--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tamilmanram...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tamilmanram...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.
1. Forecast --- மு(ன்)ங்கூற்று உய்த்தல், முஞ்செப்புதல்
காரண காரியங்களின் ஆதாரங்களோடு முன்னுரைத்தல்
2. Predict -- குணிப்பிடுதல், குணிசமிடுதல், குணிகம், குணிசம்
நம்பிக்கை மற்றும் அனுபவத்தைக் கொண்டு யூகங்கலந்து சொலல்.
3. Speculate -- கருத்தூன்றுதல்
முழுஆதாரமின்றி, தன் கருத்தை ஊன்றிச் சொலல்
4. Estimate -- மட்டிடுதல்
மட்டு இவ்வளவு எனச் சொல்ல். மட்டு = வரையறை அளவு
5. Compute -- கணிப்பிடுதல்
பல் வகைச் சார்பு வழிகள் இருப்பினும், ஒரு தெரிவைத் தேர்ந்தெடுத்துக்
கணக்கிட்டுச் சொலல்.
6. Calculate -- கணக்கிடு
தெரிவான அலகுகளைக் கொண்டு கணக்கிடுதல்
7. Valuate - மதிப்பிடு
அளவுகளைக் கணக்கிட்டு, மதிப்புக் கொணர்தல்
8. Evaluate -- அளவிடு
ஒரு நிலையில் இருப்பனவற்றை அளவிட்டுச் சொல்தல்
9.Judge -- தீர்மானி
தன் கருத்து, கணக்குகள் மூலம் ஒரு நிலைப்பாட்டுக்கு வருதல்
10. Rate (rate it) -- மாறுமதிப்பைக் கணக்கிடுதல்
பல வகையான மதிப்புகள் இருக்கையில், அவற்றில் ஒன்றைத் தெரிவு செய்தல்
11. Assess -- அவதான மதிப்பீடு
தொடர்நிலையில் இருக்கும் ஒன்றினை அவதானித்து, நடப்பு நிலையைச் சொலல்.
செல்வா அய்யா, அவர்கள் கூறிய கருத்தினை வரவேற்கிறேன். 26 எழுத்துகள்
கொண்ட ஒரு மொழியைக் காட்டிலும், 247 எழுத்துகள் கொண்ட மொழியில் சொற்கள்
நிறைய இருப்பதில் வியப்பில்லை. இடம், பொருள், ஏவலுக்கேற்ற சொற்கள்,
அதாவது, இன்னதை இன்னது என வலுவாகக் குறிக்கும் சொற்கள் தமிழில் இருக்கக்
கூடும். வழக்கொழிந்து இருப்பினும், அவற்றுக்கு உயிரூட்டுவதே சிறப்பாக
இருக்கும்.
water fall = நீர் வீழ்ச்சி; (அருவி)
Fanatics - Fan - விசிறி (அதியார்வலர்) என ஆக்குவதைக் குறைத்தல் நமக்கும்
நம்மொழிக்கும் சிறப்பைக் கூட்டும்.
பணிவுடன்,
பழமைபேசி.
On Jun 12, 1:44 pm, "C.R. Selvakumar" <c.r.selvaku...@gmail.com>
wrote:
> இன்னும் சில அருமையான சொற்கள் அண்மையில்
> வழக்கிழந்துள்ளன. கைக்கணிப்பு, கைக்கணிசம், கைமதிப்பு, கைமட்டு
> (இவை போன்றசொற்கள், தோராயமாக கணித்தல், அல்லது மதிப்பிடலுக்கு
> பயன்ப்டுவன estimate, guesstimate போன்ற சொற்களுக்கு).
>
> பருமட்டம் என்பதும் தோராயமான கணக்கு (rough estimate).
> கண்மதிப்பு, சரவைக்கணிப்பு என்பன இன்னும் சில சொற்கள்
>
> அகைப்பு என்னும் சொல்லும் உட்கு என்னும் சொல்லும்.
> உண்மையான உள்மதிப்பு என்னும் பொருள் தரவல்லது.
> இதனை உயர்விலை மிக்க ஒன்றைப் பற்றிக் கணிக்கும்
> பொழுது கூறாலாம்.
>
> பொதுவாக கணி (கணிப்பு), குணி (குணிப்பு), மதி (மதிப்பு),
> அள (அளவு) போன்று இன்னும்
> சில சொற்களோடு முன், எதிர், கை, போன்ற முன்னொட்டுகளோ
> இட்டுத் தக்க பொருல் கொள்ளும் சொற்களை ஆளலாம்.
>
> வெறும் பார், பார்வை என்னும் சொற்களே estimate, assess, evaluate,
> என்னும் பொருள்கள் தருவன. அதே போல நோட்டம்
> என்னும் சொல்லும் ஒருவகையாகக் கணக்கிடும் பொருள் தரவல்லதே.
> முன்நோட்டம் என்றால் "fore-estimate, preview (in the sense of evaluation) "
> போன்ற பொருள்கள் தரவல்லது.
>
> அன்புடன்
> செல்வா
>
> 2011/6/12 C.R. Selvakumar <c.r.selvaku...@gmail.com>
>
>
>
>
>
>
>
>
>
> > அன்புள்ள இளங்கோவன்,
>
> > இச்சொற்கள் ஆங்கிலத்தில் வழங்கும்பொழுது பல்வேறு
> > சூழல்கலில் பல்வேறு பொருள்நிறம் தரும். சில சொற்கள்
> > வெவ்வேறாகக் காட்சி தந்தாலும் ஒரே பொருளும் சுட்டும்.
> > எனவே இடம், சூழல் அறிந்தே ஈடுசொற்கள் தருதல் நல்லது.
>
> > எடுத்துக்காட்டாக forecast, pedict என்னும் சொற்கள் சில இடங்களில்
> > ஒரே பொருள் சுட்டலாம், வேறு இடங்களில் வெவ்வேறு பொருள்நிறம்
> > சுட்டலாம். calculate, compute ஆகியவையும் இப்படியே. மிகப்பெரும்பாலான
> > இடங்களில் பெரிய வேறுபாடு ஏதும் இல்லை.
>
> > forecast, predict ஆகிய இரண்டுக்கும் இடாய்ச்சு மொழியில்
> > vorhersagen என்னும் சொல்லைப் பயன்படுத்தலாம். இதில் sagen என்பது
> > சொல்லுதல். forecast என்பதர்கு மற்ற சொற்கள் இடாய்ச்சு மொழியில்
>
> > 1. vorhersehen
> > 2. vorausbestimmen
> > 3. vorausberechnen
> > 4. ankündigen
> > 2011/6/12 Elangovan N <nelan...@gmail.com>
--
On Jun 12, 9:39 pm, பழமைபேசி <pazamaip...@gmail.com> wrote:
> 9.Judge -- தீர்மானி
> தன் கருத்து, கணக்குகள் மூலம் ஒரு நிலைப்பாட்டுக்கு வருதல்
>
தீர்வை இடுதல்
> 10. Rate (rate it) -- மாறுமதிப்பைக் கணக்கிடுதல்
> பல வகையான மதிப்புகள் இருக்கையில், அவற்றில் ஒன்றைத் தெரிவு செய்தல்
>
விலைகுத்து- என்போம் ஊரில்.
நா. கணேசன்
On Jun 12, 9:47 am, சி. ஜெயபாரதன் <jayabarath...@gmail.com> wrote:
> 1. Forecast : முன்கணி, முன்கணிப்பு
> 2. Predict : முன்னூகிப்பு
> 3. Speculate : யூகிப்பீடு
> 4. Estimate : மதிப்பீடு
ஐயா,
எல்லோரும் பயன்படுத்தும் வார்த்தை: உத்தேசம்.
நா. கணேசன்
> 5. Compute : கணிப்பீடு
> 6. Calculate : கணக்கிடு
> 7. Valuate : மதிப்பிடு
> 8. Evaluate : மதிப்பிடு, கணக்கிடு
> 9.Judge : தீர்ப்பளி, நியாயப் படுத்து, நீதி வழங்கு
> 10. Rate (rate it) : விலை மதிப்பிடு
> 11. Assess : அனுமான மதிப்பிடு.
>
> சி. ஜெயபாரதன்
>
> ++++++++++++++++++
>
> 2011/6/12 Elangovan N <nelan...@gmail.com>
>
>
>
> > அன்புடையீர், கீழ்க்கண்ட ஆங்கிலச் சொற்களுக்குத் தமிழ் தருக.
> > ஒவ்வொரு சொல்லையும் தெளிவாக வேறுபடுத்தும் சொல் தருக.
>
> > 1. Forecast
> > 2. Predict
> > 3. Speculate
> > 4. Estimate
> > 5. Compute
> > 6. Calculate
> > 7. Valuate
> > 8. Evaluate
> > 9.Judge
> > 10. Rate (rate it)
> > 11. Assess
>
> > அன்புடன்
> > நாக.இளங்கோவன்
>
> > --
> > You received this message because you are subscribed to the Google Groups
> > "தமிழ் மன்றம்" group.
> > To post to this group, send email to tamil...@googlegroups.com.
> > To unsubscribe from this group, send email to
> > tamilmanram...@googlegroups.com.
> > For more options, visit this group at
> >http://groups.google.com/group/tamilmanram?hl=ta.- Hide quoted text -
>
> - Show quoted text -
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tamilmanram...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.
உங்கள் முதல் மடலில், நீங்கள் குறிப்பிட்ட
"But of course it is quite difficult to have a consistent international terminology :-)"
thanks for your comments
அன்புடன்
-- Jean-Luc
On 15/06/2011 05:14, Vasu Renganathan wrote:
> நான் தமிழ் மன்றத்தில் இல்லை! அரங்கின்றி இந்த அரங்கநாதன் வட்டாடினால்
> தயைகூர்ந்து மன்னியுங்கள்!
>
>
> பேராசிரியர் தெய்வசுந்தரம் சொல்வது போல் காலம் காட்டா வினையுருக்கள்
> அனைத்தையுமே 'infinitive' (as its literal derivation from infinite) என
> ஆங்கிலத்தில் சொல்லலாம். அல் விகுதி பெற்ற வினையடிகளில் சில மயக்கம்
> தருவனவாக இருப்பது நாம் அறிந்ததே!
>
> வர வரல் வருதல் வருகை
> கொள்ள கொளல் கொள்ளல் கொள்ளுதல் *கொள்மை
>
>
> பார்க்க பார்க்கல் பார்க்குதல் பார்த்தல் பார்வை
> கொடுக்க கொடுக்கல் கொடுக்குதல் கொடுத்தல் *கொடுக்குமை (கொடுமை பற்றி
> இங்கு பேசவேண்டாம்)
>
> எனும் சொற்கள் தமிழில் வினைவகை உருவாக்கலில் சில சிக்கலான சூழலைக்
> காட்டுகின்றன. சில வினைகள் எல்லா வகை உரு அமைப்பையும் காட்டுகின்றன.
> சில அப்படி அல்ல. * என குறிப்பிட்ட வகை ஏன் வழக்கில் இல்லை என்பதற்கு
> எந்த ஒரு விளக்கமும் தர இயலாது.
>
> இப்படி இருக்க வரல் வர - பார்க்கல் - பார்க்க போன்ற வினை உருக்களைப்
> பார்க்கும் போது அவற்றுக்கிடையே ஒரு ஒற்றுமை இருப்பதைக் காணலாம்.
>
> பார்க்கல் வேண்டும் என இப்பொழுது வழக்கில் இல்லை என்றாலும். முன்னொரு
> காலத்தில் இருந்திருக்கிறது என்பது உண்மை. பார்க்க வேண்டும் என்றுதானே
> இப்பொழுது சொல்கிறோம். பார்க்கல் வேண்டும் என்று அப்பொழுது சொன்னார்களோ?
> இதற்கிடைய உள்ள உறவுகளை என் ஆய்வில் கூர்ந்து கவனித்த போது இவ்விரு வகை
> வினை உருக்களுக்கும் ஒரு தொடர்பு இருப்பதைக் கண்டேன்.
>
> இருக்கல் சொலல் வரல் போன்ற உருக்கள் இருக்க சொல்ல வர போன்ற வினை
> உருக்களுக்கு முன்னதாக இருக்கலாம் எனும் கருத்தினடிப்படையில் முன்னதை
> இடைக்கால காலம் காட்டா வினை எனவும் பின்னதை இக்காலத்து காலம் காட்டா வினை
> எனவும் நான் பிரித்தேன்.
>
> என்னுடைய ஆய்வேட்டில் வரல் ஆகும் - வரல் ஆம் - வர லாம் என்ற மாற்றங்களைச்
> சுட்டிக்காட்டி வரல் மற்றும் வர எனும் வினையடிகளுக்கு இடையே உள்ள உறவைச்
> சுட்டிக்காட்டினேன். இதனால்தான் இடைக்கால காலம் காட்டா வினை உரு எனவும்
> இக்கால காலம் காட்டா வினை உரு எனவும் இருவகை வினை உருக்களைப் பிரித்தேன்.
>
> இவை இப்படி இருக்க
>
> பார்த்தல் பார்க்கல் பார்வை என்னும் மயக்கம் தரும் வினை உருக்கள்
> இருக்கின்றன. இவற்றில் பார்த்தல் என்பதற்கும் நான் கூறும் இடைக்கால
> காலம் காட்டா வினை அமைப்புக்கும் எந்த தொடர்பும் இல்லை. அப்படியென்றால்
> பார்த்தல் எங்கிருந்து வந்தது என வினா வரும்!
>
> பார்த்தல் என்பதற்கும் பார்ப்பது என்பதற்கும் என்ன தொடர்பு?
>
> பார்ப்பது என்பது காலம் காட்டுகிறது - பார்க்கிறது - பார்த்தது என்பது
> இதற்கிணையான சொற்கள். அனைத்துமே வாக்கிய அடிப்படையிலான வினைப் பெயர்கள்.
> இவற்றை விளக்க ஒரு வாக்கியம் தேவை! நான் பார்த்தது என்ன? - நான்
> புத்தகத்தைப் பார்க்கிறது சும்மா! போன்றன.....
>
>
> அல்லுக்கும் துவுக்கும் ஏதாவது தொடர்பு உள்ளதா?
>
> அல்லுக்கு வாக்கியம் தேவையில்லை! உங்களுடைய வரல் போகல் எனக்குப்
> பிடிக்கும் என பெயர்த்தொடர் அடிப்படையிலேயே இவற்றை விளக்கலாம்.
>
>
> எங்கோ தொடங்கி எங்கோ வந்துவிட்டேன்.
>
>
> ஒரு கருத்து! மொழி என்பது வினை மட்டுமே உள்ள நிலை ஒரு காலத்தில்
> இருந்திருக்கிறது (அது எப்பொழுது என என்னிடம் கேட்காதீர்கள்!) பின்னர்
> வினைகள் பெயர்களாக கொஞ்சம் கொஞ்சமாக மாறியிருக்கின்றன! இந்த நிலையில்தான்
> சில வினைப்பெயர்கள் (பார்க்கல்) முழுப்பெயர்களாக இல்லாத நிலையும் சில
> பெயர்கள் (பார்வை) முழுப்பெயர்களாக மாறிய நிலையும் ஏற்பட்டிருக்கின்றன.
> இதற்கிடையில் சில வினை உருக்கள் பார்க்கல் -> பார்க்க என மாற்றமும்
> அடைந்துள்ளன!
>
> என்னுடைய ஆய்வேட்டில் இம்மாதிரி மாற்றங்கள் ஏற்படுவதற்கான காரணங்களை
> எனக்குத் தெரிந்த வகையில் விளக்கியிருக்கின்றேன்.
>
> நான் விளக்குவது உங்களுக்குப் புரியாமல் இருக்கலாம்.
> என் விளக்கம் உங்களுக்குப் புரியாமல் இருக்கலாம்.
> என்னுடைய விளக்குதல் உங்களுக்குப் புரியாமல் இருக்கலாம்.
>
> திருமூலரின் ஆசி பெற்று
>
> நான் உங்களுக்கு இதை நன்றாக விளக்கல் ஆகுமே!
> நான் உங்களுக்கு இதை நன்றாக விளக்கல் ஆமே!
> நான் உங்களுக்கு இதை நன்றாக விளக்க லாமே!
>
> அன்புடன்
> வாசு அரங்கநாதன்.
>
> இன்னும் கூர்மையாக வேண்டுமெனில் கீழே பாருங்கள்....
>
>
> 2011/6/14 C.R. Selvakumar<c.r.sel...@gmail.com>:
>> (எழுத்துப்பிழைகளைத் திருத்தி இடுகின்றேன்)
>>
>> அன்புள்ள பேரா. ழான் லூக் செவ்வியர்,
>>
>> வணக்கம்.
>>
>> உங்கள் மடல்கள் எப்பொழுதும் போல்
>> வலுவான கருத்துகளைக் கொண்டு வந்துள்ளன!!
>>
>> உங்கள் முதல் மடலில், நீங்கள் குறிப்பிட்ட
>> "But of course it is quite difficult to have a consistent international
>> terminology :-)"
>>
>> என்பதே என்னுடைய கருத்தும். நுட்ப பொருள் வேறுபாடுகளும்,
>> சில நேரங்களில் பொருந்தாமையும்,
>> பல்வேறு மொழிகளுக்கிடையே பார்க்கலாம்.
>>
>> கடைசியாக நீங்கள் இட்டுள்ள இந்த மடலில்,
>> "இதுசெயல் வேண்டும்" என்னும் தொடரில் வரும்
>> "செயல்" என்பதுதான் முனைவர் வாசு அரங்கநாதன்
>> குறிப்பிட்ட "medieval Tamil infinitive" என்பதன் மிக முன்னதான
>> பயன்பாடா?
>
>
> செயல் என்பது முழுமையாக பெயரான ஒரு நிலை! -- என் செயல் பணி செய்து கிடப்பதே!
>
> செயல் என்பது செய்யல் என்பதன் மயக்கம். செய்யல் ஆகுமே! செய்யல் ஆமே! செய
> லாமே! இது ஒரு வகை! இங்குதான் என் கோட்பாடு வருகிறது.
>
> செய்தல் என்பது என்ன? இது -தல் விகுதி கொண்ட பெயர்! தல்/த்தல் வாக்கிய
> அடிப்படையில் பெயர்கள் முற்காலத்தில் இருந்தன!
>
> செய்வது பார்ப்பது போன்றன இக்காலத்தில் வழக்கில் இருக்கும் வாக்கிய
> அடிப்படையிலான பெயர்கள்!
>
> செயல் செய்யல் செய்தல் செய்வது இவையெல்லாம் ஒவ்வொன்றும் ஒரு கதையைச் சொல்லும்!
>
> :)
>
>
>
>
>
>> என் கேள்வி, செய்தல், செயல், என்பன "infinitive" ஆ?
>
> செய்தல் என்பது வினைப்பெயர்! பெயருக்கும் காலத்துக்கும் எந்த தொடர்பும்
> இல்லை! அதனால் இது infinitive ஆ என்ற கேள்விக்கே இடம் இல்லை!
> இந்த வேலையைச் செய்தல் எனக்கு அத்துப்படி! இந்த வேலையைச் செய்கிறது
> எனக்கு அத்துப்படி!
>
> செயல் என்பது பெயராக (action) infinitive பற்றிப் பேசத் தேவையில்லை!
>
> செயல் என்பது முற்காலத்தில் செய்யல் என்னும் வினையோடு
>
> உதாரணம் (பெயர்)
> உன்னுஞ் செயல் மந்திர யோகர் நிறுத்தினார்கள் 4.1.38
> (periyapuranam)
>
>
> (செய்வது போன்று மயக்கம் தரும் பெயர்)
> புண் தலைவன் முருட்டு அமணர் புலர்ந்து செயல் அறியாது
> (periyapuranam)
>
> நான் கூறும் இடைக்கால காலம் காட்டா வினை
> நொய்யன செய்யல் உகந்தார்
> (தேவாரம்)
>
> இக்கால காலம் காட்டா வினை
> வஞ்சனை செய்ய நினையாதே. 87
> (cittarpaadalkal)
>
>
> இன்னும் கீழே பாருங்கள்....
>
>
>> தொழிற்பெயர்-வினைப்பெயர் என்னும் பெயர்ச்சொற்களும்
>> "infinitive" எனப்படும் "சொல்வகை"யும் ஒன்றா?
>> ஆங்கிலத்தில் அல்லது பிரான்சியத்தில் தொழிற்பெயர்
>> அல்லது வினைப்பெயர் என்பதற்கு வரையறை என்ன?
>> தமிழில் "infinitive" என்று ஒன்று உள்ளதா? தமிழில்
>> ஏவல் வினையே இந்த "infinitive" என்பதின் பணியையும்
>> செய்கின்றதா? எல்லா மொழிகளிலும் "infinitive" என்று
>> ஒன்று இருந்துதான் ஆக வேண்டுமா? சீன மொழியில்
>> இவற்றுக்கு ஈடான சொல்வடிவம் என்ன? (அவர்கள்
>> வினையை மிகவும் வேறு விதமாகப் பயன்படுத்துகின்றனரே!)
>>
>> முனைவர் வாசு அரங்கநாதன் அவர்களுக்கும்
>> படி ஒன்று இணைத்துள்ளேன்.
>
>
> படி இணைத்தலின் சிக்கலைக் கண்டீர்களா?
>
> அன்புடன்
> வாசு.
அன்புள்ள ஐயா,
Infinitive என்பதைச் சிலர் குறையெச்சம் என்று அழைக்கிறார்கள். இதுபற்றி மேலும் சில கட்டுரைகளைப் படித்துவருகிறேன். அதன்பின்னர் எனது கருத்தைத் தெரிவிக்கிறேன். செய வாய்பாட்டு வினையெச்சத்தைக் குறிக்கத்தான் இச்சொல்லைப் பயன்படுத்துகிறார்கள். தமிழில் வினையெச்சங்கள் ( வரலாற்றாய்வு) என்ற ஒரு முனைவர் பட்ட ஆய்வேட்டைச் சேலம் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றும் முனைவர் பெ. மாதையன் என்பவர் அளித்துள்ளார். எனது ஒருசாலை ஆய்வுப்படிப்புத் தோழர். ஆய்வுவழிகாட்டி பேரா. பொற்கோ அவர்கள். அந்த ஆய்வேடு தற்போது நூலாகவும் வெளிவந்துள்ளது. ஒரு முழுமையான ஆய்வு இது. பல விளக்கங்களை இதில் நாம் பெறலாம்.
சில இடங்களில் தொழிற்பெயரும் செய வாய்பாட்டு வினையெச்சமும் ஒன்றுபோல பயன்படலாம். சிலர் தொழிற்பெயரிலிருந்து செய வாய்பாட்டு வடிவத்தைத் தருவிக்கவும் செய்கிறார்கள். ஆனால் எல்லா இடங்களிலும் அவ்வாறு தருவிக்கமுடியாது. எனவே இரண்டும் வெவ்வேறானவை. செய வாய்பாட்டு வினையெச்சம் வேற்றுமை ஏற்காது. தொழிற்பெயர் வேற்றுமையும் ஏற்கும் ( பெயர்ச்சொல் போல). வினையடை ஏற்கும் ( வினைச்சொல் போல). இதுபற்றிய பல கருத்துகளைப் பேரா. அகத்தியலிங்கம், பேரா. செ.வை.சண்முகம், பேரா. பொற்கோ, முனைவர் மாதையன் தெளிவாக முன்வைத்துள்ளார்கள்.
தமிழ் இலக்கணத்தை மொழியியல் பின்னணியில் ஆயும்போது, கருத்துகள் தெளிவாகப் புரிகின்றன. ஆனால் இலக்கணத்தைத் தெளிவாகப் புரிந்துகொண்டால்தான் மொழியியல் அறிவு பயன்படும். தன் தாய்மொழியின் இலக்கணத்தைச் சரியாக புரிந்துகொள்ளாத ஒருவரால், மொழியியல் ஆய்வாளராக மாறமுடியாது.
அன்புடன்
ந. தெய்வ சுந்தரம்
> (எழுத்துப்பிழைகளைத் திருத்தி இடுகின்றேன்)
>
> அன்புள்ள பேரா. ழான் லூக் செவ்வியர்,
>
> வணக்கம்.
>
> உங்கள் மடல்கள் எப்பொழுதும் போல்
> வலுவான கருத்துகளைக் கொண்டு வந்துள்ளன!!
>
> உங்கள் முதல் மடலில், நீங்கள் குறிப்பிட்ட
> "But of course it is quite difficult to have a consistent international
> terminology :-)"
>
> என்பதே என்னுடைய கருத்தும். நுட்ப பொருள் வேறுபாடுகளும்,
> சில நேரங்களில் பொருந்தாமையும்,
> பல்வேறு மொழிகளுக்கிடையே பார்க்கலாம்.
>
> கடைசியாக நீங்கள் இட்டுள்ள இந்த மடலில்,
> "இதுசெயல் வேண்டும்" என்னும் தொடரில் வரும்
> "செயல்" என்பதுதான் முனைவர் வாசு அரங்கநாதன்
> குறிப்பிட்ட "medieval Tamil infinitive" என்பதன் மிக முன்னதான
> பயன்பாடா?
செயல் என்பது முழுமையாக பெயரான ஒரு நிலை! -- என் செயல் பணி செய்து கிடப்பதே!
செயல் என்பது செய்யல் என்பதன் மயக்கம். செய்யல் ஆகுமே! செய்யல் ஆமே! செய
லாமே! இது ஒரு வகை! இங்குதான் என் கோட்பாடு வருகிறது.
செய்தல் என்பது என்ன? இது -தல் விகுதி கொண்ட பெயர்! தல்/த்தல் வாக்கிய
அடிப்படையில் பெயர்கள் முற்காலத்தில் இருந்தன!
செய்வது பார்ப்பது போன்றன இக்காலத்தில் வழக்கில் இருக்கும் வாக்கிய
அடிப்படையிலான பெயர்கள்!
செயல் செய்யல் செய்தல் செய்வது இவையெல்லாம் ஒவ்வொன்றும் ஒரு கதையைச் சொல்லும்!
:)
> என் கேள்வி, செய்தல், செயல், என்பன "infinitive" ஆ?
செய்தல் என்பது வினைப்பெயர்! பெயருக்கும் காலத்துக்கும் எந்த தொடர்பும்
இல்லை! அதனால் இது infinitive ஆ என்ற கேள்விக்கே இடம் இல்லை!
இந்த வேலையைச் செய்தல் எனக்கு அத்துப்படி! இந்த வேலையைச் செய்கிறது
எனக்கு அத்துப்படி!
செயல் என்பது பெயராக (action) infinitive பற்றிப் பேசத் தேவையில்லை!
செயல் என்பது முற்காலத்தில் செய்யல் என்னும் வினையோடு
உதாரணம் (பெயர்)
உன்னுஞ் செயல் மந்திர யோகர் நிறுத்தினார்கள் 4.1.38
(periyapuranam)
(செய்வது போன்று மயக்கம் தரும் பெயர்)
புண் தலைவன் முருட்டு அமணர் புலர்ந்து செயல் அறியாது
(periyapuranam)
நான் கூறும் இடைக்கால காலம் காட்டா வினை
நொய்யன செய்யல் உகந்தார்
(தேவாரம்)
இக்கால காலம் காட்டா வினை
வஞ்சனை செய்ய நினையாதே. 87
(cittarpaadalkal)
இன்னும் கீழே பாருங்கள்....
> தொழிற்பெயர்-வினைப்பெயர் என்னும் பெயர்ச்சொற்களும்
> "infinitive" எனப்படும் "சொல்வகை"யும் ஒன்றா?
> ஆங்கிலத்தில் அல்லது பிரான்சியத்தில் தொழிற்பெயர்
> அல்லது வினைப்பெயர் என்பதற்கு வரையறை என்ன?
> தமிழில் "infinitive" என்று ஒன்று உள்ளதா? தமிழில்
> ஏவல் வினையே இந்த "infinitive" என்பதின் பணியையும்
> செய்கின்றதா? எல்லா மொழிகளிலும் "infinitive" என்று
> ஒன்று இருந்துதான் ஆக வேண்டுமா? சீன மொழியில்
> இவற்றுக்கு ஈடான சொல்வடிவம் என்ன? (அவர்கள்
> வினையை மிகவும் வேறு விதமாகப் பயன்படுத்துகின்றனரே!)
>
> முனைவர் வாசு அரங்கநாதன் அவர்களுக்கும்
> படி ஒன்று இணைத்துள்ளேன்.
படி இணைத்தலின் சிக்கலைக் கண்டீர்களா?
அன்புடன்
வாசு.
நான் மொழியாளன் இல்லை. ஏதோ ஓரளவு மொழி பற்றித் தெரிந்த பொறிஞன், தமிழார்வலன். மொழியாளர்கள் கீழே வருபவற்றைக் காட்டிலும் நல்ல சொற்களைப் பயன்படுத்திக் கொண்டிருக்கலாம். அவர்களின் பரிந்துரையையும் பொறுத்து அறிவோம்.
இப்பொழுது என் பரிந்துரை.
corpus = குவை (இதற்கு மாறாய்த் தொகை, திரள் என்ற சொற்களையும் சிலர் பயன்படுத்துவர். தொகை என்னும் போது ஒரு குறிக்கோளோடு வரிசைப் படுத்திய வினை அதிலிருப்பது புலப்படும். குவை என்பது ஒரு குறிக்கோளோடு குவிக்கப்பட்டது ஆனால் வரிசைப் படுத்தப் படாதது. திரள் என்பது குறிக்கோளோடு இருக்கலாம், குறிக்கோள் இல்லது தானாய்த் திரண்டதாயும் இருக்கலாம். தமிழில் திரள் -> குவை -> தொகை என்னும் சொல்வரிசையை அடுக்கினால் கொஞ்சம் கொஞ்சமாய் ஒழுங்கு கூடும் வரிசை உள்ளிருப்பது புலப்படும்.) corpus என்பதற்கு இணையாக என் பரிந்துரை குவை என்பதே. body என்ற இன்னொரு பொருள் உடலியலில் (anatomy) வரும், அங்கு யாக்கை, சடலம், ஆகம் போன்ற வேறு சொற்களைப் பயன்படுத்தலாம்.
(pl. corpora), late 14c., from L. corpus, lit. "body" (see corporeal). The sense of "body of a person" (mid-15c. in English) and "collection of facts or things" (1727 in English) were both present in Latin. Corpus Christi (late 14c.), feast of the Blessed Sacrament, is the Thursday after Trinity Sunday. Also used in various medical phrases, e.g. corpus callosum (1706, lit. "tough body"), corpus luteum (1788, lit. "yellow body").
to concord (v) = இணங்குதல்,
concord (n) = இணக்கு,
concordance = இணங்குகை, இணக்கம்,
early 14c., from O.Fr. concorde (12c.) "concord, harmony, agreement, treaty," from L. concordia "agreement, union," from concors (gen. concordis) "of the same mind," lit. "hearts together," from com- "together" (see com-) + cor "heart" (see heart).
”Corpus, Database, Lexicon, Cognates in language study” - these words mean differently.
ஒரு மொழிப்படிப்பில் “குவை, தரவுத்தளம், களஞ்சியம், கணச்சொற்கள் (ஒரே கூட்டத்தைச் சேர்ந்த சொற்கள்)” போன்றவை வெவ்வேறு பொருட்பாட்டைக் கொடுக்கின்றன.
அன்புடன்,
இராம.கி.
அன்புடையீர்,வணக்கம்.மொழியியல் அடிப்படையில் கீழ்க்கண்ட சொற்களுக்குத்தமிழ்ச் சொற்கள் வேண்டுகிறேன். தருக.
1) corpus, corpora : தொழுதி
2) concord, concordance: இணக்கம், இயைவு
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msg/tamilmanram/-/80ZXMnkN2t0J.