Re: இருமை!

14 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Jul 22, 2024, 11:18:52 AM (5 days ago) Jul 22
to santhav...@googlegroups.com
On Mon, Jul 22, 2024 at 7:02 AM NATARAJAN RAMASESHAN <chrome...@gmail.com> wrote:
>
> .                      இருமை!
>

இருமை (Duality) பற்றிய அரிய கவிதை.
 
கணிதம், பௌதிகம், அறிவியல், பொறியியல் எல்லாத் துறைகளிலும், Duality Principle இயங்குகிறது: உ-ம்: மின்சாரமும், காந்த சக்தியும் ...
தத்துவத்துறை ஆசிரியர்கள் இருமை பற்றி நிறைய ஆராய்ந்துள்ளனர்.

https://en.wikipedia.org/wiki/Dualism_in_cosmology
https://en.wikipedia.org/wiki/Duality_(mathematics)
https://en.wikipedia.org/wiki/Duality
https://en.wikipedia.org/wiki/Mind%E2%80%93body_dualism
https://en.wikipedia.org/wiki/List_of_dualities
Duality in mathematics is not a theorem, but a "principle". - Michael Atiyah

நன்றி,
நா. கணேசன்

> கடலும் நிலமும், காடும் மலையும்,
>    கனவும் நனவும் உண்டன்றோ?
> உடலும் உயிரும், உவப்பும் துயரும்,
>      உணவும் மருந்தும் உண்டன்றோ?
> திடமும் மெலிவும், திருவும் மிடியும்,
>      செருக்கும் பணிவும்  உண்டன்றோ?
> இடமும் வலமும், இரவும் பகலும்,
>       இருமை உலகின் பண்பன்றோ,?
>
> சிறப்பும் இழிவும், சினமும் பொறையும்,
>     செலவும் வரவும் உண்டன்றோ?
> மறுப்பும் இசைவும், மழையும்,வெயிலும்,
>     மண்ணும் விண்ணும் உண்டன்றோ?
> வெறுப்பும் விருப்பும், வினையும் விளைவும்,
>      வினவும் விடையும் உண்டன்றோ?
> இறப்பும் பிறப்பும், இன்ப துன்பம்,
>      இருமை உலகின் பண்பன்றோ?
>
> செம்மை கருமை, சேய்மை அண்மை,
>     தீமை நன்மை உண்டன்றோ?  
> வெம்மை தண்மை, வெறுமை முழுமை,
>       மிகையும் குறைவும் உண்டன்றோ?
> மெய்ம்மை பொய்ம்மை, மேன்மை கீழ்மை,
>      மென்மை வன்மை உண்டன்றோ?
> இம்மை மறுமை,  இளமை முதுமை,  
>      இருமை உலகின் பண்பன்றோ?
>
>                           -- தில்லைவேந்தன்.
> ......
> ..
>
> --
> You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
> To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CA%2Bzg0hgM0x%2BgWCjst5KXdBS9kNR_au1uBMVHf5eQpQjiSu3sPQ%40mail.gmail.com.

N. Ganesan

unread,
Jul 22, 2024, 10:14:49 PM (4 days ago) Jul 22
to santhav...@googlegroups.com
On Mon, Jul 22, 2024 at 10:25 AM NATARAJAN RAMASESHAN <chrome...@gmail.com> wrote:
மிக்க நன்றி Dr கணேசன்
வழக்கம்போல் பல அருமையான references தந்தமைக்கும் நன்றி
                —தில்லைவேந்தன்.

VaLLuvar's Dualism Principle:
-----------------------------
திருவள்ளுவர் வாழ்க்கையை உன்னிப்பாய்க் கவனித்து ஓர் இருமைக் கோட்பாடு தருகிறார். செல்வர்கள் அனைவரும் அறிவுடையராக இல்லை; அறிஞர்கள் அனைவரும் செல்வராகவும் இல்லை. எனவே, இதுவும் இயற்கையின் இருமை (Duality) நிலைதான் என்கிறார். உலகம் இதனை விதி என வகைப்படுத்துகிறது. எனவே, ஊழ் அதிகாரம்.

இருவேறு உலகத்து இயற்கை திருவேறு
தெள்ளியர் ஆதல் வேறு.

கணிதம், பௌதிகம், அறிவியல், சமையம், .. காணும் இருமை  விதி போல, மனித வாழ்க்கையின் இருமை விதி இது!

NG

On Mon, Jul 22, 2024 at 7:02 AM NATARAJAN RAMASESHAN <chrome...@gmail.com> wrote:
>
> .                      இருமை!
>

இருமை (Duality) பற்றிய அரிய கவிதை.
 
கணிதம், பௌதிகம், அறிவியல், பொறியியல் எல்லாத் துறைகளிலும், Duality Principle இயங்குகிறது: உ-ம்: மின்சாரமும், காந்த சக்தியும் ...
தத்துவத்துறை ஆசிரியர்கள் இருமை பற்றி நிறைய ஆராய்ந்துள்ளனர்.

https://en.wikipedia.org/wiki/Dualism_in_cosmology
https://en.wikipedia.org/wiki/Duality_(mathematics)
https://en.wikipedia.org/wiki/Duality
https://en.wikipedia.org/wiki/Mind%E2%80%93body_dualism
https://en.wikipedia.org/wiki/List_of_dualities
Duality in mathematics is not a theorem, but a "principle". - Michael Atiyah

நன்றி,
நா. கணேசன்



--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
Reply all
Reply to author
Forward
0 new messages