லிங்காஷ்டகம் - என் மொழிபெயர்ப்பில்

145 views
Skip to first unread message

Siva Siva

unread,
Dec 24, 2015, 6:52:59 PM12/24/15
to santhavasantham

Please highlight any errors or other potential defects.

இவ்வமைப்பைக் கலிவிருத்தம் என்று கருதலாமா? அன்றேல், மூன்றடிமேல் வைப்பு என்று கொள்ளலாமா?

2015-12-24

லிங்காஷ்டகம் - என் மொழிபெயர்ப்பில்

--------------------------------------------

("தானன தானன தானன தானா" என்ற சந்தம்.

முதற்சீர் தனதன என்றும் வரலாம்)

(ब्रह्ममुरारिसुरार्चितलिङ्गम् - ப்ரஹ்மமுராரிசுரார்சிதலிங்கம்)

1)

நான்முகன் நாரணன் வான்தொழும் ஈசன்

ஊனமி லாஒளி யாய்த்திகழ் ஈசன்

வான்பிணி தீர்த்தருள் நல்கிடும் ஈசன்

.. நான்பணி கின்றதும் அப்பணி ஈசன்

வான் - தேவர்;

ஊனம் - குறைவு; குற்றம்;

வான்பிணி - பெரும்பிணி - பிறவிப்பிணி;

2)

பன்முனி வான்அடி வாழ்த்திடும் ஈசன்

மன்மத னைப்பொடி ஆக்கிய ஈசன்

முன்னவு ணன்கரு வம்தகர் ஈசன்

.. நான்பணி கின்றதும் அப்பணி ஈசன்

பன்முனி வான் - பல் முனி வான் - பல முனிவர்களும் தேவரும்;

முன் அவுணன் கருவம் தகர் - முன்னம் அரக்கனான இராவணனுடைய கர்வத்தை அழித்த;

நான் பணிகின்றதும் அப்பு அணி ஈசன் - நான் வணங்குவதும் கங்காதரனாகிய ஈசனையே; (அப்பு - நீர்);

3)

சந்தனம் மாமல ரால்தொழும் ஈசன்

சிந்தைம யக்கைஅ றுத்தருள் ஈசன்

அந்தரர் சித்தரெ லாம்பணி ஈசன்

.. நான்பணி கின்றதும் அப்பணி ஈசன்

சிந்தை மயக்கை அறுத்து அருள் - மனமயக்கத்தைத் தீர்த்துத் தெளிவை அளித்து அருளும்;

அந்தரர் - தேவர்கள்;

4)

பொன்மணி மார்புவி ளங்கிடும் ஈசன்

பன்னக நாணைஅ ரைக்கணி ஈசன்

முன்னொரு வேள்வித கர்த்தருள் ஈசன்

.. நான்பணி கின்றதும் அப்பணி ஈசன்

பொன் மணி மார்பு விளங்கிடும் - 1) பொன்னும் மணியும் மார்பில் விளங்குகின்ற; 2) பொன் போல் அழகிய மார்பு விளங்குகின்ற;

பன்னக நாணை அ\ரைக்கு அணி - பாம்பை அரைநாணாக அணிகின்ற; (பன்னகம் - பாம்பு);

முன் ஒரு வேள்வி தகர்த்து அருள் - முன்னர் (தக்கன் செய்த) ஒரு யாகத்தை அழித்த;

5)

குங்கும சந்தனம் ஏற்றருள் ஈசன்

பங்கய மாலைஉ கந்தருள் ஈசன்

தங்கிய முன்வினை சாய்த்தருள் ஈசன்

.. நான்பணி கின்றதும் அப்பணி ஈசன்

பங்கய மாலை உகந்து அருள் - தாமரைமாலையை விரும்பி ஏற்கின்ற;

தங்கிய முன்வினை - சஞ்சிதம்; (தங்குதல் - to remain; to exist);

சாய்த்து அருள் - அழித்து அருள்கின்ற; (சாய்த்தல் - கெடுத்தல் - To destroy);

6)

பல்லிமை யோர்கணம் முன்பணி ஈசன்

நல்லுளம் அன்பொடு நாடிடும் ஈசன்

எல்லியொர் கோடிநி கர்த்தொளிர் ஈசன்

.. நான்பணி கின்றதும் அப்பணி ஈசன்

பல் இமையோர் கணம் முன் பணி - பல தேவகூட்டங்கள் வணங்குகின்ற; ("பல தேவர்களும் பூதகணங்களும் வணங்குகின்ற" என்றும் பொருள்கொள்ளலாம்);

நல் உளம் அன்பொடு நாடிடும் - நல்ல உள்ளம் உடையோர் பக்தியோடு போற்றுகின்ற;

எல்லி ஒர் கோடி நிகர்த்து ஒளிர் - ஒரு கோடி சூரியர்கள் போல் ஒளிவீசுகின்ற; (எல்லி - சூரியன்);

7)

எண்மல ரால்தொழு தேத்திடும் ஈசன்

எண்ணிலி அண்டமெ லாம்படை ஈசன்

மண்ணினர் எண்கலி தீர்த்தருள் ஈசன்

.. நான்பணி கின்றதும் அப்பணி ஈசன்

எண்மலரால் தொழுது ஏத்திடும் - அஷ்டபுஷ்பங்களால் வழிபாடு செய்யப்பெறுகின்ற;

(அகமலர்கள் எட்டு, புறமலர்கள் எட்டு. அப்பர் தேவாரம் - 5.54.1 - "எட்டு நாண்மலர் கொண்டவன் சேவடி");

எண்ணிலி அண்டம் எலாம் படை - எண்ணற்ற அண்டசராசரங்களைப் படைக்கின்ற;

மண்ணினர் எண்கலி தீர்த்து அருள் - மனிதர்களுடைய எட்டு வகையான தரித்திரங்களைத் தீர்த்து அருள்கின்ற; (கலி - தரித்திரம்);

8)

வானவ ருங்குரு வுந்தொழும் ஈசன்

வானல ரால்அடி வாழ்த்திடும் ஈசன்

மானமி லங்கிய வான்பொருள் ஈசன்

.. நான்பணி கின்றதும் அப்பணி ஈசன்

வானவரும் குருவும் தொழும் - தேவர்களும் தேவகுருவும் தொழுகின்ற;

வான் அலரால் அடி வாழ்த்திடும் - தேவலோகத்துப் புஷ்பங்களால் திருவடியைப் போற்றுகின்ற;

மானம் இலங்கிய வான் பொருள் - மேன்மை விளங்கிய பரம்பொருள்; (மானம் - உயர்வு; பெருமை); (வான் பொருள் - எட்டாத பொருள்) (திருவாசகம் - திருச்சாழல் - 10 - "தானந்தம் இல்லான் ... வானுந்து தேவர்கட்கோர் வான்பொருள்காண் சாழலோ");

அன்பொடு,

வி. சுப்பிரமணியன்

--
"மதிசூடி துதிபாடி" blog: http://madhisudi.blogspot.com/

Subbaraman NV

unread,
Dec 24, 2015, 6:59:49 PM12/24/15
to santhav...@googlegroups.com
என்னைப்போன்ற பாமரர்களுக்கு
மொழிபெயர்ப்பு
மிக அருமை, மிக எளிமை,மிக அழகு! வாழ்த்துகள்!
என் வி சுப்பராமன்

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--
N V Subbaraman,
Editor, Young Poet,
12 / 1045 Jeevan Bhima Nagar,
Chennai - 600101

Visit my blog: http://nvsr.wordpress.com
Facebok:  http://facebook.com/subbaraman.nagapatnamviswanathan

Ravi Subramanian

unread,
Dec 24, 2015, 9:07:45 PM12/24/15
to சந்தவசந்தம்

Super Sir!

--

Vis Gop

unread,
Dec 25, 2015, 12:44:15 AM12/25/15
to santhav...@googlegroups.com
குறையா? சிவசிவா! நினைத்துப் பார்க்க முடியுமா? அற்புதம்!

சிந்தனைக்கு:
ஈசாஷ்டகமாகத் தெரிகிறது. 'லிங்க' வடிவம் எங்கும் குறிக்கப் படவில்லை. தமிழர்கள் மனத்தில் லிங்கம் என்றால் ஈசனே தோன்றுவதால் ஈசன் லிங்கமாக மாற்றப் படலாம். 'நான் பணிகின்றதும் அச்சிவ லிங்கம்' என்றிருந்தால் லிங்காஷ்டகம் படித்த உணர்வே வரும் என்று நினைக்கிறேன்.
நல்வாழ்த்துக்களுடன்,
கோபால்.

2015-12-25 5:22 GMT+05:30 Siva Siva <naya...@gmail.com>:

--

Ashok Subramaniam

unread,
Dec 25, 2015, 1:12:23 AM12/25/15
to santhav...@googlegroups.com
சிவ சிவ! எளிமை, இனிமை, புதுமை! ஆக மொத்தமே அருமை! கோபால் சொல்வதுபோல் ஈசன் என்பதை லிங்கமாக மாற்றி, ஈற்றடியையும் கோபால் சொல்வதுபோல் மாற்றிவிட்டால், இது லிங்காஷ்டகமேதான்.. நான் பாடிப்பார்த்தேன்.. மனதுக்கு இதம், பாடுவதற்கு சுகம்!

Hari Krishnan

unread,
Dec 25, 2015, 1:24:57 AM12/25/15
to santhavasantham

2015-12-25 11:14 GMT+05:30 Vis Gop <vis...@gmail.com>:
குறையா? சிவசிவா! நினைத்துப் பார்க்க முடியுமா? அற்புதம்!

சிந்தனைக்கு:
ஈசாஷ்டகமாகத் தெரிகிறது. 'லிங்க' வடிவம் எங்கும் குறிக்கப் படவில்லை. தமிழர்கள் மனத்தில் லிங்கம் என்றால் ஈசனே தோன்றுவதால் ஈசன் லிங்கமாக மாற்றப் படலாம். 'நான் பணிகின்றதும் அச்சிவ லிங்கம்' என்றிருந்தால் லிங்காஷ்டகம் படித்த உணர்வே வரும் என்று நினைக்கிறேன்.
நல்வாழ்த்துக்களுடன்,
கோபால்.

நான் சொல்ல நினைத்ததுவும் இதுவே.  லிங்காஷ்டகம் என்றால் லிங்கம் கீவேர்ட்.

நான்பணி வதுவும் அதேசிவலிங்கம்--அங்கே ஒரு நெடில் வேண்டும் என்பதற்காகவும் ஓசைக்காகவும்.

--
அன்புடன்,
ஹரிகி.

நட்பும் சுற்றமும் நலமே என்பதை
மட்டும் கேட்க வாணி அருள்கவே.
God bless all of us.  May we hear from everyone in our life that they are good and prosperous. 

Siva Siva

unread,
Dec 25, 2015, 5:03:58 AM12/25/15
to santhavasantham
Thanks for all the feedback received so far.

Here is the updated version with 'Lingam' !
Even though conventional Tamil rules require இலிங்கம், I have used it as லிங்கம்.
I look forward to further feedback.

2015-12-25

Lingashtakam - My Tamil translation

லிங்காஷ்டகம் - என் மொழிபெயர்ப்பில் - Version-2

--------------------------------------------

("தானன தானன தானன தானா" என்ற சந்தம்.

முதற்சீர் தனதன என்றும் வரலாம்)

(ब्रह्ममुरारिसुरार्चितलिङ्गम् - ப்ரஹ்மமுராரிசுரார்சிதலிங்கம்)

1)

நான்முகன் நாரணன் வான்தொழு லிங்கம்

ஊனமி லாஒளி யாய்த்திகழ் லிங்கம்

வான்பிணி தீர்த்தருள் நல்கிடு லிங்கம்

.. நாநித மேத்தும தேசிவ லிங்கம்

வான் - தேவர்;

ஊனம் - குறைவு; குற்றம்;

வான்பிணி - பெரும்பிணி - பிறவிப்பிணி;

நாநித மேத்தும தேசிவ லிங்கம் - (என்) நா நிதம் ஏத்தும் அதே சிவ லிங்கம் / நாம் நிதம் ஏத்தும் அதே சிவலிங்கம்;

2)

பன்முனி வான்அடி வாழ்த்திடு லிங்கம்

மன்மத னைப்பொடி ஆக்கிய லிங்கம்

முன்னவு ணன்முடி பத்தடர் லிங்கம்

.. நாநித மேத்தும தேசிவ லிங்கம்

பன்முனி வான் - பல் முனி வான் - பல முனிவர்களும் தேவரும்;

முன் அவுணன் முடி பத்து அடர் - முன்னம் அரக்கனான இராவணனுடைய பத்துத் தலைகளை நசுக்கி அவன் கர்வத்தை அழித்த;

3)

சந்தனம் மாமல ரால்தொழு லிங்கம்

சிந்தைம யக்கைஅ றுத்தருள் லிங்கம்

அந்தரர் சித்தரெ லாம்பணி லிங்கம்

.. நாநித மேத்தும தேசிவ லிங்கம்

சிந்தை மயக்கை அறுத்து அருள் - மனமயக்கத்தைத் தீர்த்துத் தெளிவை அளித்து அருளும்;

அந்தரர் - தேவர்கள்;

4)

பொன்மணி ஆகமி லங்கிடு லிங்கம்

பன்னக நாணைஅ ரைக்கணி லிங்கம்

முன்னொரு வேள்வித கர்த்தருள் லிங்கம்

.. நாநித மேத்தும தேசிவ லிங்கம்

பொன் மணி ஆகம் இலங்கிடு - 1) பொன்னும் மணியும் மேனியில் விளங்குகின்ற; 2) பொன் போல் அழகிய மேனி விளங்குகின்ற (பொன்னார் மேனியன்);

பன்னக நாணை அ\ரைக்கு அணி - பாம்பை அரைநாணாக அணிகின்ற; (பன்னகம் - பாம்பு);

முன் ஒரு வேள்வி தகர்த்து அருள் - முன்னர் (தக்கன் செய்த) ஒரு யாகத்தை அழித்த;

5)

குங்கும சந்தனம் ஏற்றருள் லிங்கம்

பங்கய மாலைஉ கந்தருள் லிங்கம்

தங்கிய முன்வினை சாய்த்தருள் லிங்கம்

.. நாநித மேத்தும தேசிவ லிங்கம்

பங்கய மாலை உகந்து அருள் - தாமரைமாலையை விரும்பி ஏற்கின்ற;

தங்கிய முன்வினை - சஞ்சிதம்; (தங்குதல் - to remain; to exist);

சாய்த்து அருள் - அழித்து அருள்கின்ற; (சாய்த்தல் - கெடுத்தல் - To destroy);

6)

பல்லிமை யோர்கணம் முன்பணி லிங்கம்

நல்லுளம் அன்பொடு நாடிடு லிங்கம்

எல்லியொர் கோடிநி கர்த்தொளிர் லிங்கம்

.. நாநித மேத்தும தேசிவ லிங்கம்

பல் இமையோர் கணம் முன் பணி - பல தேவகூட்டங்கள் வணங்குகின்ற; ("பல தேவர்களும் பூதகணங்களும் வணங்குகின்ற" என்றும் பொருள்கொள்ளலாம்);

நல் உளம் அன்பொடு நாடிடு - நல்ல உள்ளம் உடையோர் பக்தியோடு போற்றுகின்ற;

எல்லி ஒர் கோடி நிகர்த்து ஒளிர் - ஒரு கோடி சூரியர்கள் போல் ஒளிவீசுகின்ற; (எல்லி - சூரியன்);

7)

எண்மல ரால்தொழு தேத்திடு லிங்கம்

எண்ணிலி அண்டமெ லாம்படை லிங்கம்

மண்ணினர் எண்கலி தீர்த்தருள் லிங்கம்

.. நாநித மேத்தும தேசிவ லிங்கம்

எண்மலரால் தொழுது ஏத்திடும் - அஷ்டபுஷ்பங்களால் வழிபாடு செய்யப்பெறுகின்ற;

(அகமலர்கள் எட்டு, புறமலர்கள் எட்டு. அப்பர் தேவாரம் - 5.54.1 - "எட்டு நாண்மலர் கொண்டவன் சேவடி");

எண்ணிலி அண்டம் எலாம் படை - எண்ணற்ற அண்டசராசரங்களைப் படைக்கின்ற;

மண்ணினர் எண்கலி தீர்த்து அருள் - மனிதர்களுடைய எட்டு வகையான தரித்திரங்களைத் தீர்த்து அருள்கின்ற; (கலி - தரித்திரம்);

8)

வானவ ருங்குரு வுந்தொழு லிங்கம்

வானல ரால்அடி வாழ்த்திடு லிங்கம்

மானமி லங்கிய வான்பொருள் லிங்கம்

.. நாநித மேத்தும தேசிவ லிங்கம்

வானவரும் குருவும் தொழும் - தேவர்களும் தேவகுருவும் தொழுகின்ற;

வான் அலரால் அடி வாழ்த்திடும் - தேவலோகத்துப் புஷ்பங்களால் திருவடியைப் போற்றுகின்ற;

மானம் இலங்கிய வான் பொருள் - மேன்மை விளங்கிய பரம்பொருள்; (மானம் - உயர்வு; பெருமை); (வான் பொருள் - எட்டாத பொருள்) (திருவாசகம் - திருச்சாழல் - 10 - "தானந்தம் இல்லான் ... வானுந்து தேவர்கட்கோர் வான்பொருள்காண் சாழலோ");

** திருவாசகம் - சிவபுராணம் - ஈற்றடிகள் :

சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்ச்

சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்

செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கீழ்ப்

பல்லோரும் ஏத்தப் பணிந்து.

அன்பொடு,

வி. சுப்பிரமணியன்

2015-12-25 1:24 GMT-05:00 Hari Krishnan <hari.har...@gmail.com>:

2015-12-25 11:14 GMT+05:30 Vis Gop <vis...@gmail.com>:
குறையா? சிவசிவா! நினைத்துப் பார்க்க முடியுமா? அற்புதம்!

சிந்தனைக்கு:
ஈசாஷ்டகமாகத் தெரிகிறது. 'லிங்க' வடிவம் எங்கும் குறிக்கப் படவில்லை. தமிழர்கள் மனத்தில் லிங்கம் என்றால் ஈசனே தோன்றுவதால் ஈசன் லிங்கமாக மாற்றப் படலாம். 'நான் பணிகின்றதும் அச்சிவ லிங்கம்' என்றிருந்தால் லிங்காஷ்டகம் படித்த உணர்வே வரும் என்று நினைக்கிறேன்.
நல்வாழ்த்துக்களுடன்,
கோபால்.

நான் சொல்ல நினைத்ததுவும் இதுவே.  லிங்காஷ்டகம் என்றால் லிங்கம் கீவேர்ட்.

நான்பணி வதுவும் அதேசிவலிங்கம்--அங்கே ஒரு நெடில் வேண்டும் என்பதற்காகவும் ஓசைக்காகவும்.

--
அன்புடன்,
ஹரிகி.

N. Ganesan

unread,
Dec 25, 2015, 8:31:14 AM12/25/15
to சந்தவசந்தம்

On Friday, December 25, 2015 at 12:12:23 AM UTC-6, kuppudu wrote:
சிவ சிவ! எளிமை, இனிமை, புதுமை! ஆக மொத்தமே அருமை! கோபால் சொல்வதுபோல் ஈசன் என்பதை லிங்கமாக மாற்றி, ஈற்றடியையும் கோபால் சொல்வதுபோல் மாற்றிவிட்டால், இது லிங்காஷ்டகமேதான்.. நான் பாடிப்பார்த்தேன்.. மனதுக்கு இதம், பாடுவதற்கு சுகம்!

Beautiful!

N. Ganesan

N. Ganesan

unread,
Dec 25, 2015, 8:37:48 AM12/25/15
to சந்தவசந்தம்

N. Ganesan

unread,
Dec 25, 2015, 8:50:04 AM12/25/15
to சந்தவசந்தம்

On Thursday, December 24, 2015 at 8:07:45 PM UTC-6, ravisanth wrote:

Super Sir!

நாநித மேத்தும தேசிவ லிங்கம்!
நானில மேத்தும தேசிவ லிங்கம்!

தென்னாடுடைய சிவனே போற்றி!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!

Pas Pasupathy

unread,
Dec 25, 2015, 8:55:16 AM12/25/15
to Santhavasantham
அருமை!  மூன்றடிமேல் வைப்பு என்றே கொள்ளலாம் என்று தோன்றுகிறது.  

2015-12-25 8:50 GMT-05:00 N. Ganesan <naa.g...@gmail.com>:

On Dec 25, 2015 5:23 AM, "Siva Siva" <naya...@gmail.com> wrote:

Please highlight any errors or other potential defects.

இவ்வமைப்பைக் கலிவிருத்தம் என்று கருதலாமா? அன்றேல், மூன்றடிமேல் வைப்பு என்று கொள்ளலாமா?

Subbaiyar Ramasami

unread,
Dec 25, 2015, 9:36:28 AM12/25/15
to santhav...@googlegroups.com
அருமையான பொருத்தமான ஆற்றொழுக்கான மொழியாக்கம்.  மூன்றடி மேல் வைப்பென்பதே முறை

இனிமை யாக இலிங்காஷ் டகத்தைக்
கனியெனத் தந்த கவி

இலந்தை

--

Siva Siva

unread,
Dec 25, 2015, 11:39:03 AM12/25/15
to santhavasantham
படித்துக் கருத்துச் சொன்ன அனைவர்க்கும் என் வணக்கம்.

I have attached the pdf version of the file.

(I have also attached a version of the original lingashtakam. - I think there may be some minor variations - "pAdabEdham" in the original lingashtakam).

Regards,
V. Subramanian

2015-12-25 9:36 GMT-05:00 Subbaiyar Ramasami <kavim...@gmail.com>:
அருமையான பொருத்தமான ஆற்றொழுக்கான மொழியாக்கம்.  மூன்றடி மேல் வைப்பென்பதே முறை

இனிமை யாக இலிங்காஷ் டகத்தைக்
கனியெனத் தந்த கவி

இலந்தை

2015-12-25 7:55 GMT-06:00 Pas Pasupathy <pas.pa...@gmail.com>:
அருமை!  மூன்றடிமேல் வைப்பு என்றே கொள்ளலாம் என்று தோன்றுகிறது.  

2015-12-25 8:50 GMT-05:00 N. Ganesan <naa.g...@gmail.com>:

On Dec 25, 2015 5:23 AM, "Siva Siva" <naya...@gmail.com> wrote:

Please highlight any errors or other potential defects.

இவ்வமைப்பைக் கலிவிருத்தம் என்று கருதலாமா? அன்றேல், மூன்றடிமேல் வைப்பு என்று கொள்ளலாமா?

பசுபதி

Lingashtakam - Tamil translation - V. Subramanian - 2015-12-25.pdf
Lingashtakam-3.pdf

VETTAI ANANTHANARAYANAN

unread,
Dec 25, 2015, 7:18:31 PM12/25/15
to சந்தவசந்தம்

சிவபக்தர்கள் மிகவும் விரும்பிப் படிக்கும் துதிகளுள் ஒன்றான

லிங்காஷ்டகத்தைத் தமிழில் மொழிபெயர்த்தது ஒரு சிறந்த தொண்டு. திருவாதிரைத் திருநாளை ஒட்டி இது கிட்டியது பெரும் பேறு.

..அனந்த்

குறிப்பு:

தாமதமான பின்னூட்டத்திற்கு மன்னிக்கவும். Since you mentioned "I look forward to further feedback" here are some thoughts:

1. நண்பர்கள் விரும்பியது போலத் திருத்தி அமைத்த, சந்தம் நிறைந்த,

ஈற்றடி (நாநித மேத்தும தேசிவ லிங்கம்) மிக அருமை.

2.  மூல ஸ்தோத்திரத்தில்,  வானவரைக் குறிப்பதான, ஸுர என்பது 4 இடங்களிலும், ’தேவ’ 2 இடங்களிலும் வருகிறது.   மொழிபெயர்ப்பில், வான், இமையோர், அந்தரர், வானவர் என்று பலவகையாக அமைத்திருப்பது அழகு. எனினும், ‘வான்என்னும் சொல்  (பொருள் வேறுபாடுடன்) மூன்று

பாடல்களில் வருகிறது.  முடிந்தால் இதைத் தவிர்க்கலாம்.

நான்முகன் நாரணன் வான்தொழு லிங்கம்  (பாடல் 1)

வான்பிணி தீர்த்தருள் நல்கிடு லிங்கம்  (பாடல் 1)

பன்முனி வான்அடி வாழ்த்திடு லிங்கம் (2)

மானமி லங்கிய வான்பொருள் லிங்கம் (8)

3. மூலத்தில்,  அடிகளின் மூன்றாவது சீரில் நெடிலோசை பயிலும்படி, நீங்கள் சுட்டிய "தானன தானன தானன தானா" என்ற சந்தம் அமைந்துளது (பாடல் 2-ல் ஓரடியைத் தவிர).   மொழிபெயர்ப்பில், இவ்வாறு இல்லாதிருப்பினும், பொதுவாக அதே சந்த ஓசை  பயில்கிறது. எனினும்முன்னவு ணன்முடி *பத்தடர் லிங்கம்போன்ற அடிகளில், சந்த ஓசை

சற்றுக் குறைவதாகப் படுகிறது.  

4. பாடல் 3 மூலத்தில் காணும் 'ஸர்வ ஸுகந்தி விலேபித (सर्वसुगन्धिसुलेपित - “...smeared with various perfumes") என்னும் இடம்சந்தனம் மாமல ரால்தொழுஎன்று மொழிபெயர்ப்புச் செய்யப்பட்டுள்ளது. [சந்தனம் என்பது பாடல் 5-ல் (குங்கும சந்தனம் ஏற்றருள்...) மீண்டும் வருவதைக் காணலாம். அங்கு அது சரியானதே. மூலத்திலும் அவ்வாறே உள்ளது.   

..அனந்த்

Siva Siva

unread,
Dec 25, 2015, 8:47:26 PM12/25/15
to santhavasantham
வணக்கம்
Thanks for the feedback.

ஆழ்ந்து படித்து, மூலத்தோடு ஒப்பிட்டுப் பார்த்துக், கருத்துச் சொல்லியிருக்கின்றீர்கள்.

1. கருத்தறிந்து மகிழ்ந்தேன்.

2. பாடல்களை எழுதும்போது 'வான்' என்ற சொல் வெவ்வேறு பொருள்களில் வருவதைப் பற்றிச் சிந்தித்திலேன். அடிகளின் அளவினாலும், சந்தக் கட்டுப்பாட்டினாலும், மூலக் கருத்துகளை ஒட்டி அமையவேண்டுவதினாலும் இப்படி அமைந்ததுபோலும்.

3. கூர்ந்து நோக்கியிருக்கின்றீர்கள். தமிழில் பல சந்தப்பாடல்களில் - நெடில் / குறில்+ஒற்று - இவை பெரும்பாலும் ஒரே மாதிரி கருதப்படுகின்றன என்ற எண்ணத்தில் அப்படிப் பிரயோகித்தேன். நீங்கள் சுட்டியவாறு, மூலத்திலும் ஓர் இடத்தில் அப்படி அமைந்துள்ளதால், மூலத்திலும் அவ்விடத்தில் ஓசை குறைவதாகக் கருதவேண்டுமா?

4. சமஸ்கிருத அகராதியிற் காண்பது:

अनुलेपः लेपनम् 1 Unction, anointing, smearing. -2 Ointment, unguent such as sandal juice, oil &c.; any emollient or oily application; ˚आर्द्रमृदङ्गध्वनि K.28 rubbed with paste; सुरभिकुसुमधूपानुलेपनानि K.324.

ஆகவே, சந்தனம் பொருந்தும் என்று எண்ணுகின்றேன். (சந்தனம் - Sandal paste; அரைத்த சந்தனம்); மாமலர் - பூக்களை அடிப்படையாகக் கொண்டு பல வாசனைத் திரவியங்கள் தயாரிக்கப்படுவதால் அவ்வாறு கொண்டேன்; (உதாரணம் - பன்னீர்);

அன்பொடு, 
வி. சுப்பிரமணியன்

Siva Siva

unread,
Dec 25, 2015, 10:27:49 PM12/25/15
to santhavasantham
Here is an audio version of it.

V. Subramanian

2015-12-25 11:39 GMT-05:00 Siva Siva <naya...@gmail.com>:
படித்துக் கருத்துச் சொன்ன அனைவர்க்கும் என் வணக்கம்.

I have attached the pdf version of the file.

(I have also attached a version of the original lingashtakam. - I think there may be some minor variations - "pAdabEdham" in the original lingashtakam).

Regards,
V. Subramanian

Lingashtakam - Tamil - V Subramanian.mp3

VETTAI ANANTHANARAYANAN

unread,
Dec 25, 2015, 10:57:49 PM12/25/15
to சந்தவசந்தம்
> ஆகவே, சந்தனம் பொருந்தும் என்று எண்ணுகின்றேன்.
நீங்கள் சொல்வது போல, சந்தனம் பொருந்தும். எனினும், நான் முன்பு சுட்டியது போல, சந்தனம் அணிதல் பின்வரும் பாடல் ஒன்றில் வெளிப்படையாகக் காண்பதாலும், மாமலரால் தொழுதல் என்னும் குறிப்பு மூலத்தில் இல்லாததாலும்  நான் என் கருத்தைத் தெரிவித்தேன்.

அனந்த்

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Subbaiyar Ramasami

unread,
Dec 25, 2015, 11:29:41 PM12/25/15
to santhav...@googlegroups.com
திருமதிக்குச் சிறப்பு வாழ்த்து. அருமையா உணர்ந்து பாடியிருக்கிறார்கள். சுப்பிரமணியம் கொடுத்துவைத்தவர்தான்.

இலந்தை

GMAIL

unread,
Dec 26, 2015, 5:46:09 AM12/26/15
to santhav...@googlegroups.com
Good to listen.

Kumar(Singai)

Sent from my iPhone
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
<Lingashtakam - Tamil - V Subramanian.mp3>

N. Ganesan

unread,
Dec 26, 2015, 7:19:31 AM12/26/15
to சந்தவசந்தம்

On Friday, December 25, 2015 at 9:57:49 PM UTC-6, ananth wrote:

4. சமஸ்கிருத அகராதியிற் காண்பது:

अनुलेपः लेपनम् 1 Unction, anointing, smearing. -2 Ointment, unguent such as sandal juice, oil &c.; any emollient or oily application; ˚आर्द्रमृदङ्गध्वनि K.28 rubbed with paste; सुरभिकुसुमधूपानुलेपनानि K.324.

ஆகவே, சந்தனம் பொருந்தும் என்று எண்ணுகின்றேன். (சந்தனம் - Sandal paste; அரைத்த சந்தனம்); மாமலர் - பூக்களை அடிப்படையாகக் கொண்டு பல வாசனைத் திரவியங்கள் தயாரிக்கப்படுவதால் அவ்வாறு கொண்டேன்; (உதாரணம் - பன்னீர்);

அனந்த் சார் சொல்வதை வைத்து பார்த்தால்:

சந்துகந் தேந்தியன் பர்தொழு லிங்கம்

சிந்தைம யக்கைஅ றுத்தருள் லிங்கம்

அந்தரர் சித்தரெ லாம்பணி லிங்கம்

.. நாநித மேத்தும தேசிவ லிங்கம்

சந்து - சந்தனம்:
கமலங் கலந்த வேரியுஞ் சந்தும் (திருக்கோவையார் 301).

கந்து - கந்தம் - பரிமள கந்தம்
கந்தமர்சந்துங் காரகிலுந்தண் கதிர்முத்தும்
வந்தமர்தெண்ணீர் மண்ணிவளஞ்சேர் வயன்மண்டிக்
கொந்தலர்சோலைக் கோகிலமாடக் குளிர்வண்டு
செந்திசைபாடுஞ் சீர்திகழ்கண்ணார் கோயிலே (தேவாரம்)

சந்துகந்து ஏந்தி - சந்து, கந்து ஏந்தி (அ) சந்து உகந்து ஏந்தி.
A suggestion.

நா. கணேசன்

ramaNi

unread,
Dec 26, 2015, 7:31:10 AM12/26/15
to சந்தவசந்தம்
இப்போதுதான் படித்துக் கேட்க முடிந்தது. எல்லாம் எழில்சேர் இனிமை!
ரமணி

Siva Siva

unread,
Dec 26, 2015, 8:01:21 AM12/26/15
to santhavasantham
Thanks to everyone providing feedback.

N. Ganesan

unread,
Dec 27, 2015, 10:23:54 AM12/27/15
to சந்தவசந்தம்

On Saturday, December 26, 2015 at 7:01:21 AM UTC-6, siva siva wrote:
Thanks to everyone providing feedback.

<<< பாடல் 3 மூலத்தில் காணும் 'ஸர்வ ஸுகந்தி விலேபித (सर्वसुगन्धिसुलेपित - “...smeared with various perfumes") என்னும் இடம் “சந்தனம் மாமலரால்தொழு” என்று மொழிபெயர்ப்புச் செய்யப்பட்டுள்ளது. [சந்தனம் என்பது பாடல் 5-ல் (குங்கும சந்தனம் ஏற்றருள்...) மீண்டும்வருவதைக் காணலாம்அங்கு அது சரியானதேமூலத்திலும் அவ்வாறே உள்ளது.   >>> (Ananth)

Dear Dr. Subramanian,

To me, the word, gandham looks significant and could come from various sources (e.g., takarai is the roots of a plant of Himalayas (various substtutes like nannaari vEr also used), punuku from wild cats, kastUri from deer, paccaik karpooram, .... karppuuram naaRumO? kamalappuu naaRumoo? -AaNDaaL) gandha = kantu, as per Tevaram. So, can I use சந்துகந் தேந்தியன் பர்தொழு லிங்கம் when I quote your Lingashtakam?

Thanks
N. Ganesan

Siva Siva

unread,
Dec 27, 2015, 10:35:25 AM12/27/15
to santhavasantham

In the original lingashtakam, some phrases/concept repeat in more than one verse. (For example, Devas worshipping).

/So, can I use சந்துகந் தேந்தியன் பர்தொழு லிங்கம் when I quote your Lingashtakam/
When one is quoting, whatever is being quoted should not be changed from what the original author wrote.
When one is writing a commentary, or when one is translating, different interpretations are possible - based various perspectives.

Hope this helps.

V. Subramanian

OAGAI NATARAJAN

unread,
Dec 27, 2015, 11:47:04 AM12/27/15
to santhav...@googlegroups.com
அருமை! மிக அருமை!!

N. Ganesan

unread,
Dec 27, 2015, 12:11:35 PM12/27/15
to சந்தவசந்தம்

On Sunday, December 27, 2015 at 9:35:25 AM UTC-6, siva siva wrote:

In the original lingashtakam, some phrases/concept repeat in more than one verse. (For example, Devas worshipping).

/So, can I use சந்துகந் தேந்தியன் பர்தொழு லிங்கம் when I quote your Lingashtakam/
When one is quoting, whatever is being quoted should not be changed from what the original author wrote.
When one is writing a commentary, or when one is translating, different interpretations are possible - based various perspectives.

Yes. Based various perspectives various translations are possible. We don't even know who the original author of
this Sanskrit shloka is, done in the last few centuries. 

Best wishes,
N. Ganesan

Siva Siva

unread,
Dec 27, 2015, 1:15:32 PM12/27/15
to santhavasantham
For Sanskrit verses and an English translation:
http://sanskritdocuments.org/doc_shiva/lingashhMean.html?lang=sa

Additional info on meters used in Lingashtakam Sanskrit version:

சமஸ்கிருதத்தில் உள்ள லிங்காஷ்டகம் அதன் யாப்பு :

(Lingashtakam meter info provided by J.K.Mohana Rao):

brahma murAri surArchita liMgaM - taraMgaka / dOdhaka

dinakarakOTi prabhAkara liMgaM - kamalavilAsinI / tAmarasa / lalitapadA

suraguru suravara pUjita liMgaM - kamalalOchanA / kamalAkshI / chaMDI

parAtparaM paramAtmaka liMgaM - unknown

Some stanzas like 3, 5, 7 are mixtures of different metres. Such mixed metres are called upajAti in Sanskrit.

last one (phalasruthi) is SlOka

FYI

வி. சுப்பிரமணியன்

VETTAI ANANTHANARAYANAN

unread,
Dec 27, 2015, 1:30:58 PM12/27/15
to சந்தவசந்தம்
Well said.

ananth

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

N. Ganesan

unread,
Dec 27, 2015, 1:48:37 PM12/27/15
to சந்தவசந்தம்

On Sunday, December 27, 2015 at 12:15:32 PM UTC-6, siva siva wrote:
For Sanskrit verses and an English translation:
http://sanskritdocuments.org/doc_shiva/lingashhMean.html?lang=sa

Additional info on meters used in Lingashtakam Sanskrit version:

சமஸ்கிருதத்தில் உள்ள லிங்காஷ்டகம் அதன் யாப்பு :

(Lingashtakam meter info provided by J.K.Mohana Rao):

brahma murAri surArchita liMgaM - taraMgaka / dOdhaka

dinakarakOTi prabhAkara liMgaM - kamalavilAsinI / tAmarasa / lalitapadA

suraguru suravara pUjita liMgaM - kamalalOchanA / kamalAkshI / chaMDI

parAtparaM paramAtmaka liMgaM - unknown

Some stanzas like 3, 5, 7 are mixtures of different metres. Such mixed metres are called upajAti in Sanskrit.

It appears this late verse may be by a student of Sanskrit.

N. Ganesan

Siva Siva

unread,
Dec 27, 2015, 4:27:16 PM12/27/15
to santhavasantham
I have uploaded it to youtube as well.

FYI

2015-12-25 11:39 GMT-05:00 Siva Siva <naya...@gmail.com>:
படித்துக் கருத்துச் சொன்ன அனைவர்க்கும் என் வணக்கம்.

I have attached the pdf version of the file.

(I have also attached a version of the original lingashtakam. - I think there may be some minor variations - "pAdabEdham" in the original lingashtakam).

Regards,
V. Subramanian

2015-12-25 9:36 GMT-05:00 Subbaiyar Ramasami <kavim...@gmail.com>:
அருமையான பொருத்தமான ஆற்றொழுக்கான மொழியாக்கம்.  மூன்றடி மேல் வைப்பென்பதே முறை

இனிமை யாக இலிங்காஷ் டகத்தைக்
கனியெனத் தந்த கவி

இலந்தை

2015-12-25 7:55 GMT-06:00 Pas Pasupathy <pas.pa...@gmail.com>:
அருமை!  மூன்றடிமேல் வைப்பு என்றே கொள்ளலாம் என்று தோன்றுகிறது.  

sankara dass nagoji

unread,
Dec 28, 2015, 12:26:49 AM12/28/15
to சந்தவசந்தம்
அருமை. அருமை.

நாநிதம் ஏத்துச தாசிவ லிங்கம் என்பதும் பொருந்தும். 
தத் ப்ரணமாமி ஸதாசிவ -  நான் அந்த இலிங்கத்தை எப்போதும் பணிகிறேன், அந்த சதாசிவலிங்கம் நான் பணிவது - இதில் எது சரி? இரண்டுமே சரியா?

- sdn

Vis Gop

unread,
Dec 28, 2015, 1:20:00 AM12/28/15
to santhav...@googlegroups.com
(அஹம்) தத் சிவலிங்கம் ஸதா ப்ரணமாமி  (நான்) அந்த சிவலிங்கத்தை எப்போதும் பணிகிறேன். (1)
(அஹம்) தத் சதாசிவலிங்கம் ப்ரணமாமி  (நான்) அந்த சதாசிவலிங்கத்தைப் பணிகிறேன். (2)
இரண்டும் பொருந்தும். முதலாவது முதலானது!
நல்வாழ்த்துக்களுடன்,
கோபால்.

--

Nagoji

unread,
Dec 28, 2015, 5:21:31 AM12/28/15
to santhav...@googlegroups.com
Thanks Sir for the clarification.
-sdn

--
You received this message because you are subscribed to a topic in the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/santhavasantham/Ky_ppwIyhdQ/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to santhavasanth...@googlegroups.com.

N. Ganesan

unread,
Dec 28, 2015, 6:24:31 AM12/28/15
to சந்தவசந்தம்

On Sunday, December 27, 2015 at 11:26:49 PM UTC-6, sankara dass nagoji wrote:
அருமை. அருமை.

நாநிதம் ஏத்துச தாசிவ லிங்கம் என்பதும் பொருந்தும். 

3 மொழிபெயர்ப்புகளில் சதாசிவ லிங்கம்:

நா. கணேசன்

Siva Siva

unread,
Nov 16, 2020, 12:29:15 PM11/16/20
to santhavasantham
இப்பாடலை இன்று மீண்டும் நோக்கியபொழுது செய்த ஒரு மாற்றம்:

பாடல்-3 அடி-1: மாற்றிய வடிவம்:

Old: /சந்தனம் மாமல ரால்தொழு லிங்கம் /

Updated: கந்தம லிந்திடு பூச்சணி லிங்கம்

கந்தம் மலிந்திடு பூச்சு அணி - வாசனை மிகுந்த கலவைச்சாந்து முதலியவற்றை அணிந்தருளும்; (பூச்சு - smearing, anointing; தடவுதல்; பூசுதல்);

வி. சுப்பிரமணியன்

Siva Siva

unread,
Nov 16, 2020, 1:32:18 PM11/16/20
to santhavasantham

பாடல்-2 அடி-3: மாற்றிய வடிவம்:

Old: /முன்னவு ணன்கரு வம்தகர் லிங்கம் /

Updated: முன்னம ரக்கனை ஊன்றிய லிங்கம்

முன்னம் அரக்கனை ஊன்றிய - முன்பு (தனது ஆணவத்தால் கயிலையைப் பெயர்த்த) இராவணனை நசுக்கி அவனது கர்வத்தை அழித்த

(ஊன்றுதல் - அமுக்குதல்; நசுக்குதல்); (அப்பர் தேவாரம் - 4.74.10 - "திரண்ட திண்டோள் அரக்கனை ஊன்றி");

Siva Siva

unread,
Nov 26, 2020, 10:46:46 PM11/26/20
to santhavasantham
Here is the audio version - reflecting the 2 lines updated recently.

FYI

K.R. Kumar

unread,
Nov 26, 2020, 11:27:41 PM11/26/20
to santhav...@googlegroups.com
Dear Siva Siva,

A good rendition by your wife.

Regards,
K.R.Kumar

--
குழுவில் செய்தி அனுப்ப மின்மடல்: santhav...@googlegroups.com
குழுவிலிருந்து விலக:
santhavasanth...@googlegroups.com.
குழுமத்தைக் காண: https://groups.google.com/d/forum/santhavasantham
மேல் விவரங்களுக்கு:
https://groups.google.com/d/optout
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Kaviyogi Vedham

unread,
Nov 27, 2020, 12:55:36 AM11/27/20
to santhavasantham, Siva Siva
yes.. i also heard.
 good voice and good rendering. vaazhga vaLamudan,
' yogiyar

Siva Siva

unread,
Nov 27, 2020, 4:24:36 PM11/27/20
to santhavasantham
Thank you both.  

Subbaier Ramasami

unread,
Nov 28, 2020, 12:06:00 AM11/28/20
to santhavasantham
நன்றாகப் பாடியிருக்கிறார்கள்.  ஒத்து வருகிறது

--
குழுவில் செய்தி அனுப்ப மின்மடல்: santhav...@googlegroups.com
குழுவிலிருந்து விலக:
santhavasanth...@googlegroups.com.
குழுமத்தைக் காண: https://groups.google.com/d/forum/santhavasantham
மேல் விவரங்களுக்கு:
https://groups.google.com/d/optout
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Siva Siva

unread,
Feb 22, 2021, 11:58:41 AM2/22/21
to santhavasantham
Someone pointed me to the Lingashtakam audio in a different tune - that pre-dates the currently popular SPB (?) version.

Broadcast from AIR Bhakti Ranjani, Visakhapatnam / Vijayawada. Stotra on Lord Shiva composed by Sri Adi Shankaracharya.
Sri Voleti Venkateswarulu is the first lead singer. Others include Sarva Sri Malladi Suribabu, Rajam Srinivasan, Sri NCV Jagannathacharyulu, MS Sarma.
The female lead singers include Smt.s Shrirangam Gopalaratnam, Vinjhamuri Lakshmi, GV Ramakumari.

FYI

Siva Siva

unread,
Mar 1, 2022, 7:30:15 PM3/1/22
to santhavasantham
As part of Sivarathri poojai on 2022-03-01, Hyderabad Siva and his students sing the Lingashtakam (Tamil):
https://youtu.be/vbN5_DKSFyg?t=3098 
(Starts around the 51:38 minute mark in the clip)
(The lingashtakam part is about 7 or 8 minutes long).

V. Subramanian

K.R. Kumar

unread,
Mar 1, 2022, 8:53:36 PM3/1/22
to santhav...@googlegroups.com
Dear Siva Siva,

The translation and rendering was excellent. I feel really blessed for getting to know you and having contact with you. 

Pray for ALL the BEST AL(L)W AYS.

Regards,
K.R.Kumar (Singai)

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Siva Siva

unread,
Mar 1, 2022, 11:22:59 PM3/1/22
to santhavasantham
Thank you. 

The feedback from SV members helped refine the early version of this.

V. Subramanian

Siva Siva

unread,
Nov 6, 2023, 6:32:33 PM11/6/23
to santhavasantham
Lingasthakam - (Tamil translation) - is now available on the madhisudi blog.

V. Subramanian

Rajja Gopalan

unread,
Nov 7, 2023, 6:22:08 AM11/7/23
to santhav...@googlegroups.com
very nice.  God bless

Sent from my iPhone

On 7 Nov 2023, at 00:32, Siva Siva <naya...@gmail.com> wrote:

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Siva Siva

unread,
Nov 7, 2023, 8:42:22 AM11/7/23
to santhav...@googlegroups.com
Thanks.

On Tue, Nov 7, 2023 at 6:22 AM Rajja Gopalan <raj...@gmail.com> wrote:
very nice.  God bless

Anand Ramanujam

unread,
Nov 7, 2023, 12:07:53 PM11/7/23
to santhav...@googlegroups.com
மிக அருமை!

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Siva Siva

unread,
Nov 8, 2023, 9:53:21 AM11/8/23
to santhav...@googlegroups.com
Thanks.

Translating in the same short meter as the original while having edhugai as well - is an interesting exercise.

V. Subramanian

Lingasthakam - (Tamil translation) : 

Reply all
Reply to author
Forward
0 new messages