தமிழ் இலக்கியத் தொடரடைவு (Concordance for Tamil Literature)

600 views
Skip to first unread message

Pandiyaraja Paramasivam

unread,
Jun 14, 2014, 11:53:10 AM6/14/14
to tamil...@googlegroups.com
அன்புடையீர்,
இன்றைக்குக் காலையில் நான் வடிவமைத்து முடித்த ஒரு வலைத்தளத்தைப் பார்வையிட்டுத் தங்களின் மேலான கருத்துகளைத் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். தொடரடைவுகளை உருவாக்க எனக்கு ஓராண்டு ஆனது. வலைத்தளத்தை எனக்குக் கிடைத்த ஒரு எளிய HTML புத்தகத்தைப் படித்துப் படித்துச் செய்தேன்.
இது ஒரு சோதனை வெளியீடு. கிடைக்கும் பின்னூட்டங்களைப் பொருத்துச் சில மாற்றங்கள் ஏற்படுத்தப்படும். முகப்புகளைப் பற்றியும், உள்ளடக்கத்தைப் பற்றியும் ஆலோசனை கூறுங்கள்.
முடிந்த அளவுக்கு வேறு தளங்களுக்கும் தெரிவியுங்கள். .
மிக்க நன்றி,
அன்புடன்,
ப.பாண்டியராஜா
தளம்:

rajam

unread,
Jun 14, 2014, 12:19:10 PM6/14/14
to tamil...@googlegroups.com
மிகப் பெரிய முயற்சி! மிகப் பெரிய சாதனை! நேரிய தமிழாய்வுக்கு மிகவும் தேவையான மிகச்சிறந்த தொண்டு! 

///தொடரடைவுகளை உருவாக்க எனக்கு ஓராண்டு ஆனது.///

அட, அம்புட்டு-தானா? சரிதான்! இன்னும் பல பல இலக்கியங்கள் தங்கள் கையில் உருளக் காத்துக்கிடக்கின்றன! நேரமிருந்தால் சொல்லவும் — சம்பளம் எதிர்பார்க்காத ‘வேலை’ நிறையவே தருகிறேன்! ;-)


அந்த நெட்ஸ்கேப் (Netscape) நிறுவனம் இருக்கே/இருந்ததே, அதன் தொடக்க காலத்தில் அங்கே வேலை பார்த்ததால் … ஒரு தளத்தின் முகப்பும், ஒவ்வொரு பக்கத்தின் அமைப்பும், வண்ணக்கலவையும் பயனருக்கு எளிதாக/இனிதாக எப்படி அமையவேண்டும் என்ற கருத்துகள் கூமுட்டைக் கூழ் வடிவிலிருந்து குஞ்சு உருவாகும் நிலையை அடையும் வரை … எல்லாரும் பட்ட பாட்டை நன்கு அறிவேன்! 

அதனால், வலைத்தளங்களை நோக்கும் என் பார்வை சற்றே கோணலானது என்றே கொள்க!

பிற பின்னர். இப்போதைக்கு என் வியப்பும் பாராட்டும் வாழ்த்தும்.

அன்புடன்,
ராஜம்




-

இலக்குவனார் திருவள்ளுவன்

unread,
Jun 14, 2014, 7:09:52 PM6/14/14
to tamilmanram kuzhu, thiru thoazhamai
தொடரடைவு நீங்கலான பிறவற்றை முழுமை யாகப்படித்தேன்.
நன்று.
உங்களைப் பற்றிய விவரங்களில் முன்னாள் என்பதன் அடுத்து அரைப்புள்ளி தேவையா?
மேனாள் எனப் பொதுவாகக்  குறிக்கலாமே!

தொல்காப்பியம், சங்க இலக்கியம் தொடர்பான அரிய முயற்சியை முடித்துள்ள நீங்கள், அக்காலத்தில் இல்லாத கிரந்த எழுத்துகளை நீக்கலாமே!
தமிழ்ப் பற்றாளருக்கு அயல் எழுத்துப் பற்று ஏன்?

தொடரடைவு பகுதியில் ஒவ்வோர் இலக்கியத்திற்கும் ஒரு  சொல் பார்த்தேன். சிறப்பான பணி. முழு மையாகப் பயன்படுத்தும் பொழுது தங்களின் ஆழமான பணியின் அருமை புலனாகும்.
தங்கள் உழைப்பை வணங்குகிறேன். பாராட்டுகள்.


--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/tamilmanram.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
அயற் சொற்களையும்  அயல் எழுத்துகளையும் நீக்கித்தான் எழுத வேண்டும் என்றாலும் பிறரது கருத்துகளையும் பிற இதழ்கள் அல்லது தளங்களில் வந்த செய்திகளையும் மேலனுப்புகையில் அவ்வாறே பதிவதால் அல்லது அனுப்புவதால் தமிழ்த்தாயே பொறுத்தருள்க.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
அகரமுதல இணைய இதழ் www.akaramuthala.in

இலக்குவனார் இல்லம்,
23 எச், ஓட்டேரிச் சாலை, மடிப்பாக்கம்,சென்னை 600 091
மனை பேசி 044 2242 1759
அலை பேசி 98844 81652

/ தமிழே விழி! தமிழா விழி!
எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /

பின்வரும் பதிவுகளைக் காண்க:


www.ilakkuvanar.com
thiru2050.blogspot.com
thiru-padaippugal.blogspot.com
http://writeinthamizh.blogspot.com/
http://literaturte.blogspot.com/
http://semmozhichutar.com

Pandiyaraja Paramasivam

unread,
Jun 15, 2014, 1:33:59 PM6/15/14
to tamil...@googlegroups.com
மிகவும் நன்றி அம்மையீர்,
என்னுடைய வலைத்தளப்பணிகளைப் பொருத்தவரையில், முதன்முதலில் என் 'கையைப் பிடித்து'  நடைபழகிக் கொடுத்தவர்கள் தாங்கள்தான் என்பதை என்றென்றும் நன்றியுடன் நினைவில்கொள்ளுவேன்.

>>
 நேரமிருந்தால் சொல்லவும் — சம்பளம் எதிர்பார்க்காத ‘வேலை’ நிறையவே தருகிறேன்! ;-)
>>
நேரமென்ன நேரம்?. அது நம் கையில். எனவே என்ன பணி என்று சொல்லுங்கள். ஆரம்பிக்கிறேன்.
நான் கல்லூரியில் Dean-ஆக இருக்கும்போது, பல வேலைகளை இழுத்துப்போட்டுக்கொண்டு செய்வேன். என்னிடம் யாராவது வந்து"சார் நீங்கள் எப்போது free-ஆக இருப்பீர்கள்" என்று கேட்டால். "நான் எப்போதும் busy-தான். ஆனால் நீங்கள் எப்போதும் என்னைப் பார்க்க வரலாம்" என்பேன். ஓய்வுபெற்ற பின்னர் முன்னைவிட busy. இருந்தாலும் சொல்லுங்கள். செய்கிறேன்.
நன்றி,
ப.பாண்டியராஜா


சொ. வினைதீர்த்தான்

unread,
Jun 15, 2014, 1:46:27 PM6/15/14
to தமிழ் மன்றம்
2014-06-15 23:03 GMT+05:30 Pandiyaraja Paramasivam <pipi...@gmail.com>:

என்னுடைய வலைத்தளப்பணிகளைப் பொருத்தவரையில், முதன்முதலில் என் 'கையைப் பிடித்து'  நடைபழகிக் கொடுத்தவர்கள் தாங்கள்தான் என்பதை என்றென்றும் நன்றியுடன் நினைவில்கொள்ளுவேன்.
;) 

நேரமென்ன நேரம்?. அது நம் கையில். எனவே என்ன பணி என்று சொல்லுங்கள். ஆரம்பிக்கிறேன்.
 
அருமை.
காலம் இல்லை என்பவனுக்குக் கணக்குத் தெரியவில்லை
நேரமில்லை என்று சொல்கிறவனிடம் நேர்மையில்லை                         என்று படித்தேன் ஐயா. 
அன்புடன்
சொ.வினைதீர்த்தான்.

Kaviyogi Vedham

unread,
Jun 15, 2014, 10:41:31 PM6/15/14
to தமிழ் மன்றம், pipi...@gmail.com
ரொம்பவே அற்புதம் ஸ்வாமி..( மெதுவே ஒவ்வொன்றாகப்பார்க்கின்றேன்)
அபாரம்..
வாழ்க உங்கள் பணி.
 உடனே உங்கள் வீட்டு முகவரி தேவை+செல் எண்.
 எங்க தூய தமிழ் இலக்கிய மாத ஏடு.. இலக்கியவேல் தன்னை அனுப்புவன். சரியா?( நவம்பரிலிருந்து ஆரம்பித்து இது ஜோராகப்போகிறது.)
 கவியோகியார்
 செல் 9500088528

வாழ்க அனைவரும் வளமுடனே 
என் குருஜி லஹரி பாபாஜி
ஆசியினால்.
கவியோகி வேதம்(kaviyogi vedham)-
PL. visit my blog(for my poems etc)at http;//kaviyogi-vedham.blogspot.com/
kaviyogi vedham(yogiyaar)தலைவர்..
Founder, Sree Laharibabaji yogasram,
2/682, 10th cross St,...Renga reddy garden,
Neelankarai, Chennai-600115--செல் எண் 95000-88528
 



--

Pandiyaraja Paramasivam

unread,
Jun 16, 2014, 12:04:30 AM6/16/14
to tamil...@googlegroups.com, pipi...@gmail.com
மிக்க நன்றி ஐயா. இந்தத் தளத்தின் முகப்புப்பக்கத்தின் அடியில் வலக்கோடியில் இருக்கும் -தொடர்பு கொள்ள - என்ற தலைப்பைச் சுட்டினால் தங்களுக்குத் தேவையான அனைத்துத் தகவல்களும் கிடைக்கும். எனினும் எனது தொடர்பு எண்: 99944 89388.
மீண்டும் மிக்க நன்றி,
ப.பாண்டியராஜா

Pandiyaraja Paramasivam

unread,
Jun 16, 2014, 4:55:48 AM6/16/14
to tamil...@googlegroups.com, thiru-th...@googlegroups.com
தங்கள் கருத்துகளுக்கும், பாராட்டுதல்களுக்கும் மிக்க நன்றி ஐயா.
ப.பாண்டியராஜா

ருத்ரா

unread,
Jun 16, 2014, 11:39:38 AM6/16/14
to tamil...@googlegroups.com



அன்புள்ள முனைவர் திரு ப.பாண்டியராஜா அவர்களே


தமிழ் மொழியில் இப்படி ஒரு "அகராதி பிடித்தவர்"(படைத்தவர்) இல்லையே 

என்னும் ஏக்கம் உணமையிலேயே தீர்ந்தது.நான் ஏற்கனவே 

குறிப்பிட்டிருக்கிறேன். ஆனால் உங்கள் அவை அடக்கத்தில் அதை தாங்கள் 

பொருட்படுத்தவில்லை என்பதும் நான் அறிவேன்.இருப்பின்னும் அதை நான் 

மீண்டும் சொல்லியே ஆகவேண்டும்.தற்போதைய தங்கள் படைப்பு "நோபல் 

பரிசுக்கு"உள்ள தகுதிக்கு சற்றும் குறைந்த தல்ல.தமிழ் மொழி உலகினரால் 

அறியப்பட வேண்டும் உணரப்படவேண்டும் அதன் சொல்வளம் பொருள்வளம் 

முதலியன சுவைக்கப்பட வேண்டும் என்பது ஒவ்வொரு தமிழனின் 

உட்கிடக்கை ஆகும்.அந்த உலகத்தமிழின் "சுடரேந்தி"தான் தங்கள் படைப்பு.

ஆங்கிலச்சொல்லை பெயர்த்து "தொடரடைவு" என தாங்கள் பெயர் 

சூட்டியிருந்தாலும் "தமிழ்ச்சுடரேந்தி" அல்லது "தமிழ் அகர முதலம்"என்று 

இந்நூல் அறியப்படுவதே சிறப்பு என நான் விரும்புகிறேன்.தங்களது 

இந்த அரிய‌ படைப்பை தமிழ் உலகம் நன்கு பயன்படுத்திக் 

கொள்ளவேண்டும் என்றும் மேலும் மேலும் இதே திசையில் 

தங்கள் பணி தமிழுக்கு அணி சேர்க்கவேண்டும் என்றும் மன‌ங்கனிந்து 

பாராட்டுகின்றேன்.

அன்புடன் ருத்ரா

rajam

unread,
Jun 16, 2014, 11:49:13 AM6/16/14
to tamil...@googlegroups.com
ம்ம்ம். கொஞ்சம் நாட்டு/இணைய விவரம் தெரியாத நல்லவராக இருக்கீரே! ;-) 

///என்னுடைய வலைத்தளப்பணிகளைப் பொருத்தவரையில், முதன்முதலில் என் 'கையைப் பிடித்து'  நடைபழகிக் கொடுத்தவர்கள் தாங்கள்தான் என்பதை என்றென்றும் நன்றியுடன் நினைவில்கொள்ளுவேன்.///

இணையம் என்பது களவுக்காகவே என்று பலரும் திரியும் இடத்தில் ஒருவர் செய்த சிறு உதவியை இப்படியா மறக்காமல்/மறைக்காமல் சொல்லுவது?!! ஓஒ (எங்க தின்னவேலி மொழியில் இது அதிசயக் குறிப்பாக்கும்.)

அரிய படைப்புக்கும் தொண்டுக்கும் மிக்க நன்றி, ஐயா.

வண்ணக் கலவைதான் என் தளர்ந்த கண்களை உறுத்துகிறது. ஒரு புடைவைக் கடையில் நுழைந்ததைப் போன்ற உணர்வு. பின்னணி வண்ணமும் முன்னணியில் தெளிவாகத் தெரியவேண்டிய சொற்களும் போட்டி போடுகிற மாதிரி இருக்கு. இதைப் பற்றித் தனியே சொல்கிறேன்.

சரி, நேரம் இருக்கா, ரொம்பவே சரி. 

இப்போதைக்குச் 'செஞ்சா நல்லாருக்கும்' என்று தோன்றும் சில 'வேலைகள்':

1. இந்தக் கல்லாடம் என்கிற நூலை யாருமே தொடமாட்டேன் என்கிறார்கள். 'கல்லாடம் கற்றவனோடு மல்லாடாதே' என்ற கூற்றைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். அந்த நூலின் தொடரடைவு தங்கள் பெரு முயற்சியின்வழிக் கிடைத்தால் அருமையாக இருக்கும். அந்த நூல் அப்படி ஒர் அச்சத்தைத் தருவானேன் -- சொல்லாலா, பொருளாலா என்று ஒரு கை பார்த்துவிடலாம். 

2. இறையனார் களவியல் உரையின் சொல்லடைவு. 

3. தொல்காப்பிய உரைகளின் தொடரடைவு. இளம்பூரணரிடமிருந்து தொடங்கலாம்.

4. ஈடு உரைகளின் சொல்லடைவு. 

'போயிட்டு வாங்க, எனக்கென்ன வேற சோலியில்லே-னு நெனெச்சீகளா'-னு கல்லெடுக்குமுன் ஓடிவிடுகிறேன்! ;-)

மிக்க நன்றியும் அன்பும்,
ராஜம்

Pandiyaraja Paramasivam

unread,
Jun 28, 2014, 2:27:43 PM6/28/14
to tamil...@googlegroups.com
அன்புடை அம்மையீர்,
தொடரடைவு பற்றிய எனது வலைத்தளத்தை முழுமை செய்யவும், அதில் மாற்றங்கள் மேற்கொள்ளவும் இயன்றவரை பணிகளை முடித்துள்ளேன். வண்ணக்கலவையில் மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளன. பாடப் பகுதிகள் அனைத்தும் சேர்க்கப்பட்டுள்ளன. இன்னும் கொஞ்ச நாளைக்கு வேறு வகையில் சிந்தனையை ஓட்ட எண்ணம். அதற்கிடையில்,
கல்லாடம் என்ற சொல் குழப்புகிறதே. கல்லாடர் என்பவர் தொல்காப்பியர் காலத்திய இலக்கண ஆசிரியர் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அந்த நூல் கிடைக்கவில்லை. ஆங்காங்கே உரைகளில் கிடைக்கும் பகுதிகளைத் தொகுத்து திரு.இளங்குமரனார் பதிப்பித்திருக்கிறார் எனக் கேள்விப்பட்டிருக்கிறேன். அத்தகைய ஒரு புத்தகத்தைக் கல்லூரி நூலகத்தில் பார்த்த நினைவு. ஆனால் இப்போது கூகுளில் தேடினால் வேறு என்னென்னவோ கிடைக்கிறது. அதைப் பற்றி TVU கூறுகிறது:
கல்லாடம் என்பது தமிழ்-இலக்கியத்தில் உள்ள சிறந்த நூல்களுள் ஒன்று. பாயிரமும் நூலும், பதினைந்து முதல் அறுபத்தாறு அடிகள் வரையில் உள்ள நூற்றிரண்டு ஆசிரியப்பாக்களைக் கொண்ட மூவாயிரத்து நானூற்று அடிகளில், அடங்கியுள்ளன.
- கல்லாடம் இலக்கியமா? மூவாயிரம் அடிகளா? இது என்ன நூல்? தாங்கள் குறிப்பிடும் கல்லாடம் எது? அது எங்கே கிடைக்கிறது? அடுத்தமுறை மதுரை செல்லும்போது நூலகம் சென்று பார்க்கிறேன். அதற்கு முன் தாங்கள் தயவுசெய்து தெளிவுபடுத்துங்கள்.
உரைநடைகளுக்கு Program மூலம் தொடரடைவு காணமுடியுமா என யோசிக்கவேண்டும். ஏனெனில் அதில் அடி, அதிகாரம் போன்றவை முக்கியம். Bible-க்குச் செய்திருக்கிறார்கள். ஆனால் அங்கே நூல்கள், அதிகாரங்கள், வசனங்கள் என எண்ணிடப்பட்டிருக்கிறது. எனவே தொடரடைவு காண்பது எளிது. களவியல் உரை அப்படி இருக்குமா? நான் பார்த்ததில்லை. அனைவருக்கும் தெரிந்த ஒரு பொதுவான அமைப்பு இருந்தால் அதை ஒட்டி தொடரடைவு உருவாக்கினால் நூலைப் பார்ப்பது எளிது. இதனையும் விளக்குங்கள்.
இதுவேதான் தொல்காப்பிய உரைகளுக்கும். அடி எண், பக்கம் எண் குறிப்பதற்கு எது அடிப்படையாக இருக்கும்?
ஈடு உரை என்றால் என்ன? நான் கேள்விப்பட்டதில்லை. பொதுவாக உரைநடைகளுக்குத் தொடரடைவு/சொல்லடைவு கானவேண்டுமென்றால் ஒரு standard form இருக்கவேண்டும். நிகழ்விடங்களைக் குறிக்கவேண்டுமல்லவா!
தெளிவுபடுத்துங்கள்.
ப.பாண்டியராஜா



rajam

unread,
Jun 28, 2014, 8:47:58 PM6/28/14
to tamilmanram, Pandiyaraja Paramasivam
அன்புடைய முனைவர் பாண்டியராஜா, 

வணக்கம். சுருக்கமாகச் சில சொல்லி இப்போதைக்கு விடைபெறுகிறேன்.

மதுரைத் திட்டத்தில் (http://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0244.html) கல்லாடம் கிடைக்கிறது. இணையம் வருவதற்குமுன்னரே பல்கலைக்கழக நூலகத்திலிருந்து எடுத்த ஒரு நூலைத் தட்டச்சிய என் படிவமும் என் கணினியில் இருக்கு

கல்லாடத்தைச் சொல்/தொடர் அமைப்புகளில் பிரிப்பது கடினமில்லை. 

ஆனால், உரைநடை இலக்கியங்களை (களவியல் உரை தொடங்கி) அலசி, சொல்/தொடர் அமைப்புகளில் அமைப்பது இப்போதைக்குக் கிடைக்கும் கணினி நிரல்கள் மூலம் இயலாது. ஆனாலும் … கணினி நிரலமைப்பு நம் கட்டுப்பாட்டில்தானே இருக்கு! செய்துவிடலாம். செய்யும் திறன் நமக்கு இருக்கு. செய்வோம். 

ஈடு பற்றி நினைவில்லையா? நம் பேராசிரியர் அ.கி.பரந்தாமனார் கற்பித்திருப்பாரே? “அஞ்சிறைய மடநாராய், அளியத்தாய் …” என்றதுக்கான உரையை அவர் சொன்ன மாதிரி இனி யாரும் சொல்ல முடியாதே!

[இன்னும் தங்கள் வலைத்தளத்தின் வண்ணச்சேர்க்கை என் கண்களுக்கு இனிமை தரவில்லை! ;-) மன்னிக்கவும். பிறகு எழுதுகிறேன்.]

இப்படிக்கு,
ராஜம் 



-- 


Pandiyaraja Paramasivam

unread,
Jun 29, 2014, 5:31:13 AM6/29/14
to tamil...@googlegroups.com, pipi...@gmail.com
நன்றி அம்மையீர்,
இந்தக் கல்லாடத்தை நானும் பார்த்தேன். அது என்ன வேழமுகக் கடவுள் வணக்கத்துடன் தொடங்குகிறது!! 9-ஆம் நூற்றாண்டுக்குப் பிற்பட்டது போலும். இலக்கன நூல் போன்றும் தெரியவில்லை. நான் நினைப்பது தொல்காப்பியர் காலத்து இலக்கண நூல் கல்லாடம். அதுவல்ல் இது. இளங்குமரனார் தொகுத்திருக்கும் கல்லாடம் பார்த்திருக்கிறிர்களா?
ப.பாண்டியராஜா

rajam

unread,
Jun 29, 2014, 11:17:57 AM6/29/14
to tamil...@googlegroups.com, pipi...@gmail.com
யான் பென்சில்வேனியாப் பல்கலைக்கழகத்தில் இருந்த காலத்தில் நூலகத்திலிருந்து கல்லாடம் என்ற ஒரு நூலை எடுத்துத் தட்டச்சினேன். அப்போது புதிதாக வந்த Word 1.0 என்பதுவே கோப்புகளை உருவாக்கவும் சேமிக்கவும் கிடைத்த கருவி. அதில் யான் உருவாக்கிய எல்லாக் கோப்புகளையும் இப்போது புதுக்கணினிகளில் மீட்டெடுக்க முயன்றுகொண்டிருக்கிறேன். கல்லாடத்தை மீட்டெடுத்தவுடன் தெரிவிக்கிறேன். அதுவரை உங்கள் கேள்விக்கு என் விடை: நான் பதிவு செய்த நூல் இளங்குமரனார் தொகுத்தது என்றுதான் நினைக்கிறேன். தெளிவாக நினைவில்லை. 

இணையத் தேடலில் கிடைத்த செய்தியைத் தனி மடலில் அனுப்புகிறேன்.


Pandiyaraja Paramasivam

unread,
Jul 2, 2014, 5:23:31 AM7/2/14
to tamil...@googlegroups.com, pipi...@gmail.com
அன்புடை அம்மையீர்,

>>
ஈடு பற்றி நினைவில்லையா? நம் பேராசிரியர் அ.கி.பரந்தாமனார் கற்பித்திருப்பாரே? “அஞ்சிறைய மடநாராய், அளியத்தாய் …” என்றதுக்கான உரையை அவர் சொன்ன மாதிரி இனி யாரும் சொல்ல முடியாதே!

அம்மையீர், நான் கல்லூரியில் கணிதம் பயின்றவன். தியாகராசர் கல்லுரியில் புகுமுகவகுப்பு (ஓராண்டு) படித்தேன். அப்போது திருவாளர்கள்.மெ.சுந்தரம், கதி.சுந்தரம், சிற்சபேசன் ஆகியோர் எனக்கு ஆசிரியர்கள். இவர்களில் யாராவது விடுமுறையில் சென்றால் வேறு யாராவது வருவார்கள். அப்படி வந்தவர்கள்: டாக்டர்.இராசமாணிக்கனார், ஔவை.துரைசாமியார், அ.கி.பரந்தாமனார், நா.பாலுசாமி ஆகியோர். ஏதோ பெரியவர்களைப் பார்த்த நினைவு மட்டும் இருக்கிறது. அப்புறம் அமெரிக்கன் கல்லூரியில் பட்டப்படிப்பு.. ஜோதிமுத்து, வீ.ப.கா.சுந்தரம், மோசஸ் பொன்னையா, கு.பரமசிவம் ஆகியோர் ஆசிரியர்கள். சாலமன் பாப்பையா டியூட்டர். கட்டுரைகள் எழுதிக் கொடுப்போம். பசுமைப் பள்ளியில் வீ.ப.நடராசன் தமிழாசிரியர். இவர்கள் போட்ட தமிழ்ப் பிச்சையில் இன்னும் வாழ்ந்துகொண்டிருக்கிறேன்.

>>
[இன்னும் தங்கள் வலைத்தளத்தின் வண்ணச்சேர்க்கை என் கண்களுக்கு இனிமை தரவில்லை! ;-) மன்னிக்கவும். பிறகு எழுதுகிறேன்.]

இப்பொழுது தொடரடைவு - மணிமேகலையில் அ முதல் ஓ வரை முதல் எழுத்துக்களுக்கு வெவ்வேறு புதிய வண்ணங்கள் ஏற்றியிருக்கிறேன். இவற்றில் எது பிடித்திருக்கிறது என்று சொல்லுங்கள். எனக்குக் 'கலர் பார்க்க'த் தெரியவில்லை என நினைக்கிறேன்!  கண்ணுக்கினிய நல்ல வண்ணங்கள் ஆறு கொடுத்து உதவுங்கள். ஒவ்வொரு இலக்கியத்துக்கும் ஒன்றாக நியமிக்கிறேன்.

நன்றி,
ப.பாண்டியராஜா

rajam

unread,
Jul 3, 2014, 3:41:24 AM7/3/14
to tamil...@googlegroups.com, pipi...@gmail.com
ஈடு பற்றி … 


இங்கே பார்க்கலாம்: 


http://ta.wikipedia.org/wiki/திருவாய்மொழி_விரிவுரைகள்

http://thiruvonum.wordpress.com/2013/07/14/திருவாய்மொழி-வியாக்யான-116/ 


இங்கேயும் பார்க்கலாம்:



இவற்றுக்கும் மேலாக … ஶ்ரீரங்கம் மோகனரங்கன், தேவ் போன்றவர்களைக் கேட்கலாம்.


///இப்பொழுது தொடரடைவு - மணிமேகலையில் அ முதல் ஓ வரை முதல் எழுத்துக்களுக்கு வெவ்வேறு புதிய வண்ணங்கள் ஏற்றியிருக்கிறேன். இவற்றில் எது பிடித்திருக்கிறது என்று சொல்லுங்கள். எனக்குக் 'கலர் பார்க்க'த் தெரியவில்லை என நினைக்கிறேன்!  கண்ணுக்கினிய நல்ல வண்ணங்கள் ஆறு கொடுத்து உதவுங்கள். ஒவ்வொரு இலக்கியத்துக்கும் ஒன்றாக நியமிக்கிறேன்.///

இப்போதைக்கு அது பெரிய காரியமில்லை. விரைவில் எழுதுகிறேன். கவலை வேண்டாம.


N D Logasundaram

unread,
Jul 3, 2014, 7:11:43 AM7/3/14
to தமிழ் மன்றம்
அன்பு நிறை  பாண்டிய ராஜா அவர்களுக்கு,

ஏடு மாற்றி மாற்றி எழுதும் போதெல்லாம் அவற்றை கையாளுபவர்கள்
யாராயினும் எந்நிலையில் உள்ளாறும் தங்கள் சமயோசிதம் போல்தான் செய்திருப்பார் 

எனவே கடவுள் வாழ்த்தினை வைத்து மட்டும் நூலினைப் பார்ப்பது நிறை யில்லை என்பது என்கருத்து 
திருமுருகாற்றுப்படைக்கோ திருவாகத்திகோ முன்பு காணப்படும் பாடல்கள் எவ்வகையினவோ
அவ்வகைத் ததாகவே கொள்ளல் வெண்டும் 

புறநானூற்றில் முதல் பாடலாகக் காண்பது பாரதம் பா டிய பெருந்தேவனார் இயற்றியது எனக்காண்கின்றது
அதனால் அது நூலுடன் தொடர்புடையது ஆகாது எனினும் புறநானூறா கக்  கொள்கின்றோம் அல்லவா  
அன்புடன் 
நூ த லோ சு 
மயிலை 


Pandiyaraja Paramasivam

unread,
Jul 14, 2014, 2:18:10 PM7/14/14
to tamil...@googlegroups.com
அன்புடையீர்,
மதுரைப்பகுதில் வெளியாகும் தினமலர் நாளிதழில் இன்றைய (14-7-2014 திங்கள்) இதழில் (பக்கம் 14) தொடரடைவு இணையதளம் பற்றிய செய்தி வெளிவந்ததாக அறிகிறேன் (நான் இப்போது சென்னையில்) அப்பகுதி அன்பர்களுக்கு இச்செய்தி.
ஏற்கனவே 7-7-2014 தினமலர் மின்னிதழில் புத்தகம்-கம்ப்யூட்டர் மலர் இதழில் இந்தத் தொடரடைவு பற்ரிய செய்தி வெளியாகியுள்ளது.

http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=21056&ncat=4

என்ற தளத்தில் இதனைப் பார்க்கலாம். இது ஏற்கனவே தமிழ்மன்றத்தில் நான் அறிவித்ததுதான். அதைப் பார்க்காதவர்களுக்கான செய்தி இது.
நன்றி,
ப.பாண்டியராஜா

Pandiyaraja Paramasivam

unread,
Aug 19, 2014, 1:57:06 AM8/19/14
to tamil...@googlegroups.com
அன்புடையீர்,
தமிழ் இலக்கியத் தொடரடைவு என்ற தலைப்பில் http:\\sangamconcordance.in என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ள இணையதளத்தில், தொல்காப்பியம், சங்க இலக்கியம் (பத்துப்பாட்டு + எட்டுத்தொகை), திருக்குறள், சிலப்பதிகாரம், மணிமேகலை, கம்பராமாயணம் ஆகிய நூகளுக்கான தொடரடைவுகள் (concordances) கொடுக்கப்ப்ட்டுள்ளன என்பதை அறிவீர்கள்.
இப்போது இவற்றுடன் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களும் சேர்க்கப்பட்டுள்ளன என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

இதில் திருக்குறள் உட்பட பதினெட்டு நூல்களின் தொகுப்புக்கான தொடரடைவும், அந்த நூல்கள் முழுமையும் கொடுக்கப்பட்டுள்ளன.

ஏற்கனவே திருக்குறள் தொடரடைவு தனியாகக் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே, திருக்குறளைத் தனியாகவும், தொகுப்பு நூல்களுள் ஒன்றாகவும் ஆய்வதற்கு இவ்விரண்டுவகைத் தொடரடைவுகளும் உதவும்.

ஓர் ஐயம் - என்னிடம் நிறையப்பேர் கேட்கிறார்கள்.

sangamconcordance என்ற பெயரின் கீழ் கம்பராமாயணத்தையும் சேர்த்திருக்கிறீர்களே? - என்று.

முதலில் நான் உருவாக்கியது பத்துப்பாட்டுக்கான தொடரடைவு மட்டுமே. பின்னர் அதனையே விரிவாக்கிச் சங்க இலக்கியம் முழுமைக்கும் தொடரடைவு உருவாக்கினேன். அதுவே பெரிய மலைப்பாகத் தோன்றியது. எனவே அதனைத் தளத்தில் வெளியிட sangamconcordance.in என்ற பெயரில் பணம்கட்டிப் பதிவுசெய்துவிட்டேன். இதற்கிடையில் ஏனைய நூல்களுக்கும் தொடரடைவு உருவாக்கப்பட்டுவிட்டதால். சங்க இலக்கியத் தொடரடைவு மிகவும் சிறியதாகத் தோன்றியது. எனவே, ஏனையவற்றையும் சேர்க்க முடிவுசெய்தேன். அதனால்தான், இணையதளத்துக்கு உள்ளே சென்றவுடன் காணும் வண்ணம், தமிழ் இலக்கியத் தொடரடைவு என்று தளத்துக்குத் தலைப்பு வைத்திருக்கிறேன்.

சுதந்திரநாள் பட்டிமன்றப் பேச்சாளர்களில் ஒருவர் கூறினார்-

விதையுங்கள்,
விதைதுக்கொண்டே இருங்கள்,
முளைத்தால் மரம்-
இல்லாவிட்டால் உரம்!!!

இந்த விதைப்பு தொடரும்.
அடுத்த விதை?

சீவக சிந்தாமணி.

அன்புடன்,
ப.பாண்டியராஜா


rajam

unread,
Aug 20, 2014, 11:09:52 PM8/20/14
to tamil...@googlegroups.com, Pandiyaraja Paramasivam
சாதாரணத் தமிழாளி ஒருத்தியின் மடல் … 

முனைவர் பாண்டியராஜா அவர்களுக்கு வணக்கம்.

பாராட்டுகளுக்குப் பக்கம் பக்கமாகப் பேசிப் போற்றவேண்டும்! வளர்க நும் தொண்டு.

என் கணினி மட்டும்  http:\\sangamconcordance.in  என்ற இடத்துக்குப் போக அடம் பிடிக்கிறது. 

நல்லதே. விதைப்போம். வளரும். 

அன்புடன்,
ராஜம்


வேந்தன் அரசு

unread,
Aug 21, 2014, 6:16:48 AM8/21/14
to தமிழ் மன்றம், Pandiyaraja Paramasivam



20 ஆகஸ்ட், 2014 11:09 பிற்பகல் அன்று, rajam <ra...@earthlink.net> எழுதியது:

சாதாரணத் தமிழாளி ஒருத்தியின் மடல் … 

முனைவர் பாண்டியராஜா அவர்களுக்கு வணக்கம்.

பாராட்டுகளுக்குப் பக்கம் பக்கமாகப் பேசிப் போற்றவேண்டும்! வளர்க நும் தொண்டு.

என் கணினி மட்டும்  http:\\sangamconcordance.in  என்ற இடத்துக்குப் போக அடம் பிடிக்கிறது. 

வித்திய நொடியே எனக்கு விளையுது. தளத்தில் கோளாறு இல்லை.
 


--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

rajam

unread,
Aug 21, 2014, 11:17:51 AM8/21/14
to tamil...@googlegroups.com, pipi...@gmail.com
///வித்திய நொடியே எனக்கு விளையுது. தளத்தில் கோளாறு இல்லை.///

'வேந்தன் மேஎய தீம்புனல் உலகம்'; சிலருடைய காட்டில் எப்பவும் அடைமழை! :-)

ஐயாவின் தளத்தில் கோளாறு-னு யாரு சொன்னா? எல்லாம் எங்கூர் படுத்தும் பாடு; அவங்களைத் தாண்டி யாரும் விண்வெளியில் உலவக்கூடாது-ங்க்ற அளவுக்கு எல்லாரும் போயிட்டிருக்காங்க. போட்டியான போட்டி -- 2.4 GHz போதாது.
Reply all
Reply to author
Forward
0 new messages