2016-07-14 8:11 GMT+08:00 N. Ganesan <naa.g...@gmail.com>:மண்ணில் இருவர் மணவாளர், மண்ணளந்தகண்ணன் அவன்,இவன்பேர் காளமுகில் - கண்ணன்அவனுக்கூர் எண்ணில் அணியரங்கம் ஒன்றே;இவனுக்கூர் எண்ணா யிரம்!>>>அருமையான பாடலாக இருக்கிறது. திருமோகூர் பெருமாள் பெயர் "காளமேகம்".இங்கு இவனுக்கூர் எண்ணாயிரம் என்றுதான் சொல்கிறார். திருச்சித்திரக்கூடமாக இருக்கலாம். வைணவராக இருந்திருக்க வாய்ப்புண்டு. திருப்பாணாழ்வார் போல் அரங்கனைக் "கண்ணனாக"க் காண்கிறார். அவனை இராமர் என்போர் உண்டு.நா.கண்ணன்
மங்கல் என்றால் ஒழிந்த என்ற பொருளது இதாவது, வரி ஒழிந்த விளைநிலம என்று பொருள்.மங்கலம் என்பது மனைமாட்சி” இதில் அந்தப்பொருள் இருப்பதாக தோணலையே
--வேந்தன் அரசுவள்ளுவம் என் சமயம்
காஞ்சிபுரம் கோவில் ராஜகோபுரக் கல்வெட்டு. இரா. நாகசாமி தலைமையில் இயங்கிய குழு கண்டுபிடிப்பு.
மண்ணில் இருவர் மணவாளர், மண்ணளந்தகண்ணன் அவன்,இவன்பேர் காளமுகில் - கண்ணன்அவனுக்கூர் எண்ணில் அணியரங்கம் ஒன்றே;இவனுக்கூர் எண்ணா யிரம்!இந்த வெண்பா அறியப்படாதிருந்த காலத்திலேயே, உவேசா இதுபோல் நகைத்துணுக்கு சொல்லியுள்ளார்கள்.அவர் குலம் அஷ்டசஹஸ்ரம் தான்.“அஷ்ட ஸகஸ்ரப் பிராமணர் ஒருவரும், சிதம்பர தீக்ஷிதர் ஒருவரும் அவர் வீட்டில் உணவருந்தினார்களென்றும், எண்ணாயிரவரும், தில்லை மூவாயிரவரும் சேர்ந்து உண்டதையே அவர் சாதுரியமாகப் பதினோராயிரவரென்று கூறினாரென்றும் உணர்ந்து கொண்டவராம். இந்தக் கதை உண்மையோ பொய்யோ எப்படி யிருந்தாலும், இத்தகைய தந்திரத்தை விநோதார்த்தமாக நானும் உபயோகித்த துண்டு. “நான் ஒருவனாக இருந்தாலும் எண்ணாயிரம்” என்று சிலேடை தோன்றச் சில இடங்களிற் சொல்லியிருக்கிறேன் அதைக் கேட்ட ஒவ்வொருவரும் தத்தமக்குத்தோன்றியபடி அர்த்தம் செய்து கொள்வார்கள். “பிராமணர்களுக்குள் அஷ்ட ஸகஸ்ர மென்பது ஒரு பிரிவு; அதற்கு எண்ணாயிரம் என்று அர்த்தம். அந்தப் பிரிவைச் சேர்ந்தவன் நான்” என்று சொன்ன பிறகே யாவரும் என்னுடைய சிலேடையைத் தெளிவாக உணர்வார்கள். அந்தணர்களுக்குள் எண்ணாயிரம் பேர்கள் ஒரு தொகுதியாக வடநாட்டிலிருந்து வந்த காலத்தில் அவர்களை ‘எண்ணாயிரத்தார்’ என்னும் பெயரால் யாவரும் வழங்கியிருக்க வேண்டும். பிறகு அவர்கள் பல இடங்களிற் பரவி எண்ணாயிரம் எண்பதினாயிரமாகப் பெருகிய காலத்திலும் அஷ்டஸகஸ்ரமென்ற பெயரே அவர்களுக்கு நிலைத்து விட்டது. ஸ்மார்த்தப் பிராமணர்களுள் ஒரு வகையாராகிய இந்த வகுப்பினர் தமிழ் நாட்டிற் பல இடங்களில் இருந்து வருகின்றனர்.” (உவேசா, என் சரித்திரம்).
• காளமேகம் |
விசயநகர மன்னர் விருபாட்சராயர் காலத்தில் (1466 - 1485) தமிழ்நாட்டுப் பிரதிநிதியாக நிருவாகம் செய்தவர் திருமலைராயர். திருமலைராயரைக் குறிக்கும் கல்வெட்டு திருச்சி அருகில் உள்ள திருவானைக்காவிலும், திருவரங்கத்திலும் காணப்படுகிறது. அவர் காலத்தில் எண்ணாயிரம் என்ற ஊரில் கவி காளமேகம் வாழ்ந்தார் என்று கல்வெட்டுப் பாடல் ஒன்று கூறுகிறது. |
016-07-30 16:56 GMT+05:30 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:
மங்கல் என்றால் ஒழிந்த என்ற பொருளது இதாவது, வரி ஒழிந்த விளைநிலம என்று பொருள்.
மங்கலம் என்பது மனைமாட்சி” இதில் அந்தப்பொருள் இருப்பதாக தோணலையேகெடுகை என்பது ஒழிகை என்ற பொருளது தானே.பண்டன்
மங்கு எனும் வினையின் பெயர் மங்கல்.மங்கல் வேறு மங்கலம் வேறு
மங்கு எனும் வினையின் பெயர் மங்கல்.மங்கல் வேறு மங்கலம் வேறு
30 ஜூலை, 2016 ’அன்று’ முற்பகல் 11:48 அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:தி. அ. மு. கோனார் குறிப்பிடும் காளமங்கலம் (< காளமேகமங்கலம் என்கிறார் தி.அ.மு. புலவரின் குடும்பம், சுற்றம் பெற்ற மங்கலம் ஆக இருக்கலாம்.) போன்றவற்றில் அக் கவிஞரும், உற்றாரும் பொலிந்து வாழ வழங்கிய கொடை எனப் பொருள். மங்கல் = கெடுதல், கெடுகை என்று யாரும் ஒரு ஊரையே தானம் கொடுக்கமாட்டார்கள். - நா. கணேசன்
காளமேகர் காலத்தில் ஊர்க்கொடை கொடுக்கும் முறை அழிந்துவிட்டது அப்போது கன்னட விசய நகர ஆட்சி நடந்தது. அதோடு காளமேகர் பிராமணர் நீங்கள் சொல்லும் தி. அ. மு. கோனார் ஒரு இடையர். நீங்கள் கூறும் கருத்தில் பொருத்தம் இல்லையே.
வேந்தரும் மன்னவரும் தமக்காக பேணிய விளை நிலம் வரி கெட்டதாக இருந்தது. வரிகள் வேந்தர் மன்னவருக்கு செலுத்தப்படுவதால் தம்முடைய நிலத்திற்கே வரி விதிப்பது சட்டையின் ஒரு பையில் இருந்து சட்டையின் மறு பைக்கு மாற்றுவது போலத் தானே. அதை தானம் கொடுத்த பின்னும் அந்த வரி கெட்ட நிலை தொடர்ந்திருக்கலாம்.
கண்டன்
தமிழின் எண்ணுப்பெயர் 1000: ஆயிரம் < சாயிரம் < சாசிரம் (ஸஹஸ்ரம்)
கல்நாடு என நிலவியலமைப்பால் அழைக்கப்பட்ட கர்நாடகத்திற்கும், இன்றைய தமிழ்நாட்டுக்கும் உள்ள 2500 ஆண்டுத் தொடர்புகள் இன்னும் முறையாக ஆராயப்படவில்லை. முக்கியமான சான்று, வடக்கே உருப்பெற்ற ப்ராமி கர்நாடகம் வழியாக, கொங்குநாட்டு கொடுமணம், பொருந்தல் போன்ற ஊர்களில் விரிவாவதும், அதன் பின்னர் மதுரை சென்று சேர்வதும், தொல்லியலால் நிரூபணம் ஆகிவருகிறது. உ-ம்: பேரா. கா. ராஜன், பாண்டிச்சேரிப் பல்கலை, கொங்குநாட்டு முதல் பானையோடுகளில் ப்ராமி - BTW, இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட எழுத்துக்களில் இதுதான் தொன்மையானது.
இலக்கியம் என்று பார்த்தால், தமிழின் முதல் நாவல் என வஞ்சி ஊரின் சேரமன்னர் இளங்கோ அடிகள் செய்த சிலப்பதிகாரம். இதில் புகார்க்காண்டத்தின் இறுதியில் கோவலன் கொலையுறுகிறான் எனக் காட்ட, அப்பிரதக்சிணமாக (anti-clockwise) தெய்வக்காவிரி நாட்டை - சோழர் ஆட்சியில் இருந்தது என்றும் குறிப்பிடுகிறார் - நாடுகாண் காதையில் காட்டிவிட்டு, பிறகு மதுரைக்காண்டம் தொடங்குகிறார்.
கன்னட நாட்டில், இளங்கோ தலைநகர் ஆகிய வஞ்சிக்கு அருகே சமணம் பயின்ற அடிகள், அம் மதத்தை விளக்குமுகத்தான் கௌந்தி அடிகள் என்னும் கதாபாத்திரத்தைப் படைத்து நாடுகாண் காதையில் http://tamilvu.org/slet/l3100/l3100pd5.jsp?bookid=50&pno=12 காவிரிநாட்டையே காட்டி, அந்நதியால் உண்டாகும் வேளாண்மை வளத்தைப் பாடுகிறார். அவரே காவிரி பாயும் நாடு முழுதும் பாடுகிறேன் என்று குறித்துள்ளார். நாடு காண் காதையில் இளங்கோ அடிகள் பாடுவது வெறும் திருச்சி, தஞ்சை மாவட்டங்கள் மட்டுமல்ல என்பது தெளிவு. இதனைப் புரிந்துகொள்ள சுதனன் என்னும் செட்டி கலியாணமித்திரர்களை சந்திக்கச் செல்லும் கண்டவியூக சூத்திரம் பார்த்தால் அறிந்துகொள்ளலாம். கோவலன், கண்ணகி செட்டியார் ஜாதி எனப் பாடியது கண்டவியூகத்தில் சுதனன் என்னும் வணிக இளைஞன் வகுப்பால் ஏற்பட்ட தாக்கம். கண்டவியூகம் முழுதும் பார்க்க போரோபுதூர் (இந்தோனேசியா) இருக்கிறது.
பழ விறல் மூதூர்ப் பண்பு மேம்படுதலும்,
விழவு மலி சிறப்பும், விண்ணவர் வரவும்,
ஒடியா இன்பத்து அவர் உறை நாட்டுக்
குடியும், கூழின் பெருக்கமும், அவர்-தம்
தெய்வக் காவிரித் தீது தீர் சிறப்பும்,
பொய்யா வானம் புதுப் புனல் பொழிதலும்; (நாடுகாண் காதை - கட்டுரை)
மேற்குத்தொடர்ச்சி மலைகளில் புதுப்புனல் பொழிதலால் தெய்வக் காவிரி நாடு வளம்பெறுதல் முழுதும் வர்ணிக்க ஒருவழியாக கவுந்தி அடிகள் தவப்பள்ளியை மதுரைக்கு வடக்கே ~360 மைல் (= 30 காவதம்) என்கிறார். காவதம்/காதம் என்னும் கர்நாடகத்தில் வழங்கும் நீட்டலளவையைத் தமிழில் அறிமுகம் செய்பவர் இளங்கோ அடிகள் தாம். காவதம்/காதம் என்ற சொல் கன்னடம் பேசும் கன்னாட்டில் 12 முதல் 14 மைல்கள் எனப் பல அறிஞர்கள் காட்டியுள்ளனர். காவதம்/காதம் என்னும் வார்த்தை எருதுகளைப் பூட்டி ஒருநாள் ஓட்டும் தொலைவு என்னும் பொருள் அமைந்த வடமொழிச் சொல் ஆகும். எனவே, 30 காதம் = ~ 360 மைல் எனச் சிலம்பு குறிப்பிடுகிறது.
https://groups.google.com/forum/#!msg/mintamil/k2vENrVBilc/vQkiC6BABwAJ
இன்னொரு முக்கியமான கர்நாடக-தமிழகத் தொடர்பு:
ஆயிரம் < சாயிரம் < சாசிரம் (ஸஹஸ்ரம்)
ஸஹஸ்ர- என்னும் சம்ஸ்கிருதச் சொல் ஹசார் என்று பெர்சியா/உர்து போன்ற மொழிகளில் வழங்கும் இந்தோ-இரானிய மொழியின் சொல். ஸஹஸ்ர > சாசிரம்/சாவிரம் > ஆயிரம். பார்க்க: Thomas Burrow, pg. 151, Collected Papers on Dravidian Linguistics, Annamalai University, 1968. ஆனால், பேரா. பர்ரோ அவர்கள் சாயிரம் என்ற சொல்லும் கன்னடத்தில் இருப்பதனை மேற்கோள் காட்டவில்லை. இந்தக் கன்னடச் சொல்லே, சாயிரம் > ஆயிரம் எனத் தமிழில் ஆகியுள்ளது. கன்னடத்தில், சமணர் > அமணர் (தமிழில்) வழங்குவது போல.
http://srilalitambikaiparnasalai.blogspot.com/2012/05/blog-post.html
“ஸம்ஸ்கிருதத்துக்கே உரிய சகார, ரகாரக் கூட்டெழுத்து drop ஆகி, ஆவணியாகிறது. இப்படி ஏகப்பட்ட எழுத்துக்கள் தமிழில் உதிர்வதற்கு 'ஸிம்ஹளம்'என்பது 'ஈழம்'என்றானது ஒரு திருஷ்டாந்தம். ஸ வரிசையம் ச வரிசையும் தமிழில் அ வரிசையாய் விடும். 'ஸீஸம்' என்பதுதான் 'ஈயம்'என்றாயிருக்கிறது. 'ஸஹஸ்ரம்'என்பது கன்னடத்தில் 'ஸாஸிரம்' என்றாயிருக்கிறதென்றால், அந்த 'ஸாஸிரம்' தமிழில் 'ஆயிரம்'என்று ஸகாரங்களை உதிர்த்துவிட்டு உருவாயிருக்கிறது.” (பர்ரோவை தமிழில் சொல்கிறார் காஞ்சி முனிவர்.)
Kittel's Kananda dictionary:
ಸಾಸಿರ sāsira.
Tbh. of ಸಹಸರ. a thousand. (Śmd. 225. 226; Cpr. 6, 37; T. ಆಯಿರ). [ತಮಬತತಾರು ಸಾಸಿರ ಗೋಪಕುಮಾರರಡನ ಕೂಡಿ ಕಳಿಪಿ Pb. 9, 12 va.]. ದೇವರಕಲ ಸಾವಿರ ಯುಗಂಗಳು ಬರಹಮನ ದಿವಸ (Hlā. I, 115). ಸುರರ ರಡು ಸಾಸಿರ ಯುಗಂ ಬರಹಮಂಗ ದಿನಮ ನಿಕಕುಂ (Mr. 71). - ಸಾಸಿರಗಯಯ. -ಕಯಯ. the sun (ಬಿಸಿಗದಿರ, etc., ಸಪತಾಶವ Kk.).
sāsira sāsira.
Tbh. of sahasara. a thousand. (Śmd. 225. 226; Cpr. 6, 37; T. āyira). [tamabatatāru sāsira gōpakumāraraḍana kūḍi kaḷipi Pb. 9, 12 va.]. dēvarakala sāvira yugaṁgaḷu barahamana divasa (Hlā. I, 115). surara raḍu sāsira yugaṁ barahamaṁga dinama nikakuṁ (Mr. 71). - sāsiragayaya. -kayaya. the sun (bisigadira, etc., sapatāśava Kk.).
------------------
ಸಾಯಿರ sāyira.
Tbh. of ಸಹಸರ. one thousand. [ಸಾಯಿರ ಗದಯಾಣದ ಪನನೇ ಸಾಲಗುಂ Pb. 6, 71 va.]. ಸಾಯಿರ ಮನಗಳ (Śmd. 111).
sāyira sāyira.
Tbh. of sahasara. one thousand. [sāyira gadayāṇada pananē sālaguṁ Pb. 6, 71 va.]. sāyira managaḷa (Śmd. 111).
ஸஹஸ்ரம் என்னும் இந்தோ-ஈரானியச் சொல் கன்னட நாட்டிலும், அதன்பின்னர் தமிழ்நாட்டிலும் சாயிரம் > ஆயிரம் என அடையும் மாற்றம் இது.
நா. கணேசன்
சென்னைப் பல்கலைத் தமிழ்ப் பேராகராதி விளக்கத்தை மொழியியல் பேராசிரியர் Th. பர்ரோ போன்றோரும் எழுதியுள்ளனர்.நான் கொடுத்திருப்பது சாயிரம் என்ற சொல் கன்னடத்தில் இருப்பது என்பதற்கான இலக்கிய, நிகண்டு ஆதாரம்.
2016-08-16 19:00 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:சென்னைப் பல்கலைத் தமிழ்ப் பேராகராதி விளக்கத்தை மொழியியல் பேராசிரியர் Th. பர்ரோ போன்றோரும் எழுதியுள்ளனர்.நான் கொடுத்திருப்பது சாயிரம் என்ற சொல் கன்னடத்தில் இருப்பது என்பதற்கான இலக்கிய, நிகண்டு ஆதாரம்.கன்னடத்தில் 'ஸாவிரா' என்றால் ஆயிரம். கன்னடத்துச் சொற்கள் -ன், ர், ம் போன்ற மெய்யெழுத்துகளோடு முடிவதில்லை. அது 'ஸாயிரா' கூட இல்லை; ஸாவிரா. ஸாவிரா=ஆயிரம்; ஸாவிரத=ஆயிரத்து.
--அன்புடன்,
ஹரிகி.நட்பும் சுற்றமும் நலமே என்பதைமட்டும் கேட்க வாணி அருள்கவே.God bless all of us. May we hear from everyone in our life that they are good and prosperous.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
ஸாயிர, ஸாவிர : கிட்டல் அகராதி, இலக்கிய மேற்கோள் முழுதும் கொடுத்துள்ளேன்.நா. கணேசன்
2016-08-16 20:07 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:ஸாயிர, ஸாவிர : கிட்டல் அகராதி, இலக்கிய மேற்கோள் முழுதும் கொடுத்துள்ளேன்.நா. கணேசன்கர்நாடகாவில் பதினோறு ஆண்டுகளாக இருக்கிறேன். ஒந்து ஸாவிரா, எரடு ஸாவிரா என்று உச்சரிக்கிறார்களே தவிர, ஸாயிர, ஸாயிரம் என்று யாரும் உச்சரித்துக் கேட்டதில்லை. கன்னடக்காரர்களுடைய உச்சரிப்பு தவறானதென்று ஏதேனும் மேற்கோள் இருக்கலாம்.
sāyira sāyira.
Tbh. of sahasara. one thousand. [sāyira gadayāṇada pananē sālaguṁ Pb. 6, 71 va.]. sāyira managaḷa (Śmd. 111).
sāsira sāsira.
Tbh. of sahasara. a thousand. (Śmd. 225. 226; Cpr. 6, 37; T. āyira). [tamabatatāru sāsira gōpakumāraraḍana kūḍi kaḷipi Pb. 9, 12 va.]. dēvarakala sāvira yugaṁgaḷu barahamana divasa (Hlā. I, 115). surara raḍu sāsira yugaṁ barahamaṁga dinama nikakuṁ (Mr. 71). - sāsiragayaya. -kayaya. the sun (bisigadira, etc., sapatāśava Kk.).
NG
காளமேகத்தின் ஊர். ஏண்ணாயிரம் பிம்மதேசம். என்று பிற்காலச் சோழர்களால் அந்தணர்களுக்கு பிரம்மதேயமாய் அளிக்கப்பெற்றது. இப்போது அஷ்டசகஸ்ரம் (அஷ்டசாஸ்திரம்)என்ற அந்தணர் பிரிவு உள்ளது. அப்பிரிவைச் சேர்ந்தோரே. டாக்டர் உ.வே.சா. கி. வா.ஜ. ஆகியோர்.- புலவர் இராமமூர்த்தி.
பரு மணிக் கலாபத்தார். பல் லாண்டு இசை பரவப் போனான். - கம்பர் |
பேச்சுமொழியில் இருக்கலாம். கன்னட இலக்கிய, இலக்கணங்களில் ஸாயிர, சாவிர தான். காட்டு: சென்னை அகராதி.*ஆயிரம் āyiram, n. < sahasra. [K. sāvira, M. āyiram.] The number 1,000;
கிட்டல் பாதிரி ( https://en.wikipedia.org/wiki/Ferdinand_Kittel ) கொடுக்கும் இலக்கிய உதாரணங்கள்:sāyira sāyira.
Tbh. of sahasara. one thousand. [sāyira gadayāṇada pananē sālaguṁ Pb. 6, 71 va.]. sāyira managaḷa (Śmd. 111).
2016-08-17 5:34 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:பேச்சுமொழியில் இருக்கலாம். கன்னட இலக்கிய, இலக்கணங்களில் ஸாயிர, சாவிர தான். காட்டு: சென்னை அகராதி.*ஆயிரம் āyiram, n. < sahasra. [K. sāvira, M. āyiram.] The number 1,000;
*ஆயிரம் āyiram , n. < sahasra. [K. sāvira, M. āyiram.] The number 1,000;நீங்கள் கொடுத்திருக்கும் சென்னை அகராதி சுட்டியில் ஸாவிர என்று மட்டும்தான் இருக்கிறது. ஸாயிர என்று இல்லை.கிட்டல் பாதிரி ( https://en.wikipedia.org/wiki/Ferdinand_Kittel ) கொடுக்கும் இலக்கிய உதாரணங்கள்:sāyira sāyira.
Tbh. of sahasara. one thousand. [sāyira gadayāṇada pananē sālaguṁ Pb. 6, 71 va.]. sāyira managaḷa (Śmd. 111).
இந்தச் சுட்டி ஃபெர்டினான்ட் கிட்டலைப் பற்றிய வாழ்க்கைக் குறிப்புகளைச் சொல்கிறது. இந்தப் பக்கத்தில் ஸாயிர, ஸஹஸ்ர போன்ற சொற்கள் இல்லை.கன்னட மொழியில் கன்னடர்களுக்கே இல்லாத தேர்ச்சியைத் தாங்கள் அடைந்திருப்பது குறித்து மகிழ்ச்சி. வாழ்த்துகள்.
Kittel's Kananda dictionary:
ಸಾಸಿರ sāsira.
Tbh. of ಸಹಸರ. a thousand. (Śmd. 225. 226; Cpr. 6, 37; T. ಆಯಿರ). [ತಮಬತತಾರು ಸಾಸಿರ ಗೋಪಕುಮಾರರಡನ ಕೂಡಿ ಕಳಿಪಿ Pb. 9, 12 va.]. ದೇವರಕಲ ಸಾವಿರ ಯುಗಂಗಳು ಬರಹಮನ ದಿವಸ (Hlā. I, 115). ಸುರರ ರಡು ಸಾಸಿರ ಯುಗಂ ಬರಹಮಂಗ ದಿನಮ ನಿಕಕುಂ (Mr. 71). - ಸಾಸಿರಗಯಯ. -ಕಯಯ. the sun (ಬಿಸಿಗದಿರ, etc., ಸಪತಾಶವ Kk.).
sāsira sāsira.
Tbh. of sahasara. a thousand. (Śmd. 225. 226; Cpr. 6, 37; T. āyira). [tamabatatāru sāsira gōpakumāraraḍana kūḍi kaḷipi Pb. 9, 12 va.]. dēvarakala sāvira yugaṁgaḷu barahamana divasa (Hlā. I, 115). surara raḍu sāsira yugaṁ barahamaṁga dinama nikakuṁ (Mr. 71). - sāsiragayaya. -kayaya. the sun (bisigadira, etc., sapatāśava Kk.).
------------------
ಸಾಯಿರ sāyira.
Tbh. of ಸಹಸರ. one thousand. [ಸಾಯಿರ ಗದಯಾಣದ ಪನನೇ ಸಾಲಗುಂ Pb. 6, 71 va.]. ಸಾಯಿರ ಮನಗಳ (Śmd. 111).
sāyira sāyira.
Tbh. of sahasara. one thousand. [sāyira gadayāṇada pananē sālaguṁ Pb. 6, 71 va.]. sāyira managaḷa (Śmd. 111).
--
2016-08-17 5:34 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:பேச்சுமொழியில் இருக்கலாம். கன்னட இலக்கிய, இலக்கணங்களில் ஸாயிர, சாவிர தான். காட்டு: சென்னை அகராதி.*ஆயிரம் āyiram, n. < sahasra. [K. sāvira, M. āyiram.] The number 1,000;
*ஆயிரம் āyiram , n. < sahasra. [K. sāvira, M. āyiram.] The number 1,000;நீங்கள் கொடுத்திருக்கும் சென்னை அகராதி சுட்டியில் ஸாவிர என்று மட்டும்தான் இருக்கிறது. ஸாயிர என்று இல்லை.கிட்டல் பாதிரி ( https://en.wikipedia.org/wiki/Ferdinand_Kittel ) கொடுக்கும் இலக்கிய உதாரணங்கள்:sāyira sāyira.
Tbh. of sahasara. one thousand. [sāyira gadayāṇada pananē sālaguṁ Pb. 6, 71 va.]. sāyira managaḷa (Śmd. 111).
இந்தச் சுட்டி ஃபெர்டினான்ட் கிட்டலைப் பற்றிய வாழ்க்கைக் குறிப்புகளைச் சொல்கிறது. இந்தப் பக்கத்தில் ஸாயிர, ஸஹஸ்ர போன்ற சொற்கள் இல்லை.
கன்னட மொழியில் கன்னடர்களுக்கே இல்லாத தேர்ச்சியைத் தாங்கள் அடைந்திருப்பது குறித்து மகிழ்ச்சி. வாழ்த்துகள்.
*ஆயிரம் āyiram , n. < sahasra. [K. sāvira, M. āyiram.] The number 1,000;
ಸಾಯಿರ sāyira.
Tbh. of ಸಹಸರ. one thousand. [ಸಾಯಿರ ಗದಯಾಣದ ಪನನೇ ಸಾಲಗುಂ Pb. 6, 71ஸாவிரா, ஸாயிரா என்றெல்லாம் கன்னட இலக்கிய, இலக்கணங்களில் இல்லை, ஸாவிர, ஸாயிர மட்டும் தான் உள்ளது.
நீங்கள் கொடுத்திருக்கும் சென்னை அகராதி சுட்டியில் ஸாவிர என்று மட்டும்தான் இருக்கிறது. ஸாயிர என்று இல்லை.
sāyira sāyira. Tbh. of sahasara. one thousand. [sāyira gadayāṇada pananē sālaguṁ Pb. 6, 71 va.]. sāyira managaḷa (Śmd. 111).
( I have converted Kannada script to Roman ISO 15919 standard)
இந்தச் சுட்டி ஃபெர்டினான்ட் கிட்டலைப் பற்றிய வாழ்க்கைக் குறிப்புகளைச் சொல்கிறது. இந்தப் பக்கத்தில் ஸாயிர, ஸஹஸ்ர போன்ற சொற்கள் இல்லை.Kittel's Kannada dictionary has saayira and saavira literary examples. No Kannada literature has saayiraa or saaviraa. FYI.
2016-08-17 7:37 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:இந்தச் சுட்டி ஃபெர்டினான்ட் கிட்டலைப் பற்றிய வாழ்க்கைக் குறிப்புகளைச் சொல்கிறது. இந்தப் பக்கத்தில் ஸாயிர, ஸஹஸ்ர போன்ற சொற்கள் இல்லை.Kittel's Kannada dictionary has saayira and saavira literary examples. No Kannada literature has saayiraa or saaviraa. FYI.கணேசன்,இந்தப் பிழைநோண்டும் ஆட்டத்தை நிறுத்திக் கொள்ளலாம். ஸாயிரா, ஸாவிரா என்று இல்லை என்று நீங்கள் சொல்லியிருக்கும் இடத்தில் நான் ஸாயிர என்றுதான் தட்டியிருக்கிறேன்.
2016-08-17 7:31 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:*ஆயிரம் āyiram , n. < sahasra. [K. sāvira, M. āyiram.] The number 1,000;திரு கணேசன்,
*ஆயிரம் āyiram , n. < sahasra. [K. sāvira, M. āyiram.] The number 1,000;இது நீங்கள் கொடுத்த சென்னைப் பேரகராதி அல்லது அகராதியின் சுட்டி. இதில் ஸாயிர என்ற காட்டு இருப்பதாகச் சொல்லியிருந்தீர்கள். எங்கே இருக்கிறது?ಸಾಯಿರ sāyira.
Tbh. of ಸಹಸರ. one thousand. [ಸಾಯಿರ ಗದಯಾಣದ ಪನನೇ ಸಾಲಗುಂ Pb. 6, 71இதில் ஸாயிர என்றுதான் எழுதியிருப்பதாக மைசூரில் பிறந்து வளர்ந்த என் மனைவி தெரிவிக்கிறார்.ஸாவிரா, ஸாயிரா என்றெல்லாம் கன்னட இலக்கிய, இலக்கணங்களில் இல்லை, ஸாவிர, ஸாயிர மட்டும் தான் உள்ளது.அடேயப்பா. கன்னட இலக்கிய இலக்கணங்களிலெல்லாம் கரைகண்டிருப்பதற்குப் பாராட்டு, வாழ்த்து. (ஸாவிர என்பதே சரி. நான் தட்டியது தவறுதான்.)
2016-08-17 10:06 GMT+05:30 திருத்தம் பொன்.சரவணன் <vaen...@gmail.com>:அதாவது அதிக எண்ணிக்கையைப் பற்றிக் கூறுமிடத்து, மணலையே அதற்கு அளவையாகக் கொள்வர்.கணேசர் ஐயாசஹஸ்ர என்பதற்கு என்னென்ன பொருளுண்டு என்பதைக் கீழே காணவும்.Literal meaning of Sahasra
Sanskrit word Sahasra literally means thousand, infinite or any very large number. Sahasra is variation of Sahasrada is a 325<sup>th</sup> name of Lord Shiva as The Bestower In Plenty - The ever Bountiful Lord Shiva bestows everything in plenty.
ஆயிரத்திற்கும் அயிருக்கும் தொடர்புண்டு என்பதை இனியேனும் நம்புவீரா?
--அன்புடன்,
திருத்தம் பொன்.சரவணன்அருப்புக்கோட்டை.
------------------------------------------------------------------கடந்துபோன மணித்துளிகள் - மண்ணில்கரைந்துபோன மழைத்துளிகள் - மீளாது !கடமையைச் செய் ! - அதையும்உடனடியாய்ச் செய் !----------------------------------------------------------------
தமிழ் இலக்கியங்களைப் புதிய கோணங்களில் காண: http://thiruththam.blogspot.com
திருக்குறளுக்கான புதிய விளக்க உரைகளைப் படிக்க: http://kuraluraikal.blogspot.com
Would be interesting to know what other words ancient Tamil (as in the Sangam classics) uses for thousand besides āyiram. Also, what are the words used in ancient Tamil for lakh, crore etc.?
Also interesting to know would be the word for thousand in Sinhala, an Indo Aryan language that was not as much influenced by Persian as the north Indian languages.
Thanks and regards,
Radhakrishna Warrier
Madras Tamil Lexicon gives
ஆயிரம் āyiram, n. < sahasra. [K. sāvira, M. āyiram.] The number 1,000;
http://dsalsrv02.uchicago.edu/cgi-bin/philologic/getobject.pl?c.0:1:6529.tamillex.2422057
This info is mentioned by Th. Burrow, pg. 151, Collected Papers on Dravidian Linguistics, Annamalai University, 1968. Bh.K. mentions this also in pg. 266, The Dravidian Languages (2003):
“The languages of South Dravidian I have borrowed the word for ‘thousand’ from Prakrit ∗sāsira (< sahasira- < Skt. sahasra-): Ta. Ma. āyiram, Koḍ. āire (for loss of ∗s- see section 4.5.1.3), Ko. cāvrm, To. sōfer, Ka. sāvira, sāsira, Tu. sāvira, sāra [DEDR, Appendix11]. Numerals higher than a thousand, like lakṣa ‘hundred thousand’ and kōṭi ‘a crore, 100 lakhs’, are borrowed into all the literary languages from Sanskrit.”
In pg. 471, BhK talks about the native term, wEyi for 1000, and the different stages of borrowing sahasra fron I-A in non-Telugu southern languages.
In all these three reference works on Dravidian languages, the cognate given for Tamil’s aayiram in Kannada is sāvira. I think this is modern Kannada, while we have a closer form, sāyira in old Kannada. See Kittel’s dictionary:
ಸಾಯಿರ sāyira. Tbh. of ಸಹಸರ. one thousand. [ಸಾಯಿರ ಗದಯಾಣದ ಪನನೇ ಸಾಲಗುಂ Pb. 6, 71 va.]. ಸಾಯಿರ ಮನಗಳ (Śmd. 111).
[ISO 15919]:
sāyira sāyira. Tbh. of sahasara. one thousand. [sāyira gadayāṇada pananē sālaguṁ Pb. 6, 71 va.]. sāyira managaḷa (Śmd. 111).
Adding the data on saayira in Kannada for aayiram in Tamil will be more direct than Ka. saavira. There are 3 instances of saayira in old Kannada inscriptions that are in Epigraphica Carnatica volumes. https://www.google.com/search?tbm=bks&q=s%C4%81yira
There must be more. Collecting all examples of sāyira in old Kannada inscriptions will help in understanding how Tamil aayiram gets formed. Some thing like samaNar > amaNar for Jains, a religion coming to Tamizhakam from Kannada country.
N. Ganesan
எண்ணுப் பெயர்களில் ஆயிரம்/ஸஹஸ்ர என்றால் பற்பல எண்கள், அதாவது பேரெண் என்று ஒரு பொருளுண்டு என்பதறிவேன்.
அதே போல், நீட்டல்/தூர அளவையில் காவதம்/காதம் என்றால் ஒரு காவதம் என்ற பொருள் தவிர, பற்பல காவதங்கள் என்ற பொருளுமுண்டு.
ஆ, ஈ, ஊ, ஏ, ஓ என ஐந்து நெடிலில் தொடங்கும் வார்த்தைகளும் உதாரணம் தரலாம்.
சா- > ஆ- காட்டுகள்:
(1) சாயிரம் > ஆயிரம்
(2) சாடா/சாடீ (வடசொல்) > ஆடை ‘dress in Tamil’. Cf. saree in English from IA.
(3) சாய்தல் – வளைதல். சாய்வம் > சாவம் ‘வில்’ > ஆவம்
சாவம் சாபம் என்று தமிழ்ச்சொல் வடசொல் ஆகிறது. கோவணம்/கோமணம் > கோபன- கௌபீனம் என வடசொல் ஆகும்போதும் தமிழின் –வ- -ப- ஆகிறது. ஹைப்பர்கரெக்ஷன்.
சீ- > ஈ- காட்டுகள்:
(1) சீந்து > ஈந்து (= ஈங்கு, ஈஞ்சு). சீ- = Date palm tree. சீழம் > ஈழம், சீந்து : சிந்து (நதி/நிலம்). Cf. ப்ராகிருதம், கூர்மம்:கும்மம். கீர்ண:கிண்ண, …
சூ- > ஊ- காட்டுகள்:
(1) சூழ்- > ஊழ். ஒருவனைச் சூழும் விதி.
ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று சூழினுந் தான்முந் துறும். (குறள்).
கன்னடத்தில் சூழ்- என்றால் காலம், பருவம், பருவச் சுழற்சி. ஊழி = யுகம்.
இந்த Fate, Karma என்று பொருள்படும் ஊழினின்றும்
மூழ்- > ஊழ்- கிழடு ஆதல், முதிர்ந்து வெடித்தல் (உழுந்துப் பயிர்) வேறு சொல்.
சே- > ஏ- காட்டுகள்:
(1) சேண்- > ஏணி (ச்ரேணி)
(2) சேமம் > ஏமம்
(3) சேர்- > ஏர் ‘கலப்பை உழவு’ (Cf. செல் கெழு குட்டுவன். கெல் இரும்பொறை – சங்கச் சேரர் காசுகளில். செல்லாயி – உழவர் குலதெய்வம். சேரன் – நாஞ்சில் படை பலராமன் கலப்பை கொண்டவன். பனை மரத்தடியில் கட்கிண்ணம் வைத்திருப்பவன். கல் ‘stone’ என்பதும் கெல்லு- > கல்லு-, கலப்பை என்பதும் வேறான தாதுக்கள் எனலாம்.)
சோ- > ஓ- காட்டுகள்:
(1) சோணம் > ஓணம் (நக்ஷத்ரம்).
ஸ்ராவணம் > ஸ்ரோணம் > சோணம் > ஓணம்.
( Cf. ஸ்வஸ்திகம் > சோத்திகம் )
இன்னும் பல இருக்கும்.
நா. கணேசன்
குறில் காட்டுகள்:
சுவணம் (சுபர்ண) > உவணம்
சிறை > இறை
சிறகு > இறகு
சுலவு > உலவு
சுருள் > உருள்
சுழல் > உழல்
சுண்ணம் > உண்ணம் (> உஷ்ணம்)
https://groups.google.com/d/msg/mintamil/x_CxuwmOwkU/L0jrq6T5oUQJ
சமை > அமை
சுளுக்கு > உளுக்கு
சிப்பி > இப்பி
சமணர் > அமணர்
சமர் > அமர்
சிமை > இமை (சிமையம் > இமையம்)
சிமிழ் > இமிழ்
…
அயிர் என்னும் மணலுக்கும் ஸாயிரம் > ஆயிரம் என்ற சொல்லுக்கும் தொடர்பில்லை. ஸஹஸ்ர > ஸாயிர > ஆயிர.ஸ்ரீ ராதாகிருஷ்ண வாரியர் கருத்துக்களும் நான் அனுப்பிய மடலும்:
சாகாரம் ஆகாரமான இடம் வேறு உண்டா?
அன்பின் கணேசன் ஐயா,அப்படியானால் இதையும் பாருங்கள். நீங்கள் கற்பனை என்று கூறியவை அவர்கள் வரலாறாகக் கூறுகின்றார்களே? அதையும் ஏற்கின்றீர்களா?
http://www.tamilvu.org/courses/degree/a011/a0111/html/a011121.htm
இளங்கோ சேரவேந்தன் சேரலாதனின் இளைய மகன்; மூத்தவன் சேரன் செங்குட்டுவன். இவர் இளவரசன் ஆதலால் இளங்கோ என அழைக்கப்பட்டார்; துறவு பூண்டதால் அடிகள் என்ற சிறப்புப் பெயருடன் இளங்கோ அடிகள் எனச் சிறப்பிக்கப் பெற்றார்.
http://www.tamilvu.org/courses/degree/a011/a0111/html/a011122.htm
கண்ணகிக்குச் சிலை செய்ய இமயத்தில் கல் எடுத்துக் கங்கையில் புனித நீராட்டிக் கொண்டுவந்து வஞ்சியில் கோயில் எடுப்பதே நோக்கமானாலும், தமிழர் வீரத்தை நிலை நாட்டுவதற்காகவும் சேரன் படை எடுத்துச் செல்கிறான். வழியில் பல மன்னர்கள் திறைப் பொருளுடன் சேரனை வரவேற்கின்றனர்; வாழ்த்துகின்றனர். எதிர்த்த மன்னர்களைச் சேரன் வெல்கிறான்.
கண்ணகி சிலை வடிக்க, இமயத்தில் கல் எடுத்து, தமிழர் தம் வீரத்தைப் பழித்த கனக-விசயர் தலையிலே அக்கல்லைச் சுமந்து வரச் செய்து, கங்கை ஆற்றில் புனித நீராட்டுகிறான். அப்போது அங்கு வந்த மாடல மறையோன் சேரனின் வெற்றியைப் புகழ்கிறான்.
http://www.tamilvu.org/courses/degree/a031/a0311/html/a0311553.htm
கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன்
இவன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனின் மகன் ஆவான். ஒரு சமயம் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் அவையில் இருக்கும்போது ஒரு நிமித்திகன் வந்து அவனிடம் உன் இளைய மகன் இளங்கோவே ஆட்சிப் பொறுப்பை ஏற்பதற்கு உரிய தகுதி உடையவன் என்று கூறினான். அதைக் கேட்ட இளங்கோவடிகள் மூத்தோன் இருக்க இளையோன் அரசனாதல் அறம் இல்லை என்று கூறிக் குணவாயில் கோட்டம் புகுந்து தவக்கோலம் பூண்டார். பின்பு முறைப்படி செங்குட்டுவன் ஆட்சிக்கு வந்தான் என்று கூறுவர்.
......
இவ்வாறு இவன் பெற்ற வெற்றிகள் பலப்பல. ஆயினும் அவை எல்லாவற்றிலும் சிறப்பு வாய்ந்த வெற்றிகள் இரண்டு.
ஒன்று, இவனின் தாய் இறந்தவுடன் அவளது படிமத்தைக் கங்கையில் நீராட்டச் சென்றபோது அவனை எதிர்த்த வட இந்திய மன்னர்களை வெற்றி கொண்டதாகும். மற்றொன்று, கண்ணகிக்காகச் சிலை செய்ய வேண்டிக் கல் கொணர இமயம் சென்றபோது, எதிர்த்த கனக விசயர் என்ற மன்னரை வென்று, அவரது தலை மீது கல்லை ஏற்றித் தமிழகம் கொண்டு வந்ததாகும்.Look at how Kavunti AtikaL does not accept the Vaidika views, and guides Kovalan.
Explanations of Karma vinai to Kannaki and Kovalan.கவுந்தியடிகளுக்கும் இளங்கோவடிகளுக்கும் என்ன சம்பந்தம்?