Re: [MinTamil] Re: [வல்லமை] Re: வால்மீகியும், தமிழும்

47 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Oct 13, 2014, 11:41:17 PM10/13/14
to mint...@googlegroups.com, thami...@googlegroups.com, Santhavasantham, vallamai
வால்மீகி ராமாயணத்தின் கிரவுஞ்சப் பறவை யாது?
---------------------------------------

வேடன் வால்மீகி பற்றிய கதைகளைப் பேசும்போது சில ஆண்டுகளுக்கு முன் படித்த ஆய்வுக் கட்டுரை நினைவுக்கு வருகிறது. அதுபற்றிச் சொல்லவேண்டும்.

முனைவர் ஜுலியா லெஸ்லி சம்ஸ்கிருத அறிஞர். புற்றுநோயால் 2004-ல் இயற்கையெய்தினார். தஞ்சை மராத்தியர் அரசவையின் திரியம்பக யஜ்வான் என்பவர்  எழுதிய பெண்களுக்கான சட்டதிட்டங்கள் பற்றிய நூலை எழுதினார். The Perfect Wife: The Orthodox Hindu Woman according to the Stridharmapaddhati of Tryambakayajvan (1989). பின்னர் பஞ்சாபின் வால்மீகிகள் கேட்டுக்கொண்டதற்கிணங்க வால்மீகி கதையைப் பற்றி ஆராய்ந்து விரிவான நூலொன்றும் தந்தார். Authority and Meaning in Indian Religions: Hinduism and the case of Valmiki, 2003
இந்நூல் பிறந்த வரலாற்றை அவரது சரமக்குறிப்பில் காணலாம்:

------

வால்மீகி தன் காவியம் தொடங்கும்போது வேடன் ஒருவன் கிரவுஞ்சப் பறவை ஒன்றைக் கொன்றதால் அதன் துணைப்பேடு தவிப்பதைச் சொல்வதாக ஒரு சுலோகம் சிலேடைப் பொருளுடன் வருகிறது. வேடனுக்குச் சாபம் கொடுப்பதாகவும், திருமாலைப் புகழ்வதாகவும் உள்ள பாட்டு அது.


வால்மீகி சொல்லும் கிரவுஞ்சம் என்பது எந்தப் பறவை என்று பல காலமாக ஆராய்ச்சி நடக்கிறது. ஜூலியா லெஸ்லி இது சாம்பல்நாரை (sarus crane)  என்றார். 
ஆள் உயரத்துக்கு இருக்கும் சாம்பல் நாரையின் உச்சி சிவப்பாய் இராது.

”But I'd like to end on a lyrical, not a chilling note – one that I hope will sound too in what we shall hear about Julia's most recent book. I want to recommend to you her wonderful article for the Journal of Indian Philosophy in 1998 on 'A Bird Bereaved: the Identity and Significance of Valmiki's krauñcha'. The article stems partly from another of Julia's accomplishments and interests, ornithology, and expresses at the end gratitude to Mike Clark, the dedicatee of her novel Perahera, 'who, in the glorious setting of Sri Lanka, taught me much of what I know about South Asian birds'. With relentless yet charming scientific precision, Julia narrows down the identity of the krauñcha birds that Valmiki observes mating, 'when a hunter suddenly appears and kills one of them. The death of the male krauñcha and the heart-rending distress of the female affect Valmiki so powerfully that he curses the hunter, his curse emerging spontaneously in the verse-form that will carry the epic poem [the Ramayana] that he is about to compose.' Julia goes through thirty-two candidates in seven groups: the snipes, the curlews, the egrets, the herons, the storks, the flamingoes, and the cranes, settling finally on the Indian Sarus Crane (Grus antigone antigone). Her clinching evidence is a shloka from a southern recension of the Ramayana that was dropped from the modern critical edition, in which the male bird is described as tamrashirsha, '[coppery] red-headed'. The Sarus Crane has 'a naked, dark-red head and upper neck', and no other candidate fits the bill.”





எனவே, கிரவுஞ்சம் என்பது SARUS CRANE அல்ல. அப்படியானால், கிரவுஞ்சம் என்பது என்ன பறவை? சங்க, பிற்காலத் தமிழ் இலக்கியங்களில் இருந்து கிரவுஞ்சம் என்றால் என்ன பறவை என்று ஜூலியா லெஸ்லி பார்த்திருந்தால் சிறந்த விடை கிட்டியிருக்கும். அதனைப் பின்னர் பார்ப்போம். ஆண் கிரவுஞ்சத்திற்குத் தலை உச்சியில் செம்பு நிறமாய் இருக்கும். ஆனால் சாம்பல்நாரைக்கு (sarus crane) அது இல்லையே. தமிழ் இலக்கியத்தில் காட்டும் பறவை கரிஞ்சம் என்னும் கருமை நிறம் உடையது. கரிஞ்சம் தான் க்ரௌஞ்சம் என்று வால்மீகி ராமாயணத்தில் ஆனதோ? வில்லிபாரதப் பாடல்:

வீடுமன் தன்சேனையைக் கிரௌஞ்சவியூகமாக வகுத்தல்.

பொருஞ்சமங்கருதியாள்புரவிதேர்போதகந்
தெரிஞ்சுகொண்டீரிருதிசையினுஞ்செல்லவே
பெருஞ்சனந்தன்னையப்பீடுடைவீடுமன்
கரிஞ்சமென்றுள்ளபேர்வியூகமுங்கட்டினான்.

பிற பின்!

நா. கணேசன்

Valmiki - to explore more,
(1)
Title: Tellers of tales: pauranikas, sutas, kusilava vyasa and valmiki
Researcher: Dayal, Naina


(2)

M. Viswanathan

unread,
Oct 13, 2014, 11:48:30 PM10/13/14
to Santhavasantham, நா. கணேசன்
அன்புக்குரிய திரு.கணேசன் அவர்கள் தந்த (தருகின்ற) தகவல்கள் எனக்குப் பயன் தருகின்றது. நன்றி.
அன்பன்,
மீ.விசுவநாதன்

--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Ramamoorthy Ramachandran

unread,
Oct 14, 2014, 1:32:41 AM10/14/14
to santhav...@googlegroups.com
வணக்கம் கணேசன் அவர்களே!
உங்கள் ஆராய்ச்சி முனைப்பு மகிழ்ச்சி தருகிறது.
கிரவுஞ்சம் என்ற பெயரைத் தமிழாக்கி
வில்லியார் 'கரிஞ்சம்' என்று எழுதி இருக்கலாம்.
கிரவுஞ்ச வியூகம் அதுவே!

ஆனால் அந்தப் பறவையை அன்றில்  என்றும் 
வழங்கினர்.அன்றில் பறவைகள் காதல் 
பறவைகள் என்று சங்க இலக்கியம் கூறுகிறது.
இதனை மகன்றில் என்கிறது ,குறுந்தொகை 

 ''பூவிடைப்  படினும்  யாண்டு கழிந்தன்ன 
  நீருறை  மகன்றில்   புணர்ச்சி  போலப் 
  பிரிவு அரிது ஆகிய தண்டாக்  காமமொடு,
  உடன் உயிர் போக்கு தில்ல - கடனறிந்து 
  இருவேம் ஆகிய உலகத்து 
  ஒருவேம் ஆகிய புன்மை நாம் உயற்கே!''
  என்பது சிறைக்குடி ஆந்தையாரின் 
  குறுந்தொகைப் பாட்டு.(57)

''பைங்காய்  நெல்லி பலவுடன் மிசைந்து 
 செங்கோல்  மராஅத்த வரிநிழல்  இருந்தோர்  
 யார்கொல், அளியர் தாமே-- வார்சிறைக் 
 குறுங்கால்  மகன்றில் அன்ன 
 உடன்புணர்  கொள்கைக்  காதலோரே!''
 என்பது ஓதலாந்தையார்  பாடிய 
  ஐங்குறுநூற்றுப்  பாடல்.(381)

 இதனை  உள்வாங்கிக் கொண்டு 
  
முன்இணை  யாகிய  அன்றிலின் 
 மோகம்கொள் ஆணினைக்  கொன்றனை 
மன்நெடு  நாள்இனி  வாழ்கலை! 
 வாழ்கலை, வாழ்கலை  வேடனே! 
 
என்ற பாடல் வி.ஸ . காடேகரின் 
கிரௌஞ்ச  வதத்தில் எப்போதோ 
படித்திருக்கிறேன்.
இவையும் உங்கள் ஆய்வுக்கு உதவும்!

நன்றி அன்புடன் புலவர் இராமமூர்த்தி,  

N. Ganesan

unread,
Oct 14, 2014, 10:17:12 AM10/14/14
to santhav...@googlegroups.com


On Monday, October 13, 2014 10:32:41 PM UTC-7, Trichy Pulavar Ramamoorthy wrote:
வணக்கம் கணேசன் அவர்களே!
உங்கள் ஆராய்ச்சி முனைப்பு மகிழ்ச்சி தருகிறது.
கிரவுஞ்சம் என்ற பெயரைத் தமிழாக்கி
வில்லியார் 'கரிஞ்சம்' என்று எழுதி இருக்கலாம்.
கிரவுஞ்ச வியூகம் அதுவே!

நன்றி, மீ.வி. மற்றும் திருச்சிப் புலவர் இருவர்க்கும்.

கோவிந்தராஜர் என்னும் தமிழர் விரிவாக கிரவுஞ்சம் என்றால் என்ன பறவை?
- என எழுதியுள்ளார். அதனை தவறாகப் புரிந்து கொண்டுள்ளார் சம்ஸ்கிருத பேரா. ஜூலியா லெஸ்லி.

என் அடுத்த மடல் காண்க.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Oct 14, 2014, 10:54:05 AM10/14/14
to mint...@googlegroups.com, thami...@googlegroups.com, santhav...@googlegroups.com, vall...@googlegroups.com, housto...@googlegroups.com, tiruva...@googlegroups.com, Dr. Krishnaswamy Nachimuthu, sirpi balasubramaniam

கரிஞ்சம் - இடப்பெயர் ஆய்வு (Karinja - Toponymy)

இடப்பெயர்கள் பொதுவாக மிகப் பழையவை. பஞ்ச திராவிட தேசத்தில் கரிஞ்சம் என்று க்ரௌஞ்சத்தின் பேரால் இடங்கள் உள்ளன. 

கரிஞ்சத் தீவு மும்பை அருகே உள்ளது.






கரிஞ்சம் ஊர். அதில் உள்ள கரிஞ்சேசுவரர் - தட்சிண கர்நாடகத்தில்.

---------------------

கரிஞ்சம் (க்ரௌஞ்சம்) நெய்தல் நிலத்தின் பறவை. பனையில் கூடிகட்டி வாழ்வது.
கருமையான நிறத்தது. ஆண் பறவியின் உச்சந்தலை செஞ் சூட்டுடன் இருக்கும் என்றெல்லாம் சங்க இலக்கியம் பகர்கிறது. இதைத்தான் கோவிந்தராஜர் தன் வால்மீகி ராமாயண உரையில் விளக்கியுள்ளார்கள்.

கமுகு க்ரமுகம் என்றும், பவளம் ப்ரவாலம் என்றும், தமிழ் த்ரமிடம் என்றும் வடமொழியில் ஆதற்போல கரிஞ்சம் என்னும் கருஅன்றிற் பறவை க்ரௌஞ்சம் என்று சம்ஸ்கிருதத்தின் முதற் சுலோகத்தில் ஆதிகவி சொல்கிறார். அன்றில் < நன்றில், நல்-/நள்- “கறுப்பு”. நள்-/நல்- > அல் “இருள், இரா” என்றானது. அலவன் இருளில் திரியும் நண்டு (< நள் ‘கருமை, இருள்’).

மும்பை அருகே கரிஞ்சத் தீவாகட்டும், வங்காளம் ஆகட்டும் கரிஞ்சம் (> க்ரௌஞ்சம்), தமிழகம் ஆகட்டும் கரிஞ்சம் (அ) அன்றில் பறவை உண்டு, பறவையியலில் அதன் பெயர்: Plegadis falcinellus

அன்றில் என்னும் க்ரௌஞ்சம் நெய்தல்நிலப் புள் (Plegadis falcinellus). அது பெடையொடு கூடுகட்டி வாழப் பெண்ணை (பெண்பனை) மரம் அதன் விருப்பத் தேர்வு. அன்றிலின் குரல் காதலரை நைவிக்கும். "விளரிக் குரலன்றில் மென்படை மேகின்ற முன்றில்பெண்ணை", "காவார் மடல்பெண்ணை அன்றில் அரிகுரலும்", “பெண்ணைமேல் பின்னுமவ்வன்றில் பெடைவாய்ச் சிறுகுரலும், என்னுடைய நெஞ்சுக்கு ஓர் ஈர்வாளா மென்செய்தேன்” ”பெண்ணைமேல் பின்னுமவ் வன்றில் பெடைவாய்ச் சிறுகுரலுக்கு, உன்னி யுடலுருகி நையாதார்” (ஆழ்வார்கள்).

ஏற்றை (ஆண்பனை), பெண்ணை (பெண்பனை) - பனை மரங்களில் பால் பாகுபாடு என்ற பதிவு எழுதியபோது வாலிம்மிகியின் க்ரௌஞ்சம் (< கரிஞ்சம் = அன்றில்) என்றால் என்ன பறவை? - எனச் சொல்ல நினைந்தேன். செல்வன் வால்மீகியும், தமிழும் என்ற இழையில் மு. இராகவையங்கார் தண்பொருநை, மலயம் (=பொதியில்), கபாடபுரம் என்று வரும் ராமாயணசுலோகப் பொருளைத் தமிழ் இலக்கியங்கொண்டு கோவிந்தராஜர் விளக்கியதும், அப்படிப் பார்க்கில் கிரவுஞ்சம் என்றால் என்ன பறவை? - என்பதும் விளங்குகின்றன.

இருக்குவேதம் முதல்பாட்டிலேயே இழைத்தல், அரதநம் என்னும் இரு தமிழ்ச் சொற்கள் இருப்பது போல,
சம்ஸ்கிருதத்தின் முதல் சுலோகம் ஆதிகவி வால்மீகி செய்யும்போது தமிழ் வார்த்தை கரிஞ்சம் என்னும் நெய்தற்றிணை அன்றிற்பறவையின்
பெயராய் நிற்றல் அறிந்து இன்புறத்தக்கது.

நா. கணேசன்

On Tuesday, October 14, 2014 1:54:23 AM UTC-7, Dev Raj wrote:
On Monday, 13 October 2014 23:28:53 UTC-7, கோதண்டராமன் wrote:

http://www.valmikiramayan.net/utf8/kish/sarga64/kishkindha_64_frame.htm

மேற்கண்ட சுட்டியில் உள்ள வால்மீகி ராமாயண சுலோகங்களைப் பார்த்தால் வால்மீகிக்கு தென்னாட்டின் புவியியல் பற்றி ஏதும் தெரியாது என்றே எண்ணத் தோன்றுகிறது. 

 
கோதண்டராமன் சார் மிகவும் அவக்கரப்படுகிறார்.
41 ஸர்கத்தை முழுக்க ஒதுக்கிவிட்டார். 
ஸுக்ரீவன் தென்திசை செல்வோருக்குகூறும்
பகுதியை அவர் பார்க்கவில்லை.

பொதிகை, அகத்தியர், காவிரி, பொருனை
வர்ணனை உள்ளது.


இதனை எல்லாம் விரிவாக மு. இராகவையங்கார் 100 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதியுள்ளார். எப்படி வடநாட்டு உரையாசிரியர்கள் கூறுவது பொருத்தமில்லை, தென்னாட்டின் உரையாசிரியர் கோவிந்தராஜர் கூறுவது மிகப் பொருந்துகிறது என்றும் விளக்கியுள்ளார்கள்.இதே கோவிந்தராஜர் உரையையும், கிரிட்டிகல் எடிஷனில் விட்டுவிட்ட சுலோகத்தையும் வைத்துத்தான் சம்ஸ்கிருத பேரா. ஜுலியா லெஸ்லி கிரவுஞ்சப் பறவையை சாம்பல்நாரை என முடிவுசொன்னார். ஆனால், தமிழ் இலக்கிய மரபில் (சங்கம், கம்பர், அருணகிரிநாதர், ...)

அகநானூறு 270
”கடவுள் மரத்த முள்மிடை குடம்பைச்
சேவலொடு புணராச் சிறுகரும் பேடை
2இன்னாது உயங்குங் கங்குலும்”
சேவலொடு புணராச் சிறு கரும் பேடை - தன் சேவலுடன் கூடப் பெறாத சிறிய கரிய அன்றிற் பேடை

அன்றில் அம் கரும் பேடைகள் ஆம் என
முன்றில் எங்கும் அரக்கியர் மொய்த்து அழ, 
'இன்று இலங்கை அழிந்தது' என்று ஏங்குவார், 
சென்று, இலங்கு அயில் தாதையைச் சேர்ந்துளார். (கம்பர்)

எழுகூற்றிருக்கை - திருப்புகழ்
முத்த்தலைச் செம் சூட்டு அன்றில் அம் கிரி இரு பிளவாக ஒரு வேல் விடுத்தனை

முத்தலைச் செம் சூட்டு அன்றில் அங்கிரி          
    
     செம் சூட்டு =  செவ்விய உச்சிக் கொண்டையை உடையதுமான 
     அன்றில் = அன்றில் பறவையின் பெயர் கொண்ட
     அங்கிரி =  கிரௌஞ்ச மலை.

ஜூலியா லெஸ்லி சொல்லும் சாம்பல்நாரைக்கு உச்சிக்கொண்டை சிவப்பாக இல்லை, சாம்பல் நிறம். எனவே, கிரவுஞ்சம் அஃதன்று.
தமிழ் இலக்கியம் அறிந்த தமிழர் கோவிந்தராஜர். அவர் எழுதிய வால்மீகி ராமாயண உரையில் கிரவுஞ்சம் என்று கோவிந்தராஜர்
உரையைத் தவறாகப் புரிந்துகொண்டுள்ளார் மறைந்த ஜூலியா.

நா. கணேசன்

அனுமன் போன்றோரை அழைத்து இராமன் உணவுண்ட பெருமையைத் தமிழில் பலர் பாடியிருப்பதையும் ஒரு கட்டுரையில் சொல்கிறார்.
சைலஜா குறிப்பிட்ட எம். ஏ. வெங்கடகிருஷ்ணன் பேச்சுடன் ஒப்பிடச் சிறந்த ஆவணம் மு. ரா. கட்டுரை ஆகும்.
- hide quoted text -
 

नदीम् गोदावरीम् चैव सर्वम् एव अनुपश्यत |
तथैव आन्ध्रान् च पुण्ड्रान् च चोलान् पाण्ड्यान् केरलान् || ४-४१-१२

अयोमुखः च गंतव्यः पर्वतो धातु मण्डितः |
विचित्र शिखरः श्रीमान् चित्र पुष्पित काननः || ४-४१-१३
सुचंदन वनोद्देशो मार्गितव्यो महागिरिः |

तस्य आसीनम् नगस्य अग्रे मलयस्य महोजसम् || ४-४१-१५
द्रक्ष्यथ आदित्य संकाशम् अगस्त्यम् ऋषि सत्तमम् |

ततो हेममयम् दिव्यम् मुक्ता मणि विभूषितम् || ४-४१-१८
युक्तम् कवाटम् पाण्ड्यानाम् गता द्रक्ष्यथ वानराः |


நதீ₃ம் கோ₃தா₃வரீம் சைவ ஸர்வம் ஏவ அநுபஶ்யத | 
ததை₂வ ஆந்த்₄ராந் ச புண்ட்₃ராந் ச சோலாந் பாண்ட்₃யாந் கேரலாந் ||  4-41-12

அயோமுக₂​: ச க₃ம்ʼதவ்ய​: பர்வதோ தா₄து மண்டி₃த​: | 
விசித்ர ஶிக₂ர​: ஶ்ரீமாந் சித்ர புஷ்பித காநந​: ||  4-41-13
ஸுசம்ʼத₃ந வநோத்₃தே₃ஶோ மார்கி₃தவ்யோ மஹாகி₃ரி​: | 

தஸ்ய ஆஸீநம் நக₃ஸ்ய அக்₃ரே மலயஸ்ய மஹோஜஸம் ||  4-41-15
த்₃ரக்ஷ்யத₂ ஆதி₃த்ய ஸம்ʼகாஶம் அக₃ஸ்த்யம் ருʼஷி ஸத்தமம் | 

ததோ ஹேமமயம் தி₃வ்யம் முக்தா மணி விபூ₄ஷிதம் ||  4-41-18
யுக்தம் கவாடம் பாண்ட்₃யாநாம் க₃தா த்₃ரக்ஷ்யத₂ வாநரா​: |

பாண்டியரின் கவாடபுரியையும் ராமாயணம் கூறுகிறது.

 River Godavari that courses through Dandaka forest, and then the provinces of Andhra, Pundra, Chola, Paandya, Kerala are to be searched thoroughly. [4-41-11, 12]

"You shall go to the prosperous Mt. Malaya which is crowded with iron-ore mines as its vast mouths, and with amazing crests and motley flowered forests. Search shall be carried out on that great mountain in the places that are with the copses of sandalwood trees. [4-41-13, 14a]

This Mountain is also called Agastyamalai and it is in Western Ghats from which River Tamraparni emerges.

"You shall see the eminent sage Agastya, whose resplendence is akin to that of the Sun, and who will be sitting on the top of that highly resplendent Mt. Malaya. [4-41-15b, 16a]

"From there, on going to the Paandya Kingdome you shall see a fully golden castle-door bracing the compound-wall of the fortress, which is decorated with pearls and jewels, and conduct your search even in that kingdom. [4-41-18b, 19a]


தேவ்

ramaNi

unread,
Oct 15, 2014, 10:07:59 PM10/15/14
to santhav...@googlegroups.com, naa.g...@gmail.com
இந்தக் கட்டுரையில் சில அரிய செய்திகள் காணலாம்:
http://thamizhan-thiravidana.blogspot.in/2011/08/65.html

ரமணி

Reply all
Reply to author
Forward
0 new messages