கிரவுஞ்சப் பறவை (= Indian Black Ibis) - வால்மீகிராமாயணத்தில் சம்ஸ்கிருதமொழியின் முதல் சுலோகம்

634 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Oct 15, 2014, 9:08:31 AM10/15/14
to mint...@googlegroups.com, vallamai, thami...@googlegroups.com, Santhavasantham, housto...@googlegroups.com, tiruva...@googlegroups.com, Dr. Krishnaswamy Nachimuthu, sirpi balasubramaniam, Ramachandran Nagaswamy, Iravatham Mahadevan
வால்மீகி முனிவர் பாடிய ராமாயணம் க்ரௌஞ்சப் பறவைகளைப் பார்ப்பதையும், அவற்றில் ஆணை வேடன் ஒருவன் அம்பெய்திக் கொல்வதையும், ஆற்றாமையால் பெண் அன்றில் விளரிப்பண்ணைப் பாடி அரற்றுவதுடன் தொடங்குகிறது. அந்தக் கிரவுஞ்சப் பறவை சாம்பல்நாரை (Indian sarus crane) என்று 32 பறவைகளை ஆராய்ந்து சம்ஸ்கிருத அறிஞர் ஜூலியா லெஸ்லி ஆய்வுக்கட்டுரை 1998-ல் எழுதினார். இங்கே கிரவுஞ்சம் என்பது அன்றிற் பறவை, அதனை ஆங்கிலத்தில் Indian Black Ibis  என்போம் எனச் சங்க இலக்கியத்தைத் துணைக்கொண்டு விளக்குகிறேன். க்ரௌஞ்சம் sarus crane எனல் பொருந்தாது. கரிஞ்சம் என்று இந்தியாவில் பல இடங்களின் பழமையான பெயர்கள் உள்ளன. கமுகு > கமுகம், தமிழ் > த்ரமிடம், பவளம் > ப்ரவாலம் போல, கரிஞ்சம் > க்ரௌஞ்சம் என்று காட்டியிருக்கிறேன். அன்றில் (< *நன்றில்) என்ற பெயரே கரிய நிறங்கொண்ட பறவை (Black Ibis) என்பதுதான். இந்தியாவில் 3 அன்றில் (Ibis) இனங்கள் வாழ்கின்றன. அவை பற்றிப் பார்ப்போம்.

நா. கணேசன்


Julia Leslie, A BIRD BEREAVED: THE IDENTITY AND SIGNIFICANCE OF
VALMIKI'S KRAUNCA, J. of Indian Philosophy, 1998

"ABSTRACT. The key event at the start of the Sanskrit Ramayana attributed to  Valmiki is the death of a bird at the hands of a hunter. In Sanskrit, that  bird is termed krauñca. Various identifications have been offered in the past but uncertainty persists. Focusing on the text of the critical edition and drawing on ornithological data regarding the birds commonly suggested, this article establishes beyond doubt that Valmiki’s ‘krauñca bird’ is the Indian Sarus Crane. It then considers a key verse in the southern recension, omitted by the editors of the critical edition, which supports this identification. Finally, the article explores the significance of the Indian Sarus Crane for the epic scene."

"THE CANDIDATES
While drawing on Salim Ali and Dillon Ripley’s celebrated and exhaustive, ten volume Handbook of the birds of India and Pakistan (1983),30 I focus here on the better known species, as evidenced by the more popular guides by Ali  (1972), Woodcock (1980), and Grewal (1993)." (pg. 461)

She considers a total of 32 birds, under the common names:
snipe, curlew, egret, heron, stork, flamingo and crane.
Dr. J. Leslie's list of birds considered with their scientific 
names are provided at the end. She rejects with reasoning
why 31 birds do not fit the Ramayana's shlokas and finally chooses
sarus crane. I mentioned the reasons that work against 
this ID for Krauñca bird earlier today. One major class of birds left out
by JL is Indian Ibises, as shown in Tamil Sangam literature and
later Tamil texts.

There are only three species of ibis birds in India.  
(1) The Indian Black Ibis, is also called Red-naped ibis – Pseudibis papillosa 
has a red-colored crest. This is called "centalai an2Ril" in Tamil and fits 
exactly with the desciption of the shloka that Julia L. is talking about. It 
is  resident and breeds in Indo-Gangetic plains, and also throughout South 
India. See the map data in,
This ibis bird is special to the Indian subcontinent & this Indian Black Ibis 
gets mentioned in both Tamil Sangam literature extensively and Ramayana's 
starting shlokam.

Julia Leslie, who passed away in 2004, analyzed this shloka and tried
identify the Krauñca bird as Sarus Crane. But Classical Tamil tradition
tells the identity as a different bird, which is black in color and
the adolescent males sporting a red feathers on its head. She quotes
a shloka which will help in the ID,
"Marked in the Baroda edition as an additional or substitute passage,
the following 'sloka is inserted after verse 11 in some manuscripts:

viyuktA patinA tena dvijenA sahacAriNA |
tAmra'sIrSeNa mattena patriNA sahitena vai // 136*[53]"

She gives a provisional translation
"She [the female krauñca] was separated from him: her husband, her twiceborn
companion with the dark red head, intoxicated and with his wings 
(outstretched) in that very moment of sexual union."

Masson, J. (1969). ‘Who killed cock krauñca? Abhinavagupta’s reflections on 
the origin of aesthetic experience’, Journal of the Oriental Institute of 
Baroda 18.3: 207–224. In this reference, Masson translates "tAmra'sIrSeNa" as 
as having ‘bright red head feathers’ (Masson, 1969: 210). If we look at the 
bird, called kariñcam in Tamil Villi Bhaaratam, its black body with a copper 
head is clear. What is more, the adult males sport red feathers on the crown. 



Look at the Krauñca (ibis) pair. Only the adult male has a red crown
whereas the female has a black head.
female black ibis,
































All these - black body of krauñca, copper like color of the head, and red 
crown does not fit the Sarus crane at all. In fact, the Sarus Crane's crown 
does not have any red color at all - it is grey color like
the rest of the body of Sarus crane & naked (bald) with no crest or crown..

(2) The Glossy Ibis, which is totally black is Plegadis falcinellus. This is a 
winter visitor bird to India. In Sind, Ceylon, and places that are suitable 
watery lands only, the Glossy Ibis breeds in the subcontinent. Look in pg. 365,




















It seems the name for this species of Ibis in Sangam literature
is "makan2Ril' (மகன்றில்) with maa-/maka- standing for its black color & since it 
lacks the characteristic bright red crest that we find in the red-naped ibis. 
Also, called akan2Ril as word-initial m- is lost (cf. malar:alar, ...).

(3) Black-headed Ibis (Threskiornis melanocephalus)
The head, body, and legs are totally black but the plumage is white.



Its Tamil name is "pakan2Ril" with pAl:pakal "white color" denoting the bright 
white feathers of this ibis species. Appar sings he sees the pakan2Ril pair in 
the water fields in Kaveri delta,
தண்மதிக் கண்ணியி னானைத் தையனல் லாளொடும் பாடி
உண்மெலி சிந்தைய னாகி யுணரா வுருகா வருவேன்
அண்ண லமர்ந்துறை கின்ற ஐயா றடைகின்ற போது
வண்ணப் பகன்றிலொ டாடி வைகி வருவன கண்டேன்
கண்டே னவர்திருப் பாதங் கண்டறி யாதன கண்டேன்.

(பகரத் தாரா அன்னம் பகன்றில் பணிந்து ஏத்த - Campantar, 
pakarat taaraa = white duck, so pakan2Ril = white-feathered
black-legged Ibis. Also called "karuGkaal an2Ril" in Sangam).
In KuundhankuLam bird sanctuary, Tirunelveli district,
all 3 species of ibis are regularly seen,
in Vedanthangal,

Now let us look at Valmiki's shlokas, as translated
by Sanskritist J. Leslie:
"My provisional translation runs:
There, in the vicinity, the blessed lord (Valmıki) saw a devoted pair of krauñca
birds, walking around and calling musically to each other. (1.2.9)
But then, as he was watching, a malevolent and ruthless hunter of the NiSAda 
tribe shot down one of the pair, the male. (1.2.10)
When she saw him struck down, twisting and turning on the ground, his body 
coated with blood, his mate cried aloud a mournful note. (1.2.11)
And when the saintly poet saw the male bird thus felled by the hunter, 
compassion welled up within him. (1.2.12)
Then, in his intense compassion, the brahmin said to himself: ‘This is not 
right!’ As he heard the female krau~nca lamenting, he pronounced these words: (1.2.13)
‘May you find no peace, NiSAda, for all eternity – because you killed the male 
of this loving krauñca pair when he was intoxicated by desire!’ (1.2.14) (page  459, JIP, 1998)

”But I'd like to end on a lyrical, not a chilling note – one that I hope will sound too in what we shall hear about Julia's most recent book. I want to recommend to you her wonderful article for the Journal of Indian Philosophy in 1998 on 'A Bird Bereaved: the Identity and Significance of Valmiki's krauñcha'. The article stems partly from another of Julia's accomplishments and interests, ornithology, and expresses at the end gratitude to Mike Clark, the dedicatee of her novel Perahera, 'who, in the glorious setting of Sri Lanka, taught me much of what I know about South Asian birds'. With relentless yet charming scientific precision, Julia narrows down the identity of the krauñcha birds that Valmiki observes mating, 'when a hunter suddenly appears and kills one of them. The death of the male krauñcha and the heart-rending distress of the female affect Valmiki so powerfully that he curses the hunter, his curse emerging spontaneously in the verse-form that will carry the epic poem [the Ramayana] that he is about to compose.' Julia goes through thirty-two candidates in seven groups: the snipes, the curlews, the egrets, the herons, the storks, the flamingoes, and the cranes, settling finally on the Indian Sarus Crane (Grus antigone antigone). Her clinching evidence is a shloka from a southern recension of the Ramayana that was dropped from the modern critical edition, in which the male bird is described as tamrashirsha, '[coppery] red-headed'. The Sarus Crane has 'a naked, dark-red head and upper neck', and no other candidate fits the bill.”

At the end of her JIP 1998 paper, J.Leslie uses her identification in the Valmiki Ramayana shlokas. After long discussion - but missing out the 3 Indian Ibis species - JL wites:
"The krau~ncavadha
passage in the Ramayana is quite different. First,
let us consider a revised translation of the passage based on the findings
outlined above. The words and phrases altered by our new knowledge
are highlighted:
There, in the vicinity, the blessed lord (Valmıki) saw a devoted breeding pair of Sarus Cranes, strutting around and performing a musical duet. (1.2.9)
But then, as he was watching, a malevolent and ruthless hunter of the Nisada tribe shot down one of the pair, the male. (1.2.10)
When his mate saw him struck down, twisting and turning on the ground, his body coated with blood, she trumpeted in alarm. (1.2.11)
For she had been separated from him – her husband, her twice born
companion with the dark red head – when he was in the throes of sexual passion, his wings outstretched in that very moment of union. (136*)
And when the saintly poet saw the male Sarus thus felled by the hunter, compassion welled up within him. (1.2.12)
Then, in his intense compassion, the brahmin said to himself: ‘This is not right!’
As he heard the female Sarus Crane trumpeting in distress, he pronounced these
words: (1.2.13)
‘May you find no peace, Nisada, for all eternity – because you killed the male of this loving pair of Sarus Cranes when he was lost in the ecstasy of sexual passion!’
(1.2.14)

When together, the Indian Black Ibis makes a musical note (In the 7 svaras, the madhyama svara is from the Krauncha birds pair in Musicology texts). But when separated, the an2il/kraunca sings in the sad note called viLari calling for her mate to come & join. In Indian litrarture, we do not have anything like this for Sarus Cranes, but only for Indian Ibis birds. Hence, it is clear Krauñca bird is NOT sarus crane, but rather it is Indian Black Ibis, an2Ril as seen in numerous Sangam poems.

N. Ganesan

karinjam > kraunjam:
கரிஞ்சம் - இடப்பெயர் ஆய்வு (Karinja - Toponymy)

இடப்பெயர்கள் பொதுவாக மிகப் பழையவை. பஞ்ச திராவிட தேசத்தில் கரிஞ்சம் என்று க்ரௌஞ்சத்தின் பேரால் இடங்கள் உள்ளன. 

கரிஞ்சத் தீவு மும்பை அருகே உள்ளது.






கரிஞ்சம் ஊர். அதில் உள்ள கரிஞ்சேசுவரர் - தட்சிண கர்நாடகத்தில்.

---------------------

கரிஞ்சம் (க்ரௌஞ்சம்) நெய்தல் நிலத்தின் பறவை. பனையில் கூடிகட்டி வாழ்வது.
கருமையான நிறத்தது. ஆண் பறவியின் உச்சந்தலை செஞ் சூட்டுடன் இருக்கும் என்றெல்லாம் சங்க இலக்கியம் பகர்கிறது. இதைத்தான் கோவிந்தராஜர் தன் வால்மீகி ராமாயண உரையில் விளக்கியுள்ளார்கள்.

கமுகு க்ரமுகம் என்றும், பவளம் ப்ரவாலம் என்றும், தமிழ் த்ரமிடம் என்றும் வடமொழியில் ஆதற்போல கரிஞ்சம் என்னும் கருஅன்றிற் பறவை க்ரௌஞ்சம் என்று சம்ஸ்கிருதத்தின் முதற் சுலோகத்தில் ஆதிகவி சொல்கிறார். அன்றில் < நன்றில், நல்-/நள்- “கறுப்பு”. நள்-/நல்- > அல் “இருள், இரா” என்றானது. அலவன் இருளில் திரியும் நண்டு (< நள் ‘கருமை, இருள்’).

மும்பை அருகே கரிஞ்சத் தீவாகட்டும், வங்காளம் ஆகட்டும் கரிஞ்சம் (> க்ரௌஞ்சம்), தமிழகம் ஆகட்டும் கரிஞ்சம் (அ) அன்றில் பறவை உண்டு, பறவையியலில் அதன் பெயர்: Plegadis falcinellus

அன்றில் என்னும் க்ரௌஞ்சம் நெய்தல்நிலப் புள் (Plegadis falcinellus). அது பெடையொடு கூடுகட்டி வாழப் பெண்ணை (பெண்பனை) மரம் அதன் விருப்பத் தேர்வு. அன்றிலின் குரல் காதலரை நைவிக்கும். "விளரிக் குரலன்றில் மென்படை மேகின்ற முன்றில்பெண்ணை", "காவார் மடல்பெண்ணை அன்றில் அரிகுரலும்", “பெண்ணைமேல் பின்னுமவ்வன்றில் பெடைவாய்ச் சிறுகுரலும், என்னுடைய நெஞ்சுக்கு ஓர் ஈர்வாளா மென்செய்தேன்” ”பெண்ணைமேல் பின்னுமவ் வன்றில் பெடைவாய்ச் சிறுகுரலுக்கு, உன்னி யுடலுருகி நையாதார்” (ஆழ்வார்கள்).

ஏற்றை (ஆண்பனை), பெண்ணை (பெண்பனை) - பனை மரங்களில் பால் பாகுபாடு என்ற பதிவு எழுதியபோது வாலிம்மிகியின் க்ரௌஞ்சம் (< கரிஞ்சம் = அன்றில்) என்றால் என்ன பறவை? - எனச் சொல்ல நினைந்தேன். செல்வன் வால்மீகியும், தமிழும் என்ற இழையில் மு. இராகவையங்கார் தண்பொருநை, மலயம் (=பொதியில்), கபாடபுரம் என்று வரும் ராமாயணசுலோகப் பொருளைத் தமிழ் இலக்கியங்கொண்டு கோவிந்தராஜர் விளக்கியதும், அப்படிப் பார்க்கில் கிரவுஞ்சம் என்றால் என்ன பறவை? - என்பதும் விளங்குகின்றன.

இருக்குவேதம் முதல்பாட்டிலேயே இழைத்தல், அரதநம் என்னும் இரு தமிழ்ச் சொற்கள் இருப்பது போல,
சம்ஸ்கிருதத்தின் முதல் சுலோகம் ஆதிகவி வால்மீகி செய்யும்போது தமிழ் வார்த்தை கரிஞ்சம் என்னும் நெய்தற்றிணை அன்றிற்பறவையின்
பெயராய் நிற்றல் அறிந்து இன்புறத்தக்கது. ~நா. கணேசன்

E. Vai. Anantharamaiyar writes on an2Ril (= Krauñca bird) in his
Kalittokai edition:

"அன்றிலென்பது நெய்தனிலத்துக்கு உரித்தாகக் கூறப்படுவதொரு பறவை; கழிமீன் முதலியவற்றையுண்டு பனைமரத்திற் சிறுகோலாற் கூடுகட்டிக்கொண்டு வதிவது; செந்தலையையும் வளைந்ததும் செந்நிறத்ததுமாகிய வாயையும் கரிய காலையுமுடையதென்று கூறப்படுகிறது; துணையின்மேன் மிக்க காதலையும் அதனைப் பிரியாத தன்மையையும் பிரியின் துயிலாது நடுங்கி வருந்திக் கதறுந் தன்மையையுமுடையது; நள்ளிரவின் அகவுவது; பிரிந்திருப்பவரைத் தன்குரலால் வருத்துவது; இவை,(அ) “தெண்ணீ ரிருங்கழி வேண்டுமிரைமாந்திப், பெண்ணைமேற் சேக்கும் வணர்வாய்ப் புணரன்றில்”(ஆ) “நெருப்பி னன்ன செந்தலை யன்றி, லிறவி னன்ன கொடுவாய்ப் பெடையோடு.............கட்சியிற் பிரிந்தோர் கையற நரலு நள்ளென்யாமத்து”(இ) “மனைசேர் பெண்ணை மடிவா யன்றி, றுணையொன்று பிரியினுந் துஞ்சாகா ணென”(ஈ) “பராரைப் பெண்ணைச் சேக்குங்கூர்வா, யொருதனி யன்றி லுயவுக்குரல் கடைஇய, வுள்ளே கனலுமுள்ள மெல்லெனக், கனையெரி பிறப்ப வூது, நினையா மாக்க டீங்குழல் கேட்டே”(உ) “செவ்வாய் வன்றி றுணையிழப்ப”(ஊ) “முழவுமுதலரைய தடவுநிலைப் பெண்ணைக், கொழுமட லிழைத்த சிறுகோற் குடம்பைக், கருங்கா லன்றிற் காமர் கடுஞ்சூல், வயவுப்பெடை யகவும் பானாள்”(எ) “கனைத்ததங் காதலிற் கனவிற் கண்டிறந், தினைந்த போன் றிடையிடை நோக்கியின்குரல், புனைந்தகம் புணர்பெடை புல்லி மெல்லவே, யனந்தருண் முரன்றன வன்றிற் சேவலே”(ஏ) “புணர்பிரியா வன்றிலும்போ, னித்தலு நம்மைப் பிரியல மென்றுரைத்த, பொற்றொடியும்”(ஐ) “ஒன்றில் காலை யன்றில் போலப், புலம்புகொண் டுறையும் புன்கண் வாழ்க்கை”(ஒ) “துணைபிரிந்தயரு மன்றிற் சேவலிற் றுளங்குகின்றான்”(ஓ) “பெண்ணைமேற் பின்னுமவ் வன்றிற் பெடைவாய்ச் சிறுகுரலுக், குன்னி யுடலுருகி நையாதார்” என்பவற்றால் அறியப்படும்.பெரும்பாலும் இவ்வியல்பினதாக மகன்றிலென்று ஒருநீர்வாழ்பறவைகூறப்படுகிறது. இதுவும் அதுவும் ஒன்றென்னும் கூறுவர். அன்றிலென்பது வடமொழியில், ‘க்ரௌஞ்சம்’ எனவழங்குமென்ப." (EVaiA, Kalittokai, pg. 801).

The list of 32 birds analyzed by J. Leslie. Note that she
does not talk anything about 3 species of Ibis resident and breeding
in India. For that we need to look into classical Tamil literature.

"Under the common name ‘snipe’, I consider five birds:
the Common or Fantail Snipe, Gallinago gallinago gallinago
(Linnaeus) [409];
the Pintail Snipe, Gallinago stenura Bonaparte [406];
the Eastern Solitary Snipe, Gallinago solitaria solitaria Hodgson
[404];
the Wood Snipe, Gallinago nemoricola Hodgson [405]; and
the Painted Snipe, Rostratula benghalensis benghalensis (Linnaeus)
[429]."

"Under the common name ‘curlew’, I consider three birds:34
the Eastern Curlew, Numenius arquata orientalis C. L. Brehm
[388];
the Whimbrel, Numenius phaeopus phaeopus (Linnaeus) [385];
and
the Indian Stone Curlew, Burhinus oedicnemus indicus (Salvadori)
[436]."

"Under the common name ‘egret’, I consider four birds:37
the Eastern Large Egret, Ardea alba modesta J. E. Gray [46];
the Smaller or Median Egret, Egretta intermedia intermedia (Wagler)
[47, 48];
the Little Egret, Egretta garzetta garzetta (Linnaeus) [49]; and
the Cattle Egret, Bubulcus ibis coromandus (Boddaert) [44]."

"Under the common name ‘heron’, I consider six birds:
the Indian Reef Heron, Egretta gularis schistacea (Hemprich &
Ehrenberg) [50];
the Eastern Grey Heron, Ardea cinerea rectirostris Gould [36];
the Eastern Purple Heron, Ardea purpura manilensis Meyen [37];
the Little Green Heron, Butorides striatus javanicus (Horsfield)
[38];
the Indian Pond Heron or Paddybird, Ardeola grayii grayii (Sykes)
[42]; and
the Night Heron, Nycticorax nycticorax nycticorax (Linnaeus) [52]."

"Under the common name ‘stork’, I consider seven birds:
the Painted Stork, Mycteria leucocephala (Pennant) [60];
the Openbill Stork, Anastomus oscitans (Boddaert) [61];
the WhiteNecked
Stork, Ciconia episcopus episcopus (Boddaert)
[62];
the White Stork, Ciconia ciconia ciconia (Linnaeus) [63];
the BlackNecked
Stork, Ephippiorhynchus asiaticus asiaticus
(Latham) [66];
the Adjutant Stork, Leptoptilos dubius (Gmelin) [67]; and
the Lesser or HairCrested
Adjutant Stork, Leptoptilos javanicus
(Horsfield) [68]."

"Under the common name ‘flamingo’, I consider two birds:
the Flamingo or Greater Flamingo, Phoenicopterus roseus Pallas
[73]; and
the Lesser Flamingo, Phoeniconaias minor (Geoffroy) [74]."

"This reduces our shortlist of candidates to one common name: the
‘crane’. Under this heading, I consider five birds:45
the Demoiselle Crane, Anthropoides virgo (Linnaeus) [326];
the Eastern Common Crane, Grus grus lilfordi Sharpe [320];
the BlackNecked
Crane, Grus nigricollis Przevalski [321];
the Siberian or Great White Crane, Grus leucogeranus Pallas [325];
and
the Indian Sarus Crane, Grus antigone antigone (Linnaeus) [323]."
 (J. Leslie, JIP, 1998).



N. Ganesan

unread,
Oct 17, 2014, 10:36:06 PM10/17/14
to santhav...@googlegroups.com, mint...@googlegroups.com, vall...@googlegroups.com, housto...@googlegroups.com, tiruva...@googlegroups.com
சமஸ்கிருதத்தின் ஆதிகவி அன்றில் என்னும் கரிஞ்சம்/க்ரௌஞ்ச பறவைகளின் சோகம்பற்றிப்
பாடியதால் காவிய சந்தம் பிறந்தது.

காவிய சந்தம் பிறந்த கதை - தெய்வத்தின் குரல்
சில சந்த வகைகள்,

---------

தாராபுரம் தியடோர் பாஸ்கரன் ஜூலியா லெஸ்லி கட்டுரைக்கான எதிர்வினையைப் படித்து மகிழ்ந்தார்.
தமிழ்நாட்டுப் பறவைகள் பற்றி திரு. பாஸ்கரனின் நூல்மதிப்புரை:

மதிப்புரை
ஆகாயத்துப் பட்சிகளைக் கவனித்துப் பாருங்கள்
தியடோர் பாஸ்கரன

தமிழகத்தின் நீர்ப்புல பறவைகள்; (Weland Birds of Tamil Nadu: A Pictorial Field Guide) - தமிழிலும், ஆங்கிலத்திலும்.கெட்டி அட்டை, வண்ணப்படங்கள்

ராபர்ட் கிரப், ஷைலஜா கிரப்
கெட்டி அட்டை விலை ரூ.250 
வெளியீடு:
Institute for Restoration of Natural Environment. 2nd Main Road, Christopher Nagar Extn, Nagercoil 629003
(Phone: 04652-232430)

மக்களிடையே புள்ளினம் பற்றிய ஆர்வம் அதிகரித்துவருவது மகிழ்ச்சியான அறிகுறி. பறவைகளை அவதானித்தல் உலக அளவில், வேகமாகப் பரவிவரும் ஈடுபாடு. இன்று தமிழகத்தில் கோவை, தூத்துக்குடி, சென்னை போன்ற நகரங்களில் பறவை ஆர்வலர்களுக்கெனச் சங்கங்கள் உள்ளன. போட்டிகள் நடத்தப்படுகின்றன. புள்ளினங்களைப் புகைப்படம் எடுப்பது பற்றிய முகாம்கள் காட்டில் நட்த்தப்படுகின்றன. இணைய தளத்தில் செயல்படும் சில குழுக்கள் பறவைகள் பற்றிய தகவல்களையும் படங்களையும் பகிர்ந்துகொள்கின்றன.

பறவைகளை அவதானித்தல் (bird watching) என்றால் என்ன? ஒரு பறவையின் அழகால், அதன் அசைவுகளால், குரலால் ஈர்க்கப்பட்டுச் சில சமயங்களில் அதை நாம் ஓரிரு வினாடிகளாவது நின்று கவனித்தது உண்டு அல்லவா? இதன் நீட்சிதான் இந்த ஆர்வம். இந்த ஈர்ப்பு அக்கறையாக மாறிப் புறவுலகைப் பற்றிய கரிசனத்திற்கும், புரிதலுக்கும் நம்மை இட்டுச் செல்கிறது. ஒரு பறவையைப் பார்க்கும்போது எழும் முதல் கேள்வி “இது என்ன பறவை?” இந்தக் கேள்வியிலிருந்து ஆரம்பிக்கிறது புள்ளினம் பற்றிய மற்ற விவரங்களை அறிந்துகொள்ளும் ஆர்வம். அதன் இயல்பு, நடவடிக்கை, குரலோசை, இரைதேடும் முறை, இனப்பெருக்கம் செய்யும் காலம் என நம் கேள்விகள் விரிகின்றன. இவற்றுக்கு விடைதருவதோடு, புள்ளினம் பற்றிய நமது ஆர்வத்தை வளர்ப்பது தான் பறவைகளைப் பற்றிய கையேடுகளின் நோக்கம். இத்தகைய ஈடுபாடு புறவுலகிற்கும் நமக்கும் பாலமாக அமைகிறது. புள்ளினங்களின் வாழ்விடத்தைப் பற்றி, வாழ்முறை அறிய முற்படும்போது சுற்றுச்சூழல் பற்றிய பிரச்சினைகளை நாம் எதிர்கொள்கிறோம். இயற்கையில் ஒன்றுக்கொன்றிருக்கும் பிணைப்புகள் பற்றிப் புரிந்துகொள்ள முடிகிறது.

நாகர்கோவிலில் வாழும் பறவையியலாளர் ராபர்ட்டும் அவருடைய மனைவி ஷைலஜாவும் சேர்ந்து உருவாக்கியிருக்கும் நீர்ப்பறவைகள் பற்றிய இந்த இருமொழிக் கையேடு சிறப்பாக அமைந்துள்ளது. நீர்நிலைகளில் பறவைகளை அவதானிப்பது காடு போன்ற மற்ற பகுதிகளைவிட எளிது. பரந்த இடம். நாம் ஓரிடத்தில் இருந்து பைனாகுலர் மூலம் நிதானமாகப் புள்ளினங்களைப் பார்க்கலாம். பறவைகளும் அங்கேயே இருக்கும். சிறவி, உள்ளான் போன்ற வலசை வரும் பறவைகளை அவதானிக்கவும் ஏரி, குளங்கள் சிறந்த இடங்கள். அதிலும் உவர்ப்பு நீரும் நன்னீரும் கலந்திருக்கும் முகத்து வாரங்கள், காயல் நீர்ப்பரப்புகள் (lagoon) அரிய பூநாரை போன்ற நீர்ப்பறவைகள் பலவற்றை ஈர்க்கின்றன.

1942இல் சலிம் அலி இந்தியப் பறவைகள் பற்றிய கையேட்டு நூலை (The Book of Indian Birds) வெளியிட்டு ஒரு பெரிய இயக்கத்திற்குப் பிள்ளையார் சுழி போட்டு வைத்தார். அதற்கு முன்னரே பிரிட்டிஷ் இந்திய அரசில் பணிபுரிந்த ஆங்கில அதிகாரிகள் சிலர் பறவைகளைக் கவனித்துக் கையேடுகள் சில எழுதினார்கள். மருத்துவராகப் பணி புரிந்த ஜெர்டன், காவல்துறையில் வேலைசெய்த விஸ்லர், ஐ.சி.எஸ் அதிகாரியாக இருந்த டக்ளஸ் டிவார் போன்றோர் எழுதிய அரிய நூல்கள் இந்தியாவின் புள்ளினச் சிறப்பை உலகிற்குக் கொண்டுசென்றன. இன்று அந்நூல்களின் ஒவ்வொறு பிரதியும் சோழர்காலச் செப்பு சிலைகள்போல விலைபோகின்றன. சலிம் அலியின் கையேடு பதினைந்து பதிப்புகள் வந்த பிறகும் இன்றும் அதற்கு வரவேற்பு குறையவில்லை. இந்தியச் சுற்றுச்சூழல் இயக்கத்தில் சலிம் அலியின் கையேட்டிற்கு ஒரு முக்கியப் பங்கு உண்டு.

சலிம் அலியின் மாணவரும் அவருடன் பல பதிற்றாண்டுகள் பணிபுரிந்த ஒருவரும் சேர்ந்து எழுதியிருக்கும் நூல் தமிழகத்தின் நீர்ப்புலப் பறவைகள்/ Wetland Birds of Tamil Nadu நூலாசிரியர்களான ராபர்ட் - ஷைலஜா தம்பதி மும்பாய் இயற்கை வரலாற்றுக் கழகத்தில் பல ஆண்டுகள் பணியாற்றிப் பின்னர் நாகர்கோவிலில் குடியேறினர். ராபர்ட் இந்தியாவின் பறவை ஆய்வாளர்களில் ஒரு முன்னோடி. பறவையியல் துறையில், பிணந்தின்னிக் கழுகுகளைப் பற்றிக் கள ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர். விமானங்கள் வானில் பறவையுடன் மோதி இடருறும் பிரச்சினை பற்றி ஆராய்ந்து அரசுக்கும், வான் படைக்கும் அறிக்கை அளித்தவர். நீர்நிலைகளில் பார்க்கக் கூடிய 147 புள்ளினங்கள் பற்றி 215 புகைப் படங்கள் அடங்கிய இருமொழிக் கையேடு இந்நூல். தமிழகத்திலுள்ள பதினான்கு பறவைச் சரணாலயங்களும் நீர்நிலைகளைச் சார்ந்திருக்கின்றன என்பதை நாம் மனத்தில் கொள்ள வேண்டும். ஆசிரியர்களின் விவர ஞானத்தின் அடிப்படையில் கச்சிதமாக எழுதப்பட்ட, அருமையான, ரத்தினச் சுருக்கமான குறிப்புகள் மூலம் நீர்ப்புலப் பறவைகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. தமிழ்நாட்டில் காணக்கூடிய மூன்று வெண்கொக்குளை வேறுபடுத்தி அடையாளம் காண்பது பற்றித் தரப்பட்டிருக்கும் குறிப்பை எடுத்துக்காட்டாகக் கூறலாம். வலசை வரும் பறவைகளைப் பற்றிய நிலப்படம் எளிமையாக இந்தப் பயணங்களை விளக்குகிறது.

முன்னர் வந்த கையேடுகளில் பற்வைகள் ஓவியமாக சித்தரிக்கப்பட்டிருந்தன. வெகுவேகமாக, வெளிச்சம் மிகக்குறைவாக இருந்தாலும் படமெடுக்கக் கூடிய டிஜிடல் காமிராக்கள் காட்டுயிர் ஆர்வலர்களுக்கு வரப்பிரசாதமாக வந்த பிறகு பெருவாரியான காட்டுயிர்க் கையேடுகளிலும் புகைப்படங்கள்தாம் பயன்படுத்தப்படுகின்றன. பறவை அவதானிப்பில் இன்று ஆர்வம் அதிகமாகியிருப்பதற்கு இதுவும் ஒரு காரணம். இந்நூலின் ஒரு சிறப்பு பரிமாணமம் புகைப்படங்கள். கிளமெண்ட் ஃபிரான்சிஸ் போன்ற நாட்டின் தலைசிறந்த காட்டுயிர்ப் புகைப்பட நிபுணர்கள் பலரின் படங்கள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. எடுத்துக்காட்டாக, தாமரைக்கோழி ஒன்று பறக்கும் நிலையில் உள்ள படத்தில், நீர்த்தாவர இலைகளின் மேல் நடப்பதற்கு ஏதுவாகத் தகவமைப்பில் உருவாகியுள்ள நீண்ட விரல்கள் தெளிவாகத் தெரிகின்றன. (இந்தப் பறவை நீரில் மிதக்கும் இலைகளின் மேல் நடந்துசெல்வது நீரின் மேல் அது நடப்பது போன்ற தோற்றத்தைத் தருவதால் அதற்கு ‘ஜீசஸ் பறவை’ என்று பாப்புவா நீயுகினியில் பெயர்). அதேபோல் தரைக் கூட்டிலுள்ள ஆள்காட்டிக் குருவியின் படமும் துல்லியமாக உள்ளது. எல்லாப் படங்களுமே தெளிவாக, இயற்கையான, அழுத்தமான வண்ணங்களுடன் அமைந்துள்ளன. ஆனால் படங்களின் பின்புலத்தை (background) போட்டோ ஷாப் மூலம் நீக்கிவிட்டது படத்தின் சிறப்பைக குறைக்கிறது. காட்டுயிரைக் காட்டும் புகைப்படத்தின் முக்கியப் பரிமாணம் பின்புலம். அது அந்த உயிரினத்தை அதன் வாழிடத்தில் (habitat) காட்டுகிறது. பூநாரை இரை தேடும் பரந்த, ஆழமற்ற நீர்நிலைகள், மரத்தில் அமரும் மீன்கொத்தி இவற்றைப் படங்கள் காட்டலாம்.

பறவையின் தமிழ்ப் பெயர்கள் பற்றி ஒரு நல்ல குறிப்பை ஆசிரியர் தருகிறார். புள்ளினங்களின் பெயர்கள் பற்றிக் குழப்பம் நிலவுவதைக் குறிப்பிடுகிறார். முப்பதுகளில் நிக்கொலாஸ் என்ற ஆங்கில அதிகாரி தமிழ்ப் பெயர்களைத் தொகுத்து மும்பாய் இயற்கை வரலாற்றுக் கழகத்தின் சஞ்சிகையில் (Journal of BNHS) இரண்டு கட்டுரைகளை வெளியிட்டார். தமிழக வனத் துறை அதிகாரி எம்.ஏ.பாட்சா 150 பறவைகளின் தமிழ்ப் பெயர்களை ஒரு புத்தகமாக வெளியிட்டார். 1952இல் வெளியான கலைக்களஞ்சியத்தில் மா.கிருஷ்ணன் ஐம்பது பறவைகளைப் பற்றி எழுதிய குறிப்புகளைத் தொகுத்துப் பெருமாள்முருகன் பறவை உலகம் என்ற நூலை வெளியிட்டுள்ளார். கிருஷ்ணன், தமிழகச் சுற்றுலாத் துறைக்காக எழுதிய வேடந்தாங்கல் சரணாலயம் என்ற நூலையும் அதிலுள்ள தமிழ்ப் பெயர் பட்டியலையும் இதில் பெருமாள்முருகன் சேர்த்துள்ளார். க. ரத்னம் தனது தமிழ்நாட்டுப் பறவைகள் (2002) என்ற நூலில் பல பாரம் பரியப் பெயர்களைப் பயன்படுத்தியிருக்கிறார். இந்தப் பெயர்கள் எல்லாமே புழக்கதிலிருப்பவை. இட்டுக்கட்டப்பட்டவையோ அல்லது ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்க்கப்பட்டவையோ அல்ல. இதில் பல பெயர்களை ராபர்ட் பயன்படுத்தவில்லை. எடுத்துக்காட்டாக purple heronஇன் தமிழ்ப் பெயர் செந்நாரை. செந்நீலக் கொக்கு அல்ல. Grey heron சாம்பல் கொக்கு அல்ல சாம்பல் நாரை. கொக்கு என்று நாரைகளைக் குறிப்பிடுவது தவறு. Painted Stork சங்குவளை நாரை, வர்ண நாரை அல்ல. ஐபிஸ் என்றழைக்கப்படும் பறவையின் தமிழ்ப் பெயர் அன்றில். ‘அன்றில் சிறு பறவை ஆண் பிரிய வாழாது’ என்று பாரதி குறிப்பிட்டார். இவை எல்லாமே இன்றும் புழக்கத்திலிருக்கும் பழைய பெயர்கள். அதே போல் பாரம்பரிய, இன்றும் புழக்கத்தில் இருக்கும் பெயர்களான உழவாரக்குருவி (Swift) தகைவிலான் குருவி (Swallow), தாமரைக்கோழி (Pheasant tailed jacana), சிறவி, கிழுவை (Common teal) பவளக்கால் உள்ளான் (Black-winged stilt) போன்ற பல பெயர்கள் பயன்படுத்தப்படவில்லை. கிராமத்து மக்களிடையே இன்றும் பல பெயர்கள் வழக்கத்திலிருக்கின்றன. நீலகிரி மாயார் பள்ளத்தாக்கில் கள ஆய்வுசெய்து வரும் பாரதிதாசன் பிணந்தின்னிக்கழுகு என்று குறிப்பிடப்படும் vultureஐ மக்கள் பாறு கழுகு என்றழைப்பதைப் பதிவுசெய்திருக்கிறார். சில தமிழ்ப் பெயர்கள் இரண்டாயிரம் ஆண்டுகளாக மாறாமல் புழக்கத்திலிருக்கின்றன என்பது வியப்புக்குரியது. குறளிலிருந்து ஒரு எடுத்துக்காட்டு

பகல்வெல்லுங் கூகையைக் காக்கை யிகல் வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது. (481)

இதில் பிரச்சினை என்னவென்றால், சில பறவைகளுக்குத் தமிழில் ஒன்றுக்கும் மேற்பட்ட பெயர்கள் உண்டு. கொண்டைலாத்திக்கு எழுத்தாணிக் குருவி என்றும் சுடலைக்குயிலுக்குப் பருத்திக்குயில் என்றும் பெயர்கள் உண்டு. சில பறவைகளுக்குத் தமிழ் நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு பெயர் இருக்கும். இது நம் மொழிவளத்தின் ஒரு பரிமாணம் என்று நான் கருதுகிறேன். நமது பாரம்பரிய வகைப்பாட்டியல் இன்றைய மேற்கத்திய வகைப்பாட்டியலிலிருந்து வேறுபட்டது என்பதை நாம் மனத்தில் கொள்ள வேண்டும். உயிரியிகளின் தமிழ்ப் பெயர்கள் மறைவதற்குப் பல காரணங்கள். ஆங்கில வழிக்கல்வி அதில் முக்கியமானது. ஆங்கிலப் பெயர்கள் மூலமே மாணவர்கள் தங்களைச் சுற்றிலும் உள்ள காட்டுயிர்களை அடையாளம் காண்கிறார்கள். தமிழ்நாட்டில் காட்டுயிர் பற்றி ஆராய்கிறவர்கள் ஏறக்குறைய எல்லாருமே ஆங்கிலத்தைப் பயிற்றுமொழியாகக் கொண்டு படித்தவர்களே. ஆகவே அவர்களும் தமிழ்ப் பெயர்களில் அக்கறை காட்டுவதில்லை.

சத்திமுத்தப் புலவரின் புகழ்பெற்ற ‘நாராய் . . . நாராய்’ பாடலில் குறிப்பிடப்படும் பறவை செங்கால் நாரையா (White Stork) அல்லது சங்குவளை நாரையா (Painted Stork) என்ற கேள்வியை ஆசிரியர் எழுப்பியுள்ளார். ஐம்பதுகளில் Esquire என்ற ஆங்கில மாத இதழில் இந்தப் பாடல் பற்றிய ஒரு கட்டுரையை மா.கிருஷ்ணன் எழுதினார். வலசை போகும் ஒரு பறவையினத்தை எப்படித் துல்லியமாகக் கவிஞர் வர்ணிக்கிறார் என்று வியந்து எழுதினார். இந்த நாரையின் முக்கியமான அடையாளங்கள் சிவப்பு நிறக்கால்கள், பவள நிறம் கொண்ட, பனங்கிழங்கின் உட்பாகம் போன்ற அலகு, அலகின் நிறம் பவளம். இது செங்கால் நாரை என்பதில் என்ன சந்தேகம்? கிருஷ்ணனின் மொழி பெயர்ப்பு With coral-red beak, sharp tapered/ Like the split tuber of the sprouting palmyra என்கிறது.

சுற்றுச்சூழல் இயக்கத்திற்கும் சூழலியலுக்கும் இந்நூல் ஒரு சீரிய பங்களிப்பாகும் பறவைகளைக் கவனிக்கும் பழக்கம் தமிழ் வாசகர்களிடையே வளர வழி வகுக்கும். அந்த ஈடுபாடு, சீக்கிரமே காட்டுயிர் பேணல், புறவுலகில் அக்கறை என விரிவடையக்கூடும். கண்ணையும் மனத்தையும் கவரும் துல்லியமான புகைப்படங்கள், அருமையான நூல் உருவாக்கம். தமிழகத்தில் பறவை களை ஈர்க்கும் நீர்ப்புலங்களின் பட்டியல் ஒன்றும் இந்நூலில் சேர்க்கப்பட்டுள்ளது. நூலின் குறிப்பிடப்படும் எல்லாப் பறவைகளின் அறிவியல் (லத்தீன் மொழி) பெயர்களும் ஆங்கிலப் பெயர்களும் பட்டியலிட்டுக் கொடுக்கப்பட்டுள்ளன. இது முழுமையான களக் கையேடு.

N. Ganesan

unread,
Oct 19, 2014, 12:46:52 AM10/19/14
to mint...@googlegroups.com, santhav...@googlegroups.com, vall...@googlegroups.com, housto...@googlegroups.com, tiruva...@googlegroups.com
பெண்குயில் பாடுவதில்லை என்கிறார்கள் பறவையியல் நிபுணர்கள். அதுபற்றிய ஒரு புதுக்கவிதை:

காகமாய்க் கரையும் பெண்குயில்
ஒரு நாளும் பாடியதில்லை.
    பாடுவதெல்லாம் ஆண் குயிலே!
    காம விழைவின் அறிவிக்கையே!
    ஹைப்போதலாமஸ் விசிலடிக்குதென 
    விலாவாரியாய் விஞ்ஞானம்!
பாடாக் குயில் காகம் தானென
பால பாடம் சொன்னாள் பாட்டி
    ஆனாலும் போற்றுவோம் பெண்குயிலென
    சினிமாவில் பாடும் பாடகியை!
----------------------------------------------------------------------------

மகரம் என்பது ஆதியில் கங்கை முதலை. காலப்போக்கில் ஒரு mythical composite விலங்கு
ஆக இந்தியாவின் கற்பனாசக்தியால் சிற்பங்களில் வளர்வதைப் பார்க்கிறோம்.
அன்றில் எனப்படும் கரிஞ்சப் பறவைகள் ஐபிஸ் என்னும் இனம். அவைபற்றியும் பின்னாளில் 
பல கற்பனைக் கதைகள் உருவாகிவிட்டன:

அழகரந்தாதிப் பாடல் - அதற்கு திரு, வை.மு.கோ உரை பாருங்கள்:

(பாங்கிவிடுதூது.)

16.அழக்கன்றியகருங்கண்ணிக்குக்கண்ணியளித்திலரேல்
வழக்கன்றிமுன்கொண்டவால்வளைகேளு மறுத்ததுண்டேற்
குழக்கன்றின்பின்குழலூதலங்காரர்க்குக் கோதைநல்லீர்
சழக்கன்றில்வாய்பிளந்தாலுய்யலாமென்று சாற்றுமினே.

அன்றிலென்பது, ஒருபறவை. அது, எப்பொழுதும் ஆணும்பெண்ணும் இணைபிரியாது நிற்கும். கணப்பொழுது ஒன்றை ஒன்று விட்டுப் பிரிந்தாலும் அத்துயரத்தைப்பொறாமல் ஒன்றை யொன்று இரண்டுமூன்றுதரம் கத்திக்கூவி அதன்பின்பும் தன் துணையைக்கூடாவிடின் உடனே இறந்துபடும். இதனை வடநூலார் க்ரௌஞ்சம் என்பர். ஆணும்பெண்ணுமான அந்த அன்றிற்பறவை இணைபிரியாமல் நெருங்கி ஒன்றோடொன்று வாயலகைக் கோத்துக்கொண்டு உறங்கும்பொழுது அவ்வுறக்கத்திலே வாயலகு தன்னில் நெகிழ்ந்தவளவிலே துயிலுணர்ந்து அப்பிரிவைப் பொறாமல் மெலிந்து பெருந்தொனியாகக்கத்துகின்ற மிகஇரங்கத்தக்க சிறுகுரல் காமோத்தீபகமாய்ப் பிரிவாற்றாமைதை்துயரை வளர்த்துப் பிரிந்தகாமுகரை மிகவருத்தும்; ஆதலால், அந்தஅன்றில் கத்தாதபடி அதன்வாயைப் பிளந்துவிட்டா லன்றி இவள்உய்யாள் என்று சொல்லுங்க ளென்றாள். ("புள்ளின்பகுவாயது போலகனி, வின்னாங்குயில்வெவ்வியவாய்கிழயாய்" என்ற பாகவதத்தோடு இதனை ஒப்பிடக.) துணைவனின்றித் தனிமையாயிருக்கிறசமயத்திலே மெல்லியலாளான தலைவியைச் சிறிதுங்கண்ணோட்டமின்றித் தன்குரலால்வருத்தும் பிழைபாடுடையது அன்றி லென்றாள், "சழக்கன்றில்" என்றாள். தம்மைச் சார்ந்த அநபராதியான எளியார் மிகவருந்தும்படி அவரை வாயினால் வருத்துங் குற்றவாளிகட்குத் தலைவர்செய்யத்தக்க தண்டனை அவ்வாயைப் பிளத்த லென்க.


On Friday, October 17, 2014 7:36:08 PM UTC-7, N. Ganesan wrote:
சமஸ்கிருதத்தின் ஆதிகவி அன்றில் என்னும் கரிஞ்சம்/க்ரௌஞ்ச பறவைகளின் சோகம்பற்றிப்
பாடியதால் காவிய சந்தம் பிறந்தது.

காவிய சந்தம் பிறந்த கதை - தெய்வத்தின் குரல்
சில சந்த வகைகள்,

---------

கல்பட்டு ஐயா,

கரிஞ்ச நிறத்தில் இருப்பதால் தமிழில் கரிஞ்சம் எனப்படும்
பறவை க்ரௌஞ்சம் என வடமொழிப் பெயர் பெறுகிறது. 
(கமுகு > க்ரமுக, தமிழ் > த்ரமிட, பவளம் > ப்ரவால, ...)

அன்றில் எனப்படும் Black Ibis பறவைக்கு இன்னொரு
பெயர் கரிஞ்சம்/க்ரௌஞ்சம். க்ரௌஞ்ச தீவு
அன்றில் தீவு எனவும், முருகன் க்ரௌஞ்சமலையைப்
பிளந்ததை அன்றில்மலையை பிளந்ததாகவும்
தமிழ் இலக்கியங்கள் பேசுகின்றன. அன்றில் குருகு
இனங்களில் ஒன்று. அன்றில் பறவையில் மூன்று
வகைகள் இந்தியா முழுதும் வாழ்கின்றன.

ஏன் சாருஸ் நாரை என்பது கரிஞ்சம்/க்ரௌஞ்சம் அல்ல?
- இதனை 2000 ஆண்டு தமிழ் இலக்கியம் கொண்டு ஆய்ந்துள்ள பதிவு;

 

தாராபுரம் தியடோர் பாஸ்கரன் ஜூலியா லெஸ்லி கட்டுரைக்கான எதிர்வினையைப் படித்து மகிழ்ந்தார்.
தமிழ்நாட்டுப் பறவைகள் பற்றி திரு. பாஸ்கரனின் நூல்மதிப்புரை:

மதிப்புரை
ஆகாயத்துப் பட்சிகளைக் கவனித்துப் பாருங்கள்
தியடோர் பாஸ்கரன்

N. Ganesan

unread,
Oct 23, 2014, 10:14:02 AM10/23/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, Santhavasantham, housto...@googlegroups.com, tiruva...@googlegroups.com, sirpi balasubramaniam, Dr. Krishnaswamy Nachimuthu, S. V. Shanmukam, Ramachandran Nagaswamy, Iravatham Mahadevan
> குடைந்து குடைந்து கண்டுபிடித்துவிட்டீர்கள் !!! பாராட்டுகள் திரு. கணேசன்.  இந்த மேற்கோள்களைப் படித்து ..
> கிரௌஞ்சம் = அன்றில் = ஐபிஸ் = male   Indian Black Ibis என்றே எனக்கும் தோன்றுகிறது.  

///
> கிராமத்து மக்களிடையே இன்றும் பல பெயர்கள் வழக்கத்திலிருக்கின்றன. 
///

> என்றும் கிரப் அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.   அதனால் இப்பறவை பல பெயர்களிலும் வழங்கப்பட்டிருக்கலாம். 

> ஆனால் நீங்கள் தெளிவுபடுத்தியத்தை ஜூலியா லெஸ்லி யுடன் பகிர்ந்துகொள்ள முடியாமல் போனது வருத்தம் தருவது. 
> தெரிந்திருந்தால்  அம்மையார் நிச்சயம் மகிழ்ந்திருப்பார் என்றே தோன்றுகிறது.

ஜூலியாவின் முன்னாள் கணவர், சம்ஸ்கிருத அறிஞர் டாமினிக் வுஜாஸ்டைக் இருக்கிறார். அவருக்கு ஆங்கிலத்தில் எழுதணும்.

> ..... தேமொழி

அன்பின் தேமொழி,

நன்றி. அன்றில் தான் க்ரௌஞ்சம் என்று நம் தமிழ் இலக்கியத்தின் 2000 ஆண்டு கால மரபு தெளிவாகப் பறையறைகிறது. ஆனால், ஜூலியா லெஸ்லிக்கு அவர் வாழ்ந்த காலத்தில் இதனைச் சொல்லிக் கொடுப்பார் யாருமில்லாது போனது. குருகு வகைகளில் ஒன்றான Ibis இனப் பறவைகளை ஆராயாது விட்டுவிட்டார். Curlews, Snipes, Egrets, Herons, Cranes என்று 32 குருகுகளைப் பார்த்தவர் ஐபிஸ் இனம் 3 வகுப்புக்களாய் இந்தியா முழுமையும் இன்றும் வாழ்தலைப் பாராது விட்டுவிட்டார். Ibis இனத்தில் மூவகை ஜாதிகள் இந்தியாவிலே உண்டு. தொல்காப்பியத்தின் பழைய உரையாரியர் பேராசிரியர். அவர் புறநானூற்றின் ஒரு பாடலில் இந்திய முதலைகளில் உள்ள மூன்று சாதிகளின் பெயர்கள் என்று குறிப்பிடுவதை ஒத்தது அன்றிலின் மூன்று வகைகளாம். முதலைகள் இந்திய சமயம் தமிழரால் சிந்து சமவெளியில் உருவாகி, இரும்புக்கால (சங்க காலம்) தமிழ்நாட்டிலும் பரவியிருந்தது எழுத்திலும், பாண்டியர் சேர மன்னர் காசுகளிலும், சிற்பத்திலும் என்று காட்டி ஆய்வுக் கட்டுரைகள் எழுதியுள்ளேன். அதுபோல, மூவகை அன்றில்களின் முக்கியத்துவத்தை, கரிஞ்சம் என்னும் அன்றிலின் ஒரு தமிழ்ப் பெயர் க்ரௌஞ்சம் என்றாதலையும் விளக்கி எழுதவேணும். ‘நெருப்பின் அன்ன செந்தலை அன்றில்’ என்ற சங்கச் சான்றோர் வர்ணிக்கும் செய்யுளின் க்ரௌஞ்சப் பறவையும், அதன் அழகிய ஒளிப்படமும் பார்த்திருந்தால் அவருக்கு வால்மீகி ராமாயண சுலோகமும், அதன் உரையும் தெள்ளென விளங்கியிருக்கும். ராமன் விளைவு (Raman effect, http://en.wikipedia.org/wiki/Raman_scattering ) போல, அன்றிலை சாருஸ் நாரை என்று சம்ஸ்கிருத முனைவர் ஜூலியா லெஸ்லி எழுதியதால் ஆங்கிலத்திலும், அதனைப் பார்த்துத் தமிழிலும் பரவி வருகிறது. இதனை ஜுலியா விளைவு எனலாம். ஆனால், தமிழ் இலக்கியத்தில் அவ்வாறில்லை எனக் காட்டவே இவ்விழை. ஞாழல் என்னும் சிறுமரத்தின் (பெண்ணுக்கு உவமையாக காளிதாசர் சொல்லும் மரம். ஞாழற்பத்து - ஐங்குறுநூறு) செய்தியைக் குலசைக் கவிஞர் ருத்ராவுக்குச் சொல்லியபோதும் குறிப்பிட்டேன்.

அன்றிலுக்கு தமிழில் கரிஞ்சம் என்று ஒரு பெயர். அதிலிருந்து க்ரௌஞ்சம் என்று வடமொழிப் பெயர் உருவாகியுள்ளது. அண்மையில் விசாகப்பட்டினத்தைத் தாக்கிய புயற்பெயர் தந்த கொண்டை-லாத்திக் குருவிக்கு
எழுத்தாணிக்குருவி என்றும் மக்கள் வழங்குவது போல, அன்றிலுக்கு
கரிஞ்சம் என்ற பெயர் இருப்பதைப் பழைய தமிழ் இலக்கியங்களும்,
இந்தியா முழுதும் இடங்கள், ஊரின் பெயர்களும் (toponymy) தெரிவிக்கின்றன.

தமிழ் > த்ரமிட, பவளம் > ப்ரவால, கமுகு > க்ரமுக,
நம்பி > ந்ரம்பி > வடமொழியில் ’பூர்ண’ என்று பெயர்த்தல் ஸ்ரீவைஷ்ணவ மரபு.
கந்து - கயிறு, மாடு பிணைக்கும் தும்பு. கந்துகம் - கயிறு, கயிறுபோன்ற இளங்கொடி
சுருட்டிப் பந்தாகச் செய்வதால் பந்துக்குக் கந்துகம். ஓலைச் சுவடிகளில் எழுதிக்
கட்டுவதால் கந்த- > க்ரந்தம். தமிழர் த்ராவிட, ஆர்ய பாஷைகளை எழுதக் கண்டு 
1500 ஆண்டுகளாய் பயன்படுத்தின லிபி. இவை போல,
கரிஞ்சம் என்னும் தமிழ்ப் பெயர் க்ரௌஞ்சம் என்று வடமொழியில் ஆகிறது

ஜூலியா லெஸ்லி தமிழ் இலக்கிய மரபை அறியாததால் நேர்ந்த பிழையினால் க்ரௌஞ்சம் சாருஸ் பறவை என்று சொல்ல இணையத்திலும் இப்பொழுது அதை அப்படியே சொல்ல முற்படுகின்றனர். இதுபற்றி தியடோர் பாஸ்கரனிடம் பேசினேன். 

““She who is ever together with her husband, a male bird with flighty wings and with a prideful red crest, and one who always had a heart for her, but she is now separated from him, and gone is that togetherness; and she, on seeing her slain husband whose body is blood-soaked, and who is reeling on the ground in the anguish of pain, bewailed with piteous utterances. “ [1-2-11, 12]
Therefore we can see a Krauncha (5) HAS A RED CREST
Summary:


WE CAN THUS SEE A KRAUNCHA IS:

(1) LARGE 
(2) SWIMMING BIRD
(3) DWELLS ON A LAKE
(4) IS A WATER BIRD
(5) HAS A RED CREST OR RED HEAD”

சாருஸ் நாரையின் உச்சந்தலையைப் பாருங்கள். அதில் செஞ்சூடு (red crest) இல்லை.
Sarus cranes only have a bald, grey top in their head, No red crest.
But Indian Black Ibis (with a native Tamil name, Karinjam) has a
beautiful red crest in their adult male birds. That is what
Adikavi Vaalmiki is talking about.

ஜூலியா சாருஸ் நாரை என்று சொல்ல கல்பட்டு நடராஜன் ஐயா போன்ற புள்ளியல் (Ornithology) ஆர்வலர்களும் எழுதியுள்ளனர். ஆனால், தமிழின் 2000 ஆண்டு இலக்கிய மரபும், கிராமங்களில் இன்றும் பரவலாகப் புழக்கத்தில் உள்ள அன்றில் என்று ஐபிஸ் பறவைகளுக்கான பெயரும் அன்றில் எனப்படும் க்ரௌஞ்சம் (<கரிஞ்சம்) யாது என்பதை ஐயத்துக்கிடமின்றி நிறுவிவிடுகின்றன.

அவர் 1960-களில் பல கிராமங்களில் அன்றில் என்னும் பெயர் இன்றும் ஐபிஸ் பறவைகளுக்கு இருப்பதை அறிந்து எழுதியவர். நிக்கொலஸ் (1930s, J. of Bombay Natural Historic Society), எம். ஏ. பாட்சா, பிலோ இருதயநாத், மா. கிருஷ்ணன், பி. எல். சாமி, ... என்று பலர் எழுதியிருப்பார்கள். தேடல்களால் கிடைக்கும். நிச்சயமாக, கலைமகள், செந்தமிழ்ச்செல்வி போன்ற இதழ்களில் க்ரௌஞ்சம் - அன்றில் பற்றிய கட்டுரைகள் வெளியாகியிருக்கும். தேடுவோம். 

தியடோர் பாஸ்கரன் சங்க இலக்கியத்தில் அன்றில் பறவை பற்றி வரும் செய்தியை - monogamous character - சுப்பிரமணிய பாரதியார் குறிப்பிடுவதை எழுதியுள்ளார்: “பாலியல் ஒழுக்கத்தைப்பற்றிக் கவலையற்ற பறவை உலகில் இது வெகு அரிதான நடத்தை. பெருவாரியான புள்ளினம் இணை சேர்ந்தபின் தன் வழியே போய்விடும். பெட்டை பறவைதான் அடைகாத்து, குஞ்சு பொரிக்கும்.

வேறு சில பறவைகள் இனப்பெருக்கக் காலத்தில் மட்டும் தன் ஜதையுடனிருக்கும். கூடு கட்டுவது, குஞ்சுகளுக்கு இரை கொடுப்பது போன்ற வேலைகளை ஆணும், பெட்டையும் செய்யும். தூக்கணாங்குருவி ஒரு எடுத்துக்காட்டு. ஆனால் குஞ்சுகள் கூட்டை விட்டுப் பறந்து போனபின், இவ்விரு பறவைகளும் தத்தம் வழியே போய்விடும். அடுத்த இனப்பெருக்க காலத்தில் வேறு துணையைத் தேடி இணையும். வேடந்தாங்கலில் கூடுகட்டும் அன்றில் பறவை வாழ்நாள் முழுதும் ஒரு துணையுடனிருக்கும். "அன்றில் சிறு பறவை ஆண்பிரிய வாழாது. ஞாயிறு தான் வெம்மை செயில் நாண் மலர்க்கு வாழ்வுளதோ" என்று பாரதி எழுதி வைத்தார்.” 

நா. கணேசன்

On Tuesday, October 21, 2014 6:37:07 PM UTC-7, தேமொழி wrote:
////
ஐபிஸ் என்றழைக்கப்படும் பறவையின் தமிழ்ப் பெயர் அன்றில். ‘அன்றில் சிறு பறவை ஆண் பிரிய வாழாது’ என்று பாரதி குறிப்பிட்டார். இவை எல்லாமே இன்றும் புழக்கத்திலிருக்கும் பழைய பெயர்கள். 
அன்றிலென்பது, ஒருபறவை. அது, எப்பொழுதும் ஆணும்பெண்ணும் இணைபிரியாது நிற்கும். கணப்பொழுது ஒன்றை ஒன்று விட்டுப் பிரிந்தாலும் அத்துயரத்தைப்பொறாமல் ஒன்றை யொன்று இரண்டுமூன்றுதரம் கத்திக்கூவி அதன்பின்பும் தன் துணையைக்கூடாவிடின் உடனே இறந்துபடும். இதனை வடநூலார் க்ரௌஞ்சம் என்பர். 
///


குடைந்து குடைந்து கண்டுபிடித்துவிட்டீர்கள் !!! பாராட்டுகள் திரு. கணேசன்.  இந்த மேற்கோள்களைப் படித்து ..
கிரௌஞ்சம் = அன்றில் = ஐபிஸ் = male   Indian Black Ibis என்றே எனக்கும் தோன்றுகிறது.  

///
கிராமத்து மக்களிடையே இன்றும் பல பெயர்கள் வழக்கத்திலிருக்கின்றன. 
///

என்றும் கிரப் அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.   அதனால் இப்பறவை பல பெயர்களிலும் வழங்கப்பட்டிருக்கலாம். 

ஆனால் நீங்கள் தெளிவுபடுத்தியத்தை ஜூலியா லெஸ்லி யுடன் பகிர்ந்துகொள்ள முடியாமல் போனது வருத்தம் தருவது. தெரிந்திருந்தால்  அம்மையார் நிச்சயம் மகிழ்ந்திருப்பார் என்றே தோன்றுகிறது.

..... தேமொழி
Reply all
Reply to author
Forward
0 new messages