ஆதிசங்கரர் பின்பற்றிய சந்தத்தைத் தான் பின்பற்றி இருக்கிறேன் ஐயா.
விருத்தம்:
*ஐந்தினை அடக்கும் ஐந்தெழுத்தோனே*
அம்மையும் அப்பனுமாய் ஆகி நின்றோனே
ஈசனே !! தேசனே!! கயிலை வாசனே!!
உன்னை நித்தமும் போற்றும் தமிழ்மொழியின் நேசனே!!
அய்யனே !! துய்யனே !! ஒப்பிலா மெய்யனே!!
எப்பொழுதும் எம்மைக் காத்தருள்வாயே !!
பாடல் :
#1
*பிரம்மன் முராரி சுரர்* தொழும் லிங்கம்
மாசறு நல்லணி விளங்கிடும் லிங்கம்
பிறவியின் வேதனை அழித்திடும் லிங்கம்
வாழிய வாழி சதாசிவ லிங்கம்
#2
தெய்வ முனிவரர் தொழுதிடும் லிங்கம்
காமம் எரித்தெமை அணைத்திடும் லிங்கம்
இராவணன் ஆணவம் நீக்கிடும் லிங்கம்
வாழிய வாழி சதாசிவ லிங்கம்
#3
நறுமணப் பொருளினைப் பூசிடும் லிங்கம்
அறிவெனும் ஜோதியை ஏற்றிடும் லிங்கம்
சித்தர் சுராசுரர் போற்றிடும் லிங்கம்
வாழிய வாழி சதாசிவ லிங்கம்
#4
தங்க மணித்திரள் சூடிடும் லிங்கம்
நாகராஜனை ஏந்திடும் லிங்கம்
தக்கனின் வேள்வியை தகர்த்திடும் லிங்கம்
வாழிய வாழி சதாசிவ லிங்கம்
#5
குங்குமம் சந்தனம் புனைந்திடும் லிங்கம்
தாமரை மாலைகள் பொலிந்திடும் லிங்கம்
தீவினை யாவையும் களைந்திடும் லிங்கம்
வாழிய வாழி சதாசிவ லிங்கம்
#6
தேவகணங்கள் துதித்திடும் லிங்கம்
பக்தி பாவத்துடன் பணிந்திடும் லிங்கம்
ஆயிரம் சூரியன் சுடர்ந்திடும் லிங்கம்
வாழிய வாழி சதாசிவ லிங்கம்
#7
எட்டு மலர்மடல் சூழ்ந்திடும் லிங்கம்
உலகம் அனைத்தும் படைத்திடும் லிங்கம்
எட்டு தரித்திரம் ஒழித்திடும் லிங்கம்
வாழிய வாழி சதாசிவ லிங்கம்
#8
தேவரும் குருவும் வணங்கிடும் லிங்கம்
தேவ மலர்கொண்டு வழிபடும் லிங்கம்
பரத்தினும் பரமாய் மிளிர்ந்திடும் லிங்கம்
வாழிய வாழி சதாசிவ லிங்கம்
பலஸ்ருதி ( விருத்தம்) :
சிவன் சன்னதியில் லிங்காஷ்டகம் ஜெபித்தால்
சிவபதம் எய்தி, பேரின்பம் பெறலாம்