செண்டு என்பது இந்தியாவிலே மிகப் பழைய ஆயுதங்களில் ஒன்று. அடியார்க்குநல்லார் மேற்கோள் காட்டும் பழைய வெண்பாவில், கச்சி மாநகர் காக்கும் சாத்தனைப் பற்றிய செய்தி உள்ளது. சாத்தன் என்னும் ஐயனார் கையில் உள்ள செண்டு என்பது யானையை அடக்கும் அங்குசம் ஆகும். ”அங்குசம் கடாவ ஒரு கை” - திருமுருகு. ஆங்கிலத்தில் hook, bud hook என்பர். பல்லவர் கால ஐயனார் சிலைகளின் ஒளிப்படங்களைப் பார்த்தால் விளங்கும். அரசரைப் போல, செண்டு ஏந்தி கைலாசத்திற்கு வெள்ளை யானையில் பயணித்தவர் சுந்தரமூர்த்தி நாயனார். எனவே, சுந்தரரைச் செண்டு தாங்கியவராய்ச் சிற்பங்களில் காட்டல் மரபு. செண்டு சுழிந்து இருப்பது: “செண்டு ஆடு புனல் பொன்னிச் செழு மணிகள் வந்து அலைக்கும் திரு ஐயாறே.” (தேவாரம்). ”செண்டு அணியும் சடை” (சிவனது சுழிந்த சடாபாரம் - ”வண்டு அணியும்” திருப்புகழ்.) செண்டலங்காரர், உவேசா
https://groups.google.com/g/vallamai/c/RbzmRejCYiw/m/bBMTfCr7B6IJhttps://valamonline.in/2019/05/blog-post_84.htmlhttp://thulasidhalam.blogspot.com/2016/07/66.htmlஆழ்- > ஆணி, ஆண்டாள், ஆழ்வார், பழனி ஆண்டவர் (த்யான மூர்த்தி = ஞான தண்டபாணி).
செழ்- (வளைவு) -> செழியன் (பாண்டியன்), செடில் ‘hook', செண்டு ‘hook weapon’
தழல் > தணல், நுழல் > நுணல், நிழல் > நிணல் ... -ழ்-/-ள்- : -ண்-: -ட்- சொல்தொகுதிகள் பல.
(1) முருகன் பெற்றோர் சிவபிரான், பார்வதியுடன் எழுந்தருளியுள்ள தலம், மந்திரகிரி என்னும் தென்சேரிமலை. மூவரையும் வரிசையாகத் தரிசிக்கலாம். இங்கே தந்தையை வணங்கிச் சத்ருசம்ஹார மந்திரத்தின் உபதேசம் பெற்றுச் சூரபத்மனை வதைக்கச் சென்ற போர்க்கோலத்தில் எழுந்தருளியுள்ளார். 10 கரங்களிலும் ஆயுதங்கள். ஆனாலும், வலது மேல் கரத்தில் பெரிதாகக் காட்டப்படுவது செண்டு ஆயுதம் தான். கந்தஸ்வாமி கையில் செண்டு கொண்டதைக் குறித்து, “சிறைமீளச் செண்டாடி” என “எங்கேனும் ஒருவர்” செஞ்சேரிமலைத் திருப்புகழில் வருகிறது. “செஞ்சேவற் செங்கை உடைய சண்முக தேவே” என, “கொண்டாடிக் கொஞ்சு மொழி ” திருப்புகழில் பாடியுள்ளார். செண்டு, சேவல், பாம்பு மூன்றும் தென்சேரிமலை முருகன் கைகளில் ஏந்தியுள்ளான். “மந்திர மாமலை மேயாய் போற்றி” என்பதால் மாணிக்கவாசகர் வந்து வணங்கிய திருத்தலம் என்பர். மந்திரகிரி/மந்திராசலம்/மந்திரமலை ”மந்திர அப்பன்” என்ற முருகன் பெயர், மக்கள் பேச்சுத்தமிழில் மந்திரியப்பன் எனக் கொங்குநாடு முழுவதிலும் வழங்குகிறது.
தென்சேரிமலை (செஞ்சேரிமலை) வேலாயுதசாமி 12 கரங்கள் கொண்டவராய் உள்ளார். செண்டு என்னும் ஆயுதமும், சேவலும், பாம்பும் கைகளில் உள்ளமை வெகு விசேடம். வலக்கரங்கள் (மேலிருந்து கீழாக): அபய ஹஸ்தம், செண்டு, சக்தி, மணி (அம்பு?) , வில், பாம்பு. இடக்கரங்கள் (மேலிருந்து கீழாக): வரத ஹஸ்தம், சேவல், வேல், திரிசூலம், பாசம், கேடயம்.
முருகன் தந்தையிடம் செண்டு ஆயுதம் பெறும் திருவிழா பழமையான தேவார ஸ்தலங்களில் ஆண்டுதோறும் நடைபெறுகிறது. திருப்பாதிரிப்புலியூர் (கடலூர்) பாடலீசுவரர் - பெரியநாயகி புதுவண்டிப்பாளையத்துக்கு வந்து முருகனுக்குச் செண்டு ஆயுதம் வழங்கும் திருவிழா. வைத்தீசுவரன் கோயிலில், வினைதீர்த்தான் (வைத்யநாதஸ்வாமி) - தையலாம்பிகையை வணங்கி, முருகன் பத்மாசூரனை வதைக்கச் செண்டாயுதம் பெறும் திருவிழா வெகுவிமரிசையாய் நடக்கிறது. பங்குனியில் பிரம்மோற்சவம் நடைபெறும். அதில் ஐந்தாவது நாளன்று செல்வமுத்துக்குமரன் வைத்தியநாதரைப் பூசித்துச் செண்டு பெறும் காட்சி மிக அற்புதமான ஒன்று. உற்சவகாலத்தில் கயிலையில் சோமாஸ்கந்தர் எழுந்தருளியிருப்பது போல் சுவாமி ஒரு புறமும், அம்பாள் ஒரு புறமுமாக எழுந்தருள, செல்வமுத்துக்குமார சுவாமி நடுவில் எழுந்தருள்வார்.
https://www.tamildigitallibrary.in/admin/assets/book/TVA_BOK_0000540_புள்ளிருக்குவேளூர்த்_தலவரலாறு.pdf
கும்பகோணத் திருப்புகழில் தெளிவாக, செண்டு ஆயுதத்தால், சூரனைத் தடிந்த போரைப் பாடியுள்ளார்:
சிந்தை திகைத்து, ஏழு கடல் பொங்க, அரி சூர் மகுடம், *செண்டுகுலைத்து* ஆடு மணிக்கதிர் வேலா
தென்சேரிகிரித் திருப்புகழ்:
பங்கேருகனும் மருள சென்றே உயும் அமரருடை சிறை மீள
*செண்டாடி* அசுரர்களை ஒன்றாக அடியர் தொழும் தென்சேரிகிரியில் வரும் பெருமாளே
*செண்டு ஆடி* அண்டர் கொண்டாட மன்றில் நின்று ஆடி சிந்தை மகிழ் வாழ்வே
செம் சாலி மிஞ்சி மஞ்சு ஆடுகின்ற செங்கோடு அமர்ந்த பெருமாளே
(2) உக்கிரபாண்டியனாக முருகன் அவதரித்து, மதுரையை ஆண்டபோது, மேருவைச் செண்டால் அடித்தான் என்கிறது திருவிளையாடற் புராணம். இதனைச் சில திருப்புகழ்களில் பாடியுள்ளார்.
கனகந்திரள் கின்றபெ ருங்கிரி
தனில்வந்துத கன்தகன் என்றிடு
கதிர்மிஞ்சிய செண்டைஎ றிந்திடு ...... கதியோனே (திருப்பரங்குன்றம்)
https://www.kaumaram.com/thiru/nnt0011_u.htmlஅகலாண்ட முற்று நொடியினிற்சுற்
றுந்திறற்ப் ரசண்ட முழுநீல
மயில்தாண்ட விட்டு முதுகுலப்பொற்
குன்றிடித் தசங்க்ர மவிநோதா
http://thiruppugazhamirutham.blogspot.com/2016/12/293.html”உயர் மகமேரு செண்டு மோதினர்” --- உயர்ந்துள்ள மகா மேருகிரியை செண்டால் எறிந்த கீர்த்தியுடையவர், பஞ்ச பாதகம் (திருச்செந்தூர்)
https://kuganarul.blogspot.com/2018/05/blog-post_450.htmlஇவ்வாறு இருமுறை தந்தை சிவபிரானிடம் செண்டு போராயுதம் பெற்றுப் போர்புரிந்ததை, அருட்கவி சாதுராம் “செண்டெறி நற்செந்தாமரைக் கரவீரா” என்று போற்றியுள்ளார்:
கண்டெதிரில் கொண்டாடி ஒப்பிலியான
கந்தனை நினைக்க அன்பாய் தலைபெறவே நீ,
பண்டு எயினர் பெண் பால் மலைப்புறமேகும்
பங்கய மெய்ப்பைந்தாளினைத் தரவேணும்
மண்டெழில் மிக்கு எண்சீர் மயில்பரி ஏறி
வந்து, உலகைத் தெம்பொடு சுற்றிய வேலா
*செண்டெறி* நற்செந்தாமரைக் கரவீரா
தென் பழநித் தண்டாயுதப் பெருமாளே - அருட்கவி சாதுராம்.
http://www.kungumam.co.in/APArticalinnerdetail.aspx?id=2418&id1=53&id2=0&issue=20150115 கோவலர்களுக்கு துறட்டிக்கோலாகச் செண்டு:
------------------------------------
மன்னார்குடி ராஜகோபாலன், கோவலன். கையிலே செண்டு இருக்கிறது. இங்கே, செண்டு துறட்டியாக உதவுகிறது. கன்று காலிகளுக்கு இடையர்கள் இலை தழைகளைப் பறித்துத் தீவனமாக அளிக்கப் பயன்படும் கருவி. திருவீழிமிழலையில் கலியாண சுந்தரர் “மாப்பிள்ளைச்சாமி” கையில் செண்டு உண்டு. ரிஷபாந்திகராய் துறட்டிக்கோல் செண்டுடன் காட்சி. அருமையான சோழர் கால ஐம்பொன் படிமங்கள் இவை.
“கோயிலுக்குள் சென்று நேத்திரார்ப்பணேசுரரையும் அவர்தம் துணைவி சுந்தர குசாம்பிகையையும் முதலில் வணங்கலாம். அப்படி வணங்கும்போதே மூல லிங்கத்துக்குப் பின் கர்ப்பக்கிருகச் சுவரில் பார்வதி பரமேசுவரருடைய திரு உருவங்கள் இருப்பதையுமே காணலாம். இனி மகா மண்டபத்துக்கு வந்து அங்கு தெற்கு நோக்கிய ஒரு பீடத்தில் எழுந்தருளியுள்ள கல்யாண சுந்தரமூர்த்தியைத் தரிசிக்கலாம். இவரே கார்த்தியாயன முனிவரின் மகளாக அவதரித்த கார்த்தியாயனியை மணந்து கொண்டு, என்றுமே 'மாப்பிள்ளைச்சாமி'யாக நிற்பவர், இவரது திருவடியிலேதான் மால் அருச்சித்த தாமரைக் கண் பொறிக்கப்பட்டிருக்கிறது. அதையுமே அர்ச்சகர்களைக் காட்டச் சொல்லிக் கண்டு மகிழலாம். அவர் கையிலே செண்டு என்னும் ஆயுதம் இருப்பதைக் காணலாம். மாப்பிள்ளைக்கோலத்தில் இருப்பவர்க்கு ஏன் இந்தச் செண்டு என்று தெரியவில்லை!” (வேங்கடம் முதல் குமரி வரை. தொ. மு. பாஸ்கரத் தொண்டமான்)
தொ.மு.பா. அவர்களின் கேள்விக்கு, விடை சொல்லியுள்ளேன்.
நா. கணேசன்
அடியார்க்குநல்லார் மேற்கோள் காட்டும் பழைய வெண்பாவில், கச்சி மாநகர் காக்கும் சாத்தனைப் பற்றிய செய்தி உள்ளது. சாத்தன் என்னும் ஐயனார் கையில் உள்ள செண்டு என்பது யானையை அடக்கும் அங்குசம் ஆகும். ஆங்கிலத்தில் hook, bud hook என்பர். பல்லவர் கால ஐயனார் சிலைகளின் ஒளிப்படங்களைப் பார்த்தால் விளங்கும். தமிழ்நாட்டில் ஐயனார் சிலைகள் யாவும் தொகுத்து நல்ல நூல் உருவாகவேண்டும். ஆண்டாள் திருப்பாவையில் வலியன் என்னும் பாரத்துவாச பட்சியை “ஆனைச்சாத்தன்” என உவமையாகுபெயாராய் அழைத்தாள். வலியன் என்னும் காரிப் பறவைக்கு ”ஆனைச்சாத்தன்” என அய்யனாருடன் தொடர்பு படுத்தி அழகான உவமையாகுபெயரில் அழைப்பது பற்றி விரிவாக எழுதியுள்ளேன்:
ஆனைச்சாத்தன் (Drongo) - உவமையாகுபெயர்
https://groups.google.com/g/santhavasantham/c/T9C-_ZkVYSQ/m/vF3h9hv4AAAJஉவேசா அவர்களுக்குச் செண்டு என்பதன் பொருள் விளங்காமல் இருந்தது. அதனைக் கண்டறிந்து, “செண்டலங்காரர்” என்ற கட்டுரையைக் கலைமகளில் எழுதினார். நினைவுமஞ்சரி. ஆனைச்சாத்தன் கட்டுரையின் தொடர்ச்சியாய்ச் “செண்டு” என்ற ஆயுதம் பற்றி எழுதவேண்டும். செடில் என்னும் கொக்கியில் தொங்கும் வழிபாட்டுமுறையைக் காண்கிறோம். தடி:தண்டு, வெடி:வெண்டு (வெண்டைக்காய்), ...போல, செடில்:செண்டு தொடர்புடைய சொற்கள். சம்ஸ்கிருதத்தில் சண்ட என்றால் கூர்மை. இது தமிழ்/த்ராவிட மொழிச்சொல். காரணம்: உலகிலேயே, முதன்முதலாக, யானையைக் கொப்பத்தில் பிடித்து, அடக்கிப் பழக்கியது சிந்துவெளியில் தான். அங்கே, செண்டு என்னும் செண்டாயுதம் (elephant hook) பயன்பட்டிருக்கும். பூங்கொத்து என்னும் பொருள் உள்ள செண்டு பழந்தமிழில் அமைவது வேறு மூலம். செழுமை. செழு- >> செண்டு (பூங்கொத்து). Elephants and Horses are symbols of Royalty in India for 1000s of years. Hence, these prestige animals serve as Vaahana of Aiyanar, the protective deity of forests.
https://www.instagram.com/p/Cz_HalGx73U/?img_index=1 ஐயனார் போலவே, ராஜாவாக சுந்தரமூர்த்தி நாயனாரைக் காட்டுவர். அவர் கையில் செண்டு இருக்கும். அதே போல, மன்னார்குடி, ராஜகோபாலன் மாடு மேய்ப்பவன். யது குலத்து ராஜா (cf. யாதவ < யாடவன்), அவர் கையிலும் செண்டு உண்டு. ராஜமன்னார் செண்டலங்காரர்.
சாஸ்தா ஐயனார் பற்றிய பழைய வெண்பா:
"கச்சி வளைக்கைச்சி காமகோட் டங்காவல்
மெச்சி யினிதிருக்கும் மெய்ச்சாத்தன் - கைச்செண்டு
கம்பக் களிற்றுக் கரிகாற் பெருவளத்தான்
செம்பொற் கிரிதிரித்த செண்டு"
கரிகாற் பெருவளத்தான் காஞ்சியில் வளைக்கைச்சியின் காமகோட்டத்திலிருந்து சாத்தனின் செண்டு பெற்று பொன்மலையைச் செண்டால் அடித்தான் என்பது பொருள். இந்தச் செய்யுள் அன்னை காமாக்ஷியின் கோயிலிலுள்ள சாத்தனிடமிருந்து செண்டு பெற்ற கர்ணபரம்பரைச் செய்தியை விளக்குகிறது. இதே செய்யுள் 14-15 ஆம் நூற்றாண்டு கால எழுத்தமைதியில் அதே கோயிலின் சாஸ்தா ஸந்நிதியின் கீழே வாஜனத்தில் செதுக்கப்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
https://newindian.activeboard.com/t65003278/topic-65003278/