ஆனைச்சாத்தன் (Drongo) - உவமையாகுபெயர்

196 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Dec 24, 2023, 3:17:22 PM12/24/23
to Santhavasantham
ஆனைச்சாத்தன் (Drongo) - உவமையாகுபெயர்
--------------------------------------------------------------------------------
காரி, காரிப்பிள்ளை, வலியன், வயவன், வயான், கஞ்சனம், கயவாய், கரிக்குருவி, கரிச்சான், காக்கைத்தம்புரான் (மலையாளம்) என ஏராளமான பெயர்கள் கொண்டது இந்தப் பறவை (Drongo). பிள்ளை என்றே அன்புடன் காரிப்பிள்ளையை அழைப்பதைச் சிலம்பிலும், சிந்தாமணியிலும் காண்கிறோம். நன்னூல் உரைகளில் வலியன், வயவன், வயான் எனப்படும் பறவை இது. வயம் = வலிமை. மரத்தில் உள்ள மற்ற பறவைக் கூடுகள், குஞ்சுகளை எதிரிகளிடம் இருந்து காப்பதால், கோட்டைப்பாலன் (கோட்வால்) என வட இந்தியாவில் கூறுவர். உவமையாகு பெயராய் ஆண்டாள் மாத்திரம் ஆனைச்சாத்தன் என நயமான பேரைப் பதிவுசெய்கிறாள். இதனால் வேறு எந்த இந்திய நூல்களிலும் இல்லாத செய்திகளை அறிந்துகொள்ள முடிகிறது. அதன் வரலாற்றுப் பின்புலத்தை ஆராய்வோம்.

பறவையியல் அறிஞர்கள் கன்றுகாலிகளின் மீது அமர்ந்து பயணம் செய்யும் கரிக்குருவிகளை விவரித்துள்ளனர். தாவரங்களின் கொம்பிலோ, மின்சாரக் கம்பங்களிலோ அமர்ந்திருப்பதும் பார்க்கலாம். ”The King-crow enjoys rides on the backs of the grazing cattle” - Ornithology works.
https://www.youtube.com/shorts/oBU8d05gVw8
https://www.youtu.be/Mp62NiOf0HA
https://www.youtube.com/shorts/sKqeE52aH08
https://www.youtube.com/shorts/H45-ytx3i3c
https://youtu.be/HtBf1MyLGh4 (கோவை சதாசிவத்தின் விளக்கம்)
https://thanjavur14.blogspot.com/2015/03/1-drongo-.html

காஞ்சிபுரத்தில் பிறந்த பிள்ளைலோகஞ் சீயர் திருப்பாவை தனியன்களுக்கு உரை செய்துள்ளார். பதினாறாம் நூற்றாண்டு இறுதியில்  எழுதிய திருப்பாவை வியாக்கியானப் பதவுரையில் ‘ஆனைச்சாத்தன் - வலியன் என்னும் பாரத்வாஜ பக்ஷி’ எனக் குறிப்பிடப்படுகிறது. இப் பதவுரை சோழசிம்மபுரம் (சோளிங்கர்) நகரில் இருந்த தொட்டாச்சாரியார் செய்தது. பெரியவாச்சான்பிள்ளையின் திருப்பாவை மூவாயிரப்படியுடன் அச்சிடப்பட்டுள்ளது. http://acharya.org/bk/pb/PAP/tpv3pv.pdf . திருப்பாவை மூவாயிரப்படிக்கான சின்ன அரும்பதம், "பரத்வாஜ பக்ஷி' என்று வடமொழியிலும், "வலியன்' என்று தமிழிலும் பொருள் தருகிறது. தமிழ் நாட்டுக் கோயில் கல்வெட்டு ஒன்றில் ‘இவந்தானும்... அடைகுடி ஆனைச்சாத்தனும்’ என்ற ஒரு வரி வருகிறது. ஆனைச்சாத்தன் என்பது மக்கட்பெயராக இருந்தமை தெரிகிறது. வேளாளர்களில் காரி என்ற குலப்பெயர் (Totemic symbol) இருக்கிறது. ஆழ்வார்களின் தலைவர் (ப்ரபந்ந ஜநகூடஸ்தர்)  நம்மாழ்வார். அவர் காரி மாறன் என்று தன்னைக் குறிப்பிடும்போது அவரது கோத்திரப்பெயரைச் சொல்லியுள்ளார். கொங்கு வேளாளரில் காரி கூட்டத்தினர் உள்ளனர். காரி = வலியன் (அ) பாரத்துவாஜ பட்சி.

சங்க காலத்தில் சேர நாட்டின் தலைமையிடமாகக் கொங்கு நாடு விளங்கியது. பாண்டியருக்குப் பொதிகை மலை போல, சேரர்களின் குலபருவதமாகக் கொல்லிமலை இருந்தது. வஞ்சி மாநகர் என்னும் கரூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட கடைசிச் சேரமன்னர்களில் குலசேகர ஆழ்வார் முக்கியமானவர் என சங்க நூல், தொல்லியல் அறிஞர்கள் விரிவாக ஆய்ந்து விளக்கியுள்ளனர். ஆழ்வாரின் சில பாசுரங்கள், சேர மன்னனாக விவரணம்:

#707
அல்லி மலர் திருமங்கை கேள்வன் தன்னை நயந்து இள ஆய்ச்சிமார்கள்
எல்லி பொழுதினில் ஏமத்து ஊடி எள்கி உரைத்த உரை-அதனை
கொல்லி நகர்க்கு இறை கூடல்_கோமான் குலசேகரன் இன்னிசையில் மேவி
சொல்லிய இன் தமிழ் மாலை பத்தும் சொல்ல வல்லார்க்கு இல்லை துன்பம் தானே

கொல்லி நகர் - வஞ்சி மாநகர் (கருவூர்).

#718
மல்லை மாநகர்க்கு இறையவன்-தன்னை வான் செலுத்தி வந்து ஈங்கு அணை மாயத்து
எல்லையில் பிள்ளை செய்வன காணா தெய்வ தேவகி புலம்பிய புலம்பல்
கொல்லி காவலன் மால் அடி முடி மேல் கோலமாம் குலசேகரன் சொன்ன
நல் இசை தமிழ் மாலை வல்லார்கள் நண்ணுவார் ஒல்லை நாரணன் உலகே

#676
அங்கை ஆழி அரங்கன் அடி இணை
தங்கு சிந்தை தனி பெரும் பித்தனாய்
கொங்கர்_கோன் குலசேகரன் சொன்ன சொல்
இங்கு வல்லவர்க்கு ஏதம் ஒன்று இல்லையே

#667
அல்லி மா மலர் மங்கை நாதன் அரங்கன் மெய்யடியார்கள்-தம்
எல்லை இல் அடிமை திறத்தினில் என்றும் மேவு மனத்தனாம்
கொல்லி காவலன் கூடல் நாயகன் கோழி கோன் குலசேகரன்
சொல்லின் இன் தமிழ் மாலை வல்லவர் தொண்டர் தொண்டர்கள் ஆவரே

தன்னாலே தன் உருவம் பயந்த தானாய் தயங்கு ஒளி சேர் மூ_உலகும் தானாய் வானாய்
தன்னாலே தன் உருவின் மூர்த்தி மூன்றாய் தான் ஆயன் ஆயினான் சரண் என்று உய்வீர்
மின் ஆடு வேல் ஏந்து விளைந்த வேளை விண் ஏற தனி வேல் உய்த்து உலகம் ஆண்ட
தென்நாடன் குடகொங்கன் சோழன் சேர்ந்த திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே

தென்நாடன் - பாண்டியன்; குடகொங்கன் - சேரன்; சோழன் - மூவேந்தர்கள்.

----------

#2804
கதிக்கு பதறி வெம் கானமும் கல்லும் கடலும் எல்லாம்
கொதிக்க தவம் செய்யும் கொள்கை அற்றேன் கொல்லி காவலன் சொல்
பதிக்கும் கலை கவி பாடும் பெரியவர் பாதங்களே
துதிக்கும் பரமன் இராமாநுசன் என்னை சோர்விலனே

கரூர் அருகே இருப்பது கொல்லிமலை. கொல்லிநகர் இறை (கரூரின் மகாராசன்), கொங்கர் கோன், கொல்லி காவலன் என்று தன்னைச் சொல்கிறார் சேர மன்னர் குலசேகரர்.  திருப்பாவையில் சேர நாட்டு மன்னர் குலசேகர ஆழ்வாரைக் குறிக்கும் பாடலாக, ”கீசு கீசு என்று எங்கும் ஆனைச்சாத்தன் கலந்து பேசின பேச்சு அரவம்” எனத் தொடங்கும் பாசுரத்தை உரைகாரர்கள் வியாக்கியானம் செய்வது மரபு. மாடுகளின் மேல் அல்லது கம்பியில் அமர்ந்துள்ள கரிக்குருவியின் வால் நீண்டு கீழே தொங்கிக்கொண்டிருக்கும். இந்த அழகிய காட்சி வேழம் மிக்க மலைநாட்டில், அதாவது சேர நாட்டில், யானையில் ஆரோகணித்து யானையைச் செலுத்தும் பாகனை நினைவூட்டுகிறது.  யானைப் பாகன் கால் தொங்கி, அதன் காதினை உராஞ்சி உகைத்து களிற்றைச் செலுத்துவர். தேவைக்குச் செண்டு (அங்குசம்) பயன்படுத்துவர். Like the steering wheels of automobiles, ears of elephants serve the same purpose to obey the mahout's commands. யானை கழுத்தின் மீது அமர்ந்து காலால் உராய்ந்து அப் பெருவிலங்கை உகைக்கும் முறையைக் குலசேகர ஆழ்வார் பதிவுசெய்கிறார்: “கம்பமத யானை கழுத்தகத்தின் மேலிருந்து இன்பமரும் செல்வமும் இவ்வரசும் யான் வேண்டேன்.” (1) புல் > பில், (2) குராம்பு (குளம்பு/குரம்பு) clove spice > கிராம்பு (3) துலாக்கிணறு > திலாக்கிணறு (இலங்கை)... ஆதற்போல்,  உராஞ்சு-   > இறாஞ்சு - என்றும் பேச்சில் வரும்.
https://commons.wikimedia.org/wiki/File:Mahout_on_an_elephant;_gouache_on_paper.jpg
https://www.researchgate.net/figure/Indian-mahout-astride-the-elephant-Dated-1813_fig2_348977268
https://www.metmuseum.org/art/collection/search/825608
https://www.etsy.com/listing/644643924/antique-indian-elephant-painting-royal

யானைப் பாகனின் கால்கள் யானை கழுத்தில் தொங்கி உராஞ்சும் முறை:
https://www.youtube.com/watch?v=FUoD_DmbVv0

https://factsanddetails.com/asian/cat68/sub431/item2469.html
” Mahout and Elephant Communication:  Mahouts control the elephants with verbal commands and barefoot nudges and kicks to the back of the ears and occasional jabs with a stick or devise that looks like a conductors baton with a hook . Mahouts constantly move their feet to guide the elephants. One kick might tell an elephant to stop. Another tells it tp rollover in the mud.”

“Rising a dozen feet off the ground astride Prathida's neck, I feel the stiff hairs on her skin prickle my legs as I practice steering by wriggling my toes behind her ears while calling out ben (turn), soc (back up), and other commands from the more than 40 to which she responds. Like a proud father, Prathida's mahout basks in her accomplishments. Jawn was a groundskeeper at the center before deciding he liked elephants so much that he wanted to sign on as an apprentice, then train to become a full mahout. "The best part is getting over your fear and making a friend," he says. Now if he visits his family for several days, he returns to find Prathida acting mopey. "The funny thing is, I miss her too," he says. "I think about her a lot when I'm away."

https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC6912500/
”He noted that the ease with which mahouts could communicate to elephants and the responsiveness of the elephants were things he looked for when determining whether a mahout was effective. He mentioned that some mahouts might use their whole leg when riding an elephant, but a skilled mahout only needed to use the lower part. His view is that mahouts should be judged on their “nice” behavior around elephants, dovetailing with the “good” and “bad” behavior discussion that the mahouts themselves engage in regarding elephant personality.”

பல்லவர் காலச் சாத்தன் சிலைகள் கொங்குநாட்டிலும், தமிழக முழுதும் கிடைக்கின்றன. இவற்றிலும் “ஆனை ராஞ்சுகிற சாத்தன்” வடிவிலே அமைந்திருப்பது காண்கிறோம். மலையாளிகள் தம் மலையாள பாஷையில் "ஆனை ராஞ்சு பாகன்/சாத்தன்" போல அமரும் கரிச்சான் குருவிகளை (Drongos) ஆனைராஞ்சி என்ற் அழைப்பது இதனால்தான். வட இந்தியாவில் கோட்டைப்பாலன் என்பதும் உவமையாகுபெயர்தான். அதேபோல, ஆனைச்சாத்தன் என்ற மலைநாட்டுப் பெயரை, மலையாள தேசம் ஆகிய சேரநாட்டு அதிபர் குலசேகர ஆழ்வார் பற்றிய குறிப்புகள் கொண்ட திருப்பாவைப் பாசுரத்திலே பயன்படுத்தியது அருமையானது, பெருமை தருவது. பின்வரும் சோழர் பஞ்சலோகப் படிமங்களில் கழுத்தகத்தில் அமர்ந்து யானை உகைக்கும் “ஆனைச்சாத்தன்” (=ஆனை ராஞ்சு சாத்தன்) பார்க்கவும்:
https://en.wikipedia.org/wiki/File:Ayyanar_on_elephant_side_view.jpg
https://collections.vam.ac.uk/item/O62622/figure-unknown/
https://bronzesofindia.com/ayyanar-with-consorts/
https://bid.stairgalleries.com/online-auctions/stair-galleries/south-india-bronze-figure-of-aiyanar-astride-an-elephant-tamil-nadu-1381314
https://dome.mit.edu/handle/1721.3/184324
http://www.heritageuniversityofkerala.com/JournalPDF/Volume7/11.pdf
https://ethnoflorence.wordpress.com/2011/12/18/south-indian-images-of-gods-and-goddesses-h-krishna-sastri-b-a-rao-saheb-madras-government-press-1916/
http://www.payer.de/quellenkunde/quellen05.htm (ceramic horse in village Aiyanar temple, 1909 photo).
https://amazinglanka.com/wp/dedigama-elephant-lamp/#jp-carousel-63929

யானைகளை உலகிலே முதன்முதலாகப் பயிற்றிய நாகரிகம் சிந்து சமவெளியில் ஆகும். மலைநாட்டு யானைகளை ஓட்டும் பாகன்களைப் பார்த்துச் சாத்தன் என்னும் சாஸ்தா வடிவத்தை ஆனையுடன் அமைத்தனர் பழந்தமிழர்கள்.  காலால் யானையின் காதை உராஞ்சும் நுட்பத்தை ஆனை ராஞ்சு சாத்தன், ஆனைராஞ்சி, ஆனைச்சாத்தன் என்பவற்றில் உவமையாகுபெயர் ஆக்கியது கலையுணர்ச்சியின் வெளிப்பாடு. சண்ட என்றால் கூர்மை. இது ஷ்வா (Schwa) பெறும்போது செண்டு என்றாகி அங்குசத்தைக் குறிக்கும். செண்டு என்னும் அங்குசத்தின் வடிவ வளர்ச்சியைப் பல்லவர், மூவேந்தர்கள் கால அய்யனார் சிலைகளில் காணலாம். பின்னர் செண்டு என்பது குதிரை ஓட்டும் சாட்டைக்கும் பொருள்விரிந்தது.

’கீசுகீசு என்று எங்கும் ஆனைச்சாத்தன்’ என்பது சேர நாட்டு அரசர் குலசேகர ஆழ்வாரைக் குறிக்கும் பாசுரம் என்பது ஸ்ரீவைஷ்ணவர்கள் கருத்து மரபு. சேர நாடு யானைகளின் நாடு. ”மலைநாடு வேழனுடைத்து” - ஔவை. எனவே, யானையில் அமரும் சாத்தன் (அய்யனார்) வடிவினதாக, ஆனைச்சாத்தன் என வலியனைப் பாடித் திருப்பாவைப் பாசுரம் அமைகிறது. கால், வால் உருவத்தால் ஆனைச்சாத்தன் உவமையாகுபெயர் ஆயிற்று.

பி. ப. அண்ணங்கராச்சாரியர் வியாக்கியானம் பார்ப்போம்.
”(ஸ்வாபதேசம்)–இது; பெரியாழ்வார்க்கு அடுத்த முந்தினவரான குலசேகராழ்வாரை யுணர்த்தும் பாசுரம், ‘பேய்ப்பெண்ணே!, நாயகப் பெண்பிள்ளாய்?, தேசமுடையாய்!, என்ற மூன்று விளிகளும் குலசேகராழ்வாரை வற்புறுத்துவன. பெருமாள் திருமொழியில் மெய்யில் வாழ்க்கையை என்றவொரு பதிகத்தினால் தம்மைப் பெரும் பேயராகச் சொல்லிக்கொண்டவர் இவ்வாழ்வார்.  ஏர் மலர்ப்பூங்குழல், ஆலை நீள் கரும்பு, மன்னுபுகழ்க் கௌசலைதன்   என்ற பதிகங்களில் பல பெண்களின் தன்மையை யடைந்து பேசினாருமிவர். “கொல்லி காவலன் கூடல் நாயகன்” என்று அரசரான தன்மை தோற்றப் பேசினராதலால் நாயகப் பெண் பிள்ளாய் என்றது.  அன்றியும், ஒரு ஹாரத்தில் நட்ட நடுவிலுள்ள மணியை ‘நாயகக்கல்’ என்பதுண்டு.  குரு பரம்பரையில் எம்பெருமானாரை நடுநாயகமென்று யதிராஜ ஸப்ததியில் தேசிகன்  கூறினர்; யதிராஜேந நிபத்த நாயக ஸ்ரீ: மஹதீ குரபங்க்தி ஹாசயஷ்டி:”  என்கிறார் அதுபோலவே ஆழ்வார்களுள் குலசேகரர் நடுநாயகமாக வுள்ளவர்.  பொய்கையார் பூதத்தார் பேயார் மழிசையர் மாறன் என முன்னே ஐவர்; பட்டநாதன் கோதை தொண்டரடிப்பொடிகள் பாண்பெருமாள்  கலியன் எனப்பின்னே ஐவர்; நடுவே குலசேகரர்.  ஆகவே இதுபற்றியும் நாயகப்பெண்பிள்ளாய் என்ற பிறி நன்கு பொருந்தும்.  (தேசமுடையாய்!) பகவத் கீதையில் (18-43) (சௌர்யம் தேஜோத்ருதிர் தாக்ஷ்யம் —  க்ஷாத்ரம் கர்ம ஸ்வபாவஜம்.) என்று தேஜஸ்ஸு க்ஷத்திரிய தர்மமாகச் சொல்லப்பட்டிருப்பதற்கிணங்க இந்த விளி இவ்வாழ்வாருடைய க்ஷத்திரியத்வத்தைத் தெரிவிக்கும். அன்றியும், “தேவத்வமும் நிந்தையானவனுக்கு ஒளிவரும் ஜநிகள் போலே ப்ரஹ்மஜன்மமும் இழுக்கென்பார்க்குப் பண்டை நாளில் பிறவி உண்ணாட்டுத் தேசிறே” என்ற ஆசார்ய ஹ்ருதய ஸ்ரீ ஸுக்தியின்படியும், அதற்கு மூலமான “மண்ணாட்டிலாராகியெவ்விழிவிற்றானாலும்;, ஆழியங்கைப் பேராயற்கு ஆளாம் பிறப்பு – உண்ணாட்டுத் தேசன்றே” என்ற பெரிய திருவந்தாதிப் பாசுரத்தின்படியும் பகவத் சேஷத்வத்திற்கு அநுகூலமான பிறப்பே  தேஜஸ்ஸென்று நிர்ணயிக்கப்படுகிறது;  அப்படிப்பட்ட பிறப்பை ஊனேறு செல்வத்து என்ற பதிகத்தில் பாசுரந்தோறும் ஓரோ விதமாக விரும்பினவர் இவ்வாழ்வாரேயாதலால் தேசமுடையார் இவரேயாகத்தகும். இப்பாட்டில்       “ஆனைச்சாத்தன்” என்ற பதப்பிரயோகம் கவனிக்கத் தக்கது. இச்சொல் மலையாள பாஷையிலிருந்து திசைச் சொல்லாகத் தமிழில் வழங்குவதென்பர்.  (ஆன சாதம்) என்று மலைநாடர் வலியனென்னும் பறவையை வழங்குவராம்.  இவ்வாழ்வார் மலைநாட்டில் திருவவதாரித்தவராதலால் அத்திசைச்சொல் இங்குட் பரவசமாகவே அமைந்தது போலும்.  காசும் பிறப்பும் என்று ஆபரண விசேஷங்களைப் பற்றின ப்ரஸ்தாவமிருப்பது இவ்வாழ்வாருடைய சரிதையில் ஆபரண ப்ரஸ்தாவமுள்ளவாற்றை ஒருவாறு நினைப்பூட்டும்.  “ஆரங்கெடப் பரனன்பர் கொள்ளாரென்று அவர்களுக்கே வாரங்கொடு குடப்பாம்பில் கையிட்டவன்” என்ற தனியனும் ஸ்மரிப்பது.  “வாசநறுங் குழ லாய்ச்சியர் மத்தின லோசைபடுத்த தயிரரவம்” என்றது பெருமாள் திருமொழியில் “கெண்டை யொண்கணை மடவாளொருத்தி கீழையகத்துத் தயிர் கடையக்கண்டு….. வண்டமர் பூங்குழல் தாழ்ந்துலாவ….. தண் தயிர் நீ கடைந்திட்ட வண்ணம்” என்ற பாசுரத்துச் சொற்சுவைகளை நன்கு நினைப்பூட்டும்.  (நாராணயன் மூர்த்தி கேசவனைப் பாடவும்) திருஷ்ணாவதாரத்தில் குதிரை வடிவாக வந்த கேசியென்னு மஸுரணை வதஞ்செய்ததனால் கேசவனென்றது.  இவ்வாழ்வார் தமது திருமொழியில் முதன் முதலாக இந்த வரலாற்றையே பேசியநுபவித்தார் மாவினை வாய் பிளந் துகந்தமாலை என்று.  ஸ்வப்ரபந்தத்தை “நலந்திகழ் நாரணனடிக்கீழ் நண்ணுவாரே” என்று நாராயணனைப் பாடித் தலைக் காட்டினார்.  (கேட்டே கிடத்தியோ) இவ்வாழ்வார் நாடோறும் அந்தணர்களைக் கொண்டு ஸ்ரீராமாயணபாராயணஞ் செய்வித்துத் தாம் கேட்டவர்.  கேட்டு, இருந்தவிடத்திலிராமல் படையெடுத்துஞ்சென்றவர். குருபரம்பரையில் காணலாகும்.”

----------

ரோமானியர் காலத்தில் பொம்பய் நகரில் கிடைத்த யானையும், பாகனும்:
மலையாளத்தில் ஆனைராஞ்சி என்பர். ஆனைச்சாத்தனுக்குத் தொடர்புள்ள பெயர்.
ஆனையை எந்தக் கரிச்சானும் உராய்தல் கிடையாது. ஆனைப் பாகன் காலால் ஆனையின் காதை ராஞ்சுவான். (உராய்தல்/உராஞ்சுதல் > இறாஞ்சுதல்). அதுபோல், வால் நீண்ட கரிக்குருவிக்கு உவமையாகுபெயர். 

Mahout leg controlling an elephant by its ears. Compare with the Aiyanar statues, and his leg near the elephant ears. 

நா. கணேசன்


Swaminathan Sankaran

unread,
Dec 24, 2023, 4:35:49 PM12/24/23
to santhav...@googlegroups.com
Thanks for this post, especially the reference to Kovai Sadasivam'spiece on Karichan Kuruvui.
Enjoyed it very much.

Sankaran

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAA%2BQEUc%2Bqx7jd_iFTi1fn%3Dcg%2B3K5cX4XPQ99DFfdcsM5aefRTg%40mail.gmail.com.


--
 Swaminathan Sankaran

lns2...@gmail.com

unread,
Dec 25, 2023, 8:20:58 AM12/25/23
to சந்தவசந்தம்

இந்த லிங்க் நேரே யானை படிமத்துக்கு இட்டுச் செல்லும். யானையைப் பார்த்தால் இந்திய யானைப்போல் தெரிகிறது. ஆனால் பாகனோ வேற்றூர் ஆள் போல் தெரிகிறான்.

வேலைப்பாடு நன்றாக இருக்கிறது. இது என்ன மண்ணால் செய்ததா? பார்த்தால் நீர் எண்ணை மது போன்ற திரவத்திற்காக உபயோக்கித்தாற்கள் என்று தெரிகிறது.

Srini

Arunachalam Sabapathy

unread,
Dec 26, 2023, 2:45:29 AM12/26/23
to santhav...@googlegroups.com
அருமையானபதிவு.சொல்லின் பொருள் உணர்ந்தோம்.சான்றாதரங்களும் அருமை்குறிப்பாக நஞ்சில்லா உணவு கோவை சதாசிவம்.வாழத்துக்கள் கணேசன்.சபா.அருணாசலம்

திங்., 25 டிச., 2023, பிற்பகல் 6:51 அன்று lns2...@gmail.com <lns2...@gmail.com> எழுதியது:
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

N. Ganesan

unread,
Dec 26, 2023, 4:20:37 PM12/26/23
to santhav...@googlegroups.com
On Mon, Dec 25, 2023 at 7:21 AM lns2...@gmail.com <lns2...@gmail.com> wrote:

இந்த லிங்க் நேரே யானை படிமத்துக்கு இட்டுச் செல்லும். யானையைப் பார்த்தால் இந்திய யானைப்போல் தெரிகிறது. ஆனால் பாகனோ வேற்றூர் ஆள் போல் தெரிகிறான்.

வேலைப்பாடு நன்றாக இருக்கிறது. இது என்ன மண்ணால் செய்ததா? பார்த்தால் நீர் எண்ணை மது போன்ற திரவத்திற்காக உபயோக்கித்தாற்கள் என்று தெரிகிறது.

There are several questions raised due to this rare terracotta piece of an elephant found from Pompeii city destroyed by volcano.

Due to connection from Greek times with India, did Romans learnt the technique of domesticating elephants? Is this an Indian elephant or, an African bush elephant? Is this an African mahout? etc. etc.,

Probably, Klaus Kartunnen will be able to tell more. will ask.

NG

N. Ganesan

unread,
Dec 26, 2023, 4:42:31 PM12/26/23
to santhav...@googlegroups.com
“VI.15.5 Pompeii. Clay figurine of an elephant carrying a tower on its back, 0.35m high incl. base. The figurine served as a vessel for liquid. The liquid was put in through the top of the tower, which was open. See Notizie degli Scavi di Antichità,1897, p.25, fig. 3. It was found in October 1895 in or near the garden niche, together with a group of other objects. See Notizie degli Scavi di Antichità,1895, p. 438. According to Jashemski, this was also a jug, and was now in the Naples Archaeological Museum, inventory number 124845, Ruesch 442. See Jashemski, W. F., 1993. The Gardens of Pompeii, Volume II: Appendices. New York: Caratzas. (p.155)”

Usually, published under the title, " 

Clay Statue Depicting Moor Riding Elephant with Turret on Back, from Pompeii"

Reply all
Reply to author
Forward
0 new messages