ஆனால் news letter போன்றவற்றிற்கு subscribe செய்க எனும்போது ஏற்புடைய
சொல் என்னவாக இருக்கும்..
subscribe - பெறப்பதிவு - பெறுவதற்கானப் பதிவு..
??
அன்புடன்,
ஆமாச்சு
subscribe:
1425, "to sign at the bottom of a document," from L. subscribere
"write underneath, sign one's name," from sub "underneath" + scribere
"write" (see script). The meaning "give one's consent" first recorded
1549; that of "contribute money to" 1640; and that of "become a
regular buyer of a publication" 1711, all originally literal.
அடியொற்றல். ஒரு ஆவணத்தின் அடியில் அதை ஏற்றுக் கொள்ளுகிறேன் என்று
கருத்தில் ஒற்றுதல் = give consent என்ற பொருளில் "அடியொற்றல்" என்ற
வினையை ஆளலாம். ஒற்றுதல், ஒன்றுதல், ஒப்புதல் எல்லாமே ஒரே பொருள்
ஆனாலும், வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு பயன்பாடுகள் உண்டு.
[இன்னொரு விதமாய் அடியிற் கீறுதல் என்ற கருத்தில் அடிக்கீறல் என்றும்
சொல்லலாம். கீறுதல் என்ற வினை தமிழில் இப்பொழுது அருகிப் போய்
எல்லாவற்றிற்கும் எழுதுதல் என்றே சொல்லிவருகிறோம். (வரைதல் = write
என்பது கூட இந்தக் காலத்தில் படம் போடுதல் என்று ஓரப் பொருளை மட்டுமே
குறிக்கிறது. இத்தனைக்கும் வரி என்ற பெயர்ச்சொல் புழங்குகிறது.) ஓர்ந்து
பார்த்தால், inscription என்பது கீற்றங்கள் என்பது நினைவிற்கு வரும்.
glyph = கீற்று. characters என்பதையும் கீற்றங்கள் என்று குறிக்கலாம்.
கல்லில் கீறி எழுதப் பட்டது கீற்றம். கீறுதல் என்பது வெறுமே கல்லில்
மட்டும் அமைய வேண்டியதில்லை. எந்த எழுது பொருளிலும் அது அமையலாம்.
அடிக்கீறல் என்பதில் வரும் அடி என்ற முன்னொட்டு வேண்டாம் என்று
எண்ணினால், அவல் (= கீழே, தாழ்ந்த) என்ற முன்னொட்டை இட்டு அவற் கீறல்
என்றும் கூடச் சொல்லலாம். அவ்வையாரின் 187 - ஆம் புறநானூற்றுப் பாடலில்
வரும் "அவலா கொன்றோ, மிசையா கொன்றோ" என்ற வரியை நினைவு கொள்ளுங்கள்.
அவலின் பொருள் புலப்பட்டுவிடும். அவல் + தாரம் அவதாரமாகும். கீழே
இறங்கிவரும் பேருருவம் = அவதாரம். அவல் என்னும் முன்னொட்டை அப்படியே sub
என்னும் முன்னொட்டுக்கு இணையாய் தமிழில் பயன்படுத்தலாம். அதைச் செய்ய,
நமக்கு மனமும், துணிவும் தான் வரவேண்டும்.
இன்றையத் தமிழர் பல வாய்ப்பான சொற்களைப் பயன்படுத்தாது குறைந்து போன
காரணத்தாலும், கீறுதலின் பொருள் கூடச் சட்டென்று தென்படாமல் போகலாம் என்ற
எழுதருகையாலும் (எச்சரிக்கையாலும்), அடியொற்றலையே இங்கு
பரிந்துரைக்கிறேன்.]
காட்டு:
Are you subscribing to this policy?
இந்தப் பொள்ளிகையின் அடியொற்றுகிறாயா?
subscript:
1704, "that which is written underneath," from L. subscriptus, pp. of
subscribere "write underneath" (see subscribe for etymology and sense
development).
அடியொற்று, (அடிக்கீற்று, அவற் கீற்று)
காட்டு:
This subscript belongs to the earlier document
இந்தக் குறிப்பு முன் ஆவணத்தைச் சேர்ந்த அடியொற்று.
subscription:
1409, "piece of writing at the end of a document," from M.Fr.
subscription, from L. subscriptionem (nom. subscriptio) "anything
written underneath, a signature," from pp. stem of subscribere (see
subscribe for etymology and sense development).
அடியொற்றம், (அடிக்கீற்றம், அவற் கீற்றம்)
காட்டு:
I have made subscription to this newsletter. They will send hereafter
continously.
நான் இந்தச் செய்திமடலுக்கு அடியொற்றம் செய்திருக்கிறேன். இனிமேற் கொண்டு
தொடர்ச்சியாய் அனுப்புவார்கள்.
have subscribed = அடியொற்றி இருக்கிறேன்.
அன்புடன்,
இராம.கி.
இலங்கைத் தமிழரில் சின்னப் பிள்ளை கூட படம் வரைவதை இன்றும் படம் கீறுதல்
என்று தான் சொல்கிறார்கள். அதனால், கீறுதல் என்ற சொல் முற்றிலும்
தொலைந்து விட வில்லை !!!
அடியொற்று என்பது என் விருப்பம்.
subscriberஐ எப்படிச் சொல்வது? அடியொற்றுநர்?
ரவி
நர் என்று முடிப்பதில் இப்பொழுதெல்லாம் எனக்கு ஒரு தயக்கம்; பலநேரங்களில்
அது கீறல் விழுந்த தட்டுப் போல, இந்தக் காலப் ப்யர்சொல் முடிப்புக்களைத்
தேவையில்லாமல் நீட்டிவிடுகிறதோ என்ற அய்யம் எனக்கு வருகிறது.
இப்படித்தான் moderator - ஐ, மட்டுறுத்தர் என்று சொன்னேன்; பலரும்
மடற்குழுக்களில் எங்கோ குழம்பி,, எப்படியோ மட்டுறுத்துநர் என்று
பயன்படுத்தத் தொடங்கிவிட்டார்கள். அது வலைப்பதிவுக்கும் வந்து ஒரு
விதமாய்ப் புழங்குகிறது. அந்த ந என்னும் எழுத்து தேவையா? - என்ற எண்ணம்
அவ்வப்போது எழுவதுண்டு. "அது சரி, எது நிலைக்குமோ, அது நிலைக்கட்டும்"
என்று சமதானம் பண்ணிக் கொண்டு விலகி நின்று விடுகிறேன்.
அடியொற்றுநர் என்பதைக் காட்டிலும் அடியொற்றி/ என்று சொன்னால் சுருங்காதோ?
இன்னும் கொஞ்சம் ம்ரியாதை வேண்டும் என்றால் அடியொற்றியோர் என்று
சொல்லலாம்..
அன்புரன்,
இராம.கி.
அடியொற்றியோர - மரியாதையாக இருக்கும். விளக்கத்துக்கு நன்றி
வாழும் உலகெங்கும். வீழாது தமிழ்.
பழகு தமிழை அழகு தமிழாய் எழுதுவோம்.
"தமிழரிடம் தமிழில் பேசுவோம்"
http://groups.google.com/group/Piravakam
http://dsal.uchicago.edu/dictionaries/tamil-lex/