கவிஞர் வாலி காலமானார்...!

35 views
Skip to first unread message

Anna Kannan

unread,
Jul 18, 2013, 9:05:23 AM7/18/13
to Vallamai

கவிஞர் வாலி காலமானார்...!

10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப் பாடல்களை எழுதிய கவிஞர் வாலி காலமானார்...!

மேலும் செய்தி:

http://tamil.yahoo.com/%E0%AE%95%E0%AE%B5-%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5-%E0%AE%B2-%E0%AE%95-%E0%AE%B2%E0%AE%AE-%E0%AE%A9-%E0%AE%B0%E0%AF%8D-120000979.html

எனது ஆழ்ந்த இரங்கல்.

கவிஞர் வாலி, நினைவுகளால் வாழ்வார், நித்தியத்தில் தோய்வார்.



Innamburan S.Soundararajan

unread,
Jul 18, 2013, 9:19:24 AM7/18/13
to vall...@googlegroups.com, mintamil
வருத்தமான நிகழ்வு. அவருடைய ஆத்மா சாந்தியடையும், அவருடைய கடைசி நூலின் ஆத்மீகம் மகத்தானது. ஆகவே.


2013/7/18 Anna Kannan <annak...@gmail.com>

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 

Anna Kannan

unread,
Jul 18, 2013, 9:23:57 AM7/18/13
to Vallamai

‘ நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே., ’- சொன்னபடி வாழ்ந்து காட்டிய வாலி இன்று இல்லை


இவர் எழுதிய பாடல்களில் சரித்திரத்தில் மறையாத பாடல்கள் ஆயிரம் உண்டு. புதிய வானம் புதிய பூமி, ஏமாற்றாதே ஏமாறாதே, வெள்ளிக் கிண்ணம்தான் தங்க கைகளில்,, கண் போன போக்கிலே கால் போகலாமா,நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே, காற்று வாங்க போனேன் ஒரு கவிதை வாங்கி வந்தேன், நான் ஒரு குழந்தை நீ ஒரு குழந்தை, நான் உன்னை வாழ்த்தி பாடுகிறேன், மன்னிக்க வேண்டுகிறேன், தரைமேல் பிறக்கவைத்தான், எங்களை கண்ணீரில் , இறைவா உன் மாளிகையில், நான் மலரோடு தனியாகஏன், மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும், நான் ஆணையிட்டால், அது நடந்து விட்டால், அம்மா என்றழைக்காத உயிர் இல்லையை, மாதவி பொன்மயிலாள் தோகை விரித்தாள், அந்த நாள் ஞாபகம் நெஞ்சினிலே வந்ததே நண்பனே,கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது. இது போன்ற பாடல்கள்ஏராளம். 

Nagarajan Vadivel

unread,
Jul 18, 2013, 9:43:27 AM7/18/13
to vallamai
எழுதிய பாடல்கள் 15000-க்கும் அதிகம்

அவரை முதல் முதலில் தி.நகரில் என் உறவினரின் பக்கத்து வீட்டுக்காரராக 1960-ல் சந்தித்ததுண்டு

அப்போதுதான் திரையுலகில் அடியெடுத்துவைத்த நேரம்

கிராப்பும் தலையுமாகக் கட்டுடல் கொண்ட இளைஞர்

விரும்பிய நோக்கம் எடுத்துக்கொண்ட லட்சியம் எட்டாத உயரத்தைஅடையும்வரை ஓயாமல் உழைத்தவர்


வவ


2013/7/18 Anna Kannan <annak...@gmail.com>

‘ நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே., ’- சொன்னபடி வாழ்ந்து காட்டிய வாலி இன்று இல்லை


இவர் எழுதிய பாடல்களில் சரித்திரத்தில் மறையாத பாடல்கள் ஆயிரம் உண்டு. புதிய வானம் புதிய பூமி, ஏமாற்றாதே ஏமாறாதே, வெள்ளிக் கிண்ணம்தான் தங்க கைகளில்,, கண் போன போக்கிலே கால் போகலாமா,நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே, காற்று வாங்க போனேன் ஒரு கவிதை வாங்கி வந்தேன், நான் ஒரு குழந்தை நீ ஒரு குழந்தை, நான் உன்னை வாழ்த்தி பாடுகிறேன், மன்னிக்க வேண்டுகிறேன், தரைமேல் பிறக்கவைத்தான், எங்களை கண்ணீரில் , இறைவா உன் மாளிகையில், நான் மலரோடு தனியாகஏன், மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும், நான் ஆணையிட்டால், அது நடந்து விட்டால், அம்மா என்றழைக்காத உயிர் இல்லையை, மாதவி பொன்மயிலாள் தோகை விரித்தாள், அந்த நாள் ஞாபகம் நெஞ்சினிலே வந்ததே நண்பனே,கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது. இது போன்ற பாடல்கள்ஏராளம். 

Tthamizth Tthenee

unread,
Jul 18, 2013, 9:55:52 AM7/18/13
to vall...@googlegroups.com
யாரெதிர் வந்தாலும் பாதி பலம் வாங்கும்
பார் புகழ் கவிஞன்  ஶ்ரீரங்கத்து வாலி
நேர் எதிர்  மனிதரையும்  நேயத்தோடணுகி
சீர் மிகு சொற்களால்  மனம் இளக்கி பாவுலகுத்
தேர் ஏறி நின்றான்  திருமால் அரங்கன்
தன் பாதம் தன்னில்  நேராக சென்றடைந்தான்
அவர் புகழ் வாழ  அடியேனும் தொழுகின்றேன்
அரங்கமா நகருளானை  அன்பாய்

அன்புடன்
தமிழ்த்தேனீ




2013/7/18 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>

shylaja

unread,
Jul 18, 2013, 9:58:25 AM7/18/13
to vallamai
என்  தந்தையின் அருமை நண்பர்..சென்ற ஜூலையில் அப்பா மறைந்தார்  இந்த ஆண்டு  வாலி அவர்கள்!
வாலிமாமா என்றுதான் நான் அவரை அழைப்பது வழக்கம்... 
 
 
அப்பா அவருடன் சில படப்பாடல் ஒலிப்பதிவுக்குப்போயிருக்கிறார். பழைய நட்பை மறவாதவர்.
 
பெங்களூரில்  உங்களின்  சில நூல்கள்  கிடைக்கவில்லை என்றேன் அத்தனைப்புத்தகங்களையும் மறுநாள் குரியரில் அனுப்பிவிட்டார்!
 
 அப்பாவோடு  சில வருஷம் முன்பு ஒரு விழாவுக்குப்போனபோது  எத்தனை பிரியமாய் பேசினார்!  ஸ்ரீரங்கத்துக்கதைகளை அவரும் அப்பாவும் மனம் விட்டுப்பேசிக்கொண்டார்கள். அவர் கவிதை வாசித்து  முடித்ததும்  அரங்கத்தில் கூட்டம் குறையவும் நான், வாலி  அமர்ந்தால் அரங்கம் காலி என்றேன்.அதை ரசித்து சிரித்தவர்!  ‘எழுத்து என்றும்  உன்னை வாழவைக்கும்  எழுதிக்கொண்டே இரு’என்று என்னை ஆசிர்வதித்தவர்!
அழகிய சிங்கர்  என்ற அருமையான நூலை  தான் விரைவில் ஆசார்யன் திருவடியை அடைந்துவிடுவோம் என நினைத்தே  தான் குரு வணக்கமாக எழுதி  முடிதhது அதனைப்பெரு விழா ஒன்றில் வெளியிட்டாரோ?  அவரைத்தொடர்ந்து சென்றுவிட்டாரே):்


2013/7/18 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>



--
ஷைலஜா
 
 ////
புள்ளதாகி வேதம் நான்கும் ஓதினாய் அதன்றியும்
புள்ளின் வாய்பிளந்து  புல்கொடிப் பிடித்த  பின்னரும்

புள்ளை ஊர்தி  ஆதலால்  அதென்கொல் ? மின்கொள் நேமியாய் !
புள்ளின் மெய்ப்பகைக்கடல்  கிடத்தல் காதலித்ததே //
 
திரு மழிசை
vaaliuncle appa makaram uncle and shylaja.jpg

Parvathy Ramachandran

unread,
Jul 18, 2013, 10:12:22 AM7/18/13
to vall...@googlegroups.com
திருவரங்கம் தந்த கவிப்புதையல், கவிஞர் வாலியின் ஆன்மா அரங்கமா நகருளானின் இணையடி நிழலில் அமைதி அடையப் பிரார்த்திக்கிறேன். எத்தனையோ திரைப்பாடல்களைத் தந்த வாலி அவர்களின் ஆன்மீக எழுத்தின் மகிமை  சொற்களில் அடங்குவதில்லை!!.

'தாய் மூகாம்பிகை' படத்தில் வரும், 'ஜனனி, ஜனனி...' பாடலில்,

'சதுர் வேதங்களும்
பஞ்ச பூதங்களும்
ஷண் மார்க்கங்களும்
சப்த தீர்த்தங்களும்
அஷ்ட யோகங்களும்
நவ யாகங்களும்
தொழும் பூங்கழலே! மலை மாமகளே!'

என்ற வரிகள், ஆழங்காண முடியாத அவரது ஞானத்தைத் தெளிவாகக் காட்டுபவை.

அவர் தந்த ஆன்மீக நூல்கள் ஒவ்வொன்றும் விலைமதிக்க முடியாத பொக்கிஷம்!!!.

கவியுலகுக்கு இது ஈடுகட்ட முடியாத பேரிழப்பே.


பார்வதி இராமச்சந்திரன்.

coral shree

unread,
Jul 18, 2013, 10:39:32 AM7/18/13
to vall...@googlegroups.com
அற்புதமான கவிஞர் வாலி. அன்னாரின் ஆன்மா சாந்தியடைய மனமார்ந்த பிரார்த்தனைகள்.

மாகாவியம் யாத்த வாலியே உன்னைப்பற்றி காவியம் இயற்ற யார் வருவார்
அன்று வாலியை அழித்தது இராமன் இன்று உன்னை அழித்தது யார்?
மகனை இழந்த துயரத்தில் அன்னை துடிக்கிறாள் 
கவிமன்னனை இழந்த துயத்தில் மக்கள் நாங்கள் கண்ணீர்விடுகிறோம்
அழியா புகழ் பெற்று தெய்வமானாய் 
உன் வழியில் நடக்கும் சிறு பிள்ளைகள் நாங்கள், கைபிடித்துச் செல்வாயா, 
கண்ணீருடன்
திருநாவுக்கரசு

அன்புடன்
பவளா

2013/7/18 Parvathy Ramachandran <tspar...@gmail.com>
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 



--

                                                               
                 

Take life as it comes.
All in the game na !!

Pavala Sankari
Erode.
Tamil Nadu.

Aadhiraa

unread,
Jul 18, 2013, 12:23:36 PM7/18/13
to vall...@googlegroups.com
மிகப்பெரிய இழப்பு. ஆன்மா அமைதியடைய வேண்டுகிறேன்..


2013/7/18 coral shree <cor...@gmail.com>



--
அன்புடன்,
முனைவர். ப. பானுமதி 

Nagarajan Vadivel

unread,
Jul 19, 2013, 4:17:10 AM7/19/13
to vallamai, மின்தமிழ்
Endrendrum Vaali is a stage show by Raj TV dedicated to the legend Vaali, who wrote Tamil poetry and film song lyrics for above four decades. He has also acted in several films including Sathya, Hey Ram, Paarthale Paravasam and Poikkal Kudhirai.










vava



2013/7/18 Aadhiraa <innilaa...@gmail.com>

Granny Visalam

unread,
Jul 19, 2013, 4:22:04 AM7/19/13
to vall...@googlegroups.com
அவரது ஒவ்வொரு  பாடலும் ஒவ்வொரு ரத்தினங்கள் .அவரே ஒரு ரத்தினம் தான்  அவரது ஆன்மா சாந்தியடையட்டும் 


2013/7/19 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>

Madhavan Elango

unread,
Jul 19, 2013, 12:25:16 PM7/19/13
to vall...@googlegroups.com
காலன் பறித்த கால்
.................................

உயிரைப் பறித்தல்லவோ 
பழக்கம் உனக்கு?
அட, காலா!
என் தமிழ்த்தாயின் 
ஒற்றைக் காலை  
வெட்டிச் சென்றதேனோ?   
வாலி! வாலி! வாலி!
நெஞ்சில் 'வாலி'!
வலி! வலி! வலி!
நெஞ்சில் 'வலி'!

2013/7/19 Granny Visalam <meera...@gmail.com>

sathiya mani

unread,
Jul 20, 2013, 5:18:04 AM7/20/13
to vall...@googlegroups.com
என‌க்குள் நெருங்கிய‌ ஆசான் ! என் கவிதைகளுக்கு ஆணிவேர்! ஒவ்வொரு
சந்திப்பிலும் தித்திப்பாய் முதுகில்  தட்டி கொடுத்து ஊக்கமளித்த‌
சக்திபிழம்பு! படைப்பை படித்து பாராட்டி வழிகாட்டிய ஒளிப்பிரபஞ்சம்.
அவரின் மறைவை என் பெற்றோர் அறிந்து மெதுவாய் எனக்கு
உரைத்தார்கள். தூங்கவில்லை. எனக்குள் நெருடிய வருத்தங்களில் பெருகிய இரு
துளிகளில் ஒன்றை பகிர்கிறேன். இன்னொன்று அவரோகண சுரத்தில் பல்லூடகமாய் பகிர்வேன் ! வேறென்ன செய்ய?

வாலி எனும் பெயரின் முகப்பில் 
கவிஞர் உண்டு கவியும் உண்டு
கவியரசில்லை!கவிப்பேரரசில்லை!
கவிக்கோவில்லை!கவிமணியில்லை!
கவிராசனில்லை!கவிசக்கரவர்த்தியில்லை!
கவிதென்றலென்றோ கவிவிருதில்லை!
அவர்களின் திறமை உனக்குள் உண்டு
அவர்களின் கம்பீரம் உனக்குள் உண்டு
அவர்களின் ஈர்ப்பும் உனக்குள் உண்டு
அவர்களினும் தமிழ் உனக்குள் உண்டு
கவியாய் நீயும் காலம் ஆனாய்!
வள‌ரும் பரம்பரைப் பாலம் ஆனாய்!
பார்ப்பன‌னென்று பார்த்தார் போலும்
பகுத்தறிவாளரும் வெறுத்தார் போலும்
காரணம் சொல்ல வேறென்ன உண்டு
காழ்ப்புணர்ச்சிக்கு காலனே நன்று
கரங்களில்  உம்மை மகிழ்விப்பான் - தமிழ்
கவிசிங்கம் என்றே அர்ச்சிப்பான்
ஞாலம் போற்றிட வாழ்ந்தாய் என்று
காலம் கூறிடும் வாழிய நின்று!
 
அன்புடன் சத்தியமணி, புதுதில்லி

N. Ganesan

unread,
Jul 20, 2013, 2:54:54 PM7/20/13
to vall...@googlegroups.com, thami...@googlegroups.com, panb...@googlegroups.com, tamil_...@googlegroups.com, R. Radhakrishnan

வெம்புலி பெற்ற அம்புலி - கவிஞர் வாலி

கன்னியாகுமரியிலிருந்து கைதட்டிக் கூப்பிட்டால்,
ஏனென்று கேட்கும் தூரத்தில்தான் ஈழம் இருக்கிறது ;
தொப்பூழ்கொடி என்று நாம் கொண்டாடும்படி -
இங்கிருக்கும் சோழத்தமிழன்தான்
அங்கிருக்கும் ஈழத்தமிழன் ;
அங்கிருக்கும் ஈழத்தமிழன்தான்
இங்கிருக்கும் சோழத்தமிழன்!

சோழத் தமிழன்
சோர்வு தவிர்க்க- ஓர்
'அண்ணா' வாய்த்தது போல்-
ஈழத் தமிழன்
ஈனம் தவிர்க்க - ஒரு 'தம்பி'
வாய்த்தான்!

முப்பதெழுத்தில் அடங்கியிருக்கிறது -
தமிழின் உயிரும் மெய்யும்;
ஆனால்-
ஆறெழுத்தில் அடங்கியிருக்கிறது-
தமிழரின் உயிரும் மெய்யும் !
பிரபாகரன்!
அவ்
ஆறெழுத்து அல்லால் வேறெழுத்து உளதோ
உலகத் தமிழரின் உள் நாக்கிலும் உளத்திலும் உட்கார?

நீரெழுத்து என்றான ஈழத்தமிழரின் வாழ்வை-
நிலையெழுத்து என்று ஆக்கவல்லது -
அவ்
ஆறெழுத்து அன்றி ஆரெழுத்து ?

பிரபாகரனின் பிதா -
வேலுப்பிள்ளை ; அந்த
வேலுப்பிள்ளை பெற்ற பிள்ளையை.....

கதிர்காமத்துக் கந்தனைப் போல்-
வேல் பெற்ற பிள்ளை எனலாம்;
பார்வதியின்-
சூல்பெற்ற பிள்ளை எனலாம்;
ஈழத்தமிழர் - விழி
ஈரமெல்லாம் -
வற்றாத புனலாம்; அவனதை
வற்றவைக்க வந்த அனலாம்!

மாதரசி
மதிவதனியைத் -
திருமணம் முடித்தான்
திருப்போரூரில்;
ஆனால்
அவன் -
அகத்தைப் படிக்காமல்
புறத்தைப் படித்தான்....

தாழ்ந்தும்
தவித்தும்- தன்
இனத்தோரெல்லாம்
இருப்போரூரில் !

தகவார்ந்த
தந்தை செல்வா சென்ற...
காந்தி வழியில்
காரியம் ஆகாதென்று -
நேதாஜி வழியை
நேர்ந்தான் ;
தூர்த்தரைத்
தூர்க்கத் -
துடைப்பம் உதவாதென்று
துப்பாக்கியைத் தேர்ந்தான் !

நிலப்படை;
நீர்ப்படை;
நீள் விசும்புப்படை;
என்றவன் முப்படை கண்டான்;
எம்நிலத்தை -
எம்மிடம் ஒப்படை என்றான்!
சேர-
சோழ-
பாண்டியர்க்குப்
பிற்பாடு -
படை திரட்டிய
பச்சைத் தமிழன் இவனானான்;
முக்கண்ணாகக் கொண்ட
சிவனானான்!
ஆலயங்களில் நாம்
ஆராதிக்கும்-
ஆண்டவனாரெல்லாம்
அன்புமழை;
அவர்கள் கரங்களிலேயே
ஆயுதங்கள் இருக்கையில்-
அறத்தைக்காக்க மனிதனும்
ஆயுதம் ஏந்தினால் என்ன பிழை?

தீர்த்தம் விழையாது-
தீனி விழையாது-
தீர்ந்து போனான்
திலீபன் எனும் தீர்த்தன்
கண்ணிழப்பினும்
மண்ணிழக்க மாட்டேன் என்று-
குட்டிமணி என்பான்
கொட்டடியில் ஆர்த்தன் !

எங்கே இருக்குமோ வீரம்;
அங்கே இருக்கும் சோரம்;
உடனிருந்தே உளவு சொன்னது -
ஒரு நா ; அது கரு நா ; அந்தக்
கரு நா பெயர் கருணா!

பிரபாகரன் எனும் சொல் -
ஒளிப்பிழம்பெனப் பிரகாசிக்கும்-
சூரியனைக் குறிக்கும் ;
சூரியனோ
சூழும் இருளைத் தின்று செரிக்கும்!
அது
அத்தமிக்கும் ஓரிடத்தில்;
அதே நேரம்
அவிர்ந்திருக்கும் வேறிடத்தில்;

இருப்பதுமாய்;
இல்லாததுமாய்;
இருப்பதுதான் அது;
அணையா
நெருப்பதுதான் அது!

கண்டேன் சேனல் நான்கை;
அது காட்டியது சிங்களர் தீங்கை;
எரிந்தது என் ஈரக்குலை;
என் சொல்ல அந்த கோரக் கொலை?!

பிரபாகரனின் பிள்ளையே!
வர இருக்கும் வில்லங்கம் புரியாது -
எதையோ வாயில் சுவைக்கும் வெள்ளையே!
ஆறிரண்டு வயதான அம்புலியே!
காடையர் கண்ணுக்கு-
அம்புலியும் ஆனதென்ன வெம்புலியே!

புலியின் புதல்வன்
புலியானான் என்றால் பொருத்தம்;
புல்லரின் புல்லட்டுக்குப்
பலியானான் என்பதுதான் வருத்தம்!

வண்டு துளைத்தாலே
வலி தாங்காப் பூவே! அஞ்சு-
குண்டு துளைத்துன்னைக்
கொண்டதென்ன சாவே?

சலனம் ஏதுமின்றி
சாவை எதிர்கொண்டாயாமே?
அடடா!
அதுதான் விந்தை!
கவுரவப் படுத்தினாய்
கண்ணா! நீயுன்-
தந்தை
விந்தை !
முடிகூட முளைக்காத-
வழ வழ மார்பும்; சின்னஞ்சிறு
வயிறு மடிப்பும் கண்டால்...
எவனாவது
ஏவுவானா தோட்டா?
ஏவினான் என்றால்-
புத்தனே
புலால் தின்னக் கூட்டா?

என் சொல்லி என்ன?
தன் தலையாய்
இலங்கை ஏற்றிருக்கிறது -
ஒரு விலங்கை!

நன்றி - குமுதம்

 

----------------------

நா. கணேசன்


 
Reply all
Reply to author
Forward
0 new messages