Re: பயன்

105 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Jun 20, 2022, 10:08:27 PM6/20/22
to Santhavasantham

On Mon, Jun 20, 2022 at 6:12 AM சௌந்தர் <rsou...@gmail.com> wrote:
முன்னொரு காலத்தில் கேட்பாரின்றிக் கீழே சிந்திக்கிடக்கின்ற பூக்களையே ஏற்றுக்கொண்டு மகிழ்ந்திருந்தான் திருவேங்கடத்தான் என்று நம்மாழ்வார் பாடுகிறார்.

எந்தை தந்தை தந்தை தந்தை தந்தைக்கும்
முந்தை வானவர் வானவர் கோனொடும்
சிந்து பூமகிழும் திருவேங்கடத்து
அந்தம் இல்புகழ்க் கார்எழில் அண்ணலே.

கொம்பில் நின்றதைக் காட்டிலும், நிலத்திலே விழுந்த போது அந்நிலத்தினுடைய தன்மையாலே செவ்வி பெற்று மலர்ந்து தோன்றுகிறதாதலின், ‘சிந்துபூ மகிழும் திருவேங்கடம்’என்பது வியாக்கியானம்.

இராமாநுசர் வரலாற்றில் இந்த வரிகள் மிக முக்கியத்துவம் வாய்ந்தவை.

திருமலையில் பெருமாளுக்குப் பச்சைக் கற்பூரம் வைப்பது ஏன் எனத் தெரிந்துகொண்டேன்.
நன்றி.
நா. கணேசன்
 
சௌந்தர்

On Sunday, 19 June 2022 at 10:17:30 UTC-4 தில்லைவேந்தன் wrote:
.                         பயன்!

புதிய பூக்கள் மொட்டெடுக்கும்
     போதே பறிக்கும் சோலையிலே 
உதிர்ந்த பூக்கள் தரைகிடக்க 
     ஒருவர் கூடப் பார்க்கவில்லை 
சிதைய வில்லை வாடவில்லை 
      சிறிதும் இதழ்கள் மூடவில்லை 
எதுவும்   பயன்தான் உலகத்தில் --
        எடுத்தேன், இறைவன் அடிசேர்த்தேன்!

                            -- தில்லைவேந்தன்

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/4613dbce-9a38-448d-b5ed-215fb1d0a932n%40googlegroups.com.

kanmani tamil

unread,
Jun 20, 2022, 11:05:30 PM6/20/22
to vallamai
///முன்னொரு காலத்தில் கேட்பாரின்றிக் கீழே சிந்திக்கிடக்கின்ற பூக்களையே ஏற்றுக்கொண்டு மகிழ்ந்திருந்தான்....

எந்தை தந்தை தந்தை தந்தை தந்தைக்கும்
முந்தை வானவர் வானவர் கோனொடும்
சிந்து பூமகிழும் திருவேங்கடத்து
அந்தம் இல்புகழ்க் கார்எழில் அண்ணலே.

கொம்பில் நின்றதைக் காட்டிலும், நிலத்திலே விழுந்த போது அந்நிலத்தினுடைய தன்மையாலே செவ்வி பெற்று மலர்ந்து தோன்றுகிறதாதலின்///

"சிந்து பூ" = சிந்திக் கிடக்கின்ற பூ என்று பொருள்படாது.

'எந்தை தந்தை, தந்தை தந்தை, தந்தைக்கும் முந்தை, வானவர், வானவர் கோன் என அனைவரும் பூத்தூவி வழிபட்டதால் பெருமாள் மகிழ்ந்தார்' என்று தான் பொருள்படும். 
சக 

You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUfO9JpvsmCxYv6m34fnuAnuAXJ9AbjF5ST0G3iTBvvhDg%40mail.gmail.com.

kanmani tamil

unread,
Jun 20, 2022, 11:12:59 PM6/20/22
to vallamai
வியாக்கியானம் செய்தோர் semantics புரிந்து கொள்ளத் தவறியதன் விளைவு. 
சக 

N. Ganesan

unread,
Jun 20, 2022, 11:19:57 PM6/20/22
to Santhavasantham

On Mon, Jun 20, 2022 at 6:39 PM சௌந்தர் <rsou...@gmail.com> wrote:
திருவேங்கடத்து எம்பெருமான் ஶ்ரீவைகுண்டத்தில் விரக்தி அடைந்து பூலோகம் வந்து, கோனேரி (ஸ்வாமி புஷ்கரிணி) என்கிற குளக்கரையிலே பக்தர்களுக்கு அருள் புரிகிறான். இதை ஸுப்ரபாதத்தில் "ஶ்ரீ வைகுண்ட விரக்தாய ஸ்வாமி புஷ்கரிணி தடே ரமயா ரமமாணாய வேங்கடேஶாய மங்களம்" என்ற வரிகளாலே அறியலாம்.
ஶ்ரீவைகுண்டத்திலிருந்து எம்பெருமான் திருவேங்கடம் எழுந்தருளி விட்டதால், அங்கிருந்து எல்லா வானவர்களும் (நித்ய ஸூரிகள்), வானவர்களுக்குத் தலைவரான ஶ்ரீஸேனை முதலிகளும் (விஷ்வக்ஸேனர்-வானவர் கோன்) திருவேங்கடம் வந்து எம்பெருமானை வழிபடுகின்றனர். இவர்களோடு சேர்ந்து, சிந்துபூ மகிழும் எண்ணிறந்த புகழ்மிக்கவனான திருவேங்கடத்தான் என்பது பொருள்.

சௌந்தர்   

தேவாரத்திற்கு வேதத்துக்குச் சமமானது எனக் காட்ட 1000 ஆண்டுகளாக ஏற்பட்ட நாலாயிரத்தின் வியாக்கியானங்கள் போலத் தோன்றவில்லை 1960களில் தாம் தருமை ஆதீனம் உரை எழுதுவித்தார்கள். அண்மையில் தருமை ஆதீனத்தில் பட்டினப்பிரவேசம் கண்டோம்.

முன்னோர்கள் கண்ட பொருள்: வித்துவான் புருஷோத்தம நாயுடு நம்மாழ்வார் ஈட்டின் மணிப்பிரவாளத்தைத் தமிழாக்கம் செய்துள்ளார்.

246

எந்தை தந்தைதந் தைதந்தை தந்தைக்கும்
முந்தை வானவர் வானவர் கோனொடும்
சிந்து பூமகி ழும்திரு வேங்கடத்து
அந்தம் இல்புகழ்க் கார்எழில் அண்ணலே.

    பொ-ரை : நித்தியசூரிகள் சேளை முதலியாரோடும் வந்து தூவி வணங்குகின்ற பூக்கள் வாசனை வீசுகின்ற திருவேங்கடத்து எழுந்தருளியிருக்கின்ற, முடிவில்லாத புகழையுடைய, நீலமேகம் போன்ற அழகையுடைய அண்ணல் என் குலத்திற்கு முதல்வன் ஆவான்.

    வி-கு : அண்ணல் - பெருமையுடையவன். சிந்துபூ - வினைத்தொகை.

    ஈடு : இரண்டாம் பாட்டு. 1‘குறைவில்லாத கைங்கரியத்தைப் பெறவேணும் என்று விரும்புகிறீர்; அது, இச்சரீர சம்பந்தம் அற்று அர்ச்சிராதி மார்க்கத்தாலே ஒரு தேச விசேடத்திலே போனால் பெறுமதொன்றன்றோ?’ என்ன, ‘அங்குள்ளாரெல்லாரும் வந்து அடிமை செய்கிறது இந்நிலத்திலே யாகையாலே, இங்கே பெறுதற்குக் குறையில்லை,’ என்கிறார்.

    எந்தை தந்தை தந்தை தந்தை தந்தைக்கும் முந்தை - 2‘அடியார் அடியார்தம் அடியார் அடியார் தமக்கடியார் அடியார் தம் மடியார் அடியோங்களே’ என்கிறபடியே, ஆத்தும சொரூபத்தை நிரூபிக்கப் புக்கால், அத்தலையே பிடித்து இவ்வளவும் வர நிரூபிக்குமாறு போலேயாயிற்று, பரம்பொருளின் சொரூபத்தை நிரூபிக்கப் புக்காலும் இத்தலையே பிடித்து அவ்வளவும் செல்ல நிரூபிக்கும்படி.

____________________________________________________

1. மேல் பாசுரத்தில் ‘வழுவிலா அடிமை செய்ய வேண்டும் நாம்,’ என்றதனை
  இடமாகக்கொண்டு சங்கித்து, இப்பாசுரத்தில் ‘வானவர் வானவர் கோனொடும்
  சிந்து பூ மகிழும் திருவேங்கடம்’ என்றதனைக் கடாக்ஷித்து விடை
  அருளிச்செய்கிறார், ‘குறைவில்லாத கைங்கரியத்தை’ என்று தொடங்கி.

2. ‘ஏழ் தலைமுறைக்கு ஸ்வாமி என்பான் என்?’ என்னும் வினாவை
  எழுப்பிக்கொண்டு, அதற்கு விடை அருளிச்செய்கிறார், ‘அடியார் அடியார்’
  என்று தொடங்கி. இங்கு ஏழ் தலைமுறை கூறப்பட்டுள்ளவாறு யாங்ஙனம்?’
  எனின், எந்தை என்பதில் தாம் ஒருவர், தம் தந்தை ஒருவர்; இவ்விருவரோடு
  மேலேயுள்ள ஐவரையும் கூட்டினால் ஏழ் தலைமுறையாதல் காண்க. ‘அடியார்
  அடியார்’ திருவாய். 3. 7 : 10.

78

1‘அப்பரம்பொருள் ஈசுவரர்களாய் உள்ளவர்கட்கும் மேலான ஈசுவரனாவான்,’ என்று கூறப்பட்டுள்ளதன்றோ? வானவர் வானவர் கோனொடும் சிந்துபூ மகிழும் திருவேங்கடத்து - நித்திய சூரிகள், சேநாபதியாள்வானோடு கூட, பிரகிருதி சம்பந்தமில்லாத மலர்களைக் கொண்டு வந்து, தங்களுக்கும் அப்பாற்பட்டவன் கானமும் வானரமுமான இவற்றுக்கு முகங்கொடுத்துக்கொண்டு நிற்கிற சௌசீல்ய குணத்தை அநுசந்தித்து நைந்தவர்களாய்ப் பின்னர் முறைப்படி அருச்சிக்கமாட்டாது அடைவு கெட்டுச் சிந்தாநிற்பர்கள். இங்குள்ளார் அங்கே சென்று மேன்மையைக் கண்டு அவனுக்கே அடிமைப்படுமாறு போன்று, அங்குள்ளார் இங்கே வந்து அந்நீர்மை கண்டு ஈடுபடும்படி. மேன்மை அனுபவிக்கலாவது, அந்நிலத்திலே; நீர்மை அனுபவிக்கலாவது, இந்நிலத்திலேயன்றோ! கொம்பில் நின்ற போதையிற்காட்டிலும், நிலத்திலே விழுந்த போது அந்நிலத்தினுடைய தன்மையாலே செவ்வி பெற்று மலர்ந்து தோன்றுகிறதாதலின், ‘சிந்துபூ மகிழும் திருவேங்கடம்’என்கிறார்.

    அந்தம் இல் புகழ் - பிரகிருதி சம்பந்தமில்லாத விக்கிரகத்தோடே அவ்வடிமை அனுபவிக்கப் பாங்கான உறுப்புகளையுடையராய்க்கொண்டு கிட்டினார்க்கு அனுபவ யோக்கியனாயிருக்கையாலே புகழ் ஓரெல்லையோடே கூடியிருக்கும் அப்பரமபதத்தில்; இங்கு, 2‘ஆளியும் கோளரியும் பொன்மணியும் முத்தமும் பூமரமும்’ ஆனவற்றுக்குத் தன்னைக் கொடுத்துக்கொண்டு நிற்கையாலே புகழ்க்கு முடிவு இல்லையாதலின், ‘அந்தமில் புகழ்’ என்கிறது. ஆக, 3‘ஈசுவரன் சமஸ்தமான கல்யாண குணங்களையும் இயல்பாகவேவுடையவன்,’ என்றபடி. இதனால், ஸ்ரீவைகுண்டத்தில் புகழ்க்கு முடிவு உண்டு போலும்!’ என்றவாறு. கார் எழில் - குணமில்லாதவன் ஆனாலும் விடவொண்ணாதபடியாயிற்று வடிவழகு இருப்பது. அண்ணல் - வடிவழகு இல்லையானாலும், விடவொண்ணாதபடியாயிற்றுச் சம்பந்தமிருப்பது.

    ‘வானவர் வானவர் கோனொடும் சிந்துபூ மகிழும் திருவேங்கடத்து அந்தமில் புகழ்க்காரெழில் அண்ணல் - எந்தை தந்தை தந்தை தந்தை தந்தைக்கும் முந்தை; ஆன பின்னர், அங்கே வழுவிலா அடிமை செய்ய வேண்டும் நாம்’ என்கிறார்.

___________________________________________________  

1. ஸ்வேதாஸ்வதர உபநிடதம், 6.
2. நான்முகன் திருவந். 47.
3. ஸ்ரீ விஷ்ணு புரா. 6. 5 : 84.

http://www.tamilvedham.org/index.php?r=site/pasuram1&username=&song_no=3036&alwar_id=&prabhandam_id=4

வானவர் - நித்யஸூரிகள்
வானவர் கோனொடும் - தங்களில் தலைவரான ஸேனை முதலியரோடு கூட
சிந்து - தூவின
பூ - புஷ்பங்கள்
மகிழும்- செவ்விகுன்றாதிருக்கப்பெற்ற

விளக்க உரை

திருநாட்டிலே சென்று எம்பெருமானுக்கு அடிமை செய்வதன்றோ எல்லார்க்கும் ஸ்வரூபம்; அப்படியிருக்க, நீர் இந்நிலத்தில் திருமலையிலே அடிமை செய்ய விரும்புவது ஏன்? என்ன; திருநாட்டிலுள்ள நித்யமுக்தர்களுங்கூட இத்திருமலையிலே வந்து அடிமைசெய்யக் காண்கையாலே நானும் இங்கே அடிமைசெய்யக் குறையென்? என்கிறார். எம்பெருமானுடைய ஸர்வேச்வரத்வத்தை ஆழ்வார் வாயாரப் பேசுகிறீர் எந்தை தந்தை தந்தை தந்தை தந்தைக்கும் முந்தை என்று. இங்கே நம் ஆசாரியர்கள் அருளிச் செய்யும் அழகியவார்த்தை ஒன்றுண்டு; ஆழ்வார் ஜீவாத்மலக்ஷணமானசேஷத்வதத்தை நிரூபிக்கும்போது “அடியாரடியார் தம்மடியார் தமக்கடியாரடியார்” என்று மிகவும் கீழே இறங்கிக் கொண்டுவருவது போலவே, பரமாத்மலக்ஷணமான சேஷித்வத்தை நிரூபிக்கும்போதும் “எந்தை தந்தை தந்தை தந்தை தந்தைக்கும் முந்தை” என்று மேலே மேலே ஏற்றிப் பேசுகிறாரென்று. வானவர் என்று தொடங்கி அங்குள்ளாரும் இங்கே போந்து அடிமை செய்யும்படியை அருளிச்செய்கிறார். எம்பெருமானிடத்தில் மேன்மை நீர்மை என்கிற இரண்டு வகையான குணங்களும் உள்ளன; மேன்மை காண்பது பரமபதத்திலே; நீர்மைகாண்பது இந்நிலத்திலே. மேன்மையைக் காட்டிலும் நீர்மையே சிறந்ததாகையாலே அதனைக்காண அங்குள்ளாரும் இங்கே வருகிறார்களாயிற்று. *கானமும் வானரமுமான விவற்றுக்கு முகங்கொடுத்துக்கொண்டு நிற்கிற ஸௌசீல்ய குணத்தையநுஸந்தித்து ஈடுபட்டவர்களாய் ஸ்ரீஸேநாபதியாழ்வான் தொடக்கமான நித்தியஸூரிகள் திருவேங்கடமுடையானை ஸேவிக்க விரும்பி திவ்யபுஷ்பங்களை யெடுத்துக்கொண்டு இங்கே வருகிறார்கள்; அப் புஷ்பங்களைத் திருமலையப்பனுடைய பாதாரவிந்தங்களில் யதாக்ரமமாக ஸமர்ப்பிக்க சக்தராகாதபடி சீலகுணத்திலே உருகி நிற்கிறார்களாதலால் அவர்களது கைகளிலிருந்து புஷ்பங்கள் அவசரமாகவே சிந்துகின்றனவாம்; அப்படிச் சிந்தின புஷ்பங்கள் செவ்விகுன்றாமல் விகாஸமும் பரிமளவும் மல்கி விளங்குகின்றனவாம். திருமலையின் நிலமிதியாலே. அப்படிப்பட்ட திருமலையில் அந்தமில் புகழ்பெற்று விளங்காநின்றான் எம்பெருமான்.

On Monday, June 20, 2022 at 11:56:21 AM UTC-4 siva siva wrote:
நல்ல பாடல்.

"வானவர் வானவர் கோனொடும்"  - இவர்கள் என்ன செய்கின்றனர் என்று இப்பாடல் சொல்கின்றது?

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

kanmani tamil

unread,
Jun 20, 2022, 11:29:46 PM6/20/22
to vallamai
இடைக்காலத்தில் அற்புத நிகழ்வுகளாகக் கதைகள் எவ்வாறு தோன்றின எனத் தெரிந்து கொண்டேன். 
சக 

N. Ganesan

unread,
Jun 21, 2022, 12:25:56 AM6/21/22
to vallamai
On Mon, Jun 20, 2022 at 10:12 PM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
வியாக்கியானம் செய்தோர் semantics புரிந்து கொள்ளத் தவறியதன் விளைவு. 
சக 

ஆமாம்.

N. Ganesan

unread,
Jun 21, 2022, 12:51:27 AM6/21/22
to vallamai

>>> //கொம்பில் நின்றதைக் காட்டிலும், நிலத்திலே விழுந்த போது அந்நிலத்தினுடைய தன்மையாலே செவ்வி பெற்று மலர்ந்து தோன்றுகிறதாதலின்///

பேரா. ச. கண்மணி ::

"சிந்து பூ" = சிந்திக் கிடக்கின்ற பூ என்று பொருள்படாது.
'எந்தை தந்தை, தந்தை தந்தை, தந்தைக்கும் முந்தை, வானவர், வானவர் கோன் என அனைவரும் பூத்தூவி வழிபட்டதால் பெருமாள் மகிழ்ந்தார்' என்று தான் பொருள்படும்.
சக

>இடைக்காலத்தில் அற்புத நிகழ்வுகளாகக் கதைகள் எவ்வாறு தோன்றின எனத் தெரிந்து கொண்டேன்.
சக

<<<
திருவேங்கடத்து எம்பெருமான் ஶ்ரீவைகுண்டத்தில் விரக்தி அடைந்து பூலோகம் வந்து, கோனேரி (ஸ்வாமி புஷ்கரிணி) என்கிற குளக்கரையிலே பக்தர்களுக்கு அருள் புரிகிறான். இதை ஸுப்ரபாதத்தில் "ஶ்ரீ வைகுண்ட விரக்தாய ஸ்வாமி புஷ்கரிணி தடே ரமயா ரமமாணாய வேங்கடேஶாய மங்களம்" என்ற வரிகளாலே அறியலாம்.
ஶ்ரீவைகுண்டத்திலிருந்து எம்பெருமான் திருவேங்கடம் எழுந்தருளி விட்டதால், அங்கிருந்து எல்லா வானவர்களும் (நித்ய ஸூரிகள்), வானவர்களுக்குத் தலைவரான ஶ்ரீஸேனை முதலிகளும் (விஷ்வக்ஸேனர்-வானவர் கோன்) திருவேங்கடம் வந்து எம்பெருமானை வழிபடுகின்றனர். இவர்களோடு சேர்ந்து, சிந்துபூ மகிழும் எண்ணிறந்த புகழ்மிக்கவனான திருவேங்கடத்தான் என்பது பொருள்.

சௌந்தர்  
>>>

மா/மான், ஆ/ஆன், ... என்பது போல, கோ/கோன் - மிக அடிப்படையான பொருள் கோ/கோன் = மலை என்பது. இது எல்லா த்ராவிட பாஷைகளிலும் கோ/கோன் = மலை உண்டு. தமிழ் இலக்கியங்களில் காணலாம். உ-ம்: வில்லி பாரதத்தில் எண் கோ = அஷ்ட குல பர்வதங்கள். இவை யானைக்கு உவமை (பார்க்க: வை.மு.கோ உரை). மலை உயர்ச்சி ஆனதால், கோபுரம், கோ/கோன் = ராஜா என்ற பொருள்களும் பின்னர் ஏற்றுள்ளது. கோனேரி = மலை ஏரி. ஸ்வாமி புஷ்கரிணி.

சீமாறு = ஈஞ்சங்குச்சியால் செய்யும் துடைப்பம். சீ > ஈ (ஈங்கு/ஈஞ்சு/ஈந்து ...) ஈ + கோ(ய்) = சீ(ஈஞ்ச) மரங்கள் நிறைந்த மலை (=கோ). திரு ஈங்கோய் மலை எழுபது புகழ்பெற்ற இயற்கைவளன் பாடும் நூல். 15 வெண்பா கிடைக்கலை, ஆறுமுக நாவலர் போன்றாருக்கு. மாயவரம் மு. அருணாசலம் ஐயா, செப்பறை ஆதீனச் சுவடியில் அழிந்தது என அஞ்சிய 15 வெண்பாக்கண்டு பூர்த்தி செய்தார். பாலூர் கண்ணப்பமுதலியார் உரைசெய்தார்.

கோத்தும்பி = மலைவண்டு பற்றி எழுதினேன். https://groups.google.com/g/vallamai/c/JHXP255Zj9g/m/cA1kwAVzDAAJ
19 மதுகரமும் அளிகள் ஆகும் என்கிறது திவாகரம். அளிகள் தம் இறகால் காற்றில் உண்டாக்கும் ஒலிகள் பல.  ஒவ்வொரு சொல்லையும் ஆராய இயலும். உ-ம்: தும்பி என்ற சொல்.   ‘கோத்தும்பியும், கருந்தும்பியும்’ என்ற கட்டுரை தரலாம். கோ என்பது மலை. மலைவண்டு, கோவண்டு, மலைத்தும்பி என்றெல்லாம் சொல்லலாம். கோத்தும்பி இமய மலையில் அதிகம் உண்டு. மாளுவ தேசத்தில் ஒன்று மட்டும் மிஞ்சி இருக்கிறது. மேற்குத் தொடர்ச்சி மலையில் இந்தக் கோத்தும்பி வாழ்ந்திருக்கவேண்டும். திருவாசகம், திவ்ய பிரபந்தம் இவற்றில் காணும் கோத்தும்பி இன்று இல்லை, அழிந்துவிட்டது. கோத்தும்பி பிருங்கராஜா/ ராஜவண்டு. இன்று தென்னிந்தியா இழந்துவிட்டது. கருந்தும்பி உண்டு. Black carpenterbee.

மேல்/மேரு போலவே, கோ என்னும் தமிழ்ச்சொல் ஆப்கானிஸ்தான் அங்கிருந்து ஈரான் வரை மலைக்குப் பொருளாகப் போய் உள்ளது. (1) புலவு pulav/pilaf என்று சிந்து நாகரிக புலாச்சோறு, (2) இடு- > இட்டி > இஷ்டி > இஸ்தி(செங்கல் = நேரான கல்) போல, கோ ‘மலை’ பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் நிறையக் கேட்கலாம்.

பிற பின்!
NG

kanmani tamil

unread,
Jun 21, 2022, 1:18:24 AM6/21/22
to vallamai
ஏற்கெனவே 'உலக அளி நாள்' என்ற இழையில் இச்செய்திகள் இடம் பெற்றுள்ளன. 
சக 

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

N. Ganesan

unread,
Jun 21, 2022, 7:23:17 AM6/21/22
to Santhavasantham

On Tue, Jun 21, 2022 at 5:37 AM Pas Pasupathy <pas.pa...@gmail.com> wrote:
சிந்துபூ. ஆண்டாள் "சூடிக்கொடுத்த சுடர்க்கொடி". அதுபோல் " சிந்துபூ" பூமாதேவி சூடிக்கொடுத்த மலர் என்றும் கூறலாம் என்று தோன்றுகிறது. 

On Tue., Jun. 21, 2022, 4:40 a.m. NATARAJAN RAMASESHAN, <chrome...@gmail.com> wrote:
"சிந்துபூ" என்பதைப் பற்றி இங்குச் சான்றோர்களின் கருத்துகளைப் படிக்கையில் என் உள்ளத்தெழுந்த வெண்பா:

அருமை. மரியாதைப்பன்மையுடன் “நின்றார்க்கு” என்கிறீர்.
“நின்றாற்கு” என்றும் சொல்லலாம். வேங்கடவன் திருமலை நின்றான்.

கோட்டுப்பூ வேண்டேன், கொடிப்பூவும் யான்வேண்டேன்,
ஓட்டமாய் ஓடுமுகில் ஒண்மழைபெய் - காட்டினில்,
மந்திபாய் வேங்கட மாமலை நின்றார்க்குச்
சிந்துபூச் சூட்டுவேன் சேர்த்து!

                                    -- தில்லைவேந்தன்
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

N. Ganesan

unread,
Jun 21, 2022, 8:31:43 AM6/21/22
to vallamai, Periannan Chandrasekaran, Kanaka Ajithadoss
On Tue, Jun 21, 2022 at 12:18 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
>
> ஏற்கெனவே 'உலக அளி நாள்' என்ற இழையில் இச்செய்திகள் இடம் பெற்றுள்ளன.
> சக

(1) ஈந்து மரம்போல அத்தனை பெயர்பெற்ற மரம் தமிழில் இல்லை. ஈந்து/ஈங்கு/ஈஞ்சு, ... சீ > சீந்து > ஈந்து/ஈங்கு/ஈஞ்சு (cf. கொங்கு/கொஞ்சு, ‘கங்கம்’ = கொக்கு, வளைதலால். குத்து/குந்து - அடைகாத்தல், எனவே, முட்டைக்குள் குத்தி/குந்தி வளைந்து அடைந்து இருப்பது குஞ்சு. பழக்கப்படுத்திய யானை பாகன் ஏற வளைந்து காலையும். முதுகையும் கொடுக்கும். எனவே, ர-பித்தியம் பெற்று குஞ்சரம்). சீ (சீழ்) ஈஞ்சம் பாளை கள்ளைச் சிந்தும். எனவே, சீ/சீந்து. ப்ராகிருத விதிப்படி சீந்து சிந்து நதிக்குப் பெயர்தந்தது. காண்/கண் ... போல. ஈ + கோ = ஈங்கோய்.  போஸ்ட்கம்பம் என்பது போல, ஈங்கோய் மலை என்கிறோம் :-) In mountains of Baluchistan (where Dravidian language, Brahui exists, the earliest to split from Proto-Dravidian) and other mountains in Pakistan, Afghanistan, the ancient Dravidian word. kO 'mountain' which enters as a loan word to Dari, a Persian dialect and so on. For example, see the Jewish German scholar, Gustav Oppert who taught at Presidency College, Madras book: On the original inhabitants of Bharatavarsha of India (1893).
Hope we can find a photograph of Dr. Oppert from Madras, and place it in his wiki entry.
https://www.jewishvirtuallibrary.org/gustav-salomon-oppert
https://en.wikipedia.org/wiki/Gustav_Solomon_Oppert

(2) மா/மான் ‘மிருகம், வனவிலங்கு’, ஆ/ஆன் ‘பசு, வளர்ப்புவிலங்கு, கன்று, காலி’, கோ/கோன் ‘மலை >>  ராஜா, உயரம் --> கோப்பு, கோபுரம்’, கா/கான் (= கானல்). இவை போல மேலும் உண்டா? கோத்தும்பி மலைகளில் வாழும் bumblebee. ஏலம் இதனை வளர்ப்புப் பயிர் ஆக்கினோர் தமிழர் என்பர். ஏலகிரி, ... ஆனால், கோத்தும்பி மனித நடவடிக்கையால் தென்னிந்தியாவில் அழிந்துவிட்டது. வடக்கே உண்டு. நாலாயிரம், மாணிக்கவாசகரில் மட்டும் கோத்தும்பி உண்டு.

(3) அளியரசு, இது வடமொழியில் பிருங்கராஜா என்றாகும். அளியரசு = கருந்தும்பி = Carpenterbee.
http://tamilconcordance.in/NDPconc-1-a1.html#அளி

https://www.youtube.com/watch?v=QBl0FVIK82Q - திரு. சற்குருநாத ஓதுவார்
வண் தரங்கப் புனல் கமல மது மாந்திப் பெடையினொடும்
ஒண் தரங்க இசை பாடும் அளிஅரசே! ஒளி மதியத்-
துண்டர், அங்கப்பூண் மார்பர், திருத் தோணிபுரத்து உறையும்
பண்டரங்கர்க்கு என் நிலைமை பரிந்து ஒரு கால் பகராயே!

'திருப்புகழ் அடிமை' ஸ்ரீ சு. நடராஜன்:
https://kaumaram.com/vaguppu/vgp15.html

அரனை நாடிச்செல் அளியரசே! (கிவாஜ மகள்)
http://kungumam.co.in/APArticalinnerdetail.aspx?id=3390&id1=52&id2=0&issue=20160801

http://www.ahimsaiyatrai.com/p/blog-page_557.html
10. ஸ்ரீ சீதள நாதர் துதி
 (இதுமுதல் பத்து கவிகள் பறவைகளை விளித்து இறைவனிடம் சென்று வரும்படிப் பாடியவை)

வண்டு

091. பிண்டிமலர்த் தேனுகந்து பிரசமெலாம் தானாடி
ஒண்டரங்க இசைபாடும் அளியரசே ! சீதளனின்
விண்டடவும் பொற்கோயில் நீசென்றே மலர்வாசம்
கொண்டணைந்தே எனக்களித்துக் கூர்வினைகள் நீக்காயோ?

More later, NG

N. Ganesan

unread,
Jun 21, 2022, 9:39:56 AM6/21/22
to Santhavasantham

On Tue, Jun 21, 2022 at 7:24 AM Pas Pasupathy <pas.pa...@gmail.com> wrote:
>>பூதேவியின் அவதாரம் தானே ஆண்டாள். திரு. சௌந்தரிடம் இதுபற்றிய ஆச்சாரியர்கள் கூற்றுகளைக் கேட்கலாம்.

வில்லிபுத்தூரில் ஸ்ரீதேவி,பூதேவி, நீளாதேவி மூவரும் இணைந்தவரே ஆண்டாள் என்ற ஐதீகம் உண்டு. அதனாலேயே இதைப்பற்றி நான் எழுதவில்லை.

ஸ்ரீ ஆண்டாள்

முன்பு திரேதா யுகத்தில் விதேக நாட்டில் மிதிலை நகரில் ஜனக மன்னன் யாகசலலை அமைத்தற்பொருட்டுக் கலப்பை கொண்டு பூமியை உழுகையில், அவ்வுழுபடைச் சாலிலே ஸ்ரீ தேவியின் அமிசமான ஒரு மகள் தோன்ற, அவளை அவ்வரசன் தன் புத்திரியாகப் பாவித்துச் சீதையென்று பெயரிட்டு வளர்த்து வந்தான். அச்சீதையை அயோத்தி வேந்தன் தசரதனுக்குக் குமாரனாக அவதாரம் செய்த திருமகள்நாதன் மணந்து, மனைவியைக் காரணமாகக் கொண்டு புவியில் தீயோரைக் கொன்று நல்லோரைக் காத்தார். ஸ்ரீ தேவி புவியில் தோன்றி, புவியிலுள்ள மறச் செயல்கள் மறையவும், அறச் செயல்கள் தழைத்து உலகம் உய்யவும் வேண்டி திருமாலின் அவதாரமாகிய இராகவனுக்கு இனிய துணைவியானாள்.

அதுபோலவே, பின்பு கலி யுகத்தில் பாண்டிய நாட்டில் ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரியாழ்வார் இறைவனுக்கு மலர் மாலை கட்டித் தருவதற்கு அமைக்கப்பட்ட நந்தவனத்தில் துளசி மலரில் (A. H. 9-ஆம் நூற்றாண்டில்) நள ஆண்டு ஆடி மாதம் வளர்பிறையில் சதுர்த்தசி திதியில் செவ்வாய்க்கிழமையன்று பூர நட்சத்திரத்தில் பூமிப்பிராட்டியார் அமிசமாய்ப் பெண் குழந்தை தோன்றியது. அங்ஙனம் அவதரித்த அப்பெண் குழவியை நந்தவனத்தில் பார்த்த பெரியாழ்வார் பெருங்களிப்புக் கொண்டு, அக்குழவியைத் தமது மகளாகப் பாவித்துக் கோதை எனப் பெயரிட்டு வளர்க்கலாயினார்.

I add Archana Venkatesan's translation on ANTAL. Enjoy!
NG

On Tue, 21 Jun 2022 at 07:37, N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
On Tue, Jun 21, 2022 at 5:37 AM Pas Pasupathy <pas.pa...@gmail.com> wrote:
சிந்துபூ. ஆண்டாள் "சூடிக்கொடுத்த சுடர்க்கொடி". அதுபோல் " சிந்துபூ" பூமாதேவி சூடிக்கொடுத்த மலர் என்றும் கூறலாம் என்று தோன்றுகிறது. 

பூதேவியின் அவதாரம் தானே ஆண்டாள். திரு. சௌந்தரிடம் இதுபற்றிய ஆச்சாரியர்கள் கூற்றுகளைக் கேட்கலாம்.

இந்த உலகத்துக்கே, ஆதாரமாக விளங்கும் பூமிப்பிராட்டி ஆண்டாள் நாச்சியார் அவதரித்த மாதம் ஆடி மாதம்!

--

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
The_Secret_Garland_Antals_Tiruppavai_and_Nacciyar_Tirumoli.pdf

N. Ganesan

unread,
Jun 21, 2022, 12:14:34 PM6/21/22
to Santhavasantham
On Mon, Jun 20, 2022 at 6:12 AM சௌந்தர் <rsou...@gmail.com> wrote:
முன்னொரு காலத்தில் கேட்பாரின்றிக் கீழே சிந்திக்கிடக்கின்ற பூக்களையே ஏற்றுக்கொண்டு மகிழ்ந்திருந்தான் திருவேங்கடத்தான் என்று நம்மாழ்வார் பாடுகிறார்.

எந்தை தந்தை தந்தை தந்தை தந்தைக்கும்
முந்தை வானவர் வானவர் கோனொடும்
சிந்து பூமகிழும் திருவேங்கடத்து
அந்தம் இல்புகழ்க் கார்எழில் அண்ணலே.

கொம்பில் நின்றதைக் காட்டிலும், நிலத்திலே விழுந்த போது அந்நிலத்தினுடைய தன்மையாலே செவ்வி பெற்று மலர்ந்து தோன்றுகிறதாதலின், ‘சிந்துபூ மகிழும் திருவேங்கடம்’என்பது வியாக்கியானம்.

இராமாநுசர் வரலாற்றில் இந்த வரிகள் மிக முக்கியத்துவம் வாய்ந்தவை.

திருமலையில் பெருமாளுக்குப் பச்சைக் கற்பூரம் வைப்பது ஏன் எனத் தெரிந்துகொண்டேன்.

அனந்தாழ்வான் பாடிய ஸ்ரீ கோதா சதுசுலோகீ
-------------------------------------

https://stotranidhi.com/en/goda-chathusloki-in-english/

kalpadau hariṇā svayaṁ janahitaṁ dr̥ṣṭēna sarvātmanāṁ
prōktaṁ svasyaca kīrtanaṁ prapadanaṁ svasmai prasūnārpaṇam |
sarvēṣāṁ prakaṭaṁ vidhātumaniśaṁ śrīdhanvinavyē purē
jātāṁ vaidikaviṣṇucitta tanayāṁ gōdāmudārāṁ stumaḥ || 3 ||

பொருள்:

கல்பத்தின் ஆதியில் எம்பெருமானால் உலகோர்கள் யாவருடைய நன்மையையும் மனதில் கொண்டு, தன்னை ஏத்திப் பாடுதல், தன்னையே அடைந்திருத்தல், தன்னைப் புஷ்பங்களால் அர்ச்சித்தல் ஆகியவை சொல்லப்பட்டது. அதைக் கேட்ட பூமிப்பிராட்டியார் இவற்றை உலகோர்கள் யாவரும் அறியும்படி செய்வதற்காக ஸ்ரீவில்லிபுத்தூரில் பரமவைதிகரான ஸ்ரீவிஷ்ணுசித்தரான பெரியாழ்வார் திருமகளாராய் வந்து பிறந்தார். அந்த உதாரகுணமுடைய கோதை நாச்சியாரைப் போற்றுகிறோம்!
https://srivedanthasabhausa.wordpress.com/tag/ஸ்ரீகோதா-சதுச்லோகீ/

N. Ganesan

unread,
Jun 21, 2022, 12:23:13 PM6/21/22
to Santhavasantham
பூதேவி ஆண்டாளாக அவதாரம் செய்த சீவில்லிபுத்தூர் திருவிழா அழைப்பிதழ்:

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோயிலில் பகல்பத்து உற்சவம் தொடக்கம்
Dec. 14th, 2012, Dinamani

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீஆண்டாள் திருக்கோயிலில் பகல்பத்து திருமொழித் திருநாள் வெள்ளிக்கிழமை தொடங்கியது. இவ்விழா இம் மாதம் 23-ம் தேதி வரை நடைபெறும். 24-ம் தேதி பரமபதவாசல் திறப்பு நடைபெறுகிறது.பதியாய் அவாப்த ஸமஸ்தகாமனாய் ஸர்வரக்ஷகனான ஸர்வேஸ்வரன் ஸகல ஜீவாத்மாக்களும் உஜ்ஜீவிக்கும் பொருட்டு நலமந்தமில்லாதோர் நாடாகிய ஸ்ரீவைகுண்டத்திலிருந்து தேவர் வேண்டி இரக்கவந்து பிறந்தும், தாம் நினைத்த காரியம் கைகூடப்பெற்றதில்லை. எம்பெருமான் இக்காரியம் நிறைவேறுகைக்குத் தானும், ஸ்ரீபூமிபிராட்டியும், ஸ்ரீபெரிய திருவடி என்கிற ஸ்ரீகருடாழ்வாரும் கூடிப் பிரணவமென, ஸ்ரீபெரிய பெருமாளாகவும், ஸ்ரீஆண்டாளாகவும், ஸ்ரீபெரியாழ்வாராகவும் வந்தவதரித்து கூடப்பெற்று மகிழந்து பின்னானார் வணகங்குமபடி அர்ச்சாவதார திவ்ய மங்கள விக்ரக ரூபனாய் எழுந்தருளியிருக்கும் பெருமை வாய்ந்தது ஸ்ரீவில்லிபுத்தூர். பெரிய பிராட்டியார் ஸ்ரீஜனக மகாராஜன் திருமகளாகத் தோன்றியும் வளர்ந்தும் ஸகல ஜீவாத்மாக்களையும் தனியே வாழ்விக்க பெறாத குறைதீரப் பூமிப்பிராட்டியார் வைகுந்தவான் போகந்தன்னையிகழ்ந்து அஞ்சு குடிக்கொரு சந்ததி எனப் பெரியாழ்வார் திருமகளாகத் திருநந்தவனத்து திருத்துளவச்செடியின் கீழ்த் திருவாடிப்பூரத்தில் அவதரித்தருளினார். அவள் சார்ங்கமென்னும் வில்லாண்ட எம்பெருமானைத் தன் கல்யாண குணங்களாலும் பாமாலை, பூமாலையாலும் சேதனர்களைத் தன்பக்தியாலும் ஆண்டு அதனால் ஸ்ரீஆண்டாள் என்று பெயர் பெற்றாள். நாராயணனே நமக்கே பறைதருவான் என்று கைங்காரியத்தை சர்வேஸ்வரனே தரவேணும் என்று எற்றைக்கும் ஏழேழ்பிறவிக்கும் உன்றன்னோடு உற்றோமேயாவோம். உனக்கே நாமாட் செய்வோம் என்று இக்கைங்கர்யம் உன் அருகில் இருந்து கொண்டே இவ்வாத்ம தத்துவங்கள் உள்ளளவும் இடைவிடாது செய்ய அருளவேணும் என்றும், மற்றை நங்காமங்கள் மாற்று என்று இத்தகைய கைங்கர்யத்திலும் தனக்கென்ற எண்ணமாகிய களையையும் நீயே அறுத்துத்தர வேணுமென்ற வேதமனைத்திற்கும் வித்தான பொருளை சங்கத் தமிழ் மாலை என்ற பாமாலை பாடிக்கொடுத்து தொடுத்த துழாய் மலர் சூடிக்களைந்தன சூடும் இத்தொண்டர்களோம் என்று எம்பெருமானுக்கும் தன் குழலில் சூடிப் பாகவத சம்பந்தமான நறுமணமூட்டி சூட்டிவித்து ஸர்வதந்த ஸர்வரஸ என்ற ஸ்ருதிப் பிரதிபாத்திய ஸித்தனாகையைப் பூமாலையால் சூடிக்கொடுத்தும் ஸம்ஸாரி சேதனர்களை வாழ்விக்க வேண்டி ஓதுவித்தது மான இம்மூன்று காரணங்களாலே வாழ்விக்கச் செய்தருளினாள்.திருமங்கை மன்னன் பெரியபெருமாளிடத்தில் திருவாய்மொழிக்கு வேத ஸாம்யத்தை பிரார்த்தித்துப் பெற்ற அந்த உத்ஸவத்தை சிறிய திருஅத்யயன உற்சவம் (பகல்பத்தும்), பெரிய திருஅத்யயன உற்சவம் (ராப்பத்தும்) ஆண்டுதோறும் நடைபெறும்.இதனையொட்டி, ஸ்ரீஆண்டாள் ஸ்ரீரெங்கமன்னார் சேர்த்தியில் மூலஸ்தானத்திலிருந்து (கோபால விலாசம்) பகல்பத்து மண்டத்திற்கு புறப்பாடு நடைபெற்று, வேதப்பிரான்பட்டர் திருமாளிகையில் பச்சை பரப்பக் கடாக்ஷித்து மண்டபம் சேருதல் நடைபெற்று, அங்கு விண்ணப்பஞ்செய் கோஷ்டி நடைபெற்றது.மாலை ஸ்ரீபெரியபெருமாள் கருடக வாகனத்திலும், ஸ்ரீபெரியாழ்வார் யானை வாகனத்திலும் ஸ்ரீஆண்டாள் சந்நிதி கல்யாண மண்டபத்தில் திருப்பல்லாண்டுதொடக்கம் நடைபெற்றது. இரவு மாட வீதிகளில் கண்டருளித் தோளுக்கினியானில் பகல்பத்து மண்டபம் சேர்தல் நடைபெற்று, ஆழ்வார்கள் பகல்பத்து மண்டபம் சேர்ந்து திருத்திரை வாங்குதல் நடைபெற்றது.

உற்சவ நாட்களில் ஒவ்வொரு நாளும் பாசுரங்கள் வியாக்யானம் நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை கோயில் தக்கார் கே.ரவிச்சந்திரன், செயல் அலுவலர் ச.சுப்பிரமணியம் ஆகியோர் செய்துள்ளனர்.

See and read the invitation from Srivilliputhur Devasthanam.
Srivilliputhur-Andal-Temple-Sri-Andal-Margali-Naneerattu-Festival.pdf

kanmani tamil

unread,
Jun 21, 2022, 11:43:52 PM6/21/22
to vallamai
///திருமலையில் பெருமாளுக்குப் பச்சைக் கற்பூரம் வைப்பது ஏன் எனத் தெரிந்துகொண்டேன்.
நன்றி.
நா. கணேசன்///

இதைச் சென்னையில் இருந்த போது அருமையான நாட்டிய நாடகமாகப் பார்த்து ரசித்திருக்கிறேன். 
சக 

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUfbC7LUi_T0_6SPV85DoZvckKLpHk_jQHX4oJK4zGXkLg%40mail.gmail.com.

N. Ganesan

unread,
Jun 22, 2022, 12:19:33 AM6/22/22
to Santhavasantham
> கோட்டுப்பூ வேண்டேன், கொடிப்பூவும் யான்வேண்டேன்,
> ஓட்டமாய் ஓடுமுகில் ஒண்மழைபெய் - காட்டினில்,
> மந்திபாய் வேங்கட மாமலை நின்றாற்குச்
> சிந்துபூச் சூட்டுவேன் சேர்த்து!
>                                    -- தில்லைவேந்தன்

சிந்துபூ என்னும் திருவாய்மொழிக்கு அரிய உரைகள் பல நூற்றாண்டுகளாக இருப்பதைச் சௌந்தர் சொல்ல அறிந்தோம்.

ராமானுஜரின் நேரடி சிஷ்யர்களில் ஒருவர் அனந்தாழ்வார். 12-ம் நூற்றாண்டில் திருமலையில் வாழ்ந்தவர். அவர்தான் ஆண்டாள் பூமிதேவியின்
அவதாரம் என்ற மரபைத் தொடங்கியவர். இன்றளவும் சீவில்லிபுத்தூரில் தொடர்கிறது.
திருமலையில் பெருமாளுக்குப் பச்சைக் கற்பூரம் வைப்பது ஏன்? அனந்தாழ்வான் சரிதம்:

https://www.youtube.com/watch?v=IJOuok4ag38 கோதா சதுசுலோகீ - வேளுக்குடி விளக்கம்.

ஸ்ரீ கோதா சதுஸ்லோகிக்கு அரிய உரை டாக்டர் வி. வி. ராமானுஜன் எழுதியுள்ளார். இணைப்பில். கிடைக்காத நூல் இது.
விஷ்ணு வராக அவதாரம் எடுத்து பூதேவியைக் காத்ததைச் சொல்லி, அவர் கோதையாக அவதரித்தார் என்னும் சுலோகம்.
சீவில்லிபுத்தூர் ஊர்ப்பேர் வடமொழியில் மொழிபெயர்ப்பு இருக்கிறது.

https://stotranidhi.com/en/goda-chathusloki-in-english/
kalpadau hariṇā svayaṁ janahitaṁ dr̥ṣṭēna sarvātmanāṁ
prōktaṁ svasyaca kīrtanaṁ prapadanaṁ svasmai prasūnārpaṇam |
sarvēṣāṁ prakaṭaṁ vidhātumaniśaṁ śrīdhanvinavyē purē
jātāṁ vaidikaviṣṇucitta tanayāṁ gōdāmudārāṁ stumaḥ || 3 ||

gcrc6.jpg
gcrc7.jpg

கோதா சதுசுலோகீ உரையை வெள்ளுரை ஆக்க ஆவல். பார்ப்போம்.
நா. கணேசன்

gcrc.pdf

N. Ganesan

unread,
Jun 22, 2022, 12:42:37 AM6/22/22
to Santhavasantham
வராகமூர்த்தியின் திருவுருவில் உலகம் ஒரு கோளமாக இருத்தலைக் காணலாம். உலகை இடந்து, பூதேவியை அணைத்து மஹாவிஷ்ணு அவளுக்குச் சொல்லும் சுலோகம் வராகபுராணத்தில் இருக்கிறது. அதனையே, கோதை நாய்ச்சியாரின் அவதார காரணம் என்கிறார் அனந்தாழ்வார்.

சூடி கொடுத்த சுடர்கொடி!

வணக்கம் நண்பர்களே,

     இன்று நாம் கோதை நாச்சியாரைப் பற்றி பார்ப்போம். ஆண்டாள் என்ற திருநாமத்துடன் பிரசித்தமாக விளங்கும் கோதை ஸ்ரீ வில்லிபுத்தூரில் வடபத்ரசாயி பெருமாளின் சந்நிதியருகே அமைந்த துளசி வனத்தில் ஆடி மாதம் பூர நட்சத்திரத்தில் அவதரித்தார்.

 அவரை விஷ்ணுசித்தரான பெரியாழ்வார் எடுத்து வளர்த்தார்.அவர் பூமி தேவியின் அம்சம். பெருமாளின் பிராட்டிமார்களின் ஒருவர் தான் பூதேவி. இந்த பூதேவி தான்  பூமாதேவி என்றும் விளங்குகிறாள்.

   கோதை நாச்சியாரின் அவதாரத்திற்கு ஓர் காரணமுண்டு. அக்காரணத்தை நாமறிந்தால் ஆண்டாளை பற்றின புரிதல் இன்னும் வலுப்பெறும்.

    கஷ்யபர் என்ற ரிஷிக்கு அதிதி மற்றும் திதி என்று இரண்டு மனைவியர் இருந்தனர்.

   அவர்களில் திதிக்கு இரண்டு அசுர பிள்ளைகள் பிறந்தனர். அவர்கள் இரண்யாக்ஷன் மற்றும் இரண்யகசிபு.

    இவர்களில் மூத்தவன் இரண்யாக்ஷன், கடுந்தவமியற்றி ப்ரம்மனிடம் பல வரங்களைப் பெற்று அதன் மூலம் கர்வம் கொண்டு பூமியை ஓர் பாய் போல சுருட்டி பாதாள லோகத்தினுள்  சிறை பிடித்தான்.

   பூமி தேவி ப்ரம்மாவிடம் முறையிடவே வரமளித்த ப்ரம்மன் மஹாவிஷ்ணுவை தியானித்தார்.

    தியானத்தில் இருந்த ப்ரம்மாவின் மூக்கிலிருந்து ஓர் சிறு பன்றி யொன்று குதித்தது. அது கட்டைவிரல் அளவே இருந்தது.

    பின், ப்ரம்மன் அதைப் பார்க்க பார்க்கவே  மிக பெரிய வராகமாய் அது மாறியது.

   முனிவர்களும், ப்ரம்மதேவனும் அந்த பன்றியின் தாமரைக்கண்களைப் பார்த்து இது மஹாவிஷ்ணுவே என அறிந்து பலவாறு துதிசெய்தனர்.

     தாமரைக்கண்கள் பரதேவதையின் ஓர் அடையாளம். எந்த அவதாரத்திலும் இந்த அடையாளம் மாறாது.

     மஹாவராஹம் இரண்யாக்ஷனுடன் போர் செய்து  அவனை வதைத்து பூமி தேவியை மீட்டு வெளிவந்தது.

  தனது மனைவியான பூமிதேவியை பெருமாள் தனது இடது தொடையில் அமர்த்திக் கொண்டு காட்சியளித்தார்.

   அப்போது பூமிதேவி பூமியில் வாழும் தனது பிள்ளைகளின் மேல் அக்கறை கொண்டு அவர்கள் பரமனை எளிதில் அடைய வழியை அருளுமாறு பெருமாளிடம் கேட்டார்.

    பெருமாள் நல்லதோர் உபாயத்தை உபதேசிக்கலானார். வராஹ மூர்த்திக்கும் பூமிப் பிராட்டிக்கும் நடந்த விவாதம் ' வராஹ புராணம்' என விளங்குகிறது.

    இதில் பெருமாள் தன்னை மக்கள் எளிதில் அடைய அருளிய மிக முக்கியமான ஸ்லோகம் ஒன்றுள்ளது.

" ப்ரோக்தம் ஸ்வஸ்ய ச கீர்த்தனம் ப்ரபதனம் ஸ்வஸ்மை ப்ரசூணார்பணம்"

இதன் அர்த்தம்,

"தூமலர் தூவி தொழுது, வாயினால் பாடி,மனத்தினால் சிந்திக்க" என்று அர்த்தம்.

   அதாவது இறைவனை அடைய அவனை பாடி, அவனைப் பற்றி சிந்தித்து அவனை துதிப்பது என்பதாகும்

    இந்த சமஸ்கிருத ஸ்லோகத்தின் பொருளை தமிழ் மக்களிடம் உபதேசிக்கவே பூமிதேவி கோதையாக அவதரித்து,
  தானருளிய திருப்பாவையின் ஐந்தாம் பாசுரத்தில் இந்த செய்தியை வைத்தாள்.

    என்றோ கிருத யுகத்தில் வராக பெருமாள் உபதேசித்ததை நம் மேல் கருணை கொண்டு கலியில் கோதையாக அவதரித்து நம் தமிழில் அந்த இறைவனையடையும் மார்க்கத்தை உபதேசித்துள்ளாள் கோதை.
    இதுவே கோதையின் அவதார காரணம். மேலும் கோதை திருவரங்கநாதனை கைபிடித்த போது அவளின் வயது ஐந்து.
ஐந்து வயது பிள்ளை பக்தியின் முதிர்வால் இறைவனை அடைந்தது. இதை உலகியல் கணவன் மனைவி உறவோடு இணைத்துப் பேசுவது அர்த்தமற்ற செயலாகும்.

N. Ganesan

unread,
Jun 22, 2022, 12:53:15 AM6/22/22
to Santhavasantham
Collecting all these references, a Srivaishnavar should write the early instances of ANDAL as an incarnation of Bhudevi. May be articles exist in small-circulation and old Srivaishnava patrikais. will ask more from Archana Venkatesan, Vidya Dehejia, Vasudha Narayan, Indira Peterson, Sitar Srini Redd(Amuktamaalyada) ...

Even though Sri Andal is one of the 12 Azwars, as per the Sri Vaishnavism system, SHE enjoys a special status as the consort of Lord Sriman NArAyaNA - is this correct?

Correct.

Did either Sri Ramanujacharya, or Sri Desika, or one of the later acharyas of Sri Vaishnavism portray Sri Andal as Bhudevi?

Yes. Periyavachan Pillai (post Ramanuja) makes several references to her as an incarnation of Bhumi Devi in his Tiruppavai commentaries. Vedanta Desika has many works such as Goda Stuti and Rashya Shikamani in which he does the same. Thirukkannamangai Andan (pre-Ramanuja) also refers to her as a "companion of Lakshmi".

What is the earliest reference available to us, that talks about Sri Andal as an incarnation of Bhudevi?

That would be either Thirukkannamangai Andan's verse or Periyavachan Pillai's commentaries.

On a separate note, the yajurvedic bhUsUktam contains a phrase (trigmshaddhAm avirAjati)that is considered to be a foretelling of Bhumi devi's upcoming incarnation as Andal and writing the Tiruppavai.

N. Ganesan

unread,
Jun 22, 2022, 9:38:00 AM6/22/22
to Santhavasantham, thiruppug...@gmail.com
திருக்கண்ணமங்கை ஆண்டான் ஸ்ரீ நாதமுனிகளின் சீடர். கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டு. திருக்கண்ணமங்கை ஆண்டான் முதன்முதலாக, ஆண்டாள் பூதேவியின் அவதாரம் என்று தமிழில் பாடினார். பின்னர், 12-ம் நூற்றாண்டில் அனந்தாழ்வான் வடமொழியில் அது எவ்வாறு என்று வராகபுராணத்தில் பூமிதேவிக்கு விஷ்ணு கூற்றைக் கூறி, அதனை எல்லா மக்களுக்கும் கொண்டுசெல்ல, பூமாதேவி ஆண்டாளாகச் சீவில்லிபுத்தூரில் பிறந்தாள் எனப் பாடினார். ஆக, 1000+ ஆண்டுகளாக ஆண்டாள் பூமிப்பிராட்டியின் அவதாரம் என உபயவேதாந்தம் என்று தமிழ், சம்ஸ்கிருதம் இரு செம்மொழிகளிலும் திருக்கண்ணமங்கை ஆண்டான், அனந்தாழ்வான் போன்ற ஆச்சாரியர்கள் நிலைநாட்டியுள்ளனர். வியாக்கியானச் சக்கரவர்த்தி பெரியவாச்சான்பிள்ளை மணிப்பிரவாள உரையில் பல இடங்களில் இதே கருத்தை ஆண்டுள்ளார்.

 திருக்கண்ணமங்கையாண்டான் தனியனில் .

அல்லிநாள் தாமரைமேல் ஆரணங்கின் இன்துணைவி
மல்லிநாடு ஆண்ட மடமயில் - மெல்லியலாள்
ஆயர்குல வேந்தன் ஆகத்தாள், தென்புதுவை
வேயர் பயந்த விளக்கு.

அல்லி - இதழ்களை உடைய
நாள்தாமரை மேல் - அப்போதலர்ந்த தாமரைப் பூவில்
ஆர் - பொருந்தியிராநின்ற
அணங்கின் - தெய்வப் பெண்ணான பெரியபிராட்டியார்க்கு
இன் துணைவி - இஷ்ட ஸகியாயும்.

அல்லிநாட் டாமரைமேல் ஆரணங்கின் இன்துணைவி
= ANDAL is the companion of Lakshmi, i.e., she is Bhudevi incarnate.

பாண்டியன் ஆண்ட மல்லிநாடு. ஆழ்ந்த பக்தியால் ஆண்டவள் ஆண்டாள் (< ஆழ்-; ஆண்டி ...). எனவே, ஆழ்வார் ஆனவள் கோதைநாச்சியார்.
https://sujathadesikan.blogspot.com/2021/05/blog-post_13.html
https://sujathadesikan.blogspot.com/2020/11/16.html

திருக்கண்ணமங்கையாண்டான் தனியன் - உரையுடன்,
http://acharya.org/bk/pb/pba/dd/NachchiyarThirumozhi-PBA.pdf

22341.jpg

22342.jpg

வேந்தன் அரசு

unread,
Jun 23, 2022, 10:28:17 AM6/23/22
to vallamai, Santhavasantham, thiruppug...@gmail.com
கொல் கரை நறும் பொழில் குயில் குடைந்து உதிர்த்த
புதுப்பூஞ் "செம்மல்" சூடி, 

புத., 22 ஜூன், 2022, பிற்பகல் 7:08 அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUcC%2Bs66%2BL1zdZLGfQko2Q%2BWkzY8pDeV8c6ZtbJHf0J4RA%40mail.gmail.com.

--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

N. Ganesan

unread,
Jun 24, 2022, 3:12:28 PM6/24/22
to Santhavasantham, thiruppug...@gmail.com

On Tue, Jun 21, 2022 at 3:40 AM NATARAJAN RAMASESHAN <chrome...@gmail.com> wrote:
"சிந்துபூ" என்பதைப் பற்றி இங்குச் சான்றோர்களின் கருத்துகளைப் படிக்கையில் என் உள்ளத்தெழுந்த வெண்பா:

கோட்டுப்பூ வேண்டேன், கொடிப்பூவும் யான்வேண்டேன்,
ஓட்டமாய் ஓடுமுகில் ஒண்மழைபெய் - காட்டினில்,
மந்திபாய் வேங்கட மாமலை நின்றாற்குச்
சிந்துபூச் சூட்டுவேன் சேர்த்து!

                                    -- தில்லைவேந்தன்

நெல்லையில் இன்னமும் சிந்துபூந்துறை இருக்கிறது:

முந்திமா விலங்கல் அன்று எடுத்தவன் முடிகள்தோள் நெரிதரவே
உந்திமா மலரடி ஒருவிரல் உகிர்நுதி யால் அடர்த்தார்
கந்தமார் தருபொழில் மந்திகள் பாய்தர மதுத்திவலை
சிந்துபூந் துறைகமழ் திருநெல்வேலி யுறை செல்வர் தாமே - சம்பந்தர்.

நிலமகள் சிந்துபூத் தரிப்பதைச் சங்க இலக்கியம் வண்ணிக்கிறது:
சிறுபாணாற்றுப்படை தொடக்கமே இதுதான்.

நிலமகளின் தோற்றம்

மணி மலைப் பணைத்தோள் மாநில மடந்தை
அணி முலைத் துயல்வரூஉம் ஆரம் போல,
செல்புனல் உழந்த சேய்வரல் கான்யாற்று. (1–3)

பொருளுரை:  மூங்கிலாகிய தோள்களையுடைய பெரிய நிலமகளின் நீலமணிகளையுடைய மலையாகிய அழகிய மார்பில், தொலைவிலிருந்து, இரு பக்கங்களிலிருந்தும் வந்து, அசையும் முத்து மாலையைப் போல அசைந்துக் கூடி , கரையில் இருக்கும் மரங்களை வருத்தி ஓடுகின்றன காட்டு ஆறுகள்.

குறிப்பு:   அணி முலைத் துயல்வரூஉம் ஆரம் (2)  – நச்சினார்க்கினியர் உரை – இரண்டு மலையினின்றும் வீழ்ந்து, இரண்டு ஆற்றிடைக் குறையச் சூழ் வந்து கூடுதலின் முத்து வடமாயிற்று.  இது மெய்யுவமம்.  பெருக்கால் கோடுகள் வருந்தலின் உழந்தவென்றார்.  புறநானூறு 198 – அருவி தாழ்ந்த பெருவரை போல ஆரமொடு பொலிந்த மார்பின்.  புனல் உழந்த (3) – வை. மு. கோபாலகிருஷ்ணமாச்சாரியார் உரை – பெருக்கினால் மரக்கிளைகள் ஆட்டமெடுப்பதனால் ‘புனல் உழந்த’ என்றது.  பொ. வே. சோமசுந்தரனார் உரை – மலையும், கான்யாறும், பொழிலும் கூறினமையின் இப்பாலை, குறிஞ்சி திரிந்த பாலை என்க.  நிலமடந்தை (1) – வை. மு. கோபாலகிருஷ்ணமாச்சாரியார் உரை – பூமிதேவி.  

சொற்பொருள்:  மணி மலை – நீலமணியையுடைய மலைகள், பணைத்தோள் – மூங்கிலாகிய தோள்களையுடைய, மாநில – பெரிய நிலம், மடந்தை – இளம் பெண், அணி முலை – அழகிய மார்பு, துயல்வரூஉம் ஆரம் போல – அசையும் முத்து மாலையைப் போல (வரூஉம் – இன்னிசை அளபெடை), செல் புனல் உழந்த – ஓடும் நீராலே மரங்களை வருத்திய, சேய்வரல் கான் யாற்று – தொலைவிலிருந்து வரும் காட்டு ஆறுகளின்

கொல் கரை நறும் பொழில் குயில் குடைந்து உதிர்த்த
புதுப்பூஞ் செம்மல் சூடி, புடை நெறித்து,   5
கதுப்பு விரித்தன்ன காழ் அக நுணங்கு அறல். (4-6)

பொருளுரை:  ஆற்றின் நீரினால் இடிக்கப்படும் கரையில் உள்ள நறுமணமுடைய சோலையில் உள்ள குயில்கள் தங்கள் அலகினால் குத்திக் கீழே உதிர்த்த புதிய வாடல் மலர்களைச் சூடிய, பக்கங்கள் சுருண்ட நிலமகளின் கூந்தல் விரிந்திருப்பது போல இருந்தது கருமையான நுண்ணிய மணல்.

குறிப்பு:  கூந்தலைப் போன்ற மணல் – ஐங்குறுநூறு 345 – கதுப்பு அறல், கலித்தொகை 32 – எஃகு இடை தொட்ட கார்க் கவின் பெற்ற ஐம்பால் போல் மை அற விளங்கிய துவர் மணல், சிறுபாணாற்றுப்படை 6 – கதுப்பு விரித்தன்ன காழ் அக நுணங்கு அறல்.

சொற்பொருள்:  கொல் கரை – ஆற்றின் நீரினால் இடிக்கப்படும் கரை, நறும் பொழில் – நறுமணமுடைய சோலை, குயில் குடைந்து உதிர்த்த புதுப்பூ – குயில் குத்தி உதிர்த்த புதிய மலர்கள், செம்மல் சூடி – வாடல் மலர்களைச் சூடி, புடை நெறித்து – பக்கங்கள் நெளிந்து, பக்கங்கள் சுருண்டு, கதுப்பு விரித்து அன்ன – கூந்தல் விரிந்திருப்பது போல, காழ் அக நுணங்கு அறல் – கருமையான நுண்ணிய மணல் (காழ் – கருமை) https://learnsangamtamil.com/தமிழ்-உரை-சிறுபாணாற்றுப/

-------------

இதனை, திருமலை அனந்தாழ்வார் (ராமாநுஜரின் நேரடிச் சீடர்) வராகபுராணச்
சுலோகத்தைச் சொல்லி, பூமாதேவி ஆண்டாள் அவதாரம் என்கிறார்.
வராகபுராணத்தில், நிலமகளை ஏனம் இடந்தது, பன்றியின் மருப்பைப்
பற்றி நிற்கிறாள் நிலமகள்.  
நிலமகள் ஏனத்தின் கொம்பைப் பற்றி நிற்கும் நிலை: குப்தர் காலம்.
https://www.nortonsimon.org/art/detail/F.1975.16.06.S/
அவள் மருங்கிலே (= இடையிலே)  வளருகிறாள் தமிழணங்கு
என்றுள்ளது. தமிழ்த்தாய் வாழ்த்துகளில் ஒரு பழமையான பாடல் இது.

வில்லிபாரதம் செய்த வில்லிபுத்தூரார் ஊர் சனியூர், வடகொங்கு நாடு
என அறிவோம். இந்தச் சனியூர் எங்குள்ளது என யாரும் எழுதியுள்ளதாக
அறியேன். பொதுவாக, Coimbatore country (Simon Casie Chetty, 1859),
திருமுனைப்பாடி நாட்டின் அருகே, ... என்றெல்லாம் தான் இருக்கும்.
வில்லியின் வரலாறு எழுதிய கோவை சி.கு.நா. முதலியார்
அவர்கட்கும் தெரியவில்லை.

சனியூர் வீரராகவாச்சாரியர் மகன் வில்லிபுத்தூராழ்வார் நான்காம்
தமிழ்ச் சங்கத்தில் பாரதம் செய்தார்.
வடகொங்கில், சனியூர், பாலக்கோடு வட்டம், தருமபுரி மாவட்டம்:
Locality Name : Saniyur ( சனியூர் )
Block Name : Palakkodu
District : Dharmapuri
State : Tamil Nadu
Elevation / Altitude: 503 meters. Above Seal level
Telephone Code / Std Code: 04348
Saniyur is a small Village/hamlet in Palakkodu Block in Dharmapuri District of Tamil Nadu State, India. It comes under Modugulahalli Panchayath. It is located 17 KM towards North from District head quarters Dharmapuri. 9 KM from Palakkodu. 293 KM from State capital Chennai

Saniyur Pin code is 636808 and postal head office is Palacode .

Saniyur is surrounded by Karimangalam Block towards East , Dharmapuri Block towards South , Nallampalli Block towards South , Kaveripattinam Block towards East .

Dharmapuri , P.N.Patti , Tharamangalam , Tirupathur are the near by Cities to Saniyur.

ஏன் ஞானமலை (ஆம்பூர்) கொங்குநாட்டுத் தலம் என திருப்புகழ்ச் சுவடிகளில் உள்ளது எனப் பின்னர் பார்ப்போம். வில்லிபுத்தூரர், அருணகிரியார், இரட்டைப்புலவர்கள், கொங்கர்கோன் என்றும், மாகதர்கோன் என்றும் வில்லிபுத்தூரர் புகழும் - கம்பன் வெண்ணய்நல்லூர் சடையனைப் புகழ்ந்தாற்போல் - வக்கபாகை ஆட்கொண்டான் நிறுவிய நான்காம் தமிழ்ச் சங்கம், ... தொடர்புடையன. கி.பி. 1400 வாக்கில் தமிழ் வரலாற்றில் ஓர் ஏடு. கட்டுரை தருகிறேன்.

நா. கணேசன்
 
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

kanmani tamil

unread,
Jun 24, 2022, 3:59:09 PM6/24/22
to vallamai
/// வில்லிபாரதம் செய்த வில்லிபுத்தூரார் ஊர் சனியூர், வடகொங்கு நாடு
என அறிவோம்.///

எங்கள் ஊருக்கு அருகில் இருப்பது தான் வில்லிபுத்தூர். இப்போது முன்னொட்டாக 'ஸ்ரீ' சேர்ந்து ஸ்ரீவில்லிபுத்தூர் என வழங்குகிறது. 

சக 

You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUeiUi9r%2BbiDKQ8WwY_oG_1SUYUHeDC4%2BhwYSrNH6dKOWA%40mail.gmail.com.

N. Ganesan

unread,
Jun 24, 2022, 5:19:34 PM6/24/22
to vallamai
On Fri, Jun 24, 2022 at 2:59 PM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
/// வில்லிபாரதம் செய்த வில்லிபுத்தூரார் ஊர் சனியூர், வடகொங்கு நாடு
என அறிவோம்.///

எங்கள் ஊருக்கு அருகில் இருப்பது தான் வில்லிபுத்தூர். இப்போது முன்னொட்டாக 'ஸ்ரீ' சேர்ந்து ஸ்ரீவில்லிபுத்தூர் என வழங்குகிறது. 

ஆம். கல்வெட்டுகளில் சீவில்லிபுத்தூர். விரிவாகப் பேசியுள்ளோம். பெரியாழ்வார் பேரில்
சனியூர் வீரராகவர் தன் மகனுக்கு வைத்த பெயர் வில்லிபுத்தூரன். 

இந்தச் சனியூர் எது எனக் காட்டியுள்ளேன்.

நா. கணேசன்

kanmani tamil

unread,
Jun 24, 2022, 11:47:22 PM6/24/22
to vallamai
ஓ! பயனுள்ள தகவல். 
சக 

N. Ganesan

unread,
Jun 25, 2022, 7:40:39 AM6/25/22
to vallamai
On Fri, Jun 24, 2022 at 10:47 PM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
ஓ! பயனுள்ள தகவல். 
சக 

ஆம். வில்லிபுத்தூரர் சரிதம் எழுதியது கோவை சி. கு. நாராயணசாமி முதலியாராவர்கள். சேலம் ராமசாமி முதலியார் முன்சீபு. அவர்தான், ‘என்ன பிரயோசனம்?’ எனக் கேட்டு ஆதீனங்களில் இருந்த பழந்தமிழ்ச் சுவடிகளை அச்சில் கொண்டுவரத் தமிழ்த்தாத்தாவைத் தூண்டினார். சி.கு.நா. நூலை இற்றைப்படுத்த வேண்டிய தேவை உள்ளது. எத்தனையோ புதிய வரலாற்றுச் செய்திகள், செப்பேடுகள், கல்வெட்டுகள் கிட்டியுள. மேலும் நான்காம் தமிழ்ச் சங்கம் அமைத்தது யார்? அவன் வரலாறு என்ன? சனியூர் என்றால் எந்த ஊர் எனக் காட்டியுள்ளேன். தன் நாட்டில் இருந்த அங்கே போய், வீரராகவர், வில்லிபுத்தூரர் பேசி தன் தலைநகர்க்கு அழைத்துவந்து அரண்மனையில் தமிழ்ச்சங்கத் தலைமை ஏற்கச் செய்துள்ளான். தமிழின் சிறந்த மாபாரதத்தை ஆக்கச் செய்தான்.

சீவில்லிபுத்தூர் மக்கள் பேச்சுவழக்கில் சீலுத்தூர், சீலத்தூர் எனப் பல காலமாக வழங்குகிறது.இதெல்லாம் அறியாத யாரோ ஒருவர் சென்னை ஆபிஸில் இருந்துகொண்டு ஸ்ரீ = திரு. எனவே, திருவில்லிபுத்தூர் என சீவில்லிபுத்தூரை மாற்றி வருகின்றனர். தமிழின் ஆழமும், அகலமும் இது போன்ற செயல்களால் குறைவுபடுகிறது.

ஆனால், தமிழுக்காகவே வாழுகிறோம் என இரு பெரும் த்ராவிட கக்‌ஷிகளும் கூவுகின்றன. கக்‌ஷிகளின் பேர்களில் ஸம்ஸ்கிருதப் பேர்தான். முதலில், 21-ம் நூற்றாண்டில், பெருங்கட்சிகளின் பெயர்களில் தமிழர் என்ற சொல் ஏறட்டும். தமிழ்த் தேசியர்கள் கேட்கிறார்கள்.

நா. கணேசன்

kanmani tamil

unread,
Jun 25, 2022, 10:26:46 AM6/25/22
to vallamai
சீலுத்தூர் என்று தான் இன்றும் பேச்சு வழக்கு உளது. கல்லூரி வளாகத்தில் மாணவர் கூட்டம் 'ஸ்ரீவி' என்ற செல்லப்பெயரால் சுட்டிப் பேசுவர். 

சீலுத்தூர் = ?
சக 

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

kanmani tamil

unread,
Jun 26, 2022, 3:39:56 PM6/26/22
to vallamai
///நெல்லையில் இன்னமும்
 சிந்துபூந்துறை இருக்கிறது:/// Dr.Ganesan pasted two days ago. 

இருக்கட்டுமே... பூக்கள் உதிர்ந்து கிடக்கும் நீர்த்துறைக்கு அப்பெயரைச் சூட்டி உள்ளனர். அவ்வளவே. அதற்காக; 
"எந்தை தந்தை தந்தை தந்தை தந்தைக்கும்
முந்தை வானவர் வானவர்  கோனொடும்
சிந்து பூமகிழும் திருவேங்கடத்து" 
என்ற பாடலின் அடிகளுக்குக் 
'கீழே சிந்திய பூக்களைச் சூடி மகிழ்ந்த' எனப் பொருள் கூற வேண்டிய தேவை இல்லை. 

பூக்கள் சிந்திக் கிடப்பதைச் சிறுபாணாற்றுப்படை மட்டுமில்லை; சிலப்பதிகாரத்தில் இருந்து பாவேந்தர் பாரதிதாசன் பாடல்கள் வரை பாடித்தான் உள்ளனர்.

சக 

N. Ganesan

unread,
Jun 27, 2022, 12:10:00 AM6/27/22
to vallamai
On Sun, Jun 26, 2022 at 2:39 PM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
///நெல்லையில் இன்னமும்
 சிந்துபூந்துறை இருக்கிறது:/// Dr.Ganesan pasted two days ago. 

இருக்கட்டுமே... பூக்கள் உதிர்ந்து கிடக்கும் நீர்த்துறைக்கு அப்பெயரைச் சூட்டி உள்ளனர். அவ்வளவே. அதற்காக; 
"எந்தை தந்தை தந்தை தந்தை தந்தைக்கும்
முந்தை வானவர் வானவர்  கோனொடும்
சிந்து பூமகிழும் திருவேங்கடத்து" 
என்ற பாடலின் அடிகளுக்குக் 
'கீழே சிந்திய பூக்களைச் சூடி மகிழ்ந்த' எனப் பொருள் கூற வேண்டிய தேவை இல்லை. 

பூக்கள் சிந்திக் கிடப்பதைச் சிறுபாணாற்றுப்படை மட்டுமில்லை; சிலப்பதிகாரத்தில் இருந்து பாவேந்தர் பாரதிதாசன் பாடல்கள் வரை பாடித்தான் உள்ளனர்.

சிந்து பூச் சூடி மகிழும் நிலமகள் என்கிறது சிறுபாணாற்றுப்படை.
 
kanmani tamil

unread,
Jun 27, 2022, 1:38:19 AM6/27/22
to vallamai
மரமோ/ செடியோ/ கொடியோ; பூ உதிர்ந்தால் நிலத்தில் தான் விழும்... அதைப் புலவோர் தம் கற்பனைக்கு ஏற்பப் புனைந்துரைப்பர். 

ஆனால் சைவம், வைணவம், ஜைனம், பௌத்தம் என ஒன்றை ஒன்று விழுங்கத் துடித்த காலகட்டத்தில் எழுதிய 
"எந்தை தந்தை தந்தை தந்தை தந்தைக்கும்
முந்தை வானவர் வானவர்  கோனொடும்
சிந்து பூமகிழும் திருவேங்கடத்து" 
என்ற பாடலடிகள் 'முப்பத்து முக்கோடி தேவர்களின் தலைவன்  பூத்தூவி வழிபட்டதை மகிழ்வோடு வேங்கடவன் ஏற்றான் என்று தான் பொருள்படும். 

அது பக்தி இயக்க காலம்... திருமாலை யார் யாரெல்லாம் வழிபட்டனர் என்றெல்லாம் ஒவ்வொரு ஆழ்வாரும் பட்டியலிட்ட காலம். 

சக 

N. Ganesan

unread,
Jun 27, 2022, 9:23:36 AM6/27/22
to vallamai, Santhavasantham, housto...@googlegroups.com
On Mon, Jun 27, 2022 at 12:38 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
மரமோ/ செடியோ/ கொடியோ; பூ உதிர்ந்தால் நிலத்தில் தான் விழும்... அதைப் புலவோர் தம் கற்பனைக்கு ஏற்பப் புனைந்துரைப்பர். 

ஆனால் சைவம், வைணவம், ஜைனம், பௌத்தம் என ஒன்றை ஒன்று விழுங்கத் துடித்த காலகட்டத்தில் எழுதிய 
"எந்தை தந்தை தந்தை தந்தை தந்தைக்கும்
முந்தை வானவர் வானவர்  கோனொடும்
சிந்து பூமகிழும் திருவேங்கடத்து" 
என்ற பாடலடிகள் 'முப்பத்து முக்கோடி தேவர்களின் தலைவன்  பூத்தூவி வழிபட்டதை மகிழ்வோடு வேங்கடவன் ஏற்றான் என்று தான் பொருள்படும். 

அப்படித்தான் பழைய உரைகாரரும் பொருள் சொல்லியுள்ளனர். சிந்துதல் = தூவுதல்.
அதாவது, பூமியில் இம்மலர்கள் பிறக்கவில்லை. வானத்தில் தோன்றின மலர்கள்,
தேவர்கள் பூலோகத்துக்குக் கொண்டுவருகிறார்கள். வேங்கடத்தானைக் கண்டு
அதிசயித்துப் பத்தியால் பரவசம் அடைகின்றனர். பூக் கொண்டு வந்ததே மறந்துவிடுகிறது.
கைகளில் இருந்து தானாகச் சிந்துகின்றன அந்த மேல் லோகத்துப் பூக்கள்.
திருமலை (திருப்பதி) பூமியின் நீர்மையினாலே - புனித பூமி - மேலும் பிரகாசிக்கின்றன
அப்பூக்கள் என்கிறார்கள் வியாக்கியானங்களில்.

முன்பே பழய உரை கொடுத்துள்ளேன். மிக அழகான வியாக்கியானங்கள் இரண்டு.
மீண்டும் படிப்போம்:

எந்தை தந்தைதந் தைதந்தை தந்தைக்கும்

முந்தை வானவர் வானவர் கோனொடும்
சிந்து பூமகி ழும்திரு வேங்கடத்து

அந்தம் இல்புகழ்க் கார்எழில் அண்ணலே.

    பொ-ரை : நித்தியசூரிகள் சேளை முதலியாரோடும் வந்து தூவி வணங்குகின்ற பூக்கள் வாசனை வீசுகின்ற திருவேங்கடத்து எழுந்தருளியிருக்கின்ற, முடிவில்லாத புகழையுடைய, நீலமேகம் போன்ற அழகையுடைய அண்ணல் என் குலத்திற்கு முதல்வன் ஆவான்.

    வி-கு : அண்ணல் - பெருமையுடையவன். சிந்துபூ - வினைத்தொகை.

1‘அப்பரம்பொருள் ஈசுவரர்களாய் உள்ளவர்கட்கும் மேலான ஈசுவரனாவான்,’ என்று கூறப்பட்டுள்ளதன்றோ? வானவர் வானவர் கோனொடும் சிந்துபூ மகிழும் திருவேங்கடத்து - நித்திய சூரிகள், சேநாபதியாள்வானோடு கூட, பிரகிருதி சம்பந்தமில்லாத மலர்களைக் கொண்டு வந்து, தங்களுக்கும் அப்பாற்பட்டவன் கானமும் வானரமுமான இவற்றுக்கு முகங்கொடுத்துக்கொண்டு நிற்கிற சௌசீல்ய குணத்தை அநுசந்தித்து நைந்தவர்களாய்ப் பின்னர் முறைப்படி அருச்சிக்கமாட்டாது அடைவு கெட்டுச் சிந்தாநிற்பர்கள். இங்குள்ளார் அங்கே சென்று மேன்மையைக் கண்டு அவனுக்கே அடிமைப்படுமாறு போன்று, அங்குள்ளார் இங்கே வந்து அந்நீர்மை கண்டு ஈடுபடும்படி. மேன்மை அனுபவிக்கலாவது, அந்நிலத்திலே; நீர்மை அனுபவிக்கலாவது, இந்நிலத்திலேயன்றோ! கொம்பில் நின்ற போதையிற்காட்டிலும், நிலத்திலே விழுந்த போது அந்நிலத்தினுடைய தன்மையாலே செவ்வி பெற்று மலர்ந்து தோன்றுகிறதாதலின், ‘சிந்துபூ மகிழும் திருவேங்கடம்’என்கிறார்.

----------

http://www.tamilvedham.org/index.php?r=site/pasuram1&username=&song_no=3036&alwar_id=&prabhandam_id=4

வானவர் - நித்யஸூரிகள்
வானவர் கோனொடும் - தங்களில் தலைவரான ஸேனை முதலியரோடு கூட
சிந்து - தூவின
பூ - புஷ்பங்கள்
மகிழும்- செவ்விகுன்றாதிருக்கப்பெற்ற

விளக்க உரை

திருநாட்டிலே சென்று எம்பெருமானுக்கு அடிமை செய்வதன்றோ எல்லார்க்கும் ஸ்வரூபம்; அப்படியிருக்க, நீர் இந்நிலத்தில் திருமலையிலே அடிமை செய்ய விரும்புவது ஏன்? என்ன; திருநாட்டிலுள்ள நித்யமுக்தர்களுங்கூட இத்திருமலையிலே வந்து அடிமைசெய்யக் காண்கையாலே நானும் இங்கே அடிமைசெய்யக் குறையென்? என்கிறார். எம்பெருமானுடைய ஸர்வேச்வரத்வத்தை ஆழ்வார் வாயாரப் பேசுகிறீர் எந்தை தந்தை தந்தை தந்தை தந்தைக்கும் முந்தை என்று. இங்கே நம் ஆசாரியர்கள் அருளிச் செய்யும் அழகியவார்த்தை ஒன்றுண்டு; ஆழ்வார் ஜீவாத்மலக்ஷணமானசேஷத்வதத்தை நிரூபிக்கும்போது “அடியாரடியார் தம்மடியார் தமக்கடியாரடியார்” என்று மிகவும் கீழே இறங்கிக் கொண்டுவருவது போலவே, பரமாத்மலக்ஷணமான சேஷித்வத்தை நிரூபிக்கும்போதும் “எந்தை தந்தை தந்தை தந்தை தந்தைக்கும் முந்தை” என்று மேலே மேலே ஏற்றிப் பேசுகிறாரென்று. வானவர் என்று தொடங்கி அங்குள்ளாரும் இங்கே போந்து அடிமை செய்யும்படியை அருளிச்செய்கிறார். எம்பெருமானிடத்தில் மேன்மை நீர்மை என்கிற இரண்டு வகையான குணங்களும் உள்ளன; மேன்மை காண்பது பரமபதத்திலே; நீர்மைகாண்பது இந்நிலத்திலே. மேன்மையைக் காட்டிலும் நீர்மையே சிறந்ததாகையாலே அதனைக்காண அங்குள்ளாரும் இங்கே வருகிறார்களாயிற்று. *கானமும் வானரமுமான விவற்றுக்கு முகங்கொடுத்துக்கொண்டு நிற்கிற ஸௌசீல்ய குணத்தையநுஸந்தித்து ஈடுபட்டவர்களாய் ஸ்ரீஸேநாபதியாழ்வான் தொடக்கமான நித்தியஸூரிகள் திருவேங்கடமுடையானை ஸேவிக்க விரும்பி திவ்யபுஷ்பங்களை யெடுத்துக்கொண்டு இங்கே வருகிறார்கள்; அப் புஷ்பங்களைத் திருமலையப்பனுடைய பாதாரவிந்தங்களில் யதாக்ரமமாக ஸமர்ப்பிக்க சக்தராகாதபடி சீலகுணத்திலே உருகி நிற்கிறார்களாதலால் அவர்களது கைகளிலிருந்து புஷ்பங்கள் அவசரமாகவே சிந்துகின்றனவாம்; அப்படிச் சிந்தின புஷ்பங்கள் செவ்விகுன்றாமல் விகாஸமும் பரிமளவும் மல்கி விளங்குகின்றனவாம். திருமலையின் நிலமிதியாலே. அப்படிப்பட்ட திருமலையில் அந்தமில் புகழ்பெற்று விளங்காநின்றான் எம்பெருமான்.

-------------------------------------------------------

தெரிவு: NG

kanmani tamil

unread,
Jun 27, 2022, 9:57:38 AM6/27/22
to vallamai
பன்னிப் பன்னிப் புனையும் பாடலழகு போல உரையும் புனைவு பெற்றுள்ளது. 
சக 

Reply all
Reply to author
Forward
0 new messages