இருமை!

36 views
Skip to first unread message

NATARAJAN RAMASESHAN

unread,
Jul 22, 2024, 8:02:01 AM7/22/24
to santhav...@googlegroups.com
.                      இருமை!


கடலும் நிலமும், காடும் மலையும்,
   கனவும் நனவும் உண்டன்றோ?
உடலும் உயிரும், உவப்பும் துயரும்,
     உணவும் மருந்தும் உண்டன்றோ?
திடமும் மெலிவும், திருவும் மிடியும்,
     செருக்கும் பணிவும்  உண்டன்றோ?
இடமும் வலமும், இரவும் பகலும்,
      இருமை உலகின் பண்பன்றோ,?



சிறப்பும் இழிவும், சினமும் பொறையும்,
    செலவும் வரவும் உண்டன்றோ?
மறுப்பும் இசைவும், மழையும்,வெயிலும்,
    மண்ணும் விண்ணும் உண்டன்றோ?
வெறுப்பும் விருப்பும், வினையும் விளைவும்,
     வினவும் விடையும் உண்டன்றோ?
இறப்பும் பிறப்பும், இன்ப துன்பம்,
     இருமை உலகின் பண்பன்றோ?



செம்மை கருமை, சேய்மை அண்மை,
    தீமை நன்மை உண்டன்றோ?  
வெம்மை தண்மை, வெறுமை முழுமை,
      மிகையும் குறைவும் உண்டன்றோ?
மெய்ம்மை பொய்ம்மை, மேன்மை கீழ்மை,
     மென்மை வன்மை உண்டன்றோ?
இம்மை மறுமை,  இளமை முதுமை,   
     இருமை உலகின் பண்பன்றோ?

                          -- தில்லைவேந்தன்.
......
..

Ram Ramakrishnan

unread,
Jul 22, 2024, 8:35:22 AM7/22/24
to santhav...@googlegroups.com
கருத்தாழம் மிக்க மற்றொரு அருமையான கவிதை.

சிறு ஐயம்.

சினமும் பொறையும்: பொறை என்பது பொறுத்தல் என்ற பொருளில் கோபமில்லாத
தன்மை எனப் கொள்வதா?

திருவும் மிடியும்: திரு - செல்வம், மிடி - சோம்பல்
இவை முரண்களா? ்அல்லது வேறு பொருள்களி்ல் சொன்னீர்களா?

ஐயங்கள் தவறா யிருப்பின் பொறுத்தருள்க.



அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Jul 22, 2024, at 08:02, NATARAJAN RAMASESHAN <chrome...@gmail.com> wrote:


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CA%2Bzg0hgM0x%2BgWCjst5KXdBS9kNR_au1uBMVHf5eQpQjiSu3sPQ%40mail.gmail.com.

NATARAJAN RAMASESHAN

unread,
Jul 22, 2024, 8:54:02 AM7/22/24
to santhav...@googlegroups.com
நன்றி திரு ராம்கிராம்

பொறை என்றால் பொறுத்துக் கொள்ளும் தன்மை/
தாங்கிக் கொள்ளுதல்/ 
forbearance/calmness
நாலடியாரில் , சினம் இன்மையில் பொறை பற்றிக் கூறப்பட்டுள்ளதைக் காணலாம்.

கோபம் கொள்ளாமல் இருப்பவரால்தான் பொறுத்துக் கொள்ள முடியும் அல்லவா?

மிடி என்றால் வறுமை
மடி என்பதுதான் சோம்பல்

நன்றி

         —தில்லைவேந்தன்
..

Ram Ramakrishnan

unread,
Jul 22, 2024, 9:52:02 AM7/22/24
to santhav...@googlegroups.com
நன்னி, திரு. தில்லையாரே.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Jul 22, 2024, at 08:54, NATARAJAN RAMASESHAN <chrome...@gmail.com> wrote:


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

N. Ganesan

unread,
Jul 22, 2024, 11:18:52 AM7/22/24
to santhav...@googlegroups.com
On Mon, Jul 22, 2024 at 7:02 AM NATARAJAN RAMASESHAN <chrome...@gmail.com> wrote:
>
> .                      இருமை!
>

இருமை (Duality) பற்றிய அரிய கவிதை.
 
கணிதம், பௌதிகம், அறிவியல், பொறியியல் எல்லாத் துறைகளிலும், Duality Principle இயங்குகிறது: உ-ம்: மின்சாரமும், காந்த சக்தியும் ...
தத்துவத்துறை ஆசிரியர்கள் இருமை பற்றி நிறைய ஆராய்ந்துள்ளனர்.

https://en.wikipedia.org/wiki/Dualism_in_cosmology
https://en.wikipedia.org/wiki/Duality_(mathematics)
https://en.wikipedia.org/wiki/Duality
https://en.wikipedia.org/wiki/Mind%E2%80%93body_dualism
https://en.wikipedia.org/wiki/List_of_dualities
Duality in mathematics is not a theorem, but a "principle". - Michael Atiyah

நன்றி,
நா. கணேசன்
> --
> You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

NATARAJAN RAMASESHAN

unread,
Jul 22, 2024, 11:25:07 AM7/22/24
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி Dr கணேசன்
வழக்கம்போல் பல அருமையான references தந்தமைக்கும் நன்றி
 
                —தில்லைவேந்தன்.

N. Ganesan

unread,
Jul 22, 2024, 2:33:17 PM7/22/24
to santhav...@googlegroups.com
பாடியவர்: பொரும்பூர் சிவ. இராஜகோபாலன்.
https://youtu.be/oDzhQi0lkZc

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

NATARAJAN RAMASESHAN

unread,
Jul 22, 2024, 8:57:09 PM7/22/24
to santhav...@googlegroups.com
சிறப்பு
மிக்க நன்றி

       —தில்லைவேந்தன்
….

N. Ganesan

unread,
Jul 22, 2024, 10:14:50 PM7/22/24
to santhav...@googlegroups.com
On Mon, Jul 22, 2024 at 10:25 AM NATARAJAN RAMASESHAN <chrome...@gmail.com> wrote:
மிக்க நன்றி Dr கணேசன்
வழக்கம்போல் பல அருமையான references தந்தமைக்கும் நன்றி
                —தில்லைவேந்தன்.

VaLLuvar's Dualism Principle:
-----------------------------
திருவள்ளுவர் வாழ்க்கையை உன்னிப்பாய்க் கவனித்து ஓர் இருமைக் கோட்பாடு தருகிறார். செல்வர்கள் அனைவரும் அறிவுடையராக இல்லை; அறிஞர்கள் அனைவரும் செல்வராகவும் இல்லை. எனவே, இதுவும் இயற்கையின் இருமை (Duality) நிலைதான் என்கிறார். உலகம் இதனை விதி என வகைப்படுத்துகிறது. எனவே, ஊழ் அதிகாரம்.

இருவேறு உலகத்து இயற்கை திருவேறு
தெள்ளியர் ஆதல் வேறு.

கணிதம், பௌதிகம், அறிவியல், சமையம், .. காணும் இருமை  விதி போல, மனித வாழ்க்கையின் இருமை விதி இது!

NG

On Mon, Jul 22, 2024 at 7:02 AM NATARAJAN RAMASESHAN <chrome...@gmail.com> wrote:
>
> .                      இருமை!
>

இருமை (Duality) பற்றிய அரிய கவிதை.
 
கணிதம், பௌதிகம், அறிவியல், பொறியியல் எல்லாத் துறைகளிலும், Duality Principle இயங்குகிறது: உ-ம்: மின்சாரமும், காந்த சக்தியும் ...
தத்துவத்துறை ஆசிரியர்கள் இருமை பற்றி நிறைய ஆராய்ந்துள்ளனர்.

https://en.wikipedia.org/wiki/Dualism_in_cosmology
https://en.wikipedia.org/wiki/Duality_(mathematics)
https://en.wikipedia.org/wiki/Duality
https://en.wikipedia.org/wiki/Mind%E2%80%93body_dualism
https://en.wikipedia.org/wiki/List_of_dualities
Duality in mathematics is not a theorem, but a "principle". - Michael Atiyah

நன்றி,
நா. கணேசன்



--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

NATARAJAN RAMASESHAN

unread,
Jul 23, 2024, 11:39:30 AM7/23/24
to santhav...@googlegroups.com
YouTube ல்  இருமை




N. Ganesan

unread,
May 14, 2025, 10:22:37 PMMay 14
to santhav...@googlegroups.com, NATARAJAN RAMASESHAN
On Mon, Jul 22, 2024 at 9:14 PM N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
On Mon, Jul 22, 2024 at 10:25 AM NATARAJAN RAMASESHAN <chrome...@gmail.com> wrote:
மிக்க நன்றி Dr கணேசன்
வழக்கம்போல் பல அருமையான references தந்தமைக்கும் நன்றி
                —தில்லைவேந்தன்.

இருமைக் கோட்பாடு வள்ளுவருக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. ஹிந்து சமையத்தின் தொடக்கத்தில் - 4500 ஆண்டுக்கு முன்பு - வானியலின் படி ஓர் இருமைக் கோட்பாட்டை வடித்தனர். அதனை விரிவாக 3 குறளில் பதிந்தவர் வள்ளுவர். எழுதத் தொடங்கியுள்ளேன்:

உங்கள் பாடல் போல, நம்மாழ்வாரின் திருவாய்மொழி.
திருவாய்மொழி - ஆறாம் பத்து (மூன்றாம் திருமொழி, 3365-3375)
தம்மை வசீகரித்தவன் ஸர்வேசுவரன் என்று அருளிச் செய்தல் (திருவிண்ணகர்)

3365 நல்குரவும் செல்வும் நரகும் சுவர்க்கமும் ஆய்
வெல்பகையும் நட்பும் விடமும் அமுதமும் ஆய்
பல்வகையும் பரந்த பெருமான் என்னை ஆள்வானை
செல்வம் மல்கு குடித் திருவிண்ணகர்க் கண்டேனே (1)
3365. The god is poverty and wealth.
He is heaven and hell.
He is friend and enemy.
He is nectar and poison.
The lord is omnipresent.
He rules me—I saw my lord in Thiruviṇṇagar
where families live with abundant wealth.

3366 கண்ட இன்பம் துன்பம் கலக்கங்களும் தேற்றமும் ஆய்
தண்டமும் தண்மையும் தழலும் நிழலும் ஆய்
கண்டுகோடற்கு அரிய பெருமான் என்னை ஆள்வான் ஊர்
தெண் திரைப் புனல் சூழ் திருவிண்ணகர் நல் நகரே (2)
3366. He is joy and sorrow.
He is confusion and clarity.
He is anger and affection.
He is heat and coolness.
He is the lord no one can see.
The god of beautiful Thiruviṇṇagar,
surrounded by water with clear waves,
is my ruler.

3367 நகரமும் நாடுகளும் ஞானமும் மூடமும் ஆய்
நிகர் இல் சூழ் சுடர் ஆய் இருள் ஆய் நிலன் ஆய் விசும்பு ஆய்
சிகர மாடங்கள் சூழ் திருவிண்ணகர் சேர்ந்த பிரான்
புகர் கொள் கீர்த்தி அல்லால் இல்லை யாவர்க்கும் புண்ணியமே (3)
3367. He is countries and cities.
He is wisdom and ignorance.
He is unmatched enveloping light and darkness.
He is the earth and sky.
There is no puṇṇiyam for anyone
without praising the fame of the lord
of Thiruviṇṇagar surrounded by palaces.

3368 புண்ணியம் பாவம் புணர்ச்சி பிரிவு என்று இவை ஆய்
எண்ணம் ஆய் மறப்பு ஆய் உண்மை ஆய் இன்மை ஆய் அல்லன் ஆய்
திண்ண மாடங்கள் சூழ் திருவிண்ணகர் சேர்ந்த பிரான்
கண்ணன் இன் அருளே கண்டுகொள்மின்கள் கைதவமே? (4)
3368. The god is virtue and sin.
He is being together and separation.
He is remembrance and forgetfulness.
He is all that is in the world
and he is all that is not in the world.
He is existence, non-existence and nothing.
Find the sweet grace of Kaṇṇan,
our dear god of Thiruviṇṇagar
surrounded by strong palaces,
and take on yourself his cleverness.

3369 கைதவம் செம்மை கருமை வெளுமையும் ஆய்
மெய் பொய் இளமை முதுமை புதுமை பழமையும் ஆய்
செய்த திண் மதிள் சூழ் திருவிண்ணகர் சேர்ந்த பிரான்
பெய்த காவு கண்டீர் பெரும் தேவு உடை மூவுலகே (5)
3369. He is bad and good.
He is black and white.
He is truth and falsehood.
He is youth and age.
He is new and old.
Our god stays in Thiruviṇṇagar surrounded by strong walls.
He is the great god of the three worlds,
and see, he will protect all the worlds.

3370 மூவுலகங்களும் ஆய் அல்லன் ஆய் உகப்பு ஆய் முனிவு ஆய்
பூவில் வாழ் மகள் ஆய் தவ்வை ஆய் புகழ் ஆய் பழி ஆய்
தேவர் மேவித் தொழும் திருவிண்ணகர் சேர்ந்த பிரான்
பாவியேன் மனத்தே உறைகின்ற பரஞ்சுடரே (6)
3370. He is all the three worlds and he is not them.
He is happiness and hatred.
He is Lakshmi, the goddess on a lotus.
He is the inauspicious goddess.
He is fame and he is infamy.
The gods in the sky come to worship
the lord of Thiruvinnagar, the highest light,
and he stays in this sinner’s mind.

3371 பரம் சுடர் உடம்பு ஆய் அழுக்குப் பதித்த உடம்பு ஆய்
கரந்தும் தோன்றியும் நின்றும் கைதவங்கள் செய்தும் விண்ணோர்
சிரங்களால் வணங்கும் திருவிண்ணகர் சேர்ந்த பிரான்
வரம் கொள் பாதம் அல்லால் இல்லை யாவர்க்கும் வன் சரணே (7)
3371. He takes shining divine forms.
He takes forms that are unclean.
He hides himself.
He presents himself to his devotees .
He stays in the world.
He does naughty deeds.
The gods from the sky come and worship,
bowing their heads to our god of Thiruviṇṇagar.
There is no refuge for anyone but the feet of the lord
who give boons to all.

3372 வன் சரண் சுரர்க்கு ஆய் அசுரர்க்கு வெம் கூற்றமும் ஆய்
தன் சரண் நிழற்கீழ் உலகம் வைத்தும் வையாதும்
தென் சரண் திசைக்குத் திருவிண்ணகர் சேர்ந்த பிரான்
என் சரண் என் கண்ணன் என்னை ஆளுடை என் அப்பனே (8)
3372. He gives refuge to the gods.
He is cruel Yama for the Asurans.
He keeps good people beneath his feet and protects them
but he does not protect those who are bad.
Our lord stays in Thiruviṇṇagar
and protect the southern direction.
He is my father and he rules me.
My god Kanṇan is my refuge.

3373 என் அப்பன் எனக்கு ஆய் இகுள் ஆய் என்னைப் பெற்றவள் ஆய்
பொன் அப்பன் மணி அப்பன் முத்து அப்பன் அன் அப்பனும் ஆய்
மின்னப் பொன் மதிள் சூழ் திருவிண்ணகர் சேர்ந்த அப்பன்
தன் ஒப்பார் இல் அப்பன் தந்தனன் தன தாள் நிழலே (9)
3373. He is my father.
He is my friend.
He is the mother who gave birth to me.
He my father is precious as gold, diamonds and pearl.
He stays in Thiruviṇṇagar
surrounded with shining golden walls.
He, the matchless god, granted me refuge beneath his feet.

3374 நிழல் வெய்யில் சிறுமை பெருமை குறுமை நெடுமையும் ஆய்
சுழல்வன நிற்பன மற்றும் ஆய் அவை அல்லனும் ஆய்
மழலை வாய் வண்டு வாழ் திருவிண்ணகர் மன்னு பிரான்
கழல்கள் அன்றி மற்றோர் களைகண் இலம் காண்மின்களே (10)
3374. He is shadow and sunlight.
He is small and great.
He is short and tall.
He is those things that move and those that are still,
and he is everything other than those things.
He stays always in Thiruviṇṇagar
where the bees sing as sweetly as babies.
I have no other refuge
than his feet ornamented with anklets.

3375 காண்மின்கள் உலகீர் என்று கண்முகப்பே நிமிர்ந்த
தாள் இணையன் தன்னைக் குருகூர்ச் சடகோபன் சொன்ன
ஆணை ஆயிரத்துத் திருவிண்ணகர்ப் பத்தும் வல்லார்
கோணை இன்றி விண்ணோர்க்கு என்றும் ஆவர் குரவர்களே (11)
3375. Sadagopan of Thirukuruhur
composed a thousand poems on the lord
who measured the world and the sky with his two feet
and said, "O people of the world, see my feet!"
If devotees learn and recite these ten pasurams on Thiruviṇṇagar
they will become the gurus of the gods in the sky.
---------
தெரிவு:
கொங்குகிழான்
நா. கணேசன்
ஸ்பேஸ் விஞ்ஞானி

Reply all
Reply to author
Forward
0 new messages