கூறு; பகர்; விளம்பு ...........

126 views
Skip to first unread message

சொ. வினைதீர்த்தான்

unread,
Jul 18, 2021, 3:08:25 AM7/18/21
to mintamil, மின்தமிழ், தமிழ் மன்றம், vallamai
*தொல்காப்பிம் கூறுகிற பேச்சு வகைகளும் அவைக்கேற்ற ஆங்கிலத்தில் ஒத்தவையும் :-* 

பேசு (speak)
பகர் (speak with data)
செப்பு (speak with answer)
கூறு (speak categorically)
உரை (speak meaningfuly)
நவில் (speak rhymingly)
இயம்பு (speak musically)
பறை (speak to reveal)
சாற்று (speak to declare)
நுவல் (speak with introduction)
ஓது (speak to recite)
கழறு (speak with censure)
கரை (speak with calling)
விளம்பு (speak with a message)

தொல்காப்பியர் இத்தனை வகையான பேச்சுகளைக் குறிப்பிடுகிறார். 
*தொன்மையை விடத் தொடர்ச்சியே சிறப்பு* என்கிறார்கள். எனவே பயன்படுத்துதலே சிறந்தது. பயன்படுத்தாதது வழக்கிழக்கும்!

"சொல்" என்பது  பெயர்ச்சொல். அதனை வினைச்சொல்லாக "சொல்கிறான்; சொன்னான்; சொல்லுவான்" என்று பொதுவாகப் பயன்படுத்துகிறோம்.

தக்க இடத்தில் தக்க வகையில் பொருத்தமான சொல்லைக் கையாளும்போது பொருளும் மொழியும் பொலிவுறுகிறது!

நன்றி
சொ.வினைதீர்த்தான்

Seshadri Sridharan

unread,
Jul 18, 2021, 4:29:14 AM7/18/21
to தமிழ் மன்றம்
நல்ல  பதிவு  

இலக்குவனார் திருவள்ளுவன்

unread,
Jul 18, 2021, 12:23:39 PM7/18/21
to tamilmanram kuzhu
பகர் என்று விலை கூறுவதைக் குறிப்பிடுவர்.

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/tamilmanram/CAGs6Gj67HjfTb6oPudxLTvkXNKJscCRDb2sUvSEVXmsV6ubOtA%40mail.gmail.com.

rajam

unread,
Jul 18, 2021, 7:50:31 PM7/18/21
to tamil...@googlegroups.com, "சொ. வினைதீர்த்தான்"
வணக்கம், திரு. சொ.வி. ஐயா.  

/// தொல்காப்பியர் இத்தனை வகையான பேச்சுகளைக் குறிப்பிடுகிறார்./// 

அப்படியா?!!

இதே "தொல்காப்பியப்பட்டியற்பதிவை" முன்பொருமுறை இந்த மன்றத்தில் பார்த்ததாக நினைவு. நானும் பின்னூட்டம் பதிந்திருந்தேன் … “பேசு” என்ற சொல்லாட்சியைத் தொல்காப்பியத்தில் காணவில்லை; எந்த நூற்பாவில் அது காணுகிறது என்று கேட்டிருந்தேன். முதல் பதிவாளரிடமிருந்து அதற்கான விளக்கம் கிடைக்கவில்லை. நீங்களாவது தேடிச் சொல்லலாமே. 

முதல்நூலை (primary source) விடுத்து வழிநூல்களை (secondary/tertiary sources) மட்டுமே துணையாகக் கொண்டு செய்யும் ஆய்வுகள் திடமாக அமைதல் அரிது. அவை இன்றைய இணைய உலகோடு வெட்டுக்கிளி ஆய்வாக (grasshopper தீனியாக) நின்றுவிடும்; கல்வியுலகில் (in academia) செல்லுபடியாகுமா என்பது ஐயமே. 

நன்றி,
ராஜம் 


--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.

சொ. வினைதீர்த்தான்

unread,
Jul 18, 2021, 10:12:43 PM7/18/21
to rajam, தமிழ் மன்றம்
வணக்கம் திருமிகு இராஜம் மா.
தாங்கள் கூறுவது முற்றிலும் உண்மை. திருமிகு தேமொழி பகிர்ந்திருந்ததைப் பார்த்து என்னுடைய முகநூல் பதிவினைக் கீழ்க்கண்டவாறு மாற்றிவிட்டேன்.

நன்றி
சொ.வினைதீர்த்தான்
.....................................

தமிழ் கூறுகிற பேச்சு வகைகளும் அவைக்கேற்ற ஆங்கிலத்தில் ஒத்தவையும் :-

பேசு (speak)
பகர் (speak with data)
செப்பு (speak with answer)
கூறு (speak categorically)
உரை (speak meaningfuly)
நவில் (speak rhymingly)
இயம்பு (speak musically)
பறை (speak to reveal)
சாற்று (speak to declare)
நுவல் (speak with introduction)
ஓது (speak to recite)
கழறு (speak with censure)
கரை (speak with calling)
விளம்பு (speak with a message)

எத்தனை எத்தனை சொற்கள்! "தொன்மையை விடவும் தொடர்ச்சியே சிறப்பு" என்கிறார்கள். எனவே பயன்படுத்துதலே சிறந்தது. பயன்படுத்தாதது வழக்கிழக்கும்!

"சொல்" என்பது  பெயர்ச்சொல். அதனை வினைச்சொல்லாக "சொல்கிறான்; சொன்னான்; சொல்லுவான்" என்று பொதுவாகப் பயன்படுத்துகிறோம்.

தக்க இடத்தில் தக்க வகையில் பொருத்தமான சொல்லைக் கையாளும்போது பொருளும் மொழியும் பொலிவுறுகிறது!

"கவினுறு சொல்லே 
கவிதைக்கும் கதைக்கும்
கட்டும் உரைக்கும்
பெருமை கூட்டும்
பொருள் பல காட்டும்
பொலிவும் நல்கும்!"
🙂🙂👏👏👍

நன்றி
சொ.வினைதீர்த்தான்

வேந்தன் அரசு

unread,
Jul 18, 2021, 10:40:28 PM7/18/21
to தமிழ் மன்றம், mintamil, மின்தமிழ், vallamai


ஞாயி., 18 ஜூலை, 2021, பிற்பகல் 12:38 அன்று, சொ. வினைதீர்த்தான் <karu...@gmail.com> எழுதியது:
*தொல்காப்பிம் கூறுகிற பேச்சு வகைகளும் அவைக்கேற்ற ஆங்கிலத்தில் ஒத்தவையும் :-* 

பேசு (speak)
பகர் (speak with data)
செப்பு (speak with answer)
கூறு (speak categorically)
உரை (speak meaningfuly)
நவில் (speak rhymingly)
இயம்பு (speak musically)
பறை (speak to reveal)
சாற்று (speak to declare)
நுவல் (speak with introduction)
ஓது (speak to recite)
கழறு (speak with censure)
கரை (speak with calling)
விளம்பு (speak with a message)


சிறப்பு மிக்க பொருத்தமும்.

பகர் (speak with data)-- விலை பகர்தல்

விளம்பு (speak with a message)-- விளம்பரம்.


வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

வேந்தன் அரசு

unread,
Jul 18, 2021, 10:41:03 PM7/18/21
to தமிழ் மன்றம், mintamil, மின்தமிழ், vallamai
சொல்'லை மட்டும் காணேன்

திங்., 19 ஜூலை, 2021, முற்பகல் 8:10 அன்று, வேந்தன் அரசு <raju.ra...@gmail.com> எழுதியது:


--

சொ. வினைதீர்த்தான்

unread,
Jul 19, 2021, 7:49:45 AM7/19/21
to mintamil, தமிழ் மன்றம், vallamai
தமிழ் கூறுகிற பேச்சுவகைகளும் அவைக்கேற்ற ஆங்கிலத்தில் ஒத்தவையும் என்ற தலைப்பில் முகநூலில் ஒரு இடுகை இட்டிருந்தேன்.

நண்பர்கள் தந்த கூடுதல் தகவல்களயும் நான் இணையத்தில் கண்டவற்றையும் தங்கள் பார்வைக்குத் தருகிறேன். நன்றி.

மொழி
கதை
அறை
மிழற்று
கிளவி

பேசு, பகர் (ஆதாரத்துடன் பேசு)
செப்பு (பதில் தெரிந்து பேசு) 
கூறு (வரிசைப்படி பேசு) 
உரை (அர்த்தத்துடன் பேசு) 
நவில் (நயமாகப் பேசு)
இயம்பு (இசைபடப் பேசு)
பறை (வெளிப்படையாகப் பேசு) 
சாற்று (அங்கீகரித்துப் பேசு)
நுவல் (அறிமுகத்துடன் பேசு) 
ஓது (மனப்பாடமாகப் பேசு) 
கழறு (கண்டிப்பாகப் பேசு) 
கரை (அழைத்துப் பேசு)
விளம்பு (தகவலுடன் பேசு)

நன்றி
சொ.வினைதீர்த்தான்



நன்றி இனிய நண்பர்.
சொ.வி

rajam

unread,
Jul 20, 2021, 8:05:48 PM7/20/21
to tamil...@googlegroups.com, "சொ. வினைதீர்த்தான்"
வணக்கம் திரு. சொ.வி. ஐயா.

இதே “தொல்காப்பியப்பட்டியற்பதிவு” February 24, 2020 at 4:31:49 AM PST - இலிருந்து இணையத்தில் சுற்றிச் சுழன்றுவருவதாகத் தெரிகிறது!!! :-) !!! 

திரு. வண்ணன் வண்ணன் அவர்கள்  (எங்கோ)  இட்ட பதிவைத் திரு. ஜெயபாரதன் ஐயா தமிழ்மன்றத்தில் இட்டு அதற்கு நான் அளித்த மறுமொழியை இதற்கடுத்து முற்செலுத்துகிறேன்.

வேண்டுகோள் ஓரிரண்டு:

1. ஏற்கனவே இடப்பட்ட பதிவை மீண்டும் இடவேண்டாம். (அதாவது, அரைத்த மாவையே திரும்பத் திரும்ப அரைத்துப் புது மாவு போல் காட்ட முயலவேண்டாம்.)

2. ஒரு செய்தியை எங்கிருந்து எடுத்துப் பொதுமன்றத்தில் சொல்கிறோமோ அந்தச் செய்தியின் தொடக்கம் பற்றியும் ஒரு சிறு குறிப்பாவது கொடுத்தல் நேரியது.

அன்புடன்,
ராஜம் 


Reply all
Reply to author
Forward
0 new messages