1.பச்சளநாயக்கன்பட்டி விருத்தம்பதினான்கு சீர் விருத்தம்(விளம் காய் விளம் காய்விளம் காய் காய் அரையடிக்கு )எட்டுடன் மூவெட்டு மெட்டுடன் மூவெட்டுமெட்டுடன் மூவெட்டு மெனவாகுமிப்பெரும் நூலுக்கு மப்படி யேசெப்பவெட்டரி தாய்நிற்கும் மறைநூலாற்
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/03b927fa-9b3d-4b53-9593-019fc7ec27aan%40googlegroups.com.
3. அருள்மிகு அறம்வளர்நாயகி உடனுறை
ஶ்ரீ சந்திரமௌலீஸ்வரர் ஆலயம்
அப்துல்லாபுரம் என்னும் அடியவர்புரம்
திருப்பள்ளியெழுச்சி 1
குணதிசை அருணனு மொளிமிகு தேரின்
குதிரையை உந்திடக் காரிருள் வானில்
கணப்பொழு திற்கதிர் உதயமு மாக
கதிரவன் காட்சியைக் கண்டடி யாரின்
கணமது பன்னிரு திருமுறை ஓதும்
கடிதிரு வடியவர் புரமுறை சிவனே
மணமிகு நீற்றினை உடலினிற் பூசும்
மன்னவ னேபள்ளி எழுந்தரு ளாயே.
அருஞ்சொற்பொருள் :
குணதிசை - கிழக்கு, அருணன் - சூரியனின் தேரை ஓட்டுபவர்,
உந்திட- செலுத்த , கணம் - கூட்டம், பன்னிரு திருமுறை-திருஞானசம்பந்தர்,
அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் முதலிய நாயன்மார்கள் பலபேர்களால்
பாடப்பெற்ற சைவ சமய பாடல்களின் தொகுப்பு. கடி – காவல்,
அடியவர்புரம்- அப்துல்லாபுரம். அப்துல்லா என்பது "கடவுளின் வேலைக்காரன்"
என்று பொருள்படும் ஒரு அரபு பெயர். (Abdalla is an Arabic name meaning "Servant of God")
(இப்பாடல் அடியர் ஒருவர் எங்கள் ஊருக்கு ஒரு திருப்பள்ளியெழுச்சி வேண்டும்
என அடியேனைக் கேட்க, சிவன் அருளால் அடியேன் எழுதிய 10 பாடலில்
தினம் ஒன்றைப் பதிவு செய்கிறேன். ஏதேனும் பிழைகள் இருப்பின்
கூறுங்கள் மாற்றிக்கொள்கிறேன்.)
விளக்கம்
குணதிசை அருணனும் ஒளிமிகு தேரின்
குதிரையை உந்திடக் காரிருள் வானில்
கிழக்குத் திசையில் சூரியனின் ஒளி மிக்க தேரின்
குதிரை
அருணபகவான் செலுத்த, கரிய நிறம் கொண்ட வானத்தில்
கணப்பொழுதில் கதிர் உதயமும் ஆக
கதிரவன் காட்சியைக் கண்ட அடியாரின்
நொடிப்பொழுதில் சூரியன் உதிக்க, சூரிய பகவானைக்
கண்ட அடியாரின்
கணம் அது பன்னிரு திருமுறை ஓதும்
கடிதிரு வடியவர் புரம் உறை சிவனே
அடியார்களின் திருக்கூட்டம் ஆனது சிவ பெருமானைப்
போற்றிப் புகழும் நூலான பன்னிரு திருமுறையை ஓதும் ,
காவல் மிக்க அழகான அடியவர்புரம் உறை சிவபெருமானே
மணம் மிகு நீற்றினை உடலினில் பூசும்
மன்னவனே பள்ளி எழுந்தருளாயே.
திருநீற்றை உடல் முழுவதும் பூசும் மன்னவனே!
பள்ளி எழுந்தருள்வாயாக!
பிற்குறிப்பு
மேற்காட்டிய எண்சீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தத்தில்
நான்கடியும் ஒரே எதுகை அமைப்பைப் பெற்று
‘விளம் விளம் விளம் மா
விளம் விளம் விளம் மா’
எனும் சந்தம் எல்லா அடிகளிலும் வந்துள்ளது.
'விளம் ஒக்கும் காய்' என்ற இலக்கணத்தின் படி மாங்காய்ச்சீர்
வருவதுண்டு.
திருப்பள்ளியெழுச்சி 2
அகலினிற் றீபமு மன்புட னோற்றி
ஆசையாய்க் கோலமும் வாசலி லிட்டு
காகமுங் கரைந்திட குயில்களும் கூவக்
கறவைகள் கன்றினுக் கமுதினை யளிக்க
ஏகனே என்றுமை யடியவர் துதிக்கும்
எழில்மிகு வடியவர் புரமுறை சிவனே
போகமும் யோகமும் ஞானமு மளிக்கும்
புண்ணிய னேபள்ளி எழுந்தரு ளாயே.
அருஞ்சொற்பொருள்
கறவை - பால் கறக்கும் பசு
விளக்கம்
அகலினில் தீபமும் அன்புடன் ஏற்றி
ஆசையாய்க் கோலமும் வாசலில் இட்டு
அகல் விளக்கில் தீபம் அன்புடன் ஏற்றி,
அழகான கோலத்தை வாசலில் இட்டு
காகமும் கரைந்திட குயில்களுங் கூவக்
கறவைகள் கன்றினுக்கு அமுதினை அளிக்க
காககம் கரைந்திட, குயில்களும் கூவ
, பசு மாடு ஆனது கன்றுக்குட்டிக்கு பால் அளிக்க
ஏகனே என்று (உம்)மை அடியவர் துதிக்கும்
எழில்மிகு அடியவர் புரம் உறை சிவனே
ஏகனே சிவனே என்று அடியார் துதிக்கும்
அழகிய அடியவர்புரம் உறை சிவபெருமானே
போகமும் யோகமும் ஞானமும் அளிக்கும்
புண்ணியனே பள்ளி எழுந்தருளாயே
போகம் யோகம் ஞானம் என அடியார்கள் வேண்டும் வரத்தை
அளிக்கும் புண்ணியனே பள்ளி எழுந்தருள்வாயாக!
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/600834f2-15c3-438b-a954-9bc39882541fn%40googlegroups.com.
திருப்பள்ளியெழுச்சி 3
மத்தளம் மேளமுந் தாளமு மிசைக்க
வீணையும் நாதமும் நயமுடன் சேர
முத்தமிழ் பாடலைப் பாடகர் பாட
முலையிள மாதரும் பரதமு மாட
அத்தனை மக்களும் கோயிலிற் கூட
அடியவர் புரமுறை சந்திர மௌலீ
சித்திர சபையினில் நர்த்தனம் புரியும்
சிவபெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே.
அருஞ்சொற்பொருள்
சந்திர மௌலீ - சந்திரனை முடியில் கொண்ட சிவன் , சித்திரசபை- குற்றாலம்
விளக்கம்
மத்தளம் மேளமும் தாளமும் இசைக்க
வீணையும் நாதமும் நயமுடன் சேர
மத்தளம் மேளம் தாளம் வீணை நாதஸ்வரம்ஆகிய இசைக்கருவிகள் இசைக்க
முத்தமிழ் பாடலைப் பாடகர் பாட
முலை இளமாதரும் பரதமும் ஆட
முத்தமிழ் பாடலைப் பாடகர் பாட அதற்கு ஏற்ப
இளம் பெண்கள் பரத நாட்டியம் ஆட
அத்தனை மக்களும் கோயிலில் கூட
அடியவர் புரம் உறை சந்திர மௌலீ
அத்தனை மக்களும் திருக்கோயிலில் கூட
அடியவர்புரம் உறை சந்திர மௌலீசா
சித்திர சபையினில் நர்த்தனம் புரியும்
சிவபெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே.
குற்றாலத்தில் நடனம் புரியும் சிவபெருமானே
திருப்பள்ளியெழுச்சி 4
விறலுடை வீரனாம் சூரனை வென்ற
வேலனாம் முருகனின் விருதென வானில்
பறந்திடுங் கொடியினி லுயிருட னுள்ள
பட்சியும் கொக்கரக் கோவெனக் கூவ
அறம்பல புரியும்ந லடியவர் வாழும்
அடியவர் புரமுறை சந்திர மௌலீ
அறம்வளர் நாயகி நற்றுணை வோனே
ஆரமு தேபள்ளி எழுந்தரு ளாயே.
விளக்கம்
விறல் உடை வீரனாம் சூரனை வென்ற
வேலனாம் முருகனின் விருது என வானில்
பறந்திடும் கொடியினில் உயிருடன் உள்ள
பட்சியும் கொக்கரக்கோ எனக் கூவ
வெற்றி வீரனான சூரபத்மனை வென்ற வேலனின்
சின்னமாகக் கொடியில் உள்ள சேவல் கொக்கரிக்க,
அறம்பலபுரியும் நல் அடியவர் வாழும்
அடியவர் புரம் உறை சந்திர மௌலீ
பல வகையான அறங்களை புரியும் அடியார் வாழும்
அடியவர்புரம் உறை சந்திர மௌலீசா!
அறம்வளர் நாயகி நல் துணைவோனே
ஆரமுதே பள்ளி எழுந்தருளாயே.
அறம்வளர் நாயகியின் துணைவி!
ஆரமுதே பள்ளி எழுந்தருள்வாயாக!
திருப்பள்ளியெழுச்சி 5
தரிகிட தகதிமி தரிகிட திமிதோம்
தரிகிட தகதிமி தரிகிட திமிதோம்
திரிகிட ஜதியினிற் சபையினி லழகாய்த்
திருநட மிடுமிரு திருவடி தொழுகோம்
வரியளி வலம்வரு சோலைகள் சூழ்ந்த
வண்டிரு வடியவர் புரமுறை சிவனே
கரியுரி போர்த்திய கருணையி னுருவே
கண்ணுத லான்பள்ளி எழுந்தரு ளாயே.
அருஞ்சொற்பொருள்
வரி அளி - கோடுகளை உடைய வண்டு, வண் -செழிப்பு ,
கரியுரி போர்த்திய - யானையின் தோலை உரித்துப் போர்த்திய
போர்வை, கண்ணுதலான் - சிவன்
விளக்கம்
தரிகிட தகதிமி தரிகிட திமிதோம்
தரிகிட தகதிமி தரிகிட திமிதோம்
திரிகிட ஜதியினில் சபையினில் அழகாய்த்
திருநடமிடும் இருதிருவடி தொழுகோம்
தரிகிட தகதிமி ஜதியினில் சபையினில் நடனம்
புரியும் திருவடிகளைத் தொழுவோம்.
வரி அளி வலம்வரு சோலைகள் சூழ்ந்த
வண் திரு அடியவர் புரம் உறை சிவனே
கோடுகளை உடைய வண்டு வலம் வரும் சோலைகள் சூழ்ந்த
செழிப்பு மிக்க அடியவர்புரம் உறை சிவபெருமானே
கரி உரி போர்த்திய கருணையின் உருவே
கண்ணுதலான் பள்ளி எழுந்தருளாயே.
யானையின் தோலை உரித்துப் போர்த்திய கருணையின்
வடிவே நெற்றிக்கண் உடைய சிவனே பள்ளி எழுந்தருள்வாயாக!
திருப்பள்ளியெழுச்சி 5
தரிகிட தகதிமி தரிகிட திமிதோம்
தரிகிட தகதிமி தரிகிட திமிதோம்
திரிகிட ஜதியினிற் சபையினி லழகாய்த்
திருநட மிடுமிரு திருவடி தொழுகோம்
வரியளி வலம்வரு சோலைகள் சூழ்ந்த
வண்டிரு வடியவர் புரமுறை சிவனே
கரியுரி போர்த்திய கருணையி னுருவே
கண்ணுத லாய்பள்ளி எழுந்தரு ளாயே.
4. அகர இகர ஈற்று வினையெச்சத்தின் பின்னும், ஆய், போய், ஆக என என்னும் வினையெச்சங்களின் பின்னும் வரும் வலி மிகும்.
ஆலமும் மிடற்றினி லடக்கிய தேவாஆற்றையுஞ் சடையினி லடக்கிய நாதா
காலனும் மாண்டிட தீண்டிய பாதாகனலினைக் கரமதி லேந்திய ஈசா
ஆலமு மரசமுந் தென்றலை வீசும்
அடியவர் புரமுறை சந்திர மௌலீ
மாலவன் மறையவன் காணறி யாத
மாமணி யேபள்ளி எழுந்தரு ளாயே.
திருப்பள்ளியெழுச்சி 7
மழலையு மழுதிட** பாலமு தளித்த
மலைமகள் வாழவும் பாகமு மளித்தாய்
அழகிய சுந்தரர் தொழுதுமை** வணங்க
அவர்குறை நீங்கவும் தூதுவ னானாய்
Some comments below.
இலக்கணச் சுருக்கம் - ஆறுமுக நாவலர்
உயீரிற்றின் முன் உயிர் புணர்தல்
88. இ, ஈ, ஐ என்னும் மூன்றுயிரீற்றின் முன்னும் உயிர் முதன் மொழிவந்தால், இடையில் யகரம் உடம்படு மெய்யாக வரும்.
89. அ, ஆ, உ, ஊ, ஒ, ஓ, ஒள என்னும் ஏழுயிரீற்றின் முன்னும் உயிர் முதன் மொழி வந்தால், இடையில் வகரம் உடம்படுமெய்யாக வரும்.
90. ஏகாரவுயிரீற்றின் முன் உயிர் முதன் மொழி வந்தால், இடையில் யகரமாயினும், வகரமாயினும், உடம்படு மெய்யாக வரும்.
/தனைவுடை/check sandhi.இலக்கணச் சுருக்கம் - ஆறுமுக நாவலர்
உயீரிற்றின் முன் உயிர் புணர்தல்
88. இ, ஈ, ஐ என்னும் மூன்றுயிரீற்றின் முன்னும் உயிர் முதன் மொழிவந்தால், இடையில் யகரம் உடம்படு மெய்யாக வரும்.
89. அ, ஆ, உ, ஊ, ஒ, ஓ, ஒள என்னும் ஏழுயிரீற்றின் முன்னும் உயிர் முதன் மொழி வந்தால், இடையில் வகரம் உடம்படுமெய்யாக வரும்.
90. ஏகாரவுயிரீற்றின் முன் உயிர் முதன் மொழி வந்தால், இடையில் யகரமாயினும், வகரமாயினும், உடம்படு மெய்யாக வரும்.
/பங்கைய மலருடன்/Check for typo.
திருப்பள்ளியெழுச்சி 10
இப்புவி மிசையினிற் கற்புடன் பிறந்த
ஈசைமுப் பத்திரண் டறங்களுஞ் செய்து
ஒப்பிலா மலர்களை யன்புடன் தூவி
ஓம்சிவ சிவசிவ மந்திரம் சொல்ல
அப்பது பெருகிட ஈசனை அணைத்த
அன்னையின் கோட்டமாம் காஞ்சியின் தெற்கே
அப்துலா புரமெனு மடியவர் புரம்வாழ்
ஆண்டவ னேபள்ளி எழுந்தரு ளாயே
அருஞ்சொற்பொருள்
அப்பு - நீர், (இங்கு கம்பா நதி) , அடியவர்புரம்- அப்துல்லாபுரம். அப்துல்லா என்பது "கடவுளின் வேலைக்காரன்"
என்று பொருள்படும் ஒரு அரபு பெயர். (Abdalla is an Arabic name meaning "Servant of God"
பெரிய புராணத்தில் கூறிய முப்பத்திரண்டு அறங்கள் பின்வருமாறு:
சாலை அமைத்தல், ஓதுவார்க்கு உணவு, அறுசமயத்தாருக்கும் உணவு, பசுவுக்குத் தீனி, சிறைச் சோறு, ஐயம், தின்பண்டம் நல்கல், அநாதைகளுக்கு உணவு, மகப்பெறுவித்தல், மகவு வளர்த்தல், சிசுக்களுக்குப் பால் நல்கல், அநாதைப் பிணம் சுடுதல், அநாதைகளுக்கு உடை, சுண்ணாம்பு பூசல், நோய்க்கு மருந்து, வண்ணார் தொழில், நாவிதத் தொழில், கண்ணாடி அணிவித்தல், காதோலை போடுதல், கண் மருந்து, தலைக்கு எண்ணெய், ஒத்தடம் தருதல், பிறர் துயர் காத்தல், தண்ணீர்ப் பந்தல், மடம் கட்டுதல், தடாகம் அமைத்தல், சோலை வளர்த்தல், தோல் பதனிடல், மிருகங்களுக்கு உணவு, ஏர் உழுதல், உயிர் காத்தல், கன்னிகாதானம்.
இப்புவி மிசையினில் கற்புடன் பிறந்த
ஈசை முப்பத்திரண்டறங்களும் செய்து
இந்தப் பூமியில் கற்புக்கரசியாகப் பிறந்த காமாட்சி அம்மன், முப்பத்திரண்டு அறங்கள் செய்து,
ஒப்பிலா மலர்களை அன்புடன் தூவி
ஓம்சிவ சிவசிவ மந்திரம் சொல்ல
மணலால் லிங்கம் அமைத்து சிறந்த மலர்களை அன்புடன் தூவி, ஓம் சிவ சிவ சிவ மந்திரம் சொல்ல
அப்பு அது பெருகிட ஈசனை அணைத்த
அன்னையின் கோட்டமாம் காஞ்சியின்தெற்கே
கம்பா நதி பெருக, ஈசனை அணைத்த அன்னை வாழும் காஞ்சிபுரத்திற்குத் தெற்கே
அப்துல்லாபுரம் என்னும் அடியவர் புரம்வாழ்
ஆண்டவனே பள்ளி எழுந்தருளாயே
அடியவர்புரம்- அப்துல்லாபுரம். அப்துல்லா என்பது "கடவுளின் வேலைக்காரன்"
என்று பொருள்படும் ஒரு அரபு பெயர். (Abdalla is an Arabic name meaning "Servant of God"
அப்துல்லாபுரம் என்ற அடியவர்புரத்தில் வாழும் ஆண்டவனே பள்ளி எழுந்தருள்வாயாக!
மிக அருமை!“அடியவர்புரம்” என்பது ஒரு திருத்தலத்தின் பெயரா?
பொதுவாகத் தமிழ்ப்பாடலில் / சொற்களில் - ப்த வாராது..சப்தம் - சத்தம்த்ருப்தி - திருத்திஇந்தப் பாடலில் அடியவர்புரம் என்று தமிழ் வடிவம் கொடுத்தபின், இக்கால வழக்கில் உள்ள பெயரையும் அப்படியே மீண்டும் சொல்லவேண்டும் என்ற அவசியம் இல்லை என்று எண்ணுகின்றேன்.இவ்வூருக்குப் பழைய பெயர் ஏதேனும் உண்டா?இந்தக் கோயிலில் இருக்கும் ஈசன் பெயர் என்ன?தலவரலாறு உண்டா?V. Subramanian
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/d201bfb6-b2f6-421f-86d3-2b10a786e204n%40googlegroups.com.
இந்த கோவில் தான் ஐயா
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/793e6037-558a-4cc0-8545-6480327ac5cen%40googlegroups.com.
திருப்பள்ளியெழுச்சி 10
இப்புவி மிசையினிற் கற்புடன் பிறந்த
இப்புவி மிசையினில் கற்புடன் பிறந்த
ஈசை முப்பத்திரண்டறங்களும் செய்து
இந்தப் பூமியில் கற்புக்கரசியாகப் பிறந்த காமாட்சி அம்மன், முப்பத்திரண்டு அறங்கள் செய்து,
ஒப்பிலா மலர்களை அன்புடன் தூவி
ஓம்சிவ சிவசிவ மந்திரம் சொல்ல
மணலால் லிங்கம் அமைத்து சிறந்த மலர்களை அன்புடன் தூவி, ஓம் சிவ சிவ சிவ மந்திரம் சொல்ல
அப்பு அது பெருகிட ஈசனை அணைத்த
அன்னையின் கோட்டமாம் காஞ்சியின்தெற்கே
கம்பா நதி பெருக, ஈசனை அணைத்த அன்னை வாழும் காஞ்சிபுரத்திற்குத் தெற்கே
அருள்மிகு பட்டுவதனாம்பிகை சமேதபிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில்பிரமநகர் என்னும் பெருநகர்2.1 தெய்வப்பதிகம்அறுசீர் கழிநெடிலடி ஆசிரியர் விருத்தம்(காய் காய் காய் அரையடிக்கு )தெள்ளியநற் சேயாற்றுப் புனல்மூழ்கிச்சிவன்மீது மலர்தூவி வாயாரத்தெள்ளுதமிழ் பாடியவரக் கருள்புரியும்தென்னவனே தேவாதி தேவனெனத்துள்ளிவரு மானதனை வேந்தியவாதூயநதி கங்கையினைச் சூடியவாவள்ளலெனத் துதிசெய்து பிரமனவன்வழிபட்ட பிரமநகர்ப் பெருமானே (2.1)
> துள்ளிவரு மானதனை வேந்தியவா - மானதனை யேந்தியவாதுள்ளி - 2-ஆம் எழுத்தை ‘போல்ட்’ ஆக்குவது ஏன்?அனந்த்
அருள்மிகு பட்டுவதனாம்பிகை சமேதபிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில்பிரமநகர் என்னும் பெருநகர்த்2.7 தெய்வப்பதிகம்அறுசீர் கழிநெடிலடி ஆசிரியர் விருத்தம்(காய் காய் காய் அரையடிக்கு )பாலனுயிர் காத்திடவே திருத்தாளால்பாசத்தை விட்டவனை யுதைத்தவரேமாலவன்றன் கண்மலரா லர்ச்சிக்கமகிழ்ந்தாழி யளித்தவரே பிரமீசாஆலமதை யுண்டமுதை யருளியவாஆண்டவரே நால்வர்க்கு மௌனமொழி
/ஆலமரத்த டியமர்ந்து கைகாட்டிஅன்றுரைத்த பிரமநகர்ப் பெருமானே (7)/
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/05273f1a-124a-483e-bcae-8e0509ecc14an%40googlegroups.com.
அருள்மிகு கண்ணபுரநாயகிசமேத நீலமேகப்பெருமாள்( சௌரிராஜப்பெருமாள் ) திருக்கோயில்,
திருக்கண்ணபுரம் திருப்பள்ளியெழுச்சி 3.5
எண்சீர் கழிநெடிலடி ஆசிரியர் விருத்தம்( விளம் மா விளம் மா அரையடிக்கு)
மார்கழித் திங்கள் பாரசும் தந்தமதிநிறை பாவை சூடிகொ டுத்தசீர்மிகு வாச மாலையை யேற்றேசெல்வியை மணந்த மரதக வண்ணாநீர்வளம் மிக்க நெல்வயல் உழவர்நிறைதிரு கண்ண புரமுறை யரசேமார்பினில் துளசி மாலையை யணிந்தமன்னவா பள்ளி யெழுந்தரு ளாயே. (5)விளக்கம்மார்கழித் திங்கள் பாரசும் தந்தமதிநிறை பாவை சூடி கொடுத்த"மார்கழி திங்கள்" என்னும் திருப்பாவைஅருளிய அறிவு நிறைந்த ஆண்டாள் சூடி கலைந்தசீர்மிகு வாச மாலையை ஏற்றேசெல்வியை மணந்த மரதக வண்ணாபுகழ்மிக்க வாசனை மிகுந்த ஏற்றுக்கொண்டுகோதையை மணந்த மரதக வண்ணனேநீர்வளம் மிக்க நெல்வயல் உழவர்நிறை திருகண்ணபுரம் உறை அரசேநீர்வளம் மிக்கதும் நெல்வயல் உழவர்நிறைந்த திருக்கண்ணபுரம் வீற்றிருக்கும்
சௌவுரி ராசா
மார்பினில் துளசி மாலையை அணிந்தமன்னவா பள்ளி எழுந்தரு ளாயேதிருமார்பினில் துளசி மாலையை அணிந்தமன்னவரே பள்ளி எழுந்தருள்வாயாக
திருமுருகன் திருப்பள்ளியெழுச்சி 4.4எண்சீர் கழிநெடிலடி ஆசிரியர் விருத்தம்( விளம் விளம் விளம் மா )
சங்கரன் நெற்றியில் சுடரென வுதித்து*ச்*சரவணப் பொய்கையில் திருவுரு*ப்* பெற்று
குருவே வணக்கம் 🙏 சில மாற்றங்களுடன்
திருமுருகன் திருப்பள்ளியெழுச்சி 4.4எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரியர் விருத்தம்( விளம் விளம் விளம் மா )சங்கரன் நெற்றியில் சுடரென வுதித்துச்சரவணப் பொய்கையில் திருவுருப் பெற்றுமங்கைய ரறுவரின் பாலமு துண்டுமாதொரு பாகரி னழகியச் செவியில்மங்கலப் பிரணவ முரைத்தசற் குருவேமணிதிரு வேரகம் மேவிய சுவாமிபங்கயத் திருவடி கண்டிட வந்தோம்பரம்பொரு ளேபள்ளி யெழுந்தரு ளாயே.(4)
.....
3. அருள்மிகு அறம்வளர்நாயகி உடனுறை
ஶ்ரீ சந்திரமௌலீஸ்வரர் ஆலயம்
அப்துல்லாபுரம் என்னும் அடியவர்புரம்
திருப்பள்ளியெழுச்சி 1
குணதிசை அருணனு மொளிமிகு தேரின்
குதிரையை உந்திடக் காரிருள் வானில்
கணப்பொழு திற்கதிர் உதயமு மாக
கதிரவன் காட்சியைக் கண்டடி யாரின்
கணமது பன்னிரு திருமுறை ஓதும்
கடிதிரு வடியவர் புரமுறை சிவனே
மணமிகு நீற்றினை உடலினிற் பூசும்
மன்னவ னேபள்ளி எழுந்தரு ளாயே.
அருஞ்சொற்பொருள் :
குணதிசை - கிழக்கு, அருணன் - சூரியனின் தேரை ஓட்டுபவர்,
உந்திட- செலுத்த , கணம் - கூட்டம், பன்னிரு திருமுறை-திருஞானசம்பந்தர்,
அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் முதலிய நாயன்மார்கள் பலபேர்களால்
பாடப்பெற்ற சைவ சமய பாடல்களின் தொகுப்பு. கடி – காவல்,
அடியவர்புரம்- அப்துல்லாபுரம். அப்துல்லா என்பது "கடவுளின் வேலைக்காரன்"
என்று பொருள்படும் ஒரு அரபு பெயர். (Abdalla is an Arabic name meaning "Servant of God")
(இப்பாடல் அடியர் ஒருவர் எங்கள் ஊருக்கு ஒரு திருப்பள்ளியெழுச்சி வேண்டும்
என அடியேனைக் கேட்க, சிவன் அருளால் அடியேன் எழுதிய 10 பாடலில்
தினம் ஒன்றைப் பதிவு செய்கிறேன். ஏதேனும் பிழைகள் இருப்பின்
கூறுங்கள் மாற்றிக்கொள்கிறேன்.)
விளக்கம்
குணதிசை அருணனும் ஒளிமிகு தேரின்
குதிரையை உந்திடக் காரிருள் வானில்
கிழக்குத் திசையில் சூரியனின் ஒளி மிக்க தேரின் குதிரை
அருணபகவான் செலுத்த, கரிய நிறம் கொண்ட வானத்தில்
கணப்பொழுதில் கதிர் உதயமும் ஆக
கதிரவன் காட்சியைக் கண்ட அடியாரின்
நொடிப்பொழுதில் சூரியன் உதிக்க, சூரிய பகவானைக் கண்ட அடியாரின்
கணம் அது பன்னிரு திருமுறை ஓதும்
கடிதிரு வடியவர் புரம் உறை சிவனே
அடியார்களின் திருக்கூட்டம் ஆனது சிவ பெருமானைப்
போற்றிப் புகழும் நூலான பன்னிரு திருமுறையை ஓதும் ,
காவல் மிக்க அழகான அடியவர்புரம் உறை சிவபெருமானே
மணம் மிகு நீற்றினை உடலினில் பூசும்
மன்னவனே பள்ளி எழுந்தருளாயே.
திருநீற்றை உடல் முழுவதும் பூசும் மன்னவனே!
பள்ளி எழுந்தருள்வாயாக!
பிற்குறிப்பு
மேற்காட்டிய எண்சீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தத்தில்
நான்கடியும் ஒரே எதுகை அமைப்பைப் பெற்று
‘விளம் விளம் விளம் மா
விளம் விளம் விளம் மா’
எனும் சந்தம் எல்லா அடிகளிலும் வந்துள்ளது.
'விளம் ஒக்கும் காய்' என்ற இலக்கணத்தின் படி மாங்காய்ச்சீர் வருவதுண்டு.
On
முன் எழுதியது
திருக்கண்ணபுரம் திருப்பள்ளியெழுச்சி 3.3எண்சீர் கழிநெடிலடி ஆசிரியர் விருத்தம்( விளம் மா விளம் மா அரையடிக்கு)
/வெயிலவன் கதிர்கள் சோலையிற் புகுந்துமென்பனி நீரை யுண்டுக ளிக்கக்/Unusual description!Early morning is a cool time - not a hot time Siva Siva sir
/காலையிற் கதிரவன் சோலையிற் புகுந்து
கனிகளின் மேவிய நீரினைக் குடிக்க /Unusual description!Early morning is a cool time - not a hot time./மாலவன் மலையடி வாரதி லிருக்க/Check spelling.
On Mon, Dec 18, 2023 at 9:23 PM தங்கவேல் காஞ்சிபுரம்
திருமுருகன் திருப்பள்ளியெழுச்சி 4.6
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/8b90d880-199a-42bc-acc6-d3d23e9c7386n%40googlegroups.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/a2d2761c-218e-4c4f-bb58-c19484d26e38n%40googlegroups.com.
மிக அழகு..யோகியார்
On :
திருப்பள்ளியெழுச்சி 3
மத்தளம் மேளமுந் தாளமு மிசைக்க
வீணையும் நாதமும் நயமுடன் சேர
முத்தமிழ் பாடலைப் பாடகர் பாட
முலையிள மாதரும் பரதமு மாட
அத்தனை மக்களும் கோயிலிற் கூட
அடியவர் புரமுறை சந்திர மௌலீ
சித்திர சபையினில் நர்த்தனம் புரியும்
சிவபெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே.