Fwd: வாலி - கண்ணீர் அஞ்சலி

222 views
Skip to first unread message

Niranjan Bharathi

unread,
Jul 19, 2013, 12:43:09 AM7/19/13
to santhav...@googlegroups.com
என் ஆசான், தமிழ்த்தெய்வம், வாலி ஐயா அவர்களுக்கு அவர் மாணவனின் கண்ணீர் அஞ்சலி

என் குருவே
கலைமகள் உருவே
தமிழ்த்தாய் தரணிக்களித்த
ஈடில்லாத் திருவே 

நான் கவிதையெழுதுவதற்கு
பாரதியார் காரணம்
எழுதுவது கவிதையாயிருப்பதற்கு
நீ தானே காரணம்

பாடப் புத்தகம்
படிக்கும் நேரத்தில் உன் 
பாட்டுப் புத்தகத்தை
அன்றோ படித்துக் கொண்டிருந்தேன் 

எதுகை என்றாலென்ன ?
மோனை இன்றாலென்ன ?
இலக்கணம் கற்றுக்கொடுக்கவில்லை
நீ யன்றோ கற்றுக்கொடுத்தாய் 

என் கவிதை 
விதைக்கு  நீரூற்றியவன்
நீ தானே 

ஏகலைவனாய் இருந்து
உன்னிடம் பாடம் கற்றேனே 

ஏகலைவனுக்குத் துரோணர்
எதுவும் கொடுக்கவில்லை 
 
எனக்கு நீ
அள்ளி அள்ளிக் கொடுத்தாயே
உன் ஆசிகளை


 நரை வந்தபின்னும்
குறை ஏதுமின்றி
கரை கண்டு  நின்றாயே
தமிழ்த் திரைக் கடலில் 

அழுது புரண்டாலும்
நீ திரும்பக் கிடைப்பாயா ?
தொழுது இறைஞ்சினாலும்
உயிர் பிழைத்து வருவாயா ?

அய்யகோ !!

காலனே !!

கவி படைக்கும் மார்க்கண்டேயனைக்
கொன்று விட்டாயே !!!


வானம் போல்
காற்றைப் போல்
நிலவைப் போல்
கதிரைப் போல்

வாலி அய்யா

நீவிர் என்றென்றும்
நிலைத்திருக்கக் கூடாதா ?!!


நீ இறந்தாலும்
நீ படைத்த பாடல்கள்
இறக்காதய்யா !!
உன் கவிதையை
தமிழ் கூறும் நல்லுலகம்
மறக்காதய்யா !!


உன் சேவடியில்
சிரம் தாழ்த்தும்
உன் மாணவனுக்கு
ஆசி வழங்கய்யா !!


வாழ்க நீ பல்லாண்டு
வாழ்க நீ பல்லாண்டு
வாழ்க நீ பல்லாண்டு


 
அன்புடன்,
நிரஞ்சன்

Kaviyogi Vedham

unread,
Jul 19, 2013, 4:13:26 AM7/19/13
to santhavasantham
அப்பா நிரஞ்சன்.. மனத்தை உருக்கிவிட்டனை. ஆம் கவி உலகத்துக்கு  வாலி அவர்கள் மறைவு பெரும் இழப்புத்தான்,
 நெகிழ்த்தும் கவி உடனே படைத்த நீ வாழ்க!,
 யோகியார்

 

N. Ganesan

unread,
Jul 20, 2013, 10:58:05 AM7/20/13
to santhav...@googlegroups.com
On Thursday, July 18, 2013 9:43:09 PM UTC-7, Niranjan Bharathi wrote:
என் ஆசான், தமிழ்த்தெய்வம், வாலி ஐயா அவர்களுக்கு அவர் மாணவனின் கண்ணீர் அஞ்சலி


சினிமாப் பாடலாசிரியர்கள் அனைவருக்கும் குரு வாலி. கண்ணதாசன் காலத்திலேயே களத்தில்
நின்றிருக்கிறார்.

அவர் ஞாபகார்த்தமாக உங்களிடம் (அல்லது இங்குள்ள வாலி அன்பர்களிடம்) ஓர் உதவி வேண்டுகோள்:
பராய்த்துறைப் பாடலாசிரியர் வாலி அவர்களின் கவியரங்கக் ஈழம் பற்றின கவிதையை தட்டெழுதித் தாருங்கள்.

நனிநன்றிகள் கோடி!

நா. கணேசன்

pushpa christy

unread,
Jul 21, 2013, 12:41:18 AM7/21/13
to santhav...@googlegroups.com
கவிஞர் வாலி அவர்களின் மறைவுக்கு நானும் என் குடும்பம் 
சார்ந்து என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கின்றேன்..

சோதரி'
புஷ்பா கிறிஸ்ரி



pushpa christy

unread,
Jul 21, 2013, 12:42:47 AM7/21/13
to santhav...@googlegroups.com
அன்பு கணேஸ் அண்ணா 
இதோ கவிஞர் வாலி அவர்களின் கவிதை தட்டச்சிய வடிவம்...


கவிஞர் வாலி அவர்களின் கவியரங்க ஈழம் பற்றின கவிதை

இதுகாறும் இங்கு கவிஞர்களைப் பற்றிக் கவிஞர்கள் பாடினார்கள்..
இவர்களது ஈரத்தமிழில் ஆழ்ந்து ஈங்குள்ளோர் ஆடினார்கள்.
இந்த ஈரத்தமிழ சற்று ஈழத்தமிழ் பற்றியும் எண்ணவேண்டும்.

முள்ளி வாய்க்கால்த் தமிழன் விடி வெள்ளி வாய்க்காமல் தவிக்கிறானே
அவன் விடியலுக்காய் அருந்தமிழ் வெளிச்சங்கள் பண்ண வேண்டும்

உள்ள சோகங்களிலேயே உச்ச சோகம் யாதெனில்
தன் இனம் தகர்க்கப்பட்டிருப்பதை ஓரினம் ஓராதிருப்பது தான்

தண்ணீர்க்கடல் நடுவே கண்ணீர் கடலாக 
தென் திசையில் தொன்மைக் குடிகள் 
நம் தொப்புள் கொடிகள்

வாடை அவிழ்க்காத தமிழ் வஞ்சியின் ஆடையைச் 
சிங்களக் காடை அவிழ்த்தான்..
அவளது கற்பைக் கவிழ்த்தான்

காடையரை நோக்கி தலைக்கு மேல் கரங்களைத் தூக்கி
வழிபட்டாள் வேண்டினாள் விடவில்லை 
கிளிபட்டாள் கிளிநொச்சித் தமிழச்சி

கள்ளிருக்கும் மலர்க் கருங்குழலால் மைதிலியின் காதல் 
உள்ளிருக்கும் எனத் ஊடுருவித் தேடியதாம் 
இராவணன் நெஞ்சை இராகவன் வாளி

அஃதே போல் அங்கே 
தம்பி தம்பி என்று தமிழர்கள் விழிக்கும்
தலைவனைக் காணாது 

களைத்துப் போன காடையர் படை தமிழர் நெஞ்சை
துளைத்துப் பார்த்ததாம் துப்பாக்கித் தோட்டாவால்
உள்ளே தம்பி ஒளிந்திருக்கலாம் என நம்பி
வெள்ளைக் கொடி விரித்த படி 
சமர்க்களம் வந்த சமாதானப் புறாக்களை
சமைத்துச் சாப்பிட்டன சிங்களர் படை
அங்கு புத்தனே நடத்துகிறான் பிரியாணிக்கடை

யுத்தம் முடிந்த பிறகு கடலளவு 
இரத்தம் வடிந்த பிறகு
நேர்ந்தது என்ன என்பதை நேர்முகக் காட்சியாய்
இதோ இதோ என்று காட்டியது இங்கிலாந்து டிவி

அந்த அக்கிரமங்களைப் பார்த்து 
ஐயோ ஐயோ என்று அலறுகின்றது நம்முடைய ஆவி

அங்கே முள்வேலிக்குள் கிடக்கிறான் ஈழத்தமிழன்
இங்கே கள் வேலிக்குள் கிடக்கிறான் சோழத்தமிழன்
இது இமாலயப் பிழை 
இல்லை இதற்கு இணையாய் இங்கே இன்னொரு பிழை
அட அச்சுப்பிழையானால் அதைத் திருத்தலாம்'
இது அச்சப்பிழை யார் இதைத் திருத்துவது
தருமத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்

தருமம் மறுபடியும் வெல்லும்
பலிக்காதிருந்ததில்லை பாரதியின் எந்தச் சொல்லும் 

இத்துடன் நிறைவுறுகிறது இந்தப் பாட்டரங்கம்
நன்றி வணக்கம்.



2013/7/20 pushpa christy <pushpa...@gmail.com>

N. Ganesan

unread,
Jul 21, 2013, 1:10:17 AM7/21/13
to santhav...@googlegroups.com


On Saturday, July 20, 2013 9:42:47 PM UTC-7, pushpa wrote:
அன்பு கணேஸ் அண்ணா 
இதோ கவிஞர் வாலி அவர்களின் கவிதை தட்டச்சிய வடிவம்...


நன்றி, சகோதரி.

குமுதத்தில் வெளியான வாலி கவிதை ஒன்று, 
குழந்தை பாலச்சந்திரன் மரணம் பற்றி வாலி எழுதியுள்ளார்:

நா. கணேசன்

N. Ganesan

unread,
Jul 21, 2013, 1:36:21 PM7/21/13
to santhav...@googlegroups.com, vall...@googlegroups.com, mintamil


On Saturday, July 20, 2013 9:42:47 PM UTC-7, pushpa wrote:
அன்பு கணேஸ் அண்ணா 
இதோ கவிஞர் வாலி அவர்களின் கவிதை தட்டச்சிய வடிவம்...



நன்றி, சகோதரி புஷ்பா.

வாலி வாரிசாக சினிமாப் பாடலாசிரியராய்ப் புகழ்பெற்றுவருகிறார் ‘பா’ விஜய்.
அவரது பாடலை கவிஞர் வாலி பாடலை நான் அனுப்பியதைக் கண்ட
நண்பர்கள் பா விஜய் பாடிய கவிதை அனுப்பினர். அவரது குரலிலே கேட்கலாம்:

1800-லிருந்து 1950 வரை அச்சான ஒவ்வொரு தமிழ்க் காகிதமும் பொக்கிசம்.
பல அழிந்துவருகின்றன, அல்லது அழியும் தறுவாயில் இருப்பவை.

வாலியின் உணர்வும், கவிதையும் உங்கள் தட்டச்சால் என்றும் வாழும்.
விடியோ வலைத்தளத்தில் இருந்து போய்விடும். ஆனால் எழுத்து இருக்கும். 
"Manuscripts don't burn.": This phrase became a popular saying in the Soviet Union. It was used especially in reference to writers whose works were considered dangerous by the government. Many of these writers never wrote down their stories or poems. They memorized their works so that the police would not find copies of the writings. This method helped preserve their stories for years. As a result, "manuscripts don't burn" because no matter what happens to the written copy of the work, it will always exist in the mind of its author.


ஈழத்ததும், ஈழவர் பற்றியதுமான எழுத்துக்கள் பாதுகாக்கப்படவேண்டும். தமிழின வரலாறு சரியாக எழுதப்படும் போது
முக்கியத் தரவுகள் இவை.

நலமே விளைக. வாழ்க தமிழுடன்.
நா. கணேசன்

Iyappan Krishnan

unread,
Jul 21, 2013, 1:44:47 PM7/21/13
to சந்தவசந்தம், vall...@googlegroups.com, mintamil

Iyappan Krishnan

unread,
Jul 21, 2013, 1:47:52 PM7/21/13
to சந்தவசந்தம், vall...@googlegroups.com, mintamil
Reply all
Reply to author
Forward
0 new messages