இலக்குவனாரின் படைப்பு மணிகள் 19. இலக்கியம் என்பது தூய தமிழ்ச் சொல்

28 views
Skip to first unread message

திருவள்ளுவன் இலக்குவனார்

unread,
Jul 21, 2011, 8:29:52 PM7/21/11
to thiru thoazhamai

இலக்குவனாரின் படைப்பு மணிகள்

 19. இலக்கியம் என்பது தூய தமிழ்ச் சொல்


http://www.natpu.in/?p=11660   பதிவு செய்த நாள் : July 21, 2011



இலக்கியம் என்பது தூய தமிழ்ச் சொல்.  அதன் பொருள் ’ குறிக்கோளை இயம்புதல் என்பதாகும்.  வாழ்வின் குறிக்கோளை – இலக்கியத்தின் குறிக்கோளை இயம்புதலே பொருட் படலத்தின் நோக்கமாகும்.

(தொல்காப்பிய ஆராய்ச்சி: பக்கம்: 125)

 அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

/ தமிழே விழி! தமிழா விழி! /

எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!



--
பின்வரும் பதிவுகளைக் காண்க:

www.ilakkuvanar.org
thiru2050.blogspot.com
thiru-padaippugal.blogspot.com
http://semmozhichutar.com


Jean-Luc Chevillard

unread,
Jul 21, 2011, 10:23:50 PM7/21/11
to tamil...@googlegroups.com, N. Ganesan, C.R. Selvakumar, Deiva Sundaram
With such brainwashing constantly going on,
it is not a surprise that historical linguistics
does not really prosper in Tamil Nadu.

I wonder whether the statement found below
would have made Professor Emeneau smile.
:-)

Maybe smiling is the right attitude
but what a pity!
:-(

And what an incredible waste of mental energy!

-- Jean-Luc Chevillard (Pondicherry)
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tamilmanram...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.

திருவள்ளுவன் இலக்குவனார்

unread,
Jul 22, 2011, 4:24:56 PM7/22/11
to thiru thoazhamai

Envirovivek

unread,
Jul 22, 2011, 9:49:15 PM7/22/11
to தமிழ் மன்றம்
Dear JLC,
Instead of feeling pity, why don't you make your
counter argument or atlest you can paste the relevant link or text
right?

Thank You,

நன்றி
விவேக் பாபு

On Jul 22, 4:23 am, Jean-Luc Chevillard <jeanluc.chevill...@gmail.com>
wrote:


> With such brainwashing constantly going on,
> it is not a surprise that historical linguistics
> does not really prosper in Tamil Nadu.
>
> I wonder whether the statement found below
> would have made Professor Emeneau smile.
> :-)
>
> Maybe smiling is the right attitude
> but what a pity!
> :-(
>
> And what an incredible waste of mental energy!
>
> -- Jean-Luc Chevillard (Pondicherry)
>
> On 22/07/2011 05:59, திருவள்ளுவன் இலக்குவனார் wrote:
>
>
>
>
>
>
>
>
>

> >   இலக்குவனாரின் படைப்பு மணிகள் <http://www.natpu.in/?p=11660>


>
> >    19. இலக்கியம் என்பது தூய தமிழ்ச் சொல் <http://www.natpu.in/?p=11660>
>

> > *
> > *


> >http://www.natpu.in/?p=11660  பதிவு செய்த நாள் : July 21, 2011
>
> > 
>
> > இலக்கியம் என்பது தூய தமிழ்ச் சொல்.  அதன் பொருள் ’ குறிக்கோளை இயம்புதல் என்பதாகும்.  
> > வாழ்வின் குறிக்கோளை – இலக்கியத்தின் குறிக்கோளை இயம்புதலே பொருட் படலத்தின் நோக்கமாகும்.
>
> > (தொல்காப்பிய ஆராய்ச்சி: பக்கம்: 125)
>
> >  அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
>
> > / தமிழே விழி! தமிழா விழி! /
>
> > எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!
>
> > --
> > பின்வரும் பதிவுகளைக் காண்க:
>

> > *www.ilakkuvanar.org<http://www.ilakkuvanar.org>
> > thiru2050.blogspot.com <http://thiru2050.blogspot.com>
> > thiru-padaippugal.blogspot.com <http://thiru-padaippugal.blogspot.com>
> >http://semmozhichutar.com*

Jean-Luc Chevillard

unread,
Jul 22, 2011, 10:33:32 PM7/22/11
to tamil...@googlegroups.com, capparis...@gmail.com, C.R. Selvakumar
Dear விவேக் பாபு,


The pair lakṣya / lakṣaṇa
is a well-known pair in Sanskrit vocabulary
which appears in countless texts.

I take part in debates in other places
but here I thought it was enough to record an observation.

As I understand it,
Mr திருவள்ளுவன் இலக்குவனார்
sends every day some messages to a mailing list
called "thiru-th...@googlegroups.com"
and he sends a BCC of those messages
to other lists
in order to disseminate what he considers as the "good word".

I do not know how many mailing lists receive those messages
but the practice of multiple posting
is not a technique for real intellectual debate;
it should rather be called INTELLECTUAL SPAMMING.

But of course, it belongs to the Tamil-Manram list owner to say
whether he approves of such mailing behaviour

Best wishes

-- Jean-Luc Chevillard (Pondicherry)

On 23/07/2011 07:19, Envirovivek wrote:
> Dear JLC,
> Instead of feeling pity, why don't you make your
> counter argument or atlest you can paste the relevant link or text
> right?
>
> Thank You,
>
> நன்றி
> விவேக் பாபு
>
> On Jul 22, 4:23 am, Jean-Luc Chevillard<jeanluc.chevill...@gmail.com>
> wrote:
>> With such brainwashing constantly going on,
>> it is not a surprise that historical linguistics
>> does not really prosper in Tamil Nadu.
>>
>> I wonder whether the statement found below
>> would have made Professor Emeneau smile.
>> :-)
>>
>> Maybe smiling is the right attitude
>> but what a pity!
>> :-(
>>

>> And- what an incredible waste of mental energy!

DEV RAJ

unread,
Jul 22, 2011, 10:43:40 PM7/22/11
to தமிழ் மன்றம்
>> இலக்கியம் என்பது தூய தமிழ்ச் சொல். அதன் பொருள் ’ குறிக்கோளை இயம்புதல்
என்பதாகும் <<

இலக்கியம் - இலக்கு + இயம்

இலக்கணம் - இலக்கு + அணம்
என்று பிரிக்க வேண்டுமா ?

தமிழாசிரியர்கள் இதுகாறும் இதுபோல்
போதித்ததில்லை; தமிழ்த்துரோகிகள்


தேவ்

On Jul 21, 6:29 pm, திருவள்ளுவன் இலக்குவனார் <thiru2...@gmail.com>
wrote:
>  இலக்குவனாரின் படைப்பு மணிகள் <http://www.natpu.in/?p=11660> 19. இலக்கியம்


> என்பது தூய தமிழ்ச் சொல் <http://www.natpu.in/?p=11660>

> *
> *http://www.natpu.in/?p=11660  பதிவு செய்த நாள் : July 21, 2011


>
> 
>
> இலக்கியம் என்பது தூய தமிழ்ச் சொல்.  அதன் பொருள் ’ குறிக்கோளை இயம்புதல்
> என்பதாகும்.  வாழ்வின் குறிக்கோளை – இலக்கியத்தின் குறிக்கோளை இயம்புதலே பொருட்
> படலத்தின் நோக்கமாகும்.
>
> (தொல்காப்பிய ஆராய்ச்சி: பக்கம்: 125)
>
>  அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
>
> / தமிழே விழி! தமிழா விழி! /
>
> எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!
>
> --
> பின்வரும் பதிவுகளைக் காண்க:
>

> *www.ilakkuvanar.org
> thiru2050.blogspot.com
> thiru-padaippugal.blogspot.comhttp://semmozhichutar.com*

Jean-Luc Chevillard

unread,
Jul 23, 2011, 12:22:13 AM7/23/11
to tamil...@googlegroups.com, capparis...@gmail.com, C.R. Selvakumar
Dear விவேக் பாபு,

as a followup to my previous message,
it occurs to me that if you want to explore
what words like lakṣya (லக்ஷ்ய) and lakṣaṇa (லக்ஷண)
have really been used for,
a good starting point is Abhyankar's
/A Dictionary of Sanskrit Grammar/.

I attach to this message two pages
taken from the dictionary (Plus the title pages)

I leave it to people who know Sanskrit literature
better than me to provide you with additional references.

Best wishes

-- Jean-Luc Chevillard (புதுச்சேரி)


*********************

Dear விவேக் பாபு,


The pair lakṣya / lakṣaṇa
is a well-known pair in Sanskrit vocabulary
which appears in countless texts.

I take part in debates in other places
but here I thought it was enough to record an observation.

As I understand it,
Mr திருவள்ளுவன் இலக்குவனார்
sends every day some messages to a mailing list
called "thiru-th...@googlegroups.com"
and he sends a BCC of those messages
to other lists
in order to disseminate what he considers as the "good word".

I do not know how many mailing lists receive those messages
but the practice of multiple posting
is not a technique for real intellectual debate;
it should rather be called INTELLECTUAL SPAMMING.

But of course, it belongs to the Tamil-Manram list owner to say
whether he approves of such mailing behaviour

Best wishes

-- Jean-Luc Chevillard (Pondicherry)

On 23/07/2011 07:19, Envirovivek wrote:
> Dear JLC,
> Instead of feeling pity, why don't you make your
> counter argument or atlest you can paste the relevant link or text
> right?
>
> Thank You,
>
> நன்றி
> விவேக் பாபு
>
> On Jul 22, 4:23 am, Jean-Luc Chevillard<jeanluc.chevill...@gmail.com>
> wrote:
>> With such brainwashing constantly going on,
>> it is not a surprise that historical linguistics
>> does not really prosper in Tamil Nadu.
>>
>> I wonder whether the statement found below
>> would have made Professor Emeneau smile.
>> :-)
>>
>> Maybe smiling is the right attitude
>> but what a pity!
>> :-(
>>

>> And- what an incredible waste of mental energy!

Pages from Abhyankar Sanskrit Grammar Dictionary.pdf

Sri Sritharan

unread,
Jul 23, 2011, 12:32:21 AM7/23/11
to tamil...@googlegroups.com
இலக்குவனாரின் படைப்பு மணிகளைத் தொடருங்கள். படிக்கிறோம்.
 
அன்புடன்
சிறீதரன்

வேந்தன் அரசு

unread,
Jul 23, 2011, 6:21:31 AM7/23/11
to tamil...@googlegroups.com


22 ஜூலை, 2011 10:33 pm அன்று, Jean-Luc Chevillard <jeanluc.c...@gmail.com> எழுதியது:

Dear விவேக் பாபு,


The pair lakṣya / lakṣaṇa
is  a well-known pair in Sanskrit vocabulary
which appears in countless texts.
 
 
ஆனால்  lakṣya / lakṣaṇa
 என்பனவற்றுக்கு இலக்கியம்/இலக்கணம் என்ற பொருளா?
 lakṣya  என்பதற்கு இலக்கு
/ lakṣaṇa என்பதற்கு அணி என்றுதானே பொருள்?
 
 
சாகித்திய அகாடமி என்ற பெயரில்தான் பரிசுகள் வழங்கபப்டுகின்றன்
 lakṣya  அகாடமி என்ற பெயரில் அல்லவே
 
வியாகரணம் என்றால் இலக்கணம் என கருதுக்றேன்
(சாமுத்த்ரிகா) லட்சணம் என்றால் அழகுதானே?
 
--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

DEV RAJ

unread,
Jul 23, 2011, 7:12:08 AM7/23/11
to தமிழ் மன்றம்
'லக்‌ஷ்’ வேருக்கு என்ன பொருள் , அது எப்படி derive ஆகும் எனப்
புரிந்துகொண்டு
மேலே விவாதிப்பதே முறை.

கான் - ஒரே சொல்லுக்குக் காடு, மலர் (கான் நின்ற தொங்கலாய்) போன்ற
பொருள்கள்
உள.

அந்த அந்த மொழிகளின் அமைப்பை ஒட்டிப் பொருள் கொள்ள வேண்டும்.
அன்பர் சொல்வதுபோல் அமைந்தால் இலக்கியம், இலக்கணம், இலக்குவன்
எல்லாமே பகுபதம் ஆகும்; அது சரிதானா ?

அறிஞர்கள் ஒப்புக்கொண்டால் சரி


தேவ்

On Jul 23, 3:21 pm, வேந்தன் அரசு <raju.rajend...@gmail.com> wrote:
> 22 ஜூலை, 2011 10:33 pm அன்று, Jean-Luc Chevillard <

> jeanluc.chevill...@gmail.com> எழுதியது:

N. Ganesan

unread,
Jul 23, 2011, 7:36:49 AM7/23/11
to தமிழ் மன்றம்

On Jul 22, 9:43 pm, DEV RAJ <rde...@gmail.com> wrote:
> >> இலக்கியம் என்பது தூய தமிழ்ச் சொல்.  அதன் பொருள் ’ குறிக்கோளை இயம்புதல்
>
> என்பதாகும் <<
>
> இலக்கியம் - இலக்கு + இயம்
>
> இலக்கணம் - இலக்கு + அணம்
> என்று பிரிக்க வேண்டுமா ?
>
> தமிழாசிரியர்கள் இதுகாறும் இதுபோல்
> போதித்ததில்லை; தமிழ்த்துரோகிகள்
>
> தேவ்
>

பேரா. சி. இலக்குவனார் இலக்கணம் பற்றித் தவறாக
எழுதிவிட்டார் என்று ழான் விளக்கத்துக்கு நன்றி,

சுவெலபில் லக்ஷ்ய-லக்ஷண தொடர்புகளை
அழகாக எழுதியுள்ளார். அவற்றை சிடமில் லிஸ்ட்டில்
பல ஆண்டுகளுக்கு முன் எழுதிய ஞாபகம்.
தமிழில் முதலில் ச. வையாபுரிபிள்ளை எழுதியுள்ளார்.

இணையம் தமிழ்நாட்டில் வளரும்போது ஆராய்ச்சிகளின்
தரம் உயரும். தமிழ்நாட்டில் கலாச்சார, அரசியல்
வாழ்க்கைகளில் கோலோச்சும் கோட்பாடுகள்
தமிழர் மறு ஆய்வு செய்ய வேண்டிவரும்.

நா. கணேசன்

> On Jul 21, 6:29 pm, திருவள்ளுவன் இலக்குவனார் <thiru2...@gmail.com>
> wrote:
>
>
>
> >  இலக்குவனாரின் படைப்பு மணிகள் <http://www.natpu.in/?p=11660> 19. இலக்கியம்
> > என்பது தூய தமிழ்ச் சொல் <http://www.natpu.in/?p=11660>
> > *
> > *http://www.natpu.in/?p=11660 பதிவு செய்த நாள் : July 21, 2011
>
> > 
>
> > இலக்கியம் என்பது தூய தமிழ்ச் சொல்.  அதன் பொருள் ’ குறிக்கோளை இயம்புதல்
> > என்பதாகும்.  வாழ்வின் குறிக்கோளை – இலக்கியத்தின் குறிக்கோளை இயம்புதலே பொருட்
> > படலத்தின் நோக்கமாகும்.
>
> > (தொல்காப்பிய ஆராய்ச்சி: பக்கம்: 125)
>
> >  அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
>
> > / தமிழே விழி! தமிழா விழி! /
>
> > எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!
>
> > --
> > பின்வரும் பதிவுகளைக் காண்க:
>
> > *www.ilakkuvanar.org
> > thiru2050.blogspot.com

> > thiru-padaippugal.blogspot.comhttp://semmozhichutar.com*- Hide quoted text -
>
> - Show quoted text -

N. Ganesan

unread,
Jul 23, 2011, 7:39:55 AM7/23/11
to தமிழ் மன்றம்

On Jul 22, 9:43 pm, DEV RAJ <rde...@gmail.com> wrote:

> >> இலக்கியம் என்பது தூய தமிழ்ச் சொல்.  அதன் பொருள் ’ குறிக்கோளை இயம்புதல்
>
> என்பதாகும் <<
>
> இலக்கியம் - இலக்கு + இயம்
>
> இலக்கணம் - இலக்கு + அணம்
> என்று பிரிக்க வேண்டுமா ?
>

அணம் என்பது அண்ணம் என்பதன் இடைக்குறையா?

> தமிழாசிரியர்கள் இதுகாறும் இதுபோல்
> போதித்ததில்லை; தமிழ்த்துரோகிகள்
>
> தேவ்
>
> On Jul 21, 6:29 pm, திருவள்ளுவன் இலக்குவனார் <thiru2...@gmail.com>
> wrote:
>
>
>
> >  இலக்குவனாரின் படைப்பு மணிகள் <http://www.natpu.in/?p=11660> 19. இலக்கியம்
> > என்பது தூய தமிழ்ச் சொல் <http://www.natpu.in/?p=11660>
> > *
> > *http://www.natpu.in/?p=11660 பதிவு செய்த நாள் : July 21, 2011
>
> > 
>
> > இலக்கியம் என்பது தூய தமிழ்ச் சொல்.  அதன் பொருள் ’ குறிக்கோளை இயம்புதல்
> > என்பதாகும்.  வாழ்வின் குறிக்கோளை – இலக்கியத்தின் குறிக்கோளை இயம்புதலே பொருட்
> > படலத்தின் நோக்கமாகும்.
>
> > (தொல்காப்பிய ஆராய்ச்சி: பக்கம்: 125)
>
> >  அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
>
> > / தமிழே விழி! தமிழா விழி! /
>
> > எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!
>
> > --
> > பின்வரும் பதிவுகளைக் காண்க:
>
> > *www.ilakkuvanar.org
> > thiru2050.blogspot.com

DEV RAJ

unread,
Jul 23, 2011, 8:58:12 AM7/23/11
to தமிழ் மன்றம்
>>> lakṣaṇa என்பதற்கு அணி என்றுதானே பொருள்? <<<

>> வியாகரணம் என்றால் இலக்கணம் என கருதுக்றேன்


(சாமுத்த்ரிகா) லட்சணம் என்றால் அழகுதானே? <<<


வேந்தர் ஐயா

திரு ழான் அவர்கள் கொடுத்துள்ள ‘அப்யங்கர் வடமொழி இலக்கண அகராதி’
பக்கத்தைத் தரவிறக்கிப் பாருங்கள். (பக் 329, வலப்புறம் 4ம் சொல்)

लक्षणसङ्ग्रह - A work on grammar written by a grammarian named
रत्नेश्.

லக்ஷண ஸங்க்ரஹம் - ரத்நேசர் என்பவரால் செய்யப்பட்ட இலக்கண நூல்.

அணி - அழகு.
உடலின் அழகை நகைகள் ஆகிய அணிகள் அழகு படுத்துகின்றன. செய்யுளின் கருத்தை
அணிகள் அழகுபடுத்துகின்றன. சொல்லாலும் பொருளாலும் அழகுபட எடுத்துரைப்பது
அணி இலக்கண இயல்பாகும். வடமொழியில் அணியை அலங்காரம் என்று கூறுவர்.

http://www.tamilvu.org/courses/degree/d031/d0313/html/d0313013.htm


தேவ்

On Jul 23, 4:21 am, வேந்தன் அரசு <raju.rajend...@gmail.com> wrote:
> 22 ஜூலை, 2011 10:33 pm அன்று, Jean-Luc Chevillard <

> jeanluc.chevill...@gmail.com> எழுதியது:

C.R. Selvakumar

unread,
Jul 23, 2011, 9:14:55 AM7/23/11
to Jean-Luc Chevillard, tamil...@googlegroups.com, capparis...@gmail.com
அன்புள்ள ழான் லூக்,
 
அபயங்கர் அகரமுதலியில் இருந்து நீங்கள் தந்த
பக்கத்துக்கு மிக்க நன்றி.
 
ஆனால் ஏனது சமசுக்கிருதச்சொல் என்றோ, அதற்கு
வலு சேர்க்கும் இந்திய-ஐரோப்பிய பிற மொழிச்சொற்களின்
உண்மையான இணைகளோ, எப்படி மேலண்ண ஒலியாகிய
ணகரம் வந்தது என்றோ ஏதும் நீங்கள் காட்டவில்லை அல்லவா?
 
ஒரு சொல் சமசுக்கிருதத்தில் இருக்கின்றது என்று சொன்னால்
மட்டும் அது சமசுக்கிருதச் சொல் ஆகிவிடாது அல்லவா?
தமிழ் அகராதியில் ஒரு சொல் இருக்கின்றது என்று காட்டினால்
அது தமிழ்ச்சொல் (சொற்பிறப்பியல் வழித் தமிழ்ச்சொல்) என்று
ஏற்பீர்களா?
 
இலக்கணம், இலக்கியம் என்னும் சொற்கள் சமசுக்கிருதச்
சொற்களாக இருக்கலாம், ஆனால் நீங்கள் தந்த சான்றுகள்
போதியன அல்ல. போதிய சான்றுகளுக்கான சரியான சுட்டி
(சொற்பிறப்பியல்) தருவீர்கள் எனில் பயனுடையதாக
இருக்கும்.
 
அடிப்படை எழுத்து வரிசையையே சமசுக்கிருதம்
தமிழில் இருந்து பெற்றது அல்லவா?
சமசுக்கிருதம் கிரேக்கம், இலத்தீன், பாரசீகம்,
இந்திய-ஐரோப்பிய மொழிகளான ஆங்கிலம், பிரான்சியம், இடாய்ச்சு
ஆகிய பற்பல மொழிகளோடு உறவுடைய மொழி அல்லவா?
அம்மொழிகளின் எழுத்து வரிசைகளைப் பாருங்கள்!
எத்தனை எத்தனை அடிப்படைகளை சமசுக்கிருதம்
(மொழி, மொழிக்கூறுகள்) தமிழில்
இருந்து பெற்றன என்பதை மேற்கு நாட்டறிஞர்களோ,
இந்திய, கீழை நாட்டு அறிஞர்களோ சரிவர அறிந்ததாக
கருதமுடியாமல் உள்ளது. தமிழ் அன்றும் இன்றும் வாழும்
மொழி. தமிழ் மொழியும் எத்தனை
எத்தனையோ சொற்களையும், மொழிக்கூறுகளையும்
சமசுக்கிருத மொழி, மற்றும் பற்பல
வடமொழிகள், பிறநாட்டு மொழிகளில் இருந்து பெற்று
வந்துள்ளன. இன்றும் பெற்று வருகின்றன. ஆனால்
ஒரு சொல் சமசுக்கிருதத்திலோ, கிரேக்கத்திலோ இருந்து
விட்டால் மட்டும் அது அம்மொழிச் சொல் ஆகாது!!
 
அன்புடன்
செல்வா
 
 
 
 


 
2011/7/23 Jean-Luc Chevillard <jeanluc.c...@gmail.com>
Dear விவேக் பாபு,

as a followup to my previous message,
it occurs to me that if you want to explore
what words like  lakṣya (லக்ஷ்ய) and lakṣaṇa (லக்ஷண)
have really been used for,
a good starting point is Abhyankar's
/A Dictionary of Sanskrit Grammar/.

I attach to this message two pages
taken from the dictionary (Plus the title pages)

I leave it to people who know Sanskrit literature
better than me to provide you with additional references.

Best wishes

-- Jean-Luc Chevillard (புதுச்சேரி)


*********************


Dear விவேக் பாபு,


The pair lakṣya / lakṣaṇa
is  a well-known pair in Sanskrit vocabulary
which appears in countless texts.

I take part in debates in other places
but here I thought it was enough to record an observation.

As I understand it,
Mr திருவள்ளுவன் இலக்குவனார்
sends every day some messages to a mailing list

For more options, visit this group at
http://groups.google.com/group/tamilmanram?hl=ta.




--
Regards
Selva
___________________
C.R.(Selva) Selvakumar

N. Ganesan

unread,
Jul 23, 2011, 9:23:01 AM7/23/11
to தமிழ் மன்றம்

On Jul 23, 8:14 am, "C.R. Selvakumar" <c.r.selvaku...@gmail.com>
wrote:


> அன்புள்ள ழான் லூக்,
>
> அபயங்கர் அகரமுதலியில் இருந்து நீங்கள் தந்த
> பக்கத்துக்கு மிக்க நன்றி.
>
> ஆனால் ஏனது சமசுக்கிருதச்சொல் என்றோ, அதற்கு
> வலு சேர்க்கும் இந்திய-ஐரோப்பிய பிற மொழிச்சொற்களின்
> உண்மையான இணைகளோ, எப்படி மேலண்ண ஒலியாகிய
> ணகரம் வந்தது என்றோ ஏதும் நீங்கள் காட்டவில்லை அல்லவா?
>
> ஒரு சொல் சமசுக்கிருதத்தில் இருக்கின்றது என்று சொன்னால்
> மட்டும் அது சமசுக்கிருதச் சொல் ஆகிவிடாது அல்லவா?
> தமிழ் அகராதியில் ஒரு சொல் இருக்கின்றது என்று காட்டினால்
> அது தமிழ்ச்சொல் (சொற்பிறப்பியல் வழித் தமிழ்ச்சொல்) என்று
> ஏற்பீர்களா?
>
> இலக்கணம், இலக்கியம் என்னும் சொற்கள் சமசுக்கிருதச்
> சொற்களாக இருக்கலாம், ஆனால் நீங்கள் தந்த சான்றுகள்
> போதியன அல்ல. போதிய சான்றுகளுக்கான சரியான சுட்டி
> (சொற்பிறப்பியல்) தருவீர்கள் எனில் பயனுடையதாக
> இருக்கும்.
>
> அடிப்படை எழுத்து வரிசையையே சமசுக்கிருதம்
> தமிழில் இருந்து பெற்றது அல்லவா?

இது சரியான கருத்தா? தமிழறிஞர்கள் சமசுக்கிருதத்தில்
இருந்து பாணினிக்கு அப்புறம் தமிழ் பெற்ற எழுத்துக்கள்
(வடிவிலும், வரிசையிலும்) என்று எழுதுவதைப் படிக்கிறேன்.
அக்கருத்து தவறா?

நீங்களும், மற்றவர்களும் விளக்கவும்.

நா. கணேசன்


> சமசுக்கிருதம் கிரேக்கம், இலத்தீன், பாரசீகம்,
> இந்திய-ஐரோப்பிய மொழிகளான ஆங்கிலம், பிரான்சியம், இடாய்ச்சு
> ஆகிய பற்பல மொழிகளோடு உறவுடைய மொழி அல்லவா?
> அம்மொழிகளின் எழுத்து வரிசைகளைப் பாருங்கள்!

> எத்தனை எத்தனை *அடிப்படைகளை* சமசுக்கிருதம்
> (மொழி, மொழிக்கூறுகள்) *தமிழில்*
> *இருந்து பெற்றன* என்பதை மேற்கு நாட்டறிஞர்களோ,


> இந்திய, கீழை நாட்டு அறிஞர்களோ சரிவர அறிந்ததாக
> கருதமுடியாமல் உள்ளது. தமிழ் அன்றும் இன்றும் வாழும்
> மொழி. தமிழ் மொழியும் எத்தனை
> எத்தனையோ சொற்களையும், மொழிக்கூறுகளையும்
> சமசுக்கிருத மொழி, மற்றும் பற்பல
> வடமொழிகள், பிறநாட்டு மொழிகளில் இருந்து பெற்று
> வந்துள்ளன. இன்றும் பெற்று வருகின்றன. ஆனால்
> ஒரு சொல் சமசுக்கிருதத்திலோ, கிரேக்கத்திலோ இருந்து
> விட்டால் மட்டும் அது அம்மொழிச் சொல் ஆகாது!!
>
> அன்புடன்
> செல்வா
>

> 2011/7/23 Jean-Luc Chevillard <jeanluc.chevill...@gmail.com>


>
>
>
>
>
> > Dear விவேக் பாபு,
>
> > as a followup to my previous message,
> > it occurs to me that if you want to explore
> > what words like  lakṣya (லக்ஷ்ய) and lakṣaṇa (லக்ஷண)
> > have really been used for,
> > a good starting point is Abhyankar's
> > /A Dictionary of Sanskrit Grammar/.
>
> > I attach to this message two pages
> > taken from the dictionary (Plus the title pages)
>
> > I leave it to people who know Sanskrit literature
> > better than me to provide you with additional references.
>
> > Best wishes
>
> > -- Jean-Luc Chevillard (புதுச்சேரி)
>
> > *********************
>
> > Dear விவேக் பாபு,
>
> > The pair lakṣya / lakṣaṇa
> > is  a well-known pair in Sanskrit vocabulary
> > which appears in countless texts.
>
> > I take part in debates in other places
> > but here I thought it was enough to record an observation.
>
> > As I understand it,
> > Mr திருவள்ளுவன் இலக்குவனார்
> > sends every day some messages to a mailing list

> > called "thiru-thoazhamai@**googlegroups.com<thiru-th...@googlegroups.com>


> > "
> > and he sends a BCC of those messages
> > to other lists
> > in order to disseminate what he considers as the "good word".
>
> > I do not know how many mailing lists receive those messages
> > but the practice of multiple posting
> > is not a technique for real intellectual debate;
> > it should rather be called INTELLECTUAL SPAMMING.
>
> > But of course, it belongs to the Tamil-Manram list owner to say
> > whether he approves of such mailing behaviour
>
> > Best wishes
>
> > -- Jean-Luc Chevillard (Pondicherry)
>
> > On 23/07/2011 07:19, Envirovivek wrote:
>
> >> Dear JLC,
> >>                   Instead of feeling pity, why don't you make your
> >> counter argument or atlest you can paste the relevant link or text
> >> right?
>
> >> Thank You,
>
> >> நன்றி
> >> விவேக் பாபு
>

> >> On Jul 22, 4:23 am, Jean-Luc Chevillard<jeanluc.chevill...@**gmail.com<jeanluc.chevill...@gmail.com>


>
> >> wrote:
>
> >>> With such brainwashing constantly going on,
> >>> it is not a surprise that historical linguistics
> >>> does not really prosper in Tamil Nadu.
>
> >>> I wonder whether the statement found below
> >>> would have made Professor Emeneau smile.
> >>> :-)
>
> >>> Maybe smiling is the right attitude
> >>> but what a pity!
> >>> :-(
>
> >>> And- what an incredible waste of mental energy!
>
> >>> -- Jean-Luc Chevillard (Pondicherry)
>
> >>> On 22/07/2011 05:59, திருவள்ளுவன் இலக்குவனார் wrote:
>

> >>>   இலக்குவனாரின் படைப்பு மணிகள்<http://www.natpu.in/?p=**11660<http://www.natpu.in/?p=11660>
>
> >>>>    19. இலக்கியம் என்பது தூய தமிழ்ச் சொல்<http://www.natpu.in/?p=**11660<http://www.natpu.in/?p=11660>


>
> >>>> *
> >>>> *
> >>>>http://www.natpu.in/?p=11660 பதிவு செய்த நாள் : July 21, 2011
> >>>> 
> >>>> இலக்கியம் என்பது தூய தமிழ்ச் சொல்.  அதன் பொருள் ’ குறிக்கோளை இயம்புதல்
> >>>> என்பதாகும்.
> >>>> வாழ்வின் குறிக்கோளை – இலக்கியத்தின் குறிக்கோளை இயம்புதலே பொருட்
> >>>> படலத்தின் நோக்கமாகும்.
> >>>> (தொல்காப்பிய ஆராய்ச்சி: பக்கம்: 125)
> >>>>  அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
> >>>> / தமிழே விழி! தமிழா விழி! /
> >>>> எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!
> >>>> --
> >>>> பின்வரும் பதிவுகளைக் காண்க:

> >>>> *www.ilakkuvanar.org<http://**www.ilakkuvanar.org<http://www.ilakkuvanar.org/>
>
> >>>> thiru2050.blogspot.com<http://**thiru2050.blogspot.com<http://thiru2050.blogspot.com/>
>
> >>>> thiru-padaippugal.blogspot.com**<http://thiru-padaippugal.**
> >>>> blogspot.com <http://thiru-padaippugal.blogspot.com/>>


> >>>>http://semmozhichutar.com*
> >>>> --
> >>>> You received this message because you are subscribed to the Google
> >>>> Groups "தமிழ் மன்றம்" group.
> >>>> To post to this group, send email to tamil...@googlegroups.com.
> >>>> To unsubscribe from this group, send email to

> >>>> tamilmanram+unsubscribe@**googlegroups.com<tamilmanram%2Bunsubscribe@google­groups.com>


> >>>> .
> >>>> For more options, visit this group at

> >>>>http://groups.google.com/**group/tamilmanram?hl=ta<http://groups.google.com/group/tamilmanram?hl=ta>


> >>>> .
>
> --
> Regards
> Selva
> ___________________

> C.R.(Selva) Selvakumar- Hide quoted text -

C.R. Selvakumar

unread,
Jul 23, 2011, 10:48:15 AM7/23/11
to tamil...@googlegroups.com


2011/7/23 N. Ganesan <naa.g...@gmail.com>
சமசுக்கிருதம் தனி மொழி அல்லவே! அதற்கு பல்வேறு வகையில்
நெருக்கமான உறவுள்ள மொழிகள் பல இருந்தன, இருக்கின்றனவே!
அம்மொழியாளர்களின் எழுத்து வரிசைகளைப் பாருங்கள்!
கிரேக்கம், இலத்தீன் முதலியன மொழிகளின்
எழுத்து வரிசைகள் என்ன?
 
இவற்றின் ஒற்றுமையையும், இன்று செழித்து வளரும்
ஆங்கில, பிரான்சியம், இடாய்ச்சு, எசுப்பானியம், போர்த்துகீசியம்
போன்ற தற்கால இந்திய-ஐரோப்பிய மொழிகளையும்
பாருங்களேன்!
 
அவர்களிடையே உயிர் எழுத்துகள் தனியாகவும்
மெய்யெழுத்துகள் தனியாகவும் வரிசைப் படுத்தி உள்ளார்களா? உயிரரெழுத்துகளிலும் குறில் நெடில் என்று வகைப்படுத்தி
உள்ளார்களா? மெய்யெழுத்துகளை முறைசார்ந்து
தொண்டையில் இருந்து இதழ்கள் வரை சீராக
வருமாறு வகைப்படுத்தி உள்ளார்களா? சாலத்தூரராகிய
பாணினியைப் பற்றிப் பேசுவோர் அவர் ஏன் சிவசூத்திரம்
என்கிறார் என்று கூறுகிறார்களா? 
எப்படி அவற்றை அவர் பெற்றார்?
நாவளை மேலண்ண ஒலிகள் (retroflex) ஒலிகள், 
தமிழ்-திராவிடர்களிடம் இருந்து பெற்றவை அல்லவா?
இலக்கணத்திலும், பற்பல அடிப்படைச்
சொற்களிலும் கிரேக்க, இலத்தீன் முதலானவற்றோடு
அத்தனை நெருக்கம் கொண்ட சமசுக்கிருதம் எப்படி
எழுத்து வரிசையில் மட்டும் தமிழ்
வரிசையை ஒத்த வரிசையைப் பெற்றது?
To unsubscribe from this group, send email to tamilmanram...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.

Jean-Luc Chevillard

unread,
Jul 23, 2011, 11:54:45 AM7/23/11
to tamil...@googlegroups.com, C.R. Selvakumar, capparis...@gmail.com, DEV RAJ
Dear Selva,

when discussing such topics,
another parameter to be considered is the frequency.

As far as I know,

the word இலக்கணம் occurs 4 times inside the தொல்காப்பியம்
and the word இலக்கியம் does not occur in the தொல்காப்பியம்.

I include below lines copied from a concordance
which I prepared several years ago for the தொல்காப்பியம்.

ilakkaṇam (4 occ.)

    TP543i--4. iḻaipiṉ ilakkaṇam iyaintatākum
    TP59i--2. puṟattiṇai ilakkaṇam tiṟappaṭa+ kiḷappiṉ
    TP544i--2. iḻaitta ilakkaṇam piḻaittaṉa pōla
    TC27i--4. ~ilakkaṇam* maruṅkiṉ+ col= āṟu* alla

If you find more occurrences for /ilakkaṇam/
or if you find occurrences of /ilakkiyam/,
I shall be glad to have them.

Of course, later Tamil grammarians DO use the word இலக்கியம்
but it IS rather elusive in the ancient part of the grammatical corpus.

As far as Sanskrit technical litterature,
I am not an expert,
but I believe you can try to make you own opinion
by navigating such hypertexts as the following:

"http://www.intratext.com/IXT/SAN0012/N0.HTM"
<http://www.intratext.com/IXT/SAN0012/N0.HTM>

Best wishes

-- Jean-Luc
2011/7/23 Jean-Luc Chevillard <jeanluc.c...@gmail.com>

For more options, visit this group at
http://groups.google.com/group/tamilmanram?hl=ta.

C.R. Selvakumar

unread,
Jul 23, 2011, 3:16:32 PM7/23/11
to Jean-Luc Chevillard, tamil...@googlegroups.com, capparis...@gmail.com, DEV RAJ
அன்புள்ள ழான்,
 
தொடுப்புகளுக்கு மிக்க நன்றி.
 
ஆம் எத்தனை முறை ஒரு சொல்
ஆளப்பட்டுளது, எத்தனை விதமான சூழல்களில் ஆளப்பட்டுளது
என்பனவும் முக்கியம். ஆனால் அச்சொல்லின் கிளைப்பும்
(both morpholigical and semantic ramification), வேர்ச்சொல் தொடர்பும்,
கிளைமொழிகளில் இருக்கும் தொடர்பும் முக்கியம். ஒரு சொல்
காலத்தால் முன்னே வழங்கப்பட்டது என்பதும் போதிய அளவு
வலு சேர்ப்பது அன்று.
 
இலங்கு என்னும் சொல் இலக்கியம் என்னும்
சொல்லோடு தொடர்புடையது. இலக்கு என்பதும் இங்கே
எண்ண வேண்டிய சொல். உங்கள் கருத்தில் சமசுக்கிருதச்
சொல்லுக்கும் ஈடான கிரேக்க, இலத்தீன சொற்கள் யாவை?
(இதே பொருளில் அல்லது இனமான பொருளில்)

Envirovivek

unread,
Jul 23, 2011, 7:13:44 PM7/23/11
to தமிழ் மன்றம்
அன்புள்ள நண்பர்களுக்கு,
இலக்கு மற்றும்
இயம்புதல் எனும் சொற்கள் நமது சங்க இலக்கியங்களில் அல்லது பிற
இல்லகியங்களில் இருக்க வேண்டுமே?

தமிழ் இலக்கணம் மாற்று இலக்கியம் ஆகிய இரண்டுமே அறியாதவன் நான். உங்கள்
உரையாடலின் பயனாய் எனக்கு தோன்றிய கேள்வியை கேட்கிறேன்.

நன்றி,

அன்புடன்


விவேக் பாபு

On Jul 23, 9:16 pm, "C.R. Selvakumar" <c.r.selvaku...@gmail.com>
wrote:


> அன்புள்ள ழான்,
>
> தொடுப்புகளுக்கு மிக்க நன்றி.
>
> ஆம் எத்தனை முறை ஒரு சொல்
> ஆளப்பட்டுளது, எத்தனை விதமான சூழல்களில் ஆளப்பட்டுளது

> என்பனவும் முக்கியம். ஆனால் அச்சொல்லின் *கிளைப்பும் *


> (both morpholigical and semantic ramification), வேர்ச்சொல் தொடர்பும்,
> கிளைமொழிகளில் இருக்கும் தொடர்பும் முக்கியம். ஒரு சொல்
> காலத்தால் முன்னே வழங்கப்பட்டது என்பதும் போதிய அளவு
> வலு சேர்ப்பது அன்று.
>
> இலங்கு என்னும் சொல் இலக்கியம் என்னும்
> சொல்லோடு தொடர்புடையது. இலக்கு என்பதும் இங்கே
> எண்ண வேண்டிய சொல். உங்கள் கருத்தில் சமசுக்கிருதச்
> சொல்லுக்கும் ஈடான கிரேக்க, இலத்தீன சொற்கள் யாவை?
> (இதே பொருளில் அல்லது இனமான பொருளில்)
>
> அன்புடன்
> செல்வா
>

> 2011/7/23 Jean-Luc Chevillard <jeanluc.chevill...@gmail.com>

> > எத்தனை எத்தனை *அடிப்படைகளை* சமசுக்கிருதம்
> > (மொழி, மொழிக்கூறுகள்) *தமிழில்*

> > *இருந்து பெற்றன* என்பதை மேற்கு நாட்டறிஞர்களோ,


> > இந்திய, கீழை நாட்டு அறிஞர்களோ சரிவர அறிந்ததாக
> > கருதமுடியாமல் உள்ளது. தமிழ் அன்றும் இன்றும் வாழும்
> > மொழி. தமிழ் மொழியும் எத்தனை
> > எத்தனையோ சொற்களையும், மொழிக்கூறுகளையும்
> > சமசுக்கிருத மொழி, மற்றும் பற்பல
> > வடமொழிகள், பிறநாட்டு மொழிகளில் இருந்து பெற்று
> > வந்துள்ளன. இன்றும் பெற்று வருகின்றன. ஆனால்
> > ஒரு சொல் சமசுக்கிருதத்திலோ, கிரேக்கத்திலோ இருந்து
> > விட்டால் மட்டும் அது அம்மொழிச் சொல் ஆகாது!!
>
> > அன்புடன்
> > செல்வா
>

> > 2011/7/23 Jean-Luc Chevillard <jeanluc.chevill...@gmail.com>

> ...
>
> read more »

Ilakkuvanar Thiruvalluvan

unread,
Jul 23, 2011, 8:04:36 PM7/23/11
to தமிழ் மன்றம், tamil_...@googlegroups.com, kee...@googlegroups.com, mutht...@googlegroups.com, puduvai...@googlegroups.com, tamil_a...@googlegroups.com, elanth...@googlegroups.com, anb...@googlegroups.com, meen...@gmail.com, ne...@tamilthai.com, muduvai...@gmail.com, msmuthu...@yahoo.co.in, pollac...@gmail.com, paris...@paristamil.com, kta...@egroups.com, atema...@yahoo.co.in
திரு சிரீதரன், திரு கணேசன்,திரு தேவ் முதலான அனைவருக்கும் நன்றி.
பேரா.செல்வக்குமார சரியான வினாவைத் தொடுத்துள்ளார்.
மேலை ஆரிய மொழிகளுடன் தொடர்புடைய சமசுகிருத மொழி தனக்கென எழுத்து வடிவம்
கொள்ளாமல் இருந்து தமிழ் நிலத்திற்கு வந்த பின்பு தன் வரிவடிவ
நெடுங்கணக்கை அமைத்துக் கொண்டது. எனவேதான் ஒலியமைப்பில்
ஆரியமாயிருப்பினும் எழுத்தமைப்பில் தமிழைக் கொண்டுள்ளது.
திரு ழான் முதலான சிலர் முந்தைய அறிஞர்களின் கருத்துப் பதிவை
விரும்பவில்லை என்றாலும் நல்ல ஆய்விற்கு வழிவகுக்கின்றனர். முன்னோர்
நூல்களைப் படிக்க வாய்ப்பு இழந்தவர்களுக்கும் படித்தவற்றை நினைவுபடுத்த
விரும்புபவர்களுக்கும் வாய்ப்பாக உள்ள மேற்கோள் பதிவுகளைப்
பெரும்பான்மையர் வரவேற்கின்றனர். விரும்பாதவர்கள் படிக்காமல்
புறந்தள்ளலாமே தவிரப் பதிவுகளைத் தடுக்க வேண்டாவே!

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! /
எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

On Jul 23, 10:48 am, "C.R. Selvakumar" <c.r.selvaku...@gmail.com>
wrote:
> 2011/7/23 N. Ganesan <naa.gane...@gmail.com>

> எழுத்து வரிசைகள் என்ன?http://en.wikipedia.org/wiki/Latin_alphabethttp://en.wikipedia.org/wiki/Greek_alphabet

> ...
>
> read more »

Jean-Luc Chevillard

unread,
Jul 23, 2011, 11:15:28 PM7/23/11
to tamil...@googlegroups.com, C.R. Selvakumar, capparis...@gmail.com, DEV RAJ
Dear Selva,

I see what you are trying to say
but what I am trying to say must also be taking into account.

I am saying that it is a FUTILE EXERCISE
to give an etymology for a word which is NOT ATTESTED
in ancient literature.

In my former message,
I stated that the word இலக்கியம் does not occur in the Tolkāppiyam
and, so far, you have not provided any attestation.

Let us now take the case of other ancient texts.

I have also prepared, several years ago,
a concordance for the குறுந்தொகை

I enclose below the list of all the words in the குறுந்தொகை
which start with "இல"

Tell me whether you see இலக்கியம் among them?

Best wishes

-- ழான் (Jean-Luc Chevillard, Pondichéry)


<BEGIN குறுந்தொகை concordance fragment>

ila (5 occ.)

    KU_77-2 tavaṟu eṉiṉ tavaṟu ō ila ē vem curattu
    KU_330-5 iṉ kaṭum kaḷḷiṉ maṇam ila kamaḻum
    KU_11-2 pāṭu ila kaliḻum kaṇṇoṭu pulampi
    KU_365-2 pāṭu ila kaliḻntu paṉi āṉā ē
    KU_35-1 nāṇ ila maṉṟa em kaṇ ē nāḷ nērpu

ilaṅku (14 occ.)

    KU_126-4 toku mukai ilaṅku eyiṟu āka
    KU_381-7 ilaṅku eyiṟu tōṉṟa nakkataṉ payaṉ ē
    KU_373-2 ilaṅku tirai+ perum kaṭaṟku ellai tōṉṟiṉum
    KU_318-1 eṟi cuṟā+ kalitta ilaṅku nīr+ parappiṉ
    KU_215-4 vaṟum kayam tuḻaiiya ilaṅku maruppu yāṉai
    KU_360-8 ilaṅku malai nāṭaṉ iraviṉāṉ ē
    KU_78-3 cilampiṉ iḻitarum ilaṅku malai veṟpa
    KU_11-1 kōṭu īr ilaṅku vaḷai ñekiḻa nāḷ um
    KU_50-4 ilaṅku vaḷai nekiḻa+ cāay+
    KU_125-1 ilaṅku vaḷai nekiḻa+ cāay yāṉ ē
    KU_365-1 kōṭu īr ilaṅku vaḷai nekiḻa nāḷ um
    KU_31-5 kōṭu īr ilaṅku vaḷai nekiḻtta
    KU_52-4 nirantu ilaṅku veḷ pal maṭantai
    KU_14-2 vārntu ilaṅku vai eyiṟṟu+ cil moḻi arivaiyai+

ilañci (1 occ.)

    KU_91-2 kuṇṭu nīr ilañci+ keṇṭai katūum

ilam (4 occ.)

    KU_168-6 maṇattal um taṇattal um ilam ē
    KU_168-7 piriyiṉ vāḻtal ataṉiṉum ilam ē
    KU_320-5 nakkatu ōr paḻi um ilam ē pōtu aviḻ
    KU_93-4 pulavi aḵtu evaṉ ō aṉpu ilam kaṭai ē

ilar (4 occ.)

    KU_158-6 tuṇai ilar aḷiyar peṇṭir iḵtu evaṉ ē
    KU_327-2 nayaṉ ilar ākutal naṉṟu eṉa uṇarnta
    KU_4-4 amaivu ilar ākutal nōm eṉ neñcu ē
    KU_284-5 nam ēcuvar ō tam ilar kol ō

ilaḷ (4 occ.)

    KU_115-6 nal malai nāṭa niṉ alatu ilaḷ ē
    KU_292-8 pakai muka ūriṉ tuñcal ō ilaḷ ē
    KU_397-8 taṉ uṟu viḻumam kaḷaiñar ō ilaḷ ē
    KU_142-3 tāṉ aṟintaṉṟu ō ilaḷ ē pāṉāḷ

ilaṉ (1 occ.)

    KU_311-4 yāṉ kaṇṭaṉṟu ō ilaṉ ē pāṉāḷ

<END குறுந்தொகை concordance fragment>

Jean-Luc Chevillard

unread,
Jul 24, 2011, 3:10:28 AM7/24/11
to tamil...@googlegroups.com, C.R. Selvakumar, capparis...@gmail.com, DEV RAJ, Dr.Krishnaswamy Nachimuthu, Deiva Sundaram, N. Ganesan, rajam
Dear Tamil Manram list members,

as a complement to my earlier observations,
I attach to this message 4 pages scanned from the
வரலாற்று முறைத் தமிழ் இலக்கியப் பேரகராதி
published in 2001 by சாந்தி சாதனா.

You can see on page 324 that there are no early attestations of the word இலக்கியம் in Tamil literature.

I also attach to this message
some pages scanned from the critical edition of திவாகரம்,
by மு. சண்முகம் பிள்ளை
and இ. சுந்தரமூர்த்தி

You can see clearly on page 627,
what must have been the original meaning of இலக்கியம்
when it was (as I make the hypothesis, after many others)
adapted from Sanskrit /lakṣya/,
in order to work in tandem, in the technical vocabulary,
with the word இலக்கணம் (itself adapted from Sanskrit /lakṣaṇa/).


The verse 1845 (inside திவாகரம்) reads:

இலக்கியம், உதாரணம், எடுத்துக் காட்டல்,
ஞாபகமும் பிசியும் அப்பொருள் நடைய.

I should add that a nice example of the use of the tandem ilakkiyam/ilakkaṇam
can be seen inside Cēṉāvaraiyar's commentary to the verse 66 of TC (Tolkāppiyam Collatikāram),
when he writes:

<quote>
... ilakkiyam eṅku um^ cellātaṉa ilakkaṇam ām āṟu eṉṉai eṉiṉ:-- āṇṭu ilakkaṇam āvaṉa urupu ēṟṟaṟku ēṟṟa taṉmai um payaṉilai um payaṉilai kōṭaṟku ēṟṟa taṉmai um ākaliṉ, a+ taṉmai ellāvaṟṟiṟku um uṇmaiyiṉ ilakkaṇam ām eṉpatu.
</quote>

All that being the case,
it is my PERSONAL CONCLUSION that the etymology
proposed by the late professor S. Ilakkuvanar
and forwarded to the TamilManram list by Mr Thiruvalluvan Ilakkuvanar
CANNOT BE ACCEPTED;

(For that etymology, see original message
"http://groups.google.com/group/tamilmanram/browse_thread/thread/490af19a4df6a0c6"
<http://groups.google.com/group/tamilmanram/browse_thread/thread/490af19a4df6a0c6>)

Best wishes to all

-- Jean-Luc Chevillard (EFEO/CNRS, Pondicherry)


*******************************
Pages from Santhi Sadhana Glossary of Historical Literature.pdf
Pages from (chap10)(pp599-646) olipaRRiya peyar.pdf

Mohanarangan V Srirangam

unread,
Jul 24, 2011, 3:17:36 AM7/24/11
to Jean-Luc Chevillard, tamil...@googlegroups.com, C.R. Selvakumar, capparis...@gmail.com, DEV RAJ, Dr.Krishnaswamy Nachimuthu, Deiva Sundaram, N. Ganesan, rajam
Thank you Jean! for the efforts and clarifications. 

Srirangam V Mohanarangan 

***

2011/7/24 Jean-Luc Chevillard <jeanluc.c...@gmail.com>

iraamaki

unread,
Jul 24, 2011, 4:32:33 AM7/24/11
to tamil...@googlegroups.com
அன்பிற்குரிய ழான்,
 
சற்று அவக்கரப் பட்டு, ஒரு முடிவிற்கு வந்து விடுகிறீர்கள். திவாகரம் பக்கம் 627 சூத்திரம் 1845 ஐ அப்படியே எடுத்துக் கொள்ள முடியாது. 1834 ஆம் சூத்திரத்தில் இருந்து பாருங்கள். ஓர் ஒழுங்குமுறை தென்படும். திடீரென்று 1845 ஐ மட்டும் தனியே பார்க்காது இந்தத் தொகுதி முழுக்கச் சேர்ந்து பாருங்கள்.
 
1834. நூலின் பெயர் இங்கு கொடுக்கப் படுகிறது: திவாகரத்தில் இந்த நூற்பா தான் மொத்த நூலையும் பேசுவது. நூல் என்பது இலக்கியமாகவும் இருக்கலாம்; இலக்கணமாகவும் இருக்கலாம். அதிகாரம் என்ற முதற்சொல் சிலப்பதிகாரம் என்ற நூலின் பெயரில் ஆளப்பட்டிருக்கிறது. ஆரிடம், பனுவல், ஆகமம், பிடகம், தந்திரம் ஆகிய சொற்கள் நூல் பற்றிய வேறு பெயர்களாய்க் குறிப்பிடப் படுகின்றன. இவைகள் எல்லாம் பொதுவான நூல்கள். விதப்பான “இலக்கியம்” என்று அழுத்தமாகச் சொல்ல முடியாது. அதே பொழுது இலக்கியம் என்பதும் நூல் தான். ஆகமம் என்ற சொல் பாட வேறுபாட்டில் கேள்விக்குள்ளாக்கப் படுகிறது.
 
1835. பாயிரத்தின் பெயர்: நூலின் முதற்பகுதி. நன்னூல், தொல்காப்பியம் போன்றவற்றில் வரும் முதற்பகுதி. இப்பொழுது நூலுக்குள் வந்துவிட்டோம். அடுத்திருக்கும் நூற்பாக்களில் வரப்போகும் பெயர்கள் நூலுக்குள் உள்ள பகுதிகளின் பெயர்கள். நூலைப் பற்றிய பெயர்கள் அல்ல.
 
1836 மூதுரையின் பெயர்; இது பெரும்பாலும் பழைய commentary என்றே பொருள் கொள்ள முடியும்.
 
1837. பாடத்தின் பெயர்: இது actual content proper written by the author.
 
1838 நூற்பா - அகவலின் பெயர்: இது இலக்கணத்தில் வரும் விதப்பான சொல் நூற்பா - சூத்திரம். சூத்திரங்களால் ஆனது பாடம். பாடம், பாயிரம் போன்றவை சேர்ந்தது நூல். நூற்பா என்பது அகவல் யாப்பில் வரும்.
 
1839 ஓத்தின் பெயர். இது நன்னூற் பாயிரத்தில் விளக்கப் படும். ஒரு குறிப்பிட்ட வரிசை (அல்லது தலைப்பு) பற்றிய நூற்பாக்களின் தொகுப்பு.
 
1840 படலம் என்னும் பெயர். இதுவும் நன்னூற் பாயிரத்தில் வரும். வெவ்வேறு தலைப்புக்களின் அடியில் உள்ள நூற்பாக்களின் தொகுப்பு.
 
1841 வேற்றிசைப்பா என்னும் பெயர். அகவலில் இருந்து மாறி விருத்த நடையில் இருக்கும் பாக்கள். இது சருக்க முடிவிலும் இலம்பக முடிவிலும் வரும் என்று கி.பி.8 ஆம் நூற்ராண்டு, 9 ஆம் நூற்றாண்டு நிலையை/வழக்கத்தைக் கூறுகிறது.
 
1842 உரைப்பொருளின் பெயர்: விரித்துக் கூறும் உரைப்பொருள் பற்றியது.
 
1843 பொழிப்பு என்னும் பெயர்; நூலுக்குள் வரும் நூற்பாக்களுக்கான பொழிப்பு/
 
1844. பதிகம் என்னும் பெயர்: சிலப்பதிகாரத்தில் வருவது போன்ற பதிகம். கிட்டத்தட்ட content summary
 
இனி 1845 இல் இலக்கியத்தின் பெயர் என்று வாராது. அது உண்மையில் இலக்கிய உதாரணம். அங்கே ம் என்பது ஏடெடுத்து எழுதுவதில் ஏற்பட்டிருக்கக் கூடிய, இயலுகிற, மீச்சிறிய பிழை.
 
இலக்கியம் உதாரணம் எடுத்துக் காட்டல்

ஞாபகமும் பிசியும் அப்பொருள் நடைய
 
என்று படிப்பதற்கு மாறாக,
 
இலக்கிய உதாரணம் எடுத்துக் காட்டல்

ஞாபகமும் பிசியும் அப்பொருள் நடைய
 
என்று படித்துப் பாருங்கள். முழுப்பொருளும் விளங்கும். இலக்கிய உதாரணம் என்பது இலக்கியத்துள் ஒன்றை எடுத்துக் காட்டலாகும். இந்தக் காலத்தில் உதாரணம் என்று யாரும் எழுதுவதில்லை. எடுத்துக் காட்டு என்பதும் கூடக் காட்டு என்று சுருங்கிவிட்டது.
 
ஞாபகம் என்பதும் எடுத்துக் காட்டைப் போல் அமைவது தான். ஒன்றைச் சொல்லி விளக்கிக் கொண்டிருக்கும் போது திடீரென்று ஞாபகம் வர, அதையும் எடுத்துக் காட்டைச் சொல்வது போல  விளக்கத்தை வலுப்படுத்தும் நடையாய் அமையும்.
 
பிசி என்பது ஒருவகைப் புதிர், சோடிப்பு, விடுகதை. இதுவும் எடுத்துக்காட்டுப் போலத்தான் ஒன்றை விளக்கும் போது அமையும். (இந்தச் சொல் தென்பாண்டி நாட்டில் அகவை முதியோரிடம் அறியவேண்டிய சொல்.)
 
இந்த எடுத்துக் காட்டல், ஞாபகம், பிசி என்ற மூன்று பொருளும் ஒன்று போல் அமைந்திருக்க, இலக்கிய உதாரணம் என்பது முதற்சொல்லாக  நூற்பாவில் “ம்” என்பது இல்லாது போயிருந்தாற்றான் சரியாக வரும்.
 
இதில் பாடவேறுபாடாக வரும்
 
இலக்கியம் உதாரணம் எடுத்துக் காட்டல்
இதிகா சமுமே யிலக்கிய மாகும்
ஞாபகமும் பிசியு மரும்பொரு நடைய
 
என்ற வரிகள் மேலே சொன்ன வரிசை முறையை, ஒழுங்குமுறையைப் பார்க்கும் போது தவறாக தெரிகின்றன. ஒரு பொருந்தாமை புலப்படுகிறது.
 
இலக்கியம் என்ற சொல் இங்கு குறிப்பிட்ட நூற்பாவில் பயன்பட்டிருக்கிறது. அந்த வகையில் இது குறிப்பிடத் தக்க பதிவு ஆனால் அது நூல் என்ற பொருளில் இருந்திருக்கவே வாய்ப்புண்டு. உதாரணம் என்ற பொருளில் அல்ல.     
 
அன்புடன்,
இராம.கி.

Jean-Luc Chevillard

unread,
Jul 24, 2011, 5:38:39 AM7/24/11
to tamil...@googlegroups.com, iraamaki, Dr.Krishnaswamy Nachimuthu, DEV RAJ, C.R. Selvakumar, srirangammohanarangan v, thir...@gmail.com
Dear இராம.கி.

thanks a lot for your detailed comment.

I do not think I agree with you but it is always nice to be able to have this kind of exchange,
in depth, and I should certainly take the time to ponder over your words.

I would also be interested in hearing how you (and the other people who read this message)
understand the expression *இலக்கியத்ததாய்*
inside the commentary to the first காரிகை
of யாப்பருங்கலக் காரிகை
and how you would translate that expression into English:

<quote>
அற்றேல் இந்நூல் என்ன பெயர்த்தோ எனின், பாளித்தியம் என்னும் பாகத இலக்கணமும் பிங்கலம் என்னும் சந்தோவிசிதியும் போலக் காரிகை யாப்பிற்றாய்க் குண காங்கியம் என்னும் கருநாடகச் சந்தமேபோல மகடூஉ முன்னிலைத் தாய் அவையடக்கம் உடைத்தாய், மயேச்சுரர் யாப்பே போல உதாரணம் எடுத்தோதி இசைத்மிழ்ச் செய்யுட்டுறைக் கோவையே போலவும் அருமறையகத்து அட்டக வோத்தின் வருக்கக் கோவையே போலவும் உருபாவதாரத்திற்கு நீதகச் சுலோகமே போலவும் முதல் நினைப்பு உணர்த்திய *இலக்கியத்ததாய்* வேதத்திற்கு நிருத்தமும் வியாகரணத்திற்குக் காரிகையும், அவிநயர் யாப்பிற்கு நாலடி நாற்பதும் போல யாப்பருங்கலம் என்னும் யாப்பிற்கு அங்கமாய் அலங்காரம் உடைத்தாகச் செய்யப்பட்டமையான் யாப்பருங்கக் காரிகை என்னும் பெயர்த்து.
</quote>

(this is copied from pages 1-3 inside the 1968 reprint of UVS edition,
published by the UVSL)

அன்புடன்

-- ழான் (Jean-Luc Chevillard, புதுவை)

வேந்தன் அரசு

unread,
Jul 24, 2011, 8:18:59 AM7/24/11
to tamil...@googlegroups.com


23 ஜூலை, 2011 8:58 am அன்று, DEV RAJ <rde...@gmail.com> எழுதியது:

>>> lakṣaṇa என்பதற்கு அணி என்றுதானே பொருள்? <<<

>> வியாகரணம் என்றால் இலக்கணம் என கருதுக்றேன்
(சாமுத்த்ரிகா) லட்சணம் என்றால் அழகுதானே? <<<


வேந்தர் ஐயா

திரு ழான் அவர்கள் கொடுத்துள்ள ‘அப்யங்கர் வடமொழி இலக்கண அகராதி’
பக்கத்தைத் தரவிறக்கிப் பாருங்கள். (பக்  329, வலப்புறம் 4ம் சொல்)

लक्षणसङ्ग्रह - A work on grammar written by a grammarian named
रत्नेश्.

லக்ஷண ஸங்க்ரஹம் - ரத்நேசர் என்பவரால் செய்யப்பட்ட இலக்கண நூல்.


தேவ ஐயா

ஒருவர் தன் நூலுக்கு அப்படி பேர் வச்சு இருக்கலாம்

ஆனால் பொதுப்பெயராக இலக்கியம் இலக்கணம் எனும் சொற்களுக்கு வடசொல் என்ன?

பாணினி எனபேர் சூட்டினார்.

N. Ganesan

unread,
Jul 24, 2011, 9:29:00 AM7/24/11
to தமிழ் மன்றம்


On Jul 24, 2:10 am, Jean-Luc Chevillard <jeanluc.chevill...@gmail.com>
wrote:

> All that being the case,
> it is my PERSONAL CONCLUSION that the etymology
> proposed by the late professor S. Ilakkuvanar
> and forwarded to the TamilManram list by Mr Thiruvalluvan Ilakkuvanar
> CANNOT BE ACCEPTED;
>

Dear ஃழான்,

Vanakkam. Your conclusion is valid. I also came to this decision
when I read books by S. Vaiyapuri PiLLai, K. Zvelebil, some 20+
years ago.

Let me ask a question in CTamil about a literary quote that we
often see in this connection. will refer to this thread.

NG

DEV RAJ

unread,
Jul 24, 2011, 10:29:25 AM7/24/11
to தமிழ் மன்றம்
ஆண்மைக்கு *இலக்கணம்* வகுக்கிறது பிங்கலந்தை என்னும் "வெறும்" நிகண்டு:
http://www.treasurehouseofagathiyar.net/13600/13678.htm


உத்யோகம் புருஷ *லக்ஷணம்*
A classic hark back to the Sanskrit quotation "उद्योगम् पुरुष लक्षणम्
"
http://medobe.blogspot.com/2009_03_01_archive.html

காபுருஷனுக்கு (பயந்தாங்கொள்ளி) லக்ஷணம் சொல்லும் மொழிகளும்
உள்ளன.

முதல் வரியிலுள்ள ’இலக்கணம்’, இரண்டாம் வரியின் ‘லக்ஷணம்’
இரண்டுக்கும் என்ன வேறுபாடு ?


தேவ்

வேந்தன் அரசு

unread,
Jul 24, 2011, 11:54:44 AM7/24/11
to tamil...@googlegroups.com


24 ஜூலை, 2011 10:29 am அன்று, DEV RAJ <rde...@gmail.com> எழுதியது:

ஆண்மைக்கு *இலக்கணம்* வகுக்கிறது பிங்கலந்தை என்னும் "வெறும்" நிகண்டு:
http://www.treasurehouseofagathiyar.net/13600/13678.htm


உத்யோகம் புருஷ *லக்ஷணம்*

நிலத்துக்கு அணி என்ப நெல்லும் கரும்பும்
 அதனால் அணி என்பது இலக்கணம்னு சொல்லலாமா

அதுபோல் லட்சணம். அவலட்சணம்
 

C.R. Selvakumar

unread,
Jul 24, 2011, 11:55:05 AM7/24/11
to Jean-Luc Chevillard, tamil...@googlegroups.com, capparis...@gmail.com, DEV RAJ
அன்புள்ள ழான்,
 
நீங்கள் சொல்வதும் புரிகின்றது.
உங்கள் துல்லியமான சுட்டுகளுக்கும்
மிக்க நன்றி. இப்படியான உரையாடலே
முன்னேற்றம் தரும்.  ஆனாலும்
சில அடிப்படையான கேள்விகளும்
கேட்கப்பட வேண்டும் அல்லவா?

2011/7/23 Jean-Luc Chevillard <jeanluc.c...@gmail.com>
Dear Selva,

I see what you are trying to say
but what I am trying to say must also be taking into account.

I am saying that it is a FUTILE EXERCISE
to give an etymology for a word which is NOT ATTESTED
in ancient literature.
 
 
நான் கேட்பது சமசுக்கிருதச்சொல் என்று நீங்கள் கருதும் சொல்லுக்கு
சொற்பிறப்பியல் என்ன? சமசுக்கிருதத்துக்கு உறவான
(பல?) மொழிகளில் இதற்கு வலு சேர்ப்பன எவை?
 
தமிழில் உள்ள இலக்கிய இலக்கணங்கள்
கி.மு 200-300 ஆண்டுகளே பழமை உடையனவாக அறிஞர்கள் கருதுகின்றனர். ஆனால் வேதம், சமசுக்கிருத இலக்கியங்கள் பலவும்
கி.மு 1500 முதல் கி.மு 400 என்று அறிஞர்கள் கருதுகின்றனர்.
என்றாலும் சில அறிஞர்களாவது (தாமசு பரோ போன்றவர்க),
வேதத்திலும்கூட சில சொற்களாவது "திராவிட"ச் சொற்கள்
உள்ளன என்று கருதுகின்றனர். "திராவிட" இலக்கியம் ஏதும்
கி.மு 1500 இல் பதிவாகவில்லை. ஆகவே ஒரு சொல் ஒரு
மொழியில் முன்னரே காணப்படுகின்றது ("attestation") என்பதைக்
கொண்டு அறுதியிட்டுக் கூறுதல் இயலாது, அல்லவா?
 

In my former message,
I stated that the word இலக்கியம் does not occur in the Tolkāppiyam
and, so far, you have not provided any attestation.
 
ஆம், நான் தேடித் தரவில்லை. மன்னிக்கவும்.
தேடுநுட்பங்களையும், தரவுத் தளங்களையும்
போதிய அளவு அறியவில்லை. "இலக்கியம்" என்னும்
சொல் மட்டும் அல்ல, பிறிதொரு தமிழ்ச்சொல்லும் கூட
முதன்முதல் எங்கு பதிவாகியது என்று
எளிதில் சுட்டிக்காட்டும் வசதிகள் எனக்கு இல்லை.
இவற்றுக்கான சில நூல்கள் தரவுத் தளங்கள் சிலரிடம்
இருக்கலாம், என்னிடம் இல்லை.
உரோமன் எழுத்தில் உள்ளதைப்படிப்பது கடினமாக உள்ளது, ஆனால்
இலக்கியம் என்னும் சொல் இல்லை என்பதை உணர்த்துகின்றீர்கள் என்று
விளங்குகின்றது.
 
வர்ச்சுவல்வினோத் வழி தமிழில் மாற்றியதைக் கீழே காணலாம்:
 
கு77-2 தவறு எனின் தவறு ஓ இல ஏ வெம் சுரத்து
   கு330-5 இன் கடும் கள்ளின் மணம் இல கமழும்
   கு11-2 பாடு இல கலிழும் கண்ணொடு புலம்பி
   கு365-2 பாடு இல கலிழ்ந்து பனி ஆனா ஏ
   கு35-1 நாண் இல மன்ற எம் கண் ஏ நாள் நேர்பு
இலங்கு (14 ஒச்ச்.)
   கு126-4 தொகு முகை இலங்கு எயிறு ஆக
   கு381-7 இலங்கு எயிறு தோன்ற நக்கதன் பயன் ஏ
   கு373-2 இலங்கு திரை+ பெரும் கடற்கு எல்லை தோன்றினும்
   கு318-1 எறி சுறா+ கலித்த இலங்கு நீர்+ பரப்பின்
   கு215-4 வறும் கயம் துழைஇய இலங்கு மருப்பு யானை
   கு360-8 இலங்கு மலை நாடன் இரவினான் ஏ
   கு78-3 சிலம்பின் இழிதரும் இலங்கு மலை வெற்ப
   கு11-1 கோடு ஈர் இலங்கு வளை ஞெகிழ நாள் உம்
   கு50-4 இலங்கு வளை நெகிழ+ சாஅய்+
   கு125-1 இலங்கு வளை நெகிழ+ சாஅய் யான் ஏ
   கு365-1 கோடு ஈர் இலங்கு வளை நெகிழ நாள் உம்
   கு31-5 கோடு ஈர் இலங்கு வளை நெகிழ்த்த
   கு52-4 நிரந்து இலங்கு வெள் பல் மடந்தை
   கு14-2 வார்ந்து இலங்கு வை எயிற்று+ சில் மொழி அரிவையை+
இலஞ்சி (1 ஒச்ச்.)
   கு91-2 குண்டு நீர் இலஞ்சி+ கெண்டை கதூஉம்
இலம் (4 ஒச்ச்.)
   கு168-6 மணத்தல் உம் தணத்தல் உம் இலம் ஏ
   கு168-7 பிரியின் வாழ்தல் அதனினும் இலம் ஏ
   கு320-5 நக்கது ஓர் பழி உம் இலம் ஏ போது அவிழ்
   கு93-4 புலவி அஃது எவன் ஓ அன்பு இலம் கடை ஏ
இலர் (4 ஒச்ச்.)
   கு158-6 துணை இலர் அளியர் பெண்டிர் இஃது எவன் ஏ
   கு327-2 நயன் இலர் ஆகுதல் நன்று என உணர்ந்த
   கு4-4 அமைவு இலர் ஆகுதல் நோம் என் நெஞ்சு ஏ
   கு284-5 நம் ஏசுவர் ஓ தம் இலர் கொல் ஓ
இலள் (4 ஒச்ச்.)
   கு115-6 நல் மலை நாட நின் அலது இலள் ஏ
   கு292-8 பகை முக ஊரின் துஞ்சல் ஓ இலள் ஏ
   கு397-8 தன் உறு விழுமம் களைஞர் ஓ இலள் ஏ
   கு142-3 தான் அறிந்தன்று ஓ இலள் ஏ பானாள்
இலன் (1 ஒச்ச்.)
   கு311-4 யான் கண்டன்று ஓ இலன் ஏ பானாள்
 
 
மேலே நான் கூறியவற்றோடு இங்கு இச்சொல் வடிவம் இல்லை
என்பதை எண்ணிப்பாருங்கள்.

C.R. Selvakumar

unread,
Jul 24, 2011, 12:33:00 PM7/24/11
to Jean-Luc Chevillard, tamil...@googlegroups.com, capparis...@gmail.com, DEV RAJ, Dr.Krishnaswamy Nachimuthu, Deiva Sundaram, N. Ganesan, rajam
அன்புள்ள ழான்,
 
மிக அருமை!
மிகத் துல்லியமான, பயனுடைய தரவுகளுக்கு மிக்க நன்றி.
 
இலக்கியம் என்பது lakshya என்னும் சமசுக்கிருதச் சொல்லில்
இருந்து வந்தது என்பதற்கு இந்த எடுத்துக்காட்டுகள்
போதும் என்கின்றீர்களா? 
 
நீங்கள் காட்டிய சுட்டியிலேயே
இலக்கு, இலங்கு, இலகு என்பன உள்ளனவே.
 
lakshya என்னும் சொல் இலக்கியம் என்னும்
பொருளில் சமசுக்கிருதத்தில் எங்கு
ஆளப்பட்டுளது? சமசுக்கிருதத்துக்கு உறவான மொழிகளில்
(கிரேக்கம், இலத்தீன்..) எங்கே ஆளப்பட்டுள்ளது? இவை
பொருத்தமான கேள்விகள் அல்லவா?
 
அன்புடன்
செல்வா


2011/7/24 Jean-Luc Chevillard <jeanluc.c...@gmail.com>

DEV RAJ

unread,
Jul 24, 2011, 1:05:48 PM7/24/11
to தமிழ் மன்றம்
Saranga Deva talks about Lakshana (grammar and framework) and Lakshaya
(the actual performance)

केशवदास ने लक्षण-ग्रन्थ ही नहीं, लक्ष्य-ग्रन्थ भी लिखे हैं।

ஹிந்தி கவிஞர் கேசவதாஸ் லக்ஷண ,லக்ஷ்ய க்ரந்தங்கள் இரண்டும்


எழுதியுள்ளார்.

இலக்கணம் - theory ; இலக்கியம் - practical

ஒருமொழிக்கு மட்டும் சொந்தமான சொற்கள் அல்ல

தேவ்


Jean-Luc Chevillard

unread,
Jul 24, 2011, 1:28:01 PM7/24/11
to tamil...@googlegroups.com, C.R. Selvakumar, capparis...@gmail.com, DEV RAJ, Dr.Krishnaswamy Nachimuthu, Deiva Sundaram, N. Ganesan, rajam
Dear Selva,

It is too late for me (here in India) to continue the discussion for very long
but let me simply observe that when you write

<quote>

lakshya என்னும் சொல் இலக்கியம் என்னும்
பொருளில் சமசுக்கிருதத்தில் எங்கு
ஆளப்பட்டுளது?
</quote>

you seem to make the implicit supposition (by saying "இலக்கியம் என்னும்
பொருளில்")that everybody knows what the பொருள் ("value") of இலக்கியம் is.

But this CANNOT BE TAKEN FOR GRANTED.

You cannot conclude from the fact
that modern Tamil speakers agree on the meaning of /ilakkiyam/
while used in a modern Tamil text,
to ANOTHER FACT WHICH WOULD BE that when the (apparently) same word
is found in an ancient text (such as the திவாகரம்
or the commentary to the யாப்பருங்கலக் காரிகை), it has the same meaning.

Best wishes

à demain!

-- Jean-Luc (Pondy)

வேந்தன் அரசு

unread,
Jul 24, 2011, 4:13:41 PM7/24/11
to tamil...@googlegroups.com


24 ஜூலை, 2011 10:29 am அன்று, DEV RAJ <rde...@gmail.com> எழுதியது:

ஆண்மைக்கு *இலக்கணம்* வகுக்கிறது பிங்கலந்தை என்னும் "வெறும்" நிகண்டு:
http://www.treasurehouseofagathiyar.net/13600/13678.htm


உத்யோகம் புருஷ *லக்ஷணம்*
A classic hark back to the Sanskrit quotation "उद्योगम् पुरुष लक्षणम्
"
http://medobe.blogspot.com/2009_03_01_archive.html

காபுருஷனுக்கு (பயந்தாங்கொள்ளி) லக்ஷணம் சொல்லும் மொழிகளும்
உள்ளன.



இனி,

லட்சியம் என்ற சொல் இலக்கியம் எனும் பொருளில் வடமொழியில் வழங்குகிறதா?


--

வேந்தன் அரசு

unread,
Jul 24, 2011, 4:26:23 PM7/24/11
to tamil...@googlegroups.com


22 ஜூலை, 2011 10:43 pm அன்று, DEV RAJ <rde...@gmail.com> எழுதியது:
>> இலக்கியம் என்பது தூய தமிழ்ச் சொல்.  அதன் பொருள் ’ குறிக்கோளை இயம்புதல்
என்பதாகும் <<

இலக்கியம் - இலக்கு + இயம்

இலக்கணம் - இலக்கு + அணம்
என்று பிரிக்க வேண்டுமா ?


தமிழாசிரியர்கள் இதுகாறும் இதுபோல்
போதித்ததில்லை; தமிழ்த்துரோகிகள்


தேவ் ஐயா

இயம் என்பது தமிழ் மொழியில் சொல். இயல் எனபதுபோல்

காக்கை பாடினீயம் என்ற நூல் இருந்ததாக சொல்லப்படுகிறது
பல்லியம் என்பது இசைகருவிகளின் தொகுதி

கணம் எனறால் தொகுதி

அதனாலே,  இன்று முதல் தமிழில் இரண்டு புதிய சொற்களை நாம் உருவாக்கிடலாம்


இலக்கு + இயம்= இலக்கியம்
இலக்கு + கணம் =இலக்கணம்



தமிழ் அன்பர்கள் இப்படியாகவும்
வடமொழி அன்பர்கள் லக்‌ஷ்ய, லக்‌ஷண என்பதன் மரூவாகவும்
கொண்டாடி மகிழலாம்

உண்மை எக்கேடு உறினும் இழப்பது எவன்?

DEV RAJ

unread,
Jul 25, 2011, 3:24:39 AM7/25/11
to தமிழ் மன்றம்
>>காக்கை பாடினீயம் என்ற நூல் இருந்ததாக சொல்லப்படுகிறது <<

நன்றி வேந்தர் ஐயா

பஞ்சபாரதீயம், மனோன்மணீயம் தலைப்புகளுக்கும் இதே முறையில்தான் பொருள்
கொள்ள வேண்டும் என்கிறீர்கள்


தேவ்

வேந்தன் அரசு

unread,
Jul 25, 2011, 6:10:22 AM7/25/11
to tamil...@googlegroups.com


25 ஜூலை, 2011 3:24 am அன்று, DEV RAJ <rde...@gmail.com> எழுதியது:

>>காக்கை பாடினீயம் என்ற நூல் இருந்ததாக சொல்லப்படுகிறது <<

நன்றி வேந்தர் ஐயா

பஞ்சபாரதீயம், மனோன்மணீயம்  தலைப்புகளுக்கும்  இதே முறையில்தான் பொருள்
கொள்ள வேண்டும் என்கிறீர்கள்
 
 
ஆமாம் தேவ்
இயம் இயல் இரண்டும் தமிழ்மரபுதான்
 
இயல் தமிழ், இயற்கை ஒப்பு நோக்கலாம்
 
 
இயந்திரம் எந்திரம் எனும் சொல்லின் தோன்றலாக கருதலாம்
 
வினை அமை பாவையின் இயலி,
நுந்தை. மனை வரை இறந்து வந்தனை;
 ஆயின்,”
 
அதனால் நாங்கள் இயந்திரம் இயல் எனும் வேரின் பிறப்பாக கொண்டு மகிழ்வோம்.
வடமொழிவாணர்கள் அது யந்த்ரமெனும் சொல்லின் பிறப்பாக மகிழலாம்
 
 
 
வேந்தன் அரசு

DEV RAJ

unread,
Jul 25, 2011, 9:14:09 AM7/25/11
to தமிழ் மன்றம்
Jul 25, 4:10 am, வேந்தன் அரசு

>>> அதனால் நாங்கள் இயந்திரம் இயல் எனும் வேரின் பிறப்பாக கொண்டு மகிழ்வோம். வடமொழிவாணர்கள் அது யந்த்ரமெனும் சொல்லின் பிறப்பாக மகிழலாம் <<<


இயல் + திரம் ?!

ஆக சொற்பிறப்பியல், இலக்கணம், வ்யுத்பத்தி, விக்ரஹம் எல்லாமே
மனமகிழ்ச்சிக்காக ஏற்பட்டவை என முடிவு கட்டலாம்


தேவ்


On Jul 25, 4:10 am, வேந்தன் அரசு <raju.rajend...@gmail.com> wrote:
> 25 ஜூலை, 2011 3:24 am அன்று, DEV RAJ <rde...@gmail.com> எழுதியது:
>
> > >>காக்கை பாடினீயம் என்ற நூல் இருந்ததாக சொல்லப்படுகிறது <<
>
> > நன்றி வேந்தர் ஐயா
>
> > பஞ்சபாரதீயம், மனோன்மணீயம்  தலைப்புகளுக்கும்  இதே முறையில்தான் பொருள்
> > கொள்ள வேண்டும் என்கிறீர்கள்
>
> ஆமாம் தேவ்
> இயம் இயல் இரண்டும் தமிழ்மரபுதான்
>
> இயல் தமிழ், இயற்கை ஒப்பு நோக்கலாம்
>
> இயந்திரம் எந்திரம் எனும் சொல்லின் தோன்றலாக கருதலாம்
>

> ”வினை அமை *பாவையின் இயலி*,

C.R. Selvakumar

unread,
Jul 26, 2011, 8:31:40 PM7/26/11
to Jean-Luc Chevillard, tamil...@googlegroups.com, capparis...@gmail.com, DEV RAJ, Dr.Krishnaswamy Nachimuthu, Deiva Sundaram, N. Ganesan, rajam
அன்புள்ள ழான்,
 
இதுவரை யாரும் (நீங்கள் உட்பட) 
 
"lakshya என்னும் சொல் இலக்கியம் என்னும்
பொருளில் சமசுக்கிருதத்தில் எங்கு
ஆளப்பட்டுளது?"
 
என்னும் என் கேள்விக்கு  விடை பகரவில்லை என்றே
நினைக்கின்றேன்! 
 
நீங்கள் கேட்ட மற்றொரு கேள்விக்கு,
திருவெழுகூற்றிருக்கையில் "இலக்கண இலக்கியம்" என்னும்
தொடரே ஆளப்பட்டுள்ளது. (பார்க்கவும் thevaaram.org)

 
012 திருஎழுகூற்றிருக்கை
 
தாதை ஒருடல் திருவடி வாயினை
தருமம் மூவகை உலகம் உணரக்
கூறுவை நால்வகை
இலக்கண இலக்கியம் நலத்தக மொழிந்தனை
ஐங்கணை யவனொடு காலனை அடர்த்தனை
அறுவகைச் சமயமும் நெறிமையில் வகுத்தனை

இங்கே என்ன பொருளில் ஆண்டுள்ளார்கள் என்று நீங்கள்
நினைக்கின்றீர்கள்?

Jean-Luc Chevillard

unread,
Jul 26, 2011, 11:54:58 PM7/26/11
to C.R. Selvakumar, tamil...@googlegroups.com, capparis...@gmail.com, DEV RAJ, Dr.Krishnaswamy Nachimuthu, Deiva Sundaram, N. Ganesan, rajam
Dear Selva,

regarding you question


<quote>
"lakshya என்னும் சொல் இலக்கியம் என்னும்
பொருளில் சமசுக்கிருதத்தில் எங்கு
ஆளப்பட்டுளது?"

</quote>

I have already commented (see below)
that it does not have the same meaning
if it is asked in 13th century Tamil
and in 21st century Tamil.

Regarding the quotation from 11th Tirumuṟai
of a poem called /Tiruveḻukūṟṟirukkai/
(composed by Nakkīra Tēva Nāyaṉār)
which you have reproduced from Tevaram.org
I would be interested in hearing from you
how you explain the statement

"நால்வகை // இலக்கண இலக்கியம் நலத்தக மொழிந்தனை" (lines 38-39)

What exactly is this four-fold "இலக்கண இலக்கியம்"?

Kindly tell us

Best wishes

-- Jean-Luc

Jean-Luc Chevillard

unread,
Jul 27, 2011, 12:09:37 AM7/27/11
to tamil...@googlegroups.com, C.R. Selvakumar, capparis...@gmail.com, DEV RAJ, Dr.Krishnaswamy Nachimuthu, Deiva Sundaram, N. Ganesan, rajam
Dear Selva,

as a supplement to my former message (see below)
and since we are now exploring bhakti literature
(you have quoted the 11th Tirumuṟai),
you might be interested to see this quotation
from the 3rd Tirumuṟai
(attributed to Campantar)
along with an English rendering by the late V.M. Subrahmanya Aiyar
(note the expression: "மிழலைமேவிய விலக்கணா ")

(see:
"http://www.ifpindia.org/ecrire/upload/digital_database/Site/Digital_Tevaram/U_TEV/VMS3_116.HTM#p9"
<http://www.ifpindia.org/ecrire/upload/digital_database/Site/Digital_Tevaram/U_TEV/VMS3_116.HTM#p9>

Best wishes

-- Jean-Luc

<quote>
காயம் மிக்கது ஒரு பன்றியே
a pig that had a huge body.
கலந்த நின்ன உருபு அன்றியே
as your body which pervaded everywhere could not be seen by.
இருவர்தாம் மனம் மயங்கவே
those who (Māl and Piramaṉ) who got confused in mind.
ஏய இப்புவி மயங்கவே
amd reached this world which is suited to them.
தூய மெய்த்திரள் அகண்டனே
the individed one whose pure body was the mass of fire.
தோன்றி நின்ற மணிகண்டனே
Civaṉ with a blue neck who appeared before them.
மேய இத்துயில் விலக்கு, அணா!
chief! you remove the sleep which I am having.
[[அணா -- அண்ணா; chief.]]
மிழலைமேவிய விலக்கணா
one having distinguishing attributes who is in Miḻalai!
[[விலக்கணா -- விலக்ஷணா
</quote>

************************


Dear Selva,

regarding you question

<quote>
"lakshya என்னும் சொல் இலக்கியம் என்னும்
பொருளில் சமசுக்கிருதத்தில் எங்கு
ஆளப்பட்டுளது?"

</quote>

I have already commented (see below)
that it does not have the same meaning
if it is asked in 13th century Tamil
and in 21st century Tamil.

Regarding the quotation from 11th Tirumuṟai
of a poem called /Tiruveḻukūṟṟirukkai/
(composed by Nakkīra Tēva Nāyaṉār)
which you have reproduced from Tevaram.org
I would be interested in hearing from you
how you explain the statement

"நால்வகை // இலக்கண இலக்கியம் நலத்தக மொழிந்தனை" (lines 38-39)

What exactly is this four-fold "இலக்கண இலக்கியம்"?

Kindly tell us

Best wishes

-- Jean-Luc

DEV RAJ

unread,
Jul 27, 2011, 3:16:49 AM7/27/11
to தமிழ் மன்றம்
*மிழலைமேவிய விலக்கணா*

மிழலை மேவிய இலக்கணா


மிழலை மேவிய விலக்கணா

இருவிதமாகவும் கொள்ளலாம் என நினைக்கிறேன்;
விலக்கணம் - விலக்ஷணம் (தனிச்சிறப்பு)


தேவ்

On Jul 26, 10:09 pm, Jean-Luc Chevillard


<jeanluc.chevill...@gmail.com> wrote:
> Dear Selva,
>
> as a supplement to my former message (see below)
> and since we are now exploring bhakti literature
> (you have quoted the 11th Tirumuṟai),
> you might be interested to see this quotation
> from the 3rd Tirumuṟai
> (attributed to Campantar)
> along with an English rendering by the late V.M. Subrahmanya Aiyar
> (note the expression: "மிழலைமேவிய விலக்கணா ")
>
> (see:

> "http://www.ifpindia.org/ecrire/upload/digital_database/Site/Digital_T..."
> <http://www.ifpindia.org/ecrire/upload/digital_database/Site/Digital_T...>

> "lakshya என்னும் சொல் /இலக்கியம்/ என்னும்


> பொருளில் சமசுக்கிருதத்தில் எங்கு
> ஆளப்பட்டுளது?"
>
> </quote>
>
> I have already commented (see below)
> that it does not have the same meaning
> if it is asked in 13th century Tamil
> and in 21st century Tamil.
>
> Regarding the quotation from 11th Tirumuṟai
> of a poem called /Tiruveḻukūṟṟirukkai/
> (composed by Nakkīra Tēva Nāyaṉār)
> which you have reproduced from Tevaram.org
> I would be interested in hearing from you
> how you explain the statement
>
> "நால்வகை // இலக்கண இலக்கியம் நலத்தக மொழிந்தனை" (lines 38-39)
>
> What exactly is this four-fold "இலக்கண இலக்கியம்"?
>
> Kindly tell us
>
> Best wishes
>
> -- Jean-Luc
>
> On 27/07/2011 06:01, C.R. Selvakumar wrote:
>
> > அன்புள்ள ழான்,
> > இதுவரை யாரும் (நீங்கள் உட்பட)

> > "lakshya என்னும் சொல் /இலக்கியம்/ என்னும்


> > பொருளில் சமசுக்கிருதத்தில் எங்கு
> > ஆளப்பட்டுளது?"
> > என்னும் என் கேள்விக்கு  விடை பகரவில்லை என்றே
> > நினைக்கின்றேன்!
> > நீங்கள் கேட்ட மற்றொரு கேள்விக்கு,
> > திருவெழுகூற்றிருக்கையில் "இலக்கண இலக்கியம்" என்னும்

> > தொடரே ஆளப்பட்டுள்ளது. (பார்க்கவும் thevaaram.org <http://thevaaram.org>)


>
> > 012 திருஎழுகூற்றிருக்கை
> > தாதை ஒருடல் திருவடி வாயினை
> > தருமம் மூவகை உலகம் உணரக்
> > கூறுவை நால்வகை
> > இலக்கண இலக்கியம் நலத்தக மொழிந்தனை
> > ஐங்கணை யவனொடு காலனை அடர்த்தனை
> > அறுவகைச் சமயமும் நெறிமையில் வகுத்தனை
>
> > இங்கே என்ன பொருளில் ஆண்டுள்ளார்கள் என்று நீங்கள்
> > நினைக்கின்றீர்கள்?
> > அன்புடன்
> > செல்வா

> > 2011/7/24 Jean-Luc Chevillard <jeanluc.chevill...@gmail.com
> > <mailto:jeanluc.chevill...@gmail.com>>


>
> >     Dear Selva,
>
> >     It is too late for me (here in India) to continue the discussion
> >     for very long
> >     but let me simply observe that when you write
>
> >     <quote>
>

> >     lakshya என்னும் சொல் /இலக்கியம்/ என்னும்


> >     பொருளில் சமசுக்கிருதத்தில் எங்கு
> >     ஆளப்பட்டுளது?
> >     </quote>
>

> >     you seem to make the implicit supposition (by saying "/இலக்கியம்/ என்னும்


> >     பொருளில்")that everybody knows what the பொருள் ("value") of இலக்கியம் is.
>
> >     But this CANNOT BE TAKEN FOR GRANTED.
>
> >     You cannot conclude from the fact
> >     that modern Tamil speakers agree on the meaning of /ilakkiyam/
> >     while used in a modern Tamil text,
> >     to ANOTHER FACT WHICH WOULD BE that when the (apparently) same word
> >     is found in an ancient text (such as the திவாகரம்
> >     or the commentary to the யாப்பருங்கலக் காரிகை), it has the same meaning.
>
> >     Best wishes
>
> >     à demain!
>
> >     -- Jean-Luc (Pondy)
>
> >     On 24/07/2011 22:03, C.R. Selvakumar wrote:
> >>     அன்புள்ள ழான்,
> >>     மிக அருமை!
> >>     மிகத் துல்லியமான, பயனுடைய தரவுகளுக்கு மிக்க நன்றி.
> >>     இலக்கியம் என்பது lakshya என்னும் சமசுக்கிருதச் சொல்லில்
> >>     இருந்து வந்தது என்பதற்கு இந்த எடுத்துக்காட்டுகள்
> >>     போதும் என்கின்றீர்களா?
> >>     நீங்கள் காட்டிய சுட்டியிலேயே

> >>     /இலக்கு, இலங்கு, இலகு/ என்பன உள்ளனவே.
> >>     lakshya என்னும் சொல் /இலக்கியம்/ என்னும்


> >>     பொருளில் சமசுக்கிருதத்தில் எங்கு
> >>     ஆளப்பட்டுளது? சமசுக்கிருதத்துக்கு உறவான மொழிகளில்
> >>     (கிரேக்கம், இலத்தீன்..) எங்கே ஆளப்பட்டுள்ளது? இவை
> >>     பொருத்தமான கேள்விகள் அல்லவா?
> >>     அன்புடன்
> >>     செல்வா
>

> >>     2011/7/24 Jean-Luc Chevillard <jeanluc.chevill...@gmail.com
> >>     <mailto:jeanluc.chevill...@gmail.com>>

> >>         "http://groups.google.com/group/tamilmanram/browse_thread/thread/490af..."
> >>         <http://groups.google.com/group/tamilmanram/browse_thread/thread/490af...>
>
> ...
>
> read more »

வேந்தன் அரசு

unread,
Jul 27, 2011, 7:01:19 AM7/27/11
to tamil...@googlegroups.com


26 ஜூலை, 2011 8:31 pm அன்று, C.R. Selvakumar <c.r.sel...@gmail.com> எழுதியது:

அன்புள்ள ழான்,
 
இதுவரை யாரும் (நீங்கள் உட்பட) 
 
"lakshya என்னும் சொல் இலக்கியம் என்னும்
பொருளில் சமசுக்கிருதத்தில் எங்கு
ஆளப்பட்டுளது?"
 


தேவ ஐயா சொல்லலைனா யார் சொல்லவல்லார்?

--

வேந்தன் அரசு

unread,
Jul 27, 2011, 7:19:29 AM7/27/11
to tamil...@googlegroups.com


25 ஜூலை, 2011 9:14 am அன்று, DEV RAJ <rde...@gmail.com> எழுதியது:

Jul 25, 4:10 am, வேந்தன் அரசு
>>> அதனால் நாங்கள் இயந்திரம் இயல் எனும் வேரின் பிறப்பாக கொண்டு மகிழ்வோம்.  வடமொழிவாணர்கள் அது யந்த்ரமெனும் சொல்லின் பிறப்பாக மகிழலாம் <<<


இயல் + திரம்  ?!


தேவ் ஐயா

இயல் + திறம்  என கூட்டி இயந்திறம் எனறே அழைக்கலாம்
சாத்தியம் என்பதை செய்திறம் எனலாம்

இயந்திரம் தமிழா வடமொழியா என் நிறுவும் செய்திறம் எவருக்கு இல்லை.

ஆனால் ஒரு தமிழ் கிளவியை வடமொழி வார்த்தை என்று யாரேனும் சொல்லிவிட்டால் அது தீட்டு பட்டுவிட்டது என்று தமிழ்வாணர்கள் கொள்ளலாம்.
 


--

Hari Krishnan

unread,
Jul 27, 2011, 10:14:42 AM7/27/11
to tamil...@googlegroups.com


2011/7/27 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>

தேவ் ஐயா

இயல் + திறம்  என கூட்டி இயந்திறம் எனறே அழைக்கலாம்
சாத்தியம் என்பதை செய்திறம் எனலாம்

இயந்திரம் தமிழா வடமொழியா என் நிறுவும் செய்திறம் எவருக்கு இல்லை.

ஆனால் ஒரு தமிழ் கிளவியை வடமொழி வார்த்தை என்று யாரேனும் சொல்லிவிட்டால் அது தீட்டு பட்டுவிட்டது என்று தமிழ்வாணர்கள் கொள்ளலாம்.


அந்தரத்தார் மயனே என ஐயுறும் 
தந்திரத்தால் தம நூல் கரை கண்டவன் 
வெம் திறலான் பெரும் தச்சனைக் கூவி ஓர் 
எந்திர ஊர்தி இயற்றுமின் என்றான்.
--சீவக சிந்தாமணி

மூன்று மடக்குடைப் பாம்பிரண் டெட்டுள
ஏன்ற இயந்திரம் பன்னிரண் டங்குலம்
நான்றஇம் மூட்டை யிரண்டையுங் கட்டியிட்
டூன்றி யிருக்க உடம்பழி யாதே.

--திருமந்திரம், 3ம் தந்திரம், 13 காரிய சித்தி,பாடல் 5

தோமரமும் தொல்லைப் பொறிவீசி யந்திரமும்
காமரமும் ஏப்புழையும் கைகலந்து மீ மருவும்

--பதினோராம் திருமுறை பாடல் 29

ஆகவே, எந்திரம், யந்திரம் இயந்திரம் என்ற மூன்று வடிவங்களில் இச்சொல் ஆளப்பட்டுள்ளது.  இயல் திறம் என்பதில் உள்ள வல்லின றகரம் இலக்கிய ஆட்சிகளில் காணப்படவில்லை.

இயந்திரம், இயல் திறம்தான் என்றால், எந்திரம், யந்திரம் ஆகியவை என்ன வழியில் பிறந்தவை?

--
அன்புடன்,
ஹரிகி.

C.R. Selvakumar

unread,
Jul 27, 2011, 11:18:05 AM7/27/11
to tamil...@googlegroups.com


2011/7/27 Hari Krishnan <hari.har...@gmail.com>
தமிழ் மன்றத்துக்கு வருக வருக ஐயா!
 
நல்ல எடுத்துக்காட்டுகளுடன் விளக்கியுள்ளீர்கள்.
பம்புதல் பம்பரம் என்பது போல் இய-இயக்கு-இயந்திரம்.
 
[தமிழ் சொற்பிறப்பியல் அகராதி இய-இயக்கு-இயந்திரம் என்கிறது]
 
 
திறம்-திரம் ஆகவும் இருக்கலாம்.
 
பல இடங்களில் தமிழ்-சமசுக்கிருதம் கலப்பு ஏற்பட்டு, ஒருமுகப்பட்டும்
போகின்றது, அதனால் எதில் இருந்து எது வந்தது என்று அறிவதும்
சில (அல்லது பல) நேரங்களில் கடினம். யந்த்ர என்னும் சமசுக்கிருதச் சொல்லின் அடிப்பொருள்
தடை, முட்டு என்பது போன்ற பொருடையதாக உள்ளது. தாழ்ப்பாள்
அல்லது துடுப்பு போன்றவற்றுக்கும் பயன்படுகிறது
(மோனியர் வில்லியம்சு அகராதியைப் பார்க்கலாம்;
வாமன் ஆப்தேயின் அகராதியையும்
பார்க்கலாம்)
(சில இடங்களில் பற்றுதல், போன்ற பொருளும் கொள்ளுகின்றது).
 
engine, device, machine என்னும் பொருள்களும் கொள்ளும் என்றாலும்,
அடிப்பொருள் தடை, முட்டு போன்றவை போலவே தெரிகின்றது.
சமசுக்கிருத இலக்கியம் பயின்றவர்கள் விளக்கம் தரலாம்.
 
தமிழில் இயந்திரம் என்பது இய--இயக்கு-இயற்று-இயங்கு என்பது போல்
operate, function என்னும் பொருளில் ஆளப்படுகின்றது. இங்கு செய்கை, நடக்கை, செலுத்துகை, இயங்குகை போன்றவை முதன்மைப் பொருள்களாகத்  தெரிகின்றன.
 
தமிழில் இயந்திரம் என்றால் 'பாத்திரம்' (ஏனம்) என்றும் பொருள் உண்டு.
இங்கே உயந்திரம் --> இயந்திரம் (உய்த்தல் - உட்செலுத்துதல்) ஆக வாய்ப்புள்ளதாக சொற்பிறப்பியல்
அகராதி (செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி) கூறுகின்றது.
 
 
ஏந்துதல் ஏனம் ஆகலாம் என்பது போல் உயந்திரம்-இயந்திரம்-எந்திரம் ஆகலாமோ?  ஆனால் யந்திரம் என்னும்  வழக்கு
தமிழில் இருக்குமா அறியேன் (பதினோராம் திருமுறை பாடல் 29,
எழுத்துப்பிழையாக இருக்குமா என்று சரிபார்த்தல் வேண்டும்).
அது யந்திரம்தான் எனில் சமசுக்கிருதச் சொல்லாக இருக்கலாம்
அல்லது இயந்திரம் என்பதன்
இகரம் நீங்கிய (தமிழில் "தவறான") வடிவாக இருக்கலாம்
(வீசியியந்திரம்
என்பதற்கு மாறாக இரட்டை இகரத்தை விலக்கி வீசியந்திரம் என்று
வருமா என்றும் பார்க்க வேண்டும்; வீசு இயந்திரம் ? ).

Jean-Luc Chevillard

unread,
Jul 27, 2011, 11:45:46 AM7/27/11
to tamil...@googlegroups.com, C.R. Selvakumar, Hari Krishnan, DEV RAJ
Dear Selva,

you wrote

<QUOTE>

(பதினோராம் திருமுறை பாடல் 29,
எழுத்துப்பிழையாக இருக்குமா என்று சரிபார்த்தல் வேண்டும்).

</QUOTE>

I attach to this message a scanned image of the 1852 edition
so that you can check the spelling independantly
(you will find the web site adress where this PDF comes from
at the bottom of each page)

Best wishes

-- Jean-Luc
Pages from 11th tirumuRai (1852).pdf

Hari Krishnan

unread,
Jul 27, 2011, 12:18:38 PM7/27/11
to tamil...@googlegroups.com


2011/7/27 C.R. Selvakumar <c.r.sel...@gmail.com>

திறம்-திரம் ஆகவும் இருக்கலாம்.
 
எனில் பரவை, பறவையாக இருக்கக் கூடுமோ?
மரத்தல், மறத்தலாக இருக்க முடியுமோ?
வரையும் வறையும் ஒன்றாகத்தான் இருக்குமோ?
மரையும் மறையும் ஒன்றுதானோ?
தெரிப்பும் தெறிப்பும் ஒன்றா?
எரிதலும் எறிதலும் ஒன்றாகுமோ?

இடையின, வல்லின ரகர மாறுபாடுகள் பெருத்த (பெறுத்த அன்று!) பொருள் வேறுபாடுடையன.

வீசு யந்திரம் = வீசியந்திரம் என்று ஆகும் ஏது உண்டு.  

யேசு இயேசு ஆகிறார்.  அதே ஏரணத்தில் யோவான் என்ன ஆவார்?  யாகோபு என்ன ஆவார்?  உயோவான், உயாகோபு எல்லாம் வழக்கில் உண்டோ?

DEV RAJ

unread,
Jul 27, 2011, 12:39:41 PM7/27/11
to தமிழ் மன்றம்
>> இயல் + திறம் என கூட்டி இயந்திறம் எனறே அழைக்கலாம் <<


இயல் + திறம் - இயற்றிறம் , இது தவறோ ?
சொல் + திறம் - சொந்திறம் என்றே அழைக்கலாம்.
சொற்றுணை வேண்டாம், சொந்துணை என்றே அழைக்கலாம்.

>> சாத்தியம் என்பதை செய்திறம் எனலாம் <<

சாத்தியம் - ஏன் மாற்றவேண்டும்?
இயம் விகுதி இருப்பதால் தமிழ்ச்சொல் என்றே கொள்ளலாம்.

மகிழ்ச்சி ஏற்பட்டால் சரி


தேவ்

C.R. Selvakumar

unread,
Jul 27, 2011, 2:39:30 PM7/27/11
to tamil...@googlegroups.com


2011/7/27 Hari Krishnan <hari.har...@gmail.com>



2011/7/27 C.R. Selvakumar <c.r.sel...@gmail.com>

திறம்-திரம் ஆகவும் இருக்கலாம்.
 
எனில் பரவை, பறவையாக இருக்கக் கூடுமோ?
மரத்தல், மறத்தலாக இருக்க முடியுமோ?
வரையும் வறையும் ஒன்றாகத்தான் இருக்குமோ?
மரையும் மறையும் ஒன்றுதானோ?
தெரிப்பும் தெறிப்பும் ஒன்றா?
எரிதலும் எறிதலும் ஒன்றாகுமோ?

இடையின, வல்லின ரகர மாறுபாடுகள் பெருத்த (பெறுத்த அன்று!) பொருள் வேறுபாடுடையன.
 
ஓரிடத்தில் வரும் எனில் எல்லாவிடத்தும் வரும் என்று கொள்ளல்
பொருந்தாது எல்லாது அல்லவா?
இந்த எளிய பிழைக்கு எத்தனையோ
எடுத்துக்காட்டுகள் தரலாம்!!
 
திரம் என்றால் உறுதி, உரம் என்றும் பொருள் திட்பமாய் உள்ளதைத்
திரம் எனலாம். செய்திறம் என்றால் செய்யும் வலிய ஆற்றல், செய்திட்பம். செய்திரம் என்றால் செய்யும் உறுதி, செய்யும் திண்மை, செய்திட்பம். 
 
ரகர-றகர வேறுபாடு நன்கு அறிவேன் (தட்டச்சுப்பிழையும்
அவ்வப்பொழுது செய்வேன் !! :) )
 
கார் - கரி-கரு-கறு என்றும்
தேர்-தேர்தல், தேறு - தெளி என்றும்
சேர்-சேறு (தேன் - சேர்ந்து சேகரிப்பது;; நீரும் மண்ணும் சேர்வது; மக்கள் சேரும் திருவிழா, கெட்டியான பொருள் இளகி கலப்பது, பாகு;  சேர்ந்து சீழ் கட்டுதல்- சேர் என்பதே அடிப்படை)
 
என்று நுட்பமாய் திரியும், திறவோர் என்றால் திறமை மிக்கவர்
என்று பொருள், ஆனால் திரவோர் என்றாலும் உறுதி மிக்கவர்,
திறம் மிக்கவர் என்று பொருள் கொள்ள இடம் உண்டு.
 
 

வீசு யந்திரம் = வீசியந்திரம் என்று ஆகும் ஏது உண்டு.  
 
வீசு+ இயந்திரம் என்பது வீசியந்திரம் என்று ஆகுமா? அல்லது
வீச்சியந்திரம் என்று ஆகுமா?  அல்லது வேறு வகையாகுமா?
 
இதனை (வீசு+இயந்திரம்) வினைத்தொகையாகக் கொண்டால்
உ+இ எப்படி மாறும்?  காசு + இல்லாதவன் என்பது வினைத்தொகை
அன்று, ஆனால் காசில்லாதவன், காசிலான் என்று ஆகும் அல்லவா?
பேசு+இயந்திரம் பேச்சியந்திரம் ஆகுமா பேசியந்திரம் என்றும்
சொல்லாமா? (பேரா. தெய்வசுந்தரம் அவர்கள் அல்லது, பேரா
நாச்சிமுத்து அவர்கள்??)
 
என் கேள்விக்குக் காரணம், தேவாரத்தில் தமிழ் மரபுக்கு மாறாக
யந்திரம் என்று ஆண்டிருப்பார்களா (யகரத்தில் தொடங்கி)
என்பதே. வேறு எங்கும்
யந்திரம் என்று திருமுறைகளில் ஆண்டிருப்பதாகத் தெரியவில்லை.
இதில் ஏதோ தவறு இருப்பதாக உணர்கின்றேன் (யந்திரம் எனில்).
அது இயந்திரமாகத்தான் இருக்க வேண்டும் என்பது என் துணிபு!
பிழை எனில் திருத்திக்கொள்ள தயக்கம் இல்லை!!
 
பேரா. ழான், மிக்க நன்றி (பி.டி.எப் படிக்கு).
 

யேசு இயேசு ஆகிறார்.  அதே ஏரணத்தில் யோவான் என்ன ஆவார்?  யாகோபு என்ன ஆவார்?  உயோவான், உயாகோபு எல்லாம் வழக்கில் உண்டோ?

 
 
ஏசு, யேசு என்பது திட்டுவது போல் உள்ளது (யேசு என்பது தமிழ்
முறைக்கு முரண்பட்டும் வருகின்றது), எனவே இயேசு
என உள்ளது நினைக்கின்றேன்.
இயோவான் என்பதே சரியாக இருக்கும், ஆனால்
யாரையும் திட்டுவது போல இல்லாததால் யோவான்? 
யாகோபு என்பதில் என்ன குறை? யார், யாவை, யாவர் என்று யா என்னும்
எழுத்தில் தமிழில் தொடங்கலாமே? 
 
அன்புடன்
செல்வா
 
(உடனே மறுமொழி இல்லை எனில் தவறாக நினைக்கவேண்டாம்...
வரும் சில நாட்களில் நேரம் அருகியே கிட்டும்!! எனினும் எழுத இயலும்..).
 


--
அன்புடன்,
ஹரிகி.

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tamilmanram...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.

C.R. Selvakumar

unread,
Jul 27, 2011, 2:59:36 PM7/27/11
to tamil...@googlegroups.com
 
ஓரிடத்தில் வரும் எனில் எல்லாவிடத்தும் வரும் என்று கொள்ளல்
பொருந்தாது எல்லாது அல்லவா?
 
ஓரிடத்தில் வரும் எனில் எல்லாவிடத்தும் வரும் என்று கொள்ளல்
பொருந்தாது, ஏலாது , அல்லவா?
 
எனத் திருத்திப் படிக்க வேண்டுகிறேன்.

வேந்தன் அரசு

unread,
Jul 27, 2011, 8:59:25 PM7/27/11
to tamil...@googlegroups.com


27 ஜூலை, 2011 10:14 am அன்று, Hari Krishnan <hari.har...@gmail.com> எழுதியது:


ஐயகோ!
 நான் இயந்திறம் எனும் புது சொல்லை படைத்தேன்
அது எந்திரம் இயந்திரம் யந்திரம் யாவுக்கும் மாற்று. அது  கறைபடியாத தமிழ் கிளவி.

வேந்தன் அரசு

unread,
Jul 27, 2011, 9:16:35 PM7/27/11
to tamil...@googlegroups.com


27 ஜூலை, 2011 12:39 pm அன்று, DEV RAJ <rde...@gmail.com> எழுதியது:

>> இயல் + திறம்  என கூட்டி இயந்திறம் எனறே அழைக்கலாம் <<


இயல் + திறம் - இயற்றிறம் , இது தவறோ ?
சொல் + திறம் - சொந்திறம் என்றே அழைக்கலாம்.
சொற்றுணை வேண்டாம், சொந்துணை  என்றே அழைக்கலாம்.

>> சாத்தியம் என்பதை செய்திறம் எனலாம் <<

சாத்தியம் - ஏன் மாற்றவேண்டும்?
இயம் விகுதி இருப்பதால் தமிழ்ச்சொல் என்றே கொள்ளலாம்.

மகிழ்ச்சி ஏற்பட்டால் சரி

வேணாமுங்க ஐயா

ஒபாமா அம்மா வெள்ளை என்றாலும் அவர் கருப்பினமாகவே  வைக்கப்படுகிறார் .

அதுபோலவே சாத்தியம்

இராமகி ஐயா பல கலைச்சொற்களை ஆங்கிலம் ஒலிப்பது போல் மொழி ஆக்கம் செய்வார்

தெர்மோ டைனமிக்ஸ் என்பதை ”தெறும துனவியியல்” என இயற்றினார்.

நாளை துரைமார்கள்,

தெர்மோ டைனமிக்ஸ் என்பதே தெறும துனவியல்  என திரிந்தது என எள்ளுவார்கள்.  ஐயா அதை அறியார்

iraamaki

unread,
Jul 27, 2011, 11:53:01 PM7/27/11
to tamil...@googlegroups.com
நண்பரே!
 
எனக்குப் புரியவில்லை.  என்னை வம்புக்கு இழுக்கிறீர்களா, என்ன?
 
”அவன் எள்ளுவான், இவன் எள்ளுவான்” என்று துரைமார்களைப் பார்த்து  நாம் சுருங்கிக் கொண்டேயிருந்தால் ”உள்ளதும் போச்சுடா,  தொள்ளைக் காதா” என்று நம் நிலை ஆகிவிடும். அவர்களுக்கு நிகழ்ப்பு வேறு.  தமிழில் அறிவியல், நுட்பியற் கலைச்சொற்கள் எழுவது அதில் ஈடுபடுவோர் கையில் இருக்கிறது. ”எல்லாவிதத்” துரைமார்களைக் கேட்டுக் கொண்டு அது நடப்பதில்லை.
 
துனைவுக்கு விரைவுப் பொருள் தொல்காப்பியம் சொல்லுகிறது. தெறும் என்பது சூட்டுப் பொருளில் திருக்குறளில் இருக்கிறது. நான் செய்தது இவ்விரண்டையும் இணைத்து ஒரு கலைச்சொல் உருவாக்கியது தான்.  இதிற் பாதியை ப. அருளி ஏற்கனவே செய்திருக்கிறார். இதிற் தவறு இருப்பதாய் எனக்குத் தோன்றவில்லை.
 
ஓதக (professional) அடிப்படையில் நான் ஒரு தெறுமத் துனைவியலாளன் (thermodynamicist). இதைப் பெருமிதத்தோடு சொல்லிக் கொள்வேன். 
 
அன்புடன்,
இராம.கி.

DEV RAJ

unread,
Jul 28, 2011, 1:28:23 AM7/28/11
to தமிழ் மன்றம்
Jul 27, 7:16 pm, வேந்தன் அரசு

>> சாத்தியம் என்பதை செய்திறம் எனலாம் <<


சாத்தியம் செய்திறம் ஆகாது; செய்திறம் - த³க்ஷதா ,efficiency
சாத்தியம் என்பதை practicable, feasible, attainable எனும் பொருளில்தான்
பெரும்பாலும் பயன்படுத்துகிறோம்.

साध्य (sādhyá)
1. to be subdued or mastered or won or managed, conquerable,
amenable
2. to be summoned or conjured up
3. to be set to rights, to be treated or healed or cured
4. to be formed (grammatically)
5. to be cultivated or perfected
6. to be accomplished or fulfilled or brought about or effected or
attained, practicable, feasible, attainable
7. being effected or brought about, taking place
8. to be prepared or cooked
9. to be inferred or concluded
10. to be proved or demonstrated
11. to be found out by calculation
12. to be killed or destroyed


தேவ்

Hari Krishnan

unread,
Jul 28, 2011, 2:55:31 AM7/28/11
to tamil...@googlegroups.com


2011/7/28 DEV RAJ <rde...@gmail.com>


சாத்தியம் செய்திறம் ஆகாது;  செய்திறம் - த³க்ஷதா ,efficiency
சாத்தியம் என்பதை  practicable, feasible, attainable எனும் பொருளில்தான்
பெரும்பாலும் பயன்படுத்துகிறோம்.

சாத்தியம் என்பது possibility என்ற பொருளையும் உள்ளிட்டது.  வாய்ப்பு என்ற சொல்லைப் பயன்படுத்தலாம்.  

இந்தப் பணி கிடைப்பதற்கான சாத்தியம்/வாய்ப்பு உள்ளது..... என்பது போல.

iraamaki

unread,
Jul 28, 2011, 5:14:54 AM7/28/11
to tamil...@googlegroups.com
அன்பிற்குரிய வேந்தரே!
 
சாத்தியம் என்கிற சொல்லுக்குள் இருக்கும் தமிழ்வேரைப் பார்க்க மாட்டேன் என்கிறீர்கள்.
 
சால்(லு)-தல் = 1. நிறைதல் to be abundant, full, extensive ”ஈடுசால் பேர்” (சீவக.59) 2 மாட்சி பெறுதல், to excel in moral worth; to great, noble. 3. பொருந்துதல் to be suitable, fitting, ”இந்திரனே சாலும் கரி” (குறள் 25) 4. முற்றுதல் to be finished, exhausted. ”தாமத்தாரினர் எண்ணினுஞ் சால்வரோ” (கம்பரா. பிணிவீட்டு. 97) 5. போதியதாதல் to be all that is required, to be sufficient.
 
ம.சாலு; க.,து. சாலு;  தெ.சாலு; கோத. சலு; துட.சௌலு.
 
ஆக இந்தச் சொல் தமிழில் மட்டுமில்லை. திராவிட மொழிகள் 4,5 இல் உள்ளது.  மேலே கொடுத்த பொருட்பாடுகளில் ஐந்தாவது பொருட்பாட்டிற்றான் சாத்தியம் என்ற பெயர்ச்சொல் இப்பொழுது உலவுகிறது.  ( ”அம் எனச் சொல் முடிந்தால் ஒருவேளை வடமொழியாய் இருக்குமோ?” என்று  நீங்கள் ஐயுறுவீர்களே அந்தக் கருதுகோளுக்கு இதுவோர் எடுத்துக் காட்டு.  பலநேரம் வினைச்சொல் தமிழில் இருக்கும் பெயர்ச்சொல் மட்டும் வேறு எங்கோ இருக்கும். தமிழுக்கே உரிய பெயர்ச்சொல்லை உருவாக்காது இந்த வெளியூர்ப் பெயர்ச்சொல்லை நாம் கடன் வாங்கிப் பயன்படுத்தியிருப்போம். இப்படிப் பல சொற்கள் தமிழில் உள்ளன.)
 
சாலுதல் என்ற வினைச்சொல் இங்கிருக்கிறது. தமிழிலேயே பெயர்ச்சொல் உருவாக்குவது உங்கள் உகப்பு. சாலுகை  என்பது என்னுடைய பரிந்துரை. அதை ஏற்கத் தேவையில்லை. நீங்களே ஒன்றைத் தேரலாம்.
 
அன்புடன்,
இராம.கி.

Sent: Wednesday, July 27, 2011 4:49 PM

DEV RAJ

unread,
Jul 28, 2011, 7:24:35 AM7/28/11
to தமிழ் மன்றம்
Jul 27, 12:39 pm, "C.R. Selvakumar"
>>> ஆனால் திரவோர் என்றாலும் உறுதி மிக்கவர்,திறம் மிக்கவர் என்று பொருள் கொள்ள இடம் உண்டு <<<


’திரம்’ ஸ்திரத்தின் திரிபானதால் உறுதி என்று பொருள் தருகிறது.


திரம் (p. 585) [ *tiram ] --ஸ்திரம், s. Firmness, fixed ness,
stability, உறுதி. 2. Soundness, strength, பலம். 3. Hardness, solidity,
உரம். 4. Per manence, durableness, நிலை. 5. Constancy.
unchangeableness, மாறாமை. (c.) 6. Final em ancipation, முத்தி. 7. Four
stationary signs supposed to be propitious. (See திரராசி.) 8. The
plant தகரைச்செடி


http://dsal.uchicago.edu/cgi-bin/romadict.pl?query=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D&table=winslow

தேவ்

On Jul 27, 12:39 pm, "C.R. Selvakumar" <c.r.selvaku...@gmail.com>
wrote:
> 2011/7/27 Hari Krishnan <hari.harikrish...@gmail.com>
>
>
>
>
>
> > 2011/7/27 C.R. Selvakumar <c.r.selvaku...@gmail.com>

> *யந்திரம்* என்று திருமுறைகளில் ஆண்டிருப்பதாகத் தெரியவில்லை.

வேந்தன் அரசு

unread,
Jul 28, 2011, 7:27:13 AM7/28/11
to tamil...@googlegroups.com


28 ஜூலை, 2011 5:14 am அன்று, iraamaki <iraa...@bsnl.in> எழுதியது:

அன்பிற்குரிய வேந்தரே!
 
சாத்தியம் என்கிற சொல்லுக்குள் இருக்கும் தமிழ்வேரைப் பார்க்க மாட்டேன் என்கிறீர்கள்.
 
 
இராமகி ஐயா
 
நான் தமிழும் வடமொழியும் அக்கை தங்கை உறவு உடையன என்று கருதுபவன்.  அறுதியாக சொல்லுமளவு எனக்கு பிறமொழி புலமை இல்லை
 
காமம் சாலா
சால சிறந்தது
சான்றோர் என்றால் புலமை/அறிவு மிக்கவர்
பலசாலி
 
 
பலசாலி தமிழ் வேர் எனினும் வடசொல் தான்
 
வலசாலினு நாம் படைக்கலையே
 
சால் என்பது சாத்தியத்தின் வேராக இருக்கலாம். 
எனின், விந்து தமிழானாலும்  வடவர் பெற்ற பிள்ளைதான்
 
>தமிழில் இருக்கும் பெயர்ச்சொல் மட்டும் வேறு எங்கோ இருக்கும். தமிழுக்கே உரிய பெயர்ச்சொல்லை உருவாக்காது இந்த வெளியூர்ப் பெயர்ச்சொல்லை நாம் கடன் வாங்கிப் பயன்படுத்தியிருப்போம்
 
உண்மை
 
”சாத்தியமான அளவு” க்கு மாற்று,
கூடுமான அளவு
முடிந்தவரை
இயன்ற வரைக்கும்
ஒல்லும் வகையான்
 
இவற்றை பெயர்சொல்லாக பயன்படுத்தும் போது,
 
அது நடப்பது ”சாத்தியம்”  இல்லை எனும் சொல்லுக்கு மாற்று இல்லையே.
 
>சாலுகை  என்பது என்னுடைய பரிந்துரை
 
அதே போல் சால்பு எனும் சொல் துருவேறிக்கிடக்கு
அதை மீட்டு  பயன்படுத்தலாம்
 
நாலுமுறை பயன்படுத்தினால் அது நடைமுறை ஆகிடுமே
 
 

வேந்தன் அரசு

unread,
Jul 28, 2011, 7:32:15 AM7/28/11
to tamil...@googlegroups.com


28 ஜூலை, 2011 7:24 am அன்று, DEV RAJ <rde...@gmail.com> எழுதியது:

Jul 27, 12:39 pm, "C.R. Selvakumar"
>>> ஆனால் திரவோர் என்றாலும் உறுதி மிக்கவர்,திறம் மிக்கவர் என்று பொருள் கொள்ள இடம் உண்டு <<<


’திரம்’ ஸ்திரத்தின் திரிபானதால் உறுதி என்று பொருள் தருகிறது.


 
ஸ்திரம் திடத்தின் திரிபாக இருக்கலாம்
 
மனோ திடம்
திடகாத்திரம்
 
திடம் எனும் சொல் திண்மை, திண்டு, திட்டு எனும் கூட்டத்தில் ஒன்னு
 
வேற்று மொழிகளில் சில தமிழ் சொற்களுக்கு முன் ஸ் வரும்
பிளவு = ஸ்பிளிட்
பிரிவு= ஸ்பெரேசன்=செப்பரேசன்-
 
(எல்லாம் என் ஊகம்தான்)

C.R. Selvakumar

unread,
Jul 28, 2011, 8:00:14 AM7/28/11
to tamil...@googlegroups.com


2011/7/28 DEV RAJ <rde...@gmail.com>

Jul 27, 12:39 pm, "C.R. Selvakumar"
>>> ஆனால் திரவோர் என்றாலும் உறுதி மிக்கவர்,திறம் மிக்கவர் என்று பொருள் கொள்ள இடம் உண்டு <<<


’திரம்’ ஸ்திரத்தின் திரிபானதால் உறுதி என்று பொருள் தருகிறது.


திரம் (p. 585) [ *tiram ] --ஸ்திரம், s. Firmness, fixed ness,
stability, உறுதி. 2. Soundness, strength, பலம். 3. Hardness, solidity,
உரம். 4. Per manence, durableness, நிலை. 5. Constancy.
unchangeableness, மாறாமை. (c.) 6. Final em ancipation, முத்தி. 7. Four
stationary signs supposed to be propitious. (See திரராசி.) 8. The
plant தகரைச்செடி


http://dsal.uchicago.edu/cgi-bin/romadict.pl?query=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D&table=winslow


 
இப்படி யாரேனும் பேசுவர், சுட்டுவரென்று
எனக்கு நன்கு தெரியும் :)
எப்பொழுதும் போல் வையாபுரியார் சமசுக்கிருத வேர் காட்டுவார்,
அதனை யாரேனும் எடுத்துக்காட்டுவர் என்றே நினைத்தேன்.
 
திர்-திரம் என்பது தமிழ்.
மல்-மல்கு- என்றால் பெருகுதல் மலை;
மல்லன் என்றால் வலிமையுடையவன்.
திர்-திரள்-திரட்டு, திரை (திரை செலுத்துதல்) -
திரள்-திரண்-திரண்ட
திர்-திரள் திள்-திளை(த்தல்),
திள்-திண்- திண்மை; திண்-திட் - திட்டு, திடம்
எனவே திரம் என்பது உரம், உறுதி என்பது
தமிழ்ப்பொருள், தமிழ்ச்சொல்.
 
வையாபுரியாரை நான் மதிக்காததாக யாரும் கருத
வேண்டாம், நான் மதிக்கின்றேன்,
அதனால் அவர் கூறும் யாவற்றையும் ஏற்பவன் அல்லன்.
அவர் பெரும்புகழாளர், மெய்யான அறிவாளிதான்,
என்றாலும் தமிழைத் தவறுதலாகக் குறைத்து மதிப்பிட்டார்,
இல்லாத சமசுக்கிருதச் சாய்வுகளை
வலிந்து தந்துள்ளார். (அண்மையில் மணி மணிவண்ணன்
தன் வலைப்பதிவில் வையாபுரியாருக்கும் இன்னொருவருக்கும் நடந்த
உரையாடலைப் பதிவு செய்திருந்தார்,
அதனைப் படித்தால் தெரியும் அவருடைய சமசுக்கிருதச் சாய்வு).
 
திரம் தமிழ்தான் தமிழில் உரம், உறுதி என்னும் பொருள் தமிழ்வழியே
பெறுவதே.

C.R. Selvakumar

unread,
Jul 28, 2011, 9:44:40 AM7/28/11
to tamil...@googlegroups.com
வையாபுரியாரின் இன்னொரு கண்டுபிடிப்பு:
திரம்-திராணி தொடர்பற்றது.
திராணி = ஆற்றல்  என்னும்
தமிழ்ச்சொல் त्राण என்னும் சமசுக்கிருதச்சொல்லில் இருந்து
வந்திருக்கலாம் என்பார்.
இப்படி பற்பல சொற்களைச் சமசுக்கிருதச்
சொல்லாகக் காட்டுவார்.
 
[வையாபுரியார் திரம் என்பது स्थिर (ஸ்தி²ர) என்பதில் இருந்து வந்தது என்பார், திராணி என்பது त्राण (த்ராண) என்பதில் இருந்து
வந்திருக்கலாம் என்பார்; त्राण (த்ராண) என்றால் 'protected' என்னும்
மோனியர்-வில்லியம்சு போன்ற அகராதிகள்]
 
திரம், திரட்டு, திரணை (திரண்டது), திரை (திரைதல்-திரளுதல்),
திரள், திரண்ட, திரள்-திள்-திளை,
திள்-திண், திண்ணை, திண்-திட்டு, திட்டம், திடம் திட்பம், என்பதெல்லாம் திண்ணமாகத் தமிழ்தான்.
 
அன்புடன்
செல்வா



 
2011/7/28 C.R. Selvakumar <c.r.sel...@gmail.com>

DEV RAJ

unread,
Jul 28, 2011, 10:26:18 AM7/28/11
to தமிழ் மன்றம்
Jul 28, 7:44 am, "C.R. Selvakumar"

>> திராணி = ஆற்றல் என்னும் தமிழ்ச்சொல் त्राण என்னும் சமசுக்கிருதச்சொல்லில் இருந்து வந்திருக்கலாம் என்பார் <<

த்ராணம் - காப்பு, துணை; பரித்ராணம் - நற்றுணை,
பாத த்ராணம் - காலணி. மோனியர்-வில்லியம்ஸ் தருவது சரியான தகவல்.

திராணிக்கும் இதற்கும் தொடர்பில்லை.
திராணி, விரயம், ஆதாயம், சில்மிஷம் - வடமொழிபோல் தோன்றும் சொற்கள்; வ மொ
இல்லை


தேவ்

On Jul 28, 7:44 am, "C.R. Selvakumar" <c.r.selvaku...@gmail.com>
wrote:


> வையாபுரியாரின் இன்னொரு கண்டுபிடிப்பு:
> திரம்-திராணி தொடர்பற்றது.
> திராணி = ஆற்றல்  என்னும்
> தமிழ்ச்சொல் त्राण என்னும் சமசுக்கிருதச்சொல்லில் இருந்து
> வந்திருக்கலாம் என்பார்.
> இப்படி பற்பல சொற்களைச் சமசுக்கிருதச்
> சொல்லாகக் காட்டுவார்.
>
> [வையாபுரியார் திரம் என்பது स्थिर (ஸ்தி²ர) என்பதில் இருந்து வந்தது என்பார்,
> திராணி என்பது त्राण (த்ராண) என்பதில் இருந்து
> வந்திருக்கலாம் என்பார்; त्राण (த்ராண) என்றால் 'protected' என்னும்
> மோனியர்-வில்லியம்சு போன்ற அகராதிகள்]
>
> திரம், திரட்டு, திரணை (திரண்டது), திரை (திரைதல்-திரளுதல்),
> திரள், திரண்ட, திரள்-திள்-திளை,
> திள்-திண், திண்ணை, திண்-திட்டு, திட்டம், திடம் திட்பம், என்பதெல்லாம்
> திண்ணமாகத் தமிழ்தான்.
>
> அன்புடன்
> செல்வா
>

> 2011/7/28 C.R. Selvakumar <c.r.selvaku...@gmail.com>


>
>
>
> >  2011/7/28 DEV RAJ <rde...@gmail.com>
>
> >> Jul 27, 12:39 pm, "C.R. Selvakumar"
> >> >>> ஆனால் திரவோர் என்றாலும் உறுதி மிக்கவர்,திறம் மிக்கவர் என்று பொருள்
> >> கொள்ள இடம் உண்டு <<<
>
> >> ’திரம்’ ஸ்திரத்தின் திரிபானதால் உறுதி என்று பொருள் தருகிறது.
>
> >> திரம் (p. 585) [ *tiram ] --ஸ்திரம், s. Firmness, fixed ness,
> >> stability, உறுதி. 2. Soundness, strength, பலம். 3. Hardness, solidity,
> >> உரம். 4. Per manence, durableness, நிலை. 5. Constancy.
> >> unchangeableness, மாறாமை. (c.) 6. Final em ancipation, முத்தி. 7. Four
> >> stationary signs supposed to be propitious. (See திரராசி.) 8. The
> >> plant தகரைச்செடி
>

> >>http://dsal.uchicago.edu/cgi-bin/romadict.pl?query=%E0%AE%A4%E0%AE%BF...

> ...
>
> read more »

C.R. Selvakumar

unread,
Jul 28, 2011, 11:27:17 AM7/28/11
to tamil...@googlegroups.com


2011/7/28 DEV RAJ <rde...@gmail.com>
Jul 28, 7:44 am, "C.R. Selvakumar"

>> திராணி = ஆற்றல்  என்னும் தமிழ்ச்சொல் त्राण என்னும் சமசுக்கிருதச்சொல்லில் இருந்து வந்திருக்கலாம் என்பார் <<

த்ராணம் - காப்பு, துணை;  பரித்ராணம் - நற்றுணை,
பாத த்ராணம் - காலணி. மோனியர்-வில்லியம்ஸ் தருவது சரியான தகவல்.

திராணிக்கும் இதற்கும் தொடர்பில்லை.
திராணி, விரயம், ஆதாயம், சில்மிஷம்  - வடமொழிபோல் தோன்றும் சொற்கள்; வ மொ
இல்லை

 
நன்றி.
 
திராணி-திறாணி என்பதும் ர-ற மாற்றம் பெறும் சொற்களுள் ஒன்று.
திறவது (வல்லின றகரம்) என்றால் உறுதியானது, வலிமையானது என்று பொருள். திரம்-திறம் (பொருள் வேறுபாடு உண்டெனினும், அடியே ஒற்றுமையும் உண்டு). ஒரு-ஒற்றுமை என்னும் சொற்கள் போல்.
ஒறுத்தல் என்பது "ஒருவழியாக்குதல்" என்றும் கிண்டலாகச் சொல்லலாம்!

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tamilmanram...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.

N. Ganesan

unread,
Jul 30, 2011, 2:49:18 PM7/30/11
to தமிழ் மன்றம்

On Jul 27, 2:16 am, DEV RAJ <rde...@gmail.com> wrote:
> *மிழலைமேவிய விலக்கணா*
>

> மிழலை மேவியஇலக்கணா


> மிழலை மேவிய விலக்கணா
>
> இருவிதமாகவும்  கொள்ளலாம் என நினைக்கிறேன்;
> விலக்கணம் - விலக்ஷணம் (தனிச்சிறப்பு)
>
> தேவ்
>

ஆம். சுப்ரமண்யையர் ஏன் குறிப்பிடவில்லை என்று தெரியலை.

விலக்ஷணன் - அழகன் என்று கொண்டால் சுந்தரர், அழகியார், அழகர்
என்னும் ஈசன் திருப்பெயர்கள் நினைவுக்கு வரும்.

இலக்கணம் என்றால் பொதியிலிலோ, சங்கத்திலோ தமிழாய்ந்தது
நினைவுக்கு வரும். “நன்பாட்டுப் புலவனாய் சங்கமேறி
நற்கனகக்கிழி தருமிக்கு அளித்தான் காண்” - தேவாரம்.
கிழி என்பதன் ஆய்வை அழகாக ஹரிகி விளக்கினார் ஒருமுறை.
அல்லது வடமொழிக்கும் (அதன்பின் தென்மொழிக்கும்)
எழுத்துக் கற்பித்தவர் சிவபிரான் என்னலும் தகும்.
சிவசூத்திரங்களை அடிப்படையாய்க் கொண்டு
பாணிநீயம் எழ, தொல்காப்பியம் அதன் மாபாடியத்தைக்
கண்டு செய்தனர், இன்னம்பரில் (தெ ஹிந்து குடும்ப ஊர்)
தேவாரம் படித்துப் பார்க்கவும். இறைவன்: எழுத்தறிநாதர்.
இலக்கணன் - அழகன் (அ) இலக்கணம் தந்தவன் எனலாம்.

நா. கணேசன்

வேந்தன் அரசு

unread,
Jul 30, 2011, 5:40:10 PM7/30/11
to tamil...@googlegroups.com


30 ஜூலை, 2011 2:49 pm அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:


ஆம். சுப்ரமண்யையர் ஏன் குறிப்பிடவில்லை என்று தெரியலை.

விலக்ஷணன் - அழகன் என்று கொண்டால் சுந்தரர், அழகியார், அழகர்
என்னும் ஈசன் திருப்பெயர்கள் நினைவுக்கு வரும்.

இலக்கணம் என்றால் பொதியிலிலோ, சங்கத்திலோ தமிழாய்ந்தது
நினைவுக்கு வரும். “நன்பாட்டுப் புலவனாய் சங்கமேறி
நற்கனகக்கிழி தருமிக்கு அளித்தான் காண்” - தேவாரம்.
கிழி என்பதன் ஆய்வை அழகாக ஹரிகி விளக்கினார் ஒருமுறை.
அல்லது வடமொழிக்கும் (அதன்பின் தென்மொழிக்கும்)
எழுத்துக் கற்பித்தவர் சிவபிரான் என்னலும் தகும்.
சிவசூத்திரங்களை அடிப்படையாய்க் கொண்டு
பாணிநீயம் எழ, தொல்காப்பியம் அதன் மாபாடியத்தைக்
கண்டு செய்தனர், இன்னம்பரில் (தெ ஹிந்து குடும்ப ஊர்)
தேவாரம் படித்துப் பார்க்கவும். இறைவன்: எழுத்தறிநாதர்.
இலக்கணன் - அழகன் (அ) இலக்கணம் தந்தவன் எனலாம்.

எழுத்தாளர்கள் முழுக்கதை எழுதுமுன் கதை சுருக்கம் எழுதிவைத்துக்கொள்வார்கள். கணேசர் எழுத்து அப்படித்தான் எனக்கு தோணுது. ஒன்னுமே புரியலே


--

DEV RAJ

unread,
Jul 30, 2011, 10:14:34 PM7/30/11
to தமிழ் மன்றம்
*மிழலைமேவிய விலக்கணா*

Jul 30, 11:49 pm, "N. Ganesan"


>>> தேவாரம் படித்துப் பார்க்கவும். இறைவன்: எழுத்தறிநாதர்.
இலக்கணன் - அழகன் (அ) இலக்கணம் தந்தவன் எனலாம் <<<


ஆம்
மொழிக்கும், இறைமைக்கும் தொடர்புள்ளது;
மொழிக்குக் காரணமாகவும் இருக்கிறது.
மொழிகளைக் கடந்த பேரமைதி வடிவாகவும் (நி:சப்த) இறைமை விளங்குகிறது.
அதுவே அதன் தனிச்சிறப்பு (வைலக்ஷண்யம்).

சப்³த³பதயே நம​: |
சப்³தா³கோ³சராய நம​: |
நி:சப்³தா³ய நம​: |
ப்ரணவாய நம​: |
விலக்ஷணாய நம​: |


தேவ்

Reply all
Reply to author
Forward
0 new messages