--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA1TjyDG7h%2BEaKJ9Xnedu2wLQf4rCBV_7_tL7f8-xutJ1s%2BH-Q%40mail.gmail.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAHZUM6hMzKqrMsYEfeuB3XCW7-NowJn6iC3iFSZybnD9LALh6g%40mail.gmail.com.
Dr. Babasaheb Ambedkar:The Untold Truth Movie (Tamil)https://youtu.be/lTHVL5cfWXg?t=4864On Monday, October 26, 2020 at 9:59:22 PM UTC-7 தேமொழி wrote:Brahmanical Argument / Casteism / Mr. Misunderstanding
https://youtu.be/FF7vXwA8yK8Banned Movie In India 2020 || Mr. Misunderstanding || Exposing Brahminical Castism ||On Monday, October 26, 2020 at 9:48:19 PM UTC-7 தேமொழி wrote:source - http://tamilanlibrary.blogspot.com/2016/09/manusmriti.htmlமனுஸ்மிருதி (Manusmriti)பெண்கள் தலித்கள் பற்றி ஹிந்து தர்மம் சொல்லும் இன்னா நாற்பது. மனுஸ்மிருதி ஓர் ஆய்வு.மனுஸ்மிருதி அல்லது மனு நீதி அல்லது மானுட தர்ம சாஸ்திரம் என்பது இந்து மதத்தினால் மானுட வர்க்கத்துக்கு வழங்கப்பட்ட சட்ட நூல். (மேற்கத்தேயர் டச்சு சட்டத்தை வழங்கியதை போல அல்லது இஸ்லாமியர்கள் உலகுக்கு ஷரீயா சட்டத்தை வழங்கியது போல என்று கொள்ளலாம்).இது பிரம்மாவின் வார்த்தைகள். தர்மத்தின் அதி உயர்ந்த ஏற்றுக்கொள்ளப்பட்ட சட்டங்கள் அடங்கிய புனித நூல். இதில் 2690 வசனங்களும் பன்னிரெண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு உபதேசிக்கப்பட்டுள்ளன.இது முதல் மனிதராகவும் முதல் இந்து மன்னனாகவும் கருதப்படும் மனு என்பவருக்கு பிரம்மாவினால் செய்யப்பட்ட போதனை. அந்த மனுவின் பெயரினாலேயே முழு மனித இனமும் அழைக்கப்படுகிறது (மனு, மனிதன், மானவ, Man)இந்து மதத்தின் மத சம்பந்தமான அனைத்து விடையங்களும் பிராமணர்களாலேயே கற்கப்பட்டும் எழுதப்பட்டும் வருகின்ற வேளையில் மனு நீதியில் பிராமணர்களுக்கு பக்கச்சார்பான நீதி வழங்கப்பட்டிருப்பதாக பொதுவான ஒரு குற்றச்சாட்டு பிராமணரல்லாதாரால் முன்வைக்கப்படுகின்றது.மேலும் பெண்களுக்கு பாரிய அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. இதை பெண்ணுரிமை அமைப்புகள் கடுமையாக எதிர்ப்பதுடன் விமர்சனங்களுக்கும் உள்ளாக்குகின்றனர்.வர்ணங்களின் அடிப்படையில் மனுநீதி தீர்ப்பழிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று தலித்கள் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்.ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் மனுநீதியின் பிரதியை எரித்து பாரிய போராட்டங்களை முன்னெடுத்திருந்ததும் இங்கு கவனிக்கத்தக்கது.இவ்வாறு குற்றஞ்சாட்டுவோர் எடுத்துக்காட்டாக பின்வரும் சுலோகங்களை விமர்சனத்துக்கு உள்ளாக்குகிறார்கள். (சில பதிப்புகளில் எண்கள் வேறுபடலாம் எடுத்துக்காட்டாக 22வது சில பதிப்புகளில் 5/167 எனவும் சில பதிப்புகளில் 5/164 எனவும் உள்ளது)1. “ஸ்வாபவ் ஏவ் நரினம்....” – 2/213.பெண்ணின் இயல்பு இவ்வுலகில் ஆணை வசியம் செய்வது. இதன் காரணமாக, அறிவு பெற்றவர்கள் பெண்களுடன் இருக்கும்கால் பாதுகாப்புடனேயே இருப்பர்.2. “அவிதம் சம்லம்………..” – 2/214.பெண்களின் இயல்பை சரியாகப்பெற்ற ஒருத்தியால் முட்டாளை மட்டுமன்றி ஒரு ஞானியைக் கூட அழிவில் இட்டுச்செல்ல முடியும். அவ்விருவரும் ஆசைக்கு அடிமையாகி அலைவர்.3. “மத்ரா ஸ்வஸ்த்ரா………..” – 2/215.நல்ல அறிவு பெற்றவர்கள் தங்கள் தாய்மாருடனோ மகள்மாருடனோ சகோதரிகளுடனோ தனித்திருக்கார். ஏனென்றால் காம இச்சை என்பது மிகுந்த வலிமையுடையது. அது உணர்ச்சியை தூண்டிவிடும்.4. “நவ்த்வாஹே……………..” – 3/8.சிவந்த கூந்தலுள்ளவளையோ, மிகுதியான உடல் உறுப்பொன்றை பெற்றவளையோ (எ.கா. ஆறாம் விரல்), அடிக்கடி தேகாரோக்கியம் குறைபவளையோ, உடலில் உரோமம் அற்றவளையோ அல்லது மிகுதியான முடி உள்ளவளையோ மற்றும் சிவந்த கண்கள் கொண்ட பெண்களையோ யாரும் திருமணம் செய்யக் கூடாது.5. “ந்ரக்ஷ் வ்ரக்ஷ்………..” – 3/9.நட்சத்திரங்களின் பெயர் கொண்டவளையோ, மரங்களின் பெயர் கொண்டவளையோ, நதிகளின் பெயர் கொண்டவளையோ, குறைந்த ஜாதி பெண்களையோ, மலைகளின் பெயர் கொண்டவளையோ, பறவைகளின் பெயர் கொண்ட பெண்களையோ, பாம்புகளின் பெயர் கொண்ட பெண்களையோ, அடிமை பெண்களையோ அல்லது அச்சத்தை ஏற்படுத்தும் பெயர் கொண்ட பெண்களையோ யாரும் திருமணம் செய்ய வேண்டாம்.6. “யஸ்தோ னா பாவேத்…..…..” – 3/10.நல்லறிவு பெற்றோர் சகோதரன் இல்லாத பெண்ணையோ, சமூகத்தில் பிரபலமற்றவர்களின் பெண்களையோ திருமணம் செய்யக்கூடாது.7. “உச்சயங்…………….” – 3/11.நல்லறிவு பெற்றோர் உடல் அங்கங்களில் ஊனங்கள் அற்ற, அழகிய பெயருடைய, யானை போன்று அழகிய நடையுடைய, தலையிலும் உடலிலும் அளவான முடியுடைய மென்மையான கை கால்கள்களும் சிறிய பற்களையும் உடைய பெண்களையே திருமணம் செய்ய வேண்டும்.8. “ஷுத்ர் ஐவ் பார்யா..……” – 3/12.பிராமணன் ஒரு பிராமணப் பெண்ணையோ, க்ஷத்ரிய பெண்ணையோ, வைஷிய பெண்ணையோ மட்டுமல்லாது ஒரு சூத்திர பெண்ணைக்கூட திருமணம் செய்ய முடியும். ஆனால் ஒரு சூத்திரன் ஓர் சூத்திர பெண்ணையே திருமணம் செய்ய வேண்டும்.9. “நா ப்ரஹ்மன் க்ஷத்ரியா......” – 3/14.பிராமண, க்ஷத்ரிய, வைஷிய ஆண்கள் ஜாதி மாறி திருமணம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் எந்தவொரு துன்பம் வந்தாலும் அவர்கள் ஒரு சூத்திரப்பெண்ணை திருமணம் செய்யவே கூடாது.10. "ஹீன் ஜதி ஸ்த்ரியம்……..” – 3/15.துவிப்பிறப்பு கொண்ட (பிராமண, க்ஷத்ரிய, வைஷிய) ஆண்கள் அறியாமையால் ஓர் கீழ்சாதி சூத்திர பெண்ணை மணக்க நேரிட்டால் அதனால் அவர்கள் குடும்பங்களுக்கு ஏற்படும் கேவலத்துக்கு அவர்களே பொறுப்பு. இதற்கமைய அவர்களின் பிள்ளைகள் அனைவரும் சூத்திரர்களின் அனைத்து கேவலங்களையும் தம்மில் கொண்டிருக்கும்.11. “சூத்ரம் ஷைனம்……” – 3/17.ஒரு கீழ்சாதி சூத்திர பெண்ணை மணக்கும் ஒரு பிராமணன் அவனையும் அவனது முழுக்குடும்பத்தையும் இழிவுபடுத்துவதோடல்லாமல் கண்ணியங்களை இழக்கிறான் அத்துடன் பிராமண அந்தஸ்தையும் இழக்கிறான். அவன் பிள்ளைகள் யாவும் சூத்திரர்களே.12. “தைவ் பித்ரியா………………” – 3/18.அத்துடன் (சூத்திரப்பெண்ணை மணமுடித்த) அந்த பிராமணனின் படையல்கள் எதுவும் பூஜைகளின் போது கடவுள்களாலோ அல்லது உயிரிழந்த ஓர் ஆத்மாவாலோ ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. அதிதிகளும் அவனுடன் சேர்ந்து விருந்துண்ண மாட்டார்கள். மேலும் அவன் இறந்த பின் நரகத்தையே அடைவான்.13. “ச்சண்டலாஷ் ……………” – 3/240.ஷ்ரத் திதி பூஜைகளின் போது பிராமணனுக்கு கொடுக்கப்படும் உணவை சண்டாளனோ (சூத்திரன்) பன்றியோ சேவலோ நாயோ அல்லது மாதவிடாய் பெண்ணோ பார்த்தலாகாது.14. “நா அஷ்னியாத்…………….” – 4/43.பிராமணீயத்தை காக்கும் ஓர் உண்மையான பிராமணன் தன் மனைவியுடன் ஒன்றாக உண்ணமாட்டான். உண்ணும்போது அவளை பார்க்கமாட்டான். மேலும் அவள் உண்ணும்போதும், தும்மும்போதும், கொட்டாவி விடும்போதும் அவளை பார்க்கவும்மாட்டான்.15. “நா அஜ்யந்தி……………….” – 4/44.ஒரு பிராமணன் அவனுடைய வலிமையையும் அறிவையும் பாதுகாக்கும் வகையில் கண்ணுக்கு மை பூசும் பெண்களையோ, நிர்வாணமான தன் உடலை கைகளால் தேய்ப்பவளையோ, பிள்ளை பெற்றுக் கொண்டிருப்பவளையோ பார்க்கமாட்டான்.16. “மிர்ஷ்யந்தி…………….” – 4/217.வேசித்தனம் புரிபவளிடமிருந்தோ, பெண்களால் ஆளப்படும் குடும்பங்களிடமிருந்தோ, முதல் பத்து நாள் தாண்டாத இழவு வீட்டிலிருந்தோ உணவு வழங்கினால் ஒருவனும் ஏற்றுக்கொள்ளக்கூடாது.17. “பல்யா வா………………….” – 5/150.ஒரு சிறுமியோ பெண்ணோ அல்லது ஒரு கிழவியோ சுதந்திரமாக வேலை செய்ய கூடாது. அது அவள் வசிக்குமிடமாக இருப்பினும் சரியே.18. “பல்யே பிடோர்வஷே…….” – 5/151.பெண்கள் சிறுவயதில் தந்தைமாரின் பாதுகாப்பிலும், திருமணமானால் கணவன்மாரின் பாதுகாப்பிலும், விதவை ஆகும்போது ஆண் மக்களின் பாதுகாப்பிலும் இருக்க வேண்டும். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அவள் தனியே தன் காரியங்களில் முடிவுகளை மேற்கொள்ளக்கூடாது.19. “அஷீலா கம்விர்தோ………” – 5/157.ஓர் கணவன் எந்தவொரு சிறப்பு தன்மையும் இல்லாதவனாக இருப்பினும், விலைமாதரிடம் செல்பவனாக இருப்பினும், கெட்டவனாக இருப்பினும், நீதியற்றவனாக இருப்பினும் பெண்கள் அவனை வணங்கி சேவகம் புரிய வேண்டும்.20. “நா அஸ்த் ஸ்த்ரினாம்……..” – 5/158.பெண்கள் எந்தவொரு பூஜைகளையும் செய்யவோ அர்ப்பணிக்கவோ, விரதம் இருக்கவோ கடவுளின் அனுமதி மறுக்கப்படுகிறது. அவளின் ஒரே கடமை கணவனின் சொல் கேட்பதும் அவனை சந்தோசப்படுத்துவதுமே; அந்த ஒரே காரணத்துக்காக அவள் சுவர்க்கம் செல்வாள்21. “கமாம் தோ……………” – 5/160.(கணவன் இறந்த பின்) அவள் தன்னுடல் அழியும் வரை தூய்மையான மலர்களிலும் காய்கறி மற்றும் பழங்களின் வேர்களிலும் அமர வேண்டும். தன் கணவன் இறந்த பின் எந்த ஒரு ஆணின் பெயரைக்கூட அவள் உச்சரிக்க கூடாது.22. “வ்யாபாச்சரே…………” – 5/167 (சில பதிப்புகளில் 5/164)கணவனின் கடமைகளை நிறைவேற்ற தவறும் ஒரு பெண் கேவலப்படுகிறாள், ஒர் தொழுநோயாளி ஆகுவாள், இறந்த பின் ஒரு குள்ள நரியின் கருப்பையை அடைவாள்.23. “கன்யம் பஜந்தி……..” – 8/364.உயர் ஜாதிக்காரன் ஒருவனுடன் விபச்சாரம் புரியும் ஒரு பெண் தண்டனைக்கு உள்ளாக்கப்படமாட்டாள். ஆனால் கீழ் ஜாதிக்காரன் ஒருவனுடன் விபச்சாரம் புரிந்தால் அவள் தண்டிக்கப்படுவதுடன் ஊர்விலக்கு செய்யப்பட வேண்டும்.24. “உத்மம் செவ்மந்த்சோ…….” – 8/365.கீழ் ஜாதிக்காரன் ஒருவன் உயர் ஜாதி பெண் ஒருத்தியுடன் விபச்சாரம் புரிந்தால் கீழ் ஜாதி ஆணுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும். பெண்ணும் கீழ் ஜாதியாக இருப்பின் அவன் அவளுக்குரிய இழப்பீட்டுக்குரிய தொகையை தந்தால் போதுமானது.25. “யா தோ கன்யா…………….” – 8/369.கன்னித்திரை கிழிந்திருப்பவளுக்குரிய தண்டனையாவது அவளை மொட்டை அடித்து அவளின் இரண்டு விரல்களை வெட்டிவிட வேண்டும். அத்துடன் அவளை கழுதை மேல் ஏற்றி பவனிவரச்செய்ய வேண்டும்.26. “பர்தரம்…………….” – 8/370.ஒரு பெண் தன் உயர்வையோ தன் குடும்பத்தின் உயர்வை பற்றியோ பெருமைகொண்டு தன் கணவனுக்குரிய கடமைகளை உதாசீனப்படுத்தினால் அரசன் அவளுக்கு வழங்கும் தண்டனையாவது எல்லோரும் பார்க்குமிடத்தில் அவளை வெறிநாய்களுக்கு முன்னால் எறிதலாகும்.27. “பிதா ரக்ஷதி……….” – 9/3.பெண்கள் சுதந்திரமாக வாழ இயலாதவர்கள் ஆதலால் அவர்கள் சிறுவயதில் தந்தைமாரின் பாதுகாப்பிலும், திருமணமானால் கணவன்மாரின் பாதுகாப்பிலும், விதவை ஆகும்போது ஆண் மக்களின் பாதுகாப்பிலும் இருக்க வேண்டும்.28. “இமாம் ஹி சர்வ்………..” – 9/6.மனைவி மீது பூரண அதிகாரத்தை செலுத்துவது ஒரு கணவனின் கடமையாகும். உடல் ரீதியாக பலஹீனமான ஆணாகவிருப்பினும் அவனும் தன் பூரண அதிகாரத்தை செலுத்தியே ஆகவேண்டும்.29. “ப(ட்)டி பர்யம் ……….” – 9/8.ஒருவனின் மனைவி கருத்தரிக்கும் போது அவளின் கணவனே அவள் கர்ப்பத்தில் கருவாக உருவாகி அவனே அவளுக்கு மகனாகவும் பிறக்கிறான். இதன் காரணமாகவே பெண் ஜெயா என்று அழைக்கப்படுகிறாள்.30. “பணம் துர்ஜன்………” – 9/13.பெண்களின் கெட்ட குணங்கள் ஆறு அவையாவன: மது அருந்துதல், கெட்டவர்களோடு சேர்தல், கணவனை பிரிதல், அலைந்து திரிதல், நீண்ட நேரம் உறங்குதல், அதிகமாக கதைத்தல் ஆகியனவாம்.31. “நய்டா ரூபம்……………” – 9/14.அவ்வகையான (9/14) பெண்கள் கற்புள்ளவர்களாக இருக்கமாட்டார்கள், மேலும் வயது பாராமல் எந்த ஆணுடனும் கள்ளத்தொடர்பு வைத்திருப்பார்கள்.32. “பூன்ஸ் ச்சல்யா…………” – 9/15.மேலும் அத்தகையவர்கள் ஆண்கள் மீதுள்ள மோகத்தாலும் அடக்க முடியாத கோபத்தாலும், இரக்க குணமின்மையாலும் தங்கள் கணவன்மாருக்கு உண்மையாணவர்களாக இருக்கமாட்டார்கள்.33. “நா அஸ்தி ஸ்த்ரினம்………” – 9/18.பெண்கள் நம்காரத்தின்போதோ ஜத்காரத்தின் போதோ வேத மந்திரங்களை ஓதக்கூடாது ஏனென்றால் பெண்கள் வேத வசனங்களில் உறுதியும் அறிவும் அற்றவர்கள். மேலும் பெண்கள் சுத்தமற்றவர்கள் மற்றும் அசத்தியத்தை பிரதிபலிப்பவர்கள்.34. “தேவ்ரா ஸபிண்டா………” – 9/58.கணவனுடன் கூடி சந்ததியை பெற்றெடுக்க முடியாத பெண் தன் கணவனின் சகோதரனுடனோ அல்லது கணவனின் வேறு உறவினர்களுடனோ கலந்து சந்ததியை உண்டாக்கிக்கொள்ள முடியும்.35. “வித்வயம்…………….” – 9/60.ஒரு விதவையை பாதுகாக்க நியமிக்கப்பட்ட ஒருவன் இரவில் அவளை அணுகி வெண்ணெய் பூசி ரகசியமாக ஒரு மகனை பெற்றெடுக்க முடியும். ஆனால் எக்காரணம் கொண்டும் இரண்டாவது மகனை பெற்றெடுக்க முடியாது.36. “யதா விதி……………..” – 9/70.நிலைபெற்ற சட்டப்பிரகாரம் மனைவியின் சகோதரி ஆகிறவள் வெண்ணிற ஆடை அணிந்து தூய எண்ணத்துடன் தன் சகோதரியின் கணவனுடன் ஓர் கர்ப்பம் தரிக்கும் வரை இணைந்திருக்க முடியும்.37. “அதி க்ரமே……………” – 9/77.கணவன் சோம்பேறியாக இருப்பினும் மதுவுக்கு அடிமையானவனாக இருப்பினும் நோயாளியாக இருப்பினும் மனைவி அவனது கட்டளைக்கு கீழ்ப்படிய வேண்டும் இல்லாது போனால் அவளை மூன்று மாதம் விலக்கி வைப்பதுடன் அவள் அணிகலன்களும் களையப்பட வேண்டும்.38. “வந்த்யாஷ்தமே…….” – 9/80.ஒரு மலடி எட்டாவது வருடத்திலும் பிள்ளைகளை இழந்தவள் பத்தாவது வருடத்திலும் பெண் பிள்ளைகளை மட்டுமே பெற்றவள் பதினோராவது வருடத்திலும் நீக்கப்பட்டு கணவன் வேறொருத்தியை மணக்க முடியும். சண்டை பிடிப்பவளோ உடனடியாக நீக்கப்பட வேண்டும்.39. “த்ரின்ஷா……………….” – 9/93.மதச்சடங்குகளை நிறைவேற்றுவதில் ஏதாவது ஒரு தடங்கல் வந்து ஆண் திருமணம் முடிக்கவேண்டி ஏற்பட்டால் இருபத்தி நான்குக்கும் முப்பதுக்கும் இடைப்பட்ட வயதுள்ள ஆண் எட்டுக்கும் பன்னிரண்டுக்கும் இடைப்பட்ட வயதுள்ளவளை திருமணம் செய்ய வேண்டும்.40. “யம் ப்ரஹ்மன் ஸ்தோ…….” – 9/177.ஒரு பிராமணன் ஒரு சூத்திர ஸ்த்ரீயை திருமணம் செய்தால் அவர்களின் மகன் பர்ஷவ் என்றோ சூத்திரன் என்றோ அழைக்கப்படுவான் இதற்கு காரணம் அவன் சமூகத்தில் ஒரு பிணத்தை போன்றவன்.------On Monday, October 26, 2020 at 9:42:02 PM UTC-7 தேமொழி wrote:The Laws of ManuGeorge Bühler, translator(Sacred Books of the East, Volume 25)Chapter I
Chapter II
Chapter III
Chapter IV
Chapter V
Chapter VI
Chapter VII
Chapter VIII
Chapter IX
Chapter X
Chapter XI
Chapter XIIOn Monday, October 26, 2020 at 9:41:33 PM UTC-7 தேமொழி wrote:source - https://www.facebook.com/permalink.php?story_fbid=1175450339522860&id=100011737148867மனுநீதிச் சோழன் Vs மநு நீதிபசு மாடு நீதி கேட்டது. தேர்க்காலில் மகன். கல்வெட்டு. உயர்நீதிமன்றத்தில் சிலை. இதே நீதியை பன்றி கேட்டிருந்தால்? பன்றியை விடுங்கள். எருமை மாடு நீதி கேட்டிருந்தால்..சங்க இலக்கியங்களில் எங்கிருந்த எருமை எங்கே வந்து நிற்கிறது தெரியுமா?வசதியாக பெரிய புராணத்தில் கதையை ஆரம்பிப்பதை "பக்திப் பழங்கள்" செய்யலாம்.அது அவர்கள் விருப்பம். ஆனால் அது தமிழின் வேர் அல்ல.மனு நீதிச்சோழனை சமநீதிச் சோழன் என்பது போன்ற ஒரு மூட நம்பிக்கை எதுவும் இருக்க முடியாது. அதையும் சில பகுத்தறிவாளர்களே செய்தார்கள். மாவட்ட ஆட்சித்தலைவர்கள் "மனு நீதி நாள்" கொண்டாடுவது என்பது ( சோழன் என்றாலும் கூட) பிற்போக்குத் தனமான குறியீடு.செங்கோல் கோடியதும் தன்னுயிர் விட்ட நெடுஞ்செழியனுக்கு கிடைக்காத ( அவருக்கு கிடைக்க வேண்டும் என்று சொல்லவில்லை) பெருமைமனுநீதிச் சோழனுக்கு கிடைத்தது அவர் சோழன் என்பதால் அல்ல சம்பந்தப்பட்டது "பசு" என்பதால்!நாயன்மார்கள் விஷயத்தில் எங்கே எல்லாம் பசு சார்ந்த பொங்குதல்கள் எப்படி முன்னிலை பெறுகிறது என்பதை பெரிய புராணத்தை படித்தாலே தெரிந்து விடும்.பசு தான் குறியீடு மற்ற உயிர்களுக்கு ஏன் குழந்தையின் உயிருக்கு கூட மதிப்பில்லை என்பது என்ன வகை மெய்யியல் என்பது தெரியவில்லை. எல்லாம் முடிந்த பின்னால் தேவர்கள் வந்து கன்றுக்குட்டி சோழன் மகன் எல்லோரையும் எழுப்பி விட்டு மலர் தூவுவது விட்டலாச்சார்யா பட "என்ட் கார்டு". போலத் தான்.இதை எப்படி நியாயப்படுத்தினாலும் அதற்கு பெயர் "முட்டு" என்பதே!இதற்கிடையில் இதே நிகழ்ச்சி இலங்கையில் நடந்ததாக எல்லாளன் கதை கூறுகிறது. அதுவும் விவாதத்திற்குரியதே!On Monday, October 26, 2020 at 9:39:47 PM UTC-7 தேமொழி wrote:சேக்கிழார் தந்த செல்வம்சேக்கிழார் பகுத்தறிவாளரா?
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/592e5ac6-91f6-4968-aa2c-f7bd9f9d9b7bn%40googlegroups.com.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/536560e2-3716-4ed7-a250-380f2b949351n%40googlegroups.com.
மனுநூல் பெரிய புராணத்தில் இல்லை. மனுநூலை சேக்கிழார் எழுத வில்லை.மனுநீதி என்னும் ஒருசொல் மனுநூல் தமிழ்நூல் என்று சொல்லாது.ஈவே ராமசாமி நாயக்கரை ராம பக்தர் என்று சொல்வீரா ???

நீதிக் கட்சியின் தலைவராகப் பெரியார் பொறுப்பேற்றபின், அவரின் தளபதியாகப் பொறுப்பெடுத்துக் கொண்ட அண்ணாதுரை, சரிகைக் குல்லாக்கள் அனைவரையும் விரட்டி விட்டு அத்தேர்தல் கட்சியை சீர்திருத்த இயக்கமான திராவிடர் கழகமாக மாற்றினார். தி.க.வில் தனக்கென ஆதரவாளர்களை உருவாக்கித் தலைமைக்குப் போட்டியாளரானார். தனது “தம்பிமார்கள்” பதவி சுகம் கண்டு பொறுக்கித் தின்னத் துடித்தபோது, பெரியார் மணியம்மையின் திருமணத்தைக் காரணமாகக் காட்டி “கண்ணீர்த்துளி”களோடு வெளியேறி தி.மு.க.வை உருவாக்கினார்.
தி.க.வும், தி.மு.க.வும் இரட்டைக்குழல் துப்பாக்கி என்று சொல்லிக்கொண்ட அண்ணாதுரை, கட்சி ஆரம்பித்த சில ஆண்டுகளிலேயே நாத்திகத்தை மூட்டை கட்டி வைத்து விட்டார். “ஒன்றே குலம், ஒருவனே தேவன்” எனும் திருமூலரின் வாசகத்தையே தி.மு.க.வின் கொள்கை ஆக்கியவர், பிள்ளையார் சிலையைத் தெருவில் போட்டு பெரியார் உடைத்தபோது, “நாங்கள் பிள்ளையாரையும் உடைக்க மாட்டோம். பிள்ளையாருக்கு தேங்காயும் உடைக்க மாட்டோம்” என்று பித்தலாட்டமாடினார். “ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்கிறேன்” என்று புது ஆத்திகத்தை உபதேசித்தார். இந்தக் கொள்கைச் சறுக்கலே, பின்னர் விநாயகர் சதுர்த்தி விழாவை தி.மு.க. அமைச்சர் டி.ஆர்.பாலு தொடங்கி வைக்கும் வரைக்கும் சீரழிந்தது என்பதை மறுக்க முடியாது.
இந்தியாவிலிருந்து நர்மதைக்கு தெற்கே உள்ள பகுதிகளை எல்லாம் “திராவிட நாடு” என்றும் இதனைப் பிரித்து தனி நாடாக்கவேண்டும் என்றும் “அடைந்தால் திராவிட நாடு; இல்லையேல் சுடுகாடு” என்றும் அண்ணாதுரை மேடை எங்கும் முழங்கி வந்தார். இவர் கேட்ட திராவிட நாட்டின் எல்லைகளைக் கூட இவர் சரியாகச் சொன்னதில்லை. சில சமயங்களில் பழைய சென்னை மாகாணமே “திராவிட நாடு” என்றார். ஆந்திரம் தனி மாநிலமான பிறகும் கேரளா, கர்நாடகம், ஆந்திரம், தமிழ்நாடு ஆகிய 4 மாநிலங்களும் திராவிட நாடென்றார். ஆனால் பரிதாபம் என்ன என்றால், இவர் திராவிடநாடு கேட்டது மற்ற 3 மாநிலத்திற்கும் தெரியாது. இறுதிவரை திராவிட நாட்டைப் பறித்தெடுக்க எந்த செயல்திட்டமோ, வரையறையோ அவர் எழுதிக்கூட வைத்திருக்கவில்லை.
தேச விடுதலைக்கு வேட்டுமுறை, ஓட்டுமுறை என இரண்டு இருப்பதாகவும், திராவிட நாட்டை ஓட்டுமுறை மூலமாகப் பாராளுமன்றத்தில் சென்று பெற்றுவிடுவேன் என்றும் சொன்னார். “ஐ.நா. சபையில் பேசி வென்றெடுப்பேன்” என்றார். “ரஷ்யாவுக்கு சென்றால் அவர்கள் திராவிடநாடு கோரிக்கையை ஆதரிப்பார்கள்” என்றும் பிதற்றினார். “தணிக்கை இல்லாமல் 4 சினிமா எடுக்க விட்டால், அடைவோம் திராவிடநாடு” என்று அவர் பேசிய பேச்சும், எந்தத் தேர்தல் அறிக்கையிலும் இக்கோரிக்கையை அவர் முன்வைக்காததும் இக்கோரிக்கையினை மூக்குப் பொடி போலத்தான் பயன்படுத்தி வந்தார் என்பதனை நிரூபிக்கும் சாட்சியங்கள்.
சீனப்போர் உச்சமடைந்தபோது மத்திய அரசு எங்கே தனது கட்சியைத் தடை செய்து விடுமோ என அஞ்சி திராவிட நாடு கோரிக்கையைக் கைவிட்டார். ஆனாலும், “திராவிட நாடு கோரிக்கையைக் கைவிட்டு விட்டோம் என்று சொல்லவில்லை; ஒத்தி வைத்துள்ளோம். பிரிவினைக்கான காரணங்கள் அப்படியே இருக்கின்றன” என்று சமாளித்தார்.
இந்தி ஆட்சி மொழிச் சட்டம் நிறைவேறிய 1963-ம் ஆண்டு முதல் 1969 வரை ஆறாண்டுகள் அதற்கெதிராகப் போராடப் போவதாக அண்ணா அறிவித்தார். தொடர்ந்து இரண்டு ஆண்டுகளுக்கு இந்தி ஆட்சி மொழிச் சட்ட நகல் எரிப்புப் போராட்டங்களை தி.மு.க. நடத்தியது. அண்ணா, கருணாநிதி உள்ளிட்ட நூற்றுக்கணக்கான தலைவர்களும் அணிகளும் அன்றைய காங்கிரசு அரசால் சிறையிடப்பட்டனர். இறுதியாக, 1965 ஜனவரி 26 “குடியரசு” நாளை இந்தி ஆட்சி மொழியாகும் துக்கநாளாக அறிவித்து கருப்புக் கொடியேற்றி, கருப்புச் சின்னமணிந்து கடும் அடக்குமுறை எதிர் கொண்டு போராடினர். இவ்வாறு, பல ஆக்கபூர்வ பணிகளால் தமிழ்மொழியை வளர்த்தும், பல போராட்டங்கள் பிரச்சாரங்களால் மொழிப் பற்றையும் இன உணர்வையும் ஊட்டி, தமிழ் மக்களை விழிப்புறச் செய்ததில் திராவிட இயக்கமும், குறிப்பாக அண்ணாதுரையும் முக்கிய பங்காற்றியுள்ளனர்.
ஆனால், அப்போராட்டம் அத் துக்கநாளோடு முடிந்து போனது. மொழியுரிமைப் போராட்டத்தில் தீக்குளித்த தியாகிகளின் கல்லறையிலேயே அண்ணாவும் தி.மு.க.வும் தமது மொழிப் பற்றையும் இன உணர்வையும் வைத்துச் சமாதி கட்டிவிட்டனர். மொழிப்போரின் பலன்களை 1967 தேர்தலில் அறுவடை செய்து கொள்ளும் நோக்கத்தில், அண்ணாவும் அவரது கழகமும் துரோகப் பாதையில் நடைபோடத் தொடங்கினர்.
மொழிப்பற்றாலும் மொழியுணர்வாலும் எழுச்சியுற்ற மாணவர்கள் 1965 ஜனவரி 25-ம் நாளை, மாநிலந்தழுவிய துக்க நாளாக அறிவித்து, பொது வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு, இந்தி அரக்கி எரிப்பு ஊர்வலம் என பெரும் போராட்டத்தில் இறங்கினர். பல இடங்களில் கட்சி சாராத மாணவர்கள் தன்னெழுச்சியாகவும் தி.மு.க. மாணவர் அணியினரும் இவற்றுக்குத் தலைமையேற்றனர். அன்றைய முதல்வர் பக்தவத்சலம் தலைமையிலான காங்கிரசு அரசு காட்டுமிராண்டித்தனமாகவும் துப்பாக்கிச் சூடு நடத்தியும் மொழிப்போரை அடக்க முயன்றது. அடிபணிய மறுத்த மாணவர்கள், பிப்ரவரி 9-ம் தேதி முதல் அஞ்சல் நிலைய மறியல், இரயில் நிறுத்தம், பொதுவேலை நிறுத்தம் இந்திப் பிரச்சார பாடப் புத்தகங்கள் எரிப்பு என போராட்டங்களைத் தொடர்ந்தனர். காங்கிரசு அரசு தமிழகத்தின் பல பகுதிகளில் துப்பாக்கிச் சூடு நடத்தி மாணவர்களை மிருகத்தனமாகப் படுகொலை செய்தது. அதைக் கண்டு கொதித்தெழுந்த தமிழக மக்கள் மாணவர்களோடு இணைந்து மொழிப் போரில் குதித்தனர். போலீசுக்கு எதிரான தாக்குதலிலும், அஞ்சல் நிலையங்கள் இரயில் நிலையங்களைத் தீயிடலிலும் இறங்கினர். இதுவரை கண்டிராத மாபெரும் எழுச்சியை தமிழகம் கண்டது.
இத்தருணத்தில் மாணவர்களோடும் மக்களோடும் களத்தில் நிற்க வேண்டிய அண்ணாவும் அவரது கழகமும், “இந்தப் போராட்டத்துக்கும் எங்களுக்கும் தொடர்பு கிடையாது. ஜனவரி 26-ம் நாளை துக்கநாளாகக் கடைபிடித்ததோடு எங்கள் போராட்டம் முடிந்து விட்டது” என்று அறிவித்து வெளிப்படையாகவே துரோகமிழைத்தனர். கழகத்தின் முக்கிய தலைவர்கள் பலர் “மன்னிப்பு” எழுதிக் கொடுத்துவிட்டு சிறையிலிருந்து விடுதலையடைந்தனர். எவ்விதத் தீர்வும் காணாமல் “இந்தி மொழி திணிக்கப்பட மாட்டாது” என்ற காங்கிரசின் வழக்கமான வாக்குறுதியை மட்டும் நம்பி, மொழிப் போராட்டத்தை அண்ணாதுரையும் அவரது கட்சியினரும் விலக்கிக் கொண்டனர்.
பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய தன்னுரிமையும் மொழியுரிமையும் ஒன்றோடொன்று இணைந்தது. தன்னுரிமையை தனிநாடு கோரிக்கையைக் கைவிட்டு இந்திய அரசின் ஒருமைத்தன்மையை ஏற்றுக் கொண்டு அண்ணாவும் அவரது கழகமும் துரோகமிழைத்த பிறகு, மொழியுரிமை போராட்டம் என்பது அவர்கள் நடத்தும் நிழல் சண்டையாகிப் போனது.
ஆரம்பத்தில் தி.மு.க.வை ஓட்டுப்பொறுக்கும் கட்சி எனும் சாயல் விழாமல் பார்த்துக் கொண்ட அண்ணாதுரை, 1957-ல் நடந்த தேர்தல் மாநாட்டில் “தேர்தலில் போட்டியிடலாமா? கூடாதா?’ என்பதனை வாக்கெடுப்பிற்கு விட்டு பெரும்பான்மையின் முடிவின்படி தேர்தலில் பங்கெடுத்தாராம். ஆனால் மாநாட்டுக்கு முன்பே “புதியதோர் அரசு காணப் புறப்படுவோம்” என்று தம்பிமார்களுக்கு வெட்கத்தைவிட்டு பதவி ஆசையைச் சொன்ன மனிதர்தான் அவர்.
தேர்தல் பாதைக்குள் நுழைந்தபிறகு தி.மு.க.வின் கொள்கைகளை எல்லா சந்தர்ப்பத்திலும் காபரே நடனத்தில் ஆடை கழற்றுவது போல ஒவ்வொன்றாக உதறி எறிந்தார். 1957-ல் முதுகுளத்தூர் கலவரத்தின்போது தேவர்சாதி வாக்குகளையும் தாழ்த்தப்பட்டோர் வாக்குகளையும் மனத்தில் கொண்டு, அப்போது சட்டமன்றத்தில் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தேவருக்கு ஆதரவாகப் பேசிவிட்டு, வாக்கெடுப்பில் வெளிநடப்பு செய்து தாழ்த்தப்பட்டோரை ஆதரித்தார்.
கட்சிமாறி அரசியலுக்கு ஆதிமூலமான “மூதறிஞர்” ராஜாஜியை “குல்லுகப் பட்டர்” எனச் சாடியவர், 1962 தேர்தலிலே “அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை; நிரந்தரப் பகைவனும் இல்லை” எனும் பொன்மொழியைச் சொல்லி கூட்டணி சேர்ந்தார். அத்துடன் தி.மு.க.வில் இருந்து பார்ப்பன எதிர்ப்பும் கழற்றி விடப்பட்டது. அந்தத் தேர்தலிலே காஞ்சிபுரம் தொகுதியில் நின்ற அண்ணாதுரை, வாக்காளர் பட்டியலில் தன்னை “அண்ணாதுரை முதலியார்” எனப் பதிவு செய்து சாதி அரசியல் செய்ய முயன்றார். “சிலருக்கு திடீரென முதலியார் என்ற வால் முளைத்து இருக்கிறது” என்று பெரியார் இதனை அம்பலப்படுத்தினார்.
1967-ல் கம்யூனிஸ்ட் கட்சியுடனும், கம்யூனிசத்தின் எதிரி ராஜாஜியுடனும் சந்தர்ப்பவாதக் கூட்டணி கட்டி பதவிக்காக எதையும் செய்யலாம் எனும் நிலை எடுத்தார், அண்ணா. “எங்களுக்கெல்லாம் கொள்கைதான் வேட்டி. பதவியோ மேல்துண்டு” எனத் தத்துவம் பேசியவர், ஆட்சியைப் பிடித்தபோது கொள்கை என்று சொல்லிக்கொள்ளக் கோவணம் கூட இல்லாமல் முழு அம்மணமாகி நின்றார். இதுதான் அண்ணா தன் தம்பிமார்களுக்குத் தந்த அரசியல் பாடம்.
நெருக்கடி நிலையில் தன் கட்சித் தொண்டர்களைத் தூக்கிப் போட்டு மிதித்த இந்திரா காந்தியுடன் அடுத்த தேர்தலிலேயே “நேருவின் மகளே வருக” என அழைத்து தி.மு.க. கூட்டணி கட்டியதும், பொடாவிலே தன்னைத் தள்ளி வதைத்த ஊழல்ராணியை “அன்புச் சகோதரி”யாக வை.கோ. அரவணைத்ததும் அண்ணா தந்த தத்துவம்தான்.
“தவறான கட்சியில் இருக்கும் சரியான நபர்” என இந்துமதவெறியர் வாஜ்பேயியை அண்ணாவின் தம்பி சித்தரித்ததும், அவருடனேயே கூட்டணி அமைத்ததும் வேறு ஒன்றுமல்ல. அண்ணாவின் “மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு” எனும் தத்துவம்(!)தான்.
அரசியலில் பிழைப்புவாதத்துடன் கவர்ச்சிவாதத்தையும் கலந்து ஊட்டி வளர்த்த அண்ணா கொள்கைகளை எல்லாம் இழந்த பின்னர் எம்.ஜி.ஆர். எனும் கவர்ச்சியை நம்பியே கூட்டம் கூட்டினார். அதற்காக “ஆளைக் காட்டினால் ஐம்பதாயிரம் கூடும். முகத்தைக் காட்டினால் முப்பதாயிரம் கூடும்” எனும் அரசியலை வெளிப்படையாகக் கூறவும் அண்ணா கூச்சப்படவில்லை. சென்ற தேர்தலிலே தி.மு.க. அ.தி.மு.க. இரண்டுமே சினிமாத் துணை நடிகைகளை வைத்துக் குத்தாட்டம் நடத்திக் கூட்டம் சேர்த்ததும் அண்ணாவின் அரசியல் தத்துவம்தான்.
கோஷ்டி சண்டையினைக் கொம்புசீவி விட்டுத் தனக்கு இணையாக வளரும் தலைவர்களை அடியாட்களால் அடித்து நொறுக்குவதைக் கழக அரசியலில் அறிமுகம் செய்தவர் அண்ணா. ஈ.வெ.கி. சம்பத் தாக்கப்பட்டு, கழற்றிவிடப்பட்டதும் அதனை சாமர்த்தியமாக “காதிலே புண் வந்திருக்கிறது. கடுக்கனைக் கழற்றி வைத்திருக்கிறேன்” எனப் பேசியும், உண்ணாவிரதம் இருந்த சம்பத்துக்கு பழரசம் கொடுத்து சமாளிக்கப் பார்த்தும், கட்சிக்குள் நாறிக்கிடந்த கோஷ்டிச் சண்டையைத் தெருவுக்குக் கொண்டு வரத்தான் செய்தது. அண்ணாவின் தம்பிகள் இதனை தா.கிருஷ்ணன் கொலை வரை செவ்வனே செய்து வருகின்றனர்.
அண்ணாவின் பொருளாதாரக்கொள்கை என்ன என்பதைப் படித்தால் முதலாளித்துவத்தை ஆதரிப்பவர்கள் கூட விழுந்து விழுந்து சிரிப்பார்கள். “உற்பத்திப் பொருட்களை வாங்கும் பொதுமக்கள் கொடுக்கும் விலைதான் தொழிலாளிக்கும் முதலாளிக்கும் முறையே கூலியாகவும் இலாபமாகவும் போய்ச் சேருகிறது. அதைப் பங்கு போட்டுக் கொள்வதில் தொழிலாளி, முதலாளி ஆகிய இரு சாராருக்கும் இடையில் ஏற்படும் சச்சரவில் தலையிட்டுத் தீர்த்து வைக்கும் உரிமை பொதுமக்களுக்கு வேண்டும். இந்த உரிமையைப் பொதுமக்கள் உணரவும், உணர்ந்து நியாயம் கூறவும் தகராறுகளைத் தீர்க்க முன்வருமாறும், பொதுமக்களை அழைக்கும் பணியை கழகம் செய்கிறது. தொழிலாளருக்கும் முதலாளிக்கும் இடையே ஓர் அன்புத் தொடர்பு ஏற்படுத்தும் ஓர் அரிய காரியம் அது” என்று அண்ணா சொன்னார்.
வர்க்க சமரசத்தைக் கொள்கையாகக் கொண்ட அண்ணாவின் தி.மு.க.வோ தன்னையே உண்மையான கம்யூனிஸ்ட் கட்சி என்றும் “மாஸ்கோவிற்கு செல்வோம். மாலங்கோவைச் சந்திப்போம். நாங்களே உண்மையான கம்யூனிஸ்டுகள் என்போம்” என்றும் சொன்னது. அடிமுட்டாள்தனமான பொருளாதாரத் தத்துவத்தை சொன்னவரோ “பேரறிஞர்” எனும் பட்டமும் பெற்றார். இவர் முதல்வரான பின்னர் கீழ்வெண்மணியில் விவசாயத் தொழிலாளர்கள் கொளுத்தப்பட்டனர். அப்போது இந்த ‘உண்மையான’ கம்யூனிஸ்டால் பல் விளக்காமல் காலையில் அழமட்டுமே முடிந்தது.
கற்புக்கரசி கண்ணகி என்று தமிழ்நாட்டுக்கு ஒரு சீதையை உயர்த்திப் பிடித்த அண்ணாவின் அத்தனை தம்பிமாரும் கோவலன்களாகி ஒழுக்கக்கேட்டில் மூழ்கிக் கிடந்தார்கள். அண்ணாவும் விதிவிலக்கல்ல. இந்தக் கேடுகெட்ட போக்கினை “நான் முற்றும் துறந்த முனிவனுமல்ல. அவள் படிதாண்டா பத்தினியுமல்ல” என கூச்சநாச்சமின்றி இப்”பேரறிஞர்” விளக்கம் வேறு தந்தார்.
எல்லோரிடமும் நல்லவர் என்று பேரெடுக்க “எதையும் தாங்கும் இதயம்” பெற்றிருந்த (அதாவது சுயமரியாதையை இழந்து நின்ற) அண்ணா இறந்ததும், தி.மு.க. தலைமையே திணறிப் போய்விட்டது. அண்ணாவே எல்லாவற்றையும் உதறிவிட்ட பின்னர், இனி எதைக் கொள்கை என்று சொல்வது? ரொம்ப நாள் யோசித்து ஒரு கொள்கையைத் தி.மு.க. அறிவித்தது. அது “அண்ணா வழியில் அயராது உழைப்போம்!” இவ்வாறு 70-களில் வெறும் முழக்கமே கொள்கையாகப் பரிணாம வளர்ச்சி அடைந்தது. 90-களிலோ மூஞ்சிகளே கொள்கைகளாகி “கலைஞர்”, “தளபதி” என மாறிப்போனது. அவர் உருவாக்கிய கழகமோ பல கூறுகளாகி பாசிச காங்கிரசோடும் இந்துவெறி பார்ப்பன பாசிசத்தோடும் கூட்டணி கட்டிக் கொண்டு நாற்காலி சுகம் தேடிச் சீரழிந்து விட்டன.
பேரறிஞராகத் துதிக்கப்படும் அண்ணா, தனது பேச்சாலும் எழுத்தாலும் இன உணர்வை, மொழியுணர்வை ஊட்டி, கற்பனையான இலட்சியத்துக்கு மாயக் கவர்ச்சியூட்டினார். அந்த இலட்சியத்தைச் சாதிக்க தொடர்ச்சியான போராட்டத்தையோ, அதற்கான அமைப்பையோ அவர் கட்டியமைக்க முயற்சிக்கவேயில்லை. காங்கிரசை வீழ்த்தவிட்டு, அதற்குப் பதிலாக ஆளும் வர்க்கங்களுக்குச் சேவை செய்யும் பிழைப்புவாத இயக்கமாகவே தி.மு.க.வை அவர் வழிநடத்தினார்.
கொள்கை இலட்சியமற்ற பிழைப்புவாதமும் கவர்ச்சிவாதமுமே அவரது சித்தாந்தம். துரோகத்தையும் சந்தர்ப்பவாதத்தையும் நாக்கைச் சுழற்றி நியாயப்படுத்தும் இப்பிழைப்புவாதம், தி.மு.க.வை மட்டுமின்றி தமிழகத்தின் அனைத்து ஓட்டுக் கட்சிகளையும் கவ்வியிருப்பதோடு, அரசியல் அரங்கில் வெட்டி வீழ்த்தப்பட வேண்டிய நச்சு மரமாக ஓங்கி நிற்கிறது. எல்லா வண்ணப் பிழைப்புவாதத்தோடும் எல்லாவகை கவர்ச்சிவாதத்தோடும் ஆளும் வர்க்கங்களுக்குச் சேவை செய்யும் புதிய சித்தாந்தத்தை உருவாக்கி வளர்த்தவர் என்பதாலேயே, எல்லா பிழைப்புவாதிகளும் அண்ணாதுரையை தமது மூலவராக வணங்கித் துதிபாடுகின்றனர்.
___________________________________
புதிய ஜனநாயகம், செப்டம்பர் 2008
சி.ஜெயபாரதன்On Tue, Oct 27, 2020 at 7:52 PM S. Jayabarathan <jayaba...@gmail.com> wrote:இந்தியாவிலே இப்போது தேர்தல் காலத்திலே மொழிப்போர், மதப்போர், ஜாதிப்போர், இனப்போர், மாநிலப் போர்களைத் தமிழகத்திலே துவக்கி வருவது யார் ? யார் ? யார் ?பெரியார் தீராவிடக் கருப்பணிக் கலகத்தார்.சி. ஜெயபாரதன்On Tue, Oct 27, 2020 at 7:39 PM S. Jayabarathan <jayaba...@gmail.com> wrote:மனுநூல் தமிழில் எழுதப்பட்டு யார் பின்பற்றி வருகிறார் ???சி, ஜெ,On Tue, Oct 27, 2020 at 2:23 PM S. Jayabarathan <jayaba...@gmail.com> wrote:So Manu has never been a Tamil Literature at any date.S.Jayabarathan
வணக்கம் ஜெயபாரதன் ஐயா. மனுநூல் எனப்படும் ‘மனுஸ்ம்ருதி’ தமிழ்நூல் இல்லை.மனுவை வெறுக்கும் தமிழர் எவரும் மனுநூலை முழுமையாகப் படித்துப் புரிந்துகொண்டிருப்பார்களா என்று தெரியவில்லை. சமஸ்க்ருத வெறுப்பாளர் எப்படி மனுநூலை முழுதாகப் படித்திருக்க முடியும்? அங்கேயும் இங்கேயுமாக ஒரு சில மொழிபெயர்ப்பில் தம்மை இழந்துவிடும் நிலைதான் [including me].நீங்கள் குறிப்பிடும் ‘பகுத்தறிவுக் கருப்பணி’க்கு யார் யாரையோ மனத்துள் கொண்டு எப்படியெப்படியோ ஏகப்பட்ட காழ்ப்புணர்ச்சி வேரூன்றிவிட்டது! :-(பண்டைத் தமிழகத்தைப் பொருத்த அளவில் …
முதன்முதலாக மனுநீதிச்சோழனைப் பற்றிக் கேள்விப்படுகிறோம். அது … ‘யார் எவரென்று பார்க்காதே; பழிக்குப் பழி வாங்கு’ என்ற நெறியில் இயங்கிய கதை.
அதே போல மணிமேகலையிலும் … அறவழிச் சென்ற மணிமேகலையைத் தொடர்ந்த உதயகுமரன் … காஞ்சனன் என்ற விஞ்சையனின் வாளால் வெட்டுண்டு இறந்தான். அதைக் கேள்விப்பட்ட உதயகுமரனின் தந்தை சோழ அரசன் சொன்னது (மணிமேகலை, சிறைசெய் காதை, வரிகள் 206-214):நான் செய்யவேண்டிதைத் தான் செய்தான் ஆகலின் … விஞ்சையன் [காயசண்டிகையின் கணவன் காஞ்சனன்] தகவிலன்.மாதவர் நோன்பும் மடவார் கற்பும் காவலனின் காவல் இல்லாவிட்டால் இல்லை.[தவறு செய்த] மகனுக்கு ஏற்ற முறையை வழங்கிய மன்னவன் [மனுநீதிச்சோழன்] வழியில் ஒரு தீவினையாளன் [உதயகுமரன்] தோன்றினான் என்பது என் போன்ற வேந்தர்களின் செவிக்கு எட்டுவதற்குமுன் இவனை [உதயகுமரனை] ஈமத்தில் ஏற்றுக.இங்கே … அறவழியில் சென்ற மணிமேகலையைத் தொடர்ந்து சென்ற உதயகுமரனுக்கு ஏற்ற தண்டனையைத் தான் வழங்க முடியவில்லையே என்ற தவிப்பு சோழ அரசனுக்கு.
‘பழிக்குப் பழி’ என்ற கோட்பாடே இங்கே ஆட்சி செய்வதாக உணருகிறேன்.
பஞ்சாபில் பிறந்த இசுலாமியர் என வாசித்துள்ளேன். தமிழ் வளர்க்கும் குஷ்பு கலைஞர் காலத்தில் திமுக,பின்னர் காங்கிரஸ். இப்போது பாஜகவில் களமிறங்கி இருக்கிறார். மனுநீதி பற்றி எல்லாம் பேசுகிறார்.
மனு நீதி பிராமணரால் எழுதப்பட்டதல்ல.மனு நீதி கலியுகத்திற்கே ஏற்புடையதல்ல.இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட திருக்குறளிலேயே நாம் பின்பற்றமுடியாத நெறிகள் உள்.அதுபோல விவிலியம் குர்ஆன் போன்ற சமய நூல்களில் எழுதப்பட்ட அனத்தும் இப்பொழுது பின்பற்ற இயலாது.எழுபது ஆண்டுகளுக்கு முன்பு அம்பேத்கர் வடிவமைத்த அரசியல் சாசனத்தில் பல பத்துகளுக்கும் மேறபட்ட திருத்தங்கள் செயப்பட்டுள்ளன்.எந்த நீதி நூற்களிலும் இப்பொழுது ஏற்பதுடையதை மட்டும் எடுத்துக்கொண்டு மற்றவற்றை ஒதுக்கிவிடுவதே, போற்றத் தக்கது.அதை விடுத்து, ஒரு சாதியை, சமயத்தைத் தாக்கி, அரசியல் செய்வது "ஆகுல நீர".அதை விவாதப் பொருளாக்குவதும் நமது நேரத்தை வீணடிப்பதே!
பணிவன்புடன்,ஒரு அரிசோனன்
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAAGyNrKYVo0LbBa03QRhvDncGHBAfYgEceeKJd%2BaiNDBqVF%2BWg%40mail.gmail.com.
வணக்கம் ராஜம் அம்மா.இருப்பதை இல்லை என்பதும், இல்லாததை இருப்பதாய்ச் சொல்வதும் பகுத்தறிவாளர் வாய்மொழி.நன்றி அம்மா.கனிவுடன்சி.ஜெ.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA1TjyDe65NNdSvsya_5xv7Q8H_1B7WzLQTKu%2B-tmYfigLHNQA%40mail.gmail.com.