Re: தெய்வ விருத்தங்கள்

1,278 views
Skip to first unread message
Message has been deleted

Siva Siva

unread,
Oct 30, 2023, 12:27:34 PM10/30/23
to santhav...@googlegroups.com
Generally, text posting is preferrable - unless attaching an image / screenshot is essential for the message.

I (and maybe some others) routinely delete all posts with images - to prevent going beyond the standard gmail disk space quota limit.

V. Subramanian

On Mon, Oct 30, 2023 at 12:14 PM தங்கவேல் காஞ்சிபுரம் <k.thanga...@gmail.com> wrote:

1.பச்சளநாயக்கன்பட்டி விருத்தம் 

பதினான்கு சீர் விருத்தம் 
(விளம் காய் விளம் காய்   
 விளம் காய் காய் அரையடிக்கு )

எட்டுடன் மூவெட்டு மெட்டுடன் மூவெட்டு   
  மெட்டுடன் மூவெட்டு மெனவாகு
 மிப்பெரும் நூலுக்கு மப்படி யேசெப்ப    
   வெட்டரி தாய்நிற்கும் மறைநூலாற் 

Message has been deleted

தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Oct 31, 2023, 3:25:53 AM10/31/23
to சந்தவசந்தம்
1.பச்சளநாயக்கன்பட்டி விருத்தம்

ஸ்ரீமத் பாம்பன் குமரகுருதாச
 சுவாமிகள் தபோவனம் 

பதினான்கு சீர் விருத்தம்
(விளம் காய் விளம் காய்  
 விளம் காய் காய் அரையடிக்கு )

ட்டுடன் மூவெட்டு மெட்டுடன் மூவெட்டு  
  மெட்டுடன் மூவெட்டு மெனவாகு
 மிப்பெரும் நூலுக்கு மப்படி யேசெப்ப    
   வெட்டரி தாய்நிற்கும் மறைநூலாற்

ட்டென வாய்விட்டு ரைக்க‌வொ ணாநிற்குஞ்  
‌ சத்திய ஞானத்தை அடியேனுந்
 தப்பற வேமுற்றும் கற்றிட வேல்பெற்ற
  சற்குரு வேபுத்தி அருள்வாயே

ட்சர மேஅத்த னுக்குரை யேசெப்ப
  அப்பனு மேமெச்ச மகிழ்வோனே
 அக்குற மானுக்கும் வச்சிர னேபெற்ற
   அற்புத மாதுக்கும் மணவாளா

ட்டண மாயுற்ற நற்பழ னீவெற்பின்
    பக்கம தாயுற்ற அழகான
  பச்சள நாயக்கன் பட்டியி லேவுற்ற    
     பத்தனு மேமெச்சும் பெருமாளே

விளக்கம்

எட்டுடன் மூவெட்டும் எட்டுடன் மூவெட்டும்
  எட்டுடன் மூவெட்டும் எனவாகும்
  இப்பெரும் நூலுக்கும் அப்படி யேசெப்ப    
    எட்டரி தாய்நிற்கும் மறைநூலால்


8+24+8+24+8+24= 96 தத்துவ நூலால்
 அப்படியே சொல்ல முடியாததும், வேதத்தாலும்

சட்டென வாய்விட்டு உரைக்க‌ ஒணாநிற்குஞ்  
‌ சத்திய ஞானத்தை அடியேனுந்
 தப்பற வேமுற்றும் கற்றிட வேல்பெற்ற
  சற்குரு வேபுத்தி அருள்வாயே


வேதத்தாலும் உடனடியாக உரைக்க
 முடியாததும் ஆன உண்மை ஞானத்தை
 அடியேனும் கசடற முற்றும் கற்றிட ,
 வேலாயுதம் உடைய சற்குருவே
 முருகா புத்தியை அருள்வாயே.

அட்சரமே அத்தனுக்கு உரையே செப்ப
  அப்பனுமே மெச்ச மகிழ்வோனே
 அக்குறமானுக்கும் வச்சிரனே பெற்ற
   அற்புத மாதுக்கும் மணவாளா


பிரணவ அட்சரத்தை உன் தந்தைக்கு ( சிவன்)
 விளக்கமாக உரைக்க, சிவனும் மெச்ச
 மகிழ்ந்தவனே, அந்த குறமான் வள்ளிக்கும்
இந்திரன் பெற்ற தெய்வயானைக்கும்
மணவாளா

பட்டணமாய் உற்ற நற்பழனீ வெற்பின்
    பக்கம் அதாய் உற்ற அழகான
  பச்சளநாயக்கன் பட்டியிலே உற்ற    
     பத்தனுமே மெச்சும் பெருமாளே

பெரிய நகராமாக உள்ள நல்ல பழனி
 மலைக்குப் பக்கத்தில் உள்ள
அழகான பச்சளநாயக்கன்பட்டி வீற்றிருக்கும்
 ஸ்ரீமத் பாம்பன் குமரகுருதாச சுவாமிகள்
போற்றி புகழும் பெருமையில் சிறந்த முருகனே !

தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Nov 1, 2023, 7:52:44 AM11/1/23
to சந்தவசந்தம்

2.முப்பெரும் தேவியரைப் போற்றும் 
                விஜயதசமி விருத்தம்

கலைமகள் திருவடி சரணம் சரணம் 
      கவிபல இயற்றிட அருளைத் தருவாய்
அலைமகள் திருவடி சரணம் சரணம்
    அளவிலாச் செல்வமும் அள்ளித் தருவாய்
மலைமகள் திருவடி சரணம் சரணம்
     மனத்துயர் தீர்த்துநல் வாழ்வைத் தருவாய்
தலைக்கனம் இன்றியே புவியில் என்றும்
     தயவுடன் வாழவும் அறிவைத் தருவாய்

எண்சீர் கழிநெடிலடி ஆசிரியர் விருத்தம்
 'விளம் விளம் மா மா' அரையடி வாய்பாடு

திருப்புகழ் மணி சிவத்திரு .இரவிசங்கர் ஐயா (USA)
 அவர்களின் தெய்வீகக் குரலில் பாடலைக் கேட்டு மகிழ

Anand Ramanujam

unread,
Nov 1, 2023, 8:00:14 AM11/1/23
to santhav...@googlegroups.com
கவிதையும் கானமும் அருமை! வாழ்த்துகள்!

- இமயவரம்பன்

-- 
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/03b927fa-9b3d-4b53-9593-019fc7ec27aan%40googlegroups.com.

தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Nov 2, 2023, 2:48:46 AM11/2/23
to சந்தவசந்தம்

3. அருள்மிகு அறம்வளர்நாயகி  உடனுறை   

ஶ்ரீ சந்திரமௌலீஸ்வரர்  ஆலயம்

அப்துல்லாபுரம் என்னும் அடியவர்புரம்

 

திருப்பள்ளியெழுச்சி 1

 

குணதிசை அருணனு மொளிமிகு தேரின்

குதிரையை உந்திடக் காரிருள் வானில்

கணப்பொழு திற்கதிர் உதயமு மாக

கதிரவன் காட்சியைக் கண்டடி யாரின்

கணமது பன்னிரு திருமுறை ஓதும்

கடிதிரு வடியவர் புரமுறை சிவனே

மணமிகு நீற்றினை உடலினிற் பூசும்

மன்னவ னேபள்ளி எழுந்தரு ளாயே.

 

அருஞ்சொற்பொருள் :

 

குணதிசை - கிழக்கு, அருணன் - சூரியனின் தேரை ஓட்டுபவர், 

உந்திட- செலுத்த , கணம் - கூட்டம்,  பன்னிரு திருமுறை-திருஞானசம்பந்தர், 

அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் முதலிய நாயன்மார்கள் பலபேர்களால்

 பாடப்பெற்ற சைவ சமய பாடல்களின் தொகுப்பு. கடி – காவல்,

 அடியவர்புரம்- அப்துல்லாபுரம். அப்துல்லா என்பது "கடவுளின் வேலைக்காரன்"

 என்று பொருள்படும் ஒரு அரபு பெயர். (Abdalla is an Arabic name meaning "Servant of God")

(இப்பாடல் அடியர் ஒருவர் எங்கள் ஊருக்கு ஒரு திருப்பள்ளியெழுச்சி வேண்டும் 

என அடியேனைக் கேட்க, சிவன் அருளால் அடியேன் எழுதிய 10 பாடலில்

 தினம் ஒன்றைப் பதிவு செய்கிறேன். ஏதேனும் பிழைகள் இருப்பின்

 கூறுங்கள் மாற்றிக்கொள்கிறேன்.)

 

விளக்கம்

 

குணதிசை அருணனும் ஒளிமிகு தேரின்

குதிரையை உந்திடக் காரிருள் வானில்


கிழக்குத் திசையில் சூரியனின் ஒளி மிக்க தேரின் குதிரை 

அருணபகவான்  செலுத்த, கரிய நிறம் கொண்ட வானத்தில்


கணப்பொழுதில் கதிர் உதயமும் ஆக

கதிரவன் காட்சியைக் கண்ட அடியாரின்


நொடிப்பொழுதில் சூரியன் உதிக்க, சூரிய பகவானைக் கண்ட அடியாரின்


கணம் அது பன்னிரு திருமுறை ஓதும்

கடிதிரு வடியவர் புரம் உறை சிவனே


அடியார்களின் திருக்கூட்டம் ஆனது சிவ பெருமானைப் 

போற்றிப் புகழும் நூலான பன்னிரு திருமுறையை ஓதும் , 

காவல் மிக்க அழகான அடியவர்புரம் உறை சிவபெருமானே


மணம் மிகு நீற்றினை உடலினில் பூசும்

மன்னவனே பள்ளி எழுந்தருளாயே.

திருநீற்றை உடல் முழுவதும் பூசும் மன்னவனே! 

பள்ளி எழுந்தருள்வாயாக!

 

பிற்குறிப்பு


 மேற்காட்டிய எண்சீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தத்தில் 

நான்கடியும் ஒரே எதுகை அமைப்பைப் பெற்று

 விளம்  விளம்  விளம் மா

       விளம்  விளம்  விளம் மா’

       எனும் சந்தம் எல்லா அடிகளிலும் வந்துள்ளது.

'விளம் ஒக்கும் காய்' என்ற இலக்கணத்தின் படி மாங்காய்ச்சீர் வருவதுண்டு.

தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Nov 3, 2023, 4:33:55 AM11/3/23
to சந்தவசந்தம்

திருப்பள்ளியெழுச்சி 2

 

லினிற் றீபமு மன்புட னோற்றி

ஆசையாய்க் கோலமும் வாசலி லிட்டு

காமுங் கரைந்திட குயில்களும் கூவக்

கறவைகள் கன்றினுக் கமுதினை யளிக்க

னே என்றுமை யடியவர் துதிக்கும்

எழில்மிகு வடியவர் புரமுறை சிவனே

போமும் யோகமும் ஞானமு மளிக்கும்

புண்ணிய னேபள்ளி எழுந்தரு ளாயே.

 

அருஞ்சொற்பொருள்

 

 கறவை  - பால் கறக்கும்  பசு

 

விளக்கம்

 

அகலினில் தீபமும் அன்புடன் ஏற்றி

ஆசையாய்க் கோலமும் வாசலில் இட்டு

 

அகல் விளக்கில் தீபம் அன்புடன் ஏற்றி,

 அழகான கோலத்தை  வாசலில் இட்டு

 

காகமும் கரைந்திட குயில்களுங் கூவக்

கறவைகள் கன்றினுக்கு அமுதினை அளிக்க

 

காககம் கரைந்திட, குயில்களும் கூவ

, பசு மாடு ஆனது கன்றுக்குட்டிக்கு பால் அளிக்க

 

ஏகனே என்று (உம்)மை அடியவர் துதிக்கும்

எழில்மிகு அடியவர் புரம் உறை சிவனே

 

ஏகனே சிவனே என்று அடியார் துதிக்கும்

அழகிய அடியவர்புரம் உறை சிவபெருமானே

 

போகமும் யோகமும் ஞானமும் அளிக்கும்

புண்ணியனே பள்ளி எழுந்தருளாயே

 

போகம் யோகம் ஞானம் என அடியார்கள் வேண்டும் வரத்தை 

அளிக்கும் புண்ணியனே பள்ளி எழுந்தருள்வாயாக!

Anand Ramanujam

unread,
Nov 3, 2023, 8:05:13 AM11/3/23
to santhav...@googlegroups.com
மிக அருமை! 

“அடியவர்புரம்” என்பது ஒரு திருத்தலத்தின் பெயரா?

Siva Siva

unread,
Nov 3, 2023, 9:11:17 AM11/3/23
to santhav...@googlegroups.com
1)
Note edhugai violation in line 1 compared to other 3 lines.

2)
/ எழில்மிகு வடியவர் /
எழில்மிகும் அடியவர் - may sound better.

3)
/ மன்புட னோற்றி /
Check for typos.

4)
When replying to your post with a new song, delete most or all of the previous post in the tail of the message.

V. Subramanian

.

தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Nov 4, 2023, 5:55:42 AM11/4/23
to சந்தவசந்தம்
குருவே வணக்கம் 🙏

திருப்பள்ளியெழுச்சி
 2

காமுங் கரைந்திடக் குயில்களுங் கூவக் 
       கறவைகள் கன்றினுக் கமுதினை யளிக்க
ம மருளிய வண்ணலைப் போற்றி
         அகலினிற் றீபமு மன்புட னேற்றி
னே என்றுமை அடியவர் துதிக்கும்
         எழில்மிகும் அடியவர் புரமுறை சிவனே
போமும் யோகமும் ஞானமு மளிக்கும்
          புண்ணிய னேபள்ளி எழுந்தரு ளாயே

விளக்கம்

காகமும் கரைந்திட குயில்களுங் கூவக்
     கறவைகள் கன்றினுக்கு அமுதினை அளிக்க

காககம் கரைந்திட, குயில்களும் கூவ
, பசு மாடு ஆனது கன்றுக்குட்டிக்கு பால் அளிக்க

ஆகமம் அருளிய அண்ணலைப் போற்றி
         அகலினில் தீபமும் அன்புடன் ஏற்றி
 
ஆகமம் அருளிய சிவபெருமானைப் போற்றி
     அகல் விளக்குகளை அன்புடன் ஏற்றி 

ஏகனே என்று (உம்)மை அடியவர் துதிக்கும்
       எழில்மிகும் அடியவர் புரம் உறை சிவனே

ஏகனே சிவனே என்று அடியார் துதிக்கும்
அழகிய அடியவர்புரம் உறை சிவபெருமானே

போகமும் யோகமும் ஞானமும் அளிக்கும்
         புண்ணியனே பள்ளி எழுந்தருளாயே

போகம் யோகம் ஞானம் என அடியார்கள் வேண்டும் வரத்தை 
 அளிக்கும் புண்ணியனே பள்ளி எழுந்தருள்வாயாக!

தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Nov 6, 2023, 12:14:57 AM11/6/23
to சந்தவசந்தம்
திருப்பள்ளியெழுச்சி 3

த்தளம் மேளமுந் தாளமு மிசைக்க
        வீணையும் நாதமும் நயமுடன் சேர
முத்தமிழ் பாடலைப் பாடகர் பாட
        முலையிள மாதரும் பரதமு மாட
த்தனை மக்களும் கோயிலிற் கூட
         அடியவர் புரமுறை சந்திர மௌலீ
சித்திர சபையினில் நர்த்தனம் புரியும்
           சிவபெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே.


அருஞ்சொற்பொருள்
 
சந்திர மௌலீ - சந்திரனை முடியில் கொண்ட சிவன் , சித்திரசபை- குற்றாலம்

விளக்கம்

மத்தளம் மேளமும் தாளமும் இசைக்க
வீணையும் நாதமும் நயமுடன் சேர

மத்தளம் மேளம் தாளம் வீணை நாதஸ்வரம்
 ஆகிய  இசைக்கருவிகள் இசைக்க

முத்தமிழ் பாடலைப் பாடகர் பாட
முலை இளமாதரும் பரதமும் ஆட

முத்தமிழ் பாடலைப் பாடகர் பாட அதற்கு ஏற்ப 
இளம் பெண்கள் பரத நாட்டியம் ஆட

அத்தனை மக்களும் கோயிலில் கூட
அடியவர் புரம் உறை சந்திர மௌலீ

அத்தனை மக்களும் திருக்கோயிலில் கூட 
அடியவர்புரம் உறை சந்திர மௌலீசா 
 
சித்திர சபையினில் நர்த்தனம் புரியும்
சிவபெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே.

 
குற்றாலத்தில் நடனம் புரியும் சிவபெருமானே 

தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Nov 7, 2023, 1:57:42 AM11/7/23
to சந்தவசந்தம்

திருப்பள்ளியெழுச்சி 4

 

விலுடை வீரனாம் சூரனை வென்ற

வேலனாம் முருகனின் விருதென வானில்

ந்திடுங் கொடியினி லுயிருட னுள்ள

பட்சியும் கொக்கரக் கோவெனக் கூவ

ம்பல புரியும்ந லடியவர் வாழும்

 அடியவர் புரமுறை சந்திர மௌலீ

ம்வளர் நாயகி நற்றுணை வோனே

ஆரமு தேபள்ளி எழுந்தரு ளாயே.

 

 விளக்கம்

 

விறல் உடை வீரனாம் சூரனை வென்ற

வேலனாம் முருகனின் விருது என வானில்

பறந்திடும் கொடியினில் உயிருடன் உள்ள

பட்சியும் கொக்கரக்கோ எனக் கூவ

வெற்றி வீரனான சூரபத்மனை வென்ற வேலனின்

 சின்னமாகக் கொடியில் உள்ள சேவல் கொக்கரிக்க, 

அறம்பலபுரியும் நல் அடியவர் வாழும்

அடியவர் புரம் உறை சந்திர மௌலீ

பல வகையான அறங்களை புரியும் அடியார் வாழும் 

அடியவர்புரம் உறை சந்திர மௌலீசா!

அறம்வளர் நாயகி நல் துணைவோனே

ஆரமுதே பள்ளி எழுந்தருளாயே.

அறம்வளர் நாயகியின் துணைவி!

   ஆரமுதே பள்ளி எழுந்தருள்வாயாக!




தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Nov 9, 2023, 2:21:42 AM11/9/23
to சந்தவசந்தம்

திருப்பள்ளியெழுச்சி 5

 

தரிகிட தகதிமி தரிகிட திமிதோம்

தரிகிட தகதிமி தரிகிட திமிதோம்

திரிகிட ஜதியினிற் சபையினி லழகாய்த்

திருநட மிடுமிரு திருவடி தொழுகோம்

வரியளி வலம்வரு சோலைகள் சூழ்ந்த

வண்டிரு வடியவர் புரமுறை சிவனே

கரியுரி போர்த்திய கருணையி னுருவே

        கண்ணுத லான்பள்ளி எழுந்தரு ளாயே.

 

அருஞ்சொற்பொருள்

 

வரி அளி - கோடுகளை உடைய வண்டு, வண் -செழிப்பு , 

கரியுரி போர்த்திய - யானையின் தோலை உரித்துப் போர்த்திய 

போர்வை, கண்ணுதலான் - சிவன்

 

விளக்கம்

 

தரிகிட தகதிமி தரிகிட திமிதோம்

தரிகிட தகதிமி தரிகிட திமிதோம்

திரிகிட ஜதியினில் சபையினில் அழகாய்த்

திருநடமிடும் இருதிருவடி தொழுகோம்


தரிகிட தகதிமி ஜதியினில் சபையினில் நடனம்

 புரியும் திருவடிகளைத் தொழுவோம்.


வரி அளி வலம்வரு சோலைகள் சூழ்ந்த

வண் திரு அடியவர் புரம் உறை சிவனே


கோடுகளை உடைய வண்டு வலம் வரும் சோலைகள் சூழ்ந்த

 செழிப்பு மிக்க அடியவர்புரம் உறை சிவபெருமானே


கரி உரி போர்த்திய கருணையின் உருவே

கண்ணுதலான் பள்ளி எழுந்தருளாயே.


யானையின் தோலை உரித்துப் போர்த்திய கருணையின்

 வடிவே நெற்றிக்கண் உடைய சிவனே பள்ளி எழுந்தருள்வாயாக!


Siva Siva

unread,
Nov 9, 2023, 9:33:00 AM11/9/23
to santhav...@googlegroups.com
/ கண்ணுத லான்பள்ளி எழுந்தரு ளாயே.  /

எம்பெருமான் என்று வருவது போலக், கண்ணுதலான் = கண்ணுதலானே என்ற விளி என்று கொள்ளவேண்டும்போல்.

கண்ணுதலாய் - என்று இருந்தால் இன்னும் எளிதாகத் தெளிவாக அமையும்.

V. Subramanian


தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Nov 10, 2023, 3:02:07 AM11/10/23
to சந்தவசந்தம்
குருவே வணக்கம் 🙏  அடியேன் மாற்றிவிட்டேன் 

திருப்பள்ளியெழுச்சி 5

 

தரிகிட தகதிமி தரிகிட திமிதோம்

தரிகிட தகதிமி தரிகிட திமிதோம்

திரிகிட ஜதியினிற் சபையினி லழகாய்த்

திருநட மிடுமிரு திருவடி தொழுகோம்

வரியளி வலம்வரு சோலைகள் சூழ்ந்த

வண்டிரு வடியவர் புரமுறை சிவனே

கரியுரி போர்த்திய கருணையி னுருவே

        கண்ணுத லாய்பள்ளி எழுந்தரு ளாயே.






Message has been deleted

தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Nov 10, 2023, 4:22:49 AM11/10/23
to சந்தவசந்தம்

திருப்பள்ளியெழுச்சி 6

மும் மிடற்றினி லடக்கிய தேவா
       ஆற்றையுஞ் சடையினி லடக்கிய நாதா 
கானும் மாண்டிட தீண்டிய பாதா
       கனலினைக் கரமதி லேந்திய ஈசா
மு மரசமுந் தென்றலை வீசும்
       அடியவர் புரமுறை சந்திர மௌலீ
மாவன் மறையவன் காணறி யாத
        மாமணி யேபள்ளி எழுந்தரு ளாயே.

அருஞ்சொற்பொருள்

ஆலம் - விஷம், ஆலமரம் மிடறு - கழுத்து ,
ஆறு -கங்கை, 

விளக்கம் 

ஆலமும் மிடற்றினில் அடக்கிய தேவா
     ஆற்றையும் சடையினில் அடக்கிய நாதா 

ஆலகால விஷத்தைக் கழுத்தில் அடக்கிய தேவனே !
 கங்கை நதியைச் சடையில் அடக்கிய நாதனே

காலனும் மாண்டிட தீண்டிய பாதா
    கனலினைக் கரம் அதில் ஏந்திய ஈசா

மார்க்கண்டேயன் வழிபாட்டை ஏற்று , எமனைக் காலால்
 உதைத்த சிவனே, நெருப்பைக் கையில் ஏந்திய ஈசனே

ஆலமும் அரசமும் தென்றலை வீசும்
      அடியவர் புரம் உறை சந்திர மௌலீ

ஆலமரமும் அரசமரமும் தென்றலை வீசும்
அடியவர்புரத்தில் உறையும் சந்திர மௌலீசா!

மாலவன் மறையவன் காண அறியாத
     மாமணியே பள்ளி எழுந்தருளாயே.

திருமாலும் பிரம்மாவும் தேடி காணமுடியாத ஜோதியே
 என் மாணிக்கமே பள்ளி எழுந்தருள்வாயாக

Siva Siva

unread,
Nov 10, 2023, 9:10:19 AM11/10/23
to santhav...@googlegroups.com
அ.கி. பரந்தாமனாரின் - நல்ல தமிழ் எழுத வேண்டுமா - என்ற நூலிலிருந்து:

a)

4. அகர இகர ஈற்று வினையெச்சத்தின் பின்னும், ஆய், போய், ஆக என என்னும் வினையெச்சங்களின் பின்னும் வரும் வலி மிகும்.


b)
மு மரசமுந் தென்றலை வீசும் /

அவை தென்றலில் அசையுமா, அவற்றின் மணம் தென்றலில் வருமா, அவை தென்றலை வீசுமா?

V. Subramanian


On Fri, Nov 10, 2023 at 4:13 AM தங்கவேல் காஞ்சிபுரம் <k.thanga...@gmail.com> wrote:
மும் மிடற்றினி லடக்கிய தேவா
       ஆற்றையுஞ் சடையினி லடக்கிய நாதா 
கானும் மாண்டிட தீண்டிய பாதா
       கனலினைக் கரமதி லேந்திய ஈசா
மு மரசமுந் தென்றலை வீசும்
       அடியவர் புரமுறை சந்திர மௌலீ
மாவன் மறையவன் காணறி யாத
        மாமணி யேபள்ளி எழுந்தரு ளாயே.

தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Nov 10, 2023, 11:31:18 AM11/10/23
to சந்தவசந்தம்
திருப்பள்ளியெழுச்சி 6

மும் மிடற்றினி லடக்கிய தேவா
       ஆற்றையுஞ் சடையினி லடக்கிய நாதா 
கானும் மாண்டிடத் தீண்டிய பாதா
       கனலினைக் கரமதி லேந்திய ஈசா
மு மரசமுந் தென்றலி லசையும்
       அடியவர் புரமுறை சந்திர மௌலீ
மாவன் மறையவன் காணறி யாத
        மாமணி யேபள்ளி எழுந்தரு ளாயே.
அருஞ்சொற்பொருள்

ஆலம் - விஷம், ஆலமரம் மிடறு - கழுத்து ,
ஆறு -கங்கை, 

விளக்கம் 

ஆலமும் மிடற்றினில் அடக்கிய தேவா
     ஆற்றையும் சடையினில் அடக்கிய நாதா 

ஆலகால விஷத்தைக் கழுத்தில் அடக்கிய தேவனே !
 கங்கை நதியைச் சடையில் அடக்கிய நாதனே

காலனும் மாண்டிடத் தீண்டிய பாதா
    கனலினைக் கரம் அதில் ஏந்திய ஈசா

மார்க்கண்டேயன் வழிபாட்டை ஏற்று , எமனைக் காலால்
 உதைத்த சிவனே, நெருப்பைக் கையில் ஏந்திய ஈசனே

ஆலமும் அரசமும் தென்றலில் அசையும் 
      அடியவர் புரம் உறை சந்திர மௌலீ

தென்றல் வீசுவாதால் ஆலமர, அரசமர இலைகள் அழகாய் 
அசைகின்ற அடியவர்புரத்தில் உறையும் சந்திர மௌலீசா!

மாலவன் மறையவன் காண அறியாத
     மாமணியே பள்ளி எழுந்தருளாயே.

திருமாலும் பிரம்மாவும் தேடி காணமுடியாத ஜோதியே
 என் மாணிக்கமே பள்ளி எழுந்தருள்வாயாக

தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Nov 11, 2023, 2:20:26 AM11/11/23
to சந்தவசந்தம்

திருப்பள்ளியெழுச்சி 7

லையு மழுதிட பாலமு தளித்த 
     மலைமகள் வாழவும் பாகமு மளித்தாய்
கிய சுந்தரர் தொழுதுமை வணங்க
     அவர்குறை நீங்கவும் தூதுவ  னானாய்
கிய வம்பல மேறிய வரசே 
      அடியவர் புரமுறை சந்திர மௌலீ
ல்விழி தனைவுடை யெம்பெரு மானே
       சங்கர னேபள்ளி எழுந்தரு ளாயே.

அருஞ்சொற்பொருள்

மழலை - குழந்தை ( இங்கு திருஞானசம்பந்தர்)
மலைமகள் - பார்வதி, அம்பலம் - பலரும் கூத்துக் 
காணும் இடம் , தழல்விழி - நெற்றிக்கண் 

விளக்கம்

மழலையும் அழுதிட பால் அமுது அளித்த 
     மலைமகள் வாழவும் பாகமும் அளித்தாய்

திருஞானசம்பந்தர் அழுத போது , ஞானப் பால் அளித்த
 பார்வதிக்கு இடபாகம் தந்த ஈசனே

அழகிய சுந்தரர் தொழுதுமை வணங்க
   அவர்குறை நீங்கவும் தூதுவன் ஆனாய்

சுந்தர் மூர்த்தி நாயனார் பொருட்டு 
அவர் குறை நீங்க தூது சென்ற ஈசனே

அழகிய அம்பலம் ஏறிய அரசே 
    அடியவர்புரம் உறை சந்திர மௌலீ

அழகிய அம்பலத்தில் கூத்தாடும் அரசே!
அடியவர்புரம் உறை சந்திர மௌலீசா!

தழல்விழிதனை உடை எம்பெருமானே
     சங்கரனே பள்ளி எழுந்தரு ளாயே.

நெற்றிக்கண் உடைய சிவனே சங்கரா
  பள்ளி எழுந்தருள்வாயாக!

Siva Siva

unread,
Nov 11, 2023, 8:49:32 AM11/11/23
to santhav...@googlegroups.com
Some comments below.

On Sat, Nov 11, 2023 at 2:20 AM தங்கவேல் காஞ்சிபுரம் <k.thanga...@gmail.com> wrote:

திருப்பள்ளியெழுச்சி 7

லையு மழுதிட** பாலமு தளித்த 
     மலைமகள் வாழவும் பாகமு மளித்தாய்

** --> check sandhi.

 /மலைமகள் வாழவும்/
What is the meaning of உம் here?

கிய சுந்தரர் தொழுதுமை** வணங்க
     அவர்குறை நீங்கவும் தூதுவ  னானாய்

**  --> உமை & ஆனாய் -- check number alignment. (ஒருமை பன்மை issue)

/குறை நீங்கவும் தூதுவ  னானாய்/
What is the meaning of உம் here?

தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Nov 11, 2023, 9:43:53 AM11/11/23
to சந்தவசந்தம்

குருவே சரணம் 🙏 சில மாற்றங்களுடன் 

திருப்பள்ளியெழுச்சி 7 

லையு மழுதிடப் பாலமு தளித்த 
     மலைமகள் வாழநற் பாகமு மளித்தாய்
கிய சுந்தரர் தொழுதுனை வணங்க
     அவர்குறை நீங்கிடத் தூதுவ  னானாய்
கிய வம்பல மேறிய வரசே 
      அடியவர் புரமுறை சந்திர மௌலீ
ல்விழி தனைவுடை யெம்பெரு மானே
       சங்கர னேபள்ளி எழுந்தரு ளாயே.
அருஞ்சொற்பொருள்

மழலை - குழந்தை ( இங்கு திருஞானசம்பந்தர்)
மலைமகள் - பார்வதி, அம்பலம் - பலரும் கூத்துக் காணும் இடம் , 
தழல்விழி - நெற்றிக்கண் 

விளக்கம்

மழலையும் அழுதிடப் பால் அமுது அளித்த 
     மலைமகள் வாழநற் பாகமும் அளித்தாய்

திருஞானசம்பந்தர் அழுத போது , ஞானப் பால் அளித்த 
பார்வதிக்கு இடபாகம் தந்த ஈசனே

அழகிய சுந்தரர் தொழுதுனை வணங்க
   அவர்குறை நீங்கிடத் தூதுவன் ஆனாய்

சுந்தர் மூர்த்தி நாயனார் பொருட்டு 
அவர் குறை நீங்க தூது சென்ற ஈசனே

அழகிய அம்பலம் ஏறிய அரசே 
    அடியவர்புரம் உறை சந்திர மௌலீ

அழகிய அம்பலத்தில் கூத்தாடும் அரசே!
அடியவர்புரம் உறை சந்திர மௌலீசா!

தழல்விழிதனை உடை எம்பெருமானே
     சங்கரனே பள்ளி எழுந்தரு ளாயே.

நெற்றிக்கண் உடைய சிவனே சங்கரா
  பள்ளி எழுந்தருள்வாயாக!


Some comments below.

Siva Siva

unread,
Nov 11, 2023, 10:28:07 AM11/11/23
to santhav...@googlegroups.com
/தனைவுடை/

check sandhi.

இலக்கணச் சுருக்கம் - ஆறுமுக நாவலர்

உயீரிற்றின் முன் உயிர் புணர்தல்

88. , , ஐ என்னும் மூன்றுயிரீற்றின் முன்னும் உயிர் முதன் மொழிவந்தால், இடையில் யகரம் உடம்படு மெய்யாக வரும்.

89. , , , , , , ஒள என்னும் ஏழுயிரீற்றின் முன்னும் உயிர் முதன் மொழி வந்தால், இடையில் வகரம் உடம்படுமெய்யாக வரும்.

90. ஏகாரவுயிரீற்றின் முன் உயிர் முதன் மொழி வந்தால், இடையில் யகரமாயினும், வகரமாயினும், உடம்படு மெய்யாக வரும்.


தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Nov 11, 2023, 11:02:41 AM11/11/23
to சந்தவசந்தம்

குருவே சரணம் 🙏  மீண்டும் சில மாற்றங்களுடன் 

திருப்பள்ளியெழுச்சி 7 

லையு மழுதிடப் பாலமு தளித்த 
     மலைமகள் வாழநற் பாகமு மளித்தாய்
கிய சுந்தரர் தொழுதுனை வணங்க
     அவர்குறை நீங்கிடத் தூதுவ  னானாய்
கிய வம்பல மேறிய வரசே 
      அடியவர் புரமுறை சந்திர மௌலீ
ல்விழி தனையுடை யெம்பெரு மானே
       சங்கர னேபள்ளி எழுந்தரு ளாயே.
அருஞ்சொற்பொருள்

மழலை - குழந்தை ( இங்கு திருஞானசம்பந்தர்)
மலைமகள் - பார்வதி, அம்பலம் - பலரும் கூத்துக் காணும் இடம் , 
தழல்விழி - நெற்றிக்கண் 

விளக்கம்

மழலையும் அழுதிடப் பால் அமுது அளித்த 
     மலைமகள் வாழநற் பாகமும் அளித்தாய்

திருஞானசம்பந்தர் அழுத போது , ஞானப் பால் அளித்த 
பார்வதிக்கு இடபாகம் தந்த ஈசனே

அழகிய சுந்தரர் தொழுதுனை வணங்க
   அவர்குறை நீங்கிடத் தூதுவன் ஆனாய்

சுந்தர் மூர்த்தி நாயனார் பொருட்டு 
அவர் குறை நீங்க தூது சென்ற ஈசனே

அழகிய அம்பலம் ஏறிய அரசே 
    அடியவர்புரம் உறை சந்திர மௌலீ

அழகிய அம்பலத்தில் கூத்தாடும் அரசே!
அடியவர்புரம் உறை சந்திர மௌலீசா!

தழல்விழிதனை உடை எம்பெருமானே
     சங்கரனே பள்ளி எழுந்தரு ளாயே.

நெற்றிக்கண் உடைய சிவனே சங்கரா
  பள்ளி எழுந்தருள்வாயாக!
/தனைவுடை/

check sandhi.

இலக்கணச் சுருக்கம் - ஆறுமுக நாவலர்

உயீரிற்றின் முன் உயிர் புணர்தல்

88. , , ஐ என்னும் மூன்றுயிரீற்றின் முன்னும் உயிர் முதன் மொழிவந்தால், இடையில் யகரம் உடம்படு மெய்யாக வரும்.

89. , , , , , , ஒள என்னும் ஏழுயிரீற்றின் முன்னும் உயிர் முதன் மொழி வந்தால், இடையில் வகரம் உடம்படுமெய்யாக வரும்.

90. ஏகாரவுயிரீற்றின் முன் உயிர் முதன் மொழி வந்தால், இடையில் யகரமாயினும், வகரமாயினும், உடம்படு மெய்யாக வரும்.

தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Nov 12, 2023, 12:15:31 AM11/12/23
to சந்தவசந்தம்
திருப்பள்ளியெழுச்சி 8

பாண்டவற் கருளிய மாயவ னன்று
     பங்கைய மலருடன் கண்மலர் தந்து 
வேண்டிடக் கரமதிற் சக்கர மளித்த  
     வேந்தனே வேலனின் தந்தையே போற்றி 
மாண்புடை மனிதர்கள் மகிழ்வுடன் வாழும் 
     மணிதிரு வடியவர் புரமுறை சிவனே
தாண்டக வேந்தருக் கருளிய தேவா
      தாண்டவ னேபள்ளி எழுந்தரு ளாயே.

அருஞ்சொற்பொருள்

 தாண்டகவேந்தர் - திருநாவுக்கரசர், 
 
பாண்டவற்கு அருளிய மாயவன் அன்று
     பங்கைய மலருடன் கண்மலர் தந்து 

பஞ்ச பாண்டவர்களுக்குப் பல வகையிலும் அருள்புரிந்த
 மாயவன் ஆன திருமால் அன்று
999 தாமரை மலர்+ 1 தன் கண்மலர் கொண்டு
ஈசனை வணங்க 

வேண்டிடக் கரமதில் சக்கரம் அளித்த  
     வேந்தனே வேலனின் தந்தையே போற்றி

வேண்டியபடி திருமாலுக்குச் கரத்தில் சக்கரம் அளித்த வேந்தனே! 
 வேலனின் தந்தையே போற்றி 

மாண்புடை மனிதர்கள் மகிழ்வுடன் வாழும் 
  மணிதிரு அடியவர்புரம் உறை சிவனே

சிறந்த மனிதர்கள் மகிழ்வுடன் வாழும் 
அழகிய திரு அடியவர்புரம் உறை சிவனே

தாண்டகவேந்தருக்கு அருளிய தேவா
    தாண்டவனே பள்ளி எழுந்தருளாயே.

திருநாவுக்கரசருக்கு அருளிய தேவனே, 
நடராஜனே பள்ளி எழுந்தருள்வாயாக 

Siva Siva

unread,
Nov 12, 2023, 10:31:07 AM11/12/23
to santhav...@googlegroups.com
/பாண்டவற்கு அருளிய/
/பஞ்ச பாண்டவர்களுக்குப் பல வகையிலும் அருள்புரிந்த/

பாண்டவற்கு = ஒருமை.
பாண்டவர்க்கு - பன்மை.

/பங்கைய மலருடன்/
Check for typo.

V. Subramanian

N. Ganesan

unread,
Nov 12, 2023, 11:46:53 AM11/12/23
to சந்தவசந்தம்
On Sunday, November 12, 2023 at 9:31:07 AM UTC-6 Siva Siva wrote:

/பங்கைய மலருடன்/
Check for typo.

காலங்காலமாக, தமிழில் பங்கையம் என வருதல் உண்டு:
ஆழ்வார்கள் தொடங்கி இன்றுவரை.

தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Nov 12, 2023, 6:36:31 PM11/12/23
to சந்தவசந்தம்
நன்றி குருவே 🙏 மாற்றிவிட்டேன் 

திருப்பள்ளியெழுச்சி 8

பாண்டவர்க் கருளிய மாயவ னன்று
     பங்கய மலருடன் கண்மலர் தந்து 
வேண்டிடக் கரமதிற் சக்கர மளித்த  
     வேந்தனே வேலனின் தந்தையே போற்றி 
மாண்புடை மனிதர்கள் மகிழ்வுடன் வாழும் 
     மணிதிரு வடியவர் புரமுறை சிவனே
தாண்டக வேந்தருக் கருளிய தேவா
      தாண்டவ னேபள்ளி எழுந்தரு ளாயே.
அருஞ்சொற்பொருள்

 தாண்டகவேந்தர் - திருநாவுக்கரசர், 
 
பாண்டவர்க்கு அருளிய மாயவன் அன்று
     பங்கய மலருடன் கண்மலர் தந்து 

பஞ்ச பாண்டவர்களுக்குப் பல வகையிலும் அருள்புரிந்த
 மாயவன் ஆன திருமால் அன்று
999 தாமரை மலர்+ 1 தன் கண்மலர் கொண்டு
ஈசனை வணங்க 

வேண்டிடக் கரமதில் சக்கரம் அளித்த  
     வேந்தனே வேலனின் தந்தையே போற்றி

வேண்டியபடி திருமாலுக்குச் கரத்தில் சக்கரம் அளித்த வேந்தனே! 
 வேலனின் தந்தையே போற்றி 

மாண்புடை மனிதர்கள் மகிழ்வுடன் வாழும் 
  மணிதிரு அடியவர்புரம் உறை சிவனே

சிறந்த மனிதர்கள் மகிழ்வுடன் வாழும் 
அழகிய திரு அடியவர்புரம் உறை சிவனே

தாண்டகவேந்தருக்கு அருளிய தேவா
    தாண்டவனே பள்ளி எழுந்தருளாயே.

திருநாவுக்கரசருக்கு அருளிய தேவனே, 
நடராஜனே பள்ளி எழுந்தருள்வாயாக.

தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Nov 12, 2023, 10:46:40 PM11/12/23
to சந்தவசந்தம்
திருப்பள்ளியெழுச்சி 9

நேமும் பெருகிட நின்புகழ் எழுத
      நினைத்ததை யளித்திடு மெம்பெரு மானே  
வாக ரோதிட வாசகம் முழுதும்
     வந்துமு னெழுதிய அம்பல வாணா
வானை மலர்நிறை சோலைகள் சூழ்ந்த 
     வண்டிரு வடியவர் புரமுறை சிவனே
பாமாம் பற்றினை நீக்கிடு மீசா
      பரம்பொரு ளேபள்ளி எழுந்தரு ளாயே.

அருஞ்சொற்பொருள் 

நேசம் - அன்பு,  வாசகர் - மாணிக்கவாசகர், வாசம் - திருவாசகம், அம்பலவாணன் - சிவபெருமான், வண்- செழிப்பு, 

விளக்கம் 

நேசமும் பெருகிட நின்புகழ் எழுத
நினைத்ததை அளித்திடும் எம்பெருமானே  

அன்பு பெருகியதால்  உன் புகழை அடியேன் எழுத , நினைத்ததை அளித்திடும் எம்பெருமானே 

வாசகர் ஓதிட வாசகம் முழுதும்
வந்துமுன் எழுதிய அம்பலவாணா

மாணிக்கவாசகர் திருவாசகத்தைச் சொல்ல  , அவர் முன் தோன்றி திருவாசகம் முழுவதும் எழுதிய அம்பலவாணா

வாசனை மலர்நிறை சோலைகள் சூழ்ந்த 
வண் திரு அடியவர்புரம் உறை சிவனே

வாசனை மலர்நிறைந்த சோலைகள் சூழ்ந்த செழிப்பு மிக்க  அடியவர்புரம் உறை சிவனே

பாசமாம் பற்றினை நீக்கிடும் ஈசா
பரம்பொருளே பள்ளி எழுந்தருளாயே.

பாசம் என்ற பற்றை அகற்றும் ஈசனே
பரம்பொருளே பள்ளி எழுந்தருள்வாயாக 



Siva Siva

unread,
Nov 13, 2023, 9:24:30 AM11/13/23
to santhav...@googlegroups.com
/நேமும் பெருகிட/

உம் = அசை?

/வானை மலர்நிறை சோலைகள்/
வாசத்தை உடைய மலர் = பொதுவாக வாசமலர் என்று வரும்.

 வாசனை மலிமலர்ச் சோலைகள் -- என்பதும் பொருந்தக்கூடும்.

தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Nov 13, 2023, 10:09:10 AM11/13/23
to சந்தவசந்தம்
மிக்க நன்றி குருவே 🙏 சில மாற்றங்களுடன் 

திருப்பள்ளியெழுச்சி 9 

நேசத்தி லீசனே நின்புகழ் எழுத
      நினைத்ததை யளித்திடு மெம்பெரு மானே  
வாக ரோதிட வாசகம் முழுதும்
     வந்துமு னெழுதிய அம்பல வாணா
வாசனை மலிமலர்ச் சோலைகள் சூழ்ந்த 
     வண்டிரு வடியவர் புரமுறை சிவனே
பாமாம் பற்றினை நீக்கிடு மீசா
      பரம்பொரு ளேபள்ளி எழுந்தரு ளாயே.
அருஞ்சொற்பொருள் 

நேசம் - அன்பு,  வாசகர் - மாணிக்கவாசகர், வாசம் - திருவாசகம், 
அம்பலவாணன் - சிவபெருமான், வண்- செழிப்பு, 

விளக்கம் 

நேசத்தில் ஈசனே நின்புகழ் எழுத
நினைத்ததை அளித்திடும் எம்பெருமானே  

அன்பால் ஈசனே  உன் புகழை அடியேன் எழுத , 
நினைத்ததை அளித்திடும் எம்பெருமானே 

வாசகர் ஓதிட வாசகம் முழுதும்
வந்துமுன் எழுதிய அம்பலவாணா

மாணிக்கவாசகர் திருவாசகத்தைச் சொல்ல  , 
அவர் முன் தோன்றி திருவாசகம் முழுவதும் எழுதிய அம்பலவாணா

வாசனை மலிமலர்ச் சோலைகள் சூழ்ந்த 
வண் திரு அடியவர்புரம் உறை சிவனே

வாசனை மிகுந்த  மலர்ச்சோலைகள் சூழ்ந்த செழிப்பு 
மிக்க  அடியவர்புரம் உறை சிவனே

பாசமாம் பற்றினை நீக்கிடும் ஈசா
பரம்பொருளே பள்ளி எழுந்தருளாயே.

பாசம் என்ற பற்றை அகற்றும் ஈசனே
பரம்பொருளே பள்ளி எழுந்தருள்வாயாக 


தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Nov 13, 2023, 11:39:34 PM11/13/23
to சந்தவசந்தம்

திருப்பள்ளியெழுச்சி 10

 

இப்புவி மிசையினிற் கற்புடன் பிறந்த

ஈசைமுப் பத்திரண் டறங்களுஞ் செய்து  

ஒப்பிலா மலர்களை யன்புடன் தூவி

ஓம்சிவ சிவசிவ மந்திரம் சொல்ல

அப்பது பெருகிட ஈசனை அணைத்த

அன்னையின் கோட்டமாம் காஞ்சியின் தெற்கே

அப்துலா புரமெனு மடியவர் புரம்வாழ்

        ஆண்டவ னேபள்ளி எழுந்தரு ளாயே

 

அருஞ்சொற்பொருள்

 

அப்பு - நீர், (இங்கு கம்பா நதி) , அடியவர்புரம்- அப்துல்லாபுரம். அப்துல்லா என்பது "கடவுளின் வேலைக்காரன்"

 என்று பொருள்படும் ஒரு அரபு பெயர். (Abdalla is an Arabic name meaning "Servant of God"

 

பெரிய புராணத்தில் கூறிய முப்பத்திரண்டு அறங்கள் பின்வருமாறு:

 

சாலை அமைத்தல், ஓதுவார்க்கு உணவு, அறுசமயத்தாருக்கும் உணவு, பசுவுக்குத் தீனி, சிறைச் சோறு, ஐயம், தின்பண்டம் நல்கல், அநாதைகளுக்கு உணவு, மகப்பெறுவித்தல், மகவு வளர்த்தல், சிசுக்களுக்குப் பால் நல்கல், அநாதைப் பிணம் சுடுதல், அநாதைகளுக்கு உடை, சுண்ணாம்பு பூசல், நோய்க்கு மருந்து, வண்ணார் தொழில், நாவிதத் தொழில், கண்ணாடி அணிவித்தல், காதோலை போடுதல், கண் மருந்து, தலைக்கு எண்ணெய், ஒத்தடம் தருதல், பிறர் துயர் காத்தல், தண்ணீர்ப் பந்தல், மடம் கட்டுதல், தடாகம் அமைத்தல், சோலை வளர்த்தல், தோல் பதனிடல், மிருகங்களுக்கு உணவு, ஏர் உழுதல், உயிர் காத்தல், கன்னிகாதானம்.


இப்புவி மிசையினில் கற்புடன் பிறந்த

ஈசை முப்பத்திரண்டறங்களும் செய்து  


இந்தப் பூமியில் கற்புக்கரசியாகப் பிறந்த காமாட்சி அம்மன், முப்பத்திரண்டு அறங்கள் செய்து,


ஒப்பிலா மலர்களை அன்புடன் தூவி

ஓம்சிவ சிவசிவ மந்திரம் சொல்ல

மணலால் லிங்கம் அமைத்து  சிறந்த மலர்களை அன்புடன் தூவி, ஓம் சிவ சிவ சிவ மந்திரம் சொல்ல


அப்பு அது பெருகிட ஈசனை அணைத்த

அன்னையின் கோட்டமாம் காஞ்சியின்தெற்கே

கம்பா நதி பெருக, ஈசனை அணைத்த அன்னை வாழும் காஞ்சிபுரத்திற்குத் தெற்கே


 அப்துல்லாபுரம் என்னும் அடியவர் புரம்வாழ்

 ஆண்டவனே பள்ளி எழுந்தருளாயே


அடியவர்புரம்- அப்துல்லாபுரம். அப்துல்லா என்பது "கடவுளின் வேலைக்காரன்"

 என்று பொருள்படும் ஒரு அரபு பெயர். (Abdalla is an Arabic name meaning "Servant of God"

அப்துல்லாபுரம் என்ற அடியவர்புரத்தில் வாழும் ஆண்டவனே பள்ளி எழுந்தருள்வாயாக!

Message has been deleted

தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Nov 14, 2023, 10:22:00 AM11/14/23
to சந்தவசந்தம்
ஐயா ஊரின் பெயர் அப்துல்லாபுரம் 

அப்துல்லா என்பது "கடவுளின் வேலைக்காரன்" - 

 என்று பொருள்படும் ஒரு அரபு பெயர். (Abdalla is an Arabic name meaning "Servant of God")

எனவே அடியேன் அப்துல்லா - கடவுளின் வேலைக்காரன் - அடியவர்

அப்துல்லாபுரம் என்பதை அடியவர்புரம்  என்று தமிழ் படுத்தியுள்ளேன்.

ஓம் நமசிவாய 🙏

On Friday, November 3, 2023 at 5:35:13 PM UTC+5:30 Anand Ramanujam wrote:
மிக அருமை! 

“அடியவர்புரம்” என்பது ஒரு திருத்தலத்தின் பெயரா?


Siva Siva

unread,
Nov 14, 2023, 10:44:24 AM11/14/23
to santhav...@googlegroups.com
பொதுவாகத் தமிழ்ப்பாடலில் / சொற்களில் - ப்த வாராது..
சப்தம் - சத்தம்
த்ருப்தி - திருத்தி

இந்தப் பாடலில் அடியவர்புரம் என்று தமிழ் வடிவம் கொடுத்தபின், இக்கால வழக்கில் உள்ள பெயரையும் அப்படியே மீண்டும் சொல்லவேண்டும் என்ற அவசியம் இல்லை என்று எண்ணுகின்றேன்.
இவ்வூருக்குப் பழைய பெயர் ஏதேனும் உண்டா?
இந்தக் கோயிலில் இருக்கும் ஈசன் பெயர் என்ன?
தலவரலாறு உண்டா?

V. Subramanian

தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Nov 14, 2023, 11:33:42 AM11/14/23
to சந்தவசந்தம்
குருவே வணக்கம் 🙏 

1) இதற்கு முன் இருந்த பெயரையும், தமிழ் வடிவப் படுத்திய பெயரையும்
     மக்களுக்குப் தெளிவு படுத்த இறுதி பாடலில் வைத்தேன்.
    ஆனால் குருவே கருத்து ஏற்புடையதாக எண்ணுகிறேன்.
    இறுதி பாடலை மாற்றி பதிவு செய்கிறேன்.
   

2) அருள்மிகு அறம்வளர்நாயகி உடனுறை   
ஶ்ரீ சந்திரமௌலீஸ்வரர் ஆலயம் அப்துல்லாபுரம்.

3) பழைய பெயர் எதுவும் .

4) புதியதாக ஏற்படுத்திய கோவில்.

5) நீண்ட காலமாக அங்கு குளம் உள்ளது. ஆனால் அடியேன் அறிந்த அளவில் கோவிலே தலவரலாறோ இல்லை என்று நினைக்கிறேன்.

6) குருவே அப்புதுல்லாபுரம் என்பதைத் தமிழில் அடியவர்புரம்  அழைப்பது சரிதானே ?


On Tuesday, November 14, 2023 at 9:14:24 PM UTC+5:30 Siva Siva wrote:
பொதுவாகத் தமிழ்ப்பாடலில் / சொற்களில் - ப்த வாராது..
சப்தம் - சத்தம்
த்ருப்தி - திருத்தி

இந்தப் பாடலில் அடியவர்புரம் என்று தமிழ் வடிவம் கொடுத்தபின், இக்கால வழக்கில் உள்ள பெயரையும் அப்படியே மீண்டும் சொல்லவேண்டும் என்ற அவசியம் இல்லை என்று எண்ணுகின்றேன்.
இவ்வூருக்குப் பழைய பெயர் ஏதேனும் உண்டா?
இந்தக் கோயிலில் இருக்கும் ஈசன் பெயர் என்ன?
தலவரலாறு உண்டா?

V. Subramanian

N. Ganesan

unread,
Nov 14, 2023, 4:06:23 PM11/14/23
to santhav...@googlegroups.com
> அப்புதுல்லாபுரம் என்பதைத் தமிழில் அடியவர்புரம்  அழைப்பது சரிதானே ?

வேலூர் அருகே உள்ள அப்துல்லாபுரமா?

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/d201bfb6-b2f6-421f-86d3-2b10a786e204n%40googlegroups.com.

N. Ganesan

unread,
Nov 14, 2023, 4:15:15 PM11/14/23
to santhav...@googlegroups.com

தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Nov 14, 2023, 4:35:27 PM11/14/23
to சந்தவசந்தம்
இந்த கோவில் தான் ஐயா

N. Ganesan

unread,
Nov 14, 2023, 4:58:29 PM11/14/23
to santhav...@googlegroups.com
On Tue, Nov 14, 2023 at 3:35 PM தங்கவேல் காஞ்சிபுரம் <k.thanga...@gmail.com> wrote:
இந்த கோவில் தான் ஐயா


அப்துல்லாபுரம் - இந்த ஊரின் பெயர்: தூசி. பல்லவர்களின் படைகள் நின்ற ஊர்.
மதுரை அருகே மணலூர் (கீழடி) அரண்மனை இருந்தது.
மணலூர் வரலாறே இப்போது பேசப்படுவதில்லை.

ஒரு கேள்வி. புதிதாக முகலிங்கம் அமைத்த கோயில். சரி.

ஆனால், அருகிலே ஊரின் உள்ளே அகத்தீஸ்வரர் கோவில் உண்டா?
தேடினால் இருக்கும்.
”45. அப்துல்லாபுரம் - காஞ்சிபுரத்திலிருந்து 10 கிமீ தொலைவு
  • அகஸ்தீஸ்வரர்
46. தூசி - காஞ்சிபுரத்திலிருந்து 10 கிமீ தொலைவு
  • அபிமுக்தீஸ்வரர்”

NG
Message has been deleted

தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Nov 15, 2023, 4:45:47 AM11/15/23
to சந்தவசந்தம்
குருவே வணக்கம் 🙏  மாற்றிவிட்டேன் 

திருப்பள்ளியெழுச்சி 10

 

ப்புவி மிசையினிற் கற்புடன் பிறந்த
         ஈசைமுப் பத்திரண் டறங்களுஞ் செய்து   
ப்பிலா மலர்களை யன்புடன் தூவி
           ஓம்சிவ சிவசிவ மந்திரம் சொல்ல
ப்பது பெருகிட ஈசனை அணைத்த
          அன்னையின் கோட்டமாம் காஞ்சியின்தெற்கே
 அப்பிறை சூடிந லடியவர் புரம்வாழ்
           ஆண்டவ னேபள்ளி எழுந்தரு ளாயே

விளக்கம்

இப்புவி மிசையினில் கற்புடன் பிறந்த

ஈசை முப்பத்திரண்டறங்களும் செய்து  

இந்தப் பூமியில் கற்புக்கரசியாகப் பிறந்த காமாட்சி அம்மன், முப்பத்திரண்டு அறங்கள் செய்து,

ஒப்பிலா மலர்களை அன்புடன் தூவி

ஓம்சிவ சிவசிவ மந்திரம் சொல்ல

மணலால் லிங்கம் அமைத்து  சிறந்த மலர்களை அன்புடன் தூவி, ஓம் சிவ சிவ சிவ மந்திரம் சொல்ல

அப்பு அது பெருகிட ஈசனை அணைத்த

அன்னையின் கோட்டமாம் காஞ்சியின்தெற்கே

கம்பா நதி பெருக, ஈசனை அணைத்த அன்னை வாழும் காஞ்சிபுரத்திற்குத் தெற்கே

           அப்பிறை சூடிநல் அடியவர் புரம்வாழ்
                    ஆண்டவ னேபள்ளி எழுந்தரு ளாயே

            அந்தப்  பிறைமதியைச் சூடி நல்ல அடியவர்புரத்தில் வாழும் ஆண்டவனே பள்ளி எழுந்தருள்வாயாக!


On Tuesday, November 14, 2023 at 9:14:24 PM UTC+5:30 Siva Siva wrote:

தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Nov 21, 2023, 5:28:03 AM11/21/23
to சந்தவசந்தம்
அருள்மிகு பட்டுவதனாம்பிகை சமேத       
     பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில் 
         பிரமநகர் என்னும் பெருநகர்    
                  2.1 தெய்வப்பதிகம்

அறுசீர் கழிநெடிலடி ஆசிரியர் விருத்தம்
          (காய் காய் காய் அரையடிக்கு )

தெள்ளியநற் சேயாற்றுப் புனல்மூழ்கிச்
         சிவன்மீது மலர்தூவி வாயாரத்
தெள்ளுதமிழ் பாடியவரக் கருள்புரியும்
        தென்னவனே தேவாதி தேவனெனத்
துள்ளிவரு மானதனை வேந்தியவா
        தூயநதி கங்கையினைச் சூடியவா
ள்ளலெனத் துதிசெய்து பிரமனவன்
       வழிபட்ட பிரமநகர்ப் பெருமானே  (2.1)
 
சுருக்கமா பொருள் 

பிரம்ம தேவன் சேயாற்றில் நீராடிப் பிரமநகர்ப்
 பிரமீசப் பெருமானே என்று பலவாறாகப்
போற்றி வணங்கினார். 


விளக்கம்

தெள்ளியநற் சேயாற்றுப் புனல்மூழ்கிச்
     சிவன்மீது மலர்தூவி வாயாரத்
 
பிரம்மன் தேவன், தெளிவான  நல்ல சேய் ஆற்றில் நீராடிச் 
சிவன்மீது மலர்தூவி வாயாரப் பின்வருமாறு வாழ்த்தி 

தெள்ளுதமிழ் பாடியவரக்கு  அருள்புரியும்
     தென்னவனே தேவாதி தேவன் எனத்

தேன் போல் இனிமையான  தமிழில்
பாடும் அடியவர்களுக்கு  அருள்புரியும்
தென்னாட்டை ஆண்ட சொக்கநாதா !
(எ.கா : பாணபத்திரனுக்கு உதவியது )
தேவாதி தேவனே என்றும்

துள்ளிவரும் மான் அதனை ஏந்தியவா
    தூயநதி கங்கையினைச் சூடியவா

துள்ளிவரும் மானைக் கரத்தில் ஏந்தியவரே
தூய்மையான கங்கைநதியைச் சடையில்
தரித்தவரே! என்றும் 

வள்ளலெனத் துதிசெய்து பிரமன் அவன்
    வழிபட்ட பிரமநகர்ப் பெருமானே  

வரங்களை வாரி வழங்கும் வள்ளலே என்றும்
வாயாரத் துதிசெய்து,  பிரம்மன் ஈசனைப் பணிந்து
 ஏத்தி வழிபட்ட பிரமநகர் பிரமீசப் பெருமானே!




பிற்குறிப்பு 

கவிராட்சசர் - ஸ்ரீ கச்சியப்ப முனிவர் 
                  அருளிய 
1. பிரமீசர் பதிற்றுப்பத்தந்தாதி


போந்து திரை கொழித்து மணி வரன்று நறுஞ் சேயாற்றுப்புனலின் மூழ்கித்
தேந்துணர்ப்போ தலர்சொரிந்த நான்முகற்கு நான்முகத்துந்திகழ வேதம்
ஈந்தருளும் பிரமநகர்ப் பிரமீசன் றனையிறைஞ்சியேத்தி னோர்கள்
காந்துமணி முடியிமையோர்க் கிறையவராய்ப் பேரின்பங்கலந்து வாழ்வார் (3)

திருக்கோவிலைப்பற்றி 

பிரமீசப் பெருமானைத் தரிசிக்க
Shri Brahma Purishvarar Temple

(அடியேன் பிறந்த ஊரான மானாம்பதிக்குப் (வானவன் மாதேவிபுரம்)
பக்கத்தில் உள்ள ஊர். பிரம்மன் வழிபட்டதால் பிரமநகர் என்னும்
இவ்வூரில் தற்காலத்தில் பெருநகர் என்று வழங்கப்படுகிறது. )



VETTAI ANANTHANARAYANAN

unread,
Nov 21, 2023, 12:46:43 PM11/21/23
to santhav...@googlegroups.com
> துள்ளிவரு மானதனை வேந்தியவா -   மானதனை யேந்தியவா 
 துள்ளி - 2-ஆம் எழுத்தை ‘போல்ட்’ ஆக்குவது ஏன்?

அனந்த்

On Tue, Nov 21, 2023 at 5:28 AM தங்கவேல் காஞ்சிபுரம் <k.thanga...@gmail.com> wrote:
அருள்மிகு பட்டுவதனாம்பிகை சமேத       
     பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில் 
         பிரமநகர் என்னும் பெருநகர்    
                  2.1 தெய்வப்பதிகம்

அறுசீர் கழிநெடிலடி ஆசிரியர் விருத்தம்
          (காய் காய் காய் அரையடிக்கு )

தெள்ளியநற் சேயாற்றுப் புனல்மூழ்கிச்
         சிவன்மீது மலர்தூவி வாயாரத்
தெள்ளுதமிழ் பாடியவரக் கருள்புரியும்
        தென்னவனே தேவாதி தேவனெனத்
துள்ளிவரு மானதனை வேந்தியவா
        தூயநதி கங்கையினைச் சூடியவா
ள்ளலெனத் துதிசெய்து பிரமனவன்
       வழிபட்ட பிரமநகர்ப் பெருமானே  (2.1)
Message has been deleted

தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Nov 21, 2023, 3:19:50 PM11/21/23
to சந்தவசந்தம்
மிக்க நன்றி ஐயா 🙏 மாற்றிவிட்டேன்.

அருள்மிகு பட்டுவதனாம்பிகை சமேத       
     பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில் 
         பிரமநகர் என்னும் பெருநகர்    
                  2.1 தெய்வப்பதிகம்

அறுசீர் கழிநெடிலடி ஆசிரியர் விருத்தம்
          (காய் காய் காய் அரையடிக்கு )

தெள்ளியநற் சேயாற்றுப் புனல்மூழ்கிச்
         சிவன்மீது மலர்தூவி வாயாரத்
தெள்ளுதமிழ் பாடியவரக் கருள்புரியும்
        தென்னவனே தேவாதி தேவனெனத்
துள்ளிவரு மானதனை யேந்தியவா
        தூயநதி கங்கையினைச் சூடியவா
ள்ளலெனத் துதிசெய்து பிரமனவன்
       வழிபட்ட பிரமநகர்ப் பெருமானே  (2.1)

ஐயா வணக்கம், 
        " எது கைவிட்டாலும் எதுகை விடக்கூடாது" என்று வாரியார் சுவாமிகள்
நகைச்சுவையாகச் சொல்லுவர் .அடியேன் எதுகை மோனை பற்றி அறியாது
(1-10-2023 முன் திருப்புகழ் இலக்கணம் அறியால்) தெய்வப்புகழ் எழுதிவந்தேன்.
(அடியேனைத் திருத்தியவர் திரு சிவசிவா அவர்கள்,) அடியேன் செய்த தவறை 
அடியேன் மறக்கக்கூடாது என்பதற்காகவும், மேலும் படிப்பவர்களுக்கு எளிதில் 
புரிய வேண்டும் என்பதற்காகவும் 2ஆம் எழுத்தை போல்ட் காக எழுதிவருகிறேன்.

On Tuesday, November 21, 2023 at 11:16:43 PM UTC+5:30 VETTAI ANANTHANARAYANAN wrote:
> துள்ளிவரு மானதனை வேந்தியவா -   மானதனை யேந்தியவா 
 துள்ளி - 2-ஆம் எழுத்தை ‘போல்ட்’ ஆக்குவது ஏன்?

அனந்த்

தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Nov 22, 2023, 4:40:43 AM11/22/23
to சந்தவசந்தம்
அருள்மிகு பட்டுவதனாம்பிகை சமேத       
     பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில் 
         பிரமநகர் என்னும் பெருநகர்    
                     2.2 தெய்வப்பதிகம் 


நான்மறையை நயமுடனே வோதியுயர்
      நாயகனை வேதியர்கள் பணிந்தேத்தக்
கோன்முறையில் வழுவாமல் ஆட்சிசெய்யக்
     குடிமக்கள் ஈசனையே பணிந்தேத்த
மேன்மைமிகு கற்புடைய பெண்மணிகள் 
     விளக்கேற்றி விரதமுடன் பணிந்தேத்த
வான்முகில்கள் திங்களில்மும் மாரிபெய்து
     வளம்பெருகு பிரமநகர்ப் பெருமானே ( 2 )

விளக்கம் 

நான்மறையை நயமுடனே ஓதி உயர்
     நாயகனை வேதியர்கள் பணிந்து ஏத்தக்

பிரமநகரில் ,  நான்மறை நூலையும் அழகாக ஓதி, உயர்ந்த 
நாயகன் ஆன ஈசனை அந்தணர்கள் பணிந்து போற்றிட 

கோன்முறையில் வழுவாமல் ஆட்சிசெய்யக்
   குடிமக்கள் ஈசனையே பணிந்தேத்த

பிரமநகரில் , ஊர் தலைவர்களும் அரசாங்க  
அலுவர்களும் நீதி வழுவாது நல்லாட்சி செய்ய, 
மக்களும் பிரமீசரைப் போற்றிப் பணிய,

மேன்மைமிகு கற்புடைய பெண்மணிகள் 
  விளக்கேற்றி விரதமுடன் பணிந்து ஏத்த

பிரமநகரில், கற்பில் சிறந்த பெண்கள் விளக்கேற்றி
 விரதமிருந்து பிரமீசப் பெருமானைப் போற்றிப் பணிய

வான்முகில்கள் திங்களில் மும்மாரிபெய்து
   வளம்பெருகு பிரமநகர்ப் பெருமானே

வானில் உள்ள மேகங்கள் மாதம்தோறும்
மும்முறை மழை பொழிந்தனால் வளம்
பெருகக்கூடிய பிரமநகரில் வீற்றிருக்கும்
பிரமீசப் பெருமானே


பிற்குறிப்பு 

விவேக சிந்தாமணி நூல் மாதம் 
மும்மாரியை அழகாக விளக்குகிறது:

வேதம் ஓதிய வேதியர்க்கோர் மழை
நீதி மன்னர் நெறியினுக்கோர் மழை
மாதர் கற்புடைய மங்கையர்க்கோர் மழை
மாதம் மூன்று மழையெனப் பெய்யுமே!

 திருப்பாவை

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
நாங்கள் நம்பாவைக்குச் சாற்றி நீராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள்மும் மாரி பெய்து
ஓங்கு பெருஞ் செந்நெல் ஊடுகயல் உகளப்
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றிவாங்கக்
குடம்நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோ ரெம்பாவாய்!

திருக்குறள் 

தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை.

மூன்றாம்-திருமுறை -  திருஞானசம்பந்தர்

வாழ்க அந்தணர் வானவர் ஆனினம்
வீழ்க தண்புனல் வேந்தனும் ஓங்குக
ஆழ்க தீயதெல் லாம்அரன் நாமமே
சூழ்க வையக முந்துயர் தீர்கவே

தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Nov 23, 2023, 6:28:15 AM11/23/23
to சந்தவசந்தம்
அருள்மிகு பட்டுவதனாம்பிகை சமேத       
     பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில் 
      பிரமநகர் என்னும் பெருநகர்த்   
                      2.3 தெய்வப்பதிகம் 

அறுசீர் கழிநெடிலடி ஆசிரியர் விருத்தம்
          (காய் காய் காய் அரையடிக்கு )

ன்தொண்டன் மொழிக்கிரங்கிப் பரவைமனை
   வந்தடைந்த தூதுவரே தூமணியே 
 கொன்றைமதி பொங்கிவருங் கங்கைநதி
    கொக்கிறகு நச்சரவு விலுவமொடு
ன்னிமலர் வார்சடையிற் புனைந்தருளும்
    மன்னவனே முக்கண்ணா பிரமீசா
ன்னிதெங்கு வாழைவளர் சோலைமலி
    வயல்சூழ்ந்த பிரமநகர்ப் பெருமானே (3)

விளக்கம் 

வன்தொண்டன் மொழிக்கு இரங்கிப் பரவைமனை
   வந்து அடைந்த தூதுவரே தூமணியே

சுந்தரமூர்த்தி நாயனாரின் வேண்டுதலை
ஏற்று தூதுவராகப் பரவை நாச்சியார் வீட்டிற்கே
சென்ற தூய மணி போல ஒளிமிக்கவரே

கொன்றைமதி பொங்கிவரும் கங்கைநதி
    கொக்கு இறகு நச்சரவு விலுவமொடு
வன்னிமலர் வார்சடையில் புனைந்து அருளும்
    மன்னவனே முக்கண்ணா பிரமீசா

கொன்றை மலர், பொங்கிவரும் கங்கை நீர்,
 கொக்கின் இறகு, கொடிய பாம்பு , வில்வம் 
வன்னிமலர் இவற்றை நீண்ட சடையிலே 
அணிந்து அருள்புரியும் தலைவா! மூன்று
 கண்களை உடைய பிரமீசப் பெருமானே 

வன்னிதெங்கு வாழைவளர் சோலைமலி
    வயல்சூழ்ந்த பிரமநகர்ப் பெருமானே

வன்னி, தென்னை , வாழை வளர்கின்ற
சோலை நிறைந்த பிரமநகரில்
வீற்றிருக்கும் பிரமீசப் பெருமானே.

தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Nov 24, 2023, 12:10:50 AM11/24/23
to சந்தவசந்தம்
   
அருள்மிகு பட்டுவதனாம்பிகை சமேத       
     பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில் 
      பிரமநகர் என்னும் பெருநகர்த்
          2.4 தெய்வப்பதிகம் 

அறுசீர் கழிநெடிலடி ஆசிரியர் விருத்தம்
          (காய் காய் காய் அரையடிக்கு )

ச்சணிந்த மென்முலையாள் காஞ்சிநகர்  
    கம்பைநதி கரையிருக்கும் மாவடியில்  
ச்சையுடன் மணலாலே சிலையமைத்தே
    ஈசனுக்குப் பூசையிட்டுப் பணிந்தேத்த
மெச்சியருள் புரிந்தவரே பிரமீசா
    வெற்றிவிடை மீதேறும் வித்தகரே
ச்சியப்ப மாமுனிவர் கவியாலே
    கசிந்தேத்தும் பிரமநகர்ப் பெருமானே

விளக்கம் 

கச்சணிந்த மென்முலையாள் காஞ்சிநகர்  
    கம்பைநதிக் கரையிருக்கும் மாவடியில்

கச்சணிந்த மெல்லிய முலைகளையுடைய
உமாதேவி காஞ்சிபுரம் கம்பை நதிக்கரையில்
மாமரத்தடியில்

இச்சையுடன் மணலாலே சிலை அமைத்தே
    ஈசனுக்குப் பூசையிட்டுப் பணிந்தேத்த

விருப்பத்துடன் மணலால் சிவ லிங்கம் அமைத்து, 
பூசை செய்து பணிந்து வணங்க

மெச்சி அருள் புரிந்தவரே பிரமீசா
    வெற்றிவிடை மீதேறும் வித்தகரே

உமாதேவியின் பூஜையை மெச்சி அருள்புரிந்த
பிரமீசா ! நந்தி வாகனத்தில் ஏறி வரும் வித்தகரே

கச்சியப்ப மாமுனிவர் கவியாலே
    கசிந்தேத்தும் பிரமநகர்ப் பெருமானே

கவிராட்சசர் என்று போற்றப்படும்
கச்சியப்ப முனிவர்,  பிரமீசர் 
பதிற்றுப்பத்தந்தாதியால் உருகிப்
போற்றிய பிரமநகர்ப் பிரமீசப் பெருமானே.

பிற்குறிப்பு

தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Nov 24, 2023, 10:32:40 PM11/24/23
to சந்தவசந்தம்
அருள்மிகு பட்டுவதனாம்பிகை சமேத       
     பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில் 
      பிரமநகர் என்னும் பெருநகர்த்   
                2.5 தெய்வப்பதிகம் 

அறுசீர் கழிநெடிலடி ஆசிரியர் விருத்தம்
          (காய் காய் காய் அரையடிக்கு )

தைமாதப் பூசத்திற் சந்திரனின் 
  தண்கிரணஞ் சிந்தும்நள் ளிரவதனிற்
செய்யாற்றிற் பலபதியி லிருந்துவருந்
  தெய்வங்கள் சூந்திருக்கப் பிரமீசன்
தையலுடன் விடையேறி வரமேள
   தாளமிட்டு வெடிவெடிக்க யாவருமே
கைக்கூப்பி வணக்கமிட்டுத் தூதிபாடுங் 
   காட்சிநிகழ் பிரமநகர்ப் பெருமானே (5)

விளக்கம் 

தைமாதப் பூசத்திற் சந்திரனின் 
  தண்கிரணம் சிந்தும் நள்ளிரவு அதனில்

தைமாதப் பூசத்தில் சந்திரனின் குளிர்ந்த
ஒளிக்கதிர் சிந்தக்கூடிய பௌர்ணமியில்

செய்யாற்றில் பலபதியில் இருந்துவரும்
  தெய்வங்கள் சூந்திருக்கப் பிரமீசன்

சேய்யாற்றைச் சுற்றியுள்ள 18க்கும் மேற்பட்ட 
ஊர்களில் இருந்துவரும்  தெய்வங்கள்
சுற்றி வட்ட வடிவில் சூழ்ந்திருக்க, 

தையலுடன் விடையேறி வர; மேள
   தாளமிட்டு வெடிவெடிக்க ; யாவருமே

பட்டுமையாளுடன் பிரமீசப் பெருமான்
நந்தி வாகனத்தில் வர, மேள தாளம் சிவபூத
கண வாத்தியங்கள் முழங்க  , வெடிவெடிக்க

கைக்கூப்பி வணக்கமிட்டுத்  தூதிபாடும் 
   காட்சிநிகழ் பிரமநகர்ப் பெருமானே

இதைக் கண்ட யாவருமே கைக்கூப்பி வணக்கமிட்டுத் துதிபாட
 அனைவருக்கும் திருக்காட்சியை அளிக்கும் நிகழ்ச்சி
 நடைபெரும் பிரமநகரில் உள்ள  பிரமீசப் பெருமானே 


பிற்குறிப்பு

பிரமநகர் ஆற்றுத் திருவிழாவைக்காண



தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Nov 26, 2023, 3:09:48 AM11/26/23
to சந்தவசந்தம்
அருள்மிகு பட்டுவதனாம்பிகை சமேத       
     பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில் 
      பிரமநகர் என்னும் பெருநகர்த்   
                2.6 தெய்வப்பதிகம் 

அறுசீர் கழிநெடிலடி ஆசிரியர் விருத்தம்
          (காய் காய் காய் அரையடிக்கு )

குட்டிவழி பட்டவருக் கருள்புரிந்த
   குஞ்சரமா முகத்தவனைப் பெற்றவரே
ட்டுமைக்குப் பாகமருள் பெம்மானே  
   பனைகாய்க்கப் பாடியவற் கருளியவா
பிட்டுக்கு மண்சுமந்து பாண்டியனால்
  பிரம்படியைப் பட்டவனே பிரமீசா
ட்டவிழும் மலர்ச்சோலை நிறைந்திருக்கும்
   மதில்சூழ்ந்த பிரமநகர்ப் பெருமானே (6)


விளக்கம்

குட்டி வழிபட்டவருக்கு அருள்புரிந்த
   குஞ்சரமா முகத்து அவனைப் பெற்றவரே

தலையில் குட்டி வழிபடும் பக்தர்களுக்கு
அருள்புரிகின்ற சிறந்த யானை முகம்
உடைய விநாயகரைப் பெற்ற சிவனே

பட்டுமைக்குப் பாகம் அருள் பெம்மானே  
   பனைகாய்க்கப் பாடியவற்கு அருளியவா

பட்டுவதனாம்பிகையான உமாதேவிக்கு இடபாகம் அருளிய பெருமானே!

திருஞானசம்பந்தர் , திருவோத்தூரில் ஆண் பனைகள் 
பெண் பனைகளான மாற , பதிகம் பாட அவருக்கு அருளிய சிவபெருமானே

திருஞானசம்பந்தர்  'பூத்தேர்ந்தாயன' என்று துவங்கும் 
திருப்பதிகத்தினால் போற்றித் துதித்து விண்ணப்பிக்கின்றார். 
திருக்கடைகாப்புப் பாடலில் 'குரும்பை ஆண்பனை ஈன்குலை ஓத்தூர்' என்று
 துவங்கிய மறுகணமே, அங்கிருந்த ஆண்பனைகள் யாவும் திருவருளால்,
 நிறைந்த குலைகளையுடைய பெண் பனைகளாக மாற, யாவரும் 
அதிசயித்துக் காழிப் பிள்ளையாரின் திருவடியினைப் போற்றிப் பணிந்து இன்புறுகின்றனர். 

குரும்பை ஆண்பனை ஈன்குலை ஓத்தூர்
அரும்பு கொன்றை அடிகளைப்
பெரும் புகலியுள் ஞானசம்பந்தன் சொல்
விரும்புவார் வினை வீடே.

மேலும்  இக்கருத்தை அருணகிரிநாதர்
திருப்புகழில்

பவமாய்த் தாணது வாகும் 
     பனைகாய்த் தேமண நாறும்
     பழமாய்ப் பார்மிசை வீழும் ...... படிவேதம்
     படியாப் பாதகர் பாயன் 
      றியுடாப் பேதைகள் கேசம்
     பறிகோப் பாளிகள் யாருங் ...... கழுவேறச்
சிவமாய்த் தேனமுதூறுந் 
     திருவாக் காலொளி சேர்வெண்
     டிருநீற் றாலம ராடுஞ் ...... சிறியோனே
     செழுநீர்ச் சேய்நதி யாரங் 
     கொழியாக் கோமளம் வீசுந்
     திருவோத் தூர்தனில் மேவும் ...... பெருமாளே.
என்று பாடியுள்ளார்.

பிட்டுக்கு மண்சுமந்து பாண்டியனால்
  பிரம்படியைப் பட்டவனே பிரமீசா

வந்தி என்னும் மூதாட்டி தந்த உதிர்ந்த பிட்டமுதைக்
கூலியாகப் பெற்று , அவளின் பாங்கு கரையை
அடைத்த போது , பாண்டியனால் பிரம்படிபட்ட
பிரமீசப் பெருமானே 

மட்டவிழும் மலர்ச்சோலை நிறைந்திருக்கும்
   மதில்சூழ்ந்த பிரமநகர்ப் பெருமானே

தேன் துளிர்க்கும் புது மலர்களைக் கொண்ட
சோலைகள் நிறைந்த உயர்ந்த மதில் சூழ்ந்த
பிரமநகரில் வீற்றிருக்கும் பெருமையில் சிறந்தவரே.



தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Nov 27, 2023, 2:51:10 AM11/27/23
to சந்தவசந்தம்
அனைவருக்கும் வணக்கம் 
/*கைக்கூப்பி வணக்கமிட்டுத் துதிபாடும் 
   காட்சிநிகழ் பிரமநகர்ப் பெருமானே /
என்பதை
/கைக்கூப்பி வணக்கமிட்டக் கண்கொள்ளாக் 
   காட்சிநிகழ் பிரமநகர்ப் பெருமானே/

தைப்பூச ஆற்றுத் திருவிழாவானது 
வெகு சிறப்பாக நடைபெறும் என்பதால் 
துதிபாடும் என்பதை கண்கொள்ளாக் என்று
மாற்றிள்ளேன். 

அருள்மிகு பட்டுவதனாம்பிகை சமேத       
     பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில் 
      பிரமநகர் என்னும் பெருநகர்த்   
                2.5 தெய்வப்பதிகம் 

அறுசீர் கழிநெடிலடி ஆசிரியர் விருத்தம்
          (காய் காய் காய் அரையடிக்கு )

தைமாதப் பூசத்திற் சந்திரனின் 
  தண்கிரணஞ் சிந்தும்நள் ளிரவதனிற்
செய்யாற்றிற் பலபதியி லிருந்துவருந்
  தெய்வங்கள் சூந்திருக்கப் பிரமீசன்
தையலுடன் விடையேறி வரமேள
   தாளமிட்டு வெடிவெடிக்க யாவருமே
கைக்கூப்பி வணக்கமிட்டக் கண்கொள்ளாக் 
   காட்சிநிகழ் பிரமநகர்ப் பெருமானே (5)

தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Nov 28, 2023, 12:43:13 AM11/28/23
to சந்தவசந்தம்
அருள்மிகு பட்டுவதனாம்பிகை சமேத       
     பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில் 
      பிரமநகர் என்னும் பெருநகர்த்   
                2.7 தெய்வப்பதிகம் 

அறுசீர் கழிநெடிலடி ஆசிரியர் விருத்தம்
          (காய் காய் காய் அரையடிக்கு )

பானுயிர் காத்திடவே திருத்தாளால்
   பாசத்தை விட்டவனை யுதைத்தவரே
மாவன்றன் கண்மலரா லர்ச்சிக்க  
   மகிழ்ந்தாழி யளித்தவரே பிரமீசா
மதை யுண்டமுதை யருளியவா
  ஆண்டவரே நால்வர்க்கு மௌனமொழி
மரத்த டியமர்ந்து கைகாட்டி
   அன்றுரைத்த பிரமநகர்ப் பெருமானே (7)

விளக்கம்

பாலன் உயிர் காத்திடவே திருத்தாளால்
   பாசத்தை விட்டவனை உதைத்தவரே

பாலன் ஆன மார்க்கண்டேயரின் மீது பாசக்கயிற்றை 
விட்ட காலனைக் காலால் உதைத்து  பாலனின் உயிரைக் காத்தவரே

மாலவன்‌தன் கண்மலரால் அர்ச்சிக்க  
   மகிழ்ந்து ஆழி அளித்தவரே பிரமீசா

திருமால் தன் கண் மலர் கொண்டு சிவ பூசை 
செய்ய, அவருக்கு சக்கரம் வழங்கிய பிரமீசா 

ஆலம் அதை உண்டு அமுதை அருளியவா
  
ஆலகால விஷம் உண்டு, தேவர்களுக்கு அமிர்தம் அருளியவரே 

   ஆண்டவரே நால்வர்க்கு மௌனமொழி
ஆலமரத்து அடி அமர்ந்து கைகாட்டி
   அன்று உரைத்த பிரமநகர்ப் பெருமானே

இறைவா! பிரம்மாவின் புத்திரர்கள் நால்வர். சனகர், சனந்தனர்,
சனாதனர், சனற்குமாரர் என்றும் சனகாதி முனிவர்களும் மௌன 
உபதேசத்தை ஆலமரத்தடியில் அமர்ந்து உரைத்த பிரமநகர்ப் பிரமீசப் பெருமானே 

திருவிளையாடற் புராணம்

கல்லாலின் புடையமர்ந்து நான்மறை 
      ஆறங்கம் முதல்கற்ற கேள்வி 
வல்லார்கள் நால்வர்க்கும் வாகிறந்த 
       பூரணமாய் மறைக்கு அப்பாலாய் 
எல்லாமாய் அல்லதுமாய் இருந்ததனை 
        இந்தபடி இருந்து , காட்டிச் 
சொல்லாமல் சொன்னவரை நினையாமல் 
       நினைந்துபவத் தொடக்கை வெல்வாம் 


தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Nov 28, 2023, 3:42:54 PM11/28/23
to சந்தவசந்தம்
அனைவருக்கும் வணக்கம் 🙏

விருத்தங்களில்  முதலடியில் முதற்சீர் கூவிளங்காய் வந்தால், மற்ற அடியின் முதற்சீர்களும் கூவிளங்காய்  இருக்கவேண்டுமா?
தேமாங்காயாக வரக்கூடாதா? மேலும் முதல் சீரைத் தவிர்த்து மற்ற சீர் களில் , காய் குறிப்பிட்டால் நான்கு காய்களும் மாறிமாறி 
வரலாமா?

மேலும் இவ்விருத்தத்தில் சிறு மாற்றம் 
ஆலமரத் தடியமர்ந்து கைகாட்டி
   அன்றுரைத்த பிரமநகர்ப் பெருமானே
அருள்மிகு பட்டுவதனாம்பிகை சமேத       
     பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில் 
      பிரமநகர் என்னும் பெருநகர்த்   
                2.7 தெய்வப்பதிகம் 

அறுசீர் கழிநெடிலடி ஆசிரியர் விருத்தம்
          (காய் காய் காய் அரையடிக்கு )

பானுயிர் காத்திடவே திருத்தாளால்
   பாசத்தை விட்டவனை யுதைத்தவரே
மாவன்றன் கண்மலரா லர்ச்சிக்க  
   மகிழ்ந்தாழி யளித்தவரே பிரமீசா
மதை யுண்டமுதை யருளியவா
  ஆண்டவரே நால்வர்க்கு மௌனமொழி
/ஆலமரத்த டியமர்ந்து கைகாட்டி
   அன்றுரைத்த பிரமநகர்ப் பெருமானே (7)/


Message has been deleted

தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Nov 29, 2023, 4:16:15 AM11/29/23
to சந்தவசந்தம்

அனைவருக்கும் வணக்கம் 🙏
விருத்தங்களில்  முதலடியில் முதற்சீர் கூவிளங்காய் வந்தால், மற்ற அடியின் முதற்சீர்களும் கூவிளங்காய்  இருக்கவேண்டுமாதேமாங்காயாக வரக்கூடாதா? மேலும் முதல் சீரைத் தவிர்த்து மற்ற சீர் களில் , காய் குறிப்பிட்டால் நான்கு காய்களும் மாறிமாறி வரலாமா?


(விருத்தங்களில் முதற்சீர் எந்த அசையோ, அதே அசையில் மற்ற அடிகளின் முதற்
சீர்களும் இருக்கவேண்டும். மேற்கண்ட விருத்தம் போல், முதலடியில் முதற்சீர்
தேமாங்காயாக வந்தால், மற்ற அடியின் முதற்சீர்களும் தேமாங்காயாக இருக்கவேண்டும் ;
கூவிளங்காய் வரக்கூடாது! )


விருத்தங்களில்  முதலடியில் முதற்சீர் கூவிளங்காய் வந்தால், மற்ற அடியின் முதற்சீர்களும் கூவிளங்காய்  இருக்கவேண்டுமாதேமாங்காயாக வரக்கூடாதா? மேலும் முதல் சீரைத் தவிர்த்து மற்ற சீர் களில் , காய் குறிப்பிட்டால் நான்கு காய்களும் மாறிமாறி வரலாமா?



தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Nov 30, 2023, 3:27:58 AM11/30/23
to சந்தவசந்தம்
அருள்மிகு பட்டுவதனாம்பிகை சமேத       
     பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில் 
      பிரமநகர் என்னும் பெருநகர்த்   
                2.8 தெய்வப்பதிகம் 

அறுசீர் கழிநெடிலடி ஆசிரியர் விருத்தம்
          (காய் காய் காய் அரையடிக்கு )


யிலாய கிரியசைத்த வரக்கனவன் 
    கைகளுமே நெரியவிர லூன்றியவன் 
யிலேறும் மாமணியின் தந்தையவன்
   மாதுமையை மணந்தருளும் மாதேவன்
யிலாய வாத்தியத்தி னிசையெழுப்பிக்
    கலைவல்ல சிவபூத கணம்நாளும்
யிரான பிரமீசன் கழற்போற்றும்
    உள்ளத்தார் வாழ்பிரம புரத்தரனே (8)

 விளக்கம்

கயிலாய கிரியசைத்த அரக்கனவன் 
    கைகளுமே நெரியவிரல் ஊன்றியவன் 

கயிலாய கிரியை அசைத்த இராவணனின்
கைகள் நெரிய கால் விரல் ஊன்றிய ஈசன் 

மயிலேறும் மாமணியின் தந்தையவன்
   மாது உமையை மணந்து அருளும் மாதேவன்

மயிலேறும்  மாணிக்கம் போல ஒளி வீசும்
முருகப் பெருமானின் தந்தையே
உமாதேவியை மணந்து அருள்புரியும்
மகாதேவனே

கயிலாய வாத்தியத்தின் இசை எழுப்பிக்
    கலைவல்ல சிவபூத கணம்நாளும்

ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர்  சிவபூத கண
 திருக்கயிலாய வாத்தியக் குழு சிறப்பாக
நாளும் 

உயிரான பிரமீசன் கழல்போற்றும்
    உள்ளத்தார் வாழ்பிரம புரத்தரனே

உயிருக்கு உயிரான பிரமீசப் பெருமானின்
திருவடியைப் போற்றும் உள்ளம் கொண்ட
மக்கள் வாழும் பிரமபுரத்தில் உள்ள சிவனே

பிற்குறிப்பு 

ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் சிவபூத கண திருக்கயிலாய
 வாத்தியக் குழுவைக் காண

தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Dec 1, 2023, 1:35:02 AM12/1/23
to சந்தவசந்தம்
அருள்மிகு பட்டுவதனாம்பிகை சமேத       
     பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில் 
      பிரமநகர் என்னும் பெருநகர்த்   
                2.9 தெய்வப்பதிகம் 

அறுசீர் கழிநெடிலடி ஆசிரியர் விருத்தம்
          (காய் காய் காய் அரையடிக்கு )


உலகேத்தும் வுத்தமனு மலரிமேவும்
     உலகனைத்தும் படைத்தவனு மடிமுடியைப்
மாக வாராய்ந்து மறியாத 
   பரம்பொருளே சோதியனே பிரமீசா
ந்தோறு முழவாரப் பணிசெய்து
  தவமுறையில் வாழ்ந்துவரும் பக்தர்களின்
குங்காக்குஞ் சங்கரனே சோலைகளிற்
    குயிற்கூவும் பிரமநகர்ப் பெருமானே (9)

விளக்கம் 
உலகேத்தும் உத்தமனும் மலரிமேவும்
 உலகனைத்தும் படைத்தவனும் அடிமுடியைப்

உலகே போற்றும் திருமாலும், தாமரை மலர் மீது
அமர்ந்த உலகைப் படைக்கும் பிரமனும்
சிவனின் அடிமுடியை

பலமாக ஆராய்ந்தும் அறியாத 
   பரம்பொருளே சோதியனே பிரமீசா

நன்றாக ஆராய்ந்தும் அவர்களால் அறிய
முடியாத பரம்பொருளே சோதியனே பிரமீசா 

தலந்தோறும் உழவாரப் பணிசெய்து
  தவமுறையில் வாழ்ந்துவரும் பக்தர்களின்

உழவார பணி  எல்லா திருக்கோவில்களிலும் 
தவமாகச் செய்து வாழ்ந்துவரும் பக்தர்களின்

குலங்காக்கும் சங்கரனே சோலைகளில்
    குயில்கூவும் பிரமநகர்ப் பெருமானே

குலத்தைக் காக்கும் சங்கரா குயில்கூவும்
 சோலைகள் சூழ்ந்த பிரமநகரில் வீற்றிருக்கும்
பெருமையில் சிறந்த சிவனே

தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Dec 2, 2023, 4:08:14 AM12/2/23
to சந்தவசந்தம்
அருள்மிகு பட்டுவதனாம்பிகை சமேத       
     பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில் 
      பிரமநகர் என்னும் பெருநகர்த்   
                2.10 தெய்வப்பதிகம் 

அறுசீர் கழிநெடிலடி ஆசிரியர் விருத்தம்
          (காய் காய் காய் அரையடிக்கு )

ண்ணிருந்துங் திருவுருவைக் காணார்க்கும்
    காலிருந்துங் கோவிலிற்கே செல்லார்க்கும்
ண்ணிசையைக் கேளாத செவியர்க்கும் 
    பணமிருந்து திருப்பணிக்கே யீயார்க்கும்
ண்ணுதலான் தனைநினையா மனத்தர்க்கும்
    காணறியா முழுமுதலே பிரமீசா
ண்டிணங்கள் தேனுண்டு பாட்டிசைக்கும் 
    வளமான பிரமநகர்ப் பெருமானே (10)

விளக்கம் 

கண்இருந்தும் திருவுருவைக் காணார்க்கும்
 கால் இருந்துங் கோவிலிற்கே செல்லார்க்கும்

கண்கள் இருந்தும் இறைவனைப் பார்க்காமல்
இருப்பவர்களாலும், கால்கள் இருந்தும் திருக்கோவில் செல்லாமல்
 இருப்பவர்களாலும்

பண்ணிசையைக் கேளாத செவியர்க்கும் 
    பணம்இருந்து திருப்பணிக்கே ஈயார்க்கும்

பன்னிரு திருமுறை பண்ணிசையைக்
கேட்காதவர்களாலும்,  நிறைய செல்வம் இருந்தும் திருக்கோவிலின் 
திருப்பணிக்கு நன்கொடை வளங்காதவர்களாலும்

கண்ணுதலான் தனைநினையா மனத்தர்க்கும்
    காண அறியா முழுமுதலே பிரமீசா
வண்டு இணங்கள் தேன் உண்டு பாட்டு இசைக்கும் 
    வளமான பிரமநகர்ப் பெருமானே 

நெற்றிக்கண் உடைய சிவபெருமானை நினைக்காதவர்களாலும் , 
காணபதற்கு அறிய இயலாத முழுமுதற் கடவுளான பிரமீசா
வண்டிணங்கள் தேனுண்டு ரீங்காரம் செய்யும்வளமான பிரமநகரில்
 வீற்றிருக்கும் பெருமையில் சிறந்த சிவனே. 



தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Dec 3, 2023, 3:53:54 AM12/3/23
to சந்தவசந்தம்
அருள்மிகு பட்டுவதனாம்பிகை சமேத       
     பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில் 
      பிரமநகர் என்னும் பெருநகர்த்   
                2.11 தெய்வப்பதிகம் 

அறுசீர் கழிநெடிலடி ஆசிரியர் விருத்தம்
          (காய் காய் காய் அரையடிக்கு )

கியநற் பிரமநகர் தனையடைந்தே
   அருகமைந்த சேயாற்றுப் புனல்மூழ்கி
லுடைய பிரமீசப் பெருமானைத்
   தாள்பணிந்து தமிழாலே போற்றுமவர்
வினைகள் முற்றாக நீங்கிவிடும் 
   பரிதிமுதல் நவகோளும் நற்பலனை
ங்கிடுமே பதினாறு வகையான
   வளம்பெற்று வாழ்வாங்கு வாழ்வாரே (11)

விளக்கம் 

அழகியநற் பிரமநகர் தனை அடைந்தே
   அருகு அமைந்த சேய் ஆற்றுப் புனல்மூழ்கி

அழகான நல்ல பிரமநகர் தனை அடைந்தே
அதன் அருகே பாயும் சேய் நதியில் நீராடி  

தழலுடைய பிரமீசப் பெருமானைத்
   தாள்பணிந்து தமிழாலே போற்றும் அவர்

நெருப்பை கையில் ஏந்தும் பிரமீசப் பெருமானின் திருவடி பணிந்து 
வணங்கித் தமிழில் திருமுறை பாடி போற்றும் அவரின் 

பழவினைகள் முற்றாக நீங்கிவிடும் 
   பரிதிமுதல் நவகோளும் நற்பலனை

முன் செய்த வினைகள் யாவும் முழுவதும்
நீங்கிவிடும் சூரியன், சந்திரன், செவ்வாய், புதன் குரு, சுக்கிரன், சனி, 
இராகு கேது என்ற நவக்கிரகங்கள் ஒன்பதும் நற்பலனை வழங்கும் 

வழங்கிடுமே பதினாறு வகையான
   வளம்பெற்று வாழ்வாங்கு வாழ்வாரே

பதினாறும் பெற்று, பெருவாழ்வு வாழ்க' என்று வாழ்த்துவது தமிழர் மரபு.

குறிப்பாக, திருமணத்தின் போது மணமக்களை, பெரியவர்கள் இங்ஙனம் வாழ்த்துவர்.

மேலும் அபிராமி அந்தாதி பதிகப் பாடலொன்று இந்தப் பதினாறு செல்வங்கள்
 என்னென்ன என்பதை அழகாகக் கூறுகின்றது இப்படி:-

சகல செல்வங்களும் தரும் இமய கிரி ராச தனயை!
      மா தேவி! நின்னைச் சத்யமாய், நித்யம் உள்ளத்தில்
      துதிக்கும் உத்தமருக்கு இரங்கி, மிகவும்
அகிலமதில் நோய் இன்மை, கல்வி, தன தானியம்,
      அழகு, புகழ், பெருமை, இளமை, அறிவு, சந்தானம், வலி,
      துணிவு, வாழ் நாள், வெற்றி, ஆகு நல்லூழ், நுகர்ச்சி
தொகை தரும் பதினாறு பேறும் தந்து அருளி, நீ சுக ஆனந்த
     வாழ்வு அளிப்பாய்; சுகிர்த குண சாலி! பரி பாலி! அநு கூலி!
     திரி சூலி! மங்கள விசாலி!
மகவு நான், நீ தாய், அளிக்க ஒணாதோ? மகிமை வளர் திருக்
     கடவூரில் வாழ் வாமி! சுப நேமி! புகழ் நாமி!
     சிவ சாமிமகிழ் வாமி! அபிராமி உமையே! (11)
-(அபிராமி அந்தாதி பதிகம்)

1.உடலில் நோயின்மை, 2.நல்ல கல்வி, 3.தீதற்ற செல்வம், 4.நிறைந்த தானியம், 5.ஒப்பற்ற அழகு, 6.அழியாப் புகழ், 7.சிறந்த பெருமை, 8.சீரான இளமை, 9.நுண்ணிய அறிவு, 10.குழந்தைச் செல்வம், 11.நல்ல வலிமை, 12.மனத்தில் துணிவு, 13.நீண்ட வாழ்நாள்(ஆயுள்), 14.எடுத்தக் காரியத்தில் வெற்றி, 15.நல்ல ஊழ்(விதி), 16.இன்ப நுகர்ச்சி

Anand Ramanujam

unread,
Dec 3, 2023, 9:57:38 AM12/3/23
to santhav...@googlegroups.com
 மிக அருமை!

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Dec 3, 2023, 11:43:05 PM12/3/23
to சந்தவசந்தம்
அருள்மிகு கண்ணபுரநாயகி  சமேத நீலமேகப்பெருமாள் 
     ( சௌரிராஜப்பெருமாள் ) திருக்கோயில்,  
   திருக்கண்ணபுரம் திருப்பள்ளியெழுச்சி 3.1

எண்சீர் கழிநெடிலடி ஆசிரியர் விருத்தம்
  ( விளம் மா விளம் மா அரையடிக்கு )

திருமகள் கணவா திருவடி சரணம்
      தினகர னவனின் தேரினை யந்த
ருணனு மோட்டிக் கிழக்கிலு திக்க
      அருள்நிறை யாழ்வார்ப் பாசுர மதனைத்
தெருதொறும் பாடு மடியவர் மிக்க      
      சீர்திருக் கண்ண புரமுறை யரசே
ருகடல் மிசையி லறிதுயில் கொண்ட
       உத்தமா பள்ளி யெழுந்தரு ளாயே. (1)

விளக்கம் 

திருமகள் கணவா திருவடி சரணம்
      தினகரன் அவனின் தேரினை அந்த

இலக்குமி தேவியின் கணவரே திருமாலே
நின் திருவடி சரணம் !  சூரியனின் தேரை

அருணனும் ஓட்டிக் கிழக்கில் உதிக்க
    அருள்நிறை ஆழ்வார்ப் பாசுரம் அதனைத்

அருணன பகவான் ஓட்டிக் கொண்டு வந்து கிழக்கில் உதிக்க,
 அருள் நிறைந்த பன்னிரு ஆழ்வார்களின் நாலாயிர திவ்விய பிரபந்தம்
ஆன பாசுரங்களை,

தெருதொறும் பாடும் அடியவர் மிக்க      
      சீர்திருக் கண்ணபுரம் உறை அரசே

தெய்வப்பாசுரங்களைத் தெருதொறும் பாடும் அடியவர்கள் 
மிக்க புகழ்பெற்ற திருக்கண்ணபுரத்தில் வீற்றிருக்கும் சௌரிராசா !

ஒருகடல் மிசையில் அறிதுயில் கொண்ட
       உத்தமா பள்ளி எழுந்தருளாயே. 

ஒப்பற்ற திருப்பாற்கடல் மீது பள்ளி கொண்ட
யோக நித்திரையில் இருக்கும்  உத்தமரே
பள்ளி எழுந்தருள்வாயாக.

தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Dec 4, 2023, 11:18:03 PM12/4/23
to சந்தவசந்தம்
   அருள்மிகு கண்ணபுரநாயகி 
  சமேத நீலமேகப்பெருமாள் 
( சௌரிராஜப்பெருமாள் ) திருக்கோயில், 
திருக்கண்ணபுரம் திருப்பள்ளியெழுச்சி 3.2

எண்சீர் கழிநெடிலடி ஆசிரியர் விருத்தம்
  ( விளம் மா விளம் மா அரையடிக்கு )

குரனின் சேவல் கொக்கரித் திடவே
   குணக்கிணில் பரிதி யொளியுட னுதிக்க
லமும் விரிய வாம்பலுங் கூம்பக்
   கடிமலர் பூத்த நந்தவ னத்தில்   
கம வென்றே வீசிட வாசம் 
   கழனிசூழ் கண்ண புரமுறை யரசே
வரி யென்று நாரதர் போற்றும்
   நாதனே பள்ளி யெழுந்தரு ளாயே. (2)

விளக்கம் 

குமரனின் சேவல் கொக்கரித் திடவே
   குணக்கிணில் பரிதி ஒளியுடன் உதிக்க 

முருகப் பெருமானின் கொடியில் உள்ள
சேவல் கொக்கரக்கோ எனக் கொக்கரித் திட
கிழக்கில் சூரியன் பிரகாசமாக உதிக்க 

கமலமும் விரிய ஆம்பலும் கூம்பக்
   கடிமலர் பூத்த நந்தவனத்தில்   
கமகம  என்றே வீசிட வாசம் 
   கழனிசூழ் கண்ணபுரம் உறை அரசே
காலையில் தாமரை மலர,  அல்லி மலர்  
இதழ்களை மூடிக் கொள்ள, மேலும் 
நந்தவனத்தில் புதிய மலர்கள்  பூத்துக் குலுங்க,
 அதனால் கமகம என வாசனை வீச,
வயல்கள் சூழ்ந்த திருக்கண்ணபுரத்தில் 
வீற்றிருக்கும் சௌவுரி ராசா

நமவரி என்று நாரதர் போற்றும்
   நாதனே பள்ளி எழுந்தரு ளாயே.

ஓம் நமோ நாராயணா  ஓம் நமோ நாராயணா 
என்று நாரதர் போற்றும் நாதனே பள்ளி எழுந்தருள்வாயாக .


தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Dec 6, 2023, 12:42:49 AM12/6/23
to சந்தவசந்தம்
அருள்மிகு கண்ணபுரநாயகி 
  சமேத நீலமேகப்பெருமாள் 
( சௌரிராஜப்பெருமாள் ) திருக்கோயில், 
திருக்கண்ணபுரம் திருப்பள்ளியெழுச்சி 3.3

எண்சீர் கழிநெடிலடி ஆசிரியர் விருத்தம்
  ( விளம் மா விளம் மா அரையடிக்கு)

வெயிலவன் கதிர்கள் சோலையிற் புகுந்து
    மென்பனி நீரை யுண்டுக ளிக்கக்
குயில்களுங் கூவக் கிளிகளும் பேசக்
   கோபுரம் மீதிற் புறவங் குனுக
யில்களு மகவப் பசுக்களு மழைக்க
   மறைபுகழ் கண்ண புரமுறை யரசே 
யிலதன் பீலி சூடிய நீல
 வண்ணனே பள்ளி யெழுந்தரு ளாயே.

விளக்கம் 
வெயிலவன் கதிர்கள் சோலையில்  புகுந்து
    மென்பனி நீரை யுண்டுக ளிக்க 

சூரியனின் கதிர்கள் சோலையில் புகுந்து
அங்குள்ள செடியின் பூக்கள், இலைகளில்
படர்ந்துள்ள பனிநீரை வற்றச்செய்ய

குயில்களுங் கூவக் கிளிகளும் பேசக்
   கோபுரம் மீதில் புறவம் குனுக

குயில்கள் கூவ , கிளிகளும் பேச
கோபுரத்தில் மீது வசிக்கும் புறாக்கள் குனுக

மயில்களும் அகவ பசுக்களும் அழைக்க
   மறைபுகழ் கண்ண புரம் உறை யரசே 

மயில்களும் அகவ , பசுக்கள் அழைக்க
இவ்வாறான பல விதமான ஒலி மிக்க
இயற்கை எழில் கொஞ்சும் 
வேதங்கள் புகழும் திருக்கண்ணபுரத்தில் வீற்றிருக்கும் சௌவுரி ராசா 

மயில் அதன் பீலி சூடிய நீல
  வண்ணனே பள்ளி எழுந்தரு ளாயே.

மயில் தோகையைச் சூடிய நீல வண்ணமே

தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Dec 6, 2023, 10:39:50 PM12/6/23
to சந்தவசந்தம்
அருள்மிகு கண்ணபுரநாயகி 
  சமேத நீலமேகப்பெருமாள் 
( சௌரிராஜப்பெருமாள் ) திருக்கோயில், 
திருக்கண்ணபுரம் திருப்பள்ளியெழுச்சி 3.4

எண்சீர் கழிநெடிலடி ஆசிரியர் விருத்தம்
  ( விளம் மா விளம் மா அரையடிக்கு)

நித்யபுட் கரணி நீரினில் நித்தம்
     நீந்தியே வாழும் மீன்களுந் துள்ள
மித்திரன் கதிர்கள் குளத்தினில் பட்டே  
     மினுமினு வென்றே மின்னிட மலரில்
நித்திரை யகன்ற வண்டினம் முரல 
    நீர்த்திருக் கண்ண புரமுறை யரசே
நித்திரை கொண்ட சௌவுரி ராசா
    நீலனே பள்ளி யெழுந்தரு ளாயே. (4)

விளக்கம்

நித்யபுட் கரணி நீரினில் நித்தம்
     நீந்தியே வாழும் மீன்களும் துள்ள

திருக்கண்ணபுரத்தில் உள்ள நித்திய புஷ்கரணியில் 
எப்போதும் நீந்தி வாழும் மீன்களும் துள்ள 

மித்திரன் கதிர்கள் குளத்தினில் பட்டே  
     மினுமினு என்றே மின்னிட மலரில்

சூரியனின் கதிர்கள் குளத்தினில் பட்டு
மினுமினு என்று மின்னிட  மலரில்

நித்திரை அகன்ற வண்டினம் முரல 
    நீர்த்திருக்கண்ணபுரம் உறை அரசே

மலரில் நித்திரை அகன்ற தேனிகள் முரல
நீர் வளம் மிக்க திருக்கண்ணபுரத்தில் வீற்றிருக்கும் சௌவுரி ராசா 

நித்திரை கொண்ட சௌவுரி ராசா
    நீலனே பள்ளி யெழுந்தரு ளாயே.

நித்திரையில் இருக்கும் சௌவுரிராஜனே
நீலமேகப் பெருமாளே பள்ளி எழுந்தருள்வாயாக 




தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Dec 7, 2023, 5:17:33 PM12/7/23
to சந்தவசந்தம்
அருள்மிகு கண்ணபுரநாயகி 
  சமேத நீலமேகப்பெருமாள் 
( சௌரிராஜப்பெருமாள் ) திருக்கோயில், 
திருக்கண்ணபுரம் திருப்பள்ளியெழுச்சி 3.5

எண்சீர் கழிநெடிலடி ஆசிரியர் விருத்தம்
  ( விளம் மா விளம் மா அரையடிக்கு)

மார்கழித் திங்கள் பாரசும் தந்த
   மதிநிறை பாவை சூடிகொ டுத்த
சீர்மிகு வாச மாலையை யேற்றே
   செல்வியை மணந்த மரதக வண்ணா
நீர்வளம் மிக்க நெல்வயல் உழவர்
   நிறைதிரு கண்ண புரமுறை யரசே 
மார்பினில் துளசி மாலையை யணிந்த 
   மன்னவா பள்ளி யெழுந்தரு ளாயே. (5)

விளக்கம் 


மார்கழித் திங்கள் பாரசும் தந்த
   மதிநிறை பாவை சூடி கொடுத்த

"மார்கழி திங்கள்" என்னும் திருப்பாவை
அருளிய அறிவு நிறைந்த ஆண்டாள் சூடி கலைந்த 

சீர்மிகு வாச மாலையை ஏற்றே
   செல்வியை மணந்த மரதக வண்ணா

புகழ்மிக்க வாசனை மிகுந்த ஏற்றுக்கொண்டு
கோதையை மணந்த மரதக வண்ணனே
 

நீர்வளம் மிக்க நெல்வயல் உழவர்
   நிறை திருகண்ணபுரம் உறை அரசே 

நீர்வளம் மிக்கதும் நெல்வயல் உழவர்
நிறைந்த திருக்கண்ணபுரம் வீற்றிருக்கும் 
சௌவுரி ராசா 

மார்பினில் துளசி மாலையை அணிந்த 
   மன்னவா பள்ளி எழுந்தரு ளாயே

திருமார்பினில் துளசி மாலையை அணிந்த
மன்னவரே பள்ளி எழுந்தருள்வாயாக 

தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Dec 8, 2023, 8:58:13 PM12/8/23
to சந்தவசந்தம்
அருள்மிகு கண்ணபுரநாயகி 
  சமேத நீலமேகப்பெருமாள் 
( சௌரிராஜப்பெருமாள் ) திருக்கோயில், 
திருக்கண்ணபுரம் திருப்பள்ளியெழுச்சி 3.6

எண்சீர் கழிநெடிலடி ஆசிரியர் விருத்தம்
  ( விளம் மா விளம் மா அரையடிக்கு)

லைமகள் ஈசன் கணபதி வொருபால்
   மயிலவன் வள்ளி சசிமக ளொருபால்
லைமகள் பிரமன் இந்திர னொருபால்
   கணமெனத் திரண்ட தேவரு மொருபால்
லைமகள் என்றும் நின்றருள் புரியும் 
   அருட்திருக் கண்ண புரமுறை யரசே
லைகடல் கடைந்தே அமுதினை அளித்த
   அன்னையே பள்ளி யெழுந்தரு ளாயே.

விளக்கம் 

மலைமகள் ஈசன் கணபதி ஒருபால்
   மயிலவன் வள்ளி சசிமகள் ஒருபால்

விநாயகர் சிவன் பார்வதி வள்ளி தெய்வானையுடன் முருகன் ஒருபுறம் இருக்க 

கலைமகள் பிரமன் இந்திரன் ஒருபால்
   கணமெனத் திரண்ட தேவரும் ஒருபால்

சரஸ்வதி, பிரமன், இந்திரன் , முப்பது முக்கோடி தேவர்கள் ஒரு புறம் இருக்க 

அலைமகள் என்றும் நின்றருள் புரியும் 
   அருள் திருக்கண்ணபுரம் உறை அரசே

இலக்குமி தேவி என்றும் நிலைத்திருக்கும்
அருள்நிறைந்த திருக்கண்ணபுரத்தில் வீற்றிருக்கும் சௌவுரி ராசா 

அலைகடல் கடைந்தே அமுதினை அளித்த
   அன்னையே பள்ளி எழுந்தரு ளாயே

அலைவீசும் கடைந்து,  அமுதத்தை அளித்த
மோகினி அவதாரம் எடுத்த அன்னையே

தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Dec 9, 2023, 7:25:18 PM12/9/23
to சந்தவசந்தம்
அருள்மிகு கண்ணபுரநாயகி 
  சமேத நீலமேகப்பெருமாள் 
( சௌரிராஜப்பெருமாள் ) திருக்கோயில், 
திருக்கண்ணபுரம் திருப்பள்ளியெழுச்சி 3.7

எண்சீர் கழிநெடிலடி ஆசிரியர் விருத்தம்
  ( விளம் மா விளம் மா அரையடிக்கு)

ழையினை யூதி மாடுகள் மேய்த்துக்
    கனமழை பொழியக் குன்றினைத் தூக்கிப்
பிழைபல பொறுத்து கம்சனைக் கொன்று
    போரினில் தேரை யோட்டிய போது
விழைவுடன் கீதை கூறிய கண்ணா 
   விழாமலி கண்ண புரமுறை யரசே 
ழைத்திட யானை யதற்கருள் புரியும்
     ஐயனே பள்ளியெழுந்தரு ளாயே. (7)

விளக்கம்

கழையினை யூதி மாடுகள் மேய்த்துக்
   கனமழை பொழியக் குன்றினைத் தூக்கிப்

புல்லாங்குழல் ஊதி மாடுகளை மேயத்துக்,
கனமழை பொழியக் குன்றினைத் தூக்கி 

பிழைபல பொறுத்து கம்சனைக் கொன்று
    போரினில் தேரை ஓட்டிய போது

100 பிழைகள் பொறுத்து பின் கம்சனைக் கொன்று, போரில் அருச்சுனனுக்குத் தேரை
ஒட்டிய போது


விழைவுடன் கீதை கூறிய கண்ணா 
   விழாமலி கண்ணபுரம் உறை யரசே 

விருப்பத்துடன் கீதை கூறிய கண்ணா
விழா நிறைய நடக்கும் திருக்கண்ணபுரத்தில்
வீற்றிருக்கும் சௌவுரி ராசா 

அழைத்திட யானை அதற்கருள் புரியும்
     ஐயனே பள்ளி எழுந்தரு ளாயே.

ஆதி மூலமே என்ற அழைத்த யானைக்கு
அருள்புரியும் ஐயனே பள்ளி எழுந்தருள்வாயாக 

தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Dec 10, 2023, 10:28:06 PM12/10/23
to சந்தவசந்தம்
அருள்மிகு கண்ணபுரநாயகி 
  சமேத நீலமேகப்பெருமாள் 
( சௌரிராஜப்பெருமாள் ) திருக்கோயில், 
திருக்கண்ணபுரம் திருப்பள்ளியெழுச்சி 3.8

எண்சீர் கழிநெடிலடி ஆசிரியர் விருத்தம்
  ( விளம் மா விளம் மா அரையடிக்கு)

ரதன் மகனா யவனியி லுதித்து
    தவமுனி யுடனே மிதிலையை யடைந்து 
விசையுடன் வில்லை மொளுக்கென வொடித்து
    விரைமலர் பொழிய மாதினை மணந்து
முக னழிய வம்புவி டுத்தாய்
   தருநிறை கண்ண புரமுறை யரசே 
சைந்திடு மரவி லறிதுயல் கொண்ட
   அண்ணலே பள்ளி யெழுந்தரு ளாயே.

விளக்கம் 

தசரதன் மகனாய் அவனியில் உதித்து
    தவமுனி உடனே மிதிலையை அடைந்து 

தசரதனின் மகனாக பூமியில் பிறந்து,
விஸ்வாமித்திரர் முனிவர் உடன் மிதிலை
மாநகருக்குச் சென்று 

விசையுடன் வில்லை மொளுக்கென ஒடிக்க
    விரைமலர் பொழிய மாதினை மணந்து

ஆற்றலுடன் சிவதனுசு ஆகிய வில் மொளுக்கென்று சத்தம் கேட்கும்படி ஒடிக்க,
தேவர்கள் மலர்மழை பொழிய சீதையைத் திருமணம் புரிந்து 

சிலைமொ ளுக்கென
     முறிபட மிதிலை யிற்சந கமனருள்
     திருவி னைப்புண ரரிதிரு  மருகோனே
 - அருணகிரிநாதர் (திருவிடைக்கழித் திருப்புகழ்)

தசமுகன் அழிய அம்புவி டுத்தாய்
   தருநிறை கண்ண புரமுறை அரசே 

இராவணன் அழிய அம்பினை விடுத்தார்
மரங்கள் நிறைந்த திருக்கண்ணபுரத்தில் வீற்றிருக்கும் சௌவுரி ராசா 

அசைந்திடும் அரவில் அறிதுயல் கொண்ட
   அண்ணலே பள்ளி எழுந்தரு ளாயே.

அசையும் ஆதிசேஷன் பாம்பின் மீது  யோக நித்திரையில் இருக்கும்
 அண்ணலே பள்ளி எழுந்தருள்வாயாக 


தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Dec 11, 2023, 8:51:32 PM12/11/23
to சந்தவசந்தம்
அருள்மிகு கண்ணபுரநாயகி 
  சமேத நீலமேகப்பெருமாள் 
( சௌரிராஜப்பெருமாள் ) திருக்கோயில், 
திருக்கண்ணபுரம் திருப்பள்ளியெழுச்சி 3.9

எண்சீர் கழிநெடிலடி ஆசிரியர் விருத்தம்
  ( விளம் மா விளம் மா அரையடிக்கு)

வெண்ணெயை உண்ட மயக்கமோ ? அன்று
   வெற்பினைத் தூக்கி நின்றக ளைப்போ ?
ண்ணுடன் குழலை யூதிய களைப்போ ?         
    பார்த்தனின் தேரை யோட்டிய களைப்போ?
ண்ணனே அறியேன்? அறிதுயல் ஏனோ? 
    கண்ணபு ரத்தில் மேவிய வரசே
ண்ணிசை பாடும் அடியவர்க் கருள
   பரிவுடன் பள்ளி யெழுந்தரு ளாயே.

விளக்கம்

வெண்ணெயை உண்ட மயக்கமோ ? அன்று
   வெற்பினைத் தூக்கி நின்றக ளைப்போ ?

கண்ணா, ஆயர்கள் வீட்டில் உறியில் உள்ள
வெண்ணெயை அதிகம் உண்டதினாலே
ஏற்பட்ட மயக்கத்தினால் உறங்கினாயோ?

கோவர்த்தன மலையைத் தூக்கிய  களைப்பினால் உறங்கினாயோ?

பண்ணுடன் குழலை ஊதிய களைப்போ ?           
பார்த்தனின் தேரை ஓட்டிய களைப்போ?

இராகத்திலே புல்லாங்குழல் நீண்ட நேரம் ஊதியதால் 
ஏற்பட்ட களைப்பினால் உறங்கினாயோ?

கண்ணனே அறியேன்? அறிதுயல் ஏனோ? 
    கண்ணபு ரத்தில் மேவிய அரசே

திருக்கண்ணபுரத்தில் வீற்றிருக்கும் சௌவுரி ராசா! 
திருப்பாற்கடலில் பள்ளிகொண்ட காரணம் என்னவோ?
கண்ணபிரானே அடியேன் அறியேன்? 

பண்ணிசை பாடும் அடியவர்க்கு அருள
   பரிவுடன் பள்ளி எழுந்தரு ளாயே.

பண்ணிசை பாடும் அடியவர்களுக்கு அருள் புரிய
 பரிவுடன் பள்ளி எழுந்தருள்வாயாக 




தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Dec 12, 2023, 8:51:57 PM12/12/23
to சந்தவசந்தம்
அருள்மிகு கண்ணபுரநாயகி 
  சமேத நீலமேகப்பெருமாள் 
( சௌரிராஜப்பெருமாள் ) திருக்கோயில், 
திருக்கண்ணபுரம் திருப்பள்ளியெழுச்சி 3.10

எண்சீர் கழிநெடிலடி ஆசிரியர் விருத்தம்
  ( விளம் மா விளம் மா அரையடிக்கு)

மச்சவ டிவனே கூர்மவ டிவனே
    வராகவ டிவனே சிம்மவ டிவனே
அச்சிறு வடிவா மூவித இராமா
   அருச்சுனன் தோழா கல்கியே யேன்றே
இச்சையில் பாடும் பாடகர் மிக்க
    இணையிலாக் கண்ண புரமுறை யரசே 
இச்சிறு தொண்டன் பாடலை யேற்றே
      உத்தமா பள்ளி யெழுந்தரு ளாயே.

விளக்கம்

மச்ச வடிவனே கூர்ம வடிவனே
    வராக வடிவனே சிம்ம வடிவனே
அச்சிறு வடிவா மூவித இராமா
   அருச்சுனன் தோழா கல்கியே என்றே

மச்ச, கூர்ம, வராக, வாமன, நரசிம்ம, பரசுராம, ராம, பலராம, கிருஷ்ண,
 கல்கி என்று பத்து அவதாரங்கள் எடுத்தவரே என்றும், அருச்சுனனுக்குத் தோழா என்றும் 

இச்சையில் பாடும் பாடகர் மிக்க
    இணையிலாக் கண்ணபுரம் உறை அரசே 
இச்சிறு தொண்டன் பாடலை ஏற்றே
      உத்தமா பள்ளி எழுந்தரு ளாயே.

விருப்பத்துடன் பாடும் பாடகர்கள் நிறைந்த
இணையிலாத திருகண்ணபுரம் வீற்றிருக்கும் சௌவுரி ராசா! இச்சிறு தொண்டனின் 
பாடலை ஏற்று உத்தமனே பள்ளி எழுந்தருள்வாயாக 



தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Dec 14, 2023, 2:23:24 AM12/14/23
to சந்தவசந்தம்
திருமுருகன் திருப்பள்ளியெழுச்சி 4.1

எண்சீர் கழிநெடிலடி ஆசிரியர் விருத்தம் 
     ( விளம் விளம் விளம் மா 1 )

தேனாம் சூரியன் கிழக்கினி லுதித்தான்
   சிவனருள் செல்வனே நாதனே போற்றி
லா யடியவர் திருப்புகழ் பாட
    அழகிய மாதரும் பரதமு மாட 
சேலும் கொக்கரக் கோவெனக் கூவ
   திருப்பரங் குன்றினில் மேவிய தேவா
மூவிரு முகமுடைக் குமரனே குகனே
   முருகவே ளேபள்ளி யெழுந்தரு ளாயே.

விளக்கம்

தேவனாம் சூரியன் கிழக்கினில் உதித்தான்
   சிவனருள் செல்வனே நாதனே போற்றி
ஆவலாய் அடியவர் திருப்புகழ் பாட
    அழகிய மாதரும் பரதமும் ஆட 

முருகா சூரிய தேவன் கிழக்குத் திசையில் உதித்தான், சிவன் அருளிய செல்வனே நாதனே
போற்றி என ஆர்வத்துடன் அடியார்கள் அருணகிரிநாதரின் திருப்புகழைப் பாட
அதற்கு ஏற்ப, அழகான மாதர்கள் பரத நாட்டிய ஆட
 
சேவலும் கொக்கரக் கோ எனக் கூவ
   திருப்பரங் குன்றினில் மேவிய தேவா
மூவிரு முகம் உடைக் குமரனே குகனே
   முருகவேளே பள்ளி எழுந்தரு ளாயே.

சேவல் கொக்கரித்திட, திருப்பரங்குன்றத்தில்
வீற்றிருக்கும் தேவா, ஆறுமுகா, குமரா, குகனே,
முருகவேளே  பள்ளி எழுந்தருள்வாயாக 

தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Dec 14, 2023, 3:36:43 PM12/14/23
to சந்தவசந்தம்
திருமுருகன் திருப்பள்ளியெழுச்சி 4.2
எண்சீர் கழிநெடிலடி ஆசிரியர் விருத்தம்
      ( விளம் விளம் விளம் மா  )

அப்பெருங் கடல்மிசை் சூரிய னுதிக்க
    அலைகளி லொளிபடப் பொன்மய மாக
முப்பெருந் தேவியர் தேவரு மொருபால்
    முனிவரு மடியவர் கணங்களு மொருபால்
சிப்பிக ளொளிமிகு முத்தினை யீனும்
    சீரலை வாயுறை சுப்பிர மணியா
இப்பெரும் பிறவியை யறுத்தருள் புரியும்
    எம்பொரு மான்பள்ளி யெழுந்தரு ளாயே. (2)

விளக்கம் 

அப்பெருங் கடல்மிசை சூரியன் உதிக்க
    அலைகளில் ஒளிபடப் பொன்மய மாக
முப்பெரும் தேவியர் தேவரு மொருபால்
 முனிவரும் அடியவர் கணங்களும் ஒருபால்

அந்தப் பெரிய திருப்பாற்கடலில் சூரியன்
உதிக்க, அலைகளில் சூரிய ஒளிபட்டு பொன்மயமாக, 
சரஸ்வதி, இலக்குமி, உமாதேவி
ஒருபுறம் இருக்க, முனிவரும் அடியவர்
கூட்டமும் ஒருபுறம் இருக்க ,

சிப்பிகள் ஒளிமிகு முத்தினை ஈனும்
    சீரலை வாய் உறை சுப்பிர மணியா
இப்பெரும் பிறவியை அறுத்தருள் புரியும்
    எம்பொருமான் பள்ளி எழுந்தரு ளாயே.

சிப்பிகள் ஒளிமிக்க முத்துமணியை உற்பத்திச்
செய்யும் திருச்செந்தூரில் வீற்றிருக்கும் சுப்பிரமணியரே! 
இந்தப் பெரும் பிறவிப்பிணியை அகற்றி அடியார்களுக்கு
அருள்புரிகின்ற எம்பெருமானே முருகா
பள்ளி எழுந்தருள்வாயாக .

தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Dec 15, 2023, 3:49:58 PM12/15/23
to சந்தவசந்தம்
திருமுருகன் திருப்பள்ளியெழுச்சி 4.3
எண்சீர் கழிநெடிலடி ஆசிரியர் விருத்தம்
      ( விளம் விளம் விளம் மா )

மின்னுநட் சத்திரக் கூட்டமும் யகல
  மித்திரன் தேரினி லொளியுடன் தோன்றப்
பொன்னிறக் கோபுரம் பொலிவுடன் விளங்க
  புண்ணிய காட்சியைக் கண்களும் காணத் 
தென்பழ னாபுரி மலையடி வார
   சீர்திரு வாவினங் குடியுறை செல்வா
பன்னிரு கரமுடைச் சண்முகவேளே
    பழனியப் பாபள்ளி யெழுந்தரு ளாயே.

விளக்கம்

மின்னு(ம்) நட்சத்திரக் கூட்டமும் அகல
  மித்திரன் தேரினில் ஒளியுடன் தோன்றப்
பொன்னிறக் கோபுரம் பொலிவுடன் விளங்க
  புண்ணிய காட்சியைக் கண்களும் காணத் 


மினுமினு என்று இரவில் மின்னும் நட்சத்திரக் கூட்டங்கள் அகல, சூரியன் தேரினில் ஒளியுடன் தோன்ற,  கருவறை மீது உள்ள கோபுர விமானம் ஆனது பொலிவுடன் விளங்கும் காட்சியைக் கண்களும் காண, 

தென்பழனாபுரி மலை அடிவார
   சீர்திருவாவினங்குடி உறை செல்வா
பன்னிரு கரம் உடைச் சண்முகவேளே
 பழனியப்பா பள்ளி எழுந்தருளாயே.

தென்பழனி மலையின் அடிவாரத்தில் உள்ள
புகழ் மிக்க திருவாவினங்குடியில் வீற்றிருக்கும்
செல்வனே! பன்னிரு கரங்களை உடைய 
ஆறுமுகப் பெருமாளே பழனிப்பா பள்ளி எழுந்தருள்வாயாக 

தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Dec 16, 2023, 6:12:04 PM12/16/23
to சந்தவசந்தம்
திருமுருகன் திருப்பள்ளியெழுச்சி 4.4
எண்சீர் கழிநெடிலடி ஆசிரியர் விருத்தம்
      ( விளம் விளம் விளம் மா )

சங்கரன் நெற்றியில் சுடரென வுதித்து
  சரவணப் பொய்கையில் திருவுரு பெற்று
மங்கைய ரறுவரின் பாலமு துண்டு
  மாதொரு பாகரின் தோடணி செவியில்
மங்கலப் பிரணவம் உரைத்தசற் குருவே
   மணிதிரு வேரகம் மேவிய சுவாமி
பங்கயத் திருவடி கண்டிட வந்தோம் 
பரம்பொரு ளேபள்ளி யெழுந்தரு ளாயே.(4)

விளக்கம் 

சங்கரன் நெற்றியில் சுடரென உதித்து
  சரவணப் பொய்கையில் திருவுரு பெற்று
மங்கையர் அறுவரின் பால் அமுதுண்டு
  மாதொரு பாகரின் தோடணி செவியில்
 
சிவபெருமான் நெற்றிக்கண்ணில் ஆறு ஞானச்சுரடாக உதித்து சரவணப் பொய்கையில் அழகான வடிவம் பெற்று, கார்த்திகை பெண்களின் பால் அமுதத்தை பருகி, அர்த்தநாரீஸ்வரின் தோடணிந்த செவியில்


மங்கலப் பிரணவம் உரைத்தசற் குருவே
   மணி திரு ஏரகம் மேவிய சுவாமி
பங்கயத் திருவடி கண்டிட வந்தோம் 
பரம்பொருளே பள்ளி யெழுந்தரு ளாயே.


பிரணவ உபதேசத்தை உரைத்த சற்குருவே
அழகான திருவேரகத்தில் வீற்றிருக்கும் சுவாமியே! தாமரை மலர் போன்ற திருவடியை
காண வந்தோம் பரம்பொருளே பள்ளி எழுந்தருள்வாயாக .


Siva Siva

unread,
Dec 16, 2023, 7:48:09 PM12/16/23
to santhav...@googlegroups.com
எண்சீர் கழிநெடிலடி ஆசிரியர் விருத்தம்   /
எண்சீர்*க்* கழிநெடிலடி ஆசிரிய* விருத்தம்

ஒற்று மிகும் சில இடங்களைக் கீழ்க்காண்க.

/  தோடணி செவியில் மங்கலப் பிரணவம் உரைத்த / 
தோடு அணிந்த செவி இடப்பக்கம்.
மந்திரோபதேசம் வலக்காதில்தான்.

V. Subramanian

On Sat, Dec 16, 2023 at 6:12 PM தங்கவேல் காஞ்சிபுரம் <k.thanga...@gmail.com> wrote:
திருமுருகன் திருப்பள்ளியெழுச்சி 4.4
எண்சீர் கழிநெடிலடி ஆசிரியர் விருத்தம்
      ( விளம் விளம் விளம் மா )

சங்கரன் நெற்றியில் சுடரென வுதித்து*ச்*
  சரவணப் பொய்கையில் திருவுரு*ப்* பெற்று

தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Dec 16, 2023, 8:41:15 PM12/16/23
to சந்தவசந்தம்
குருவே வணக்கம் 🙏 சில மாற்றங்களுடன்

திருமுருகன் திருப்பள்ளியெழுச்சி 4.4
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரியர் விருத்தம்
         ( விளம் விளம் விளம் மா )

சங்கரன் நெற்றியில் சுடரென வுதித்துச்
  சரவணப் பொய்கையில் திருவுருப் பெற்று
மங்கைய ரறுவரின் பாலமு துண்டு
  மாதொரு பாகரி னழகியச் செவியில்
மங்கலப் பிரணவ முரைத்தசற் குருவே
   மணிதிரு வேரகம் மேவிய சுவாமி
பங்கயத் திருவடி கண்டிட வந்தோம் 
   பரம்பொரு ளேபள்ளி யெழுந்தரு ளாயே.(4)

விளக்கம் 

சங்கரன் நெற்றியில் சுடரென உதித்துப்
  சரவணப் பொய்கையில் திருவுருப் பெற்று
மங்கையர் அறுவரின் பால் அமுதுண்டு
  மாதொரு பாகரின் அழகியச் செவியில்
 
சிவபெருமான் நெற்றிக்கண்ணில் ஆறு ஞானச்சுரடாக உதித்துச்
 சரவணப் பொய்கையில் அழகான வடிவம் பெற்று, கார்த்திகைப்
 பெண்களின் பால் அமுதத்தை பருகி, அர்த்தநாரீஸ்வரின் அழகியச் செவியில்

மங்கலப் பிரணவம் உரைத்தசற் குருவே
   மணி திரு ஏரகம் மேவிய சுவாமி
பங்கயத் திருவடி கண்டிட வந்தோம் 
   பரம்பொருளே பள்ளி யெழுந்தரு ளாயே.

பிரணவ உபதேசத்தை உரைத்த சற்குருவே
அழகான திருவேரகத்தில் வீற்றிருக்கும் சுவாமியே! தாமரை மலர் போன்ற திருவடியைக்
காண வந்தோம் பரம்பொருளே பள்ளி எழுந்தருள்வாயாக .

நன்றி குருவே 🙏
/எண்சீர் கழிநெடிலடி ஆசிரியர் விருத்தம் /

Siva Siva

unread,
Dec 17, 2023, 5:06:32 AM12/17/23
to santhav...@googlegroups.com
ஆசிரியர் விருத்தம் /

Why that  ர்   ?

/ பாகரி னழகியச் செவியில் /

Why that ச் ?

/ மங்கலப் பிரணவ  /

Both are Sanskrit words.
So, I don't think that ப் will come. If one of them had been a Tamil word then ப் will come.

V. Subramanian

On Sat, Dec 16, 2023 at 8:41 PM தங்கவேல் காஞ்சிபுரம் <k.thanga...@gmail.com> wrote:
குருவே வணக்கம் 🙏 சில மாற்றங்களுடன்

திருமுருகன் திருப்பள்ளியெழுச்சி 4.4
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரியர் விருத்தம்
         ( விளம் விளம் விளம் மா )

சங்கரன் நெற்றியில் சுடரென வுதித்துச்
  சரவணப் பொய்கையில் திருவுருப் பெற்று
மங்கைய ரறுவரின் பாலமு துண்டு
  மாதொரு பாகரி னழகியச் செவியில்
மங்கலப் பிரணவ முரைத்தசற் குருவே
   மணிதிரு வேரகம் மேவிய சுவாமி
பங்கயத் திருவடி கண்டிட வந்தோம் 
   பரம்பொரு ளேபள்ளி யெழுந்தரு ளாயே.(4)

.....

தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Dec 17, 2023, 5:55:30 AM12/17/23
to சந்தவசந்தம்
மிக்க நன்றி குருவே 🙏
மீண்டும் சில மாற்றங்களுடன் 

திருமுருகன் திருப்பள்ளியெழுச்சி 4.4
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
         ( விளம் விளம் விளம் மா )

சங்கரன் நெற்றியில் சுடரென வுதித்துச்
  சரவணப் பொய்கையில் திருவுருப் பெற்று
மங்கைய ரறுவரின் பாலமு துண்டு
  மாதொரு பாகரி னழகிய செவியில்
மங்கல பிரணவ முரைத்தசற் குருவே
   மணிதிரு வேரகம் மேவிய சுவாமி
பங்கயத் திருவடி கண்டிட வந்தோம் 
   பரம்பொரு ளேபள்ளி யெழுந்தரு ளாயே.(4)

விளக்கம் 

சங்கரன் நெற்றியில் சுடரென உதித்துப்
  சரவணப் பொய்கையில் திருவுருப் பெற்று
மங்கையர் அறுவரின் பால் அமுதுண்டு
  மாதொரு பாகரின் அழகிய செவியில்
 
சிவபெருமான் நெற்றிக்கண்ணில் ஆறு ஞானச்சுரடாக உதித்துச்
 சரவணப் பொய்கையில் அழகான வடிவம் பெற்று, கார்த்திகைப்
 பெண்களின் பால் அமுதத்தை பருகி, அர்த்தநாரீஸ்வரின் அழகிய செவியில்

மங்கல பிரணவம் உரைத்தசற் குருவே
   மணி திரு ஏரகம் மேவிய சுவாமி
பங்கயத் திருவடி கண்டிட வந்தோம் 
   பரம்பொருளே பள்ளி யெழுந்தரு ளாயே.

பிரணவ உபதேசத்தை உரைத்த சற்குருவே
அழகான திருவேரகத்தில் வீற்றிருக்கும் சுவாமியே! தாமரை மலர் போன்ற திருவடியைக்
காண வந்தோம் பரம்பொருளே பள்ளி எழுந்தருள்வாயாக .

நன்றி குருவே 🙏

தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Dec 17, 2023, 7:05:18 AM12/17/23
to சந்தவசந்தம்
அடியவர்புரம் திருப்பள்ளியெழுச்சியைத் திருக்கண்ணபுரம் ப சங்கர் அவர்களின் தெய்வீகக் குரலில் கேட்க




3. அருள்மிகு அறம்வளர்நாயகி  உடனுறை   

ஶ்ரீ சந்திரமௌலீஸ்வரர்  ஆலயம்

அப்துல்லாபுரம் என்னும் அடியவர்புரம்

 

திருப்பள்ளியெழுச்சி 1

 

குணதிசை அருணனு மொளிமிகு தேரின்

குதிரையை உந்திடக் காரிருள் வானில்

கணப்பொழு திற்கதிர் உதயமு மாக

கதிரவன் காட்சியைக் கண்டடி யாரின்

கணமது பன்னிரு திருமுறை ஓதும்

கடிதிரு வடியவர் புரமுறை சிவனே

மணமிகு நீற்றினை உடலினிற் பூசும்

மன்னவ னேபள்ளி எழுந்தரு ளாயே.

 

அருஞ்சொற்பொருள் :

 

குணதிசை - கிழக்கு, அருணன் - சூரியனின் தேரை ஓட்டுபவர், 

உந்திட- செலுத்த , கணம் - கூட்டம்,  பன்னிரு திருமுறை-திருஞானசம்பந்தர், 

அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் முதலிய நாயன்மார்கள் பலபேர்களால்

 பாடப்பெற்ற சைவ சமய பாடல்களின் தொகுப்பு. கடி – காவல்,

 அடியவர்புரம்- அப்துல்லாபுரம். அப்துல்லா என்பது "கடவுளின் வேலைக்காரன்"

 என்று பொருள்படும் ஒரு அரபு பெயர். (Abdalla is an Arabic name meaning "Servant of God")

(இப்பாடல் அடியர் ஒருவர் எங்கள் ஊருக்கு ஒரு திருப்பள்ளியெழுச்சி வேண்டும் 

என அடியேனைக் கேட்க, சிவன் அருளால் அடியேன் எழுதிய 10 பாடலில்

 தினம் ஒன்றைப் பதிவு செய்கிறேன். ஏதேனும் பிழைகள் இருப்பின்

 கூறுங்கள் மாற்றிக்கொள்கிறேன்.)

 

விளக்கம்

 

குணதிசை அருணனும் ஒளிமிகு தேரின்

குதிரையை உந்திடக் காரிருள் வானில்


கிழக்குத் திசையில் சூரியனின் ஒளி மிக்க தேரின் குதிரை 

அருணபகவான்  செலுத்த, கரிய நிறம் கொண்ட வானத்தில்


கணப்பொழுதில் கதிர் உதயமும் ஆக

கதிரவன் காட்சியைக் கண்ட அடியாரின்


நொடிப்பொழுதில் சூரியன் உதிக்க, சூரிய பகவானைக் கண்ட அடியாரின்


கணம் அது பன்னிரு திருமுறை ஓதும்

கடிதிரு வடியவர் புரம் உறை சிவனே


அடியார்களின் திருக்கூட்டம் ஆனது சிவ பெருமானைப் 

போற்றிப் புகழும் நூலான பன்னிரு திருமுறையை ஓதும் , 

காவல் மிக்க அழகான அடியவர்புரம் உறை சிவபெருமானே


மணம் மிகு நீற்றினை உடலினில் பூசும்

மன்னவனே பள்ளி எழுந்தருளாயே.

திருநீற்றை உடல் முழுவதும் பூசும் மன்னவனே! 

பள்ளி எழுந்தருள்வாயாக!

 

பிற்குறிப்பு


 மேற்காட்டிய எண்சீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தத்தில் 

நான்கடியும் ஒரே எதுகை அமைப்பைப் பெற்று

 விளம்  விளம்  விளம் மா

       விளம்  விளம்  விளம் மா’

       எனும் சந்தம் எல்லா அடிகளிலும் வந்துள்ளது.

'விளம் ஒக்கும் காய்' என்ற இலக்கணத்தின் படி மாங்காய்ச்சீர் வருவதுண்டு.





On 

தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Dec 17, 2023, 6:33:05 PM12/17/23
to சந்தவசந்தம்
திருமுருகன் திருப்பள்ளியெழுச்சி 4.5
எண்சீர் கழிநெடிலடி ஆசிரியர் விருத்தம்
      ( விளம் விளம் விளம் மா )

செருக்குடைச் சூரனைப் போரினில் வென்று
   செல்விதெய் வானையைத் திருமணம் செய்து 
குருவிகள் ஓட்டிநற் தினைப்புனம் காத்த
   குறமகள் வள்ளியின் திருமண வாளா
திருப்புகழ் திருப்படி திருவிழா நடக்கும்
   திருத்தணி மலைமிசை யுதித்தருள் புரியும்
ஒருத்தனே விருத்தனே மனத்திரு ளகற்றும்
    ஒளிவடி வேபள்ளி யெழுந்தரு ளாயே.

விளக்கம் 

செருக்குடைச் சூரனைப் போரினில் வென்று
   செல்விதெய்வானையைத் திருமணம் செய்து 
குருவிகள் ஓட்டிநற் தினைப்புனம் காத்த
   குறமகள் வள்ளியின் திருமண வாளா

ஆணவம் கொண்ட சூரனைப்  போரினில் வீழ்த்திய பின்னர் தெய்வானையைத் திருமணம் புரிந்தவரே 

திருப்புகழ் திருப்படி திருவிழா நடக்கும்
   திருத்தணி மலைமிசை உதித்தருள் புரியும்
ஒருத்தனே விருத்தனே மனத்து இருள் அகற்றும்
    ஒளிவடிவே பள்ளி எழுந்தருளாயே.

திருப்புகழ் திருப்படி திருவிழா ஆண்டு தோறும் ஆங்கில ஆண்டின் கடல்வாழ் இரவு மற்றும் புதிய ஆண்டின் முதல் நாளில் மற்றும்  சிறப்பாக நடைபெறும் திருத்தணியில் உதித்த ஞான சூரியனே ஒப்பவற்றவனே முதியவடிவம் கொண்டவரே அடியேனின் மனத்து இருளை அகற்றும் அருட்பெருஞ்ஜோதியே பள்ளி எழுந்தருள்வாயாக.

தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Dec 18, 2023, 9:23:04 PM12/18/23
to சந்தவசந்தம்
திருமுருகன் திருப்பள்ளியெழுச்சி 4.6
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
      ( விளம் விளம் விளம் மா )

காலையிற் கதிரவன் சோலையிற் புகுந்து
  கனிகளின் மேவிய நீரினைக் குடிக்க 
வாலுடைக் குரங்குகள் தாவியே குதிக்க
  வண்டுகள் பண்புற நீர்மையை யிசைக்க  
மாலவன் மலையடி வாரதி லிருக்க
   பழமுதிர் சோலையில் மேவிய முருகா
கோலமா மயில்மிசை யேறிட வாராய்
   குமரவே ளேபள்ளி யெழுந்தரு ளாயே.

விளக்கம் 

காலையில் கதிரவன் சோலையில் புகுந்து
  கனிகளின் மேவிய நீரினைக் குடிக்க 
வாலுடைக் குரங்குகள் தாவியே குதிக்க
  வண்டுகள் பண் புறநீர்மையை இசைக்க 

காலையில் சூரியனின் கதிர்கள் சோலையில்
புகுந்து , மரத்தில் பழுத்த பழம் மேல் உள்ள
நீரைக் குடிக்க, வால் உடைய குரங்குகள் அங்கும் இங்கும் தாவி குதிக்க, வண்டுகள் புறநீர்மை என்ற பண்ணில்( பூபாளம் இராகம்)
ரீங்காரம் செய்ய
 
மாலவன் மலை அடிவாரதில் இருக்க
   பழமுதிர் சோலையில் மேவிய முருகா
கோல மாமயில்மிசை ஏறிட வாராய்
   குமரவேளே பள்ளி எழுந்தரு ளாயே.


திருமால் கள்ளழகர் என்று திருநாமத்துடன்
பழமுதிர்சோலை மலை அடிவாரதில் இருக்க, மலைமேல் வீற்றிருக்கும் முருகப் பெருமானே
கோல மாமயில்மிசை ஏறிட வாராய் குமரவேளே

Siva Siva

unread,
Dec 19, 2023, 7:30:36 AM12/19/23
to santhav...@googlegroups.com
/காலையிற் கதிரவன் சோலையிற் புகுந்து
  கனிகளின் மேவிய நீரினைக் குடிக்க /

Unusual description!
Early morning is a cool time - not a hot time.

/மாலவன் மலையடி வாரதி லிருக்க/
Check spelling.

தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Dec 19, 2023, 9:59:38 AM12/19/23
to சந்தவசந்தம்
சில மாற்றங்களுடன் 

அருள்மிகு கண்ணபுரநாயகி 
  சமேத நீலமேகப்பெருமாள் 
( சௌரிராஜப்பெருமாள் ) திருக்கோயில், 
திருக்கண்ணபுரம் திருப்பள்ளியெழுச்சி 3.3

எண்சீர் கழிநெடிலடி ஆசிரியர் விருத்தம்
  ( விளம் மா விளம் மா அரையடிக்கு)

குயில்களுங் கூவக் கிளிகளும் பேசக்
   கோபுரம் மீதிற் புறவங் குனுக
மயில்களு மகவப் பசுக்களு மழைக்க
   மறைபுகழ் கண்ண புரமுறை யரசே 
வெயிலவன் கதிர்கள் சோலையிற் பரவ 
 விளக்கினை யேற்றிப் போற்றியே பணிந்தோம்
மயிலதன் பீலி சூடிய நீல
     வண்ணனே பள்ளி எழுந்தரு ளாயே.

விளக்கம் 

குயில்களுங் கூவக் கிளிகளும் பேசக்
   கோபுரம் மீதில் புறவம் குனுக

குயில்கள் கூவ , கிளிகளும் பேச
கோபுரத்தில் மீது வசிக்கும் புறாக்கள் குனுக

மயில்களும் அகவ பசுக்களும் அழைக்க
   மறைபுகழ் கண்ண புரம் உறை யரசே 

மயில்களும் அகவ , பசுக்கள் அழைக்க
இவ்வாறான பல விதமான ஒலி மிக்க
இயற்கை எழில் கொஞ்சும் வேதங்கள் புகழும் திருக்கண்ணபுரத்தில் 
வீற்றிருக்கும் சௌவுரி ராசா 

வெயிலவன் கதிர்கள் சோலையில் பரவ 
  விளக்கினை ஏற்றிப் போற்றியே பணிந்தோம்

சூரியனின் கதிர்கள் சோலையில் பரவ, 
விளக்கினை ஏற்றி ஓம் நமோ நாராயணா எனப்
போற்றிப் பணிந்தோம் 

மயில் அதன் பீலி சூடிய நீல
  வண்ணனே பள்ளி எழுந்தரு ளாயே.

மயில் தோகையைச் சூடிய நீல வண்ணமே
பள்ளி எழுந்தருள்வாயாக 


முன் எழுதியது 
திருக்கண்ணபுரம் திருப்பள்ளியெழுச்சி 3.3

எண்சீர் கழிநெடிலடி ஆசிரியர் விருத்தம்
  ( விளம் மா விளம் மா அரையடிக்கு)

/வெயிலவன் கதிர்கள் சோலையிற் புகுந்து
    மென்பனி நீரை யுண்டுக ளிக்கக்/Unusual description!Early morning is a cool time - not a hot time Siva Siva sir

தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Dec 19, 2023, 11:55:21 AM12/19/23
to சந்தவசந்தம்
குருவே வணக்கம் 🙏 சில மாற்றங்களுடன் 
( தங்களால் முன்பை விடச் சிறப்பாக உள்ளது போல் தோன்றுகிறது)

திருமுருகன் திருப்பள்ளியெழுச்சி 4.6
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
      ( விளம் விளம் விளம் மா )

மத்தள மேளமுந் தாளமு மிசைக்க   
  வண்டுகள் பண்புற நீர்மையிற் பாட
தத்தன ஜதியினில் மயில்களு மாட
  தண்புனல் நூபுர கங்கையில் பெருக  
பச்சைமால் மலையடி வாரத்தி லிருக்க
   பழமுதிர் சோலையில் மேவிய முருகா
பச்சைமா மயில்மிசை யேறிட வாராய்
    படையப் பாபள்ளி யெழுந்தரு ளாயே. (6)

விளக்கம் 

மத்தள மேளமும் தாளமும் இசைக்க   
  வண்டுகள் பண்புற நீர்மையில் பாட
தத்தன ஜதியினில் மயில்களு மாட
  தண்புனல் நூபுர கங்கையில் பெருக   

மத்தளம், மேளம் தாளம் இவற்றின் இசையுடன்
வண்டுகள் புறநீர்மை என்ற பண்ணில்  (பூபாளம் இராகம்) பாட, மயில்கள் அதற்கு ஏற்ப நடனம் ஆட,  நூபுர கங்கையில் குளிர்ந்த நீர் பெருக 

பச்சைமால் மலையடி வாரத்தி லிருக்க
   பழமுதிர் சோலையில் மேவிய முருகா
பச்சைமா மயில்மிசை  ஏறிட வாராய்
    படையப் பாபள்ளி யெழுந்தரு ளாயே.

திருமால் கள்ளழகர் என்று திருநாமத்துடன்
பழமுதிர்சோலை மலை அடிவாரதில் இருக்க, மலைமேல் வீற்றிருக்கும் முருகப் பெருமானே
பச்சை மாமயில்மிசை ஏறிட வாராய் ஆறு படையப்பனே
பள்ளி எழுந்தருள்வாயாக .

On Tuesday, December 19, 2023 at 6:00:36 PM UTC+5:30 Siva Siva wrote:
/காலையிற் கதிரவன் சோலையிற் புகுந்து
  கனிகளின் மேவிய நீரினைக் குடிக்க /

Unusual description!
Early morning is a cool time - not a hot time.

/மாலவன் மலையடி வாரதி லிருக்க/
Check spelling.
On Mon, Dec 18, 2023 at 9:23 PM தங்கவேல் காஞ்சிபுரம்
திருமுருகன் திருப்பள்ளியெழுச்சி 4.6

Kaviyogi Vedham

unread,
Dec 19, 2023, 12:14:23 PM12/19/23
to santhav...@googlegroups.com
ஆகா ..   தங்கவேல்.
  அற்புதம்..
உம் பாட்டு   கம்பனின்..  தண்டலை  மயில்கள்  ஆட  தாமரை   விளக்கம்தாங்க எனும் பாட்டை   ஞாபகப்படுத்தியது.. அழகு,  நீர்   வாழ்க
 யோகியார்

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Dec 19, 2023, 8:59:56 PM12/19/23
to சந்தவசந்தம்
மிக்க நன்றி ஐயா 🙏 முருகா சரணம் 🙏

தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Dec 19, 2023, 9:29:32 PM12/19/23
to சந்தவசந்தம்
திருமுருகன் திருப்பள்ளியெழுச்சி 4.7
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
      ( விளம் விளம் விளம் மா )

விரைமலர் மலர்ந்திடக்காலையம் பொழுதில்
    வீட்டினில் விளக்கினை யன்பினா லேற்றிக்
குரைகழற் பணிவுடன் பாடியே துதிப்போம்
   கொக்கரக் கோவெனும் சேவலை யுடையாய் 
ரைமக ளருளிய வள்ளலே வேளே
    மருதமா மலைமிசை மேவிய மருந்தே 
திரைகடல் மிசையினி லறிதுயிற் கொண்டோன்
       திருமரு காபள்ளி யெழுந்தரு ளாயே.

விளக்கம்

விரைமலர் மலர்ந்திடக் காலை அம்பொழுதில்
  வீட்டினில் விளக்கினை அன்பினால் ஏற்றி
குரைகழல் பணிவுடன் பாடியே துதிப்போம்
  கொக்கரக்கோ எனும் சேவலை உடையாய்

அழகிய காலையில் வாசனை மிகுந்த மலர்கள் பூத்துக் 
குலுங்க, வீட்டுகள் தோறும் விளக்கினை அன்பினால்
 அனைவரும் ஏற்றி, முருகா ஒலிக்கின்ற தண்டை அணிந்த
 திருவடியைப் பாடியே துதிப்போம். கொக்கரிக்கும் சேவலைக்
கொடியாகக் கொண்டவரே

வரைமகள் அருளிய வள்ளலே வேளே 
    மருதமா மலைமிசை மேவிய மருந்தே 
திரைகடல் மிசையினில் அறிதுயில் கொண்டோன் 
     திருமருகா பள்ளி யெழுந்தரு ளாயே.

பர்வதராஜன் மகளான பார்வதி அருளிய வள்ளலே வேளே,
 மகத்துவம் மிக்க மருதமலையில் வீற்றிருந்து  அடியார்களின்
உடல் மற்றும் உள்ளத்தில் உண்டாகும் நோய் தீர்க்கும் மருந்தே,
 அலையை உடைய கடல் மீது யோக நித்திரை கொண்ட திருமால்
 மருகனே பள்ளி எழுந்தருள்வாயாக 

தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Dec 20, 2023, 4:55:56 PM12/20/23
to சந்தவசந்தம்
திருமுருகன் திருப்பள்ளியெழுச்சி 4.8
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
      ( விளம் விளம் விளம் மா )

வைகறைப் பொழுதில் வெள்ளிமு ளைத்திட
   வயல்களிற் றினையுண வந்தகு ருவியைக்
கையினாற் கவணினைச் சுழற்றிவி ரட்டுங்
   கானக மான்மகள் வள்ளியைக் காண 
மையலு டனேவரு வேடனே வேளே
  வள்ளிமா மலையுறை வள்ளலே முருகா
ஐயனே அப்பனே அடியவர்க் கருளும்
    ஆரமு தேபள்ளி யெழுந்தரு ளாயே.

விளக்கம் 

வைகறைப் பொழுதில் வெள்ளிமு ளைத்திட
   வயல்களில் தினை உண வந்த குருவியைக்
கையினால் கவணினைச் சுழற்றி விரட்டும்
   கானக மான்மகள் வள்ளியைக் காண 

விடியற் காலையில் வெள்ளி வானத்தில் தோன்ற, வயல்களில் விளைந்த தினையை
உண்ண வந்த குரேவிகளைக்  கையால் கல்லைக் கவணில் வைத்து சுழற்றி விரட்டும்
கானக மான்மகள் வள்ளியைக் காண

மையலுடனே வரு வேடனே வேளே
  வள்ளிமா மலையுறை வள்ளலே முருகா
ஐயனே அப்பனே அடியவர்க்கு அருளும்
    ஆரமுதே பள்ளி எழுந்தரு ளாயே.

ஆசையுடன் வேட வடிவத்துடன் வந்த வேளை
வள்ளிமலையில் வள்ளலே முருகா ஐயனே
அப்பனே அடியவர்க்கு அருளும் ஆரமுதே

தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Dec 21, 2023, 4:22:40 PM12/21/23
to சந்தவசந்தம்
திருமுருகன் திருப்பள்ளியெழுச்சி 4.9
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
      ( விளம் விளம் விளம் மா )

ஆதவ னொளிநிக ராயுத முடையாய் 
   ஆடிய மாமயில் வாகன முடையாய் 
தாதவிழ் கடப்பமா மலையைய ணிந்த
   சண்முகத் தெய்வமே தங்கமே போற்றி 
வேதனைக் குட்டியே சிறையினில் வைத்த
   வேலனே பலமலை மேவிய முருகா 
மாதர்கள் இருவரை மணந்தருள் புரியும்  
     மாப்பிள்ளை யேபள்ளி யெழுந்தரு ளாயே.

விளக்கம் 

ஆதவன் ஒளிநிகர் ஆயுதம் உடையாய் 
   ஆடிய மாமயில் வாகனம் உடையாய் 
தாதவிழ் கடப்பமா மலையை அணிந்த
   சண்முகத் தெய்வமே தங்கமே போற்றி 

சூரியனைப் போன்ற ஒளிவீசும் வேலாயுதம் உடையவரே! 
ஆடும் மயிலை வாகனமாகக் கொண்டவரே! மகரந்தப்பொடி விரியும் கடப்ப
மாலையை அணிந்த ஆறுமுகப் பெருமாளே
என் தங்கமே போற்றி 

வேதனைக் குட்டியே சிறையினில் வைத்த
   வேலனே பலமலை மேவிய முருகா 
மாதர்கள் இருவரை மணந்தருள் புரியும்  
     மாப்பிள்ளை யேபள்ளி யெழுந்தரு ளாயே.

பிரம்ம தேவனைக் குட்டி சிறையில் வைத்த வேலனே பல மலைகளுக்கும் 
வீற்றிருக்கும் முருகா! வள்ளி தெய்வானையைத் திருமணம் புரிந்து அருள்புரியும் 
மாப்பிள்ளையே பள்ளி எழுந்தருள்வாயாக 

Kaviyogi Vedham

unread,
Dec 21, 2023, 8:24:18 PM12/21/23
to santhav...@googlegroups.com
மிக அழகு..
 யோகியார்

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Dec 22, 2023, 12:21:28 AM12/22/23
to சந்தவசந்தம்
நன்றி ஐயா முருகா சரணம் 🙏

On Friday, December 22, 2023 at 6:54:18 AM UTC+5:30 Kaviyogi Vedham wrote:
மிக அழகு..
 யோகியார்

On :

தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Dec 22, 2023, 3:37:48 PM12/22/23
to சந்தவசந்தம்
திருமுருகன் திருப்பள்ளியெழுச்சி 4.10
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
      ( விளம் விளம் விளம் மா )

சுருதியா னன்னமா யேனமாய் மாலும்
   தோற்றமும் கொண்டுமே காணறி யாத
அருட்பெருஞ் ஜோதியாய் நின்றருட் புரிந்த    
    ஆண்டவ னுமையுடன் மேவிய பதியாம்
திருவரு ணாசலத் தினிற்பிறந் தழகாய்த்
   தெள்ளிய தமிழினி லும்மையே போற்றும்
அருணைமா முனிவரின் திருப்புகழ் கேட்க
    ஆறுமு காபள்ளி யெழுந்தரு ளாயே.

விளக்கம்

சுருதியான் அன்னமாய் ஏனமாய் மாலும்
   தோற்றமும் கொண்டுமே காணறி யாத
அருட்பெருஞ் ஜோதியாய் நின்றருள் புரிந்த 
    ஆண்டவன் உமையுடன் மேவிய பதியாம்

 அருட்பெருஞ்ஜோதியின் முடியைப் பிரமன் அன்னம்
 வடிவம் கொண்டும் , அடியைத் திருமால் பன்றி வடிவம் கொண்டும் 
தேடியும் காணமுடியாத ஆண்டவன் உமையுடன் வாழும் பதியான,

திருவரு ணாசலத் தினில்பிறந் தழகாய்த்
   தெள்ளிய தமிழினி லும்மையே போற்றும்
அருணைமா முனிவரின் திருப்புகழ் கேட்க
    ஆறுமு காபள்ளி எழுந்தருளாயே.

திருவண்ணாமலையில் பிறந்து , தெள்ளிய தமிழினில் முருகா உம்மையே போற்றும்
அருணகிரிநாதரின் திருப்புகழ் கேட்க
ஆறுமுகப் பெருமாளே பள்ளி எழுந்தருள்வாயாக 

தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Dec 22, 2023, 4:00:21 PM12/22/23
to சந்தவசந்தம்
அனைவருக்கும் வணக்கம் 🙏 முன் எழுதிய பாடலில்
மோனை இடம் பெறவில்லை போலும். அதனால் மாற்றியுள்ளேன்.
மேலும் இப்பாடல் கேட்க https://youtu.be/Bq20s9Exy3I?si=uDx6nzWgRUxb-Msz

அருள்மிகு அறம்வளர்நாயகி சமேத
 ஶ்ரீ சந்திரமௌலீஸ்வரர் 
அடியவர்புரம் திருப்பள்ளியெழுச்சி 1.3

மத்தளம் மேளமுந் தாளமு மிசைக்க
    மறையினை யந்தணர் முறையுட னோத
முத்தமிழ் பாடலைப் பாடகர் பாட
     முலையிள மாதரும் பரதமு மாட 
அத்தனை மக்களும் கோயிலிற் கூட 
    அடியவர் புரமுறை சந்திர மௌலீ
சித்திர சபையினில் நர்த்தனம் புரியும்
      சிவபெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே. 3

அருஞ்சொற்பொருள்

சந்திர மௌலீ - சந்திரனை முடியில் கொண்ட சிவன் , சித்திரசபை- குற்றாலம்

விளக்கம்

மத்தளம் மேளமும் தாளமும் இசைக்க
மறையினை அந்தணர் முறையுடன் ஓத 

மத்தளம் மேளம் தாளம் ஆகிய  இசைக்கருவிகள் இசைக்க ,
 அந்தணர்கள் வேத மந்திரங்களை ஓத

முத்தமிழ் பாடலைப் பாடகர் பாட
முலை இளமாதரும் பரதமும் ஆட 

முத்தமிழ் பாடலைப் பாடகர் பாட
அதற்கு ஏற்ப இளம் பெண்கள் பரத நாட்டியம் ஆட 

அத்தனை மக்களும் கோயிலில் கூட 
 அடியவர் புரம் உறை சந்திர மௌலீ

அத்தனை மக்களும் திருக்கோயிலில்
கூட அடியவர்புரம் உறை சந்திர மௌலீ!

சித்திர சபையினில் நர்த்தனம் புரியும்
 சிவபெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே.

குற்றாலத்தில் நடனம் புரியும் சிவபெருமானே
பள்ளி எழுந்தருள்வாயாக!

On Monday, November 6, 2023 at 10:44:57 AM UTC+5:30 தங்கவேல் காஞ்சிபுரம் wrote:
திருப்பள்ளியெழுச்சி 3

த்தளம் மேளமுந் தாளமு மிசைக்க
        வீணையும் நாதமும் நயமுடன் சேர
முத்தமிழ் பாடலைப் பாடகர் பாட
        முலையிள மாதரும் பரதமு மாட
த்தனை மக்களும் கோயிலிற் கூட
         அடியவர் புரமுறை சந்திர மௌலீ
சித்திர சபையினில் நர்த்தனம் புரியும்
           சிவபெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே.


தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Dec 23, 2023, 6:00:22 AM12/23/23
to சந்தவசந்தம்
அருள்மிகு  திரிபுரசுந்தரி உடனாகிய
 திருவாலீஸ்வரர் திருக்கோயில்  
பூசிவாக்கம் தெய்வப்பதிகம் 5

வஞ்சித்துறைதிருவிருக்குக்குறள் (மா விளம்)

வா நீற்றினைப் பூசு மெம்பிரான்
ன் வாழுமூர் பூசி வாக்கமே (1)

நேம் மிக்கவர் ஈ னாம்நட
ரான் வாழுமூர் பூசி வாக்கமே (2)

வாசி தீரவே,        காசு நல்கிய
ன் வாழுமூர்    பூசி வாக்கமே  (3)

பா நாசனாம்       ஈன் பெருமையைப்
பேசுங் கிளியுள    பூசி வாக்கமே (4)

பாம் விட்டவன் நாச முற்றிட
வீசுந் தாளனூர் பூசி வாக்கமே (5)

பூ லார்மனப் பூசை யேற்றவர்
ன் வாழுமூர் பூசி வாக்கமே (6)

சை பார்வதி பூசை யேற்றவர்
ன் வாழுமூர் பூசி வாக்கமே (7)

நீச னிராவணின் நேங் கொண்டவன்
பூசை செய்தவூர்       பூசி‌ வாக்கமே (8)

பூற் பொடிபடக்     கூசும் படிவளர்
ன் வாழுமூர்       பூசி வாக்கமே (9) 

 னாரிடம்          பாம் மிக்கவர்
வாம் செய்யுமூர் பூசி வாக்கமே (10)

தேச மேபுகழ்         பூசி வாக்கம்வாழ்
னைத்தொழ   மாசு நீங்குமே (11)

விளக்கம் 
1.திருநீறணியும் ஈசன் வாழும் ஊர் பூசிவாக்கம்.
2.அன்பு மிக்க நடராஜர் வாழும் ஊர் பூசிவாக்கம்.
3.திருவீழிமிழலையில் படிக்காசு வழங்கிய ஈசன் வாழும் ஊர்.
4.ஈசன் பெருமையைப் பேசும் கிளிகள் உள்ள ஊர்.
5.மார்க்கண்டேயர் மீது பாசக்கயிற்றை வீசிய எமன் மாள, 
காலை வீசி உதைத்த ஈசன் வாழும் ஊர் .
6.பூசலாரின் மனக்கோவிலில் உள்ள ஈசன் வாழும் ஊர்.
7.பார்வதியின் பூசையை ஏற்ற ஈசன் வாழும் ஊர்  .
8.இராவணனின் நண்பன் வாலி பூசை செய்த ஊர் .
9.திருமால் பிரமன் சண்டை தீர , கூசும்படி ஒளியாய் வளர்ந்த ஈசன் வாழும் ஊர் .
10.ஈசன் மீது அன்பு செலுத்தும் மக்கள் வாழும் ஊர் .
11.நாடே புகழும் பூசிவாக்கத்தில் வாழும் ஈசனை
வணங்க, வினைகட்குக் காரணமான அஞ்ஞானமான மாசு நீங்குமே

பிற்குறிப்பு 

குறள் என்றாலே நமக்கெல்லாம் திருக்குறள் தான்.  
சிறிய இரண்டு அடிக்குள் உள்ள பாடல்வகையைக் 
குறள் என்று அழைத்திருக்கிறார்கள். திருமுறையில் உள்ள
 பலவகையான செய்யுள் வகைகளில் திருவிருக்குக்குறளும் ஒன்று. 

திருக்குறள் தெரியும்;அது என்ன திரு+இருக்கு+குறள்? 

ரிக் வேதத்தில் உள்ள மந்திரங்கள் ஒலிப்பண்புகள் கொண்டவை.
அவற்றைச் சரியாகச் சொல்வதன் மூலம், மனஒருமையும், மற்ற நலன்களும் அமையப்பெறும்.

சரி, வடமொழி எனக்குப் பழக்கமான மொழி அல்ல; அதை 
ஒரு சாரார் மட்டுமே எடுத்துக்கொண்டு விட்டார்கள் என்று
 சொல்பவர்களுக்கு, எல்லாருக்கும் தினமும் மனதில் மந்திரம் போல நிற்க, 
சிறிய அளவிலான சொற்களைக்கொண்டு, அதே நற்பலன்களைத்தரும் வகையில் 
திருஞானசம்பந்தர், பல திருவிருக்குக்குறள் பதிகங்களைப்பாடி உள்ளார்.

தலக்குறிப்பு 

காஞ்சி மாவட்டம் வாலாஜாபாத் அருகில் ஸ்ரீ வாலீஸ்வரர் என்ற திருநாமாம் கொண்டு விளங்கும் தலம் பூசிவாக்கம் என்ற கிராமத்தில் உள்ளது. அன்னையின் திருநாமம் ஸ்ரீ திரிபுரசுந்தரி. வாலியால் பூஜிக்கப்பட்ட தலம்.இத்தலத்தில் பர்வதவர்தினி சமேதராக ஸ்ரீ முக்தீஸ்வரர் என்ற திருநாமம் பூண்டு தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார் ஈசன். கிழக்கு பார்த்த சன்னதி. துவார தரிசன அமைப்புடன் விளங்குகிறது. கோஷ்டத்தில் எல்லா தெய்வ திருவடிவங்களும் இடம்பெற்றுள்ளன. ஸ்ரீ விநாயகர் சன்னதியும், முருகன் சன்னதியும் கருவறையின் பின்புறம் அமைந்துள்ளன கோயிலின் வட பிரகாரத்தில் ஸ்ரீ முக்தீஸ்வரர் சன்னதி உள்ளது. 

இத்தலத்தை அடைய காஞ்சி-வாலாஜாபாத் சாலையில் உள்ள ஏகனாம் பேட்டை என்ற ஊரில்இறங்கி , வட திசையில் 1.5 கி.மி.செல்ல வேண்டும்

Sri Thripurasundari udanagiya Thiruvaleeshwarar temple

Siva Siva

unread,
Dec 23, 2023, 7:59:30 AM12/23/23
to santhav...@googlegroups.com
Interesting effort in writing such short-lined songs with the same edhugai for all songs.

V. Subramanian
Message has been deleted

தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Dec 23, 2023, 9:11:26 AM12/23/23
to சந்தவசந்தம்

குருவே வணக்கம் 🙏

(வஞ்சித்துறை மா மா)

நேச மொடுநல் ஆசி வழங்கும்
ஆசி ரியரே    ஆசி நன்றே  

தங்களிடம் குட்டு வாங்கினாலும்
GOOD வாங்கினாலும் மட்டற்ற
மகிழ்ச்சியாக உள்ளது.

தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Dec 24, 2023, 4:55:04 AM12/24/23
to சந்தவசந்தம்
அருள்மிகு விசாலாட்சி உடனாகிய 
   விஸ்வநாதர் திருக்கோயில்  
        காசி தெய்வப்பதிகம் 6

வஞ்சித்துறை: திருவிருக்குக்குறள் (மா மா) 

மதில்சூழ் காசிப்
பதியே சென்று              
துதியே செய்ய 
பதியா வாரே (1)

மதியார் காசிப் 
பதியே சென்று 
நதியே மூழ்கப் 
 பதியா‌ வாரே (2)

மாசில் கங்கை 
காசி சென்றால்              
ஈசன் அருளால் 
பாசம் அறுமே (3)

காசி என்றே 
பேசும் அவரின் 
பாச வினைகள் 
 நாசம் உறுமே (4)

அழகார் காசி 
அழகர் அடியை                  
விழிநீர் பெருகத் 
தொழுதால் நன்றே (5)

எழிலார் கங்கை 
பொழிற்சூழ் காசி
தொழுவார் வினைகள்
 கழியும் இன்றே (6)

புரமே எரித்த 
அரன்வாழ் காசி          
பரவிப் பணியக்   
கரையும் வினையே (7)

அரக்கன் நெரிய      
விரலை ஊன்றும்           
அரன்வாழ் காசிப்     
பரவ இனிதே (8)

அயன்மால் அறிய     
இயலா அரனார் 
பயிலும் காசிப்            
பயணம் இனிதே (9)

காசி நாதன்         
வாசப் பொடியைப்
பூசிப் பணியப்     
பாசம் அறுமே (10)

புனல்சூழ் காசி          
புனிதன் அவனை  
மனத்தால் நாளும்    
நினைத்தால் வீடே (11)

விளக்கம்

1. மதில்சூழ் காசிப்பதியே சென்று      
சினை துதித்து வழிபட  சிவகணங்களுக்குத்
 தலைமையாய் விளங்குவார்கள் .

2. மதி தவழும் மாடங்களையுடைய காசிப்பதியே 
சென்று கங்கைநதியில் மூழ்கச், சிவகணங்களுக்குத் 
தலைமையாய் விளங்குவார்கள் .

3.தூய கங்கை பாயும் காசி சென்றால்  ஈசன் அருளால்
 பாசம் வினைகள் நீங்குமே (3)

4.காசி என்றே பேசும் அவரின் பாச வினைகள் 
 நீங்கும்

5. அழகார் காசி விசுவநாதர் அடியை                  
கண்ணீரில் பெருக, வழிபடுதல் நற்பலனைத் தரும் 

6. அழகு தவழும் கங்கை  சோலை சூழ்ந்த காசி
விஸ்வநாதரைத் தொழுவார் வினைகள்
 நீங்கும் இன்றே 

7.  முப்புரமே எரித்த சிவபெருமான் வாழும்  காசி 
 நகரைப் பரவிப் பணிய வினைகள் நீங்குமே 

8. இராவணன் நெரிய  விரலை ஊன்றும்           
சிவபெருமான் வாழும் காசி நகரை வணங்குவது
 மகிழ்ச்சியைத் தரும் (8)

9. திருமால் பிரமனால் அறிய  இயலாத சிவபெருமான் 
வாழும் காசிக்குப்  பயணம் செல்வது இன்பம் தரும் 

10.காசி விஸ்வநாதர் விபூதி  பூசி வணங்கப், 
பாச வினைகள் நீங்குமே 

11. கங்கை நதி சூழ்ந்த காசி          
விஸ்வநாதரை  மனத்தால் நாளும்    
நினைத்து வணங்க முத்தி எளிதாகப்
பெறலாம் .



It is loading more messages.
0 new messages