மண்கொம்பு சா. சாமிநாதன்
-------------------------
பத்திரிகைகள் இடப்பெயர்கள், ஊர்ப்பெயர்கள், மலை ஆறு, குன்று, கரடு, ... அழகான தமிழ்ப் பெயர்களைச் சரியாய் எழுதினால் தமிழ் பிழைத்துக்கொள்ளும். எல்லாம் ஆங்கில மீடியம் கான்வெண்ட்கள், அநேகம் கான்வெண்ட்ஸ், கக்ஷிக்காரர்கள் நடாத்துபவை. கோடிக்கணக்கில் ஆண்டுதோறும் வருமானம். அவற்றில் தமிழும் தழைக்க வகைசெய்தல் அவசியம். ஓமாந்தூர் (ஓய்மான் என்னும் சிற்றரசர்கள் தங்கும் (படை, யானை, குதிரை, .. ஆர்ந்த) ஊர். ஓமாந்தூர். ஓமாந்தூர் அரசு மருத்துவமனை என்றே திறப்புவிழாக் கல்வெட்டு சொல்கிறது. ஓமாந்தூர் ராமசாமி ரெட்டியார் என அவர் திறந்துவைத்த கட்டடங்களில் உள்ளது (உ-ம்: அண்ணாமலை பல்கலை, திலகர் பிளாக் கட்டிடம்). ஜவாகர்லால் ஜவகர்லால் என்பதுபோல, ஓமாந்தூர் பத்திரிகைகளால் ஓமந்தூர் ஆகிறது! சங்க காலப் பெயர் ஓமாந்தூர் - இதுபோன்ற பெயர்களைச் சிதைப்பதன் மூலம் அரிய வரலாறுகளை வெகுவாக இழந்துவருகிறோம். ரா. பி. சேதுப்பிள்ளை சொல்லின்செல்வர். மதுரைத் தமிழ்ச்சங்க விழாவிலே பேசியுள்ளார். ‘தீபம்’ நா. பார்த்தசாரதி மதுரைக்காரர். மதுரையில் நடந்த முக்கிய நிகழ்ச்சியின் மலரில் (1974) நா. பா. அவர்கள் எழுதிய அரிய கட்டுரை வெள்ளுரையாய்க் கொடுத்துள்ளேன்.
https://groups.google.com/g/vallamai/c/U0gCnkefpYw/m/cH8aD8nxAAAJ
https://kamadenu.hindutamil.in/politics/anna-didnt-apologize-in-madurai-devar-issue-says-forward-bloc-navamani
எல்லாம் ஆங்கிலத்தில் இருந்து அப்படியே இறக்குமதி பண்ணுவதால் நேரும் பிழைகள். பாரதப் பிரதமர் இந்தியாவில் எல்லா பாஷை இலிபிகளிலும் மோதி தான். தமிழ்ப் பத்திரிகைகளில் மட்டும் மோடி << Modi. பாரதிதாசன் குறிப்பிட்டது போல, Nedunalvadai என ஹிந்து பத்திரிகை போட்டால், நெடுநாள்வடை என எழுதிவிடுகிறார், நெடுநல்வாடை பற்றிக் கேள்விப்படாததால். தமிழர் அறிந்தது உத்தராயணம், தட்சிணாயனம். எனவே, சந்திரயானம், மங்கலயானம் (செவ்வாய் ஊர்தி) சந்திராயன், மங்கலாயன் என ஆகிறது கொடுமை. சந்திரயான் = திங்கட்செலவு/நிலவூர்தி: http://nganesan.blogspot.com/2008/10/candra-yaanam.html
தினமலர் ரா. கிருஷ்ணமூர்த்தி மகத்தான நாணயவியல் ஆய்வாளர். அவரது சங்க காலக் காசுகள் பற்றிய ஆய்வுகள் தான், ஹெர்மன் டீக்கன் போன்றோர் பாண்டியர் அரசவையில் 8-ம் நூற்றாண்டு வாக்கில் தமிழ்ப்புலமை கற்றுத் துறைபோகிய சங்கச் சான்றோர்கள் பாடியவை சங்கச் செய்யுள் என்னும் கருதுகோள் போன்றவற்றை முறியடிக்கிறது. பாண்டியர்களில் முதுகுடுமிப் பெருவழுதியின் காசுகள் தான் மிகப்பழையவை. பல்யாகம் வேட்டவன் பெருவழுதி. கி.மு. 3-ம் நூற்றாண்டில் பெருவழுதி என்று பொறித்த காசுகளை அக்ஷசாலயில் அச்சிட்டான். அதில் உள்ள சின்னம் பற்றி விளக்கி எழுதினேன். ரா. கிருஷ்ணமூர்த்தி, FRNS (தென்னிந்தியாவின் ஒரே Fellow, Royal Numismatics Society, London, UK) அவர்களுக்கு என் விளக்கம் மிகப் பிடித்த ஒன்று. ஐராவதம் மகாதேவனும், டாக்டர் ரா. கிருஷ்ணமூர்த்தியும் இதுபற்றிப் பேசியுள்ளனர்.
சங்ககால அரசன் பாண்டியன் பெருவழுதியின் கார்ஷபணம் (Punch Marked Coins of Sangam Era)
ஆஸ்கோ பார்ப்போலா சிந்து நாகரீகத்தில் முதலை பற்றிய அற்புதமான கட்டுரை எழுதினார். அவருக்காக, மகரம் என்ற சொல்லின் - மொகுமொகு என்னும் அநுகரணவோசையில் இருந்து, a word coined in Dravidian from mokumoku, an ideophone - தோற்றம் பற்றி, பேரா. வ. ஐ. சுப்பிரமணியன் நினைவஞ்சலி மலரில் ஆய்வுக்கட்டுரை எழுதியுள்ளேன். International School of Dravidian Linguistics பதிப்பு:
நான் பேசும் போது, கூட்டங்களுக்குச் சென்று கேட்டு எழுத இரு இளைஞர்களை அனுப்பி வைப்பார் டாக்டர் ரா. கிருஷ்ணமூர்த்தி. விடங்கர் என்று சொல்லுவதை, விலங்கர் என்று அச்சுப்போட்டுவிடுவர். 😊 . விடங்கர் என்றால் முதலை/லிங்கம். I guess the Human mind searches for the word it hears and approximates to the nearest word it is already familiar with.
தமிழர்கள் போராடி, ஆங்கிலத்தை இந்தியாவில் நிலைநிறுத்தினர். அதனால் தான் $ 80 ரூபாயாக உள்ளது. இல்லையெனில், சிலோன், பாகிஸ்தான் போல $ 200 ரூபாய்க்கு மேலே போயிருக்கும். பல விதங்களில், பிராமி வழிவந்த எழுத்துக்களை எழுதலாம். உ-ம்: திண்ணை.கொம் தளத்தில் பழைய கீழ்விலங்கு, வாத்துக்கொக்கி உள்ள எழுதுரு (ஃபாண்ட்) போடுகிறார்கள். அதே போல, உ, ஊ உயிர்மெய்களை (மலையாளம் போல) பிரித்தும் எழுதலாம்.
http://nganesan.blogspot.com/2009/08/cheermai.htmlஎழுத்துச் சீர்மையைப் பெரிய அளவில் தமிழில் செயலாக்கம் செய்தது டாக்டர் ரா. கிருஷ்ணமூர்த்தி தான்:
http://nganesan.blogspot.com/2009/01/dinamalar-font-m-n-cooper.htmlவெகுவிரைவில், இந்தியா பிணைக்கப்பட்டுவருகிறது. லட்சக்கணக்கான கோடி ரூபாய்களுக்கு இந்தியா விமானங்களை வாங்குகிறது. ரயில் பிரயாணம் போல, விமானப் பிரயாணம் ஆகிவருகிறது. கட்டைவண்டிக் காலத்தில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு எழுத்து பொருந்தும். விஞ்ஞானம், வணிகம், கல்வி, ... என உலக மொழி ஆங்கிலம் இந்தியாவில் தமிழர் இயக்கங்களால் நிலைத்துவிட்டது. அதேபோல, பிரதேச எழுத்துக்களுடன் (உ-ம்: ஹிந்தி, தெலுங்கு, வங்கம், ...) ஆங்கில முறையில் இந்திய மொழிகள் எழுதப்பட்டால் அனைவரும் படிப்பது எளிது. ஆங்கிலக் கல்வி போல, ஆங்கில எழுத்து இந்திய மொழிகளுக்கு ISO 15919 கற்பித்தல் நன்று.
பசுமைப் புரட்சியின் தந்தை எனப் புகழப்பெறுபவர் மண்கொம்பு சா. சாமிநாதன். கேரளத்தில் பட்டர் என அழைப்பர். அவரது மகள், மரு. சௌமியா சாமிநாதன் ஐக்கிய நாடுகள் சபையின் சுகாதாரப் பிரிவுக்குத் தலைவராய் இருந்தார். சௌமியா தன் தந்தை எந்த நோயும் இல்லாமல் 98 வயதில் மறைந்ததைச் சொல்லியுள்ளார். கலியாணச்சாவு. மங்கொம்பு SS ஆத்மா இளைப்பாறுவதாக.
----------------
Prof. Ki. Nachimuthu wrote:
<<< மான் கொம்பு அல்ல. மங்கொம்பு (மண்கொம்பு ) கொம்பு - ஏரிக்கரையின் கோடி என்று பொருள். குட்டநாட்டில் ஆலப்புழைக்கு அருகிலுள்ள ஊர். Mon compu என்று விக்கியில் காண்க. ம. சா. சாமிநாதன் முன்னோர் ஊர். அப்பகுதியின் முன்னோடி விவசாயக் குடும்பம். பூர்விகம் திருவாரூர்ப் பக்கம். முன்னோர்களில் ஒருவர் சத்தியவாகீச ஐயர். அவர்கள் வீட்டில்தான் நெல் ஆராய்ச்சி நிலையம் உள்ளது. நீருக்குள்ளே நெல் விளையும் இடம்.>>>
ஆம் ஐயா. பாலக்காட்டு விவேக் ராமசாமி என்னும் இளைஞர் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் நிற்கிறார். மண்கொம்புக்காரர் போன்ற தமிழ், அமெரிக்க அக்ஸெண்ட்டுடன் பேசுகிறார். டானல்ட் ட்ரம்ப்பின் பிரதி என விவேக்கைச் சொல்லலாம். துணை ஜநாதிபதியாய் வர வாய்ப்புண்டு. பார்ப்போம். கமலாளை விட, இந்தியாவுக்கு அநுகூலமாய் நிற்பார். உ-ம்: கனடாவுடன் ஜெயசங்கர் சுப்பிரமணியன், EAM of India, பேச்சுவார்த்தைகளில்.
30+ ஆண்டாய், மண்கொம்பு மறைந்த விஞ்ஞானி ஊர் என விளக்கிவருகிறேன். 2016- மடல் ஒன்று:
https://groups.google.com/g/vallamai/c/Qyg2fpC7H3A/m/Kv7aBmjQBgAJ
”நன்றி, புலவர் ஐயா. என் சரித்திரத்தில் தன் குலத்தைப் பற்றி தமாஷாக உவேசா அவர்களே சொல்லியிருக்கிறார்.
காளமேகம் எங்கே சித்திரமடல் பாடினார் என திருச்செங்கோடு அஷ்டாவதானம் முத்துசாமிக் கவிராயர்
ஒரு நூற்றாண்டு முன்னர் எழுதிய வரலாற்றைக் குறிப்பிட்ட மடலில் என் சரித்திரம்” உவேசா எழுதினதும் தந்தேன்.
கடிச்சம்பாடியார் தந்த பட்டியலுடன் பட்டணம் சுப்பிரமணிய ஐயரும் சேர்த்தலாம். மண்கொம்பு (MSS) - பட்டர்கள்,
எம். எஸ். சுவாமிநாதன் சி.எஸ். அமைச்சராக இருந்த காலத்தில் எங்கள் இல்லம் வந்திருக்கிறார்.
அவர்கள் குலதெய்வம்: மண்கொம்பிலம்மா http://orkut.google.com/c33756112-t12c9fd73249108eb.html
https://groups.google.com/forum/#!msg/mintamil/ukY9NfKjSkA/6OjG4N0BBAAJ
அவனுக்கு ஊர் அரங்கம் ஒண்ணே ஒண்ணுதான், எனக்கூர் 8000 என்று நகைச்சுவையாகச் சொல்லிய வெண்பா
காஞ்சிபுரம் கோவில் ராஜகோபுரக் கல்வெட்டு. இரா. நாகசாமி தலைமையில் இயங்கிய குழு கண்டுபிடிப்பு.
அவர் எனக்குத் தந்த கல்வெட்டு வெண்பா இது,
மண்ணில் இருவர் மணவாளர், மண்ணளந்த
கண்ணன் அவன்,இவன்பேர் காளமுகில் - கண்ணன்
அவனுக்கூர் எண்ணில் அணியரங்கம் ஒன்றே;
இவனுக்கூர் எண்ணா யிரம்!
இந்த வெண்பா அறியப்படாதிருந்த காலத்திலேயே, உவேசா இதுபோல் நகைத்துணுக்கு சொல்லியுள்ளார்கள்.
அவர் குலம் அஷ்டசஹஸ்ரம் தான்.
“அஷ்ட ஸகஸ்ரப் பிராமணர் ஒருவரும், சிதம்பர தீக்ஷிதர் ஒருவரும் அவர் வீட்டில் உணவருந்தினார்களென்றும், எண்ணாயிரவரும், தில்லை மூவாயிரவரும் சேர்ந்து உண்டதையே அவர் சாதுரியமாகப் பதினோராயிரவரென்று கூறினாரென்றும் உணர்ந்து கொண்டவராம். இந்தக் கதை உண்மையோ பொய்யோ எப்படி யிருந்தாலும், இத்தகைய தந்திரத்தை விநோதார்த்தமாக நானும் உபயோகித்த துண்டு. “நான் ஒருவனாக இருந்தாலும் எண்ணாயிரம்” என்று சிலேடை தோன்றச் சில இடங்களிற் சொல்லியிருக்கிறேன் அதைக் கேட்ட ஒவ்வொருவரும் தத்தமக்குத்
தோன்றியபடி அர்த்தம் செய்து கொள்வார்கள். “பிராமணர்களுக்குள் அஷ்ட ஸகஸ்ர மென்பது ஒரு பிரிவு; அதற்கு எண்ணாயிரம் என்று அர்த்தம். அந்தப் பிரிவைச் சேர்ந்தவன் நான்” என்று சொன்ன பிறகே யாவரும் என்னுடைய சிலேடையைத் தெளிவாக உணர்வார்கள். அந்தணர்களுக்குள் எண்ணாயிரம் பேர்கள் ஒரு தொகுதியாக வடநாட்டிலிருந்து வந்த காலத்தில் அவர்களை ‘எண்ணாயிரத்தார்’ என்னும் பெயரால் யாவரும் வழங்கியிருக்க வேண்டும். பிறகு அவர்கள் பல இடங்களிற் பரவி எண்ணாயிரம் எண்பதினாயிரமாகப் பெருகிய காலத்திலும் அஷ்டஸகஸ்ரமென்ற பெயரே அவர்களுக்கு நிலைத்து விட்டது. ஸ்மார்த்தப் பிராமணர்களுள் ஒரு வகையாராகிய இந்த வகுப்பினர் தமிழ் நாட்டிற் பல இடங்களில் இருந்து வருகின்றனர்.” (உவேசா, என் சரித்திரம்).
[...]
அஷ்டசகசிரம் - அஷ்டசாசிரம் என்று பேச்சுவழக்கில் ஆகும். கன்னடத்தில்
சாசிரம் என்றால் தான் ஆயிரம். தமிழிலும் சஹஸ்ரம் > சாசிரம் > ஆயிரம் என்னும் எண்ணுப்பெயர்.
கன்னடத்திலே கூட, சாயிரம் என்று சாசிரத்தை (1000) சொல்கின்றனர்.
இது, ஆசிருதம் என்னும் வடசொல் ஆசிதம் என்றாகி ஆயிதம்/ஆய்தம் என ஆய்த எழுத்துக்கு ஆவதுபோல.
அஷ்டசாசிர பிராமணர்களின் குலதெய்வ ஊர் எண்ணாயிரம் தான்.
காளமேகத்தின் முன்னோர்கள் இந்த எண்ணாயிரம் பெருமாள் கோயிலில் வழிபட்டிருப்பர்:
நினைவில் வாழும் இரு சாமிநாதர்கள் திருவடிகள் வாழ்க!
Dr. நா. கணேசன்
https://nganesan.blogspot.com