பழைமையா - பழமையா ?

485 views
Skip to first unread message

Niranjan Bharathi

unread,
Oct 4, 2012, 9:56:57 PM10/4/12
to santhav...@googlegroups.com
எல்லார்க்கும் வணக்கம்,

நீண்ட நாட்களுக்குப் பிறகு மறுபடியும் ஒரு சந்தேகம்.  என் அலுவலகத்தில் என் ஆசிரியர் என்னைக் கூப்பிட்டு பழமை என்பது சரியா ? பழைமை என்பத சரியா ?
என்று கேட்டார்.

நான் அவரிடம் பழமை தான் சரி என்றேன். ஆனால்,  "பழைய" என்று எழுதுகிறார்களே ?  அப்போது பழைமை தானே சரி என்று கேட்டார்.

நான் திருதிருவென்று விழித்தேன்.  அதைப் பார்த்ததும் அவர் "உறுதிப்படுத்துங்க நிரஞ்சன்" என்றார்.

நான் சந்தவசந்தம் இருக்க பயமேன் என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டு "சரி" என்றேன். 

ஆதலால் அதைத் தீர்த்து வையுங்கள் ஆன்றோர்களே. 

அன்புடன்,
நிரஞ்சன் 

Hari Krishnan

unread,
Oct 4, 2012, 10:12:29 PM10/4/12
to santhav...@googlegroups.com


2012/10/5 Niranjan Bharathi <niranjan...@gmail.com>

நீண்ட நாட்களுக்குப் பிறகு மறுபடியும் ஒரு சந்தேகம்.  என் அலுவலகத்தில் என் ஆசிரியர் என்னைக் கூப்பிட்டு பழமை என்பது சரியா ? பழைமை என்பத சரியா ?
என்று கேட்டார்.

நான் அவரிடம் பழமை தான் சரி என்றேன். ஆனால்,  "பழைய" என்று எழுதுகிறார்களே ?  அப்போது பழைமை தானே சரி என்று கேட்டார்.

When in such situation, go back to the base always.

அந்தச் சொல்லின் அடிவடிவங்கள், மற்ற வடிவங்களைச் சொல்லிப் பாருங்கள்:

பழைய பொருள், பழைய புத்தகம், பழையது...... அப்ப, மை சேக்கணும்னா பழை கூடத்தான் சேக்கணும்.  பழைமை.

ஏழை, ஏழையின், ஏழையை, ஏழையுடைய.... ஏழைமை.
ஒப்பு: ஏழு, ஏழின், ஏழை, ஏழோடு....ஏழமை (ஏழாகிய தன்மை... ஏழு பிறவி. ஏழு ஸ்வரம், ஏழு கடல்....இப்படி ஏழுஏழாக இருப்பது ஏழமை.  ஏழையாக இருப்பது ஏழைமை.)

மாறாக, தோழன், தோழி, தோழனுடன், தோழிக்கு, தோழனால், தோழியை.... தோழமை... (தோழைமை இல்லை).

ழமை, ழைமை தொகுதியில், புழக்கத்தில் உள்ள சொற்கள் அனேகமாக இவ்வளவுதான்.  (கிழமை, செழுமை....இதெற்கெல்லாம் சிக்கல் இல்லை.)

வாழ்த்துகள்.

--
அன்புடன்,
ஹரிகி.

Siva Siva

unread,
Oct 4, 2012, 10:22:55 PM10/4/12
to santhav...@googlegroups.com


2012/10/4 Hari Krishnan <hari.har...@gmail.com>
தேடியதில் கண்டது: 


வேண்டாம் என்பது தவறாயினும் இன்று அஃது ஒப்புக்
கொள்ளப்பட வேண்டிய நிலையை அடைந்து விட்டது. வேண்டாவாம்
என்பது வேண்டாம் என மருவிற்றுப் போலும்.

பழமை என்னும் பண்புச் சொல்லும் பழம்பொருள் என்னும்
பண்புத் தொகையும் ழகரம் பெற்றே வரும். "முன்னைப் பழம்
பொருட்கும் முன்னைப் பழம் பொருளே" என்னும் திருவாசக அடியில்
‘ழ’ வருதலைக் காண்க. பழைய என்னும் பெயரெச்சம் ‘ழை’ பெற்றே
வரும். பழமை என்னும் சொல்லின் வடிவம் பழைமை என்பதே.
எனினும், பழமை என்னும் சொல்லே பெருவழக்காக வழங்கி வருகிறது.
இது மரூஉ.

இளமை, இளைஞர், இளைய - இவற்றை இப்படித்தான்
எழுதவேண்டும்.

 

Hari Krishnan

unread,
Oct 4, 2012, 10:48:50 PM10/4/12
to santhav...@googlegroups.com


2012/10/5 Siva Siva <naya...@gmail.com>

தேடியதில் கண்டது: 


வேண்டாம் என்பது தவறாயினும் இன்று அஃது ஒப்புக்
கொள்ளப்பட வேண்டிய நிலையை அடைந்து விட்டது.


கும்பிடச் சொல்லுகிறேன் - உங்களைக்
          கும்பிட்டுச் சொல்லுகிறேன் - என்னை
நம்பவும் நம்பி அன்பினில் தோணும் 
          நம்பிக்கை இல்லையென்றால் - எனக்கொரு
தம்பிடி நஷ்டமுண்டோ!

------கண்டதைச் சொல்லுகிறேன்.. உங்கள் கதையைச் சொல்லுகிறேன்...

Niranjan Bharathi

unread,
Oct 5, 2012, 12:17:47 AM10/5/12
to santhav...@googlegroups.com
அப்படி என்றால் புடவை ? புடைவை ? எது சரி ?

2012/10/5 Hari Krishnan <hari.har...@gmail.com>

--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
 
 



--
http://www.facebook.com/TamilMattumPesuvom

Hari Krishnan

unread,
Oct 5, 2012, 12:20:16 AM10/5/12
to santhav...@googlegroups.com


2012/10/5 Niranjan Bharathi <niranjan...@gmail.com>

அப்படி என்றால் புடவை ? புடைவை ? எது சரி ?

பழைமை, பழமையான கதைதான்.  புடைவை, புடவை, பொடவ ஆயிருச்சு.  ஆனாலும், என்னதான் பழைமையை மீட்டாலும், புடவய உருவிட முடியுமா? :)))

vis gop

unread,
Oct 5, 2012, 1:04:49 AM10/5/12
to santhav...@googlegroups.com
அடி வடிவம் ஆதாரமானால் ஏழின் இயல்பைக் காட்டும் சொல் 'ஏழுமை' என்று இருத்தல் வேண்டாவா? [செழுமை போல]
நல்வாழ்த்துக்களுடன்,
கோபால்.

2012/10/5 Hari Krishnan <hari.har...@gmail.com>

--

Siva Siva

unread,
Oct 5, 2012, 1:06:54 AM10/5/12
to santhav...@googlegroups.com


2012/10/5 Hari Krishnan <hari.har...@gmail.com>



2012/10/5 Niranjan Bharathi <niranjan...@gmail.com>
அப்படி என்றால் புடவை ? புடைவை ? எது சரி ?

பழைமை, பழமையான கதைதான்.  புடைவை, புடவை, பொடவ ஆயிருச்சு.  ஆனாலும், என்னதான் பழைமையை மீட்டாலும், புடவய உருவிட முடியுமா? :)))



:)

This word occurs in thirumuRai as well. It comes in thirunAvukkarasar purANam.

But a search turned up this thirumandhiram song as well!

http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=10&Song_idField=10113&padhi=113&startLimit=1&limitPerPage=1&sortBy=&ampsortOrder=DESC

புடைவை கிழிந்தது போயிற்று வாழ்க்கை
அடையப்பட் டார்களும் அன்பில ரானார்
கொடையில்லை கோளில்லை கொண்டாட்ட மில்லை
நடையில்லை நாட்டில் இயங்குகின் றார்கட்கே.

Hari Krishnan

unread,
Oct 5, 2012, 1:07:14 AM10/5/12
to santhav...@googlegroups.com


2012/10/5 vis gop <vis...@gmail.com>

அடி வடிவம் ஆதாரமானால் ஏழின் இயல்பைக் காட்டும் சொல் 'ஏழுமை' என்று இருத்தல் வேண்டாவா? [செழுமை போல]
நல்வாழ்த்துக்களுடன்,
கோபால்.

ளைஞன் இமையாக இருக்கணுமா, இளைமையில் இளைக்கணுமா

Hari Krishnan

unread,
Oct 5, 2012, 1:09:42 AM10/5/12
to santhav...@googlegroups.com


2012/10/5 Hari Krishnan <hari.har...@gmail.com>

ஏழின் இயல்பைக் காட்டும் சொல் 'ஏழுமை'

ஏழ்கடல் வைப்பினும் தன்மணம் வீசி இசைகொண்டு வாழியவே...

இற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும்...

ஏழு-வுக்கும் அடியில் இருப்பது ஏழ்.

Hari Krishnan

unread,
Oct 5, 2012, 1:26:43 AM10/5/12
to santhav...@googlegroups.com


2012/10/5 vis gop <vis...@gmail.com>

அடி வடிவம் ஆதாரமானால் ஏழின் இயல்பைக் காட்டும் சொல் 'ஏழுமை' என்று இருத்தல் வேண்டாவா? [செழுமை போல]
நல்வாழ்த்துக்களுடன்,
கோபால்.

சிலசமயங்களில் இரண்டு வடிவங்களும் சரியாக இருப்பதும் உண்டு; பொருள் வேறுபாடு இருப்பதும் உண்டு.

ஆள்+மை=ஆண்மை என்றும் வரலாம், ஆளுமை என்றும் வராலம்.  இரண்டும் வேறுபட்ட பொருள் தருவன.

vis gop

unread,
Oct 5, 2012, 1:40:37 AM10/5/12
to santhav...@googlegroups.com
ஏழு-வுக்கும் அடியில் இருப்பது ஏழ்.

இந்த விளக்கம் 'ஏழ்மை'க்கு இட்டுச் செல்வதுபோல் இருக்கிறது. மரபினால் ஏழுமை சரி என்று நிறுவப் பட்டிருந்தால் அதுவே ஆதாரம்!

இன்னொரு ஐயம். ஏழ், எழு என்ற பயன்பாடு, ஓர், ஒரு என்பது போலவே பின்வரும் சொல்லைப் பொருத்ததல்லவா? 'எழுகடல்' என்பது 'ஏழ்கடல்' என்பதைவிடச் சிறந்த சொல்லமைப்பா?
(உ.ம.) எழுகடல் மணலை.., ஏழிரண்டாண்டின்  வா....

நல்வாழ்த்துக்களுடன்,
கோபால்.

2012/10/5 Hari Krishnan <hari.har...@gmail.com>

--

Hari Krishnan

unread,
Oct 5, 2012, 2:14:08 AM10/5/12
to santhav...@googlegroups.com


2012/10/5 vis gop <vis...@gmail.com>

இன்னொரு ஐயம். ஏழ், எழு என்ற பயன்பாடு, ஓர், ஒரு என்பது போலவே பின்வரும் சொல்லைப் பொருத்ததல்லவா? 'எழுகடல்' என்பது 'ஏழ்கடல்' என்பதைவிடச் சிறந்த சொல்லமைப்பா?
(உ.ம.) எழுகடல் மணலை.., ஏழிரண்டாண்டின்  வா....

ஓர் ஒரு என்பது a, an போலப் பயன்படுத்தவேண்டும் என்று எந்த இலக்கண நூலும் சொன்னதில்லை.  எந்தப் பழையநாள் இலக்கியமும் இந்த விதியைக் கடைப்பிடித்தில்லை.  ஓர்+அமைப்பு=ஓரமைப்பு என்று (ஒரு அமைப்பு என்பதைக் காட்டிலும்) உச்சரிக்க எளிமையாக இருப்பதால் இந்தப் புதுவிதி புழக்கத்துக்குள் வந்துவிட்டது போலும்.

ஏழைமை, ஏழமை ஆனது இன்று நேற்று நடந்ததன்று. 

ஆழ நெடுந்திரை யாறுகடந்திவர் போவாரோ
வேழ நெடும்படை கண்டு விலங்கிடும் வில்லாளோ?
தோழமை என்றவர் சொல்லிய சொல்லொரு சொல்லன்றோ
ஏழமை வேட னிறந்தில னென்றெனை ஏசாரோ...

என்று குகன் பேச்சில் கம்பன் வெளிப்படுத்திய வடிவம்தான்.  அது ஒரு கவிதா சௌகரியம்.  உரைநடையில் சிலவற்றைப் பின்பற்றுவது அவசியம்.  (என்னதான் மெட்ராஸ் தமிழ், கொச்சைத் தமிழ் எழுதினாலும், நான் வாக்கிய இலக்கண அமைப்பை இறுகப் பற்றுபவன். :))) )

Hari Krishnan

unread,
Oct 5, 2012, 2:15:33 AM10/5/12
to santhav...@googlegroups.com


2012/10/5 vis gop <vis...@gmail.com>

எழுகடல்' என்பது 'ஏழ்கடல்' என்பதைவிடச் சிறந்த சொல்லமைப்பா?


எனில் பாரதியின் ஏழ்கடல் வைப்பினும் குறைந்த சொல்லமைப்பா!  ம்ம்? :)

vis gop

unread,
Oct 5, 2012, 2:50:15 AM10/5/12
to santhav...@googlegroups.com
ஓர் ஒரு என்பது a, an போலப் பயன்படுத்தவேண்டும் என்று எந்த இலக்கண நூலும் சொன்னதில்லை.
இதைத் தெரிந்து கொண்டதே என் கேள்விக்குப் பயனாயிற்று. நன்றி. 
[இதுவரை a, an போலப் பயன்படுத்தவேண்டும் என்றுதான் எண்ணி இருந்தேன்.] 

(என்னதான் மெட்ராஸ் தமிழ், கொச்சைத் தமிழ் எழுதினாலும், நான் வாக்கிய இலக்கண அமைப்பை இறுகப் பற்றுபவன். :)
அரிமை!  :-))  அதனால் தானே பொதுவாக விடப்பட்ட கேள்விகளும் உன்னை முதலில் தாக்குகின்றன?

ஏழைமை, ஏழமை ஆனது இன்று நேற்று நடந்ததன்று. 
ஆகவே மரபாயிற்று. பண்டை மரபுக்கு மேல் ஆதாரம் எதற்கு?
சான்ற மறையோ சடங்கமோ இல்லைநம் 
ஆன்றோர் வழியே அறம்.

தொடங்கி வைத்த பாரதிக்கு நன்றி! வேறு திசையில் சிறிது என்னால் திரும்பி இருக்குமானால் மன்னிப்பாராக!

நல்வாழ்த்துக்களுடன்,
கோபால்.


2012/10/5 Hari Krishnan <hari.har...@gmail.com>


--

vis gop

unread,
Oct 5, 2012, 3:08:07 AM10/5/12
to santhav...@googlegroups.com
எனில் பாரதியின் ஏழ்கடல் வைப்பினும் குறைந்த சொல்லமைப்பா!  ம்ம்? :)
 இந்த (மிரட்டல்?!) எதிர்க் கேள்வி எனக்கு விளக்கமாகப் படவில்லை, ஹரி!  பெரும் புலவர்களின் தனிச் சலுகைகளால் பொதுவாகத் தவறென்று கருதப்படும் சொல்லமைப்புக்களும் சிறந்த இடத்தைப் பெறுவது அறிந்ததே! 
(உ.ம்)  "தறைப்படும் அளவில் தத்தா .....  "

சென்ற மடலில் உன் பதில்:
ஓர் ஒரு என்பது a, an போலப் பயன்படுத்தவேண்டும் என்று எந்த இலக்கண நூலும் சொன்னதில்லை.
இது என் கண் திறந்த பாடம்!

நல்வாழ்த்துக்களுடன்,
கோபால்.
2012/10/5 Hari Krishnan <hari.har...@gmail.com>


--

Hari Krishnan

unread,
Oct 5, 2012, 3:13:18 AM10/5/12
to santhav...@googlegroups.com


2012/10/5 vis gop <vis...@gmail.com>

(உ.ம்)  "தறைப்படும் அளவில் தத்தா .....  "

எதுகைக்காச் செய்யப்படும் ரகர/றகர மாறுதல்கள் பற்றி மிகப்பழைய காலங்களில் நிறைய விவாதித்திருக்கிறோம்.  


அறிந்தேன், எவரும் அறியா மறையை, அறிந்துகொண்டு

செறிந்தேன், நினது திருவடிக்கே,-திருவே.- வெருவிப்

பிறிந்தேன், நின் அன்பர் பெருமை எண்ணாத கரும நெஞ்சால்,

மறிந்தே விழும் நரகுக்கு உறவாய மனிதரையே

என்ற அபிராமி அந்தாதி ஒரு மிகச்சிறிய உதாரணம்.  ஆனால் அது வேறு தலைப்பு. தறை என்று பல இடங்களில் கம்பன் ஆண்டிருக்கிறான். சேக்கிழார் ஆண்டிருக்கிறார்.  பலர் ஆண்டிருக்கிறார்கள்.  (தறையை மட்டுமில்லை; அதுபோன்ற ரகர/றகர மாறுபாடுள்ள பதங்களை.)

Hari Krishnan

unread,
Oct 5, 2012, 3:15:17 AM10/5/12
to santhav...@googlegroups.com


2012/10/5 vis gop <vis...@gmail.com>

எனில் பாரதியின் ஏழ்கடல் வைப்பினும் குறைந்த சொல்லமைப்பா!  ம்ம்? :)
 இந்த (மிரட்டல்?!) எதிர்க் கேள்வி எனக்கு விளக்கமாகப் படவில்லை, ஹரி!  

அது ஒண்ணும் விளக்கமில்லை.  மிரட்டலுமில்லை.  It was just a repartee.  I am privileged to play it with you. my friend!

vis gop

unread,
Oct 5, 2012, 3:26:42 AM10/5/12
to santhav...@googlegroups.com
 It was just a repartee.  I am privileged to play it with you.
No doubt!
A well-wisher's privileges (must) have no bounds!
Best wishes,
gopal.

2012/10/5 Hari Krishnan <hari.har...@gmail.com>
--

N. Ganesan

unread,
Oct 5, 2012, 8:50:53 AM10/5/12
to சந்தவசந்தம், vall...@googlegroups.com, mintamil
On Oct 4, 9:17 pm, Niranjan Bharathi <niranjanbhara...@gmail.com>
wrote:

> அப்படி என்றால் புடவை ? புடைவை ? எது சரி ?
>

புடைவை, பழைமை, உடைமை என்று செந்தமிழ் செய்துள்ளது.
குழைந்தை என்பதும் உண்டு - குழந்தைக்கு.
ஆனால், புடவை, பழமை, உடமை என்பன பேச்சு வழக்கில் இருப்பன.
செந்தமிழை விடப் பழமையானவை எனக் கருதுகிறேன்

கொங்கில் இறந்தகால நிகழ்ச்சிகளை இருவர் பேசும்போது,
உ-ம்: இரு பாட்டிகள் திண்ணையில் பேசிக்கொண்டிருக்கையில்
‘என்ன செய்கிறீர்கள்” என்றால், “எங்கள் பாடு, பழமை பேசிக்கொண்டுள்ளோம்”
என்பார்கள். பழமைபேசி என்ற வலைப்பதிவில் மாணிக்கவாசகம் கொங்குத்
தமிழில் அழகாக எழுதுகிறார். அங்கே ‘பழமை’ என்றால் இப்பொருள்தான்.

கோவையில் பழமன் என்றே ஒரு சிறுகதை எழுத்தாளர் உள்ளார்.

-----------

சங்க இலக்கியத்தில் போர்த்தலைவர்களையும், அரச குடியினரையும்
கடுமான் தோன்றல் என்று வரும். முக்கியமாக, சேரர்களுக்கு இப்பெயர்.
கடுமான் என்றால் என்ன என்பது இப்போது தமிழ் பிராமி கல்வெட்டுக்களால்
தெரிகிறது. வயநாடு மாவட்டம் அடர்ந்த குகைகளில் சில கல்வெட்டுக்கள்
கிடைத்துள்ளன. அதில் ஒரு கல்வெட்டு 3-ஆம் நூற்றாண்டு.
கடும்மிபுத சேர (திரிசூலம் Symbol) - எழுதப்பட்டுள்ளது.
இதனைச் சரியாக ஐராவதம் மகாதேவன் தன் புஸ்தகத்தில் விளக்கவில்லை
எனக் கருதுகிறேன். கடுமிபுத - தமிழ் + ப்ராகிருதச் சொல் என்கிறார்.
ஸதியபுதோ (அதியமான்) என்பது போல். அது சரியே.
ஆனால், கடுமி என்பதன் பொருளைச் சொல்லவில்லை.
நெடுமி என்றால் உயர்ந்த பெண் (மெட்ராஸ் லெக்ஸிகன்),
அதுபோல், கடுமி என்றால் கடுமையானவள். போர்த் தெய்வம்.
கொற்றவன் சேரன் கொற்றவை மகன் எனக் குறிக்க கடுமிபுத சேர
எனத் திரிசூலத்துடன் எழுதியுள்ளான். திரிசூலத்தைப்
பனை என்கிறார் ஐராவதம். (தமிழ் பிராமி கல்வெட்டு எண்: 80)

பக்கத்திலேயே, கொற்றவையின் சிற்பம் இருக்கிறது.
மிக அண்மைக் காலத்தில், கல்வெட்டு - வட்டெழுத்து தோற்றம் -
கிடைத்துள்ளது. அதில், சீபழமி என்று எழுதியுள்ளனர். இதன்
காலம் கி.பி. 400 என்கிறார் ஐராவதம். சீகாமரம் - ஸ்ரீகாமரம்
என்னும் ராகம், சீதாளி - சிறந்த பனை ஒன்று, 80 வருடம்
வாழ்ந்து மிகப்பெரிய பூ பூப்பது, சீநக்கன் - தலைவன் பெயர்,
சீதுங்கன் - சோழன் பெயர் (சீதுங்கமங்கலம்), சீதரன், சீராமன், ...
போல சீபழமி என்று துர்க்கையைக் குறிப்பிட்டுள்ளார்கள்.

கடுமிபுத எனச் சேரர்கள் கொற்றவையுடன் தொடர்பு கொள்வதும்,
கடுமி யார்? என விளக்க 100 ஆண்டு பின்னர் சீபழமி (< ஸ்ரீபழமி)
என்று எழுதியிருப்பதும் அருமையான வரலாற்றுச் சின்னங்கள்.
தமிழ் மன்னர்களை சிந்தின் தெய்வத்துடன் இணைப்பவை.

கடுமி என்று தமிழ்பிராமிக் கல்வெட்டுக்கள் குறிப்பிடும் ஸ்ரீபழமியின்
வரலாறு:

அரைசன், அரசன்; புடவை, புடைவை, ... இங்கே பேசியுள்ளோம்.
அரை - கொற்றவைக்கான அரசமரம். தொல்காப்பியம் தரும் பெயர்.
அது ஒரு காரணப்பெயர். யால்/ஆல் மரமும் அரை மரம் போல்
ஒரு fig மரம் தான். யால்/ஆல் (ficus indica), அரை/அரைசு (ficus
religiosa)


அடர்ந்த கானகத்தில் ஒரே ஒரு மரத்தின் இலைகளின் ஓசை நிசப்தத்தைக்
கலைக்கும். இதை ஏராளமான இந்திய இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.
நெடிதுயர்ந்து வளரும் அரை மரம். அரை - அரச மரம் - தொல்காப்பியம்
தரும் பெயர். அரைச்சல் - இரைச்சல் (கடா - கிடா என்பதுபோல்).
அரவம் என்னும் பெயரும் அரைதல் (hissing) என்பதால் வருவதே.
பாம்புக்கு ஹிஸ்ஸிங் ஸவுண்டால் வரும் காரணப் பெயர் - அரவம்.
அரைச மரம் இன்று அரச மரம் எனப்படுவது. போர் அரவம் மிக்கது.
போர்த்தெய்வம் கொற்றவை (கொற்றி - கலித்தொகை) - அவளது மரம்
அரைச மரம்தான். 4000 வருதத்துக்கு முன்னரே இந்தியா கொற்றவையின்
மரம் அரை மரம் எனக்காட்டுகிறது. அவளது கணவன் மகரவிடங்கர்
என்றும் 4500 ஆண்டு முன்னர் கலைப்படைப்பில் காணலாகும்.
http://nganesan.blogspot.com/2008/01/eru-tazuval.html

வாழ்க வளமுடன்,
நா. கணேசன்

மேலும்,
https://groups.google.com/forum/?fromgroups=#!searchin/santhavasantham/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%88$20%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B5%E0%AF%88/santhavasantham/e-3Hvhpc-To/QO_ctEgX7EUJ

https://groups.google.com/forum/?fromgroups=#!searchin/santhavasantham/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%88$20%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B5%E0%AF%88/santhavasantham/qecwZamYEj8/8vxcYQiZ0r4J

On Sep 4, 7:57 am, devoo <rde...@gmail.com> wrote:
>
> த்ரிபங்கத்திற்கு ஆங்கிலத்தில் என்ன ?தமிழ்ச்சொல் யாது ?
>

முச்சாய்கை, முவ்வளவு.

வளவு - வளைவு
(அரசு (மரம்) - அரைசு,
புடவை - புடைவை
சினப்பு - சினைப்பு
அரப்பு - அரைப்பு
சமயம் - சமையம்
குழந்தை - குழைந்தை
அறப்பள்ளி - அறைப்பள்ளி
நிரயம் - நிரையம்
உடமை - உடைமை
தகமை - தகைமை
புழக்கடை - புழைக்கடை
முரசு - முரைசு
..
ஐகாரக் குறுக்கம்).

N. Ganesan

unread,
Oct 5, 2012, 9:52:40 AM10/5/12
to சந்தவசந்தம், vall...@googlegroups.com, mint...@googlegroups.com, housto...@googlegroups.com, thami...@googlegroups.com, tiruva...@googlegroups.com, panb...@googlegroups.com, tamil_ulagam@googlegroups, yavaru...@googlegroups.com
On Oct 4, 6:57 pm, Niranjan Bharathi <niranjanbhara...@gmail.com>
wrote:

> எல்லார்க்கும் வணக்கம்,
>
> நீண்ட நாட்களுக்குப் பிறகு மறுபடியும் ஒரு சந்தேகம்.  என் அலுவலகத்தில் என்
> ஆசிரியர் என்னைக் கூப்பிட்டு பழமை என்பது சரியா ? பழைமை என்பத சரியா ?
> என்று கேட்டார்.
>
> நான் அவரிடம் பழமை தான் சரி என்றேன். ஆனால்,  "பழைய" என்று எழுதுகிறார்களே ?
>  அப்போது பழைமை தானே சரி என்று கேட்டார்.
>
> நான் திருதிருவென்று விழித்தேன்.  அதைப் பார்த்ததும் அவர் "உறுதிப்படுத்துங்க
> நிரஞ்சன்" என்றார்.
>
> நான் சந்தவசந்தம் இருக்க பயமேன் என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டு "சரி"
> என்றேன்.
>

உங்கள் ஆசிரியருக்கு இமெயில் அட்ரெஸ் இருந்தால் என் மடலை
அனுப்புங்கள். மறுமொழி அவரிடம் பெற்றால் மகிழ்ச்சி.
https://groups.google.com/group/vallamai/msg/6bec03324322c43c

பழையோளைப் பழமி (ஸ்ரீபழமி) என்று நான்காம் நூற்றாண்டுத்
தமிழ்க் கல்வெட்டிலேயே வந்துவிடுகிறது என்று சொல்லவும்.

தேவசேனாபதியை இந்தியாவின் முதல் பக்தி இலக்கியம்
திருமுருகார்றுப்படை ”கொற்றவை சிறுவன்” எனப் பேசுகிறது.
”வெற்றி வெல்போர்க் கொற்றவை சிறுவ!
இழையணி சிறப்பிற் பழையோள் குழவி! (திருமுருகாற்றுப்படை 258 - 259)
முருகு, அதன் பின்னர் தேவாரம், திவ்ய ப்ரபந்தம், ...
தமிழின் பக்தி இலக்கியங்கள் இந்தியா மொழிகள் எல்லாவற்றிலும்
மாபெரும் பக்தி இயக்கத்தைத் தோற்றுவித்தது வரலாறு.
இந்திய பக்தி இலக்கியத்தில் சிறந்த ஒன்று: ஸ்ரீமத் பாகவதம்
இப்பெருநூல் தமிழ்நாட்டில் எழுதப்பட்டது 9-ஆம் நூற்றாண்டில்.
ஆழ்வார்களின் தாக்கம்.

கடுமி-புத என்று சேரர்கள் ”கொற்றவை-மக்கள்” என்று கல்வெட்டில்
அவளுடைய திரிசூலத்துடன் குறித்துள்ளனர். (3-ஆம் நூற்றாண்டு).

நான்காம் நூற்றாண்டிலேயே பழமி - பழையோள் தமிழ்
எழுத்து வடிவத்தில் வந்துவிடுகிறாள்.

நா. கணேசன்

Balasubramanian N.

unread,
Oct 5, 2012, 3:45:06 PM10/5/12
to santhav...@googlegroups.com
  நிலமை  நிலைமை
  வளமை வளைமை
  உடமை உடைமை 
  புலமை  புலைமை
  திறமை திறைமை
   கடமை கடைமை

 

சும்மா விளையாட்டுக்கு!



2012/10/5 Hari Krishnan <hari.har...@gmail.com>

--

Hari Krishnan

unread,
Oct 5, 2012, 11:12:40 PM10/5/12
to santhav...@googlegroups.com


2012/10/6 Balasubramanian N. <n.balasu...@gmail.com>

புலமை  புலைமை
  திறமை திறைமை
   கடமை கடைமை

 

சும்மா விளையாட்டுக்கு!


விளையாட்டுதான்.  பாரதி விளையாடாத விளையாட்டா!

போரிடச் செல்வமடா - மகன்
புலைமையும் தந்தையின் புலமைக ளும்
யாரிடம் அவிழ்க்கின்றார் - இதை
எத்தனை நாள்வரை பொறுத்திருப் போம்?
--பீமன் பேச்சு.


அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை
நின்றாரின் பேதையர் இல்.

கடைமைக்கு ஒரு குறள்.

Raja.Tyagarajan

unread,
Oct 6, 2012, 4:40:50 AM10/6/12
to santhav...@googlegroups.com
அன்புடையீர்,
இராஜ.தியாகராஜனின் வணக்கம்.
 
இந்த் ஒரு ஓர் சச்சரவு நிறைய இணையத்தில் காண்கிறேன்.  பேரா. செல்வகுமார் அவர்கள் தந்த சுட்டி கீழே.  புதுச்சேரி தமிழறிஞர்களும் ஒரு ஓர் இவற்றிற்காகத்  தொல்காப்பியத்தில் இதனையே சுட்டுகின்றனர்.  தொல்காப்பிய அறிஞர், கவிஞர் செ. சீனி நைனா முகம்மது அவர்களின் கருத்து இது.
அவர் விடையளித்தது பேரா. அண்ணாமலை அவர்களுக்கு.
 
 
அன்பன்
இராஜ.தியாகராஜன்.
 
 
----- Original Message -----
From: vis gop
Sent: Friday, October 05, 2012 12:38 PM
Subject: Re: பழைமையா - பழமையா ?

எனில் பாரதியின் ஏழ்கடல் வைப்பினும் குறைந்த சொல்லமைப்பா!  ம்ம்? :)

Hari Krishnan

unread,
Oct 6, 2012, 6:09:48 AM10/6/12
to santhav...@googlegroups.com


2012/10/6 Raja.Tyagarajan <thia...@dataone.in>

இந்த் ஒரு ஓர் சச்சரவு நிறைய இணையத்தில் காண்கிறேன்.  பேரா. செல்வகுமார் அவர்கள் தந்த சுட்டி கீழே.  புதுச்சேரி தமிழறிஞர்களும் ஒரு ஓர் இவற்றிற்காகத்  தொல்காப்பியத்தில் இதனையே சுட்டுகின்றனர். 

நன்றி தியாகு.  கண்ணுக்கு எதிரேலேயே இருப்பது கண்ணுக்குப் புலப்படாது என்பார்கள். தொடக்க நாட்களில் ‘இது ஒரு விதிதான்’ கட்சியிலிருந்து பிறகு கட்சி மாறினேன்.  இந்தச் சுட்டி திட்பமாகத் தெளிவுபடுத்தியது.

Siva Siva

unread,
Oct 6, 2012, 9:00:23 AM10/6/12
to santhav...@googlegroups.com
Thanks for the link that pointed to tholkAppiyam rule.

2012/10/6 Raja.Tyagarajan <thia...@dataone.in>

Raja.Tyagarajan

unread,
Oct 6, 2012, 3:56:29 PM10/6/12
to santhav...@googlegroups.com
அன்புள்ள ஹரியண்ணா,
இராஜ.தியாகராஜனின் வணக்கம்.
 
என்னுடைய வலைப்பூவான tyagas.wordpress.com இல் முதல் கட்டுரை இந்த ஒரு ஓர் பற்றிதான்.  ஆனால் அனைவரும் அறிந்தது தானே என்று இந்த தொல்காப்பிய நூற்பாவைப் பற்றி குறிப்பிடவில்லை. இணையத்தில் தேடுகின்ற போதில் இவ்வளவு சச்சரவா என்று மலைத்துப் போனேன். திருமுருகனாரின் சிந்துப்பாவியலுக்கு உரை எழுதிய கலைமாமணி, சந்தப்பாமணி அரங்க நடராசனாரிடம் நான் கேட்டறிந்த பாடம் இது. விரைவில் இந்த தொல்காப்பிய நூற்பாவையும்,  நன்னூல் நூற்பாவாகிய  'ஒன்றன் புள்ளி ரகரமாக இரண்டன் ஒற்றுயிர் ஏகஉவ் வருமே'  என்பதையும், கூடவே 
நன்னூல் உரையாசிரியரின் உரை விளக்கமான, 'ரகரமெய் உகரம் பெறுவது வருமொழி முதலில் மெய்வரின் எனவும்
உயிர் வரின் உகரம் பெறாது எனவும் கொள்க'  (ஆனால் நன்னூல் இதனை ஒரு கட்டாயமாக என்று கூறவில்லை!)  என்பதையும் வலைப்பூவில் ஏற்றுகிறேன்.
 
எனக்கும் இது ஒரு பாடமானது
 
அன்பன்
இராஜ.தியாகராஜன்.
 
 
----- Original Message -----
Sent: Saturday, October 06, 2012 3:39 PM
Subject: Re: பழைமையா - பழமையா ?



N. Ganesan

unread,
Oct 7, 2012, 5:43:20 PM10/7/12
to தமிழாயம், vall...@googlegroups.com, Santhavasantham
On Oct 6, 5:11 am, இரவா <vasudevan...@gmail.com> wrote:
> அன்புடன் நா.க.
>
> பழமை என்றாலும் பழைமை என்றாலும் பொருள் ஒன்றே! ஆனால், பழைமை என்பதே மூலச்சொல்.
> பழமை என்பது போலி.
>

பழு- பழுத்தல் என்னும் வேரில் பிறந்தவை பழமை/பழைமை.

பழமை தொல்காப்பியத்திலேயே வந்துவிடுகிறது.

தொல்காப்பியர் - சொல்லதிகாரச் சூத்திரம் 17:
வண்ணம் வடிவே அளவே சுவையே
தண்மை வெம்மை அச்சம் என்றா
நன்மை தீமை சிறுமை பெருமை
வன்மை மென்மை கடுமை என்றா
முதுமை இளமை சிறத்தல் இழித்தல்
புதுமை *பழமை* ஆக்கம் என்றா
இன்மை உடைமை நாற்றம் தீர்தல்
பன்மை சின்மை பற்று விடுதல் என்று
அன்ன பிறவும் அதன் பால என்மனார். 17

தொல்காப்பியர் பழைமை என்பதில்லை.
பழைமை என்னும் சொல்லைப் படைத்து
வள்ளுவர் பயன்படுத்துகிறார்.

எனவே, பழமை (< பழு-) என்பதன்
போலி பழைமை எனக் கருதுகிறேன்.

தேவாரத்திலும் பழமை உண்டு.
பாரதியார் பல இடங்களில் பழமை
எனப் பாடுகிறார்.

> காட்டு:
>
> அமைச்சன், அமைச்சு என்பதே சரியான மூலச்சொல். ஆனால், அமச்சன், அமச்சு என்பது
> போலி என இலக்கணம் கூறுகிறது.
>

பாலி அகராதியைப் பார்க்கிறேன். அமாத்ய என்றால் தோழன் என்ற பொருள்
வேதத்தில். அது பாலி, பிராகிருதமாக அமச்ச என்றாகிறது என்கின்றனர்
பாலி மொழி அறிஞர்கள்.

அமச்சன் என்னும் வடசொல்லின் போலி அமைச்சன். அமைச்சு என்று
வள்ளுவர் ஆளுகிறார்.

> வள்ளுவத்தில் “பழைமை” என்றொரு அதிகாரம் இருப்பதைக் காணலாம்.
>

ஆம். பழமை தொல்காப்பியம் சொல்லுக்கு இலக்கணம்
வகுக்கும் சொல்லதிகாரத்திலேயே உள்ளது.

அன்புடன்,
நா. கணேசன்

இன்னொன்று: வள்ளுவம் என்பது இக்க்கால வழக்கு.
முன்பெல்லாம் திருவள்ளுவர் என்பதுதான். முற்காலத்தில்
வள்ளுவம் என்றால் சோதிடம்.

>  இருக்கும் வரை தமிழ் அணையில்
>                   அன்புடன்
>                       இரவா
>
> வலைப்பூ:http://thamizmandram.blogspot.com/
> இணையம்:  www.thamizhkkuil.net
> ஆயம்: thami...@googlegroups.com
>
> 5 அக்டோபர், 2012 7:22 pm அன்று, N. Ganesan <naa.gane...@gmail.com> எழுதியது:

> > --
> > இருந்தமிழே உன்னால் இருந்தோம்! இமையோர்,
> >               விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டோம்!

N. Ganesan

unread,
Oct 7, 2012, 10:23:26 PM10/7/12
to thami...@googlegroups.com, Santhavasantham


2012/10/7 இரவா <vasude...@gmail.com>
சிறந்த தரவுகள். மகிழ்ச்சி!
 

நன்றி, புலவரே.

நா. கணேசன்

 

 இருக்கும் வரை தமிழ் அணையில்
                  அன்புடன்                               
                      இரவா

வலைப்பூ:http://thamizmandram.blogspot.com/
இணையம்:  www.thamizhkkuil.net
ஆயம்: thami...@googlegroups.com


8 அக்டோபர், 2012 3:13 am அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:

vis gop

unread,
Oct 9, 2012, 4:30:12 AM10/9/12
to santhav...@googlegroups.com
திரு சிவா அவர்களின் இன்னொரு இழையிலிருந்து இதைக் காபி-பேஸ்ட் செய்திருக்கிறேன். [grammar doubts, 6/10/12]. இதன்  அடிப்படையில் உன் பதிலில் மாற்றம் உண்டா?
 
Posting this info in this thread for easy reference at a later date:

ஒரு / ஓர்  &  இரு / ஈர்

இன்று இன்னோர் இழையிற் கண்டதை ஒட்டி:



தொல்காப்பியம்
எழுத்து அதிகாரம் - இளம்பூரணர் உரை
 திருநெல்வேலி, தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிட்,
522, டி. டி. கே. சாலை, சென்னை - 18. 

5. குற்றுகர எண்ணுப்புணர்ச்சி
'ஒரு' 'இரு' முன் உயிர் முதன்மொழி

455
முதலீ ரெண்ணின்முன் உயிர்வரு காலைத்
தவலென மொழிப உகரக் கிளவி
முதனிலை நீடல் ஆவயி னான.

இதுவும் அது.

முதல் ஈர் எண்ணின்முன் உயிர் வரு காலை - முற்பட்ட இரண்டு எண்ணின்முன் உயிர் முதல்மொழி வருங்காலத்து , உகரக் கிளவி தவல் என மொழிப - உகரமாகிய எழுத்துக் கெடும் என்று சொல்லுவர் (புலவர்), முதல்நிலை ஆவயின் நீடல் - (அவ்வெண்ணின் முதற்கண்) நின்ற எழுத்துக்கள் அவ்விடத்து நீண்டு முடியும்.

எ - டு : ஓரகல் , ஈரகல் , ஓருழக்கு , ஈருழக்கு என வரும்
======================== ================

நல்வாழ்த்துக்களுடன்,

கோபால்.


2012/10/5 vis gop <vis...@gmail.com>

Hari Krishnan

unread,
Oct 9, 2012, 4:48:49 AM10/9/12
to santhav...@googlegroups.com


2012/10/9 vis gop <vis...@gmail.com>

திரு சிவா அவர்களின் இன்னொரு இழையிலிருந்து இதைக் காபி-பேஸ்ட் செய்திருக்கிறேன். [grammar doubts, 6/10/12]. இதன்  அடிப்படையில் உன் பதிலில் மாற்றம் உண்டா?
 

இதே இழையிலேயே கட்சி மாறிவிட்டேனே!  கவனத்துக்குத் தப்பியிருந்தால், இங்கே மீண்டும்:



2012/10/6 Hari Krishnan <hari.har...@gmail.com>


2012/10/6 Raja.Tyagarajan <thia...@dataone.in>

இந்த் ஒரு ஓர் சச்சரவு நிறைய இணையத்தில் காண்கிறேன்.  பேரா. செல்வகுமார் அவர்கள் தந்த சுட்டி கீழே.  புதுச்சேரி தமிழறிஞர்களும் ஒரு ஓர் இவற்றிற்காகத்  தொல்காப்பியத்தில் இதனையே சுட்டுகின்றனர். 

நன்றி தியாகு.  கண்ணுக்கு எதிரேலேயே இருப்பது கண்ணுக்குப் புலப்படாது என்பார்கள். தொடக்க நாட்களில் ‘இது ஒரு விதிதான்’ கட்சியிலிருந்து பிறகு கட்சி மாறினேன்.  இந்தச் சுட்டி திட்பமாகத் தெளிவுபடுத்தியது.
-- 
அன்புடன்,
ஹரிகி.


கண்ணுக்கு எதிரிலேயே இருப்பது கண்ணுக்குப் புலப்படாது... என்பது எல்லோருக்கும் பொருந்தும் விதிதானோ. :))

Vis Gop

unread,
Oct 9, 2012, 6:20:12 AM10/9/12
to santhav...@googlegroups.com
அடடா! உங் கட்சில இப்பதாங் சேந்தேன்; கயட்டிவுட்டியே!

2012/10/9 Hari Krishnan <hari.har...@gmail.com>

--

Hari Krishnan

unread,
Oct 9, 2012, 6:49:28 AM10/9/12
to santhav...@googlegroups.com


2012/10/9 Vis Gop <vis...@gmail.com>

அடடா! உங் கட்சில இப்பதாங் சேந்தேன்; கயட்டிவுட்டியே!


வோல்தான!  எங்கூட வந்துரு!
Reply all
Reply to author
Forward
0 new messages