செப்டம்பர் 03, 2009வாழ்த்துகள் பிரசன்னா”….
வாழும் காலம் வரையில் இங்கே நல்லோர்உறவே நிலைபெறுமே! உள்ளில் வைத்து புறம்ஒன்று பேசா உறுதி மனமே சுகம் தருமே!கள்ளமில்லா நட்பின் மேன்மை காலம் முழுதும்உடன் வருமே! பிள்ளைப்பேச்சும் துணிவும் கனிவும்கொண்ட நட்பே உன்னை வாழ்த்துகின்றேன்!
தோளின் நிலைகள் உயரும் போது மாலைபோடப்பலர் வருவர்- தோல்வி நிலையில் சரியும்போது கை தூக்கச் சிலரே முன் வருவர்! பாரில் இருக்கும்மனிதர் இனத்தை முன் காட்டிப் பாடம் சொல்லித்தந்தாய்!வாழும் நிலையைக் காட்டி நன்மை பலவே செய்து நின்றாய்!
உப்பைப்போலும் எளிமை கொண்ட நட்பே உன்னைவாழ்த்துகின்றேன்! கற்பைப்போலும் வலிமை உள்ள நட்பேஉன்னைப்போற்றுகின்றேன்! உலகம் உன்னை உயர்த்தும் காலம்வரவே வேண்டி வாழ்த்தி நின்றேன்! காற்றாய் நம்முள் கலந்து நிற்கும்சஞ்சீவி அருளால் வாழ்க என்றேன்!.
வாழ்த்துகள் தோழா! சிரஞ்சீவியாய் வாழ்க!.