தமிழ்ச் சொல் என்ன?

745 views
Skip to first unread message

Elangovan N

unread,
Jun 12, 2011, 9:25:11 AM6/12/11
to tamil_ulagam, tamilmanram
அன்புடையீர், கீழ்க்கண்ட ஆங்கிலச் சொற்களுக்குத் தமிழ் தருக. 
ஒவ்வொரு சொல்லையும் தெளிவாக வேறுபடுத்தும் சொல் தருக.

1. Forecast
2. Predict
3. Speculate
4. Estimate
5. Compute
6. Calculate
7. Valuate
8. Evaluate
9.Judge
10. Rate (rate it)
11. Assess

அன்புடன்
நாக.இளங்கோவன்

சி. ஜெயபாரதன்

unread,
Jun 12, 2011, 10:47:40 AM6/12/11
to tamil...@googlegroups.com, tamizh...@googlegroups.com, anb...@googlegroups.com
1. Forecast   :   முன்கணி, முன்கணிப்பு
2. Predict  :  முன்னூகிப்பு
3. Speculate : யூகிப்பீடு
4. Estimate :  மதிப்பீடு
5. Compute :  கணிப்பீடு
6. Calculate :  கணக்கிடு
7. Valuate : மதிப்பிடு
8. Evaluate : மதிப்பிடு, கணக்கிடு 
9.Judge :  தீர்ப்பளி, நியாயப் படுத்து, நீதி வழங்கு
10. Rate (rate it) :  விலை மதிப்பிடு
11. Assess :  அனுமான மதிப்பிடு.
 
 
சி. ஜெயபாரதன்
 
++++++++++++++++++

2011/6/12 Elangovan N <nela...@gmail.com>
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tamilmanram...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.

C.R. Selvakumar

unread,
Jun 12, 2011, 1:02:12 PM6/12/11
to tamil...@googlegroups.com, tamil_ulagam
அன்புள்ள இளங்கோவன்,
 
இச்சொற்கள் ஆங்கிலத்தில் வழங்கும்பொழுது பல்வேறு
சூழல்கலில் பல்வேறு பொருள்நிறம் தரும். சில சொற்கள்
வெவ்வேறாகக் காட்சி தந்தாலும் ஒரே பொருளும் சுட்டும்.
எனவே இடம், சூழல் அறிந்தே ஈடுசொற்கள் தருதல் நல்லது.
 
எடுத்துக்காட்டாக forecast, pedict என்னும் சொற்கள் சில இடங்களில்
ஒரே பொருள் சுட்டலாம், வேறு இடங்களில் வெவ்வேறு பொருள்நிறம்
சுட்டலாம். calculate, compute ஆகியவையும் இப்படியே. மிகப்பெரும்பாலான 
இடங்களில் பெரிய வேறுபாடு ஏதும் இல்லை. 
 
forecast, predict ஆகிய இரண்டுக்கும் இடாய்ச்சு மொழியில்
vorhersagen என்னும் சொல்லைப் பயன்படுத்தலாம். இதில் sagen என்பது
சொல்லுதல். forecast என்பதர்கு மற்ற சொற்கள் இடாய்ச்சு மொழியில்
  1. vorhersehen
  2. vorausbestimmen
  3. vorausberechnen
  4. ankündigen
இதில் வரும் முதல் மூன்று சொற்கள் sagen என்னும் சொல்லுக்குப் மாறாக
sehen (=பார்), ausbestimmen என்பது உறுதியாய்மதிப்பிடுதல் என்பது போன்ற பொருள் கொண்டது (தனி ஆங்கிலச் சொல் இல்லை என்று நினைக்கின்றேன்), rechnen என்றால் கணக்கிடுதல் (எண்ணுதல், ஆங்கிலத்தில் reckon என்னும் அதே சொல்தான், ஆனால் இடாய்ச்சு வடிவம்). இந்த "aus-be" என்னும் இரண்டு முன்னொட்டுகளும் "(ஒன்றில்) இருந்து" என்றும் சிறுபொருள்வேறுபாட்டையும் குறிக்கும். ankündigen என்னும் சொல் பொதுவாக அறிவி (announce), ஒன்றைக் காட்டுதல் (show sign of)  போன்ற பொருள் தருவது, இங்கு முன்னறி என்னும் பொருளில் forecast என்பதற்குப் பயன்படுகின்றது.
 
அதாவது நான் சொல்லவந்தது என்னவென்றால், ஈடான சொற்கள் என்பன இடம் சூழல் சார்ந்து மொழி வழக்குடன் வருவது. 
 
கீழே தந்துள்ளவை ஒரு பொதுப்பரிந்துரையே:
 
1. Forecast முன்கூறு, மின்னறிவி, முன்னுரை, முன்கணி, முன்மதி(ப்பிடு)முன்னளவிடு, முன்குணி, முன்சலி, முன்பதி, முன்விரி, முன்விளி...வருநிலைகூறு, வருங்கூறு.. (இன்னும் பல சொல்லலாம்)
2. Predict முன்கூறு, எதிர்கூறு,
3. Speculate - எதிர்பார், எதிர்கூறு, எதிர்சாற்று, எதிர்நாட்டு
4. Estimate - மதிப்பிடு, பொதுமதிப்பிடு, பொதுமதி,
5. Compute - கணி, கணிப்பிடு,
6. Calculate - கணி, கணக்கிடு, குணி, குணிப்பிடு
7. Valuate - மதிப்பிடு, அளவிடு,
8. Evaluate - மதிப்பிடு, அளவுகணி, மதிப்புகாண், கணி, அளந்துகாண்,
9.Judge - தேர், சீர்தூக்கு, சீரள, சீர்நிறு, மதிப்புநிறு,...
10. Rate (rate it) - தேர், மதிப்புதேர், தேர்கணி,  மதிப்புக்கணி,மதிப்பெண்ணிடு...
11. Assess - தேர், தேர்வுசெய், திறன்தேர்,.. 
 
இன்னும் பல சொற்கள் கூறலாம்....ஆனால் தக்க சூழலில்தான் அறிய முடியும் சரியான ஈடான சொல்லா என்று.
 
அன்புடன்
செல்வா

2011/6/12 Elangovan N <nela...@gmail.com>
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tamilmanram...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.



--
Regards
Selva
___________________
C.R.(Selva) Selvakumar

C.R. Selvakumar

unread,
Jun 12, 2011, 1:44:41 PM6/12/11
to tamil...@googlegroups.com, tamil_ulagam
இன்னும் சில அருமையான சொற்கள் அண்மையில்
வழக்கிழந்துள்ளன. கைக்கணிப்பு, கைக்கணிசம், கைமதிப்பு, கைமட்டு
(இவை போன்றசொற்கள், தோராயமாக கணித்தல், அல்லது மதிப்பிடலுக்கு
பயன்ப்டுவன estimate, guesstimate போன்ற சொற்களுக்கு).
 
பருமட்டம் என்பதும் தோராயமான கணக்கு (rough estimate).
கண்மதிப்பு, சரவைக்கணிப்பு என்பன இன்னும் சில சொற்கள்
 
அகைப்பு என்னும் சொல்லும் உட்கு என்னும் சொல்லும்.
உண்மையான உள்மதிப்பு என்னும் பொருள் தரவல்லது.
இதனை உயர்விலை மிக்க ஒன்றைப் பற்றிக் கணிக்கும்
பொழுது கூறாலாம்.
 
பொதுவாக கணி (கணிப்பு), குணி (குணிப்பு), மதி (மதிப்பு),
அள (அளவு) போன்று இன்னும்
சில சொற்களோடு முன், எதிர், கை, போன்ற முன்னொட்டுகளோ
இட்டுத் தக்க பொருல் கொள்ளும் சொற்களை ஆளலாம்.
 
வெறும் பார், பார்வை என்னும் சொற்களே estimate, assess, evaluate,
என்னும் பொருள்கள் தருவன. அதே போல நோட்டம்
என்னும் சொல்லும் ஒருவகையாகக் கணக்கிடும் பொருள் தரவல்லதே.
முன்நோட்டம் என்றால் "fore-estimate, preview (in the sense of evaluation) "
போன்ற பொருள்கள் தரவல்லது.
 
அன்புடன்
செல்வா


 
2011/6/12 C.R. Selvakumar <c.r.sel...@gmail.com>

பழமைபேசி

unread,
Jun 12, 2011, 10:39:07 PM6/12/11
to தமிழ் மன்றம்
கிராமத்தானின் பார்வையில்....

1. Forecast --- மு(ன்)ங்கூற்று உய்த்தல், முஞ்செப்புதல்
காரண காரியங்களின் ஆதாரங்களோடு முன்னுரைத்தல்

2. Predict -- குணிப்பிடுதல், குணிசமிடுதல், குணிகம், குணிசம்
நம்பிக்கை மற்றும் அனுபவத்தைக் கொண்டு யூகங்கலந்து சொலல்.

3. Speculate -- கருத்தூன்றுதல்
முழுஆதாரமின்றி, தன் கருத்தை ஊன்றிச் சொலல்

4. Estimate -- மட்டிடுதல்
மட்டு இவ்வளவு எனச் சொல்ல். மட்டு = வரையறை அளவு

5. Compute -- கணிப்பிடுதல்
பல் வகைச் சார்பு வழிகள் இருப்பினும், ஒரு தெரிவைத் தேர்ந்தெடுத்துக்
கணக்கிட்டுச் சொலல்.

6. Calculate -- கணக்கிடு
தெரிவான அலகுகளைக் கொண்டு கணக்கிடுதல்

7. Valuate - மதிப்பிடு

அளவுகளைக் கணக்கிட்டு, மதிப்புக் கொணர்தல்

8. Evaluate -- அளவிடு
ஒரு நிலையில் இருப்பனவற்றை அளவிட்டுச் சொல்தல்

9.Judge -- தீர்மானி
தன் கருத்து, கணக்குகள் மூலம் ஒரு நிலைப்பாட்டுக்கு வருதல்

10. Rate (rate it) -- மாறுமதிப்பைக் கணக்கிடுதல்
பல வகையான மதிப்புகள் இருக்கையில், அவற்றில் ஒன்றைத் தெரிவு செய்தல்

11. Assess -- அவதான மதிப்பீடு
தொடர்நிலையில் இருக்கும் ஒன்றினை அவதானித்து, நடப்பு நிலையைச் சொலல்.

செல்வா அய்யா, அவர்கள் கூறிய கருத்தினை வரவேற்கிறேன். 26 எழுத்துகள்
கொண்ட ஒரு மொழியைக் காட்டிலும், 247 எழுத்துகள் கொண்ட மொழியில் சொற்கள்
நிறைய இருப்பதில் வியப்பில்லை. இடம், பொருள், ஏவலுக்கேற்ற சொற்கள்,
அதாவது, இன்னதை இன்னது என வலுவாகக் குறிக்கும் சொற்கள் தமிழில் இருக்கக்
கூடும். வழக்கொழிந்து இருப்பினும், அவற்றுக்கு உயிரூட்டுவதே சிறப்பாக
இருக்கும்.

water fall = நீர் வீழ்ச்சி; (அருவி)
Fanatics - Fan - விசிறி (அதியார்வலர்) என ஆக்குவதைக் குறைத்தல் நமக்கும்
நம்மொழிக்கும் சிறப்பைக் கூட்டும்.

பணிவுடன்,
பழமைபேசி.

On Jun 12, 1:44 pm, "C.R. Selvakumar" <c.r.selvaku...@gmail.com>
wrote:


> இன்னும் சில அருமையான சொற்கள் அண்மையில்
> வழக்கிழந்துள்ளன. கைக்கணிப்பு, கைக்கணிசம், கைமதிப்பு, கைமட்டு
> (இவை போன்றசொற்கள், தோராயமாக கணித்தல், அல்லது மதிப்பிடலுக்கு
> பயன்ப்டுவன estimate, guesstimate போன்ற சொற்களுக்கு).
>
> பருமட்டம் என்பதும் தோராயமான கணக்கு (rough estimate).
> கண்மதிப்பு, சரவைக்கணிப்பு என்பன இன்னும் சில சொற்கள்
>
> அகைப்பு என்னும் சொல்லும் உட்கு என்னும் சொல்லும்.
> உண்மையான உள்மதிப்பு என்னும் பொருள் தரவல்லது.
> இதனை உயர்விலை மிக்க ஒன்றைப் பற்றிக் கணிக்கும்
> பொழுது கூறாலாம்.
>
> பொதுவாக கணி (கணிப்பு), குணி (குணிப்பு), மதி (மதிப்பு),
> அள (அளவு) போன்று இன்னும்
> சில சொற்களோடு முன், எதிர், கை, போன்ற முன்னொட்டுகளோ
> இட்டுத் தக்க பொருல் கொள்ளும் சொற்களை ஆளலாம்.
>
> வெறும் பார், பார்வை என்னும் சொற்களே estimate, assess, evaluate,
> என்னும் பொருள்கள் தருவன. அதே போல நோட்டம்
> என்னும் சொல்லும் ஒருவகையாகக் கணக்கிடும் பொருள் தரவல்லதே.
> முன்நோட்டம் என்றால் "fore-estimate, preview (in the sense of evaluation) "
> போன்ற பொருள்கள் தரவல்லது.
>
> அன்புடன்
> செல்வா
>

> 2011/6/12 C.R. Selvakumar <c.r.selvaku...@gmail.com>


>
>
>
>
>
>
>
>
>
> > அன்புள்ள இளங்கோவன்,
>
> > இச்சொற்கள் ஆங்கிலத்தில் வழங்கும்பொழுது பல்வேறு
> > சூழல்கலில் பல்வேறு பொருள்நிறம் தரும். சில சொற்கள்
> > வெவ்வேறாகக் காட்சி தந்தாலும் ஒரே பொருளும் சுட்டும்.
> > எனவே இடம், சூழல் அறிந்தே ஈடுசொற்கள் தருதல் நல்லது.
>
> > எடுத்துக்காட்டாக forecast, pedict என்னும் சொற்கள் சில இடங்களில்
> > ஒரே பொருள் சுட்டலாம், வேறு இடங்களில் வெவ்வேறு பொருள்நிறம்
> > சுட்டலாம். calculate, compute ஆகியவையும் இப்படியே. மிகப்பெரும்பாலான
> > இடங்களில் பெரிய வேறுபாடு ஏதும் இல்லை.
>
> > forecast, predict ஆகிய இரண்டுக்கும் இடாய்ச்சு மொழியில்
> > vorhersagen என்னும் சொல்லைப் பயன்படுத்தலாம். இதில் sagen என்பது
> > சொல்லுதல். forecast என்பதர்கு மற்ற சொற்கள் இடாய்ச்சு மொழியில்
>

> >    1. vorhersehen
> >    2. vorausbestimmen
> >    3. vorausberechnen
> >    4. ankündigen

> >  2011/6/12 Elangovan N <nelan...@gmail.com>

iraamaki

unread,
Jun 13, 2011, 12:24:39 AM6/13/11
to tamil_ulagam, tamilmanram
அன்பிற்குரிய இளங்கோ,
 
தமிழரில் பலரும் இதுபோன்று தொகுதிச் சொற்களை ஒருங்கே வைத்துத் துல்லியம் பார்த்து ”இதற்கு இது” என்று வரையறுத்துச் சொற்களைப் பழகுவதில்லை. அப்படிப்
பழகாததினால் தமிழில் கவிதை உயர்ந்தது. அறிவியல் சவலைப் பிள்ளையாயிற்று. இருப்பதை வைத்து ஒப்பேற்றுவதில் நாமெல்லோரும் பெரும் அறிவாளிகள்.  இதன் விளைவால் ஒருசொல்-பலபொருள், பலசொல்-ஒருபொருள் என்ற தன்மை தமிழ்நடையிற் கூடிப் போயிற்று. இது கவிதை வளர்வதற்கு உரிய வழி. அறிவியல் வளராமை என்பது இதன் இருபிறப்பி. கொஞ்ச காலத்திற்குக் கவியரங்கங்களை மூட்டை கட்டி வைக்கலாம் என்று கூட ஓரோவழி நான் எண்ணுவதுண்டு. அது தவறு என்றும் என்னை ஆற்றுப் படுத்திக் கொள்ளுவேன்.
 
தமிழ்நடையிற் துல்லியம் கூடாதவரை அறிவியற் சிந்தனை பெருகும் என்று நான் எண்ணியதில்லை. நம்முடைய மொழிநடை இன்னும் கூராக வேண்டும். அதற்கு உங்களின் இந்த முயற்சி ஒரு நல்ல வழி. எந்தச் சொல்லையும் தனித்துப் பார்க்காது, தொடர்புடைய வரிசைகளோடு, (ஒரே பொருள், எதிர்ப்பொருள், கிட்டத்தட்டப் பொருள், வரிசைப் பொருள், அணிப் பொருள் என்று பார்ப்பது துல்லிய மொழிநடையை வளர்க்கும்.)
 
என்னுடைய பரிந்துரைகளைக் கீழே கொடுத்துள்ளேன். ஆங்கிலச் சொற்பிறப்பு அகரமுதலியில் கொடுத்துள்ள சொல் விளக்கத்தையும் உடன் கொடுத்துள்ளேன். தமிழ் விளக்கங்கள் அங்கங்கே தேவைப்படும் இடங்களிற் கொடுத்துள்ளேன்.
 
1. Forecast: முற்கட்டல் (வினைச் சொல்); முற்கட்டு (பெயர்ச் சொல்)
 
late 14c., "to scheme," from fore- "before" + casten "contrive." Meaning "predict events" first attested late 15c. Related: Forecasted; forecasting. The noun is from early 15c., probably from the verb; earliest sense was "forethought, prudence;" meaning "conjectured estimate of a future course" is from 1670s. A M.E. word for weather forecasting was aeromancy.
 
cast என்பதைக் கட்டுமானத் தொழிலில் அச்சுதல், அச்சிடுதல், கட்டுதல் என்றே சொல்லுகிறோம்.  recast = மறுகட்டு, மீள்கட்டு. கட்டுதல் என்ற வினை இங்கு வருவது அறிவியற் சிந்தனைக்கு வழிவகுக்கும்.
 
2. Predict: முன்னுரைத்தல் (வி.சொ); முன்னுரைப்பு (பெ.சொ), [குணித்தல் (வி.சொ); குணிப்பு (பெ.சொ); கீழே கணித்தற் குறிப்பைப் படியுங்கள்).
 
1620s, "to foretell, prophesy," from L. praedicatus, pp. of praedicere "foretell, advise, give notice," from prae "before" (see pre-) + dicere "to say" (see diction). Scientific sense of "to have as a deducible consequence" is recorded from 1961. Predictably "as could have been predicted" is attested from 1914.
 
dictionary, diction போன்ற சொற்கள் இங்கு நினைவிற்கு வரவேண்டுமானால் உரைத்தல் என்பது இங்கு வந்தே தீர வேண்டும்.
 
3. Speculate: குற்றுமதித்தல் (வி.சொ); குற்றுமதிப்பு (பெ.சொ)
 
1590s, back formation from speculation. Related: Speculated; speculating.
 
speculation
 
late 14c., "contemplation, consideration," from O.Fr. speculation, from L.L. speculationem (nom. speculatio) "contemplation, observation," from L. speculatus, pp. of speculari "observe," from specere "to look at, view" (see scope (1)). Disparaging sense of "mere conjecture" is recorded from 1570s. Meaning "buying and selling in search of profit from rise and fall of market value" is recorded from 1774; short form spec is attested from 1794.
 
குத்து மதிப்பு என்ற சொல் பேச்சுவழக்கில் இன்றும் பெயர்ச்சொல்லாய் இருக்கிறது. கொஞ்சம் செந்தமிழாக்கி வினைச்சொல்லையும் திரும்பப் புழக்கத்திற்குக் கொண்டு வந்தால் மொழி சிறக்கும்.
 
4. Estimate: மதிப்பிடுதல் (வி.சொ);  மதிப்பீடு (பெ.சொ)
 
1560s, "valuation," from L. aestimatus, verbal noun from aestimare (see esteem). Earlier in sense "power of the mind" (mid-15c.). Meaning "approximate judgment" is from 1580s. As a builder's statement of projected costs, from 1796.
 
5. Compute: கணித்தல் (வி.சொ); கணிப்பு (பெ.சொ)
 
1630s, from Fr. computer, from L. computare "to count, sum up, reckon together," from com- "with" (see com-) + putare "to reckon," originally "to prune" (see pave).
கணித்தல்
 
கணித்தல், கணத்தல் என்ற எல்லாமே கூட்டுதல் என்று பொருளடிப்படையில் எழுந்த சொற்கள். கணம் = கூட்டம். கணக்கு என்பது தொழிற்பெயர். கணி/கண என்னும் வேறுபாடு இந்தக் காலத்திற்குக் காப்பாற்ற வேண்டிய வேறுபாடுதான். அந்தக் காலத்தில் வேறுபாடு இருந்திருக்காது. செல்வா காட்டிய குணித்தல் என்பதும் தொடர்புடையதுதான். அதை வேறுவொரு கட்டுகையில் (context) பயன்படுத்தலாம் என்றுள்ளேன். ஒருவேளை பழமைபேசி சொல்வது போல predict என்பதற்கு இணையாய் குணித்தல் என்று சொல்லலாமோ? உயர்கணிதத்தில் கூட அதற்கு வாய்ப்புகள் வரலாம். கலனத்திற்கு (calculus) வந்ததே?
 
6. Calculate: கணக்கிடுதல் (வி.சொ); கணக்கீடு (பெ.சொ)
 
1560s, "to compute, to estimate by mathematical means," from L. calculatus, pp. of calculare "to reckon, compute," from calculus (see cயன்படுத்தலாம் lculus). Meaning "to plan, devise" is from 1650s. Replaced earlier calculen (mid-14c.), from O.Fr. calculer. Related: Calculable.
 
கணத்தல் என்ற வினை புழக்கத்தில் இல்லாது கணக்கு என்ற பெயர்ச்சொல் மட்டும் இன்று இருக்கிறது. வேறுவழியில்லாது இடுதல் என்ற துணைவினை போட்டுச் சொல்லவேண்டியிருக்கிறது. காலத்தின் கோலம்.
 
7. Valuate: மதித்தல் (வி.சொ); மதிப்பு (பெ.சொ)
 
valuation
1520s, from O.Fr. valuacion, noun of action from valuer (see value).
value (n.)
c.1300, from O.Fr. value "worth, value" (13c.), noun use of fem. pp. of valoir "be worth," from L. valere "be strong, be well, be of value" (see valiant). The meaning "social principle" is
attested from 1918, supposedly borrowed from the language of painting. The verb is recorded from late 15c. Related: Valued, valuing. Value judgment (1892) is a loan-translation of Ger. Werturteil.
 
8. Evaluate: மதித்தல் (வி.சொ); மதிப்பு (பெ.சொ)
 
1842, from Fr. évaluer or else a back formation from evaluation. Originally in mathematics. Related: Evaluated; evaluating.
evaluation
1755, from Fr. évaluation, from évaluer "to find the value of," from é- "out" (see ex-) + valuer (see value).
 
valuate, evaluate இரண்டுமே ஒரே பொருளைத்தான் குறிக்கின்றன. எனவே தமிழிலும் அப்படியே பழகுகிறேன். இரண்டையும் வேறுபடுத்திக் காட்டும் ஒரு வாக்கியத்தை நீங்கள் காட்டினால் மீண்டும் ஓர்ந்து பார்ப்போம். [மட்டுதலும், மதித்தலும் ஒரே வேர்ச்சொற்கள் தான். மட்டு = அளவு. மட்டித்தல் = to measure.]
 
9.Judge: கருத்துக் கொள்ளல் (வி.சொ); கொள்கருத்து (பெ.சொ)
early 13c., "to form an opinion about," from Anglo-Fr. juger, from O.Fr. jugier "to judge," from L. judicare "to judge," from judicem (nom. judex) "to judge," a compound of jus "right,
law" + root of dicere "to say" (see diction). Related: Judged; judging. The O.E. word was deman (see doom). Meaning "to try and pronounce sentence upon (someone) in a court" is from late 13c. The noun is from c.1300. In Hebrew history, it refers to a war leader vested with temporary power (e.g. Book of Judges), from L. judex being used to translate Heb. shophet.
 
இங்கு நயமன்றம் பற்றிய சிந்தனை வேண்டாம். அதற்கும் முந்திய சிந்தனையாய், “அதுவரை கேட்டவற்றையும் அறிந்தவற்றையும் வைத்து” கருத்துக் கொள்ளலைக் குறிக்க வேண்டும். [தீர்மானித்தல் என்பது determine என்பதற்கு இணையாய் வரும்.]
 
10. Rate (rate it): அறுதியிடல் (வி.சொ); அறுதி (பெ.சொ)
 
"estimated value or worth," early 15c., from M.Fr. rate "price, value," from M.L. rata (pars) "fixed (amount)," from L. rata "fixed, settled," fem. pp. of reri "to reckon, think" (see reason). Meaning "degree of speed" (prop. ratio between distance and time) is attested from 1650s. Currency exchange sense first recorded 1727. The verb "to estimate the worth or value of" is from 1590s. First-rate, second-rate, etc. are 1640s, from British Navy division of ships into six classes based on size and strength. Phrase at any rate originally (1610s) meant "at any cost;" weakened sense of "at least" is attested by 1760.
 
“இந்தாப்பா, கடைசியாய் என்ன சொல்றே?” என்று அறுதியான விலை கேட்பதுதான் சொல்லப் படுகிறது. இதற்குமேல் பேரமில்லை என்று அறுதியிட்டுச் சொல்வது.
 
11. Assess: அட்டித்தல் (வி.சொ); அட்டிப்பு (பெ.சொ)
 
early 15c., "to fix the amount (of a tax, fine, etc.)," from Anglo-Fr. assesser, from M.L. assessare "fix a tax upon," originally frequentative of L. assessus "a sitting by," pp. of assidere "to sit beside" (and thus to assist in the office of a judge), from ad- "to" (see ad-) + sedere "to sit" (see sedentary). One of the judge's assistant's jobs was to fix the amount of a fine or tax. Meaning "to estimate the value of property for the purpose of taxing it" is from 1809; transferred sense of "to judge the value of a person, idea, etc." is from 1934. Related: Assessed; assessing.
 
அட்டுதல் என்பதும் கூட்டுதல், நெருங்குதல், அண்ணுதல், மதித்தல் என்ற பொருட்பாடுகளைச் சொல்லும். to add = அதித்தல் என்று ஆங்கிலத்திற் சொல்கிறார்களே, அதுவும் இந்த வினையோடு தொடர்புடையதுதான்.  ”உங்கள் பேச்சிற்கு இனிமேல் அட்டியில்லை” என்றால் “valuation" கிடையாது என்பதுதான். அட்டி பார்த்து சுங்கம் (customs tax) , உல்கு (excise tax) விதிக்கிறோம்.
 
அன்புடன்
இராம.கி.
--

C.R. Selvakumar

unread,
Jun 13, 2011, 6:36:03 AM6/13/11
to tamil...@googlegroups.com, tamil_ulagam
அன்புள்ள இராம.கி ஐயா,
 
நல்ல முன்மொழிவுகள். சற்றே வேறான சில கருத்துகள் உள்ளன..
ஒரேயொர் கேள்வி/வேண்டுகோள்:
 
நீங்கள் முற்கட்டல் முன்னுரைத்தல் போன்ற சொல்வடிவங்களை வினைச்சொல் என்கின்றீர்கள். அவை பெயர்ச்சொற்கள் (தமிழ்வழியதான
முறைபப்டி)!!  கட்டு என்பது வினை (ஏவல் வினை, இதுவே, அதாவது "கட்டு" என்பதே  பெயர்ச்சொல்லாக இருக்கலாம் என்பது பிறிதொரு செய்தி.)
 
கட்டல், உரைத்தல், செய்தல் முதலியன வினையடி வரும் பெயர்ச்சொற்கள்,
வினையைக் குறிக்கும் பெயர்ச்சொற்கள். ஆங்கிலம், மற்றும் ஐரோப்பிய
மொழிகள் வழக்கம் வழி, infintive ஆகக் கொள்ளுதல் தவறு என்பது என்
கருத்து. தற்கால மொழியியல் அறிஞர்களும்,  அதுவும் தமிழ் அறிந்தவர்களும் இப்பிழையைச் செய்கிறார்கள் என்பது என் வருத்தம்.
 
அன்புடன்
செல்வா


2011/6/13 iraamaki <p...@giasmd01.vsnl.net.in>

வேந்தன் அரசு

unread,
Jun 13, 2011, 6:49:37 AM6/13/11
to tamil...@googlegroups.com
Forecast என்பதற்கு தொலக்காட்சிகளில் வானிலை முன்னறிவிப்பு என்கிறார்கள்.  கேட்டதைல்லையோ
அதேபோல் predict - தேர்தல் ஆருடம்
speculate- யூக வாணிகம் என்பார்கள்
 
 
estimate- அளவிடல் என்பதே என் எண்ணம். அது எந்த அலகு எனிலும்.
 
 
--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

N. Ganesan

unread,
Jun 13, 2011, 7:44:11 AM6/13/11
to தமிழ் மன்றம்

On Jun 12, 9:39 pm, பழமைபேசி <pazamaip...@gmail.com> wrote:
> 9.Judge -- தீர்மானி
> தன் கருத்து, கணக்குகள் மூலம் ஒரு நிலைப்பாட்டுக்கு வருதல்
>

தீர்வை இடுதல்

> 10. Rate (rate it) -- மாறுமதிப்பைக் கணக்கிடுதல்
> பல வகையான மதிப்புகள் இருக்கையில், அவற்றில் ஒன்றைத் தெரிவு செய்தல்
>

விலைகுத்து- என்போம் ஊரில்.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Jun 13, 2011, 7:55:59 AM6/13/11
to தமிழ் மன்றம்

On Jun 12, 9:47 am, சி. ஜெயபாரதன் <jayabarath...@gmail.com> wrote:
> 1. Forecast   :   முன்கணி, முன்கணிப்பு
> 2. Predict  :  முன்னூகிப்பு
> 3. Speculate : யூகிப்பீடு
> 4. Estimate :  மதிப்பீடு

ஐயா,

எல்லோரும் பயன்படுத்தும் வார்த்தை: உத்தேசம்.

நா. கணேசன்

> 5. Compute :  கணிப்பீடு


> 6. Calculate :  கணக்கிடு
> 7. Valuate : மதிப்பிடு
> 8. Evaluate : மதிப்பிடு, கணக்கிடு
> 9.Judge :  தீர்ப்பளி, நியாயப் படுத்து, நீதி வழங்கு
> 10. Rate (rate it) :  விலை மதிப்பிடு
> 11. Assess :  அனுமான மதிப்பிடு.
>
> சி. ஜெயபாரதன்
>
> ++++++++++++++++++
>

> 2011/6/12 Elangovan N <nelan...@gmail.com>


>
>
>
> > அன்புடையீர், கீழ்க்கண்ட ஆங்கிலச் சொற்களுக்குத் தமிழ் தருக.
> > ஒவ்வொரு சொல்லையும் தெளிவாக வேறுபடுத்தும் சொல் தருக.
>
> > 1. Forecast
> > 2. Predict
> > 3. Speculate
> > 4. Estimate
> > 5. Compute
> > 6. Calculate
> > 7. Valuate
> > 8. Evaluate
> > 9.Judge
> > 10. Rate (rate it)
> > 11. Assess
>
> > அன்புடன்
> > நாக.இளங்கோவன்
>
> > --
> > You received this message because you are subscribed to the Google Groups
> > "தமிழ் மன்றம்" group.
> > To post to this group, send email to tamil...@googlegroups.com.
> > To unsubscribe from this group, send email to
> > tamilmanram...@googlegroups.com.
> > For more options, visit this group at

> >http://groups.google.com/group/tamilmanram?hl=ta.- Hide quoted text -
>
> - Show quoted text -

Deiva Sundaram

unread,
Jun 13, 2011, 9:11:19 AM6/13/11
to tamil...@googlegroups.com
அன்புள்ள பேராசிரியருக்கு,
வணக்கம். கட்டல், உரைத்தல், செய்தல் போன்ற சொற்களைத் தற்கால மொழியியல் அறிஞர்களும் Infinitive  ஆகக் கொள்கிறார்கள் என்று வருத்தப்பட்டுள்ளீர்கள்.  பேரா. பொற்கோ போன்றோர் இதுபற்றித் தெளிவாகக் கூறியுள்ளார்கள். போதல், வருதல், தருதல் முதலான சொற்களும் வரல், தரல், கொளல் முதலான சொற்களும் வினைப்பெயர்கள் அல்லது தொழிற்பெயர்கள் என்று குறிக்கப்படும் என்று கூறியுள்ளார். வருதல் என்ற தொழிற்பெயரில் வா என்ற பகுதியும் தல் என்ற தொழிற்பெயர் விகுதியும் அமைந்திருக்கின்றன என்றும் கூறுகிறார். பேரா. அகத்தியலிங்கம் பின்வருமாறு கூறுகிறார் - ' வினையடியாகப் பிறந்து வினை அல்லது தொழில் ஒன்றையே குறித்துக் கால இடைநிலைகளை ஏற்காது வரும் பெயர்கள் காலம் காட்டாத் தொழில் பெயர் எனப்படும். வருதல், போதல் ஆகியவை தொழில்பெயர்கள். இவை முறையே வருதலாகிய தொழிலையும் போதலாகிய தொழிலையும் மட்டுமே காட்டுவதால் தொழில் பெயர் என்றும் காலம் காட்டாத நிலையில் காலம் காட்டாத் தொழில்பெயர் என்றும் அழைக்கப்படுகின்றன. இதனை மரபு இலக்கணிகள் தொழில் பெயர் என்றும் வினைப்பெயர்ர என்றும் அழைப்பர்.  .... இத்தொழில் பெயர் ஐம்பால் மூவிடத்துக்கும் உரியது.
 
எனவே தாங்கள் தற்கால மொழியியல் அறிஞர்கள் இதுபற்றிச் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை என்று  கூறி வருத்தப்படத் தேவையில்லை.
 
அன்புடன்
ந. தெய்வ சுந்தரம்
சென்னை
 

Date: Mon, 13 Jun 2011 06:36:03 -0400
Subject: Re: [தமிழ் மன்றம்] தமிழ்ச் சொல் என்ன?
From: c.r.sel...@gmail.com
To: tamil...@googlegroups.com
CC: tamil_...@googlegroups.com

iraamaki

unread,
Jun 13, 2011, 9:25:31 AM6/13/11
to tamil...@googlegroups.com
அன்புடையீர்!
 
காலம் காட்டாத் தொழிற்பெயர் என்பது infinitive என்பதும் ஒன்று என்றே நான் கொண்டுவந்துள்ளேன். தப்பு என்றால் என்னை ஆற்றுப் படுத்துங்கள். infinitive - ஐ தமிழில் எப்படிச் சொல்வது?
 
அன்புடன்,

Jean-Luc Chevillard

unread,
Jun 13, 2011, 10:12:11 AM6/13/11
to tamil...@googlegroups.com
Dear Iraama.ki.

I also think that using the (international) technical term "infinitive"
for referring to forms like செய்தல்
is faithful to the original use of "infinitive"
for referring to latin forms such as "amare", "delere", "legere", "audire", "capere", etc.

The use of "Errare" (to err) in a construction like "Errare humanum est" (to err is human)
seems to me to be parallel to the use of சொல்லல் and செய்தல் in a construction like

பயனில பல்லார்முற் சொல்ல னயனில
நட்டார்கட் செய்தலிற் றீது.

What I feel uncomfortable with
 is the use of the term "infinitive"
for referring to the "செய வென்னும் வாய்பாடு".

That seems to me unfelicitous,
although I see many people do that.

But of course it is quite difficult to have a consistent international terminology :-)

Best wishes

-- Jean-Luc Chevillard (Pondicherry)

Elangovan N

unread,
Jun 13, 2011, 1:50:25 PM6/13/11
to tamil_ulagam, tamilmanram
அன்புடையீர்,

தங்கள் மறுமொழிக்கு எல்லோருக்கும் மிக்க நன்றி. ஒத்த சொற்களையும், புதிய 
சொற்களையும் காணுவது மகிழ்ச்சியளிக்கிறது. பல நேரங்களில்
நுட்ப/அறிவியல் விதயங்களைப் படிக்கும்போது மொழியாளுமை
திகைக்கவைக்கிறது. துல்லியமான வேறுபாடுகளோடு அவை
வந்து விழும்போது, நம்மிடம் படைப்புகள் இல்லாததனால் நமது
பின்தங்கிய நிலை வருத்துகிறது. இது ஒருபுறம் இருக்க, தமிழில்
எழுத அல்லது பேச நினைத்தால் பல சொற்களுக்குத் தடங்கல்
வருகின்றது. எப்படியும் ஒரு சொல்லைப் போட்டு எழுதிவிட
எனக்கும் நமக்கும் முடியுமென்ற போதிலும் ஒரு நெருடலோடே
நீட்டி நெளித்துப் பல சொற்களைத் தமிழில் பேச எழுத முடிகிறது.
முக்கியமாக மெல்லிய வேறுபாடுகள் கொண்ட ஆங்கிலச் சொற்களை
அதே துல்லியத்துடன் பேசமுடியவில்லை. இராம.கி ஐயா இது பற்றி
மிகத் தெளிவாக எழுதியிருக்கிறார். பேரா.செல்வா அவர்கள் சூழலுக்குத்
தக்க எழுத்தாளுமை பற்றி விளக்கியிருப்பதும் உண்மை. ஆயினும், 
துல்லியம் மிக அதிகமாக இருந்தாற்றான் அறிவியல் படைக்க முடியும்
என்று உணர்கிறேன். துல்லியம் மிகுந்த சொற்களோடு இடத்துக்குத் 
தக்கவாறு பயன்படுத்துதலே தமிழை வளர்க்கும் என்று உணர்கிறேன்.

தாங்கள் தந்த சொற்களை அட்டவனைப் படுத்தியிருக்கிறேன். 
இது சொற்களை ஒப்புமைப் படுத்தி சரி/தவறு  ஏற்பு/இல்லை
என்று கூறுதற்கல்ல என்று அருள்கூர்ந்து அறியவும். பல நூறு 
கட்டுரைகளை வேறு வேறு துறைகளில் செய்யும் தங்களின் சொற்களில்
பழுது காணமாட்டேன். அதற்கு வல்லவனும் அல்லேன்.

ஒரு மிகச் சாதாரணமான பயனன், தற்கால நுட்ப/அறிவியல்/கலை
சார்ந்தவற்றை ஆங்கிலத்தில் படிக்கும்போது அதனைத் தமிழில்
சொல்லிப் பார்க்கும் ஒரு பயனனாக இவற்றைப் பயன்படுத்திப் 
பார்க்கிறேன். நீங்கள் சரிபார்த்துத் திருத்தித் தாருங்கள். 
பிழைகளைப் பொறுத்தருள்க.
(அட்டவனையில் வினைச்சொல், பெயர்ச்சொல் இரண்டும் இருந்தால்
பெயர்ச்சொற்களை எடுத்துக் கொண்டிருக்கிறேன்)

1)  Compute, Calculate என்ற இரண்டு சொற்களிலும் எல்லோரிடமும்
ஒத்த சொற்களும் பயன்பாடும் இருப்பதைக் காணமுடிகிறது. நானும்
அவற்றையே பயன்படுத்துவேன்.

2) Forecast: முன்கூறு = Foretell, முன்னுரை=Introduction, முன்கணி=Pre-
Computing/Computation என்றும் எனக்குப் பொருள் கிட்டுகிறது. 

இடத்துக்குத் தக்க உணர்ந்து கொள்ளலாம் என்ற போதிலும் வேறுபடுத்தும்
சொற்கள், தனித்துல்லியம் கொண்ட சொற்கள் வேண்டும் என்ற 
உணர்வைத் தருகிறது. (முன்னுரை என்பது foretell என்ற பொருள் 
கொண்டது என்று இராம.கி ஐயா அழகா விளக்கியிருக்கிறார். ஆனாலும்
Intruction என்பதற்குப் பொருளாக இதனைப் பரவலாகப் 
பயன்படுத்துகிறார்கள்.)

முற்கட்டு என்ற சொல்லைப் பயன்படுத்த எண்ணினாலும்
// Prebinding is a method for reducing the time it takes to launch 
executables in the Mach-O file format. For example, this is what Mac 
OS X is doing when in the "Optimizing" stage of installing system 
software or certain applications.
// பார்க்க: http://en.wikipedia.org/wiki/Prebinding

Prebinding என்றொரு சொவ்வறைச் செலுத்தம் (software process)
மனதிலாடுகிறது. Forecasting, Prebinding என்ற இரண்டும்
வேறு வேறு அறிவியல் என்ற போதிலும் முற்கட்டு என்ற சொல்லை 
இடத்திற்குத் தக்கன புரிந்து கொண்டு விடமுடியும் என்ற போதிலும் 

Prebinding என்ற ஒன்றிற்காக இல்லாவிடினும், Forecasting என்ற 
சொல் பரந்து பட்ட பயனுடைத்ததாகையால் அதற்கு இன்னும் தனித்துவம்
தரக்கூடிய சொல் தேவை என்று தோன்றுகிறது.

3) Predict: குணிப்பு, முன்னூகிப்பு, வருவதுரை என்ற சொற்களில் 
ஊகிப்பு (முன் என்ற முன்னொட்டு தேவையில்லை என்று படுகிறது)
என்ற சொல்லைப் பயன்படுத்த எண்ணும்போது ஊகம் என்பதற்குத் தமிழ் 
வேர் உண்டா என்ற குழப்பம் வருகிறது. அன்புடன் தெளிவு படுத்துக.
குணிப்பு என்ற சொல்லைப் பலரும் பரிந்துரைக்கும் போதும்,
எனக்குச் சில வினாக்கள் எழுகின்றன.

செ.ப.பேரகராதியில் கீழ்க்கண்ட பொருள் கிடைக்கிறது.

//குணி-த்தல் kuṇi
-, 11 v. tr. < guṇ. 1. To estimate, calculate, compute, reckon; கணித் 
தல். அவர்குழுக் குணிக்கின் (கந்தபு. அசுரர்தோ. 25). 2. To reflect,
//

இதுவன்றி குணிப்பு, குணிதம் என்ற சொற்களுக்கு "To Estimate"
என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. 

dbname=tamillex&query=%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%
AE%BF&matchtype=start&display=utf8

மக்கள் பெருவாரியாகப் பயன்படுத்துகிற அகராதி
Compute, Calculate, Estimate என்ற மூன்று பொருள்களைக் 
குணிப்பிற்குத் தருகிறது.

இந்தச் சொற்களுக்கு அகராதி தரும் இலக்கிய மேற்கோள் அல்லது 
எடுத்துக்காட்டுகள் Prediction என்பதனையே உணர்த்துவதாக எனக்குப்
படுகிறது. அறிஞர்கள்தான் அதுபற்றிச் சொல்ல வேண்டும்.

எனினும், எனது ஐயம்/வினா,

அ) ஒரு அகராதி Calculate, Estimate, Predict, Compute என்ற நான்கு
வேறு வேறு சொற்களுக்கும் ஒரே தமிழ்ச்சொல்லைச் சுட்டுமானால்
எப்படி அறிவியல் ஆக்கங்களுக்குப் பயனுள்ளதாகும்?

ஆ) இங்கே அறிஞர்கள் தருகின்ற குணிப்பு என்ற சொல்லைப் 
பயன்படுத்துவோமெனின், அகராதியை மட்டும் பார்க்கக் கூடியவர்களுக்கும்
நமக்கும் இருக்கின்ற வேறுபாடுகளை எப்படித் தமிழகம் சமன் செய்யும்?

கணி, அணு, பொறி அறிவியல் ஆக்கங்களைப் படைக்கும் வல்லுநர் 
தொடர்ந்து படைத்துக் கொண்டிருப்பார்கள். அவர்களுக்கு உதவுமாறு 
அகராதிகள் மாறுவது எங்ஙனம் என்று எண்ணிப்பார்த்தால் கவலையே 
வருகிறது.


4) முன்கூறல், முன்னுரைத்தல், முன்கணித்தல், வருவதுரைத்தல்
போன்ற சொற்களை அட்டவனையில் சில இடங்களில் Predict க்கும்
சில இடங்களில் Forcast க்கும் காணமுடிகிறது.

ஏன் துல்லியம் இன்னும் மிகவேண்டும் என்று உணர்கிறேன் என்பதற்குக்
காட்டாக, கீழெ உள்ள வாக்கியத்தை மேற்கோள் காட்டுகிறேன்.

// Predictive Forecasting is a strategic advance to business 
forecasting and a paradigm shift away from human 
guesses about the future.  
//

20Forecasting%20New%20Paradigm.pdf

"குணித முற்கட்டு என்பது பொதின முற்கட்டுதலில் ஒரு தடந்தகை முன்னேற்றமாகும். எதிர்காலம் பற்றிய மாந்தக் கண்மதிப்புகளை(guess?) அடியோடு மாற்றிப் போட்ட ஒன்றாகும்"

மேற்கண்ட ஆங்கில வாக்கியத்தைத் தமிழில் இப்படி எழுதியிருக்கிறேன்.
ஆனால், இன்னும் மன நிறைவில்லை :-)) 

இந்த Predictive Forecasting என்பது கணிதஞ் சார்ந்த ஒன்று.
அதனை வணிகம், கல்வி, போன்ற எல்லாத் துறைகளிலும்
பயன்படக் கூடிய ஒன்று.

உண்மையில் இதனைத் தமிழில் எழுத எனக்குத் தடுமாற்றமாக இருக்கிறது.
எழுத வேண்டுமெனின் எப்படியோ அடித்து விட்டு விடுவேன் :-))) 

ஆனால் Prediction, Forecasting என்ற விடத்து மட்டும் ஒரு நெருடல்/ஐயத்தோடு எழுதியிருப்பேன். 
பயனன் என்ற முறையில் எனது ஐயம் தவறென்றால் அறிவுறுத்துக.
மற்றவை பற்றிய சிறு கருத்துகளை தொடர்ச்சியில் எழுதுகிறேன்.

(தொடரும்)

அன்புடன்
நாக.இளங்கோவன் 

பி.கு: இணைப்பை காண்க.

2011/6/12 Elangovan N <nela...@gmail.com>
kanippu-madhippu.xls

C.R. Selvakumar

unread,
Jun 13, 2011, 8:09:51 PM6/13/11
to tamil...@googlegroups.com
அன்புள்ள பேராசிரியருக்கு வணக்கம்!
 
உங்கள் மடல் உள்ளத்துக்கு உவகை தருகின்றது.
நான் என் கருத்தைத் திருத்திக் கொள்கின்றேன்.
நான் "தற்கால மொழியியல் அறிஞர்கள்" என்றது
எல்லோராரையும் அல்ல.
ஆனால், எங்கு நான் படித்து இப்படி வருத்தம் கொள்ள நேர்ந்தது
என்று நினைவில்லை. பொதுவாக ஆங்கில அல்லது
ஐரோப்பிய வழிப்படியே தமிழில் (பிற மொழிகளிலும்)
(எல்லாவற்றையும் அல்லது) பலவற்றையும்
காண முற்படுவதால் சில இடங்களில் அப்படித் தவறாகக்
கொள்ள நேர்கின்றது எனபது என் தனிக்கருத்து.
 
(தற்கால மொழியியலாளர்களால்
உருவாக்கப்பட்ட "க்ரியா" அகராதியைப்
பார்த்தால், கட்டு என்னும் வினனச்சொல்லுக்குப்
பொருள் தரும் பொழுது "உருவாக்கு",
'இடம் அமை", (பாட்டு) "எழுது" என்பதற்கு மாறாக தொழிற்பெயர்/வினைப்பெயர்களை இட்டுப் பொருள்
சொல்லி இருக்கின்றார்கள்!!)
 
நீங்கள் கூறியவாறு
"வினைப்பெயர்கள் அல்லது தொழிற்பெயர்கள்"
என்று குறித்தால் ஒரு குழப்பமும் இல்லை!
அதுவே என் கருத்தும்.
 
நீங்கள் சுட்டியவாறு:
"பேரா. அகத்தியலிங்கம் பின்வருமாறு கூறுகிறார் - ' வினையடியாகப் பிறந்து வினை அல்லது தொழில் ஒன்றையே குறித்துக் கால இடைநிலைகளை ஏற்காது வரும் பெயர்கள் காலம் காட்டாத் தொழில் பெயர் எனப்படும். "
 என்பதும் தெளிவாக உள்ளன!
 
அப்புறம் இந்த "non-finite verb forms" என்று சிலரால் கூறப்படும்
gerund  என்பது இன்னொரு சொல். ஆக்ஃசுபோர்டு அகராதி இதுபற்றி,
கீழ்க்கண்டவாறு கூறுகின்றது:
"A form of the Latin vb. capable of being construed as a n.,
but retaining the regimen of the vb. Hence applied to forms functionally
equivalent in other langs., e.g. to the English verbal noun in -ing
when used rather as a part of the vb. than as a n."
 
[மேற்கோள் gerund, n.
Second edition, 1989; online version March 2011. <http://www.oed.com:80/Entry/77928>; accessed 13 June 2011. Earlier version first published in New English Dictionary, 1899]
 
இங்கே "verbal noun" என்றும் கூறுகின்றார்கள், ஆனால் "when used rather as part of the vb than as n" என்றுவேறு கூறுகின்றார்கள்!
 
எப்படியாயினும், தமிழில் தொழிற்பெயர் அல்லது வினைப்பெயர்
என்பது போல இருந்தால் மறுப்பில்லை.
 
உங்கள் கருத்துப்பகிர்வுக்கு மிக்க நன்றி ஐயா!
 
அன்புடன்
செல்வா
 
 
 
 


 
2011/6/13 Deiva Sundaram <ndsun...@hotmail.com>

C.R. Selvakumar

unread,
Jun 13, 2011, 8:40:41 PM6/13/11
to tamil...@googlegroups.com, tamil_ulagam
அன்புள்ள இளங்கோவன்,
 
சொற்பொருள் என்பது, அதுவும் துல்லிய அறிவிலக்கியப் பயன்பாட்டில்,
வரையறை செய்யப்பட்டுச் சீராக வழங்கும்பொழுதே நிலைபெறும்.
இதில் மொழியின் குறைபாடுகள் ஏதும் இல்லை. நீங்கள் கூறும்
பின்தங்கிய நிலை நீங்கள் கூறும் படைப்புகள் இல்லாமை (சொல்லப்
போனால் சீருடன் பயன்படுத்தி ஆளும் சூழல் இல்லாமை).
நுட்பப் பொருள்நிறங்களும் வேறுபாடுகளும் வழங்கு சூழலாலும்,
துல்லிய வரையறையாலும், சீரான பயன்பட்டாலும் என்று உணர்ந்தல்
வேண்டும்.
 
"ஆயினும், 
துல்லியம் மிக அதிகமாக இருந்தாற்றான் அறிவியல் படைக்க முடியும்
என்று உணர்கிறேன்"  என்பதில் 'துல்லியம்" என்பது மேலே கூறப்பட்ட
வழக்காறுகளால். ஆங்கிலத்திலே வானொலியில் உள்ள speaker என்பது
வழக்கால் இன்னது என்று உணரப்பெறுவது. அது "பேசி" அல்ல,
பொதுவாக "ஒலிப்பி". இப்படித்தான் "predicive forecasting" என்று கூறும்பொழுது
"pridictive" என்பதற்கு ஒரு பொருளும் (வாய்ப்பு அல்லது நிகழ்தகவு
கணக்கீடுகளின் கனிப்பு??), forecast என்றால் அதன் அடிப்படையில்
கூறும் வருநிலைப் பதிப்பு (பதியப்படும் எதிர்பார்ப்பு???) என்பது
போலவும் பொருள் கொள்கிறார்கள். இதில் "துல்லியம்" அச்சொற்களில்
இல்லை, அவர்களின் வழக்காறு, வரையறைகளின் வழி எழுவன.
 
பொதுவாகத் தமிழர்கள் (படித்தவர்களும்கூட!!)
வரையறை செய்து வழங்குதல் என்பதை
எற்பதில் தயக்கம் காட்டுகின்றனர். நீங்கள் கூறுவது போல
"நீட்டி நெளித்து" எழுதத் தேவை இல்லை.
வரையறை தந்து சீருடன் எழுத்தாளும் பண்பாடு வளர்ந்தால்
நறுக்கென்றும் சுருக்கமாகவும், பொருள் தெறிக்குமாறும்
எதனையும் தமிழில் கூறுதல் இயலும். தக்க துறையறிவும்,
அறிவுச்செய்திகளை முறைசார்ந்து கருத்துரையாடும்
அறிவாளிகள் சூழலும் வேண்டும்.
 
அன்புடன்
செல்வா

2011/6/13 Elangovan N <nela...@gmail.com>

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tamilmanram...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.

Deiva Sundaram

unread,
Jun 14, 2011, 12:11:07 AM6/14/11
to tamil...@googlegroups.com
அன்புள்ள ஐயா,
Infinitive  என்பதைச் சிலர் குறையெச்சம் என்று அழைக்கிறார்கள். இதுபற்றி மேலும் சில கட்டுரைகளைப் படித்துவருகிறேன். அதன்பின்னர் எனது கருத்தைத் தெரிவிக்கிறேன். செய வாய்பாட்டு வினையெச்சத்தைக் குறிக்கத்தான் இச்சொல்லைப் பயன்படுத்துகிறார்கள். தமிழில் வினையெச்சங்கள் ( வரலாற்றாய்வு) என்ற ஒரு முனைவர் பட்ட ஆய்வேட்டைச் சேலம் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றும் முனைவர் பெ. மாதையன் என்பவர் அளித்துள்ளார். எனது ஒருசாலை ஆய்வுப்படிப்புத் தோழர். ஆய்வுவழிகாட்டி பேரா. பொற்கோ அவர்கள். அந்த ஆய்வேடு தற்போது நூலாகவும் வெளிவந்துள்ளது. ஒரு முழுமையான ஆய்வு இது. பல விளக்கங்களை இதில் நாம் பெறலாம்.
 
சில இடங்களில் தொழிற்பெயரும் செய வாய்பாட்டு வினையெச்சமும் ஒன்றுபோல பயன்படலாம். சிலர் தொழிற்பெயரிலிருந்து செய வாய்பாட்டு வடிவத்தைத் தருவிக்கவும் செய்கிறார்கள். ஆனால் எல்லா இடங்களிலும் அவ்வாறு தருவிக்கமுடியாது. எனவே இரண்டும் வெவ்வேறானவை. செய வாய்பாட்டு வினையெச்சம் வேற்றுமை ஏற்காது. தொழிற்பெயர் வேற்றுமையும் ஏற்கும் ( பெயர்ச்சொல் போல). வினையடை ஏற்கும் ( வினைச்சொல் போல). இதுபற்றிய பல கருத்துகளைப் பேரா. அகத்தியலிங்கம், பேரா. செ.வை.சண்முகம், பேரா. பொற்கோ, முனைவர் மாதையன் தெளிவாக முன்வைத்துள்ளார்கள்.
 
தமிழ் இலக்கணத்தை மொழியியல் பின்னணியில் ஆயும்போது, கருத்துகள் தெளிவாகப் புரிகின்றன.  ஆனால் இலக்கணத்தைத் தெளிவாகப் புரிந்துகொண்டால்தான் மொழியியல் அறிவு பயன்படும். தன் தாய்மொழியின் இலக்கணத்தைச் சரியாக புரிந்துகொள்ளாத ஒருவரால், மொழியியல் ஆய்வாளராக மாறமுடியாது.  

 
அன்புடன்
ந. தெய்வ சுந்தரம்
 

Date: Mon, 13 Jun 2011 18:55:31 +0530
From: p...@giasmd01.vsnl.net.in

Subject: Re: [தமிழ் மன்றம்] தமிழ்ச் சொல் என்ன?

Jean-Luc Chevillard

unread,
Jun 14, 2011, 1:45:34 AM6/14/11
to tamil...@googlegroups.com
Dear all,

I should add to what I said that in his (second) Ph.D. thesis
[The Language of /Tirumūlar/'s /Tirumantiram/,
A Medieval Śaiva Tamil Religious Text,
University of Pennsylvania, 2010]

our colleague and friend, Dr Vasu Renganathan
has found an elegant way of dealing with this terminological problem.

For instance, on page 172, inside section 5.8.
while commenting on the examples

apparic-īcaṉ aruḷ peṟal āmē (Tirum. 36:4)

karai pacu pācam kaṭantu eytal āmē (Tirum. 49:4)

He writes

<QUOTE>
As a result of the phonological reduction from /ākum/ to /ām/,
the process of reanalysis of the structure [medieval Tamil infinitive /al/ + /ākum/]
to [modern Tamil infinitive of verb with /-a/ + /lām/] has taken place.
</QUOTE>


Best wishes

-- Jean-Luc Chevillard (Pondicherry)


***********************************


Dear Iraama.ki.

I also think that using the (international) technical term "infinitive"
for referring to forms like செய்தல்
is faithful to the original use of "infinitive"
for referring to latin forms such as "amare", "delere", "legere", "audire", "capere", etc.

The use of "Errare" (to err) in a construction like "Errare humanum est" (to err is human)
seems to me to be parallel to the use of சொல்லல் and செய்தல் in a construction like

பயனில பல்லார்முற் சொல்ல னயனில
நட்டார்கட் செய்தலிற் றீது.

What I feel uncomfortable with
 is the use of the term "infinitive"
for referring to the "செய வென்னும் வாய்பாடு".

That seems to me unfelicitous,
although I see many people do that.

But of course it is quite difficult to have a consistent international terminology :-)

Best wishes

-- Jean-Luc Chevillard (Pondicherry)


On 13/06/2011 18:55, iraamaki wrote:

C.R. Selvakumar

unread,
Jun 14, 2011, 9:28:12 AM6/14/11
to tamil...@googlegroups.com
அன்புள்ள பேராசிரியர் அவர்களே,
 
இலக்கண நூல்க்களும், மொழியியல் நூல்களும் இன்னும் நிறைய
வெளி வரவேண்டும். அதனை அறிவுடன் அலசி கருத்தாடும்
அறிவியல் குமுகம் உருவாக வேண்டும். இப்படியான குமுகம்
1000-2000 பேர் தமிழ்பேசு நிலங்களில் மட்டுமே இருத்தல் எட்டக்கூடிய
ஓர் இலக்கு. தனி ஆய்வுதழ்கள் வெளிவருதல் வேண்டும்.
 
//செய வாய்பாட்டு வினையெச்சம் வேற்றுமை ஏற்காது.
தொழிற்பெயர் வேற்றுமையும் ஏற்கும் ( பெயர்ச்சொல் போல). //
 
போன்ற கருத்துகள் இன்னும் பரவலாக அறியப்பெற்றிருத்தல் வேண்டும்.
முனைவர் கு. பரமசிவம் எழுதிய "இக்காலத் தமிழ்மரபு" என்னும்
நூலில் சொற்பாகுபாடு என்னும் உட்பிரிவில் (பக். 101) இல்
"ஒவ்வொரு மொழிக்குச் சொல்லப்படும் சொல்வகைகல் எல்லாம்
வேறொரு மொழிக்குச் சொல்லப்படுவதில்லை" என்கிரார்.
பின்னர் ஆங்கிலத்தில் 8 வகைச் சொற்கள், 10 வகைச் சொற்கள்
(Gleason 1956) பற்றியெல்லாம் சொல்கின்றார். தமிழின் 4 வகைச்
சொற்களையும் (பெயர், வினை, இடை, உரி) கூறுகின்றார்.
எப்படி ஒரு மொழியைச் சார்ந்த இலக்கண அறிஞர்களிடையேயே
பற்பல கருத்து வேறுபாடுகள் உள்ளன என்றும் சொல்கின்றார்.
 
தமிழைப் பொருத்த அளவிலேயும், பிற திராவிட, மற்றும் இந்திய
மொழிகளின் இலக்கணக்கூறுகள் நன்கறிந்தவர்கள், பிறமொழிக்
குடும்பங்களின் இலக்கணக் கூறுகள் அறிந்தவர்கள் என்று
பற்பல அறிவுப்புலங்களை ஆழ அறிந்தவர்களின் குமுகத்தை
உருவாக்க வேண்டியது கடமை!
 
அன்புடன்
செல்வா
 
2011/6/14 Deiva Sundaram <ndsun...@hotmail.com>

Jean-Luc Chevillard

unread,
Jun 14, 2011, 1:33:11 PM6/14/11
to tamil...@googlegroups.com
Dear all,

since there is (SO FAR) no reaction from the "tamizh man_Ram" list to my 2 messages (see below),
I suppose I should add one more comment myself
(although I am not a native speaker of Tamil,
but I suppose that the fact that Classical Tamil does not have native speakers is a compensation for that ;-)

What I would like to remark is that
the hesitation between
what Dr Vasu Renganathan calls "medieval Tamil infinitive"
and what he calls "modern Tamil infinitive"
was already there at the time the Kuṟaḷ.

You simply have to compare the ARCHAIC(??) Kuṟaḷ_280
with the MODERN(??) Kuṟaḷ_37

Kuṟaḷ_37 says
அறத்தா றிதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோ டூர்ந்தா னிடை.

Kuṟaḷ_280 says
மழித்தலு நீட்டலும் வேண்டா வுலகம்
பழித்த தொழித்து விடின்.

We can see in ARCHAIC_?? Kuṟaḷ_280
two instances of what Dr Vasu Renganathan calls "medieval Tamil infinitive" in his second Ph.D. thesis,
namely மழித்தல் and நீட்டல் (combined with the -um particle).

AT THE SAME TIME,
We can see in MODERN_??  Kuṟaḷ_37
one instance of what Dr Vasu Renganathan calls "modern Tamil infinitive" in his second Ph.D. thesis,
namely என (inside "என வேண்டா").

Thanks a lot for your comments


-- Jean-Luc C. (Pondicherry)

P.S.  I like to believe that the  "C." inside my name can be translated into Tamil as செவ்வியர்  ;-)
[I hope this won't be construed as meaning "rudely frank"
because that would automatically make me into a "rude பரங்கி" :-)
{{no offense meant to anyone [including myself] :-)  }}
ready to be burnt by the third eye of some (hopefully) unspecified power :-)

-- ழான் (Jean-Luc Chevillard, Pondicherry)


********************

Jean-Luc Chevillard

unread,
Jun 14, 2011, 2:05:18 PM6/14/11
to tamil...@googlegroups.com
Dear all,

as a post-scriptum,
I suppose I should mention one Tolkāppiyam cūttiram
(namely TC238i)


இதுசெயல் வேண்டும் என்னுங் கிளவி
இருவயின் நிலையும் பொருட்டா கும்மே
தன்பா லானும் பிறன்பா லானும்

which is possibly the earliest attestation
for the use of what Dr Vasu Renganathan calls "medieval Tamil infinitive"
(see the form "செயல்", in line 1).

I remember reading, a long time ago,
a very interesting article *(A)* on that Tolkāppiyam cūttiram
by the late professor Agasthialingom
(from Annamalai University),
with whom I have had the honour to correspond
and who has contributed one article *(B)* to a volume which I have edited.

That article *(A)*
illustrated the fact
that Contemporary Tamil
and Classical Tamil
are QUITE different languages,
whatever some (ill-informed) people might claim :-((


-- Jean-Luc Chevillard, Pondicherry




********************************

C.R. Selvakumar

unread,
Jun 14, 2011, 4:37:16 PM6/14/11
to tamil...@googlegroups.com, Vasu Renganathan
அன்புள்ள பேரா. ழான் லூ செவ்வியர்,
 
வணக்கம். உங்கள் மடல்கள் எப்பொழுதும் போல்
வலுவான கருத்துகளைக் கொண்டு வந்துள்ளன!!
உங்கள் முதல் மடலில், நீங்கள் குறிப்பிட்ட
"But of course it is quite difficult to have a consistent international terminology :-)"
என்பதே என்னுடைய கருத்தும்.  நுட்ப பொரூள் வேறுபாடுகளும்,
சில நேரங்களில் பொருந்தாமையும் பல்வேறு மொழிகளுக்கிடையே
பார்க்கலாம்.
 
கடைசியாக நீங்கள் இட்டுள்ள இந்த மடலில்,
"இதுசெயல் வேண்டும்" என்னும் தொடரில் வரும்
"செயல்" என்பதுதான் முனைவர் வாசு
குறிப்பிட்ட "medieval Tamil infinitive" என்பதன் மிக முன்னதான
பயன்பாடா?
என் கேள்வி, செய்தல், செயல், என்பன "infinitive" ஆ?
தொழிற்பெயர்-வினைபெயர் என்னும் பெர்ச்சொற்களும்
"infinitve" எனப்படும் "சொல்வகை"யும் ஒன்றா?
ஆங்கிலத்தில் அல்லது பிரான்சியத்தில் தொழிற்பெயர்
அல்லது வினைப்பெயர் என்பதற்கு வரையறை என்ன?
தமிழில் "infinitive" என்று ஒன்று உள்ளதா? தமிழில்
ஏவல் வினையே இந்த "infinitive" என்பதின் பணியையும்
செய்கின்றதா? எல்லா மொழிகளிலும் "infinitive" என்று
ஒன்று இருந்துதான் ஆக வேண்டுமா? சீன மொழியில்
இவற்றுக்கு ஈடான சொல்வடிவம் என்ன? (அவர்கள்
வினையை மிகவும் வேறு விதமாகப்ப் பயன்படுத்துகின்றனரே!)
 
முனைவர் வாசு அரங்கநாதன் அவர்களுக்கும்
படி ஒன்று இணைத்துள்ளேன்.
 
அன்புடன்
செல்வா

2011/6/14 Jean-Luc Chevillard <jeanluc.c...@gmail.com>

C.R. Selvakumar

unread,
Jun 14, 2011, 4:41:43 PM6/14/11
to tamil...@googlegroups.com, Vasu Renganathan
(எழுத்துப்பிழைகளைத் திருத்தி இடுகின்றேன்)
 
அன்புள்ள பேரா. ழான் லூக் செவ்வியர்,
 
வணக்கம்.
 
உங்கள் மடல்கள் எப்பொழுதும் போல்
வலுவான கருத்துகளைக் கொண்டு வந்துள்ளன!!

உங்கள் முதல் மடலில், நீங்கள் குறிப்பிட்ட
"But of course it is quite difficult to have a consistent international terminology :-)"

என்பதே என்னுடைய கருத்தும்.  நுட்ப பொருள் வேறுபாடுகளும்,
சில நேரங்களில் பொருந்தாமையும்,
பல்வேறு மொழிகளுக்கிடையே பார்க்கலாம்.
 
கடைசியாக நீங்கள் இட்டுள்ள இந்த மடலில்,
"இதுசெயல் வேண்டும்" என்னும் தொடரில் வரும்
"செயல்" என்பதுதான் முனைவர் வாசு அரங்கநாதன்

குறிப்பிட்ட "medieval Tamil infinitive" என்பதன் மிக முன்னதான
பயன்பாடா?
என் கேள்வி, செய்தல், செயல், என்பன "infinitive" ஆ?

தொழிற்பெயர்-வினைப்பெயர் என்னும் பெயர்ச்சொற்களும்
"infinitive" எனப்படும் "சொல்வகை"யும் ஒன்றா?

ஆங்கிலத்தில் அல்லது பிரான்சியத்தில் தொழிற்பெயர்
அல்லது வினைப்பெயர் என்பதற்கு வரையறை என்ன?

தமிழில் "infinitive" என்று ஒன்று உள்ளதா? தமிழில்
ஏவல் வினையே இந்த "infinitive" என்பதின் பணியையும்
செய்கின்றதா? எல்லா மொழிகளிலும் "infinitive" என்று
ஒன்று இருந்துதான் ஆக வேண்டுமா? சீன மொழியில்
இவற்றுக்கு ஈடான சொல்வடிவம் என்ன? (அவர்கள்
வினையை மிகவும் வேறு விதமாகப் பயன்படுத்துகின்றனரே!)

 
முனைவர் வாசு அரங்கநாதன் அவர்களுக்கும்
படி ஒன்று இணைத்துள்ளேன்.
 
அன்புடன்
செல்வா

2011/6/14 C.R. Selvakumar <c.r.sel...@gmail.com>

Jean-Luc Chevillard

unread,
Jun 15, 2011, 1:12:23 AM6/15/11
to tamil...@googlegroups.com, Vasu Renganathan, C.R. Selvakumar, Deiva Sundaram
Dear Vasu,

thanks for your comments

அன்புடன்

-- Jean-Luc

On 15/06/2011 05:14, Vasu Renganathan wrote:
> நான் தமிழ் மன்றத்தில் இல்லை! அரங்கின்றி இந்த அரங்கநாதன் வட்டாடினால்
> தயைகூர்ந்து மன்னியுங்கள்!
>
>
> பேராசிரியர் தெய்வசுந்தரம் சொல்வது போல் காலம் காட்டா வினையுருக்கள்
> அனைத்தையுமே 'infinitive' (as its literal derivation from infinite) என
> ஆங்கிலத்தில் சொல்லலாம். அல் விகுதி பெற்ற வினையடிகளில் சில மயக்கம்
> தருவனவாக இருப்பது நாம் அறிந்ததே!
>
> வர வரல் வருதல் வருகை
> கொள்ள கொளல் கொள்ளல் கொள்ளுதல் *கொள்மை
>
>
> பார்க்க பார்க்கல் பார்க்குதல் பார்த்தல் பார்வை
> கொடுக்க கொடுக்கல் கொடுக்குதல் கொடுத்தல் *கொடுக்குமை (கொடுமை பற்றி
> இங்கு பேசவேண்டாம்)
>
> எனும் சொற்கள் தமிழில் வினைவகை உருவாக்கலில் சில சிக்கலான சூழலைக்
> காட்டுகின்றன. சில வினைகள் எல்லா வகை உரு அமைப்பையும் காட்டுகின்றன.
> சில அப்படி அல்ல. * என குறிப்பிட்ட வகை ஏன் வழக்கில் இல்லை என்பதற்கு
> எந்த ஒரு விளக்கமும் தர இயலாது.
>
> இப்படி இருக்க வரல் வர - பார்க்கல் - பார்க்க போன்ற வினை உருக்களைப்
> பார்க்கும் போது அவற்றுக்கிடையே ஒரு ஒற்றுமை இருப்பதைக் காணலாம்.
>
> பார்க்கல் வேண்டும் என இப்பொழுது வழக்கில் இல்லை என்றாலும். முன்னொரு
> காலத்தில் இருந்திருக்கிறது என்பது உண்மை. பார்க்க வேண்டும் என்றுதானே
> இப்பொழுது சொல்கிறோம். பார்க்கல் வேண்டும் என்று அப்பொழுது சொன்னார்களோ?
> இதற்கிடைய உள்ள உறவுகளை என் ஆய்வில் கூர்ந்து கவனித்த போது இவ்விரு வகை
> வினை உருக்களுக்கும் ஒரு தொடர்பு இருப்பதைக் கண்டேன்.
>
> இருக்கல் சொலல் வரல் போன்ற உருக்கள் இருக்க சொல்ல வர போன்ற வினை
> உருக்களுக்கு முன்னதாக இருக்கலாம் எனும் கருத்தினடிப்படையில் முன்னதை
> இடைக்கால காலம் காட்டா வினை எனவும் பின்னதை இக்காலத்து காலம் காட்டா வினை
> எனவும் நான் பிரித்தேன்.
>
> என்னுடைய ஆய்வேட்டில் வரல் ஆகும் - வரல் ஆம் - வர லாம் என்ற மாற்றங்களைச்
> சுட்டிக்காட்டி வரல் மற்றும் வர எனும் வினையடிகளுக்கு இடையே உள்ள உறவைச்
> சுட்டிக்காட்டினேன். இதனால்தான் இடைக்கால காலம் காட்டா வினை உரு எனவும்
> இக்கால காலம் காட்டா வினை உரு எனவும் இருவகை வினை உருக்களைப் பிரித்தேன்.
>
> இவை இப்படி இருக்க
>
> பார்த்தல் பார்க்கல் பார்வை என்னும் மயக்கம் தரும் வினை உருக்கள்
> இருக்கின்றன. இவற்றில் பார்த்தல் என்பதற்கும் நான் கூறும் இடைக்கால
> காலம் காட்டா வினை அமைப்புக்கும் எந்த தொடர்பும் இல்லை. அப்படியென்றால்
> பார்த்தல் எங்கிருந்து வந்தது என வினா வரும்!
>
> பார்த்தல் என்பதற்கும் பார்ப்பது என்பதற்கும் என்ன தொடர்பு?
>
> பார்ப்பது என்பது காலம் காட்டுகிறது - பார்க்கிறது - பார்த்தது என்பது
> இதற்கிணையான சொற்கள். அனைத்துமே வாக்கிய அடிப்படையிலான வினைப் பெயர்கள்.
> இவற்றை விளக்க ஒரு வாக்கியம் தேவை! நான் பார்த்தது என்ன? - நான்
> புத்தகத்தைப் பார்க்கிறது சும்மா! போன்றன.....
>
>
> அல்லுக்கும் துவுக்கும் ஏதாவது தொடர்பு உள்ளதா?
>
> அல்லுக்கு வாக்கியம் தேவையில்லை! உங்களுடைய வரல் போகல் எனக்குப்
> பிடிக்கும் என பெயர்த்தொடர் அடிப்படையிலேயே இவற்றை விளக்கலாம்.
>
>
> எங்கோ தொடங்கி எங்கோ வந்துவிட்டேன்.
>
>
> ஒரு கருத்து! மொழி என்பது வினை மட்டுமே உள்ள நிலை ஒரு காலத்தில்
> இருந்திருக்கிறது (அது எப்பொழுது என என்னிடம் கேட்காதீர்கள்!) பின்னர்
> வினைகள் பெயர்களாக கொஞ்சம் கொஞ்சமாக மாறியிருக்கின்றன! இந்த நிலையில்தான்
> சில வினைப்பெயர்கள் (பார்க்கல்) முழுப்பெயர்களாக இல்லாத நிலையும் சில
> பெயர்கள் (பார்வை) முழுப்பெயர்களாக மாறிய நிலையும் ஏற்பட்டிருக்கின்றன.
> இதற்கிடையில் சில வினை உருக்கள் பார்க்கல் -> பார்க்க என மாற்றமும்
> அடைந்துள்ளன!
>
> என்னுடைய ஆய்வேட்டில் இம்மாதிரி மாற்றங்கள் ஏற்படுவதற்கான காரணங்களை
> எனக்குத் தெரிந்த வகையில் விளக்கியிருக்கின்றேன்.
>
> நான் விளக்குவது உங்களுக்குப் புரியாமல் இருக்கலாம்.
> என் விளக்கம் உங்களுக்குப் புரியாமல் இருக்கலாம்.
> என்னுடைய விளக்குதல் உங்களுக்குப் புரியாமல் இருக்கலாம்.
>
> திருமூலரின் ஆசி பெற்று
>
> நான் உங்களுக்கு இதை நன்றாக விளக்கல் ஆகுமே!
> நான் உங்களுக்கு இதை நன்றாக விளக்கல் ஆமே!
> நான் உங்களுக்கு இதை நன்றாக விளக்க லாமே!
>
> அன்புடன்
> வாசு அரங்கநாதன்.
>
> இன்னும் கூர்மையாக வேண்டுமெனில் கீழே பாருங்கள்....
>
>
> 2011/6/14 C.R. Selvakumar<c.r.sel...@gmail.com>:


>> (எழுத்துப்பிழைகளைத் திருத்தி இடுகின்றேன்)
>>
>> அன்புள்ள பேரா. ழான் லூக் செவ்வியர்,
>>
>> வணக்கம்.
>>
>> உங்கள் மடல்கள் எப்பொழுதும் போல்
>> வலுவான கருத்துகளைக் கொண்டு வந்துள்ளன!!
>>
>> உங்கள் முதல் மடலில், நீங்கள் குறிப்பிட்ட
>> "But of course it is quite difficult to have a consistent international
>> terminology :-)"
>>
>> என்பதே என்னுடைய கருத்தும். நுட்ப பொருள் வேறுபாடுகளும்,
>> சில நேரங்களில் பொருந்தாமையும்,
>> பல்வேறு மொழிகளுக்கிடையே பார்க்கலாம்.
>>
>> கடைசியாக நீங்கள் இட்டுள்ள இந்த மடலில்,
>> "இதுசெயல் வேண்டும்" என்னும் தொடரில் வரும்
>> "செயல்" என்பதுதான் முனைவர் வாசு அரங்கநாதன்
>> குறிப்பிட்ட "medieval Tamil infinitive" என்பதன் மிக முன்னதான
>> பயன்பாடா?
>
>

> செயல் என்பது முழுமையாக பெயரான ஒரு நிலை! -- என் செயல் பணி செய்து கிடப்பதே!
>
> செயல் என்பது செய்யல் என்பதன் மயக்கம். செய்யல் ஆகுமே! செய்யல் ஆமே! செய
> லாமே! இது ஒரு வகை! இங்குதான் என் கோட்பாடு வருகிறது.
>
> செய்தல் என்பது என்ன? இது -தல் விகுதி கொண்ட பெயர்! தல்/த்தல் வாக்கிய
> அடிப்படையில் பெயர்கள் முற்காலத்தில் இருந்தன!
>
> செய்வது பார்ப்பது போன்றன இக்காலத்தில் வழக்கில் இருக்கும் வாக்கிய
> அடிப்படையிலான பெயர்கள்!
>
> செயல் செய்யல் செய்தல் செய்வது இவையெல்லாம் ஒவ்வொன்றும் ஒரு கதையைச் சொல்லும்!
>
> :)


>
>
>
>
>
>> என் கேள்வி, செய்தல், செயல், என்பன "infinitive" ஆ?
>

> செய்தல் என்பது வினைப்பெயர்! பெயருக்கும் காலத்துக்கும் எந்த தொடர்பும்
> இல்லை! அதனால் இது infinitive ஆ என்ற கேள்விக்கே இடம் இல்லை!
> இந்த வேலையைச் செய்தல் எனக்கு அத்துப்படி! இந்த வேலையைச் செய்கிறது
> எனக்கு அத்துப்படி!
>
> செயல் என்பது பெயராக (action) infinitive பற்றிப் பேசத் தேவையில்லை!
>
> செயல் என்பது முற்காலத்தில் செய்யல் என்னும் வினையோடு
>
> உதாரணம் (பெயர்)
> உன்னுஞ் செயல் மந்திர யோகர் நிறுத்தினார்கள் 4.1.38
> (periyapuranam)
>
>
> (செய்வது போன்று மயக்கம் தரும் பெயர்)
> புண் தலைவன் முருட்டு அமணர் புலர்ந்து செயல் அறியாது
> (periyapuranam)
>
> நான் கூறும் இடைக்கால காலம் காட்டா வினை
> நொய்யன செய்யல் உகந்தார்
> (தேவாரம்)
>
> இக்கால காலம் காட்டா வினை
> வஞ்சனை செய்ய நினையாதே. 87
> (cittarpaadalkal)
>
>
> இன்னும் கீழே பாருங்கள்....


>
>
>> தொழிற்பெயர்-வினைப்பெயர் என்னும் பெயர்ச்சொற்களும்
>> "infinitive" எனப்படும் "சொல்வகை"யும் ஒன்றா?
>> ஆங்கிலத்தில் அல்லது பிரான்சியத்தில் தொழிற்பெயர்
>> அல்லது வினைப்பெயர் என்பதற்கு வரையறை என்ன?
>> தமிழில் "infinitive" என்று ஒன்று உள்ளதா? தமிழில்
>> ஏவல் வினையே இந்த "infinitive" என்பதின் பணியையும்
>> செய்கின்றதா? எல்லா மொழிகளிலும் "infinitive" என்று
>> ஒன்று இருந்துதான் ஆக வேண்டுமா? சீன மொழியில்
>> இவற்றுக்கு ஈடான சொல்வடிவம் என்ன? (அவர்கள்
>> வினையை மிகவும் வேறு விதமாகப் பயன்படுத்துகின்றனரே!)
>>
>> முனைவர் வாசு அரங்கநாதன் அவர்களுக்கும்
>> படி ஒன்று இணைத்துள்ளேன்.
>
>

> படி இணைத்தலின் சிக்கலைக் கண்டீர்களா?
>
> அன்புடன்
> வாசு.

வேந்தன் அரசு

unread,
Jun 15, 2011, 7:33:11 AM6/15/11
to tamil...@googlegroups.com


14 ஜூன், 2011 12:11 am அன்று, Deiva Sundaram <ndsun...@hotmail.com> எழுதியது:

அன்புள்ள ஐயா,
Infinitive  என்பதைச் சிலர் குறையெச்சம் என்று அழைக்கிறார்கள். இதுபற்றி மேலும் சில கட்டுரைகளைப் படித்துவருகிறேன். அதன்பின்னர் எனது கருத்தைத் தெரிவிக்கிறேன். செய வாய்பாட்டு வினையெச்சத்தைக் குறிக்கத்தான் இச்சொல்லைப் பயன்படுத்துகிறார்கள். தமிழில் வினையெச்சங்கள் ( வரலாற்றாய்வு) என்ற ஒரு முனைவர் பட்ட ஆய்வேட்டைச் சேலம் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றும் முனைவர் பெ. மாதையன் என்பவர் அளித்துள்ளார். எனது ஒருசாலை ஆய்வுப்படிப்புத் தோழர். ஆய்வுவழிகாட்டி பேரா. பொற்கோ அவர்கள். அந்த ஆய்வேடு தற்போது நூலாகவும் வெளிவந்துள்ளது. ஒரு முழுமையான ஆய்வு இது. பல விளக்கங்களை இதில் நாம் பெறலாம்.
 
சில இடங்களில் தொழிற்பெயரும் செய வாய்பாட்டு வினையெச்சமும் ஒன்றுபோல பயன்படலாம். சிலர் தொழிற்பெயரிலிருந்து செய வாய்பாட்டு வடிவத்தைத் தருவிக்கவும் செய்கிறார்கள். ஆனால் எல்லா இடங்களிலும் அவ்வாறு தருவிக்கமுடியாது. எனவே இரண்டும் வெவ்வேறானவை. செய வாய்பாட்டு வினையெச்சம் வேற்றுமை ஏற்காது. தொழிற்பெயர் வேற்றுமையும் ஏற்கும் ( பெயர்ச்சொல் போல). வினையடை ஏற்கும் ( வினைச்சொல் போல). இதுபற்றிய பல கருத்துகளைப் பேரா. அகத்தியலிங்கம், பேரா. செ.வை.சண்முகம், பேரா. பொற்கோ, முனைவர் மாதையன் தெளிவாக முன்வைத்துள்ளார்கள்.
 
தமிழ் இலக்கணத்தை மொழியியல் பின்னணியில் ஆயும்போது, கருத்துகள் தெளிவாகப் புரிகின்றன.  ஆனால் இலக்கணத்தைத் தெளிவாகப் புரிந்துகொண்டால்தான் மொழியியல் அறிவு பயன்படும். தன் தாய்மொழியின் இலக்கணத்தைச் சரியாக புரிந்துகொள்ளாத ஒருவரால், மொழியியல் ஆய்வாளராக மாறமுடியாது.  

 
அன்புடன்
ந. தெய்வ சுந்தரம்
 
 
ஐயா
 
ஆங்காங்கே சில எடுத்துகாட்டுகள் தெளித்தால் எம்மனோர்க்கு புரிதல் எளிதாகும்
 
 

C.R. Selvakumar

unread,
Jun 15, 2011, 3:43:22 PM6/15/11
to Vasu Renganathan, tamil...@googlegroups.com, Deiva Sundaram, Jean-Luc Chevillard
அன்புள்ள முனைவர் வாசு அரங்கநாதன்,
 
வணக்கம்.
 
உங்கள் மடலை தமிழ் மன்றம் குழுமத்துக்கும் ஆற்றுப்படுத்தியுள்ளேன்.
உங்கள் மடலுக்கு மிக்க நன்றி.
குறிப்பாக இன்னும் 2 நாட்களில்
நடக்கவிருக்கும் 2011 ஆம் ஆண்டு தமிழ் இணையக் கருத்தரங்கு  சார்ந்த
பணிகளுக்கு இடையேயும் உங்கள் கருத்தை அளித்தமைக்கு
மிகவும் நன்றி
 
அன்புடன்
செல்வா
.
2011/6/14 Vasu Renganathan <vasuren...@gmail.com>
> (எழுத்துப்பிழைகளைத் திருத்தி இடுகின்றேன்)
>
> அன்புள்ள பேரா. ழான் லூக் செவ்வியர்,
>
> வணக்கம்.
>
> உங்கள் மடல்கள் எப்பொழுதும் போல்
> வலுவான கருத்துகளைக் கொண்டு வந்துள்ளன!!
>
> உங்கள் முதல் மடலில், நீங்கள் குறிப்பிட்ட
> "But of course it is quite difficult to have a consistent international
> terminology :-)"
>
> என்பதே என்னுடைய கருத்தும்.  நுட்ப பொருள் வேறுபாடுகளும்,
> சில நேரங்களில் பொருந்தாமையும்,
> பல்வேறு மொழிகளுக்கிடையே பார்க்கலாம்.
>
> கடைசியாக நீங்கள் இட்டுள்ள இந்த மடலில்,
> "இதுசெயல் வேண்டும்" என்னும் தொடரில் வரும்
> "செயல்" என்பதுதான் முனைவர் வாசு அரங்கநாதன்
> குறிப்பிட்ட "medieval Tamil infinitive" என்பதன் மிக முன்னதான
> பயன்பாடா?


செயல் என்பது முழுமையாக பெயரான ஒரு நிலை!   -- என் செயல் பணி செய்து கிடப்பதே!

செயல் என்பது செய்யல் என்பதன் மயக்கம்.  செய்யல் ஆகுமே! செய்யல் ஆமே! செய
லாமே!  இது ஒரு வகை!  இங்குதான் என் கோட்பாடு வருகிறது.

செய்தல் என்பது என்ன?  இது -தல் விகுதி கொண்ட பெயர்!   தல்/த்தல் வாக்கிய
அடிப்படையில் பெயர்கள் முற்காலத்தில் இருந்தன!

செய்வது பார்ப்பது போன்றன இக்காலத்தில் வழக்கில் இருக்கும் வாக்கிய
அடிப்படையிலான பெயர்கள்!

செயல் செய்யல் செய்தல் செய்வது இவையெல்லாம் ஒவ்வொன்றும் ஒரு கதையைச் சொல்லும்!

:)






> என் கேள்வி, செய்தல், செயல், என்பன "infinitive" ஆ?

செய்தல் என்பது வினைப்பெயர்!  பெயருக்கும் காலத்துக்கும் எந்த தொடர்பும்
இல்லை! அதனால் இது infinitive ஆ என்ற கேள்விக்கே இடம் இல்லை!
இந்த வேலையைச் செய்தல் எனக்கு அத்துப்படி!  இந்த வேலையைச் செய்கிறது
எனக்கு அத்துப்படி!

செயல் என்பது பெயராக (action) infinitive பற்றிப் பேசத் தேவையில்லை!

செயல் என்பது முற்காலத்தில் செய்யல் என்னும் வினையோடு

உதாரணம் (பெயர்)
உன்னுஞ் செயல் மந்திர யோகர் நிறுத்தினார்கள் 4.1.38
(periyapuranam)


(செய்வது போன்று மயக்கம் தரும் பெயர்)
புண் தலைவன் முருட்டு அமணர் புலர்ந்து செயல் அறியாது
(periyapuranam)

நான் கூறும் இடைக்கால காலம் காட்டா வினை
நொய்யன செய்யல் உகந்தார்
(தேவாரம்)

இக்கால காலம் காட்டா வினை
வஞ்சனை செய்ய நினையாதே. 87
(cittarpaadalkal)


இன்னும் கீழே பாருங்கள்....
> தொழிற்பெயர்-வினைப்பெயர் என்னும் பெயர்ச்சொற்களும்
> "infinitive" எனப்படும் "சொல்வகை"யும் ஒன்றா?
> ஆங்கிலத்தில் அல்லது பிரான்சியத்தில் தொழிற்பெயர்
> அல்லது வினைப்பெயர் என்பதற்கு வரையறை என்ன?
> தமிழில் "infinitive" என்று ஒன்று உள்ளதா? தமிழில்
> ஏவல் வினையே இந்த "infinitive" என்பதின் பணியையும்
> செய்கின்றதா? எல்லா மொழிகளிலும் "infinitive" என்று
> ஒன்று இருந்துதான் ஆக வேண்டுமா? சீன மொழியில்
> இவற்றுக்கு ஈடான சொல்வடிவம் என்ன? (அவர்கள்
> வினையை மிகவும் வேறு விதமாகப் பயன்படுத்துகின்றனரே!)
>
> முனைவர் வாசு அரங்கநாதன் அவர்களுக்கும்
> படி ஒன்று இணைத்துள்ளேன்.


படி இணைத்தலின் சிக்கலைக் கண்டீர்களா?

அன்புடன்
வாசு.

Elangovan N

unread,
Mar 11, 2012, 9:40:11 AM3/11/12
to tamil...@googlegroups.com
அன்புடையீர்,
வணக்கம்.

மொழியியல் அடிப்படையில் கீழ்க்கண்ட சொற்களுக்குத் 
தமிழ்ச் சொற்கள் வேண்டுகிறேன். தருக.

1) corpus, corpora
2) concord, concordance

நன்றி.

iraamaki

unread,
Mar 11, 2012, 9:28:48 PM3/11/12
to tamil...@googlegroups.com

நான் மொழியாளன் இல்லை. ஏதோ ஓரளவு மொழி பற்றித் தெரிந்த பொறிஞன், தமிழார்வலன். மொழியாளர்கள் கீழே வருபவற்றைக் காட்டிலும் நல்ல சொற்களைப் பயன்படுத்திக் கொண்டிருக்கலாம். அவர்களின் பரிந்துரையையும் பொறுத்து அறிவோம்.

இப்பொழுது என் பரிந்துரை.
 
corpus = குவை (இதற்கு மாறாய்த் தொகை, திரள் என்ற சொற்களையும் சிலர் பயன்படுத்துவர். தொகை என்னும் போது ஒரு குறிக்கோளோடு வரிசைப் படுத்திய வினை அதிலிருப்பது புலப்படும். குவை என்பது ஒரு குறிக்கோளோடு குவிக்கப்பட்டது ஆனால் வரிசைப் படுத்தப் படாதது. திரள் என்பது குறிக்கோளோடு இருக்கலாம், குறிக்கோள் இல்லது தானாய்த் திரண்டதாயும் இருக்கலாம். தமிழில் திரள் -> குவை -> தொகை என்னும் சொல்வரிசையை அடுக்கினால் கொஞ்சம் கொஞ்சமாய் ஒழுங்கு கூடும் வரிசை உள்ளிருப்பது புலப்படும்.) corpus என்பதற்கு இணையாக என் பரிந்துரை குவை என்பதே. body என்ற இன்னொரு பொருள் உடலியலில் (anatomy) வரும், அங்கு யாக்கை, சடலம், ஆகம் போன்ற வேறு சொற்களைப் பயன்படுத்தலாம்.   

(pl. corpora), late 14c., from L. corpus, lit. "body" (see corporeal). The sense of "body of a person" (mid-15c. in English) and "collection of facts or things" (1727 in English) were both present in Latin. Corpus Christi (late 14c.), feast of the Blessed Sacrament, is the Thursday after Trinity Sunday. Also used in various medical phrases, e.g. corpus callosum (1706, lit. "tough body"), corpus luteum (1788, lit. "yellow body").

to concord (v) = இணங்குதல்,
concord (n) = இணக்கு,
concordance = இணங்குகை, இணக்கம், 

early 14c., from O.Fr. concorde (12c.) "concord, harmony, agreement, treaty," from L. concordia "agreement, union," from concors (gen. concordis) "of the same mind," lit. "hearts together," from com- "together" (see com-) + cor "heart" (see heart).

”Corpus, Database, Lexicon, Cognates in language study” - these words mean differently.

ஒரு மொழிப்படிப்பில் “குவை, தரவுத்தளம், களஞ்சியம், கணச்சொற்கள் (ஒரே கூட்டத்தைச் சேர்ந்த சொற்கள்)” போன்றவை வெவ்வேறு பொருட்பாட்டைக் கொடுக்கின்றன.

அன்புடன்,
இராம.கி.

வேந்தன் அரசு

unread,
Mar 11, 2012, 11:27:41 PM3/11/12
to tamil...@googlegroups.com


11 மார்ச், 2012 9:40 am அன்று, Elangovan N <nela...@gmail.com> எழுதியது:
அன்புடையீர்,
வணக்கம்.

மொழியியல் அடிப்படையில் கீழ்க்கண்ட சொற்களுக்குத் 
தமிழ்ச் சொற்கள் வேண்டுகிறேன். தருக.

1) corpus, corpora : தொழுதி
 
2) concord, concordance: இணக்கம், இயைவு


மொழிபெயர்ப்பு செய்யும் போது இந்த இன்னல்கள் தோன்றலாம்
எனின், தமிழில் சிந்தித்தால்  தமிழ் ஆற்றொழுக்காக வரும்

Elangovan N

unread,
Mar 14, 2012, 9:10:20 AM3/14/12
to tamil...@googlegroups.com
அன்பின் ஐயா,

சொற்களுக்கு மிக்க நன்றி.
மிகவும் பயன்படும் என்று கருதுகிறேன்.

அன்புடன்
நாக.இளங்கோவன்

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msg/tamilmanram/-/80ZXMnkN2t0J.

janakiraja

unread,
Mar 14, 2012, 9:59:19 PM3/14/12
to tamil...@googlegroups.com
வணக்கம்.  corpus என்பதன் பன்மைவடிவமே corpora என்பது. இதற்கு தொகுதி(சொற்களின் தொகுதி) என்பதே பொருள். 

2012/3/14 Elangovan N <nela...@gmail.com>

Elangovan N

unread,
Mar 15, 2012, 12:38:18 AM3/15/12
to tamil...@googlegroups.com
வணக்கம் நண்பரே.
தொகுதி, தொகுப்பு, தொகை, திரள் என்ற சொற்களே பல்வேறு நுட்பச் சொற்களுக்குப் 
பயன்படுத்தப் படுகின்றன.

காட்டாக, Consolidation, Collection, Compilation போன்ற சொற்களுக்கு இச்சொற்கள் பொருத்தமாக இருக்கக் கூடும் என்று கருதுகிறேன். 

இது போன்று பலவும் சேர்கின்ற வினையில், சேரும் வடிவங்கள்/வகைகள் பல இருக்கின்றன.
இவற்றை வரிசைப் படுத்தி விதப்பான சொல் காணல் தேவைப்படுகிறது.

எனக்குக் குவை என்ற சொல் உகப்பாக இருக்கிறது. குவையம் என்று பயன்படுத்தலாம் என்றுள்ளேன்.

செய்திக் குவையம் = News Corpus
கல்வெட்டுக் குவையம் = Inscription Corpus
இலக்கியக் குவையம் = Literature Corpus

இது எனக்கு விதப்பாக இருப்பதாகத் தெரிகிறது.


Concord என்பதற்கு இராம.கி ஐயா கொடுத்துள்ள சொற்களில் இருந்து
 இணவு என்ற சொல்லை யோசித்துக் கொண்டுள்ளேன்.

Concordance = சொல்லிணவு என்று சொல்லலாம் என்று கருதுகிறேன்.

Literature Concordance = இலக்கியச் சொல்லிணவு என்று பயன்படுத்தலாம் என்று இருக்கிறேன்.

மிக்க நன்றி.

அன்புடன்
நாக.இளங்கோவன்

C.R. Selvakumar

unread,
Mar 15, 2012, 4:34:27 PM3/15/12
to tamil...@googlegroups.com
அன்புள்ள இளங்கோவன்,

உங்கள் மடலுக்கு முன்னர் கருத்திட மறந்தேன்!!
corpus என்பதை மொழியியல் சார்பாகப் பயன்படுத்தும்பொழுது
Linguistic Corpus என்று சொல்லி விளக்கிய பிறகே பொதுவாக கார்ப்பசு
என்று குறிப்பர். இது பற்றி சிறிய குறுங்கட்டுரை ஒன்றைத் தமிழ்
விக்கிப்பீடியாவில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் (பிபிரவரி 6, 2010 இல்)
எழுதினேன். அதனைப் பலவாறு மேம்படுத்தலாம். அக்குறுங்கட்டுரையைப்
பார்க்க இங்கே சொடுக்குங்கள். நான் அப்பொழுது மொழித்தொகுப்பு அலல்து மொழிவழக்குத் தொகுப்பு என்று குறிப்பிட்டிருந்தேன்.

கார்ப்பசு என்பது வெறும் தொகுப்புதான். ஆனால் தகக் குறிச்சொற்கள் பொருத்தி,
பயன்கொள்ளுமாறு தக்கவாறு தேர்ந்து பொறுக்கித் தொகுப்பது மொழியியலாளர்
பின்பற்றும் முறை. இதே போல மேச்சுவழக்கு மொழித்தொகுப்பு என்று மிகப்பல
வகையான தொகுப்புகள் செய்யலாம்.

குவை என்பதை சிலர் ஆர்க்கைவ் (archive) என்பதற்கு ஈடாகப்
பயன்படுத்துகின்றனர். ஆவணக்குவை = document archive என்கிறார்கள்.
குவை என்பது சிறிய நல்ல பொருள் பொதிந்த சொல்லே. முன்னர்
அம்புகள் வைக்கும் கூடையைக் குவை என்றார்கள். கூடை, குடலை (பூக்குடலை),
குவை ஆகிய அனைத்தும் சேர்த்து வைக்கப் பயன்படுவன. தொகுப்பு, திரள்,திரட்டு, கொத்து, இணர், துணர் என்று பற்பல சொற்களைத் தக்கவாறு
பயன்படுத்தலாம்.

concordance என்பது ஒத்த, இசைவு, இணக்கம் என்பது போன்ற கருத்தைச்
சுட்டும். ஒத்தீடான சொல்/சொற்கள் என்பதையும் குறிக்கும்.

தலைப்புக்குள் வராத புறக்குறிப்பு:
இராம.கி ஐயாவும், நீங்களும் இன்னும் பலரும் விக்கிப்பீடியா, விக்சனரி
போன்ற களங்களில் வந்து உரையாடினால் அவை காலத்துக்கும் பதிவாகி,
பயன்பெருக்கி நிற்கும். ஏதொன்றைப்பற்றியும் அறிவான முறையிலே தக்க
அறிமுகம் தரும் 4-5 வரிகள் அல்லது அரை பக்க, ஒரு பக்கக் கட்டுரைகள்
எழுதலாம். நெடிய 10-பக்கம் 20-பக்கம் கட்டுரையும் எழுதலாம்.
பொது ஏற்புப் பெறுமாறு, அறிவான முறையிலே,
அறமான முறையிலே கருத்தாடி உருவாக்கலாம். இப்பொழுது
தமிழ் விக்கிப்பீடியா 45,000 கட்டுரைகளைத் தாண்டி வந்துள்ளது.
விரைவில் 50,000 ஐ எட்டும்;
மேலும் மேலும் உயரும். அவற்றுள் ஒரு 2,000 அல்லது 5,000 கட்டுரைகள்
நல்லவையாக இருந்தாலுமேபெரு வரவு! எக்குறை
இருந்தாலும் யாரும் செப்பம் செய்யவல்ல நல்ல ஒரு களம்.
நல்ல கட்டுரைகளை
(கடுஞ்சிக்கலான சமன்பாடுகளோடு,
ஒப்பரிய நல்ல வண்ணப் படங்களோடு,
பல்திறம் கொண்ட அட்டவணைகளோடு,
அசைபடங்களோடு, பலவாறு மீசுட்டுகள் கொண்டு
உள் தொடர்புகள் உள்ளவாறு)
எழுதி ஆவணப்படுத்த அருமையான இடம். அங்கு எழுதியதை
நீங்கள் உங்கள் வலைப்பதிவிலும் இடலாம். தனி நூலாகவும்
வெளியுடலாம். தமிழ் போற்றும்
தமிழர்கள் இன்னும் பெருவாரியாக வந்து பல்முனைகளில் ஆக்கம்
செய்யலாம்.

அறிவுக்கோயில் எழுப்ப வாருங்கள்!  ஒவ்வொரு அறிவு மூலைகளையும்
செதுக்கி செப்பம் சேர்க்க வாருங்கள்! மொழியியலில் எழுத ஆயிரம் ஆயிரம்
உள்ளன, மருத்துவத்தில், பொருளாதாரத்தில், என்று அறிவுத்துறை
ஆயிரம் ஆயிரமாக உள்ளவற்றில் எழுத ஆயிரம் உள்ளன.
ஒரு கிழமைக்கு 10 மணித்துளிகள் ஒதுக்கி, ஒரு 4-5 வரிகள்
எழுத வாருங்கள்.

அன்புடன்
செல்வா

 


Elangovan N

unread,
Mar 16, 2012, 12:01:39 PM3/16/12
to tamil...@googlegroups.com
அன்பின் பேரா.செல்வா,
கருத்துகளுக்கு மிக்க நன்றி.

விக்கியில் ஓரிரு ஆண்டுகளுக்கு முன்னே சேர்ந்தேன்.
நிறைய எழுதவேண்டும் என்றுதான் எண்ணம்.
பலவேறு விதயங்களில் இழுபட்டுப் போய்விடுகிறேன் :-))
தற்போது மீண்டும் உள்ளே போய்ப் பார்த்துவிட்டு வந்திருக்கிறேன் :)
கொஞ்சம் விக்கியில் பழக வேண்டி உள்ளது. 
என்னால் இயன்றவற்றை அவசியம் செய்ய மீண்டும் முயற்சிக்கிறேன்.

அன்புடன்
நாக.இளங்கோவன்
Reply all
Reply to author
Forward
0 new messages