அறியாதவர்களுக்கு அறியச் செய்வதில் எந்தத் தவறும் இல்லை.
சரியான காலக்குறிப்புடன் அறியச் செய்ய ஆலோசனை வழங்கவும், படித்த பின்னர் அந்தப் பதிவுகளின் கீழே கருத்துரை இடவும்.
அத்துடன் நீங்களாவது ஒத்தி ஒட்டும் பொழுது செய்யவும்.
வரலாறு முக்கியம் அமைச்சரே
இல்லாவிட்டால் சமகாலத்துச் செய்தி என்று தவறாகக் கருதி சச்சரவுகள் கிளம்பலாம் என்ற சமுதாயக் கடமையுணர்வும் பொறுப்புணர்வும் இருக்கவேண்டும்.
தமிழ்த்தேசியர் நோக்கம் எவரும் அறிந்ததே. அவர்கள் நோக்கம் சாதி ஒழிப்பு அல்ல தெலுங்கர் எதிர்ப்பு
///இம்மக்கள் பிராமணர் சமைத்தாலும் சாப்பிடுவதில்லை என்ற வினோத பழக்கம் வைத்துள்ளனர். இது அப்பட்டமான சாதியம் . ஆனால் தலித்களுக்கு எதிரானது அல்ல. நமது மதம் சார்ந்த சடங்குகள் அனைத்தும் சாதியம் சார்ந்தே உள்ளது.///
என்ற குறிப்பு இருக்கிறது.
மேலும்,
பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் ... இந்த ஆண்டு இதே காலத்தில் நீங்கள் செய்த பதிவு என்று நினைவூட்டும் .
மீண்டும் அதனை வெட்டி ஒட்டி சுற்ற விடுவதை சிலர் தங்கள் கடமையாகவே கொண்டுள்ளனர்.
22 ஜூலை 2012 - பழைய பதிவு
22 ஜூலை 2021 - புதிய பதிவு
ஒற்றுமை அதுதான்.
மே 2015
நியூயார்க் நகரின் முதல் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, தெற்காசியப் பெண் நீதிபதி என்ற புகழைத் தமிழகத்திற்குத் தேடித்தந்த நீதிபதி ராஜ ராஜேஸ்வரி பதவி ஏற்றார்.
இது தொடர்ந்து 6 ஆண்டுகளாக ஒவ்வொரு மே மாதத்திலும் புதிய செய்தி போல மறுசுழற்சி செய்யப்பட்டது வருகிறது.
இது போன்றதுதான் அதுவும்
இதாவது மக்களிடையே சர்ச்சை ஏற்படுத்தாத செய்தி என்று கடந்து செல்லலாம்.
இது ராஜம் அம்மா வைத்த முதல் வேண்டுகோள்
1. ஏற்கனவே இடப்பட்ட பதிவை மீண்டும் இடவேண்டாம். (அதாவது, அரைத்த மாவையே திரும்பத் திரும்ப அரைத்துப் புது மாவு போல் காட்ட முயலவேண்டாம்.)
என்பதும் பொருந்தும்