ஆதன்           "
3. ஆதன் அவினி 
4. ஆதன் அழிசி 
5. ஆதன் எழினி 
6. ஆதன் ஓரி 
7. ஆதனுங்கன் (திணை மாந்தன்)
     புலவோர் 
8. அகம்பன் மாலாதனார் 
9. கருங்குழலாதனார் 
10. குண்டுகட் பாலியாதனார் 
 
ஆந்தை மரபில் தோன்றியோர்(புலவரும் மன்னரும்) 
1. ஓதல் ஆந்தையார் 
2. எயில் ஆந்தை 
3. அஞ்சில் ஆந்தையார் 
4. சிறைக்குடி ஆந்தையார் 
5. பிசிராந்தையார் 

இவ்வாறு ஆந்தை மரபு, ஆதன் மரபு என்று இருவேறு மரபுகள் தொகை இலக்கியத்தில் காணப்படுவதால் 'ஆதன்  + தந்தை = ஆந்தை' என்று வலிந்து சொல்ல வேண்டிய தேவை இல்லை.
சக 
 
Show quoted text

Reply all
Reply to author
Forward
0 new messages