On Mon, 27 Feb 2023, 1:24 am N. Ganesan, <naa.g...@gmail.com> wrote:வறுக்காமல் அவல் செய்யும் முறை உள்ளது. இது பாசவல். இம்முறை பல காலம் இருந்த பின்னரே, வறுத்து அவல் செய்யும் முறை உருவாகியிருக்க வேண்டும். பாசவல் எளிதில் செய்கிறார்கள்.பாசவலும் (aval from Uncooked, Fresh, Raw rice), வறுத்த அவலும் (aval from Fried rice)
-------------------------------------------------------------------------------------------------------------------------
பாசவல் இன்று பச்சை அவல் எனப்படுகிறது. சேர நாட்டிலே இந்த இரு வகையில் தயாராகும் அவல்களும் பயன்பாட்டில் உள்ளன. பலருக்கும் பாசவல் என்று சங்க இலக்கியங்களும், பின்னரும் வரும் அவல்வகை தெரிவதில்லை. எனவே, குறிப்பிட்டு விளக்கியிருந்தேன். ~5 ஆண்டுகளுக்கு முன் என் தாயாரிடம் கேட்டு அறிந்துகொண்டது இது. அப்போதும் குறிப்பிட்டேன். என் பழய மடல்களில் பார்க்கலாம். என் அம்மா வீட்டார், உறவினர்களுக்கு ஏராளமான நில புலங்கள் கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டத்தில் இருந்தன. சித்தூரில் கொங்கன்படை என்ற திருவிழா பகவதி கோவிலில் நடக்கிறது. பாலக்காடு மாவட்டத்துக்கு அத் திருவிழா நாள் அரசாங்க விடுமுறை ஆகும். எங்கள் அம்மாவின் பாட்டியார் அளித்த நிலத்தில் மீனாட்சிபுரத்தில் அரசாங்க ஆஸ்பத்திரி உண்டு. அதில் அப் பாட்டியின் ஒளிப்படத்தை மலையாள அரசாங்கம் வைத்துள்ளது ...
சேர நாட்டில் இன்றும் பாசவல் என்னும் பச்சை அவல் அம்மன் கோவிகளில் நைவேத்யம் ஆகிறது. அம்பலங்களில் பாசவல் போட்டு, அவல் பாயசம் செய்கின்றனர். ஏனெனில், வறுத்த அவல் வளமை தராது. எனவே, பச்சை அவல் பயன்பாடு. பாலைக்காட்டு மட்டை அரிசி, சங்க நூல்களில் செந்நெல் எனப்படுகிறது. ஊட்டச்சத்து மிக்க இச் செந்நெல்லை (மட்டை அரிசி) சோறுவடித்து, சுவாமி சித்பவானந்தர் கல்வி நிறுவனங்களில் பரிமாறுகின்றனர். பாசவல் செம்மையான அவல் என்பதற்கு ஒரு பெயர் உண்டு. செவ்வி அவல் = auspicious aval, as fit for offering to Gods. செவ்-/சிவ்- சிவ = auspicious
https://www.dinamalar.com/news_detail.asp?id=233467
”பச்சை அவல் தந்தால் குழந்தைபேறு,...” கரூர் மாரியம்மன் கோவில் சண்டி யாக பெருவிழா...
பாசவல் செய்யும் முறை:
தமிழர்களின் மிகப் பழைய திருவிழா: கார்த்திகை தீபம்.
கார்த்திகை தீபம் எல்லோரும் கொண்டாடுவோம்!
https://www.facebook.com/utmksiddha.org/posts/1019467188109477/
குளிர்காலத்திலும் தொடர்ந்த மழையானது கார்த்திகை தீபத்திற்கு முன்போ பின்போ படிப்படியாக குறையத் தொடங்கும்.உலக உயிர்வாழ்க்கைக்கு இன்றியமையாத நீரினைக் கொடுத்த மழைக்கு(இதன் சிறப்பு பற்றியே வள்ளுவரும் 'வான் சிறப்பு' என்ற ஒரு அதிகாரத்தையே படைத்துள்ளார் ) நன்றி தெரிவிக்கும் பொருட்டு கார்த்திகை மாத வெள்ளுவா(முழு நிலவு) அன்று வீடுகளிலும்,கழனிகளிலும் கட்டுத்தறிகளிலும் அகல் விளக்கினை வரிசையாக ஏற்றி வைத்தும்,விளக்கினை வானத்தை நோக்கி ஏந்திப் பிடித்தும் வானுக்கு நன்றி தெரிவிப்பர்.
வரிசையாக அடுக்கிய அகல் விளக்குகள் இலை உதிர்ந்த இலவம் மரத்தின் பூக்களைப் போல் இருந்ததென அகநானூறு வர்ணிக்கும். இவ்விழாவினை பெருவிழா எனவும்,பச்சை அவல்(முளைகட்டிய நெல்லை அவிக்காமல் இடித்துப் பெறும் அவல்-பாசவல்) இடித்துப் படைத்ததாயும் அகநானூறு கூறுகின்றது.
---------------
பாசவல் என்ற தொடர்களைச் சங்க இலக்கியத்தில் வாசிக்கவும். இந்தப் பச்சை அவல், வறுத்துச் செய்யும் அவலை விடக் கடினமானது. இதனை வாயில் முக்கி மகளிர் நீர் விளையாட்டில் ஈடுபடுவர். "நிலத்திற்கு அணியென்ப நெல்லும் கரும்பும்” என்ற நான்மணிக்கடிகை (11), விருந்தினருக்கு வேளாண்மை செய்தற் பொருட்டு, பாசவல் செய்து வைத்துள்ளனர். கரும்பும், பாசவலும் அளித்த பாடல்கள் சங்க இலக்கியத்தில் காணலாகும். வறுத்த அவலைப் போட்டு அதக்கினால் எளிதில் கரைந்துவிடும். சங்க நூல்களின் பின்னர், கொங்குவேளிர் பாசவல் என்னும் பச்சை அவல் பற்றிக் குறித்துள்ளார்:
பெருங்கதை - 2 - இலாவாண காண்டம்
ஏனல் குறவர் இரும் குடி சீறூர்
மான் அமர் நோக்கின் மகளிரொடு மரீஇ
வெம் கண் மறவர் வில்லின் வீழ்த்த
பைம் கண் வேழத்து பணை மருப்பு உலக்கையின்
அறை உரல் நிறைய ஐவன பாசவல் 50
இசையொடு தன் ஐயர் இயல்பு புகழ்ந்து இடிக்கும்
அம்மனை வள்ளை இன் இசை கேட்டும்
கோயில் மகளிர் மேயினர் ஆட
பொரு_இல் போகமொடு ஒரு மீக்கூறிய
உருவ பூம் தார் உதயணகுமரனும்
https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0502.html
அங்ஙனம் உறைந்த உதயணன், ஒருவாறு கவலை தீர்ந்து வாசவதத்தையுடன் சென்று கான்யாற்றுக் கடும்புனலாடியும்;பலநிற மலர்கள் பூத்து, மேல் மூடியைத் திறந்த ஆபரணப் பெட்டிபோலத் தோன்றும் குறுவாய்ச் சுனைநீரில் முழவொலியைப் பிறப்பித்து அத்தாளத்திற் கேற்பப் பாடியும்; காட்டிலுள்ள அரமகளிர்போன்றவரும் குழையர், கோதையர், இழையர், இணர்த்தழையர், தாரினர்களுமாகிய பலவகை மகளிர்களின் இடையே நின்று அவர்களுடைய ஆடலைக் கண்டும்; பாடல்களைக் கேட்டு இன்புற்றும்; பாறையாகிய உரலில் ஐவனநெல்லைச் சொரிந்து யானைக் கொம்பாகிய உலக்கையால் தம் ஐயருடைய இயல்புகளைப் புகழ்ந்துகொண்டு *பாசவல் இடிக்கும் வேட மகளிருடைய* அம்மனை, வள்ளைப்பாட்டைக் கேட்டும்; அருவியாடியும்; சுனை விளையாடியும்; பூங்குழைமகளிர் பொன்வள்ளத்தேந்திய தேறலையும் மதுவையும் உண்டும்; ஓர் உயிரை உடைய இரு தலைப் புள்ளைப்போல் ஒட்டி இன்புற்றும்; அம்மலைச் சாரலில் உண்டாட்டயர்ந்தனன்.
--------------
உவேசா, குறுந்தொகை 238
பாசவ லிடித்த கருங்கா ழுலக்கை
ஆய்கதிர் நெல்லின் வரம்பணைத் துயிற்றி
ஒண்டொடி மகளிர் வண்ட லயரும்
தொண்டி யன்னவென் னலந்தந்து
கொண்டனை சென்மோ மகிழ்நநின் சூளே.
http://tamilvu.org/slet/l1220/l1220uri.jsp?poemno=238
*பாசு அவல் இடித்த - பச்சை அவலை*
பாசவல் - நெல்லை வறாமல் இடித்துச் செய்த அவல்.
------------
http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=913
"கூழைக் கூந்தற் குறுந்தொடி மகளிர்
பெருஞ்செய் நெல்லின் வாங்குகதிர் முறித்துப்
பாசவல் இடிக்கும் இருங்காழ் உலக்கைக்
கடிதுஇடி வெரீஇய கமஞ்சூல் வெண்குருகு..."
(அகநானூறு: 141:16-19)
"நெருங்கிய கூந்தலை உடைய சிறுவளை அணிந்த பெண்கள் பெரிய வயலில் விளையும் நெல்லின் வளைந்த கதிரை முறித்துப் பச்சை அவலை இடிக்கும் பெரிய உறுதியான உலக்கையின் கடுமையான இடியோசைக்கு நிறைகருப்பமான வெண்நாரை வெருளும்..."
-------------
பச்சை அவலை இடித்த வயிரம் பாய்ந்த கரிய உலக்கையைக் குழந்தையெனப் பாவித்து, அழகிய கதிரையுடைய நெற்பயிர் நிறைந்திருக்கும் வயல்களின் வரப்பாகிய அணையில் படுக்கவைத்து, அதைக் கண் வளரச் செய்து விட்டு விளையாட்டயர்வர் என்று ஒண்டொடியணிந்த தொண்டி நகர்ச் செல்வ மகளிரின் சிந்தை யினிக்கும் சீரிய விளையாட்டினைக் குன்றியன் என்ற புலவர் குறிக்கின்றார்:
"பாசவல் இடித்த
கருங்காழ் உலக்கை
ஆய்கதிர் நெல்லின்
வரம்பணைத் துயிற்றி
ஒண்டொடி மகளிர்
வண்டல் அயரும் தொண்டி .” [21]
https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0712.html
https://ta.wikisource.org/wiki/பக்கம்:புறநானூறு-செய்யுளும்_செய்திகளும்.pdf/95
https://archive.org/details/dli.jZY9lup2kZl6TuXGlZQdjZl2kuUy.TVA_BOK_0003874
https://ta.wikisource.org/wiki/பக்கம்:ஆரியர்க்கு_முற்பட்ட_தமிழ்ப்பண்பாடு.pdf/243
https://iniyavaikatral.in/சங்க-இலக்கியத்தில்-நெற்ப/
---------------
https://www.dinamani.com/tholliyalmani/yuththa-bhoomi/2016/nov/11/அத்தியாயம்-43---நடுகற்கள்-வகைகளும்-வகைப்பாடும்---36-2596626.html
நானிலத்திலும் இவ்வாறே அரிசியை முன்மையாகக் கொண்டு நிகழ்ந்த பண்டமாற்றங்களைச் சங்க இலக்கியம் விரிவாகக் காட்சிப்படுத்துகிறது. நெய்தலில் உப்புக்கும், மீனுக்கும் நெல் பண்டமாற்றம் ஆனதை “உமணர் தந்த உப்புநொடை நெல்”*33, “வெள்ளை உப்பின் கொள்ளை சாற்றி, நெல்லோடு வந்த பல்வாய்ப் பஃறி”*34, “உப்புநொடை நெல்லின் மூரல் வெண்சோறு”*35, “பசுமீன் நொடுத்த வெண்நெல் மாஅ”*36 போன்ற வரிகள் காட்சிப்படுத்துகின்றன. குறிஞ்சி நிலத்துப் பொருட்களான “தேன், கிழங்கு இவற்றுக்கு மீனும் நெய்யும் கள்ளும் பெற்றதையும், மருத நிலத்து கரும்பு, அவல் இரண்டுக்கும் மாற்றாக மான் தசையுடன் கள் பெற்றதும்”*37, மான் தசைக்கும், தயிருக்கும் வெண்ணெல் பெற்றதையும், வரால் மீனுக்கு வெண்ணெல் மாற்றானதும்”*38 சங்கக் காட்சிகளே.
வறுத்த அவல் செய்முறை:
https://www.inidhu.com/அவல்-இடித்தது-மங்கம்மாள/
(வறுத்த அவல் அவல் என்றே குறிப்பிடுவது வழக்கம். சங்க நூல்களின் உரைகளில் காண்க. ஔவை துரைசாமிப்பிள்ளை, த. கோவிந்தன், சி. பாலசுப்பிரமணியன், ...) https://www.youtube.com/watch?v=RiAkhtqqqck
https://www.youtube.com/watch?v=A4Un45nixYI
https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0712.html
https://en.wikipedia.org/wiki/Flattened_rice
Flattened rice is a type of rice dish made from raw, toasted, or parboiled rice grains pounded into flat flakes.
Like Tamil Nadu, Kerala, we have many countries that do make "paacaval" (aval from fresh paddy).
https://www.cooksinfo.com/flattened-rice
பாசவல், வறுத்த அவல் வேறுபாடும், இரண்டு வகை அவல்களின் செய்முறைகள், பயன்பாடுகள் அறிவோம்!நா. கணேசன்On Sun, 26 Feb 2023, 10:12 pm N. Ganesan, <naa.g...@gmail.com> wrote:cAval 'rice', aval < caval 'pestled rice', amalai < camalai 'rice ball'--
-----------------------------------------------------------------------------------------
Śrī. Y. Bharath wrote about "aval" (= flattened rice) < "caval" :
https://twitter.com/ybharath77/status/1628615496341032962
> Replying to @oligoglot
> but cāval is comparable (or borrowed from Drav)
> Since South Dravidian lost initial 'c' , we have
> avalakki (Ka)
> aval (Ta)
> But North/Central Dravidian maintains initial 'c' like Parji
> Pa. cavil mortar; cavkol (pl. cavkocil) pestle
>Ka. aval pound
> CDIAL 4749
> DED 2391
Yes. "aval" (= flattened rice by pestle) < "caval". Many words in Tamil have lost word initial consonants (k, c, t, m, n, y, v). See several examples:
https://groups.google.com/g/vallamai/c/soJbLYwgaA8/m/WqEp_7imBAAJ
*aval comes from caval*. Also, amalai < camal- "rice ball". "veN eRintu iyaRRiya mAkkaN amalai" (malaipaTu kaTAm 441)
MTL: அவல் aval , n. < அவை-. 1. [K. M. aval.] Rice obtained from fried paddy by pestling it; நெற்பொரியிடியல். பாசவலிடித்த . . . உலக்கை (அகநா. 141).
DEDR 2456 has cāy (-pp-, -tt-) to cause to incline, bend or stoop, turn in a new direction, drive, steer, prejudice, spoil, defeat;
So, cāp- "to flatten, to dehusk" is the root verb for cāvala/cāmala 'rice'.
CDIAL 4749 *cāmala or *cāvala- 'husked rice'. [S. K. Chatterji ZII ix 31 < *cāma-, √cam with little probability: Pk. and several NIA. lggs. have no trace of nasal. Poss. of ultimately same non-Aryan origin as taṇḍulá-]
Pk. cāulā m. pl., cavala- m. 'rice' Deśīn.; S. cā̃uru, cā̃varu m. 'a grain of rice', cā̃uro 'pertaining to husked rice'; L. cāval m. 'husked rice', awāṇ. cāvul, P. cāval, °var, cāul, caul m., WPah. bhal. ċā̆u m. pl., jaun. cau, Ku. caũl, gng. ċā̃wōw, N. cā̃wal, cāmal, A. sāul, OB. tāula, B. cāul, cāl, Or. caü̃ḷa, cāuḷa, cāura, Bi. Mth. Bhoj. cāur, H. cā̃wal, cāw°, cā̃war m., OMarw. cāvala m., G. cāvaḷ m. (usu. pl.).
*cāmalapiṣṭa-; *rasikācāmala-.
Addenda: *cāmala- [~ Drav. DED 1976]: Brj. cā̃wal, °war, cāwal, °war m. 'husked rice'.
Sangam literature talks of two konds of "aval", one from fried paddy, another from raw, uncooked paddy 'pAcaval iTitta karuGkAl ulakkai' (kuRuntokai 238). pAcu < pAku 'green'. Here, pAcu 'green' = fresh, raw, uncooked. There is a famous anthropology book: https://en.wikipedia.org/wiki/The_Raw_and_the_Cooked
DEDR 2456 cA- cAp- gives rise to DEDR 2331. (Cf. kOvai 'tindora fruit' > kovvai etc.,)
DEDR 2331 Ta. cappaṭṭai flatness, anything flat; cappaṭi anything flat; cappaḷi (-v-, -nt-) to flatten, be crushed, pressed out of form; cappu (cappi-) to be bent, pressed in; cappai that which is flattened. Ma. cappaṭa flat; cippu what is smoothed, flat. Ka. cappaṭe, capaṭe, appaṭe flatness, flat; cappaḍia large flat stone; cappe that which is flattened or pressed down. Te. cappi flat, not projecting; cappiḍi flat, not projecting, snub. Kol. (Pat., p. 115) sapaṭ flat. Konḍa sapaṭam ki- to crush. Kuwi (Isr.) sap ta flat. / Cf. Skt. carpaṭa-, etc.; Turner, CDIAL, no. 4696. DED 1924. ,
DEDR 3075 Ta. tappu (tappi-) to strike, beat, kill; This comes from DEDR 2331 with a change, c- to t-.
A parallel to cA-/cAp- giving rise to cAval/cAmal 'rice', aval < caval 'flattened paddy', amalai < camalai 'rice ball' can be seen in the verb, kO-/kOp- "to join, to string, to clasp .."
kOvaNam, kaupiina, kOmaNam = loin cloth. https://en.wikipedia.org/wiki/Kaupinam
On kOvaNam, see pg. 11, Th. Burrow, Collected Papers in Dravidian Linguistics, 1968.
N. Ganesan
https://nganesan.blogspot.com