C.R. Selvakumar
unread,Apr 16, 2012, 10:05:46 AM4/16/12Sign in to reply to author
Sign in to forward
You do not have permission to delete messages in this group
Either email addresses are anonymous for this group or you need the view member email addresses permission to view the original message
to tamil...@googlegroups.com, ndsundaram, E. Annamalai, rajam
மிக்க நன்றி இராம.கி ஐயா,
நான் கீழ்க்காணுமாறு சிறீதரன் குறிப்பிட்ட இடத்தில் எழுதினேன்.
நினைவு கூறப்பட்டது என்பது தவறு. இக் கூற்று என்ன பொருள் தரவல்லது? நினைவு சொல்லப்பட்டது என்றால் எப்படிப் பொருள் தராதோ அதே போல நினைவு கூறப்பட்டது என்றாலும் அது பொருள் தராத ஒரு கூற்று. கூர் என்பது பெரும்பாலும் நினைவு கூர்தல் என்னும் சூழலில் பயன்படும் சொல். கூர்ந்தார் என்பது போல் வினைச்சொல்லாகவும் பயன்படும் சொல். கூர் என்பது பெயர்ச்சொல்லாகவும் பயன்படும். கழக அகராதி கூர்தல் என்பதற்கு "''ஆராய்தல், கூருதல், நுணுகுதல், மிகுதல், விரும்புதல், வளைதல், ஒடுங்குதல்''" என்கிறது. இங்கே ''நினைவு கூர்தல்'' என்பது நினைவுக்கு (துல்லியமாகக்) கொண்டு வருதல் என்று பொருள். தீர் என்னும் சொல் தீர்தல் தீருதல் என்னும் வடிவுகள் கொள்ளுதல்போல், கூர்தல், கூருதல் என்றும் ஆகும். சேரல், தீரல், என்பன போல் கூரல் என்னும் சொல் வடிவமும் கொள்ளும் என்றே நினைக்கின்றேன். ''கூரப்பட்டது'' என்பது சரி. சேர் சேர்கின்றார் என்பது போல கூர் கூர்கின்றார் என்று வரும். சேர்-சேரினார் என்று வராது சேர்ந்தார் என்று வரும், அது போலவே கூர்ந்தார் என்று வரும், (நினைவு) கூரினார், கூராது போனார் என்றும் வரும் என்று தோன்றினாலும், சிறு ஐயப்பாடு உள்ளது. கூருதல் என்னும் வடிவும் கொடுக்கப்பட்டுள்ளதால், கூரினார், கூராது போனார் என்பன சரியான வடிவங்களாக இருக்கும் வாய்ப்பு உண்டு. தலைப்பு, '''டைட்டானிக்குக் கப்பல் மூழ்கிய 100-ஆவது ஆண்டை நினைவு கூர்ந்தனர்''' என்று இருந்தால் எப்பிழையும் கட்டாயம் இல்லை (தைட்டானிக்கு என்றும் எழுதலாம்).
கூரென்னேவல் என்று கழக அகராதி கூறுகின்றது. சேர், தீர் என்னும் வினைகள் செயப்பாட்டு வினையாகப் பயன்படாமல்
அவர் கல்லூரியில் சேர்ந்தார் என்றும், சிக்கல் தீர்ந்தது என்றும் சொல்வது போல் நேரடியான செயப்பாட்டுப் பொருள் கொள்ளாமல்
வரும் சொல்லாக கூர் (தல்) என்னும் வரும். நினைவு கூர்ந்தார் (கல்லூரியில் சேர்ந்தார் என்பது போல). கூரப்பட்டது என்பது கூரப்படு என்னும் வினையின் வடிவம். இது செயப்பாட்டு வினை வடிவம் அல்லவா? சிக்கல் தீரப்பட்டது என்று கூற முடியாது. சிக்கல்
தீர்க்கப் பட்டது. அவன் கல்லூரியில் சேர்க்கப்பட்டான் என்றே வரும். ஆகவே கூரப்பட்டது என்னும் வினைவடிவம் காணப்பட்டது என்பது (காண்- காணப்படு) போல் வருகின்றது. தீர், சேர், ஈர், பார், தேர், தூர் (காது, கிணறு) என்பது போன்று
மெய்+நெடில் உயிர் + ர் என்று வரும் வினைகள் ஏதேனும் இப்படி செயப்பாட்டு வினை வடிவம் கொண்டுள்ளதா? கூரப்பட்டது என்பது செயப்பாட்டு வினைதானே. பேராசிரியர் தெய்வசுந்தரம், பேராசிரியர் அண்ணாமலை, முனைவர் இராசம் அவர்கள் போன்ற துறையறிஞர்களும் வல்லுநர்களும் கருத்துரைத்தால் நன்றாக இருக்கும்.
கூரினார் என்று கூறுதல் என்பது சரியன்றுதானே! (சேரினார், தீரினார் என்றெல்லாம் வராதே!).
மேலே என் கூற்றுகளில்ஏதேனும் கருத்துப் பிழைகள் இருந்தால் அருள்கூர்ந்து திருத்த வேண்டுகிறேன்.
நன்றி
அன்புடன்
செல்வா
--
Regards
Selva
___________________
C.R.(Selva) Selvakumar