பழம்பாடல்

340 views
Skip to first unread message

VETTAI ANANTHANARAYANAN

unread,
Sep 30, 2013, 4:25:13 PM9/30/13
to சந்தவசந்தம்

நம் சந்தவசந்தம் குழு பற்றியும் என்னுடைய பழைய பாடல் ஒன்றைப் பற்றியும் கீழ்க்காணும் தளத்தில் குறிப்பிட்டுள்ளதை இன்று எதேச்சையாகக் கண்டேன்:   http://thiruppul.blogspot.ca/2009/08/blog-post_05.html

அனந்த்


Subbaier Ramasami

unread,
Sep 30, 2013, 6:46:51 PM9/30/13
to சந்தவசந்தம்
இந்தப் பாடலை நான் படித்ததே இல்லையே! மிக அருமையான பாடல்.


இலந்தை


2013/9/30 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>

நம் சந்தவசந்தம் குழு பற்றியும் என்னுடைய பழைய பாடல் ஒன்றைப் பற்றியும் கீழ்க்காணும் தளத்தில் குறிப்பிட்டுள்ளதை இன்று எதேச்சையாகக் கண்டேன்:   http://thiruppul.blogspot.ca/2009/08/blog-post_05.html

அனந்த்


--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.

VETTAI ANANTHANARAYANAN

unread,
Oct 1, 2013, 4:51:59 PM10/1/13
to சந்தவசந்தம்
இன்னொரு இழையில் முதியோர் தினத்தை ஒட்டி நண்பர்கள் இட்ட கவிதைகளைப் படித்து மகிழ்ந்திருப்பீர்கள்.
அவை 2009-ல் ஹப் மாகசீனில்  ‘மரபில் நகைச்சுவை’ப் பகுதியில் இட்ட எனது ’பழம்’ பாடல் ஒன்றை நினைவுறுத்தியது. அதை அங்கிட்ட படி கீழே தந்துள்ளேன்:

மரபில் நகைச்சுவை- 29
அனந்த்

<> அழ(கு) ழகரம் <>

முதலில்:

பழனி அழகனை விழுந்து விழுந்து
தொழுததால் கையில் விழுந்ததோர் பழமாய்க்
குழவி என்னும் அமிழ்தப் பிழம்பு 
மழையில் துளிர்த்த எழிலார் பொழில்மலர்
குழலை யாழைப் பழிக்கும் மதலை
மொழியைப் பழகும் மகிழங் கொழுந்து
கொழுகொழு மேனி கூழ்குழைந் தன்ன
வழுக்கும் கன்னம் அழுத்தின் சிவக்கும்;
பொழுதொரு வண்ணம் திகழும் புகழொடு
  ... தமிழின் ழகரம் தழைக்கும் பருவம்  
  
முடிவில்:

எழுபதை விழுங்கிய கிழமிது முழுதும்
பழுத்துச் சுருங்கிய பாழும் மேனி
பழைய வளத்தை இழந்து புலம்பும்
அழுகையும் அவலம் குமிழும் முகமும்
குழியினில் விழுந்த விழியும் அழுகி
விழுந்த பல்லும் விழாத ஆசையும்
வழவழத் தொழுகும் கோழை மழையும்
தழுதழுத் தொலிக்கும் குழறிய மொழியும்
புழுவினும் கீழாய்ப் புவியோர் இகழ
வழிதெரி யாமல் உழலும் வயதுஇது
.. தமிழின் ழகரம் அழுகிற பருவம்!


<><><>

இலக்கணக் குறிப்பு: இது ஆசிரியப்பா (அகவல் பா) என்னும் யாப்பு வகையைச் சேர்ந்தது. இந்த மின்னிதழின் முந்தைய ஏடொன்றில் இவ்வகைச் செய்யுளின் இலக்கணத்தை முழுமையாகப் பார்க்கலாம்: http://www.mayyam.com/unicode/cgi-bin/t2u.cgi?url=http://hubmagazine.mayyam.com/jan07/?t=8931 அதன்படி, மேலுள்ள பாடலைத் தனிச்சொல் பெற்றுவந்த நிலை மண்டில ஆசிரியம் என்று கொள்ளலாம். மொத்தம் 65 முறை ழகரம் பயிலும் இந்த ’இணைப்’ பாடலில், இறுதி அடிகள் தவிர மற்ற 19 அடிகளில் ஒரே எதுகை அமைந்தது.

இலக்கணமல்லாத குறிப்பு: தமிழுக்கே உரித்தான ழகர எழுத்து எப்படி நம் வயதுக்கேற்றபடி குழைந்து வளைந்து கொடுக்கிறது என்பது இப்பாடலில் உள்ள ‘நகைச்சுவை’. தயவு செய்து நகைத்து வைக்கவும்!
 

==========================
2013/9/30 Subbaier Ramasami <elan...@gmail.com>

Subbaier Ramasami

unread,
Oct 1, 2013, 6:51:43 PM10/1/13
to சந்தவசந்தம்
மழலையில் விழுமிய ழகரம் எழுவதும்
விழுகையில் ஒழுகும் ழகரம் விழுவ்தும்
அருமை

இலந்தை


2013/10/1 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>

Siva Siva

unread,
Oct 1, 2013, 6:56:25 PM10/1/13
to santhavasantham
Nice.
The content reminded me of the 'aRugununi paniyanaiy' thiruppugazh song.





2013/10/1 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>

அவனடிமை

unread,
Oct 1, 2013, 7:01:17 PM10/1/13
to santhav...@googlegroups.com
Super அனந்த் சார்.
முதலில் கிழவனிலிருந்து குழவி - woody allen உபயம்
அப்புறம் குழவியிலிருந்து கிழவன்.
ஆஹாஹா, என்ன நகைச்சுவை இழையோடும் கற்பனை!

நன்றி அய்யா.

VETTAI ANANTHANARAYANAN

unread,
Oct 1, 2013, 7:26:20 PM10/1/13
to சந்தவசந்தம்
ஆஹா, என்ன அற்புதமான பாடல்!  இதைச் சுட்டியதற்கு நன்றி. சந்தப்பாடல்கள், குறிப்பாக வண்ணப் பாடல்கள் இயற்ற விரும்பும் இக்குழுவிலுள்ளோர் இதைக் கட்டாயம் படிக்க வேண்டும். படித்து,  இது போல ஆயிரக்கணக்கில் வண்ணம் படைக்கும் அருணகிரியாரின் ஒப்பற்ற புலமையை அறியவேண்டும்.  

இப்பாடலில்
நம் வாழ்வின் பருவங்களைக் குறிக்கும் ஒலிக்குறிப்புகள்:

மொளு மொளு என உடல் வளர - குழந்தைப்பருவம்  (நாம் மொழு மொழு என்று கூறுவதைக் கருதலாம்)
மினுகு மினுகு எனும் உடலம் - இளமை
ப் பருவம்  (நாம் மினு மினு என்று இப்போது கூறுகிறோம்)
இரு விழிகள் பீளை சாறு இடா ஈளை மேலிடா வழ வழ என உமிழும் அது கொழ கொழ என ஒழுகி விழ வாடி ஊன் எலாம் நாடி பேதமாய் - முதுமை
ஈ மொலேல் எனா வாயை ஆ எனா - பிணம் .

அனந்த்

2013/10/1 Siva Siva <naya...@gmail.com>
Nice.
The content reminded me of the 'aRugununi paniyanaiy' thiruppugazh song.



2013/10/1 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>
<> அழ(கு) ழகரம் <>

Subbaier Ramasami

unread,
Oct 1, 2013, 7:35:57 PM10/1/13
to சந்தவசந்தம்
ழகரத்திகொரு ழகரம்.

கவிஞர் சுகந்தி வெங்கடேஷ்  வரைந்த ழகரம் படம் இணைத்திருக்கிறேன்

செழுந்தமிழை முழுதும் விழை  உளமகிழ ஒழுகுமொழி

      திகழ்கவிதை ‘ழ;கரம் வரப் பழமரபில் பிழிந்தெழுத

      செழிப்புவளர் மதம்கொழிக்கும் கொழுகொழுத்த வடிவுதரத்

      திருவழகு மழகளிற்றைப் பிழையொழியக் கழல்பணிந்தேன்

எழில்வழியும் பொழிலிடையே எழுகதிரும் நுழையயிடம்

      இலையெனவே சுழல்கருமை தழைதழுவி நிழல்பரப்பும்

      இழியுமழை இழையிழையாய்  பொழிந்துதரைப் புழுதியினை

இழுத்தழைத்து சுழித்திழைந்து  கழனிபயிர் வளரவிடும்

விழுங்கதிரும் தழல்குறைத்து வளந்தழைக்கும் நிறங்குழைத்து

      விரிவிசும்பில்  ஒளிருகுடத் திசைப்பரப்பில் மெழுகிவிடும்

      விரையெழிலி கரைகிழித்து ஒளிர்கனகக் சரிகையிடும்

      இதனைமுனம் ‘உமைகவிதை” எனமொழிந்தான் கவித்தொழிலன்

விழலெனவே இழந்தழிந்து விடக்கவிதை வரைகுவனோ?        

      விதவிதமாய் வழுவிலதாய் இயற்கைதரும் வனப்பதிகம் 

      மிகக்குழைந்து அதைவழுத்தி மனம்நெகிழ்ந்து தொழுதிடுவேன்

      விரைபொழுது  கழிகணங்கள் விழுதுவிடும் நிலைபெறுக!

     

 

செழும்  

தமிழ்

முழுதும்

விழை

மகிழ்

ஒழுகு

மொழி(பாஷை)

திகழ்

ழகரம்

பழ

பிழி

எழுத

செழிப்பு

தழைக்கும்

கொழு

கொழு

அழகு

மழ

பிழை

ஒழிய

கழல்

எழில்

வழியும்

பொழில்

      எழு

நுழை

சுழல்

தழை

தழுவு

நிழல்

இழியும்

மழை

இழைஇழை

பொழிந்து

புழுதி

இழுத்து

அழைத்து 

சுழித்து

இழிந்து

கழனி

விழும் 

தழல்

கொழி

குழைத்து

மெழுகு

எழிலி

கிழித்து

மொழி-(சொல்)

தொழில்

விழல்

இழந்து

அழிந்து

வழு

குழைந்து

வழுத்தி

தொழுதிடு

பொழுது

விழுது

 



2013/10/1 Subbaier Ramasami <elan...@gmail.com>
zagaram picture sugandhi.jpg

VETTAI ANANTHANARAYANAN

unread,
Oct 1, 2013, 7:50:27 PM10/1/13
to சந்தவசந்தம்
இப்பாடலின் சந்த அழகை இந்த ஒலிப்பதிவில் இரசிக்கலாம்:

http://www.kaumaram.com/audio_k/sgtp0858.html

.. அனந்த்


2013/10/1 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>
ஆஹா, என்ன அற்புதமான பாடல்!  இதைச் சுட்டியதற்கு நன்றி. சந்தப்பாடல்கள், குறிப்பாக வண்ணப் பாடல்கள் இயற்ற விரும்பும் இக்குழுவிலுள்ளோர் இதைக் கட்டாயம் படிக்க வேண்டும். படித்து,  இது போல ஆயிரக்கணக்கில் வண்ணம் படைக்கும் அருணகிரியாரின் ஒப்பற்ற புலமையை அறியவேண்டும்.  

VETTAI ANANTHANARAYANAN

unread,
Oct 2, 2013, 9:33:21 PM10/2/13
to சந்தவசந்தம்
”திண்ணை” மின்னிதழ், ஜனவரி 19, 2002 (”Y2K” bubble burst காலத்தில் எழுதியது)

                <> அக்கரைப் பச்சை <>
                     அனந்த்

இந்திய இளைஞன்:

            எல்லாமே இந்நாட்டில் மோசம்- எனக்(கு)

            ... என்றுதான் கிட்டுமோ அமெரிக்க வாசம்?     (எல்லாமே..)

 

            பள்ளிசெல் லும்அந்த நாளாய் - இந்தப்

            ... பாழும்  நினைப்பெனைக் கொட்டுது தேளாய்

            மெள்ள வளர்ந்திட்டேன் ஆளாய்- இந்த

            ... வேதனை யின்னும்தா ளேனிது கேளாய்:               

 

            எங்கும் நிறைந்திடும் ஊழல் - அதை

            ... எடுத்துரைத் தால்காவல் படையினர் சூழல்

            பங்குச்சந் தைபடு தாழல் - பணம்

            ... போட்டவர் வாழ்க்கையும் பள்ளத்தில் வீழல்             

 

            துண்டுபோட் டோரெல்லாம் கூடி- நாட்டைத்

            ... துண்டாக்கிச் சேர்த்திடு வார்பலகோடி

            கண்டு மனம்சலித் தாச்சு - இனிக்                         

            ... காணவோர் கேடுமில் லையென வாச்சு

             

            அமெரிக்கா கானடா எல்லாம்- ஆகா!

            ... அமரர்கள் வாழ்கின்ற பூமியென் றெல்லாம்

            'குமுத'த்தில் காணும்போ தெல்லாம்-குஷி

            ... கூடவே ஏறியென் வாயெல்லாம் பல்லாம்! (எல்லாமே...)

                             

            "கணினிப் படிப்பினை இன்றே -அஞ்சல்

             ... கல்லூரி மூலமாய் கற்றிட்டால் நன்றே;

             பணிகள் பலவுள" என்றே- பல

             ... பேருஞ்சொன் னாரதைக் கேட்டுப்ப யின்றே

 

             பாலொடு தேனோடும் வீதி - இளம்

             ... பாலகர்க் கும்மரி யாதைசெய் நீதி

             பார்க்கு மெவருமோர் சாதி -என்று

             ... படித்ததை என்றன் மனத்தினில் ஓதி

 

             அமெரிக்கா வந்துநான் சேர்ந்தேன் - அங்கென்

             ... ஆசைக் கனவை நினைவினில் கூர்ந்தேன்

             செமையாய் நடந்தெல்லாம் பார்த்தேன் - வந்து

             ... சேர்ந்தாறு நாளுக்குள் கைக்காசு தீர்த்தேன்  (அமெரிக்கா..)

 

             நாட்கள் பலவான பின்னும் - நானும்

             ... நல்லதாய் ஒன்றையும் கண்டில்லை இன்னும்

             ஆட்கள் பலர்துணை கொண்டு - மாதம்

             ... ஆறான பின்பொரு வேலையைக் கண்டு

 

             இன்றோடு நம்துயர் போச்சு- அப்பா!

             ... என்றுநான் விட்டஅந் நிம்மதி மூச்சு

             சென்று மறைவதன் முன்னே - என்றன்

             ... சீட்டைக் கிழித்துத்தந் தான்;விதி என்னே!

 

             கணினிக்கு எமனென்ற ஆண்டு - தந்த

             ... கஷ்டமெல் லாம்என்றோ தீர்ந்தது கொண்டு

             பணியாள் குறைப்பில்என் வேலை - நடு

             ... பாதியில் போகக்கண் டேன்தெரு மூலை (அமெரிக்கா..)

                 

             இந்திய நாட்டினை வைவேன் - ஐயோ!        

             ... இப்போதிந் நாட்டினில் என்னதான் செய்வேன்?

             சொந்த நிலமென்றும் மேலாம் - என்ற

             ... சொல்லதின் உண்மைக்கென் வாழ்வொரு கோலாம்

           

             எல்லாமே அக்கரைப் பச்சை - என்ற

             ... எண்ணத்திலே எழவேண்டும் நம்இச்சை

             நல்லவை உண்டெங்கள் நாட்டில் -என்ற

             ... நம்பிக்கை வித்தைவி தைப்போம்நம் வீட்டில் 

 

            எல்லாமே அக்கரைப் பச்சை – அதை

            ... ஏற்காமல் நெஞ்சில் வளர்ந்திடும் இச்சை

            பொல்லாத தென்றுநான் கண்டேன் – இந்தப்

            ... போதனை கேட்டால் உமக்குயர் வுண்டே!  (எல்லாமே அக்கரைப் பச்சை.. )

==========================================================

2013/10/1 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>

அனந்த்




VETTAI ANANTHANARAYANAN

unread,
Oct 2, 2013, 9:36:45 PM10/2/13
to சந்தவசந்தம்
முன்னம் இட்ட பாடல் ஆனந்தக் களிப்பு என்னும் சிந்து வகையைச் சேர்ந்தது. அடிகளுக்குள் வெண்டளை பயிலும்.
“நந்த வனத்திலோர் ஆண்டி“ என்ற மெட்டில் இசைக்கலாம் 


2013/10/2 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>

Kalam Kader

unread,
Oct 3, 2013, 12:12:59 AM10/3/13
to santhav...@googlegroups.com
 
 
முக்காலும் உண்மையிலும் உண்மை ஐயா!
 
யானும் அமெரிக்காவில் (1999 முதல் 2004 வரை) இருந்திருக்கிறேன்; அங்குக் கண்ட நம் இந்திய இளைஞர்களின் வாழ்வியலை அப்படியே எழுதியுள்ளீர்கள், இந்த ஆனந்தக் களிப்புப் பாட்டில்; ஏற்றிடுவோம் என் வாழ்க்கையை எம் தாய்த்திருநாட்டில்!


2013/10/3 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>

--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.



--
அபுல்கலாம் பின் ஷைக் அப்துல்காதிர்
 http://www.kalaamkathir.blogspot.com/ 
 

Kavingar Jawaharlal

unread,
Oct 3, 2013, 11:19:15 PM10/3/13
to santhavasantham
எல்லாமே அருமை.


2013/10/3 Kalam Kader <kalam...@gmail.com>



--
பொற்கிழிக்கவிஞர்
டாக்டர். ச.சவகர்லால்
கைபேசி : +91- 9790846119

Subbaraman NV

unread,
Oct 4, 2013, 5:39:58 AM10/4/13
to santhav...@googlegroups.com
”எல்லாமே அக்கரைப் பச்சை! இந்த ஞானம் வந்தால் வேறென்ன வேண்டும்?
நாமிருக்கும் நாடு நமதென்ப துணர்ந்தோம்-இது நமக்கே உரிமையாம் என்பதுணர்ந்தோம்!


2013/10/4 Kavingar Jawaharlal <kavingar....@gmail.com>



--
N V Subbaraman,
Editor, Young Poet,
12 / 1045 Jeevan Bhima Nagar,
Chennai - 600101

Visit http://www.youngpoet.org
Visit http://www.poemhunter.com/subbaraman-n-v/

N. Ganesan

unread,
Oct 4, 2013, 7:25:55 AM10/4/13
to santhav...@googlegroups.com


On Wednesday, October 2, 2013 9:12:59 PM UTC-7, kavianban kalam wrote:
 
 
முக்காலும் உண்மையிலும் உண்மை ஐயா!
 
யானும் அமெரிக்காவில் (1999 முதல் 2004 வரை) இருந்திருக்கிறேன்; அங்குக் கண்ட நம் இந்திய இளைஞர்களின் வாழ்வியலை அப்படியே எழுதியுள்ளீர்கள், இந்த ஆனந்தக் களிப்புப் பாட்டில்; ஏற்றிடுவோம் என் வாழ்க்கையை எம் தாய்த்திருநாட்டில்!


2002-ல் அனந்த் கவிதை கணினிப்படிப்பின் நிலை அறிவித்தது:

             "கணினிப் படிப்பினை இன்றே -அஞ்சல்

             ... கல்லூரி மூலமாய் கற்றிட்டால் நன்றே;

            பணிகள் பலவுளஎன்றேபல

             ... பேருஞ்சொன் னாரதைக் கேட்டுப்ப யின்றே  ‘ ...

இன்று கணினிப் படிப்பு அந்த அளவு பிரகாசமான நிலையில் இல்லை.
மற்ற படிப்புகள் போலத் தான் என்றாகிவிட்டது. supply & demand.

தன் பழம்பாடல்கள் படிக்கக் கொடுக்கும் கவிஞருக்கு நன்றி.

நா. கணேசன்

VETTAI ANANTHANARAYANAN

unread,
Oct 4, 2013, 10:49:07 PM10/4/13
to சந்தவசந்தம்

ஜனவரி 2001-ல் ’போரம் ஹப்’ (மன்ற மையம்) இணைய தளத்தில் எழுதிய ஒரு கவிதை கீழே, ’முன்னுரை’யோடு.

 

”இந்த வாரம் நிறைய (அலுவலக) வேலைகள் இருப்பதால் இணையம் பக்கமே போகக் கூடாதென்று நினைத்துக் கொண்டேன். ஆனால்.. முடியவில்லை! சன்னல் வழியே நோக்கிய போது அழகாகப் பறந்து சென்ற கனேடிய வாத்துகள் (Canada geese) என்னைக் கணினித் திரைக்குத் துரத்தின. அதன் விளைவு...

<> பாவம் பறவைகள்! <>

    .... அனந்த்


வானில் திரியும் பறவைகாள் - உங்கள்

வாழ்க்கையை எண்ணி வருந்துகிறேன்!


தீனியை ஒன்றே தினந்தினமும் - நீர்

தேடி அலைந்துதிண் டாடுகின்றீர்!


மானிட ராகிய எங்களைப்போல் - இன்றி

வீணே கழிக்கிறீர் உம்பொழுதை


ஏனிந்தத் தீங்கினை ஈசனுமக் -கென்று(ம்)

இப்புவி தன்னில் இழைத்திட்டான்?


மானிட ரெங்கள் குழந்தையது -வந்த

நாள்முதல் நாங்கள் அதனிடத்தில்


தானினி வாழ்ந்திடத் தேவைபலப் - பல

தாமுண் டெனமிகத் தாகமுடன்


வானினும் நீண்டதோர் பட்டியலை -அது

வாயினாற் பேசுமுன் தந்திடுவோம்


தேனினும் மேலாங் குரலெடுத்து - அது

தா,தா தையெனச் சொல்லுமுன்னே

 

மேனிலப் பள்ளிக்(கு) அதையனுப்பி -அங்கு

வேகமாய்க் கல்வி விழுங்கவைப்போம்

 

மூனென வெண்மதி காட்டிநிதம் - அது

முற்றும் தமிழை மறக்கவைப்போம்

 

நானினி யாவரில் மேலெனவே - அதன்

நெஞ்சினில் எண்ண விதைவிதைப்போம்

 

நானில மீதினில் மென்மேலே - பணம்

நாலெண் விதத்தினில் சேகரிக்கக்

 

கூனியுந் தோற்கக் குறுக்குவழி - பல

கொடுத்தது கூவக் குதுகலிப்போம்

 

ஏனினி உம்முடன் வாதாடி - நான்

என்பொழு திங்ஙனம் வீண்செய்வேன்

 

மேனி அழிந்திடு முன்னர்நீர் - எம்

வாழ்முறை பற்றி வளமுறுவீர்!

 

(இது ’கோபுர தரிசனம்’ சிற்றிதழிலின் தீபாவளி மலரில் பின்னர் வெளிவந்தது- தீபாவளி மலர்களில் வந்த என்னுடைய கவிதைகளில் இது முதல்.  எல்லாக்கண்ணிகளும் ஒரே எதுகை பயில்வதைக் காணலாம்.)

 ..அனந்த்

===============

2013/10/2 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>

VETTAI ANANTHANARAYANAN

unread,
Oct 4, 2013, 10:51:08 PM10/4/13
to சந்தவசந்தம்
இங்கிட்டுவரும் பழைய பாடல்களைப் படித்துக் கருத்துச் சொல்லும் அனைவருக்கும் என் உள்ளார்ந்த நன்றி.

அனந்த்


2013/10/4 N. Ganesan <naa.g...@gmail.com>

VETTAI ANANTHANARAYANAN

unread,
Nov 6, 2013, 10:38:26 AM11/6/13
to சந்தவசந்தம்
சந்த வசந்தம் ஆண்டு நிறைவுப் பாடல்கள்

 

... அனந்த்

 

நவம்பர் 6, 2002

முதல் ஆண்டு நிறைவு வாழ்த்து:

 

கருவாய் இலந்தை கனவாய் உதித்துக் கனியா கிச்சந்த அழகோடே

உருவாகி நிற்கும் உயர்வான இந்தக் குழுஇன்  றுதிர்க்கும் மலர்வீசும்

பெருவாச மெங்கும் பெரிதாய்ப் பரந்து பெரியோர் எலோரும் இதைநாடி

வருமாறி றைவன் வழிகாட்ட வேண்டி வழிபாடு செய்வம் இதுநாளில்.

 

-------------

7-11-2006

ஐந்தாவது ஆண்டு நிறைவு வாழ்த்து

 

<> எங்கள் குழந்தை <>

 

(தீராத விளையாட்டுப் பிள்ளை மெட்டு**)

 

சந்த வசந்தக் குழந்தை - அதன்

சாதனை எங்குமே காணாத விந்தை

 

இலந்தை உருவினில் வந்து - தமிழ்

இன்பமுப் பாலில் மரபைக் கலந்து

பலவகைப் பாக்களை ஊட்டும் - இந்தப்

பாலனும் தன்கை வரிசையைக் காட்டும் (சந்த)

 

ஆண்டொன்று சென்றிடும் முன்னே - ஒரு

ஆயிரத் தோடுமுன் னூற்றுக்கும் பின்னே

நீண்ட இடுகைகள் போட்டு - நமது

நெஞ்சில் திருக்குறள் எண்ணிக்கை காட்டும் (சந்த)

 

மற்ற குழந்தைகள் கூடித் -தெரு

மண்ணில் களிக்கத் தமிழ்நூலைத் தேடிப்

பற்றிப் புரட்டி மகிழும் - அதைப்

பார்ப்பவர் நெஞ்சமும் பாகாய் நெகிழும் (சந்த)

 

புவியுள்ளோர்க் கேற்ற விருந்தாய் - எம்போல்

புலம்பெயர்ந் தோரின் பசிக்கு மருந்தாய்

கவிதை அரங்கங்கள் கூட்டும் - உடன்

கணிணி வழிஎங்கள் கண்முன்னே காட்டும் (சந்த)

 

வள்ளுவன் பேர்கேட்டால் துள்ளும் - மணி

மாலையைச் சூட்டி மகிழ்ச்சியும் கொள்ளும்

உள்ளில் உதித்திடும் பாட்டைச் - சந்த

ஓசைது லங்கத்தன் கைதட்டிக் காட்டும் (சந்த)

 

பாரதி யார்மடி தாவும் - அவர்

பாட்டைச் சுவைத்திடப் பாரோரை ஏவும்

தேரழுந் தூர்க்கம்பன் பேரைத் - தினம்

செப்பிடச் சொல்லிப் பணித்திடும் ஊரை (சந்த)

 

ஆறாவ தாண்டில் அடிகள் - வைக்கும்

அன்பே!உன் பேர்இன்னும் ஓங்கும் படியாய்ப்

பேறெல்லாம் பெற்றுநீ வாழ்க!- பிறைப்

பெம்மான் மகன்அருள் என்றென்றும் சூழ்க! (சந்த)

 

..அனந்த் 7-11-2006 (இணைப்பு: ஒலிப்பதிவு)


(தொடரும்)



2013/10/4 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>
kuzandhai.wav

VETTAI ANANTHANARAYANAN

unread,
Nov 6, 2013, 5:27:33 PM11/6/13
to சந்தவசந்தம்

11-ஆம் ஆண்டு நிறைவு

 

சத்தான அறிவுதரும் சத்துவசந்தம்

.. சாரமான செய்திதந்(து)அ சத்து(ம்)வசந்தம்

முத்தான கவிதைநிறை முத்துவசந்தம்

.. முதல்இணையத் தமிழ்மரபுக் கொத்துவசந்தம்  

 

புலமைமிகு கவிமணியார் தந்தவசந்தம்

.. புதுமைகளைப் புகுத்துவதில் முந்துவசந்தம்

பலகவிஞர் மரபுதேடி வந்தவசந்தம்

.. பாசத்தினால் நமைப்பிணைக்கும் பந்தவசந்தம்

 

பெருங்கவிஞர் தாமும்கண்(டு)அ சந்தவசந்தம்

.. பேதமின்றி உறவுபேசும் சொந்தவசந்தம்

வருமெவர்க்கும் மகிழ்ச்சிஅள்ளித் தந்தவசந்தம்

.. வாழ்கஇன்னும் நூறுவருடம் இந்தவசந்தம்!

 

அனந்த்

5-11-2012



2013/11/6 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>

6-11-2008  ஏழாவது ஆண்டு நிறைவு வாழ்த்து

 

<> எங்கள் சேய் <>


இராகமாலிகை; தாளம்: திஸ்ர ஏகம்

 

-பைரவி-

செந்தமிழ்த் தாயின் சிறப்பினைச் செப்பிடச் 

.. செல்வக் குழந்தையொன்று - இங்கு

வந்து பிறந்து வளர்ந்து வருகிறாள்

.. வண்ணக் களஞ்சியமாய்! 

சந்தம் மணக்கத் தமிழ்மணக்க அலர்

.. தாமரை போலுதித்தாள் - அவள்

சொந்தம் எமக்கெனச் சொல்லிக் கவிஞர்கள் 

.. தோளில் சுமந்துநின்றார்    (எங்கள் சேய் எங்கள் சேய்)

 

-மோஹனம்-

முந்தை இலக்கிய வித்தகர் வந்துநல்

.. முத்துக்கள் பூட்டிநின்றார் - எழில்

சிந்தும் புதுவகைச் செல்வங்க ளும்அவர்

.. சேர்த்துக் கொணர்ந்துவந்தார்

எந்தத் திசையில் தமிழொலி கேட்கினும்

.. இன்ப நடம்புரிந்து - வந்த

இந்தக் குழந்தையின் இங்கிதம் கண்டவர்  

.. ஈதென்ன மாயமென்றார் (எங்கள் சேய் எங்கள் சேய்)  

 

-வசந்தா-

மாலைப் பொழுதினில் சோலை உலாவிடும்

.. மாருதம் போலிருந்த - சந்தக்

கோலக் குழந்தை 'வசந்தம்' எனும்பேரில்

.. வாசனை வீசிவந்தாள்  

காலமெல் லாம்தமிழ் கற்றவர் ஊட்டிடும் 

.. காவியத் தேனைஉண்டாள் - அவள்

சீலம் தெரிந்து பலரும் அவள்குழு

.. தேடித் திரண்டுவந்தார்    (எங்கள் சேய் எங்கள் சேய்)

 

-சாரங்கா-

 பாலப் பருவச் சிறுவர் விளையாடப்

.. *பாவைகள் நாடுகையில் - தமிழ்

சாலச் சிறந்திடும் பாவை விரும்பிடும்

.. தன்மை துலங்கநின்றாள்         

கோலக் குயிலின் குரலிசை கேட்கையில்

.. கொள்ளை மகிழ்ச்சிகொள்வாள் - அதில்

ஞாலம் புகழ்தமிழ் நாதம் பயிலும்

.. நயங்கண்டு கூத்திடுவாள் (எங்கள் சேய் எங்கள் சேய்)

 

-காபி-

சிந்தை முழுதும் தமிழ்நினை வாம்அவள்

.. செய்கையெல் லாம்தமிழாம் - சொல்லும்

மந்திர மும்தமி ழாம்அவள் பேசிடும்

.. வார்த்தையெல் லாம்தமிழாம்

இந்த விதத்தில் இனிது வளர்ந்திவள்

.. ஏழு வருடங்களாய் -  காண

வந்தோர் வியந்திட வண்ணக் கவிதைகள்

.. வாரி வழங்குகின்றாள்  (எங்கள் சேய் எங்கள் சேய்)

 

- சிந்து பைரவி-

ஓதும் இயலிசை நாடகத் தில்தன(து)

.. உள்ளம் பறிகொடுப்பாள் - அதில்

சாதனை செய்தவர் யாவரையும் தலை

.. தாழ்த்தி வணங்கிடுவாள்

 

வாதம் புரிவதில் வல்லவள் ஆயின்

.. வரம்பினைத் தாண்டிநில்லாள் - பிறர்

ஏதும் குறைகள் எடுத்துரைத் தால்உடன்

.. ஏற்றுத் திருந்திடுவாள்    (எங்கள் சேய் எங்கள் சேய்)

 

-சுருட்டி-

சூழும் உலகை இணையத் தளம்வழி

.. தொட்டுப் பலப்பலவாய் - என்றும்

வாழும் மரபும் புதுமையும் போற்றிடும்

.. வாசகங் கள்புனைவாள் 

 

ஏழு வயதைக் கடந்துவிட் டாள்இன்று

.. எட்டினை எட்டுகின்றாள் - நீண்டு

வாழ்ந்து தமிழ்வளம் சூழ்ந்து தழைத்திட

.. வாழ்த்துக்கள் கூறிடுவோம்!   (எங்கள் சேய் எங்கள் சேய்)

 

(*இங்கிதம்= இனிமை; பாவை= பதுமை; பொம்மை; பாடலில் 'சந்தம்', 'வண்ணம்', 'சிந்து' ஆகிய மரபுப் பாவினங்களையும் 'புதுவகை'ப் பாவினங்களையும் சுட்டும் வகையில் சில சொற்கள் இடப்பட்டுள்ளன).


இணைப்பு; இசை ஒலிப்பதிவு

-----------------------------------

ஒன்பதாவது ஆண்டு நிறைவு வாழ்த்து

தண்டமிழ்த் தேனமுதைச் சந்தமிகு கிண்ணத்தில்

உண்டிவ் வுலகோர் வியக்குவண்ணம் - பண்ணியற்றும்

பாலகன் இன்றுதன் பத்தாம் வருடத்தில்

காலடி வைக்கின்றான் காண்!

 

..அனந்த்  7-11-2010



2013/11/6 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>

யாக்கோப் ஆண்டனி

unread,
Nov 6, 2013, 11:17:18 PM11/6/13
to santhav...@googlegroups.com
வாழ்த்துகள் !!!


2013/11/7 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>

Subbaier Ramasami

unread,
Nov 7, 2013, 7:37:58 AM11/7/13
to சந்தவசந்தம்
நினைத்துப்பார்க்கும் இன்பம் அலாதிதான்.

இலந்தை


2013/11/6 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>

VETTAI ANANTHANARAYANAN

unread,
Nov 10, 2013, 10:26:34 AM11/10/13
to சந்தவசந்தம்

24-12-2006

பாரதி கலைக்கழக ஆண்டுவிழா கவியரங்கம்

-----------------------------------------------

 

<> ஊருக்கு நல்லது செய்வோம் <>

...அனந்த்

 

ஊருக்கு நல்லது செய்வோம் - என்னும்

..உபதேச வாக்கைஎன் உள்ளத்தில் கொண்டு

நேராக இந்தியா வந்தேன் - அங்கு

..நேர்ந்த கதையைக் கவிதையில் தந்தேன்

 

வானூர்தி ஏறிநான் சென்னை - மண்ணில்

..வந்த கணமே துதிக்கையான் தன்னை

நான்நோக்கிக் கும்பிடும் இட்டேன் -அவன்

..நகைக்கும் ஒலிகேட்டு நான்திடுக் கிட்டேன்:

 

ஏனப்பா என்றன் குழந்தாய்! - இங்கே

..என்னென்ன சாதிக்கும் எண்ணத்தில் வந்தாய்?

ஆனைமு கத்தவன் கேட்டான் - என்றன்  

..ஆதங்கம் யாவும் அவன்முன்னே போட்டேன்

 

ஐயாநான் நேசிக்கும் நாட்டில் - காணும்

.. அக்கிர மம்பிறர் கூறநான் கேட்டு

மெய்யாக வேஉளம் நொந்தேன் - என்றன்

.. வேதனை தீர்க்க விரைந்திங்கு வந்தேன்

 

வள்ளுவர் பாரதி காந்தி - இங்கு

..வாழ்ந்த பெருமிதம் நெஞ்சினில் ஏந்தித்

துள்ளி வளர்ந்தவன் அன்றோ - நாட்டின் 

..தொல்லை களையாமல் ஓய்வதும் நன்றோ

 

லஞ்சமெனும் பெரும் பேயைப் - போதை

..லாகிரி வத்துக்கள் மூட்டிடும் தீயைக்

கொஞ்சமும் அஞ்சாது ஒழிப்பேன் - இந்தக்

..கொள்கையோ(டு) எஞ்சிய நாளைக் கழிப்பேன்

 

சாதி ஒழிப்பதாய்க் கூறிச் - செய்யும்

..சாகசத்தில் மக்கள் வாழ்க்கையே நாறி

வீதிக்கு வீதியோர் சாதி - என்ற

..வெட்கத்தை வெட்டி நிறுத்துவேன் நீதி

 

என்று பலப்பல வாறு - என்றன்

..எண்ணத்தைக் குஞ்சரன் முன்னில்நான் கூற

நன்றப்பா நீகொண்ட நோக்கம் - பல

..நாளாய் எனக்கும்தான் உள்ளதோர் ஏக்கம்

 

ஒன்றன்பின் ஒன்றாய் முளைக்கும் - பல

..ஊழலைக் கண்டென்றன் மேனி இளைத்தேன்

அன்றைய நாட்களைப் போன்று - என்னை

..அரச மரத்தின் அடியினில் ஊன்று

 

என்றவன் பேச்சுக்கு நானோர் - விடை

..ஏதும்சொல் லும்முன் மறைந்தெங்கோ போனான்!

குன்றனை யானுக்கே ”தண்ணீர் - காட்டும்”

..கோலத்தைக் கண்டதும் கொட்டினேன் கண்ணீர்!

 

...அனந்த்



2013/10/4 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>

ஜனவரி 2001-ல் ’போரம் ஹப்’ (மன்ற மையம்) இணைய தளத்தில் எழுதிய ஒரு கவிதை கீழே, ’முன்னுரை’யோடு.

 

”இந்த வாரம் நிறைய (அலுவலக) வேலைகள் இருப்பதால் இணையம் பக்கமே போகக் கூடாதென்று நினைத்துக் கொண்டேன். ஆனால்.. முடியவில்லை! சன்னல் வழியே நோக்கிய போது அழகாகப் பறந்து சென்ற கனேடிய வாத்துகள் (Canada geese) என்னைக் கணினித் திரைக்குத் துரத்தின. அதன் விளைவு...

<> பாவம் பறவைகள்! <>

    .... அனந்த்


வானில் திரியும் பறவைகாள் - உங்கள்

வாழ்க்கையை எண்ணி வருந்துகிறேன்!


தீனியை ஒன்றே தினந்தினமும் - நீர்

தேடி அலைந்துதிண் டாடுகின்றீர்!


மானிட ராகிய எங்களைப்போல் - இன்றி

வீணே கழிக்கிறீர் உம்பொழுதை


ஏனிந்தத் தீங்கினை ஈசனுமக் -கென்று(ம்)

இப்புவி தன்னில் இழைத்திட்டான்?

(இது ’கோபுர தரிசனம்’ சிற்றிதழிலின் தீபாவளி மலரில் பின்னர் வெளிவந்தது- தீபாவளி மலர்களில் வந்த என்னுடைய கவிதைகளில் இது முதல்.  எல்லாக்கண்ணிகளும் ஒரே எதுகை பயில்வதைக் காணலாம்.)

 ..அனந்த்



Subbaraman NV

unread,
Nov 11, 2013, 12:18:32 AM11/11/13
to santhav...@googlegroups.com
இப்பொழுது-டிசம்பர் மாதம் தாயகம் வரவேண்டிய காலம் அல்லவா? இன்றும்  2006ல் ஆற்ற நினைத்த சாதனைகளைச் செய்து முடிக்க கணபதியைப் பிரார்த்தித்துக் கொள்ளலாம்! சமுதாயமும், தமிழ்நாடும் இந்த விஷயங்களில் சற்றும் முன்னேற வில்லை-வேதனைக்குரிய உண்மை.
என் வி சுப்பராமன்


2013/11/10 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>

--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.

VETTAI ANANTHANARAYANAN

unread,
Dec 23, 2013, 7:48:17 PM12/23/13
to சந்தவசந்தம்
கவியோகியாருக்கும் இலந்தையாருக்கும் நன்றி.

Grammar doubt இழையில், இலந்தையார் ‘அணைத்தல்’ பற்றிய நகைச்சுவை ஒன்றை இட்டிருந்தார்.  அணைத்தல் என்னும் சொல் பல பொருள்களை அணைத்துப் பயிலும் என்பதைக் குறிக்கும் எனது பழம்பாடல் ஒன்று:

                                                       <>  அணை <>


                அணையென்றேன் அயர்வதற்கோர் அணைதந்தாள் அதன்மேலும்

                அணையென்றேன் ஆங்கிருந்த அகலணைத்தாள் அடிபெண்ணே!

                அணையென்றேன் அன்பிற்கே(து) அணையென்றாள் ஐயோ!நீ

                அணையென்றேன் அவளணைத்தாள் அம்மம்மா! அதன்சுகமே!

 

(அயர்வு என்பதற்குச் சோர்வு என்ற பொருள் போக உன்மத்தம், மனக்கவர்ச்சி என்ற பொருள்களும் உண்டு! முதலில் தலையணை, பின் விளக்கணைத்தல், அதன்பின் அன்புமொழி, இறுதியில் அணைப்பு... குறும்புக்காரப் பெண்தான்!)




2013/11/30 Subbaier Ramasami <elan...@gmail.com>
அணை மாது என்பது வினைத்தொகையாகும் போது அணைத்த  மாது அணைக்கின்ற மாது, அணைக்கும் மாது என்று பொருள் படும்

அணைத்தல்(தீயை அணைத்தல்)  என்று வரும் போதும் மேற்சொன்ன மாதிரியே வரும்.

அணைந்த   என்கிறபோது எழுவாய் தீ க்கு  ஏறிவிடும்.

ஒரு நகைச்சுவை. பல ஆண்டுகளுக்கு முன் உண்மையிலேயே நடந்தது.

அப்பொழுதெல்லாம் வெந்நீர் அண்டாவில்தான் குளிப்பதற்கு வெந்நீர் வைப்பார்கள். விறகு அடுப்புத்தான்... ஒரு வீட்டில் அநேகமாக எல்லோரும் குளித்துவிட்டார்கள். கணவன் குளிக்கக் குளியலறைக்குள்  சென்றான். அப்பொழுது 
மனைவி அங்கே வந்தாள். அவளும் இன்னும் குளிக்கவில்லை. அவள் சொன்னாள்
“வேறு யாரும் இல்லை. நானும் நீங்களும்தான் அணைங்கோ” அவள் குறிப்பிட்டது”குளிப்பதற்கு வேறு யாரும் இல்லை. நானும் நீங்களும் தான். விறகடுப்பை அணைத்துவிடுங்கள்.” அவன் எப்படிப்புரிந்துகொண்டான் என்று சொல்லவும் வேண்டுமா?

இலந்தை



2013/9/30 Subbaier Ramasami <elan...@gmail.com>

Dr Subramanian

unread,
Dec 23, 2013, 8:47:41 PM12/23/13
to santhav...@googlegroups.com
கற்பனைச் சொல்’லணைத்துக்” காதல் கவிவரைந்தே
அற்புதம் செய்தார் அனந்த்
வவேசு


2013/12/24 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>



--
Dr.V.V.Subramanian
Director,Phycospectrum Environmental Research Centre (PERC)
( A Unit of Phycospectrum Inc:)
52A,AK Block,7th Main Road,
Annanagar. Chennai, 600040
Managing Editor,
Journal of Algal Biomass Utilization (JABU): ISSN: 2229 – 6905 
http://jalgalbiomass.com
President ,IBA-Indian Biomass Association (Regd)
President, KIA,Chennai (Regd)
Off: 044-26208896 Res: 044-24748674
Mobile: 9381044470
Skype ID vavesu1

Siva Siva

unread,
Dec 23, 2013, 9:13:10 PM12/23/13
to santhavasantham
Very nice.
She was smart and understood the meaning in the most appropriate sequence! :)


2013/12/23 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>

Kaviyogi Vedham

unread,
Dec 23, 2013, 10:24:54 PM12/23/13
to santhavasantham
மன்னுபுகழ்ப் பாவல!    பாட்டுமே தந்ததய்யா!
வென்னீரால் இன்பம் விரைந்து!

வாழ்க அனைவரும் வளமுடனே 
என் குருஜி லஹரி பாபாஜி
ஆசியினால்.
கவியோகி வேதம்(kaviyogi vedham)-
PL. visit my blog(for my poems etc)at http;//kaviyogi-vedham.blogspot.com/
kaviyogi vedham(yogiyaar)தலைவர்..
Founder, Sree Laharibabaji yogasram,
2/682, 10th cross St,...Renga reddy garden,
Neelankarai, Chennai-600115--செல் எண் 95000-88528
 



2013/12/23 Dr Subramanian <vav...@gmail.com>

VETTAI ANANTHANARAYANAN

unread,
Dec 23, 2013, 10:37:25 PM12/23/13
to சந்தவசந்தம்
பழங்கவிதையை இரசித்த அனைவருக்கும் என் நன்றி.

அனந்த்
பி.கு. இது முற்றெதுகை முற்றுமோனை  கொண்ட கலிப்பா.


===============

2013/12/23 Dr Subramanian <vav...@gmail.com>
கற்பனைச் சொல்’லணைத்துக்” காதல் கவிவரைந்தே
அற்புதம் செய்தார் அனந்த்
வவேசு

Very nice.She was smart and understood the meaning in the most appropriate sequence! :)
Siva Siva

2013/12/23 Kaviyogi Vedham <kaviyog...@gmail.com>
மன்னுபுகழ்ப் பாவல!    பாட்டுமே தந்ததய்யா!
வென்னீரால் இன்பம் விரைந்து!

வாழ்க அனைவரும் வளமுடனே 
என் குருஜி லஹரி பாபாஜி
ஆசியினால்.
கவியோகி வேதம்(kaviyogi vedham)-


VETTAI ANANTHANARAYANAN

unread,
Mar 19, 2014, 4:18:18 PM3/19/14
to சந்தவசந்தம்
<> அடியும் முடியும் <>

அடியே!என்(று) இந்நாள் அழைத்தால் உடனே
இடிபோல் இறங்கும் அடி!     1

காட்டுக் குரலாளைப் பாடென்றால் காதில்விழும்
ஓட்டை,நான் ஓர்எடுத்துக் காட்டு!    2 

காரோட்டும் காரிகையின் கோபம் தணியு(ம்)மட்டும்
ஓரமாய்த் தள்ளிஉட் கார்!    3

மதிபோல் முகத்தாள் மனம்நோகச் செய்தால்
அதிர்ந்தோடும் உன்நிம் மதி    4

தொலைக்காட்சி காண்பா ளுடன்வாழ்(வு) தோதாய்ச் 
செலநீயும் பார்த்துத் தொலை!     5

மைவிழியாள் முன்நீ மிகையாய் வருணிக்கும்
பொய்மலிந்த பேச்சும்உண் மை!    6

ஆடும்சீட் டாட்டில்உன்பொய் அம்பலம் ஆகுமுனம்
ஓடாநீ ஓர்பலி ஆடு!    7

கூட்டுக் குழம்பைக் குறைசொல்லா துன்வாயைப்
பூட்(டு)இலையேல் போய்வீட்டைக் கூட்டு!  8

படிப்பதுபோல் பெண்ணழகைப் பார்க்குமுனக் கில்லாள்
அடிகாட்டும் வாசற் படி!

முடியா(து) எனநீ மொழியும் கணத்திலவள்
பிடிசிக்கிப் பிய்யும் முடி!    8


... அனந்த்  (2009)


Siva Siva

unread,
Mar 19, 2014, 7:09:06 PM3/19/14
to santhavasantham
Nice அடியும் முடியும் set - starting with அடி and ending with முடி!


2014-03-19 16:18 GMT-04:00 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>:
<> அடியும் முடியும் <>

அடியே!என்(று) இந்நாள் அழைத்தால் உடனே
இடிபோல் இறங்கும் அடி!     1

.....

ramaNi

unread,
Mar 19, 2014, 10:43:59 PM3/19/14
to santhav...@googlegroups.com
அடிசக்கை நெத்தியடி அப்படித் தானென்
றடிமுடி வீங்கும் அடி.

--ரமணி

Kaviyogi Vedham

unread,
Mar 20, 2014, 9:33:11 AM3/20/14
to santhavasantham
கடைசிக்குறளில் கடைசி வரியில் தளை தட்டுகிறதே. சரி செய்க அநந்த்!
 வேலில் இடுவோம்.
 யோகியார்

வாழ்க அனைவரும் வளமுடனே 
என் குருஜி லஹரி பாபாஜி
ஆசியினால்.
கவியோகி வேதம்(kaviyogi vedham)-
PL. visit my blog(for my poems etc)at http;//kaviyogi-vedham.blogspot.com/
kaviyogi vedham(yogiyaar)தலைவர்..
Founder, Sree Laharibabaji yogasram,
2/682, 10th cross St,...Renga reddy garden,
Neelankarai, Chennai-600115--செல் எண் 95000-88528
 

--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Subbaier Ramasami

unread,
Mar 20, 2014, 9:37:54 AM3/20/14
to சந்தவசந்தம்
அடிமுடி தன்னையான்  அன்று தொடங்க
அடடாவின் றென்ன அடி!

இலந்தை

VETTAI ANANTHANARAYANAN

unread,
Mar 20, 2014, 10:35:55 AM3/20/14
to சந்தவசந்தம்
சுட்டியதற்கு மிக நன்றி. மாற்றிய வடிவம்:

முடியா(து) எனநீ மொழிந்தால் அவள்கைப்

பிடிசிக்கிப் பிய்யும் முடி!    8


Kaviyogi Vedham

unread,
Mar 20, 2014, 10:45:14 AM3/20/14
to santhavasantham
நன்றி அநந்த்..
 யோகியார்

VETTAI ANANTHANARAYANAN

unread,
Mar 20, 2014, 10:59:42 AM3/20/14
to சந்தவசந்தம்

முன்குறிப்பு: வெண்பா, ஆசிரியப்பா, சிந்து, விருத்தம், குறள் வெண்செந்துறை என்பன போலச் சில மரபுப் பாடல்களுக்கு உண்டான பெயர்களைப் பற்றிச் சற்றுக் கிண்டல் செய்யப் பார்ப்போம். நம்மைக் கடிக்கும் பாம்பை நல்லபாம்பு என்று முரணாகச் சொல்வது போல, சில பாவகைகளின் பெயரிலும் தடுமாற்றம் இருப்பதைக் கீழே தந்துள்ள என்னுடைய பாடல்களில் சொல்வதை நீங்கள் ஒப்புக்கொள்வீர்கள் என நம்புகிறேன்! (முரண்படும் சொற்கள் மேற்கோள் குறிக்குள் காட்டப் பட்டுள்ளன.)

 

 

1. வெண்பா

 

கன்னங் 'கரிய' இருள்என் இமைகளைப்

பின்னிப் பிணைத்த பிரமைதந்த - என்னுணர்வை

நண்பாநான் கூறுதற்கு நாடிய பாவினம்

'வெண்பா'வாம் வெள்ளைநிறப் பா.

 

2. ஆசிரியப் பா

 

கற்கை நன்றெனும் சொற்படி நானும்

நிற்க விழைந்து நித்தம் வகுப்பில்

புத்தகக் குவியல்என் மத்தகம் தாங்க

வித்தக ஆசான் விளக்கும் கணிதக்

கோட்பா(டு) அனைத்துமென் குறுகிய மூளையை

நாட்பட நாட்பட நமுத்துப் போகுமா(று)

ஆக்கிய தாலே போக்கிட மிலாஅது

தூக்கம் என்னும் தாயவள் துணையை

நாடிய நாட்களின் நீடிய நினைவுகள்

வாடிடும் மனத்தினில் ஓடிடும் ஊற்றெனக்

காணுங் காலைஎன் களிப்பினை உடனே

'மாணவர்' பலரொடு மகிழ்வுடன் பகிர்ந்திட

'ஆசிரி ய'ப்பா இனத்தில்

பேசிட வந்தனன் முரணென் றறிந்துமே!

 

3. கலிப்பா

 

பொருகளத்தின் நடுவினிலே போர்புரியத் தான்மறுத்த

அருச்சுனற்(கு) அன்றளித்த அறிவுரையாய் ஆனபெரும்

'கிருதயுக'க் கிருட்டினனின் கீதையைநாம் சுளுவாகத்

தருவதற்குத் தேருவதேன் தரவு'கலி'க் கொச்சகமே?

 

4. வஞ்சிப்பா

 

வீறுகொண்டெழு வைரநெஞ்சுடை

'ஏறுநடையன்' ஏகும்எழிலைக்

கூற'வஞ்சி'யைக் கோரலெங்ஙனம்?

 

5. விருத்தம்

 

வெள்ளத் தெழுவெண் நுரைபோல

..மிதந்து நெஞ்சில் களியூட்டிக்

கள்ளப் பார்வை பரிமாறிக்

..காதல் வளர்க்கும் 'இள'வயதின்

துள்ளும் துடிப்பைத் தேன்உணர்வைச்

.. செப்ப யார்தாம் தெரிந்திடுவார்

அள்ளு கிழமாம் 'விருத்த'மெனும்*

...அமைப்பைக் கொண்ட பாவினையே?

 

*விருத்தம் = கிழத்தன்மை


... அனந்த், 2007



2014-03-19 16:18 GMT-04:00 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>:
<> அடியும் முடியும் <>

அடியே!என்(று) இந்நாள் அழைத்தால் உடனே
இடிபோல் இறங்கும் அடி!     1

காட்டுக் குரலாளைப் பாடென்றால் காதில்விழும்
ஓட்டை,நான் ஓர்எடுத்துக் காட்டு!    2 

காரோட்டும் காரிகையின் கோபம் தணியு(ம்)மட்டும்
ஓரமாய்த் தள்ளிஉட் கார்!    3

மதிபோல் முகத்தாள் மனம்நோகச் செய்தால்
அதிர்ந்தோடும் உன்நிம் மதி    4

தொலைக்காட்சி காண்பா ளுடன்வாழ்(வு) தோதாய்ச் 
செலநீயும் பார்த்துத் தொலை!     5

மைவிழியாள் முன்நீ மிகையாய் வருணிக்கும்
பொய்மலிந்த பேச்சும்உண் மை!    6

ஆடும்சீட் டாட்டில்உன்பொய் அம்பலம் ஆகுமுனம்
ஓடாநீ ஓர்பலி ஆடு!    7

கூட்டுக் குழம்பைக் குறைசொல்லா துன்வாயைப்
பூட்(டு)இலையேல் போய்வீட்டைக் கூட்டு!  8

படிப்பதுபோல் பெண்ணழகைப் பார்க்குமுனக் கில்லாள்
அடிகாட்டும் வாசற் படி!

முடியா(து) எனநீ மொழிந்தால் அவள்கைப்

VETTAI ANANTHANARAYANAN

unread,
May 7, 2014, 10:08:45 PM5/7/14
to சந்தவசந்தம்
தற்போது நடைபெறும் சந்தவசந்தக் கவியரங்கத்தில், கவியோகி வேதம் அவர்கள் ‘எனக்குப் பிடித்த ஒரே மனிதன்’  என்ற தலைப்பில் ஆய்க்குடி அமர் சேவா சங்கத்தை நிறுவிய திரு. ராமகிருஷ்ணன் அவர்களின் சேவையை விவரித்துள்ளார். அதன் தொடர்பாக,
2008-ல் திண்ணை மின்னிதழில் வெளியான கீழ்க்காணும் பாடலை இங்கிடுகிறேன்:

<> குறை தீர்ந்த குழந்தைகள் <>

அனந்த்

1.
துள்ளும் மானினைப்போல் சுழன்றோடும் மீனினைப்போல்
கள்ளந் தெரியாது களித்திருக்கும் வயதினிலே
உள்ளம் மிகநொந்து உடல்வருத்தும் ஊனமுடன்
எள்ளிப் பிறர்நகைப்பும் ஏற்றுநிற்றல் சிலர்விதியோ?        

2.
ஒரு சிறுமி:

என்னைப் பெற்ற ஏழையர்தம்
... இன்பக் கனவின் கனியாகப்
பொன்னைப் போல நான்பிறந்தேன்
... போற்றி வளர்த்தார் விந்தையென்ன?
என்ன வினையோ எவர்பழியோ
... இரண்டே வயது ஆகுமுன்னே
மின்னல் போல வந்தசுரம்*
... வீழ்த்திய தென்றன் வாழ்க்கையையே.             

அதன்பின்:
கல்லில் உறங்கிக் கிடந்தேன் -இரு
...காலும் விளங்காமல் காலம் கழித்தேன்
சொல்லாலே ஊர்விடும் அம்பை - என்றும்
...சுமந்து சுமந்தேஎன் சீவனை மாய்த்தேன்
கல்லாத பிள்ளையாய் வாழ்தல் - பெரும்
... கடனென் றறிந்தந்தக் கடவுளை வைதேன்
நல்லார் ஒருவரால் இன்று - செத்த
... நானும் மறுமுறை தோன்றி மலர்ந்தேன்           

3.
யாரந்த நல்லார்?

இருபத் தைந்து ஆண்டுகள்முன்
... இளைஞன் ஒருவன் இவ்வுலகம்
தருநல் லின்பம் யாவையுமே
... தானும் காணும் ஆர்வமுடன்
இருக்கும் நேரம் வாழ்வினிலே
... இடியாய் விழுந்த விபத்தினிலே
இருகால் கைகள் இயக்கம் இன்றி
... ஊனன் ஆயினன் என்கொடுமை!

"ஊனம் உடற்கே, உயிர்க்காமோ?
... உடைந்த வெல்லம் இனிக்காதோ?
மானம் நிறைந்த வாழ்க்கையினை
... மீண்டும் பெறுவேன் மேலும்மிக
தீன நிலையில் வாடுகின்ற
... சிறுவர் தமக்கென் றொருவிடுதி
நான மைப்பேன்" என்றஅந்த
... *நல்லோன் கனவு நனவாகி

ஆரும் விரும்பித் துணைபுரியா
... அநாதைச் சிறுவர் ஆயிரமாய்ச்
சேரும் வகையில் சிறந்துநிற்கும்
... சேவா சங்கம்* ஆயிக்குடி*
ஊரில், நாட்டில் ஊன்றிபல
... உதவி புரிந்தே ஊனரும்நற்
பேரும் புகழும் தம்வாழ்வில்
... பெறவோர் பாதை அமைத்ததுவே.
             
4. இன்று:

*வடிவுக் கரசி போன்றபலர்
... வாழ்வில் தமது ஊனமதை
அடியோ டழிக்க அன்புவழி
... அளிக்கும் பலமும் அறிவுதரும்
படிப்பும் மிளிர வாழ்க்கையினைப்
... பலரும் போலத் தாம்சுவைக்கத்
துடிப்பும் கொண்டு திகழ்கின்றார்
... சொல்வீர் இதுபோல் சேவையுண்டோ?

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*சுரம்: போலியோ என்றழைக்கப்படும் முடக்கு சுரம்
*நல்லோன்: 'அமர் சேவா சங்க'த்தை நிறுவிய திரு.இராமகிருஷ்ணன்   
*ஆய்க்குடி: அமர் சேவா சங்கம் செயல்படும் ஊர். 
*வடிவுக்கரசி: கானடாவில் நிறுவப்பட்டுள்ள Handicare International செய்தித் தாளில் சுட்டப்பட்ட, அமர்சேவா சங்கத்தின் உதவிபெறும் இளம்பெண்களில் ஒருவர்.   இச்சங்கத்தின் பிறப்பு பற்றியும் அங்குள்ளோர் புரிந்துவரும் நற்செயல்கள் பற்றியும் ஆன விவரங்களைக் காணத் தயவு செய்து: http://www.amar-seva.org/htm/index-1.htm;
http://www.ambalam.com/issues/cate/2000/may/cate28_03.html
என்ற சுட்டிகளைப் பார்க்கவும்.
.. அனந்த் -2008


VETTAI ANANTHANARAYANAN

unread,
May 7, 2014, 10:27:02 PM5/7/14
to சந்தவசந்தம்
முந்திய இடுகையை ஒட்டி, ஆய்க்குடி அமர் சேவா சங்கத்தைப் பற்றி 2009-ல் எழுதிச் சந்தவசந்தத்தில் இட்ட பாடல் ஒன்று:

http://groups.google.ca/group/santhavasantham/browse_thread/thread/7427565e2b9a8519#


நெல்லை மாவட்டத்தில் தென்காசி அருகே ஆய்க்குடி என்னும் கிராமத்தில், 1981-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட அமர் சேவா சங்கம் என்னும் ஒரு சேவை நிறுவனம், உடல், மன வளர்ச்சி குன்றியவர்களுக்குப் புதுவாழ்வு கொடுக்க மிகச்சிறப்பாகப் பணிபுரிந்து வருகிறது. (சங்க கால வள்ளல்களில் ஒருவனான ஆய் என்பவனின் இருப்பிடமாக இருந்த இவ்வூர் இன்று ஆயக்குடி, ஆயிக்குடி என்ற பெயர்களில் அழைக்கப்படுகிறது). அமர் சேவா சங்கத்தின் தாபகரான திரு. இராமகிருஷ்ணன் என்பவரும், அவருடன் சேர்ந்து இந்நிறுவனத்தைப் பெரிய அளவில் பணிபுரிய வைப்பதற்குக் காரணமான திரு. சங்கரராமன் என்பவரும், தங்கள் கழுத்துக்குக் கீழ் உடல் இயக்கம் இல்லாமல் சக்கர நாற்காலிகளிலேயே தங்கள் வாழ்க்கையை  நடத்தி வரும் மனிதக் கடவுளர்கள். சிறப்புக் குழந்தைகள் என்று அன்புடன் அழைக்கப்படும் உடல், மனக்குறைவு உள்ள நூற்றுக்கணக்கான சிறுவர்களும் இளைஞர்களும் தங்கும் விடுதிகள், பள்ளிகள், செயற்கை உறுப்புத் தொழிற்சாலை, மருத்துவமனை, இந்திரா காந்தி திறந்தவெளிப் பல்கலைக் கழகச் (open university) சிறப்புக் கல்வி மையம், கைத்தொழில்கள் (புத்தகம் கட்டுதல், குறிப்புப்புத்தகங்கள் தயாரித்தல், தையல்), கணினிப் பயிற்சித் தலங்கள் ஆகிய பன்முகமான வசதிகளுடன் தற்போது பெருமளவில் நடைபெற்றுவரும் இந்த சேவை மன்றம், பல தொண்டர்கள், சேவையாளர்கள் துணையுடன், இங்கு வளர்ந்து பயிற்சி பெற்ற இளைஞர்களைத் தற்சார்புள்ளவர்களாக (self-dependent, empowered) ஆக்கவும் செயல்பட்டு வருகிறது. அத்தோடு, சென்னை, பங்களூர் போன்ற இடங்களில் இவ்விளைஞர்கள் குறிப்பிட்ட துறைகளில் மேலும் பயிற்சி பெற வசதி செய்து கொடுக்கிறது.  டொராண்டோ நகரில், திரு. சங்கரராமனின் தமக்கையார் அ.சே.சங்கத்திற்கான பொருளுதவிக்காகவும், சேவையாளர்களை அனுப்புவதற்காகவும், Handicare International (https://www.amarseva.org/) என்ற ஒரு அமைப்பைத் தொடங்கி வைத்துத் தமது கணவரின் துணையுடன் அதை மிகச் சிறப்பான முறையில் நடத்தி வருகிறார். அவரது உதவியால், அண்மையில், ஆய்க்குடியிலும் சென்னையில் உள்ள பயிற்சி இல்லத்திலும் சில வாரங்கள் தங்கி அமர் சேவா சங்கத்தின் பணிகளைக் கண்கூடாகப் பார்த்துப் பயன்பெறும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. கீழ்க்காணும் பாடல் சிலநாட்களுக்கு முன் ஆய்க்குடியில் நடந்த சிறப்புக் கல்விக் கூடத் திறப்பு விழாவை ஒட்டி அமைக்கப் பட்டது. நாளை இங்கு (டொராண்டோவில்) நடைபெற இருக்கும் நிதி திரட்டும் விழா நடக்கவிருக்கிறது.      

 

<> ஆயக்குடியில் அமர சேவை <>

 

ஆயக் குடியென்னும் ஊரினிலே - ஒரு      

.. மாயம் நடப்பதைக் கண்டுவந்தேன்

நேயம் நிறைநெஞ்சம் கொண்டவர்கள் - அன்பு

.. தோய நிகழ்த்தும்ஓர் விந்தை கண்டேன்!

 

ஊனமெ னும்சொல்லே ஊனப்பட்டு - எங்கோ

.. ஓடி ஒளிந்திட்ட காட்சிகண்டேன்

வானவர் போல வனப்புடனே - நன்கு

.. வாழத் தெரிந்தோர் உலவக் கண்டேன்! 

 

எல்லா அவயவம் பெற்றிருந்தும் - ஈன

.. எண்ணத்தோர் போலன்றி அங்கம்பல

இல்லா இளைஞரும் மற்றவரும் - மன

.. ஏற்றம் ஒளிர்ந்திட வாழக் கண்டேன்!

 

எத்தனை யோவகைக் கட்டிடங்கள் - அவை

.. எல்லாம் இறைவனின் ஆலயங்கள்

சித்தத்தில் அன்பு நிறைந்தவர்கள் - அங்கு

.. சேர்ந்து புரிகின்றார் அற்புதங்கள்!

 

காசு பணத்தின் சலசலப்பை - அங்குக்

.. காணவில் லைஆனால் தேவதைகள்

பேசிச் சிரிக்கும் கலகலப்பின் - ஒலி

.. பேரலை யாகப் பரவக் கண்டேன்

 

எண்ண எண்ணஎன்றன் நெஞ்சுக்குள்ளே - எழும்

.. இன்பத்தைக் கூறிட வார்த்தையில்லை!

மண்ணில் அனைவரும் ஆயக்குடி - சேவா

.. மன்றத்தோர் போல மனம் பெறட்டும்!

 

அனந்த்  29-5-2009

      



 



Kavingar Jawaharlal

unread,
May 7, 2014, 11:14:03 PM5/7/14
to santhavasantham
அருமை அனந்த் ! உள்ளம் நெகிழ்கிறது .


--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Ramamoorthy Ramachandran

unread,
May 8, 2014, 12:41:49 AM5/8/14
to santhav...@googlegroups.com
ஆய்க்குடி கிராமம்  என்தந்தை  
      அவதரித்திட்ட  சிறுகிராமம்
 சேய்கள்  நாங்கள்  அவர்நினைவில் 
        சென்று  வருதல்  வாடிக்கை!
  தாயின்  அருமைப் பண்பெல்லாம் 
        தமக்கே பெற்ற பெருந்தகையார் 
  ஓய்வில்லாமல் உழைத்தங்கே 
         உயர்ந்த நிறுவனம் அமைத்துள்ளார்!

 அமர்சே வாசங் கம் என்னும்
       ஆலயம்  அதனுள்  தெய்வமென 
  நமக்கே  ஞானம்  அளிக்கின்றார்.
        நல்லார் இராம கிருஷ்ணன்அவர்!
   இமயம்  அவர்முன் பாதாளம் 
         என்னும்படியே  உயர்ந்தவராம்!
   தமையே ஊனம் உற்றார்க்கே 
          தந்ததெய்வம் அவராவார்! 

  உறுப்புக் குறைஓர் குறையன்று!
       உள்ளம் நெகிழ்ந்தால்  அதுபோதும்!
   சிறப்பாய்  உலகை மாற்றிடலாம் 
       தேம்பும் கண்ணீர்  துடைத்திடலாம்!
   பொறுத்தற்கரிய  பெருங்குறைகள் 
        போக்கும்  வழிகள்  கண்டிடலாம்!
    வெறுத்தே  இகழும்  குறைகளையே  
          வியப்பாய்  மாற்றி  விளங்கிடலாம்!

     யாதும் இல்லார்க் கேது குறை?
          எவரும் எதையும்  மாற்றிடலாம்!
     வேதக்   கம்பன்  அன்றுரைத்தான்,
           இன்றோர்  சங்கம்  அதைச்செய்தே 
      சாதித்திடுதல்  நாம் கண்டோம்!
            தகுந்த 'அமர்சே  வாசங்கம்'
       போதிக்கிறதிங்  கோருண்மை 
            புண்ணியம் செய்வோர் வெல்வரென்றே!

நன்றி வணக்கம் அன்புடன்  புலவர் இராமமூர்த்தி  
      
          
   
        

Akila Ramasami

unread,
May 8, 2014, 4:05:50 AM5/8/14
to santhav...@googlegroups.com
dear ananth uncle
please take me to this wonderful heaven on earth next time when you visit india.
anbudan
akila

ramaNi

unread,
May 8, 2014, 8:36:56 AM5/8/14
to santhav...@googlegroups.com
உணர்ச்சி ததும்பி நெகிழவைக்கும் பாடல்கள்.
பகிர்ந்தமைக்கு அனந்த், புலவர் இராமமூர்த்தி ஆகியோர்க்கு நன்றி.

ரமணி

VETTAI ANANTHANARAYANAN

unread,
May 8, 2014, 1:10:20 PM5/8/14
to சந்தவசந்தம்
பாடல் பற்றிக் கருத்துச் சொன்ன சவகர்லால், ரமணி, அகிலா, ராமமூர்த்தி ஆகியோருக்கு என் நன்றி. 
Akila, you need not wait for me to visit this amazing place where you will see only happy faces of children while your eyes will be filled with tears on seeing them.

அனந்த்  


Siva Siva

unread,
May 8, 2014, 6:07:45 PM5/8/14
to santhavasantham
Nice songs appreciating the wonderful folks of amar seva sangam.

VETTAI ANANTHANARAYANAN

unread,
May 13, 2014, 3:17:47 PM5/13/14
to சந்தவசந்தம்
பிறிதோர் இழையில் திரு. ரமணி ’ஆன்மீகச் செய்திக் கவிதை’ என்ற தலைப்பில் இட்டுவரும் துதிப்பாடல்களைப் படிக்கையில், 2003-ல் நான் ”நாட்காட்டித் தெய்வங்கள்” என்ற தலைப்பில் எழுதிப் பின்னர் 2009-ல் சந்தவசந்தத்தில் இட்ட சுமார் 30 பாடல்கள் நினைவுக்கு வந்தன. அவற்றை இணைப்பில் காணலாம். சந்தவசந்தச் சுட்டி:  https://groups.google.com/group/santhavasantham/msg/52078c1fa3e32b60?hl=en

அனந்த்
13-5-2014
13-5-2014 Gods in Thamiz Calendar- Combined and Expanded August 2009.doc

VETTAI ANANTHANARAYANAN

unread,
May 18, 2014, 9:31:52 PM5/18/14
to சந்தவசந்தம்
நடந்து கொண்டிருக்கும் கவியரங்கத்தில் எல்லே சுவாமிநாதன் கணினியுகம் வருவதற்கு முன்னும் பின்னும் இருக்கும் நிலைமையைக் கவிதையில் வடித்திருந்தார். அவர் எழுதிய சில வரிகள் என் பழைய கணினிக் கவிதையை நினைவுறுத்தியது (’ஹப் மாகஸீன் 2008).  அந்த உறுத்தலைத் தணிக்க அக்கவிதையை இங்கே இடுகிறேன்;

 --------------------------------------
எல்லே சுவாமியாரின் வரிகள்
(அக்காலம்)

"அ போடு " "ஆபோடு "  அன்பாய்ச்   சொல்வார்கள்
அப்பப்போ  மணிக்கட்டில் அடியும்   தருவார்கள்

சிலேட்டில்  குச்சியால் பாடங்கள் எழுதுவேன்
சிறுதூறல் வந்து சீரழிக்கும் எழுதியதை

பெனிசிலும் பேப்பரும் வந்தன பிறகு
பெனிசில் கூர்தீட்டிக் கைவிரல் தேய்ந்தது

எழுதும் தாளின் குணத்தைப் பொறுத்து
எழுத்து மங்கியும் மறைந்தும் இருக்கும்

இங்க்பேனா வந்ததும் எழுத்து மின்னியது
இங்கும் அங்கும் கைவிரல்  கறையானது
-------------------------

<> கணினித் தெய்வம் <>

 

அனந்த் (கனடா)

 

 

கையிலே மையின் கறைகள்

.. கழுவினும் மாய்ந்தி டாமல்

பையிலும் பையி லுள்ள

.. பணத்திலும் வண்ணம் தீட்ட

ஐயகோ! கொடுமை என்றே

.. அலறிநான் நின்ற போது

பையவே வந்த தெய்வம்

.. பரிவுள கணினித் தெய்வம்!

 

எழுதிய தாளை வைத்த

..இடத்தினை மறந்து தேடி

அழுகிய குப்பை யோடு

..அதனைநான் கண்டு விம்மி

அழுதஅந் நிலையை மாற்றி

.. அடைக்கலம் தந்த தெய்வம்  

தொழுதுநான் தினமும் வாயால்

.. துதித்திடும் கணினித் தெய்வம்!

 

 

நெஞ்சிலே கருத்தாம் வித்து

.. நிலைத்தபின் கவிதை, கோழிக்

குஞ்சுபோல் தலையைக் காட்டும்

.. கோலமிவ் வுலகோர் காண

அஞ்சலில் அனுப்பி வைக்க

.. அருளுமோர் தெய்வம் அந்த

விஞ்சையர் தமக்கும் கிட்டா

.. விந்தைஎம் கணினித் தெய்வம்!

 

யாஹுவா இல்லை இன்று

.. யாவரும் வியந்து போற்றி 

,ஹுஎன் றேத்தும் அந்த

.. அதிசயக் கூகி ளோநாம்

வேகமாய் வேண்டும் செய்தி

.. மின்னலாய்க் கொண்டு சேர்த்து

வாகைநாம் சூடு மாறு

.. வைத்திடும் கணினித் தெய்வம்!

 

அமெரிக்க நாட்டில் வாழும்

.. அழகிரி சாமி, முத்து

சுமத்திராத் தீவில் உள்ள

.. சுப்புணி போன்றோர் இன்று

தமக்குள திறனை இந்தத்

.. தாரணி அறியச் செய்யும்

அமைப்பினை அளிக்கும் தெய்வம்

.. அரும்பெரும் கணினித் தெய்வம்! 

 

அனைத்துல கெங்கு முள்ள

..ஆயிரம் தெய்வம் எல்லாம்

நினைத்ததைக் கொடுக்கக் கால

.. நேரமும் பார்த்தி ருக்கும்

மனத்திலே எண்ணம் தோன்றி

.. மறையுமுன் ஈந்து மண்ணில்

எனைத்தினம் வாழ வைக்கும்

.. இறையெனும் கணினித் தெய்வம்!

 

இணையமாம் வானில் நம்மை

.. ஏற்றிடும் விந்தைத் தெய்வம்

அணையெதும் இன்றி வாரி

.. அளித்திடும் அன்புத் தெய்வம்

மணம்செய உதவும் தெய்வம்

.. வரமெலாம் ஈயும் தெய்வம்

இணையிலாக் கணினித் தெய்வம்

.. எம்முடைத் தெய்வம், தெய்வம்!  

 

ஹப் மாகஸீனில் ‘மரபில் நகைச்சுவை’ என்னும் தொடரில் இட்ட பாடல்களுக்கு இலக்கணக் குறிப்பும் தரப்பட்டது. இப்பாடலுக்கான:


இலக்கணக் குறிப்பு: இவை ஆறுசீர்கள் கொண்ட ஆசிரிய விருத்தப் பாவினத்தைச் சேர்ந்தவை. "கருவிளம், மா, மா, விளம், மா, மா" என்ற வாய்பாடு (சீர்களின் அமைப்பு) கொண்டவை. நான்கு அடிகளிலும் முதல்சீர் மட்டும் ஒரே மாதிரியாக (இங்கு, கருவிளம் ஆக) இருக்கவேண்டும். மற்றச் சீர்களில் இறுதி அசை மட்டும் ஒத்திருந்தால் போதும். இவ்வகைப் பாடல்களை முன்பு இங்கே பார்த்திருக்கிறோம்.

 

இலக்கணமல்லாத குறிப்பு: இறைவனை வழிபட உதவும் கருவியையே தெய்வமாக வழிபடும் விதத்தில் அமைந்த இப்பாடல்களில் சர்வ வல்லமை வாய்ந்த இணையமே இறைவன்/இறைவள். அவனை/அவளை அடையத் துணைபுரியும் கருவி கணினி என்பது கருத்து.

 

<><><><><><><> 




2013-10-02 21:33 GMT-04:00 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>:
”திண்ணை” மின்னிதழ், ஜனவரி 19, 2002 (”Y2K” bubble burst காலத்தில் எழுதியது)

                <> அக்கரைப் பச்சை <>
                     அனந்த்

இந்திய இளைஞன்:

            எல்லாமே இந்நாட்டில் மோசம்- எனக்(கு)

            ... என்றுதான் கிட்டுமோ அமெரிக்க வாசம்?     (எல்லாமே..)

 

            பள்ளிசெல் லும்அந்த நாளாய் - இந்தப்

            ... பாழும்  நினைப்பெனைக் கொட்டுது தேளாய்

            மெள்ள வளர்ந்திட்டேன் ஆளாய்- இந்த

            ... வேதனை யின்னும்தா ளேனிது கேளாய்:               

 



ramaNi

unread,
May 18, 2014, 10:00:51 PM5/18/14
to santhav...@googlegroups.com
உலகெலாம் பரந்த வலையை
. உவந்திடும் கணிணி யின்று
அலகிலா ஆற்றல் கொண்டே
. தகவலைச் சேர்க்கும் தெளிவில்
உலகினை யாள்வோர் கையில்
. உழற்றுதற் குரிய கருவாய்
புலனெனும் பெயரால் மக்கள்
. சுதந்திரம் பறிக்கப் போமே!

--ரமணி

*****

Kaviyogi Vedham

unread,
May 19, 2014, 12:08:12 AM5/19/14
to santhavasantham
உண்மையிலேயே அநந்த்! ரொம்ப அழகுடனும் நகை.. பொங்கவும் அமைந்திருந்தது உங்க கவிதை. நிச்சயம் கணினி தெய்வம் தான். இல்லைஎனில் என் போன்றோர் வாழ்க்கையை
 வெறுத்து ப்போய்இமயமலைச்சாரலில் பனி நீரைக்குடித்து வாழ்ந்திருப்போம்.
 யோகியார்

வாழ்க அனைவரும் வளமுடனே 
என் குருஜி லஹரி பாபாஜி
ஆசியினால்.
கவியோகி வேதம்(kaviyogi vedham)-
PL. visit my blog(for my poems etc)at http;//kaviyogi-vedham.blogspot.com/
kaviyogi vedham(yogiyaar)தலைவர்..
Founder, Sree Laharibabaji yogasram,
2/682, 10th cross St,...Renga reddy garden,
Neelankarai, Chennai-600115--செல் எண் 95000-88528
 



Subbaier Ramasami

unread,
May 19, 2014, 8:36:59 AM5/19/14
to சந்தவசந்தம்
கணினி

கைக்குக் கிடைத்த கனி

இலந்தை

Chandar Subramanian

unread,
May 19, 2014, 9:44:13 AM5/19/14
to santhavasantham
கலியுகத்துக் கற்பகத்தைக் கண்முன்னர் நானென் 
எலிநகர்த்திக் காண்கின்றேன் இங்கே - புலியெனவாய்ப்
பைக்குள் பதுங்கிப்பின் பாய்கின்ற லேப்டாப்பென்
கைக்குக் கிடைத்த கனி




2014-05-19 18:06 GMT+05:30 Subbaier Ramasami <elan...@gmail.com>:
கணினி

கைக்குக் கிடைத்த கனி

இலந்தை



--
அன்புடன்
சந்தர் சுப்ரமணியன்
www.MovingMoon.com

Ramamoorthy Ramachandran

unread,
May 20, 2014, 5:38:41 AM5/20/14
to santhav...@googlegroups.com
கைபேசிக்  குள்ளே  கனஜோராய் வை,:,பையின் 
மெய்யுலகம்  மெல்ல  விரியுமே!- பொய் பேச 
அஞ்சவே வைக்கும் அருமைக் கணினியுகம் 
விஞ்சியே  வெல்லும் மினும்!
நன்றி நம்பிக்கையுடன் புலவர் இராமமூர்த்தி 


--

VETTAI ANANTHANARAYANAN

unread,
May 23, 2014, 11:06:36 AM5/23/14
to சந்தவசந்தம்

திருவிருக்குறள் பாவினம் பற்றிய பிறிதொரு இழையில் வஞ்சித்துறை அந்தாதி பற்றிப் பசுபதி குறித்திருந்தார். அவ்வகையில் முன்பு இட்ட (பிரதோஷப்) பாடல் ஒன்று: 

திருச்சிற்றம்பலம்

<> எல்லாம் ஆனவன் <>

 

விண்ணூரும் விடையான்என்

எண்ணூரும் இறையோன்முக்

கண்ணாரும் கடவுள்நற்

பண்ணாரும் பதியானே      1

       

பதியாவான் பத்தர்க்குக்

கதியாவான் கருணைபாய்

நதியாவான் நல்லோர்வாய்த்

துதியாவான் தூயவனே      2

 

தூயவனாம் தொழுவோர்க்குத்

தாயவனாம் சாருமுளம்

மேயவனாம் மறையறியா

மாயவனாம் வரையோனே   3

 

வரைதனை அசைத்தோனைத்

தரைமிசை அடர்த்தோனோர்

நரைவிடை நயந்தோன்பூ

விரைகமழ் கழலோனே      4

 

கழலடி துணையென்று

விழுபவர் துயர்தீர்ப்போன்

அழலொரு விழிகொண்ட

பழையதொர் பரமாமே.      5

 

பரந்ததொர் சடையான்நல்

உரந்திகழ் விடையான்மான்

கரந்தனில் உடையான்இல்

இரந்துணும் இறையாமே     6

 

இறைஞ்சிடும் அடியார்க்குக்

குறைந்திடா தருள்வோன்உள்

மறைந்தென துணர்வாக

நிறைந்துள குருநாதன்.      7

 

நாதமே உருவானோன்

வேதமுட் கருவானோன்

காதலோ டவன்நாமம்

ஓதுவோர் வினைதீர்ப்பான்    8

 

தீர்த்தமும் மதிபாதி

சேர்த்தமா முடியோன்ஓர்

வார்த்தையும் உரையாத

மூர்த்தியாம் குருவாவான்    9

 

ஆவினைந் துகந்தேற்பான்

காவென அடியார்கள்

கூவிடின் வருவானென்

பாவினுள் உறைவோனே.    10

 

(பாடல் 1. எண் = எண்ணம், மனம்; ஆர்தல்= அடைதல், பெறுதல், அனுபவித்தல், அணிதல். பாடல் 4. விரை = மணம், மலர், கலவைச் சாந்து)

யாப்பு: வஞ்சித்துறை அந்தாதி.

... அனந்த் 6-5-2013

Kaviyogi Vedham

unread,
May 23, 2014, 11:21:35 AM5/23/14
to santhavasantham
அற்புதம். மிக அழகு..,
 வாழ்க,
 யோகியார்

வாழ்க அனைவரும் வளமுடனே 
என் குருஜி லஹரி பாபாஜி
ஆசியினால்.
கவியோகி வேதம்(kaviyogi vedham)-
PL. visit my blog(for my poems etc)at http;//kaviyogi-vedham.blogspot.com/
kaviyogi vedham(yogiyaar)தலைவர்..
Founder, Sree Laharibabaji yogasram,
2/682, 10th cross St,...Renga reddy garden,
Neelankarai, Chennai-600115--செல் எண் 95000-88528
 



--

VETTAI ANANTHANARAYANAN

unread,
May 29, 2014, 8:33:18 PM5/29/14
to சந்தவசந்தம்
கவியரங்கம்-31, 2010-ல், இலந்தை இருபாவகை கொண்ட பாவினத்தை (’பொருநை வெள்ளம்’ நூலில் இட்டது) நினைவு படுத்தினார்.

இரண்டு வகையான பாவகைகளை ஒரு கவிதையில் மாறிமாறிப் பயன்படுத்தும் உத்தியிது.இந்தப்பாடலில் எழுசீர்க் கண்ணி பல்லவிபோல் பயன்பட்டிருக்கிறது. அறுசீர்க் கண்ணி  பலநிலைகளைப் படம்பிடிக்கிறது. ஒரே பல்லவி மாதிரி அமைப்பதைவிட ஒருவகைப்பாடல் ஒருநிலையைக் கூற இன்னொருவகை வேறொரு நிலையைக் கூற இரண்டும் ஒன்றுக்கொன்று தொடர்பு பெற்றுச் செல்வது வேறொருவகை. அந்த வகையை பொருநை வெள்ளம் தொகுதியில் காலச் சக்கரம் கவிதையில் காணலாம். முதல் பாவகை காலை தொடங்கி மாலைவரை இயற்கைவர்ணனையைச் சொல்லும் இன்னொருபாவகை மனித வாழ்வில் குழந்தைப்பருவம் வரை இறப்புவரை சொல்லும். இரண்டும் ஒன்றுக்கொன்று பொருந்திவரும்







அதைத் தொடர்ந்து அப்போது நான் இட்ட இடுகை கீழே:

இலந்தையாரின் இருபாவகை கொண்ட காலச்சக்கரத்தைப் படித்து மகிழ்ந்தேன். உடன் மனத்தில் அவரைப் பற்றிய எண்ணங்கள் தலையெடுக்க இருபாவகைப் பாடல் ஒன்று உதித்தது:

பொதிகைத் தென்றல் சிலிர்க்கிறது - சிறு
..புள்ளின் ஓடு திறக்கிறது
மெதுவாய் உணவைத் தாய்கொடுக்க -அது
.. மெல்ல வாயை விரிக்கிறது

    கவிதைத் தாயின் சிசுவொன்று
    .. கயத்தாற் றருகே பிறக்கிறது
    செவியில் தமிழின் ஒலிகேட்டுச்
    .. செல்லச் சிரிப்புச் சிரிக்கிறது

சிறகை விரித்துப் பார்க்கிறது -உயர்
.. செம்மை வானம் அழைக்கிறது
பறக்கத் துடிக்கும் போதினிலே -அதன்
.. பார்வை கூர்மை ஆகிறது

    மழலைப் பருவம் மறைந்துகவி
    .. வரையும் ஆர்வம் தெரிகிறது
    முழுமை அடையும் தருணந்தான்     
    .. முருகன் அருளால் வருகிறது

தாயின் தயவு கிடைக்கிறது - விண்ணைத்
.. தாவும் திறமை சிறக்கிறது
ஓயா ததனில் சிறைவிரித்து - பேர்
.. உவகைக் கடலில் மிதக்கிறது

    ஆசான் மடியில் தமிழமுதம்
    .. அள்ளிப் பருகிக் களிக்கிறது
    வாசா லகமும் வளர்கிறது
    .. மாயா சாலம் புரிகிறது

உயர உயரப் பறக்கிறது - நிலவு
..உள்ளே நுழைந்து பார்க்கிறது
அயர்வே அறியா(து) அகிலமெலாம் - தன்
..ஆட்சிக் கடியில் கொணர்கிறது 

    பொருநை வெள்ளம் பெருகிடுது
    .. பொழிலில் சந்தம் பொலிகிறது
    அருமைக் கவிதை உலகினிலே
    .. அகிலத் தலைமை வகிக்கிறது

அனந்த்
4-4-2010

மடைதிறந்த வெள்ளந்தான். மளமளவென்று எழுதித் தள்ளிவிட்டீர்களே!
மிகச் சிறப்பு.
 
இலந்தை

==============================================

Kavingar Jawaharlal

unread,
May 29, 2014, 10:47:45 PM5/29/14
to santhavasantham
அருமையான கவிதை விருந்து.


--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Swaminathan Sankaran

unread,
May 29, 2014, 11:29:51 PM5/29/14
to santhav...@googlegroups.com
எல்லாக் கவிதைகளுமே அருமை!

சங்கரன்

VETTAI ANANTHANARAYANAN

unread,
May 30, 2014, 7:28:44 PM5/30/14
to சந்தவசந்தம்
’கண்டதுண்டம்’ பகுதியில், கலைமாமணி கொத்தமங்கலம் சுப்பு பற்றிப் பசுபதி இட்டிருந்த அருமையான கட்டுரையைப்  படித்த போது, சுப்பு அவர்களின் நுற்றாண்டு நிறைவை ஒட்டி 2009-ல் டொராண்டோ நகரில் நடந்த ”மாகாலிட்’ தமிழரங்கத்தில் நான் படித்த பாடல் ஒன்று நினைவுக்கு வந்தது:

<> ஒப்பில்லாத சுப்பு <>
 
கொத்தமங் கலத்துச் சுப்பு - தமிழ்
கொஞ்சும் அவர்பாட்டிற்(கு) ஈடுண்டோ செப்பு! (கொத்தமங்கலத்து)
 
எத்தனை எத்தனை பாட்டு - அவை
.. எல்லாமே பாலோடு தேன்சேர்ந்த கூட்டு
குத்தால வெள்ளம்போல் ஓட்டம் - அதில்
.. குளித்துக் களிக்கும்நம் நெஞ்சில்கொண் டாட்டம்
 
ஏரு பிடிப்பவன் வீட்டில் - உள்ள
.. இன்பமும் துன்பமும் காட்டஓர் பாட்டு
போருக்குச் சென்றவர் நாட்டைக் - காக்கப்
.. போனபின் வீடு திரும்பஓர் பாட்டு
 
காந்தி மகான் வில்லுப் பாட்டு - தேசக்
.. காதலை மாந்தர் மனத்தினில் ஊட்டும்
சாந்தி உலகினில் நாட்ட - நல்ல
.. சங்கதி சொல்லி வழியையும் காட்டும்
 
பாட்டியும் பாட்டனும் கூட - அவர்
.. பாட்டுச் சுவைதூண்டும் எழுந்துநின் றாட
நாட்டு நடப்பினைப் பேசும் - பாட்டில்
.. நாட்டுப் புறவாசம் நன்றாக வீசும் 
 
சீவாளிச் சத்தத்தில் நாட்டம் - என்று
.. தில்லானா மோகனாம் பாள்கதை காட்டும்
சாவா இலக்கியக் கூடம் - அவர்
.. சாதனை யாவும் சரித்திரப் பாடம்  
 
ஆறடி மேனிக் கவிஞர் - கலை
.. யாவிலும் தேர்ந்து சிறந்த அறிஞர்
நீறு துலங்கிடும் நெற்றி - அது
.. நித்தம் தரும்தொழில் யாவிலும் வெற்றி 
 
நெஞ்சத்தில் வேலனின் பக்தி - வாழ்வில்
.. நேர்மை தவறாமை அவரது சக்தி
அஞ்சலி செய்திட வாரும் - நூறு
.. ஆண்டு நிறைவில் அவர்புகழ் கூறும் (கொத்தமங்கலத்து) 
 
                                                                                ...அனந்த், நவம்பர் 2009

N. Ganesan

unread,
May 31, 2014, 4:09:56 PM5/31/14
to santhav...@googlegroups.com


On Monday, May 19, 2014 6:44:13 AM UTC-7, Chandar Subramanian wrote:
கலியுகத்துக் கற்பகத்தைக் கண்முன்னர் நானென் 
எலிநகர்த்திக் காண்கின்றேன் இங்கே - புலியெனவாய்ப்
பைக்குள் பதுங்கிப்பின் பாய்கின்ற லேப்டாப்பென்
கைக்குக் கிடைத்த கனி



1998-9 வாக்கில் தமிழ் இணையத்தின்
பயனர் ஆனபோது சொன்ன வெண்பா:

 காலத்திற்கேற்ற ஊர்தி
----------------------------

ஒருநாளென் பெற்றோர் உவக்க வலம்வந்து
அருமாங் கனியும் அடைந்தேன் - முருகன்
அணிமயில் வேண்டாம் அகிலம் தொடலக்
கணியெலி இன்றுண்டு காண்!

                                                  ~ கணேசன் :-)

VETTAI ANANTHANARAYANAN

unread,
Aug 31, 2014, 9:55:10 PM8/31/14
to சந்தவசந்தம்

வேறெதையோ தேடிக்கொண்டிருந்தபோது,  நம் கவியோகியாரின் பழைய மடல் ஒன்று கண்ணில் தென்பட்டது. அதில், கணிணி-கவிதை தொடர்பு பற்றிய குறிப்பைக் கண்டேன்: 

https://groups.google.com/forum/#!topic/santhavasantham/-tZ8I0oq-Ms


இதில் குறிப்பிடும் என் பேச்சின் ஒலிப்பதிவைக் கண்டுபிடிக்க இயலவில்லை.


அனந்த் 


2014-05-19 0:08 GMT-04:00 Kaviyogi Vedham <kaviyog...@gmail.com>:

VETTAI ANANTHANARAYANAN

unread,
Mar 29, 2015, 11:21:14 AM3/29/15
to சந்தவசந்தம்
<> எங்கே நிம்மதி, எங்கே நிம்மதி? அங்கே எனக்கோர் இடம்வேண்டும்! <>

 2011-ல், திருவனந்தபுரத்தில் ஸ்ரீ அனந்தபத்மநாப சுவாமி கோவிலில் மறைந்திருந்த தங்கக் குவியலைக் கண்டுபிடித்ததன் விளைவுகளை நினைத்து எழுதிய கவிதை கீழே:
 
கத்தும் கடலின் ஒலிதுயிலைக்
.. கலைத்தல் கண்டு காலமெல்லாம்
… கவலையின்றிக் கழிப்பதற்குக் 
…. கார்வண்  ணத்தான் வைகுந்தம்

 ஒத்து வாரா தெனவுணர்ந்த
.. உடனே உலகின் ஓர்முனையில் 
… ஒதுங்கி யிருக்கும் அனந்தபுரம்
…. உகந்த தென்றே தேர்ந்தெடுத்து

 மொத்த மாகப் படுக்கையுடன்
.. முடுகி வந்து பக்தர்பலர்
… முன்னே சொகுசாய்த் தூங்குகையில்
…. மூடி மறைத்து வைத்திருந்த

 சொத்தைக் காட்ட வேண்டுமென்று
.. தோன்றி அவற்றைத் திறந்துவிட,
… தூக்க மெல்லாம் தொலைந்ததம்மா!
…. தொல்லை அவனைச் சூழ்ந்ததம்மா! 

அனந்த் 19-7-2011

Kavingar Jawaharlal

unread,
Apr 2, 2015, 5:18:26 AM4/2/15
to santhavasantham
அருமை அனந்த்!

--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

VETTAI ANANTHANARAYANAN

unread,
Apr 2, 2015, 3:52:53 PM4/2/15
to சந்தவசந்தம்
பின்னூட்டத்திற்கு நன்றி.

அனந்த்

Subbaier Ramasami

unread,
Apr 2, 2015, 9:22:18 PM4/2/15
to சந்தவசந்தம்
நல்ல சிந்தனை

Reply all
Reply to author
Forward
0 new messages