கலைமகளும் அவயாம்பிகையும்

8 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Jan 23, 2026, 3:45:51 AM (7 days ago) Jan 23
to Santhavasantham
இன்று வசந்த பஞ்சமி, கலைமகளுக்கு உகந்த நாள்!

சரசுவதி போலவே அவயாம்பிகை வலது மேல் கையில் அட்சர மாலையுடனும், இடது மேல் கையில் அமுத கலசத்துடனும் திகழ்வது அரிய அமைப்பு. மயிலாடுதுறைத் தலத்தின் தேவாரத்தை நினைவூட்டுகிறது.
https://maragadham.blogspot.com/2010/10/blog-post_16.html
"தமிழகத்தில் சரஸ்வதிக்கென உள்ள ஒரே கோயில் இந்த கூத்தனூர் மஹா சரஸ்வதி அம்மன் ஆலயம்தான். இக்கோயிலில் ராஜகோபுரம் தனியாக இல்லை. சரஸ்வதி தேவி குடியிருக்கும் கருவறைக்கு மேலே ஐந்து கலசங்களுடன் ஒரு கோபுரம் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலில் சரஸ்வதி தேவி வெண் தாமரைப் பூவில் அமர்ந்திருக்கிறார். வெண்பட்டு உடுத்தியிருக்கிறார். வலது கரத்தில் சின்முத்திரையுடனும், இடது கரத்தில் புத்தகத்துடனும், வலது மேல் கையில் அட்சர மாலையுடனும், இடது மேல் கையில் அமுத கலசத்துடனும், ஜடாமுடியுடனும் காட்சி தருகிறார் சரஸ்வதி தேவி. "

மாயூரம் நல்லத்துக்குடி கிருஷ்ணையர் பாடிய அவையாம்பிகை சதகம், குறிப்புரையுடன். வித்துவான் வாழ்ந்த காலம்: 19-ம் நூற்றாண்டு.
https://archive.org/details/dli.jZY9lup2kZl6TuXGlZQdjZM8luQy.TVA_BOK_0006121/page/185/mode/2up
சதகத் திரட்டு - தொகுதி 1 மேலே உள்ள வலைக்கண்ணில். தொகுதி 2: https://archive.org/details/dli.jZY9lup2kZl6TuXGlZQdjZY9kuxy.TVA_BOK_0006112/mode/2up
----------

வசந்த பஞ்சமித் திருநாளில், அன்னம் போல வீட்டு  வாசலில் கோலம் இட்டு அழைப்பது மரபு.  அன்னப் பறவை என்னும் ஸூப்பர் பறவை பற்றிப் பல ஆண்டுகளாய் விளக்கியுள்ளேம். தேவதத்த பட்டநாயக், ஹிண்டு பத்திரிகையில் கட்டுரை இப்போது எழுதியுள்ளார்.
Hamsa is Sarasavati's vehicle. The bar-headed goose which is a superbird crossing the Himalayas twice annually to reach India.

Written by scholars for more than a century. I've written from the point of view of ancient Tamil Sangam texts and Indian art a decade ago.

See the latest piece about Hamsa (= BH goose) by Devdutt Pattanaik. https://x.com/devduttmyth/status/2013203671706734593

A nice short story by Ki. Vaa. Jagannathan pitting the Hamsa against the Nandi and Garuda. Its title is "Annattin vetri" (The Triump of Annam).
https://nganesan.blogspot.com/2023/04/hamsa-mantra-ajapaa-annattin-verri.html
Annam ( < alnam அல்நம், இரவில் வலசை செல்லுதலான் ஏற்பட்ட பெயர்.) is Hamsam in Sanskrit.

N. Ganesan
https://x.com/_Agnijwala_/status/2014337797025656974
https://x.com/MSivaRajan7/status/2014548675738140714

Swaminathan Sankaran

unread,
Jan 23, 2026, 11:57:28 AM (6 days ago) Jan 23
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி, திரு கணேசன்.


சங்கரன் 

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAA%2BQEUckn2uauBX05gW1z_pBRNU6hFsgP%2BHpyqTxpUrbhF%2BC9g%40mail.gmail.com.


--
 Swaminathan Sankaran

N. Ganesan

unread,
9:04 AM (9 hours ago) 9:04 AM
to santhav...@googlegroups.com
On Fri, Jan 23, 2026 at 10:57 AM Swaminathan Sankaran <swamina...@gmail.com> wrote:
மிக்க நன்றி, திரு கணேசன்.
சங்கரன் 

ஒட்டக்கூத்தர்  கலைமகளுக்குக் கோயில் எடுத்தவர். எனவே கூத்தனூர் என்றே அவ்வூர் அழைக்கப்படுகிறது. இந்தியாவில் சரசுவதிக்கென்றே உள்ள தனிக்கோயில்களில் அபூர்வமானது. நன்னிலத்தை அடுத்துள்ள பூந்தோட்டம் என்னும் ஊரை அடுத்துள்ள காவிரிக் கரையில் உள்ள கூத்தனூரில் ‘காணி உடைய மலரி உடையார் கவிச் சக்கரவர்த்திகள் பேரனார் கவிப்பெருமாளான ஓவாத கூத்தனார்’ என்ற கல்வெட்டுக் காணப்படுகிறது. கலைமகள், பிரமன், பிரமசாஸ்தா (முருகன்) விக்கிரகங்கள் போன்றே, கூத்தனூர் சரஸ்வதியும் அக்ஷமாலை, அமுதகலசம் கொண்டுள்ளாள்.
 
மலரி என்னும் ஊர் அவரது சொந்த ஊர். "இவ்வூர் திருச்சிராப்பள்ளிக்கு அண்மையில் இக்காலத்தில் திருவரம்பூர் என்று வழங்கிவரும் திரு எறும்பியூரே என்பது அங்குள்ள கோயிற் கல்வெட்டால் உறுதி எய்துகின்றது." (தி. வை. சதாசிவப் பண்டாரத்தார்). இதனைக் கூறும் வெண்பா:

  சென்று செவியளக்கும் செம்மையவாய்ச் சிந்தையுள்ளே
  நின்றளவில் இன்பம் நிறைப்பவற்றுள் - ஒன்று
  மலரிவரும் கூந்தலார் மாதர்நோக்கு ஒன்று
  மலரிவரும் கூத்தன்றன் வாக்கு
 
இலக்கண விளக்கம். திருவாரூர் வைத்தியநாத தேசிகர்.
இருபொருள் வேற்றுமைச் சமம் வருமாறு:

    "சென்று செவிஅளக்கும் செம்மையவாய்ச் சிந்தையுளே
     நின்று அளவுஇல் இன்பம் நிறைப்பவற்றுள், - ஒன்று.
     மலர்இவரும் கூந்தலார் மாதர்நோக்கு; ஒன்று
     மலரிவரும் கூத்தன்தன் வாக்கு"

 என வரும். மலரி - ஊர். இது கூற்று.

     [மாதர் நோக்கும் கூத்தன் வாக்கும் இயல்பினான் சமமாவன. மாதர் நோக்குக்
 காதளவும் நீண்டு கடைசிவந்து என் உள்ளத்தில் எல்லையற்ற இன்பத்தை நிறைக்கும்;
 மலரி என்ற ஊரில் தோன்றி கூத்தன் என்ற புலவனின் வாக்குத் தன் சீரிய கூரிய
 தீஞ்சொற்களாலே என் காதுகளை அடைந்து என் மனத்தில் எல்லையற்ற
 இன்பம் பயக்கும் - என்ற இப்பாடலில்,

     இரு பொருள்களின் இயல்புகமளை "சென்று...........நிறைப்ப" என்று சமமாகக்
 கூறிப்பின் இரண்டனையும் மாதர்நோக்கு எனவும் கூத்தன் வாக்கு எனவும்
 வேற்றுமை செய்து காட்டியவாறு.]

மேலும், மணக்குடியில் அவர் வம்சாவளியினர் வாழ்கின்றனர் என சி. கோவிந்தராசனார் தமிழ்ப்பொழில் கட்டுரையில் எழுதியுள்ளார். அங்கே, சாமளாதேவி கோவில் இருந்ததற்கான அடையாளங்களைக் காட்டியுள்ளார். சீகாழியிலும் கவிச்சக்கிரவர்த்தி ஒட்டக்கூத்தர் சில ஆண்டுகள் வாழ்ந்தார் என்பதற்கும் இலக்கிய ஆதாரங்கள் கிடைக்கின்றன.

   ஒட்டக்கூத்தர்
 கட்டளைக் கலித்துறை
கல்விக் கரசு  கவிராச சிங்கம் கலைச்சலதி
வில்விக்கும் வாட்கை அபயர்சஞ் சீவி விமலமுத்தி
புல்விக்கும் ஆகமப் பொக்கசம் வேதப் புயல்கமலச்
செல்விக்குச் சேய்ஒட்டக் கூத்தனல் லாற்புவி செப்பரிதே

பொக்கை > பொக்கயம்/பொக்கசம்:
cf. Kannada bokkasa, Telugu bokkasamu.
https://ta.wikisource.org/wiki/பக்கம்:பட்டினத்தடிகள்.pdf/120
https://groups.google.com/g/tiruvalluvar/c/c7Ln9ZStWMQ

  சரசுவதி அந்தாதி
படிக நிறமும் பவளச் செவ்வாயும்
கடிகமழ்பூந் தாமரைபோற் கையுந் - துடியிடையும்
அல்லும் பகலும் அனவரத முந்துதித்தால்
கல்லுஞ்சொல் லாதோ கவி. - கம்பர்

சந்தவசந்தத்தில் சரசுவதி - அனந்த்.
கூத்தனூர் சரஸ்வதி

என்மாடென் மனையிதென் றெல்லாமும் தமதென
.. எண்ணுவோர் தம்வாழ்க்கையில்
..... என்னென்ன வகைகளில் இயலுமோ அவைவழி
....... ஈட்டுவார் பொருளவற்றுள்

என்னானும் உயிர்பிரிந்(து) இடுகாடு செல்கையில்
... இணைந்துதம் மோடுவாரா(து)
... என்னுமொரு நினைவிலா(து) எடுத்தநற் பிறவியை
.... இழிந்தவோர் பழியாக்குவார்

இன்னாரைப் போலிலா(து) இன்சொலோ டிரக்கமும்
.. இயைந்தநல் மாந்தரேதும்
... இல்லாதோர் நெஞ்சிலே இறைவனைக் கண்டவர்க்(கு)
... ஈவதில் இன்பமுறுவார்

அன்னாரைப் பின்தொடர்ந்(து) அடியனும் வாழ்ந்திட
.. அருளைநீ அளித்திடம்மா!
... அன்னத்தில் ஊர்ந்தென(து) எண்ணுளே வாழ்ந்திடும்
......அன்னையே, கலைவாணியே!

(என்னானும் - எதுவாகிலும்; எண்ணுளே = எண்ணத்துள்)

                                                                 ... அனந்த், கனடா


Reply all
Reply to author
Forward
0 new messages