திருவாய்மொழி - முன்னுரை

655 views
Skip to first unread message

Thirumalai Vinjamoor Venkatesh

unread,
Feb 21, 2009, 5:39:12 AM2/21/09
to minT...@googlegroups.com
ஆழ்வார், எம்பெருமானார், ஜீயர் திருவடிகளேசரணம்.
 
ஆழ்வார்கள் பன்னிருவரில் தலைவராக விளங்கும் நம்மாழ்வார் அருளிச்செய்த ப்ரபந்தம் திருவாய்மொழி. அவர் மேலும் 3 ப்ரபந்தங்கள் அருளிச்செய்துள்ளார். அவை, திருவிருத்தம், பெரிய திருவந்தாதி மற்றும் திருவாசிரியம் என்பன.
 
வைணவ மரபில் கோயில் என்றால் அது திருவரங்கம் தான். அதுபோல ஆழ்வார் என்றால் நம்மாழ்வார் தான். இது அவருடைய சிறப்பு. இவர் சிறப்பை மணவாள மாமுனிகள் இவ்வாறு போற்றுகிறார்....
 
"உண்டோ வைகாசி விசாகத்துக்கு ஒப்பு ஒரு நாள்
உண்டோ சடகோபர்க்கு ஒப்பொருவர் - உண்டோ
திருவாய்மொழிக்கு ஒப்பு தென்குருகைக்குண்டோ
ஒருபார் தனிலொக்குமூர்"
 
இவ்வாழ்வாரைப் பற்றி 100 பாக்களால், கம்பர், "சடகோபரந்தாதி" என்ற நூலில் போற்றியிருக்கிறார். அந்நூலில், ஆழ்வாரைக்காட்டிலும் அவர் செய்த திருவாய்மொழியை மிகவும் போற்றியிருக்கிறார். திருமகள் கேள்வனான திருமாலுக்கு உள்ள சிறப்புகள் அனைத்திலும், இத்திருவாய்மொழி அவனுக்குக் கிடைத்ததே அவன் பெற்ற மிக உயரிய  சிறப்பு என்கிறார். மேலும், திருவாய்மொழியை அவர், "ஆரா அமுதக் கவி ஆயிரம்" என்றும் குறிக்கிறார்.
 
இத்திருவாய்மொழிக்கு 5 உரைக்கள் ஏற்பட்டன, அக்காலத்தில். எம்பெருமானார் என்று போற்றப்படும் இராமனுசர் காலம் வரையில் வாய் வழியாக மட்டுமே ஓதப்பட்டு வந்த திருவாய்மொழி உரை, அவருடைய ஆணையினால் முதன் முதலாக ஏடு படுத்தப்பட்டது. அவ்வாறு முதலில் ஏடு படுத்தியவர் எம்பெருமானாரின் சீடரான "திருக்குருகைப்பிரான் பிள்ளான்" என்பவர். இவர் இயற்றிய உரையை "ஆறாயிரப்படி" என்பர். ஆறாயிரம் என்றது அவ்வுரையின் வார்த்தை அளவைக் கொண்டு வந்தது. அவருக்கு அடுத்து, நஞ்சீயர் என்ற ஆச்சார்யர், சிறிது விரிவாக "ஒன்பதினாயிரப்படி" உரையை அருளினார். எம்பெருமானாருக்குப் பிறகு திருவரங்கத்தில், ஆச்சார்ய பீடத்தை அலங்கரித்தவர், அவருடைய மற்றொரு சீடரான, எம்பார் எனப்படுபவர். இவருக்கு அடுத்து அலங்கரித்தவர், பராசர பட்டர் என்பவர். இவர் எம்பெருமானாருடைய மற்றொரு சீடரான கூரத்தாழ்வானின் மகன் ஆவார். இவர், அரங்கநாதனின் அருளால் பிறந்தமையால், இவரை அரங்கனின் பிள்ளை என்றே அழைப்பர். இந்த பட்டருடைய சீடர்தான் "ஒன்பதினாயிரப்படி" உரையாசிரியரான நஞ்சீயர். பட்டருக்குப் பிறகு பீடத்தை அலங்கரித்தவரும் இவர்தான். இவருடைய சீடர், நம்பிள்ளை என்பவர். நம்பிள்ளையின் இயற்பெயர் வரதாச்சார்யர் என்பதாகும். அவருடைய திறமையைக் கண்டு வியந்த அவர் ஆச்சார்யரான நஞ்சீயர், அவரை, நம் பிள்ளை போலே! என்று கூறியமையால் அவருக்கு நம்பிள்ளை என்றபெயரே மேலோங்கியிருந்தது. 
 
நம்பிள்ளையின் சீடர்கள் பலருள் பெரியவாச்சான் பிள்ளை, வடக்குத்திருவீதிப்பிள்ளை, என்றிருவர்கள், நம்பிள்ளையின் வார்த்தைகளைக் கொண்டு இரு உரைகள் செய்தனர். அவை முறையே "இருபத்துநாலாயிரப்படி" என்றும் "முப்பத்தாராயிரப்படி" என்றும் பெயர் பெற்றன. இவற்றுள் "முப்பத்தாராயிரப்படி" என்பது, நம்பிள்ளை சொல்லச் சொல்ல, வடக்குத் திருவீதிப்பிள்ளை ஏடு படுத்தியது. ஆக, இது வடக்குத்திருவீதிப்பிள்ளையின் உரை என்பதைக் காட்டிலும், நம்பிள்ளையின் உரை என்பதே மிகப்பொருத்தம். இந்த முப்பத்தாராயிரப்படியை "ஈடு" என்ற சிறப்புப் பெயரால் வழங்குவர். திருவாய்மொழிக்கு ஈடாக நின்ற உரை என்ற சிறப்பினால் இதற்கு ஈடு என்று பெயர்.
 
இவை தவிர பெரியவாச்சான் பிள்ளையின் சீடரான அழகிய மணவாள ஜீயர் என்பவர் இயற்றிய உரை, திருவாய்மொழிக்கு ஏற்பட்ட 5வது உரையாகும். இதைப் "பன்னீராயிரப்படி" என்றழைப்பர்.
 
இதைப்பற்றி, மணவாள மாமுனிகள் தம் உபதேசரத்தினமாலை என்ற நூலில்...
 
"பிள்ளான் நஞ்சீயர் பெரியவாச்சான் பிள்ளை
தெள்ளார் வடக்குத் திருவீதிப்பிள்ளை,
மணவாள் யோகி, திருவாய்மொழியைக் காத்த
குணவாளர் என்று நெஞ்சே கூறு"
 
என்று குறிக்கிறார்.
 
மேலும், "ஈடு" என்ற உரையின் சிறப்பை...
 
"தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறிதன்னை
வள்ளல் வடக்குத்திருவீதிப்பிள்ளை இந்த
நாடறிய மாறன் மறைப்பொருளை நன்கு உரைத்தது
ஈடு முப்பத்தாறாயிரம்"
 
என்று விளக்குகிறார்.
 
ஆக நம்மாழ்வாரால் ஈன்று எடுக்கப்பட்ட திருவாய்மொழி என்ற சேய், எம்பெருமானாரால் வளர்க்கப் பெற்றது. இதை......
 
"வான் திகழும் சோலை மதிளரங்கர் வண்புகழ்மேல்
ஆன்ற தமிழ்மறைகள் ஆயிரமும் - ஈன்ற
முதல் தாய் சடகோபன் மொய்ம்பால் வளர்த்த
இதத்தாய் இராமனுசன்"
 
என்று திருவாய்மொழி விஷயமாக பட்டர் அருளிச்செய்த துதியிலிருந்து தெளியப்பெறலாம். "முதல் தாய்" என்று நம்மாழ்வாரையும் "இதத் தாய்" என்று இராமனுசரையும் போற்றியதைக் காண்க.
 
இந்த ஈடானது, பிறகு சில காரணங்கள் பற்றி இரகசியமாக வைக்கப்பட்டு மணவாள மாமுனிகளால் இவ்வுலகில் விரிவாக உபதேசிக்கப்பட்டது. இதை அவர் பெரிதும் போற்றி உபதேசித்ததால் அவருக்கு "ஈட்டுப் பெருக்கர்" என்று ஒரு பெயரும் உண்டு. மணவாள மாமுனிகளின் முயற்சியால்தான் ஈடு இன்றளவும் நமக்குக் கிடைக்கப் பெறுகிறது.
 
இதனால் தான் இவர்களைப் போற்றும் வண்ணம் இன்றும் வைணவர்கள் "ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்" என்று தொடக்கத்திலோ, முடிவிலோ எழுதிச்செல்வர்.
 
இவை தவிர, தேசிகரும் திருவாய்மொழியைத் தழுவி வடமொழியில் "த்ரமிடோபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி" என்ற நூலை இயற்றியிருக்கிறார். மணவாள மாமுனிகளும், திருவாய்மொழி நூற்றந்தாதி என்ற நூலை, திருவாய்மொழியின் சாராம்சமாக இயற்றியுள்ளார். வடக்குத்திருவீதிப்பிள்ளையின் குமாரரான அழகிய மணவாளப்பெருமாள் நாயனார் என்பவர் ஆசார்ய ஹ்ருதயம் (ஆச்சார்யர் = நம்மாழ்வார்)  என்ற நூலை அருளிச்செய்துள்ளார்.
 
இவை அனைத்தும் மணிப்ரவாள நடையில் உள்ளன.
 
தற்காலத்தில் 20 ஆண்டுகள் முன் வரை வாழ்ந்த ப்ரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சார்யர் என்பவர், "திவ்யார்த்த தீபிகை" என்ற ஒரு உரையை எளிய தமிழில், "ஈடு முப்பத்தாராயிரப்படியை" அடியொற்றி எழுதியுள்ளார். B.R புருஷோத்தம நாயுடு என்பாரும் ஒரு சிறந்த எளிய தமிழுரையை ஈட்டை அடியொற்றி இயற்றியிருக்கிறார்.
 
அடியேன் மேலே எழுதவுள்ள விளக்கங்களுக்காக, பெரும்பாலும் எடுத்துக் கொண்டது "திவ்யார்த்த தீபிகை" மற்றும் புருஷோத்தம நாயுடு அவர்களின் உரைகளையே. இதற்கு பேருதவி புரிந்த அடியேனுடைய ஆச்சார்யரான மல்லியம் ரங்காச்சார்யாருக்கு அடியேன் என்றும் கடமைப் பட்டிருக்கிறேன். இவர் சென்னைப் பல்கலைக்கழகத்தில்,  Mathematics துறையின் தலைவராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். எம்பெருமானாரின் சீடரான எம்பாரின் வம்சத்தில் வந்தவர். "இன்று என்னைப் பொருளாக்கி தன்னை என்னுள்ளே வைத்தவர்".
 
இதைத் தவிர சென்னைப்பல்கலைக் கழகத்தில், வைணவத்துறையின் பேராசிரியராகவும் தலைவராகவும் உள்ள M.A வேங்கடக்ருஷ்ணன் அவர்கள் எழுதிய "வைணவ ஆச்சாரியர்களின் வாழ்வும் வாக்கும்" என்ற நூல்களிலிருந்தும் சில மேற்கோள்களையும் அடியேன் எடுத்துக்கொண்டிருக்கிறேன்.
 
நிறைகள் அடியேனுடைய ஆச்சார்யரையே சேரும். குற்றங்கள் இருப்பின் அவை என் புரிதலில் உள்ள குறையால் மட்டுமே.
 
தொடரும்.......
 
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
வேங்கடேஷ்


Add more friends to your messenger and enjoy! Invite them now.

Narayanan Kannan

unread,
Feb 21, 2009, 7:14:51 AM2/21/09
to minT...@googlegroups.com
2009/2/21 Thirumalai Vinjamoor Venkatesh <vinjamoor...@yahoo.com>:

> ஆழ்வார், எம்பெருமானார், ஜீயர் திருவடிகளேசரணம்.
>
> ஆழ்வார்கள் பன்னிருவரில் தலைவராக விளங்கும் நம்மாழ்வார் அருளிச்செய்த
> ப்ரபந்தம் திருவாய்மொழி. அவர் மேலும் 3 ப்ரபந்தங்கள் அருளிச்செய்துள்ளார்.
> அவை, திருவிருத்தம், பெரிய திருவந்தாதி மற்றும் திருவாசிரியம் என்பன.
>
> வைணவ மரபில் கோயில் என்றால் அது திருவரங்கம் தான். அதுபோல
> ஆழ்வார் என்றால் நம்மாழ்வார் தான். இது அவருடைய சிறப்பு.

முழுதுணர்ந்த தெய்வ முனிக்கணங்கள் போற்றும்
வழுதி வளநாடன் மாறன் - பழுதிலா
எண்ணார் மறைப் பொருளை எல்லாரும் தாமறியப்
பண்ணார் தமிழாற் பரிந்தெடுத்துக்-கண்ணீர்
திரைக் கொண்டு நெஞ்சுடைப்பத் தித்திக்கும் வார்த்தை
உரைக்கும் திருநாவுடையான்

என்று தத்துவராய சுவாமிகள் போற்றிய அவ்வார்த்தைகள் மெய்படும்படி தாங்கள்
இன்று திருவாய்மொழி உபன்யாசம் மின்தமிழில் ஆரம்பித்திருப்பது கண்ணனின்
இன்னருள் திண்ணமாய் இங்குண்டு என்பதைச் சுட்டுகிறது. இன்று ஈதோரு
பொன்னாள்.

செய்யதமிழ் மாலைகள்நாம் தெளிய ஓதித்
தெளியாத மறைநிலங்கள் தெளிகின்றோமே!

(தேசிகப்பிரபந்தம், அதிகாரசங்கிரஹம்-1)

வாழ்த்துக்கள்.

உட்கார்ந்து கேட்பவர்கள் எல்லாம், ஒரு உள்ளேன் ஐயா! போடுங்கோ!!

கண்ணன்

devoo

unread,
Feb 21, 2009, 7:22:24 AM2/21/09
to மின்தமிழ்

"ஆரா அமுதக் கவி ஆயிரம்"

எம் விருப்பத்தை நிறைவேற்ற முன்வந்ததற்கு மிக்க நன்றி
வேங்கடேஷ்.தேனோ, பாலோ, கன்னலோ என்று அமைந்து
மின் தமிழுக்குச் சுவைகூட்ட இருக்கும் இத்தொடரில் கட்டாயம்
குறைகளுக்கு இடமிருக்காது.
ச்ரிய:பதி க்ருபை செய்தான்.

தேவ்

Thirumalai Vinjamoor Venkatesh

unread,
Feb 21, 2009, 7:43:23 AM2/21/09
to minT...@googlegroups.com
தேவ் சார்,
<எம் விருப்பத்தை நிறைவேற்ற முன்வந்ததற்கு மிக்க நன்றி
வேங்கடேஷ்
>
 
நன்றி என்பது பெரிய வார்த்தை. ரஜினி ஸ்டைல்ல சொல்லணும்னா,  "ஆண்டவன் சொல்றான், அடியேன் செய்கிறேன்".
 
அடியேன்
வேங்கடேஷ்

Kumaran Malli

unread,
Feb 21, 2009, 7:51:19 AM2/21/09
to minT...@googlegroups.com
அடியேன் உள்ளேன் ஐயா.
 

annamalai sugumaran

unread,
Feb 21, 2009, 7:54:02 AM2/21/09
to minT...@googlegroups.com
திருவாய்மொழியை ஈரப் பாசுரம் எனக் கூறுவார்கள் எனக் கேள்விபபட்டிருக்கிறேன் , கண்ணீர் மல்க வைக்கும் இதன் சுவை .
சுவைக்க இறைவன் வேங்கடேஷ் மூலம் வாய்ப்பு அளித்துள்ளார் .
வாழ்க ! 
அன்புடன் ,
ஏ சுகுமாரன்
//ஆச்சார்யரான மல்லியம் ரங்காச்சார்யாருக்கு அடியேன் என்றும் கடமைப் பட்டிருக்கிறேன். இவர் சென்னைப் பல்கலைக்கழகத்தில்,  Mathematics துறையின் தலைவராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்//
ஆச்சார்யரின்  சகோதரர் திரு சாரியார் ,புதுவையில் இருக்கிறாரா ?
  அரசு முதன்மை செயலாளராக இருந்தவர் .
அவரை நான் அறிவேன் .

2009/2/21 Thirumalai Vinjamoor Venkatesh <vinjamoor...@yahoo.com>
தேவ் சார்,

Thirumalai Vinjamoor Venkatesh

unread,
Feb 21, 2009, 7:58:07 AM2/21/09
to minT...@googlegroups.com
சுகுமாரன் சார்,
 
<ஆச்சார்யரின்  சகோதரர் திரு சாரியார் ,புதுவையில் இருக்கிறாரா ?
  அரசு முதன்மை செயலாளராக இருந்தவர் .
அவரை நான் அறிவேன்>
 
அவருக்கு சகோதரர் யாரும் புதுவையில் இல்லை.

வேங்கடேஷ்

Tthamizth Tthenee

unread,
Feb 21, 2009, 9:38:46 AM2/21/09
to minT...@googlegroups.com
ஆழ்வார், எம்பெருமானார், ஜீயர் திருவடிகளேசரணம்
 
 
ஆழ்வார்திருநகரென்னும் திருக்குருகூரில்வைகாசி விசாக திரு நக்‌ஷத்திரத்திலே அவதரித்த நம்மாழ்வார்
 
 
1.திருவிருத்தம் --100 பாடல்கள்
2.திருவாசிரியம் --7 பாசுரங்கள்
3.பெரிய  திருவந்தாதி --87 பாசுரங்கள்
4.திருவாய்மொழி--  1,102 பாசுரங்கள்
மொத்தம் 1296 பாசுரங்கள் இயற்றி இருக்கிறார்
 
அடியேன்
 

 
2009/2/21 Thirumalai Vinjamoor Venkatesh <vinjamoor...@yahoo.com>
சுகுமாரன் சார்,

Narayanan Kannan

unread,
Feb 21, 2009, 9:23:25 PM2/21/09
to minT...@googlegroups.com
நம்மாழ்வாரை இவ்வளவு கொண்டாடக் காரணமென்ன?

ஒவ்வொரு துறை சார்ந்தோர் ஒவ்வொரு கருத்துச் சொல்வர். அரங்கனார் ஒரு பெரிய
கட்டுரை எழுத்திக்கொண்டிருக்கிறார்.

நம்மாழ்வார் ஓரு தொன்மையான மரபை நமக்கு மீட்டுத்தந்திருக்கிறார்.
ஒரு புதிய பாதையை காட்டி அருளியிருக்கிறார்.
நம் எல்லோருக்கும் எக்காலத்திலும் உற்ற தோழனாய்/தோழியாய் இருக்கும்
வண்ணம் பாமாலையில் உறைந்து காட்டியிருக்கிறார்.
நம்மாழ்வாருக்கு 'வெறும்' நாமத்தைச் சார்த்திவிட்டு ஒதுக்கிவிடாமல் அவரது
பனுவல்களை தமிழராகிய நாம் ரசித்து, உய்த்துணரப் பழக வேண்டும். அதற்கு
இத்தொடர் உதவும்.

மனையும் பெருஞ்செல் வமுமக்க ளுமற்றை வாழ்வுந் தன்னை
நினையும் பதமென நின்றபி ரான்குரு கூர்நிமலன்
புனையுந் தமிழ்க்கவி யால் இருள் நீங்கிப் பொருள்விளங்கி
வினையுந் திரிவுற் றனகுற்ற நீங்கின வேதங்களே!

குடும்பம், சொத்து, பந்தம் இவையே வாழ்வென இருக்கும் நமக்கு, குற்றமற்ற
நம்மாழ்வார் பாதங்கள் கிடைக்கப்பெற்ற பின், அவரது இன்சுவை தமிழ் கவியால்
நம் வினைகள் யாவும் விலகி, வாழ்வின் பொருள் விளங்கி, இதுவறை செய்திருந்த
குற்றங்கள் எல்லாம் நீக்கப்பெற்று வளம் பெற்றன வேதம் புதிதெனும் அவன்
வாக்கால்.

இந்தக் கடைசி வரியை எப்படிப் பொருள் கொள்ளலாமென யோசித்தேன்? நம்
குற்றங்களை அவன் வேதங்கள் நீக்கினவா? இல்லை, அவன் இன்கவியால் வேதங்கள்
தம்மிடமிருந்த குற்றங்களை நீக்கினவா? நினைக்கக்கூட பயமாக இருந்தது!
வேதத்தில் குற்றமா? இருக்காதுதான். ஆயினும், இந்த அரங்கத்து 'தாமரைப்
புரட்சியை' கண்ணுறும் போது அப்படியொரு பொருள் பூடகமாக உள்ளுரைவதுபோல்
தோன்றுகிறது.

திருவள்ளுவத்தைப் புகழ்ந்து எழுந்த திருவள்ளுவ மாலையில் ஒரு பா. வெள்ளி
வீதியார் என்பவர் எழுதியிருக்கிறார். அது அப்படியே திருவாய்மொழிக்குப்
பொருந்துவதுதான் ஆச்சர்யம்!

'செய்யா மொழிக்குந் திருவள் ளுவர்மொழிந்த
பொய்யா மொழிக்கும் பொருளொன்றே--செய்யா
அதற்குரிய ரந்தணரே யாராயி னேனை
யிதற்குரிய ரல்லாதா ரில்.'

அதாவது, செய்யா மொழி (எழுதாக்கிளவி) என்று சொல்லப்படும் வேதத்தின்
பொருளும், திருவள்ளுவர் செய்த பொய்யா மொழியும் பொருளால் ஒன்றே. ஆயின்,
செய்யாமொழி (வேதம்) அந்தணர்க்கு என்றாகிப்போனது. இக்குறை தீர்க்க
வள்ளுவனின் புதிய வேதம் எல்லோர்க்கும் என்றாகிப்போனது.

மிக அழகான பாடல். நம் மண்ணில் 50களில் உருவான கலாச்சார புரட்சியால்
வள்ளுவனை சுத்தப்படுத்த முயன்றாலும், தமிழ் மரபு திருக்குறளை வேதம் என்றே
சொல்கிறது. At least, அவர் காலத்தவர்கள் அப்படித்தான் கண்டனர் என்று
தெரிகிறது. 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்று வள்ளுவன் வேதத்தைப்
பொதுமைப்படுத்தியிருப்பது தெரிகிறது. ஆனால், மிகச்சாமர்த்தியமாக, வேதம்
என்று சொல்லிவிட்டால் பிற மதத்தினர், பிற சாதியினர் (குறிப்பாக
அந்தணர்கள்) மிரண்டு விடுவர் என்றெண்ணி வள்ளுவன் அதை எப்பெயரிட்டும்
அழைக்காமல், மற்றோரும் எப்பெயரிட்டும் அழைக்கமுடியாமல் ஒரு பெரும்
காரியம் செய்துவிட்டான். ஏனப்படி செய்தான்? என்று யோசித்தால், அப்படிச்
செய்தால்தான் வேதக்கருத்துக்கள் மக்களை எவ்வித filters ம் இல்லாமல்
சென்றடையும் என்பது அவனுக்குத் தெரிந்திருக்கிறது. கருத்து போவது
முக்கியமா? இல்லை அதை எடுத்துச்செல்லும் பாத்திரம் முக்கியமா? என்ற
கேள்வி வந்தால், கருத்திற்கே முதலிடம் கொடுத்தனர் சான்றோர். எல்லோரும்
திருக்குறளைச் சொல்லுகின்றனர். ஆத்திகமோ, நாத்திகமோ. எப்படியோ
வேதக்கருத்துக்கள் மக்களிடம் சென்றால் சரி, என்று சொல்லவருகிறார்
வெள்ளிவீதியார் எனும் சங்கப்புலவர்.

அதே போல், பல நூற்றாண்டுகளுக்குப்பின் மீண்டும் வேதம் புதிது செய்ய
வேண்டிய காலம் நம்மாழ்வார் காலம். இவரும் வள்ளுவர் போல், வேதத்தின்
சாரத்தை அப்படியே தமிழ்ப்பாவில் வடிக்கிறார். வடித்து அதை அந்தணர்க்கு
மட்டுமின்றி எல்லோருக்கும் விநியோகம் செய்கிறார். இவரின் உளக்கிடக்கை
(ஆசார்ய ஹ்ருதயம்) அறிந்த வைணவப் பெரியோர்கள் இதையே கோயில் மொழியாக்கி,
எல்லோரும் அறிவும் வண்ணம் செய்துவிட்டுப் போயினர். ஆயினும் காலப்போக்கில்
இதுவும் அந்தணர்மாட்டே நின்று போனது.

எனவே மீண்டும், அதை எடுத்து எல்லோருக்கும் விநியோகம் செய்ய மின்தமிழ் முயல்கிறது!

சரி, வேதத்தில் குறை என்ன? கேள்வியை தி.க, தி.மு.காவிடம் கொடுத்தால்
பேசுவர், பேசுவர் அவ்வளவு பேசுவர். அவ்வளவு குறைகளை எடுத்துச் சொல்வர்.
சரி, இதை நமது ஆச்சார்ய சீலர்கள் உணரவில்லையா? என்றால். ஆம்! அவர்களும்
உணர்ந்துள்ளனர். நான் முன்பு எழுதியது போல், வேதம் என்பது காலம்கடந்து
நிற்கிறது. மனித பரிணாமத்தில், தோற்றமுற்ற காலங்களில்
அக்காலக்கட்டத்திற்கு தேவையான விதிமுறைகளைச் சொல்லிச் சென்றது. ஆயின்,
காலம் மாற, மாற பழைய கணக்குகள் பொருந்துவதில்லை. எனவே அவற்றைக்களைய
வேண்டியது அவசியமே. இதை அறிந்துதான் பட்டபிரான், வல்லப பாண்டியனுக்கு
பரஞானம் காட்டிய போது எல்லா வேதங்களையும் எடுத்துரைக்கவில்லை. கழிப்பதைக்
கழித்து, ஏற்பதை ஏற்று, "வேண்டிய ஓதங்கள் ஓதி, விரைவில் கிழி அறுத்தான்"
என்று சொல்கிறது சரித்திரம். எனவே, எப்படி திருக்குறள் குற்றமற்று
நிற்கிறதோ, அதே போல், திருவாய்மொழியும் குற்றமற்று நிற்கிறது.

அப்படியெனில் "குற்றம் நீங்கின வேதங்களே" என்று சொல்லலாம் அல்லவா!

இதுவொரு பின்னவீனத்துவ பார்வை. ஏற்போருக்கு ஏற்பு, மற்றோருக்கு துவர்ப்பு
என்று இருக்க வாய்ப்புள்ளது ;-)

க.>

Kumaran Malli

unread,
Feb 21, 2009, 9:49:23 PM2/21/09
to minT...@googlegroups.com
"குற்றம் நீங்கின வேதங்களே" = "தெளியாத மறை நிலங்கள் தெளிகின்றோமே" :-)
 
நல்லதொரு கட்டுரை ஐயா. உங்களின் 'பாசுர மடல்'களுடன் சேர்க்க வேண்டியக் கட்டுரை.

Narayanan Kannan

unread,
Feb 21, 2009, 10:07:00 PM2/21/09
to minT...@googlegroups.com
2009/2/22 Kumaran Malli <kumara...@gmail.com>:

> "குற்றம் நீங்கின வேதங்களே" = "தெளியாத மறை நிலங்கள் தெளிகின்றோமே" :-)
>
> நல்லதொரு கட்டுரை ஐயா. உங்களின் 'பாசுர மடல்'களுடன் சேர்க்க வேண்டியக் கட்டுரை.
>


நன்றி குமரன்.

ஆச்சார்ய சீலரான தேசிகன் நம்ம பக்கம் என்று சுட்டிக்காட்டியதற்கு நன்றி ;-)

க.>

devoo

unread,
Feb 21, 2009, 11:41:42 PM2/21/09
to மின்தமிழ்
"தெளியாத மறை நிலங்கள் தெளிகின்றோமே"

ஆசார்ய ஸார்வபௌமர் ஸ்வாமி தேசிகன்

-------------------------------------------------------------------------

சந்தமிகு தமிழ் மறையவரான தூப்புற்பிள்ளை
தமிழின் பக்கம்தான்.
அவர் வாழ்ந்த இடம் மதவாதியர் பலர் நிறைந்த காஞ்சீபுரம்;
வடமொழி வெகுவாக வழக்கில் இருந்த நேரம்;
தமிழ்ப்பனுவல்களுக்கு மறைக்கு நிகராக மதிப்பளித்ததற்கு
எதிர்ப்பு நிறைய இருந்தது. ஸ்வாமி வாதத்திறமையால்
த்ராவிட வேதச் சான்றாண்மையை வடமொழி வாயிலாக நிலைநாட்டினார்.
அவர் அருளிய நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களிலும்
ரஹஸ்ய த்ரயங்களும் நிலை நிறுத்தப்பட்டன.
வேறு வகையான காவியங்கள் செய்திருந்தால் வடமொழி
வாணர்களிடையே நிறைந்த புகழ் பெற்றிருக்கலாம்;
ஆனால் அவர் அவ்வாறு செய்யவில்லை.

‘யதிப்ரவர பாரதீ ரஸபரேண நீதம் வய:’என்று தம் இளமை
கழிந்த விதத்தை அவர் தெரிவிப்பது மனத்தை நெகிழ்விக்கிறது.
(இந்த இழைக்கு நேரடியாகத் தொடர்பில்லாத போதிலும்)
திருவரங்கத்தில் நின்றுபோன திருவாய் மொழி உத்ஸவத்தை
மீண்டும் நடைபெறச் செய்தது; ச்ருதப்ரகாசிகையை ரக்ஷித்தது;
நிகம பரிமளம் அருளியது போன்ற அவர் செய்த
நிகரற்ற தொண்டுகளை நினைவு கூர்தல் அவசியம்.
ரஹஸ்யத்ரய ஸாரத்தில் அவர் எடுத்தாண்ட நாலாயிரப்பகுதிகள்
எண்ணற்றவை.

தேவ்

Narayanan Kannan

unread,
Feb 22, 2009, 1:36:48 AM2/22/09
to minT...@googlegroups.com
அன்பின் தேவ்:

பரனூர் பெரியவர் சொல்லித்தான் எனக்கு தேசிகர் பற்றி தெரியும்.

சங்கரர் வாழ்வில் நிகழ்ந்தது போலவே தேசிகர் வாழ்விலும் ஒரு 'கனகதாரா'
வைபம் நடந்திருக்கிறது. ஒரு ஏழைக்கு இறங்கி பெருந்தேவியிடம் முறையிட்டு
பொன்மழை பெய்ய வைத்திருக்கிறார். இது அவ்வளவாக போற்றி அறியப்படுவதில்லை.

தியாகைய்யர் வாழ்வில் 'நிதிசால சுகமா? இராமா! நின் சந்நிதி சாலசுகமா?'
என்ற கீர்த்தனைக்கு பின்புலமாக நடந்தது போலவே தேசிகர் வாழ்விலும்
நடந்திருக்கிறது. தேடிவந்த பல்லக்கையும், சுகத்தையும் நிராகரிக்கும்
கொள்கைப் பிடிப்பு அப்பெரியவர்களுக்கு இருந்திருக்கிறது.

இவையெல்லாம் நம் பாடத்திட்டதில் வருவதில்லை. குப்பை, சொப்பையான ஔரங்கசீப்
வரலாறு பற்றி படித்திருக்கிறோம். கொலை வெறி பிடித்த மூர்க்கன் அவன்!

எப்படிப் பிள்ளைகளுக்கு உயர் விழுமியங்கள் பின் மனதில் பதியும்?

அவ்வப்போது நம் பெரியவர்கள் வாழ்வு பற்றிச் சொல்லுங்கள்.இப்பவாவது
தெரிந்து கொள்வோம்.

க.>

2009/2/22 devoo <rde...@gmail.com>:


> "தெளியாத மறை நிலங்கள் தெளிகின்றோமே"

devoo

unread,
Feb 22, 2009, 3:45:41 AM2/22/09
to மின்தமிழ்
Feb 22, 7:23 am, Narayanan Kannan

<குருகூர் நிமலன்
புனையுந் தமிழ்க்கவியால் இருள் நீங்கிப் பொருள்விளங்கி

வினையுந் திரிவுற்றன குற்ற நீங்கின வேதங்களே!>

நாரணனே காரணன் என்பதை மிகவும் மறைத்துச் சொன்ன
ஒரே ஒரு குறைபாடுதான் தெரிகிறது; வேறு காரணங்கள் இருப்பின்
தெரிவிக்கலாம்.


<வேண்டிய ஓதங்கள் ஓதி, விரைவில் கிழி அறுத்தான்>

பகவத் பரத்வத்தைத் தெரிவிக்கும் வேதப்பகுதிகளே இங்கு வேண்டிய வேதங்கள்
எனப்பட்டன.
'குருமுகமநதீத்ய ப்ராஹ வேதாந் அசேஷாந்....’
என்னும் ப்ரமாண வசநம் விஷ்ணு சித்தர் குருமுகமாகப் பயின்றிராத –
மேலுலகங்களில் நடையாடிய வேதப் பகுதிகளையும் பாண்டியனின் அவையில் ஓதினார்
என்பதைத் தெரிவிக்கிறது.


தேவ்

Narayanan Kannan

unread,
Feb 22, 2009, 3:57:29 AM2/22/09
to minT...@googlegroups.com
நன்றி தேவ்:

இது கொஞ்சம் நெருடல்தான். குறை என்பது உண்மையான குறை அல்ல. வேதத்தின்
எல்லாப்பகுதியும், எல்லோர்க்கும் பொருந்துமென்றில்லை. அந்தந்த அதிகாரி
யோக்யதை இருக்கிறது. அது பல சமயம் எடுத்துச் சொல்லப்பட்டு
விவாதிக்கப்படும். அவ்வளவே. அந்த நோக்கில் பட்டர்பிரான் 'வேண்டிய வேதம்
ஓதியதாக' அண்ணா சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன். மேலும்
வெள்ளைக்காரர்கள் எடுத்தாளும் ஆரம்ப கால வேதவசனங்கள் பெரும்பாலும்
தத்துவமின்றி சடங்குகள் மட்டுமே இருக்கும். திராவிட வேதத்தில் சடங்குகளே
இல்லை என்று சொல்லும் அளவு தத்துவமும், பாவமும் மண்டிக்கிடக்கும். இதை
மனதில் கொண்டு எழுந்தது. நாரணனைப் பரமென உரத்து ஓதாதது..ம்ம்(பயமாக
இருக்கிறது) குறைதான்!!

2009/2/22 devoo <rde...@gmail.com>:

devoo

unread,
Feb 22, 2009, 6:16:30 AM2/22/09
to மின்தமிழ்
Feb 22, 1:57 pm, Narayanan Kannan

<திராவிட வேதத்தில் சடங்குகளே இல்லை என்று

சொல்லும் அளவு தத்துவமும்,பாவமும் மண்டிக்கிடக்கும். இதை


மனதில் கொண்டு எழுந்தது. நாரணனைப் பரமென உரத்து ஓதாதது
..ம்ம்(பயமாக இருக்கிறது) குறைதான்!!>

’நாராயணனே பரன் ;நாம் அவனுக்கு நிலையடியோம்’
என்று உரத்து ஓதிய இடங்கள் நிறையவே உள்ளன.
“திவ்யோ தேவ ஏகோ நாராயண:”- இதைக் காட்டிலும்
வேறு என்ன தெளிவு வேண்டும் !
நீங்கள் எடுத்தாண்ட தமிழ் ப்ரமாணம் நஹி நிந்தா ந்யாயத்தில்
அமைந்த ஒன்று.அவ்வப்போது கருத்துக்களை நிர்வஹித்துச்
செல்வது வேதாந்த மரபு.
புத்தூர் ஸ்வாமியின் ‘விஷ்ணுசித்த விஜயம்’ வேதமொழிகளை
மட்டுமே கொண்டு பரத்வ ஸ்தாபனம் செய்யும் நூலாகும்.
அதில் வேண்டிய அளவு ப்ரமாணங்கள் உள்ளன.

தேவ்

Narayanan Kannan

unread,
Feb 22, 2009, 7:45:47 AM2/22/09
to minT...@googlegroups.com
> "திவ்யோ தேவ ஏகோ நாராயண:"- இதைக் காட்டிலும்
> வேறு என்ன தெளிவு வேண்டும் !

எல்லாம் நீங்கள் சொல்லி இன்னொருமுறை கேட்டு அனுபவிக்கத்தான் ;-)

> நீங்கள் எடுத்தாண்ட தமிழ் ப்ரமாணம் நஹி நிந்தா ந்யாயத்தில்
> அமைந்த ஒன்று.அவ்வப்போது கருத்துக்களை நிர்வஹித்துச்
> செல்வது வேதாந்த மரபு.

அப்படித்தான் இதுவும் என்று கொண்டு, ரசித்தருள்க ;-)

> புத்தூர் ஸ்வாமியின் 'விஷ்ணுசித்த விஜயம்' வேதமொழிகளை
> மட்டுமே கொண்டு பரத்வ ஸ்தாபனம் செய்யும் நூலாகும்.
> அதில் வேண்டிய அளவு ப்ரமாணங்கள் உள்ளன.
>

இன்னருள் முழுவதும் பெற்ற மகாபண்டிதர்களன்று இது பற்றி பேசி ஒப்பு நோக்க
வல்லார். அப்படித்தானே இதுவரை நடந்து வந்துள்ளது.

குழந்தையிடம் அப்பா செல்லமா? அம்மா செல்லமா? என்றால் பாதிக்கு மேலே அம்மா
செல்லம்தான். அவள் முதல்தாய் சடகோபன். நாமெல்லாம் அவள்பிள்ளைகள்.
பெருந்தேவிதானே நம்மாழ்வார். அவள் செல்லமாக இருப்பதே சம்சாரிகளுக்கு
பலம், நம்பிக்கை.

க.>

karth...@gmail.com

unread,
Feb 22, 2009, 9:11:05 AM2/22/09
to மின்தமிழ்

On Feb 22, 10:23 am, Narayanan Kannan <nkan...@gmail.com> wrote:
"நான் முன்பு எழுதியது போல், வேதம் என்பது காலம்கடந்து
நிற்கிறது. மனித பரிணாமத்தில், தோற்றமுற்ற காலங்களில்
அக்காலக்கட்டத்திற்கு தேவையான விதிமுறைகளைச் சொல்லிச் சென்றது. ஆயின்,
காலம் மாற, மாற பழைய கணக்குகள் பொருந்துவதில்லை. எனவே அவற்றைக்களைய
வேண்டியது அவசியமே. இதை அறிந்துதான் பட்டபிரான், வல்லப பாண்டியனுக்கு
பரஞானம் காட்டிய போது எல்லா வேதங்களையும் எடுத்துரைக்கவில்லை.
கழிப்பதைக்
கழித்து, ஏற்பதை ஏற்று, "வேண்டிய ஓதங்கள் ஓதி, விரைவில் கிழி அறுத்தான்"
என்று சொல்கிறது சரித்திரம். எனவே, எப்படி திருக்குறள் குற்றமற்று
நிற்கிறதோ, அதே போல், திருவாய்மொழியும் குற்றமற்று நிற்கிறது."

கண்ணன்,

சிக்கெனப் பிடித்தீர்கள்.
எல்லா வேதங்களுக்கும் இது பொருந்தும் என எடுத்துக் கொள்ளுகிறேன்.
பைபிள், குரான்காரர்கள் இதனை ஏற்க மாட்டார்கள். ஆனால் ஒரு
வெளிச்சத்திலிருந்து
பார்த்தால் அவற்றுக்கும் பொருந்தும். கீதைக்கும் பொருந்தும்.
திருக்குறளுக்கும் பொருந்தும்.
ஆகவே "மிகைநாடி மிக்க கொளல்." ; "அப்பொருள் மெய்ப்பொருள் காணல்";
"தமசோமா ஜ்யோதிர் கமய" எல்லாம் பொருந்தி வருகிறது.

ரெ.கா.


>

Narayanan Kannan

unread,
Feb 22, 2009, 5:39:09 PM2/22/09
to minT...@googlegroups.com
> ஆகவே "மிகைநாடி மிக்க கொளல்." ; "அப்பொருள் மெய்ப்பொருள் காணல்";
> "தமசோமா ஜ்யோதிர் கமய" எல்லாம் பொருந்தி வருகிறது.
>
அன்பின் ரெ.கா.


இன்னொரு வசதியும் செய்து வைத்திருக்கிறார்கள். அதுதான் நவில்தொறும்
நூல்நயம் எனும் hermaneutic approach. இறைவனை ஒரு பொருளாகச் சொல்லாமல்,
ஓர் அட்சரமாக, நாதமாக, இயக்கமாக, ஞானமாக பார்க்கும் போது அணுகுபவனுக்கு
அளவுகடந்த சுதந்திரம் கிடைக்கிறது. திருவாய்மொழிக்குள் புதைந்து
கிடைக்கும் அறிவைக் காலம், காலமாக அள்ளமுடிகிறது. இது குறளுக்கும்
பொருந்தும். இல்லையெனில் 21ம் நூற்றாண்டிலும் குறளுக்கு புது அர்த்தம்
எப்படி கற்பிக்க முடிகிறது? இல்லையெனில் துணிந்து என்னால் பாசுரமடல்கள்
எப்படி எழுதமுடிகிறது. ஒரு நல்ல இலக்கியம் என்பது ஒரு தாய் போல. நாம்
அணுகத்தயங்க வேண்டியதில்லை!

க.>

Reply all
Reply to author
Forward
0 new messages