நினைவு கூரல்

1,152 views
Skip to first unread message

Sri Sritharan

unread,
Apr 15, 2012, 6:09:32 PM4/15/12
to tamil...@googlegroups.com
அன்புடையீர்
 
நினைவு கூரல், நினைவு கூறுதல் எது சரி?
 
பார்க்க: http://bit.ly/HMb2zw

அன்புடன்
சிறீதரன்

iraamaki

unread,
Apr 15, 2012, 11:25:15 PM4/15/12
to tamil...@googlegroups.com
அன்பிற்குரிய சிறீதரன்,
 
நினைவு கூரல் என்பதே சரி. கூர்தல்= பல்வேறு நினைவுகளில் ஒரு குறிப்பிட்ட நினைவை கூர்ந்து ஓர்தல்
; இது வெறுமெனக் கூறுதல் அல்ல.
 
கூர்தல் = to focus; to sharpen the memory.
 
அன்புடன்,
இராம.கி.

Sri Sritharan

unread,
Apr 15, 2012, 11:40:29 PM4/15/12
to tamil...@googlegroups.com
நன்றி இராம.கி ஐயா. அவ்வாறே நானும் நினைத்திருந்தேன். ஆனாலும், கூகுள் தேடலில் கூறுதல் பெருமளவு உள்ளது மட்டுமல்லாமல், பல அறிஞர்களும் இவ்வாறு எழுதுகின்றனர்:). இதனாலேயே ஒரு முறை உறுதிப்படுத்திக் கொள்ளவே கேட்டிருந்தேன்.


அன்புடன்
சிறீதரன்
 

Date: Sun, 15 Apr 2012 20:25:15 -0700
From: p...@giasmd01.vsnl.net.in
To: tamil...@googlegroups.com
Subject: [தமிழ் மன்றம்] Re: நினைவு கூரல்

C.R. Selvakumar

unread,
Apr 16, 2012, 10:05:46 AM4/16/12
to tamil...@googlegroups.com, ndsundaram, E. Annamalai, rajam
மிக்க நன்றி இராம.கி ஐயா,

நான் கீழ்க்காணுமாறு சிறீதரன் குறிப்பிட்ட இடத்தில் எழுதினேன்.

நினைவு கூறப்பட்டது என்பது தவறு. இக் கூற்று என்ன பொருள் தரவல்லது? நினைவு சொல்லப்பட்டது என்றால் எப்படிப் பொருள் தராதோ அதே போல நினைவு கூறப்பட்டது என்றாலும் அது பொருள் தராத ஒரு கூற்று. கூர் என்பது பெரும்பாலும் நினைவு கூர்தல் என்னும் சூழலில் பயன்படும் சொல். கூர்ந்தார் என்பது போல் வினைச்சொல்லாகவும் பயன்படும் சொல். கூர் என்பது பெயர்ச்சொல்லாகவும் பயன்படும். கழக அகராதி கூர்தல்  என்பதற்கு "''ஆராய்தல், கூருதல், நுணுகுதல், மிகுதல், விரும்புதல், வளைதல், ஒடுங்குதல்''"  என்கிறது. இங்கே ''நினைவு கூர்தல்'' என்பது நினைவுக்கு (துல்லியமாகக்) கொண்டு வருதல் என்று பொருள். தீர் என்னும் சொல் தீர்தல் தீருதல் என்னும் வடிவுகள் கொள்ளுதல்போல், கூர்தல், கூருதல் என்றும் ஆகும். சேரல், தீரல், என்பன போல் கூரல் என்னும் சொல் வடிவமும் கொள்ளும் என்றே நினைக்கின்றேன்.  ''கூரப்பட்டது'' என்பது சரி. சேர் சேர்கின்றார் என்பது போல கூர் கூர்கின்றார் என்று வரும். சேர்-சேரினார் என்று வராது சேர்ந்தார் என்று வரும், அது போலவே கூர்ந்தார் என்று வரும், (நினைவு) கூரினார், கூராது போனார் என்றும் வரும் என்று தோன்றினாலும், சிறு ஐயப்பாடு உள்ளது. கூருதல் என்னும் வடிவும் கொடுக்கப்பட்டுள்ளதால், கூரினார், கூராது போனார் என்பன சரியான வடிவங்களாக இருக்கும் வாய்ப்பு உண்டு. தலைப்பு,  '''டைட்டானிக்குக் கப்பல் மூழ்கிய 100-ஆவது ஆண்டை நினைவு கூர்ந்தனர்''' என்று இருந்தால் எப்பிழையும் கட்டாயம் இல்லை (தைட்டானிக்கு என்றும் எழுதலாம்).

கூரென்னேவல் என்று கழக அகராதி கூறுகின்றது. சேர், தீர் என்னும் வினைகள் செயப்பாட்டு வினையாகப் பயன்படாமல்
அவர் கல்லூரியில் சேர்ந்தார் என்றும், சிக்கல் தீர்ந்தது என்றும் சொல்வது போல் நேரடியான செயப்பாட்டுப் பொருள் கொள்ளாமல்
வரும் சொல்லாக கூர் (தல்) என்னும் வரும். நினைவு கூர்ந்தார் (கல்லூரியில் சேர்ந்தார் என்பது போல). கூரப்பட்டது என்பது கூரப்படு என்னும் வினையின் வடிவம். இது செயப்பாட்டு வினை வடிவம் அல்லவா? சிக்கல் தீரப்பட்டது என்று கூற முடியாது. சிக்கல்
தீர்க்கப் பட்டது. அவன் கல்லூரியில் சேர்க்கப்பட்டான் என்றே வரும். ஆகவே கூரப்பட்டது என்னும் வினைவடிவம் காணப்பட்டது என்பது (காண்- காணப்படு) போல் வருகின்றது. தீர், சேர், ஈர், பார், தேர், தூர் (காது, கிணறு)  என்பது போன்று மெய்+நெடில் உயிர் + ர் என்று வரும் வினைகள் ஏதேனும் இப்படி செயப்பாட்டு வினை வடிவம் கொண்டுள்ளதா? கூரப்பட்டது என்பது செயப்பாட்டு வினைதானே.  பேராசிரியர் தெய்வசுந்தரம், பேராசிரியர் அண்ணாமலை, முனைவர் இராசம் அவர்கள் போன்ற துறையறிஞர்களும் வல்லுநர்களும்  கருத்துரைத்தால் நன்றாக இருக்கும்.
கூரினார் என்று கூறுதல் என்பது சரியன்றுதானே! (சேரினார், தீரினார் என்றெல்லாம் வராதே!).
மேலே என் கூற்றுகளில்ஏதேனும் கருத்துப் பிழைகள் இருந்தால் அருள்கூர்ந்து திருத்த வேண்டுகிறேன்.

நன்றி

அன்புடன்
செல்வா

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msg/tamilmanram/-/-VeHFCsShAwJ.

To post to this group, send email to tamil...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tamilmanram...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.



--
Regards
Selva
___________________
C.R.(Selva) Selvakumar

C.R. Selvakumar

unread,
Apr 28, 2012, 4:18:24 PM4/28/12
to E. Annamalai, tamil...@googlegroups.com, ndsundaram, rajam
பேராசிரியர் அண்ணாமலை அவர்களே,

உங்கள் விரிவான விளக்கங்களுக்கு மிக்க நன்றியன்.


அன்புடன்
செல்வா

On Sat, Apr 28, 2012 at 1:28 PM, E. Annamalai <annam...@yahoo.com> wrote:
உங்களுடைய கேள்விகளுக்கு என்னுடைய பதிலைக் கீழே தருகிறேன். இது மற்றவருக்கும் பயன்படலாம் என்பதால் வல்லமை இதழிலும் என் கேள்வி-பதில் பத்தியிலும் வெளியிடுகிறேன்.
அன்புடன்,
அண்ணாமலை

நினைவுகூரல் / கூர்தல் என்பதே வழக்கு. சென்னைப் பல்கலைக்கழகப் பேரகராதியில் கூர் என்னும் வினைக்குக் கொடுக்கப்பட்டுள்ள பல பொருள்களில் மிகு என்னும் பொருளே இலக்கியத்தில் அதிகமாக வருவது. ஓருயிரிலிருந்து பல்லுயிர் ஆதல் என்னும் பொருளில் கூர்தலறம் ‘evolution’ என்ற கலைச்சொல் படைக்கப்பட்டது. நினைவுகூரலில் இந்தப் பொருள் இல்லை எனலாம். கூர்ப்படுத்துதல், கூர்மையாக்குதல் என்னும் பொருளிலே இந்த வினை வருகிறது எனலாம். ஆனால், இந்தப் பொருளில் கூர் என்று ஒரு வினை இப்போது வழக்கில் இல்லை. கூர்முனை என்னும் தொகையைப் பெயர்த்தொகை என்றும் சொல்லலாம்; வினைத்தொகை என்றும் சொல்லலாம். கூரிய கத்தி, கூர்த்த மூளை என்னும் தொடர்கள் இருப்பதால் கூர் என்று ஒரு வினை இந்தப் பொருளில் இருந்திருக்கும் என்று அனுமானிக்கலாம்.
 
கூர் என்ற வினையின் இறந்தகால வடிவம், சேர் (சேர்ந்தார்) என்ற வினையைப் போல, கூர்ந்தார் என்பதே; கோர் (கோரினார்) என்ற வினையைப் போல *கூரினார் அல்ல. ஓடிய என்ற சொல்லோடு தொடர்புடைய ஓடினார் என்னும் வினைமுற்று இருப்பது போல, கூரிய என்ற சொல்லோடு தொடர்புடைய வினைமுற்று வடிவம் இல்லை.
 
செயப்பாட்டு வினை வடிவம் செயப்படுபொருளை ஏற்கும் வினகளுக்கே உண்டு. சேர் போன்ற வினைகள் செயப்படுபொருளை ஏற்காமலும் ஏற்றும் வரும். இந்த வேறுபாடு கால உருபு ஏற்ற வினை வடிவத்தில் தெரியும். முதலாவது, சேர்ந்தார் என்றும், இரண்டாவது, சேர்த்தார் என்றும் வரும். முதலாவதற்கு, *சேரப்பட்டார் என்ற செயப்பாட்டு வினை வடிவம் இல்லை; இரண்டாவதற்கு, சேர்க்கப்பட்டார் என்ற செயப்பாட்டு வினை வடிவம் உண்டு. கூர்த்த என்னும் குறிப்புப் பெயரெச்சம் *கூர்த்தார் என்னும் செயப்படுபொருள் ஏற்கும் வினை இருந்திருக்கலாமோ என்று எண்ண வைக்கிறது. இதற்கு இலக்கிய ஆதாரம் இருக்கிறதா என்று தெரியவில்லை. அகராதிகள் இந்த வடிவத்தைத் தரவில்லை. இது எச்சரிக்கை விட்டார் / விடுத்தார் என்று பொருள்வேற்றுமை இல்லாமல் இரண்டு வேறு கால உருபுகளை ஏற்று ஒரு வினை வருவது போலவும் இந்த வழக்கு இருக்கலாம். தக்க/ தகுந்த(நேரம்) என்னும் இரட்டைவடிவம். இன்னொரு உதாரணம். போய்த் தொலைந்தார் / தொலைத்தார் என்ற வழக்கில் இரண்டாவது வினைமுற்று செயப்படுபொருள் குன்றிய வினையாக இருப்பது போலவும் இருக்கலாம்.
 
இன்றைய தமிழில், கூர்ந்தார் என்பது செயப்படுபொருள் குன்றாத வினையாக இருக்கிறது, மறந்தார் என்னும் வினையைப் போல. இதன் செயப்படுபொருள் நினைவு, நினைவுகூர்தல் நினைவைக் கூர்தல் என்று (கூர்மைப் படுத்துதல், அதாவது மறந்த ஒன்றை நினைவுக்குக் கொண்டுவருதல், என்னும் பொருள்கொண்டு) விரியும். நினைவுகூர்தல், (அவர்) முகம் மலர்(ந்தார்), (அவர்) படம் வரை(ந்தார்), (அவர்) பேட்டி கண்டார் என்பவை போல, கூட்டுவினை. அதாவது, பெயரும் வினையும் சேர்ந்து ஒரு வினையாக வரும் கூட்டுவினை (complex predicate). இதனாலேயே, சில கூட்டுவினைகள் வாக்கியத்தில் ஒரு செயப்படுபொருள் இருக்கும்போதே தன்னுள் இன்னொரு செயப்படுபொருளைக் கொண்டிருக்கும். என்னைப் படம்வரைந்தார், என்னைப் பேட்டிகண்டார் என்பவற்றைப் போன்றது என்னை நினைவுகூர்ந்தார் என்பதும். (அவர்) முகம் மலர்(ந்தார்) என்னும் வாக்கியத்தில் அவர்’, முகம் இரண்டும் எழுவாய்.
 
நினைவுகூர் என்னும் கூட்டுவினை தமிழ்மொழியின் சில வரலாற்று உண்மைகளைக் காட்டுகிறது. வினைகள் தனி வழக்கு ஒழிந்து மற்றொரு சொல்லோடு சேர்ந்துமட்டுமே இக்காலத்தில் வரலாம். அப்படி வரும்போது கூட்டுவினை உருவாகலாம். ஒரு வினை ஒன்றுக்கு மேற்பட்ட இறந்தகால உருபை ஏற்கலாம். இலக்கண நூலில் சொல்லாத மாற்றங்கள் தமிழில் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன.


From: C.R. Selvakumar <c.r.sel...@gmail.com>
To: tamil...@googlegroups.com
Cc: ndsundaram <ndsun...@hotmail.com>; E. Annamalai <annam...@yahoo.com>; rajam <ra...@earthlink.net>
Sent: Monday, April 16, 2012 9:05 AM
Subject: Re: [தமிழ் மன்றம்] Re: நினைவு கூரல்
Reply all
Reply to author
Forward
0 new messages