ஓங்கார வேல்நாமம் ஓது - திருப்பரங்குன்றம் முருகன் துதி

14 views
Skip to first unread message

இமயவரம்பன்

unread,
Aug 8, 2025, 7:44:30 AMAug 8
to santhavasantham

திரு. சிவசிவா அவர்கள் ‘சுந்தரர் குருபூஜை’ என்னும் இழையில் இட்ட ஈரடிவைப்புப் பாடலின் சந்தத்தில் (அப்பய்ய தீக்ஷிதரின் மார்கபந்து ஸ்தோத்திர அமைப்பில்) எழுத முயன்ற சிந்துப் பாடல்.

ஓங்கார வேல்நாமம் ஓது - திருப்பரங்குன்றம் முருகன் துதி

(சிந்துப் பாடல் - ஆனந்தக் களிப்பு)

(தானான தானான தானா - தான

.. தானான தானான தானான தானா - என்ற சந்தம்)

பல்லவி

ஓங்கார வேல்நாமம் ஓது - வேலை

.. ஓவாத ழைப்பார்க்கு றுந்துன்ப மேது 

சரணம்

திண்ணாரும் ஈராறு தோளன் - தீதில்

.. தேனார்ம லர்நாறு சீரார்ந்த தாளன்

விண்ணார்ந்து யர்வெற்றி வேலன் - என்றும்

.. மீளாவி னைக்கோள றுக்கின்ற சீலன். (ஓங்கார வேல்)

கொற்றக்கொ டிக்கோழி கொண்டான் - மோது

.. கூடாரை மாய்க்கின்ற கூரார்ந்த செண்டான் 

பற்றென்ற டைந்தார்க்க ளிப்பான் - கூறு

.. பத்தர்த மிழ்கேட்டி னிப்பிற்க ளிப்பான். (ஓங்கார வேல்)

காரார்கு ழல்வள்ளி காந்தன் - போற்று

.. கண்ணார்நு தல்மாது தெய்வானை வேந்தன்

ஏரார்ம யில்மேவும் ஏகன் - பொங்கும்

.. இன்பார்ப ரங்குன்ற மர்ஞான யோகன்! (ஓங்கார வேல்)

குறிப்பு:

“தேனார்ம லர்நாறு” , “விண்ணார்ந்து யர்வெற்றி” போன்ற இடங்களில் வரும் ரகர ஒற்றை அடுத்தும் விட்டிசைக்குமாறு (நிறுத்திப் பாடுமாறு) வேண்டுகிறேன்.

பதம் பிரித்து:

பல்லவி

ஓங்கார வேல் நாமம் ஓது - வேலை

ஓவாது அழைப்பார்க்கு உறும் துன்பம் ஏது 

சரணம்

திண் ஆரும் ஈராறு தோளன் - தீதில்

தேன் ஆர் மலர் நாறு சீர் ஆர்ந்த தாளன்

விண் ஆர்ந்து உயர் வெற்றி வேலன் - என்றும்

மீளா வினைக் கோள் அறுக்கின்ற சீலன். (ஓங்கார வேல்)

கொற்றக் கொடிக் கோழி கொண்டான் - மோது

கூடாரை மாய்க்கின்ற கூர் ஆர்ந்த செண்டான் 

பற்று என்று அடைந்தார்க்கு  அளிப்பான் - கூறு

பத்தர் தமிழ் கேட்டு இனிப்பில் களிப்பான்.(ஓங்கார வேல்)

காரார் குழல் வள்ளி காந்தன் - போற்று

கண் ஆர் நுதல் மாது தெய்வானை வேந்தன்

ஏரார் மயில் மேவும் ஏகன் - பொங்கும்

இன்பு ஆர் பரங்குன்று அமர் ஞான யோகன்! (ஓங்கார வேல்)

பொருள்:

ஓவாது = இடைவிடாமல்

திண் ஆரும் = வலிமை வாய்ந்த

தாளன் = திருவடிகளை உடையவன்

விண் ஆர்ந்து உயர் = வானம் வரை உயர்ந்த 

வினைக்கோள் = வினையின் பிடி

கூடாரை = பகைவரை

செண்டான் = செண்டாயுதத்தை ஏந்தியவன்

வேந்தன் = நாயகன் 

அளிப்பான் = அருள்வான்

கூறு = புகழ் கூறும்

கண் ஆர் = அழகிய

- இமயவரம்பன் 

NATARAJAN RAMASESHAN

unread,
Aug 8, 2025, 8:12:31 AMAug 8
to santhav...@googlegroups.com
மிகச் சிறப்பான சிந்துப் பாடல்

            —தில்லைவேந்தன்.

Ram Ramakrishnan

unread,
Aug 8, 2025, 8:36:25 AMAug 8
to santhav...@googlegroups.com
மிக அருமையான ஆனந்தக் களிப்பு.

ரசித்தேன் மிகவே. 

பண்ணைந்து பாட்டாக ஓத - நெஞ்சம்
…பாகான தேனாகும் பாய்தோடு மேதம்

வாழ்க, வளர்க. 
அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Aug 8, 2025, at 07:44, இமயவரம்பன் <anandbl...@gmail.com> wrote:

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/105FB6F9-0C9A-4377-997A-AEAAC1EE1374%40gmail.com.

Ram Ramakrishnan

unread,
Aug 8, 2025, 8:37:10 AMAug 8
to santhav...@googlegroups.com
பாய்ந்தோடு* மேதம்.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Aug 8, 2025, at 08:36, Ram Ramakrishnan <ramr...@gmail.com> wrote:

மிக அருமையான ஆனந்தக் களிப்பு.

இமயவரம்பன்

unread,
Aug 8, 2025, 8:55:05 AMAug 8
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
மிக்க நன்றி, திரு. தில்லைவேந்தன் 

On Aug 8, 2025, at 8:12 AM, NATARAJAN RAMASESHAN <chrome...@gmail.com> wrote:

மிகச் சிறப்பான சிந்துப் பாடல்

            —தில்லைவேந்தன்.

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

இமயவரம்பன்

unread,
Aug 8, 2025, 8:58:03 AMAug 8
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
மிக்க நன்றி திரு. ராம்கிராம்!

பின்னூட்டப் பாடல் வரிகள் பிரமாதம்! 

On Aug 8, 2025, at 8:36 AM, Ram Ramakrishnan <ramr...@gmail.com> wrote:

மிக அருமையான ஆனந்தக் களிப்பு.

VETTAI ANANTHANARAYANAN

unread,
Aug 8, 2025, 11:24:53 AMAug 8
to santhav...@googlegroups.com
அருமை, இமயவரம்பன். 
மார்க்கபந்து துதி 5 கண்ணிகள் கொண்டது. இன்னும் 2 கண்ணிகளைச் சேர்த்தல் நன்று.  

அனந்த்

On Fri, Aug 8, 2025 at 7:44 AM இமயவரம்பன் <anandbl...@gmail.com> wrote:

திரு. சிவசிவா அவர்கள் ‘சுந்தரர் குருபூஜை’ என்னும் இழையில் இட்ட ஈரடிவைப்புப் பாடலின் சந்தத்தில் (அப்பய்ய தீக்ஷிதரின் மார்கபந்து ஸ்தோத்திர அமைப்பில்) எழுத முயன்ற சிந்துப் பாடல்.

ஓங்கார வேல்நாமம் ஓது - திருப்பரங்குன்றம் முருகன் துதி

(சிந்துப் பாடல் - ஆனந்தக் களிப்பு)

(தானான தானான தானா - தான

.. தானான தானான தானான தானா - என்ற சந்தம்)

பல்லவி

ஓங்கார வேல்நாமம் ஓது - வேலை

.. ஓவாத ழைப்பார்க்கு றுந்துன்ப மேது 

சரணம்

திண்ணாரும் ஈராறு தோளன் - தீதில்

.. தேனார்ம லர்நாறு சீரார்ந்த தாளன்

விண்ணார்ந்து யர்வெற்றி வேலன் - என்றும்

.. மீளாவி னைக்கோள றுக்கின்ற சீலன். (ஓங்கார வேல்)

கொற்றக்கொ டிக்கோழி கொண்டான் - மோது

.. கூடாரை மாய்க்கின்ற கூரார்ந்த செண்டான் 

பற்றென்ற டைந்தார்க்க ளிப்பான் - கூறு

.. பத்தர்த மிழ்கேட்டி னிப்பிற்க ளிப்பான். (ஓங்கார வேல்)

காரார்கு ழல்வள்ளி காந்தன் - போற்று

.. கண்ணார்நு தல்மாது தெய்வானை வேந்தன்

ஏரார்ம யில்மேவும் ஏகன் - பொங்கும்

.. இன்பார்ப ரங்குன்ற மர்ஞான யோகன்! (ஓங்கார வேல்)

ஏரார் மயில் மேவும் ஏகன் - பொங்கும்

இன்பு ஆர் பரங்குன்று அமர் ஞான யோகன்! (ஓங்கார வேல்)

Siva Siva

unread,
Aug 8, 2025, 1:13:46 PMAug 8
to santhav...@googlegroups.com
Nice.

கூரார்ந்த செண்டான்  /

செண்டு கூர்மையாக இருக்குமா?

கண்ணார்நு தல்மாது தெய்வானை /

= ?

V. Subramanian

On Fri, Aug 8, 2025 at 7:44 AM இமயவரம்பன் <anandbl...@gmail.com> wrote:

இமயவரம்பன்

unread,
Aug 9, 2025, 4:45:05 PMAug 9
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
மிக்க நன்றி, திரு. அனந்த்!

அப்படியே செய்கிறேன்!

> On Aug 8, 2025, at 11:24 AM, VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com> wrote:
>
> 

இமயவரம்பன்

unread,
Aug 9, 2025, 4:53:00 PMAug 9
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
Thank you!

I will replace கூரார்ந்த with போரார்ந்த/

கொற்றக்கொ டிக்கோழி கொண்டான் - மோது

.. கூடாரை மாய்க்கின்ற போரார்ந்த செண்டான் 

Will change the first line of the last stanza as follows:

காரார் குழல் வள்ளி காந்தன் - கெண்டை

காட்டுங் கவின்கண்ணி தெய்வானை வேந்தன்

(கெண்டை காட்டும் = கெண்டை மீன் போன்று தோன்றும்; )

On Aug 8, 2025, at 1:13 PM, Siva Siva <naya...@gmail.com> wrote:

Ramamoorthy Ramachandran

unread,
Aug 9, 2025, 11:51:40 PMAug 9
to Santhavasantham
பாட்டென்றால் இதுவன்றோ பாட்டு! இதைப் 
பாடிடும் கவிஞர்க்கே தேர்தலில் ஓட்டு!

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Arasi Palaniappan

unread,
Aug 10, 2025, 4:14:53 AMAug 10
to சந்தவசந்தம்
மிக அருமையான சிந்து!

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Arasi Palaniappan

unread,
Aug 10, 2025, 4:45:54 AMAug 10
to சந்தவசந்தம்
நான் அறிந்த வரையில் முருகன் தண்டாயுதபாணி. செண்டாயுதம் என்பது ஐயனார் போன்ற எல்லைக் காவல் தெய்வங்களுக்கு உரியது.

அரசி. பழனியப்பன் 

On Fri, 8 Aug 2025, 5:14 pm இமயவரம்பன், <anandbl...@gmail.com> wrote:
--

Siva Siva

unread,
Aug 10, 2025, 11:31:56 AMAug 10
to santhav...@googlegroups.com
The following thiruppugazh refers to one thiruviLaiyAdal:

கனகந்திரள் கின்றபெ ருங்கிரி
தனில்வந்துத கன்தகன் என்றிடு
கதிர்மிஞ்சிய செண்டைஎ றிந்திடு ...... கதியோனே

V. Subramanian

இமயவரம்பன்

unread,
Aug 10, 2025, 3:03:49 PMAug 10
to santhav...@googlegroups.com
அன்பான வாழ்த்துக்கு மிக்க நன்றி புலவரே!

- இமயவரம்பன்

இமயவரம்பன்

unread,
Aug 10, 2025, 3:04:27 PMAug 10
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி திரு.பழனியப்பன்!

இமயவரம்பன்

unread,
Aug 10, 2025, 3:16:13 PMAug 10
to santhav...@googlegroups.com
சிவபெருமானும் மேருவின் மீது செண்டு எறிந்ததாகத் திருவிளையாடல் புராணம் கூறுகிறது.

1112 
அண்டர் அஞ்ச அமர் உழந்த அமரர் கோனை அரசர் கோன்  
வண்டு அலம்பு மவுலி சிந்த வளை எறிந்து வெந் புறம்  
கண்ட வண்ணம் இன்ன தன்ன கன்னி நாடன் மேருவில்  
செண்டு எறிந்து வைப்பு எடுத்த செயலு நன்கு செப்புவாம். 

-- 
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

இமயவரம்பன்

unread,
Aug 10, 2025, 3:20:21 PMAug 10
to santhav...@googlegroups.com

இமயவரம்பன்

unread,
Aug 10, 2025, 3:23:51 PMAug 10
to santhav...@googlegroups.com
முருக பெருமானுடைய செண்டாயுதத்தைப் பற்றித் திரு. கணேசன் அவர்கள் அளித்த அரிய தகவல்களைச் சந்த வசந்தத்தின் இந்த இழையில் காணலாம்:

On Aug 10, 2025, at 3:15 PM, இமயவரம்பன் <AnandBl...@gmail.com> wrote:

சிவபெருமானும் மேருவின் மீது செண்டு எறிந்ததாகத் திருவிளையாடல் புராணம் கூறுகிறது.

1112 
அண்டர் அஞ்ச அமர் உழந்த அமரர் கோனை அரசர் கோன்  
வண்டு அலம்பு மவுலி சிந்த வளை எறிந்து வெந் புறம்  
கண்ட வண்ணம் இன்ன தன்ன கன்னி நாடன் மேருவில்  
செண்டு எறிந்து வைப்பு எடுத்த செயலு நன்கு செப்புவாம். 

Ram Ramakrishnan

unread,
Aug 10, 2025, 5:05:17 PMAug 10
to santhav...@googlegroups.com
மிக அருமை, திரு. இமயவரம்பன்.

பாடிக் களிக்க வேண்டிய பதிகம்.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Aug 10, 2025, at 15:23, இமயவரம்பன் <anandbl...@gmail.com> wrote:

முருக பெருமானுடைய செண்டாயுதத்தைப் பற்றித் திரு. கணேசன் அவர்கள் அளித்த அரிய தகவல்களைச் சந்த வசந்தத்தின் இந்த இழையில் காணலாம்:

On Aug 10, 2025, at 3:15 PM, இமயவரம்பன் <AnandBl...@gmail.com> wrote:

சிவபெருமானும் மேருவின் மீது செண்டு எறிந்ததாகத் திருவிளையாடல் புராணம் கூறுகிறது.

1112 
அண்டர் அஞ்ச அமர் உழந்த அமரர் கோனை அரசர் கோன்  
வண்டு அலம்பு மவுலி சிந்த வளை எறிந்து வெந் புறம்  
கண்ட வண்ணம் இன்ன தன்ன கன்னி நாடன் மேருவில்  
செண்டு எறிந்து வைப்பு எடுத்த செயலு நன்கு செப்புவாம். 

(See #15)

On Aug 10, 2025, at 11:31 AM, Siva Siva <naya...@gmail.com> wrote:

The following thiruppugazh refers to one thiruviLaiyAdal:

கனகந்திரள் கின்றபெ ருங்கிரி
தனில்வந்துத கன்தகன் என்றிடு
கதிர்மிஞ்சிய செண்டைஎ றிந்திடு ...... கதியோனே

V. Subramanian

On Sun, Aug 10, 2025 at 4:45 AM Arasi Palaniappan <arasipala...@gmail.com> wrote:
நான் அறிந்த வரையில் முருகன் தண்டாயுதபாணி. செண்டாயுதம் என்பது ஐயனார் போன்ற எல்லைக் காவல் தெய்வங்களுக்கு உரியது.

அரசி. பழனியப்பன் 

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

இமயவரம்பன்

unread,
Aug 10, 2025, 10:16:22 PMAug 10
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
மிக்க நன்றி திரு ராம்கிராம் 

On Aug 10, 2025, at 5:05 PM, Ram Ramakrishnan <ramr...@gmail.com> wrote:

மிக அருமை, திரு. இமயவரம்பன்.

இமயவரம்பன்

unread,
Dec 8, 2025, 3:05:22 PM (8 days ago) Dec 8
to santhavasantham
சற்றே மாற்றியமைக்கப் பட்ட பாடல்:

ஓங்கார வேல்நாமம் ஓது
(ஆனந்தக் களிப்பு மெட்டு)
—————————
பல்லவி
ஓங்கார வேல்நாமம் ஓது – வேலின்
ஓங்கு புகழ்பாட ஓர்துன்ப மேது

சரணம்
1.
விண்ணோர் சிறைமீட்ட வேலன் – ஒரு
வீறோடு ஞாலத்தை ஆளும்செங் கோலன்
மண்மேல் அறம்காக்கும் வீரன் – எழில்
வண்ணப் பசுந்தோகை மின்னும் மயூரன்
(ஓங்கார வேல்)

2.
சேவற் கொடிக்கைத் தரித்தான் – மோது
தீயோரை மாய்க்கின்ற செண்டாயு தத்தான் 
பாவங்கள் தண்டால் தடுப்பான் – வாழ்த்தும்
பக்தர் வருத்தம் துடைத்தாத ரிப்பான்  (ஓங்கார வேல்)

3.
கானக் குறப்பாவை காந்தன் – பொங்கு
காதல் கயற்கண்ணி தெய்வானை வேந்தன்
ஞானச் செழும்பூங் கடம்பன் – அருள்
நாடித் தொழும்பேரை வாழ்விக்கும் அன்பன் (ஓங்கார வேல்)

- இமயவரம்பன் 

சித்தூர் திரு. கணேஷ் அவர்களின் தெய்விகக் குரலில் இந்தப் பாடல்:

Arasi Palaniappan

unread,
Dec 8, 2025, 3:39:25 PM (8 days ago) Dec 8
to சந்தவசந்தம்
அற்புதம். எந்தப் பாடலை வாசித்தாலும் என் அண்ணா வேந்தரை நினைவு வந்து கண்கள் பனிக்கின்றன!

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
maxresdefault.jpg

இமயவரம்பன்

unread,
Dec 8, 2025, 4:22:06 PM (8 days ago) Dec 8
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
மிக்க நன்றி, திரு. பழனியப்பன்!

தில்லைவேந்தர் நாவில் திகழ்ந்த செந்தமிழை எங்குக் காணினும் அவர் நினைவு வருதல் இயல்பே!

Ram Ramakrishnan

unread,
Dec 8, 2025, 8:34:10 PM (7 days ago) Dec 8
to santhav...@googlegroups.com
அற்புதம், திரு. இமயவரம்பன்.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On 9 Dec 2025, at 1:35 AM, இமயவரம்பன் <anandbl...@gmail.com> wrote:

சற்றே மாற்றியமைக்கப் பட்ட பாடல்:

ஓங்கார வேல்நாமம் ஓது
(ஆனந்தக் களிப்பு மெட்டு)
—————————
பல்லவி
ஓங்கார வேல்நாமம் ஓது – வேலின்
ஓங்கு புகழ்பாட ஓர்துன்ப மேது

சரணம்
1.
விண்ணோர் சிறைமீட்ட வேலன் – ஒரு
வீறோடு ஞாலத்தை ஆளும்செங் கோலன்
மண்மேல் அறம்காக்கும் வீரன் – எழில்
வண்ணப் பசுந்தோகை மின்னும் மயூரன்
(ஓங்கார வேல்)

2.
சேவற் கொடிக்கைத் தரித்தான் – மோது
தீயோரை மாய்க்கின்ற செண்டாயு தத்தான் 
பாவங்கள் தண்டால் தடுப்பான் – வாழ்த்தும்
பக்தர் வருத்தம் துடைத்தாத ரிப்பான்  (ஓங்கார வேல்)

3.
கானக் குறப்பாவை காந்தன் – பொங்கு
காதல் கயற்கண்ணி தெய்வானை வேந்தன்
ஞானச் செழும்பூங் கடம்பன் – அருள்
நாடித் தொழும்பேரை வாழ்விக்கும் அன்பன் (ஓங்கார வேல்)

- இமயவரம்பன் 

சித்தூர் திரு. கணேஷ் அவர்களின் தெய்விகக் குரலில் இந்தப் பாடல்:

இமயவரம்பன்

unread,
Dec 8, 2025, 8:36:52 PM (7 days ago) Dec 8
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
மிக்க நன்றி, திரு.ராம்கிராம்

Lalitha & Suryanarayanan

unread,
Dec 8, 2025, 9:45:28 PM (7 days ago) Dec 8
to santhav...@googlegroups.com
அருமை, இமயா!

சிவசூரி.

இமயவரம்பன்

unread,
Dec 8, 2025, 10:09:42 PM (7 days ago) Dec 8
to santhav...@googlegroups.com
சிவசூரியாருக்கு மிக்க நன்றி!

Ram Ramakrishnan

unread,
Dec 8, 2025, 10:33:48 PM (7 days ago) Dec 8
to santhav...@googlegroups.com
திருப் புகழில் அருணகிரியார் செண்டாயுதம் பற்றிப் பாடியிருக்கிறார்.

கனகந்திரள் கின்றபெ ருங்கிரி

     தனில்வந்துத கன்தகன் என்றிடு
          கதிர்மிஞ்சிய செண்டைஎ றிந்திடு ...... கதியோனே

கடமிஞ்சிஅ நந்தவி தம்புணர்
     கவளந்தனை உண்டுவ ளர்ந்திடு
          கரியின்றுணை என்றுபி றந்திடு ...... முருகோனே

பனகந்துயில் கின்றதி றம்புனை
     கடல்முன்புக டைந்தப ரம்பரர்
          படரும்புயல் என்றவர் அன்புகொள் ...... மருகோனே

பலதுன்பம்உழன்றுக லங்கிய
     சிறியன்புலை யன்கொலை யன்புரி
          பவமின்றுக ழிந்திட வந்தருள் ...... புரிவாயே

அனகன்பெயர் நின்றுரு ளுந்திரி
     புரமுந்திரி வென்றிட இன்புடன்
          அழலுந்தந குந்திறல் கொண்டவர் ...... புதல்வோனே

அடல்வந்துமு ழங்கியி டும்பறை
     டுடுடுண்டுடு டுண்டுடு டுண்டென
          அதிர்கின்றிட அண்டநெ ரிந்திட ...... வருசூரர்

மனமுந்தழல் சென்றிட அன்றவர்
     உடலுங்குட லுங்கிழி கொண்டிட
          மயில்வென்றனில் வந்தரு ளுங்கன ...... பெரியோனே

மதியுங்கதி ருந்தட வும்படி
     உயர்கின்றவ னங்கள்பொ ருந்திய
          வளமொன்றுப ரங்கிரி வந்தருள் ...... பெருமாளே.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On 10 Aug 2025, at 2:15 PM, Arasi Palaniappan <arasipala...@gmail.com> wrote:

இமயவரம்பன்

unread,
Dec 8, 2025, 10:45:36 PM (7 days ago) Dec 8
to santhav...@googlegroups.com
அருமையான எடுத்துக்காட்டுக்கு நன்றி, திரு. ராம்கிராம்.
Reply all
Reply to author
Forward
0 new messages