ஐயா ஐயம் ( பொது )

481 views
Skip to first unread message

தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Nov 3, 2023, 11:51:50 PM11/3/23
to சந்தவசந்தம்
1. சினிமா பாடல் 

பாடறியேன் படிப்பறியேன் பள்ளிக்கூடம் நானறியேன்


ஏடறியேன் எழுத்தறியேன் எட்டுவகை நானறியேன்

ஏட்டுல எழுதவில்ல எழுதிவச்சி பழக்கமில்ல

இலக்கணமும் இதுக்குயில்ல தலக்கனமும் எனக்குயில்ல'' -Vairamuthu


"ஏடெழு தாமுழு ஏழையை ... படிப்பே இல்லாத முழு ஏழையை""

என்ற திருப்புகழ் அடியின் விரிவாக அமைந்த இந்தத்

திரையிசைப்பாடல் எட்டுவகை என்பது என்ன?

NATARAJAN RAMASESHAN

unread,
Nov 4, 2023, 3:17:51 AM11/4/23
to santhav...@googlegroups.com
தொல்காப்பியத்தில் கூறப்பட்டுள்ள
நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை ஆகிய எண் வகை மெய்ப்பாடுகளையே “எட்டுவகை” என்று திரைப்படப் பாடல் குறிப்பிடுகிறது என எண்ணுகிறேன்

                      - தில்லைவேந்தன்.
….
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/5d630589-327c-4acd-a367-9dd402a524d3n%40googlegroups.com.

Niranjan Bharathi

unread,
Nov 4, 2023, 4:40:23 AM11/4/23
to santhav...@googlegroups.com

ஐயா, அது எட்டுவகை அன்று. எழுத்துவகை. 

தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Nov 4, 2023, 4:53:40 AM11/4/23
to santhav...@googlegroups.com

நன்றி ஐயா 🙏


Ramamoorthy Ramachandran

unread,
Nov 4, 2023, 7:59:17 AM11/4/23
to Santhavasantham
ஏடறியேன் எழுத்தறியேன்! 
எழுதும் வகை நானறியேன்!
என்பதே பாடல்!

N. Ganesan

unread,
Nov 4, 2023, 8:36:17 AM11/4/23
to santhav...@googlegroups.com
சிங்கப்பூரில் கச்சேரி:

கவிஞர் தங்கவேற்குச் செவிநுகர் கனி.


On Sat, Nov 4, 2023 at 3:40 AM Niranjan Bharathi <niranjan...@gmail.com> wrote:

ஐயா, அது எட்டுவகை அன்று. எழுத்துவகை. 
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Nov 4, 2023, 8:45:02 AM11/4/23
to சந்தவசந்தம்
அனைவருக்கும் மிக நன்றி 🙏
 ஒரு இணையத்தில் எழுதும்வகை அறியாது ( தவறாக) எட்டுவகை  எழுதப்பட்டிருந்தது.
அதை படித்துப் பாடலைக் கேட்கும்வகை அறியாது இங்கு எழுதிவிட்டேன்.

இனி 
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
 மெய்ப்பொருள் காண்ப தறிவு

தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Nov 6, 2023, 10:33:53 AM11/6/23
to சந்தவசந்தம்
2 . ஐயா ஐயம் ( பாம்பன் சுவாமிகள் பாடல்)

டி எம் சௌந்தரராஜன் அவர்களின் குரலில் இப்பாடலைக் கேட்க 

1) தரும வுருவர்புகழ் சததள பாதா
2) சனனவெய் தறவளி தருபர மேசா
இந்த இரண்டு வரிகளின் பொருள் அறிய விழைகிறேன்?

ஹர ஹர சிவ சிவ ஷண்முகநாதா
ஹர ஹர சிவ சிவ என்முக நாதா

ஹர ஹர சிவ சிவ பரம விலஸா
ஹர ஹர சிவ சிவ அபய குஹேஸா

அருண கிரிபரவும் அருணெறி நாதா
தரும வுருவர்புகழ் சததள பாதா

அரிபிர மாதிக டொழுவடி வேலா
திருவடி நாரவ ருளமுறை சீலா

எனினிய குருநித மெனுமதி யீசா
சனனவெய் தறவளி தருபர மேசா

பாசா பாச பாப வினாசா
மாசே றாத மான நடேசா

போஜா வாஜா பூஜகர் நேசா
தேஜா ராஜ தேவஸ மாஜா

திஞ்சுவை யருளொரு திருவா ரமுதே
ஓம்சர வணபவ வுருவே யருவே.

- ஸ்ரீமத் பாம்பன் குமரகுருதாச சுவாமிகள்

🙏 ஓம் குமர குருதாச குருப்யோ நம: 



N. Ganesan

unread,
Nov 6, 2023, 10:57:54 AM11/6/23
to santhav...@googlegroups.com
சீர்காழி

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Siva Siva

unread,
Nov 6, 2023, 11:11:33 AM11/6/23
to santhav...@googlegroups.com

தரும உருவர் = அறவடிவினர்;

சனன வெய்து அற அளி தரு பரமேசா

சனன வெய்து - பிறவித்துயர்;

வெய்து veytu , < வெம்-மைn. 1. That which is hot; வெப்பமுள்ளது. சிறுநெறி வெய்திடை யுறாஅ தெய்தி (அகநா. 203). 2. Heat; வெப்பம். (மதுரைக். 403, உரை.) 3. Fomentation; வெப்ப முள்ள பொருளாலிடும் ஒற்றடம். 4. Sorrow, distress; துக்கம். வெய்துறு பெரும்பயம் (ஞானா. 35, 3).

அளி³ aḷi , n. < அளி²-. 1. Love; அன்பு. அளி நயந்து (இரகு. நாட்டு. 1). 2. Clemency, grace; அன்புகாரணத்தாற் றோன்றும் அருள். (தொல். பொ. 247, உரை.) 
===

N. Ganesan

unread,
Nov 6, 2023, 1:38:59 PM11/6/23
to santhav...@googlegroups.com


On Mon, Nov 6, 2023 at 9:33 AM தங்கவேல் காஞ்சிபுரம் <k.thanga...@gmail.com> wrote:
>
> 2 . ஐயா ஐயம் ( பாம்பன் சுவாமிகள் பாடல்)
>
> https://youtu.be/F4b3AmaaQFg?si=myqL2RDG7mVV4jUm
> டி எம் சௌந்தரராஜன் அவர்களின் குரலில் இப்பாடலைக் கேட்க
>
சீர்காழி

> 1) தரும வுருவர்புகழ் சததள பாதா
> 2) சனனவெய் தறவளி தருபர மேசா
> இந்த இரண்டு வரிகளின் பொருள் அறிய விழைகிறேன்?
>
> ஹர ஹர சிவ சிவ ஷண்முகநாதா
> ஹர ஹர சிவ சிவ என்முக நாதா

எண்முக


>
> ஹர ஹர சிவ சிவ பரம விலஸா
விலாஸா

> ஹர ஹர சிவ சிவ அபய குஹேஸா
>
> அருண கிரிபரவும் அருணெறி நாதா
> தரும வுருவர்புகழ் சததள பாதா
>
> அரிபிர மாதிக டொழுவடி வேலா
> திருவடி நாரவ ருளமுறை சீலா
>
> எனினிய குருநித மெனுமதி யீசா
> சனனவெய் தறவளி தருபர மேசா
>
> பாசா பாச பாப வினாசா
> மாசே றாத மான நடேசா
>
> போஜா வாஜா பூஜகர் நேசா
> தேஜா ராஜ தேவஸ மாஜா
>
> திஞ்சுவை யருளொரு திருவா ரமுதே

தீஞ்சுவை

> ஓம்சர வணபவ வுருவே யருவே.
>
> - ஸ்ரீமத் பாம்பன் குமரகுருதாச சுவாமிகள்
>
> 🙏 ஓம் குமர குருதாச குருப்யோ நம:
>
>
>
> --
> You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Nov 7, 2023, 1:04:54 AM11/7/23
to சந்தவசந்தம்
இருவருக்கும் வணக்கம் 🙏

பிழையை சுட்டிக் காட்டிய நா. கணேசன் ஐயா அவர்களுக்கும், 
பாடலின் பொருள் வழங்கிய திரு சிவசிவா ஐயாவிற்கும் நன்றி 🙏

தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Nov 27, 2023, 12:08:05 PM11/27/23
to சந்தவசந்தம்

3) கோவிலைச் சுற்றி இருக்கும் சுவர்கள் 
மதில் ஆ? மதிள் ஆ?

கன்னி நன்மா மதிள்புடைசூழ் கணபுரத்தென் கருமணியே

சிகர கோபுரத் தினுமதி ளினுமேற்
     செம்பொற் கம்பத் ...... தளமீதும்
தெருவி லேயுநித் திலமெறி யலைவாய்ச்
     செந்திற் கந்தப் ...... பெருமாளே.

மா கம்பம் மறை ஓதும் இறையானை; மதில் கச்சி
ஏகம்பம் மேயானை;-என் மனத்தே வைத்தேனே!

சினங்கொள் மால்கரி சீறிய ஏறினை
இனங்கொள் வானவர் ஏத்திய ஈசனைக்
கனம்கொள் மாமதில் நாகைக்கா ரோணனை
மனம்கொள் வார்,வினை ஆயின மாயுமே.

தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Jan 13, 2024, 11:51:35 PM1/13/24
to சந்தவசந்தம்
அனைவருக்கும் வணக்கம் 🙏

தேவாரம் முதல் திருமுறை
திருப்புகலூர் 2.11

புற்றில்வாழும்அர வம்மரையார்த்தவன் மேவும்புகலூரைக்
கற்றுநல்லவவர் காழியுண்ஞானசம் பந்தன்றமிழ்மாலை
பற்றியென்றும்இசை பாடியமாந்தர் பரமன்னடிசேர்ந்து
குற்றமின்றிக்குறை பாடொழியாப்புக ழோங்கிப்பொலிவாரே.


அரவம் அரை ஆர்த்தவன் என்பதை 
அரவமரையார்த்தன் என்று
எழுதாமல் ஏன்
அரவம்மரையார்த்தவன்
என்று எழுதியுள்ளார். 

வாழும்அரவம் என்பதை
வாழும்மரவம்,
குற்றமின்றி என்பதை 
குற்றம்மின்றி எழுதியிருகலாமே? 

 மேலும் 
கற்றுநல்லவர் என்பதை கற்றுநல்லவவர்
என எழுத ஏதேனும் காரணம் உள்ளதா?

( கேள்வி தவறாக இருந்தால் மன்னிக்கவும் )

Mahesh Krishnamurthy

unread,
Jan 14, 2024, 1:18:09 AM1/14/24
to santhav...@googlegroups.com
இஈ ஐவழி யவ்வும், ஏனை
உயிர்வழி வவ்வும், ஏமுன் இவ் விருமையும்,
உயிர்வரின் உடம்படு மெய் என்று ஆகும்.    (நன்னூல் , 162)


நல்லவவர்  = நல்ல+அவர் வகர உடன்படு மெய் பெற்று நல்லவவர் என ?

நன்றி
Mahesh

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Mahesh Krishnamurthy

unread,
Jan 14, 2024, 8:51:13 AM1/14/24
to சந்தவசந்தம்
2. அரவம்மரையார்த்தவன் சார்ந்த கேள்விக்கு 

அம்மகர மெய் இல்லையெனின் நுதலும் பொருள் மாறும் என தோன்றுகிறது..
அரவம்மரை என்றால் அரவத்தை அரைக்கு ஆர்த்தவன் என்றாகும். (அத்து சாரியை மற்றும் வேற்றுமை நோக்குக)
அரவமரை என்றால் அரவமாகிய அரை ஆர்த்தவன் என பொருள் வந்துவிடலாம்...

குற்றம் + இன்றி என்பதில் வேற்றுமை உருபு இல்லை.. ம்+இ = மி.. ஆதலால் நேர்பட உள்ளது.

1. நல்ல + அவர் = நல்+ல்+அ + அ +வர் ..அ+அ வில் வகர உடன்படு மெய் தோன்றி நல்லவவர்.

நான் அண்மையில் இலக்கணம் பயில துவங்கியவன்.. அறிந்தவர்கள் சரி  எனக்கூறட்டும்

நன்றி

Siva Siva

unread,
Jan 15, 2024, 9:47:57 AM1/15/24
to santhav...@googlegroups.com
1)
மதில் / மதிள் - இரண்டுமே பாடல்களில் வரக் காணலாம்
போலி எனப்படும்.

2)
இசையோடு பாடியருளப்பெற்ற பாடல்களில் நீட்டிப் பாடுதல், நிறுத்திப் பாடுதல், முதலான காரணங்களால் சில இடங்களில் ஒற்று விரித்தல், முதலிய விகாரங்கள் வரக்கூடும்.

கந்தம் கமழ் சந்தம் - Chandam 101 - a primer
என்ற தொடரில் கீழ்க்காணும் பகுதியைக் காண்க.

C-18) "தானன தானன தானன தானன தானா தனதான" - (அறுசீர் விருத்தம்)

V. Subramanian 

தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Jan 20, 2024, 3:20:06 PM1/20/24
to சந்தவசந்தம்
அனைவருக்கும் வணக்கம் 🙏

முத்தையனார் என்பது முருகப் பெருமான் பெயரா?


இழந்துபோகாத வாழ்வை ஈயும் முத்தையனார் கைவேல்
வழங்கும் நல் ஊண் உண்போதும் மால்விளையாட்டின் போதும்
பழஞ்சுரர் போற்றும் பாதம் பணிந்து நெஞ்சு அடக்கும் போதும்
செழும்குணத்தோடே காக்க, திடமுடன் மயிலும் காக்க.

Siva Siva

unread,
Jan 20, 2024, 10:08:27 PM1/20/24
to santhav...@googlegroups.com
முத்தையன் + ஆர் ( https://dsal.uchicago.edu/cgi-bin/app/tamil-lex_query.py?page=3258 )

A song by Dharmapuram Swaminathan: 

V. Subramanian

தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Jan 20, 2024, 10:28:01 PM1/20/24
to சந்தவசந்தம்
மிக்க நன்றி குருவே 🙏

Swaminathan Sankaran

unread,
Jan 21, 2024, 12:56:56 AM1/21/24
to santhav...@googlegroups.com
பழைய நாட்களில், அதாவது என் பால பருவத்தில், யாருக்கும் வெறும் 'முத்து' என்று பெயர் வைக்க மாட்டார்கள் 
(முத்து மிக விலையுயர்ந்த பொருள் - தங்கம், வைரம், வைடூர்யம் எல்லாவற்றையும் விட! முத்துவிற்காகவே வெளிநாட்டார்கள்
அவர்களுடைய 'emporium' ஐ தமிழ் நாட்டில் ஏற்படுத்தினார்கள்!) ஆகவே முத்து என்று பெயர் வைத்தால் 'கண் பட்டுவிடும்' என்பதற்காக 
முத்துக்குமரன், முத்துவேல், முத்தையா, முத்துச்சிதம்பரம், முத்தம்மாள், முத்தாயி, முத்துலட்சுமி   என்று தான் பெயர் வைப்பார்கள்.
(வீட்டில் பெரியவர்கள் சொல்லிக் கேட்டது). எல்லாம் முருகனுடன் தொடர்பு கொண்டவை. ஆண் தெய்வம், பெண் தெய்வங்களுடன் 
இணைத்துப் பெயர் வைத்தால் 'கண் படாது' என்பது நம்பிக்கை.

சங்கரன் 

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.


--
 Swaminathan Sankaran
Message has been deleted

தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Mar 22, 2024, 12:03:59 PM3/22/24
to சந்தவசந்தம்
அனைவருக்கும் வணக்கம் 🙏
சமஸ்கிருதத்தில் பாடப்படும் வெங்கடேச சுப்ரபாதம் என்ன பா வகையில் அமைந்தது?
M S அம்மா குரலில் சுப்ரபாதம் கேட்க

Siva Siva

unread,
Mar 22, 2024, 12:46:31 PM3/22/24
to santhav...@googlegroups.com
Hope this helps you.
V. Subramanian
=====

https://groups.google.com/g/rec.music.indian.classical/c/ik2NM7qxd2c

To add to Shri Lakshman Ragde's response, when he says the stotra was 'composed' around 1430 AD, it means it was written around that time. It uses various poetic metres like Anushtup, Vasantatilakaa, Shardula-vikreedita, toTaka, bhujangaprayaata, Ghotaka (a.k.a. Durmila). [अनुष्टुप् , वसन्ततिलका , शार्दूलविक्रीडित, तोटक, भुजंगप्रयात, घोटक / दुर्मिल ]; and the rendition is geared towards the various gaits which bring out the musical beauty of these metres. It is not geared towards raag-dari. It's a fair guess that the verses are recited in the style known to us today since several centuries. Its rendition in various voices is easily available on YouTube.


The verses describing the unfolding mornings in that bygone era are a joy to read. Parrots opening their eyes (उन्मील्य नेत्र---), Vishnu waking up after spending the night nestled against Lakshmi's breasts (कमला-कुच---), bees trapped inside lotuses creating a crescendo (पद्मेश-मित्र---), the fading stars (आकाशसिन्धुकमलानि), the wind bringing scents of various trees, womenfolk churning curd (योषागणेन ---) and the vessels making loud noise, there are several passages describing the nature in a stotra geared towards praising Lord Venkatesh.

=====

Siva Siva

unread,
Mar 22, 2024, 1:20:55 PM3/22/24
to santhav...@googlegroups.com

Sri Venkatesa Suprabhatam


மாதஸ்ஸமஸ்தஜக³தாம் மது⁴கைடபா⁴ரே

வக்ஷோவிஹாரிணி மனோஹரதி³வ்யமூர்தே.

ஶ்ரீஸ்வாமினி ஶ்ரிதஜனப்ரியதா³னஶீலே

ஶ்ரீவேங்கடேஶத³யிதே தவ ஸுப்ரபா⁴தம் ..3..


Song-3 Line-1

மாதஸ்ஸமஸ்தஜக³தாம் - மது⁴கைடபா⁴ரே

GGLGLLLG - LLGLGG


Vasanthathilakam meter

In Tamil, we probably can view it as one of several seer patterns:

a) தானான தான தனனா - தனதான தானா

b) தானான தான தனனா - தனனா தனானா

etc.

-----

V. Subramanian

தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Mar 22, 2024, 9:08:25 PM3/22/24
to சந்தவசந்தம்
மிக்க நன்றி குருவே 🙏
வெங்கடேச சுப்ரபாதம் தமிழில் 

வந்துதித்தாய் ஸ்ரீ ராமா நீ கோசலை தன் திருமகனாய்
சிந்து மொழிச் சிறுகாலை திசையெங்கும் புலர்கிறது
மந்திரங்கள் வாய்மொழிந்து வந்தனைகள் புரிந்தருளைச்
செந்திருக்கண் அருள்பொழிய வேங்கடவா எழுந்தருள்வாய் 
முழுவதும் காண👇
சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட சுப்ரபாதத்தைத் தமிழில் படித்தேன்.
அதுபோல முருகப் பெருமானுக்கு எழுத விழைகிறேன்.

முதல் பாடல் 

திருமுருகன்  சுப்ரபாதம் 
        கலிவிருத்தம்

வந்துதித்தாய் திருமுருகா மதிச்சடையன் திருமகனாய்
வந்துதித்தான் சூரியனே வானெங்கும் ஒளிபரவ
செந்தமிழில் திருப்புகழைச் செப்புமிசை கேட்டிலையோ
செந்திநகர் மேவிவளர் சேவகனே எழுந்தருள்வாய்





Song-3 Line-1

மாதஸ்ஸமஸ்தஜக³தாம் - மது⁴கைடபா⁴ரே

GGLGLLLG - LLGLGG


Vasanthathilakam meter

In Tamil, we probably can view it as one of several seer patterns:

a) தானான தான தனனா - தனதான தானா

b) தானான தான தனனா - தனனா தனானா

etc.

-----

V. Subramanian

Siva Siva

unread,
Mar 23, 2024, 9:39:08 AM3/23/24
to santhav...@googlegroups.com
நாலடித் தரவு கொச்சகக் கலிப்பாவில் எழுத எண்ணம் என்றால், வேங்கடேச சுப்ரபாதத்தின் யாப்பு அமைப்பைப் பற்றிக் கேட்டது எதற்காக?
Just wondering!

V. Subramanian

தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Mar 23, 2024, 9:53:17 AM3/23/24
to சந்தவசந்தம்
குருவே வணக்கம் 🙏
நண்பர் ஒருவர் வெங்கடேச சுப்ரபாதம் போல
முருகனுக்குச் சுப்ரபாதம் எழுதச் சொன்னார்.
அதனால் தான் கேட்டேன்.
தாங்கள் கொடுத்து  சுப்ரபாத meter ல் எழுத முயற்சித்தேன்.
முடியவில்லை.
கந்தன் கருணையால் கலிவிருத்ததில் எழுதுகிறேன் குருவே 🙏

On Saturday, March 23, 2024 at 7:09:08 PM UTC+5:30 Siva Siva wrote:
நாலடித் தரவு கொச்சகக் கலிப்பாவில் எழுத எண்ணம் என்றால், வேங்கடேச சுப்ரபாதத்தின் யாப்பு அமைப்பைப் பற்றிக் கேட்டது எதற்காக?
Just wondering!

V. Subramanian

Siva Siva

unread,
Mar 23, 2024, 9:56:25 AM3/23/24
to santhav...@googlegroups.com
OK. That is fine.

Yes, writing in a new meter with laghu - guru pattern constraints can be challenging sometimes.

V. Subramanian

தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Mar 25, 2024, 4:12:37 AM3/25/24
to சந்தவசந்தம்
குருவே வணக்கம் 🙏

வெங்கடேஸ்வர ஸ்தோத்திரம்

கமலாகுச்ச சூசுகா குங்கமடோ
நியதாருணி தாதுல நிலதானோ.
கமலாயதா லோச்சனா லோகபதே
விஜயீபாவா வேங்கட சைலபதே ॥

இதன் பா வகையை அறிய விழைகிறேன் 



Siva Siva

unread,
Mar 25, 2024, 9:15:18 AM3/25/24
to santhav...@googlegroups.com

I think you can find a more accurate version of this verse here:

கமலா குச சூசுக குங்குமதோ
நியதாருணிதாதுலநீலதநோ ।
கமலாயதலோசந லோகபதே
விஜயீப⁴வ வேங்கடஶைலபதே ॥ 1 ॥

You can scan the lines and provide the laghu-guru pattern of each line.
I will explore further after that.

V. Subramanian

தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Mar 25, 2024, 9:39:45 AM3/25/24
to சந்தவசந்தம்
குருவே வணக்கம் 🙏
முதல் முயற்சி 


கமலா குச சூசுக குங்குமதோ
LLG LL GLL GLLG
நியதாருணிதாதுலநீலதநோ 
LLG LLG LLG LLG
கமலாயதலோசந லோகபதே
LLGLLGLL GLLG
விஜயீப⁴வ வேங்கடஶைலபதே
LLGLL GLLGLLG

தமிழில் 

தனனா தனனா தனனா தனனா
(முருகா சரணம் முருகா சரணம் )

தனதான தனா தனதான தனா

அருணகிரிநாதர் அருளிய கந்தர் அனுபூதி இந்த அமைப்பில் உள்ளது என்று
எண்ணுகிறேன்.

Siva Siva

unread,
Mar 25, 2024, 9:44:13 AM3/25/24
to santhav...@googlegroups.com
Yes.
சம்பந்தர் தேவாரம் - சடையாய் எனுமால்
தோடகாஷ்டகம்
இத்யாதி

===

Akila Guru

unread,
Mar 25, 2024, 9:22:50 PM3/25/24
to santhav...@googlegroups.com
முருகப் பெருமானுக்கு எழுத விழைகிறேன்.
👆🏻👆🏻👆🏻
விரைவில் எதிர்ப்பார்க்கிறோம் ஐயா 
மிக்க நன்றி ஐயா 🙏🏾
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே 🙏🏾🙏🏾




--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Siva Siva

unread,
Mar 25, 2024, 9:56:37 PM3/25/24
to santhav...@googlegroups.com
Not understanding the request.
You asked this question about 3 days ago - and I thought info was shared about Venkatesa Suprabhatham meters.

You then replied that you found it difficult to write in that meter and hence wrote in நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா.

V. Subramanian


On Mon, Mar 25, 2024 at 9:22 PM தங்கவேல் காஞ்சிபுரம் <k.thanga...@gmail.com> wrote:
அனைவருக்கும் வணக்கம் 🙏
சமஸ்கிருதத்தில் பாடப்படும் சுப்ரபாதம்
குறிப்பாக வெங்டேச சுப்ரபாதம் என்ன பா வகையில்

தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Mar 27, 2024, 5:22:15 AM3/27/24
to சந்தவசந்தம்
ஸ்ரீ வேங்கடேச மங்களாசாஸனம் 
 MS அம்மாவின் குரலில் கேட்க 

ஸ்ரீய காந்தாய கல்யாண 
GL GGL GGL
நிதயே நிதாயேர்தினம்
LLG LGGLL
ஸ்ரீவேங்கட நிவாசாய 
GGLL LGGL
ஸ்ரீநிவாஸய மங்களம்
GLGLL GLG
 
தான தானான தானான
தனனா தனனா தன
தானா தன தனா தனா
தான தான தானனா

இப்பாடலின் தமிழாக்கம்

திருக்கேள்வா மங்களங்கள் 
பொழிபவனே பொலிபவனே
பெருநெறியே சீனிவாசா
வேங்கடவா மங்களங்கள்

எட்டு காய்ச்சீரில் அமைத்துள்ளார்கள்.

அனைவருக்கும் வணக்கம் 🙏
முருகப் பெருமான் இது போல பாடல்
எழுத எண்ணுகிறேன்.
அந்த மெட்டில் அமையுமாறு
எந்தப் பாவகை சிறப்பாக இருக்கும்.

மேலும் தமிழ் எழுதும் போது
மங்களம் அல்லது மங்களங்கள் 
இவ்விரண்டில் எதைப் பயன்படுத்துவது ?

Siva Siva

unread,
Mar 27, 2024, 10:43:52 AM3/27/24
to santhav...@googlegroups.com
மூலத்தை ஆழ்ந்து படிக்கவேண்டும். - பாடல் அமைப்புகளையும் வார்த்தைகளின் பொருளையும் அறிந்துகொள்ளவேண்டும்.
எல்லாப் பாடல்களும் ஒரே அமைப்பில் இருக்குமா என்று அறியேன்.
மூலத்தின் உரை கிட்டும் என்று எண்ணுகின்றேன்.

பின்னர்த் தமிழில் இதுபோல் எப்படி எழுதுவது என்று தெளிவு வரக்கூடும்.

V. Subramanian


தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Mar 27, 2024, 10:48:39 AM3/27/24
to சந்தவசந்தம்
மிக்க நன்றி குருவே 🙏
முருகா சரணம் 🙏

தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Apr 11, 2024, 7:51:36 AM4/11/24
to சந்தவசந்தம்
அனைவருக்கும் வணக்கம் 🙏

நவகிரக சுப்ரபாதம்

சூரியன் பகவானுக்கே எப்படி சுப்ரபாதம் பாடலாமோ?
காலையில் எப்படி சந்திரனுக்குச் சுப்ரபாதமா?

நவகிரக சுப்ரபாதம் ( சமஸ்கிருதத்தில்)
தமிழில் 

Siva Siva

unread,
Apr 11, 2024, 8:56:54 AM4/11/24
to santhav...@googlegroups.com
இறைவனுக்கு உறக்கமுண்டா? ஆனால் சுப்ரபாதம்!

If you wish to write on this, then you need to study what is in the Sanskrit slokas and then embark on it.
Is there any specific reason for your interest in doing this? Just wondering.

V. Subramanian

தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Apr 11, 2024, 12:42:54 PM4/11/24
to சந்தவசந்தம்
குருவே வணக்கம் 🙏

தங்களின் பதிலுக்கு நன்றி குருவே 🙏

அன்பர் ஒருவர் அடியேனை முருகன், பார்வதி, ஐயப்பன் சுப்ரபாதம்
எழுதச் சொன்னார். அதனால் எழுதினேன் குருவே.
தற்போது நவகிரக சுப்ரபாதம் எழுதச் சொன்னார்.
அதனால் இவ்வினாவை எழுப்பினேன்.
முருகா சரணம் 🙏

தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Apr 26, 2024, 4:33:38 AM4/26/24
to சந்தவசந்தம்
அனைவருக்கும் வணக்கம் 🙏

சிவபெருமான் ஏன் வல்லினம் மிகாது.
முருகப் பெருமான் ஏன் வல்லினம் மிகும்.

முருகா சரணம் 🙏

On Thursday, April 11, 2024 at 10:12:54 PM UTC+5:30 தங்கவேல் காஞ்சிபுரம் wrote:

Siva Siva

unread,
Apr 26, 2024, 9:00:16 AM4/26/24
to santhav...@googlegroups.com
Good question.
Others may be able to explain the grammar aspect of the 2 words you asked about.

புறனடை என்று சில இடங்களில் சுட்டுவதைக் காணலாம். 

Some phrases are accepted due to usage from ancient times.
For example:
கோயில் (when கோ + இல் = கோவில்)
மாயிருஞாலம் (when மா + இரு = மாவிரு)

V. Subramanian


Kaviyogi Vedham

unread,
Apr 26, 2024, 11:14:11 AM4/26/24
to santhav...@googlegroups.com
ஏஞ்சாமி..தெரியல்லே? முருக இதில்  க வல்லினம் அதனால்  மிகும். சிவ  வில் வ இடையினம் மிகாது
 யோகியார்

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Rajja Gopalan

unread,
Apr 26, 2024, 11:35:38 AM4/26/24
to santhav...@googlegroups.com
உயர்தினைப் பொருளில் முதல்வேற்றுமைநில், ஒற்றுமிகாது. 

சிவபெருமான், முருகபெருமான் என்பதே சரி. 

மற்ற வேற்றுமையிலோ, அல்லது அஃறிணையிலோ ஒற்று மிகும்.  

என் கருத்து தவறாக இருக்கலாம். 

மீ. ரா


Sent from my iPhone

On 26 Apr 2024, at 16:14, Kaviyogi Vedham <kaviyog...@gmail.com> wrote:



தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Apr 29, 2024, 2:35:57 AM4/29/24
to சந்தவசந்தம்

மூவருக்கும் மிக்க நன்றி

முருகா சரணம் 🙏
On Friday, April 26, 2024 at 9:05:38 PM UTC+5:30 Rajja Gopalan wrote:
உயர்தினைப் பொருளில் முதல்வேற்றுமைநில், ஒற்றுமிகாது. 

சிவபெருமான், முருகபெருமான் என்பதே சரி. 

மற்ற வேற்றுமையிலோ, அல்லது அஃறிணையிலோ ஒற்று மிகும்.  

என் கருத்து தவறாக இருக்கலாம். 

மீ. ரா

ஏஞ்சாமி..தெரியல்லே? முருக இதில்  க வல்லினம் அதனால்  மிகும். சிவ  வில் வ இடையினம் மிகாது
 யோகியார்

On Fri, Apr 26, 2024 at 4:33 AM தங்கவேல் காஞ்சி
அனைவருக்கும் வணக்கம் 🙏

Arasi Palaniappan

unread,
Apr 29, 2024, 6:44:38 AM4/29/24
to santhav...@googlegroups.com
எனக்குத் தெரிந்த வகையில் சிவ வடசொல். முருகன் தமிழ்ச்சொல்.
வட, தமிழ்ச் சொற்கள் புணரும் போது ஒற்று மிகாதென்ப!

எனவே சிவபெருமான், முருகப் பெருமான் இவையே சரி 

பெரியபுராணத்தில் 
"பொய்தவ வேடம் கொண்டு "

என்று வரும். 

பொய் -தமிழ்ச்சொல் 
தவ -வடசொல் 
எனவே ஒற்றுப் பெறவில்லை 

அரசி. பழனியப்பன் 

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Ram Ramakrishnan

unread,
Apr 29, 2024, 7:03:29 AM4/29/24
to santhav...@googlegroups.com
எனது புரிதலும் அவ்வாறே.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Apr 29, 2024, at 16:14, Arasi Palaniappan <arasipala...@gmail.com> wrote:



Siva Siva

unread,
Apr 29, 2024, 9:36:42 AM4/29/24
to santhav...@googlegroups.com
Given the interest several of you have in this topic, I have now posted a note in the "Grammar doubts - 2" thread.

Regarding 
/ பெரியபுராணத்தில் 
"பொய்தவ வேடம் கொண்டு " /

சில சமயம் பாடல்களில் எதுகை கருதி முதற்சீரில் விரித்தல், தொகுத்தல், இடைக்குறை, முதலிய விகாரங்கள் வரக்கூடும்.

பொய் + தவம் = பொய்த்தவம்.

சம்பந்தர் தேவாரம் - 1.129.10
குணமின்றிப் புத்தர்களும் பொய்த்தவத்தை மெய்த்தவமாய் நின்றுகையில்
உணன்மருவுஞ் சமணர்களு முணராத வகைநின்றா னுறையுங்கோயில்
மணமருவும் வதுவையொலி விழவினொலி யிவையிசைய மண்மேற்றேவர்
கணமருவு மறையினொலி கீழ்ப்படுக்க மேற்படுக்குங் கழுமலமே.


V. Subramanian

Arasi Palaniappan

unread,
Apr 29, 2024, 9:40:58 AM4/29/24
to santhav...@googlegroups.com
🙏

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Arasi Palaniappan

unread,
Apr 29, 2024, 9:42:35 AM4/29/24
to santhav...@googlegroups.com
சிவபெருமான்?
முருகப் பெருமான்?

சரிதானா?


On Mon, 29 Apr 2024, 7:06 pm Siva Siva, <naya...@gmail.com> wrote:
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Siva Siva

unread,
Apr 29, 2024, 10:06:04 AM4/29/24
to santhav...@googlegroups.com
That is what I presume. (See my reply above - 3 days ago in this thread).
Sometimes, even what may be technically incorrect is granted acceptance if in use since ancient times.

V. Subramanian

தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
May 10, 2024, 4:27:10 AM5/10/24
to சந்தவசந்தம்
அனைவருக்கும் வணக்கம் 🙏

மங்கல ரூபினி,  மங்கள ரூபிணி


இதில். ரூபிணி, ரூபினி எது சரியானது?
இதில் மங்கலம், மங்களம்  எது சரியானது?

N. Ganesan

unread,
May 10, 2024, 9:16:15 AM5/10/24
to சந்தவசந்தம்
இந்தப் பாடலில் தவம் தமிழ்ச்சொல் எனக் கொண்டுள்ளார். ஏராளமான சொற்களை இவ்வாறு காணலாகும்.

N. Ganesan

unread,
May 10, 2024, 9:19:35 AM5/10/24
to சந்தவசந்தம்
ரூபிணி - சரி.

Siva Siva

unread,
May 10, 2024, 10:37:21 AM5/10/24
to santhav...@googlegroups.com
ரூபம் - ரூபிணி
சூலம் - சூலினி

I believe Sanskrit grammar conventions guide when it will be ணி (and not னி).

सरस्वति नमस्तुभ्यं वरदे कामरूपिणि ।
विद्यारम्भं करिष्यामि सिद्धिर्भवतु मे सदा ॥

Sarasvati Namastubhyam Varade Kaama-Ruupinni |
Vidya[a-A]arambham Karissyaami Siddhir-Bhavatu Me Sadaa ||

खड्गिनी शूलिनी घोरा गदिनी चक्रिणी तथा ।
शङ्खिनी चापिनी बाणभुशुण्डी परिघायुधा ॥९॥

Khaddginii Shuulinii Ghoraa Gadinii Cakrinnii Tathaa |
Shangkhinii Caapinii Baanna-Bhushunnddii Parigha-[A]ayudhaa ||9||
====

மங்கலம் - is correct.
But commonly used as மங்களம் in South Indian languages - over a very long time.
So, both may be valid.

மங்களம் maṅkaḷam , n. < maṅgala. See மங்கலம்.

మంగళము [Skt.] n. Happiness, good fortune, well-being, welfare, prosperity. శుభము, క్షేమము

ಮಂಗಲ maṅgala. = ಮಂಗಳfortunate, prosperous, auspicious, faring well, happy; beautiful, pleasing. 2, good fortune, success, auspiciousness, prosperity, welfare, bliss, happiness, felicity

ಮಂಗಳ maṅgaḷa. = ಮಂಗಲ 1-9. 10, N. of a vṛitta (Ch.).
=====

GOPAL Vis

unread,
May 10, 2024, 1:48:19 PM5/10/24
to santhav...@googlegroups.com
Occurrence of n in a word with ra or sha nearby makes it N.

கரணம், காரணம், பாஷணம், பூஷணம், பாராயணம், ராமாயணம், ஜீரணம், உத்தராயணம், . . . 
கவனம், தாடனம், பாவனம், ஸோபானம், ஜீவனம், தக்ஷிணாயனம், . . . 

கோபால்

On Fri, May 10, 2024 at 8:07 PM Siva Siva <naya...@gmail.com> wrote:
ரூபம் - ரூபிணி
சூலம் - சூலினி

I believe Sanskrit grammar conventions guide when it will be ணி (and not னி).

सरस्वति नमस्तुभ्यं वरदे कामरूपिणि ।
विद्यारम्भं करिष्यामि सिद्धिर्भवतु मे सदा ॥

Sarasvati Namastubhyam Varade Kaama-Ruupinni |
Vidya[a-A]arambham Karissyaami Siddhir-Bhavatu Me Sadaa ||

खड्गिनी शूलिनी घोरा गदिनी चक्रिणी तथा ।
शङ्खिनी चापिनी बाणभुशुण्डी परिघायुधा ॥९॥

Khaddginii Shuulinii Ghoraa Gadinii Cakrinnii Tathaa |
Shangkhinii Caapinii Baanna-Bhushunnddii Parigha-[A]ayudhaa ||9||
====

 . . . . 

தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
May 16, 2024, 6:10:35 AM5/16/24
to சந்தவசந்தம்
மங்கல ரூபிணி
ஐயத்திற்குப் பதில் அளித்த அனைவருக்கும் நன்றி 🙏

குறிப்பாக சமஸ்கிருத இலக்கணப்படி விளக்கம் அளித்த குருவே நனி நன்றி 🙏

On Friday, May 10, 2024 at 8:07:21 PM UTC+5:30 Siva Siva wrote:
ரூபம் - ரூபிணி
சூலம் - சூலினி

I believe Sanskrit grammar conventions guide when it will be ணி (and not னி).

सरस्वति नमस्तुभ्यं वरदे कामरूपिणि ।
विद्यारम्भं करिष्यामि सिद्धिर्भवतु मे सदा ॥

Sarasvati Namastubhyam Varade Kaama-Ruupinni |
Vidya[a-A]arambham Karissyaami Siddhir-Bhavatu Me Sadaa ||

खड्गिनी शूलिनी घोरा गदिनी चक्रिणी तथा ।
शङ्खिनी चापिनी बाणभुशुण्डी परिघायुधा ॥९॥

Khaddginii Shuulinii Ghoraa Gadinii Cakrinnii Tathaa |
Shangkhinii Caapinii Baanna-Bhushunnddii Parigha-[A]ayudhaa ||9||
====

தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Jun 7, 2024, 5:01:06 AM6/7/24
to சந்தவசந்தம்
அனைவருக்கும் வணக்கம் 🙏

சிவபெருமானுக்கு ஐந்து தலை என்றால்
5*2= 10 தோள், கைகள் தானே இருக்க வேண்டும்.

எண்தோள் முக்கண் எம்மானே. ⁠

எப்படி எட்டுத்தோள், எட்டுக்கை ?

Siva Siva

unread,
Jun 7, 2024, 8:56:21 AM6/7/24
to santhav...@googlegroups.com
Good question.
But I do not think numbers of hands and heads have any formulaic relationship.

For example:
Brahma

V. Subramanian

Swaminathan Sankaran

unread,
Jun 7, 2024, 9:45:43 AM6/7/24
to santhav...@googlegroups.com
As Siva Siva said, 'Good question.'
In general, and in ALL religions (except, or to a lesser extent, in Buddhism and Jainism)
'divinity', its blessed members like gods and goddesses, as portrayed in, and handed down to us 
from mythology, don't have to obey any biological, anatomical or any other scientific laws. You 
just unquestioningly accept the mythology as handed down to you by puranic or 'holy book' tradition
and literary convention and build your literary output on it. If pressed for a logical or rational explanation
you resort to metaphor and allegory, and if still pressed further, you appeal to the pronouncement of
some holy men or women, and if even that fails you fall back upon 'poetic license.' Still, all that
matters when it comes to any form of literary output, including poetry, is whether it appeals to the reader,
to the senses and provides aesthetic  satisfaction and fulfilment or not. That is how I enjoy and appreciate and
try to interpret, understand and derive satisfaction from Thevaram, Thiruvasakam, Dhivyaprabandham, Arunagirinathar
and even some passages in ThirukkuraL and bharathiyar and many of the great poetic contributions in the thread. 
Appeal to the senses, more than to reason or the intellect, is what counts in the pleasures of reading poetry.
Just my 2 cents worth!

Sankaran


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Ramamoorthy Ramachandran

unread,
Jun 7, 2024, 9:03:04 PM6/7/24
to Santhavasantham
எண்டோள் - எட்டுத் திசைக்கும்.
முக்கண்- சூரியன்,சந்திரன்,அக்னி.

Ramamoorthy Ramachandran

unread,
Jun 7, 2024, 9:04:45 PM6/7/24
to Santhavasantham
ஐந்து தலை,ஐம்பூதங்களையும் ஆள்.

Ramamoorthy Ramachandran

unread,
Jun 7, 2024, 9:08:08 PM6/7/24
to Santhavasantham
கலித்தொகூ எண்கையாய் கேள் இனி! - இது கலித்தொகை. இவையெல்லாம் பிரபஞ்ச நிகழ்ச்சிகளைச் சிவபுரம் பொருளுடன் இணைத்த மெய்யியல்!

Ramamoorthy Ramachandran

unread,
Jun 7, 2024, 9:11:12 PM6/7/24
to Santhavasantham
சிவபுரம் பொருளுடன்.typo.

Ramamoorthy Ramachandran

unread,
Jun 7, 2024, 9:11:13 PM6/7/24
to Santhavasantham
சிவபரம்பொருள்

Ramamoorthy Ramachandran

unread,
Jun 8, 2024, 8:27:06 AM6/8/24
to Santhavasantham
சிவபரம்பொருள் சைவத்தில் பிரபஞ்ச மெய்ப்பொருளாகும்! அப்பரம்பொருள் ஐந்தொழில் ஆற்றும்! எண்டிசை ஆளும்! சூரிய சந்திர அக்னி முக்கண்.

Ramamoorthy Ramachandran

unread,
Jun 8, 2024, 8:35:07 AM6/8/24
to Santhavasantham
சிவத்தை உர,அரு,அருவுரு வாக வழிபடுவர். சிவத்தின் அருட் செயல்களை சைவ சித்தாந்த சாத்திரங்கள் கூறுகின்றன!

தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Jun 8, 2024, 8:36:48 AM6/8/24
to சந்தவசந்தம்
பதில் அளித்த சிவசிவா, சங்கரன், புலவர் இராமமூர்த்தி ஐயா
அவர்களுக்கு நன்றி 🙏
முருகா சரணம் 🙏

ஓம் நமசிவாய 🙏

தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Jun 15, 2024, 9:48:29 AM6/15/24
to சந்தவசந்தம்
அனைவருக்கும் வணக்கம் 🙏

நான் அரசுப்பள்ளியில் ஆய்வக ஆசிரியராக உள்ளேன்.

மொழி ஆய்வகத்தில் தமிழ் மொழி சார்ந்த செயல்முறைகளை
எளிய முறையில் எவ்வாறு செய்வது.



Siva Siva

unread,
Jun 15, 2024, 10:14:09 AM6/15/24
to santhav...@googlegroups.com
/ ஆய்வக ஆசிரியர்  /

What is the job called in English? What is the job description (roles and responsibilities)?

V. Subramanian

தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Jun 15, 2024, 11:22:06 AM6/15/24
to சந்தவசந்தம்
குருவே வணக்கம் 🙏

அறிவியல் ஆய்வகத்தில் பொருட்கள் இருப்பதால் செய்முறை சிறப்பாக நடைபெறும்.
மொழியியல் ( தமிழ், ஆங்கிலம்) இரண்டுமே கணினி வழியாக உச்சிப்பு பயிற்சி, 
வினாடி வினா இதுபோன்ற  மட்டுமே உள்ளது.

பாடத்திட்டத்தைத் தாண்டி, குறிப்பாக தமிழ் மொழி ஆய்வகம் எவ்வாறு
இருக்கலாம்.

மாணவர்களுக்கு ஆர்வம் ஊட்டும் வகையில்

ஏதேனும் யோசனைகள் இருந்தால் கூறுங்கள் .

தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Jun 29, 2024, 8:12:16 PM6/29/24
to சந்தவசந்தம்
அனைவருக்கும் வணக்கம் 🙏

களத்தூர் என்பதன் பொருள் என்ன?

மேலும் வெங்களத்தூர் என்பதன் பொருள் அறிய விழைகிறேன்.


காரணம்:
 நேற்று நடைபெற்ற பணி நிரவல் கலந்தாய்வில் திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் ஒன்றியம் 
வெங்களத்தூர் அரசு உயர்நிலைப்பள்ளியைத் தேர்வு  செய்துள்ளதால்..

தமிழ் நாட்டில் பல ஊர் பெயர்கள் களத்தூர் என்று வருகிறது.

எடுத்துக்காட்டாக
1) பொன்விளைந்த களத்தூர்
2) வெங்களத்தூர்
3)  களத்தூர் என்று பல ஊர் பெயர்கள் உள்ளன.
4) நெடுங்களம்
6) திருவேட்களம் ....

Siva Siva

unread,
Jun 29, 2024, 8:44:40 PM6/29/24
to santhav...@googlegroups.com
---

தமிழகம்

ஊரும் பேரும்


ரா.பி. சேதுப்பிள்ளை, பீ..,பீ.எல்.


Page 75 / 76


களம்


இனி, களம் என்ற சொல்லால் குறிக்கப்படும் ஊர்கள் சிலவற்றைக் காண்போம். பொதுவாகக் களம் என்பது சமவெளியான இடத்தைக் குறிக்கும். சிதம்பரத்துக்கு அருகேயுள்ள திருவேட்களம் என்னும் ஊர் தேவாரப் பாடல் பெற்றுள்ளது. ஈசனாரிடம் பாசுபதாஸ்திரம் பெறக்கருதிய அர்ச்சுனன் அவர் அருளைப் பெறுதற்கு நெடுங்காலம் வேட்ட களம் திருவேட்களம் என்று பெயர் பெற்ற தென்பர். அக் களமே இப்பொழுது அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் இருப்பிடமாக அமைந்திருக்கின்றது. சேர நாட்டிலுள்ள திருவஞ்சைக் களம் சேரமான் பெருமாள் காலத்தில் சிறந்ததோர் திருநகராக விளங்கிற்று. அஞ்சைக் களத்தில் அமர்ந்த ஈசனைச் சேரமான் தோழராகிய சுந்தரர் பாடிப் பரவினார். இன்னும், திருநாவுக்கரசரால் பாடப்பெற்ற நெடுங்களம் என்னும் நகரின் சிறப்பினை முன்னரே கண்டோம்.


களம் என்ற சொல்லின் அடியாகப் பிறந்த களத்தூர் என்பதும் ஊர்ப் பெயராகக் காணப்படுகின்றது. புகழேந்திப் புலவர் என்னும் தமிழ்க் கவிஞர் பிறந்த ஊர் களத்தூ ராகும். ஏனைய களத்தூர்களுக்கும் அவர் பிறந்த களத்தூருக்கும் வேற்றுமை தெரிதற்காகப் பொன் விளைந்த களத்தூர் என்று அவ்வூரைக் குறித்துள்ளார்கள்.

---

V. Subramanian


தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Jun 29, 2024, 9:35:11 PM6/29/24
to சந்தவசந்தம்
மிக்க நன்றி குருவே 🙏

களம் என்றால் புரிந்துவிட்டது.
வெங்களம், வெங்களத்தூர் என்றால்?


வெங்களத்தூர்  திரிபுரசந்தரி சமேத கைலாசநாதர் திருக்கோவில்
தற்போது வெங்களத்தூர் மகாபாரத அக்னி வசந்த பெருவிழா
நடைபெற்றுக் கொண்டுள்ளது.



On Sunday, June 30, 2024 at 6:14:40 AM UTC+5:30 Siva Siva wrote:
---

தமிழகம்

ஊரும் பேரும்


ரா.பி. சேதுப்பிள்ளை, பீ..,பீ.எல்.


Page 75 / 76


களம்


இனி, களம் என்ற சொல்லால் குறிக்கப்படும் ஊர்கள் சிலவற்றைக் காண்போம். பொதுவாகக் களம் என்பது சமவெளியான இடத்தைக் குறிக்கும். சிதம்பரத்துக்கு அருகேயுள்ள திருவேட்களம் என்னும் ஊர் தேவாரப் பாடல் பெற்றுள்ளது. ஈசனாரிடம் பாசுபதாஸ்திரம் பெறக்கருதிய அர்ச்சுனன் அவர் அருளைப் பெறுதற்கு நெடுங்காலம் வேட்ட களம் திருவேட்களம் என்று பெயர் பெற்ற தென்பர். அக் களமே இப்பொழுது அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் இருப்பிடமாக அமைந்திருக்கின்றது. சேர நாட்டிலுள்ள திருவஞ்சைக் களம் சேரமான் பெருமாள் காலத்தில் சிறந்ததோர் திருநகராக விளங்கிற்று. அஞ்சைக் களத்தில் அமர்ந்த ஈசனைச் சேரமான் தோழராகிய சுந்தரர் பாடிப் பரவினார். இன்னும், திருநாவுக்கரசரால் பாடப்பெற்ற நெடுங்களம் என்னும் நகரின் சிறப்பினை முன்னரே கண்டோம்.


களம் என்ற சொல்லின் அடியாகப் பிறந்த களத்தூர் என்பதும் ஊர்ப் பெயராகக் காணப்படுகின்றது. புகழேந்திப் புலவர் என்னும் தமிழ்க் கவிஞர் பிறந்த ஊர் களத்தூ ராகும். ஏனைய களத்தூர்களுக்கும் அவர் பிறந்த களத்தூருக்கும் வேற்றுமை தெரிதற்காகப் பொன் விளைந்த களத்தூர் என்று அவ்வூரைக் குறித்துள்ளார்கள்.

---

V

Siva Siva

unread,
Jun 29, 2024, 9:45:20 PM6/29/24
to santhav...@googlegroups.com
ஊர்ப்பெயரைத் திரிப்பதில் தமிழர்கள் வல்லவர்கள்!
அடையாறு - அடையார் ஆகிவிட்டது!
நள்ளாறு - நள்ளார் ஆகிவிட்டது.

வெங்களத்தூர் மூலம் நான் அறியேன். 
வெம்+களத்தூர்? வெண்+களத்தூர்?


வெம்மை vemmai , n. [T. umma, M. vemma.] 1. Heat; glow; வெப்பம். அழலன்ன வெம்மையால் (கலித். 11). 2. Severity, harshness; cruelty; கடுமை. (சீவக. 744.) 3. Anger, wrath; கோபம். வேகயானை வெம்மையிற் கைக்கொள (சிலப். 15, 47). 4. Desire; விருப்பம். (தொல். சொல். 334.) 5. Might, valour; பராக்கிரமம். உலக மூன்றுமென் வெம்மையி னாண்டது (கம்பரா. அதிகா. 4).

V. Subramanian

seshadri sridharan

unread,
Jun 29, 2024, 9:58:50 PM6/29/24
to santhav...@googlegroups.com
களம் என்றால் வயல். களத்தூர் என்றால் வயலூர். செங்கல்பட்டு அருகே பொன் விளைந்த களத்தூர். வேதாந்த தேசிகரோடு தொடர்புடையது.  வெங்கல் ஒரு வகை மீனாக இருக்கலாம். 

Subbaier Ramasami

unread,
Jun 29, 2024, 10:52:13 PM6/29/24
to santhav...@googlegroups.com
வெங்களத்தூரில் அகினி வசந்தவிழா நடைபெறுவதாகக் கூறியுள்ளீர்கள். எனவே வெப்பத்தோடு தொடர்புடையதால் வெம் களத்தூர்(
சிவபெருமானிலன் அதோமுகக் கைகள் தலைக்கு மேலே இருப்பதால் உடலோடு ஒட்டித்தெரியமாட்டா. எனவே  வெளிப்படையாகத் தெரிவன எட்டுக்கைகளே!

இலந்தை

தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Jul 22, 2024, 12:25:25 PM7/22/24
to சந்தவசந்தம்
அனைவருக்கும் வணக்கம் 🙏

குலசேகர ஆழ்வார் , பெரியாழ்வார் பாடியது போல தாலாட்டு பாடல்கள்
சிவபெருமான், முருகன் அல்லது வேறு ஏதேனும் தெய்வத்திற்கு உள்ளதா?
இருப்பினும் தெரிவிக்கவும்.
நன்றி.
(சமஸ்கிருதத்தில் இருந்தாலும்) 


Siva Siva

unread,
Jul 22, 2024, 12:32:02 PM7/22/24
to santhav...@googlegroups.com
சிவனுக்குப் பிள்ளைத்தமிழ் பாடும் மரபு இல்லை.
அம்பாளுக்குப்  பிள்ளைத்தமிழ் உண்டு.
முருகனுக்குப் பிள்ளைத்தமிழ் உண்டு.

பகழிக் கூத்தர் இயற்றிய 
திருச்செந்தூர் முருகன் பிள்ளைத்தமிழ்
இந்த நூலில் தாலப்பருவம் என்ற பகுதியைக் காண்க.

V. Subramanian

தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Jul 22, 2024, 12:53:02 PM7/22/24
to சந்தவசந்தம்
மிக்க நன்றி குருவே 🙏

அருணாசலக் கவிராயர் எழுதிய அனுமன் பிள்ளைத்தமிழ் இனையத்தில் கிடைக்க வில்லை.
யாரிடமேனும் இருந்தால் தெரிவிக்கவும் முருகா சரணம் 🙏


K.R. Kumar

unread,
Jul 23, 2024, 12:19:47 AM7/23/24
to santhav...@googlegroups.com
சொ சொ மீ  சுந்தரம் ஐயா ,சிங்கை தண்டாயுதபாணி முருகனுக்கும், ருத்ர காளி அம்மனுக்கும் தனித்தனி பிள்ளைத்தமிழ் பாடல்கள் இயற்றியிருக்கிறார்.

குமார்(சிங்கை)

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Kaviyogi Vedham

unread,
Jul 23, 2024, 11:33:57 AM7/23/24
to santhav...@googlegroups.com
ஐயா  என்  நண்பர்  குமார்!... அவரிடமிருந்து நீர் முயன்று.. எப்படியும் காளியின்  பிள்ளைத்தமிழ்  பாடல்களைப்பெற்று இவண் தருவீரா? நன்றியுடையேம்..
 யோகியார்

தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Jul 23, 2024, 8:32:47 PM7/23/24
to சந்தவசந்தம்
இருவருக்கும் நன்றி 🙏

K.R. Kumar

unread,
Jul 24, 2024, 1:44:01 AM7/24/24
to santhav...@googlegroups.com
நமஸ்காரங்கள், யோகியார்,

கட்டாயம் முயற்சி செய்கிறேன்.

குமார்(சிங்கை)

தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Jul 25, 2024, 5:14:52 AM7/25/24
to சந்தவசந்தம்
குருவே வணக்கம் 🙏



On Monday, July 22, 2024 at 10:02:02 PM UTC+5:30 Siva Siva wrote:
சிவனுக்குப் பிள்ளைத்தமிழ் பாடும் மரபு இல்லை.


சிதம்பரத்தாலாட்டு

இதில் மூன்று தாலாட்டு பாடல்கள் உள்ளன.  அதில் ஒன்று
சிவபெருமான் தாலாட்டு போல குருவே 🙏

Siva Siva

unread,
Jul 25, 2024, 8:27:13 AM7/25/24
to santhav...@googlegroups.com
That seems odd.
I do not know about that author.
Sometimes a devotee may do something that is not considered appropriate - but Siva may accept it out of love.
(For example, Kannappar's worship of Siva).

V. Subramanian

தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Jul 26, 2024, 8:22:10 PM7/26/24
to சந்தவசந்தம்
அருமையான விளக்கம் மிக்க நன்றி குருவே 🙏

தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Jul 28, 2024, 6:31:46 AM7/28/24
to சந்தவசந்தம்
தெருக்கூத்து நாடகம் கலைஞர்
திரு கோ சி நடேசன் அவர் எழுதிய
 குழந்தை திருப்புகழைக் மகிழ







தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Jul 31, 2024, 2:58:12 AM7/31/24
to சந்தவசந்தம்
அனைவருக்கும் வணக்கம் 🙏

பெரியாழ்வார் திருமொழி

பாசுரம்

கானார் நறுந்துழாய் கைசெய்த கண்ணியும்
வானார் செழுஞ்சோலைக் கற்பகத்தின் வாசிகையும்
தேனார் மலர்மேல் திருமங்கை போத்தந்தாள்
கோனே! அழேல் அழேல் தாலேலோ குடந்தைக் கிடந்தானே! தாலேலோ

இது என்ன பா வகை ?

போத்தந்தாள் என்ற வார்த்தை புரியவில்லை. பொருள் என்ன?

Siva Siva

unread,
Jul 31, 2024, 2:18:45 PM7/31/24
to santhav...@googlegroups.com
இது கலித்தாழிசை என்று கண்டேன். (   https://aazhvarmozhi.blogspot.com/2009/10/  )

பசுபதியாரின் - கவிதை இயற்றிக் கலக்கு - அத்தியாயம் 21 - கலித்தாழிசை விளக்கம் காண்க.

போத்தா¹-தல் [போத்தருதல்] pōttā- , v. < போ- + தா- +. tr. 1. To go and bring; to get, fetch; போய்க்கொண்டுவருதல். பரதவர் போத் தந்த பன்மீன் (தொல். பொ. 114, உரை). 2. To fill up, as an ellipsis in a sentence; உரிய சொல்லை வருவித்துரைத்தல். 3. To send by messenger; கொடுத்தனுப்புதல். அமரர்கள் போத்தந்தார் (திவ். பெரியாழ் 1, 3, 4). 4. To send out; to permit to go out; புறப்பட விடுதல். உன்னை . . . போத்தந்த நுமர் (கலித். 58, 10). — intr. 1. To go, proceed; போதலைச் செய்தல். நல்வாயிற் போத்தந்த பொழுதி னான் (கலித். 84, 5). 2. To get out, come out; வெளிவருதல். போத்தந்து தாயர் தெருவிற் றவிர்ப்ப (கலித். 84, 14).

V. Subramanian

N. Ganesan

unread,
Jul 31, 2024, 10:47:06 PM7/31/24
to santhav...@googlegroups.com
மேலும் வெங்களத்தூர் என்பதன் பொருள் அறிய விழைகிறேன்.

> வெங்களம், வெங்களத்தூர் என்றால்?

வெங்களம் என்றால் போர்க்களம். பெருமன்னர்களின் போர் நடந்த இடம். அங்கு அமைந்த ஊர்: வெங்களத்தூர்.

நா.கணேசன்

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

N. Ganesan

unread,
Jul 31, 2024, 11:33:42 PM7/31/24
to santhav...@googlegroups.com
On Wed, Jul 31, 2024 at 9:46 PM N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
மேலும் வெங்களத்தூர் என்பதன் பொருள் அறிய விழைகிறேன்.

> வெங்களம், வெங்களத்தூர் என்றால்?

வெங்களம் என்றால் போர்க்களம். பெருமன்னர்களின் போர் நடந்த இடம். அங்கு அமைந்த ஊர்: வெங்களத்தூர்.

நா.கணேசன்

On Sat, Jun 29, 2024 at 8:35 PM தங்கவேல் காஞ்சிபுரம் <k.thanga...@gmail.com> wrote:
மிக்க நன்றி குருவே 🙏

களம் என்றால் புரிந்துவிட்டது.
வெங்களம், வெங்களத்தூர் என்றால்?

வெங்களங் கொண்ட போது ... நீ போர்க்களம் புகுந்த போது,

வஞ்சி மலைந்த உழிஞை முற்றி
தும்பையிற் சென்ற தொடுகழல் மன்னனை
வெம்புசின மாற்றான் தானை வெங்களத்தில்
குருதிப் பேராறு பெருகும் செங்களத்து
ஒருதனி ஏத்தும் பரணியது பண்பே

https://www.tamilvu.org/courses/degree/c012/c0124/html/c01241l1.htm

(பன்னிரு: 240)

Lalitha & Suryanarayanan

unread,
Aug 2, 2024, 5:05:30 PM8/2/24
to santhav...@googlegroups.com

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Aug 3, 2024, 9:59:14 PM8/3/24
to சந்தவசந்தம்
திரு நா கணேசன், சிவசிவா, Lalitha & Suryanarayanan
மூவருக்கும் மிக்க நன்றி 🙏

தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Aug 12, 2024, 10:28:58 AM8/12/24
to சந்தவசந்தம்
அனைவருக்கும் வணக்கம் 🙏

வரும் சுதந்திர தின விழாவில்  6,7,8 மாணவர்கள்
நடிப்பதற்கு எளிய நாடகம், கவிதை, பேசுவதற்கு
ஏதேனும் இருந்தால் கூறுங்கள்
நன்றி 🙏


தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Nov 2, 2024, 7:18:57 PM11/2/24
to சந்தவசந்தம்
சிவபெருமான் துளசியைக்குட சடையில் அணிவாரா?

திருப்புகழில் 

கொங்கு அடுத்த குரா மாலிகை தண் கடுக்கை துழாய்
தாதகி ... வாசனை கொண்ட குரா மலர் மாலை, குளிர்ந்த கொன்றை,
துளசி, ஆத்தி

கும்பிடத் தகு பாகீரதி மதி மீது கொண்ட சித்ர கலா சூடிகை
இண்டு எருக்கு அணி ... வணங்கத் தகுந்த கங்கைநதி,
சந்திரனிடத்தே கொண்டுள்ள அழகிய கலை, (இவைகள் விளங்கும்)
ஜடாமுடியில் ஈகைக் கொடிப்பூ, எருக்க மலர் அணிந்துள்ளவர்,

காகோதரம் குண்டல அத்தர் பினாக ஆயுதருடனே ...
பாம்பைக் குண்டலமாக அணிந்தவர், பினாகம் என்னும் வில்லை
ஆயுதமாக ஏந்தியவர் (ஆகிய சிவபெருமானும்),



செங்க னற்புகை யோமாதிகள் குண்ட மிட்டெழு சோமாசிகள்
     தெண்டெ னத்துணை தாள்மேல்விழ ...... அமராடிச்

சிந்த னைப்படி மோகாதியி லிந்த்ரி யத்தினி லோடாசில
     திண்டி றற்றவ வாள்வீரரொ ...... டிகலாநின்

றங்கம் வெட்டிய கூர்வாள்விழி மங்கை யர்க்கற மாலாய்மன
     மந்தி பட்டிருள் மூடாவகை ...... யவிரோத

அந்த நிற்குண ஞானோதய சுந்த ரச்சுட ராராயந
     லன்பு வைத்தரு ளாமோர்கழ ...... லருளாதோ

கொங்க டுத்தகு ராமாலிகை தண்க டுக்கைது ழாய்தாதகி
     கும்பி டத்தகு பாகீரதி ...... மதிமீது

கொண்ட சித்ரக லாசூடிகை யிண்டெ ருக்கணி காகோதர
     குண்ட லத்தர்பி னாகாயுத ...... ருடனேயச்

சங்கு சக்ரக தாபாணியு மெங்க ளுக்கொரு வாழ்வேசுரர்
     தங்க ளைச்சிறை மீளாயென ...... அசுரேசன்

தஞ்ச மற்றிட வேதாகர னஞ்ச வெற்புக வீராகர
     சண்ட விக்ரம வேலேவிய ...... பெருமாளே.



Siva Siva

unread,
Nov 2, 2024, 8:58:52 PM11/2/24
to santhav...@googlegroups.com
If the verse is believed to be Arunagirinathar's, then we can accept it without needing further corroboration.
Siva pretty much wears anything and everything.

An example from a search:

Appar thevaram - 4.89.5

கொய்ம்மலர்க் கொன்றை துழாய்வன்னி மத்தமுங் கூவிளமும்
மெய்ம்மலர் வேய்ந்த விரிசடைக் கற்றைவிண் ணோர்பெருமான்
மைம்மலர் நீல நிறங்கருங் கண்ணியோர்  பான்மகிழ்ந்தான்
நின்மல னாட னிலயநெய்த் தானத் திருந்தவனே 

V. Subramanian

தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Nov 3, 2024, 8:45:48 AM11/3/24
to சந்தவசந்தம்
அனைவருக்கும் வணக்கம் 🙏 

திருகு வலி என்றால் என்ன?

தலைவலியும் திருகுவலியும் தனக்கு வந்தால் தெரியும்
தலைவலி போய் திருகு வலி வந்தது.

On Sunday, November 3, 2024 at 6:28:52 AM UTC+5:30 Siva Siva wrote:
If the verse is believed to be Arunagirinathar's, then we can accept it without needing further corroboration.
Siva pretty much wears anything and everything.

An example from a search:

மிக்க நன்றி குருவே 🙏  

Siva Siva

unread,
Nov 4, 2024, 7:21:22 AM11/4/24
to santhav...@googlegroups.com

As per OTL:
திருகு¹-தல் - , 5 v. tr. 1. [T. tirugu, K. tiruhu.] To twist, turn, wring; முறுக்குதல். 

In OTL, there is an example in a disease definition:

சூலைக்குடைச்சல் cūlai-k-kuṭaiccal , n. id. +. Writhing pain in certain arthritical diseases; சூலைநோயால் உண்டாகும் திருகுவலி. (W.)

So, my guess is:
திருகுவலி
உளைவு - n. < உளை¹-. 1. Griping pain in the stomach; வயிற்றுளைவு. 2. Intense pain in the limbs, as from rheumatism, weariness or cold; குடைச்சனோவு.

V. Subramanian

It is loading more messages.
0 new messages