மதிரை :: பெயர்க் காரணம்

79 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Jan 3, 2021, 6:41:19 AM1/3/21
to vallamai, housto...@googlegroups.com
மதிரை என்பது மதுரை மாநகரின் பெயராக ஆரம்பகாலத்தில் இருந்து சுமார் 1500 ஆண்டுகள் இருந்திருக்கிறது. பிற்காலச் சோழர், பாண்டியர் காலங்களில் கூட, கல்வெட்டுகளில் மதிரை என்றுதான் வரும்: ‘மதிரை கொண்ட கோப்பரகேசரிபன்மருக்கு ..” என்றெல்லாம் இருக்கும். மதிரை என்ற பெயரைச் சிறந்த முறையில் விளக்கியவர் ஐராவதம் மகாதேவன் ஆவார். ஐராவதம் மகாதேவன் தமிழ்நாட்டு சங்ககால பிராமி எழுத்தை நன்கு ஆய்ந்தவர். ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில் அதன் ’ஓரியண்ட்டல் ஸீரீஸ்’ வரிசையில் முதன்முதலாக தமிழ் பற்றி வெளியான நூல், சங்க காலத் தமிழ் பிராமி எழுத்துக்கள் பற்றினதாகும். பேரா. கா. ராஜன், 35 ஸாம்பிள்கள் கார்பன் டேட்டிங் செய்ததில் 14 மாதிரிகள், அசோக சக்கரவர்த்திக்கு முந்தியவை கிடைத்துள்ளன என்கிறார். அவற்றில் மூன்று மாத்திரம் கி. மு. ஐந்தாம் நூற்றாண்டு, ஏனைய 11-ம் நான்கு அல்லது மூன்று நூற்றாண்டுகள். தமிழுக்கு எழுத்து எதுவும் பிராமிக்கு முன்னர் இல்லை. சித்திரக் கீறல்கள் (Graffiti), அச் சித்திரங்கள் + பிராமி, பின்னர் தமிழ் பிராமி என்ற மூன்று அடுக்குகளைத் தொல்லியல் அகழாய்வுகள் காட்டுகின்றன. இதுவே, பிராமிக்கு முன்னர் தமிழுக்கு எந்த எழுத்தும் இல்லை எனக் காட்டி நிற்கிறது. வட இந்தியாவில், தமிழ்நாட்டுக்கு முன்பே பிராமி கிடைக்கிறது. முக்கியமான, ஒரு சிற்பத்தில் உள்ள மந்திரம் பிராமியில் எழுதியுள்ளது பற்றியும், அதன் காலத்தையும் இங்கே காணலாகும்:
புள்ளி தமிழில் வரும் காலம் கி.பி. 2ம் நூற்றாண்டு என சாதவாகனர்களின் நாணயங்கள் வழியாக நிரூபித்து, எனவே தொல்காப்பியர் காலம் கி.பி. 2ம் நூற்றாண்டு என நிறுவியவர் பத்மஸ்ரீ ஐராவதம் ஆவார். அதனால் தான், கிண்ணிமங்கலம் பள்ளிப்படையில், முதல் இலிங்கம் ஐந்து புள்ளிகளைக் கொண்டிருப்பதாலும், ஏனை  தமிழி கல்வெட்டுகளுடன் ஒப்பிட்டும் பள்ளிப்படை லிங்கம் கி.பி. 2ம் நூற்றாண்டு என இங்கே எழுதியுள்ளேன். தமிழ் பிராமி கிமு நான்காம் நூற்றாண்டில் கிடைப்பதனாலே, ஆட்டோமேட்டிக்காக புள்ளி வரும் கல்வெட்டுகளை பல நூற்றாண்டுகள் பின்னுக்குத் தள்ளுவது அறிவியலுக்குப் பொருந்தவில்லை என்பதற்குக் கிண்ணிமங்கலம் பள்ளிப்படை லிங்கத்தின் தமிழ் ப்ராமி நல்ல சான்று. முகலிங்கம் வட மதுரையில் ஏற்படும் காலமே கி.பி. முதல் நூற்றாண்டுதான். கலைவரலாற்று நோக்கிலும், கிண்ணிமங்கலம் கி.பி. 2-ம் நூற்றாண்டு என்பதே பொருந்துகிறது. http://nganesan.blogspot.com/2020/07/kinnimangalam-linga-brahmi-pulli.html

சுமார் 10 ஆண்டுகளாக, ஐராவதத்தின் மதிரை பற்றின விளக்கத்தை இணையத்தில் தமிழில் விளக்கியுள்ளேன். ஆங்கிலத்தில் இந்தியவியல் குழுக்களில் அதற்கு முன்னர் பார்க்கலாம். யமுநை என்னும் பெயர் யாமை (ஆமை) என்னும் நீர் உயிரியான் அமைந்தது. யமுநா என்னும் தமிழ்ப்பெயர் யமுநாதேவியின் வாகனமாகிய யாமை காட்டுகிறது. நூற்றுக்கணக்கான யமுனை சிற்பங்கள் இந்தியாவின் திருக்கோயில்களில் சுமார் 2000 வருஷங்களாகப் பார்க்கலாம். நகர் என்னும் கடியால்   வாகனமாக அமைந்தவள் கங்கா நதி ஆவாள். அதுபோல், யாமை யமுனைக்கு. தில்லிகை என்று முன்பு அழைக்கப்பட்ட இந்திரப்பிரஸ்தம் தில்லைப்புதர்களால் அமைந்தபெயர். (பாடலிபுத்ரம் பாடலிப் புதர்களான் அமைந்தது. இன்று பாட்னா எனப்படும் நகரம்). 2015-ம் ஆண்டு நூதலோசு அவர்களுக்கு, மதுரையின் பழம்பெயர் மருதை அன்று. மதிரை என விளக்கினேன். அம் மடல் இங்கே.
அவ்விழையில், ஏப்ரல் 2, 2015அன்று, பாண்டியராசாவுக்குக் குறிப்பிட்டேன்:
“மதிரை என்பது தவறில்லை, ஐயா. வட மதுரையின் பெயர்க்காரணமும் விளங்குவது இதனாலேயே. மது- என்ற சொல்லோடு
பின்னர் மதிரை இயைக்கப்பட்டது.  யாமை பெயரால் வந்து யமுனைக்குப் பெயர் என்று விளக்கும் மடல்களில் (உ-ம்: CTamil, Paris list)
விரிவாகச் சொல்லியிருக்கிறேன்.

பார்ப்போலா, ஐராவதம் கட்டுரைகள் மதிரை - மதுரை பெயர்க்காரணத்தை நன்கு விளக்குவன.
ஆதிகாலப் பாண்டியர் வட மதுரையின் யமுனையைக் குறிக்க யாமையையும்,
கங்கையைக் குறிக்க விடங்கரையும் (முதலை) கார்ஷபணம் காசுகள் வெளியிட்டனர்.
அண்மையில் கூட இக்காசுகள் கிடைத்துள்ளன. 

வட மதுரை, துவாரகை கண்ணன் பதினெண் வேளிர் குடியேற்றம் என்னும்
சங்க இலக்கியச் செய்திகள் தமிழ்நாட்டின் இரும்பூழிக் கால வரலாற்றோடு மிகப்
பொருந்துகிறது.”

திரு. டி. எஸ். சுப்பிரமணியன் (The Hindu, Frontline) ஐராவதம், கா. ராஜன் (கொடுமணல், பொருந்தல்), சத்தியமூர்த்தி (ஆதிச்சநல்லூர்), ... என முக்கியமான தமிழ் பிராமிக் கல்வெட்டுக்களையும், சிந்து சமவெளி அகழிடங்கள் (சனாலி, ...) பல்லாண்டாய் எழுதி வருபவர். ஹூஸ்டனில் அவர் ’மருதை தான் மதுரை ஆனதா’ எனக் கேட்டார். அது மெட்டாதீஸிஸ், ஆனால் அவ்வாறு ஆனதாகத் தெரியவில்லை. தினங் கதிர் என்ற சொல், பேச்சுவழக்கில் தெனங் கருது என்போம். அதுபோல, மதிரை, மருதை என மெட்டாதீஸிஸ் ஆகியிருக்கலாம். எனவே, மருத மரமோ, மருதை என்பதோ மூலப்பெயர் அன்று. மதிரை என்பது தான் மதுரையின் பெயர். தென் மதிரை அமைந்த காரணம் போலவே, யாமையின் பெயரான் அமைந்த யமுனைக் கரையின் நகரமும் பெயர் பெற்றிருக்கலாம் என்றேன். வட மதிரை காலப்போக்கில் மதுரா என்றாகி, கண்ணபிரானால் மதுரத்துடன் தொடர்புபடுத்தப்ப்படுவது பிற்காலத்தில். உ-ம்: எம் எஸ் பாடிய ஸ்ரீ வல்லபாச்சார்யரின் மதுராஷ்டகம் https://www.youtube.com/watch?v=WnbeV3eMH4s

I have included an essay by Sri. Iravatham Mahadevan where he explained the etymology of Matirai.
"

Matir-ay : the ‘Walled City’

1.5 The ancient name of Madurai was matiray as recorded in the earliest Tamil-Brahmi cave inscriptions from ca. Second Century BCE.10 The expression matir(-ay) can be interpreted in Dravidian as a ‘walled city’ on the basis of the following linguistic evidence :

DEDR 4692: matil (Ta.) ‘wall around a fort, a fortification’; matilu, matulu (Tu.) ‘roofed wall of a compound’; maduru (Te.) ‘coping of a wall’; madru goda (Konda.) ‘mud wall, compound wall’.

DEDR 4689: matalai (Ta.) ‘cornices on sides or front of house’; madil (Ko.) ‘lintel of a doorway’.

Matiray was the ‘walled city’ par excellence of the ancient Tamil country. The literary form maturai seems to have been influenced by the Northern traditions related to Mathura, with which the Tamils of the Cankam Age were familiar. I propose that Indo-Aryan mathura is itself derived from the earlier Dravidian Matir-(ay) ‘walled city’. When the Velir (Yadavas) migrated from Mathura to the coastal regions of Saurashtra, Dravidian matir-(ay was translated as Indo-Aryan dvaraka, ‘the walled city with (imposing) doorways’. Compare with kapatapuram, the Sanskrit name (with the same meaning) of an ancient Pantiyan city, probably identical with Madurai.

Burrow (1963) compiled a list of place names ending with – armaka from early Sanskrit literature and concluded that the large numbers of ruined cities which remained for centuries such conspicuous features of the countryside must have belonged to the Indus Civilisation, as the early Aryans had no large cities. He also pointed out that the non-Aryan element vaila- in the place names mentioned in the Rig Veda was probably derived from the language of the original inhabitants. I suggest, based on the evidence of the association of the ancestors of the Vēḷir with the Indus Civilisation, that the place names Vaila-sthanaka and Maha- vaila-stha in the Rig Veda seem to be hybrid loan translations from Dravidian Vēḷ-akam, ‘the place of the Vēḷir. Vel ‘to sacrifice, a sacrifice’ (DEDR 5544) > Vēḷir ‘a priest’; Vēḷir ‘a class of ancient chiefs in the Tamil country’ (DEDR 5545); akam ‘house, place, inside’ (DEDR 7).

One of the -arma(ka) names compiled by Burrow from Paniini and the Kasika commentary is Kukkutarma-, literally ‘the ruined city of the cock’. I draw attention to an Indus seal from Mohenjodaro (Marshall seal No.338) which has an inscription featuring a pair of cocks followed by the ideogram for CITY (Fig. 4A). It is not unlikely that the seal has recorded in the Indus script the original Dravidian name of the city, corresponding to IA kukkutaarma, with the ideographic suffix CITY added to it."


best,
N. Ganesan

42-Akam-and-Puram.pdf

N. Ganesan

unread,
Jan 3, 2021, 11:30:04 AM1/3/21
to vallamai, housto...@googlegroups.com
குதிரை > குருதை; கதிர் > கருது; மதிரை > மருதை ...

Virus-free. www.avg.com

Virus-free. www.avg.com

kanmani tamil

unread,
Jan 3, 2021, 11:42:58 AM1/3/21
to vallamai
இதுவரை கேட்டிராத புதுக்கோணம்!
சக 

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUeRMVS3Lc5hPPPtGETrW-412oGXGEbzCaw2CAXTiJ-ZkA%40mail.gmail.com.

N. Ganesan

unread,
Jan 3, 2021, 11:54:19 AM1/3/21
to vallamai
On Sun, Jan 3, 2021 at 10:42 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
இதுவரை கேட்டிராத புதுக்கோணம்!
சக 

2ம் 3ம் மாறும் குதிரை > குருதை; கதிர் > கருது; மதிரை > மருதை ...  இடவல மாற்றம் மேலும் சில அறிவேன். அவற்றைத் தொகுக்கிறேன்.
பேரா. ஆ. வேலுப்பிள்ளை தான் கதிர் > கருது (கொங்குவழக்கு) பற்றிக் குறிப்பிட்டார். இன்னும் உதாரணங்கள் உண்டா? நன்றி.

நா. கணேசன்
 

N. Ganesan

unread,
Jan 3, 2021, 12:28:19 PM1/3/21
to vallamai, housto...@googlegroups.com
On Sun, Jan 3, 2021 at 10:42 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
இதுவரை கேட்டிராத புதுக்கோணம்!
சக 


இப்பொழுது நினைவுக்கு வருகிறது. மதிரை என்பது பழம்பெயர் என நான் சுட்டிக்காட்டிய பின்னர், நூ தலோசு மதிரை பற்றிப் பல மடல்கள் எழுதினார். 2020-ல் அவரைக் காணோம்.
2019 என நினைக்கிறேன். அவர் மடல் ஒன்றில், சிலம்பு போன்ற நூல்களில், அடியெதுகை பார்த்தால், காலப்போக்கில் மதிரை என்பது மதுரை
என மாற்றப்பட்டதாகத் தெரிகிறது. செப்பேடுகளில், கல்வெட்டுகளில் மதிரை என்றே உள்ளது. ஆக, சுமார் 1500 ஆண்டுக்
காலம் மதிரை தான் சரி எனத் தமிழர் கொண்டுள்ளனர். வடக்கே உள்ள மதுரையும், மதிரை என்ற சொல்லின் மாற்றம் எனக்
கொள்ளலாம். ஏனெனில் அது அமைந்துள்ள யமுனை நதிப்பெயர் த்ராவிட மொழிதான் எனக் காட்டியுள்ளேன்.
யமுனையின் சிற்பங்களைத் தொகுக்க வேண்டும். 

kanmani tamil

unread,
Jan 5, 2021, 6:03:29 AM1/5/21
to vallamai
ல் >>> ர் மாற்றம் பெற்ற பிற சொற்கள் இன்றும் வழக்கில் உள்ளன. 
(புதல் > புதர் 
சிதல் / சிதிலம்/ செதில் > சிதர்/சிதார்) 
அதனால் மதில் >>> மதிர் என்ற மாற்றத்தை ஏற்கலாம். 

மதுரை பாண்டியர் தலைநகர் ஆவதற்கு முந்தைய நிலை தொடர்பாக இன்னும் ஆழமாகப் பார்க்க வேண்டும். 

சக 

N. Ganesan

unread,
Jan 8, 2021, 6:16:52 AM1/8/21
to vallamai, housto...@googlegroups.com
On Tue, Jan 5, 2021 at 5:03 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
ல் >>> ர் மாற்றம் பெற்ற பிற சொற்கள் இன்றும் வழக்கில் உள்ளன. 
(புதல் > புதர் 
சிதல் / சிதிலம்/ செதில் > சிதர்/சிதார்) 
அதனால் மதில் >>> மதிர் என்ற மாற்றத்தை ஏற்கலாம். 

மதிரை என்ற பெயரால், மதிர்- மதில்- என மாறியுள்ளது எனலாம்.
ர் >> ல் இது வாடிக்கை. This tells that "matir"- in proto-Dravidian became "matil" in Tamil later.
நீர் >> நீலம். Dravidian word Blue in all Indian languages.
தாராட்டு என்னும் சொல் தாலாட்டு ஆகிறது. ரப்பர் > லப்பர், ...
சூர- (சூர்- முள்) > சூலம்.  வார்::வால்,வேர்::வேல் (ஊடுருவுவது),
பார் - பார்ச் சட்டம் பருமை (வலிமை), இருபக்கத்துக்கும் பரவுவது.
பார்/பாரம் :: பாலம். ஆற்றின் குறுக்கே உள்ள பருமையான அமைப்பு.
பூரி-த்தல்:பூலி-த்தல் (பூல்-நை > பூனை)
வீருவீரு எனல் :: வீல்வீல் எனல் (குழந்தை விளக்கை அணைத்ததும் வீர்வீர்/வீல்வீல் என அலறியது)
அரத்தம் :: அலத்தம் (=அரக்கு = லாக்‌ஷ ‘lac')
அரங்கம் :: லங்கா
குருகு :: குலுங்கு  (விரிவாக எழுதியுள்ளேன்).
துருக்கர் :: துலுக்கர்
ஆரத்தி :: ஆலத்தி
குரவை :: குலவை
சாம்பர் :: சாம்பல்
பந்தர் :: பந்தல்
குடர் :: குடல்
குதிர் :: குதில்
ரொள்ளு :: லொள்ளு
லாந்தர் (lantern) :: ராந்தல் (இது சரியானது என மக்கள் மாற்றியுள்ளனர், hypercorrection of an English word).
etc.,

NG

 

kanmani tamil

unread,
Jan 8, 2021, 7:35:54 AM1/8/21
to vallamai
அருமையான தொகுப்பு 
சக 

N. Ganesan

unread,
Jan 10, 2021, 8:21:00 PM1/10/21
to vallamai, housto...@googlegroups.com
குதிரை > குருதை; கதிர் > கருது; மதிரை > மருதை ...

Two Examples of Tirunelveli metathesis.

(2) முத்துக் குளிக்க வாரீகளா?
https://www.youtube.com/watch?v=BiD6xmKQcwg
“சிப்பி எடுப்போமா...மாமா.மாமா
அம்மளுக்கும் சொந்தமில்லையோ”  (Note அம்மள்)

“ஆளான பொண்ணுக பாக்கு வைக்கும் முன்னமே
  என்னவென்னு சொல்லுவாக - ஆ
ஆளான பொண்ணுக பாக்கு வைக்கும் முன்னமே
  என்னவென்னு சொல்லுவாக - ஆ
அட கோளாறு பண்ணாம சித்த வந்து கொஞ்சுங்கோ
  சினிமாவில்  கொஞ்சறாப்பல
காத்தவராயனை ஆரியமாலா
  காதலிச்ச மாரிதியில்லா
காத்தவராயனை ஆரியமாலா
   காதலிச்ச மாரிதியிலா
ஜிஞ்சின்னாக்கடி ஜிஞ்சினாக்கடி”
(மாரிதி - மாதிரி எனுஞ் சொல்லின் இடவலமாற்று, metathesis.
நெல்லை வட்டார வழக்கை எனக்குச் சொல்லியவர் கவிஞர் ருத்ரா).

(2) பாரதியும் நெல்லைவழக்கு ஒன்றைப் பயன்படுத்தினார்,
சிரித்த ஒலியிலவள் கைவி லக்கியே
          திருமித் தழுவி "என்ன செய்தி சொல்" என்றேன்;

திமிருதல் > திருமுதல் (Metathesis in Nellai dialect).
http://www.keetru.com/rebel/bharathi/76.php

~NG

kanmani tamil

unread,
Jan 10, 2021, 10:07:47 PM1/10/21
to vallamai
'அம்மளுக்கும்' என்றால்- நம்மளுக்கும் = நமக்கும்; என்பது பொருள். 
எங்கள் வட்டாரத்தில் 'நம்மளுக்கும்' என்று இப்போதும் பேசுவதுண்டு. 
சக 


--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

N. Ganesan

unread,
Jan 10, 2021, 10:16:15 PM1/10/21
to vallamai, paramasivan esakki
On Sun, Jan 10, 2021 at 9:07 PM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
'அம்மளுக்கும்' என்றால்- நம்மளுக்கும் = நமக்கும்; என்பது பொருள். 
எங்கள் வட்டாரத்தில் 'நம்மளுக்கும்' என்று இப்போதும் பேசுவதுண்டு. 
சக 

நன்றி. நீர்(அம்)  > ஈரம் போல.

இலங்கையில் அம்மன் என்பதை அம்மள் என்கிறார்கள்.
பண்டாரிக்குளம் அருள்மிகு சிறி முத்துமாரி அம்மள் ஆலய ரததோற்சவம்

kanmani tamil

unread,
Jan 11, 2021, 12:00:14 AM1/11/21
to vallamai
குறிப்பிட்ட திரைப்படப் பாடல் முத்துக் குளிப்பதைப் பற்றிப் பேசுவதால்... 

நீருள் மூழ்குபவர் இடுப்பில் கட்டிய கயிற்றைப் படகில் இருக்கும் மைத்துனர் பற்றியிருப்பதே மரபு...

இங்கு இருவரும் தமக்குள் சொந்தம் உள்ளது என்று சொல்லிக் கொள்வது இந்த மரபை அடியொட்டி அமையும் எதிர்பார்ப்பு (மனோரமாவும் நாகேஷும்- அனுபவி ராஜா அனுபவி திரைப்படம்- கே.பாலச்சந்தர் இயக்கியது- தூத்துக்குடியில் தான் இந்தப் பாடலின் கதைப் பகுதி நடக்கிறது.) சூப்பர் ஹிட்டான பாட்டு. 

பாட்டில் எந்த அம்மனைப் பற்றியும் பேசவில்லை. 
சக 

N. Ganesan

unread,
Jan 11, 2021, 9:24:31 AM1/11/21
to vallamai
On Sun, Jan 10, 2021 at 11:00 PM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
குறிப்பிட்ட திரைப்படப் பாடல் முத்துக் குளிப்பதைப் பற்றிப் பேசுவதால்... 

நீருள் மூழ்குபவர் இடுப்பில் கட்டிய கயிற்றைப் படகில் இருக்கும் மைத்துனர் பற்றியிருப்பதே மரபு...

இங்கு இருவரும் தமக்குள் சொந்தம் உள்ளது என்று சொல்லிக் கொள்வது இந்த மரபை அடியொட்டி அமையும் எதிர்பார்ப்பு (மனோரமாவும் நாகேஷும்- அனுபவி ராஜா அனுபவி திரைப்படம்- கே.பாலச்சந்தர் இயக்கியது- தூத்துக்குடியில் தான் இந்தப் பாடலின் கதைப் பகுதி நடக்கிறது.) சூப்பர் ஹிட்டான பாட்டு. 

பாட்டில் எந்த அம்மனைப் பற்றியும் பேசவில்லை. 

ஆம். இதற்கப்புறம் நாகேஷ் - மனோரமா பல ஆண்டு சேர்ந்து நடிக்கவில்லை. ஏதோ மனஸ்தாபம்.

அம்மள் என்பதற்கு அம்மன் என்ற பொருளும் உண்டு. ஆனால், இப்பாட்டில் பொருந்தவில்லை என்பது சரியே.
 

N. Ganesan

unread,
Jan 11, 2021, 9:26:07 AM1/11/21
to vallamai
On Sun, Jan 10, 2021 at 9:22 PM N. Ganesan <naa.g...@gmail.com> wrote:


On Sun, Jan 10, 2021 at 9:07 PM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
'அம்மளுக்கும்' என்றால்- நம்மளுக்கும் = நமக்கும்; என்பது பொருள். 
எங்கள் வட்டாரத்தில் 'நம்மளுக்கும்' என்று இப்போதும் பேசுவதுண்டு. 
சக 


நும்/நுன் (பிற்காலத்தில் நின்) >> உம்/உன் என்றாவத்ம் சொன்முதல் ந் கெடுதலால்.
 
நன்றி. நீர்(அம்)  > ஈரம் போல.

kanmani tamil

unread,
Jan 11, 2021, 10:00:51 AM1/11/21
to vallamai
'அம்மன்' என்று தமிழகத்தில் வழங்கக் காரணம் என்ன?

எல்லாம் வல்லவள் என்ற கொள்கையை நிறுவ ஆண்பால் விகுதி தேவைப்பட்டு உள்ளது என்று கருத வேண்டி உள்ளது. 
பெண்ணியச் சிந்தனயைத் தவிர்க்க முடியவில்லை. 

'அம்மள்' என்று இலங்கையில் வழங்குவதற்குப் பெண்பால் விகுதி என்பதைத் தவிர வேறு காரணம் தேவை இல்லை. 

சக 

seshadri sridharan

unread,
Jan 11, 2021, 10:56:53 AM1/11/21
to வல்லமை
On Mon, 11 Jan 2021 at 20:30, kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
'அம்மன்' என்று தமிழகத்தில் வழங்கக் காரணம் என்ன?

எல்லாம் வல்லவள் என்ற கொள்கையை நிறுவ ஆண்பால் விகுதி தேவைப்பட்டு உள்ளது என்று கருத வேண்டி உள்ளது. 
பெண்ணியச் சிந்தனயைத் தவிர்க்க முடியவில்லை. 

'அம்மள்' என்று இலங்கையில் வழங்குவதற்குப் பெண்பால் விகுதி என்பதைத் தவிர வேறு காரணம் தேவை இல்லை. 

சக 

அம்மன் என்பது அமைச்சர் போன்ற உயர் பதவியில் இருந்தவரை குறிக்கும் மிகப் பழந்தமிழ்ச் சொல்லாகும். மேலை ஆசியாவில் கிடைத்த சிந்து முத்திரையில் "அம்மன்" என்ற பெயர் உள்ளது.  எனது பழைய  மின்தமிழ் குழு பதிவில் இதனை காணலாம்.

kanmani tamil

unread,
Jan 11, 2021, 11:16:28 AM1/11/21
to vallamai
சிந்து முத்திரையை வாசிக்க இன்னும் திண்டாடிக் கொண்டு தானே ஐயா இருக்கிறார்கள்?!

எப்படித் திட்டவட்டமாகச் சொல்கிறீர்கள்?
சக 

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

seshadri sridharan

unread,
Jan 13, 2021, 11:15:08 PM1/13/21
to வல்லமை
சிந்து முத்திரை வாசிப்பு https://groups.google.com/g/mintamil/c/Lo1Ap8E-ALU
 

seshadri sridharan

unread,
Jan 15, 2021, 12:23:47 AM1/15/21
to வல்லமை
Indus seals > சிந்து முத்திரைகள் https://groups.google.com/.../m3FqXBxQsr0/Uyw1t9Tzd8cJ  

N. Ganesan

unread,
Jan 17, 2021, 4:34:15 PM1/17/21
to vallamai
On Mon, Jan 11, 2021 at 9:00 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
'அம்மன்' என்று தமிழகத்தில் வழங்கக் காரணம் என்ன?

இருக்கலாம். அக்கன் என்றும் வழங்கும் சொல் உண்டு.
ராஜராஜனின் புகழ்மிக்க தளிச்சேரிக்கல்வெட்டு
நாம் கொடுத்தனவும் நம் அக்கன் கொடுத்தனவும் நம் பெண்டுகள் கொடுத்தனவும் கொடுப்பார் கொடுத்தனவும்...இந்தக் கல்லிலே வெட்டியருளுக என்று திருவாய்மொழிஞ்சருளி... ” என்று போகும்.
பெண்மகன் என்ற சொல்லும் இலக்கியத்தில் உண்டு.

தேவதாசிகளுக்கு நக்கன் (< நக்கர்/நகர் எனும் மகரம்) என்ற விருதுப்பெயரும் உண்டு.
காஞ்சி சொக்கீசுவரர் கோயில்:
”கி.பி. 985-ல் எடுக்கப்பட்ட இத்திருக்கோயிலில் உள்ள ஒரு கல்வெட்டு, இக்கோயிலை தெற்கிருந்த நக்கர் கோயில் என்று குறிக்கிறது. இக்கல்வெட்டு கரிகால் சோழ பிள்ளையார் என்று ஒரு கடவுளையும் குறிக்கிறது. இப்பிள்ளையாரின் சிற்ப வடிவினை இக்கோயில் அர்த்த மண்டப தேவ கோட்டத்தில் இன்றும் காணலாம். இப்பிள்ளையார் பூதகணங்களுடன் மூசிக வாகனத்தில் காட்சியளிக்கிறது.”

(1) அக்கன் (அக்கா), (2) அம்மன் (அம்மா), (3) பெண்மகன், (4) நக்கன் (சிவத்தொண்டு செய்யும் தேவரடியாள்), ... இதுபோல், இன்னும் முக்கியமான பெண்வகுப்பாருக்கும் -ன் என்னும் ஆண்பால் விகுதி இருக்கும்.

NG
 

எல்லாம் வல்லவள் என்ற கொள்கையை நிறுவ ஆண்பால் விகுதி தேவைப்பட்டு உள்ளது என்று கருத வேண்டி உள்ளது. 
பெண்ணியச் சிந்தனயைத் தவிர்க்க முடியவில்லை. 

சக 
Reply all
Reply to author
Forward
0 new messages