Web Images Videos Maps News Shopping Gmail more »
Recently Visited Groups | Help | Sign in
Google Groups Home
Group info
ஊற்று(முகப்பு)
New since last time: 183 messages

 

               தமிழ் மொழியில் தீராத அன்பு கொண்ட தமிழ் நெஞ்சங்களுக்கு மட்டும் உரிய குழுமம் இது.  தமிழில் படைப்புகள் இயற்ற விரும்புபவர்களும் தங்கள் படைப்புகளை பிரசுரிக்கவும், படைப்பாளிகளின் ஆக்கங்களை படிக்கவும் , விமர்சிக்கவும், சீர் தூக்கி நிர்ணயிக்கவும் நல்ல தமிழ் ஆர்வலர்களும் ஆர்வமுள்ளவர்களும் ஒன்றிணையத் தகுந்த இல்லம் இது. இக் குழுமம் தமிழ் இலக்கியத்தில் மட்டுமல்லாமல் மற்றும் பல சுவையான இழைகளை உருவாக்கி சகல தரப்பு சுவைஞர்களையும் ஒன்றாக இணைக்க வேண்டுமென்ற ஆவலுடன் உருவாக்கப்பட்டுள்ளது.  ஒவ்வொரு அங்கத்தினரும் அறிமுக இழையிலிருந்து சகல இழைகளிலும் பங்கு பற்றி மகிழ வேண்டுமென்று நாம் விரும்ம்புகின்றோம். இங்கே தொடர்புகளிலிருந்து சகலவிதமான பங்கேற்பும் முழுக்க முழுக்க தமிழ் மொழி மூலமே கையாளப்பட வேண்டும். இணைய முகவரிகளும் , மின் அஞ்சல் முகவரிகள் மட்டுமே இதற்கு விதிவிலக்கு.

                   அன்பர்களின் விமர்சனங்களும் , சீர்தூக்கலும் மற்றவர்களின் மனம் புண்படாத நாகரீக எல்லைகளுக்குட்பட்ட வார்த்தைப் பிரயோகங்களுடன் இருக்க வேண்டும் என்பதுவும் ஒரு குறிப்பிட்ட சமூகம் அல்லது மொழி அல்லது மதம் அல்லது இனம் என்று பிரிவினை வேறுபாடுகளோ அல்லது அவற்றை தூற்றுதலோ அல்லது அவமரியாதையோ இங்கு அங்கீகரிக்கப்பட மாட்டாது.  முக்கியமாக தனி மனிதக் கீறலை முற்றாகத் தவிர்க்கும் படி நண்பர்களை வேண்டுகிறோம். அதே போல் திரைப்படத் துறையினரைப் பற்றிய சர்ச்சையோ , குறிப்பிட்ட ஒரு நடிகரைப் பற்றிய விவாதங்களோ , புகழ்மாலைகளோ அனுமதிக்கப்பட மாட்டாது. இக் குழுமம் முழுக்க முழுக்க நட்பு ரீதீயிலும், இலக்கியப் பாதையிலும் மட்டும் பயணப்பட வேண்டுமென்பதே எம் நோக்கம்.

                   முற்றிலும் நட்புக்கு இன்முகம் காட்டி , தமிழுக்கு உயிர் மூச்சை ஈதலில் முன் நிற்கும் புனிதமான தமிழ் நெஞ்சங்களை ஒன்று கூட்டி தமிழ் பண்பாட்டுக்கும் கலாச்சாரத்திற்கும் பங்கமேதும் எம்மால் வராது என்ற கட்டியத்துடன் தமிழ் பெருமை என்னும் மகுடத்தின் ஒளி மென் மேலும் மெருகேற ஒரு சிறு பங்களிப்பாக எமது சேவையை தொடங்கி தொடர ஏதுவாக இக்  குழுமம் விளங்க வேண்டுமென்ற தீராத ஆர்வத்துடன் இக் குழுமத்தின் வளர்சியின் பொறுப்பை  இக் குழுமத்தின் உறுப்பினராக அறிமுகமாகும் ஒவ்வொரு பயனரிடமும் ஒப்படைக்கின்றோம்.

                                                  

தமிழ் பிரவாகக் குழுமப் பக்கங்களில் வரும் உங்கள் சொந்த ஆக்கங்கள் இனி மேல் தமிழ் பிரவாகத்தின் வலைப் பூவிலும் இடம் பெறும் என இதன் மூலம் அறியத் தருகிறோம். வேறு இணையத் தளங்களிலிருந்து வேறொருவரின் படைப்புகளை ரசனைக்காக பிரவாகக் குழுமப் பக்கங்களில் நீங்கள் பிரசுரித்திருந்தால் அவை எமது வலைபூவில் இடம் பெறமாட்டாது என்பதையும் இதன் மூலம் அறியத்தரவிரும்புகின்றோம்.

 

வருக! வளர்க! வாழ்க!

நன்றி! வணக்கம்!

அன்புடன் சுவாதி.
--
சாவு நெருங்கி வரும் போதும் -
தமிழ் மானம் காத்திரடி பாப்பா!!
 

http://groups.google.com/group/Piravakam
http://santhappiravagam.blogspot.com/
http://jokes4smile.blogspot.com/  

 

தமிழ்பிரவாகம் வலைப்பூ:

http://thamizpiravakam.blogspot.com/

 

 

 

flag வேண்டுகோள்.
By தமிழ் மகள் - Aug 20 2007 - 29 authors - 158 replies
flag பிராத்தனைச் சங்கமம்.
By தமிழ் மகள் - Sep 9 2007 - 21 authors - 81 replies
flag சங்கமம்
By selva rayan - Nov 19 2007 - 46 authors - 192 replies
flag வாழ்த்தலைகள்!!
By தமிழ் மகள் - Nov 19 2007 - 43 authors - 266 replies
flag இனிய காலை வணக்கம்!
By தமிழ் மகள் - Dec 1 2007 - 27 authors - 500 replies
Last updated by Swathi - May 1 2007 - 1 author - 1 page long
Last updated by Swathi - Apr 30 2007 - 1 author - 1 page long
Last updated by v.dotthusg - Sep 28 2008

Report this group   XML       Send email to this group: piravakam@googlegroups.com
Google Groups - Google Home - Terms of Service - Privacy Policy
©2009 Google